சுகாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வீட்டில் அறைக்குள் நீரிலும் மண் தொட்டியிலும் வளர்க்க ஏற்ற செடிகள்


நீரிலும் மண்தொட்டியிலும் இருளிலும் குறைந்த ஒளியிலும் அறையின் உட்புறத்திலும் வளரும்  தாவரங்கள் இவை, அறைக்குள் காற்று மாசுபடுவதை தடுக்கும், சுவாச ஒவ்வாமை, தோல் அரிப்பு ஒவ்வாமை இவற்றை தடுக்கும், வீட்டின் உள் அலங்காரத்துக்கு ஏற்றது, சீன வாஸ்து ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட செடிகள் இவை ,அறைக்குள் நேர்மறை ஆற்றலை பரவச்செய்யும்.

A.பிரகாசமான மறைமுக ஒளியில் வளரும் தாவரங்கள்

1.ஸ்பைடர் பிளாண்ட்

2.டம்ப் கேன்

3.ஏர் ப்ளாண்ட்

4.கிம்பர்லி க்வீன் ஃபெர்ன்

5.மான்ஸ்டெரா

B.நீரிலும் மண்தொட்டியிலும் மங்கலான  பிரகாசமான மறைமுக ஒளியில் வளர்க்க ஏற்ற செடிகள்

1.கோல்டன் போத்தோஸ்

2.ZZ - ஸான்ஸிபார் ஜெம் ப்ளாண்ட்

3.பிலோடென்ட்ரான்

4.பீஸ் லில்லி

5.ப்ரேயர் ப்ளாண்ட்

C.நீரிலும் மண்தொட்டியிலும் மங்கலான நடுத்தர மறைமுக ஒளியில் வளர்க்க ஏற்ற செடிகள்.

1.சைனீஸ் எவர்கிரீன்

2.லக்கி பேம்பூ

3.ஸ்னேக் ப்ளாண்ட்

4.பார்லர் பாம்

5.இங்க்லீஷ் ஐவி

D. நீரிலும் மண்தொட்டியிலும் குறைந்த ஒளியில் வளர்க்க ஏற்ற செடிகள்

1.நெர்வ் ப்ளாண்ட்

2.சகோ பாம்

3.கலாதியா

4.காஸ்ட் அயர்ன் ப்ளாண்ட்

5.லேடி பாம்

These are the plants that grow in water and pots, in the dark, in low light and inside the room, they prevent air pollution in the room, prevent respiratory allergies, skin itching allergies, they are suitable for interior decoration of the house, they are lucky plants recommended by Chinese Vastu Feng Shui, they spread positive energy in the room.
A.BRIGHT INDIRECT LIGHT

1.SPIDER PLANT

2.DUMB CANE

3.AIR PLANT

4.KIMBERLY QUEEN FERN

5.MONSTERA

B.LOW TO BRIGHT INDIRECT LIGHT

1.GOLDEN POTHOS

2.ZZ - Zanzibar Gem PLANT

3.PHILODENDRON

4.PEACE LILY

5.PRAYER PLANT

C.LOW TO MEDIUM INDIRECT LIGHT

1.CHINESE EVERGREEN

2.LUCKY BAMBOO

3.SNAKE PLANT

4.PARLOR PALM

5.ENGLISH IVY

LOW LIGHT

1.NERVE PLANT

2.SAGO PALM

3.CALATHEA

4.CAST IRON PLANT

5.LADY PALM

#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

சித்தரத்தை குணநலன்கள்

தினமும் எப்பாடுபட்டாவது 10000 காலடிகள் நடந்துவிடுகிறேன் , காலை 8-30 முதல் 10-00 என்பதால் நல்ல வெயில் வந்துவிடுகிறது, வேகமாக நடப்பதால் கடும் வியர்வையில் சளி பிடித்தது அது குணமாகி வறட்டு இருமல் மட்டும் இருந்தது,மூச்சு இளைக்க தொடங்கியது, ஆனால் மணம் நன்கு உணரமுடிந்தது.

