அடோன்மெண்ட்2007(18+)பிராயச்சித்தம்

டோன்மெண்ட் என்ற பெயரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட மெக்எவான் எழுதிய புதினத்தை தழுவி, 2007 ஆம் ஆண்டு, ஜோ ரைட்டின் இயக்கத்தில், க்ரிஸ்டபர் ஹாம்ப்டனின் திரைக்கதையில் வெளியான நான் லீனியர்- ரொமான்ஸ்,த்ரில்லர் உணர்ச்சி காவியம் இது.

ரு படம் பார்வையாளரை , தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பிரமிக்க வைக்க முடியுமென்பது தான் அடிக்கடி நிகழக்கூடியதா? அறவே இல்லை.  நம் வாழ்வின் அயல் சினிமா தேடலில் இது போன்ற படங்கள் எப்போதாவது தான் காணக்கிடைக்கும், படம் முடிந்து பலமணி நேரங்களுக்கு படத்தின் காட்சிகளும் கதாபாத்திரங்களும் நெஞ்சைவிட்டு அகலாது.கேட்ட இசை நம் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.ஆன் அண்ட் ஆன்.

டத்திற்கு போடப்பட்ட அரங்கு பற்றி பேசப்போனால். ஒரு பதிவே போதாது,ஒரு சோற்றுப் பதமாக தொடர்ந்து ஆறு நிமிடம் வருகின்ற டன்கர்க் எவாகுவேஷன் என்னும் இரண்டாம் உலகப்போரின் வரலாற்று சம்பவத்தின் போர்வீரர்களை திரும்ப அழைக்கும் நிகழ்வு அரங்கு,மிக மிக அதிசயம் என்பேன்.

தில் காணும் ஆளில்லா ராட்டினமும் , கரை தட்டிய கப்பலும் , பழுதடைந்த கார்களும் ,ஒருகாலத்தில் இயங்கிய உல்லாசப் பூங்காவும் ,டாங்கிகளும் போர்ப்படைத் தளவாடங்களும், சிதிலங்களும்,போரின் எச்சங்களும் , மிச்சங்களும் ,அழைத்துப்போக வரும் கப்பலுக்காக ஏக்கத்துடனும் பசியுடனும் காத்திருக்கும் கவலை தோய்ந்த மூன்று லட்சத்து முப்பதாயிரம் படை வீரர்களுமே சாட்சி. (எப்படித்தான் அமைத்தாரோ? எப்படித்தான் இயக்கினாரோ?) கலை இயக்குனரை இதற்காகவே,கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.

ந்த படத்தைப்பற்றி படித்து தெரிந்து கொள்வதை விட பார்த்து விடுங்கள் நண்பர்களே! இது மூன்றே பிரதான கதாபாத்திரங்களைச் சுற்றி பின்னப்பட்ட அருமையான திரைக்கதை.”கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்” என்னும் கூற்றை அழுந்தச் சொன்ன படம். பாரபட்சமாக இசைக்கு மட்டும் ஆஸ்கார் வென்ற படத்தின் மயக்கும் இசை சேர்ப்பு உன்னதம், படத்தில் வந்த டைப் ரைட்டரும் நம்மை இசையால் தாலாட்டுகிறது. படத்தை நான்கு பாகங்களாய் பிரிக்கலாம்.

பாகம்-1
1935ன் கோடைக்காலத்தில் , ஊரக இங்கிலாந்தின், உல்லாச பண்ணை வீட்டில், படம் துவங்குகிறது,13வயது ப்ரையானி டால்லீஸ்(சவாய்ர்ஸ் ரொனான்) கவலைகள் என்றால் என்னவென்றே தெரியாத ,செல்வசெழிப்பான குடும்பத்து பிண்ணனி கொண்ட சிறுமி,நாடகங்கள் ,கதைகள் புணைந்து தட்டச்சு செய்து புத்தகமாய் வெளியிடும் கற்பனை வளமும்  ஆக்க திறனும் பெற்றவள்.காணும் எதையும் ஆராயாது ஏற்றுக்கொள்பவள். சமீபத்தில் “The Trials of Arabella”என்னும் கதையை எழுதி நாடகம் போட திட்டமிடுகிறாள்.

வளின் அக்கா சிசிலியா(கெய்ரா நைட்லி) 20வயது அழகிய இளம் பெண்,கேம்ப்ரிட்ஜில் ஆங்கில இலக்கியம் படிக்கிறாள்.

ன் இருபதுகளில் இருக்கும் இவர்கள் வீட்டு பணிப்பெண்ணின் மகன் ராப்பி (ஜேம்ஸ் மெக்வாய்) கேம்ப்ரிட்ஜில் இளங்கலையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மேற்கொண்டு மருத்துவம் படிக்க விண்ணப்பித்து விட்டு  காத்திருக்கிறான்.

ன் எஜமானர் இளம்பிராயத்திலிருந்தே இவனின் கல்விக்கட்டணத்தை மனமாற ஏற்றுக்கொண்டதால் அவரின் பண்ணையில் கோடைக்கால தோட்ட வேலை செய்து நன்றிக்கடன் தீர்க்கிறான், இவனின் விதவை அம்மாவும் பண்ணை வீட்டில் சமையல் வேலை செய்து நன்றிக்கடன் தீர்க்கிறாள்.

இளம் பிராயம் முதலே இவனும் சிசிலியாவும் விளையாடியும் சண்டைபோட்டும் இருக்கின்றனர். சிசிலியாவின் மனதில் அவன் மேல் காதல் இருக்கிறது, இருந்தும் அவனை பிடிக்காதவள் போலவே நடந்துகொள்கிறாள். நேரம் கிடைக்கையில் அவனை சீண்டி சீறிவிழுந்து சண்டை போடுகிறாள். இவன் சிசிலியாவை சிறுவயது முதலே அறிந்தமையால் வெறுப்புக்கு மாறாக அபார அன்பே மிஞ்சுகிறது. அவளிடம் தன் காதலைச் சொல்ல பொன்னான நேரம் பார்த்து காத்திருக்கிறான்.

ப்போது இவர்களின் பண்ணை வீட்டுக்கு ப்ரையானியின் விவாகரத்தான அத்தையும் அவர்களின் 15வயது மூத்த  மகள் லோலாவும் (ஜூனோ டெம்பிள்), அவளின் இரட்டைப்பிறவி தம்பிகள் ஜாக்சனும், பியெரெட்டும் வருகின்றனர். லோலா பெற்றோரின் பிரிவையும் புதிய இடத்து  சுற்றத்தையும் ஏற்றுக்கொண்டு வாழ, இரட்டையர்கள் அப்பா வீட்டுக்கு எப்போ போவோம்? அப்பாவும் அம்மாவும் எப்போது சேர்வார்? என கேட்டு நச்சரித்து லோலாவை அவ்வப்பொழுது அடித்தும் கிள்ளியும்,கடித்தும் வைக்கின்றனர்.லோலா தான் தம்மை அப்பாவிடம் போகவிடாமல் பிடித்து அடைத்து வைப்பதாய் எண்ணுகின்றனர்.

