த இன்ஃபார்மர்ஸ்(18+)2009 காயமே இது பொய்யடா!


ந்த படம் முன்பு ஒருமுறை அவசரகதியில் பார்த்தபோது மிகவும் நளினமாக எடுக்கப்பட்ட நான்-லீனியர் கரைம்-ட்ராமா-த்ரில்லர்  எனக் கண்டேன்,இரண்டாம் முறை பார்க்க வேண்டிய பட்டியலில் சேர்த்த இதை போன வாரம் தான்  பார்த்தேன்.,பிரமித்தேன்,அடடா!!,வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை, திரைக்கதை, வித்தியாசமான, பரீட்சார்த்தமான திரைப்படங்களின் ரசிகர்களுக்கு நிச்சயமாய் ஒரு விஷுவல் ட்ரீட்டே.  படத்தின் கதாசிரியர் அமெரிக்கன் சைக்கோ,லெஸ் தன் ஸீரோ நாவல்கள் புகழ் ப்ரெட் ஈஸ்டெர்ன் எல்லீஸ் .அவர் எழுதிய எட்டு சிறுகதைகளின் தொகுப்பான த இன்ஃபார்மர்ஸ் என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தபடம் நிச்சயம்  பாராட்டப்படவேண்டிய முயற்சியே.
ஸ்திரேலிய இயக்குனர் க்ரிகோர் ஜோர்டன் 1983ஆம் ஆண்டு சில வார கால கட்டத்தில் ஏழு வெவ்வேறு கதைகளின் ஊடே 13 வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை ஒவ்வொரு கிளைக் கதைக்குள்ளும் வரும் இன்னொரு கதாபாத்திரத்துடன் தொடர்பு கொடுத்து  (இண்டர் கனக்டட் )காட்சிகளை நகர்த்திச் செல்கிறார். கதையின் ஒரு சம்பவத்தில் முடித்த காட்சியில் அடுத்த கதையில் முடிக்கப்பட்ட காட்சியின் தொடர்போடு   ஆரம்பிக்கிறார்.  கவனித்து பார்க்கவும்.  ( உதாரணம் ஒரு காட்சி மாறுகையில் ஒருவர் காரில் புறப்பட்டால் அடுத்தகாட்சியில் வேறொருவர் காரில் வந்து இறங்குவார்.)

1.எண்பதுகளில்  லாஸ்ஏஞ்ஜலஸில் ஹெராயின்,கோக்கெய்ன்,மற்றும் மதுவின் போதைக்கும் வரைமுறையில்லா பாதுகாப்பற்ற க்ரூப் செக்ஸிற்கும் அடிமையாகி சீரழிந்து  வரும் பணம்படைத்த சமூக அந்தஸ்த்து உள்ள   பைசெக்ஸுவல் இளைஞர்கள் க்ரஹாம் (ஜான் ஃபாஸ்டர்), மார்டின், டிம் (லூ டெய்லர் ), ரேமாண்ட், அவர்களுக்கு பொதுவான செக்ஸ் பார்ட்னர் க்ரிஸ்டி (ஆம்பர் ஹியர்ட்) . சமீபத்தில் இவர்களுக்கு பொதுவான நண்பன் ப்ரூஸ்  கார் மோதி இறந்து விட.நினைவுஅஞ்சலி கூட்டம் நடக்கிறது. பின்னர் அவரவர் மேலே சொன்ன இயல்பு வாழ்கைக்கு திரும்புகின்றனர்.வாழும் வரை பார்ட்டி அனிமல்களாய் உல்லாசமாய் அனுபவித்து வாழ எண்ணுகின்றனர்.

2.மனைவி மக்களைப்பற்றி நினைக்காமல் ஸ்டுடியோவிலேயே வாழும் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வில்லியமும் (பில்லி பாப் தார்ண்டன்), செய்திவாசிக்கும் பெண் செரிலுடனான (வினோனா ரைடர் ) அவரது கள்ளக்காதலும்,விரைவில் பிரியப்போகும் மனைவிக்கு  ஜீவனாம்சமாக தன் பாதி சொத்தை கொடுக்க மனமின்றி அவளுடனே ரீகவுன்சிலிங் செய்து கொண்டு மீண்டும் சேரவருவதும். சேர்ந்த பின்னும் தொடரும்  அவரின் கள்ளக் காதலும், அவரின் போதைமாத்திரைக்கு அடிமையான மனைவி லாரா (கிம் பாசிங்கர்) அவள் மகனின் நண்பன் மார்டினுடன் (ஆஸ்டின் நிக்கோல்ஸ்) வைத்திருக்கும் உடல் தொடர்பும்.குடும்பத்தினரிடம் நிலவும் வெறுமையும் எப்படி ஒரு குடும்பம் இருக்க கூடாது என்பதற்கு உதாரணம். அதில் ஒரு விந்தையாக ,வில்லியம்  தனக்கு இருக்கும் ED குறைபாட்டுக்கு மனைவி லாராவின் கையாலேயே விதைபகுதியில் ஊசி போட்டுக்கொண்டு விரைவில்  பிரிய இருக்கும் மனைவியையே கூடுவது மிருகத்தனத்துக்கும் கீழான செயல்.அதை நேர்த்தியாய் சொல்லும் இந்த இழை.

3.ஹெராயின் போதைக்கு அடிமையான பெடோபைல் தன்மை கொண்ட புகழ்படைத்த ராக் பாடகன் பரையன் மெட்ரோ (மெல் ரெய்டோ) பதினம வயதுள்ள ஆண் பெண்ணுடன் த்ரீசம் ஆர்கி தினமும் வைத்துக்கொள்பவன். இவனுக்கு நினைவிருப்பது இவன் பெயரும், போதையும்,பின்னே செக்ஸும் மட்டுமே.இவனுக்கு புகழ் கிடைத்த அளவுக்கு அன்பு கிடைக்கவில்லை,இவன் மனதில் குடிகொண்ட வெறுமை அதை சொல்லும் மற்றொரு இழை.அவன் இரவெல்லாம் கூடிவிட்டு காலையில் கண் விழித்து அருகே நிர்வாணமாய் தூங்கும் 15வயதுக்கும் குறைந்த ஆணையும் பெண்ணையும் பார்த்து கடுப்பாகி தன் முரட்டு உதவியாளனை அழைத்து அவர்களை முரட்டுத்தனமாய் வெளியே தூக்கி போட செய்யும் வினோத கிராக்கு.இவனைப்பற்றி இந்த இழை.
4.வாழ்வில் முன்னேற சினிமாவில் சேர  கடத்தல் மற்றும் கொலைபாதகம் செய்யும்  குடும்பத்தை விட்டு ஓடிவந்து வாட்ச்மேன் வேலைபார்க்கும் சிற்றூர் இளைஞன் ஜாக் (ப்ராட் ரென்ஃப்ரோ),அவனை தேடி வந்து அடைக்கலம் கேட்ட்டு தொல்லை தரும்  பிள்ளை பிடிக்கும் சித்தப்பன் பீட்டர் (மிக்கி ரூர்கி) ,அவனுடன்  போதைக்கு மயங்கிய இளம் பெண் கூட்டாளியும். பீட்டர்  6000 டாலருக்கு டர்க் என்னும் மாஃபியா ஆளுக்கு விற்க பிடித்து வரும் தெருவில் விளையாடிய அப்பாவி சிறுவன் என இன்னொரு விந்தையான இழை .

