மணிரத்னம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணிரத்னம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உணரு | இயக்குனர் மணிரத்னம்


இயக்குனர் மணிரத்னத்தின் உணரு மலையாளப் படத்தில் வரும் முக்கியமான காட்சி இது,

 கூலிடோக்கன்களை குலுக்கல் சீட்டு எழுதிப் போட்டு எடுக்கும் காட்சி, ஏழைப்பாவங்களின் விடியலுக்கான ஒன்று கூடல்,

இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை, கொச்சி துறைமுகத்தில் மீனவகிராம மக்கள் ஏழு பேருக்கு மட்டும் தினக்கூலி வேலைக்கான டோக்கன் தந்துள்ளனர்,
 
அங்கே இருப்பதோ  ஐம்பது குடும்பங்கள்,ஐம்பது குடும்பத் தலைவர்கள்.அத்தனை பேரும் நெடுநாட்களாக வேலையின்றி இருப்பவர்கள்,

அத்தனை பேர் முகத்திலும் ஏக்கம், அங்கே ஒவ்வொருவர் பெயரையும் டிஜி ரவி எடுத்துப் படிக்கையில் சேவியர் என்ற குடும்பத் தலைவன் முகத்தில் கவலை ரேகைகள் மின்னலாய் ஓடுகின்றன,

தன் பெயர் அடுத்து வராதா? என்று ஸ்தோத்திரம் போட்டுக் கொண்டே இருக்கிறார்,உடன் அவர் மனைவியும்,ஒரு குலுக்கல் சீட்டை சேவியரின் மகளே எடுத்தும் கூட இவர் பெயர் வரவில்லை,

இவர்கள் இனி விஷத்தை தின்று தான் சாகவேண்டும்,அங்கே புதிய வந்தேறியான ராமு (லாலேட்டன் ) சேவியரின் முகத்தில் அவர் மனத்தைப் படித்தவர் தன் டோக்கனைக் கொண்டு சென்று அவர் வீட்டில் தருகிறார், 

அதே நேரத்தில் சேவியர் ராமுவுக்கு அந்த கிராமத்தில் தஞ்சம் தந்து அவர் பெயரைக் குலுக்கலில் சேர்த்த ரத்தீஷிடம் சென்று மல்லுக்கட்டுகிறார், அப்போது சேவியரின் மகள் வந்து அப்பாவிடம் ராமு விட்டுத் தந்த டோக்கன் பற்றிச் சொல்கிறாள், 

சேவியரின் முகம் நாணுகிறது, நாதழுதழுக்கிறது,நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் சேவியர்.

உணரு என்றால் விழித்தெழு என அர்த்தம்.இசைஞானியின் பின்னணி இசை இந்தக் காட்சிக்கு தந்த அழுத்தத்தை வர்ணிக்க வார்த்தைகளில்லை

இத்தனை முக்கியமான சேவியர் கதாபாத்திரம் செய்த பாஸ்கர குருப் என்ற ஒப்பற்ற நடிகருக்கு விக்கி IMDb என எதிலும் உணரு படத்திற்கு க்ரெடிட் இல்லை,

நடிகர் பாஸ்கர குருப் இயக்குனர் பி.பத்மராஜனின் கள்ளன் பவித்ரன் திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர், ஊரில் திடீர் பணக்காரனாகிவிட்ட பவித்ரனை எப்படியாவது வழக்கில் சிக்க வைக்க  தவியாய் தவிப்பார், கடைசியில் மோந்தையையும் கிண்டியையும் கைப்பற்றி பெரும் பணக்காரனாகிவிட்ட பவித்ரனை கைது செய்வார்.

#உணரு,#மணிரத்னம்,#இசைஞானி,#மோகன்லால்,#ராமச்சந்திரபாபு,#பாஸ்கர_குருப்

இதயகோயில் | 1984 | மணிரத்னம்

நாவிதர் கவுண்டமணி : நான் ஹம்சத்வனி ராகம் பாடினா கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிச்ச உடனே ஆடு மாடுக எல்லாம் பின்னால வர்ர மாதிரி இந்த ஊரு ஜனங்க எல்லாம் என் பின்னால வருவாங்க,எனக்கு  அப்படி ஒரு ஞானம்.

