Frozen என்ற இந்திய சினிமா 2007 ஆம் ஆண்டு வெளியானது, முழுக்க லடாக்கில் கடல் மட்டத்தில் இருந்து 15000 அடி உயரத்தில் -29 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் படமாக்கப்பட்ட திரைப்படம், வண்ணத்தில் படத்தை எடுத்து கருப்பு வெள்ளையாக மாற்றியிருக்கின்றனர்.The Turin Horse (2011) என்ற ரஷ்ய திரைப்படத்தின் ஒளிப்பதிவை விட சிறப்பான ஒளிப்பதிவு,அப்படத்திற்கு முன்னோடி இப்படம் ஆனால் அப்படம் போல இது உலகசினிமா ஆர்வலர்களால் பேசப்படவில்லை என்பது துயரம்.
இப்படத்தின் இயக்குனர் சிவாஜி சந்திரபூஷனுக்கு சிறந்த முதல் திரைப்படம் இயக்கிய இயக்குனருக்கான இந்திரா காந்தி தேசிய விருது கிடைத்தது,
படத்தின் ஒளிப்பதிவாளர் ஷங்கர் ராமனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிடைத்தது,படத்தின் கதை திரைக்கதையையும் இவரே எழுதியிருக்கிறார்.
படத்தில் நடிகர் டேனி டேன்சொங்கப்பா,B.A.pass புகழ் நடிகை ஷில்பா ஷுக்லா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
குளிர் பிரதேசமான லடாக்கில் ஒரு உள்ளடங்கிய கிராமத்தில் ஆப்ரிகாட் பழங்களை விளைவித்து பறித்து பதனிட்டு ஜாம் செய்து புட்டியில் அடைத்து விற்கும் டேனி ,அவர் குடும்பம், திடீரென வெடித்த எல்லை பிரச்சனை பதட்டத்தினால்,அவரது வீட்டில் இருந்து நூறு கஜத்தில் குவிக்கப்படுகிறது சொந்த நாட்டு ராணுவம், கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படிகிறது, சோதனைச் சாவடி அமைக்கப்படுகிறது, பகல் முழுக்க துப்பாக்கி சூடு பயிற்சி, இரவு முழுக்க ரோந்து , வாரா வாரம் பொதுமக்கள் அடையாளம் கண்டு பதியும் முகாம் என இவர் வீட்டு அருகாமையில் மிகுந்த பரபரப்பாகிறது
அதன் பின்னர் டேனி அவரது அழகிய இளம் மகள் , மகன் படும் இன்னல்கள், அல்லலுறும் தருணங்கள் தான்
படத்தின் கதை, படம் கண்டிப்பாக பாருங்கள்.
முழுப் படத்தை சப்டைட்டிலுடன் vimeo ல் தரவேற்றியுள்ளார் படத்தின் ஒளிப்பதிவாளர் Shanker Raman, ஒளிப்பதிவாளர்கள் மாணவர்கள், அவசியம் பார்க்க வேண்டிய படம்,படம் முழுக்க அபாரமான visuals.
https://vimeo.com/80334177
இது making of frozen
https://youtu.be/GC3tyG8sT5s
#Frozen,#Sivaji_Chandrabhooshan,#Shanker_Raman