5.நான்கு நண்பர்களில் ஒருவனான டிம்(லூ டெய்லர்) ன் விவாகரத்தான பெற்றோரில் அப்பா லெஸ் ப்ரைஸ் (க்ரிஸ் ஐசக்) மகனுடன் திடீர் பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள கோர்ட் ஆர்டருடன் டிம்மை ஹவாய் தீவுக்கு அழைத்துச் செல்வதும். மகனுடன் மது குடிப்பதும்,பாரில் சந்தித்த இரண்டு இளம் பெண்களை தனக்கும் மகனுக்கும் சேர்த்தே பிக்கப் செய்யப்பார்ப்பதும்.தனக்கு பிடித்தவற்றை மகன் மீது திணிப்பதும் ,ஏவுவதும் வேடிக்கை.மகன் ஹவாய் தீவில் ஒரு அழகிய பெண்ணை டேட்டிங் செய்வதைப்பார்த்து அவனுக்கு உதவ நினைத்தும்,மகன் போதை மற்றும் பைசெக்சுவல் தன்மை உள்ளதால் தடுமாறுவதைப் பார்த்து திகைக்கும் இன்னொரு இழை.

6.மேலே சொன்ன ஹாலிவுட் தயாரிப்பாளர் வில்லியம் & லாரா தம்பதியரின்   பைசெக்ஸுவல் தன்மையுள்ள மகன் க்ரஹாம் (ஜான் ஃபாஸ்டர்) பணத்துக்காக செய்து வரும் போதைமருந்து பரிமாற்றமும்,அவனின் அழகிய காதலி க்ரிஸ்டி (ஆம்பர் ஹியர்ட்) ஹெராயின் போதையுடன்  தன் ஹோமோ செக்ஸுவல் பார்ட்னர்களுடன் வைத்துக்கொள்ளும் செக்ஸும்,  அந்த  ஓப்பன் செக்ஸ் நடவடிக்கையினால் திடுக்குற்ற இவனுக்கு ஃப்ரீசெக்ஸ் கலாச்சாரத்தின் மீது ஏற்படும் வெறுப்பையும், அப்பாவுக்கும் அம்மாவுக்கும், சீரழிந்த அண்ணனுடன் இடையே சிக்கித்தவிக்கும் ஒழுக்கமான பதின்ம வயது மகள் சூசன் (கேமரான் குட்மேன்) கொள்ளும் துயரங்கள் என  வினோதமான இழையும் உண்டு.

7.தாய் தந்தையர் பாசம் அறவே அற்ற க்ரிஸ்டி (ஆம்பர் ஹியர்ட்) ஓப்பன் செக்ஸில் நம்பிக்கை வைக்கிறாள்,தன் உயர்தர அடுக்குமாடி வீட்டில் எந்நேரமும் ஹெராயின் உட்கொண்டும் க்ரூப் செக்ஸில் ஈடுபட்டும் வருகிறாள்.இல்லறம் என்பதை வெற்றிடமாக கருதி இருக்கும் வரை உல்லாசமாய்,பலருடன் கூடி குலவுவதிலேயே லயிக்கிறாள்,இதை வருத்தத்துடன் தட்டிக்கேட்ட காதலன் க்ரஹாமுக்கு பதிலடியாக அவன் ஒரு பைசெக்சுவலாக அவன் நண்பன் மார்டீனுடன் உடல்தொடர்பு வைத்துக்கொள்வதை தான் கண்டுகொள்ளாதது போல, அவனும் இவளின் உடல் தொடர்புகளை கண்டும் காணாமல் இரு என உரைப்பது. விஷவிதை போன்ற ஒப்பன் செக்ஸ் கலாச்சாரத்தைப் பற்றிய பயத்தை நம்முள் கிளறாமல் இல்லை.

க்ரிஸ்டியுடைய அப்பாவின் புதிய இளம் காதலி இவள் அப்பாவின் கடற்கரை வீட்டுக்கு தன் மூன்று வயது மகனுடன் குடிபெயர்கிறாள். அவளின் முன்னாள் கணவன் அந்த வீட்டின் தொலைபேசி எண்ணில் போன் செய்து மகனுடன் பேசவேண்டும் என மிரட்ட, அந்த பெண் அவனை போலீசில் பிடித்து கொடுப்பேன் என பதில் சொல்கிறாள்.கண் முன்னே இருக்கும் உறவை விட்டு புதிய உறவை தேடிப்போய் அதிலும் ஏமாந்து தோற்றுப்போகும் பிகமிஸ்டுகளைப்பற்றிய வித்தியாசமான இழையை இதில் காணலாம்.

யக்குனர் தன் நுட்பமான படைப்பால் மேலே சொன்ன அத்தனை கதாபாத்திரங்களுக்கும்  உயிரூட்டி அவர்களையும் படம் பார்க்கும் நம்மையும்  ஒரே நேர்க்கோட்டில்   சந்திக்கவைக்கிறார். துள்ளலான திரைக்கதை,எண்ணில்லா கதாபாத்திரங்களை வைத்து பின்னபட்ட கிளைக்கதை மற்றும் ஏகப்பட்ட ட்விஸ்டுகளாலும் சற்றே குழம்ப வைத்தாலும் ,  பிரபல நடிகர்கள் பில்லிபார்ப் தார்ண்டன் (த மேன் ஹூ வாஸ் நாட் தேர் ), மிக்கி ரூர்க்கி (த ரெஸ்லர்) நடிகைகள்  கிம் பேசிங்கர் (எல் ஏ கான்ஃபிடென்ஷியல்) வினோனா ரைடர் (லிட்டில் வுமேன் )போன்றோரின்  மிகப்  ப்ரொஃபெஷனலான நடிப்பாலும்,மிக நேர்த்தியான இசை,ஒளிப்பதிவினாலும் .

