ஈவிடம் ஸவர்கமானு [இந்தியா][2009]Evidam Swargamanu

 

டத்தின் கதை இன்றைய நிஜ வாழ்வில்  வெளிப்படையாகவே நடப்பதுதான். உங்களுக்கு  ஈரோடு மாவட்ட முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலராகவும் தமிழக அரசின் முன்னாள் கைத்தறி துறை அமைச்சருமாக பதவிவகித்து வந்த  என்.கே.கே.பி.ராஜாவை தெரிந்திருக்கும், ஈரோடு அருகே உள்ள பெருந்துறையை சேர்ந்த சிவபாலன் என்னும் விவசாயியின் மெயின் ரோட்டை ஒட்டிய பெரிய விவசாய நிலத்தையும் தென்னந்தோப்பையும் அபகரிக்க, அவரின் மொத்த குடுமபத்தையும் அடியாட்களை விட்டு கடத்தி, சிறைவைத்து  அவரின் வயதான மாமனாரையும் அடித்தே கொன்ற ஒரு மாபாதகர். அந்த வழக்கை பத்திரிக்கைகள் சடுதியில் மறந்திருக்கலாம், ஆனால் என்றாவது சத்தியம் ஜெயிக்கும் என்றிருக்கும் பொது மக்கள் மறந்திருக்க முடியாது,

ண்ணாசைக்கு அந்த கட்சி இந்த கட்சி என எந்த கட்சியும் விதி விலக்கல்ல, அரசியல்வாதிகள் எப்போது நம் நிலத்தை [என ஒன்று இருந்தால்] இதுபோல அடித்து பிடுங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நிலத்தை கொடுத்துவிட்டால் உயிராவது மிஞ்சும். என்ன சரிதானே?!!, அந்த சம்பவத்தை அப்படியே நேரில் பார்ப்பது போல இப்படம், என்ன ஒன்று !!! படத்தின்  முடிவில் சத்தியம் ஜெயிக்கிறது!!குற்றவாளிகள் தண்டனை அடைந்தனர்.  ஆனால் நிஜத்தில் இல்லை.:(

ந்தப் படத்தை பாராட்ட எத்தனையோ?  காரணங்கள் உண்டு,  பொல்லாதவன், அஞ்சாதே போன்ற  படங்கள் நமக்கு மிகவும் தாக்கத்தை உண்டாக்கியதற்கு காரணம் என்ன? !!!  பொல்லாதவனில் திருடப்படும் ஒரு பைக்கை எப்படி ? பைக்  திருடர்கள் பேட்டைக்குள் கடத்திப்போய் சில நாட்கள் மணலுக்குள் பதுக்கியபின்,   லாவகமாக பாலீத்தின் சுற்றி கண்டெய்னர் லாரியில் ஏற்றி  இலங்கை, நேபால், வங்காளம், போன்ற நாடுகளுக்கு அனுப்புகின்றனர்?!!,  கடத்தப்படும் பைக்கில் எப்படி ப்ரவுன் சுகர், கஞ்சா போன்ற  போதைப்பொருட்கள் அடைத்தும் கடத்துகிறார்கள்?!!! , என ஆணிவேரையே வெளியே உருவியதுபோல படம் பிடித்திருப்பார்கள். அது சொன்ன சேதி புதிது.

ஞ்சாதே-ல் பணத்துக்காக பணக்கார குழந்தைகள், கல்லூரிப்பெண்களின்  கடத்தல் எப்படி நிகழ்கிறது? கடத்தல்காரர்களின் அகோரமுகம், அவர்களின் தொழில் ரகசியம்,  கடத்தல்காரர்களை ஒடுக்கப் போராடும் நேர்மையான போலீசாரின் ஆழ்ந்த அற்பணிப்பு இவற்றை  நட்பு என்னும் தனி இழையோடு சேர்த்து மிக அழகாக சொல்லியிருப்பார்கள்.

துபோலவே இந்த படத்திலும், அமீக்கஸ் கூரி [Amicus curiae]  என்றால் என்ன? எப்படி பொதுநல வழக்கு போடவேண்டும்?. மோசடியை மோசடியால் வெல்வது எப்படி ? போலிச்சான்றிதழ்கள், போலிப்பத்திரங்கள், எப்படி தயாரிக்கப்படுகிறது? கம்யூனிஸ்ட் கட்சியின் இரட்டைத்தன்மை,   எப்படி கேடுகெட்ட ,பேராசை கொண்ட நிலத்தரகர்கள்  100 வருட பழமையான சொத்தின் முத்திரைத் தாளையும் கூட, தயாரித்து அடுத்தவரின் அரிய சொத்தை தனதாக்கிக் கொள்கின்றனர்?, கிரயம் செய்யும் நிலத்தில் எத்தனை வகை உண்டு? எப்படி ஒரே சொத்தை பலருக்கு தரகர்கள் இலகுவாக விற்கின்றனர் ?, எப்படி கேடுகெட்ட அரசியல்வாதிகள், அரசு ஏழைகளுக்கு இலவசமாக வழங்கிய  நிலத்தை ஒரு அமைச்சரின் கைக்கூலிகள் எப்படி மொத்தமாய் சுருட்டி கையப்படுத்துகிறார்கள்?!!!

மேலும் நில மோசடிக்காரர்களுக்கு துணைபோகும் கேடு கெட்ட போலீசார், மாஜிஸ்த்ரேட்.  சப் ரெஜிஸ்ட்ரார், என்று நெஞ்சை படபடக்கச்செய்யும் திகிலுடன் குடும்பம், நட்பு, காதல் என்னும் பிரதான இழையுடனும் சேர்த்து சொல்லியிருக்கின்றனர் ,

தில் புவனேந்திரன் என்னும் மோசடி டாகுமெண்ட் ரைட்டராக வந்த ஜெகதி ஸ்ரீகுமாரை மிஸ்டர் ஃப்ராட் என்றே அழைக்கலாம், அப்படி ஒரு கன கச்சிதமான வேடப்பொருத்தம். லாஜிக் மீறல் இல்லாத படம் பார்க்க நினைப்போர், அவசியம் பார்க்க வேண்டியபடம் இது .
ரண்டாவது சிறப்பம்சம் மோகன்லாலை படத்தில், காற்றாலை வைத்து தனக்கான மின்சாரத்தை தானே தயாரித்துக்கொள்ளும், 150 அரிய வகை கறவை பசுக்களை தொழுவத்தில் பாடல் ஒலிபரப்பி, பால்கறக்கும்,  இயற்கை மண்புழு உரம் போட்டு மா, தென்னை, பலா, நெல் விதைக்கும், கோழிப்பண்ணையும் வைத்திருக்கும் ஒரு அல்ட்ரா மாடர்ன் விவசாயியாக  சித்தரித்திருந்தது எனக்கு மிகவும் பிடித்தது,

டம் பார்க்கும் அனைவரையும் கவரும் என்பது திண்ணம், நகரவாசிகளான நாம் தான்  இந்த அவசரயுகத்தில்   இயற்கை எழில், மாசற்ற நீர், காற்று, கால்நடைகள் , பச்சை வயல்,ஓங்குதாங்கான மரங்கள், தோப்புகளை அனுதினமும் எப்படி  இழக்கின்றோம்?!! ,  அவற்றிலிருந்து எப்படி அந்நியப்பட்டு  நிற்கிறோம்?!! என்றும்   நிச்சயம் உணர்த்தும்,
 
நாம் வாழும் காங்கிரீட் காட்டுக்குள் ஒரு சிறு மரக்கன்றாவது நடும் எண்ணத்தையும் இப்படம் தோற்றுவிக்ககூடும். இதுபோல எண்ணம் விதைக்கும் படங்கள் அதிகம் வரவேண்டும், அதை மக்களும் கொண்டாடி வரவேற்கவேண்டும். மோகன்லால் என்னும் மகாநடிகரின் படு இயல்பான நடிப்பில் உருவான மற்றொரு படம்.

பாரதியாரின் காணி நிலம் வேண்டும் என்னும் பாடலின் பொருளை புரிந்து அமைத்தது, நடித்தது போல இருந்தது மோகன்லாலின் தன் மூன்று ஏக்கர் பூமியின்  மீதான பாசமும், நேசமும்.

