ஹாலோகாஸ்ட் என்னும் ஆறாண்டுகால திட்ட இனப்படுகொலை


ஹாலோகாஸ்ட் என்பது மகாக்கொடியவன் ஹிட்லரின் நாஜிப்படையால் போலந்து  நாட்டில் தன்னிச்சையாக 1933 ஆம் வருடம் தொடங்கி 1939 ஆம் வருடம் வரை நடந்த மனிதத்தன்மையற்ற இனப்படுகொலை ஆகும். வரலாற்றில் ரத்தத்தால் எழுதப்பட்ட கறுப்பு காவியம்.கடவுள் என ஒருவர் உண்மையிலேயே உண்டா? என கேட்க வைக்கும் அருவருக்கத்தக்க மிருகத்தனமான பெருங்குற்றங்கள் , அரசியலின் பெயரால் அரங்கேறிய கருப்பு நாட்கள் அவை . மொத்தத்தில் காலமும் காலனும் கைகோர்த்து  போட்ட மகா கேவலமான மேடை நாடகம்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 3000 பேர் என தோராயமாக கணக்கிட்டு  6வருடங்கள் தொடர்ந்து மொத்தம் 60 லட்சம் பேர் கொல்லப்பட்டு ,இந்த பஞ்சமகா பாதகத்தை  நாஜிப்படையினர் வெற்றிகரமாக வெட்கமின்றி நடத்தியுள்ளனர்.

மிகக் கொடூரமான இனவெறி கொண்ட ஜெர்மானிய நாஜிப்படை ,யூதர்களையும் இன்னபிற இனத்தவரையும் கொன்றழிக்க சதித்திட்டம் தீட்டி மூன்று நிலை கட்டமைப்பு திட்டங்களை , தாங்கள் கைப்பற்றிய ஐரோப்பாவில் தோற்றுவித்தது. இனப்படுகொலையை கட்டவிழ்க்க உருவாக்கப்பட்ட அடிப்படை மூன்று அடுக்கு  நிலை திட்டவியூகம் பின் வருமாறு:-


நிலை-1
மெய்ன் சிட்டி வித் கெட்டோ:- (லோக்கலாக சொன்னால் அகதி குடியிருப்புக்கள்)


இந்த அகதிகள் முகாம்கள் போலந்து நாட்டில் கானாஸ் (kaunas),  வில்னியஸ் (vilnius), பியலிஸ்டொக் (bialystok) வார்ஸா (warsaw), லொட்ஸ்( lodz) க்ரகொவ் (krakow) ல்வொவ் (lwow) என மொத்தம் 7 இடங்களில் மின்னல் வேகத்தில் நிறுவப்பட்டன.

யூத மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த முகாம்களில் வரவழைக்கப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பெற்றனர். யூத இன ஆண்களும் பெண்களும் இந்த முகாம்களில் வழங்கப்படும் 20செ,மீ X 20செ,மீ  நட்சத்திர குறியீட்டு லேபில் போன்ற பட்டையை தங்கள் ஆடைகளில் வலது தோள்பட்டையில் தைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக  அமல் படுத்தப்பட்டனர்.
ஹோமோ செக்சுவல்களுக்கு பிங்க் வண்ண லேபில்கள் தைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர்.பாரம்பர்ய போலீஷ் இன ஆண்களும் பெண்களும் இந்த முகாம்களில் வழங்கப்படும் 20செ,மீ X 20செ,மீ  "P" என்னும்  குறியிட்ட துணிப்பட்டையை தங்கள் ஆடைகளில் வலது தோள்பட்டையில் தைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக  அமல் படுத்தப்பட்டனர்.அவர்களிடம் இருந்த வீடுகள், நிலங்கள்,கால் நடைகள், தொழிற்சாலைகள் , வங்கிகள், யூத பொது நிறுவனம் என மொத்தமாக கபளீகரம் செய்யப்பட்டன.


போலந்து,ஜெர்மனி,ஆஸ்ட்ரியா, ஹங்கேரி இன்னபிற நாடுகளிலிருந்து வீடுவாசல்களை பிடுங்கிக்கொண்டு சுத்தமாக காலிசெய்து விரட்டப்பட்ட  யூதர்கள் மற்றும் இன்ன பிற இனத்தவரான ரோமாக்கள், யெகோவா விட்னெஸ்ஸுகள், ஹோமோ செக்சுவலிஸ்டுகள்,கும்பல் கும்பலாக நடத்தியோ ரயிலிலோ,அல்லது வாகனங்களிலோ புளிமூட்டைகள் போல அடைத்து அழைத்துவரப்பட்டு  இந்த கெட்டோ மையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.


இதில் மின்வசதி, குளிர்பிரதேசத்தில் குளிர்காய மேண்டல் வசதி எதுவுமே இராது, ஒரே அறையில் நான்கு முதல் ஐந்து யூத குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டனர். இங்கே தான் அடையாள அட்டை வழங்கப்பட்டு அருகில் உள்ள மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்ஸ்களில் சாகும் வரை வேலை வாங்கப்பட்டு வதைக்கப்பட்டனர்.

இந்த மையங்களில் வைத்து தான் யூத இனத்தவரின் அன்றாடஉபயோக,அறிய பொருட்களை பிடுங்கிக்கொண்டு கிடங்கு போல குவித்து வைத்து அதை கருவூலத்துக்கு எடுத்து சென்றனர்.யாரும் தப்பிப்போகமுடியாத வண்ணம் 20 அடிக்கு சுவர் எழுப்பி அதன் மேல் மின் கம்பிகளும் அமைக்கப்பட்டு வெளியுலக தொடர்பே இல்லாமல் ஈழதமிழர் முகாம் போல அடைத்து வைக்கப்பட்டனர்.

நிலை-2
மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்ஸ்:- (லோக்கலாக சொன்னால்  தொழிற்பேட்டைகள்)

ப்லாஸ்ஸொவ்(plaszow) ஸாஸ்லாவ்(zaslaw) க்ராஸ் ரொஸென் (gross-rosen) பொட்டுலைஸ்(potulice) ஸ்டட்தாஃப்(stutthof) சொல்டாவ் (soldau)  என மொத்தம் 6 இடங்களில் மின்னல் வேகத்தில் நிறுவப்பட்டன.ஏற்கனவே இருந்த போலந்துக்காரர்களின் தொழிற்சாலைகளும் சிறை பிடிக்கப்பட்டு  நாஜி அரசுக்கு வேண்டியவர்களுக்கு வசதியாக கைமாற்றப்பட்டன.