பைனாப்பிள் எக்ஸ்ப்ரெஸ் புகழ் இளம் நடிகை  ஆம்பர் ஹியர்ட்  இதில் துணிந்து இரண்டு டாப்லெஸ் கலவி காட்சிகளில் லயித்து நடித்துள்ளதாலும் இப்படம் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது. படத்தில் வரும் 50% காட்சிகளில் இவர் பிறந்த மேனியாகவே வருகிறார்.

டம் அந்த இரண்டு காட்சிகளுக்கே  பார்க்கலாம். இனியாவது இந்த பெண்ணுக்கு பெரிய படங்களில் வாய்ப்பு கிடைக்கட்டும். படத்தை லிமிட் ரிலீசில் வெளியிட்டதால் 300,000 அமெரிக்க டாலர்கள் தான் கல்லா கட்டியதாம். வைட் ரிலீஸ் விடுவார்களா? தல ஹாலிவுட் பாலாவுக்கே வெளிச்சம்.

டத்துக்கு இன்னொரு சிறப்பு  இது அமெரிக்கர்களாலேயே கன்னறாவி படம் என காறி துப்பப்பட்ட படமாம். இது ஒன்று போதாதா? படத்தில் காண்ட்ராவர்ஸிக்கு பஞ்சமே இல்லை என்பதற்கு? நாவலில் இன்னொரு சிறுகதையாக ஒரு வாம்பையர் (ரத்தக்காட்டேரி) கதாபாத்திரமும் வருமாம், அதை இதில் எங்கே சேர்ப்பது? சேர்த்தால் லாஜிக்கான இந்த படத்தில் இடைச்செருகலாய் தெரியும் என இயக்குனர் அதை தூக்கி விட்டாராம், நல்ல வேளை.
=============
சரி படத்தில் மேலே சொன்ன ஏடாகூடமான கதாபாத்திரங்களுக்கு என்ன ஆனது? இயக்குனர் யதார்த்தமான முடிவைத்தான் வைத்துள்ளார்.  அது என்ன?
சன்டிவி தொலைக்காட்சி சீரியல்களில் வரும் கள்ளத்தொடர்பை விட இடியாப்ப சிக்கலாய் உள்ள  1-30 மணி நேர படத்தை 
டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
அப்புறம் வாருங்கள் பேசுவோம்.
===============================
படத்தின் முன்னோட்டக் காணொளி:-


===============================
டிஸ்கி:-
படத்தை இவ்வளவு கலைத்தன்மையுடன் எடுத்த இயக்குனர் படத்தின் போஸ்டரை ஏன் உயிரற்ற முகமாய் வைத்தார். என யோசித்தேன்.  படத்தின் போஸ்டரில் இருப்பது ஒரு மானிக்குய்ன். (நகைக்கடை & ஜவுளிக்கடை பொம்மை) மேலே சொன்ன மனிதர்களை குறிக்கிறது,அவர்கள் வெளித்தோற்றத்தில் அழகாய் இருந்தாலும் உள் மனதில்  எதிலும் பிடிப்புமற்ற வெறுமையே இருக்கிறது. அதைத் தான் அந்த குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.
===========

ய சீரியஸ் மேன் (18+)2009

a serious manங்கள் எல்லா படங்களிலும் நீதிபோதனைக்கதைகள் சொல்லியே பழக்கப்பட்ட கோயன் ப்ரதர்ஸ் இப்போது கையிலெடுத்திருப்பது குடும்ப சப்ஜெக்ட்.அதுவும் ஆச்சாரமான யூத குடும்பத்துள் நிகழும் சுவையான சம்பவங்கள்,கூச்சல்கள் குழப்பங்கள் கலந்த டார்க்ஹ்யூமர் காக்டெய்ல் இது. 

ன் கடமையை சரிவர செய்வதாக நினைத்துக்கொண்டு தன்னை ஒரு சீரியஸ் மேனாக நினைத்து நம்மில் எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்லா படிச்சாச்சு, அடுத்து?, நல்ல வேலை கிடைச்சாச்சு,அடுத்து?, நல்ல அழகிய பெண்ணாய் பார்த்தாச்சு, அடுத்து?. பழகி திருமணமும் செய்தாச்சு அடுத்து?, குழந்தை குட்டிகளும் ஆயாச்சு,அடுத்து?, உடுக்க நல்ல உடையும், வசிக்க நல்ல வீடும் ,வீட்டாரோடு வெளியில் போய் வர நல்ல காரும்,வீடு நிறைய ஆடம்பரப்பொருட்களும் வாங்கிப்போட்டாச்சு,அடுத்து?

 குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடத்தில் கல்வியும்,மூன்று வேளை நல்ல உணவும் கொடுக்க முடிகிறது, வாராந்திர கேளிக்கைகளும் விருந்தும்  ,நட்பும்  சுற்றமும் குறைவில்லாமல்  உண்டு , அடுத்து? ஊரும் சுற்றமும் சமூகமும் மதிக்கும் படி வாழ நினைத்து சில பல  தியாகங்களும் செய்தாச்சு: இவன் நிஜத்தில் மன நிறைவு பெற்றானா? மனைவி உண்மையிலேயே சுகப்பட்டாளா?குழந்தைகள் உண்மையிலேயே சந்தோஷப்பட்டனரா? உண்மையிலேயே நாமெல்லாம் சீரியஸ் மேன் தானா? 