சில கொடியவர் அதை அபகரிக்கையில் சாம,பேத,தண்டம் இவை மூன்றையும் எடுக்கிறார். படம் பார்க்கும் ஒருவருக்கு நம் நிலமே பிடுங்கப்பட்டது போல வெகுண்டு எழ வைக்கும், அலட்டலில்லாத நிஜமான நடிப்பு. என்னே ஆளுமை?!!!. ஸ்டீரியோ டைப் நடிப்பை பார்த்து நொந்துபோன  நம் கண்களுக்கு ஆகச்சிறந்த மாற்று, 300 படங்களை செய்தும் துளியும் பந்தாயில்லை, 4 தேசிய விருதுகள் இவரது கிரீடத்தில். இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

திலகன் ஒரு மகத்தான பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் நடிகர்,  இவர் ஸ்படிகம் என்னும்  படத்திலும் மோகன்லாலின் கொடுங்கோல் டீச்சர் அப்பாவாக வந்து அதகளம் செய்திருப்பார், இதிலும் ஜெர்மியாஸ் என்னும் ஆர்ப்பாட்டமில்லாத ஒர் கிருஸ்துவ விவசாயி அப்பா வேடம். அவர் மனைவி எல்சம்மாவாக கவியூர் பொன்னம்மா, இது கம்பெனி நடிகர்கள் என்பது போலான ஒரு குடும்ப கேங்க்,  சுகுமாரி வேறு சித்தியாக, பாசக்கார குடும்பம்.  இதில் மேத்யூஸாக வந்த மோகன்லாலுக்கு  மூன்று ஜோடிகள் , அழகிய முதிர்கன்னி லஷ்மி கோபாலஸ்வாமி, அழகிய அரசு வழக்கறிஞர் லஷ்மிராய், தனியார் டிவியில் காம்பியரரான ஷப்பியான ப்ரியங்கா, 
தே மூன்று நடிகைகளை வைத்து தெலுங்கிலோ, தமிழிலோ?!!!   படமெடுத்திருந்தால் மூன்று பேரையும் மழையில் ஆடவிட்டு சாத்துகுடி ஜீஸ் போட்டது போதாமல், இவர்களின் அம்மாக்களையும் வேறு எக்குதப்பாய  நாயகனோடு இணைத்து டூயட் பாடவும்,ஆடவும் வைத்திருப்பார்கள். சோ சேட். இதில் நாயகிகள்  ஒருவருடனும் மோகன்லாலுக்கு டூயட்டே இல்லை,  என்ன ஒரு அக்கிரமம்?!!!

டத்தின் வசனங்கள் செம கூர்மை,குறிப்பாக நேர்மையான அரசு வழக்கறிஞர் பிரபலன் [சீனிவாசன்] பேசும் ஒரு நறுக் வசனம் சபாஷ் சொல்ல வைக்கும்.அது ஒரு கூட்டமில்லாத சாலை,எதோ லேகியம் விற்பவன் ,பரிசுச் சீட்டு விற்பவன் போல பிரசார ஜீப்பில் ஏறி மைக் பிடித்த சீனிவாசன், படபடவென  மருத்துவக்கல்லூரிகளில் உடல்தானத்தில் நடந்து வரும்  முறைகேடுகளை ஊழலை அரசு விரைவில் எடுத்து விசாரிக்கவேண்டும் , பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்கிறார். மைக்கை அணைக்கிறார், இறங்குகிறார்.

யாரும் இவரை கவனிக்கவில்லை, இவரும் அதை கண்டுகொள்ளவில்லை, இதைப்பார்த்து பரிதாபமும் ஏளனமும் தொணிக்க மோகன்லால் ,நீங்கள் ஏன் ? இப்படி உங்கள் பொன்னான நேரத்தை யாருமே கவனிக்காத விஷயத்துக்கு செலவிடுகிறீர்கள்? என்கிறார், அதற்கு அவர் எல்லோரின் கவனமும் வேண்டுமென்றால் நான் கேபெரே தான் நடத்தனும்,

நான் கையடி[கைதட்டல்] வேண்டி இதை செய்யவில்லை, தானுண்டு தன் வேலை உண்டு என்று சாலையில் செல்லும் நூறு பேரில் ஒருவன் இதை காதில் கேட்டு இவன் என்ன சொல்கிறான்? என்று ஒரு கணம் சிந்தித்தாலே அது தனக்கு கிடைத்த வெற்றிதான் என்கிறார். என்ன ஒரு பொறுமை, தீர்க்கதரிசனமான தொலைநோக்கு பார்வை, இது போல படம் முழுக்க நிறைய சிலேடையான, கருத்தாழம் பொதிந்த வசனங்கள், காணக்,கேட்க கிடைக்கும்,

ற்றும் ஒரு காட்சியில்  உள்ளூர் யானை ஒன்று உலக அதிசயமாக இரட்டை குட்டியை ஈன்றிருக்கும், அதை தொலைக்காட்சிக்கு கவர் செய்ய வரும் பெட்சியிடம் [ப்ரியங்கா] அந்த ஊர்த்தலைவர்,யானை இரட்டை குட்டி போட்டதற்கு காரணம் நான் தான் என செய்தியில் வருமாறு செய்ய சொல்வார், அதற்கு மோகன்லால் ஸ்பாண்டேனியசாக என்ன?!! யானை இரட்டை குட்டி போட்டதற்கு நீங்கள் காரணமா?!!! எனக்கேட்டு சிரித்து மடக்குவார், அவர் உடனே மறுத்து இல்லை இல்லை, நான் குடிலுக்கு ஏசி யும் மெத்தையும் போட்டு கொடுத்தேன் என்பார்.அமர்க்களம்.

ஷ்மி கோபாலஸ்வாமி செம அழகு, கண்டிப்பான கூட்டுறவு வங்கி உயர் அதிகாரி வேடம் இவர் பரம்மரத்திலும் கலக்கியிருப்பார். லஷ்மிராய்க்கு கண்டிப்பான அரசு வழக்கறிஞர் வேடம் பார்வையிலேயே எள்ளும் கொள்ளும் இருவருக்கும் வெடிக்கிறது . பிரியங்கா துரு துருவென அழகிய டிவி காம்பியர்,,சிரித்த பெரிய முகம்,  மூவருமே நல்ல அழகிகள், படித்தவர்கள், அன்பானவர்கள், இறுதியில் மோகன்லால் இந்த மூவரில் மனைவியாக தேர்வு செய்தது  யாரை? அது ஏன் ? என்பதும் மிகவும் சுவாரஸ்யம்.

வில்லன் அலுவா சாண்டியாக வந்த லாலு அலெக்ஸ் , மோகன்லாலின் ஆப்த நண்பராக வந்த ஷங்கர் போன்ற ஏனைய பாத்திரங்களும் மிகவும் உணர்ந்து செய்திருந்தார்கள். மொத்தத்தில் இது போல படங்கள் மலையாளத்தில் வருவது மலையாளிகளின் மற்றொரு கொடுப்பனை.

மோகன் சித்தாராவின் இரு பாடல்கள், பிண்ணணி இசை இனிமை, இதில் இசைப்புயலின் எந்த இசைக்கோர்வையையும் இவர் பயன்படுத்தவில்லை, திவாகரின் கேமரா அருமை, இப்படி ஒரு படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸுக்கு நன்றி, இவர் ஏற்கனவே உதயானுதாரம்,நோட்புக் போன்ற சிறப்பான படங்களை இயக்கியுள்ளாராம். அதையும் பார்க்க ஆவலெழுகிறது.உதயானு தாரம் தான் தமிழில் வெள்ளித்திரையாக வந்ததாம்.

படத்தில் கடைசியில் ஹோட்டலில் வைத்து நிலத்தை ரெஜிஸ்டர் செய்யும் காட்சியை ஒருவர் வாழ்நாளில் மறக்கவே முடியாது, ரோப் கட்டி எடுக்காத இயல்பான தெருச்சண்டை போடுவது போலான, ஒரு சண்டைக்காட்சியும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று.

ஈவிடம் ஸவர்கமானு=சொர்க்கம் தான் சந்தேகமேயில்லை

=======0000=======
இப்படம் முழவதும் யூட்யூபில் ஆங்கில சப்டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது,
படத்தின் யூ ட்யூப் முன்னோட்ட  காணொளி:-

=======0000=======

கர்நாடக இசை கச்சேரியில் தாளம் போடுவது எப்படி? !!!