"Arbeit Macht Frei" ழைப்பே சுதந்திரம் பெற்றுத்தரும்.
இது தான் ஒவ்வொரு கான்செண்ட்ரேஷன் கேம்ப்பின் வாசல் வளைவில் எழுதப்பட்ட வாசகம்,ஒவ்வொரு நாளும் கெட்டோவிலிருந்து வரும்
மக்கள் இதைத்தாண்டிதான் உள்ளே அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலை,
பீங்கான் தொழிற்சாலைகள், சமையல் பாத்திர தொழிற்சாலைகள்.மற்றும் சாய தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்றனர்.



பெரும்பாலான நேரங்களில்  சாலையில் மலைப்போல் குவிந்த ஐஸ்கட்டிகளை வாரிக்கொட்டுவது , சாலைகள் போடுவது, கட்டிடம் கட்டுவது, பிணங்களை அப்புறப்படுத்துவது, பிணங்களை எரியூட்டுவது போன்ற வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டனர்.இதில் நிறைய பேர் தப்பிக்க முயன்று மின்வேலியில் மாட்டியும், சிலர் நாஜிப்படைக்கு எதிராக குழு அமைத்து துப்பாக்கி எடுத்து போராடி பின்னர் பிடிபட்டு திறந்த வெளிகளில் தூக்கு போடப்பட்டும், மண்டியிடப்பட்டு முன்னந்தலையிலோ, பின்னந்தலையிலோ சுடப்பட்டும் கொல்லப்பட்டனர்.

யூதர்கள் மற்றும் இன்ன பிற இனத்தவரை இங்கு வைத்து தான் சாகும் வரை வேலை வாங்கியது, திறந்த வெளி மருத்துவ சோதனையில் குழந்தைகள்,சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர் இன்னபிற நோய்வாய்பட்டோரை உடனடியாக சுட்டுக் கொன்றோ அல்லது மந்தை போல லாரிகளில் ஏற்றி ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ரயிலில் மந்தை மந்தையாக எற்றி  இறுதியாக எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்களில் இறுதி தண்டனைக்கு கொண்டு வந்து விடுவர்.

யாரும் தப்பிப்போகமுடியாத வண்ணம் மின் வேலி அமைக்கப்பட்டு வெளியுலக தொடர்பே இல்லாமல் ஈழதமிழர் முகாம் போல அடைத்து வைக்கப்பட்டனர்.என்ன கொடுமை என்றால்? முகாமில் தண்ணீர்,மற்றும் உணவு சப்ளையே சரிவர கிடையாது,சேறும் சகதியுமாக இருக்கும்.

குப்பையில் போடப்படும் ரொட்டிகளும், அழுகிய முட்டைகளும், ஒன்றுக்கும் உதவாத அழுகிய காய்கறிகளும், குப்பை கீரைகளும்,புழத்துப்போன தானியங்களுமே என்றாவது தரப்படும்,அதீத பட்டினி,சுகாதாரமின்மையால் உண்டான தொற்று நோய்கள். மிருகத்தனமான மருத்துவ பரிசோதனைகள் ,தூக்கிலிட்டு கொல்லுதல்,துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல் மற்றும் ஓய்வில்லாத வேலையின் காரணமாகவே எண்ணிலடங்கா மனித உயிர்கள் பலியாயின.

குளிக்க வழியில்லாததால் எல்லோரும் அழுக்காகவும்,
சிரங்கு சொறியுடனும், தலையில் பேணும் பொடுகுடனுமே வாழ்ந்தனர்.
ஒரு பங்கருக்கு 4 பேர்கள் என ஆண் பெண்,பெரியவர்கள் என பேதம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டு எந்நேரமும் மரண பயம் காட்டியே
முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர்.பெரும்பான்மையான மக்கள் மன அழுத்தத்தால்  பீடிக்கப்பட்டே உலவினர்.


நிலை-3
எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்ஸ்:-(லோக்கலாக சொன்னால் கசாப்பு கடைகள்)




இந்த வகை கொலை கள மையங்கள்  ஆஷ்விட்ஸ் 1, 2 மற்றும் 3 ( auschwitz 1,2 & 3), பெல்ஸெக் (belzec), மஜ்டனெக் (majdanek) சொபிபொர் (sobibor) செல்ம்னோ (chelmno) ட்ரிப்லின்கா (trblinka) என மொத்தம் 6 இடங்களில் நிறுவப்பட்டன, இருப்பதிலேயே பெரியதாக ஆஷ்விட்ஸ் என்னும் கொலை கள மையமே கருதப்படுகிறது.இந்த இடத்தில் மட்டும் மூன்று எக்ஸ்டெர்மினேஷன்  கேம்ப்கள் அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் துவங்கப்பட்டு இரவு பகலாக இயங்கி வந்ததாம் .

 மேலே சொன்ன ஒவ்வொரு மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்களில் இருந்தும் இந்த எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்ஸ் எனப்படும் கேஸ் சாம்பர் அல்லது கொலை செய்யும் கூடம் வருவதற்கு 24 மணி நேரமும்  நீராவி ரயில் விட்டிருந்தனர், அவசர அவசரமாக இருப்புபாதைகளும் , ரயில் நிலையங்களும்  அமைக்கப்பட்டன.இடைவிடாமல் யூதர்களும் இன்னபிற இனத்தவரும் ஆட்டு மந்தைகள் போல அழைத்துவரப்பட்டு இறக்கி, ஆடைகளை களைய வைக்கப்பட்டு, தலை முடியை வெட்டவைக்கப்பட்டு , மிகக் குளிர்ந்த நீரில் ஷவரில் ஒரு பெரிய குளியல் அறைபோன்ற கூடத்தில் குளிக்க வைக்கப்பட்டு, பின்னர் கூடத்தின் கூரையின் வழியே கொடிய சயனைடு வாயுவை (Zyklon B) செலுத்தி மணிக்கு 125 பேர் என கணக்கிட்டு கொல்லப்பட்டு , உடனடியாக சூளையில் எரியூட்டப்பட்டு பரலோகம் சென்ற ஒன்வே ட்ராஃபிக் இது என்றால் மிகை ஆகாது.

