பாண்டிட் க்வீன் [Bandit Queen ] [ 1994] [ஹிந்தி] [இந்தியா+இங்கிலாந்து][18+]

"Animals, drums, illiterates, low castes and women are worthy of being beaten"- Manusmriti 
படத்தில் கையாளப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்துக்கு முன்னோட்டமாக: -  
’’ மிருகங்கள், மேளங்கள், கல்லாதோர்,  தாழ்த்தப்பட்ட சாதியினர்,  மற்றும் பெண்கள் அடிவாங்கவே படைக்கப்பட்டவர்கள்” - மனுஸ்மிருதி. என்னும் அதிர்ச்சியளிக்கும் வாக்கியத்துடன் இப்படம் துவங்குகிறது.

பாண்டிட் க்வீன்:-  சமகாலத்தில் இந்தியாவில் எடுக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த திரைப்படம், இந்திய கிராமங்களில் இன்றும் நிலவும் சாதிக் கொடுமைகளை இந்த அளவுக்கு பட்ட வர்த்தனமாக எந்தப்படமுமே  சொன்னதில்லை, சேகர் கபூரின்  ஆகச் சிறந்த உலகத்தரமான இயக்கமும் , நஷ்ரத் ஃபதே அலிகான் அவர்களின் இசையும், கணீர் குரலில் அமைந்த ஆலாபனைகளும் படத்தின் பெரும் பலம் ஆகும், ஒரு சாராரின் நன்மைக்கான வியாபார ரீதியான படம் என்னும் அவப்பெயரை  அது துடைத்து சர்வதேச  தரத்தையும் வழங்கிய இசைக்கோர்வை ,அஷோக் மேத்தாவின் அபாரமான ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே தேர்ந்த கலைத்திறன் மிளிர்வதைக் நாம் காணலாம் . ரேணு சலூஜாவின் நேர்த்தியான எடிட்டிங் கனகச்சிதமானது கூட அது சொல்லவந்ததை மிகுந்த தாக்கத்துடன் நச்சென சொல்லிச் செல்லும். பூலான் தேவியை வெறும் கொள்ளைக்காரியாக கொலைகாரியாக மட்டுமே அறிந்திருந்த இந்தியாவின் இன்னொரு பகுதிக்கு அவர் எதனால் துப்பாக்கியை கையில் எடுத்தார்? வட இந்தியாவில் சாதிவெறி எப்படி தலைவிரித்து ஆடுகிறது என்று ஆணித்தரமாக உரைத்த படம். இது எப்படி சென்சாரிலிருந்து வெட்டுப்படாமல் வெளியே வந்தது? என்று பலருக்கு ஆச்சர்யமாகக்கூட இருந்திருக்கும். கடந்த 14 ஆண்டுகளில் இது போல வேறேந்த உண்மைக் கதையுமே இந்த அளவுக்கு படமாக்கப்படவுமில்லை தாக்கத்தை உண்டு பண்ணவுமில்லை என்பேன். இந்தப்படம் உருவாகையில் பூலான் தேவி ஒரு மாநிலங்களவை உறுப்பினர், அவரை சேகர் கபூர் க்டைசி வரை சந்திக்கவேயில்லை, ஒருவேளை அவரை சந்திக்க வேண்டிவந்தால் தான் படைத்து வைத்திருக்கும் பூலான் தேவி தரும் தாக்கத்தின் அளவு குறைந்து விடுமோ?!!! என்றே அதை அவர் தவிர்த்தார்.

இயக்குனர் சேகர் கபூர்
விர வன்-புணர்வு காட்சிகள் படத்தில் மிகவும் அதிகம் வைத்து , இந்தியாவின் கருப்பான பக்கத்தை ப்ரிட்டிஷாரின் தயாரிப்பின் மூலம் உலகுக்கே கூட்டிக் கொடுத்தார் என்னும் குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. இந்தியாவில் கோர தாண்டவமாடும் சாதிப் பேயை தோலுரித்துக் காட்டக்கூட ஒரு அந்நிய தயாரிப்பு நிறுவனம் தானே வர வேண்டியிருக்கிறது? அதை நாமே தயாரித்திருக்க வேண்டாமா ?!!! குற்றம் சாட்டுபவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கட்டும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு சாதி வெறியன் திருந்தினாலுமே  ஒரு படைப்பாளியாக அது சேகர் கபூருக்கு கிடைத்த பெரும் வெற்றி என்பேன். இப்படம் மூலம் சீமா பிஸ்வாஸ் என்னும் ஆகச்சிறந்த நடிகை இந்திய திரை உலகுக்கு கிடைத்தார். என்னே இவர் பங்கு? ,தன் வாழ்நாள் சாதனையாக சொல்லிக்கொள்ள ஒரு படம் போதும். நிஜ பூலான் தேவியே இவரது நடிப்பை   பார்த்துவிட்டு என்னையே இவரில் நான் பார்த்தேன் என விக்கித்துப் போனாராம்.  மேலும் படத்தைப் பார்த்த பூலான் தேவி சொன்னது படத்தில் காட்டியது கொஞ்சம் தான் , நடந்ததை என்னால் விவரிக்கக் கூட முடியாது, அப்படி ஒரு பயங்கர நினைவலைகளை மீண்டும் என்னுள் தோற்றுவிக்கும் என்றார்.  இது போன்ற படைப்புகளை தருவதற்கும் பார்ப்பதறகுமே அபாரமான நெஞ்சுரம் வேண்டும். நல்ல புரிதலுள்ளவர்கள் எக்காலத்திலும் பார்த்து பிறருக்கும் பரிந்துரைத்து சாதி பேதம் களைய உதவி செய்ய ஏற்ற ஒரு படம்.

படத்தின் கதை:-
பூலான்  உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற மிகவும் பிந்தங்கிய கிராமத்தில் பிறந்தார். அங்கே உயர் சாதி சத்ரியர்களான தாகூர்களின் ஆதிக்கம் மிகவும் அதிகம். அவர்கள் வைத்தது தான் சட்டம். அங்கே காவல் நிலையம் இருந்தாலும், அங்கே அநேக போலீஸ்காரர்கள் தாகூர்களாகவோ அல்லது ஏனைய உயர் சாதி பிராமணர்களாகவோ இருக்கின்றனர். ஆகவே அங்கே தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் வேதனைகளைச் சொல்லி மாளாது. அதே ஊரில் படகு ஓட்டும் தொழில் செய்யும்  மல்லா எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பூலான். அவரின் 11 வயதில் படம் துவங்குகிறது .  தந்தை தேவிதீன் [ராம் சரண்] பரம்பரை பரம்பரையாய் பெண்ணடிமைத்தனத்தை ஆதரிக்கும் சராசரி ஆண்களின் மனநிலையை கொண்டிருக்கும் அப்பா.  தாயார்  மூலா , இவர்களுக்கு பிறந்தது நான்கு பெண்களாதலால் சொற்ப வருமானத்தில் எப்படி நால்வரையும் வரதட்சனை கொடுத்து கரை சேர்க்கப்போகிறோம் என்று வாடி வதங்கும் ஒரு சராசரி அம்மா. 

பூலானுக்கு ஒரு மூத்த சகோதரியும் மூன்று இளைய சகோதரியும். ஒரு தம்பியும் உண்டு. அவர்களது கிராமத்தில் பால்ய விவாகம் என்பது அங்கு மிக்ச் சாதாரணம் . பூலானுக்கு அவள் பூப்படையும் முன்பே  திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால்[ஆதித்யா ஸ்ரீவத்சவா]. பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். அக்கிராமத்தில் திருமணம் ஆன சிறுமி பூப்படையும்  வரை பெற்றோரது வீட்டிலேயே இருப்பது வழக்கம்.

தன்படி  முதலில் பூலான்  தாய் வீட்டில் இருந்தவளை புட்டிலால் வலுக்கட்டாயமாக வந்து எனக்கு சீதனமாக தந்த சைக்கிள் துருபிடிக்கிறது, எனக்கு சீதனமாக கொடுக்கப்பட்ட பசு மடி வற்றிப்போய்விட்டது, எனக்கு ஒன்றும் பெண் கிடைக்காமலில்லை. பூலானை அனுப்பமுடியுமா? முடியாதா? என்று மிரட்டி, அவளை தன்னுடன் படகில் கூட்டிச்செல்கிறான், சிறுமி பூலான் செய்வதறியாது திகைத்து அவனுடன் ஒரு பாலத்தின் மீது சாலையைக் கடக்கத் தெரியாமல் பின் தொடரும் காட்சி நம் மனதைப்பிசையும். அவள் இன்னமும் விவரம் அறியாத சிறுமி தான். இது போல வட பால்ய விவாகம் நடந்தேறிய சிறுமிகளையும் பதின்ம வயதில் கர்ப்பம் சுமக்கும் சிறுமிகளையும் நாம் வடஇந்திய கிராமங்களில் அதிகம் பார்க்க முடியும் என்பது மிகவும் வேதனை.

புட்டிலாலின் கிராமத்துக்கு வரும் பூலான் அங்கே , பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என தாகூர் பெண்களால் விரட்டப்படுகிறாள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நீர் எடுக்கும் மிகவும் ஆழமான கிணற்றில் இருந்து நீர் இறைத்து மண்பானையில் நிரப்பி தூக்க முடியாமல் தூக்கி வருகிறாள். அதை அங்கே விளையாடும் சக வயதுடைய உயர்சாதிக்காரகள் வீட்டு பிள்ளைகள்  உண்டிக்கோல் கொண்டு கல்லெறிந்து உடைத்து விட, அவள் அவர்களை  நோக்கி  பெட்டை நாய்களுக்கு பிறந்தவர்களே!!!. உங்களுக்கு கிழவி தான் பெண்டாட்டியாக அமைவாள்!!! என்று சாபம் விட. பானை உடைந்ததை அதட்டிக்கேட்ட மாமியாருக்கு அது உடைந்துவிட்டது, ஏன் தாகூர் பெண்களைப்போல எனக்கு வெங்கலப்பானையை நீர் பிடித்துவர தரவில்லை?!!! ,என்று பதிலுறைக்கிறாள்.  இதைக் கேட்டு கொதித்த  புட்டிலாலின் அம்மா புட்டிலாலை தூபமிட.

ன்று இரவே  புட்டிலால்,  பூலான் பூப்படையாத நிலையிலேயே அவளை  அவன் அம்மாவின் வெளிக்காவலுடன் வன்புணர்கிறான், அக்காட்சியில் பூலான் இறைஞ்ச , வெளியே அவள் இறுக்கத்துடன் ஜெபமாலை கொண்டு ஜெபிக்கும் காட்சி கர்ண கொடூரம், ஆனால் இப்படிப்பட்ட ருத்ராட்சப்பூனைகளும் கொண்டது தானே இச்சமூகம். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள் பூலான், உடல் முழுக்க நகக்குறிகளும், பற்கடி தடயங்களும் சிறு குழந்தை மனதாலும் உடலாலும் நொறுங்குகிறாள். மறு நாளே ஆடுமேய்க்க போகச்சொல்லி கணவனால் விரட்டப்பட்டவள், தன் பெற்றோர் இருக்கும்  ஊருக்கே ஓட்டமெடுக்கிறாள். இதனால் பூலானைக் கைவிட்டுவிட்டு விரைவில் புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

சில காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது. இப்போது 15 வயது பூலான் தேவியை நாம் பார்க்கிறோம்.  உயர்சாதி தாகூர் வீட்டு இளைஞர்கள் பூலானை படுக்கையில் அடையத் துடிக்கின்றனர். அதில் ஊர் தலைவரின் மகன்  பூலான் விறகு பொறுக்கப் போகையில் அவளை தொடந்து போய்  படுக்கைக்கு அழைத்தும், கெட்டவார்த்தை பேசியும் துன்புறுத்தி வருகிறான். ஒரு முறை அவன் பின் தொடர்ந்து போய் வன்புணர எத்தனிக்க, அவனை பூலான்  தாக்கிவிட்டு ஓட. அதில் ஆத்திரமடைந்த தாகூர் இளைஞர்கள். பூலானை செருப்பால் அடித்து உதைத்து, ஆடைகளை கிழித்து பஞ்சாயத்தில் நிறுத்திவிடுகின்றனர்.

வள் ஊர் தலைவரின் மகனை  எனக்கு அரிக்கிறது. என்று  சரசத்துக்கு அழைத்தாள். என்று அபாண்டமாக குற்றம் சாட்டப்படுகிறது. பூலானின் தந்தையை  ஊரார் மிகவும் கீழ்தரமாக ஏசுகின்றனர். அவர்களுக்கு பேசக்கூட வாய்ப்பளிக்கப்படவேயில்லை. பூலானை வன்புணர எத்தனித்தவனின் அப்பனே தீர்ப்பு சொல்கிறான். பூலானால் தாகூர்களின் மரியாதைக்கு பங்கம் வந்துவிடும். அவள் தாகூர்களுக்கு முன் முக்காடு போட மாட்டாள், தாகூர்களைப்பார்த்தால் காலை தொட்டு வணங்கமாட்டாள். ஆகவே பூலானை ஊரை விட்டே ஒதுக்கி வைக்கவேண்டும். என்று கூறுகிறான் அந்த ஊர் தலைவன்!!!.

பூலான் போக்கிடமின்றி  அலைந்தவள் பக்கத்து கிராமத்திலிருக்கும் தன் ஒன்றுவிட்ட அண்ணன் கைலாஷின்[சௌரப் சுக்லா- ஹேராமில்  லால்வானி] வீட்டுக்குச் செல்கிறாள். ஆனால் அவளுடைய பொல்லாத  மனைவி கைக் குழந்தைக்காரி பூலானை வெறுக்கிறாள், அங்கே கைலாஷ் சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் கொள்ளைக்காரர்களின் குழுக்களுக்கு மளிகை சாமான்களும் பாலும் கொண்டு போய் தருகிறான், பூலானும் கூடச் செல்கிறாள். அப்போது மல்லா இனத்தைச் சேர்ந்த விக்ரம் மல்லா மஸ்தானா [நிர்மல் பாண்டே] என்னும் கொள்ளைக்கார இளைஞனை பூலான் சந்திக்கிறாள். கணவனையும், பெற்றோரையும் பிரிந்த பூலானை அடங்காப்பிடாரி என்று எண்ணி விக்ரம் வெறுக்கிறான்,. இப்போது சில வாரங்கள் கடந்த நிலையில் கைலாஷின் மனைவி பூலானை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லுகிறாள்.ஆனால் கைலாஷ் மனைவியை தடுக்கிறான். அவளின் சுடு சொல் தாளாமல் , அவமானம் தாங்காமல் வெளியேறிய பூலானை கைலாஷ் சமாதானம் செய்கிறார், இருந்தும் தன்மானத்தால் அங்கேயிருந்து மீண்டும் கொடிய தாகூர்கள் வசிக்கும் தன் ஊருக்கே செல்கிறாள் பூலான்.

து ணிச்சலுடன் காவல் நிலையத்துக்குள் செல்கிறாள். ஊராருடன் பஞ்சாயத்து பேச சொல்லி நியாயமும் கேட்கிறாள்.  அங்கே பூலானின் தைரியமான பேச்சை முன்பே நிறைய கேள்விப்பட்டு எரிச்சலிலிருந்த  காவலர்கள், அவள் மீது முந்தைய நாள் ஊர் தலைவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, நிலுவையிலிருந்த விபச்சாரம், திருட்டு வழக்குகளை பொய்யாக ஜோடிக்கின்றனர். பூலானுக்கும்  சம்பல் கொள்ளைக்காரர்களுடன்  வியாபாரத் தொடர்பு இருப்பதாக பொய் சாட்சிகளையும் ஏற்பாடு செய்கின்றனர். அவளின் அண்ணன் கைலாஷ் பூலானை விக்ரம் மல்லா குழுவிற்கு கூட்டிக்கொடுத்தானா?!!! அவர்கள் அசுத்தமானவர்கள் நாறுவார்கள், நாங்கள் மணம் வீசுவோம், அங்கே நீ எத்தனை பேரை புணர்ந்தாய்? எங்கள் இருவரை  நீ தாங்குவாயா? நான் முன்வழியாக புணர்வேன், இவன் ஆசனவாய் வழியாக புணர்வான் , சம்மதம் தானே?!!!  நீ தான் படு என்றதும் காலை உடனே விரிப்பாயே?!!! அரிப்பெடுத்தவளே!!! என்று ஏளனம் செய்கின்றனர்.