இம்முறை நான் குடிக்கும் cough syrup கைவிட்டது ,இந்த  சித்தரத்தையை என் அம்மா  சிறு வயதில் இருமலுக்கு வாயில் ஊற வைக்கத் தருவார்,என் மனைவி இதை முயன்று பாருங்கள் என ஒரு சிறு துண்டு தந்தார், அது சக்கையாகும் வரை வாயில் ஊற வைத்து மாற்றிக் கொண்டே இருந்தேன், இருமல் போயே விட்டது, கண்டிப்பாக இது நல்ல அருமருந்து, இதை பலகாலம் மறந்து போனது தான் துயரம்.

இருமலுக்கு cough syrup குடிக்கும் முன் சித்தரத்தையை வாயில் ஊற வைத்து பாருங்கள் ,நல்ல பலன் தெரியும்.

#சித்தரத்தை,#வறட்டு_இருமல்,#மூச்சு_இளைப்பு,#பத்தாயிரம்_காலடி

மனி ப்ளாண்ட் செடி தரும் அளவற்ற நன்மைகள்

Money plant செடி நீரிலும், மண்ணிலும் வளர்க்க ஏற்றது, எந்த பெரிய பராமரிப்பும் தேவையில்லாதது, இரு வாரங்களுக்கு ஒரு முறை குடுவையில் உள்ள நீரவ மாற்றினால் போதுமானது, மஞ்சளாக மாறிய இலைகளை ,சொதசொப்பான இலைகளையும் தண்டையும் வெட்டினால் போதும்,உபயோகித்து முடித்த பழைய ஷாம்பூ பாட்டில் எண்ணெய் பாட்டில் என எதில் வேண்டுமானாலும் வளர்க்க முடியும்.

Money plant வளர்ல்பதன் 10 நன்மைகள் 
10 Benefits of Money Plant (Devil's Ivy)

1) Purifies air.
 காற்றை சுத்தப்படுத்துகிறது, toilet ல் வளர்க்க கெட்ட வாடையை நீக்குகிறது.
2) Reduces stress & anxiety. 
மன அழுத்தம் மற்றும் கவலையை குறைக்கிறது
3) Acts as an anti-radiator. 
அறையின் வெப்பத்தை தணிக்கிறது
4) Offers health benefits. 
உடல்நலத்துக்கு உதவுகிறது
5) Keeps marital problems away. 
தம்பதிகளுக்கு ஒற்றுமையை தருகிறது
6) Brings prosperity & good luck. 
செல்வ வளத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகிறது
7) Mends broken relationships. 
பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கிறது
8) Spreads positivity.
நல்லெண்ணங்களையும் நேர்மறை ஆற்றலை பரவச் செய்கிறது
9) Helps clean aquarium water
மீன் தொட்டியில் வளர்க்க தொட்டி நீரை நன்கு சுத்திகரிக்கிறது, மீன்களுக்கு ஆயுள் அதிகரிக்கிறது
10) Neutralises Sick Building Syndrome
நோயில் விழும் எண்ணத்தை மாற்றுகிறது.

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன்  படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே 
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339

#money_plant,#landscape,#go_green,#indoor_plant,#water_plant

கெருகம்பாக்கம் சட்டவிரோதமான குப்பைமேடு

தினமும் இந்த சட்டவிரோதமான கவுல்பஜார் குப்பைக்காடு வழியாக தான் சென்று  மாலையில் கெருகம்பாக்கம் யோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்து திரும்பி வருவோம்,கெருகம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியே இங்கு தடுப்பு வேலி எழுப்பி 24 மணி நேரம் குப்பை எரிப்பதை  செய்கிறது

சாலைத் திருப்பத்தில் பிணம் எரியும் நாற்றம் அடிக்கும்,  நேற்று கோயில் போக முடியவில்லை, இரவு தந்தி டிவி செய்தி பார்த்தால் பிரபலமில்லாத  சினிமா ஃபைனான்ஸியர் ஒருவர் தனக்கு துரோகம் செய்த நெடுநாள் தண்டல் வசூல் செய்யும்  ஊழியரை நொளும்பூர் வீட்டில் இரும்பு தடியால் இரவு முழுக்க அலற அலற அடித்துக் கொன்றவர்,  சவத்தை தன் அல்லக்கைகளிடம் தந்து இங்கே நடுநிசியில் எடுத்து வந்து குப்பையில் கொட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்,

