இதா இவிட வரே (இதோ இங்கு வரை)|1978 | மலையாளம் | P.பத்மராஜன்












பப்பேட்டா என்ற பி.பத்மராஜன் கதை, திரைக்கதை எழுதி ஐ.வி.சஸி இயக்கிய படங்களுக்கு ஒரு ப்ரத்யேகதை உண்டு,வணிக அம்சங்கள் கலந்திருந்தாலும் ஒரு  அபாரமான எளிமையின் அழகியல் பொதிந்த கலைப்படைப்பாக அவை மிளிரும்.

இதா இவிட வரே படத்தின் திரி ப்ரதிகாரம் தான் ,அதாவது பழிவாங்குதல் ,இது விஸ்வநாதனின் ப்ரதிகாரம், பப்பேட்டாவின் vengeance எப்போதும் அதிரவைப்பது,  தனித்துவமானது, இக்கதை பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடு என்னும் பாணி பழிவாங்குதல் கொண்டது.,இது பப்பேட்டா கதை எழுதி மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்ற இதா இவிட வரே (இதோ இங்கு வரை)|1978

பழிக்குப் பழி வாங்கியவனை அவன் மனசாட்சி கூட இறுதியில் மன்னிக்காது என்ற கூற்றை பலமாக முன்வைப்பவை பப்பேட்டாவின் கதைகள் , அவரது பெருவழியம்பலம், கரிம்பின்பூவின்அக்கரே துவங்கி பழிவாங்க அலைபவனின் மனசாட்சியை  நுணுக்கமாக அணுகிய படைப்புகள், இதா இவிட வரே திரைப்படம் கூட அப்படி ஒரு Non linear பாணி முத்து.


இப்படத்தின் போஸ்டர் தனித்துவமானது, எங்கள் பல்லாவரம் தேவி (ஜனதா)தியேட்டரில் ஒவ்வொரு வெள்ளியும் திரையிடும் படங்களுக்கு சாவடித் தெருவில் தெரு துவக்கத்திலும் முடிவிலும் கருப்பு வெள்ளை,வண்ணப் போஸ்டர்கள் ஒட்டுவார்கள், அதில் அனேகம் ஐ.வி.சசி இயக்கிய மீள் வெளியீட்டு திரைப்படங்களாகவே இருக்கும்,காரணம் பத்து மடங்கு கச்சவடம் தான்.

அப்போஸ்டர்களில்  A என்ற வாசகம் பெரிதாக இளைஞர்களை ஈர்க்கும் படி இருக்கும் , அப்படி ஒட்டிய போஸ்டர்களில் இந்த நடிகை ஜெயபாரதி முதுகு தெரியும்படியான போஸ்டர் எனக்கு மறக்கமுடியாதது, 

அப்படித்தான் இயக்குனர் ஐவி.சசி என் மனதில் பதிந்தார் , ஆனால் எப்படிப் பட்ட ஒரு படைப்பை  எப்படி தவறாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர்,
எத்தனை பேர் பப்பேட்டாவின்   படைப்புகளுக்கு உரிய மரியாதையைத் தந்தனர் என்ற ஐயம் எனக்கு உண்டு,  அவரின் படைப்புகளுக்கான சரியான மதிப்பீட்டை  என்னால் தாமதமாகவே அவருக்குத் தர முடிந்தது.


இதா இவிட வரே படைப்பு சினிமா ஆர்வலர்களால் மிகவும்  கொண்டாடப்பட்டது இப்படைப்பில் நான் ரசித்ததை இயன்ற வரையில் இங்கு ஆவணப்படுத்தியுள்ளேன்.


இனி கதைக்குள் பயணிப்போம், விசுவநாதன் (M.G.சோமன்)என்ற ஓவியன் வயநாட்டின் அந்த அழகிய காயல் கிராமத்திற்குள் விடியலில் வருகிறான், ஜீன்ஸ் கால்சராயும் ஜீன்ஸ் சட்டையும் , நளினமான சப்பாத்துகளும் அணிந்திருக்கிறான், 
அங்கு அரைத்தூக்கத்தில் இருந்த கட்டுமஸ்தான  படகுக்காரனை எழுப்பி (ஜெயன்)  போகலாமா? எனக் கேட்கிறான், அவன் எங்கே போகனும்?  என்று கேட்க ,  இதா இவிட வரே  என்று அக்கரையைச் சுட்டுகிறான்.இது போல படத்தில் நான்கு இடங்களில் இந்த இடம் சுட்டுதல் வருகிறது.
அக்கரை காயல் கிராமத்தில்  படகுக்காரன்  நன்கு பழகிவிட்ட விஸ்வநாதனுக்கு நல்ல தேநீராக வாங்கித் தந்து நட்பாகிறான், 
அங்கு விஸ்வநாதன் முகத்தில் அந்த காயல் கிராமத்தின் பரீட்சயம் நன்கு தெரிகிறது, நெடுங்காலம் கழித்து தாய் மண்ணை மிதித்த திருப்தி அது, அவன் தாய் கமலாட்சியின் குரல் அவன் காதில் மட்டும் கேட்கிறது.


அங்கு சில நாட்கள் தங்க வீடு கிடைக்குமா? என்று ஆவலுடன் கேட்கிறான் , அவ்வூரின் வேலை வெட்டியில்லாத , சிறு சிறு பொய்கள் பேசி களவுகள்  செய்யும் நாணு (அடூர் பாஸி )வீடு பிடித்துத் தர ஆர்வமாகி முன் வருகிறான்,
 உடனே சென்று அங்கு முப்பது வருடங்களாக பூட்டிக்கிடக்கும் கணவன் மனைவியாக கொலையானோரின் விட்டுச் சாவியை அவ்வீட்டருகே வசிக்கும் சங்கரி என்ற வாழ்ந்து கெட்டு சோரமும் போனவளிடமிருந்து  வாங்கி வருகிறான், 


ஐம்பது ரூபாய் வாடகையாவது உனக்கு வாங்கித் தருகிறேன் என்று  அவளுக்கு ஆசை காட்டுகிறான், அவள் பணம் என்றதும் காணாதது கண்டது போல கிடந்து அலைகிறாள்.
கையோடு விஸ்வநாதனை அந்த பாழடைந்த ஓட்டு வீட்டுக்கு கூட்டிப்போய் விட்ட நாணு, காபி வாங்கி வர ஃப்ளாஸ்கை எடுத்துப் போகிறான், அப்போது முப்பது வருடங்களுக்கு முந்தைய நினைவுகளில் மூழ்குகிறான் விஸ்வநாதன்.

இவர் தந்தை படகுக்காரன் வாசு அந்த வயநாட்டு காயலின் பெரிய பயணிகள் படகின் ஓட்டுனர்,  நல்ல சம்பளம் வாங்குபவர், தினமும் மீன், கறி , சாராயம் ,இரண்டு மனைவிகள் ,அதுவும் ஒரே வீட்டில்  வசிக்கும் அக்கா தங்கை சக்களத்திகள் என்று தினம் ராஜபோகம் அனுபவிக்கிறார்.

அவரின் கூடாநட்பாக வாத்துகள் மேய்க்கும் முரடன் பய்லி ஆசான் (மது) அண்டை வீட்டில் வசிக்கிறான்,ஆசான் என்றால் அனுதினம் குடித்து விட்டு குஸ்தி போடுவதால் வைத்திருக்க வேண்டும், 

தினமும் அந்தியில் வாத்துகளை கூடடைத்துவிட்டு வாசு வீட்டில் பய்லியும் அவன் அண்ணன் வக்கச்சனும் (பகதூர்) நடு நிசி வரை சாராயம் குடித்து இறைச்சி சாப்பிட்டு கும்மாளம் அடித்துவிட்டுச் செல்வதைப் பதிவாக வைத்திருக்கின்றனர்,

இதற்கு கறி மீன் பொறித்துத்  தந்து கிளாஸில் சாராயம் சோடா  பக்குவமாக ஊற்றி கலந்து  தருவது வாசுவின் சின்னப் பெண்டாட்டி சங்கரி, 
இந்த கெடுபழக்கம் சங்கரிக்கும் பைலி ஆசானுக்கும் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது, இரண்டாமவள் சங்கரி (ஸ்ரீலதா) பார்க்க அழகாக தள தளவென இருப்பதால் வாசுவுக்கு எப்போதும் அவள் மீது தான் அதிக மையல், 

தன் மூத்த மனைவி கமலாட்சி (கவியூர் பொன்னம்மா ) மீது அன்பு இருந்தாலும் காதல் மட்டும் இல்லை,வாசுவின் பிரியமுள்ள ஒற்றை மகன் விசுவநாதனுக்கு அவள் தாய் என்பதால் இன்னும்  இங்கே பிழைத்து கிடக்கிறாள், 

கணவன் மதிக்காத மனைவியாதலால் அவளை தங்கை சங்கரி அவளை மதிப்பதேயில்லை, அவள் அறியவே சங்கரி மற்றும் பைலிஆசான் சரச லீலைகள் பகலில் மூத்தவள் காயலில் குளிக்கப் போகையில் இனிதே வீட்டுக்குள் அரங்கேறுகிறது,
அது போல ஒரு அசந்தர்ப்பத்தில் சிறுவன் விஸ்வநாதன் உள்ளே தாழிட்ட கதவைத் வேகமாய் தட்டுகிறான், அங்கே இவர்களின் சல்லாபம் கலைந்து, கதவு திறக்கப்பட்டு பைலி ஆசான் வெளியே வந்து அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு வெளியேறுகிறான்.

சின்னம்மா சங்கரி சிறுவனிடம் பைலி ஆசான் பீடிக்கு நெருப்பு கேட்டு வந்தவன் எதிர்பார்க்காத போது கதவை உள்ளே தாழிட்டான் என்றும், நல்ல வேளை நீ வந்தாய், உன் அம்மா வந்திருந்தால் அப்பாவிடம் வத்தி வைத்து பெல்டால் மரண அடி வாங்கித் தருவாள் என்று அவனை வார்த்தைகளால் குளிர்விக்கிறாள், விஸ்வநாதன் இன்றிரவு தந்தை வந்ததும் இதை நிச்சயம் சொல்வேன் என்று முகத்தை திருப்பிக் கொள்கிறான். 

இரவு சிறுவன் தந்தையிடம் சொல்லும் முன் அவளே சென்று பைலிக்காரன் பீடிக்கு நெருப்பு கேட்க வந்தவன் கதவை சார்த்தி என் கையை பிடித்துவிட்டான் என அழுதவள், அப்போது அக்கா கமலாட்சி குளிக்கப் போயிருந்தாள், விஸ்வநாதன் இதற்கு சாட்சி என்று கயிறு திரிக்கிறாள்,
நீ குளிக்கப் போயிருந்த போது இது நடந்தது  உண்மையா? என்று கமலாட்சியைக் கேட்க, இது என்ன பிரமாதம் நான் வீட்டில் இருந்தாலும் இது நடந்திருக்குமே, இவர்கள் தான் என்னை பொருட்டாகவே மதிப்பதில்லையே, இதை நீங்கள் முன்பே யோசித்திருக்கனும், என்று குத்துவாக்கு கூறுகிறாள்,

இதை தாங்கிக் கொள்ள முடியாத வாசு பெல்டால் மனைவி கமலாட்சியையும் அடித்துவிட்டு, தன் கட்டாரியை எடுத்துக் கொண்டு கருவியபடி பாலத்தின் குட்டைச்சுவரில் பய்லிக்காரனுக்கு காத்திருக்கிறார், அந்தி சாய்கையில்  பைலிகாரனும் அவன் அண்ணன் வக்கச்சனும் வாத்துகளை கூடடைக்க மேய்த்து வருகின்றனர், வக்கச்சன் மூத்தவர் என்றாலும் சாது, நயவஞ்சகமற்றவர், தன் கட்டுக்கடங்காத தம்பியை பல சந்தர்ப்பத்தில் திருத்தமுடியாமல் தோற்ற வியக்தி.

கோபமாக முறைத்தபடியிருக்கும் வாசுவிடம் பைலி தோளில் கை வைத்து என்ன கோபம் உனக்கு?  எனக் கேட்டது தான் தாமதம்,வாசு கட்டாரியுடன் பாய்கிறார்,  இருவருக்கும் கடும் சண்டை நிகழ்கிறது, பாலத்தினடியில் நீரில் வைத்து கடும் சண்டை,  மூர்க்கமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள, வக்கச்சன் எத்தனை விலக்கிவிடப் பார்த்தும் முடியவில்லை,

மழை கொட்டத் துவங்குகிறது,  சிறுவன் விஸ்வநாதன் இந்த கடும் சண்டையை கண்ணுற்றவன் தாயை ஓடிப்போய் அழைத்து வருகிறான், அங்கே கமலாட்சி இருவரையும் தடுக்க தைரியமாக உள்ளே புகுந்து போராடுகிறாள், வாசுவின் கத்தி பைலியால் பறிக்கப்படுகிறது, அங்கே பைலியின் கைக்கு கோடாரி கிடைக்கிறது,

 ஆவேசத்தின் உச்சத்தில் பைலி வாசுவின் மனைவி கமலாட்சியை கழுத்தில் வெட்டிக் கொல்கிறான், தடுக்கப் பாய்ந்த கணவன் வாசுவையும் கழுத்தில் வெட்டிக் கொல்கிறான், சிறுவன் பைலி அங்கே உறைந்து நின்றவன் அங்கு ஒரு நொடி கூட நிற்க விரும்பாமல் எங்கோ ஓடி விடுகிறான், 
எங்கு சென்றான் எனத் தெரியவில்லை, பின்கதை எதுவும்  சொல்லப்படுவதில்லை,அப்படி ஓடியவன்  இதா இவிட வரே என்று இவ்வீட்டிற்கு மீண்டும் பிரதிகாரம் எடுக்க வந்து விட்டான்.