ன்று முதல் மூன்று நாட்கள்.காவல் நிலையத்திலிருக்கும் உயர் அதிகாரி முதல், கடைநிலை காவலாளி வரை லாக்கப்பிலேயே வைத்து பூலானை வன்புணர்கின்றனர்.மார்பு, முதுகெல்லாம் கடித்தும் கீறியும் வைத்திருக்கின்றனர். அவள் தன் அப்பாவிடம் அதைக்காட்ட அவர்  வாய் பொத்தி அழுகிறார். அதற்கு போலீஸ்காரர்கள்,உன் மகள் படு என்றால் படுக்கிறாளா?காட்டுக்கூச்சல் போட்டாள்.அதனால் தான் இப்படி விளாசவேண்டியதாயிற்று, உன் ஏனைய மகள்களும் இப்படித்தானா புட்டி லால்?!!! என்று ஏளனம் செய்கின்றனர்.

ணவனின் கொடுமையிலிருந்து தப்பிய பூலான் பெரியவளானதும் காட்டு மிராண்டித்தனமான காவலர்களால் வன்புணரப்படுகிறார். வன்புணர்வதற்கு மட்டும்  தாகூர்களுக்கும் காவலர்களுக்கும் கீழ்சாதி என்பது ஒரு தடையாகவே இருக்கவில்லை.  சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டிய காவலரே  பூலானிடம் நெறிமுறையின்றி நடந்தனர்.  கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர். இப்படி பூலானிடம் இளம் வயதில் வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், போலீஸ் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள்.

வள் காவலர்களால் கொடூர தாக்குதல்களுக்கு  ஆளாகி இருப்பதை கண்டு சற்றும் மனமிறங்காத தாகூர்கள், பூலானின் தந்தையிடம் பூலானை மீட்க வேண்டுமானால் போலீசாருக்கு 25000 ரூபாய் ஜாமீன் தொகை தரவேண்டும்.  அதை நாங்கள் தருகிறோம். அதை நீங்கள் பொறுமையாக திருப்பிக் கொடுங்கள் என்று ஓநாய் சூழ்ச்சியுடன் போலீசாரிடம் வந்தவர்கள். பூலானை ஜாமீனில் விடுவிக்கின்றனர். சில நாட்கள் உருண்டோடுகிறது.

திடீரென்று ஊருக்குள் நுழைந்த   பாபு குஜார் சிங் [ அனிருத் அகர்வால்] என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை தன்னுடன் அழைக்கிறான்.அன்று ஜாமின் தொகை கட்டிய தாகூருக்கு 25000ரூபாய் பணத்தை நீ  திருப்பி தரவில்லை,அதை நீங்கள் திருப்பித் தரும் வரை  பூலான் எனக்கு அடிமை !!! என்று முழங்குகிறான். பூலானை வெளியே வரவழைக்க அவளின் தம்பியின் மூக்கில் கத்தியை வைத்து கொன்று விடுவேன் என்று மிரட்டியதும் ஒளிந்திருக்கும் பூலான் பதறியடித்து வெளியே வருகிறாள். அவளைக் கைகளைக் கட்டி கடத்திச் செல்கிறான். அங்கே விக்ரம் மல்லாவைப் பார்க்கிறாள் பூலான்.அவன் பெண்களை நாம் தாக்கக் கூடாது என்று சொல்லியும் கேட்கவில்லை அந்த பாபு குஜ்ஜார் என்னும் ஏழு அடி உயர அரக்கன். அவன் முகம் அத்தனை விகாரம். பூலானை சதா சர்வ காலமும் சக கொள்ளையர்கள்  முன்னிலையில் வன்புணர்கிறான்.

தில் அதே மல்லா இனத்தைச்சேர்ந்த விக்ரம் மல்லாவுக்கு மட்டும் உடன் பாடில்லை. ஒரு நாள் படகில் ஆயுதங்கள்    வந்து இறங்குகின்றது, அதை இறக்கி கொண்டுவர மல்லாக்களை அனுப்புகிறான் பாபு குஜ்ஜார், விக்ரம் மல்லா இடைமறித்து  ஏன் உன் தம்பியை அனுப்பவில்லை ? என்று கேட்க, அதற்கு அவன் உன் அம்மாவை வன் புணர உயிரோடு இருக்க வேண்டும், என்று திமிராக உரைக்கிறான். போலீசார் விக்ரம் மல்லாவின் நண்பர்களான இரு மல்லாக்களை சுட்டுக்கொன்றுவிட மிகவும் இடிந்து போகிறான். போலீஸ் துரத்திக்கொண்டே வருகிறது .அவன் கும்பலுடன் தப்பி ஒரு மலை மீது ஏறுகிறான்.

தொடர்ந்து முன்னேற முடியாத போலீசார் அக்கரையிலேயே நின்று விடுகின்றனர், பாபு குஜ்ஜார் சொன்ன அவச்சொல்லும் தாகூர்களின் மீதான் வெறுப்பும் விக்ரம்மை கொதிப்படையச் செய்கிறது, இப்போது பாபு குஜ்ஜார் மலைச்சரிவிலேயே பூலானைக் கிடத்தி சுற்றிலும் தன் தாகூர் இன கொள்ளையரை காவலுக்கு வைத்துவிட்டு முயங்குகிறான். வழக்கம் போலவே மல்லாக்கள் எல்லோரும் அமைதியாக இதைப்பார்க்க. விக்ரம் மல்லா ஒருகட்டத்தில் தாள முடியாமல் பாபு குஜ்ஜார் சிங்கை  தலையில்  சுட்டு வீழ்த்துகிறான். அவனுடன் சேர்த்து விக்ரம்மை எதிர்த்த நால்வர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்,

னி கொள்ளையர் குழுத்தலைவன் ஸ்ரீராம் தாகூர் சிறையிலிருந்து வரும் வரை  நானே தலைவன் என்கிறான் விக்ரம். இப்போது  பூலானுக்கு குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை கற்றுத் தருகிறான். இப்போது அவர்கள் காதலர்களாகவே மாறி குடும்பம் நடத்த ஆரம்பித்தும் விட்டனர். பூலான் இப்போது வீர தீர சாகசங்களை கற்று தேர்கிறாள். பூலான்  மற்றும் விக்ரம் மல்லாவின் மீது கொலை, கடத்தல், கொள்ளை, சூறையாடல் என்று 48 பெரிய குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன. வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி குள்ளமான பெண் ஆவாள்.எப்போதும் தோளில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கும். துப்பாக்கி தோட்டாக்கள் கொண்ட பட்டையை  உடம்பை சுற்றி அணிந்திருப்பாள்.

ப்போது அருகே உள்ள ஒரு மல்லாக்களின் கிராமத்துக்கு விக்ரம் மற்றும் பூலான் சக குழுவினர் சகிதமாக வருகின்றனர்,கோவிலில் காணிக்கை வைத்து வழிபடுகின்றனர்,அங்கே இவளை பெண் என்று  பார்த்த சிறுவர்களிடம் இவள் உங்களை தாகூர்களிடமிருந்து காக்க வந்த காளிமாதா.என்று அவள்  தலையில் சிகப்பு துணியை கட்டி விடுகிறான். இந்த கட்டத்திலிருந்து பூலான் காளிமாதா அவதாரம் எடுத்தது போல தன்னை எண்ணிக் கொள்கிறாள். விக்ரம் மல்லா அவளுக்கு இனி நீ பூலான் தேவி என அழைக்கப்படுவாய் என முடிசூட்டிவைக்கிறான்.அவளது உயரம் ஐந்து அடிக்கும் குறைவே. ஆனால் அவளது தோற்றம் மிகவும் கம்பீரமாக ஒரு காளிமாதாவை போல இருக்கிறது. குதிரை  மிது ஏறி அவள் வந்தால் என்றால் அந்த சுற்று வட்டாரமே நடுங்குகிறது. கிராமவாசிகள் மண்டியிட்டு வணக்கம் செலுத்துகின்றனர். காக்கிச்சட்டையில்  நெற்றியைச் சுற்றி சிவப்பு நிற பட்டையை கட்டியிருப்பது அவளுடைய தனிச்  சிறப்பாகும்.

ப்போது கனஷ்யாம் தாகூர் [அனுபம் ஷ்யாம்] என்னும் உயர்சாதி கொள்ளையனை பூலானின் கிராமத்து தாகூர்கள் அனுப்பி விக்ரமிடமிருந்து பூலானை மீட்டு தரும்படி கேட்கின்றனர். அதற்காக விக்ரமிடம் வருகிறான் கனஷயாம்.அவனுக்கு தாகூர்கள் அளித்த ஜாமீன் தொகையான 25000 ரூபாயுடன் சேர்த்து வட்டியுடன் பணம் தந்து கடனை அடைக்கிறான் விக்ரம் மல்லா. கன்ஷ்யாம் சொல்கிறான். உன் கண்களில் தாகூர் மீதான வெறுப்பை நான் காண்கிறேன் விக்ரம்,அது மிகவும் ஆபத்து.பூலான் உன்னிடம் இருப்பது உனக்கு அழிவு,அதிர்ஷ்டத்தை தராது, என்கிறான், அதற்கு விக்ரம் மல்லா பாண்டிட்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை வாழ்வில் தாங்களே தான் தேடிக்கொள்வர் என்பது தானே உண்மை?!!! ,என்று மடக்கி அவனை திருப்பி அனுப்புகிறான். தன்னை பணம் தந்து மீட்ட விக்ரம் மீது பல மடங்கு மதிப்பு வந்து விடுகிறது பூலானுக்கு.

விக்ரம் மல்லாவின் கொள்ளையர் குழுவில் மல்லாக்களும் தாகூர்களும் இரண்டு பிரிவாக,  உள்ளனர். விக்ரம் மல்லாவை மல்லர்கள் ஆதரித்தும், உயர்சாதி தாகூர்கள் வெறுத்தும் வருகின்றனர். கொள்ளை கும்பல் தலைவன் ஸ்ரீராம் தாகூரின் [ கோவிந்த் நாம்டியோ ] வரவுக்கு ஆவலாக காத்திருந்த அவர்கள் ஸ்ரீராம் தாகூர் வந்ததும் அவன் பக்கம் தாவுகின்றனர். ஸ்ரீராம் தாகூர் ரூபத்தில் மீண்டும் பூலானுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் தரப்படுகின்றன. கோபக்கார இளைஞன் விக்ரம் மல்லாவை நயவஞ்சகமாக தீர்த்துக் கட்டி விட்டு பூலானை அடைய துடிக்கிறான் ஸ்ரீராம் தாகூர்.அவனுக்கு உறுதுணையாக அவன் தம்பி லால் தாகூரும் இருக்கிறான், இருவருமே போலீஸ் உளவாளிகள். அவ்வப்பொழுது போலீசாருக்கு சக கொள்ளயர்களை காட்டிக்கொடுக்கின்றனர்.

ப்படி ஒரு நாள் விக்ரம் மல்லாவை ஸ்ரீராம் தாகூர் மறைந்திருந்து முட்டியில் சுட்டு விட, பூலான் தன் உயிரைப் பணயம் வைத்து அவனை அருகே உள்ள நாக்பூர் நகருக்குள் கூட்டிச் சென்று ஒரு அறையைப் பிடித்து விக்ரம் மல்லாவை கிடத்தி வைத்தியம் பார்க்கிறாள். அங்கே ஓரிரு வாரங்கள் விக்ரம் மல்லாவுடன் உல்லாசமாக குடும்பம் நடத்துகிறாள் பூலான் தேவி.

ன் வாழக்கையிலேயே அவள் சுகித்து இடுந்திருப்பாள் என்றால் அந்த ஓரிரு வாரங்களாகத் தானிருக்கும் எப்படியெல்லாம் இன்பம் துய்க்க முடியுமோ? அப்படியெல்லாம் துய்க்கின்றனர். அதிலும் ஒரு பேரிடியாக விக்ரம் மல்லாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவன் இருவரையும் அடையாளம் கண்டுவிட்டு பூலானிடம், ஒரு ஆளனுப்பி தன் மகளின் திருமணத்துக்கு சீராக ஸ்கூட்டர் கொடுக்க 6ஆயிரம்  ரூபாய் பணம்  கேட்கிறான். அதுவும் ஒரு மணிநேரத்தில் வேண்டும் என்று மிரட்டுகிறான். அங்கிருந்து ஒருவழியாக பூலானும் விக்ரமும் தப்பித்து விலகி தன் சொந்த கிராமமான கபர்வா வருகின்றனர். இப்போது பூலான் தேவியின் தந்தை  நீ இங்கே வந்ததை தாகூர்கள் அறிந்தால் என்ன நடக்குமோ? நீ உன் கணவனிடம் இருந்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது!!! என்று விரக்தியாகச் சொல்லுகிறார். மிகுந்த மன உளைச்சலடைகிறாள் பூலான். தங்கைக்கு மணமாகி அவளின் குழந்தைகளை கொஞ்சக்கூட முடியாத ஒரு நிலை, பெற்ற தாயிடம் மடியில் தலைவைத்து தூங்க முடியாத ஒரு இழிநிலை, இதற்கு காரணம் புட்டிலால் தானே ? என்று ஆவேசம் கொள்கிறாள்.

பூலான்தேவி தன்னுடைய முன்னாள் கணவன் புட்டிலாலை அவனது கிராமத்திற்கே சென்று  அவனை துப்பாக்கி கட்டையால் அடித்து துவைத்து கழுதை மீது ஏற்றி ஊர்வலம் வரச்செய்கிறாள் ,ஒரு மொட்டை மரத்தில் இறுக்கிக் கட்டுகிறாள். அவனை துப்பாக்கி கட்டையால் அடிக்கிறாள். கூடி வேடிக்கை பார்க்கும்  மக்களிடம் போலீசாரிடம் புகார் கொடுங்கள். எவனாவது சிறுமியை திருமணம் செய்ததை நான் அறிந்தால் அவனை கொல்லுவேன் என்று கர்ஜிக்கிறாள். தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கிறாள். அந்தப்புள்ளியில் சிறுவயதில் உடல் மற்றும் மனரீதியாக தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறாள்.

ந்த நிலையில்   ஸ்ரீராம் தாகூருக்கும் விக்ரம் மல்லா கொள்ளை கோஷ்டிகளுக்குள் பூசல் ஏற்படுகின்றது . ஏனைய மல்லா சாதிக் கொள்ளையர்கள் பூலான் தேவி வசமே தங்கிவிடுகின்றனர். 1980  ஆகஸ்டு, அப்போது  தாகூர்  கொள்ளையர்கள் ஓரிடத்தில் ஒளிந்திருந்த விக்ரம் மல்லாவை சூழ்ச்சி செய்து  ஒளிந்திருந்து சுட்டும் கொன்று விடுகின்றனர். கதறியழுதபடி இருந்த பூலான்தேவி மீண்டும் ஸ்ரீராம் தாகூரால் கடத்தப்படுகிறாள்,  எல்லோரும் கூடி அவளை அடித்த பின்னர், மயக்கமான பூலான் தேவியை, மல்லர்கள் ஓட்டும் படகில்  கிடத்தி . பிக்மாய் என்னும் கிராமத்துக்குள் கொண்டு வருகின்றனர்.

ங்கே ஒரு மாட்டுதொழுவத்தில் அவளைக் கட்டிப்போட்டு, சித்ரவதை செய்தும் வெறி அடங்காத தாகூர்கள். ஊர் தலைவன் ஸ்ரீராம் தாகூர் உட்பட, சுமார் 20 பேர் ஒன்றன் பின் ஒருவராக பூலானை வன்புணர்கின்றனர். மிகவும் துயரமான காட்சியது. அக்காட்சியில் ஒரு ஆணுக்கு பெண் இனத்தின் மீது மிகுந்த பச்சாதாபமும், ஆணிணத்தின் மீதே மிகுந்த வெறுப்பும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. காலங்காலமாக பெண்ணின் மன உறுதியை குலைக்க அவளின் கற்பை சூறையாடுவதை ஆண்கள்? எப்படி கையாண்டு வருகின்றனர் என்று விளங்கும். வன்புணர்வுக்கு பின்னரும் ஆத்திரம் தீராத தாகூர்கள் அவளை   தாகூர் இனப்பெண்கள் நீரெடுக்கும் கிணற்றிற்கு அழைத்துப்போய் நிர்வாணப்படுத்தி நீர் இறைக்க சொல்கின்றனர். இதோ இவள் இந்த மல்லா சாதிப் பெண் தான் தேவியாம், கடவுளாம்!!!? இது என்னைப்பார்த்து அம்மாவை புணர்பவன் என்று சொல்கிறது இது. இனி  ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன்  வெகுண்டெழுந்தாலும் இது தான் கதி!!!!புரிந்ததா?!!! .என்கின்றனர்.

பூலான் தேவி மூன்று வாரங்களுக்கு பிறகு பிக்மாயிலிருந்து தப்பியவள் போக்கிடமின்றி தன் அண்ணன் கைலாஷின் வீட்டு வாசலிலேயே போய் விழுகிறாள் , அவன் அவளை  உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் செல்கிறாள், பூலான்தேவி. விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் [மனோஜ் பாஜ்பாய்] என்ற கொள்ளைக்காரனுடன் இணைகிறாள். அவன் பூலான் தேவியை மிகப்பெரிய கொள்ளையர் படைத் தலைவனான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பாபா முஸ்தகிமிடம் [ராஜேஷ் விவேக்] கொண்டு போய் அறிமுகப்படுத்துகிறான்.