த்தனை கஷ்டம் ஒருத்தன் சீரியஸ் மேனாய் வாழ்வது என்பது .மத்தளத்துக்கு இரண்டுபக்கம் தான் அடி . ஆனால் சீரியஸ் மேன்களுக்கு திரும்பிய பக்கமெல்லாம் அடி தான். என்ன அவரவர் வசதிக்கேற்ப அடி கூடும் குறையும்.நாம் அதிகம் கேள்விப்பட்டிராத பழகியிராத மதம் யூதமதம்.அதில் உள்ள சுவையான விஷயங்களை படம் நமக்கு போகிற போக்கில் டார்க்ஹ்யூமர் துணையுடன் விளக்கி விடுகிறது.உலகசினிமா காதலருக்கு மீண்டும் பரவசம் நிச்சயம்.
============================
படத்தின் கதை:- 
 படத்தின் ஆரம்பத்தில் பல நூற்றாண்டுக்கு முன்,ஒர் குளிர் பிரதேசத்தின் இரவில்  ஒரு குடும்பம் காட்டப்பட, அந்த கணவன் மனைவியின் விருந்தினர் என்று ஒரு வயதான ராப்பி (யூத குருமார்) ஒருவரை அழைத்து வர. மனைவி திகைத்து,அவர் இறந்து மூன்று வருடமாகிறது. வந்திருப்பது டிப்புக் (பேய்)  என்றவள். ஒரு கூரிய திருப்புளியை அந்த வயதான ராப்பியின் நெஞ்சில் சொருக. மிகுந்த வலியால் துடித்த அவர் . புலம்பியபடி வெளியே பனிப்பொழிவில் இறங்கி நடக்கிறார். கணவன் மிகவும் பயப்படுகிறான். அந்த மனிதரை நாளை ஊரார் கண்டுபிடித்து நம்மிடம் தான் வருவர்.என சொல்ல. காட்சி மாறுகிறது.

குடும்பத்தலைவனின் கடமை உழைத்துக்கொட்டுவது என்றிருப்பதால், அவனால் உலக மாயைகளை புரிந்து விளங்கி,தெளிவு பெற முடியவில்லை. ஆகவே அவன் பேயை விருந்தினராய் கூட்டி வருகிறான்.ஆனால் குடும்பத்தலைவி என்பவள் மேன்மையான குடும்ப பொறுப்புகளான குழந்தை பெறுதல்,வளர்த்தல்,அன்னமிடுதல் ,சுகம் தருதல் ,பெறுதல் என இருப்பவள், அதனால் தான்  அவளால் மாயைகளை புரிந்து வந்திருப்பது டிப்புக் (பேய்) என கண்டறிந்து திருப்புளியை அதன் நெஞ்சில் சொருகமுடிந்தது. என விளக்க இக்காட்சியை  கோயன் பிரதர்ஸ்படத்தின் ஆரம்பத்தில் வைத்துள்ளனர்.
=================


aseriousmanmoviestill
பிரதான படம் 1967ஆம் ஆண்டு வடக்கு டகோடாவில் துவங்குகிறது, லாரி கோப்னிக் (மைக்கேல் ஸ்டுல்ஹ்பர்க்) யூத மதத்தை சேர்ந்த இளங்கலை இயற்பியல் பேராசிரியர். நேர்மையானவரும் கூட. சமீப காலமாய் இருக்கும் லேசான அயற்சியினாலும் சோர்வினாலும்  முழு உடம்பு பரிசோதனை செய்து கொள்கிறார். அவரை பரிசோதிக்கும் மருத்துவர் செயின் ஸ்மோகராய் இருக்கிறார்,இவருக்கு ஒரு சந்தேகம் , முடிவுகள் தரும் வரை மருத்துவர் உயிருடன் இருப்பாரா?என்று. மனைவி ஜூடித் (சாரி லென்னிக்) ,அக்கால புத்திசாலி அழகி. சமீபத்தில் மனைவியை இழந்த குடும்ப நண்பரான  நடுத்தர வயதுள்ள சை ஏபிள் மேன் (ஃப்ரெட் மெலமெட்)ன் கனிவான பேச்சில் மயங்கி அவர் மீது காதல் வயப்படுகிறாள்.

SeriousManபேராசிரியர் லாரியிடம் அதிரடியாக இதை சொன்னவள்.இருவரின்  புரிதலின் பேரின் கெத் (யூத திருமண சட்ட விவாக ரத்து) மிரட்டி கேட்கிறாள். அதற்கும் இவரைக் கேட்காமல் டிவோர்ஸ் அட்டார்னியிடம் பேசி அப்பாயிண்ட்மெண்டும் வாங்கிவிடுகிறாள். புதிய காதலன் சை ஏபிள் மேன் வீட்டுக்கே வந்து இந்த ஏமாளி மனிதருக்கு ஒயின் பாட்டில் தந்து கட்டிப்பிடி வைத்தியம் செய்து நிதானமாக மனைவியை மற. ஒன்றும் அவசரமில்லை,உன் நிம்மதியும் நட்பும் எனக்கு எப்பொழுதும் தேவை என்கிறார்.

கூடவே பிறந்த பிரச்சனையாக நீரழிவு நோயும் சிறுநீரக கோளாறும்  கொண்ட வேலைவெட்டியில்லாத சகோதரன் ஆர்தர் (ரிச்சர்ட் கைண்ட் ) வேறு. இவர் வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டு விட்டு.முக்கால் வாசி நேரம் இவர் வீட்டு பாத்ரூமிலும் ,தூங்கும் போது  இவரின் கவுச்சிலும் குடிகொள்கிறார்.  அவரின் சொத்தான ஒரு டைரியில் பல ஹீப்ரு எண்களை எழுதி சங்கேத குறியீடுகள் கொண்ட காம்பினேஷன்கள் தயாரிக்கிறார்.அதை டவுனில் இருக்கும் சூதாட்ட விடுதிகள் சென்று பயன்படுத்தி அதிகுறுக்குவழியில் பணம் சம்பாதிக்கிறார்.

வர்களின் பதின்ம வயது அழகு மகள் சாரா ( ஜெசிக்கா மெக்மேனஸ்) நீளமான மூக்கை சரி செய்ய பணம் சேர்க்கிறாள்,அதற்காக அவ்வப்பொழுது அப்பாவின் பர்சிலிருந்து பணம் திருடுகிறாள்,தினமும் இரவில் வெளியே செல்கிறாள்.சுயநலப்பேயாக அடங்காதவளாக இருக்கிறாள். டேனி(ஆர்ரொன் உல்ஃப்)அக்கா அப்பாவிடம் ஆட்டையைப் போட்ட பணத்தை திருடி கஞ்சா புகைக்கும் பதிமூன்று வயது மாணவன்,சமீபத்தில் பணம் திருடி வாங்கிய பாக்கெட் ரேடியோவில் காதுகேளாதவர் உபயோகப்படுத்தும் ஹெட்போன் சொருகி ஹீப்ரூ வகுப்பு நடக்கையிலேயே, மெய்மறந்து ஜெஃப்ஃபெர்சன் ஏரோபிளேன் பாடிய ”சம்படி டு லவ்” என்னும் பாடலைக் கேட்க,கையும் ரேடியோவுமாக மாட்டிக்கொள்கிறான். 