கடைசியில் செம்படையினர் கைப்பற்றியவை :- லட்சக்கணக்கான மூக்கு கண்ணாடிகள், லட்சக்கணக்கான லெதெர் சூட்கேசுகள், லட்சக்கணக்கான வரி வரியான பைஜாமாக்கள் (சீருடைகள்) லட்சக்கணக்கான தலை வாரும் ஹேர் ப்ரஷுகள். லட்சக்கணக்கான ஜோடி காலணிகள், பதினாயிரம் மூட்டை தலைமுடிகள்(பெயிண்ட் ப்ரஷ் செய்ய) யூதர்களை எரியூட்டிய பதினாயிரம் சாம்பல் அடங்கிய பீங்கான் ஜாடிகள்(ஹிட்லர் பின்னொரு சமயம் அந்த சாம்பலை விளை நிலங்களில் எருவாக இட எண்ணி இருந்தானாம்)

இதில் மிக வேதனையான விஷயம் என்னவென்றால் செம்படையினர் நாஜிப்படையை தோற்கடித்து நெருங்கும் முன்னரே இந்த கொலை கலன் அறைகளை அழித்தும் , இடித்தும் சேதப்படுத்தியும் விட்டனர்.

பதிவேடுகளை கொளுத்தியும் விட்டனர்.கொன்றவர் விபரம் 15 லட்சம் வரை இதனால் கணக்கிலேயே வரவில்லை என பெரும் சர்ச்சையும் இன்று வரை உண்டு. இன்றைய நவ நாகரீக இஸ்ரேலிய யூதர்கள் ஜெர்மனியிடம் கற்ற கொடிய பாடத்தை எளியார் மீது பிரயோகிக்கும் பொருட்டு பாலஸ்தீனிய அப்பாவி குடிமக்கள் மீது பாஸ்பரஸ் குண்டுமழை பொழிந்தும் எந்திர துப்பாக்கியால் சுட்டும் பீரங்கி தாக்குதல் நடத்தியும் தீர்த்துக் கொள்கின்றனர்.

தான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என நினைக்கும் ஒரே ஜீவன் இவர்களாகத்தான் இருக்கும்.
-----------------------------------------------------------------


-----------------------------------------------------------------
டிஸ்கி:-

இன்றைய தேதியிலும் இனப்படுகொலை ஓய்ந்த பாடில்லை.
ஈழத்தில் இதை எழுதும் ,படிக்கும் கன நேரத்தில் எத்தனை அப்பாவி சகோதர,சகோதரிகள்  கொல்லப்பட்டனரோ?

கடவுளே? ஏஸி அறையில் இருந்து சுகமாய் எழுதவும் படிக்கவும் செய்து விடுகிறோம், அந்த கேம்பில் ஒருவனாக இருந்தால் தெரியும் நமக்கு சங்கதி!

கடவுளிடம் தினமும் கதறி மன்றாடுவோம். நல்ல காலம் உண்மையிலேயே பிறக்க, அவர்களுக்கு விடுதலை உண்மையிலேயே கிடைக்க.

செய்திகள், படங்கள், சுட்டிகள் தந்து உதவிய விக்கிபீடியா, கூகுளுக்கு நன்றி








ஃப்ராக்சர் (2007) முறிவு - ஐ ஷாட் மை வைஃப் . ப்ரூவ் இட்!

ஃப்ராக்சர் (2007) முறிவு

தீர விசாரிப்பதே மெய்!, குற்றவாளி தப்பமுடியாது! போன்றவை படம் சொல்லும் பாடங்கள்.

து 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகச் சிறந்த நடிப்புக்காகவும் வித்தியாசமான கதைக்காகவும்  பேசப்பட்ட  சட்டம்  மற்றும் சஸ்பென்ஸ் வகையை சார்ந்த  அருமையான படம். ஹானிபல் லெக்டர் புகழ்  சர்.அண்டோனி ஹாப்கின்ஸ் யதார்த்தமான குரூரத்தை மீண்டும் தன்   நடிப்பால் வெளிக்காட்டிய படம்.

மனிதர் 71 வயதிலும் என்னமாய் இருக்கிறார்? இன்றைய இளம் ஹிரோக்களுக்கு சவால் விடும் ஆக்ருதி,பார்வையிலும் குரலிலுமே சித்திரவதை மற்றும்  பழிவாங்குதல் போன்ற உணர்ச்சிகளை வெகு அருமையாக செய்திருப்பார், மனிதர் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய ஹோம் ஒர்க் செய்வார் என படித்தேன்,குறிப்பாக ஒவ்வொரு வசனத்தையும் கண்ணாடி முன் நின்று மணிக்கணக்காக விதவிதமான போஸ்களில் பேசிக்கொண்டே இருப்பாராம்.அது இயற்கயான டயலாக் டெலிவரியாக இவர் உணரும் வரை ஓய மாட்டாராம்.இவர் நடித்ததில் எதை மாஸ்டர் பீஸ் என குறிப்பிட்டு சொல்லுவது? அல்லது விடுப்பது? எனக்கு இவரின் ஹானிபல் சீரீஸும் , மாஸ்க் ஆஃப் ஸொர்ரோவும் மிகப் பிடிக்கும்.நடிகர் திலகம் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் இவரை தான் நிரம்பப் பிடித்திருக்கும் போல.

ந்தோனி ஹாப்கின்சுக்கு ஈடாக இருக்க வேண்டுமென்றால் ஒருவர் எப்படிப் பட்ட நடிகராக இருக்க வேண்டும்? ரயான் கோஸ்லிங் (29 வயது ) ஹாலிவூடில் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை உணர்த்துவது போல இவர் தேர்ந்தெடுத்து செய்யும் வித்தியாசமான கதாபாத்திரங்கள்,இவர் லார்ஸ் அண்ட் ரியல் கேர்ள் என்னும் ட்ராமடி வகை படத்தில் ஏற்று நடித்த லார்ஸ் என்னும் பாத்திரம் ஒன்றே போதும், சமயம் கிடைக்கும் போது பாருங்கள்.இவர் என்னமாதிரி கதா பாத்திரங்களையும் செய்வார் என்பது விளங்கும்.


படத்தின் கதை இதுதான்:-

பெவெர்லி ஹில்சில் உல்லாச ஃபார்ம்ஹவுஸ் வகை வீட்டில் வசிக்கும் பகாட்டி வெய்ரான் ஓட்டும், ஸ்ட்ரக்ச்சுரல் எஞ்சினியரான டெட் (அண்டோனி ஹாப்கின்ஸ் ) தன் மனைவியின் கள்ளக்காதலை உளவு பார்ப்பதிலிருந்து படம் துவங்குகிறது.