முஸ்தகிம் பாபாவின் முதற்கட்ட உதவியால் அவரின் கொள்ளையர் படையைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்குகிறாள். இப்போது அவளிடம்  25 பேர்களும் அவர்களுக்கு 16 துப்பாக்கிகளுமே உள்ளன , அதை வைத்து பூலான் தேவியும் மான்சிங்கும் பக்கத்து கிராமத்தை கொள்ளயடிக்கின்றனர். அது தான் பூலான் தேவி தலைமையில் நடத்தப்பட்ட முதல் கொள்ளை, அதன் பின் அவள் சென்ற இடமெல்லாம் சிறப்பு தான். அவள் பெரும்பொருள் ஈட்டுகிறாள். பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைமக்களுக்கு தானமும் செய்கிறாள்.

1981 ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி , இப்போது பூலான் தேவியை மிகவும் மெச்சிய பாபா முஸ்தகிம், வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய்   கிராமத்தில் பூலானின் எதிரி ஸ்ரீராம் தாகூர் திருமணம் வைத்திருக்கிறான் என்று மான்சிங் தகவல் கொடுக்கிறான். அன்றே  தனது கொள்ளை கோஷ்டியுடன் செல்கிறாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றமும் சாட்டுகிறாள்., யாருடைய இறைஞ்சலுக்கும் அன்று அவள் செவிசாய்க்கவேயில்லை,

போதாதற்கு இவளது கட்டளைக்கு செவிசாய்த்து தயாராயிருந்த கொள்ளையர் கூட்டம் வேறு!!!. விடுவாளா?!!! வீடு வீடாகச் சென்று தன் எதிரிகளை தேடி இழுத்துவந்தாள் பூலான் தேவி ,அந்த ஸ்ரீராம் தாகூர், லால் தாகூர் சகோதரர்கள் மட்டும் அன்று சிக்கவேயில்லை, அந்த ஆத்திரம் வேறு, ஏற்கனவே விக்ரம் மல்லா பூலானிடம் ஒரு கொலைசெய்தால் உன்னை தூக்கில் போடுவர். 20கொலைகளைச் செய்தால் உன்னை பத்திரிக்கையாளர்கள் பிரபலமாக்குவர்  ,என்று சொன்னது வேறு நினைவுக்கு வருகிறது.


கிராமத்தில் தாகூர் சாதி ஆண்கள் பெண்கள்   எவ்வளவோ கெஞ்சினர் , ஆனால் பூலான்தேவி அந்த தாகூர் சாதி ஆண்களை வரிசையாக நிற்க வைத்தாள். சிலரைத் தான் முட்டியில் சுட சிலரை தன் கூட்டாளிகள்  கன்னாபின்னாவென சுட்டுத் தள்ளினர். அதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே செத்து மடிந்தனர். ரத்த கால்வாயே அங்கே ஓடுகிறது. ஒரு குழந்தை வீல் என்று அழுவதை நாம் பார்க்கிறோம். அன்று 8 பேர் கை கால்களை இழந்தார்கள். கணவன் சாவதை, அப்பா சாவதை, அண்ணன் சாவதை என்று ஒரு பெருங்கூட்டமே வாய் பொத்தி கண்ணீர் பொங்க வேடிக்கைப் பார்த்தது. அதில் புறப்பட்ட சிலரால் பின்னாளில் பூலான்தேவி  பழிதீர்க்கப்படப் போவதை அன்று அவள் அறிந்திருக்கவில்லை.

ன்றைய தினம் அக் கிராமத்துக்கு மரண தினம் போலும், காலன் அங்கேயே தங்கியிருந்து தாகூர் இன ஆண்களின் உயிரைப் பறித்துச் சென்றான். சுடுகாட்டில் பிணத்தை எரிக்க இடமில்லை, தொடர்ச்சியாக அக்கரையிலிருக்கும் சுடுகாட்டுக்கு படகிலிருந்து பாடைகள் இறக்கபட்டும்,   சிறு மகனால், வயது முதிர்ந்த தந்தையால், அவர்கள் யாருமில்லாத பட்சத்தில் உறவினர்களால் ஈமைக்கிரியைகள் செய்யப்படுகின்றன. இரவாகி விடுகிறது. மறுகரையிலிருந்து தாகூர் இனப்பெண்கள்  அக்கரையில் எரியும் சிதைகளை கண்ணீருடன் வேடிக்கைப்பார்க்கின்றனர்.

ந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்குகிறது. பூலான் தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவுகிறது. அது மட்டுமல்ல உத்தரப் பிரதேச மாவட்ட அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த படுகொலை.அப்போது உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982 ஆம் ஆண்டு இப்படுகொலைகளுக்கு தார்மீகப் பொருப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்படுகின்றன. காடுகளில் புகுந்து பூலான்தேவியை தேடுதல் வேட்டையாடினார்கள். ஆனாலும் அவள் சிக்கவில்லை. பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பூலானுக்கு உதவிய பாபா முஸ்தகிம் போலீசாரால் கைவிலங்கிட்டு என்கவுண்டர் செய்யப்படுகிறான். இவை அனைத்துமே தாகூர் சாதி ஓட்டுக்களுக்காகவே அரசியல்வாதிகளால் இந்த என்கவுண்டர்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதையும் நாம் பார்க்கிறோம். தாழ்த்தப்பட்ட சமுதாய ஓட்டுக்களும் அந்த பக்கிகளுக்கு வேண்டியிருப்பதால் பூலான் தேவியை மட்டும் உயிருடன் பிடிக்க எண்ணியிருக்கின்றனர்.அதற்கு அவர்கள் கண்டுபிடித்தது தான்   பொதுமன்னிப்பு.

காவல்துறையினரின் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை, துப்பு கொடுப்பவர்களை தேடித் தேடி தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள். ஒரு கட்டத்தில் நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாகக்கூட  பேசப்பட்டது. ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள். 1982 ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களையும் கடத்திச் சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாக அமைந்துவிட்டது. பூலான் தேவியின் குழுவைசேர்ந்த மான்சிங் நீங்கலாக அத்தனை கொள்ளையர்களும் போலீசாரால் விரைந்து என்கவுண்டர் செய்யப்படுகின்றனர்.  அந்த செய்தி  அனுதினமும் சுடச்சுட செய்திகளில் முழுப் பக்கத்துக்கு வருகிறது.

குலை நடுங்க வைக்கும் கொள்ளைக்காரியாக இருந்தவள்  இப்போது கொள்ளைத்தொழிலை விட்டு சரணடைய சம்மதிக்கிறாள்.
பூலான் தேவி சரணடைய விதித்த நிபந்தனைகள்:-
  • தனக்கு மரண தண்டனை தரக்கூடாது
  • தன் கொள்ளையர் குழு நபர்களுக்கு 8 ஆண்டுக்கு மேல் தண்டனை தரக்கூடாது
  • தன் தம்பிக்கு அரசு வேலை கிடைக்கச்செய்ய வேண்டும்
  • தன் தந்தைக்கு அரசால்  நிலம் ஒதுக்கித் தரப்படவேண்டும்.
  • சரனைடைகையில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்
  • சிறையில் இருந்து விடுதலை ஆனதும்,தன் தற்காப்புக்கு ஆயுத உரிமம் அரசு தரவேண்டும்
14, பிப்ரவரி 1983ஆம் வருடம் துப்பாக்கியை கீழே போட்டு  மனம் திருந்தி அன்றைய  முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் காந்தி மற்றும் துர்க்கை படத்தின் முன்னர்  உத்திரப் பிரதேச போலிசாரிடம் ,சுமார் 10000 மக்கள் முன்னிலையில் சரணடைந்து  11 ஆண்டுகள் கடும் சிறைவாசம் அனுபவித்தார். 1994 ஆம் ஆண்டு பரோலில் வெளிவந்தார். அவர் ஏகலைவா சேனா என்னும் தாழ்த்தப்பட்டோருக்கான தற்காப்பு பயிற்சி இயக்கத்தை ஆரம்பித்தார். பின்னர் அரசியலில் புகுந்து பாராளுமன்ற உறுப்பினரானார். அன்று ஒரு நாள் மதியம் வழக்கம் போல  தன் வீட்டுக்கு வந்தவர் ,வீட்டு வாசலிலேயே தாகூர் இனத்தவர்களால் எந்திரத்துப்பாக்கி கொண்டு சுட்டுகொல்லப்பட்டார். இந்தப்படத்தில் தன்னை கேட்காமல் திரைப்படத்தில் சித்தரித்ததற்காக வழக்காடி 60,000 அமெரிக்க டாலர் நஷ்ட ஈடும் பெற்றார்.

1996 ஆம் ஆண்டு மிர்ஸாபூர் தொகுதியில்  சமாஜ்வாதி கட்சியில் மக்களைவைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1999ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசுக்கு கூட பரிந்துரைக்கப்பட்டார்.   ஜூலை 25, 2001 அன்று புது தில்லியில் உள்ள இல்லத்தில் இருந்து தன் காரில் ஏறி புறப்படும் சமயத்தில் ஆட்டோ ரிக்சாவில்   வந்த தாகூர் சாதி வெறியர்களால் சுடப்பட்டு மரணமடைந்தார் பூலான் தேவி.

ன்றும் இந்தியாவில் , கிராமிய சமூக சூழலில் சாதிய முரண்களும் நிலம் சார்ந்த சொத்துடமைகளும் அதி முக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன. இதற்கு உடனடி உதாரணமாக செப்டம்பர் 26- 2006 ஆம் ஆண்டு  நடந்த கெர்லாஞ்சி படுகொலையைச் சொல்லலாம். நாகபுரி அருகே கெர்லாஞ்சி கிராமம். அம்பேத்கரின் அதே மஹர் சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திடமிருந்த ஐந்து ஏக்கரில் இரண்டு ஏக்கரை உயர் சாதியினர் நிலத்துக்கான சாலைக்காக முன்பே எடுத்துக்கொண்டார்கள். அடுத்து, மீதி நிலமும் தங்களுக்குப் பாசனக் கால்வாய்க்கு வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள். இதற்கு உடன்படாத குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்தவர் சித்தார்த் என்ற உறவினர். அவருக்கும் குடும்பத் தலைவி சுரேகாவுக்கும் கள்ளத் தொடர்பு என்று சொல்லி, உயர் சாதியினர் அவரை அடித்தார்கள். அவர் போலீஸில் புகார் செய்ததில் 28 பேர் கைதானார்கள்.

அத்தனை பேரும் ஜாமீனில் வெளியே வந்த உடனே, ஊரையே திரட்டி, சுரேகா (45), மகள் பிரியங்கா (17) , மகன்கள் ரோஷன் (23), சுதிர் (21) நால்வரையும் மேல் சாதியினர் சுமார் 150 பேர் கூடிக் கொலை செய் தார்கள். இரண்டு பெண்களும் நிர்வாண ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டு, பலராலும் பாலியல் வன்முறை செய்யப்பட்டார்கள். அனைவருக்கும் பிறப்பு உறுப்புகளில் வெட்டு, சிதைப்பு. கொல்லப்பட்ட உடல்கள் ஊருக்கு வெளியே பல மூலைகளில் தூக்கி எறியப்பட்டன. இத்தனையையும் ஒளிந்துகொண்டு பார்த்த குடும்பத் தலைவர் பய்யிலால், போலீஸுக்கு போன் செய்தும் யாரும் வரவில்லை.மறு நாள்தான் போலீஸ் புகாரைப் பதிவு செய்தது. மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்முறை இல்லை என்று அப்பட்டமாக பொய் சொன்னதை, தலித் அமைப்புகள் கடுமையாக விமர்சித்தும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை,போன உயிர் தாழ்த்தப்பட்ட சாதியினரின் உயிராதலால் கேள்வியே இல்லை.கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தலித் பெண் பிரியங்கா, ப்ளஸ் டூ.வில் முதல் இட மாணவியாம். என்.சி.சி. யில் வேறு சிப்பாயாக இருந்தாராம். சுதிர், பட்டதாரி. ரோஷன், பார்வையற்றவர் என்றாலும், ஓரளவு படித்தவராம்.கல்வியை நம்பி மேலே நகர்ந்து கொண்டு இருந்த ஒரு தலித் குடும்பம், அரசியல் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்திருந்த ஊர் மேல் சாதியினரால் நசுக்கப்பட்டது 21.ம் நூற்றாண்டில் தான்!  தலித்துகளுக்கு மட்டும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவேயில்லை என்று இதைப்படிக்கும் ஒருவருக்கு நிதர்சனமாக புரியும்.நாமும் இதே இந்தியாவில் தான் மிகவும் பாதுகாப்பாக வாழ்கிறோம்.

பிறக்கும் போது ஒருவர் கெட்டவர்களாக பிறப்பது இல்லை. அவர்கள் வளரும் சாதியச் சூழல் தான் அவர்களை நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ மாற்றுகிறது. இன்றைய பாரத சமுதாயத்தில் உள்ளவர்களை குற்றவாளிகளாக மாற்றுவதற்கு முக்கிய காரணமாக சாதிப் பிரிவினையும் சாதி அடக்கு முறையும் பெரும்பங்கு வகிக்கிறது. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சாதிவெறியை ஊட்டாமல் சாதியை அவர்களிடமிருந்து மறைக்கவும், மறக்கடிக்கவும் பாடுபடவேண்டும். உலகசினிமா காதலர்கள் , சரித்திர ஆர்வலர்கள் மாணவர்கள் வாழ்வில் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது.

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-
Directed by Shekhar Kapur
Produced by Bobby Bedi
Written by Ranjit Kapoor (dialogue)
Mala Sen
Starring Seema Biswas
Music by Nusrat Fateh Ali Khan
Roger White
Editing by Renu Saluja
Distributed by Koch Vision, USA 2004 (DVD)
Release date(s) 9 September 1994
Running time 119 min.
Country India
Language Hindi
Writing credits
(in alphabetical order)
Ranjit Kapoordialogue
Mala Senbook "India's Bandit Queen"
Mala Senscreenplay

த பியானிஸ்ட்[The Pianist][2002][இங்கிலாந்து]


போலந்து நாட்டைச் சேர்ந்த வ்லாடிஸ்லாவ்  ஷ்பில்மான் என்னும்   யூத - பியானோ இசைக்கலைஞனின் நாஜி ஆக்கிரமிப்பின் போதான துயர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம்  சிறந்த நடிகருக்கும் , சிறந்த திரைக்கதைக்கும்,சிறந்த இயக்குனரும் என மொத்தம் மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.   இதைத் தவிர ஏனைய திரைப்பட விழாக்களிலும் பல விருதுகளை  குவித்துள்ளது. 

இயக்குனர் 
ரோமன் பொலன்ஸ்கி
ப்படத்தின் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி. உலகின் மிகச்சிறந்த   திரைப்பட இயக்குனர்களில் ஒருவர். இவர்  போற்றுதலுக்குறிய ஆளுமைகளைப் பற்றிப் படமெடுப்பது இல்லை. சர்ச்சைக்குரிய விஷயங்களும் பலவீனங்கள் நிறைந்த கதாபாத்திரங்களுமே இவர் அதிகம் இயங்கும் தளங்கள். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு  நாஜிப்படையினரின் கொடுமைகளையும் , கெட்டொ எனப்படும் யூதர்களின் காலனிகளில் நடந்த அடக்கு முறையினையும்  இப்படத்தில் நம் கண் முன்னே நிறுத்துகிறார். 
வரும்  போலந்தைச் சேர்ந்த யூத இனத்தவரே !!!. இவரும்  ஜெர்மனியின் நாஜிப் படைகளால் துன்புறுத்தப்பட்டு  அதே போலந்து நாட்டில் நாஜிப்படை நடத்திய கோரதாண்டவத்தில் இனவதை முகாமுக்கு அனுப்பப்பட்டு தன் குடும்பத்தையே பறிகொடுத்தார். இனவதை முகாமிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்களில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு அன்று ஏற்பட்ட   இழப்பும் அவமானமும்  அவருள் மிகுந்த தன்னம்பிக்கையை  ஏற்படுத்தியிருக்கிறது.  அதைப் பழிதீர்த்து வெற்றிகொள்ளவும், என்னாலும் திருப்பியடிக்க முடியும் என்று காட்டவும், தன் யூத இனப்படுகொலைக்கு தன் பங்குக்கான ஆசுவாசத்திற்காக இப்படத்தை இயக்கியதாக குறிப்பிடுகிறார்.