விஸ்வநாதன் மிக மெதுவாக ஆனால் தீர்க்கமாக  செயல்படுகிறான், பக்கத்து வீட்டில் வசிக்கும் விவசாயி சிவராமன் நாயர் ( சங்கராடி ) மகள் தங்கமணியை (விதுபாலா) இவனுக்குப் பிடிக்கிறது, அவளுக்கும் இவனைப் பிடிக்கிறது, இருவருக்கும் காதல் அரும்பினாலும், இவன் ஆற்றவேண்டிய கடமை இருப்பதால்  எதற்கும் அவசரப்படுவதில்லை, அவரிடம் சென்று பெண் கேட்பதில்லை, அடிக்கடி அவள் சிகப்பு ரோஜாவை இவன் வீட்டு எழுத்து மேஜையில் வைத்து ஒளிந்து நின்று பார்க்கிறாள்.

அவ்வூரில் காயல் கரையில் , வயல்வெளிகளில்  வைத்து பல ஓவியங்கள் வரைகிறான் விஸ்வநாதன், தங்கமணியிடமும் அவளை வரைய சம்மதம் கேட்கிறான், அதை விற்காமல் , தனித்திருக்கையில் பார்த்து ரசிப்பேன் என்கிறான்.அதே போலவே வரையவும் ஆரம்பிக்கிறான்.

இப்போது சாராயக்கடையில்  குடிக்கையில் அங்கே சிப்பந்தி வந்து உள்ளூர் வஸ்தாது பைலி ஆசானுக்கு நூறு மில்லி சாராயம் மாமுல் கேட்டதாகச் சொல்கிறான் , இவன் தர மறுக்க அங்கே இவன் எதிரே பெஞ்சில் வந்து அமர்ந்து,இது தான் இங்கே பதிவு, எனக்கு முதல் மரியாதை செய்தால் தான் நீ இங்கே குடிக்கலாம் என்ற பைலி, விசுவநாதனை சிவந்த கண்ணால் நோக்கி ஊடுருவி பயமுறுத்துகிறான் , 

சாராயக்கடையே அமளி துமளியாகிறது,முகங்கள் மறைந்து பார்க்கிறது,  விசுவநாதன் தனக்கு ஊற்றிய சாராய கிளாசை பைலி ஆசான் எடுத்து வாயருகே பருக கொண்டு செல்ல, அதை தட்டிவிட்டு உடைக்கிறான் விசுவநாதன், பைலி ஆசான் முதல் முறையாக மலைத்து உறைய, விசுவநாதன் எஞ்சிய சாராயத்தை தரையில் ஊற்றுகிறான், பைலி ஆசான் இப்போது ரத்தபலி ஆகும் என மிரட்ட,அப்படியென்றால்  உன் இடத்தில் ஆகட்டும், அங்கே நேரில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு காசை தரையில் வீசிவிட்டு அகல்கிறான்.

மறுநாள் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு பைலிஆசான் வீட்டிற்கு நேராக செல்கிறான் விசுவநாதன், அவனை எதிர்கொண்ட வக்கச்சனிடம், பைலியை சாராயக்கடை சண்டைக்கு நேருக்கு நேர் கண்டு வழக்கை தீர்க்க வந்ததாகச் சொல்கிறான் விசுவநாதன்.அங்கே பைலி ஆசானின் மகள் இளமை அழகு திமிரும் அம்மினியைப் பார்க்கிறான் விசுவநாதன், மனதிற்குள் வேறு விதமாக திட்டம் தீட்டிக்கொண்டு அங்கிருந்து அகல்கிறான். 

பைலி வந்தவுடன் இது என்னடா புது வம்பு இழுத்து வந்தாய் ,என்று விசுவநாதன் வந்த விபரம் சொல்கிறார் வக்கச்சன், இது வயசுப்பெண் உள்ள இடம், இனி தள்ளு முள்ளு வேண்டாம், அவனை நேரில் பார்த்து சமாதானம் பேசி வா என அனுப்புகிறார் .

பைலி ஆசான் விசுவநாதனின் வீட்டு வெளியே நின்று குரல் கொடுக்கிறான், விசுவநாதன் வெளியே வந்து அவனை நெடுநேரம் கண்ணால் முறைத்து மீண்டும் பயமுறுத்துகிறான், பைலியும் அசராமல் அங்கேயே நிலைகுத்தி  நிற்கிறான், 

இப்போது ஓங்கிக் குரலெடுத்து நட்புடன் சிரிக்கிறான் விசுவநாதன் ,பைலியும்  கைகொடுத்து அவன் தோளில் தட்டிச் சிரிக்கிறான், அதுமுதல் இருவரும் நட்பாகின்றனர், சாராயக்கடையில் அமர்ந்து மணிக்கணக்கில் குடிக்கின்றனர், காயலில் படகில் அமர்ந்து தான் சந்தர்ப்பவசத்தால் இரு கொலைகள் செய்து விட்டு 7ஆண்டுகள் சிறையில் கழித்துத் திரும்பியதை விவரிக்கிறான் பைலி, சலனமின்றி அமைதியாக கேட்கிறான் விஸ்வநாதன்.

பைலி சிறையில் இருந்து திரும்பியவன் மீண்டும் அண்ணன் வக்கச்சனுடன் இணைந்து வாத்து மேய்க்க மேற்கில் மழைமேகத்தைத் தொடர்ந்து போகிறான், அங்கே அழகிய கிராமத்தின் திருவிழாவில் வைத்து தந்தையில்லாத ஏழைப்பெண் ஜானுவை (சாரதா) பார்த்து எப்படியாவது அவளை அடைய ஆசைப்படுகிறான்,
இவனின் முரட்டுத்தனத்தையும் மீறி அவளுக்கு அவனை உள்ளூரப் பிடித்ததை அறிகிறான் பைலி, அவள் ஒரே சொந்தமான ஏழை சித்தியிடம் (மீனா) சென்று சந்தையில் வாத்துக்களை விற்ற பணத்தை விசிறிக் காட்டுகிறான், 

இரவு வீட்டிற்கு வருவேன் என்று சொன்னபடி வீட்டிற்கு வந்து விடுகிறான், ஜானுவை நான் ஏற்கிறேன் என்று சொல்லி பணத்தை அங்கே தரையில் பரிசமாக வைத்து விட்டு, அவள் அறைக்குள் சென்றவன், அவளைத் தழுவுகிறான், அவளுக்கு இனம் புரியாத பயமும், நாணமும், அந்த அழுக்கு முரடன் மீது பிரியமும் ஒருங்கே தோன்றுகிறது, அவள் மெல்ல பைலியை வரித்துக் கொள்ளத் துவங்குகிறாள், 
மறுநாள் விடியலில் பைலிக்கு அவசரப்பட்டு  முந்தியை விரித்தோமோ என்று அழுகிறாள் ஜானு, அவன் மடியில் முகம் புதைத்து அழுகிறாள், ஒரு மாதம் செல்கையில், மழை மேகங்கள் மேற்கில் வேகமெடுக்க, வாத்துக்களின் இனப்பெருக்கத்துக்கும் மேய்ச்சலுக்கும்  கால்நடையாக வாத்தின் பின்னால் போகும் நாடோடிக் கூட்டம் என்பது நினைவுக்கு வர, 

பைலி , ஜானுவின் அம்மாவிடம் ஜானுவை கிருத்துவராக மதம் மாற்ற பள்ளியில் அச்சனிடம் பேசனும், சொந்த பந்தத்துக்கு பேசனும் என்று சாக்கு போக்கு சொல்லியவன்,  ஜானுவை நான் கைவிடமாட்டேன்,
என்று வாக்குறுதி தந்துவிட்டு வாத்துக்கூட்டங்களின் பின்னால் செல்லும் வக்கச்சனுடன்  இணைந்து கொள்கிறான்.

மூன்று வருடங்களுக்குப் பின் அந்த காயல்கரை கிராமத்திற்கு மீண்டும் வரும் பைலி வீட்டின் கூடத்தில் பெண் குழந்தை விளையாடுவதைப் பார்க்கிறான், பைலியை வேகமாக தடுத்து நிறுத்திய ஜானுவின் அம்மா, எங்கே வந்தாய்? மகாபாவி என அக்கினிப்பிழம்பாய் வெடிக்கிறாள்.,

பைலி ஜானு எங்கே ? எனக்கேட்க ,ஜானு இந்த பெண்குழந்தையை பெற்று இறக்கியவள் ,குழந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல் இறந்து விட்டாள், உன்னை வருவாய்,வருவாய் என நம்பி நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்து மோசம் போனோம் என்கிறாள், உன் நிழல் கூட இங்கே விழக்கூடாது, வெளியே போ என்கிறாள்.பைலி குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க வெளியேறுகிறான், வீட்டில் சென்று அண்ணன் வக்கச்சனிடம் ஜானு பிள்ளைப்பேறில் இறந்த விஷயம் சொல்கிறான் பைலி, 

மறுநாளே மீனாவின் வீடு சென்ற வக்கச்சன் அவள் செலவுக்கு நூறு ரூபாய் தந்து விட்டு, நைச்சியமாகப் பேசி குழந்தை அம்மினியை தூக்கி வந்திருக்கிறார், இத்தனை நாள் இருவரும் கண்ணுக்கு கண்ணாக அம்மினியை ஊட்டி , போற்றி வளர்த்ததைச் சொல்கிறான் பைலி, அவள் எங்கள் சொத்து ,அவள் எங்கள் நிதி என்கிறான், அவளை மிகவும் உயர்ந்த ஒருவனுக்கு தான் கட்டிக்கொடுப்பேன் என்கிறான்.
இவ்வார்த்தை விஸ்வநாதனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த திருப்தியைத் தருகிறது.,

பின்னாட்களில் அம்மினியின் வாய்த்துடுக்கிற்கு தீனி போடுவது போல நிறைய வம்புகள் பேசி செல்லமாகச் சீண்டி தன் வழிக்கு கொண்டு வருகிறான் விசுவநாதன்.,
அன்று ஒருநாள் வக்கச்சனும் பைலியும் தன் வீடு வந்து பக்கத்து ஊர்  சந்தைக்கு வருந்தி அழைக்கையில் தனக்கு வேலை இருக்கிறது என்று பொய் சொன்னவன், அவர்கள் சந்தைக்கு புறப்பட்டு போனதை உறுதி செய்கிறான், 

பைலியின் வீட்டிற்கு செல்லும் வழியில் அம்மினியைப் பார்க்க,இருவரும் நெடுநேரம் பேசி கதைக்கின்றனர், அப்போது மழை ஆரம்பிக்க இருவரும் அவளின் குடிசைக்கு ஓடி விரைகின்றனர், அம்மினி உள்ளே சென்று கதவை வெறுமன சாத்திய படி உடைகளை மாற்றுகிறாள், அவள் பாவாடையை உயர்த்திக்கட்டி,முழு நிலவு போல  பளிங்கு முதுகை கதவுக்கு காட்டியிருக்க விஸ்வநாதன்  கதவு திறந்து உள்ளே அருகில் வந்து தழுவி அணைக்கிறான், கூதலுக்கு அவளுக்கு சுகமாக அவன் உடம்பு வெப்பம் மாறுகிறது,
அவன் முழுமையாக அம்மினியை ஆக்கிரமிக்கிறான், அவளின் பளிங்கு முதுகில் படரந்த சுருள் சுருளான நீண்ட  கேசத்துடன் ஈரப்பாவாடையை  உயர்த்திக் கட்டிய  அவளை முழுமையாக விசுவநாதன் ஆட்கொள்கிறான்,

அவள் தன் அம்மா ஜானு போல கூடல் முடிந்ததும் தன்நிலை உணர்ந்தவுடன் அழுவதில்லை , அத்தனை அகமகிழ்கிறாள், இந்த திருமணத்துக்கு முந்தைய கூடாக்காமத்தையும் சாதாரணமாகவே நினைக்கிறாள் அம்மினி,

இவன் தன்னை திருமணம் செய்வானா என எண்ணுவதில்லை, இவனை திருமணம் செய்யச் சொல்லியும் கேட்பதில்லை, அம்மினி கூடலில் ராசலீலையில் இவள் அப்பன் பைலி போல , இவளை  கர்ப்பமாக்கி கைவிட்டு இவள் அப்பனை விட்டு கால்பிடிக்க வைப்பேன் என்று விசுவநாதன் இருமாப்புடன் உறுதி பூணுகிறான்.

இந்த கூடல் காட்சியை ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு அவர்கள் விரசமின்றி அத்தனை அழகியலுடன் படமாக்கியிருந்தார், சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய நடிகை  ஜெயபாரதியின் அழகை இத்தனை பூரணமாக ஒரு படைப்பில் யாரும் கவர்ந்து வந்ததில்லை என்றே சொல்லலாம்.

மறுநாள் காலை சிவராமன் நாயர் விசுவநாதனிடம் வந்தவர் தன் மகள் தங்கமணிக்கு வரன் தகைந்திருப்பதாகச் சொல்கிறார், நாளையே திருமணம் ,மாப்பிள்ளைக்கு வயது கூடத்தான், என்ன செய்ய ?  இந்த வட்டாரத்தில் ஏழைப்பெண்ணுக்கு நல்ல வரன் கிடைப்பது அத்தனை எளிதல்ல, அவள் சம்மதத்தை கேட்டால்,அவள் மறுப்பாள்,எனவே நான் கேட்கவில்லை என்கிறார் சிவராமன் நாயர், 

மறுநாள் நெல்வயலில் ஓவியப் பலகையை வயல் வறப்பில் ஊன்றி  கசவுப் புடவை அணிந்த  தங்கமணியின் ஓவியத்தை சிரத்தையாக வரைகிறான் விசுவநாதன்,அவனை முகூர்த்தத்திற்கு அழைக்க வருகிறான் நாணு, 

இவன் ஓவியம் வரைய வேண்டும், பின்னர் வருகிறேன் என மறுக்கிறான், சற்று நேரத்தில்  பின்னணியில் காயலில் படகில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் நாதஸ்வரம் மேளம் முழங்க வருவதற்கும்   விஸ்வநாதன் வரையும் ஓவியத்தில் தங்கமணி கழுத்தில் பொன் தாலியை வரைவதற்கும் சரியாக இருக்கிறது,

 விசுவநாதனுக்கு இவ்வூருக்கு  வந்து நாளாகிறது புரிகிறது, முடிக்க வேண்டிய வேலை இன்னும் இருப்பது அவனை பயமுறுத்துகிறது.
சில வாரங்கள் கழித்து பைலி வீட்டுப்பக்கம் சென்று காயலில் அம்மினி நீந்திக் குளிப்பதைக் கண்டு தென்னம்பாலை பொருக்கு ஒன்றை  எடுத்து அவள் மீது எறிகிறான் விசுவநாதன், 

அவள் திரும்பிப் பார்க்க அருகே அழைத்தவன் அவளுக்கு வீட்டு விலக்கிற்கு நாள் தள்ளிப் போயிருக்கிறதா? என்று கேட்கிறான்,  அவள் இவனிடம் ஆமாம் என்று சீண்டி விளையாடியவள்  இவன் முகம் போன போக்கைக் கண்டு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை , நீ தைரியமாக இருக்கலாம் ,நான் உன்னை எந்த சூழலிலும் என் அப்பாவிடம் காட்டித் தரவேமாட்டேன் என்கிறாள்,  இது அவனுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது, 

மறுநாள் காலை நாணு  தலையைச் சொரிந்தபடி சங்கரி ஐந்து மாத வாடகை கேட்டதைச் சொல்கிறான், இவனுக்கு தன் சொந்த வீட்டிற்கு கண்ட தேவடிச்சிக்கும் வாடகை தர சிறிதும் இஷ்டமில்லை, தவிர இவ்வூருக்கு வந்து ஐந்து மாதமானதா ? என்ற உண்மையும் சுரீரென உறைக்கிறது.