ந்த ரேடியோ உறையில் நேற்று தான் அக்காவிடம் திருடிய 20டாலரை ஒளித்து வைத்திருந்தான். பணத்தோடு ரேடியோவும் தலைமை ஆசிரியரிடம் சிக்கிக்கொள்ள,இவனும் நண்பனும் கள்ளசாவி போட்டு மேசையை திறந்து பார்த்து ஏமாந்து போகின்றனர். வீட்டுக்கு அருகே இருக்கும் கஞ்சா விற்கும் மூத்த குண்டு மாணவன் இவன் பாக்கி 20டாலர் தராததால் தினமும் இவனை அடிக்க வீடுவரை துரத்தி செல்கிறான்.

serious09jpg-47540d3011822b44_large
வரின் பக்கத்துவீட்டு வேட்டைக்கார முரட்டு ஆளுக்கு யூதர்களே பிடிக்காது,அவனின் மகனை படிப்பை நிரந்தரமாய் நிறுத்திவிட்டு  தினமும் தன்னுடன் காட்டுக்கு அழைத்துப்போய் காட்டெருமை மற்றும் மான் வேட்டையாடி கொண்டு வருகிறான். அப்படிப்பட்ட ஆள்  இவரின் வீட்டு நிலப்பரப்புக்குள்ளும் வந்து புல் தோட்டம் போட்டு பராமரிக்கிறான். இவர் என்ன கேட்டாலும் அடிப்பது போல பேசுகிறான். பூச்சியைப்போல பாரக்கிறான். தன் விவாகரத்து வழக்குக்காக அட்டார்னியிடம் சென்றவர் இந்த வழக்கையும் இணைத்து நடத்துகிறார். ஒருபக்கம் இவரின் சம்பளம் சுறாவிற்கு சோளப்பொறியாக  கரைகிறது.

பேராசிரியர் லாரியின்  மனைவி இந்தமுறையும் இவரைக்கேட்காமலே சை ஏபிள் மேனையும் இவரையும் ஒரு உணவகத்தில் சந்தித்து பேச ஏற்பாடு செய்கிறாள்.இவளும் அந்த ஆளுடன் உரசிக்கொண்டு உட்கார்கிறாள். சை ஏபிள் மேனும் இவளும் ஒருமித்த குரலில் அன்பாக இவருக்கு கட்டளை இடுகின்றனர். அதாவது மகள் சாராவும் மகன் ஆர்ரோனும் எந்த நிலையிலும் அம்மாவின் புதிய திருமணத்தால் பாதிக்கக்கூடாது. அப்புறம் அவர்களின் பொல்லாத படிப்பு பாழாகிவிடுமாம்.ஆகவே பேராசிரியரும் அவரின் அண்ணனும் ஊருக்கு அருகே இருக்கும் ஒரு வாடகை குறைந்த, நீச்சல் குளம் கொண்ட  மோட்டலில் தங்கிகொண்டு இவர்களிடம் முன்னமே சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு வந்து பிள்ளைகளை பார்த்துச் செல்லவேண்டும் என்பதே அது. அந்த ஏமாந்த சோனகிரி பேராசிரியர் லாரி இதற்கும் அரை மனதுடன் சம்மதித்து தன் அண்ணனுடன் மோட்டலுக்கு பெட்டி தூக்குகிறார்.

 இவரின் வகுப்பில் படிக்கும் க்ளைவ் என்னும் தென்கொரிய மாணவன் இயற்பியல் பாடத்தில் ஃபெயிலாகிவிட,இவரை அணுகி இவருக்கு தெரியாமல் ஆயிரக்கணக்கில் பணம் லஞ்சமாக இவர் அறியாமல் மேசை மேல் வைத்துவிட்டு அகல்கிறான்.பின்னொரு சமயம் அவர் அவனை கூப்பிட்டு லஞ்சம் குறித்து பேச எத்தனிக்க அவன் தெரியாது என்கிறான். ஆனால் பாஸ் போடசொல்கிறான், அல்லது ரகசிய தேர்வு வைக்க சொல்கிறான்.இவருக்கு குழப்பமாயுள்ளது.லஞ்ச பண கவரை அலுவலக மேசை அறையிலேயே வைக்கிறார். அதைப்பற்றி புகார் சொல்ல எத்தனித்தவருக்கு இவர் மீது புகார் கடிதம் வந்துள்ளது என இவரின் டீன் சொல்லவும் மிகவும் வியர்க்கிறது.    
      
வரின் கல்லூரியில் இவரின் வேலைக்காலம் முடிவடையும் தருணம் வந்துவிட்டது,இவரின் நேர்மையான அணுகுமுறையாலும் சிறந்த கல்வி போதிக்கும் திறனாலும் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவோம் என நினைத்திருந்தவருக்கு பேரிடியாக சை ஏபிள் மேன் அனானி பெயரில் இவரின் கல்லூரி நிர்வாகத்துக்கு மொட்டை கடிதங்களாக ஹைஃபை ஆங்கிலத்தில்  போடுகிறான்.இவர் ஒரு ஒழுக்கம் கெட்டவர் என்கிறது கடிதங்கள்.தேர்வு கமிட்டி என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் குழம்புகிறது,இவரை தன்னிலை விளக்கமும் கேட்கிறது. இவருக்கு தான் சிறுவயதில் ஒரே முறை சென்று பார்த்த செக்ஸ் படம் மட்டுமே களங்கமாக இருக்க முடியும் என்கிறார்.
தேர்வுக்கமிட்டியின் உறுப்பினரும் இவரின் நண்பருமான டீன் இவரை ஆறுதல் படுத்துகிறார்.

ரவு மோட்டலில் அண்ணனின் ட்யாலிசைசர் கருவி இயங்கும் சத்தம் கேட்டு எழுந்தவர். அண்ணனிடம் ஏதோ கேட்கப்போக அண்ணன் பொறாமையிலும், சுய பச்சாதாபத்திலும் அறையை விட்டு வெளியேறி கடவுள்  உனக்கு நல்ல கல்வி கொடுத்தார். மணவாழ்கை கொடுத்தார், குழந்தைகள் கொடுத்தார்.வீடும் வேலையும் கொடுத்தார் எனக்கு என்ன கொடுத்தார்? எனக்கு இந்த கொடிய நோயை கொடுத்தார். எனக்கேட்டு பரிகசிக்க.இவர் அவரை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்று தூங்க வைக்கிறார். விடியலில் எழுந்தவர் இரவு நாம் தர்க்கம் செய்தோமா?என கேனை போல கேட்கிறார்.மனதுக்குள் தன் அண்ணனுக்கு எப்படியாவது உதவ எண்ணுகிறார். 