ருமை நண்பர்களே!!!
இந்த வாரம் ஆனந்தவிகடனில் சாருவின் மனம்கொத்திப்பறவை-13 ஆவது அத்தியாயமாக முழுக்க கர்நாடக இசைக்காக அற்பணிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதில் நான் மிகவும் ரசித்த பத்தி |கர்நாடக இசைக் கச்சேரியில் தொடையில் தாளம் போடுவது எப்படி ?| என்பது தான் , சாரு அதை மிக அழகாக எளிமையாக விளக்கியுள்ளார். இதை உங்களுக்கும் பகிரத்தோன்றியதால் பகிர்ந்தேன்.[நன்றி ஆனந்த விகடன்+கருந்தேள்]

சினிமா இசை தவிர்த்து, நல்ல உயர்தரமான கிளாஸிக்கல் இசையைக் கேட்டு ரசிப்பதற்கு நான் ஜெயகாந்தனுக்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் அப்போது எழுதிக்கொண்டு இருந்த உரத்த சிந்தனை பத்தியில்தான் கல்விச் சாலைகள் நமக்குக் கற்பிக்க மறந்துவிட்ட வாழ்வின் அற்புதங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தார். 'கறுப்பு சிவப்பு' குடும்பமான என் வீட்டினர், சினிமா பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தபோது, நான் சனிக்கிழமை இரவுகளில் ஒலிபரப்பாகும் ஆகாஷ்வாணியின் சங்கீத் சம்மேளனைக் கேட்டுக்கொண்டு இருப்பேன்.
ஆனால், ஆர்வக் கோளாறினால் சில அசம்பாவிதங்களும் நடந்தது உண்டு. 70-களின் பிற்பகுதி. சென்னை நகரம் எனக்குப் புதிது. அதுவரை வானொலியில் கேட்டு ரசித்த இசை மேதைகளை நேரில் கேட்கலாம் என்று டிசம்பர் சீஸனில் மியூஸிக் அகாடமி சென்றேன். ரசிகர்கள் எல்லோரும் தொடையில் தட்டித் தட்டிக் கேட்பதைப் பார்த்துவிட்டு, நானும் தட்ட, எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்ததும் லஜ்ஜையாகிவிட்டது. அப்புறம்தான் அதில் உள்ள தாள கதியைப்பற்றிப் படித்து அறிந்துகொண்டேன்.

தாளம் என்றால் வெறுமனே நான் தட்டியது போல் இஷ்டத்துக்குத் தட்டுவது அல்ல; முதலில் தொடையில் உள்ளங்கையால் ஒரு தட்டு. பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும். அடுத்து, தொடையில் உள்ளங்கையால் தட்டி, பிறகு கையைப் புரட்டிப் போட்டுத் தட்ட வேண்டும். இதையே இரண்டு முறை செய்தால், ஒரு சுற்று முடிந்தது. 1+3+2+2 ஆக, இந்த ஒரு சுற்று எட்டு நிலை களைக்கொண்டது. இது ஆதி தாளம். ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று தாளங்களில் ஏழு வகை உள்ளன. ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பார்கள். ஜாதி என்றால், வகை. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து ஜாதி. இதற்கு அடுத்து ஐந்து நடைகள். ஆக, 7X5X5 = 175 வகைகளில் தாளம் செய்ய முடியும். இது தெரிந்த பிறகுதான் முடிவு செய்தேன். கர்னாடக, இந்துஸ்தானி சங்கீதத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வோம், எழுதக் கூடாது என்று!

நீலத்தாமராவும் யேசுதாஸின் |சித் நா கரோ|என்னும் பொக்கிஷமும்!!!


 அருமை நண்பர்களே!!
நீலத்தாமரா என்னும் மலையாள திரையுலகின் முதல் ரீமேக் படம் பார்த்தேன், என்னத்தச் சொல்ல?!!! அபாரம், ரம்மியம், வித்யாசாகரின் அற்புதமான இசையும், வயலார் சரத் சந்த்ர வர்மாவின் பாடல்களும் செவிக்கினிமை, இசைக்கு மொழி கிடையாது , என்பது மீண்டும் நிரூபனமானது, [படம் பற்றியான என் பார்வையை விரைவில் எழுதுவேன்]

டத்தின் ஐந்து பாடல்களுமே அருமை, அவசியம் கேளுங்கள், உங்களுக்கு கர்நாடக சங்கீதம் கேட்க பிடிக்கும், என்றால் இன்னும் அருமையான சுகானுபவத்தை தரும்,நீலத்தாமரா படத்தின் பாடல்களை தரவிறக்க

னக்கு  படத்தில் வந்த பிரதான  பாடல்கள் எல்லாவற்றையும் விடவும் இப்பாடலே உள்ளம் கொள்ளை கொண்டது,  அழகிய பணிப்பெண்  அர்ச்சனா கவியை ப்ராக்கெட் போட, படித்த பணக்கார மைனர்  கைலாஷ் , யேசுதாசின் மனம் மயக்கும் குரலில் வெளிவந்த சித் நா கரோ அப் தோ ருகோ என்னும் 1979ஆம் ஆண்டு வெளியான Lahu Ke Do Rang  படத்தின் பாடலை, தன் நேஷனல் பானசோனிக் டேப்ரிகார்டரில்  ஒலிக்கச்செய்ய,  பழம் நழுவி பாலில் வலிய வந்து விழுந்தது போல சிட்டு மைனருக்கு மடிகிறது, 

டடா!!! , வியந்து கொண்டே இருக்க வைக்கும் யேசுதாசின் வசீகரக்குரல், எப்படி ?!!! சுப்ரமணியபுரம் படத்தில் இசைஞானியின் சிறுபொன்மணி அசையும் என்னும் கல்லுக்குள் ஈரம் பாடலை வைத்தே 80களின் நோஸ்டால்ஜியா கிரியேட் செய்தனரோ?!!  மலையாளத்துக்கு அப்படி ஒரு அபாரமான முயற்சி !!!,


வசியம் கேளுங்கள்.  இனியாவது புதிய படங்களில் 70,80 களின் பாடல்களை ரீமிக்ஸ் செய்து கெடுத்து பாழடிக்காமல், உள்ளது உள்ளபடி  அப்படியே பிண்ணணியில் வழியவிட்டால் கோடி புண்ணியமாகப்போகும், புதிய சந்ததியினருக்காவது ஒரிஜினல் அப்படியே போய்ச்சேரும், 

ப்போது திரைபடங்களில் வரும், அநேகமான உப்பு சப்பில்லாத இசையையும் பாடல்களை கேட்டு போரடித்துப்போன செவிகளுக்கு ஆகசிறந்த மாற்றாக இருக்கும் என்பது திண்ணம். 70களும் 80 களிலும் இவற்றை அனுபவித்து திளைத்திருந்த பெரிசுகள் தான் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என்றும் தோன்றியது!!!
====0000====
நம்பாவிட்டால் நீங்களே பாருங்கள்:-

இது அனுராகவிலோச்சனனாயி என்னும் தேவாம்ருதம்:-

தன்மாத்ரா [2005][இந்தியா]Thanmathra[அணு]

ந்தைகளின் பெருமை பேசும் படங்களில் நிச்சயம் இப்படத்துக்கும் நீங்கா இடமுண்டு, ஒவ்வொரு காட்சியும் உண்மைக்கு வெகு அருகே  பயணிப்பதால் நமக்கு காண்பது திரைப்படம், என்றே மறந்துபோய் அடுத்து என்ன நடக்கும்?!!  என சஸ்பென்ஸை தக்க வைக்கும் , அப்படி ஒரு நேர்த்தி உண்டு  ப்ளெஸ்ஸியின் ஆழ்ந்த அற்பணிப்பினுடன் கூடிய இயக்கத்தில்,


ன் குருநாதர் மலையாள திரையுலக ஜாம்பவான், பத்மராஜனின் கதையான ஓர்மாவை எடுத்து திரைக்கதை எழுதி அழகுக்கு அழகு சேர்த்துள்ளார். சேது ஸ்ரீராமின் காமிரா மிக அழகும் அருமையும், குறிப்பாக திரைக்கதையுடன் ஒட்டி உறவாடும் மூடுக்கு தகுந்தது போல மாறும் ஒளியமைப்பு குறிப்பிடவேண்டியதும் ஆகும் ,

இயக்குனர் ப்ளெஸ்ஸி
டத்தின் பாத்திரங்களின் அற்பணிப்பு,  அடடா!!!, அவர்கள் ஒரு குடும்பமாகவே வாழ்ந்துள்ளதை உணரமுடிகிறது. மோகன்லால், வாவ்!!!என்ன ஒரு ஆளுமை, சமகால இயல்பான நடிப்பின்  அசைக்கமுடியாத  ட்ரெண்ட்செட்டர்!!! இவர் , சிரிக்கையில் நாமும் சிரிக்கிறோம், அழுகையில் உணர்ச்சிவசப்படுகையில் நாமும்.  இப்படி ஒரு கதாபாத்திரம் , அதை எடுத்தாண்ட விதம், அதன் மகத்தான ரிசல்ட், அடடா, வியந்துகொண்டே இருக்க வைக்கும். குறிப்பாக படத்தில் மோகன்லால், மீராவின் நேர்மையான திணித்தலில்லாத கெமிஸ்ட்ரி வியக்கவைக்கும், படத்தின் பக்காபலமாக அப்பா நெடுமுடிவேணுவும், நண்பன் ஜெகதி ஸ்ரீகுமாரும் இப்படி நமக்கு வாய்க்கவில்லையே என ஏங்கவைக்கும்.