உடனே காயலின் எதிர்கரைக்குப் போனவன், அங்கே வாத்துமேய்த்த படி எதிர்பட்ட அம்மினியிடம் தனிமையில் கதைகள் பேசி களித்திருக்கிறான், அவளை தன் இடத்திற்கு கூடலுக்கு  அழைக்கிறான், அவள் ஊரார் பார்த்து விட்டு அப்பனிடம் வத்தி வைப்பார்கள் என மறுத்தவள்  எங்கே உனக்கு தைரியம் இருந்தால் அந்திக்கு என் வீட்டிற்கு வாயேன் பார்ப்போம்  என்கிறாள் , அவளுக்குள் அதீத ஆசை கொப்பளிக்கிறது.

விசுவநாதன்  அந்திக்கு அவள் குடிசைக்குச் சென்றவன் அம்மினி வாத்துக்களை கூடடைத்து விட்டு உள்ளே வரக் காத்திருக்கிறான் , அங்கே பைலி  வெளியூருக்குச்  சென்றவன் இன்னும் வீடு திரும்பவில்லை,
இப்போது விசுவநாதனைத் தேடிக் கொண்டு நாணு இங்கே வந்து விடுகிறான், விஸ்வநாதனைத் தேடி ஒருவர் அவன் வீட்டுக்கு வந்திருப்பதாகவும், சாராயக்கடையில் காணாததால் இங்கு வந்து கேட்பதாகச் சொல்லிவிட்டுப் போகிறான்.

பெரியப்பா வக்கச்சன்  வாட்டும் குளிருக்கு கம்பளியை போர்த்தி தூங்கியே விட்டார், இப்போது இவர்களின் ராசலீலைகள் , ரதிமன்மதன் திருவிழா துவங்குகிறது, இந்த தருணத்தில் வரும் ராசலீலா பாடலை மிகுந்த ரசனையுடன் படமாக்கியிருப்பார் ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு,
ஒரு குச்சுக் கூரை , மண் சுவர் வீடு,அதன் மூங்கில் ஜன்னல் கிராதிகள் அதனூடே ஊறும் கேமரா இவர்கள் சாரைப் பாம்புகளாக பிண்ணி முயங்குவதை சிறைபிடிக்கிறது,  
கூடடைந்த வாத்துக் கூட்டங்கள் தூங்காமல் தத்தித் தத்தி கூண்டுகளுக்குள் நடந்தபடியே இருக்கின்றன,
அந்தச் ஓசை எதுவும் இவர்களுக்கு தொந்தரவாகவே இல்லை, இந்த சணல் கோணி தரைவிரிப்பு அம்சதூளிகா மஞ்சமாக அம்மினிக்குத் தோன்றுகிறது, 
அத்தனை ஆதூரமாக விசுவநாதனை இணைசேர்கிறாள் அம்மினி, பின்னணியில்  தாசேட்டன் குரலில் ஓலிக்கும்    ராசலீலா  பாடல் ஒருவர் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்.
பொழுது விடிய, அம்மினி விஸ்வநாதனை வெட்கத்துடன் எழுப்பி கிளம்பு , இல்லை என்றால் அப்பனிடம் மாட்டி நாம் அடிவாங்கவேண்டி வரும் என்று பரபரக்கிறாள்.

அவள் வெளியே போய் வாத்துகளை எழுப்பி மேய்ச்சலுக்கு தயார் செய்யும் வேளையில் விஸ்வநாதன் கையோடு கொண்டு வந்த குப்பியில் இருந்த  விஷப்பொடியை வாத்துத் தீவனக் கூடையில் கொட்டி குச்சியால் கிளறிவிட்டு, ஸ்தலம் விடுகிறான்.
காலையில் வீடு திரும்பிய பைலி  தீவனம் நன்றாக தின்ற வாத்துக்களை சந்தையில் சென்று விற்க காயலில் இறக்கி படகில் அமர்ந்து துடுப்பிடுகிறான், 

அப்போது இவன் வளர்த்த வாத்துக்கள் காயலில் ஒவ்வொன்றாக செத்து மடிந்து மிதக்கின்றன,பைலி கலங்கி அழுகிறான், அவற்றை குழி தோண்டி அடக்குகிறான், வக்கச்சன் நேற்று நாணு இங்கு விஸ்வநாதனைத் தேடி வந்தான், அவன் தீவனத்தில் விஷம் கலந்திருப்பானோ என்ற ஐயம் தனக்கிருப்பதாகச் சொல்கிறார்.

இப்போது எதிர் கரையின்  தென்னந்தோப்பில் , விசுவநாதனும் நாணுவும் சாராயம் அருந்துகையில் தன் கோடாலியால் சாராய குப்பியை வெட்டி உடைக்கிறான் பைலி,  நாணுவை வசமாக பிடித்து பைலி, கடுமையாக தாக்குகிறான், நாணு அங்கே நிலத்தில்  மூர்ச்சயாகிவிடுகிறான், அவனை கோடாலியால் வெட்ட  ஓங்கிய பைலி கையை பற்றி விடுகிறான் விசுவநாதன், 

என்னை விடுங்கள் சார், என் வாத்துக்களை விஷம் வைத்து கொன்று விட்டான் இவன் என்று ஆத்திரப்பட்டு அடிக்க, வாத்துக்களைக் கொன்றது நான்  தான், இப்போது உன்னையும் கொல்லப்போகிறேன், நான் நீ கொன்ற வாசு, கமலாட்சி மகன் விசுவநாதன் என்கிறான்,
இருவருக்கும் கடும் கைகலப்பு, இடி இடித்து மின்னல் வெட்டி மழை கொட்டுகிறது, அசல் தெருச்சண்டை போல சேற்றில் மூழ்கி உருளுகின்றனர், கடும் சண்டை, மகேஷிண்ட பிரதிகாரத்தில் கடைசி சேறு சண்டையை நினைவூட்டுவது போன்ற சண்டை அது, சண்டையின் முடிவில் பைலி மயங்கி விழுகிறான்,

நன்கு இருட்டிவிடுகிறது, பைலியை அப்படியே தூக்கி தோளில் சுமந்து நடந்தவன்  காயலில் படகிற்குள் இடுகிறான்,மழை கொட்டுகிறது ,  பைலியை ஜலசமாதி செய்ய வேகமாக துடிப்பு இடுகிறான் விசுவநாதன், 
நன்ணீர் காயலைத் தாண்டுகிறது படகு , இன்னும் கொஞ்சம்  தாண்டினால் நடுக் கடலிற்கு எட்டி விடலாம், அப்போது பைலி மயக்கத்தில் இருந்து எழுந்தவன் எங்கே போகிறாய் என்கிறான், இதா இவிட வரே என்று நடுக்கடலைக் காட்டுகிறான் விஸ்வநாதன், 

நடுக்கடலில் மீண்டும் தள்ளுமுள்ளு  , போதையிலும் விசுவநாதனிடம் நன்கு அடிகள் வாங்கியதிலும் நிலைகுலைந்த பைலி படகை ஆட்டி கவிழ்த்து விடுகிறான், 
நீரில் பைலி மூச்சு திணறுகிறான், அக்கணத்தில் கொலை செய்ய கூட்டி வந்த விசுவநாதன்  மூழ்கும் பைலியை ஏனோ தன்னிச்சையாக காப்பாற்றக் கை தருகிறான், 

ஆனால் கடும் மழை இருட்டில் திடீர் சுழலில் மாட்டிய பைலி மூழ்கிவிடுகிறான்., 
விடியலில் விசுவநாதன் காயல் கரையில் உடைந்த படகின் பாகத்தை பற்றியபடி கண்விழிக்கிறான்,கரை திரும்பிய விஸ்வநாதனை அவன் மனசாட்சியே மன்னிப்பதில்லை ,ஒரு தவறைத் திருத்த மற்றொரு தவறு எப்படி சரியாகும் என்று கேள்விகளால் துளைத்தெடுக்கப்படுகிறான் விசுவநாதன், வீட்டுக்குள் வந்தவன் உடலின் காயங்களுக்கு மருந்திட்டுக் கொள்கிறான், 

இவன் சித்தி சங்கரி  வேகமாக சார் சார் என்று அழைத்து வந்தவள் , ஐந்து மாத வாடகை பாக்கி உள்ளதை நினைவூட்டுகிறாள், இவன் அதை பொருட்டாகவே எண்ணாததைக் கண்டவள்,  செய்தி தெரியுமா? சாரின் கூட்டாளி பைலியை யாரோ அடித்து காயலில் தள்ளி கொன்று விட்டனர் என்கிறாள், 

இவன் சுரத்தே இன்றி அப்படியா? என்கிறான், சாருக்கு கவலையாக இல்லையா? வேண்டியவர் மரணமாயிற்றே என்று  தான் சொல்ல ஓடி வந்தேன் என்று அலுத்துக் கொள்கிறாள், விசுவநாதன் சொல்கிறான், பைலியுடனான என் கொஞ்ச நாள் பழக்கத்தை விட உங்கள் சரீர ரீதியான பந்தம் மிகவும் பெரிதாயிற்றே, நீங்களே அவனுக்கு துடிக்காத போது நான் ஏன் துடிக்க வேண்டும் என் சங்கரி சித்தி என்கிறான், 

அப்போது தான் அவளுக்கு இது விசுவநாதன் என்றே உறைக்கிறது, மகனே என்கிறாள், அந்த வார்த்தையை சொல்லி மட்டும் கூப்பிடாதே, உனக்கு அதற்கு தகுதி கிடையாது, உன் நடத்தை என் குடும்பம் தகர்த்தது , நாளை வரை காலை வரை இங்கு இருப்பேன், இதை சொல்ல வேண்டாம் என்று தான் இருந்தேன்,  எனக்கு இன்று இதை ஏனோ சொல்லத் தோன்றியது என்று வெளியேறுகிறான்.

வக்கச்சனை காயல் கரையில் வைத்து பார்த்து பைலி இறந்த துக்கம் கேட்கிறான் விஸ்வநாதன், இப்போது உனக்கு திருப்தியா? நீ படகுக்காரன் வாசுவின் மகன் தானே? எனக்கு நீ என் வீட்டுக்கு வந்து ஒண்டிக்கு ஒண்டி மல்லுக்கு நிறைகையிலேயே ஐயம் தோன்றியது, நான் தான் பைலியிடம் கூட அதை சொல்லவில்லை,அது அவனுக்கே வினையாகிவிட்டது என்கிறார், 

இவன் ,நான் பைலியைக் கொல்ல நினைத்தது உண்மை தான்,ஆனால் விதி பைலியை என் கைகளால் கொல்ல  விடவில்லை,மோசம் செய்து விட்டது,  மழையும் பெருங்காற்றுமே பைலியைக் கொன்றது என்கிறான், தான் நாளை வீட்டுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு அகல்கிறான்.

மறுநாள் காலை அம்மினியை நேரில் பார்க்கச் செல்கிறான் விசுவநாதன், காயலில் நின்ற படகில் தட்டுமுட்டு சாமான்களை ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் வக்கச்சனும் அம்மினியும்,இவனிடம் நாங்கள் எங்கோ போகிறோம் என்கின்றனர்,

அம்மினியிடம் என்னுடன் வா, நான் உன்னை இனி நல்லபடியாக பார்த்துக்கொள்கிறேன் என்கிறான் இவன், கோபத்தில் முகம் சிவந்த அம்மினி பெரியப்பா எல்லாம் சொன்னார், என் ஜீவனத்தை சிதைத்து அப்பனையும்  கொன்றபின்னும் உன் வஞ்சகம் அடங்காமல் இங்கு எப்படி வந்தாய்?என்று அழுகிறாள், நான் அம்மினி, தாராவுக்காரன் பைலியின் மகள், எப்போதும் உன் தயவு எனக்குத் தேவையில்லை என்று படகில் ஏறி அமர்ந்தவள் எதிர்கரைக்கு வக்கச்சன் துடுப்பு  இட ,அழுதபடியே செல்கிறாள்.

விஸ்வநாதன் முன்பும் அனாதை , இப்போதும் அனாதை தான் , ஆனால் அப்போது உள்ளில் கனன்ற வன்மம் இவனை  வாழவிட்டது, இப்போது பழிவாங்கியதும் குறுகுறுக்கும் மனசாட்சி, இவனை இனி நிம்மதியாக இருக்க விடுமா? தெரியாது, 

இப்போது  படகை தனியே துடுப்பு போட்டு  காயலிற்கு நடுவில் சென்று கொண்டிருக்கும்  விசுவநாதன் புள்ளியாக மறைவதை நாம் பார்க்கிறோம்.