ப்போது சிசிலியாவின் அண்ணன் லியோன்( பேட்ரிக் கென்னடி) கோடையை கழிக்க பண்ணைவீடு வருகிறான், உடன் தன் செல்வசெழிப்பான நண்பன் பால் மார்ஷலையும் கூட்டிவருகிறான், பால் மார்ஷலுக்கு பெரிய சாக்லேட் ஃபேக்டரி உள்ளது, அவர்கள் படைவீரர்களுக்கு சாக்லேட் ரேஷனில் கொடுக்கும் ஒப்பந்தத்தையும் எடுத்துள்ளனர். பால் மார்ஷல் லோலாவின் அழகில் மயங்குகிறான், அவளிடம் ஆசையாய் பேசி சாக்லேட் தந்தே  தன் வழிக்கு கொண்டுவந்தவன் அவளை ருசிக்க நாள் பார்க்கிறான்.ஒருபக்கம் யாருக்கும் தெரியாமல் இந்த இழை ஓடுகிறது.

செல்வந்த நண்பன் வரவை கொண்டாட பண்ணை வீட்டில் சிறப்பு விருந்துக்கு எஜமானர் டால்லீஸ் ஏற்பாடு செய்கிறார். ராப்பியும் அழைக்கப்படுகிறான். சிசிலியாவிடம்  தன் காதலை சொல்ல பொன்னான நேரம் பார்த்து காத்திருந்தவனுக்கு தன் எஜமானர் தன்னை மதிய உணவிற்கு அழைக்க, மிக அழகாக இரு காதல் கடிதங்கள் தட்டச்சுகிறான்.

ன்று,சிசிலியாவின் மீதான தன் காதலையும்,சமீப காலமாய் அவளுக்கு எதனாலோ தன் மீது வெறுப்பு உண்டான சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டு எழுதுகிறான். இன்னொரு கடிதம் அவளை தன் மனையாளாக பாவித்து மிக உரிமையுடன்,அவளை நாள் முழுதும் கூடி முயங்கியிருக்க வேண்டும் என்றும், அவளின் பனிவிழுந்த மலர்வனம் போன்ற ஈர யோனியில் முத்தங்கள் தரவேண்டும்,என்றும் காதல் கிறுக்குடன் எழுதுகிறான்.

ல்ல கோட்டு சூட்டு  உடைகளை அணிந்தவன், அவளுக்கு எழுதிய கடிதத்தையும் உரையில் போட்டு எடுத்துக்கொள்கிறான். வழியில் அக்கடிதத்தை சிசிலியாவிடம் கொடுக்க தயக்கம் ஏற்படவும், பண்ணைக்கு செல்லும் பாதையில் விளையாடிக்கொண்டிருந்த ப்ரையானி டால்லீஸை பார்க்கிறான்.  சிசிலியிடம் கடிதத்தை விரைவாய் தர இயலுமா? என எனக்கேட்டு கொடுத்தும் விடுகிறான்,

வள் ஏற்கனவே தன் உள்மனதில் ராப்பியை ஒரு ஸ்த்ரிலோலனாகவும் , காமக்கொடூரனாகவும் நினைத்திருக்கிறாள் ,[முன்னொரு சமயம் இதற்கு முத்தாய்ப்பாக எதேச்சையாய் சிசிலியாவின் கையில் இருந்த விலையுயர்ந்த பீங்கான் பூஜாடியை இவன் வாங்கிப்பார்க்க, இவன் அதை கவனமாய் கையாளாலதால் அதன் கைப்பிடி உடைந்து அருகே இருந்த நீரூற்றில் விழுந்துவிடுகிறது. ற்றும் தாமதியாமல் சிசிலியா தன் மேல் ஆடைகளை களைந்தவள், நீரில் இறங்கி அந்த உடைந்த கைப்பிடியை எடுத்து மீண்டும் நீருக்கு வெளியே வந்து இவனை சினந்து பார்த்துவிட்டு அவன் கையில் இருந்த மூடியையும் பறித்துக்கொண்டு, தன் வீட்டை நோக்கி நடக்கிறாள்,இதை மாடியில் தன் அறையில் இருந்து பார்த்த ப்ரையானி டால்லீஸ் தன் கற்பனை குதிரைகளை  தாறுமாறாக ஓட்டி இவன் மோசமானவன் என்ற முடிவுக்கு வருகிறாள்,லோலாவிடமும் அவனைப்பற்றி புகார் கூறியிருந்தாள்]

வன் தந்த கடிதத்தை பிரித்து முழுவதும் படிக்து,வியர்க்கிறாள் (முன்பே ஒருமுறை விடலைப்பருவத்து வேட்கையாய் ராப்பி மீது காதல் வயப்பட்டவள், ராப்பியை சீண்ட நினைக்க, நீச்சல் தெரியாத இவள் நீரில் குதிக்க  , உடனே நீரில் குதித்த ராப்பி அவளை காப்பாற்றி , கோபமாய் திட்டுகிறான், அந்த எரிச்சல் வேறு இவள் மனதில் மண்டியிருக்கிறது ) இவனை போட்டுக்கொடுக்க தருணம் பார்க்கிறாள்.

ராப்பி தவறுதலாய் காமரசம் சொட்ட சொட்ட எழுதிய கடிதத்தை சிசிலியாவிடம் தர சொல்லி கொடுத்திருப்பது நினைவுக்கு வந்ததும், நாக்கை கடித்துக்கொள்கிறான். தொலைந்தோம் என நினைத்தவன். நுனிபாதத்தில் பைய நடந்து விருந்துக்கு வருகிறான். வீட்டு அழைப்பு மணியின் கயிறை இழுக்க, மரண அமைதி. இவனுக்கு வயிற்றில் கிர்ரென இருக்க, மீண்டும் துணிந்து கயிறை இழுக்க, மணி ஒலித்து சிசிலியா வர, அவனை உள்ளே அழைக்கிறாள், இருவரும் வீட்டு நூலக அறைக்குள் அமைதியாய் நுழைய, ராப்பி கதவை சார்த்துகிறான். அவளிடம் தவறான கடிதத்தை தந்தேன், என சொல்ல, இவள் கடிதத்தை ப்ரையானி  படித்துவிட்டாள்,என்கிறாள்,

ற்றபடி இவன் எழுதியது தனக்கும் மிகவும் பிடித்தது என்றவள் அவனை ஆரத்தழுவி உதட்டில் முத்தமிடுகிறாள், இவனை உயிரினும் மேலாய் விரும்புவதாயும் ,அதை வெளிப்படுத்த தெரியாமல் தான் இவனை அவ்வப்பொழுது குத்திக்கிழித்ததாயும் , இவன் மேற்படிப்புக்கு மருத்துவம் படிக்கப்  போய்விட்டால் தன்னால் இவன் பிரிவை தாங்கவே முடியாதென்றும் அழுதபடி சொல்கிறாள்.