 
தன் மனைவியின் கள்ளக்காதலன் ராப் நன்னலி ( பில்லி பர்க் ) ஒரு உயர் போலிஸ் அதிகாரி ! அவனை எப்படி பழி வாங்குவது?

மனைவி ஜெனிஃபர் ( எம்பெத் டேவிட்ஸ் ) ஒரு  ஹோம் மேக்கர், சமுதாயத்தில் நல்ல பெயருடன் இருப்பவள் அழகுடன் அறிவும் நிறைந்தவள்!அவளை எப்படி பழி வாங்குவது?


பகலில் இவர் வேலைக்கு சென்றதும் ஆரம்பமாகிறது அவளது லீலைகள்.
அவற்றை அழகாக படம் பிடித்து இவருக்கு தனியார் டிடெக்டிவ் கொடுக்க,இவரே திட்டமிட்டு களத்தில் இறங்குகிறார்.

மனைவி காதலுடனான கொஞ்சலுக்கு பிறகு வீடு திரும்பியதும், அவள் இவரை வீட்டில் கண்டதும் அதிர்ந்து போலியாய் நடிக்க, அவர் அவளை கையும் களவுமாய் பிடித்து மிஸஸ் நன்னலி என கூப்பிட ,

அவள் விவாகரத்து பேச்சுக்கு வாய் திறப்பதற்கு முன் இவர் ஜெனிஃபர் என அழைக்க, அவள் திரும்பியதும் இவரின் .45 புல்லெட் அவளின் மண்டை ஓட்டுக்குள் நுழைந்து குடி கொள்கிறது., அவள் சாகாமல் கோமாவில் போகும் அளவுக்கு இவரின் திட்டமிடுதல் துல்லியம்.அபாரம்!


இப்பொது போலிஸை பக்கத்து வீட்டுக்காரர்கள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அழைக்க, வெளியே போலீஸ் சூழ்ந்து விட , இவர் துப்பாக்கி அப்படியே மேசை மேலே வைக்கிறார், மீதமுள்ள துப்பாக்கி குண்டுகளை சன்னலில் சுடுகிறார், தன் ஆடைகளை களைந்து மேண்டல் பீஸில் போட்டு எரிக்கிறார்,
தன் உடம்பை கிட்சன் சின்கில் கழுவுகிறார். மனைவியை தர தரவென இழுத்து போய் ஹாலில் போடுகிறார்.

போலீஸ் கதவை தட்ட , இவர் ஒருவரை மட்டுமே உள்ளே வர அனுமதிப்பேன் என்கிறார். கண்டிப்பாக நெகோஷியேட்டராக ராப் நன்னலி தான் வருவார் என் எதிர்பார்த்தாற் போலவே அவர் வர,


நான் என் மனைவி எனக்கு  துரோகம் செய்ததால் சுட்டுவிட்டேன் ,அதோ இருக்கிறாள் என காட்ட,

இவர் ராப் ஐ ஆயுதத்தை கீழே போட்டு விட்டு வர சொல்ல அவரும் கீழே போட்டு விட்டு பேரம் பேச வர ,அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் நடக்கிறது ஒரு அற்புதம். அங்கு தான் டெட்டின் மாஸ்டர் மைண்ட் வேலை செய்கிறது.

ஆயுதத்தை டெட்டும் அந்த துப்பாக்கிக்கு அருகே கீழே போட , உள்ளே வந்த ராப் தன் காதலியை ரத்த் வெள்ளத்தில் கண்டு துடிக்கிறார், முதலுதவி செய்கிறார். இந்த வெட்கம் கெட்ட உறவை வெளியேவும் சொல்ல முடியாது!
சொன்னாலும் தன் கௌரவம் போய் வேலைக்கும் ஆபத்து.
டெட் குடுத்தார் பாருங்கள் ஒரு பீமபுஷ்டி அல்வா, மனிதர் முடியாமல் மென்று விழுங்க,வேறு வழியில்லாமல் ஆத்திரத்தில் இவரை அடித்து நொறுக்க,



இங்கு தான் அரசு தரப்பு துடிப்பான தன்மானமுள்ள இளம் வக்கில் வில்லி பீச்சம்(ரயான் கோஸ்லிங்) ஆஜர்!

டெட் வாக்குமூலம் அளித்ததாகவும், சாட்சி ராப் எனவும் வழக்கு பின்னப்படுகிறது.அதில் கூத்து என்னவென்றால் டெட் தனக்கு வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் தாமே வாதாடி எல்லோரையும் பந்தாக பாவித்து அடித்து ஆடுகிறார்.மனிதர்.

சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட குண்டு வெளியேறவில்லை, துப்பாக்கி கன்னித்தன்மையுடன் இருக்கிறது, குண்டும் ஆறு மட்டும் குறைந்து இருக்கிறது.

அப்போ எப்படி ஜெனிஃபர் கோமாவுக்கு போனாள்?

டெட் சுட்டது உண்மையா?

யார் சாட்சி? போலிஸா? அய்யே..... வேறு சாட்சி இல்லையா?

சரி எங்கே துப்பாக்கி?இதுவா? இது புதுசாக அல்லவா இருக்கு?
குண்டுகள் கைபற்றினீர்கள்,துப்பாக்கியை காட்டுங்கள் இவருக்கு ஆயுள் கொடுக்கலாம் என  நீதிபதி சொல்ல!

ஜெனிஃபராவது கண்விழித்து சாட்சி சொல்லுவாள் என பார்த்தால் எங்கே?
இவன் போய் தலை மாட்டில் அமர்ந்து கொண்டு தனக்குத்தானே பேசியது தான் மிச்சம், அதற்கும் டெட் ஆப்பு வைத்து விட்டார், சாட்சியை கலைக்க பார்க்கிறார் என நாடகமாடி ரெஸ்ட்ரெய்ண்ட் ஆர்டர் வாங்கி விட்டார், இனி ஜெனிஃபரையும் பார்க்க முடியாது.