 மகனுக்கு பதிமூன்று வயது நடப்பதால் யூத வழக்கப்படி அவனுக்கு ஞானஸ்தானம் செய்து வைக்க வேண்டும்,அதற்கு அவரின் மகன் புனித நூலான டோராஹ்விலிருந்து தினமும் வேத வாசகங்களை குறுக்குவழியில் கொலம்பியா ரெக்கார்டு கேட்டபடி மனனம் செய்கிறான்.இப்போது இவர் மோட்டலிலிருந்து கல்லூரி சென்றவர்,வழியில் அந்த கொரிய மாணவன் சைக்கிளில் போவதை பார்த்து கத்த, இவரின் கார் மேல் இன்னொருவன் காரை மோத சிறிய விபத்து நேர்கிறது. கடும் மன உளைச்சலில் அலுவலகத்துக்குள் நுழைந்தவர் , டெலிபோனில் இவர் மகன் டெலி மார்கெடிங்கில் தவணை முறையில் இவர் பெயர் தந்து வாங்கிய கொலம்பியா ரெக்கார்டுகள் கம்பெனி மேனேஜர், முதல் தவணை இன்னும் வரவில்லை.என மிரட்டல் விட. இவர் தான் ஆர்டர் செய்யவில்லை, தான் அந்த விலாசத்தில் இல்லை என ஒருவழியாக போனை துண்டிக்கிறார். இந்த காட்சி செம காமெடியாயிருக்கும்.(ஃபார்கோ படம் பார்த்திருந்தால் புரியும், அதிலும் இதே போல ஒரு மிரட்டல் காட்சி உண்டு)

ப்போது புதிய தலைவலியாக இவரின் அண்ணன் ஆர்தரை இரு டிடக்டிவ்கள் வீட்டுக்கே வந்து எச்சரித்து புகார் செய்கின்றனர். அவர் புதிய குறியீடுகளை பயன்படுத்தி கிளப்களில் சூதாடுவதாயும் இன்னொரு முறை மாட்டினால் சிறை என்றும் சொல்லிவிட்டு அகல்கின்றனர்.இவர் அண்ணனை கோபமாய் கேட்க அதில் இவரது மகனும் மகளும் சம்பந்தபட்டிருப்பது தெரிகிறது.

வரது வாழ்வில் வசந்தமாக இவருக்கு விபத்து நடந்த அதே தினம் சை ஏபிள் மேனும் கார் விபத்தில் இறந்துவிட,அவருக்கு ஏற்கனவே நிறைய கடன் இருந்தமையால் எல்லா சொத்துக்களும்,இன்சூரன்ஸும் கடனுக்கே போகிறது. அந்த புதிய காதலனின் ஈமைச்சடங்கையும் கடன் வாங்கியாவது இவரையே பார்க்க சொல்கிறது யூத மதகுரு பீடம்.மனதால் நொந்து போன இவர் மதத்தினாலும் நோகிறார். தன் பிரச்சனைக்கு முடிவாக முதிய ராபியிடம் அருள்வாக்கு கேட்க சென்றவர் அங்கே அவர் மகனிடம் அருள்வாக்கு கேட்கிறார்.

ந்த இளம் ராப்பி இவரை மனதை தெளிவாக வைத்துக்கொள்ளும் படியும். பரந்த மனப்பானமையை வளர்த்துக்கொள்ளும் படியும் அறிவுறை சொல்கிறார். அன்று மீண்டும் மோட்டலுக்கே சென்று தூங்கியவர். மகன் காலையில் கல்லூரிக்கு மிக்வும் சீரியஸாக போன்செய்ய வீட்டுக்கு போகிறார். அங்கே தன் புதிய காதலனின் இழப்பிற்காக மனைவி சத்தம் போட்டு அழுவதை காண்கிறார். மகன் சை ஏபிள் மேன் செத்துபோனதால் அப்பாவுக்கான இடம் காலியாக உள்ளது எனக்கூறி வீட்டுக்கே வர சொல்ல, இவர் மீண்டும் வீட்டுக்கு பெட்டி தூக்குகிறார். மகன் டீவி ஆண்டெனாவை சரி செய்யச்சொல்லி வழக்கம் போல அப்பாவை ஏவுகிறான்.

serious_wideweb__470x336,0
டிவி ஆண்டெனாவை சரிசெய்ய கூரைஏறியவர் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி அவள் வீட்டு கொல்லையில்  முழு நிர்வாணமாக படுத்து சூரியக்குளியல் எடுத்துக்கொண்டே கஞ்சா புகைப்பதை பார்க்கிறார்.இவருக்கு பூட்டி வைத்த உணர்ச்சிகள் மேலிடுகிறது. அவளின் கணவன் வெளியூர் சென்ற நேரமாக சென்று பேச்சு கொடுத்தவர். அவள் முதலில் மதுவும் கஞ்சாவும் இவருக்கு புகட்டி. இவரின் சபலத்துக்கு தீனியாய் எடுத்ததுமே உடலுறவு வைத்துக்கொள்ள முன்வர , இவர் சுதந்திரமாக அவளுடன் உடலுறவு கொல்கிறார். இவருக்கு மனதின் ஓரத்தில் மனைவியை பழிவாங்கிய திருப்தியும் கிட்டுகிறது.

ப்போது இரண்டாம் முறையாக முதிய ராப்பியை பார்க்க போனவருக்கு முதியவரின் மகன் ராப்பி அருளுரை வழங்குகிறார். ஹெல்ப் மி என வாய்விட்டு இறைவனை கேட்க சொல்லுகிறார். தான் எப்போதும் சொல்லும் ஒரு பல் மருத்துவக்கதையையும் சொல்கிறார். எந்த பிரச்சனையாயிந்தாலும் ஒரு தீர்வு எப்போதும் இருக்கும், ஒரு நாள் அது தீர்ந்தே போகும் என்கிறார். அலுவலகத்தில் மேலும் இவருக்கு பிரச்சனை வலுக்கிறது, இவரது கொரிய மாணவனின் தந்தை வேறு இவரின் வீடு தேடி வந்து மிரட்டுகிறார்.மீண்டும் டெலிபோனில் இவர் மகன் டெலி மார்கெடிங்கில் தவணை முறையில் இவர் பெயர் தந்து வாங்கிய கொலம்பியா ரெக்கார்டுகள் கம்பெனி மேனேஜர் வேறு போன் செய்ய இவர் தான் சீட்டில் இல்லை என்கிறார்.

