பம்மலில் எங்கள் தெருவில் , சென்ற வாரம் குழி பறித்து precast manhole chamber இறக்கியதை எழுதியிருந்தேன்,
இன்று மீண்டும் குழி பறித்து precast manhole chamber உடன் இணைத்து heavy duty HDPE (300 mm dia High Density Polyethylene pipe ) பாதாள சாக்கடை குழாய்களை நிறுவி சிமெண்டால் நன்கு பிணைத்து பூசி மண்ணைத் தள்ளி மூடிவிட்டனர், ஒரே நாளில் இந்த பணியை செய்து முடித்து விட்டனர்.
பம்மல்வாசிகளின் ஐம்பதாண்டு கனவு மெய்ப்பட்ட தருணம் இது,1973 ஆம் ஆண்டு பம்மலில் அண்ணாநகர் லே அவுட் உருவானது, 2023 ஆம் ஆண்டு தான் பாதாள சாக்கடை வருகிறது.
தாம்பரம் மாநகராட்சியின் இந்த அர்த்தமிகு சுகாதார முன்னெடுப்பால் ராட்சத கொசுக்களிடமிருந்தும் திறந்தவெளி சாக்கடை துயரில் இருந்தும் பம்மல்வாசிகளுக்கு விரைவில் விமோசனம் கிடைக்கும் என நம்புகிறேன் .
மாற்றம் வேண்டி வாக்களித்ததன் பயனை அறுவடை செய்கிறேன்.