கொக்கு தலையில் ஏன் வெண்ணெய் வைத்து பிடிக்க வேண்டும் ? என சிலேடைக்கு சொல்வார்கள்,அதன் பொருள் இதில் தான் விளங்கிக் கொண்டேன்,
ஐந்தறிவுள்ள கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து அதை சித்தம் , மெய் குளிரச் செய்ய வேண்டியதன் அவசியமில்லை,
மின்சாரம் , பொழுதுபோக்கு அதிகம் இல்லாத காலத்தில் பெண்கள் குளிப்பதை மிகவும் ரசித்து நேரம் எடுத்து குளித்திருக்கின்றனர்,
குளிப்பது என்றாலே தலைக்கு குளிப்பது தான் குளிப்பதில் சேரும்,வெறும் உடலுக்கு மட்டும் குளிப்பது தேக சுத்திக்குச் செய்யும் அநீதி , சாதாரணர்கள் குளியலே அப்படியென்றால் ஜமீனின் துரைசானி அம்மாள் குளிப்பது புனித நீராடுவது போலத்தான்.
தாசி கமலாட்சி எருமைத் தயிரைக் கடைந்து வெண்ணெய் திரட்டி வரும் வரை அந்தப்புரத்தில் தலைமுடியை அவிழ்த்து அமர்ந்திருக்கிறாள் துரைசானி அம்மாள் (ஒருதலைராகம் ரூபா) ,
தாசி கமலாட்சி எந்த வேலையையும் லயிப்புடன் செய்பவள், சீதைக்கு சீமந்தமே தந்தனான என்ற மெட்டில் அமைந்த நாட்டார் பாடலை முனுமுனுத்தபடி வெண்ணையை கடைந்து எடுத்து வந்தவள், துரைசானி அம்மாவின் தலையில் வெண்ணையை வைத்து பரப்பி அவள் சித்தம் குளிர்விப்பதைப் பாருங்கள்.
உலகசினிமா மட்டுமே தரும் minute details, இந்த ஆத்மார்த்தமான பணிக்கு நடிகை அர்ச்சனாவை ஒளிப்பதிவாளர் Apurba Kishore Bir , இயக்குனர் B.நரசிங்கராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.
தாசி திரைப்படம் பற்றி மேலும்
https://m.facebook.com/story.php?story_fbid=10159676095221340&id=750161339