படத்தின் கதை:-
செப்டெம்பர் 1, 1939. போலந்து வார்சா வானொலி நிலையம், வ்லாடிஸ்லாவ் ஷ்பில்மான் [ஏட்ரியன் ப்ரூடி] பிரபலமான பியானோ இசைக்கலைஞன், அவனது கைதேர்ந்த பியானோ இசையுடன்  தொடங்குகிறது படம்.  அங்கே வெகு அருகில் பீரங்கி குண்டுகள் விழும் சத்தம் கேட்கின்றன. இசைப்பதை நிறுத்திவிட்டு, நிலையத்தை மூடும்படி அவன் பணிக்கப்பட்டும், அவனால் கட்டுண்ட இசையினிலிருந்து   வெளியேறமுடியாத   அவனது விரல்கள் தொடர்ந்து இசைக்கின்றன. அவனது வானொலி நிலையக்கூரையே தகர்ந்து விழ நேர்கையில் வாசிப்பதை நிறுத்துகிறான்.  

வன் இசைத்ததை வெளியே வானொலியில் கேட்டுக்கொண்டிருந்த ஒரு ரசிகை அவனை வெகுவாய் பாராட்டுகிறாள். அவள் செல்லோ இசை வாத்தியக்கலைஞர் என்று அறிகிறான் ஷ்பில்மான். அருகே உணவகம் சென்று காஃபி குடிக்க தீர்மானித்தவர்கள், வாசல் கதவில் ஒரு பலகை அதில்  யூதர்களுக்கு அனுமதியில்லை என எழுதப்பட்டிருக்க.  இது என்ன அநீதி?!!!  என்று கொதிக்கிறாள் , அவள் ஒரு ஜெர்மானிய  பிரஜை என்று அறிகிறான். அவள் அவனிடம் மேலும் சிறிது நேரம்  பேசிக்கொண்டிருக்க ஆசைப்பட்டவள் பூங்காவுக்குச் செல்லலாம் என்ற அவளது யோசனைக்கு, ஒரே இரவில் பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் உள்ள இருக்கைகள் கூட யூதர்களுக்கு மறுக்கப்பட்டு நாங்கள் மீண்டும் தீண்டத்தகாதவராகி விட்டோம், 600 வருடங்களுக்கு முன் நேரந்த அதே நிலை மீண்டும் திரும்பி விட்டது. என்று ஆற்றாமையில் பெருமூச்சு விடுகிறான். வீட்டுக்கும் திரும்புகிறான்.

ப்போது வீட்டுக்கு சென்ற ஷ்பில்மான் வானொலியில் ப்ரிட்டனும் , ஃப்ரான்சும் நாஜி ஜெர்மனிக்கு எதிராக போரில் இறங்கியதை கேட்க்கிறான். அவன் குடும்பத்தினர் செய்வதிறியாமல் திகைக்கின்றனர். ஸ்பில்மானுக்கு இதை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை மிச்சமிருக்கிறது. வார்சாவுக்குள் நாஜிப்படை நுழைந்த உடனேயே யூதர்களின் வாழ்வுரிமைகள் பாதிக்கப்படுகின்றன, போலீஷ் கத்தோலிக்கர்களிடமிருந்து யூதர்கள் களையெடுக்கப்படுகின்றனர். 

யூதர்கள் அசுத்தமானவர்கள். கொடிய நோய் தொற்றுகளான டைபஸ் [typhus] பேன்  தொற்று, சொறிகள் அவர்களிடமிருந்து தான் பரவுகின்றன.ஆகவே போலந்து மற்றும் நாஜிக்களுக்கு அவை தொற்றாமல் இருக்க அவர்களை தனியாக தங்க வைக்கிறோம் என்று விஷம பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.  யூதர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன, அவர்களது வணிக உரிமங்கள் ரத்தாகின்றன, அவர்களின் வீடுகள் அதிரடி  சோதனை செய்யப்பட்டு யூத மக்கள் அவர்கள் வாழ்ந்த வீடுகளில் இருந்து ஜெர்மானிய நாஜிப்படையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் படுகின்றனர்.

வர்கள் படிக்கவும் , அரசுத் துறைகளில் வேலை பார்க்கவும் தடை விதிக்கப்படுகின்றன. நன்கு படித்தவர்களும் கூட உணவகங்களில் துடைக்கும் கழுவும் வேலைகளை வயிற்றுப்பிழைப்புக்காக செய்யத்துவங்குகின்றனர்  . பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போர் தொடுக்கப் போவதாக வரும் செய்தி யூதர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. யூதர்கள் என்று இனம்பிரித்துக் காட்டுவதற்கு 20செ.மீ x 20செ.மீ  நீல நிற டேவிட்-என்னும் நட்சத்திரக் குறியிட்ட துணிப்பட்டையை அவர்களின் மேல் கோட்டின் கைப்பகுதியில் தைத்துக்கொள்ள ஆணையிடப்படுகின்றனர். இதற்குப் பணியாதவர்களை உடனடியாக சுட்டு கொல்கின்றது நாஜிப்படை.  யூத அடையாள அட்டை இல்லாமல் இனி யாருமே வெளியே வந்துவிடமுடியாது.

ஷ்பில்மான் குடும்பத்தில் எல்லோரும் வீட்டை காலி செய்ய தயாராகையில். வார்சாவில்  மொத்தமாக 4 இலட்சம் யூதர்கள் இருக்கின்றனர். இவ்வளவு  மக்களுக்கு இடையில் நம்குடும்பத்தை நாஜிக்கள்அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள்.இன்னும்  நாம் இங்கேயே தங்கிவிடலாம்  என்று அடம் பிடிக்கிறான் ஷ்பில்மான். அவனுக்குத் தான் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த மண்ணை விட்டு வேறெங்கும் பெயர்ந்து செல்ல மனம் இடங்கொடுக்கவேயில்லை.

னால் நாஜிப்படையினர் என்ன முட்டாள்களா?!!! ஆப்பரேஷன் ரீன்ஹார்ட் என்று பெயரிடப்பட்ட அடக்குமுறை மூலம் எப்படியெல்லாம் யூதர்களை கண்டறிய முடியுமோ அப்படியெல்லாம் சுற்றி வளைக்கின்றனர். பொதுவாகவே  யூதர்கள் ஆண் குழந்தை பிறந்த உடனே ஸர்கம்ஃபிகேஷன் என்னும் ஆண் பிறப்புறுப்பில் முன் தோல் நீக்க சிகிச்சையை மதகுருமாரைக் கொண்டு செய்து விடுவர்.எனவே நாஜிக்கள் தெருவில் போகும் எந்த சந்தேகத்துக்கு இடமான ஆணையும் அவர்களின் கால் சட்டையை இறக்கி பார்த்து சோதிக்கின்றனர்.அதை வைத்தே யூத ஆண் அடையாளம் காணப்படுகிறான்.யூதர்கள் என சந்தேகப்படுபவரை பன்றிக்கறி தின்னச்சொல்லி பார்த்து தெரிந்து கொள்கின்றனர்,இம்முறை மூலம் யூத பெண்களையும் கண்டறிகின்றனர்.

வெளியே நடமாடும் எவரும் தங்களின் அடையாள புத்தகங்களை வைத்திருக்க வேண்டியிருப்பதால். ஒரு யூதன் தன்னை ஜெர்மானியன் என பொய் சொன்னால் அவனிடம் அவன் சிறுவயதில் ஞானஸ்தானம் பெற்ற திருச்சபையின் ஆவணங்களும் ,அவனின்/அவளின் தந்தை,தாயார்,தாயின் பெற்றொர், தந்தையின் பெற்றொர் ஞானஸ்தானம் பெற்ற நாளும் திருச்சபையின் ஆவணங்களும் கேட்கின்றனர்.பெற்றோரில் யாராவது ஒருவர் கலப்பு திருமணம் செய்திருந்தாலும் யூதர் தான் என்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஜெர்மானியர் அனைவரும் தம் வீட்டருகே உள்ள யூதரை காட்டிக்கொடுக்க வேண்டும் என கட்டளை இடப்பட்டிருந்தனர். அவ்வாறு காட்டிக்கொடுக்கவோ அவரை விசாரிக்கையில்  துப்பு கொடுக்க தவறினாலோ சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

யூத ஆண்கள் முறையே தம் 13 வயதிலும், 83 வயதிலும் பார்மிட்ஸ்வா என்னும் ஞானஸ்தானம் பெறுவர். அது கோவில்களில் ராப்பிகள் மூலம் தான் நடக்கும். எனவே யூதர்களின் கோவில்களில் இருக்கும் ராப்பிக்களை சிறை பிடித்து துன்புறுத்திய நாஜிக்கள் அவர்கள் மூலம் யார் யார் எல்லாம் பார்மிட்ஸ்வா வாங்கிய யூதர்கள் என எளிதாக கண்டனர். அந்த பேரேட்டை வைத்தே பட்டியல் தயார் செய்யப்பட்டு நிறைய யூதர்கள் கெட்டோவுக்கு அனுப்பப்பட்டனர்.  யூதர்களுக்கு யார் அடைக்கலம் தந்தாலும் தயவுதாட்சன்யம் இல்லாமல் தெருவில் தூக்கிலிட்டோ, சுட்டோ  கொல்லப்பட்டனர். யூதவீடுகள் முன் பெயிண்டால் நட்சத்திரக்குறி இடப்பட்டு, அவர்கள் வீடுகள் முரட்டு ஜெர்மானிய மக்களால் சரமாறியாக தாக்கப்பட்டன. எல்லை தாண்டி எங்கே வெளியே தப்பிப் போனாலும் மூன்று தலைமுறைகளின் ஆவணங்களை இனமறிய அமெரிக்கா, ப்ரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, நாடுகள் கேட்டன.அதனால் எவரும் தன் அடையாளத்தை தொலைக்கவோ  மறைக்கவோ முடியவில்லை. என்னதான் சிகையலங்காரம், பாரம்பரிய உடைகள், தொழுகை முறைகளை யூதர்கள் மாற்றிக் கொண்டாலும் அவர்களை நாஜிக்கள் தேடிக் கொன்று குவித்தனர்.

நாஜிக்களுக்கு நடுங்கிய யூதர்கள் நட்சத்திரக் குறியிட்ட பட்டைகளை கைகளில் பவ்யமாக அணிந்து கொள்கிறார்கள். யூதர்கள் எனப் பிரித்துக் காட்டப்பட்டவர்களுக்கு, நடைபாதைகளில் நடக்கவும், ஜெர்மானியர்கள் பிரயாணிக்கும் பேருந்துகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  1940ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதிக்குள்ளாக ஒரு கெட்டோவுக்குள் யூதர்கள் அனைவரும் குடி பெயர்ந்து விட வேண்டும் என்று மேலும் ஒரு சுற்றறிக்கை  வருகிறது.

தனிடையில் ஷ்பில்மானின்  பியானோவைக்கூட விற்றுச் சாப்பிடவேண்டிய நிலைக்கு அவன் குடும்பத்தினர் ஆளாகின்றனர்.  கைக்கூலிகளும் காட்டிக்கொடுப்பவர்களும் யூதர்களிடையே  கூட நாம் பார்க்கிறோம்.  ஸ்பில்மானின் குடும்பத்திற்குப் பழக்கமான ஒரு யூதன் நாஜிக்களுக்கு கூட்டியும் யூதர்களை காட்டியும் கொடுக்கிறான்.  இவர்களிடமும் வந்தவன் நீங்களும் என்னைப்போல ஜெர்மானியர்களிடம் பணியில் அமருங்கள் என்கிறான். ஸ்பில்மானிடம் நீ போலிஸ்காரன்  கூட ஆகலாம். நீ அவர்களுடைய கேளிக்கை விடுதியில் பியானோவும் வாசிக்கலாம் என்று  ஆசை  காட்டுகிறான். ஸ்பில்மானும் அவன் சகோதரன் ஹென்ரிக்கும் அதை மறுத்து அவனை அவமானப்படுத்தி விரட்டி  விடுகின்றனர். அவன் வன்மத்தோடு  வெளியேறிச் செல்கிறான்.
ஆகஸ்டு 1940வருடம்:-
ப்போது வார்சாவின் மொத்த யூதர்களையும் ஓரிடத்தில் கூடச்செய்த பிறகு அந்த இடத்தை சுற்றி வளைத்து  சுற்றுச்சுவர் எழுப்பி அதன் மேலே இரும்பு முள்வேலி வேய்கிறது நாஜிப்படை.அந்த கட்டுமானத்துக்கும் யூத தொழிலாலர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். இப்போது போலந்துதேசமே இரண்டானது. யூதர்கள், ரோமாக்கள், ஜிப்சிக்கள் ஒருபுறம் - போலீஷ் கத்தோலிக்கர்கள் மறுபுறம். இப்போது யூதர்கள் பிழைப்பதற்கு வழியேயில்லை. ரேஷனில் ஒரு யூத குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் உணவுப்பொருளின் அளவு - 186 கலோரிகள், அதே ரேஷனில் ஒரு ஜெர்மானிய குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் உணவுப்பொருளின் அளவு -2614 கலோரிகள், ஒரு போலீஷ் ரோமன் கத்தோலிக்கர் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் உணவுப்பொருளின் அளவு -1669 கலோரிகள் என்று இருக்கிறது.நிறைய யூதர்கள் பசிக்கொடுமையாலேயே மடிந்தனர்.

அக்டோபர் 16, 1940 வருடம்;-
ப்போது வார்சாவில் கெட்டோ முழுவீச்சில் இயங்கத் துவங்குகிறது. சொற்ப உடமைகளுடனும் கவலை தோய்ந்த முகத்துடன் ஏனைய யூதர்களுடன் மந்தை மந்தையாக கெட்டோவுக்குள் இடம் பெயர்ந்து செல்கிறார்கள். சிறு குழந்தைகள் கள்ளம் கபடமின்றி தங்கள் பொம்மைகளை கையிலே எடுத்துக்கொண்டு போவதையும் , வயது முதிர்ந்தவர்களை சக்கர நாற்காலிகளில் வைத்துத் தள்ளிக்கொண்டு போவதையும் நாம் பார்க்கிறோம். . தங்கள் சொந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்ட சோகம் அந்த வார்ஸா முழுக்கவே நிரம்பியிருக்கிறது.  ஷ்பில்மானும் அவன் குடும்பமும் அதே கூட்டத்தில் நடந்துபோவதையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் செல்லும் வழியில் அந்த செல்லோ வாசிக்கும் பெண்ணை நாம் கண்ணுறுகிறோம். இது  என்ன கொடுமை?!!!கடவுள் இருக்கிறாரா?!!!என்று கொதிக்கிறாள் அந்த ஜெர்மானியப் பிரஜை.

ங்கே வயதான பெண்ணொருத்தி தன் கணவனின் பெயரைச் சொல்லி அவரை பார்த்தீர்களா?!!! என்று வீதிகளில் எதிர்ப்படுகிறவர்களை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் மனம் பிழற்ந்தும் போயிருக்கிறாள்.  மிகவும் உணர்ச்சிகரமான காட்சியது!!!. பசியினால் இறந்தவர்களின் பிணங்கள் எங்கு நோக்கிலும் கிடக்கின்றன. குழந்தைகள் பசியில் கதறுகின்றன. வசதியாகவும் கௌரவமாகவும் வாழ்ந்த அந்த மக்கள் கூட்டம் இப்போது பிச்சைக்காரர்களாகி தெருக்களில் கையேந்தி நிற்கிறார்கள்.  வறுமைப்பிடிக்குள் சிக்கி உழலும் அப்பாவி யூதர்களை நடனமாடும்படி ஆணையிடுகின்றனர்  நாஜிக்கள். கண்களில் அடக்கப்பட்ட ,ஒடுக்கப்பட்ட கோபத்தை அடக்கிக்கொண்டு அவர்கள் ஆடுகிறார்கள்.

ப்போது நாஜி ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக புரட்சியில் ஈடுபட  யூத இளைஞர்கள் ரகசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றனர். தன்னையும் அவர்களோடு இணைத்துக் கொள்ளும்படி ஸ்பில்மான் இறைஞ்சிக் கேட்கிறான்.  நீ பிரபல இசைக்கலைஞன். போலந்துக்கே உன்னைத் தெரியும் அதனால் எங்களுக்குத் தான் ஆபத்து,  உன் மிருதுவான விரல்களுக்கு புரட்சி என்றுமே ஒத்து வராது என  மறுத்தும்விடுகின்றனர்.அங்கே கெட்டோவில் ஒரு தள்ளாத முதியவரை சக்கர நாற்காலியோடு தூக்கி மாடியிலிருந்து நாஜிக்கள் எறிந்துகொல்வதையும்  நாம் பார்க்கிறோம் . ஒருகாட்சியில் நாஜிக்களின் பிடில்யில் இருந்து தப்பி விலகியோடியவனின் தலையில் நாஜிக்கள் துப்பாக்கியால் சுடுகின்றனர். ஷ்பில்மானின் சகோதரன் ஹென்ரிக்கை புரட்சிக்காரன் என்று சந்தேகித்து கைது செய்து கொண்டு இழுத்துப் போகிறது நாஜிப்படை. 