பண்ணை ரெட்டியார் G.சீனிவாசன் : பிச்சக்காரப்பயலே,இதெல்லாம் ஏன்டா உங்களுக்கு? அவன் அவன் அப்பன் தொழில செய்ய வேண்டியது தானே?

நாவிதர் கவுண்டமணி: ஆமாம் எங்கப்பன் தொழில் பெரிய தொழிலு, அவன் க்ராப் வெட்டுனான்னா டீகடைக்கு முன்னால போட்ட கூரை மாதிரி ஒரு பக்கம் ஏறியும் எறங்கியும்  இருக்கும், நான் சங்கீதுத்துல முன்னுக்கு வரப்போறேன்.

பண்ணை ரெட்டியார் G.சீனிவாசன் :ம்,சங்கீதம்,சங்கீதம்னு சோத்துக்கு தாளம் போட போறடா

நாவிதர் கவுண்டமணி: தோ பாருங்க தாளம் போட்டுத் தான் ரொம்ப பேரு சாப்புடுறாங்க,

இயக்குனர் மணிரத்னம் தமிழில் இயக்கி வெளியான  இரண்டாம் திரைப்படம் இதயகோயில், முதல் திரைப்படம் பகல்நிலவு , அப்போது தமிழ் சினிமாவில் சாதிவெறி எப்படி தலைவிரித்து ஆடியுள்ளது என்பதை மேற்கண்ட  வசனங்களில் அறியலாம், 

கதாசிரியர் R.செல்வராஜின் பேனா  பண்ணையார் ரெட்டியார் (G.சீனிவாசன்) கதாபாத்திரத்துக்கு வேண்டி எழுதிய அருவருக்கத்தக்க சாதி வெறுப்பு உமிழும்  வசனங்களுக்கு சிறு உதாரணம் சிகைதிருத்துகையில் வரும் இந்த வசனங்கள்,

படத்தில் நொண்டி என்ற சொல் சாதாரணமாக கதை மாந்தர்கள் பேசுகையில் வந்து விழுகிறது, மாற்று திறனாளி என்ற கண்ணியமான வார்த்தையை நம் அரசு முன் மொழிந்து தீவிர செயல்வடிவம் தராமல் போயிருந்தால் இந்த வார்த்தையை இன்னும் எத்தனை பேர் சாதாரணமாக பயன்படுத்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியிருப்பர்?

இத்திரைப்படத்தில் சென்னைக்கு, முறைமாமன் மோகனைத் தேடி வரும் அம்பிகாவை ரவுடிகள் நால்வர் ஜாவா பைக்கில் துரத்துகின்றனர், (யார் வீட்டு ரோஜா என்ற முதல் பாடல் பதிவின் போது)

 அம்பிகா  தஞ்சம் வேண்டி ஆளில்லாத சிவன் கோயிலில் உள்ளே புகுந்து பிரம்மாண்ட வாயில் கதவை பூட்டிக் கொண்டு உதவிக்கு மணியடிக்கிறார்,

ஜனங்கள் மற்றும் மோகன்  வெளியே  ஒன்று திரண்டு கதவை தள்ளி உடைக்க, மணிச்சத்தம் மட்டும் நிற்கவில்லை, அம்பிகா அந்த கோயில் மணியில் தாவணியை மாட்டி தூங்கிட்டு தொங்கிவிட, மணி மட்டும் ஒலித்தபடியே இருக்கும், அந்தரத்தில் ஆடும் கால்களுக்கு மட்டும் க்ளோஸப் வைத்திருப்பர், சென்னைப்பட்டணம் மீது கதாசிரியருக்கு தான் எத்தனை கோபம் பாருங்கள் .