கேரளமக்களின் கல்வி முறையில், மத்திய, மாநில அரசு வேலைகளே  இன்னமும் பிரதான தேர்வாகும் , ஆகவே அவர்களை இந்திய மாநிலங்களில் அதிகம் ஆட்சியாளர்களாக, அதிகம் காணமுடிகிறது. அப்படி ஐஏஎஸ் ஆகமுடியாமல் தோற்ற ஒரு தாத்தா, நெடுமுடிவேணுவும்,ஒரு அப்பா ரமேஷன் நாயரும் [மோகன்லால்] , தன் மகன்  மனுவை [அர்ஜுன்லால்] எப்படியும் ஐஏஎஸ் ஆக்கிவிடவேண்டும் எனக் கண்ட கனவு பலித்ததா?  என்பதை மிக அருமையாக மனதை நகர்த்தும் நவரசங்களுடன் கலந்து தந்துள்ளனர்.

படத்தின் கதை:-
கேரள சட்டசபையில் செகரெட்ரியாக பணியாற்றும் ரமேஷன் நாயர்  [மோகன் லால்] நேர்மையாக பணியாற்றி நல்ல பெயரெடுத்தவர், அழகிய மனைவி லேகா [மீராவாசுதேவன்],  படிப்பில் புலியாக மகன் மனு[அர்ஜுன்லால்],அழகு மகள்  மஞ்சு ,வாடகை வீட்டில் இருந்தாலும் கௌரவமான  சிறிய அழகான குடும்பம், மிகுந்த சிரமத்துக்கிடையில் தன் அலுவலக நண்பர் ஜோசப் [ஜெகதி ஸ்ரீகுமார்] மூலம் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கிறார். 

கனின் படிப்பைப்பற்றியே சதா சர்வகாலமும் சிந்திக்கிறார். மகன் படிக்கையில் கூட அமர்ந்து வினா விடை நடத்தி கூடிப் படிக்கிறார். மொத்தத்தில் வேலை செய்யும் இடத்திலும்,மகனின் பள்ளியிலும், அக்கம்பக்கத்து குடித்தனவாசிகளும் ஆச்சரியப்படும், பொறாமைப்படும் ஆளுமையாக திகழ்கிறார். மகனை நண்பனாகவே நடத்துகிறார். மனைவியை தோழியாகவே நடத்துகிறார். மனைவியிடம் எதையுமே மறைத்ததில்லை,தன் இளமைக்கால அத்தை மகள் ஷோபாவின் மேலான காதல் உட்பட. அதுபோலவே மகனும் தன் பள்ளியில் காதலிக்கும் பெண்ணைப்பற்றி அப்பாவிடம் மட்டும் பகிர்கிறான். மனு பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான்,


ரு மனிதனின் வலப்பக்க மூளைதான் கடினமான கணக்குகள்,வாய்பாடுகள் சூத்திரங்களை நினைவு கொள்கிறது, அவற்றை எப்படி விருப்பமான பாடல்கள், சம்பவங்கள், மூலம் நினைவில் ஏற்றுவதன் மூலம் இடப்பக்க மூளையையும் உபயோகிப்பது?!!, என அப்பாவும் மகனும் பள்ளிகளில் விளக்கும் காட்சிகள் அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளன எனலாம்.

ம் வீடுகளில் பல வருடங்கள் முன்பாக, ஹார்லிக்ஸ் வாங்கியதற்கு ஒரு பூப்போட்ட கண்ணாடி நீர் ஜாடி இலவசமாக வந்திருக்கும். அதை மனு ஒரு காட்சியில் குற்ற உணர்வின் மிகுதியால் கீழே போட்டு உடைத்து விட்டு அழுவான். அம்மா லேகா அது இலவசமாக வந்தது தான்டா ,என தேற்றுவாள், படத்தின் லாஜிக்கலான தள அமைப்புக்கு இக்காட்சி ஒரு உதாரணம். [எத்தனையோ படங்களில் நடுத்தர வீட்டை காட்டுகிறேன் என்று நாடகத்தனமாக லக்ஸுரியான லிவிங்ஸ்டைலை அமைத்துவிடுவர். அவர்கள் இதைபார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.]

ன் வயதான டீச்சர் அத்தை இறந்து விட, ரமேஷன் நாயர் வாடகைக்கார் அமர்த்தி குடும்பத்துடன் சொந்த கிராமம் சென்று வருகிறார். அப்பா நெடுமுடிவேணு அப்படி ஒரு பாசக்காரத் தந்தை, நீ ஏன் இவ்வளவு செலவு செய்துகொண்டு வந்தாய்? அத்தை உனக்கு அவள் மகளை மணமுடிக்காமல் துபாய் வேலைக்காரனுக்கு மணமுடித்தது மறந்துவிட்டதா? என கடிந்துகொள்கிறார்.உடனே குட்டிப்பேத்தி மஞ்சு அதனால் தானே அம்மா மருமகளாய் வரமுடிந்தது என மடக்குவது அருமை.இப்படி வசனங்கள் ஒவ்வொன்றும் அழகு,நாம் பல சமயத்தில் உபயோகிப்பவையே!!!


மேஷன், அத்தை மகள் ஷோபா [சீதா] குடிகாரக்கணவனிடம் படும்பாட்டை பார்த்து வருந்துகிறார். மனைவிக்கு அழகாக கொசுவம் வைத்து புடவை கட்டியும் விடுகிறார். நேரம் கிடைக்கையில் சமையலறையில்  புகுந்து நளபாகம் செய்தும் அசத்துகிறார்.அப்பாவுக்கு எண்ணெய் தேய்த்து கால் விரலுக்கு நெட்டும் எடுத்து விடுகிறார். ஷோபாவுக்கும் உள்ளூர தனக்கு இது போல ஆப்த கணவன் கிடைக்கவில்லையே என அதிக வருத்தமிருக்கிறது,

ருக்கு கிளம்புகையில், ரமேஷன் திருவனந்தபுரத்தில் ரெண்ட-காருக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும், நண்பன் ஜோசப் மூலம் தான் விரைவில் ஒரு செகண்ட்  ஹாண்ட் கார் வாங்கி வாடகைக்கு விடப்போவதாகவும் அப்பாவிடம் அனுமதிக்குவேண்டி சொல்கிறார், மேலும் கிராம பூர்வீக வீட்டுக்கு எதிரேயே கார் வந்து நிற்கும் படி பாதையும்  அமைக்க சொல்லிகிறார், அப்பாவோ,?!! அதற்காக  பாக்கு தேக்கு மரங்களை வெட்ட முடியாது என்கிறார்.

னக்குத்தான் ஜோசப் இருக்கிறானே!! அவனையே கேட்டு எல்லாம் செய், என பொய்யாய் கோபிக்க, ரமேஷன்,சரி உன் பாக்கு,தேக்கு மரத்தை கட்டி அழு, நான் அடுத்த முறை காரை வெளியிலேயே நிறுத்திக்கொண்டு இந்த நூறு படிகளை ஏறிவருகிறேன், என கோபமாக சொல்லிவிட்டு காரில் புறப்பட, மனைவி லேகா  ஏன்? இப்படி ஒவ்வொரு முறையும்,அப்பாவிடம் கோபித்து ஊருக்கு புறப்படுகிறீகள் எனக்கேட்க, அது அப்படித்தான்,அப்பா அப்போதுதான் என் பிரிவுக்கு வருந்தமாட்டார், இன்று முழுக்க என்னை திட்டி தீர்த்துக் கொண்டே கழிப்பார், பிரிவு மறந்து போகும், என ஆறுதல் சொல்லும் காட்சி அற்புதமான ஒன்று.

மேஷன் நாயர் தன் வாழ்வில் மனைவியை மிகவும் ரசிப்பதற்கும் , மதிப்பதற்கும் தான் 10ஆம் வகுப்பில் மனனம் செய்து பாட்டுப்போட்டியில் பாடிய பாரதியாரின்  காற்று வெளியிடைக்கண்ணம்மா என்னும் பாடலே காரணம்., என்று மகனின் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் மிக அழகாக எல்லோருக்கும் அதை பாடியும் காட்டுகிறார்.