னது சகோதரனை விட்டுவிடும்படி நன்கு பரிச்சயமான அந்த காட்டிகொடுக்கும் யூத போலிஸ்காரனிடம் சென்று மன்றாடுகிறான் ஷ்பில்மான். அவன் எல்லோருக்கும் சொல்லும் வழக்கமான பதிலையே அவனுக்கும் சொல்கிறான். நான் அவனைப் பார்க்கவேயில்லையே என்று!!! நாஜிப்படையில் காட்டிக்கொடுத்து பிழைக்கும் அந்த யூதப்-போலிஸ்காரன் ஷ்பில்மானின் கெஞ்சுதலுக்கு ,ஒருகட்டத்தில் மனம் இறங்கிவந்து ஹென்ரிக்கை விடுதலையும் செய்கிறான். அந்தப் போலிஸ்காரனுக்கு ஷ்பில்மான் மீது அவனின் அபரிதமான இசைத்திறமையினால் மிகவும் அபிமானம் இருக்கிறது என்பதை நாம் அறிகிறோம். 

ங்கே, ஒரு முதிய பெண் ஒருத்தி தட்டில் கொஞ்ச உணவை எடுத்துக்கொண்டு வீடு நோக்கிச் செல்வதை நாம் பார்க்கிறோம். அதைத் சக யூதன் ஒருவன் பசியில் தட்டிப்பறிக்கப் பார்க்கிறான். அந்த யூதப் பெண்ணுக்கும் அவனுக்குமான இழுபறியில் உணவு நிலத்தில் சிந்தியும் விடுகிறது. நிலத்தில் சிந்திய உணவினை அந்த யூதன் நாயைப்போல படுத்து நக்கித் தின்னுகிறான்.  அந்தப் யூதப்பெண் திகைத்தவள் ஆற்றாமை  பொங்க அவனை அடிக்கிறாள்.பசியில் அழுகிறாள். அவனோ அடியை  கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ஒரு துளி  விடாமல் உண்டுவிடுகிறான்.  யார் கண்டார் ?!!! அவன் முன்பு ஒரு செல்வந்தனாகக்கூட இருந்திருக்கக்கூடும்.

மார்ச் 15 1942ஆம் ஆண்டு
யூதர்களில் பெரும்பாலானோரை மந்தை மந்தையாக புகைவண்டிகளில் ஏற்றி வேறோர் முகாமுக்கு அனுப்ப ஆயத்தப்படுத்துகின்றனர் நாஜிப்படையினர்.  எங்களை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?!!! என்று ஓர் யூதப் பெண் துணிவுடன், ஆவேசமாகக் கேட்கிறாள். அவளது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து குண்டை வெளியேற்றுகின்றனர். அதுதான் எல்லோருக்குமான பதில்  என கூடியிருப்பவருக்கு புரிகிறது. புகைவண்டி நிலையத்தில் யூதர்கள் மிகச் சொற்ப உடமைகளுடன் கூடியிருக்கிறார்கள். கையில் வெறுமையான பறவைக் கூண்டோடு ஒரு சிறுமி கூட்டத்தினரிடையில் தன் பெற்றோரைத் தேடுகிறாள். அங்கே  நான் ஏன் அப்படிச் செய்தேன்? ஒரு பெண் புலம்பிக் கொண்டிருக்கிறாள். எனது குழந்தை செத்துக்கொண்டிருக்கிறது.ஒரு சொட்டுத் தண்ணீர் தாருங்கள்”தாயொருத்தி கையில் துவண்டு தொங்கும் குழந்தையைக் கொண்டு அலைந்து திரிகிறாள்.

வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. இத்தனை ஆரவாரங்களுக்கும் இடையில் ஒரு சிறுவன் இனிப்பு விற்றுக்கொண்டிருக்கிறான்.“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண்ணின் விசும்பல் நீள்கிறது.இதற்குள் சிதறிப்போயிருந்த ஷ்பில்மானின் குடும்பதவர்கள் ஒருவரையொருவர் கண்டுகொண்டு ஆரத்தழுவுகிறார்கள். குறைந்தபட்சம் தாங்கள் ஒன்றாக இருக்கமுடிவதில் ஆறுதல்கொள்கிறார்கள்.

ங்களை எங்கே கொண்டு போகிறார்கள்? !!! என்று கவலை தோய்ந்த முகத்துடன் முதியவர்கள்  அப்பாவியாக கேட்க.  கட்டாய வேலைபிடுங்கி முகாமுக்கு நாம் கொண்டுசெல்லப்படுகிறோம் என்று மறுசாரார் பதிலுறைக்கின்றனர். மாற்று திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகள், பெண்கள்… இவர்களால் எப்படி வேலை செய்யமுடியும்?   அங்கே நிலவிய மௌனம் மரணம் தான் அதன் பதில் என்பதைக் குறிக்கிறது..நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண் கத்தியழுகிறாள். அவள் அப்படி என்னதான் செய்துவிட்டாள்?என்று ஷ்பில்மானின் தங்கை பொறுமையிழந்து கேட்கிறாள். 

கெட்டோவை வெளியேறும்படி நாஜிப்படையினர் உத்தரவிட்டபோது எங்காவது ஒளிந்திருந்து இங்கேயே தங்கிவிடலாமென அவள் நினைத்தாள்.  ஒளிந்திருக்கும்போது குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் என்ற அச்சத்தினால் குழந்தையின் வாயைக் கைகளால் மூடி அதை அடக்க முயன்றாள். ஆனால், அவர்கள் பிடிபட்டார்கள். குழந்தையும் மூச்சு திணறி இறந்து போனது என்று அங்கே இருந்தவர்கள் இக்கொடிய சம்பவத்தை  விளக்குகிறார்கள். நான் ஏன் அப்படிச் செய்தேன்?, நான் ஏன் அப்படிச் செய்தேன்?. என்று அவளின் விசும்பல் தொடர்கிறது. அங்கே ரயில் நிலையத்தில் புகைவண்டி   வந்து நிற்கிறது. யூதர்கள் அதனுள் ஆடுமாடுகளைப் போல ஏற்றப்படுகிறார்கள். தனது குடும்பத்தோடு  புகைவண்டிக்குள் ஏறப்போன ஷ்பில்மானை ஒரு கை கூட்டத்திலிருந்து விலக்கித் தள்ளுகிறது.  அந்த துரோகி யூதப் போலிஸ்காரனுடைய கையே தான் அது. ஷ்பில்மான் தன் பெற்றோரை  சகோதரர்களை பார்த்து  கதறியழுகிறான். 

வர்களை நோக்கி ஓட முயல்கிறான். போலிஸ்காரன் அவனைத் தடுத்து நிறுத்திச்சொல்கிறான்.  நான் உன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன்.  ஓடிவிடு என்கிறான். புகைவண்டி வேகமெடுத்து மரணத்தை நோக்கி ஓடத்தொடங்குகிறது. பிணங்களும் பயணப்பெட்டிகளும் இறைந்துகிடக்கும் சூனியத்தெருக்களில், பாழடைந்த வீடுகளினூடே தன்னந்தனியனாக அழுதபடி நடந்து செல்கிறான் ஷ்பில்மான். அனுதினமும் அவனது உயிரைக் காத்துக்கொள்ள ஓடுவதில் அவனுக்கு நாள்,கிழமை,வருடம் என்பதே மறந்து போகிறது.

 1ஆகஸ்டு 1944 -வார்சா புரட்சி:- வார்சா கெட்டோவில் அடைபட்டு இருக்கும் போலிஷ் இனத்தவர்கள் ஆண் பெண் இன பேதமில்லாமல்  மும்முறமாக ஆயுதங்களை கைப்பற்றியும் ,கடத்திக்கொண்டு வந்து தங்கள் நாட்டை மீட்க நாஜிக்களுக்கு எதிராய் போரிடுகின்றனர். மிகவும் உக்கிரமான போர் அது. நாஜிக்கள் சற்றும் சளைக்கவில்லை. வானில் வேறு ப்ரிட்டன்,அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன. அங்கங்கே பீரங்கி குண்டுகள் பறந்து வந்து விழுவதையும் நாம் பார்க்கிறோம்.  

 ஷ்பில்மானின் வீடு சூறையாடப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். எங்கு நோக்கிலும் இடிபாடுகள். சிதிலங்கள். ஓய்வேயின்றி நாஜிக்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. அவன் ஒளிந்திருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்து அவ்வப்போது யாரோ பியானோ வாசிக்கும் ஒலி கேட்கிறது. அவனை அது நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கிறது. எப்போதாவது கிடைக்கும் உணவினால் அவன் உயிரை இழுத்துப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறான். 

வனிருக்கும் பூட்டப்பட்ட வீட்டுகுள்ளே  பீங்கான் தட்டுகள், கண்ணாடிச் சாமான்கள் இவன் கைபட்டு விழுந்து நொறுங்கி விட அந்த ஓசை இவன் ஒளிந்திருப்பதை பக்கத்துவீட்டு போலிஷ் இனப்பெண்ணுக்கு காட்டிக்கொடுத்து விடுகிறது. பக்கத்து வீட்டுப் பெண் அருவருப்பும் ஆத்திரமும் பொங்க இதோ யூதன் இதோ யூதன் இங்கே ஒளிந்திருக்கிறான்  பிடியுங்கள் !!!! என்று கூப்பாடு போடுகிறாள். அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான் ஷ்பில்மான். ஆபத்தான காலங்களில் தொடர்பு கொள்ளும் படியாக அவனிடம் கொடுக்கப்பட்ட முகவரி அந்தப் செல்லோ வாசிக்கும் பெண்ணினுடையதாக  இருக்க  அதிர்கிறான். அவனது செல்லாக்காதல்  தவிடு பொடியாகிறது .அவள் இப்போது வேறொருவனின் மனைவி என்பதை நினைக்கவே வலிக்கிறது.

வளும் அவளது நல்ல கணவனும் ஷ்பில்மானை வேறொரு வீட்டில் மறைத்து ஒளித்து வைக்கிறார்கள். எப்போதாவது அவனுக்கு உணவும் கிடைக்கிறது. அந்த வீட்டில் இருக்கும் பியானோ அவனது விரல்களை ஏங்க வைக்கிறது. ஆனால், அதை வாசிக்கும் நேரத்தில் இவன் பிடிபட்டால் என்ன ஆகும் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அந்தரத்தில் அவனது விரல்கள் தொடர்ந்து இசைக்கின்றன. பசியும் தனிமையும் நீண்டநாள் தலைமறைவு வாழ்வும் அவனைத் உள்ளம் தளர்ந்துபோகச் செய்கின்றன. அவன் இப்போது கொடிய மஞ்சள்காமாலையில் வேறு விழுகிறான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்த  செல்லோ இசைப்பெண் உயிரைக்காத்துகொள்ள    வேறு ஊருக்குப் போகிறாள். இவனுக்கு மிகுந்த கெடுபிடிக்கிடையில் உணவு கொண்டுவரும் மனிதனும் சுடப்பட்டு இறந்துவிடுகிறான். நோயோடும், பசியோடும், அயராத நம்பிக்கையோடும்.ஷ்பில்மான் மீட்கப்படுவோம் எனக் காத்திருக்கிறான்

போலிஷ் புரட்சியாளர்களுக்கும் நாஜிப்படைகளுக்குமிடையிலான சண்டையில் பீரங்கிகளால் அவன் இருந்த கட்டிடம் தாக்கப்படுகிறது. இடி பாடுகளுக்கிடையில், புகைமண்டலத்திற்கிடையில், பிணங்களின் மீது விழுந்தெழுந்து  ஓடுகின்றான். இசைக்கலைஞன் என்று கொண்டாடப்பட்டவன் இப்போது ஒரு பைத்தியக்காரனைப் போல உருமாறிவிட்டான்.  மறுபடியும் புரட்சியாளர்கள் தோற்கிறார்கள். எல்லாப் பிணங்களையும் ஒன்றாகத் தெருவில் போட்டுக்கொழுத்துகிறார்கள்

வ்வளவு பெரிய நகரத்தில் சிதைந்த கட்டிடங்கள் நடுவே ஒரு பைத்தியக்காரனின் தோற்றத்தில் காலை இழுத்தபடி ஷில்பிமான் நடந்துபோவதை நாம் பார்க்கிறோம்   .  அங்கே அவன்  சிதிலமடைந்த மருத்துவமனையைப் பார்க்கிறான்  அங்கே புகுந்து ஒளிந்துகொள்ள ஏதுவாய் இடம் தேடுகிறான். பசியும் தாகமும் அவனை  உரு குலைக்கின்றன. அந்நேரம் பியானோவின் ஒலி அந்தக் கட்டிடத்தினுள் மிதந்து வருகிறது. அது பயங்கரமாக அதிர்ச்சியடைந்த தன்னுடைய மனப்பிராந்தி என்றே நினைக்கிறான். 

கைக்கு அகப்பட்ட ஒரேயொரு போலிஷ் ஊறுகாய்  டின்னையும் , ஒரு பரணுக்குள் எடுத்துச் சென்று ஒளிந்து கொண்டு அதை திறக்கமுயல்கையில் அது கையிலிருந்து வழுகிச் சென்று உருண்டோடிச் சென்று ஒரு நாஜியுடைய  காலடியில்  போய் முட்டி நிற்கின்றது.அந்த அதிகாரியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அவன் பெயர் வில்ம் ஹோசன்ஃபீல்ட்[ Wilm Hosenfeld]. இவன் விக்கித்துபோகிறான். முடிந்தது இத்தனை காலமும் அரும்பாடுபட்டுக் காப்பாற்றிக் கொண்டிருந்த உயிர் இதோ போகப் போகிறது என்றெண்ணுகிறான். இனி தப்பிஓட தெம்பில்லாத கால்களோடும் பஞ்சடைந்த கண்களோடும் அதிகாரியை வெற்றுப்பார்வை பார்க்கிறான். நீ யார்?  இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?என்று அவன் ஆச்சர்யமாய் கேட்க,இவன் தான் ஒரு யூதன் என்பதையும் பியானிஸ்ட் என்பதையும் தைரியமாக உரைக்கிறான்.

ந்த ஜெர்மானிய அதிகாரி வில்ம் ஹோசன்ஃபீல்ட் அவனை அதே கட்டிடத்தின் ஒரு அறைக்குள் அழைத்துச்செல்கிறான். அங்கே  ஒரு பியானோ இருக்கிறது. அதை வாசித்துக் காட்டும்படி உத்தரவிடுகிறான். நெடுநாளாய் பசித்திருந்த,  விரல்களுக்கு   உணவு கிடைத்தது போல அந்த பியானோவைக் கண்டான். அவனுள் வேலியிட்டு அடைக்கப்பட்டிருந்த சங்கீதம் மெதுமெதுவாகக் பிரவாகமெடுக்க ஆரம்பிக்கிறது.   சோபின்ஸ் பல்லாடே ஜி மைனர் [ Chopin's Ballade in G minor.] என்னும் இசைக்கோர்வை  சிறிது சிறிதாக வேகமெடுத்து  ஒருகட்டத்தில் தனி ஆவர்த்தனமே செய்கின்றன அவன் விரல்கள். வாசித்து முடிக்கையில் அவன் உள் மன பாரத்தை இறக்கியும் வைத்து விட்டிருக்கிறான்.தெளிந்த நீரோடை போல அவனது முகம்.

ந்த ஜெர்மன் அதிகாரி வில்ம் ஹோசன்ஃபீல்ட் , ஸ்பில்மானிடம் ரஷ்யர்கள் ஆற்றை நெருங்கி வந்துவிட்டார்கள். நீ  ஓரிரு வாரங்கள் காத்திருக்கவேண்டும். அவ்வலவு தான் என்கிறான் அந்த மனிதநேயமுள்ள அதிகாரி ஷ்பில்மானுக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கிறான். கிளம்புகையில் கடும் குளிர் வாட்ட,தன் நிலையை பொருட்படுத்தாது ஷ்பில்மானுக்கு  தனது நாஜி மேல் கோட்டைக் கழற்றிக் கொடுக்கிறான். அதற்கு ஷ்பில்மான் நன்றியுடன் பார்க்கிறான். அந்த நாஜி அதிகாரி போர்முடிந்ததும் நீ என்ன செய்வாய்?!!! எனக் கேட்கிறான்.  நான் போலிஷ் வானொலியில் பியானோ வாசிப்பேன் என்கிறான் ஷ்பில்மான்    உனது பெயர் என்ன?!!! வில்ம் ஹோசன்ஃபீல்ட்,நான் உனக்காக அந்த வானொலியை  நிச்சயம் கேட்பேன் என்று கூறி விடைபெறுகிறான் அந்த அதிகாரி. நான் உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை? கலங்குகிறான் ஷ்பில்மான். கடவுளுக்கு நன்றி சொல். நாம் பிழைத்திருக்கவேண்டுமென்று அவன் விரும்பினான். இப்போது செம்படையினரின் பீரங்கிகள்  வார்சாவின் தெருக்களில் வலம் வருகின்றன.ஒரு செம்படை அதிகாரியின் பீரங்கியை நோக்கி ஓடிய இவனை சுற்றி வளைக்கின்றனர்.காரணம் அவன் குளிருக்கு அணிந்திருந்த அந்த நாஜி மேல் கோட் தான்.அதை பெரும்பாடு பட்டு யூதர்கள் பேசும் யீட்டீஷ் மொழியில் சொல்லி விளக்கிய ஷ்பில்மான் உயிர்பிச்சையும் பெறுகிறான்.
 