இந்த சட்ட விரோத குப்பைக் கிடங்கின் அருகே ஒரு டஜன் பிணந்தின்னிக் கழுகுகள் ஆற்றுப் பாறையில் அமர்ந்திருக்கும்,சுமார் இருபது நாய்கள் ,இருபது மாடுகள் தத்தம் சைவ அசைவ கழிவுகளை குத்திக் கிளறியபடி இருக்கும்.

இந்த தந்தி டிவி செய்தியை காணொளி இங்கே பார்க்கலாம்.
https://youtu.be/c8qhwU62wqY

துபாயில் கடற்கரை சுத்தம் |கடற்கரை மணல் ஓவியம்

துபாயில் எப்படி சுத்தம் பேணுகிறார்கள்? நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எப்படி சுற்றுலாவை வளர்க்க பிரயத்தனப்படுகிறார்கள் என்பதற்கு சிறு உதாரணம் இது, 

ஜுமேய்ரா பீச் மணல் பகுதி இது ,அதிக ஆளரவம் இருக்காது ,நான் துபாயில்  வேலை செய்கையில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சென்று மணிக்கணக்கில் ஆழமில்லா கடல் பகுதியில் மிதந்து கொண்டிருப்பேன், 

இங்குள்ள மணலில் குப்பை அள்ளும் எந்திரம்( beach raking machine )சுத்தம் செய்து செல்கையில் துபாயின் iconic landmark ஆன புர்ஜ் கலிஃபா மற்றும்  கடல் வளங்களை இப்படி ரப்பர் ஸ்டாம்ப் போல கடற்கரை மணலில் சில கிலோ மீட்டருக்கு அச்சடித்து விட்டு செல்கிறது,கடற்கரை மணலில் சிகரெட் துண்டு, கண்ணாடி துண்டு,சிப்பிகள், தலைமுடி, குளிர்பான மூடிகள் ,சாக்லேட் காகிதம்  என ஒன்றும் தட்டுப்படாது,ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

PS:இங்கு மெரினாவில் சிறுவனாக இருக்கையில் வெண்மையான பொடிமணல் நிறைய இருக்கும், அதில் நிறைய விளையாடியுள்ளேன்,  இப்போது மணல் வெளி முழுக்க பெருமணலாக உள்ளது,

அதுவும் அத்தனை அழுக்காக உள்ளது , காந்தி சிலை அருகே உள்ள மணல்வெளி இன்னும் மோசம்,

 பலகாலமாக அங்கு சிறுநீர் கழித்து நாசம் செய்துள்ளனர், இங்கும் மணலில் குப்பை அள்ளும் எந்திரம் உள்ளது,ஆனால் மக்கள் கூட்டம் போடும் குப்பை கட்டுக்கடங்காமல் உள்ளதால், எத்தனை முறை அந்த எந்திரம் சென்று வந்தாலும் குப்பைகள் குறைவதில்லை, 

மக்கள் ஒரு சாக்லேட் உறை ஆனாலும் குப்பை தொட்டியில் தான் இடுவேன் என உறுதி பூண்டால் தான் மெரினாவில் சுத்தம் என்பது நிகழும்.

http://www.worldsweeper.com/Industry/CherringtonDubai5.16.html

#துபாய்,#ஜுமேய்ரா_கடற்கரை,#மணல்_ஓவியம்

பம்மல் அண்ணாநகரில் ஐம்பது வருடங்களுக்கு பின் நிறைவேறிய பாதாள சாக்கடை திட்டம்

பம்மலில் எங்கள் தெருவில் , சென்ற வாரம் குழி பறித்து precast manhole chamber இறக்கியதை எழுதியிருந்தேன், 

இன்று மீண்டும் குழி பறித்து precast manhole chamber உடன் இணைத்து heavy duty  HDPE (300 mm dia High Density Polyethylene pipe ) பாதாள சாக்கடை குழாய்களை நிறுவி சிமெண்டால் நன்கு பிணைத்து பூசி மண்ணைத் தள்ளி மூடிவிட்டனர், ஒரே நாளில் இந்த பணியை செய்து முடித்து விட்டனர்.