வில்லியும் ராப் நன்னலியும் இப்படி எண்ண..
ஒரு கை ரேகையாவது டெட் தான் குற்றவாளி என பொருந்துகிறதா?
சரி துப்பாக்கியை சல்லைடை போட்டு தேடியாகிவிட்டது.
எங்கும் இல்லை, ஒரு வேளை இந்த ஆள் அதை ஆசிட்டில் போட்டு கரைத்திருப்பானோ? இருந்தாலும் இருக்கும் என அதையும் முயன்று பார்த்தாகிவிட்டது.

இதற்கிடையில் ராப் தனிமையில் வில்லியை சந்திக்கிறார்,
தன்னால் அதே போன்ற ஒரு துப்பாக்கியை சாட்சியமாக கொடுக்க முடியும் என சொல்ல, இளம் கன்று அட்டார்னியோ மறுத்து நீதி, நேர்மை தான் முக்கியம்.
டெட் குற்றவாளியாயிருந்தாலும் அதை நேர்மையாகத்தான் நிரூபிப்பேன் என சொல்லி திருப்பி அனுப்புகிறான்.மீண்டும் தேடுதல் வேட்டை,அந்த வீட்டை தான் புது பொண்டாட்டி போல எத்தனை முறை கலைத்து போடுவது?

இத்தோடு மூன்று முறை வாய்தா வாங்கி, வாங்கி, நீதிபதி கொடுத்து கொடுத்து அலுத்து போக, இந்த முறை துப்பாக்கியை கண்டு பிடிக்காவிட்டால் டெட்டை யூ ஃப்ரீ டு கோ என அனுப்பி விடுவார்களே! கொடுமையே! என இளம் டெபுடி அட்டார்னி வில்லி தவிக்க அவரின் எண்ணத்தில் சரியாக மண் விழுந்து ஒரு தடயமுமோ துப்பாக்கியோ இந்த தேடுதல் வேட்டையிலும் கிடைக்காமல் போக, டெட் சந்தர்ப்ப சாட்சியங்கள் இல்லாத பயனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக கருதி  விடுதலை செய்யப்படுகிறார்.

கள்ளக்காதலன் ராப் கோர்டு வளாக படிக்கட்டிலேயே தன் துப்பாக்கியால் மண்டையில் சுட்டுக்கொண்டு இறக்க, டெட் கையோடு மனைவி இருக்கும் அரசு மருத்துவமனை போகிறார். இப்போ நீ சாகலாம் என தீர்மானித்து ஆஸ்பத்திரியில் கருணைக்கொலைக்கு முன்னமே விண்ணப்பித்திருக்க இவர் வந்ததும் துரிதமாக ட்யூபில் காற்று பிடுங்கி விட்டு, சுவாசத்தை,மூளையை,இதயத்தை, உடலை கண்காணிக்கும் மானிட்டர் கருவிகள் தயவு தாட்சன்யமின்றி நிறுத்தப்படுகின்றன. நம்ம மிஸ்டர் நேர்மை அதாங்க வில்லி ஜெனிஃபரின் லைஃப் சப்போர்டை நிறுத்தக்கூடாது என போட்ட கோர்டு ஆர்டருடன் ஓடி வருவதற்கும் இவர் ஜெனிஃபரின் பூத உடலை மார்சுவரிக்கு அனுப்புவதற்கும் வினாடி வித்தியாசம் கூட இருக்க வில்லை.

நம் டெட்டுக்கு ஒரே இறுமாப்பு, கம்பீரம், பார்வையினாலேயே சாதித்தேன் பார்டா ஜுஜுப்பி.. என ஒழுங்கு காட்ட,

வில்லி பீச்சம் அமைதியாக சவால் விடுகிறான்.முன்பு நீ மாட்டியது கொலை வழக்கு இப்போது
அது இரட்டைக்கொலை முயற்சி + கொலை வழக்கு நீ தப்பவே முடியாது.
நீ உப்பை தின்றாய் ! தண்ணியும் குடிப்பாய் என் கறுவிவிட்டு அகல்கிறான்.

இப்போது வில்லிக்கு ஒரு அழைப்பு வர மார்சுவரிக்கு போனால்,டாக்டர் ஒரு அதிசய செய்தியை சொல்கிறார்.
ஜெனிஃபர் இறந்ததும் அவள் மூளையில் இருந்து அகற்றப்பட்ட குண்டும் ராப் நன்னலியின் மூளையிலிருந்து அகற்றப்பட்ட குண்டும்  ஒரே வகை, ஒரே துப்பாக்கியால் உமிழப்பட்டது என சொன்னவுடன்.

போலீஸ் மேலதிகாரிகளை சந்திக்கிறார்,இந்த முறை கண்டிப்பாக டெட் ஐ பிடிப்போம் என உறுதி எடுக்கின்றனர்.

இங்கு நம் டெட்டுக்கோ மூளையில் மணி அடிக்கிறது. தன்னை பிடித்து விடுவார்களோ? என்ற உள்ளுணர்வில் வெளி நாட்டுக்கு தப்பி யோட நினைக்க,
வீட்டுக்குள் நுழைய அங்கு தன் அலமாரியில் குடைந்து கொண்டிருக்கும் வில்லியைப் பார்த்து ஏக கடுப்பாகிறார்,

அவரிடம் மிக ஆணித்தரமாக வில்லி ஆதாரங்களை அடுக்குகிரான்.

  • டெட் கள்ளக் காதலன் உபயோகித்த அதே வகை துப்பாக்கியை வாங்கியது
  • இவர்கள் நீச்சல் குளத்தில் குளிக்கையில்   அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்து துப்பாக்கியை மாற்றியது.
  • அதில் ஒரு குண்டை மட்டும் ஜெனிஃபரை சுட பயன்படுத்தியது.
  • சன்னலை சுட புதிய குண்டுகளை பயன்படுத்தியது
  • பின்னர் லாவகமாக துப்பாக்கியை ராப் வீட்டுக்குள் வந்ததும் மாற்றியது
  • எல்லாவற்றிற்கும் மேலாக ஹோட்டல் வீடியோ காமிராவில் டெட்டின் உருவம் பதிந்தது என அடுக்க.

டெட் முகம் கருக்கிறது,கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அப்படியா நன்றாக மேல் முறையீடு செய்து கொள், நீ சொன்னது எல்லாம் உண்மைதான் என திமிருடன் பதில் சொல்லிவிட்டு சூட்கேசுடன் வெளியேற

வெளியே நின்ற போலீசு இவருக்கு காப்பு மாட்டுகிறது. தன்னுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த வில்லி மைக்ரோபோன் அணிந்திருந்ததை இவர் கவனித்திருக்கவில்லை பாவம்.