இன்று இப்படத்தில் பணியாற்றிய நடிகர்களில் பெண் கலைஞர்கள் தவிர யாரும் உயிருடன் இல்லை, P.பத்மராஜனின் "இதா இவிட வரே " புதினத்தின் ஜீவனை சிதைக்காமல் செல்லுலாய்டில் இப்படி ஒரு தரமுள்ள கச்சவட சினிமாவாக கொண்டு வந்ததில் இயக்குனர் ஐ.வி.சஸி, ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு, இசையமைப்பாளர், G.தேவராஜன் மாஸ்டர், நடிகர்கள் M.G.சோமன், மது, பகதூர், சங்கராடி, அடூர் பாஸி,சாரதா, மீனா, ஜெயபாரதி, விதுபாலா,கவியூர் பொன்னம்மா,  போன்றோரின் பங்கு அலாதியானது.

பப்பேட்டாவின் நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகளில் திலகன் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்  பயிலிக்காரன் ,அது முன்பே இதில் மது ஏற்ற கதாபாத்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகளில் திலகன் பார்க்கும் குடிகார மாப்பிள்ளை பெயர்  வக்கச்சன் ,அது முன்பே இங்கு பகதூர் ஏற்ற கதாபாத்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

G. தேவராஜன் மாஸ்டர் அவர்களின்  இசை எளிமையாக மென்மையாக நம் செவிகளில் ததும்பி பேரானந்தம் தருவது, இப்படத்தில் கவிஞர் யூசூஃப் அலிகேச்சேரி எழுதி இடம்பெற்ற ஐந்து பாடல்களும் அற்புதமானவை

பாடகி p.,மாதுரி பாடிய "எந்தோ ஏதோ எந்தினியோ?" பாடல் அம்மினி வாத்து மேய்க்கையில் வருகிறது

பாடகர் k.j.யேசுதாஸ் பாடிய "இதா இவிட வரே " படத்தின் துவக்கத்தில் நடிகர் ஜெயன் படகை அக்கரை காயலுக்கு புஜபலம் காண்பித்து துடுப்பிட்டு செலுத்துகையில் வரும்.

பாடகர் p.ஜெயச்ந்திரன் ,p. மாதுரி பாடிய "நாடோடிப்பாட்டின்டே நாடு  " பைலி சிறை மீண்ட பிறகு கலந்து கொள்ளும் திருவிழாவில் ஜானுவைக் கண்டு மையலுறும் பின்னணியில் வருகிறது.

பாடகர் p.ஜெயச்ந்திரன் பாடிய "வெண்ணையோ வெண்ணிலாவுறைஞ்சதோ" அற்புதமான rare gem பாடல், இது தங்கமணி விசுவநாதனை மணமுடிக்க ஆசை கொள்கையில் அவனை நினைத்துப் பாடுவது.


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவில்




மயிலையில் மாதவப்பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது,குடத்துள் இட்ட விளக்கு போல அமைதியாக L வடிவ தெருவின் ஓரத்தில்  உள்ளடங்கி இருக்கும்,இது பேயாழ்வார் அவதார தலம்.

1938 -1940 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீராமுலு செட்டியார் என்னும் வைசிய வைணவர் மயிலை மாதவப் பெருமாள் கோவிலுக்கு நித்யபடி ஆராதனைகளுக்கும் உற்சவங்களுக்கும் , சாத்துமுறைக்கும், மண்டகப்படிக்கும் வேண்டி செய்த கைங்கர்யங்களை விவரிக்கும் 81 வருடப் பழமையான கல்வெட்டு இது,

எத்தனை விபரமாக எத்தனை சுவாரஸ்யமாக உள்ளது பாருங்கள், இவருக்கு இரண்டு சம்சாரங்கள்( அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது).

இவர்கள் மூவரின் திவசத்தன்றும் பிராமணர்களுக்கு சாப்பிடும் செலவிற்கு 30 ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

மாதவப்பெருமாள் கோவில் வளாகத்தில் 125 A,B,C மூன்று வீடுகள் இவர் செலவில் கட்டி விட்டு கோவில் திருப்பணிகளுக்கு வாடகை வருமானம் வர வழி செய்துள்ளார்.

இது தவிர தன் கச்சேரி ரோடு 11 ஆம் இலக்க தனி வீட்டை கோவிலுக்கு எழுதி வைத்து அதன் வீட்டு வாடகையை கோவிலுக்கு வருமாறு செய்துள்ளார்.

ஒவ்வொரு பழமையான கோவில்களிலும் விமரிசையாக நடக்கும் எல்லா உற்சவங்களுக்குப் பின்னால் இப்படி நம் முன்னோர்களின் தன்னலமற்ற ஈகை குணம் உள்ளது.

இது போல எத்தனையோ செல்வந்த முன்னோர்கள் கோவில்களுக்கு நிறைய எழுதி வைத்தாலும்,அவை முறையான சிலா சாசனங்கள் செய்யாததால் அதன் விபரம் ஊரார் அறிய முடியாது,கோவில் சொத்தை பிதுர்ராஜ்ஜிய சொத்தாக கருதி வாடகையே தராமல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் வழக்கு போட்டு நீட்டும் கயவர்கள் நிரம்ப உள்ளனர்.

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

அங்காடி நாய்| கவிஞர் கண்ணதாசன்




"மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே."

மனத்தை "அங்காடி நாய்" என்கிறார் பட்டினத்தார் .கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அதை அர்த்தமுள்ள இந்துமதத்தில் அழகான ,எளிய நுணுக்கமான தத்துவங்களுடன் விவரிக்கிறார்.

கடைத் தெருவில் ஒவ்வொரு கடையாக ஓடி அலைகிற நாயைப்போல், மனமும் ஓடுகிறது என்கிறார்.

மனிதனின் துயரங்களுக்கு எல்லாம் காரணம் மனந்தானே?

"பேயாய் உழலும் சிறு மனமே " என்கிறார் பாரதியார்.

மனதின் ஊசலாட்டத்தை பற்றி அவரும் கவலை கொள்கிறார்.

பயப்படக்கூடிய விஷயங்களிலே, சில சமயங்களில் இந்த மனம் துணிந்து நிற்கிறது.

துணிய வேண்டிய நேரத்தில் பயந்து ஒடுங்குகிறது.

காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது.

நடந்து போன காலங்களுக்காக அழுகிறது.

நடக்கபோகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது.

அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது.

அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும் போது சக்தியற்றுப் போய்விடுகிறது.

பசுமையை கண்டு மயங்குகிறது.

வறட்சியை கண்டு குமுறுகிறது.

உறவினருக்காக கலங்குகிறது.

ஒரு கட்டத்தில் மரத்துப்போய் விடுகிறது.

ஆசைகளை வளர்த்துக் கொள்கிறது.

ஆசா பாசங்களில் அலை மோதுகிறது.

விரக்தியடைந்த நிலையில், தன் கழுத்தை தானே அறுத்துக் கொள்ளும் வலிமையை தன் கைகளுக்கு கொடுத்து விடுகிறது.

கொலை, திருட்டு, பொய், இரக்கம், கருணை, பாசம், எல்லாவற்றுக்கும் மனமே காரணம்.

மனதின் இயக்கமே மனித இயக்கம்.

எதிலும் துணிந்து நிற்கக்கூடிய சக்தி எப்போது இந்த மனதிற்கு வரும்?

"எல்லாம் மாயையே" என்ற இந்து தத்துவத்தை நம்பினால் வரும்.

கீதையிலே கண்ணன் சொல்கிறான்:

"என்னைப் பரம் எனக் கொள்க; வேறொன்றில் பற்றை அழித்து என்னை தியானித்து வழிபடுக. இறப்பும் பிறப்புமாகிய கடலிலிருந்து உன்னை நான் கைதூக்கி விடுவேன்".

நல்லது; அப்படியே செய்து பார்ப்போம்.

ஆனாலும் முடியவில்லையே!

நெருப்புக்குத் தப்புகிறோம்; நீரில் மூழ்குகிறோம்.

நாய்க்குத் தப்புகிறோம்.

நரியின் வாயில் விழுகிறோம்.

ஒன்றை மறந்தால், இன்னொன்று வருகிறது.

புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக வெற்றிலைப் போடப்போய், வெற்றிலை போட்டுக்கொண்டே புகைபிடிக்கும் இரட்டைப் பழக்கம் வருவதுபோல், மறக்க முயன்றவற்றை மறக்கமுடியாமல், புதிய நினைவுகளும் புகுந்துக் கொண்டு விடுகின்றன.

கள்ள நோட்டு அடித்ததற்காக ஒருவனை சிறையில் தள்ளினார்களாம். அவன் சிறையில் இருந்துக் கொண்டே கள்ள நோட்டைத் தயாரித்தானாம்! இனி அவனை எங்கே கொண்டு போய் தள்ளுவது?

மனதுக்கு, மனைவியைவிட மற்றொருத்தியே அழகாக தோன்றுகிறாள்.

கைக்குக் கிடைத்து விட்ட மலரில் வாசம் தெரிவதில்லை.

கிடைக்காத மலர்கள் கற்பனையில் எழுந்து மனத்தை இழுக்கின்றன.

நிறைவேறிவிட்ட ஆசைகளில் மனது பெருமிதபடுவதில்லை.

நிறைவேறாத ஆசைகளுக்காகவே இது மரண பரியந்தம் போராடுகிறது.

மகாலட்சுமியே மனைவியாகக் கிடைத்தாலும் சினிமா நடிகைக்காக ஏங்கி நிற்கும் ரசிகனைப்போல், உள்ளவற்றைவிட இல்லாதன குறித்தே மனம் ஏங்குகிறது. 

பிறர் புகழும் போது நெக்குருகுகிறது.

இகழும் போது கவலைப்படுகிறது.

ஒரு ஆயிரம் பின்னல்கள்; ஒரு ஆயிரம் சிக்கல்கள்!

சிலந்தி எப்படி வலை கட்டிற்றென்று அதற்க்குத்தான் தெரியும்.

இந்தச் சிக்கல்கள் எப்படி வருகின்றன என்று இறைவனுக்குத்தான் தெரியும்.

கப்பலில் பயணம் செய்வது நம் பொறுப்பு.

அதைக் கரை சேர்க்க வேண்டியது இறைவன் பொறுப்பு.

அலை இல்லா கடல் ஒன்றை இறைவன் உருவாக்கும் போது சலனமில்லாத மனம் ஒன்றும் உருவாகி விடும்.

'மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்பார்கள்.

'எப்போது ஊற்றுவான் ?' என்று மனம் ஏங்குகிறது.

சலனமும், சபலமும், கவலையும் இல்லாதவர்கள் யார் இருக்கிறார்கள்?

செத்துப் போன தன் குழந்தயை உயிர் மீட்டுத் தரும்படி, புத்த தேவனிடம் ஒரு தாய் கெஞ்சினாள்.

"சாவே நிகழாத வீட்டில் சாம்பல் எடுத்து வா, மீட்டுத் தருகிறேன்" என்று புத்தர் சொன்னாராம்.

தாய், நாடெல்லாம் அலைந்து "சாவே நிகழாத வீடே இல்லையே"! என்றாள்.

"இந்த கதையும் அதில் ஒன்றுதான்" என்று கூறிப் புத்தர் அவளை வழி அனுப்பினாராம்.

கவலையே இல்லாத மனிதன் என்று ஒருவனை நான் பார்த்துவிட்டால், நான் கவலைபடுவதில் அர்த்தம் உண்டு. 

எனக்கு நூறு என்றால் என்னொருவனுக்கு இருநூறு. அதுவரைக்கும் நான் பாக்கியசாலி.

அவனைவிடக் குறைவாகத்தானே இருக்கிறேன்.

எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.

ஒருவனுக்கு துயரம் மனைவியால் வருகிறது.
ஒருவனுக்கு மக்களால் வருகிறது
ஒருவனுக்கு நண்பனால் வருகிறது
ஒருவனுக்கு எதிரியால் வருகிறது
ஒருவனுக்கு சம்பந்தமே இல்லாத எவனோ ஒருவனால் வருகிறது

கடலில் பாய்மரக் கப்பல்தான் காற்றிலே தள்ளாடுகிறது.

எதிலும் கெட்டிக்காரனாக இருப்பவனுக்குத்தான் அடிக்கடி சஞ்சலம் வருகிறது.

காகிதக் கப்பலுக்கு என்ன கவலை?

மனம் காகிதம் போல மென்மையாக இருக்கட்டும்.

சுகதுக்கங்கள், கோடை, பனி, மழை- அனைத்தையும் தாங்கட்டும்.

மனதுக்கு வருகின்ற துயரங்களை பரந்தாமனிடம் ஒப்படைத்து விடு.

பிறர்க்கு தொல்லை இல்லாமல் உன் மகிழ்ச்சியை நீ அனுபவி.

சாவைதான் தவிர்க்க முடியாது. சஞ்சலத்தைத் தவிக்க முடியும்.

சிறு வயதில் எனக்கு தாய் தந்தையர்கள் சாவார்கள் என்று என்னும்போது தேகமெல்லாம் நடுங்கும்.

ஒரு நாள் அவர்கள் இறந்தே போனார்கள்.

நாற்ப்பதெட்டு மணி நேரத்தில் நடுங்கிய தேகம் அடங்கி விட்டது.

"ஐயோ, இது நடந்து விடுமோ?" என்று எண்ணினால்தான் துடிப்பு, பதைப்பு.

"நடக்கத்தான் போகிறது" என்று முன்கூட்டியே எண்ணிவிட்டால் அதிர்ச்சி உன்னிடம் நெருங்காது.

தர்மனும் அழுதான். பீமனும் அழுதான். ராமனும் அழுதான், ராவணனும் அழுதான்.

நெஞ்சத்தின் பதைப்பை "கடன் பட்டார் நெஞ்சம்" என்றான் கம்பன்.

பட்ட கடன் ஒன்றானால், பத்திரத்தை தீர்த்து வாங்கி விடலாம்.

ஒவ்வொரு கடனையும் தீர்த்த பிறகும், வட்டி பாக்கி நிற்கிறது.

