மக்கள் புரட்சிக்கு முந்தைய கேரளம் அது, தோமி ஐந்து ஏக்கர் நிலமிருந்தும் ஏழை, அந்த வட்டாரத்தில் பாஸ்கர் பட்டேலர் என்ற பூர்ஷ்வா தெம்மாடியை மீறி ஒன்றும் சம்பாதிக்க முடியாது,
ஒடுக்கப்பட்டவன் தான் பாடுபட்டு செதுக்கி சீரமைத்து கையப்படுத்திய சொந்த நிலத்தில் அசுரத்தனமாக உழைத்தாலும் இறுதியில் ஒன்றும் மிஞ்சாது,
ஒடுக்கப்பட்ட சாதிக்காரன் தனக்கு அவ்வூரின் உயர்சாதிக்கார பூர்ஷ்வா காலால் இட்ட பணியை தலையால் செய்ய வேண்டியது தலையாய கடமை என்பது அவன் ரத்தத்திலேயே ஊறியுள்ளது,
கட்டிய மனைவியே ஆனாலும் பூர்ஷ்வா தெம்மாடி முதலாளி அவளைப் பெண்டாளக் கேட்டால் அவளைத் தந்தே தீர வேண்டும், திருமணத்தன்று இரவு புது மனைவியை அந்த பூர்ஷ்வா தான் முதலில் பெண்டாள்வான்.
அன்று தொம்மி பசிமிகுதியால் டீக்கடை வாசலில் குத்தி அமர்ந்திருக்கையில் அவனை அழைத்து மேல்விலாசம் கேட்கிறான் பூர்ஷ்வா தெம்மாடி பாஸ்கர் பட்டேலர்( மம்மூட்டி) .
படத்தின் முதல் காட்சி இது ,முதலாளியும் அவன் அடிமையும் என்ற தத்துவத்தில் இயங்கும் கதை இது , இப்படித்தான் ஒருகாலத்தில் காம்ரேடுகளின் வருகைக்கு முன்பான பூர்ஷ்வாக்களின் கேரளம் இருந்தது,
இந்தப் படம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதம், இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டி செய்த பாஸ்கர் பட்டேலர் கதாபாத்திரம் பூர்ஷ்வா தெண்டி கதாபாத்திரத்திற்கு ஒரு Standard ஆகவே மாறிப் போனது,
இது பின்னால் பல படங்களில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டது,அதில் தலப்பாவு படத்தில் அதுல் குல்கர்னி செய்த கிருஷ்ணதேவ சைவர் கதாபாத்திரத்திற்கு இதுவே வித்து,
மம்மூட்டி பின்னாளில் பாலேரிமாணிக்யம் படத்தில் செய்த முரிக்கின்குன்னத்து முகம்மது ஹாஜி கதாபாத்திரத்திற்கு இதுவே வித்து.
இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணின் படங்களின் கதா மாந்தர்கள் ரத்தமும் சதையுமானவர்கள், இதில் எஜமான் பாஸ்கர் பட்டேலர்,அவனின் விதேய அடிமை தொம்மாவாக வந்த நடிகர் கோபகுமார் அவர் மனைவி சபீதா ஆனந்தை ஒருவர் மறக்கவே முடியாது
படத்தின் அற்புதமான ஒளிப்பதிவு மாங்கட ரவிவர்மாவுடையது,படம் கண்டிப்பாக பாருங்கள்.
முழுப்படம் இங்கே
https://youtu.be/1aHReUxEJOI
#அடூர்_கோபாலகிருஷ்ணன்,#மம்மூட்டி,#விதேயன்,#பூர்ஷ்வா,#தெண்டி,#தொம்மி,#பட்டேலர்,#மாங்கட_ரவிவர்மா