மறு நாளே வழக்கு ஆரம்பம்ங்க...
இப்போது பந்து அட்டார்னிகளின் கோர்டில் , ச்சும்மா அடித்து ஆடப்பட,
இந்த முறை.இறுகிய முகத்துடன்  கூண்டுக்குள் சிங்கம் கர்ஜிக்க முடியாமல் முனகுகிறது .

கையும் களவுமாக பிடித்த வில்லிக்கோ பல சட்ட நிறுவங்களிலிருந்தும் வேலை வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்க,தன் பழைய முதலாளியுடன் போட்ட ஒப்பந்தப்படி அதே நிறுவனத்திலேயே அட்டார்னியாக தொடர்கிறான்.

ஆமாம்ங்க குற்றவாளி தப்பிக்க முடியாது தான்!

___________________________________________

என்ன படம் ? என்ன விறுவிறுப்பு? காட்சிக்கு காட்சி வேகம்,ஸ்டைல் தான்.
மிகத் துள்ளலான ஒளிப்பதிவு- க்ராமர் மார்கந்தா
சஸ்பென்ஸ் த்ரில்லிங்கை கடைசி வரை தக்க வைத்த இசை-ஜெஃப் டன்னா&மைக்கேல் டன்னா
எங்குமே தொய்வில்லாத இயக்கமும் கோர்ப்பும்-க்ரிகோரி ஹொப்லிட் ஹிட்ச்காக்கின் படங்களுக்கு ஈடான நேர்த்தி.

இந்த கதையில் வந்த டெட் இன் கதாபாத்திரத்தை நம்ம சர்.அண்டோனி ஹாப்கின்ஸ் ஐ தவிர யார் செய்திருந்தாலும் விழலுக்கு இறைக்கப்பட்ட நீரே!

இங்கே ஒரு ஆங்கில விமர்சனம்

_________________________________________



படத்தின் காணொளியை பாருங்கள் படமும் பிடிக்கும்:-





படக்குழு விபரம்:-
-------------------------------------------
Directed by
Gregory Hoblit
Produced by
Charles Weinstock
Written by
Glenn Gers
Daniel Pyne
Starring
Ryan Gosling
Anthony Hopkins
David Strathairn
Rosamund Pike
Embeth Davidtz
Music by
Jeff Danna
Mychael Danna
Cinematography
Kramer Morgenthau
Editing by
David Rosenbloom
Studio
Castle Rock Entertainment
Distributed by
New Line Cinema
Release date(s)
April 20, 2007
Running time
113 min.
Country
United States
Language
English

-------------------
இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.
-------------------

ஃப்ரோஸன் ரிவர் (2008) உறைந்த நதி

இதுதான் இந்த படத்தின் ஒன் லைன்.


ணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவனை இழந்த கைம்பெண்கள் பாடு இந்த சமூகத்தில் எவ்வளவு கொடியது? என அழுத்தமாக சொன்ன படம்.ஒரு பெண் தன் குடும்பக் கடமையாற்ற எந்த அளவுக்கு கீழே இறங்குவாள் என  நமக்கு பட்டவர்த்தனமாக விளக்குகிறது. நிறைய குடும்பங்களில் குடும்பத்தலைவன் கடமையை செய்யத்தவறியதால் அந்த கடமையை தங்கள் வாழ்வாதாரத்திற்காக  பெண்களே எடுத்து செய்து குடும்ப பாரத்தை தன் தோள்களில் சுமப்பது  நாம் கண்கூடாகக் காணும் நிதர்சனம்.

கோர்ட்னி ஹண்ட்டின்  தீர்க்கமான எழுத்து இயக்கத்தில் வந்த இந்த படம் அனைவரும் வாழ்வில் பார்க்க வேண்டிய ஒன்று. மிகப்பெரிய நடிகர்கள் என்று யாருமே இல்லை, இரண்டே வலுவான பெண்கள் கதாபாத்திரம்.

ரே எட்டி யாக வந்த தன் ஐம்பதுகளில் இருக்கும் மெலிசா லியோ வுக்கு   இதுபோன்ற திறமையை நிரூபிக்கும்  கதா பாத்திரம் கிடைக்க இவ்வளவு காலமாகியுள்ளது.அழகும் இளமையும் சுத்தமாக வடிந்து போன பெண் பாத்திரத்தில் இவரைத் தவிர யார் நடித்திருந்தாலும் பொருந்தியிருக்குமா? என்றால் சந்தேகமே!

அடுத்து  லிலா லிட்டில் வுல்ஃப்  (மிஸ்டி உபாம்நேடிவ் அமெரிக்கன் என்னும் செவ்விந்திய பழங்குடி இன பெண்ணாக வந்து  உணர்ச்சிகரமான் நடிப்பில் முன்னவரை தூக்கி சாப்பிடுகிறார்.இருவருக்கும்  நடிப்பில் சரியான போட்டி.குழந்தையைப் பிரிந்து ஏங்கும் தாய் வேடத்தில் இவர் கலக்கியிருந்தார். இந்த கதாபாத்திரம் மூலமாக  வளர்ந்த நாடான அமெரிக்காவும் கனடாவும் பழங்குடிகளை எந்த நிலையில் ஒடுக்கி வைத்துள்ளது என தெளிவாய் அறியலாம்.

இசை பீட்டர் கோலப்&ஷாஹத் அலி இஸ்மாய்லி ரொம்ப ரொம்ப அருமையான திகிலை , உணர்ச்சிகளை கூட்டும் ரகம். பார்ப்ப்வர் பல்ஸ் எகிற வைக்கும்.
காமிரா ரீட் டாசன் மொரானோ காட்சிகள் அவ்வளவு குளுமை.சரியான வைட் ஆங்கிள் காட்சிகள்.எங்கு நோக்கிலும் வெண்மையான தீம்.


பாகிஸ்தான் ,இலங்கை,சீனா,போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக, அமெரிக்காவுக்கு எந்த விதமான அடையாளமும் இல்லாமல் எப்படி? மக்கள் குடும்பத்துடன் குடியேறுகிறார்கள் என   நமக்கு நன்கு விளக்கியும் விடும்.
பார்க்கும் போதே குலை நடுங்குகிறது,பிறந்த மண்ணின் அடையாளத்தை பணத்துக்காக ஒருவன் தொலைப்பது  எவ்வளவு கொடுமை?,அவர்கள் இறந்தாலோ நோய் வாய்பட்டாலோ உறவை பார்க்க நினைத்தாலோ தாயகமே திரும்ப முடியாத ஒரு நிலை!.