ப்போது அந்த கொரிய மாணவன் வைத்துவிட்டு போன லஞ்சபணத்தை தன் அண்ணனுக்கு கொடுத்து ,அவரை ஒரு ஏரிக்கு அழைத்துப்போய்,ஒரு துடுப்பு படகில் ஏற்றி, ஆரத்தழுவி விடை கொடுக்க, அங்கே வேட்டைக்கு வந்த பக்கத்து வீட்டு முரட்டு ஆள், அதோ ஒரு யூதன் படகில்,அவனை சுடு,என்று இவர் அண்ணனை சுட்டு தள்ளுகிறான்.இப்போது அப்பாவும் மகனும் இவரை சுட்டு தள்ள இவர் அலறி விழிக்கிறார். இப்போது லாரி கோப்னிக் கனவு கலைந்து எழுகிறார். கோயன் பிரதர்ஸ் போகுமிடமெல்லாம் யூதர்களுக்கு பரிதாபம் தேடவே இந்த காட்சியை வைத்தார் என நினைக்கிறேன். ஒருவேளை 1960களிலும்  யூத வெறுப்பு அடங்காமல் பரவலாக இருந்ததோ என்னவோ?

ப்போது கொரிய மாணவனின் தந்தை நிர்வாகத்திடம் லஞ்சம் பெற்றதாய் புகார் செய்வேன் என்கிறார்.  ஆனால் ல்ஞ்சம் தான் கொடுக்கவில்லை என மழுப்புகிறார். இன்னும் பெரிய சோதனையாக இவரின் அண்ணன் ஆர்தரை டிடெக்டிவ்கள் அவர் ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருக்கும் கிளப்பில் ஓரினச்சேர்க்கைக்கு சிறுவர்களை பலவந்தப்படுத்திய குற்றத்துக்காக கைது செய்து அழைத்து செல்கின்றனர். இவர் உடனே தன் அட்டார்னி அலுவலகம் செல்கிறார். அங்கு வைத்து தன் வீட்டு நிலப்பிரச்சனை.மற்றும் தன் அண்ணன் ஆர்தருக்கு சிறப்பு கிரிமினல் அட்டார்னிக்கு ஆகும் ஃபீஸ் பற்றி பேசுகிறார். அந்த அட்டார்னி ஃபீஸாக ஒரு பெரிய தொகையை எதிர்பார்க்கிறார். அப்போது இவரின் வீட்டு நில வழக்கை சர்வே செய்து வந்து புகையும் பைப்புடன் மேசையில் அலட்சிய போக்குடன் வந்து அமர்ந்த கிழ அட்டார்னி ஹார்ட் அட்டாக்கில் அப்படியே நாற்காலியில் இருந்து சரிகிறார்.இதுவும் கலக்கலான காமெடி சீன்.மிஸ் பண்ணாமல் பார்க்கவும்.
 ==================================
முழுக்கதையும் படிக்க நினைப்போர் இக்காணொளியை தாண்டி 
வந்து படிக்கவும்.



==================================
 இவருக்கு எதுவும் சரியாக படவில்லை, இரண்டு ராப்பிகளிடம் அருள்வாக்கு கேட்டவர். மூன்றாவதாய் ஏனும் வயது முதிர்ந்த ராப்பியிடம் அருளுரை வாங்கிவிட தீர்மானித்து அவரின் அலுவலகம் செல்ல,வெளியே இருந்த குண்டு காரியதரிசி,முதிய ராப்பி யாரையும் சந்தித்து ஆசி வழங்குவதில்லை என்றும் அவர் சிறார்கள் பங்கு கொள்ளும் ”பார் மிட்ஸ்வா” (யூத மத சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கப்படும் ஞானஸ்தானம்)நிகழ்சியில் வென்ற சிறார்களுக்கு பாராட்டும் வெகுமதியும் மட்டுமே வழங்குகிறார். என சொல்கிறாள். இருந்தும் இவர் விடாப்பிடியாக கெஞ்ச உள்ளே சென்று எதோ பேசியவள் ராப்பி பிஸியாக உள்ளார் என பதிலுரைக்கிறாள். இவருக்கு மிகவும் ஏமாற்றமாயிருக்கிறது. 

a-serious-man-475654105டுத்த வாரமே தன் 13 வயது மகன் டேனியின் பார் மிட்ஸ்வா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவரின் மனைவியும், சமீபத்தில் பெயிலில் வந்த இவரது அண்ணன் ஆர்தரும், இவரின் மகளும் பெருமகிழ்சியுடன் அந்த நிகழ்சியில் கலந்துகொண்டு ஆர்வமாக மகன் ஒப்புவிக்கப்போகும் வேத வாசகத்தை கேட்க ஆவல் கொள்ள, கஞ்சா அடித்து விட்டு கிறக்கத்தில் வந்தவன் யூத குருமார்  டோராஹ் என்னும் பெரிய புனித துணிப் புத்தகத்தில் சுட்டிக் காட்டிய வரிகளை படிக்க கண்ணை கசக்கியவன் பேந்த பேந்த முழிக்கிறான்.

பையே அமைதியாக, சுதாரித்தவன் கொலம்பியா ரெகார்டில் கேட்டு மனனம் செய்த வாசகத்தை குருட்டாம்போக்கில் அடித்துவிட, அது நிஜமாகவே சரியாய் இருந்து தொலைக்கிறது, இவனுக்கு ஞானஸ்தானம் செய்து கோப்பையும், இஸ்ரேலுக்கு குடியுரிமையும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படுகிறது, இவன் மீண்டும் தன் 83 ஆம் வயதில் மறுபடியும் ஞானஸ்தானத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறான். நிகழ்ச்சி நட்க்கும் போதே பேராசிரியர் லார்ரியின் மனைவி ஜூடித் இவரிடம் தான் சமீபகாலமாக நடந்துகொண்டவைகளுக்கு தன்னை மன்னிக்குமாறு வேண்டுகிறாள்.

