சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) திரைப்படத்திற்கும் ,மூன்றாம் பிறை திரைப்படத்திற்கும் ஒரு முக்கிய ஒற்றுமை வேலி தாண்டுதல், நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் அற்புதமான குணச்சித்திர நடிகர், அவர் நடித்த கதாபாத்திரங்களுக்கு தன் தனித்துவமான நடிப்பினால் சிறப்பு கூட்டிவிடுவார்.
சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் பெரிய பணக்காரர்,Widower, போர்டிகோ நிறைய வெளிநாட்டுக் கார்கள் சேகரித்திருப்பார், தன் அறுபது வயதில் ஜெயசுதாவை மணமுடிப்பார், காரை பளபளவென துடைத்து காட்சிப்பொருளாக வைப்பது போல மட்டுமே அவருக்கு மனைவி ஜெயசுதா,
Play boy குணாதிசயம் கொண்ட கமல் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜெயசுதாவை வீழ்த்தி முறையற்ற உறவு கொள்வார்,இவர் வீட்டை விட்டு ஓடிப்போக அழைத்தவுடன் ஜெயசுதாவும் நம்பி பணம் நகையுடன் விமான நிலையம் ஓடி வருவார்.
மூன்றாம் பிறை படத்தில் இதே போலவே பூர்ணம் விஸ்வநாதன் ஊட்டியில் பெரும் பணக்காரர், பணக்காரர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் முதலாளி,
இவரின் வயதில் பாதியே இருக்கும் அழகிய மனைவி சில்க் ஸ்மிதா , விரக தாபம் கொண்டு ஏங்குவார், தங்கள் பள்ளியில் ஆசிரியரான கமலை அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து சீண்டுவார், காதல் வலைவிரிப்பார்.கமல் வாய்ப்பு கிடைத்ததே என அலையாமல் அப்படி தெறித்து ஓடுவார்,
பூர்ணம் விஸ்வநாதன் பத்து வருட இடைவெளியில் நடித்த படம் இது இரண்டும், எத்தனை வித்தியாசமாக தோன்றியுள்ளார், முன்னது கருப்பு வெள்ளை, பின்னது வண்ணம், நடிகைகள் ஜெயசுதா,சில்க் ஸ்மிதா இருவரும் நன்றாக இந்த வேலி தாண்டும் பெண்கள் கதாபாத்திரத்தைச் செய்தனர், கமல்ஹாசன் முன்னதில் Playboy, பின்னதில் சந்தர்ப்பம் கிடைத்தும் யோக்கியர்.
PS: சில்க் ஸ்மிதா படுக்கை அறையில் ரதிமன்மதன் ஆலிங்கன சிலை இருக்கும் ,அந்த தீமில் தான் இயக்குனர் பொன்மேனி உருகுதே பாடலை படத்தில் வைத்தார்.
இந்தப் பாடலை எப்படி outdoor ல் கூட்டத்தை கட்டுப்படுத்தி படமாக்கினார்?, இந்தக் காலம் என்றால் blue matte , green matte என எடுத்து vfx செய்து background செய்து விடலாம்,எத்தனை அற்புதமான இசை, எத்தனை அற்புதமான விரக தாபக் குரல் ஜானகியம்மா சில்கிற்கு தந்தது, எத்தனை complicated நடன அசைவுகள் இருவருக்கும் ,
இயக்குனர் இதை ஸ்டுடியோவுக்குள் குளியல்காட்சியாக எடுக்காமல் ரதி மன்மதன் தீமில் ரசனையுடன் படமாக்கியுள்ளார் என வியப்பேன்.
#பூர்ணம்_விஸ்வநாதன்,#பணக்கார_கணவன்,#கிழப்புருடன்,#கமல்ஹாசன்,#சில்க்_ஸ்மிதா,#ஜெயசுதா,#ஊட்டி,#சொல்லத்தான்_நினைக்கிறேன்,#மூன்றாம்_பிறை