இப்படத்தில் இயக்குனர்  மணிரத்னம் தன் உடன் இணைந்து பணிபுரிய விரும்பி பரிந்துரைத்த ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் தயாரிப்பாளர் கோவைத்தம்பியால் அங்கீகரிக்கப்படவில்லை, 

அவர் காட்சியாக்கத்தில் புகுத்த விரும்பும் பரீட்சார்த்தங்களை நிகழ்த்த தயாரிப்பாளர் விரும்பவேயில்லை, கச்சா பிலிம் கணக்கு,கெடுபிடி என தொடர் முட்டுக்கட்டை இட்டார்,

படத்தில் மிஞ்சிப் போனால் இயக்குனர் மணிரத்னம் படைப்புகளில் வழமையாக சித்தரிக்கும் காதல் பாடல்களில் இரவுப்பின்னணியில் பிரம்மாண்ட நிலப்பரப்பில் நாயகன் நாயகி நெருப்பு மூட்டி குளிர்காய பத்து இருபது நடனக்கலைஞர்கள் பின்னணியில் ஆடுவார்களே ,
அது போல  காட்சிகளை  80களின் புகழ்பெற்ற வணிக சினிமா  ஒளிப்பதிவாளர் ராஜராஜனை வைத்து சிற்சில காட்சிகள் படமாக்கியிருந்தார், 
தன் படைப்புவாழ்க்கையில் குறிப்பிட விரும்பாத படமாக இதயகோயில் அமைந்து விட்டது உண்மை.

பகல்நிலவு திரைப்படத்திலாவது அவர் நடிகர் சத்யராஜை வைத்து பெரியவர் வரதராஜன் கதாபாத்திரத்திற்கு தான் பின்னாளில் இயக்கிய  நாயகன் திரைப்படத்தின் வேலுநாயகர் கதாபாத்திரத்துக்கு mockup செய்து பார்த்தார், இதில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இயக்குனரால் பரீட்சார்த்தங்கள் நிகழ்த்த முடியவில்லை.

உணரு | இசைஞானி | சங்கம்


http://en.wikipedia.org/wiki/Unaru 
1984ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் மோகன்லாலை வைத்து மலையாளத்தில் இயக்கிய உணரு , சங்கம் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.
தீரம் தேடி என்னும் ஜானகி பாடும் பாடல்
https://www.youtube.com/watch?v=5udmbfTUabI
தீபமே என்னும் ஜானகி மற்றும் கிருஷ்னசந்திரன் பாடும் பாடல்
https://www.youtube.com/watch?v=l_ziPIEMzTI

உணரு படம் பற்றி மேலும்

அஞ்சலி LP ஒலித்தட்டுகளில் இசைஞானி படம் மட்டும் இருந்ததை பாருங்கள்

அஞ்சலி திரைப்படத்தின் எல்பி ரெகார்ட் கவர்கள், இயக்குனர் மணி ரத்னம் படம் கூட இல்லை, அஞ்சலி பாப்பா படம் கூட தீம் ஸ்கெட்சாக தான் உள்ளது, இசைஞானி இந்த முதல் மரியாதைக்கு முழு தகுதி கொண்டவர், ஒரு படத்தின் இசைக்கு அவர் உழைப்பும் அர்ப்பணிப்பும் அத்தகையது.

மௌனராகம் தமிழ் மற்றும் மலினமான இந்தி ஆக்கம் ஒப்பீடு

இந்த காணொளிகளை இங்கே காணவும்


மௌனராகம் படத்தில் வரும் மிஸ்டர் சந்திரமௌலி காட்சி இந்தியில் மிஸ்டர் துர்காபிரசாத் என்று மாற்றியிருக்கிறனர், 

இதில் கார்த்திக் கதாபாத்திரத்தில் chunky pande என்ற இந்தி நடிகர் பஃபூன் போல ஈயடிச்சான் காப்பி அடித்து அந்த கதாபாத்திரத்தை சொதப்பியிருந்தார், 

இங்கே  காஃபி சாப்பிட அழைப்பதை அங்கே டீ சாப்பிட அழைப்பதாக மாற்றினர், மௌனராகம் படத்தின் காஃபி ஷாப் tic tac restaurant  முன்பு இஸ்பஹானி சென்டர் இருந்த இடத்தில் இருந்தது, இன்று ஜெமினி மேம்பாலம் இறக்கத்தில் gn chetty சாலையில் உள்ளது, 