பின்னர் ரஷ்யர்களால் மீட்கப்பட்ட தெருக்களில் அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடந்துபோகிறான்.  அங்கே பிண்ணணியில் பியானோ  இசை ஒலிக்கிறது.    விடிகிறது. கெட்டோவில் சிறைப்பிடிக்கப்பட்ட ஜெர்மானியர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள். இனி அவர்கள் போர்கைதிகள்.  விடுதலையான போலந்து நாட்டவர்கள் அவர்களைப் பார்த்துக் கத்துகிறார்கள் !!! கொலைகாரர்களே!!! கொலைகாரர்களே!!!! 
திலொருவன் கோபத்தோடு விம்முகிறான்.  நான் ஒரு இசைக்கலைஞன்.  எங்களுடைய எல்லாவற்றையும் அபகரித்தீர்கள். என் பெற்றோரை, குழந்தையை, கடைசியில் என் வயலினையும் கூட  பறித்துக் கொண்டீர்களே.பாவிகளா!!! என்று சினம் கொண்டு கத்துகிறான்.  சிறைப்பிடிக்கப்பட்ட ஜெர்மானியர்களிலிருந்து  அந்த  நாஜி அதிகாரி வில்ம் ஹோசன்ஃபீல்ட் எழுந்து அவனிடம் வருகிறான். நீ ஒரு இசைக்கலைஞனா? வயலின் வாசிக்கிறாயா?!!! உனக்கு ஷ்பில்மானைத் தெரியுமா? பியானோ வாத்தியக்காரன். அவன் ஒளிந்திருந்த போது அவனுக்கு உணவு கொடுத்தேன். உதவி செய்தேன். நான் இங்கிருப்பதை அவனுக்குச் சொல்வாயா ?!!! அவன் இப்போது என்னை காக்கமுடியும்.அதை செய்வாயா?என்று கண்ணீருடன் கேட்கிறான். அந்த வயலினிஸ்ட் தலையசைக்கிறான்.  அந்த நல்ல ஜெர்மானியனை இழுத்து கும்பலுக்குள் அமர்த்துகிறார்கள் செம்படையினர்.  

காட்சி மாறி;- அதே வார்சா வானொலி நிலையம் புதுப்பிக்கப்பட்டிருக்க அங்கே உள்ள பியானோ முன் ஷ்பில்மான் அமர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம் . சோபின்[chopin] எழுதிய இசைக்கோர்வையான க்ராண்ட் போலனைஸ் ப்ரில்லாண்டே[Grand Polonaise brillante in E flat major] என்னும் E-ஃப்ளாட் மேஜரை வாசிக்கிறான்.அவனின்  விரல்கள் வழியாக இசை கசிந்துகொண்டிருக்க தன் தாயை, தந்தையை, சகோதரர்களை, உயிரைக்காத்துக்கொள்ள ஓடிய ஓட்டத்தை கொல்லப்பட்ட தனது யூத இன மக்களை நினைத்து உருகுகிறான். கண்ணீர் பிரவாகமெடுக்கிறது, பெருமூச்சு விடுகிறான் ஷ்பில்மான். அங்கே மௌனமாக அமர்ந்திருந்த மக்கள், அவன் வாசித்து முடித்ததும் ஆரவாரம் செய்கின்றனர்.அதில் அந்த வயலின் இசைக்கலைஞனையும் நாம் பார்க்கிறோம்.

ப்போது திரையில் ஷ்பில்மான் அதன் பின் தொடர்ச்சியாக போலந்து நாட்டின் வார்சாவில் வாழ்ந்து 2000 வருடம்  உயிர் நீத்தார் என்னும் வாசகத்தை நாம் பார்க்கிறோம். சொல்லாத செய்தி ஒன்று, வில்ம் ஹோசன்ஃபீல்ட் என்னும் கருணையுள்ளம் கொண்ட நாஜி ராணுவ அதிகாரி ஷ்பில்மானுடன் சேர்த்து நிறைய போலிஷ்களுக்கும்,யூதர்களுக்கும்  அடைக்கலம் கொடுத்தார். அவர் செம்படையினரிடம் போர்க்கைதியாக பிடிபட்டவர் 1952ஆம் வருடம் சிறைக்காவலிலேயே இறந்தும் போயிருக்கிறார். அவரை நல்லவர் என்று அடையாளம் கண்டு 2009ஆம் ஆண்டு  Posthumous recognition என்னும் உயரிய விருதையும் அளித்து கௌரவிக்கப்பட்டாராம்.

ப்படத்தின் சிறப்பம்சங்களைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் ஷிண்ட்லர் லிஸ்ட் படத்தை விடவும் பலமடங்கு மேம்பட்ட தொழில் நுட்பமும் யதார்த்தமும் மிளிரும் வண்ணப்படம் இது, ஏட்ரியன் ப்ரூடி, தாமஸ் கெரெட்ஸ்ஹ்மேன்,ஃப்ரான்க் ஃபிலேய் ,எமிலியா ஃபாக்ஸ் என அனைவருமே மிகச்சிறந்த  நடிகர்கள், அவர்கள் நடிப்புக்கு நிகராக யாருடன் ஒப்பிடுவது?!!! 

தை எழுதுவதற்கு ஒரு பதிவு போதாது. ரோமன் பொலன்ஸ்கியின் அற்பணிக்கப்பட்ட இயக்கமும், ரோனால்ட் ஹார்ட்வுட்டின் நேர்த்தியான திரைக்கதையும், வோஜ்சியேச் கிளாரின் ஒப்பற்ற இசையும்,ஃப்ரெட்ரிக் சோப்பின் என்னும் இசை மேதையின் இசைக்கோர்வையும், பாவெல் இடெல்மானின் அபாரமான யதார்த்தமான ஒளிப்பதிவும், ஹெர்வி டெ லூஸின் தொய்வில்லாத எடிட்டிங்கும். உங்களை காலாகாலத்துக்கும் வசப்படுத்தி கட்டிப் போட்டே விடும். எத்தனையோ யூத இனப்படுகொலை, இனவதை முகாம் பற்றிய திரைப்படங்களைப் நாம் பார்த்தாலும் இப்படத்துக்கு எதனுடனும் ஒப்பிடமுடியாத ஒரு தனித்துவம் உண்டு.இவ்வளவு சிதிலங்களை தத்ரூபமாக காட்டப்பட்டதேயில்லை என்பேன். நீங்கள் திரைப்படம் பார்க்க உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பதையே,  இப்படம் மறக்கடித்து விடும். ஷ்பில்மானின் இடத்தில் நம்மை வைத்துப் பார்க்க செய்யும் நேர்த்தியான இயக்கம். இவ்வளவு தாக்கத்துடன் கூடிய ஒரு படத்தை படைத்த பின்னரும் இதுவரை என்னை முழுமையாகத் திருப்திப்படுத்திய ஒரு படத்தை நான்  எடுக்கவேயில்லை என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார் ரோமன் பொலன்ஸ்கி.
====0000=====
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:- 
Directed by Roman Polanski
Produced by Roman Polanski
Robert Benmussa
Alain Sarde
Gene Gutowski
(Co-Producer)
Written by Ronald Harwood
Władysław Szpilman
(Book)
Starring Adrien Brody
Thomas Kretschmann
Frank Finlay
Maureen Lipman
Emilia Fox
Michał Żebrowski
Music by Wojciech Kilar
Frederic Chopin
Cinematography Paweł Edelman
Editing by Hervé de Luze
Distributed by Focus Features
Release date(s) 24 May 2002 (2002-05-24) (Cannes)
6 September 2002 (2002-09-06) (Poland)
6 March 2003 (2003-03-06) (United Kingdom)
Running time 150 minutes
Language English, German
Budget US$35 million

ப்ராஞ்சியெட்டன்&த செயிண்ட்[ Pranchiyettan & the Saint] [ இந்தியா] [ மலையாளம்][2010]

நான் வியந்திருக்கிறேன்,மலையாளத்தில் மட்டும் எப்படி? , உச்ச நடிகர்களான மம்மூட்டியும், மோகன்லாலும், ஏனைய பல நடிகர்களும் ஓய்வே இல்லாமல் வேலை செய்கிறார்கள் என்று !!! உதாரணத்துக்கு 2010ல் மம்மூட்டி நடித்து வெளியான படங்கள்= 6, மோகன் லால் நடித்து வெளியான படங்கள்=3  . நம்மூரில் உச்ச நடிகர்கள், இளம் நடிகர்கள் பேதமில்லாமல் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள்  தான் செய்கின்றனர், இயக்குனர்கள் சொல்லவே வேண்டாம்.  அதுவும் பலசமயம் விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போன்ற படைப்புகளை தந்து விட்டு, என்னவோ கார்கில் போருக்கே சென்று வந்தது போல சினிமா ஷூட்டிங் முடிந்தபின்னர் அடிக்கும் ஓய்வுக்கொட்டம் இருக்கிறதே?!!!  மலையாள நடிகர்களைப் பார்த்து தேனியின் சுறுசுறுப்பு என்றால் என்ன என்பதை இவ்விஷயத்தில் ஒருவர் கற்றுக் கொள்ளலாம்.அதனால் தான் அங்கே வெறும் இரண்டே கோடி ரூபாயில் படைப்புகள் சாத்தியாமாகிறது.

சென்ற வாரம் மம்மூட்டியின் ப்ராஞ்சியெட்டன்&த செயிண்ட் பார்த்தேன்.  இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படி ஒரு தரமான திரைப்படத்தை  ரஞ்சித் எப்படி இயக்க முடிந்தது? என்று மிகவும் ஆச்சர்யமும் பொறாமையும் எழுந்தது.திரைவிழாக்களுக்கு கூட விண்ணப்பிக்க தகுதியுள்ள படம்.  நம்மூரில் எப்போது இதுபோல நல்ல திரைப்படங்கள் குறைந்த பொருட்செலவில் வரும் ?!!! என்று ஏங்க வைக்கிறது. அருமையான, புதுமையான கதை இது,  ஒரு திரைப்படங்களின் கதையை இயக்குனர் யோசிக்க ஹவாய் தீவுக்குப் போய் அறை எடுக்க வேண்டிய அவசியமேயில்லை. நாம் வாழும் சூழலிலேயே ஆயிரமாயிரம் கதைகள் உண்டு என நிரூபித்த படம். அதை நகைச்சுவையாகவும் சமூக சிந்தனையுடனும் சொன்ன ரஞ்சித் மிகவும் பாராட்டுக்குரியவர்.

படத்தின்  கதை:-
அரிப்ராஞ்சி  என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அரிசிக்கடை ஃப்ரான்ஸிஸ் தனக்கு வாழ்வில் பெரிய அளவில் பொருட்செல்வங்கள் கிடைத்தும் ஏனைய முக்கிய செல்வங்களான கல்வி, நல்ல மனைவி, மக்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்றிருக்கும் மனிதர். இவர் வாழ்வில் எடுத்த ஒரு அற்புதமான , இன்றியமையாத முடிவு, இறந்து போன அவரின் சொந்த பந்தங்களை, இயேசுவின் சீடரில் ஒருவரான ஃப்ரான்ஸிஸையே இவர் கண்முன்னே தோன்ற வைக்கிறது. உலகில் யாருக்குமே கிடைக்காத பெரிய செல்வம் இறை  தரிசனம். அது கிடைக்க அவர் அப்படி என்ன தான் சாதித்தார்?!!!

ப்ராஞ்சியெட்டனை சுற்றி அவர் தரும் காசுக்காகவும், அவர் தரும் உணவு, குடிக்காக எப்போதும் ஒரு காக்காய் பிடிக்கும் கூட்டத்தை நாம் பார்க்கிறோம். சமூக அந்தஸ்து வேண்டி அவர் தன் நண்பன் ஜோசுக்கு எதிராக கிளப் ப்ரெசிடெண்ட் பதவிக்கு போட்டியிட்டு மண்ணைக் கவ்வுகிறார். இளம் வயதில் தன் சக மாணவி ஓமனாவை அவன் இவரைப்பற்றி நிறைய போட்டுக்கொடுத்து  வெறுப்பை உண்டு பண்ணி தட்டிச் சென்ற அவமானமே இன்னும் இவரால் தாங்க முடியவில்லை. இனி எந்த பதவியும் வேண்டாமென்றாலும் அல்லக்கைகள் விடுவார்களா?

ப்ராஞ்சியெட்டன் இதுவரை நான்கு இதய அறுவை சிகிச்சைக்கு பண உதவியளித்திருக்கிறார்.அதை இவரே வாய்விட்டு வெளியே சொன்னாலும் கூட அது வெளியே யாருக்கும் தெரியாமல் போகிறது,அது தான் நேரம்.ஆனால் அது இறைவன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இது புரியாமல் ப்ராஞ்சியேட்டன் சமூகத்தில் விரைந்து புகழ்பெற, கலை நிகழ்ச்சிகளுக்கு, அரசியல் கூட்டங்களுக்கு நிறைய பணம் நன்கொடையாக தந்தால் விழா தலைமை கிட்டும் என்று அல்லக்கைகள் சொல்ல , அதே போல பணம் தருகிறார் ப்ராஞ்சி. இருந்தும் விழா மேடையில் இவர் அமர்ந்திருந்த நாற்காலி படிப்படியாக பறிக்கப்பட்டு இவர் கடைசியாய் சென்று அமர , அதுவும்  ஒரு பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய எழுத்தாளருக்கு பறித்து தரப்படுகிறது, மிகவும் நொந்து போனவர் இவரின் அல்லக்கைகளால் மீண்டும் உசுப்பேற்றப்பட்டு இப்போது பத்மஸ்ரீ பட்டத்துக்கு ஆசை காட்டப்படுகிறார். அவர் கலைமாமணி விருது வாங்க ஆசைப்படிருந்தாலும் தமிழ் நாட்டின்  நகைப்புக்குரிய அவ்விருதை பத்தோடு பதினொன்றாக  கருணாநிதியின் கையாலேயே வாங்கியிருக்க முடியும்.ஆனால் பத்மஸ்ரீ என்றால் சும்மாவா?!!!

த்மஸ்ரீ பட்டத்துக்கு,முதல் கட்டமாக ஒரு கதாசிரியனிடம்  சென்று ஒருலட்சம் ரூபாய் தந்து இவரைப்பற்றிய போலி ப்ரொஃபைல் ஒன்றை தயாரிக்கின்றனர், டெல்லியில் நல்ல அந்தஸ்துள்ள ஒரு அரசியல் தரகனைப் பிடித்து, ஒன்றரை கோடிரூபாய் கொடுத்து அவன் பத்மஸ்ரீ வாங்கித்தருவான் என்று நம்பியவர் கடைசியில் எமாந்தும் போகிறார். பதமஸ்ரீ பட்டம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் இவர் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம். பார்வையாளருக்கு நிச்சயம் சந்தனம் மிஞ்சினால் ***யில் என்னும் பழமொழி நினைவுக்கு வருமளவுக்கு அட்டகாசம் செய்கிறார். அவ்விருது கிடைக்காமல் போக மிகவும் நொந்து போகிறார் ப்ராஞ்சியேட்டன்.அவரின் அல்லக்கை மேனன் மனம் தளாறாமல் இவரை செவாலியே விருதுக்கு விண்ணப்பிக்க ஆலோசனை சொல்லி உசுப்பேத்தி அடிவாங்கும் இடமெல்லாம், மிகவும் கலக்கல்.