மழை நின்று விட்டாலும், தூவானம் தொடர்கிறது.

மரண பரிபந்தம் மனம் தன் வித்தையைக் காட்டிக் கொண்டே இருக்கிறது.

மனதுக்கு இப்படி எல்லாம் சுபாவங்கள் உண்டு என்று இருபது வயதிலேயே தெரிந்துக் கொண்டு விட்டால், பிறகு வருவனவெல்லாம் "மாயையே" என்று வைராக்கியம் பிறந்து விடும்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே 
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே 

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றுங்கள். மனம் அங்காடி நாய்போல் அலைவதை அடக்குங்கள். சாகப்போகும் கட்டைக்கு சஞ்சலம் எதற்கு?

செத்தார்க்கு நாம் அழுதோம்.
நாம் செத்தால் பிறர் அழுவார்.
அதோடு மறந்து விடுவார்.

மனதுக்கு நிம்மதியைக் கொடுங்கள்.

பகவான் கிருஷ்ணனின் காலடிகளை பிடித்துக் கொண்டு தூங்குங்கள்.

இங்கே இருந்தாலும் அவன் தான் காரணம்; அங்கு சென்றாலும் அவன் தான் காரணம்.

இங்கிருந்து அவன் கொண்டுப் போகும் தூதுவனுக்குப் பெயர் தான் மரணம்.

அடுத்த ஜனனத்தை அவன் நிர்ணயக்கட்டும்.

(நன்றி:- கவிஞர் கண்ணதாசன் அரத்தமுள்ள இந்துமதம் 2 ஆம் பாகம்)


ரமண ஆரம்






நண்பர்களே!!!இசைஞானியின் ரமண ஆரம் கேட்டிருக்கிறீர்களா? எப்படி ராஜாவின் ரமணமாலையும், குரு ரமண கீதமும் நம் குழப்பம் நிறைந்த  மனதை தெளிவிக்கும் அருமருந்தோ, அதே போன்ற அரிய படைப்பு ரமண ஆரம் , வெளியாகி 3 வருடங்களானாலும் இவற்றிற்கு எங்கும் விளம்பரம் காண முடியாது, தேடி வாங்க வேண்டிய படைப்பு

 இது தமிழில் வால்யூம்1, வால்யூம்2 என 2 சிடிக்களும் , மற்றும் தெலுங்கு வடிவத்தில் 1 சிடியும் என 50x3 =150 ரூபாய் தான், ரமணாஸ்ரம ஸ்டோரில் நான் ஆன்லைனில் வாங்கினேன், மிகவும் பாதுகாப்பாக குரியரில் வந்தடைந்தது, 

நீங்களும் வாங்கிப் பயனடையுங்கள், லாபமில்லாத நோக்கில்  இசைஞானி ரமணாஸ்ரமத்துக்கு அற்பணித்தவை,விலைமதிப்பற்ற பொக்கிஷம். நவராத்திரிக்கு கொலு வைத்து பரிசு தருபவர்கள், இதை பரிசாகத் தந்து உங்கள் நண்பர்கள் வாழ்வில் விளக்கேற்றுங்கள்.

சிடி ஆன்லைனில் வாங்க

http://bookstore.sriramanamaharshi.org/index.php?main_page=product_info&cPath=180&products_id=6419

http://bookstore.sriramanamaharshi.org/index.php?main_page=product_info&cPath=180&products_id=6420

http://bookstore.sriramanamaharshi.org/index.php?main_page=product_info&cPath=180&products_id=6418

http://bookstore.sriramanamaharshi.org/index.php?main_page=product_info&cPath=180&products_id=6414

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

Frozen | ஃப்ரோஸன் | 2007 | லடாக் | சிவாஜி சந்திரபூஷன் | டேனி டேன்சொங்கப்பா






















Frozen என்ற இந்திய சினிமா 2007 ஆம் ஆண்டு வெளியானது, முழுக்க லடாக்கில் கடல் மட்டத்தில் இருந்து 15000 அடி உயரத்தில் -29 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் படமாக்கப்பட்ட திரைப்படம், வண்ணத்தில் படத்தை எடுத்து கருப்பு வெள்ளையாக மாற்றியிருக்கின்றனர்.The Turin Horse (2011) என்ற ரஷ்ய திரைப்படத்தின் ஒளிப்பதிவை விட  சிறப்பான ஒளிப்பதிவு,அப்படத்திற்கு முன்னோடி இப்படம் ஆனால் அப்படம் போல இது உலகசினிமா ஆர்வலர்களால் பேசப்படவில்லை என்பது துயரம்.

இப்படத்தின் இயக்குனர் சிவாஜி சந்திரபூஷனுக்கு சிறந்த முதல் திரைப்படம் இயக்கிய இயக்குனருக்கான இந்திரா காந்தி தேசிய விருது கிடைத்தது,

படத்தின் ஒளிப்பதிவாளர் ஷங்கர் ராமனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிடைத்தது,படத்தின் கதை திரைக்கதையையும் இவரே எழுதியிருக்கிறார்.

படத்தில் நடிகர் டேனி டேன்சொங்கப்பா,B.A.pass புகழ் நடிகை ஷில்பா ஷுக்லா மற்றும் பலர்  நடித்துள்ளனர்.

குளிர் பிரதேசமான லடாக்கில் ஒரு உள்ளடங்கிய கிராமத்தில் ஆப்ரிகாட் பழங்களை விளைவித்து பறித்து பதனிட்டு ஜாம் செய்து புட்டியில் அடைத்து விற்கும் டேனி ,அவர் குடும்பம், திடீரென வெடித்த எல்லை பிரச்சனை பதட்டத்தினால்,அவரது வீட்டில் இருந்து நூறு கஜத்தில் குவிக்கப்படுகிறது சொந்த நாட்டு ராணுவம், கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படிகிறது, சோதனைச் சாவடி அமைக்கப்படுகிறது, பகல் முழுக்க துப்பாக்கி சூடு பயிற்சி, இரவு முழுக்க ரோந்து , வாரா வாரம் பொதுமக்கள் அடையாளம் கண்டு பதியும் முகாம் என இவர் வீட்டு அருகாமையில் மிகுந்த  பரபரப்பாகிறது

அதன் பின்னர் டேனி அவரது அழகிய இளம் மகள் , மகன் படும் இன்னல்கள், அல்லலுறும் தருணங்கள் தான்
படத்தின் கதை, படம் கண்டிப்பாக பாருங்கள்.

முழுப் படத்தை சப்டைட்டிலுடன் vimeo ல் தரவேற்றியுள்ளார் படத்தின் ஒளிப்பதிவாளர் Shanker Raman, ஒளிப்பதிவாளர்கள் மாணவர்கள், அவசியம் பார்க்க வேண்டிய படம்,படம் முழுக்க அபாரமான visuals.
https://vimeo.com/80334177
இது making of frozen
https://youtu.be/GC3tyG8sT5s

#Frozen,#Sivaji_Chandrabhooshan,#Shanker_Raman

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

சிதம்பரம் | 1980 | G.அரவிந்தன்|சீனிவாசன் | பரத் கோபி | ஸ்மிதா பாடில்




சிதம்பரம் படத்தில் வரும் அழகிய காட்சி இது,மூணாறை அடுத்த மாட்டுப்பட்டி கால்நடை பண்ணையில் கீழ்நிலை பணியாளன் முனியாண்டிக்கு (சீனிவாசன்) சூப்பரிண்டிண்டண்ட் சங்கரன் (பரத்கோபி) தன் குவாட்டர்ஸில் வைத்து ரம் ஊற்றி குடிக்கத் தருகிறார்,

அடுத்த வாரம் நடக்க இருக்கும்  அவன் திருமணத்தைக் கொண்டாட இந்த மது விருந்தை அவனுக்குத்  தருகிறார், முதலில் தயங்கிய முனியாண்டி ஒரு பெக் குடித்ததும் தைரியம் பெற்றவன், அடுத்த பெக் தானே ஊற்றிக் கொண்டு குடித்ததும்,  பெருங்குரலெடுத்து அதிகாரி  சங்கரனை நடராஜராகவே நினைத்து கைகூப்பியபடி 
" மார்கழி மாதம் திருவாதிரை நாள் " என்று பாடத்துவங்குகிறான்,அதிகாரி சங்கரன் கடைநிலை பணியாளர்களுடம் பேதம் பாராமல் நட்பு பாராட்டும் வியக்தி, அவருக்கே தர்மசங்கடம் சலம்பிய படி பாடும் அவனை பிரயத்தனப்பட்டு வெளியேற்றி அவன் வீட்டில் கொண்டு  விடுகிறார்.

இந்த துண்டுப்பாடலைப் பாடியது சீர்காழி சிவ சிதம்பரம், இப்படத்தின் தயாரிப்பு இயக்கம் இயக்குனர் G.அரவிந்தன் அவர்கள்,ஒளிப்பதிவு ஷாஜி.N.கருண்.

இப்படம் எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக விஷயம் தட்டுப்படும் , இப்படம் பற்றி விரிவாக எழுத வேண்டும்.

#சிதம்பரம்,#G_அரவிந்தன்,#சீனிவாசன்,#ஸ்மிதா_பாட்டில்,#பரத்கோபி,#மோகன்தாஸ்,#ஷாஜி_N_கருண்

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

The Favorite | த ஃபேவரிட் | 2018 | இங்கிலாந்து | அமெரிக்கா | அயர்லாந்து |Yorgos Lanthimos

The Favorite | 2018 | அபாரமான தனித்துவமான அவல நகைச்சுவை திரைப்படம் இது,  இங்கிலாந்து , அமெரிக்கா, அயர்லாந்து மூன்று நாட்டு கூட்டுத் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவான படைப்பும் கூட,







எனக்கு Queen Anne ன் கதையை இத் திரைப்படத்தில்  பார்க்கும் முன்னரே இந்த மகாராணியின் பெயர் பரீட்சயம் உண்டு,  பழம்பெரும்  ஸகாட்ச் விஸ்கி பிராண்டான "Queen Anne"  Dubai Duty Free ல் வைத்துப் பார்த்திருக்கிறேன்,  

எழுத்தாளர் Deborah Davis மற்றும் Tony McNamara இரவரின் திரைக்கதையில்    இயக்குனர் Yorgos Lanthimos  இயக்கிய திரைப்படம், இவர் இப்படத்தின் ஒரு தயாரிப்பாளரும் கூட, இவரின் Lobster , The killing of a Sacred Deer திரைப்படங்கள் அபாரமானவை.

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி இங்கிலாந்து அரசவை ஒரு அல்லி தர்பாராகவே விளங்கிற்று,  இது தான்  கதைக்களம், 

இரு ஒன்றுவிட்ட சகோதரிகளான சாரா (Rachel Weisz) மற்றும் அபிகெய்ல் மாஷம் (Emma Stone)  இருவருக்கும் இங்கிலாந்து  மகாராணி அன்னியுடனான  (Olivia Colman) அந்தரங்க உறவை போட்டிகளை துவேஷத்தை கருவறுத்தலை  தத்ரூபமாக சித்தரிக்கும் திரைப்படம் இது.

பெண்  எழுத்தாளர் டெபோரா டேவிஸ் 1998 ஆம் ஆண்டில் தி ஃபேவரிட் கதையை எழுதினார். இவருக்கு  திரைப்படம் எழுதுவதற்கான முன் அனுபவம் இல்லை,மிகுந்த ஆர்வத்துடன் மாலை வகுப்பில் திரைக்கதை எழுதுவது எப்படி வகுப்பில்  சேர்ந்து படித்தவர். 

The balance of Power  என்ற தலைப்பில் இப்படத்தின் திரைக்கதைக்கான முதல் வரைவை தயாரிப்பாளர்  Ceci Dempsey இடம் முடித்துத் தர, தயாரிப்பாளருக்கு மகாராணி அன்னி, சாரா சர்ச்சில் மற்றும் அபிகைல் மாஷம் என்ற இம்மூன்று பெண்களின் அந்தரங்க  உறவுகள் பற்றித் தெரிந்து வைத்திருந்தவர், இந்த அற்புதமான கதையைப் படமாக்க இசைந்தார்,

எழுத்தாளர் டெபோரா டேவிஸ் மகாராணி Anne , Sarah  மற்றும் Abigail எழுதிய கடிதங்களைப் ஊன்றிப் படித்து thesis செய்தார் ,அவர்  செய்த அபாரமான ஆராய்ச்சி  இந்த இரு நூற்றாண்டுகளுக்கு முந்தைய திரைக்கதைக்கு உயிரூட்டியது என்றால் மிகையில்லை, 

1711ஆம் ஆண்டு இப்படம் துவங்குகிறது, 
இங்கிலாந்தின் அண்டை நாடான  பிரான்ஸுடன் போரில் ஈடுபட்டுள்ளது, இங்கு மகாராணி anne உடல்நிலையோ  சரியில்லை, ஆனாலும்  அரசாட்சியை யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை, வாரிசுகளற்ற விதவையான இவர் தொடர்ந்து ஆள்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்,  நடக்க முடிந்தாலும் கால் வலியினால் சக்கர நாற்காலியில் வலம் வருகிறார், இவருக்கு உடம்பில் நீரழிவுநோய் உச்சத்தில் உள்ளது, பார்வை குன்றியுள்ளது, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, கிட்னி நோய் என அடுக்கடுக்கான நோய்கள் இவரை அயற்சியில் தள்ளி அந்தப்புரத்தில் அம்ச தூளிகா மஞ்சத்திலேயே கிடத்தி விட்டன.

17 எண்ணிக்கையில் பந்தய வாத்துகள்,  மற்றும் 17 எண்ணிக்கையில்  வளர்ப்பு முயல்களுடன் தன் அந்தப்புரத்தில் போட்டி பந்தயங்கள் வைத்து அனுதினம்  விளையாடுகிறார்,   அவர் கருவில் சிதைந்த  குழந்தைகளின் எண்ணிக்கை 17 என்பதை நாம் மெல்ல அறிகிறோம்.