கதை நியூயார்க்குக்கும் கனடா எல்லைக்கும் நடுவில் உள்ள மசினா என்னும் இடத்தில் நடக்கிறது.படத்தின் தலைப்புக்கேற்ப கடுங்குளிர் பிரதேசம்,எங்கும் உறைபணி.

நகரின் பொம்மை கடையில் பகுதி நேரமாக வேலை செய்யும் ரே எட்டிக்கு 2 மகன்கள்,கணவன் ராட்டினங்கள் மற்றும் சிறுவர் பொம்மை வண்டிகளை வைத்து வித்தை காட்டி பிழைக்கிறான் , மகா சூதாடி வேறு , குடியிருக்கும் ட்ரெய்லரை பழுதுபார்க்க வைத்திருந்த பணம் 4000 டாலர்களை வீட்டிலிருந்து திருடிக் கொண்டு காரையும் ஒரு சூதாட்ட விடுதியில் அனாதையாக நிறுத்திவிட்டு ஊரைவிட்டே ஓடிப்போய் விட,இவள் நீண்ட தேடுதலுக்கு பிறகு கணவனின் காரை  பார்க்கிறாள் , அதை பழங்குடிப் பெண்ணான லிலா திருடி உபயோகிக்கிறாள். .

லிலா ஒரு விதவை , தன் கைகுழந்தையை மாமியார் பிடுங்கி வைத்துக் கொண்டு தர மறுக்க ,பணம் கொடுத்து குழந்தையை மீட்க பணம் சேர்க்கிறாள், ஏற்கனவே பலமுறை ஆள் கடத்தல் வழக்கில்  பழங்குடிக்கான சிறப்பு போலீசாரிடம் மாட்டி எச்சரிக்கப்பட்டதால் தற்போது இந்த செடான் ரக காரை ஒரு மெக்சிக கடத்தல் காரனுக்கு 1500 டாலருக்கு  விற்க எண்ணுகிறாள்.

ஆனால் ரே  லிலாவை பின் தொடர்ந்து அவள் வசிக்கும் சிறிய ட்ரெய்லருக்கே வந்து காரை கைப்பற்றுகிறாள்,அப்போது நடந்த வாக்குவாதத்தில் இவள் ட்ரெய்லரின் கதவை சுட்டுவிட,பெரிய துளை விழுந்துவிடுகிறது,இரவு குளிரில்
லிலா செய்வதறியாது தவித்து துளைக்கு துணியை அடைத்து வைக்கிறாள்.
அவளுக்கு கதவை பழுதுபார்க்க பணம் தேவைப்படுகிறது.அவ்வப்போது தன் குழந்தையை எட்ட நின்று கள்ளத்தனமாக பார்க்கிறாள்,கொஞ்சுகிறாள்.

ரேயின் வீட்டில் பெரிய மகனும் சிறிய மகனும் அம்மாவுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.வீட்டில் கணவன் தவணையில் வாங்கிய ப்ளாஸ்மா டிவிக்கு தவணை பணம் கட்டவும் , மளிகை சாமான்கள்,சொந்த தொழில் தொடங்க என்று பணம் தேவைப்படுகிறது.மகன்கள் மூன்று வேளையும் பாப்கார்னும் டாங் பழச்சாறுமே சாப்பிட்டு மிகவும் அலுப்படைகின்றனர்.மூத்த மகன் தான் வேலைக்கு போய் பணம் கொண்டு வருகிறேன் என சொல்ல, ரே கண்டிப்புடன் அவனை பள்ளிக்கு அனுப்புகிறாள்.

ரேவுக்கு காலையில் லிலா தன்னிடம் காரை விலைக்கு கேட்டது நினைவுக்கு வர அங்கே மீண்டும் செல்கிறாள், லிலா அவளை உறைந்த  செயிண்ட் லாரன்ஸ் நதியை கவனமாக கடந்து உள்ளே தூர அழைத்துச் செல்கிறாள்,அங்கே சட்டவிரோதமாக இருக்கும் ட்ரெய்லர் குடியிருப்பில் ஒரு செவ்விந்தியனை சந்திக்க ,அவன் இவளது காரின் டிக்கியில் மூன்று சீனர்களை ஏற்றிவிட்டு தலைக்கு 600 டாலர் தருகிறான்,இவள் அவர்களை அமெரிக்க எல்லைக்குள் ஒரு மோட்டலில் சென்று இறக்கிவிட அந்த மோட்டல் உரிமையாளர் தலைக்கு 600 டாலர் தருகிறான்,பணத்தை இருவரும் சரிசமமாக பிரித்துக்கொள்கின்றனர்.வெற்றிகரமாக முதல் ஆள் கடத்தலை முடித்து விடுகின்றனர்.

ல்லை போலீசாரும் ரே ஒரு வெள்ளை இன பெண் என்பதால் சோதனை செய்யவில்லை,இப்படியே ஒவ்வொரு தேவைக்கும் பணம் திரட்ட ,இந்த தொழிலையே தொடர்ந்து செய்வோம் என ரேவுக்கு தோன்றித் தொலைக்கிறது.

ரு சமயம் காரின் டிக்கியில்  பாகிஸ்தானிய தம்பதிகளை அந்த ஏஜண்ட் ஏற்ற ,வழமையான பாகிஸ்தானியர்களைப்போல அவர்களுக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்க வில்லை,அவர்கள் உருவம் இவளுக்கு தீவிரவாதிகளோ என்னும் அச்சத்தை உண்டு பண்ணியதால் அவர்கள் வைத்திருந்த சோல்டர் பேக்கை அவர்களிடமிருந்து பிடுங்கி காரின் உள்ளே வைக்கிறாள், பை கணத்ததால் அதை வெடி குண்டாக இருக்குமோ என சந்தேகித்து உறைந்த ஆற்று பாதையிலேயே தூக்கி வீசி விட, நடக்கிறது விபரீதம்.

பின்பு மோட்டலில் டிக்கியை திறந்து விட,பாகிஸ்தானிய தம்பதிகள் இவளிடம் வந்து பை எங்கே என உருதுவில் கேட்க? மோட்டல் முதலாளி அதை மொழிபெயர்க்க,அவர்கள் சொன்ன செய்தி கேட்டு இவள் உறைகிறாள்.