முத்தத்தில் ஆரம்பித்தவர்கள்,நூலறை புத்தக அலமாரிலேயே முயங்கி உறவு கொள்கின்றனர்.இருவரும் இன்ப உச்சத்தில் இருக்கையில் ப்ரையானி  கதவை  பூனைபோல திறந்து உள்ளே வந்துவிடுகிறாள்.தன் அக்காவை ராப்பி கட்டாயப்படுத்தி மேலே பரவி வன்கலவி செய்கிறான் என கருதியவள் அழுதுகொண்டே ”சிசிலியா” என்கிறாள்.

 வர்கள் சுயநினைவுக்கு வந்தவர்கள் தன்நிலை உணர்ந்து ஆடைகளை சரி செய்து கொண்டு நகர்கின்றனர், காமப்பசி தீர்ந்து வயிற்றுப்பசி எடுக்க , உணவு மேஜையில் அருகருகே அமர்ந்து உண்ண ஆரம்பிக்கின்றனர். உணவின் போதே மேசைக்கு அடியில் இவர்களின் கைகள் ஆதூரத்துடன் பிணைந்தும் கொள்கின்றன. சில்மிஷங்கள் நடக்கின்றன.

=======================================
முழுக்கதையும் படிக்க நினைப்போர் இக்காணொளியை தாண்டி 
வந்து படிக்கவும்.=======================================
உணவு மேசையில் லோலா ஏன் வாட்டமாய் இருக்கிறாள்? என எல்லொரும் கேட்க, அவளின் கைகளை சிறுவர்கள் பிராண்டி வைத்துள்ளனர்.அதனால் அவள் கையே சிவந்துவிட்டது. என பிரையானி சொல்ல,ப்ரயானி முந்திக்கொண்டு சொன்ன பதிலால் பால் மார்ஷல் உள்ளுர மகிழ்கிறான், ஏனென்றால் வெறியோடு லோலாவை தழுவுகையில் ஏற்பட்ட காயம் அது,அதற்குள் லோலா வெளியேறிவிட்டாள்.ராப்பி சிறுவர்களை நொந்து கொள்கிறான்.

 ப்போது ப்ரையானி  ராப்பியை நோக்கி கோபமாய் திரும்பி உன்னை விட அவர்கள் மோசமில்லை என வார்த்தைகளை வீசுகிறாள்,அவளின் அம்மா அவளை கண்டிக்கிறாள்,மாடிக்கு போய் அந்த சிறுவர்களை கூட்டி வா !என சொல்ல,மாடியேறியவள் சிறுவர்கள் இருவரும் லோலாவின் கொடுங்கோல் தனம் பிடிக்காததால் தன் தந்தையை தேடி போவதாய் ,கடிதம் எழுதிவைத்து விட்டு எங்கோ ஓடிப்போயிருக்கின்றனர்.

வீடே ரணகளப்படுகிறது. எல்லோரும் சிறுவர்களை தேட, ப்ரையானியும், சிசிலியாவும்,டால்லீஸும்,ராப்பியும் திசைக்கு ஒருவராய் தேட, ப்ரையானி வீட்டிற்கு பின்னே இருக்கும் படகு துறைக்கு சென்று விளக்கை அடித்து பார்க்க அங்கே புல்வெளியில் லோலாவை கிடத்தி ஒரு உருவம் உடல் உறவுகொள்ள, அவள் முழு சம்மதத்துடன் கூடினாளா? இல்லையா? என்றே தெரியாமல் . ப்ரயானி  பலமாய் கத்துகிறாள்.

ந்த சூட் அணிந்த உருவம் தலை தெரிக்க ஓடிவிட, செய்வதறியாத லோலா மூர்ச்சையாகிறாள். போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது, வந்த போலீஸ்காரர்களிடம்,லோலா ராப்பியால் கற்பழிக்கப்பட்டதாகவும், அதை தன் இரு கண்களால் பார்த்ததாகவும் சொல்லி சாதிக்கிறாள்.

சிசிலியா மட்டுமே இதை நம்பாத ஆள்.சிசிலியா எவ்வளவோ மன்றாடியும் பெரியவர்கள் யாரையும் நம்பவிடாமல் செய்துவிட்டது ப்ரையானி எல்லோருக்கும் காட்டிய ராப்பியின் கடிதம்.அதில் இருந்த விரசமான வார்த்தைகள் பெற்றோருக்கு பயங்கர கோபத்தை வரவழைத்தன,லோலாவும் வசதியாக தன்னை கற்பழித்தவன்,அவன் தன் கண்களை பொத்தி கற்பழித்ததால் தனக்கு அவனை அடையாளம் தெரியவில்லை,என சொல்லிவிட,போலீசார் விலங்குடன் ராப்பிக்காக காத்திருக்கின்றனர்.

ரட்டையர்களை தேடிப்போன ராப்பி நெடுந்தூரம் அலைந்து திரிந்து சிறுவர்களை கண்டுபிடித்து ஒருவனை தன் தோள் பட்டையில் ஏற்றி அமரவைத்தும்,இன்னொருவனை அரைத்தூக்கத்தில் பேசிக்கொண்டே நடத்தியும் கூட்டிக்கொண்டு வீடுவர, நன்றிக்கெட்ட பணக்காரர்கள் ஏழை பணக்காரன் வித்தியாசம் பாராட்டி அவனை,அவன் உதவியை சிறிதும் மெச்சாமல்,ராப்பியை போலீசார் கற்பழிப்பு குற்றத்துக்காக கைது செய்வதை வேடிக்கை பார்க்கின்றனர்.

சிசிலியா துடிக்கிறாள்.போலீசார் ராப்பியை கூட்டி செல்வதை பார்த்த அவனின் அம்மா கையில் வைத்திருந்த குடையால் போலீசாரின் வாகனத்தை அடிக்கிறாள்.எஜமானர்களை மண்ணை வாரி தூற்றுகிறாள்,கணவனை இழந்தவள் புத்திரசோகத்திற்கும் ஆளானாள்.