பம்மல்வாசிகளின் ஐம்பதாண்டு  கனவு மெய்ப்பட்ட தருணம் இது,1973 ஆம் ஆண்டு பம்மலில் அண்ணாநகர் லே அவுட் உருவானது, 2023 ஆம் ஆண்டு தான் பாதாள சாக்கடை வருகிறது.

தாம்பரம் மாநகராட்சியின் இந்த அர்த்தமிகு சுகாதார முன்னெடுப்பால் ராட்சத கொசுக்களிடமிருந்தும் திறந்தவெளி சாக்கடை துயரில் இருந்தும் பம்மல்வாசிகளுக்கு விரைவில் விமோசனம் கிடைக்கும் என நம்புகிறேன் .

மாற்றம் வேண்டி வாக்களித்ததன் பயனை அறுவடை செய்கிறேன்.

சென்னையின் பெருமையான ஸ்டான்லி அரசு மருத்துவமனை மாற்று கைகள் பொருத்தி சாதனை

மிகவும் நெகிழ்ச்சியான தருணம் , ஏழைகள் தன்னம்பிக்கையுடன்  வாழ நம்பிக்கை ஒளி தருவது தமிழகம் என்பது நிரூபணமாகியுள்ளது.

நம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சென்னையின் பெருமையாகும், இணைப்பு படத்தில் இருப்பது ப்ளாஸ்டிக் சர்ஜரி துறை தலைவர் மருத்துவர் ரமாதேவி அவர்கள், உடன் இருப்பது மாற்று கைகள் தானம் பெற்ற திரு.நாராயணசாமி ஆவார்.

2015 ஆம் ஆட்டு தன் இரண்டு கைகளையும் மின்சார விபத்தில் கருகி பறிகொடுத்த  ஏழை கட்டிடத் தொழிலாளி நாராயணசாமிக்கு 2019 ஆம் ஆண்டு , நாட்டில் முதல் முறையாக அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக , மூளைச்சாவு அடைந்த வேறு ஒருவரின் இரண்டு கைகளையும் சுமார் 13 மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை செய்து பொருத்தி உள்ளனர் ப்ளாஸ்டிக் சர்ஜரி துறை சிறப்பு மருத்துவர்கள்,

 அத்துடன் நில்லாமல் மாற்று கைகள் பொருத்திய ஒரு வருடம் சிறப்பு கண்காணிப்பு அறையில் அவரை தங்கவைத்து தொடர் சிகிச்சை  அளித்துள்ளனர் ஸ்டான்லி மருத்துவர்கள்,

மேலும் அவர் வீட்டில் கழிவறை கூட இல்லாததால் அவருக்கு திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் கழிவறையுடன் பசுமைவீடும் கட்டித்தந்து, நோய் தொற்று நேராத வண்ணம் அறைகளுக்கு anti fungal பெயிண்ட் அடித்து தந்துள்ளனர்,

கட்டிட தொழிலாளியாக பணி புரிந்த அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வார்ட் மேலாளர் வேலை தந்து, மாதம் ஒரு முறை சென்னை சென்று பொருத்திய மாற்று கைகளுக்கு மருத்துவ பரிசோதனையும்  செய்து வர சிறப்பு அனுமதியும் வழங்கி உள்ளது திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்.

அரசு என்பது ஏழைகளுக்கானது என்பதை உணர்த்திய நெகிழ்ச்சியான தருணம் இது.

இது பற்றி வெளியான ஆனந்த விகடன் கட்டுரை 

இது பற்றி வெளியான சிறுகதை பாணி கட்டுரை
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (136) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)