அழகிய உயிர்த்தோழி சாரா சர்ச்சில் மகாராணியின்  நிழல், தமிழக அரசியலில் சின்னம்மா போல நம்பிக்கைக்குரியவர், ஐயத்துக்கு அப்பார்பட்டவர்.  மகாராணி இரு பால் ஈர்ப்பாளரும் கூட, 

அரசியல் ஆலோசகர் மற்றும் உற்சாகமான தீராக்காதலியான  சாரா சர்ச்சில் மகாராணி தந்த பெரும்  செல்வாக்கின் மூலம் நாட்டை திறம்பட ஆட்சி செய்கிறார். இவர் சொடுக்குப் போட்டால் அமைச்சர்கள் அதிரந்து பம்முகின்றனர்.

மகாரணி  Anneயைக் மயக்கி பெட்டிப்பாம்பாக வைத்து ஆட்சியை கையில் வைத்திருக்கும்  சாராவை  எதிர்க்கட்சித் தலைவர் ராபர்ட் ஹார்லி  மட்டும் மதிப்பதேயில்லை, அவள் கொண்டு வரும் எந்த திட்டத்திற்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

அவர் ஒரு நில உரிமையாளர் ஆதலால்  ஃப்ரான்ஸுக்கு எதிராக நடக்கும் போருக்கு நிதியளிப்பதற்கு வேண்டி மகாராணி மற்றும் உயிர்த்தோழி சாராவால்  முன்மொழியப்பட்ட சொத்து வரிகளை இரட்டிப்பாக்குவதற்கு எதிராக கடுமையாக வாதிடுகிறார்.

மகாராணியின் உயிர்த்தோழி சாராவின் வறிய இளைய உறவினர் பெண் அபிகைல் ஹில் பணிப்பெண் வேலைக்காக  இங்கிலாந்து அரண்மனைக்கு பறாரி,பறக்காவட்டி  போன்ற தோற்றத்தில் வருகிறாள்.  

அபிகைலின் வறிய நிலைக்கு  அவரது தந்தையே காரணம், whist என்ற ஒரு சூதாடும்  சீட்டாட்டத்தில் அவர் மகளையே பணயமாக வைத்து சூதாடி தோற்றுவிட அவள் இங்கே பணிப்பெண்ணாக வரவேண்டியதாகிவிட்டது.

அரண்மனையில் விழும்  பாத்திர பண்டங்களைத் தேய்க்கவும், அழுக்குத் துணிகளை துவைக்கவும்  மூன்றாம் தர வேலைக்காரியாக அபிகைல்  நியமிக்கப்படுகிறாள், அவளின் சகோதரி முறை கொண்ட சாரா அவளுக்கு உதவுவதே இல்லை.

மகாராணியின் Gout (கீல்வாதம்) ஐ அபிகைல் பார்த்தவள் , மகாராணியின் வீக்கமடைந்த கால்களுக்கு காட்டு மூலிகைகள் கொண்டு வலியை மட்டுப்படுத்தி குணமளிக்க முடியும் என அவளே துருதுருவென செயலில் இறங்கியவள், மூலிகை பொறுக்கி இடித்து மையாக அரைத்து மகாராணி வலியில் அனத்தியபடி தூங்குகையில் பத்து இடுகிறாள், வலி குறையவும் மகாராணி நன்கு தூங்குகிறாள்.

மறுநாள் காலையில் அபிகைல் அனுமதியின்றி ராணியின் படுக்கையறைக்குள் நுழைந்ததற்காக சாரா அபிகைலை முதுகில் சவுக்கால் விளாச அடிக்க ஆணையிடுகிறாள் , ஆனால் அவள் இட்ட மூலிகைப் பத்து மகாராணிக்கு உதவியதை உணர்ந்தபின் மயிரிழையில் தண்டனையில் இருந்து தப்புகிறாள் அபிகைல் , தனது அந்தப்புரத்தின் பிரதான பணிப்பெண்ணாக  அபிகைலை நியமிக்கிறார் மகாராணி, அபிகைலின் திட்டம் வேறாக இருக்கிறது, அவளுக்குள் தன் குடும்பம்  பட்ட  அவமானத்திற்கு காரணமான உறவுகளை கருவறுக்கும் வஞ்சம் உச்சத்தில் இருக்கிறது, அவள் கச்சிதமாக காய் நகர்த்துகிறாள்.

ஒரு இரவு  சாராவும் மகாராணியும் உடலுறவு கொள்வதை மறைந்திருந்து காண்கிறாள் அபிகைல். 

உயிர்த்தோழி சாராவின் ஏதேச்சாதிகாரத்தை பறித்து அவளை பதவி இறக்குவதற்கு  அபிகைல் உதவுவாள் என்ற நம்பிக்கை அமைச்சர் ஹார்லிக்கு வர , ஹார்லி மகாராணி சாரா இருவரையும் உளவு பார்க்கும்படி அபிகைலிடம் கேட்கிறான், அதையும் அதிகாரமாகக் கேட்கிறான், அபிகைல் அவனிடம் முடியாது என்றவள்,பின்னர் சாராவிடம் வந்து  ஹார்லி உளவு பார்க்க சொன்னது  பற்றி  கூறுகிறாள், இருவருடைய அந்தரங்க ரகசியம் எனக்குத் தெரியும் என்றும் அது என்றும் என்னுடன்  பாதுகாப்பாக இருக்கும் என்கிறாள் , ஆனால் முகம் கருத்து இறுகிப் போன சாரா எனக்கு  ஒருபோதும் துரோகம் செய்யக்கூடாது என்று ஒரு மறைமுகமாக எச்சரிக்கிறாள்.

அடுத்து வரும் நாட்களில்  சாரா ஃப்ரான்ஸுக்கு எதிரான போரில் அவள் தளபதி கணவனுடன் சென்று படைக்களத்தில் உடன் தங்கியிருந்து  போரில் கவனம் செலுத்துகிறாள், 

அபிகைல் இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி மகாராணியுடன்  நட்பாகிறாள், சாராவின் முரட்டு  அன்பிலிருந்து அபிகாயிலின் இதமான சேவகத்தில்  கட்டுண்டு போகிறாள் மகாராணி.

அபிகைல்  ராணியை கவர்ந்திழுத்துவிடுகறாள், அவளின் நடை உடை பாவனை எல்லாம் மாறுகிறது,மகாராணி அபிகைல் கவனிப்பால் ஆளே முற்றிலும் மாறியிருக்கிறார்,அபிகைல் மகாராணிக்கு காமரசக்கலையின் உச்சம் காட்டி படுக்கையில் மகிழ்விக்கிறாள்,  சொக்குப்பொடி போட்டது போல மகாராணி அழகிய புதுப்பெண்டாட்டியிடம் மயங்கிக் கிடக்கும் கணவன் போல மயங்கிக் கிடக்கிறாள்.
 
வயதில் பாதியே இருக்கும்  அபிகைலுக்கு ஈடுதருவதற்கு தன் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிகிறார், இந்த மகாராணியின் முழு மாற்றத்தை போர்க்களத்தில் இருந்து திரும்பிய சாரா முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விடுகிறாள், சாரா முகம் பொறாமையால் தகிக்கிறது, அபிகைலை அந்தப்புர தலைமைப் பெண்  பதவியில் இருந்து நீக்க மிகுந்த பிரயத்தனப்படுகிறாள், ஆனால் அவள் முயற்சிகள் எதுவும் பலிப்பதில்லை.

அபிகைல் எதற்கும் துணிந்தவள் ,  நைச்சியமாக மகாராணியிடம் ஒரு பாட்டம் அழுது நாடகமாடுகிறாள்,  உங்கள்  உடல்நலனே எனக்கு முக்கியம், என்னை வேலையை விட்டு துரத்தினாலும் உங்கள் சேவைக்கு  வேண்டி எப்போதும் காத்திருப்பேன் என  ச் சொல்லி ஆதரவையும்  பரிதாபத்தையும் ஒருங்கே பெறுகிறாள் . 

இப்போது  மீண்டும்  அந்தப்புர தலைமைப் பெண்மணியாக மட்டும்  இராமல் எதிர்க்கட்சித் தலைவர் ஹார்லியின் உளவு பார்க்கிற வாய்ப்பை மறுபரிசீலனை செய்கிறாள் அபிகைல்.  

அபிகைலை தேடி வந்த சாரா, மீண்டும் உன்னை பராரியாக  வீதிகளில் வீசுவேன் என்று மிகுந்த ஆவேசத்தில் சாரா கடுமையாக  அச்சுறுத்துகிறார்.

மகாராணியைப் பார்க்க அந்தப்புரம் வந்த  சாரா அபிகைலிடம்  தேநீர் கொண்டு வா என ஆணையிடுகிறாள்,

அந்த தேநீரில் போதை மருந்து கலக்கிறாள் அபிகைல் ,சுவையான தேநீரை விரும்பி அருந்துகிறாள் சாரா,  மகாராணியிடம் மீண்டும் தர்க்கம் செய்து எந்த முடிவும் எட்டமுடியாததால் மிகுந்த கோபத்தில் குதிரையை சாட்டையால் அடித்து கிளப்பிக் கொண்டு வனத்திற்குள் போகிறாள் சாரா, பாதிவழியில் தலை சுற்றி கீழே விழுந்தவள்  சேணக்கயிறு சுற்றியிருக்கவே மயக்கமடைந்தவள் தரையில் தரதரவென  இழுத்துச் செல்லப்படுகிறாள்.  

சாரா ஒரு மலினமான விபச்சார விடுதியில் வைத்து கண்விழிக்கிறாள், அவள் அழகு திமிர் எதுவும் இந்த விபச்சார விடுதி நடத்தும் முரட்டு மூடர்களிடம் எடுபடுவதில்லை, சாரா தன்னை மகாராணியின் உயர்த்தோழி என்று சொல்லியும் நம்ப ஆளில்லை, முரட்டுத்தனமான சாராவை விபச்சாரத்திற்கு பழக்கி நல்ல வெளியூரில் நல்ல விலைக்கு விற்க திட்டமிடுகின்றனர்.

இங்கு அரண்மனையில்  உயிர்த்தோழி சாரா தன்னை கோபித்துக் கொண்டு கைகழுவிவிட்டுச் சென்றதாக நினைக்கிறார் மகாராணி அன்னி, இப்போது முழுமையாக அபிகைலை  தன் உயிர்தோழியாக வரிக்கிறாள், அவளுக்கு ஆஸ்தி பாஸ்தி அந்தஸ்து வழங்க முடிவு செய்கிறாள், 

அபிகைலை  கர்னல் மஷாமை திருமணம் செய்து கொள்ள முன்னின்று நிச்சயித்து விமரிசையாக அரசவைத் திருமணத்தை நடத்துகிறாள், இப்போது அபிகைல் ஒரு baroness,அவளுக்கு சாராவை வெறும்.பேற்றுவதற்கு இதை விட உயரிய அந்தஸ்து வேறிருக்க முடியாது, 

 ஃப்ரெஞ்சு போர் முடிவுக்கு வருவதற்கு  ஹார்லியின் பங்களிப்பு பற்றி  அபிகைல் மகாராணிக்கு பரிந்துரைத்து நற்பெயர் பெற்றுத் தருமளவிற்கு அபிகைல் செல்வாக்கு பெற்றிருக்கிறாள்.

 சாராவைத் தேடத் துவங்கும் அரண்மனைக் காவலர்கள் அவளை அந்த மலினமான விபச்சார விடுதியில் இருந்து மீட்டுக் கொண்டு அரண்மனை திரும்புகின்றனர், ​​

அபிகைல் சாராவை சற்று அதிகமாக சீண்டியதை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள், ஆனால் தேநீரில் மயக்க மருந்து கலந்ததற்கும் விபசார விடுதியில் தான் கேவலப்பட்டதறகும், தன் கௌரவம் முற்றிலும் சிதைந்து போனதற்கும் சாரா அவளை அழிக்க திட்டம் தீட்டி காய் நகர்த்துகிறாள். 

சாரா மகாராணிக்கு ஒரு இறுதி எச்சரிக்கை கடிதம் அனுப்புகிறாள்,  யுத்தம் முடிவுக்கு வரக்கூடாது, தொடர வேண்டும் என்கிறாள்,  அபிகைலை உடனே நாட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் இதை செய்யாவிட்டால் மகாராணி அன்னிக்கும்  தனக்கும் இருக்கும் பாலியல் தொடர்பை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி அரசவையில் சந்தி சிரிக்க வைப்பேன் என்று  எழுதியிருக்கிறாள் சாரா, 

சாராவின் கடிதத்தால் மகாராணி மிகவும் புண்பட்டு போகிறாள்,அவள் மீது அத்தனை மையல் வைத்திருந்த தனக்கு இத்தனை பெரிய பேரதிர்ச்சியை சாரா தந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை, இக்கடிதத்திற்கு சாரா உடனே அந்தரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பதில் கடிதம் எழுதுகிறாள், 
சாராவின் மன்னிப்பு கடிதத்திற்கு மகாராணி ஆவலுடன் காத்திருக்கிறார். 

இந்நிலையில் purvy purse keeper (மகாராணியின் கணக்காளர்) பதவி உயர்வு பெற்ற அபிகையில்,முன்பு மகாராணியின் கணக்காளராக இருந்த  சாரா மற்றும் அவர் கணவருடன் இணைந்து பெரும் நிதியை மோசடி செய்ததற்கான ஆதாரம் தருகிறாள், ஆனால் மகாராணியால் சாரா இந்த பெரும்பணத்தை கையாடல் செய்திருப்பாள் என்கதை நம்பமுடியவில்லை. 

சாரா மகாராணியின் கடிதம் கிடைக்கப்பெற்றதும் கிடைக்கப்போகும் தண்டனைகள் , எதிர்விளைவுகள் தெரிய வர பம்மியபடி  எழுதிய மன்னிப்புக் கடிதம் அந்தப்புரத்திற்கு வருகிறது,  ஆனால் அதை சாதுர்யமாக அபிகைல் அதை எரித்துவிடுகிறாள்,  சாரா தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று கடும் வேதனை அடைந்த மகாராணி, சாரா மற்றும் அவரது படைத்தளபதி கணவரை இங்கிலாந்தில் இருந்து நாடுகடத்த ஆணையிடுகிறார்.