பாகம்-2
நான்கு வருடங்கள் கழித்து, ஜெர்மனியால் பீடிக்கப்பட்ட ஃப்ரான்ஸில் காட்சி துவங்க. மருத்துவப் படிப்பில் மண்விழுந்து , சிறைக்கு அனுப்பப்பட்ட ராப்பி, அரசு சிறைக்கைதிகளை நிபந்தனையின் பேரில் உலகப்போரில் போரிட ராணுவத்துக்கு தேர்வு செய்வதை கேள்விப்பட்டு,வலியப் போய் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருகிறான். ஃப்ரான்ஸை ஜெர்மனியின் நாஜிப்படை சுற்றிவளைத்து கைப்பற்ற, இவன் ஒரு வீட்டின் பரணில் தன் சகாக்கள் இருவருடன்  ஒளிந்திருக்கிறான்,

வனுக்கு வரைபடங்கள் படிக்க தெரிந்ததாலும், ஃப்ரென்ச்சு மொழி தெரிந்ததாலும் ஒரு சிறு படைக்குழுவுக்கு  இவனே தலைமை ஏற்கிறான், ஒவ்வொரு நகரம், காடு, மலையாக நடந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே நடக்கிறான்.

பாகம்:-3.1
ராப்பி படையினருடன் நடக்கையில் கடந்தகால நினைவலைகளில் மூழ்குகிறான். தான் சிறை வந்ததையும்,அதை அடுத்த சில நாட்களிலேயே சிசிலியாவும் வீட்டாரைப்பிரிந்து லண்டன் வந்து செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் மருத்துவ தாதியாய் சந்தித்ததையும் அசைபோடுகிறான்.

ரு உணவு விடுதியில் சிசிலியா இவனை சந்தித்து கைகளைப் பற்றிக்கொண்டு தன்னை மன்னிக்கும்படி கெஞ்சுகிறாள். இவன் துக்கம் தொண்டையை அடைக்க கையை உருவிக்கொள்கிறான். அவள் மீது எந்தவித கோபமும் இல்லை என்று தேற்றுகிறான், அவள் அவனுக்கு ஒரு உல்லாச தீவின் படம் கொண்ட வாழ்த்து அட்டையை கொடுத்து,அந்த தீவுக்கு இருவரும் சென்று திருமணம் செய்துகொண்டு,நிறைய குழந்தைகளை பெற்றுக்கொண்டு வாழ்வோம் வா,என கெஞ்சுகிறாள்.

வன் எனக்கு தண்டனைக்காலம் இன்னும் இருக்கிறது,மேலும் தான் போருக்கு செல்கிறேன்,திரும்ப வருவேனா?எனத் தெரியாது ,எனக்காக காத்திருப்பாயா? என்றும் கேட்க, இவள் நிச்சயமாக!!! என கட்டித் தழுவிக்கொள்கிறாள், இவன் ஃப்ரான்ஸுக்கு செல்லும் தினத்தில் நேரே வந்து விடை கொடுத்தும் அனுப்புகிறாள்.

ப்போது 18வயது ப்ரையானி அதே செயிண்ட் தாமஸ் மருத்துவமனைக்கு தான் படிக்கும் பாலிடெக்னிக் மூலம் செவிலியர் பயிற்சிக்கு வருகிறாள்,அங்கே சிசிலியா முக்கிய தலைமை தாதியாய் இருக்க குற்ற உணர்வு கொள்கிறாள், சிசிலியா இவளிடம் மிகுந்த கண்டிப்பு காடுகிறாள், அவளை டால்லீஸ் என்றே அழைக்கிறாள், அவளை எந்த சந்தர்ப்பத்திலும் தனிமையில் சந்திக்க மறுக்கிறாள், தவிர்க்கிறாள்.

ருநாள் போரில் தலையில் குண்டு துளைத்து ஓட்டை விழுந்த ஃப்ரென்சு வீரன் ஒருவன் உயிருக்கு போராடியபடி துடிக்க, பிரயானிக்கு ஃப்ரென்ச் தெரியுமாதலால் , அவனின் கையைபிடித்து உள்ளங்கை சூடு கொடுத்து தேற்றச்சொல்லி தலைமை செவிலியர் உத்தரவிட, இவள் முதல் முறையாக ஒருவனின் உள்ளங்கைகளை பற்றுகிறாள். ஆணின் உள்ளங்கை சூட்டை உணர்கிறாள், அவன் ராப்பியைப் போலவே இருக்க ,இவள் அவன் மீது கனிவும் கொள்கிறாள்.

வனிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் இவளை விரும்புவதாகவும், தான் பிழைத்து வந்தால், தன்னை திருமணம் செய்து கொள்வாயா? என அவன் கேட்க, இவள் துணிந்து சரி, என்கிறாள்,இவளுக்கும் அவனை பிடித்துள்ளதாக சொல்கிறாள், அவன் மனதால் தேறுகிறான்.

ன் தலையில் போடப்பட்ட கட்டின் இறுக்கம் மிகவும் வலிக்கிறது,என்றும் ,சற்று தளர்த்தும் படியும் கேட்க, இவள் தளர்த்துகிறாள், அப்போது தான் கொழ கொழவென இருக்கும் குண்டு துளைத்த ஓட்டையை பார்க்கிறாள். முதல் முறையாய் அதுபோன்ற கொடூரமான காயத்தைப் பார்க்கிறாள். அவனை கைகள் பிடித்து தேற்ற , அவன் விழிகள் நிலைகுத்தி இறந்தும் விடுகின்றான்.

பாகம்:-3.2
ராப்பி டன்கர்க் என்னும் கடற்கரை நகருக்கு மிக நீண்ட நடைபயணத்தின் முடிவில் வந்து சேர்கிறான்.அங்கே போரில் இங்கிலாந்து வீரர்கள் தோல்வி அடைந்ததையும் ஏற்கனவே ஊருக்கு திரும்பிச்செல்ல, மூன்று லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் காத்திருப்பதையும், யாருக்கும் குடிக்க நீரோ,உண்ண உணவோ கிடைக்காததையும் காண்கிறான்.

வனும் அங்கே சென்று தன்னை பதிந்து கொள்ள எத்தனிக்க, அவர்கள் உள்ள ஆளுக்கே நீரில்லை, உணவில்லை, உன் சுற்று வரும் வரை காத்திரு,உனக்கு அடி பட்டிருக்கிறதா? அப்படி காயம் பட்டிருந்தால், அவர்களை கடைசியாக வரும் கப்பலில் ஏற்ற உத்தரவு என்கிறார்கள்.

ங்கே வீரர்கள் தங்கள் பசிக்காக போர்க் குதிரைகளை சுட்டுக்கொல்வதை பார்க்கிறான். ராப்பி மிகுந்த பசியால் , தாகத்தால் சுய பச்சாதாபத்தால் துடிக்கிறான். மருத்துவனாய் இருந்திருக்க வேண்டிய தான், இப்படி ராணுவத்தில் அடிமை வீரனாய் ஆக நேர்ந்ததே!!! என வேதனைப்படுகிறான்.