பேராசிரியரின் மகன் இப்போது முதிய ராப்பியிடம் பாராட்டு வாங்க செல்கிறான்,அவனை அழைத்து அமர்ச்சொன்னவர் ஒரு பாடல் வரியை சொல்லி இது என்ன பாடல் என கேட்க. இவன் தான் எப்போதும் ரேடியோவில் விரும்பிகேட்கும் பாடலான ஜெஃப்ஃபெர்சன் ஏரோபிளேன் பாடிய ”சம்படி டு லவ்” என்னும் பாடல் என்று சொல்ல. முதிய ராப்பி இவனிடம் இருந்து பறிக்கப்பட்ட ரேடியோவை திரும்ப தருகிறார். டேனி மிக மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்புகிறான்.அந்த ரேடியோவின் உறையிலேயே 20டாலர் தாள் இன்னும் இருப்பதை பார்க்கிறான்.

ப்போது பேராசிரியர் லார்ரி கல்லூரி அலுவலகம் வருகிறார்,அங்கு இவருக்கு இவரின் வழக்குகளை கவனிக்கும் அட்டார்னியின் அலுவலகத்திலிருந்து அண்ணன் ஆர்தரின் வழக்குக்கான கிரிமினல் லாயருக்கு பெரிய தொகைக்கு பில் வர, அதை கண் கொண்டு பார்க்க முடியாமல். இவருக்கு தலை சுற்றுகிறது. ஒரு தீர்மானத்துக்கு வந்தவர்  தேர்வு மதிப்பெண்கள் அடங்கிய ரெஜிஸ்ட்டர் புத்தகத்தை எடுத்து அவரின் கொரிய மாணவன் க்ளைவின் பெயருக்கு எதிரே F என இருந்ததை ரப்பர் கொண்டு அழித்தவர் C– என்னும் கிரேடை அதில் பென்சில் கொண்டு எழுதுகிறார். இப்போது அந்த லஞ்சப் பணக்கவரை எடுத்து அதில் எவ்வளவு பணம் உள்ளது என எண்ண எத்தனிக்க, இவரின் தேர்வுக்குழு ஆணைய செயலாளர் உள்ளே நுழைந்து இவரிடம் வாழ்த்து சொல்லி, இவரின் வேலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது என்கிறார். இவருக்கு எதிராய் வந்த அனானி கடிதங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று சொல்லிவிட்டு அகல்கிறார்.

 இவருக்கு அப்பாடா என இருக்கிறது. கடவுள் எவ்வளவு பெரியவர்?. சோதனைகளை தந்தாலும் அதனிடமிருந்து மீளும் வழியையும் தந்து விடுகிறாரே!!! என வியக்க.இவரின் தொலைபேசி மணி அடிக்கிறது. இவர் இரு வாரங்களுக்கு முன் செய்து கொண்ட முழு உடம்பு பரிசோதனையை இவர் மறந்தே இருக்க, எதிர் லைனில் பேசிய அதிகம் சிகரட் பிடிக்கும் மருத்துவர். இவரை மிக அவசரமாக மருத்துவமனைக்கு வர முடியுமா?என கேட்கிறார். இவர் போனில் சொல்ல முடியாதா? என அப்பாவியாய் கேட்க . அவர் சொல்ல முடியாததால் தான் நேரில் அழைக்கிறேன் வெள்று என்கிறார்.

வரின் மகன் இப்போது மீண்டும் காதில் ஏர்போன் மாட்டி ரேடியோ கேட்க. டோர்னொடோ வருவதால் அபாயமணி அடிக்கப்பட்டு எல்லொருக்கும் பள்ளி விடுமுறை அளிக்கப்படுகிறது. இவன் ரேடியோவின் உறையில் இருந்து 20 டாலரை எடுத்து அந்த கஞ்சா விற்கும் மூத்த மாணவனிடம் தர எத்தனித்து அவனை கூப்பிட. அவன் இப்போது திரும்பாமல் தூரத்தில் சுற்றி அடிக்கும் சுழற்காற்றை வேடிக்கை பார்க்கிறான். டேனியும் இப்போது அதை நன்றாக வேடிக்கை பார்க்கிறான். 
===================================
சீரியஸ் மேன்களுக்கு பிரச்சனைகள் ஓயவே ஓயாது தான் போல என்ன நண்பர்களே சரிதானே?லகப்போர் திரைப்படங்கள் நீங்கலாக யூதர்களை சினிமாவுக்குள் பார்ப்பது அரிதே.அந்த வகையில்  இது  அசாதாரணமான படம். எப்போதுமே கோயன் பிரதர்ஸ் பார்வையாளர்களை தங்கள் நகைச்சுவை விருந்துக்கு அழைப்பர். அது பார்வையாளர்களுக்கு  புரியவில்லையா? கவலையே படமாட்டார்கள். உதாரணம்:- ஹட்சக்கர் ப்ராக்ஸி, இது ஒரு அட்டர் ஃபெயிலியர் படம், ஆனால் இன்னும் எண்ணற்ற மக்களின் விருப்பத்தேர்வு அது.  அந்த படத்தில் இருந்த மேதாவித்தனம் இதிலும் குறையாமல் உண்டு. இது ஒரு யதார்தமான  அதேசமயம் பரிட்சார்த்தமான உலக சினிமா என்றால் மிகை இல்லை.

படத்தில் லாரி கோப்னிக் ஆக வந்த மைக்கேல் ஸ்டுல்ஹ்பர்க் மிக நன்றாக நடித்திருந்தார். பல காட்சிகளில் நடிகர் டாம் ஹான்க்ஸை பிரதி பலித்தார். இந்த படத்திற்கு  டாம் ஹான்க்ஸையே போட்டிருந்தால் இன்னும் பல பேரை சென்று சேர்ந்திருக்கும்.ஸ்டார் வேல்யூவும் ஒரு படத்துக்கு இன்றியமையாதது தான். ஏனைய நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை நிறைவாய் செய்திருந்தனர்.ஒரே காட்சியில் வரும் குண்டு  ரிசெப்ஷனிஸ்ட் பெண்ணையும் சேர்த்து, சிரிப்பு மத்தாப்பு தான் போங்க. ஒளிப்பதிவு, இசையமைப்பு வழக்கம் போல பிக்சர் பெர்ஃபெக்ட்.சபாஷ் டு த டீம்.
=======================================


Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)