[படத்தில் காற்றுவெளியிடை கண்ணம்மா என்று துவங்கும்  பாடல் பரப்ப்ரம்ம ரூபா என்னும் மாண்டேஜ் பாடலாய்  கர்நாடக இசையில் பிரவாகமெடுக்கிறது] நம் தமிழர்கள் எத்தனைபேர் பாரதியார் பாடல்களை மனனம் செய்திருப்போம், அல்லது புரிந்து பாடியிருப்போம்.  இன்னொரு காட்சியில் திருக்குறளை மேற்கோள் காட்டி நிகழ்த்த முடியாதது ஒன்றுமில்லை என்பதும் கவிதை.

ப்படி நன்றாக போய்கொண்டிருந்த குடும்ப வாழ்வில் பேரிடி ஒன்று விழுகிறது, எப்படி தெரியுமா?அல்சிமெய்ர் என்னும் கொடிய நினைவு பிழறல் நோய் வடிவில்.
மேஷன் முக்கியமான ஒரு ஃபைலை வீட்டுக்கு   கொண்டு வந்தவர்,அதை  ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் வைக்கிறார். மனைவியுடன் உடலுறவு கொள்கையில், சுவற்றில்  பல்லியைப்பார்த்துவிட்டு கவனம் சிதறியவர்,அப்படியே எழுந்து ஒரு குச்சியால் சிறுவன் போல பல்லியை தட்டுகிறார். மனைவி லேகா நொறுங்கிப்போகிறாள்.காலையில் பல்துலக்குகையில் மகனின் டூத்ப்ரஷில் பல்விளக்குகிறார்.


ப்படியே சமகால நினைவுகள் சுத்தமாக வடிந்தவர் போலாகிறார். நினைவுகள் வருகின்றன, போகின்றன, எல்லாவற்றுக்கும்  உச்சமாக  ஸ்கூட்டரில் சாவியை டிக்கியில் டிஃபன் பாக்ஸ் வைக்க திறந்து பூட்டியவர், அதை எடுக்காமலே ஸ்கூட்டரை உதைத்து அது ஸ்டார்ட் ஆகவில்லை,என தள்ளிக்கொண்டும் வருகிறார்.


கன் எடுத்துச்சொன்னதும் நம்பவில்லை, சாதிக்கிறார்.  மகனை பள்ளியில் விட வந்தவர், பள்ளி கடந்து போனது  தெரியாமல் ரோடு தாண்டி வந்துவிடுகிறார். மகன் இறங்கிக்கொள்ள, ஆஃபீஸ் விட்டுவிட்டது என நினைத்துக்கொண்டு காய்கறிக்கடையில் கீரையும், தக்காளியும்,காய்கறிகளும் வாங்கியவர், ஸ்கூட்டரை அங்கேயே மறந்து விட்டு ஆட்டோ பிடித்தவர் , போகுமிடம் சொல்லத் தெரியாமல் செகரெட்ரியேட் கட்டிடம் பார்த்து இறங்குகிறார். ஆட்டோகாரர் நிறைய சுற்றவைத்துவிட்டீர்கள், எனச்சொல்லி ரூ 200 கேட்கையில் திகைக்கிறார்.


ஃபீஸுக்குள் நுழைந்ததும் நண்பர் ஜோசப் எதிர்கொள்ள, குறுகுறுக்கிறார், சுயநினைவுக்கு வந்தவர் காய்கறியை எங்கே வைக்க?,என்று கேட்க அதை  ஜோசப் வாங்கிச்செல்ல, இவர் அவரின் பின்னே  ஆஃபீசுக்குள் நுழைந்தவர், பெண் ஊழியர்களுக்கு எதிரேயே சட்டையை கழற்றி கப்போர்டில் மாட்டுகிறார். பெண் ஊழியர்கள் அலற ரசாபாசமாகிறது, நண்பர் ஜோசப் பயந்தபடி ரமேஷன் சரக்கடித்திருக்கிறாரா? வாடை வரவில்லையே, ஓட்கா, ஜின் எதானுமா? கஞ்சாவா? என்று பயந்து கழிவறை கூட்டிச்சென்று முகம் கழுவ அனுப்ப,


ள்ளே வந்த ரமேஷன், மேலே ஷவர் இல்லாதது கண்டு திகைத்து பக்கெட் நீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொள்ள, அங்கே வெளியே இவரின் ஸ்கூட்டரை இவரிடம் திரும்ப கொடுக்க எடுத்து வந்த காய்கறிக்காரர் ஜோசப்பிடம் சாவியை கொடுக்க, ரமேஷன் ஆவேசமாய் வெளியேறியவர். காய்கறிக்காரனை பிடித்து அடிக்கிறார். ஸ்கூட்டரை அவன் திருடிவிட்டான் என பிதற்றுகிறார். ஜோசப் இவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீட்டுக்கும் தகவல் அளிக்கிறார்.


மேஷனின் அப்பா பதறியபடி வந்து சேர்கிறார். மனு மாடல் எக்ஸாம்கள் மறுநாள் துவங்க, நான் போகமாட்டேன்,என்று அப்பாவின் தலைமாட்டிலேயே உட்கார்ந்து கொள்கிறான்.  ஒவ்வொரு அணுவிலும்,அசைவிலும் அப்பாவையே உணர்கிறான்.  இப்போது படிப்பைவிட அப்பாவின் உடல்நலனே அவனுக்கு பிரதானம். அம்மா லேகா நொறுங்கிப்போகிறாள்.


இனி என்ன ஆகும்?
1.புத்திசாலியான ரமேஷன் எதனால் இந்நோய்க்கு ஆட்பட்டார்?
2.ரமேஷன் அல்செய்மெய்ர் நோயிலிருந்து விடுபட்டாரா?
3.ரமேஷனின் செகரெட்ரி வேலை என்ன ஆனது?
4.ரமேஷன் விரும்பியபடியே டபுள்பெட்ரூம் ஃப்ளாட்டும்,செகண்ட் ஹாண்ட் காரும்  வாங்கினாரா?
5.மகன் மனு ஐஏஎஸ் ஆஃபீஸர் ஆனானா?


போன்றவற்றை நெகிழ்ச்சியான சம்பவங்களின் கோர்வையுடன் டிவிடியில் பாருங்கள், இன்றைய தமிழ்படங்கள் அப்பாவை டேய் அப்பா, அவன், இவன், ஓத்தா,  என்றெல்லாம் சொல்லுவதை ஊக்குவிப்பது போல காட்சியமைப்பதை நியாயப்படுத்திவருகின்றன. இயக்குனர்கள் இது போல படங்களையும் பார்க்கவேண்டும், இப்படியும் தந்தை மகன் உறவை பின்ன முடியும் என யோசிக்கவேண்டும். அதனால் சமூகத்தில் ஆரோக்யமான மாற்றம் நிச்சயம் வரக்கூடும்.


டத்தில் நடித்த மீரா வாசுதேவன் இதற்காகவே 15கிலோ எடைக்கூடினாராம், படத்தில் இவர்களின் அன்னியோன்யம் கண்டு, இரண்டு வீட்டிலும் சண்டை வந்தாலும் வந்திருக்கும். அப்படி ஓர் யதார்த்தம்.ஒவ்வொரு காட்சியுமே பார்த்துப் பார்த்து செதுக்கியது நன்றாக தெரிகிறது, படத்தின் இசையும் பாடல்களும் பிண்ணணி இசையும் மிக அருமை,


ரு மருத்துவமனைகாட்சியில் இசைபுயலின் warriors of heaven and earth என்னும் இசைக்கோர்வையை அப்படியே  எடுத்து  மோஹன் சித்தாரா பயன்படுத்தியிருப்பார். மனதை உருக்கிவிடும்., மேலே நிலாக்காயல் , காற்று வெளியிடைக் கண்ணமாவும் கேட்க மிக இனிமை. சமகாலத்தில் ஒருபடம் ஒருவரை சிரிக்க, நெகிழ, அழ வைத்திருக்குமானல் அது இதுதான்.  நல்ல படங்களை பார்த்து சிலாகித்து, மோகித்து அதை டைரியில் எழுதுவது போலவே இதை எழுதுகிறேன். ப்லெஸ்ஸியின் பரம்மரம் விரைவில் எழுதப்பார்க்கிறேன்.