ங்கிலாந்து திரும்ப போனாலும் தன் ஊருக்குச் செல்ல முடியாது,சிறைக்கு தான் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வேறு வாட்ட, சிசிலியாவை நினைத்துக்கொள்கிறான். அவள் தந்த வாழ்த்து அட்டையில் இருக்கும் கடற்கரையும் பச்சை மலைத்தொடரும் கூடும் இடத்தில் இருக்கும் அழகிய வீட்டையும் நினைக்கிறான். இப்போது சிசிலியாவுடன் தானும் அங்கே இருப்பதாய்  நினைக்கிறான்.புழுங்குகிறான்.

ங்கு போரினால் சூறையாடப்பட்ட மதுபான விடுதியில் நுழைந்து உணவு தேட ஏமாற்றமே மிஞ்சுகிறது.அங்கே ஒரு ஆளில்லா திரையரங்கில் திரைக்கு பின்னால் நின்று,வீரர்கள் இயக்கி பார்க்கும் ப்ரொஜெக்டரில் இருந்து வரும் காதலர் சந்திப்பு காட்சியை பார்க்கிறான், இவனுக்கு சிசிலியாவின் நினைவு பீரிட்டு கிளம்புகிறது.

குளிரையும் பொருட்படுத்தாது வெளியே வந்தவன், தன் அம்மாவைப்போன்ற ஒரு பெண்மணியை பார்த்து, பின்சென்று உணவு கேட்க,அவள் இவனுக்கு உணவளிக்கிறாள், மிக நீண்ட தூரம் நடந்து வந்தமையால் புண்ணான இவன் பாதங்களை வெந்நீரில் கழுவி அழுத்தம் கொடுக்கிறாள், இவன் பருக ஒயின் புட்டிகளும் தருகிறாள், இருந்த பசியிலும் சோகத்திலும் நிறைய ஒயின் பருகியவன், உச்சக்கட்ட போதையில் ஷூக்களைக்கூட அணிந்து கொள்ளத் தோன்றாமல் தள்ளாடியபடியே கடலை நோக்கி செல்கிறான்.

வனுடன் வந்த ராணுவ வீர நண்பன் இவனை தாங்கலாக அழைத்துச் சென்று பங்கரில் தூங்க செய்கிறான். ராப்பி சிசிலியாவை நீண்ட நாள் காக்க வைத்துவிட்டேன் ,இனி அது முடியாது,அவளை உடனே பார்க்க வேண்டும் என்கிறான். நண்பன் இவனுக்கு நன்கு போர்த்திவிட்டு அருகே தூங்க, மிகுந்த துக்கத்தில் இருந்தவன் அரைத்தூக்கத்தில் சத்தமாக கத்துகிறான்.

ண்பன் அவனிடம் நான் வெளியே சென்று பார்த்து வந்தேன் கப்பல்கள் வரும் அறிகுறி தென்படுகிறது. நாளை காலை எப்படியும் நாம் கப்பலில் ஏறிவிடுவோம், என்று ஆறுதல் சொல்ல. இவனுக்கு, மகிழ்ச்சி பிடிபடவில்லை, இப்போது சிசிலியா தந்த வாழ்த்து அட்டையை தீக்குச்சி நெருப்பில் பார்த்து உன்னிடம் விரைவில் வருகிறேன், உன்னை திருமணம் செய்வேன், தலை நிமிர்ந்து இருவரும் வாழ்வோம்!!! என மனதுக்குள் சொல்கிறான். நண்பனிடம் நாளை காலை என்னை 7மணிக்கு முன்பாக எழுப்பி விடுவேன் என சொல், அதன் பிறகு என் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வராது!!!!என்று சொல்லி விட்டு கண்களை மூடுகிறான்.

பாகம்:-3.3
பதினைந்து தினங்களுக்கு முன்னால்:-
ப்பொது ப்ரையானி பணிபுரியும் மருத்துவமனையில்  நியூஸ் ரீல் போர்ப் படம் காட்டப்படுகிறது, அதில் டன்கர்க்கில் போராடும் வீர்ர்களை பார்க்கிறாள், முடிவில் இங்கிலாந்தின் ராணி இவளின் அண்ணனின் நண்பன் பால் மார்ஷலின் சாக்லேட் ஃபேக்டரிக்கு விஜயம் செய்வதையும்  காட்ட, அருகே பால் மார்ஷலின் வருங்கால மனைவி என்று லோலாவையும் காட்ட இவளுக்கு  தட்டாமாலை சுற்றுகிறது.

வர்கள் இருவரின் திருமணம் நடக்கும் தேவாலயம் சென்றவள்,அங்கே மணப்பெண் உடையில் லோலாவையும் பால் மார்ஷலையும் பார்க்க ,அவர்கள் வசதியாக முகத்தை  திருப்பிக் கொள்கின்றனர். இவள் செய்வதறியாது திகைக்கிறாள். அப்போது தான் தான் படகுத்துறையில் வைத்து லோலாவை கற்பழித்தது பால் மார்ஷல் எனவும், அவளின் இசைவின் படியே இருவரும் புணர்ந்ததும் தெரியவருகிறது.

வெடித்து அழுகிறாள்,ஒரு அப்பாவியை போலீஸில் மாட்டி விட்டு அவன் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே!!!! என பதறி துடிக்கிறாள், தன் அக்காவின் பன்றிகள் மேயும் அழுக்கான வாடகை வீட்டுக்கு விரைகிறாள். அவளின் முரட்டுத்தனமான வீட்டு உரிமையாளர் பெண்மணி,சிசிலியாவை கத்தி அழைக்க, சிசிலியா எதிர்ப்பட்டு  இவளை வாசலிலேயே பேசி வழி அனுப்ப பார்கிறாள்.

வள் நான் உனக்கு கடிதங்கள் எழுதினேன், அதற்கு பதில் வரவில்லை, உன்னுடன் பேச வெண்டும் என கெஞ்சி உள்ளே நுழைகிறாள்.அவளிடம்,அன்று லோலாவை கற்பழிப்பது போல தான் கண்டது ராப்பியை அல்ல என்கிறாள்.

ங்கே உள் அறையில் இருந்த ராப்பி வெளியே வருகிறான். நீ என்ன செய்கிறாய் இங்கே? எனக்கேட்டவன் உனக்கு என்ன வயசாகிறது? ஒரு உண்மையை உன் உள்ளம் உணர உனக்கு ஐந்து வருடம் கேட்கிறதா? சிறை என்றால் எவ்வளவு கொடியது என தெரியுமா? போர்க்களம் எவ்வளவு கொடியது என தெரியுமா? ஐந்து வருடங்களுக்கு முன் உனக்கு சரியாய் தெரிந்த ஒன்று இன்று தவறாய் தெரிகிறதா? பதினெட்டு வயதில் பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து போர்களத்தில் செத்து மடிகின்றனர். என எரிந்து விழ.