வருடனே தங்கியிருக்கும் ஒரு சமையல்காரர்[என்னபெயர்] செம வேடம். சதா ப்ராஞ்சியேட்டனைச் சுற்றி ஆட்கள் ஈமொய்பது போல இருக்க.அங்கே எதிர்ப்பட்டு, யாரெல்லாம் சாப்பிடப்போறா?இன்று யாருக்கெல்லாம் இங்க சாப்பாடு? இன்று யாருக்கெல்லாம் அரிசி உலையில் போடனும் என்று மாற்றி மாற்றிக் கேட்டு சிரிக்க வைக்கிறார். என்கடன் வடித்துக்கொட்டுவதே என்றிருக்கும் நிறைய உஸ்தாத்களை நான் பார்த்திருக்கிறேன், எனக்கு குபுக்கென்று சிரிப்பு வந்து விட்டது. இயக்குனர் ஓமனா [குஷ்பு] & ஜோஸ் [சித்திக்] கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெரிய மனிதர்கள் போர்வையில் ஆதர்ச தம்பதிகளாக தோற்றமளிக்கும் பொய்யான மனிதர்களின்,அவர்களின் கள்ளக் காதல்களையும் நன்றாகக் கிழித்திருக்கிறார்.

ந்தேகச்சாவுகள் எப்படி சமூகத்தில் நிகழ்கின்றன?!!! நல்ல மனைவியர் கூட   சந்தேக புத்தி கொண்ட குடிகாரக் கணவனால்    கொலையுறுகின்றனரே?அது ஏன்?. ஆத்திரப்பட்டு கொலைகாரனான கணவன் அதன் பின்னர் படும் பாடு, அதன் பின்னர் அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகள் படும் பாடு. அதை மிகத் தெளிவாக அலசியிருக்கிறார் இயக்குனர் .படத்தில் பாலி [paulie] என்னும் 15 வயது சிறுவன் பாத்திரம், அவனது பெற்றோர் பாத்திரம் யாராலும் மறக்கவே முடியாது. பாலிக்கு ட்யூஷன் வாத்தியாராக வரும் ஜெகதி ஸ்ரீகுமார் செம ரகளை. அதே போல இண்டீரியர் டிசைனராக வந்த பிரியாமணியின் வேடம் மிகவும் அழகு.யதார்த்தம். ஒன்று ஒருவனுக்கு மறுக்கப்படுகின்றதென்றால் அவனுக்கு அதைவிட உயர்ந்த மற்றொன்று கிடைக்கப்போகிறது என்னும் விதி உண்டு, அதை உணர்த்தும் கதாபாத்திரம். சினிமாவிலேயே முதல் முறையாக ஒரு நடிகை முதுகில் எத்தப்பட்டு விழுந்திருப்பார் என்றால் அது ப்ரியாமணியாக தான் இருக்கும். செம காமெடி அந்த இடம்.

பெற்றால் தான் பிள்ளையா?!!! என்னும் சமூக சீர்திருத்தம் கூட நன்கு அலசப்பட்டிருக்கின்றது, 118கோடி பேர் வசிக்கும் நம் சமூகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் எத்தனையோ பேர் அடிப்படை வசதியற்று வாழ்கின்றனர், அவர்களின் நல்ல படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் வசதி செய்து தர சமூகத்தில் உள்ள பணக்காரர்கள் மனது வைத்தால் நிச்சயம் முடியும் என்பதை  போகிற போக்கில் பதிந்திருக்கிறார். சினிமா என்பது மிகவும் சக்தி வாய்ந்த மீடியம். இதை வைத்து ஒருவனை முட்டாள் ஆக்கவும் முடியும். அதே முட்டாளை குணப்படுத்தவும் முடியும் என்பதை சொன்ன படம். வெகு நாட்களுக்கு பின்னர் நகைச்சுவையுடன் கூடிய சமூக சிந்தனைப்படம் பார்த்த திருப்தி கிட்டியது .


டத்தில் ப்ராஞ்சியேட்டன் மேடையேறுகையில், அவரின் மன உறுதியை குலைக்க அவரின் டாக்டர்-விரோதக்கார நண்பன் ஜோஸ், ஆமாம் நீ அந்த மாட்டுக்கொட்டகையில் வேலை செய்தவளின்  மார்பை  பிடித்து அழுத்தினாய் தானே?!!! அது இடதா அல்லது வலதா? என்கிறார். ப்ராஞ்சியேட்டன் திருதிருவென விழிக்க, அட இருப்பதே இரண்டு தானே? அதிலென்ன குழப்பம் என்று கேலிசெய்து விட்டு இறங்கிச்செல்கிறார். இது தான் சேட்டன்  குசும்பு போலும். இலை மறைவு காய்மறைவாக இருக்கவேண்டியவற்றை இப்படி சமூக சிந்தனையுடன் கூடிய நகைச்சுவைப்படத்தில் ஒரு ஆபாச வசனமாக வைக்கும் சின்ன புத்தி தேவையா ?!! எனப்பட்டது. என்ன தான் கேரளம் , இலக்கியங்களை வாசித்து தேர்ந்த ஒரு சமூகம்  என்றாலும் இப்படியா?!!!

டத்தின் இசையும் பாடலும்,ஒளிப்பதிவும் சராசரிதான் என்றாலும்.நடிப்பும் நகைச்சுவையும் சரிகட்டுகிறது.  படம் சொன்ன செய்திக்காகவே பார்க்கலாம். தாராளமாக இதை முறையாக உரிமை வாங்கி தமிழில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கலாம். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். அப்படிப்பட்ட கதை.  ஆனால் தமிழில் எடுக்கையில் இக்கதையை உயிரோட்டத்தை குலைத்து ஹீரோவுக்காக மாற்றி அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்துவிடும். அதையும் யோசிக்கவேண்டும். சரிதானே நண்பர்களே!!!?
 ====0000====
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
====0000====
திரைப்படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-
Directed by Ranjith
Produced by Ranjith
Written by Ranjith
Starring Mammootty
Priyamani
Jesse Fox Allen
Innocent
Master Ganapathy
Siddique
Khushboo
Jagathy Sreekumar
Sasi Kalinga
Music by Ouseppachan
Cinematography Venu
Editing by Vijay Shankar
Studio Play House
Distributed by Play House Release
Release date(s) September 10, 2010 (2010-09-10)[1]
Country India
Language Malayalam
Budget Indian Rupee ₹1.9 crore (US$421,800)[2]
Gross revenue Indian Rupee ₹5.5 crore (US$1.22 million) in 80 days [3]

சம்சாரா[Samsara ] [ 2001] [18+]

எது மிக  முக்கியம்?!!! ஆயிரம்   ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதா?     அல்லது ஒரே ஒரு ஆசையையேனும் வெல்வதா?!!!
What is more Important?:Satisfying One Thousand Desires or Conquering Just One!!!
 
இயக்குனர் பான் நலின்
ந்திய  பேரலல் சினிமாவின் நம்பிக்கை ஒளி இயக்குநர் பான் நளின்.இவர் ஒரு கலைசினிமா ஆட்டியரும் ஆவார். குஜாராத்தைச் பூர்வீகமாகக் கொண்டவர். M.S யுனிவர்சிட்டி ஆஃப் பரோடாவில் ஃபைன் ஆர்ட்ஸ் மாணவராவார். இவரது தந்தை சாதாரண டீக்கடை முதலாளி. பான் நளின் பாரதத்தின் பண்பட்ட கலாச்சாரத்தில் தான் தன்னுடைய படத்துக்கான கதையை தேடுகிறார். அவ்வாறு உந்தப்பட்ட அயராத திரைப்படக்  காதலால் பல விதமான மனிதர்களை, சமூகங்களை அவர்களின் வாழ்க்கை நெறிகளை நேரில் காண  இந்தியா முழுவதும் தொடர்ச்சியான சுற்று பயணம் செய்து கரை கண்டவர் . இவரது எல்லா படைப்புகளுக்கான கதைக்கருவும் இவரது சுற்றுப் பயணத்திலிருந்தே  பிறந்ததாகக் குறிப்பிடுகிறார்.  இருபதுக்கும் மேற்பட்ட பேரலல் குறும்படங்களை இயக்கியுள்ள பான் நளினின் முதல் திரைப்படம் சம்சாரா. இது  இந்திய, இத்தாலிய,ஃப்ரெஞ்சு,ஜெர்மானிய கூட்டு தயாரிப்பில் உருவான படமாகும். தன் முதற்படியையே வெற்றிப்படியாக எடுத்துவைத்த பான் நளின். இவரது வேல்லி ஆஃப் ஃப்ளவர்ஸ், ஆயுர்வேதா:ஆர்ட் ஆஃப் லிவிங் போன்றவை குறிப்பிடவேண்டிய படைப்புகளாகும்.இவரின் அடுத்த படம் Buddha: The Inner Warrior  உலகெங்கிலும் உள்ள பேரலல் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. பான் நளின் 2006ஆம் வருடம் உலக சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வுக்கு தரப்படும் ஸ்பெயின் நாட்டின் Vida Sana  என்னும்    உயரிய விருதைப்பெற்றுள்ளார்.இப்படம் 100கோடிரூபாய் வரை வசூலிலும் சாதனை செய்துள்ளது.இப்படத்தில் தாஷியாக நடித்த ஷாவ்ன் கு [Shawn Ku ]ஒரு அமெரிக்காவாழ் சீனர். பேமாவாக வந்த க்ரிஸ்டி சங்[Christy Chung] ஒரு சீனர்.சுஜாதாவாக வந்த நீலேஷா பவொரா [Neelesha BaVora]ஒரு ஜெர்மானியர் ஆவார்.மொத்தத்தில் இது ஒரு இந்திய இயக்குனரால் உருவாக்கப்பட்ட தேசாபிமானமில்லாத ஒப்பற்ற படைப்பாகும்.

படத்தின் கதை:-

மயமலை அடிவாரத்தில் ஓங்குதாங்கான லடாக் என்னும் பனிபோர்த்திய மலைப்பிரதேசத்தில் துவங்குகிறது படம், இப்படி ஒரு பிரம்மாண்டத்தை வெகுஜன சினிமாவில் நாம் பார்ப்பது துர்லபம். அங்கே ஓர் ஏரிக்கு அருகே ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க, ஒற்றையடிப்பாதையில் புத்த பிக்குகள் அணிவகுத்து ஒரு குகையை நோக்கி நடக்கின்றனர். மேலே ஒரு மலைப்பருந்து தன் இரைக்கு வேண்டி ஒரு பெரிய காறாங்கல்லை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் செம்மரி ஆட்டின் மண்டையின் மீது போடுகிறது. அதற்கு புத்தபிக்குகள் சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்துவிட அதற்கு முக்தியளிக்கின்றனர் ,அவர்கள் மீண்டும் குகையை நோக்கி செல்கின்றனர். குகையை திறக்க வேதங்கள் ஓதுகின்றனர். அக்குகைக்குள் மூன்று வருடம் மூன்று மாதம் மூன்று நாட்களாக  நீர்,உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் கடும் தவம் புரியும் தாஷியை[ Shawn Ku] நாம் கண்ணுறுகிறோம். இப்படிக்கூட ஒருவர் தவமிருக்க முடியுமா? என ஐயுற வைக்கும் தவம் அது.

வனின் தவத்தை சிறப்பு பூஜைகள் செய்தும் வெங்கல பாத்திரத்தை உரசி சப்தம் செய்தும்  கலையச் செய்கின்றனர். அவனுடைய ஆழந்த மயக்கத்திலேயே   கண்கள் கருப்புத்துணியால் கட்டப்பட்டும் ,வெளியே கொணரப்பட்டு குதிரையில் ஏற்றியபின், ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்ட தாஷிக்கு, அங்கே வைத்து அரை மயக்கத்திலேயே சிகை மழிக்கப்படுவதையும் ஒரு  அங்குலத்துக்கும் பெரியதாய் வளர்ந்திருந்த  நகங்கள் வெட்டப்படுவதையும் பார்க்கிறோம், பின்னர் அவன் குளிப்பாட்டப்பட்டு, புதிய காவி உடை அணிவிக்கப்படுகிறான். இன்னும் அவனுக்கு மயக்கம் தெளியவில்லை. அவனுக்கு மருந்தளித்து குதிரை மீது ஏற்றி தங்கள் மடாலயத்துக்கு கொண்டு செல்லப்படுகிறான் தாஷி. மடாலயத்தை நெருங்குகையில் அங்கே அடுக்கியிருந்த கற்களில் ஒன்றின் மேலே திபெத்திய மொழியில் "how can you stop a drop of water from disappearing?"ஒரு நீர்துளி ஆவியாகாமல் எப்படி காப்பாய்? என்று எழுதியிருப்பதை அரைமயக்கத்தில் கண்ணுறுகிறான் தாஷி. மடாலயம் சென்றவனுக்கு மிகுந்த உற்சாகத்துடன் அங்கே உள்ள பெரிய புத்த பிக்குகளும்,சக, மற்றும் குழந்தை புத்தபிக்குகளும் மரியாதையும் அன்பும் செய்கின்றனர்.அவன் 20வருட சன்யாசமும் மூன்று வருட கடும்தவமும் இயற்றியதால் தலைமை லாமா மூலம் நிர்வாண நிலையை கடந்தான் என்று பாராட்டி கென்போ[khenpo] பட்டமும் வழங்கப்படுகிறது.

தாஷி தனது ஐந்தாவது வயதிலிருந்து துறவற வாழ்வில் ஈடுபட்டு வருகின்றான். மூன்று வருட கடும் தவத்தை முடித்துக் கொண்டு மீண்டும் மடாலயத்திற்குத் திரும்பிய அவன் வாழ்வில்,எதிர்கால வாழ்வைப் பற்றிய பல கேள்விகள் எழத் தொடங்குகின்றன. தன்பால் உண்டாகும் பாலியல் வேட்கைகள் உயரக்கிளம்பி அவனைக் குழப்பத்திற்குள்ளாக்குகிறது. இரவு படுக்கையிலேயே இந்திரியம் வெளியேறியும் விடுகிறது. இதை யாரும் பார்த்துவிடக்கூடாதே!!! என அஞ்சுகிறான் தாஷி. வெளியே  யாருக்கும் தன் மாற்றத்தை சொல்லாமல் மருகுகிறான்  , கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதைப் போல துறவறமா?!!!  சம்சாரமா?!!! எனப்புழுங்கித் தவிக்கிறான்  தாஷி  .  இதைக் கண்டு வேதனையுற்ற தலைமை புத்த பிக்கு தாஷியை தன்னுடன் உழவுத் திருவிழாவுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே பிடிக்கிறது அவனுக்கு  காதல் பித்து!!!!

ங்கே அந்த வசதியான குடியானவன் வீட்டில் வைத்து அழகிய பெண்ணான பேமாவை [Christy Chung]கண்ணுறுகிறான் தாஷி. அதன் பின்னர் அவளின் நினைவலைகளால் வாட்டி எடுக்கப்படுகிறான். விரக தாபத்தை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கிறான். வெளியுலகை நோக்கி அவன் தேடல் அதிகரிக்கின்ற போது, தினமும் இரவில் இந்திரியம் வெளியேறுகின்றது. மனதை அடக்க ஒருவழியும்  தோன்றவில்லை. இப்போது நண்பன் கண்ணீருடன் குருவிடம் அதைப்பகிர, அவனை அழைக்கும் தலைமை புத்த பிக்கு அவனிடம் ஒரு வரைபடத்தை தந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு மலைக்குகையில் வசிக்கும் ஒரு வயது முதிர்ந்த புத்த பிக்குவைப்பார்த்து வர அனுப்பி வைக்கிறார். அங்கே சென்று நீ காணும் சம்சாரக்கனவு நிஜமா? என தெளிவுபடுத்திக்கொண்டு வா என்கிறார். அங்கு  குதிரையில் தன் செல்ல நாய் காலாவுடன் சென்றவனை உபசரித்த அந்த முதிய புத்த பிக்கு இதற்கென்றே நிபுனத்துவம் பெற்றவர் போலும்.தாஷிக்கு பலவிதமான நிலைகளின் ஆண் பெண் கூடல்  காட்சிகள் வரையப்பட்ட தொனமையான காகித முப்பரிமான ஓவியங்களை விளக்கு வெளிச்சத்தில் காட்டுகிறார். அதை உற்று நோக்க , அவர் ஓவியத்தை சாய்க்கிறார்.  இப்போது ஆணின் இடத்தில் எலும்புக்கூடு தோன்றுகிறது, பின்னர் ஒரு திபெத்திய மொழியில் எழுதப்பட்ட அரிச்சுவடியை படிக்க கொடுக்கிறார். ஆனால் அவர் எதுவுமே பேசவில்லை. "everything you contact is a place to practice  the way" என்னும் கடைசி குறிப்பை பிரித்து காட்டுகிறார். அவனாக என்ன புரிந்து கொள்கிறானோ புரிந்து கொள்ளட்டும் என்று அவன் போக்கிலேயே விட்டுவிடுகிறார்.