மேலே வெள்ளித் திங்கள் பாடல் யூட்யூப் காணொளி :-
====0000=====

மாஸ்கோவின் காவிரி

போஸ்டர் மட்டும் இண்டர்நேஷனல் ரேஞ்சுக்கு

நான் பார்த்ததில் பிடித்த படம் பற்றி மட்டுமே என் வலைப்பூவில் எழுதவேண்டும் என்று நினைத்திருக்கிறேன், இருந்தும் இது போல விதிவிலக்குகள் அமைந்துவிடுகின்றன. இதை விமர்சனம் என்னும் சொல்லுக்குள் என்னால் அடக்கமுடியவில்லை. ஒரு உள்ளக்குமுறல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

விகடனில் மிஸ்டர் மார்க்ஸ் என்றொரு சிறுகதை, செழியன் எழுதி படித்ததில் மனதை மிகவும் பாதித்தது, மார்க்ஸ் போன்று நல்ல தகுதியும்  திறமையும் பல வருட  திரைஅனுபவமும் இருந்தும், கல்லைகண்டால் நாயை காணோம் ,நாயை கண்டால் கல்லைக் காணோம் என்னும் அதிர்ஷ்டமின்மையால், சில இயக்குனர்கள் சமூகத்தில்  கடைசிவரை சாதிக்க முடியாமல், புள்ளியாய் குறுகி , மறைந்தும் போகின்றனர். அது ஏன்? என்பதற்கான விடை இந்த படத்திலேயே இருக்கிறது, 

மார்க்ஸ் போல திறமையான இயக்குனருக்கு போக வேண்டிய நல்ல வாய்ப்பை இதுபோல ரவிவர்மன்கள் நான் செய்வேன் என்று செய்தால் ஏன்? மார்க்ஸ் போல ஆட்கள் தெரு நாய் போல  ஏழ்மையில் வீழ்ந்து  கடைசி வரை சொந்தபடம் செய்யமுடியாமல் கூனிக்குறுகி செத்துப் போகமாட்டார்கள்?!!!

ல்லவனுக்கு கிடைக்கும் எல்லாமே கெட்டவனுக்கும் கிடைத்துவிடுகிறதே! என்ற கமல்ஹாசனின் ஆதங்கத்துக்கான காரணமும் படத்தில் உண்டு. வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம், என்று பேர் வச்சானாம். என்று எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படத்தில் சொல்லுவார். அதற்கான அர்த்தமும் இதை பார்த்ததும் விளங்கிக்கொண்டேன்.

யக்குனர் ரவிவர்மன் தமக்கு தாமே இந்தபெயரை சூட்டிக்கொண்டிருந்தால் தயவுசெய்து அதை மாற்றிக்கொள்ளவேண்டும்,  ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் அகில உலக கவனத்தை பெற்றவை. சிறந்த கம்போசிஷன்கள், தனித்துவமான இந்தியக்கலை ஓவிய பாணிக்கு பெயர்போனவை, அவர் பெயரை வைத்துக்கொண்டு இது போல படம் கொடுத்திருப்பது  ஒரு உன்னத கலைஞனுக்கு செய்யும் அவமரியாதை.

மிழகத்தில் ஏனைய புறநகர் பகுதிகளில் வீடு கட்டும் சொந்தக்காரர்கள்,ஆர்கிடெக்டிடம்  போய் டிசைன் வாங்கினால் டிசைன் செய்ய ஃபீஸ் தரவேண்டும், என்று எண்ணி கொத்தனார் மேஸ்திரியிடமே வேலையை ஒப்படைத்து, மிகக் கண்ணறாவியாக ஒரு கட்டிடத்தையும் கட்டி சுற்றுப்புறத்தையும் அசிங்கப்படுத்தி, அதற்கு வாஸ்து வண்ணங்கள் என்று மிட்டாய் ரோஸ், ஊதாப்பூ வண்ணம் போன்ற வண்ணங்களை தான் தோன்றித்தனமாக அடித்து கிரஹப்பிரவேசம் செய்து  நாங்களே முன்ன நின்னு கட்டுனது என்பார்கள் , அந்த வீடு அக்கம்பக்கம்  போவோர் வருவோரை  துன்புறுத்தும் படி இருக்கும். அதுபோல ஒரு மோசமான உதாரணம் இந்த படம்.

லையாள பிட்டு படம் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஜெய் டே வான்[ஜெய தேவன்] என்னும் இயக்குனர் பற்றி தெரிந்திருக்கும். இவரின் மூலதனம் சில லட்சங்கள். ஷகிலா, ரேஷ்மா, மரியா, சிந்து, வெற்றி, ப்ரேம் குமார். ஒரு ஆம்னி வேன்,ஒரு அண்ணாநகர் அல்லது அடையார் பங்களா,மொத்தமே இவை தான் படத்துக்கான ப்ராப், அந்த வகைப் படம் கூட கதை என்ற ஒன்றை கொண்டிருக்கும், பார்ப்பவருக்கு அது ஸ்மூச்சிங் சீன்களுக்கான பிரதான படம் என்ற பிரக்ங்யை இருக்குமாதலால் லாஜிக் பார்க்க தோன்றாது, எப்போடா? சீன் வரும் என்றே பார்க்க தோன்றும், அந்த அளவுக்கு கூட லாஜிக் இல்லாத படத்தை என்ன?  ஒரு ஈகோவுடன் எடுத்து, எல்லோரின் நேரத்தையும் வீணாக்கி பொய்யான மாயை உண்டாக்கி மார்கெட்டிங் செய்து நம்மையும் ஏமாற்றியுள்ளார் ரவிவர்மன்.

டத்தை பற்றி இன்னும் என்னத்த சொல்ல?ஒரு திரைப்படக்கல்லூரி மாணவர் இயக்கும் தீஸீஸ் படம் கூட ஆத்மார்த்தமான அற்பணிப்பை கொண்டிருக்கும். ஒரு நல்ல இயக்குனருக்கு கிடைத்திருக்கவேண்டிய நியாமான வாய்ப்பை இந்த வீணர் பாழ்செய்திருக்கிறார். 

யக்குனர் சேரனின் டூரிங் டாக்கீஸ் தொடரின் ஒரு பகுதியில் பணக்கார பண்ணையார் ஊரிலிருந்து வாராவாரம் படம் எடுக்கிறேன் என்று வந்து ரூம் போட்டு ,டிபன் காபி, ஃபுல்மீல்ஸ் தான் மட்டும் சாப்பிட்டு , கதை கேட்டு, சேரனை ஒருவருடம் அலைக்கழித்ததைப் பற்றி சொல்லுவார், படிக்கையிலேயே உள்ளம் ரணமாகிவிடும். அப்படி சில தயாரிப்பாளர்கள் இருக்கும் உலகில் ,தனக்கு கிடைத்த ஒரு அருமையான தயாரிப்பாளரை இப்படியா ஒருவர் மொட்டையடிப்பது?!!!

க்கள் இனியேனும், போஸ்டர், ட்ரெய்லர், விகடன் பேட்டி, ப்ரொமோஷன், போன்றவற்றை நம்பி ஏமாறாமல், ஜாக்கிரதையாக படத்துக்கு போகவேண்டும், இல்லாவிட்டால் எதிர்ப்பார்த்துப்போகும் படம் இது போல திருஷ்டிப்பரிகாரமாக இருந்து தொலையும். இதுபோல ஹைபட்ஜெட் குப்பைகளால் களவாணி போன்ற நல்ல படைப்புகளை கூட தரவிறக்கி பார்த்துவிட்டு திரையில் பார்க்க வேண்டிய அவலத்தில் நாம் உள்ளோம்.

" இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அதன் கண் விடல்."
த்தகைய தன்மையுடைய செயலை, இந்தக் காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டபின், அப்பணியில் அவனை ஏவுதல் வேண்டும் - தெரிந்து வினையாடல்- குறள் - 517

ப்படி ஒருவர் செய்யத் தவறினால் ஆழம் தெரியாமல் காலை விட்டு சேற்றில் சிக்கிக்கொள்வதற்கு சமம்.  இது அந்த தயாரிப்பாளர், இயக்குனர், அந்த உப்புசப்பில்லாத முகம் செத்த ஹீரோ, எல்லோருக்கும் பொருந்தும், நாயகி சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா,பானாகாத்தாடி போன்ற படங்களில் தன் திறமையை நிரூபித்திருப்பதால் எனக்கு  ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
======0000=======
மாஸ்கோவின் காவிரி=காண்போருக்கு கொலைவெறி

இதோ ஆட்டோ ஓரம்போ இயக்குனர்களிடமிருந்து மீண்டும் ஒரு நம்பிக்கை ஒளி:-

வ-குவாட்டர் கட்டிங் பட முன்னோட்ட சலனப்படம்.