வள் அன்று லோலாவை கற்பழித்தது பால் மார்ஷல் என சொல்ல,சிசிலியா குறுக்கிட்டு உன்னை நம்ப முடியாது என்கிறாள். இது சத்தியம், பால் மார்ஷல், லோலா-அவர்கள் திருமணம் இப்போது தான் முடிந்தது என சொல்லி அழ, ராப்பியும் சிசிலியாவும் வெறுப்படைகின்றனர்.

னி அவர்கள் இருவரும் கணவன் மனைவி,இந்த வழக்கு நிற்காது.எல்லாம் வீண்!!! என சொல்ல. இவள் வெடித்து அழுகிறாள்.இவ்வளவு நாள் அங்கு வேலை பார்த்த பணியாள் டேனி என்பவன் தான் இதை செய்திருப்பான் என இருவரும் நினைத்திருந்தோம் என்கின்றனர்.

வர்கள் அவளை வீட்டை விட்டு வெளியே போ !!! என சொல்லியும் அங்கேயே அமர்ந்து இவர்கள் இருவரையும் கண்ணீருடன் கெஞ்சுகிறாள். மனமிறங்கிய ராப்பி, நடந்த விபரங்கள் அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி கையொப்பமிட்டு வா. அதை வைத்து என் தண்டனையை குறைக்க வழிபார்ப்போம், எனக்கு நாளைக்கே  மீண்டும் போர்க்கள பயணம் இருக்கிறது , என சொல்லிவிட்டு கதவை மூடிக்கொண்டு,சிசிலியாவை ஆரத்தழுவி கூடல் செய்கின்றான். கனத்த மனதுடன் கீழே இறங்கிச் சென்றவள் தெருவில் நின்று கண்ணீர் விடுகிறாள். அவனின் போன வாழ்வு இனி வராதே!!!என மனம் புழுங்குகிறாள்.
பாகம்:-3.4
வருடம் 1999

ப்போது 79 வயது ப்ரையானி தொலைக்காட்சிக்கு நேர்முக பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறாள், திடுமென தான் விரைவில் ஓய்வு பெறப்போவதாய் அறிவித்தவள், சிறிது அனுமதி வாங்கி தன் நோய்க்கு மாத்திரை சாப்பிட்டுவிட்டு வந்து பேட்டியை தொடர்கிறாள். இவளின் வெளிவரப்போகும் அடோன்மெண்ட் என்னும்  21ஆவது நாவலே இவளின் இறுதி நாவலும் கூட என்கிறாள். தனக்கு வாஸ்குலர் டிமென்ஷியா என்னும் நோய் இருப்பதால் நினைவுகளும், வார்த்தைகளும் மறந்துபோகிறது அதுவே இவளின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறாள்.

ருவிதத்தில் இந்த நாவல் தான், தன் முதல் நாவலாய் இருந்திருக்க வேண்டும் என்கிறாள். தன்னுடைய பெயரையும் சேர்த்து இக்கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களுமே நிஜம் என்றும், இவள் சிறு பருவத்தில் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அதற்காகவே இந்த நாவலை நிஜப்பெயர்களுடன் வெளியிட்டு பரிகாரம் தேடுகிறேன் என்கிறாள்.

மேலும் நாவலில் சொன்னது போல இவள் ராப்பியையும் சிசிலியாவையும் சந்தித்து மன்னிப்பு கேட்கவே இல்லை என்கிறாள், ஏனென்றால் ராப்பி ஜனவரி10,1940 அன்று தூக்கத்திலேயே செப்டிஸ்மியா என்னும் நோய் கண்டு இறந்துவிட்டான் என்றும், அவன் இறந்த சில மாதங்களிலேயே அவனின் பிரிவால் வாடிக்கொண்டிருந்த சிசிலியா, பல்ஹாம் என்னும் பாதாள ரயில் நிலையத்தில் நிறைய மக்களுடன் பதுங்கியிருக்கும் போது  ஜெர்மானிய ராணுவம் போட்ட ஆகாய வெடிகுண்டினால் ,தண்ணீர் குழாய்கள்  உடைந்து ரயில் நிலையம் முழுவது  நீர்  புகுந்து இறந்துவிட்டாள். என்றும் சொல்கிறாள்.

டிப்படியாக இந்த விபரங்களை சேகரித்தவள். வாழ்நாள் முழுவதும் இவர்களை ஒன்று சேரமுடியாதபடிக்கு செய்துவிட்டோம் என்ற  குற்ற உணர்வால் வாடி வந்திருக்கிறேன். என்கிறாள். எனவே தன் நாவலின் நான்காம் பாகத்தில், சேராமல் போன இளம் காதலர்களை சேர்த்து வைத்திருக்கிறேன்.என கேவிக்கொண்டே முடிக்கிறாள்.
பாகம்:-4
சிசிலியா தந்த வாழ்த்து அட்டையில் இருந்த அதே கடற்கரையும் பச்சை மலைத்தொடரும் கூடும் இடத்தில் அமைந்த அழகிய வீட்டில், இப்போது ராப்பியும் சிசிலியாவும் உல்லாசமாய் வசிக்கின்றனர்.ஐந்து வருடம் அடக்கி வைத்திருந்த காதலை கடற்கரையில் ஓடியாடியபடி ஆரத்தழுவியும் முத்தங்கள் பரிமாறிக்கொண்டும் மீட்டெடுக்கின்றனர். என ப்ரையானி  கிழவி சப்பைக்கட்டு கட்டி கதையை முடிக்கிறார். படம் முடிந்ததும் அக்காதலர் அனுபவித்த சொல்லோனாத்துயரம் நம் கண்களில் வந்துபோகத் தவறாது.

து போல இன்னொரு படம் பார்க்கும் வரை இதன் தாக்கம் அடங்காது!!!அந்த பிரமிப்பூட்டும் காட்சிகளும்,ஆர்ப்பரிக்கும் இசையும். அந்த டைப்ரைட்டர் பொத்தானகள் தட்டப்படும் ஓசையை வைத்தே இந்த படத்திற்கு தீம் மியூசிக் வைத்த இசைஅமைப்பாளர் டரியோ மரியனெல்லியையும், பியானிஸ்ட் ஜேன் இவாஸ் திபாடெட்டையும் அணைத்துக்  கொள்ளத் தோன்றுகிறது.

