சென்னை தியாகராய நகர் 11A பேருந்தும் தியாகராயநகர் நகர வடிவமைப்பும்.

தியாகராய நகர் முதல் ப்ராட்வே வரை  ஆன பேருந்து வழித்தடமான 11 A இன்றும் கூட உள்ளது, இன்று வள்ளலார் நகர் வரை இந்த 11A பேருந்து தட சேவை  நீட்டிக்கப்பட்டுள்ளது,இது Bedford நிறுவனம் தயாரித்த பேருந்து, இதில் அவசர கால கதவு கூட இருந்ததைப் பாருங்கள்,GOVERNMENT TRANSPORT MADRAS என்ற பெயரில் இந்த பேருந்து சேவை இருந்திருக்கிறது.

தியாகராய நகர் பேருந்து நிலையம் 1923 முதல் 1925 ஆண்டு காலகட்டத்தில்  கட்டப்பட்டது,
இந்த 2023 ஆம் ஆண்டில் தியாகராய நகரின் நூற்றாண்டை நாம் கொண்டாடப் போகிறோம்,  இந்த மாடிப் பேருந்தின் புகைப்படம் 1927 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது.

1920 ஆம் ஆண்டு நகர வடிவமைப்பு செய்யப்பட்டு இங்கிருந்த Long Tank என்ற பெரிய ஏரியை வற்றச்செய்து மண் அடித்து  வயல்வெளிகள் கையகப்படுத்தப்பட்டு இந்த பரந்த இரட்டை வழி நிழற்சாலைகள் இடப்பட்டன, இன்றும் இந்த மாம்பலம் , தி.நகர், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதைகளின் தரையில்  மழைக்காலங்களில் நீர் ஊற்றெடுப்பது இந்த ஏரிபூமி முகாந்திரத்தால்  தான்.

1927 ஆம் ஆண்டில்  தியாகராய நகரில் டபுள் டெக்கர் பேருந்து ஓடியிருந்தால் அன்று அதன் கூட்டம் எப்படி இருந்திருக்க வேண்டும்?, 1911 ஆம் ஆண்டு மாம்பலம் ரயில் நிலையம் துவங்கியுள்ளனர்,இங்கு நல்லி சின்னசாமி டெக்ஸ்டைல்ஸ் 1928 ஆம் ஆண்டு துவங்கப்பட்டுள்ளது, மாம்பலம் ரயிலடியில் இன்றுள்ள வெளியூர் நடைமேடை தான் பழமையானது, எழும்பூர் காஞ்சிபுரம் ரயில்கள் இங்கு இடைநின்று சென்றுள்ளன,தாம்பரம் உள்ளிட்ட பிற ரயில் நிலையங்கள் 1931 மே மாதம் துவங்கப்பட்டுள்ளன.

தியாகராய நகரில் இருந்து அண்ணாசாலைக்குச் செல்ல ஒருவர் ஜி.என்.செட்டி சாலையை பயன்படுத்துவதே புத்திசாலித்தனம், எக்காரணம்  கொண்டும் வெங்கட் நாராயணா சாலையில் நுழைந்து அண்ணாசாலையில் கலக்க நினைக்கக் கூடாது, காரணம் இந்த இரு சாலைகளுமே 45° பாகையில்  பனகல் பார்க்கில் வந்து சந்திப்பதைப் பாருங்கள், ஜி.என்.செட்டி சாலையில் செல்ல உடனே ஜெமினி மேம்பாலத்தை அடையலாம்,வாகன நெரிசல் சிக்னல்களை தவிர்க்கலாம், இந்த நல்லெண்ணத்தில் தான் இந்த வெங்கட்நாராயணா சாலை அண்ணாசாலை சந்திப்பை நெடுங்காலமாக ஒருவழிப்பாதையாக்கி உள்ளனர், நீங்கள் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் திரும்பி , வடக்கு போக் சாலையில் பயணித்து ஜெமினி மேம்பாலத்தை அடைய வேண்டும் அல்லது தியாகராய சாலையில் வலம் திரும்பி  அண்ணா சாலையில் இடம் திரும்பி ஜெமினி மேம்பாலத்தை அடைய வேண்டும், எனவே சென்னையில் வசிப்பவர்கள் கட்டிடத்தில் அவசரகால வழிகள் அறிவதை போல சென்னையின் சாலைகளை அறிவது கட்டாயமாகும்.

இன்று தி.நகரின் நிழற்சாலைகளில் வருடாந்திர வடகிழக்கு பருவமழையில் முறிந்து விழாமல் கம்பீரமாக கிளை பரப்பி வீற்றிருக்கும் கருத்த கட்டிப்பிடிக்க முடியாத தூங்குமூஞ்சி மரங்களின் வயது குறைந்தது 
100 எனக்கொள்க.

Double decker என்ற மாடிப்பேருந்துகள் மற்றும் vestibule என்ற தொடர் பேருந்துகள் இன்றைய நகர பெருக்கத்தில் திணறும் வாகன நெரிசலுக்கு ஒத்து ஒராது என்பதால் படிப்படியாக 2000 ஆண்டு முதல்  வழக்கொழிக்கப்பட்டுவிட்டது , 

1984 ஆம் ஆண்டு திருவள்ளுவர் 137 வழித்தடத்தில் மதுரை முதல் சென்னைக்கு நாங்கள் Double decker பேருந்தில் வந்து இறங்கியது மங்கலாக  நினைவிருக்கிறது, அதீத பயணநேரம் இந்த வழித்தடத்தை வழக்கொழித்திருக்க வேண்டும்.

1998 முதல் 2001 வரை நான் 70 A தாம்பரம் முதல் ஆவடி வழித்தடத்தில் Double decker பேருந்தில் தினமும் பயணித்துள்ளேன்,அதே போல 2001 முதல் 2003 வரை 21G தாம்பரம் முதல் பிராட்வே வழித்தடத்தில் vestibule பேருந்தில் பயணித்துள்ளேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)