இப்போது தன் ஒன்றுவிட்ட சகோதரி சாரா மீதான நெடுநாள் வஞ்சத்தை அபிகைல் தீர்த்துக் கொண்டாள், பகையாளி சகோதரி சாராவை நாடுகடத்தியவள்,  ஓட்டாண்டியாக்கியிருக்கிறாள், அபிகைலின் நிலை அரண்மனையில் அசைக்கமுடியாததும் மிகுந்த பாதுகாப்பாகவும்  இருப்பதை நாம் கண்ணுறுகிறோம், 

ஒரு நாள் விடியலில் அபிகைல்  மகாராணியின் 17  முயல்களில் ஒன்றை சீண்டி துன்புறுத்தி  மகாராணியை வெறுப்பேற்றுகிறாள். 
சாராவின் துரோகத்தால் மிகவும் நொந்து  உடல்நிலை மோசமாகிறார் மகாராணி, 

அன்று தன் செல்ல முயல் கூண்டுக்குள்ளிருந்து சப்தமிடவே, அபிகைல் அவற்றை என்ன செய்கிறார்? என்று பார்க்கிறார் மகாராணி,அவள் மகாராணியை சுத்தமாக மதிப்பதில்லை.

மகாராணி சிரமத்துடன் படுக்கையில் இருந்து எழுந்தவர் கோபத்துடன்  அபிகைலை தன்முன்னால்  மண்டியிட்டு தன் வலிக்கிற  கால்களை  மசாஜ் செய்யும்படி கட்டளையிடுகிறாள்.  அவள் மதிப்பதில்லை, பொறுமை இழந்த மகாராணி,  அபிகைலின்  தலைமுடியை இழுத்து, காலில் கிடத்த , அபிகைல் வலியைத் தாங்கிக் கொள்கிறாள், மகாராணியின் கால்களுக்கு வேண்டா வெறுப்பாக மசாஜ் செய்யத் துவங்குவதுடன் படம் நிறைகிறது.

இப்படம் பெரும்பாலும் இயற்கை வெளிச்சத்தில் சூரிய ஒளி அல்லது மெழுகுவர்த்திகள் மற்றும் fire place வெளிச்சத்தில் படமாக்கப்பட்டது,  தவிர்க்க முடியாத சில. காட்சிகள் மட்டும் குறைந்த விளக்குகளுடன் படமாக்கப்பட்டது,ஆகவே அத்தனை தரமாக நிஜத்தன்மையுடன் இந்த period set அமைந்துள்ளது. 
ஒளிப்பதிவாளர் Roby Ryan  பிரத்யேகமாக  patent pending கருவிகளை தனக்கென  வைத்திருந்து படமாக்கியுள்ளார், 

இத்திரைப்படத்தில் நடிகர்கள் அனைவரும் மூன்று வாரங்கள் ஒன்றாக கூடி ஒவ்வொரு காட்சிக்குமர ஒத்திகை பார்த்தனராம்.  அவர்கள் பலவிதமாக காட்சிகளை நடித்து பார்த்து  மேம்படுத்தியவர்கள், படப்பிடிப்பை ரசித்தும் விளையாட்டாகவும் நடத்தினராம் , நடன இயக்குனருடன் அப்படி ஒத்துழைத்துப்  பணிபுரிந்தனர்,படத்தின்  முயல் பந்தயம் வாத்துப் பந்தயக் காட்சிகளில் வருவது போலவே  நடிகர்கள் ஒருவருக்கொருவர் முட்டாள்தனமாக தோற்றமளிக்க கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டதாம், 

இப்படத்தை திரைப்பட ஆர்வலர்கள் மாணவர்கள் ஒளிப்பதிவாளர்கள் தவறவிடதீர்கள், இப்படத்தின் ஒளிப்பதிவில் நயமாக நளினமாக  fish eye lens , quinted eye lens  உபயோகித்து ஏராளமான காட்சிகள் அற்புதமாக படமாக்கபட்டுள்ளன, நம்பகமான கலையலங்காரம், உடையலங்காரம், அரங்கங்கள் அனைத்தும் அபாரமானவை, ஒரு period black comedy திரைப்படம் எப்படி சுவை மிகுந்ததாக  இருக்க வேண்டும்  என்பதன் உதாரணம் The Favorite , அமேஸான் ப்ரைமில் உள்ளது, வயது வந்தவர்களுக்கான திரைப்படம் இது.

இத்திரைப்படம் உலகெங்கிலும் திரைப்பட விழாக்களில் பெற்ற உயரிய விருதுகளுக்கு கணக்கே கிடையாது, இத்திரைப்படம் 274 உயரிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 119 உயரிய விருதுகளை அள்ளி வந்தது, அதற்கெனவே தனி அட்டவணை இங்கு உள்ளது, 

https://en.m.wikipedia.org/wiki/List_of_accolades_received_by_The_Favourite

#The_Favorite, #Olivia_Colman,#Emma_Stone,#Rachel_Weisz,#Tony_McNamara ,#Deborah_Davis,#Queen_Anne,#Yorgos_Lanthimos

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

அழியாத கோலங்கள் (1979) | பாலு மகேந்திரா | சலீல் சவுத்ரி | கமல்ஹாசன்







அழியாத கோலங்கள் (1979) திரைப்படம் இயக்குனர் பாலு மகேந்திராவின் முக்கியமான படைப்பு, coming of age Genre  திரைப்படத்திற்கு சரியான உதாரணம் இப்படம்,படம் பார்த்த அத்தனை பேரையும்  தன் பால்ய நாட்களை தனிமையில்  அசைபோட வைத்து விடும் இப்படம்.

படத்தை திருச்சியை அடுத்த இருங்கூர், பெட்டவாய்த்தலை, சிறுகமணி உள்ளிட்ட ஊர்களில்  படமாக்கியிருந்தார் பாலு மகேந்திரா,படத்தின் தயாரிப்பு அண்ணாசாலை தேவி திரையரங்க உரிமையாளர்களான தேவி பிலிம்ஸ் நிர்வாகத்தார்,எட்டு லட்ச ரூபாய் முதலீட்டில் இத்தனை அழகிய படத்தை உருவாக்கினார் இயக்குனர் பாலுமகேந்திரா.தமிழில் இவர் இயக்கிய முதல் படம் இது, தமிழில் படம் செய்ய மாட்டேன் என பிடிவாதமாக இருந்த இயக்குனருக்கு உற்ற புரிதலுடன் இந்த தயாரிப்பாளர் கிடைக்க தன் கனவுத்திரைப்படத்தை இயக்கினார்.

அவ்வூரின் மூன்று விடலைச் சிறுவர்களான ரகு ,பட்டாபி, கௌரி சங்கரின்  பால்யம் தான் இக்கதை ., இதில் கௌரி சங்கர் (கமல்ஹாசன்) நிகழ்காலத்தில் பெரிய நிறுவனத்தின் CEO, அவருக்கு அன்று காலை ஒரு inland letter பால்ய நண்பன் பட்டாபியிடமிருந்து வருகிறது, அதில் இவர்களின் பால்யத்தின் ஆதர்சமான இந்துமதி டீச்சர் நேற்று இறந்துவிட்டதை பகிர்கிறார் பட்டாபி, அங்கே கௌரிசங்கர் தன் பால்யத்தில் ஆழ்ந்து நிலைகுத்திவிடுகிறார், அங்கே அழகிய கிராமத்தில் இவர்களின் மலரும் நினைவுகள் துவங்குகிறது.

அவர்கள் சதா சர்வ காலமும் வாய்க்கால் குட்டிச்சுவர் மீதும், ரயில்வே கேட்டின் மீதும் அமர்ந்து வயதுக்கு மீறிய பேச்சு பேசுகின்றனர், திருட்டு மாங்காய் உடைத்து தின்கின்றனர், porn புத்தகங்களை படிக்கின்றனர்.

அவ்வூர் தபால் நிலையத்தில் வெண்நிற ஆடை மூர்த்தி ஒரே ஊழியர் அவரே போஸ்ட் மாஸ்டர் அவரே தபால்காரர் ,மிதமான சபலிஸ்ட் .வயது கடந்தும் அவர் மணமுடிக்கவில்லை, வெளியில் கிடைக்கும் உணவை உண்டு , இவர் ஆசைக்கு ஒத்திசையும் பெண்களை ஊரின் பாழடைந்த கோயில் மண்டபத்திற்குள் வைத்து சம்போகம் செய்கிறார்.

அவரை உளவறியும் இந்த மூன்று விடலைகள் அவர் உபயோகிப்பதைப் பார்த்து, இவர்களும் ஆணுறையை எப்படியோ வாங்கியவர்கள் அவ்வூரின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் அந்த ஒத்திசைந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அசடு வழித்தவர்கள், சுற்றி வளைத்து அவளுக்கு அத்தனை சமிஞ்யை காட்டி கூட, அவள் அதை புரிந்து கொள்ளாமல் இவர்களை தவிர்க்க அவளை அக்கா என்று அழைக்கவேண்டியதாகிறது, இவர்கள் அவளிடம் ஒரு சொம்பு  தண்ணீர் வாங்கிக் குடித்து வருகின்றனர், வரும் வழியில் ஆணுறையில் பலூன் ஊதி விளையாடியபடி வருகின்றனர்.

அவ்வூரின் எலிமென்டரி பள்ளிக்கு வரும் திருமணமாகாத ஆசிரியை இந்துமதியின் அமைதியான தோற்றத்தில் எளிமையான அழகில் மயங்கும் இம்மூன்று சிறுவர்கள் அவர் மீது மையல் கொள்கின்றனர்.   
 
இந்துமதி டீச்சருக்கு கல்கத்தாவில் நிலக்கரிச் சுரங்கத்தில்  Mine Engineering படித்துவிட்டு பணிபுரியும் அத்தை மகன் / காதலர் பிரதாப் போத்தன், 

அவரின் அம்மா இந்துமதி டீச்சருக்கு துணையாக இந்த கிராமத்தில் உடன் இருக்கிறார்,  பிரதாப் விடுமுறையில்  இவ்வூருக்கு வருகிறார்.

அவர் இந்துமதி வீட்டின் திண்ணையில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக்கொண்டே ஒயிலாக சிகரட் பிடிப்பதை ஒளிந்து பார்க்கும் இந்த விடலைகள் , நாணல் புற்கள் மண்டிய வரப்பில்  அமர்ந்து சிகரட் வாங்கி வந்து  புகைக்கின்றனர்.

இதில் இந்த மூவரில் வட்டக்கண்ணாடி அணிந்து துரு துருவெனப் பார்க்கும் ரகு மட்டும் இளையவன் ,அவன் பலான செயல்களில் எட்டி நின்று பார்த்து விட்டு ஓட்டமெடுத்து விடுகிறான்.

அழியாத கோலங்கள் படம் ஹாலிவுட்டில் வெளியான Summer of 42 (1971) படத்தின் தழுவல் என்று இயக்குனர் பாலுமகேந்திரா பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.
ஐரோப்பிய சினிமாவில் மூத்த திரைக்கதை ஆசிரியரான Luciano Vincenzoni 2000 ஆண்டில் கடைசியாக எழுதிய படமான Malena விலும்  அழியாத கோலங்கள் படத்தில் இந்த குறும்புக்கார விடலைகள் இந்துமதி டீச்சருக்கு மளிகை வாங்கித் தரும் காட்சி உண்டு, அதே போல இந்துமதி டீச்சர் இயல்பாக தொடுவதை தவறாக புரிந்து கொண்டு மருகும் காட்சிகள், இந்துமதி டீச்சரின் முறைப்பையன்/ காதலன் ஊரில் இருந்து வருகையில் அவரைப் பிடிக்காமல் கருவி முகம் திருப்பிக் கொள்ளும் காட்சிகளுக்கு ஒப்பான காட்சிகள் Malena என்ற இத்தாலிய படத்திலும் இருந்தன.அவரும் summer of 42 படத்தில் இருந்தே உந்துதல் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இதில் விடலை பட்டாபிக்கு அவன் வீட்டிற்கு அத்தை மகள் பள்ளி விடுமுறைக்கு வருகிறாள், அவளை பட்டாபி உறங்குகையில் பூனை போல நெருங்கி அவள் ஸ்பரிசத்தை நுகர்வது, அவளின் அங்கங்களை உணர்வது எல்லாம் ஒரு அழகிய கவிதை போலவே படமாக்கியுள்ளார் இயக்குனர், 

கரணம் தப்பினால் மரணம் என்பது போல கொஞ்சம் பிசகியிருந்தால் இப்படம் ஊராரால் தூற்றப்பட்டு இயக்குனருக்கு முடிவுரை எழுதியிருப்பார்கள், இயக்குனர் தன் சினிமா வாழ்வு முழுமைக்கும் இருமாந்திருக்க தகுதியான படைப்பாக இப்படத்தை செதுக்கியிருக்கிறார்,

எதுவும் குறையவில்லை, எதுவும் மிகையாகயில்லை, அந்த கெடச்சா உனக்கு சொந்தம் Item Song கூட மிகையாகத் தெரியவில்லை. படத்தில் நாணல் புற்களை மிக அழகாக பெரும்பான்மையான காட்சிகளில் theme ஆகவே காண்பித்துள்ளார், எழில் கொஞ்சும் அந்த இரு புறம் மரங்கள் இடையில் செல்லும் சாலை வங்காள படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது, 

புது வெள்ளத்தில் விடலைகளுடன் நீரில் குதித்து குளிக்கும் சிறுவன் சுழலில் சிக்கி இறக்கிறான், அவன் மரத்தில் மாட்டிய சட்டை,அதன் பின் கண்டெடுக்கப்படும்  ரகுவின் ஜடம்,அவனின் வட்டக் கண்ணாடி நம்மை என்னவோ செய்யும்,

அவனின் தகனம் கூட Silhouette ல் தான் அக்கினிக் கொழுந்தைக் காட்டுகிறார் , உடன் ஊரார் தலைகள்,மஞ்சள் நெருப்புக்கு tight close-up வைக்கிறார் இயக்குனர்.