தில் சிசிலியாவாக வந்த ப்ரைட் அண்ட் ப்ரிஜுடிஸ்,டச்சஸ்,டோமினோ புகழ் கெய்ரா நைட்லி தான் ஒரு கைதேர்ந்த நடிகை என மீண்டும் நிரூபித்தபடம். இதில் ராப்பியாக வந்த லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லாந்தில் டாக்டர் கேரிகனாய் நடித்த ஜேம்ஸ் மெக் எவாய் ,மீண்டும் தன் சிறந்த உழைப்பை நமக்கு ஈந்துள்ளார். இவர் பேசாத காட்சிகளில் இவரின் நீலக்கண்கள் பேசுகின்றன. இது வரை இவரை கவனிக்கவில்லை எனில் இனியாவது தொடர்ந்து கவனியுங்கள்.  13 வயது ப்ரயானியாக வந்த சிறுமி சாயர்ஸ் ரொனான் நடிப்பு அபாரம், அய்யோ!!! சரியான வில்லத்தனம், என்னவொரு? அழுத்தக்காரி வேடம், இன்னும் கூட இவர் மேல் வெறுப்பு அகலவில்லை. அப்படி மனதில் பதிந்துள்ளார்.
=======================================

மல்ஹால்லண்ட் ட்ரைவ்-இயக்குனரின் 10கேள்விகளும் விடைகளும்என்னும் பதிவின் இறுதியில் டிவிடியில் இருந்த யக்குனர் டேவிட் லின்ச்சின் தினாவெட்டான 10 கேள்விகள்,கொடுத்து மறு நாள் விடைகள் எழுதுவதாய் சொல்லியிருந்தேன்,அதை நான் மறந்திருந்தாலும் தல ஹாலிவுட் பாலா மறக்கவில்லை, எங்கே பார்ட் -2 என்று கேட்டார், உடனே எனக்கு டர்ரானது, கிடைத்த இடைவெளியில் இதோ அதற்கான விடைகளையும் எழுதி விட்டேன். தயவு செய்து படம் பார்த்தவர்கள் அல்லது சென்ற பகுதியை படித்தவர்கள் மேற்கொண்டு தொடரவும்.சென்ற பதிவை படிக்காதவர்கள் மேலே உள்ள சுட்டியில் முதல் பகுதியை படித்து விட்டு தொடரவும்.நன்றி வணக்கம்.


படத்தின் இறுதியில் கேட்கப்பட்ட 10 கேள்விகள்:-
 

1. Pay particular attention in the beginning of the film: At least two clues are revealed before the credits.
1.படத்தின் துவக்க பெயர் போடும் காட்சியில் இந்த10கேள்விகளுக்கான 2 விடைகள் ஒளிந்துள்ளன?அவை என்ன?
யக்குனர் ஆடம் கெஷர் நடிக்க வந்த மாடல் அழகிகளை நேர்முகத்தேர்வு செய்யும் காட்சி அப்ஸ்ட்ராக்ட் வடிவத்தில் திரையில் வரும். அங்கே  இளம்பெண் தூங்குவதையும் ,வயதான தம்பதியரின் அவுட்லைனையும் காண முடியும்.

2. Notice appearances of the red lampshade.
2.சிகப்பு லாம்ப் ஷேட் படத்தில் எந்தெந்த காட்சிகளில் வருகிறது?
டத்தின் ஆரம்ப காட்சியில்  வில்லனகள் மாற்றி மாற்றி போன்செய்து அந்த பெண்ணை இன்னும் காணவில்லை,என்பர்,அப்போது ஒரு ஆள் எதோ ஒரு வீட்டிற்கு போன் செய்வார் . அப்போது போனுக்கு அலறும் அருகில்  பெரிய ஆஷ் ட்ரேயும் அருகே சிகப்பு லாம்ப் ஷேடும் இருக்கும்.
யான் காணும் கனவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் ஜன்னல் வழியாக உள்ளே நுழைவர்,படுக்கை அறையில் அந்த பெண் அழுகிய நிலையில் பிணமாய் இருப்பாள்,அவள் அருகே அந்த லாம்ப் ஷேட் இருக்கும்.
பின்னர் கிளைமாக்ஸில் இவளின் முன்னாள் அறைத்தோழி வந்து சில பாத்திரங்கள்,பெரியாஅஷ்ட்ரே மற்றும் சிகப்பு லாம்ப் ஷேடை எடுத்துச் செல்வாள்.


3.Can you hear the title of the film that Adam Kesher is auditioning actresses for? Is it mentioned again?
3.இயக்குனர் ஆடம் கெஷர் இயக்கும் படத்தின் பெயர் என்ன? அது படத்தில் மீண்டும் சொல்லப்படுமா? (தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி:- ஹாலிவுட் பாலா)
ஆடம் கெஷர் இயக்கும் படத்தின் பெயர் "The Sylvia North Story."படத்தில் கிளைமாக்ஸில் வரும் டின்னர் பார்டியில் அந்த படத்தைப் பற்றி டயான்,அதில் லீட் ரோலில் நடிக்க இருந்த வாய்ப்பு பறி போய்விட்டது என்பாள்.


4. An accident is a terrible event — notice the location of the accident.
4.அந்த கொடிய விபத்து நினைவிருக்கும்.அது எங்கே நடந்தது?
ஆம் அது கொடிய விபத்து தான் , அது நடந்த இடம் மல்ஹால்லாண்ட் ட்ரைவ் ஆகும்

5. Who gives a key, and why?
5. யார் சாவியை கொடுத்தது?ஏன் கொடுக்கப்பட்டது?
ஜோ என்பவன் மிகவும் ப்ரொஃபெஷனலான வாடகை கொலைகாரன்
இவள் தோழியை கொலைசெய்ய பணம் வாங்குகையிலேயே , கொல்லப்படப்போவது இவள் தோழி ஆதலால் இவளின் டெலிபோன் கால் ஹிஸ்டரியை டிடெக்டிவ்கள் சோதிக்கக்கூடும் என்ற முன் யோசனையுடன் ,ஒரு சிறிய நீல நிற பெட்டியை அட்வான்ஸ் வாங்கும் போது தருகிறான் .   

அந்த சாவி இவள் கனவு காண்கையில் கிளப் சைலன்சியோவில் இவள் கைப்பையில் வைக்கப்படுகிறது.
கிளைமாக்ஸில் அதே சாவி டயான் தூங்கி எழுந்ததும் கதவு வின்னியால் கதவு தட்டப்பட இவளின் டீப்பாயின் மேல் வைக்கப்பட்டிருக்கிறது.