இரண்டு வயது கொண்டாடிய சண்டாள ரிசெஷன்!!!

சென்ற இருவாரங்களாக,ஏன்?இப்போதும் கூட முழுக்க மிகுந்த பணிச்சுமை, இரவு வீடு திரும்பவே நடுநிசி 2-00 ஆகிறது,மறுநாள் 9-00 மணிக்கு மீண்டும் வேலை ஆரம்பிக்கும். இப்போதும் அப்படியே, ஒரு குழுவாக இப்படி இயங்குவதால் அயற்சிக்கே இடமில்லை.நான் மட்டும் இப்படி உழைக்கிறேனே என்ற பேச்சுக்கே இடமில்லை, முதலாளி கூட அருகே ஒரு கணிணியில் வேலைசெய்து கொண்டிருப்பார். தனக்கு காஃபி ஃபிக்ஸ் செய்யும் போது நமக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்கும் அற்புதங்கள்,இங்கே அமீரகத்தில் நிகழ்கின்றன.

து போல எல்லாம் உழைத்து பல வருடங்கள் ஆகின்றன,சென்னையில் தான் இப்படி அதிகம் 24மணிநேரம் தொடர்ந்து  வேலை செய்தது,சுமார் 6 வருடங்கள் முன்பு சென்னை ஓஎம்ஆர்-ஐடி காரிடாரில் ஐடி பார்க்குகள் அதிகம் வரத்துவங்கியபோது, எங்கள் ஆர்கிடெக்ட் அலுவலகத்தில் சுமார் 20 ஐடி பார்க்குகள்,கால் செண்டர்கள் டிசைன் செய்து கொண்டிருந்தோம், அதில் சான்சா,[xanza] சத்யம், டிசிஎஸ்,சதர்லேண்ட் என அடக்கம். , எங்களுடையது பேஸ்மெண்ட் ஆஃபீஸ் ஆகையால் வெளியே கலவரமே நடந்தாலும் தெரியாது, மரம் செடி,கொடியே இருக்காது. சதா ஏசியில் இருந்து உடம்பே உஷ்ணமாயிருக்கும், நேரத்துக்கு சாப்பிட முடியாததால், பசியெடுக்காது, பசித்தபோது சாப்பிடமுடியாதபடி பணிச்சுமை அழுத்தும்.

ண்கள் செவசெவ என எரிந்தபடி இருக்கும். விட்டில் மதியம் சென்று தூங்கும் போது யாராவது ஊட்டி விட்டால் மட்டுமே சாப்பிட முடியும். குழந்தையை கொஞ்சக்கூட நேரமிருக்காது.விடிகாலையில் அலுவலகத்தில் வீடு திரும்ப வண்டியை எடுக்கும் போது தான், முந்தைய நாள் அடித்த வெயிலுக்கு டயரே பஞ்சர் ஆயிருப்பது தெரியும். இதையெல்லாம் நிறைய அனுபவித்திருக்கிறேன். குறையே சொன்னதில்லை.

2006 டிசம்பரில் இங்கே ஒரு துடிப்பில்,கட்டாயத்தில் அமீரகம் வந்தவுடன், மனம் கிடந்து துள்ளியது, வேலை பிடித்திருந்தது, ஆனால் 10 பேர் செய்யும் வேலையை 100 பேர் செய்தனர். செம சிரிப்பாய் இருந்தது.என்ன தான் உலகின் உயரமான கட்டிடத்தில் வேலை என்றாலும் சம்பளம் குறைவாதலால், மனம் லயிக்கவில்லை,நல்ல பெயர் எடுத்தும்,வெறும் ஒரு வருடத்தில் ,மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து, வேலை மாறிவிட்டேன்.

னால் அந்த செப்டம்பர் 15, 2008 இப்படி வாழ்க்கையை புரட்டி போடும் என்று நினைக்கவே இல்லை. வீடு வாங்கினேன். மறுமாதமே வேலை போனது, மறுவாரமே இறைவன் சித்தத்தில் வேறு வேலை கிடைத்தது. இதோ இப்போது உள்ள ஆஃபீஸிலும் 80சதம் ஆட்குறைப்பு நடந்தேறிவிட்டது. ப்ராஜக்டுகளே சுத்தமாக இல்லை. மனம் சென்னையில் செய்தது போன்ற அயராத உழைப்பை  எப்பொதும் நிகழ்த்த துடிக்கிறது.  ஆகவே சலிக்காது காம்பெடிஷன் ப்ராஜக்டுகள் எடுத்து செய்கிறோம்,வென்றால் வேலை உண்டு, இல்லையேல் இல்லை. தொடர்ந்து வேலை இருக்குமா?பார்ப்போம்.

மீரகத்தில், செலவு செய்யும் ஒவ்வொரு திர்காமுமே தகும். சில ஆஃபீஸ்களில் வெள்ளி,சனி இரு வாரநாட்கள் விடுமுறை. வாரத்துக்கு 45 மணி நேரம் மட்டுமே வேலை. குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடியும்,தரமான சுற்றுப்புறம், தரமான கல்வி, தரமான வாழ்க்கைத்தரம் எல்லோருக்கும் நிச்சயம்.ஆனால் கடந்த இரு வருடங்களாக வேலை நிரந்தரமின்மை என்னும் அச்சுறுத்தல் மனதுக்குள் புகுந்து கொண்டு மணிஅடிக்கிறது. ஆனால் இதுவும் கடந்து போகும். இதை இன்னும் இரு வருடம் கழித்து நினைத்துப்பார்க்கையில் சிரிக்கவும் நேரிடலாம்.அல்லது நினைவுக்கே வராமலும் போகலாம்.

ன் கண் முன்னாலேயே என் பல நண்பர்கள் வேலை இழந்து தாயகம் சென்றனர். அதில் வடலூரான் கலையரனும் அடக்கம்.  எனக்கு கையறு நிலை. யாருக்கும் உதவக்கூட முடியவில்லை.ஊரில் உள்ள நண்பர்களுக்கும் சிவி மூவ் செய்து உதவமுடியாத நிலை. எங்காவது வேலைக்கு ஆள் உள்ளே எடுத்தால் தானே?

ப்போது உள்ள நிலையில் பெரும்பானோர் சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள், ஆனால் வேலையை விட்டு அனுப்பாதே,என்னால்  இந்த சூழலில் வேலைதேடி அலைய முடியாது என்கின்றனர். என்னுடன் வெறும் பாஸ்போர்ட் காப்பி கொடுத்து 250,000 திர்காம்  வரை [ரூ31லட்சம்] வங்கிக்கடன் வாங்கிய ஏனைய பேர் இன்னும், ஒரு தவணை கூட கட்டாமல் மிகுந்த மனோ தைரியத்துடன் இருக்கின்றனர். வங்கிகள் போன்செய்து கேட்டால் ஜென்டில் மேன் ஸ்டைலில் பணம் செல்வாயிடுச்சு , வேலை கிடைத்தால் கொடுக்கிறேன்!!! என்கின்றனர். எப்பா என்னா தைரியம்? என்றே நினைக்க தோன்றுகிறது.ஏகம் பேர் 2 வருடம் முன்பே அப்ஸ்காண்ட் ஆகிவிட்டனர்.