ங்கிருந்து வெளியேறிய தாஷி மடத்துக்கு திரும்புகிறான்.குருவிடம் தன்னால் இனிமேலும் துறவறத்தை தாங்க இயலாது,தான் கண்ட சம்சாரக் கனவு நிஜம் என்கிறான். அவரிடம் மன்றாடிவிட்டு,  மடத்தை விட்டு தன் குதிரையில் வெளியேறுகிறான். கூடவே நாயும் வருகிறது. ஆற்றில் குளித்துவிட்டு தன் காவி உடைகளை களைகிறான். அவன் எப்போது காவியை களைந்துவிட்டு ஒரு சம்சாரியைப்போல உடையணிந்தானோ? அப்போதே அவனது செல்ல நாய் காலா அவனை விரோதமாகப் பார்க்கிறது, தாஷி எவ்வளவோ அழைத்தும் அது கேளாமல் மடத்துக்கே ஓடிவிடுகிறது. தான் பூஜைக்கு சென்ற மலைகிராமத்திற்கே மீண்டும் சென்றவன். பேமாவின் தந்தையிடமே வயல் வேலைக்குச் சேருகிறான். பேமா தன் அபாரமான அழகால் தாஷியை கனவுகளில் வந்து தொடர்ந்து துன்புறுத்துகிறாள். அவளை விரைந்து அடையத்துடிக்கிறான் தாஷி. வயல் வேலைகளில் கிடைக்கும் ஓய்வை பயன்படுத்தி அவளிடம் தன் காதலைச் சொல்லுகிறான் தாஷி. ஆனால் பேமாவுக்கோ தன் முறை மாப்பிள்ளையான கல்தச்சன் ஜமா யங்குடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஒரு மதியவேளையில் தாஷியும் பேமாவும் தங்கள் உடல்களின் இச்சைக்கேற்ப ஓருடலாகிவிடுகின்றனர். கூடாக்காமம் கூடிச் சுவைக்கின்றனர். மிக அற்புதமான காட்சியாக்கம் அது. தலைவன் தலைவி காமத்தை சங்க இலக்கியங்கள் கூட இதுபோலசித்தரித்திருக்குமா?!!! என எண்ணும்படியான முயங்குதல் காட்சியது.

ந்த காட்சியில் பார்வையாளருக்கு பான் நலினின் மீதும் ஒளிப்பதிவாளர் க்ரிஸ்டோ பகலொவ் மீதும் [Christo Bakalov] எடிட்டர் இசபெல் மெய்யர் [Isabel Meier] மீதும்,இசையமைப்பாளர் சிரில் மோர்னின் மீதும் [Cyril Mornin]  மிகுந்த மரியாதை வந்திருக்கும். அப்படியோர் அதிஅற்புதமான காட்சியாக்கம்.  படத்தின் வசனங்களை எண்ணிவிடலாம். படத்தில் நமக்கு நீங்காத பரவசநிலையை அளிப்பது சிரில் மோர்னினின் இசை. இது பல்கேரிய சிம்பொனி இசைக்கலைஞர்களைக்கொண்டு எழுதியது எனப்படித்தேன். இவர்கள் முயங்கிக்கூடுகையில் வானம் பூமியே  இடம்மாறுகிறது போன்ற தோரணையை அவர்களுக்கு கொடுப்பதான காட்சியது.

ரவே பேமா  தாயிடம் கையும் களவுமாக பிடிபட்டு,முகத்தில் கருப்பு மசி பூசப்படுகிறாள். தாஷி பேமாவின் அப்பாவின் துணைகொண்டு முறை மாப்பிள்ளை ஜமா யங்கால் பலமாக தலையில் தாக்கப்படுகிறான். இப்போது தான் அடிபட்டது அறுவடை திருவிழா பூஜைக்கு வந்த  புத்தபிக்கு என உணர்கிறார் பேமாவின் தந்தை, தாஷியிடம் மன்னிப்பும் கேட்டு வீட்டுக்குள் அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறார். ஜோதிடர் வரவழைக்கப்பட்டு தாஷி,  ஜமா யங்  மற்றும் பேமாவின்  ஜாதகம் ஆராய்ந்து யாருடன் அதிக மணப்பொருத்தம் யோககாலம் உள்ளது? என  பணிக்கப்படுகின்றது. ஜோதிடரோ ஜமா யங் தன்னிடம் தாஷிக்கும் பேமாவுக்குமான திருமணத்தேதியல்லவா? கேட்டான்? என்று கேட்டு குடும்பத்தார் எல்லோருக்கும் பெருமகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறார். அன்று அவர் உண்மையாக ஆராயாமல் சொன்ன திருமணத்தேதி இப்படி ஒரு சிக்கலை உண்டு பண்ணும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் தான். 

பின் வரும் காலங்களில் பேமாவும் தாஷியும் சதா இல்லற இன்பத்தில் கூடிக்களித்திருக்கின்றனர். அதன் பயனாக  அழகிய ஆண் மகவொன்றிற்குத் தந்தையாகிறான் தாஷி, கடும் தவமியற்றிய தாஷி தன் மாமனார் பரம்பரை பரம்பரையாக விவசாய விளைபொருட்களை விற்றுவரும் தாவா எடைபோடும் தராசில் செய்த தில்லுமுல்லுகளை கண்டுபிடித்து ஊராரிடமே காட்டிக் கொடுக்கிறான். இனி தாவாவுக்கு பார்லி தானியம் தரவேமாட்டேன் என்கிறான். இப்போது விவசாயத்திலும்,அறுவடை செய்த பொருட்களை ஜம்முவின் அயலூர் சந்தைக்கு லாரி பிடித்துச் சென்று நல்ல விலைக்கு விற்கும் தந்திரத்தையும் பழகுகிறான்.

விரைவில்  நிலச்சுவான்தாரனுமாகிறான். வீட்டுக்கு, மனைவி, மகனுக்கு என்று விலையுயர்ந்த பொருகளை பார்த்துப் பார்த்து சேமிக்கிறான் தாஷி.  மாமிசமும்  தினம் உட்கொள்ள தொடங்கி விட்டான். ஒரு சமயம் இது போல வெளிச்சந்தையில் சென்று விளை பொருட்களை விற்றுவிட்டு வருகையில் தாவாவினால் மிரட்டப்பட்டு சபிக்கப்படுகிறான் தாஷி.  நாட்கள் செல்கிறது இப்போது தாஷியின் கவனம் தன் நிலத்தில் விவசாயக்கூலி வேலை செய்யும் கவர்ச்சிகரமாக பெண்ணான சுஜாதாவின்[Neelesha BaVora] மீது  திரும்ப, அவளின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குகிறான், அவளோ இவன் எள் என்றால் எண்ணெயாய் நிற்கிறாள்,  அவளைக் கலக்க தக்க தருணம் பார்க்கிறான் தாஷி..

ரு நாள் இரவு தாஷி மனைவியுடன் முயங்கி கூட எத்தனித்து தயாராகையில், வெளியே அவனது விளைந்த நிலம் தீக்கிரையாக்கப்படுகிறது, முக்கால் வாசி பயிர்கள் எரிந்துவிட்ட நிலையில். தாஷிக்கு முதன் முறையாக ஆத்திரம் தலைக்கேறி, அவன் புத்தியையும் மழுங்கடிக்கிறது.கோபமாக வியாபாரி தாவாவின் கடைக்கு சென்றவன். அங்கே தாவாவின் ஆட்களோடு கைகலப்பில் இறங்குகிறான். தாவாவின் மகனைக் கூட ஈவு இறக்கமின்றி ஒரு கொக்கியில் தூக்கி மாட்டுமளவுக்கு   பணத்தாசை அவனை பிடித்துஆட்டிக்கொண்டிருக்க, தாவா சுதாரித்துக் கொள்கிறான், தாவா மற்றும் அவன் அல்லக்கைகளால் நன்றாக அடித்து விரட்டப்படுகிறான் தாஷி. அவனை அங்கே தக்க நேரத்துக்கு பேமாவும்,அவள் தந்தையும் சென்று காப்பாற்றி கூட்டி வருகின்றனர்.

தன் பின்னர் அவ்வருடம் , தீக்கிரையாகாமல் காப்பாற்றப்பட்ட அறுவடையை பேமாவும் , மகனும் தனியே குதிரைகளின் மீது ஏற்றிக் கொண்டு விற்க கிளம்ப, அவளுக்கு கட்டுச் சோறும் ஜெபமாலையும் தந்து அனுப்புகிறான் தாஷி.  சிறிது நேரத்தில் சுஜாதா[Neelesha BaVora] அங்கே வருகிறாள்.தன் திருமணத்துக்கு பேமாவிடம் கூலிக்காசு சேர்த்து வைத்துள்ளதையும், பேமா அதை வீட்டில் சென்று வாங்கிக் கொள்ளச் சொன்னதையும் சொல்கிறாள். தாஷி நீண்ட நாளாக சிக்காமல் இருந்த இரையை லாவகமாக வலைவீசிப் பிடிக்கிறான். விதவிதமாக முயங்கியவர்கள். சற்றும் அலுக்காமல் சுழல் புணர்ச்சி வகை கலவியில் ஈடுபட,அப்போது சுஜாதா ஒரு உறுதியில்லாத தறிபோடும்  கொம்பை தன் புடவை முந்தானையை முடிச்சிட்டு. அதைத் மேலே தூக்கி உத்திரத்தில் மாட்டியவள் அந்த   கொம்பை  இருகைகளால் சுற்றுகிறாள். முழுமையாக முறுக்கேற்றுகிறாள். பின்னர் அந்த ஏற்றப்பட்ட முறுக்கை விடுவிக்க, தட்டாமாலை சுற்றுகிறாள் சுஜாதா. கீழே தாஷி. நினைத்துப்பாருங்கள் என்ன ஒரு நிகழ்வு அது?!!!.

தற்கு மேல் இவன் உலகில் காமம் சுகிக்கமுடியுமா? என்னுமளவுக்கு சுவைத்துவிட்டான். திடீரென பேமா சென்ற குதிரை வரும் மணியோசை கேட்க. இவள் தொப்பென கீழே விழுகிறாள்.தாஷி அவசர அவசரமாக சேலையை உத்திரத்திலிருந்து உருவ இவள் சேலையும் கிழிகிறது. சுஜாதா விரைந்து சேலை ரவிக்கை,உடுத்திக்கொண்டு வெளியேறுகிறாள்.மேலே உத்திரத்தில் சுஜாதாவின் சேலையின் கிழிந்த துண்டு மாட்டியிருக்கிறது. அன்று பேமா தாஷிக்கு வாங்கி வந்த உடைகளோ, ஆசைப்பேச்சோ தாஷிக்கு சோபிக்கவில்லை. அவனின் இல்வாழ்வு அவனுக்கு சோபை இழந்தது போல தோன்றுகிறது.

மாலை ஒரு குன்றின் மீது சென்று அமர்ந்த தாஷி தன்னைதானே சோதித்து அறிகிறான். இதற்குத் தானா இப்படி கூடாக்காமம் பயிலத்தானா? 3வருடம், 3மாதம், 3வாரம், 3 நாட்கள் கடுந்தவம் இருந்தேன் என தன்னைத்தானே சோதித்து அறிகிறான். அவனைப் பார்க்க அவனது மடாலய நண்பன் சோனம் வீட்டுக்கே தேடிவர, அவனை குன்றின் மீது அனுப்புகிறாள் பேமா. அங்கே வந்த நண்பன் தலைமை புத்த பிக்கு நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், தன் கடைசி காலத்தை உணர்ந்த அவர் குகைக்குள் சென்று தவத்தில் அமர்ந்ததாகவும்,இவனுக்கு ஒரு கடிதம் கொடுத்ததாக கொடுக்கிறான்.  அக்கடிதத்தில்   எது மிக  முக்கியம்?!!! ஆயிரம்   ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதா?     அல்லது ஒரே ஒரு ஆசையையேனும் வெல்வதா?!!! என்று எழுதியிருக்கிறது. வெளியே சுஜாதா பேமாவைப் பார்த்து இறுதிவிடை பெற்றுச் செல்ல வருகிறாள். பேமா சுஜாதாவிடம் தான் பண்ணையை பார்த்துக்கொள்ளவேண்டியிருப்பதால் அவளின் திருமணத்துக்க வர இயலாது என வருத்தம் தெரிவிக்கிறாள்.அங்கே சுஜாதா எதேனும் பேமாவிடம் நடந்த உறவைப்பற்றி சொல்லிவிடுவாளோ ? என்று அச்சப்படுகிறான் தாஷி, அப்போது காற்றில் பறந்து வந்த சுஜாதாவின் கிழிந்த சேலைத்துணி தரையில் விழுகிறது.அந்த புள்ளியில் தன் சன்னியாசத்தை மீண்டும் துவக்குகிறான் தாஷி.

ன்று இரவே ஒரு பேடியைப்போல, கோழையைபோல இல்லறத்தை ஒரு மோகினிப்பேயை கண்டு பயந்தவன் போல  வெறுத்துப் பிரிகிறான். வழிக்கு கட்டுச்சோறும் செபமாலையும் எடுத்துக் கொள்கிறான் தாஷி. பின்னர் நடந்து அதே ஆற்றங்கரைக்கு சென்றவன், தலையை நன்கு  சவரம் செய்கிறான், குடியானவனின் ஆடையை களைகிறான். காவியாடை உடுத்துகிறான். திரும்ப புத்தபிக்குவாகியேவிட்டான் . இதோ சில காத தூரம் தான், தொலைவில் அவனது மடம் தெரிகிறது  என்னும் நிலை.

ங்கே பேமா கையில் கட்டுசோற்றுடன் கூடிய ஜெபமாலையுடன் எதிர்ப்படுகிறாள். குதிரையில் தனக்கு முன்பே அவள் வந்துவிட்டிருப்பது புரிகிறது.  தன்னை நிர்க்கதியாக விட்டுப்போன கணவனுக்கு கடைசியாக சோறு கொண்டு தர வந்தேன் என்கிறாள் முன்னால் அதை எறிகிறாள். குற்ற உணர்வு மிகுதியால் பேச வாயெடுத்தும் தாஷியால் பேச இயலவில்லை தன்னை மீட்க வந்திருக்கும் பேமாவை , அவனால் கண்கொண்டு பார்க்ககூட முடியவில்லை. அங்கே பேமா சொல்கின்றாள்!!!. கௌதம சித்தார்த்தன்    அன்று வீட்டைவிட்டுச் சென்ற பின்னர் மனைவி யசோதரா நாளைமுதல் படப்போகும் அவமானம்,அவளின் எஞ்சிய நாட்களின் போராட்டம், அயராத விரக தாபம், மனவேதனை பற்றி சிறிதும் யோசிக்கவே யில்லை, ஆண்களுக்கு மட்டும் இந்நிலை மிக இயல்பாய் கைவருகிறதே!!!?, ஆனால் தூங்கும் தனது குழந்தையை இரவோடு இரவாக விட்டுச் செல்ல யசோதராவால் முடியவே முடியவில்லையே?!!!  இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என முகத்தில் அறைந்தது போல உரைக்கிறாள், அங்கே அவமானப்பட்டான்  இந்த புத்தபிக்கு தாஷி,  ஆடியே போய்விட்டான்.  தன்னை மன்னித்துவிடும் படி பேமாவின் கால்களில் விழுந்து கதறுகின்றான். பேமா அவனைத் துறந்தவள் தனது குழந்தையிடமே திரும்பச் செல்கின்றாள்.

தோ அங்கே அந்த திபெத்திய வாக்கியம் எழுதிய  கல்லை இப்போது மீண்டும் பார்க்கிறான் தாஷி."how can you stop a drop of water from disappearing?" ஒரு நீர்துளி ஆவியாகாமல் எப்படி காப்பாய்? அதை  இப்போது திருப்பிப் பார்க்கிறான் தாஷி.அதில் விடையாக  அதைத் தூக்கி கடலில் வீசு. என்கிறது வாசகம், அதன் அர்த்தம் இப்போது தாஷிக்கு புரிகிறது .அன்று சித்தார்த்தன் எதிர்காலம் பற்றியோ மனைவி யசோதராவின் மனவேதனை, மகன் ராகுலின் ஏக்கம் பற்றியோ ஒரு கணம் எண்ணிப்பார்த்திருந்தால் இவ் உலகிற்கு  புத்தன் என்பவன் கிடைத்திருக்க மாட்டான். என்று தன்னை தேற்றிக்கொண்ட தாஷி.   சம்சாரம் என்னும் வெப்பத்தில் ஆவியாகாமல் துறவறம் என்னும் நீர்நிலையில் கலந்து போக முடிவெடுக்கிறான். அங்கே மேலே உயரத்தில் மீண்டும் ஒரு பருந்து சுற்றுப்போடுகிறது , பின்னர் மறைகிறது அதை அண்ணாந்து கண்கள் சுருக்கிப் பார்க்கிறான் தாஷி.
=====0000=====
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Pan Nalin
Produced by Fandango / Ocean Films Distribution / Pandora Film / Paradis Films
Written by Pan Nalin & Tim Baker
Starring Shawn Ku & Christy Chung & Neelesha BaVora
Music by Cyril Morin
Release date(s) 2002
Running time 138 minutes
Language Tibetan / Ladakhi
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)