6.Notice the robe, the ashtray, the coffee cup.
6.படத்தில் இரவு உடை, ஆஷ் ட்ரே, காபி கப் வரும் காட்சியை கவனித்தீர்களா?
ஆம்.
இரவு உடை :- யான் இவள் தூக்கம் கலைந்து விழிக்கையிலும்.ஒரு உள்ளே பூட்டிய விட்டில் கொலையான பெண் அணிந்திருந்த இரவு உடையும், கனவு காட்சியில் ரீட்டாவும் பெட்டி எல்மும்
லெஸ்பியன் உறவு கொள்வர்,அப்போது ரீட்டா அவிழ்க்கும் இரவு உடையும் ஒன்றே.
காபி கோப்பை & ஆஷ் ட்ரே :- டத்தில் முதல் காட்சியில் ஆடம் கெஷரை ஸ்டுடியோஹெட்டின் அடியாட்கள் இருவரில் ஒருவர் எக்ஸ்ப்ரெஸ்ஸோ காபி குடித்து , முகத்தை சுளித்துவிட்டு முறைத்து மிரட்டுவார்.அவர் குடித்த கப்பும்.அவரின் மேசை மீது இருந்த ஆஷ் ட்ரேயும்.
படத்தின் துவக்கத்தில்  ரெஸ்டாரண்டில் ஆண்கள் இருவர் சந்திப்பர்.அவர்கள் பருகும் காபி கப்பும்.
டத்தின் கிளைமாக்சில் ஜோவும் டயானும் சந்திப்பர்.அவர்கள் பருகும் காபி கப்பும்.ஒரே மாதிரியானவை.

டத்தின் ஆரம்ப காட்சியில்  வில்லனகள் மாற்றி மாற்றி போன்செய்து அந்த பெண்ணை இன்னும் காணவில்லை,என்பர்,அப்போது ஒரு ஆள் எதோ ஒரு வீட்டிற்கு போன் செய்வார் . அப்போது போனுக்கு அலறும் அருகில்  பெரிய ஆஷ் ட்ரே சிகப்பு லாம்ப் ஷேடுக்கு அருகே இருக்கும்.


7. What is felt, realized, and gathered at the Club Silencio?
7.சிலன்ஷியோ என்னும் கிளப்பில் இவர்கள் என்ன கண்டனர்,இவர்களுக்கு
என்ன கிடைத்தது?
கனவில் நடந்த சம்பவம் இது
ரீட்டா அரைத்தூக்கத்தில் சிலன்ஷியோ என்கிறாள்,அது ஒரு புதிருக்கான விடையாக இருக்கும் என எண்ணிய  பிட் எல்ம் ரீட்டாவை சிலன்ஷியோ என்னும் ஸ்பானிஷ் நைட் கிளப்பிற்கு அழைத்துபோகிறாள்.
அங்கே ஸ்பானிஷில் ஒபேரா போன்ற இசையை கேட்டு மெய்மறந்து இருவரும் கைகளை பிணைத்துக்கொள்கின்றனர்.பாடல் முடிந்தவுடன் கைப்பையை பார்க்க அதில் நீல நிற பெட்டி இருக்கிறது. அதை அங்கேயே திறக்காமல்,விட்டுக்கு வந்து பிட் எல்ம் திறக்கிறாள்


8. Did talent alone help Camilla?
8.கமீல்லா ரோட்ஸ் பெரிய நடிகையாக அவளின்
திறமை மட்டும் உதவியதா?
நிச்சயமாய் இல்லை, முன்னொரு சமயத்தில் டயானுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்பு  ஸ்டுடியோ ஹெட்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் உச்சமான சிபாரிசால் கமீல்லா ரோட்சுக்கு கிடைத்தது.

(அந்த சம்பவம் தான் டயான் கண்ட கனவில் பிரதிபலித்தது) அதுவும் தவிர கமீல்லா ஆடம் கெஷெரிடம் வைத்திருந்த உடல் தொடர்பும் அவளுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.இந்த குற்ற உணர்வால்
தான் கமீல்லா டயானுக்கு சிறிய சிறிய வேடங்களை சிபாரிசு செய்து பெற்று தந்து வந்திருக்கிறாள்.


9. Note the occurrences surrounding the man behind Winkie's.
9.வின்கி என்னும் உணவகத்தில் ஒருவன் பேய் போன்ற உருவத்தைக் கண்டு மூர்ச்சையாகிறானே? அவன் வேறு எங்கெல்லாம் எதிர்படுகிறான்.
ந்த ஆண் ,டயான் கமீல்லாவின் மனமாற்றத்தால் மனமுடைந்து வாடகை கொலைகாரன் ஜோவை வின்கி என்னும் உணவகத்தில் சந்திக்கிறாள்,தீர்த்துகட்டுவதற்கு கமீல்லாவின் போட்டோவைத் தருகிறாள், ஜோ அதை புறந்தள்ளி இதை எல்லாம் இங்கே எடுத்துவரவேண்டியதில்லை என்கிறான். அப்போது இவள் பதட்டத்தில் சர்க்கரை ஜாடியை கைதவறி தட்டிவிட உணவகமே திரும்பிப்பார்க்கிறது, அப்போது கேஷ் கவுண்டரில் நின்றிருந்த மேலே சொன்ன ஆண் இவளை பார்வையாலேயே அளவெடுக்கிறான்.


ஜோ டயானினிடம் கமீல்லாவின் போட்டோவை உணவகத்தின் பின்னே இருக்கும் ஒரு அகோர உருவத்திடம் கொடுத்துவிடச் சொல்ல,அந்த அகோர உருவம் அதை பார்த்துவிட்டு எரிக்கிறது.அப்போது அந்த நெருப்பில் ஒரு முதிய ஜோடிகளின் உருவமும் எரியும் (அதில் இவளை ஏர்போர்டில் வாழ்த்தி அனுப்பிச் சென்ற தாத்தா பாட்டியின் நல்ல குணநலன்களும், பண்புகளும் சேர்ந்தே எரிவதாக இயக்குனர் காட்சிகளை ஜோடனை செய்திருப்பார்)


10. Where is Aunt Ruth?
10.சித்தி ரூத் எங்கே?
தாயிழந்த டயானுக்கு பரிவும் பாசமும் காட்ட தாத்தா பாட்டியும், வாழ்வில் நடிகையாவதற்கு ரோல்மாடலாக சித்தி ரூத்தும் இருந்தனர்.இவள் ஹாலிவுட்டுக்கு நடிக்க வந்த கொஞ்ச நாட்களிலேயே


சித்தி ரூத் இறந்து விடுகிறாள்.வாரிசு இல்லாத ரூத் இறக்கும் போது அவளின் வாழ்நாள் சேமிப்பான 50000$ இருக்க அதை டயான் அனுபவிக்கிறாள்,அதில் தான் வாடகைக்கொலைகாரன் ஜோவிற்கு கமீல்லாவை கொலை செய்ய பணம் தருகிறாள்.

(கிளைமேக்ஸ் காட்சியில் சித்தி இறந்த விஷயத்தை டின்னர் பார்ட்டியில் வைத்து ஆடம் கெஷரின் அம்மாவிடம் சொல்லுவாள்)
 ========================================

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)