விடலைச்சிறுவன் ரகுவிற்கு நீச்சல் தெரியாது என்பது எங்கும் வசனமாக வரவில்லை, மாறாக பாசன வாய்க்காலில் நண்பர்கள் நீந்த ,அவர்கள் முதுகில் இவர் தவளை போல தாவி அமர்ந்து நீந்துவது போல ஒரு shot வைத்திருந்தார் இயக்குனர்.

படத்தை நடிகர் கமல்ஹாசன் துவக்கியும் முடித்தும் வைக்கிறார், ஆனால் அவரது இத்தனை அற்புதமான தோற்றம் uncredited என்கையில் வியப்பு மேலிடுகிறது.

40 வருடங்கள் கடந்தும் இப்படம் இத்தனை fresh ஆக இருக்கிறது, ஒவ்வொரு காட்சியையும் நம் வாழ்வில் பொருத்திப் பார்க்கும் படி இருக்கிறது, இது போல ஒரு படம் ,பாய்ஸ்  படம் இருபது வருடங்கள் கடந்து வந்தது ஆனால் இந்தப்படத்தின் தரத்துடன் ஒப்பிடுகையில் முன்னால் நிற்கவில்லை.

படத்தின் இசை சலீல் சௌதுரி அவர்கள்,அற்புதமான பாடல்கள் அற்புதமான பின்னணி இசையை வழங்கியிருந்தார், அபாரமான மௌனத்தையும் காட்சியை உணர்ந்து உள்வாங்கி உடன் இழைத்திருந்தார் ,  

படத்தில் எல்லா பாடல்களையும் கங்கை அமரன் எழுதினார், இப்படத்தில் நடிகை ஷோபாவுக்கு உதவி- இயக்குனர் என்று டைட்டில் க்ரெடிட் வருகிறது, படத்தின் ஒளிப்பதிவு, கதை,திரைக்கதை, வசனம் அனைத்தும் பாலுமகேந்திரா அவர்களே.

நடிகர் பிரதாப் போத்தன் தமிழில் அறிமுகமான படம்.நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினாலும் அவருக்கு படத்தில் பெயர் வரவில்லை, ஏன் என்று தெரியவில்லை.

1.பூவண்ணம் போல மின்னும் என்ற  அற்புதமான பாடலை P.ஜெயச்சந்திரன் & சுசீலாம்மா பாடினார்கள்,
https://youtu.be/NjARuzQ4DtI 

இப்பாடலை சலீல்தா 1978 ஆம் ஆண்டு வெளியான ஏதோ ஒரு ஸ்வப்னம் படத்தில் "பூமானம் பூத்துழஞ்நு" என்ற தாசேட்டா பாடிய பாடலின் மெட்டில் இருந்து மீள்உருவாக்கம் செய்தார்.
https://youtu.be/fwVkoxGfKFU

2.நான் என்னும் பொழுது பாடல் டைட்டில் பாடல் எஸ்பிபி பாடியது , மிக அற்புதமான பாடல்,பாட மிகவும் கடினமான பாடல், பயிற்சி இல்லை என்றால் இந்தப் பாடலை பாட முடியாது, அதனாலேயே இப்பாடல் பூவண்ணப் போல புகழ் பெறவில்லை என நினைக்கிறேன்.
https://youtu.be/OFjIk_b11jY

இப்பாடலை இயக்குனர் பாலு மகேந்திரா படத்தின் துவக்கத்திலும் படத்தின் முடிவிலும் அழகாக பகிர்ந்து வைத்துள்ளார், 
https://youtu.be/oLFEFeSYxPc

இப்பாடலை 1971 ஆம் ஆண்டில் சலீல் சௌத்ரி இசை அமைத்த ஆனந்த் இந்தி படத்தில் லதா மங்கேஷ்கர் குரலில் நா ஜியா லகே நா என்ற இனிய பாடலில் இருந்து மீள் உருவாக்கம் செய்தார்.அப்பாடல் இங்கே https://youtu.be/qCqDuxVTbi8

3.கெடச்சா உனக்கு சொந்தம் என்ற தெருக்கூத்து பாடல் ஜானகியம்மா பாடினார்.https://youtu.be/1l2mxojPVS8

#பாலு_மகேந்திரா,#அழியாத_கோலங்கள்,#சலீல்_தா,#சலீல்_சௌதுரி,
#கமல்ஹாசன்,#ஷோபா,#பிரதாப்_போத்தன்,#வெண்நிற_ஆடை_மூர்த்தி,#கங்கை_அமரன்,#சுசீலாம்மா,#P_ஜெயச்சந்திரன்,#SPB


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

மரண சிம்மாசனம் | Throne of Death (1999 | மலையாளம் | முரளி நாயர்














மரண சிம்மாசனம் | Throne of Death (1999)என்ற மலையாள மொழி அரசியல் அவல நகைச்சுவை படம் ஒன்று பார்த்தேன்.
இந்தியாவில் எப்போதும் வழக்கத்தில் இருந்திராத மின்சார நாற்காலி மரண தண்டனையை கேரள அரசு அமல்படுத்தி களபலியாக கிருஷ்ணன் என்ற கூலியை அதில் வைத்து மின்சாரம் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றுவது போல அவல நகைச்சுவைக் கதையை மிக  எளிமையாக  செய்திருக்கிறார் இளம் இயக்குனர் முரளி நாயர்.
இதை சுயாதீன திரைப்படமாக எடுத்தவர் பல நாடுகளில் திரைப்படவிழாக்களில் திரையிட்டு அதிக அளவில் கவனம் பெற்றிருக்கிறார்.

படத்தின் கதை: கேரளத்தின் காயல் கரை தீவு கிராமத்தில் ஏழை  விவசாயக்கூலி  கிருஷ்ணன் தனது குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டி  ஒரு நிலச்சுவான்தாரரின் தோப்பில் இருந்து தேங்காய்களைத் திருடுகையில் பிடிபடுகிறார்,
கையும் களவுமாக போலீஸில் ஒப்படைக்கப்படுகிறார், அவர் மீது பழைய தீர்க்கப்படாத பெரிய வழக்குகள் ஏதாவது எழுதி வழக்கை முடிக்க போலீஸ் நினைக்கிறது.

பல ஆண்டுகளாக இத்தீவில் இருந்து காணாமல் போன ஒருவரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டுகிறது போலீஸ்,  இப்பழியில்  இருந்து மீள்வதற்கு ஏழைக்கூலி கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தார் எத்தனை முயன்றும் முடிவதில்லை.

கிருஷ்ணன் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு முன்பு சுவரொட்டிகள் ஒட்டி நிறையஉழைத்து  அடிமட்டத் தொண்டுகள் பல  செய்திருக்கிறார், ஆனாலும் அவரை எந்தக் கட்சியுமே காப்பாற்ற நினைக்கவில்லை, தேர்தல்  சமயத்தில் எந்த சம்பவமும் mileage தரும் பொக்கிஷம் தான்.
எனவே அடுத்து நெருக்கத்தில் வரப்போகும்  உள்ளாட்சித் தேர்தலில்  ஜெயிப்பதற்கு என்ன தகிடுதத்தமும் செய்ய தயாராக இருக்கிறார்கள் அரசியல் கட்சிகள்.  

அந்த ஊர் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவதற்காக அதிகாரத்தில் உள்ள கட்சி அவரை அணுகி நயிச்சியமாய் பேசி  தீர்க்கப்படாத கொலைக்கு உட்படுத்துகிறது கட்சிக்கு வந்த ஒரு சோதனை தன் சோதனை என்று  ​​கிருஷ்ணன் செய்யாத கொலைப்பழியை ஏற்றுக்கொள்கிறார்,

தூங்கி எழுந்த நீதிமன்றம் தந்த மரணதண்டனையையும்  மனமுவந்து எதிர்கொள்கிறார், தேர்தலை முன்னிறுத்தி அந்த ஊரில் புதிய மாற்றங்களைச் செய்யப்போகிறோம், அந்நிய முதலீடுகளை தொழிற்நுட்பத்தை கேரளத்திற்கு தருவிப்போம் பாருங்கள் என்று நிறைய வாக்குறுதிகளைத் தருகிறது ஆளும் கட்சி,

அதில் ஒரு கவர்ச்சியான அம்சமாக அமெரிக்காவில் வழக்கத்தில் இருக்கும் அதே மரண சிம்மாசன மரண தண்டனை  முறையை இங்கு கேரளத்தில் அமல்படுத்தப்போகிறோம், என்று ஆளுகிற அரசியல் கட்சி பெருமையுடன் அறிவிக்க ஊராரிடம் கைதட்டல் பலமாக எழுகிறது.

அந்த நாளும் வந்திடுகிறது, ஊர் கூடி வேடிக்கைப் பார்க்க , காயலில் வல்லத்தில் அந்த மலினமான ,செத்து புதைத்த தொழிற்நுட்பமான  அலுமினிய ஃபாயில் சுற்றப்பட்ட  மின்சார நாற்காலி வருகிறது, 

அதற்கு பூமாலை எல்லாம் சுற்றி ஆரத்தி காட்டி சகாவு கிருஷ்ணன் விழா மேடை எதிரே சிறிய மேடையில் புத்தாடைகள் உடுத்தி , இந்த இறக்குமதி நாற்காலி இடப்பட்டு மஞ்சள் தண்ணீர் தெளித்த ஆடு போல் அதில் அமரவைக்கப்படுகிறார்,அவருக்கு சோகம் பெருகுவதற்கு மாறாக உள்ளம் மிகவும் குதூகலமாக இருக்கிறது.

ஒரு அரசு மருத்துவர் கிருஷ்ணனை ஸ்டெத் வைத்து பரிசோதித்து அவர் ஆரோக்கியமாக உள்ளதைச் சொல்கிறார், அங்கே உலக வங்கி நிதி அளித்த இந்த புதிய மரண சிம்மாசனத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைக்க வந்தவர் ஒன்றிய அரசு வடக்கன் கோட்டும்  வட்டக்கண்ணாடியும்  அணிந்த அமைச்சர், 

அவர் மிகுந்த ஆர்வத்துடன்  ரிமோட் கன்ட்ரோலை அழுத்தி கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ச்ச, கிருஷ்ணன் சிரித்தபடியே அதிகம் அலட்டிக் கொள்ளாமல் செத்தும் போகிறார்,

உள்ளூர் மக்களுக்கும் இந்த மரணதண்டனை நிரம்பப் பிடிக்கிறது, தண்டனை முடிந்ததும் குடையை விரித்து பிடித்தபடி வீடு திரும்புகின்றனர்.

தேர்தலில் இந்த ஆளும்கட்சியின் களபலி நல்ல mileage பெற்றுத்தருகிறது,  தேர்தல் முடிந்து வெற்றிவாகை சூடிய கையோடு சகாவு கிருஷ்ணனுக்கு சிகப்புபீடம் அமைத்து முதல் மரண சிம்மாசனப் பயனாளி என்று மார்பளவு சிலையை அமைத்திருப்பதைக் காட்டுகின்றனர்,

 அவர் பெயரில் கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் எழுப்படும் செய்திகளைக் கேட்பதுடன் இந்த ஒரு மணி நேர திரைப்படம் நிறைகிறது,

 அரசியல் நையாண்டி திரைப்பட ரசிகர்கள் இப்படத்தை அவசியம் பாருங்கள், அரசியல்வாதிகளுக்கு ஏழை மக்களின் உயிர் என்பது எத்தனை கிள்ளுக்கீரை போன்றது என்பதை படத்தின் அவல நகைச்சுவைக் காட்சிகள் நிரூபிக்கின்றன.

மரண சிம்மாசனம் திரைப்படம் மலையாள சினிமாவில் political satire ல் ஒழிவு திவசத்தே களி திரைப்படத்திற்கு எல்லாம் முன்னோடி என்றால் மிகையில்லை, கேரளத்தில் vipinல் உள்ள மஞ்சனிக்காடு தீவுக்கு அருகிலுள்ள நஜாரக்கல் தீவுக்கிராமத்தில் முழுப்படமும் மிகவும் குறைந்த பொருட் செலவில் தயாராகியுள்ளது இப்படம், 

இப்படம் முழுவதும் அமெச்சூர் தொழிற்நுட்கக் கலைஞர்கள் கொண்டு படமாக்கப்பட்டது,  கிருஷ்ணனின் மனைவி மட்டுமே தொழில்முறை நடிகை , அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கிராமத்தில் உள்ளவர்களை வைத்தே எளிமையாக சித்தரித்துள்ளனர், 

மரண சிம்மாசனம் திரைப்படம் 1999 Cannes திரைப்பட விழாவில் un certain regard  பிரிவில் திரையிடப்பட்டு அங்கு Caméra d'Or விருதை வென்றது. 

இத்திரைப்படத்திற்கு பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனத்தில் சிறப்பு வரவேற்பு கிடைத்தது. 

இத்திரைப்படம் கொண்டிருக்கும் அசாதாரண கருப்பொருளுக்காக 
Le Monde ஃப்ரெஞ்சு தினசரியிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.  

இத்திரைப்படம் Vienna திரைப்பட விழா , Torino திரைப்பட விழா, Toronto திரைப்பட விழா, Pusan திரைப்பட விழா, La Rochelle திரைப்பட விழா, Midnight Sun திரைப்பட விழா Lapland திரைப்பட விழா மற்றும் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனத்தைப் பெற்றது.

படம் யூட்யூபில் சப்டைட்டிலுடன் கிடைக்கிறது, இந்திய சினிமாவில் political satire ல் அகில உலக கவனம் பெற்ற பீப்லி லைவ் திரைப்படத்திற்கு எல்லாம் முன்னோடி இது, திரைப்பட ஆர்வலர்கள் மாணவர்கள்,சுயாதீன திரைப்பட இயக்குனர்கள்  அவசியம் பாருங்கள்.

https://youtu.be/DVhxZJZEZHk
 #மரண_சிம்மாசனம்,#முரளி_நாயர்,#மலையாளம்,#சுயாதீன_திரைப்படம்
எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)