ன் போன்ற எப்படியாவது தவணையை  ஒழுங்காகக்கட்டும் ஆட்களுக்கு வங்கிகள் மேலும் அபராதமும், வட்டிக்கு, வட்டியும். போட்டுவருகின்றன, தவணை தொகையை குறைக்கமுடியாது, தவணைகாலத்தை நீட்டிக்கமுடியாது,நோ லோன் ரீஸ்ட்ரக்சர் ஃபார் யுவர் கைண்ட் ஆஃப்  ஸ்கீம் என்னும் தேய்ந்து போன பதிலையும் திரும்ப திரும்ப சொல்லிவருகின்றனர். ஐயா வங்கிகளே!!! உங்களை வட்டியை குறைக்க சொல்லி பிச்சை கேட்கவில்லை, உங்கள் தேய்ந்துபோன தட்டையான வங்கி விதிகளை மாற்றுங்கள். அப்போது தான் சில விடாக்கண்டர்களிடம் எதாவதாவது பெயரும். ஹி ஹி சின்ன குமுறல். சொந்தக்கதை யூ சீ.இன்னும் 12 மாதம் தவணை பாக்கி உள்ளது.அது தான் கீழே கவுண்ட்ட் டவுன் விட்ஜெட் எல்லாம்  வைத்து ஓயாமல் தேய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சென்னை கார்பொரேஷன் தண்ணீர் குழாய் போல 2மாதத்துக்கு ஒரு முறை சம்பளம் வருகிறது, அதுவும் போன மாதத்தின் போன மாத பாக்கி. எப்படியோ இழுத்து பிடித்து ஓட்டும் எனக்கு, ஊருக்கு போக வேண்டும் என்றாலே பதட்டம் தொற்றிக்கொள்கிறது, சில நண்பர்கள் என் நிலைமை புரியாமல், சோனி நோட்புக். சாம்சங் ஆண்ட்ராய்ட் செல்போன், ஹார்ட்டிஸ்க், ஐபாட், ஏன்? ஐபோன்.கூல்வாட்டர் பாடிஸ்பெரே,14 மெகா பிக்ஸல் டிஜிட்டல்  கேமரா, எல் சிடி டிவி என பெரிய லிஸ்டையே  மெயில் அனுப்பி வாங்கி வரச்சொல்லுவதால் [பணம் அங்கே வந்ததும் தருவார்களாம்] என் பயணத்தை அடுத்த வருடம் மே மாதத்துக்கு ஒத்தி வைத்து விட்டேன்.

தனாலேயே என் மகளுக்கோ மனைவிக்கோ கூட எதுவுமே வாங்கி செல்வதில்லை. அங்கேயே எல்லாம் கிடைப்பதால் கூட்டிப்போய் வாங்கி கொடுத்து விடுகிறேன். சில சென்னை நண்பர்கள், ரிசெஷனா? அப்படின்னா? ஈரோடு பக்கமோ?தூத்துக்குடி பக்கமோ என்று எகத்தாளம் செய்கின்றனர்.

ல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு  வலிய வந்து கடன் கொடுக்க தேடிவந்து கேன்வாஸ் செய்த பேங்க் சேட்டனை வெறியோடு தேடினேன்.அவருக்கும் வேலை போய்விட்டதாம். அவர் இப்போது இன்சூரன்ஸ் ஏஜெண்டாம். இன்சுயூரென்ஸ் எடுங்கள், உங்க வீட்டுக்கு நல்லது என்றார். நான் உங்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா? அதுவும் உங்கள் வீட்டுக்கு நல்லது தான், என பல்லை கடித்தேன். வெறியோடு போன் செய்தால் இன்சூரன்ஸா போடச் சொல்ற? இருடி மகனே என்று நினைத்துக்கொண்டேன். அவர், பேடிக்கண்டா,பேங்க் ஒண்ணும் ஆக்‌ஷன் எடுக்கப்பற்றாது என்றார். அடங்கொய்யால, நேர்மையா  கட்றவனையும் கெடுக்க நீ ஒருத்தன் போதும்!!!!  என்று போனை கட்செய்தேன்.

வார இறுதிநாட்களில் எங்காவது மாலுக்கு விண்டோ ஷாப்பிங் செய்யலாம் என்று பார்த்தால் கண்ணில்படுவதெல்லாம்,இரண்டாம், மூன்றாம் தரமான சீன கம்பெனிகளின் எலக்ட்ரானிக் பொருட்கள். பிரபல பிராண்டுகளின் புதிய வரவுகளை ஷோகேஸில் அடுக்கி வைக்க கடைக்காரர்களிடமே காசு இல்லை போலும் , எல்லா இடங்களிலும் ஷாப் க்ளோசிங் சேல் என்று போட்டு காலிபண்ற விலைக்கு ஷர்டு முதல் அந்துருண்டை வரை விற்கின்றனர் . ஏனைய பேர் வேடிக்கை மட்டும் பார்க்கின்றோம். நிறைய மால்கள் சென்ற வருடம் இந்தியர்களை நீக்கிவிட்டு சம்பளம் குறைவென்று பிலிப்பினோக்களை பணிக்கு அமர்த்தியது, இப்போது அதுவும் போய், நேபாளிகளை கவுண்டர் சேல்சுக்கு அமர்த்தியுள்ளது.

தே கதைதான் ஹாஸ்பிடல்களிலும், பள்ளிகளிலும், ரிசெஷனால் பாதிக்கப்படாத துறையினரே இல்லை எனலாம். அத்தை எப்போ செத்துப்போவா? திண்னை எப்போடா காலியாகும்னு சொல்வதுபோல எப்போடா லோனை முடிப்போம் என்றிருக்கு, இதே போல யாராவது லோன் வாங்கி தவணை கட்டிக்கொண்டிருந்தால், அதுவும் அமீரகத்தில் இருந்தால்,தொடர்பு கொள்ளவும், சேர்ந்து கும்மிஅடிக்கலாம்.

வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ரிசெஷன் ஒழிய  இறைவனை வேண்டிக்கொள்வோம், இனி வரும் காலத்தில் ஒருவனுக்கு எகனாமிக் பூமும் வேண்டாம், ரிசெஷனும் வேணாம்டா சாமி. யாரேனும் இப்போது கடன் வாங்குவதாக இருந்தால் நூறு முறை யோசித்து வாங்குங்கள். கடன் இருந்தால் கண்ணுக்கு தெரியாத பேய் உங்கள் தோள் மேல் உட்கார்ந்து தொல்லை கொடுப்பதை போன்றது.அனுபவஸ்தன் சொல்கிறேன்.

இனி யாராவது மாமனார், மச்சினர். பெரியப்பா, சித்தப்பா, என்னைப்பார்த்து காசை வேஸ்ட் பண்ணாதப்பா, நிலம் வாங்கு, நீச்சு வாங்குன்னு சொன்னா,கவுண்டமணி ஸ்டைலில் எவனாருந்தாலும் வெட்டுவேன்.எவனாருந்தாலும் வெட்டுவேன்.என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

====0000====

தமிழ் திரையுலகின் அருமையான நடிகர் முரளிக்கு அஞ்சலி

தேச்சையாக ,மிகுந்த பணிச்சுமைக்கு இடையில் தினமலர் இணையதளம் திறந்தால் நடிகர் முரளி மரணம் என்றிருக்க, அவர் [மலையாள நடிகர்] தான் ஏற்கனவே  இறந்துவிட்டாரே? என ஒருவித பதட்டம் ஆட்கொள்ள நடுங்கியபடி காணொளியை திறந்தால், ஆம்,அவரே தான், இதயம் முரளியே தான். அடக்கடவுளே!!! .வெறும் 46 வயது தான். 100 ஆவது படம் நடிக்க கையெழுத்திட்டிருந்தாராம். கடவுளுக்கு கருணையே இல்லையா? என்று தான் தோன்றியது.என் அப்பாவுக்கு இறக்கையில் 50 வயது, அம்மாவுக்கும் அப்படியே.அதுவே சிறிய வயது என நினைத்த எனக்கு, இவர் இன்னும் சீக்கிரமாக போய்விட்டாரே! என்றே தோன்றியது.

ந்த பாத்திரம் எடுத்து செய்தாலும் அழுத்தமாக மனதில் நிற்பார். கடைசியாக இவரை அள்ளித்தந்த வானம் படத்தில் வெகுவாய் ரசித்தது. அதன் பின் வடிவேலுவுடன் சுந்தரா ட்ராவல்ஸில் பார்த்து வெகுவாய் ரசித்தேன். எதோ நெருங்கிய சொந்தத்தில் யாரோ தவறிப்போனது போல சோகம் தோளை அழுத்துகையிலேயே இதை எழுதுகிறேன்.

யாரோ சில வருடங்கள் முன்பு காம்பவுண்ட் சுவரெங்கும்,கடவுள் முரளி வாழ்க! என்று எழுதிவைத்தனர். ஏன் செய்தார்கள் எனத் தெரியாது, ஒருவேளை இளம் வயதிலேயே இறைவனடி சேர்வார் என்று எழுதியிருப்பார்களோ? இன்னும் இசைஞானியின் குரலை இவர் பாட ரசிப்பதில் எனக்கு நீங்கா ஆனந்தம். இனி யூ ட்யூபில் இவரை, நிறையபேர் நிச்சயம் அதிகம் தேடிப்பார்ப்பார்கள். அவரின் லட்சியங்கள் மகன் அதர்வா மூலம் நிறைவேறட்டும். அன்னாரின் குடும்பத்துக்கு என்  அஞ்சலிகள்.
======0000======

நடிகர் முரளியின் சமீபத்திய காஃபி வித் அனு நிகழ்ச்சியின் யூட்யூப் வீடியோ;-
நன்றி:-4fun6







Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)