இயக்குனர் மணிரத்னம் தன் ஸ்க்ரிப்டில் திவ்யாவின் அப்பாவுக்கு பெயர் எதுவும் வைக்காமல் இருக்க, ரா.சங்கரன் அவர்கள் நடித்த அன்று தன் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என கேட்க , 

அப்போது இந்த பெயர் சூட்டப்பட்டதாம்,இது படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் பெயர், அந்த neck of the momentல் அவர்களுக்குள் இந்த பெயரை விவாதித்து சூட்டியதாக ரா.சங்கரன் அவர்கள்,சாய் வித் சித்ரா பேட்டியில் பகிர்ந்தார்.

நடிகர் கார்த்திக் ,நடிகை ரேவதி இந்த கதாபாத்திரத்தை எப்படி சிறப்புற உயர்வாக செய்திருக்கின்றனர் என்று புரிந்து கொள்ள  kasak இந்தி வடிவத்தின் இதே காட்சியை இங்கே இணைத்துள்ளேன், நடிப்பும் கதாபாத்திரமாக transform ஆவதும் சுலபமில்லை பாருங்கள்,ஏதோ picnic போவது போல இந்தியில் இந்த படத்தை எடுத்துள்ளனர்.

காப்புரிமை வாங்கிய reference material கையில் லட்டு போல இருந்தாலும் சிலரால் perfection தரமுடியாது என்பதற்கு உதாரணம் இது

#மௌன_ராகம்,#kasak,#கார்த்திக்,#ரேவதி,#மிஸ்டர்_சந்திரமௌலி,#மணிரத்னம்,#பிசி_ஸ்ரீராம்

மௌன ராகம் | என்கவுண்டர் காட்சி | இசைஞானி

இந்த காணோளியை இங்கே பாருங்கள்

இது மௌளனராகம் படத்தில் மனோகர் ( கார்த்திக் ) அத்தியாயத்தின் climax காட்சியின்  பின்னணி இசை,இசைஞானி இந்த காட்சிகளைப் பார்த்து விட்டு எத்தனை தாக்கம் வருமாறு பின்னணி இசை சேர்த்துள்ளார்,

இந்தக் காட்சியை இசையின்றி பார்த்தேன் எனக்கு ஒரு தாக்கமும் ஏற்படவில்லை, இசையுடன் பார்த்தால் அங்கே மனோகர் திவ்யா என நிஜ மனிதர்களாக  முன் நிற்கின்றனர், 
goose bumbs வருகிறது என்றால் மிகையில்லை,அந்த சூழலின் உணர்ச்சிகளை prominent ஆக நமக்கு கடத்துகிறார் இசைஞானி, இந்த encounter காட்சியை ராஜாஜி ஹாலில் எடுத்திருப்பார்கள்,கார்த்திக்கின் காஸ்ட்யூம்ஸ் 35 வருடங்கள் கடந்தும் இன்றும் outdate ஆக வில்லை பாருங்கள்,white cotton full shirt,double pocket, dark blue straight pocket denim,black & white sports shoe .

மனோகர் படியேறியவர் சுடப்படுகையில் rear, front என்று காட்சி முதுகில் துளைக்கும் நெஞ்சில் வெளியேறும் தோட்டாவைக் காட்டுகிறது, பின்னர் top angle அவர் சரிந்து படிகளில் உருள்வதைக் காட்டுகிறது, PC ஸ்ரீராம் அவர்கள் ஒளிப்பதிவு.

இந்த லிங்கில் இரண்டு இசை ஆர்வமிக்க சகோதரர்கள் இருவர் இரண்டு கீபோர்ட்களில் வாசித்து fan cover செய்திருந்தனர், இரண்டையும் பாருங்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=2891298254297006&id=100002505786472

#மௌனராகம்,
#pc_ஸ்ரீராம், #திவ்யா,#மனோகர்,#இசைஞானி,#மணிரத்னம்,#ராஜாஜி_ஹால்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (136) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)