அந்த பையில் இருந்தது 10 மாத கைக்குழந்தை,இவள் அந்த பையில் வெடி குண்டு இருக்குமோ என சந்தேகப்பட்டு தூக்கி வீசியதாகச் சொல்லிவிட்டு காரை கிளப்பிக் கொண்டு அந்த இடம் சென்று பார்க்க,அந்த பை  மூடுபனியால் மூடப்பட்டிருக்க,அதை எடுத்து காருக்குள் அமர்ந்து குழந்தைக்கு உள்ளங்கை சூடு கொடுத்து கைகளிலும் மார்பிலும் லிலா தாங்கிக் கொண்டு எல்லையை வேகமாக கடக்கையில், போலிசால் கார் நிறுத்தப்படுகிறது.

இவர்கள் பயந்து போகின்றனர்,அருகில் வந்து டார்ச் அடித்து பார்த்த போலீசு, ரேயின் காரின் பின்பக்க அபாய விளக்கு உடைந்திருப்பதையும், அவள் வலப்புறம் திரும்ப இடப்புறம் சமிக்ஜை விளக்கை போட்டதையும் சொல்லி அறிவுறுத்தி, லிலாவை பார்த்து யார் இவள்? என கேட்க,இவள் லிலாவை தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் தாதி என்று சொல்கிறாள்,போலிஸ்காரர் ரேவின் வீட்டு விலாசத்தை வாங்கிக் கொள்கிறார்.இவள் பயத்துடன் மோட்டல் சென்று குழந்தையை பாகிஸ்தானிய பெற்றோரிடம் ஒப்படைக்க,அவர்கள் இவள் காலைப்பிடித்து  நன்றி சொல்கின்றனர்,குழந்தை கண் விழிக்கிறது.

ரே குற்ற உணர்விலிருந்து மீண்டு விட ,லிலா குழந்தை உயிர் பிழைத்ததை ஏற்க மறுக்கிறாள்.பினாத்திக் கொண்டே இருக்கிறாள் , இனி இந்த கடத்தல் வேலை வேண்டாமென முடிவு செய்து பழங்குடி அதிகாரி அலுவலகத்தில் அலுவலக பணிப்பெண் வேலைக்கு போகிறாள்.

இப்போது ரேவின் பெரிய மகன் தன் தம்பிக்கு கிருஸ்துமஸ் பரிசாக விலைஉயர்ந்த துப்பாக்கி பொம்மையை பரிசளிக்க எண்ணி, ஒரு வயதான மூதாட்டி வளர்ப்பு செடி தேவை என விளம்பரம் கொடுக்க,அதை பார்த்து தான் ஒரு செடி சப்ளையர் போல நடித்து அந்த மூதாட்டிக்கு போன் செய்து அவரின் க்ரெடிட் கார்டு எண்ணை வாங்குகிறான்,பின்னர் பொம்மை விற்கும் நிறுவனத்தின் டெலிமார்கெடிங்கிற்கு போன் செய்து  ,அந்த கார்டு எண்ணை சொல்லி பொம்மையை டோர் டெலிவரி செய்து வாங்குகிறான்.தம்பிக்கு பரிசளிக்கிறான்.

அப்போது ட்ரெய்லருக்கு அடியில் ஓநாய் ஒன்று துளை வழியாக புகுந்துவிட  வினோதமான உருட்டல் சத்தம் கேட்கிறது, மகன் கேஸ் வெல்டிங் கொண்டு போய் , ஓநாயை விரட்ட தெர்மல் இன்சுலேஷனுக்கு தீவைக்கிறான் , இதனால் வீட்டின் ஹீட்டிங் இன்சுலேஷன் சிஸ்டமே நாசமாகி விடுகிறது, வீட்டுக்கு வந்த ரேவுக்கு இந்த அதிர்ச்சி வேறு காத்திருக்க, எல்லாவற்றிற்க்கும் செலவு செய்ய  3000 டாலருக்கும் மேல் பணம் தேவைப்படுகிறது.வேறு வழி ,பழைய குருடி கதவை திறடி தான்.

மறு நாள் ஒரு போலிஸ்காரர் இவள் வீடு வந்து முதல் நாள் இரவு வீடு பாதுகாப்பாக வந்தீர்களா? என விசாரித்து விட்டு ,பின்னர்,லீலா ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவள், ஆள் கடத்தல்காரியும் கூட ,எனவே அவளை விட்டு தள்ளியிருக்குமாறு அறிவுறுத்துகிறார் , இவள் அவசர பணத்தேவை கொண்ட மனமோ ? மீண்டும் லிலாவை அழைக்க ஆரம்பிக்கிறது விபரீதம்.

மீண்டும் ஆற்றைக்கடந்து உள்சென்று மூன்று சீன பெண்களை டிக்கியில் ஏற்றிக்கொண்டு ஒரு  நைட் கிளப் செல்ல , அங்கே வைத்து அந்த பெண்கள் விபசாரத்திற்கு விருப்பமில்லாமல் விற்க்கப்பட்டதை அறிகிறாள்.

டிஸ்கோ கிளப்பின் முதலாளியோ பணம் தலைக்கு 300 டாலர் மட்டும் தர இவள் கடுப்பாகி துப்பாக்கி காட்டி அவனை மிரட்ட,அவன் இவளை தாக்க,இவள் திருப்பி முட்டியில் சுட்டுவிட்டு சீன இளம் பெண்களையும் காரில் கூட்டிக்கொண்டு சாலையில் விரைய.

எல்லை போலிசார் இவள் வண்டியை கை காட்டி நிறுத்தச் சொல்ல,இவள் செய்வதறியாமல் காரை உறைந்த ஆற்றின் ஸ்திரமில்லாத ஐஸ்பாதைக்குள் செலுத்த,கார் ஐஸ் புதை குழிக்குள் மூழ்க,இவர்கள் சாதுர்யமாக தப்பிச் சென்று ஒரு பழங்குடியினரின் வீட்டில் தஞ்சம் புகுகின்றனர்,

அங்கே ஒரு பழங்குடி தலைவர் வந்து போலீசுக்கு தகவல் சொல்லியபின்னர் இருவரில் யாராவது ஒருவரை சரணடைய சொல்கிறார்,

ரே தனக்கு 2 மகன்களை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் தன்னை விட்டு விடும்படி கெஞ்ச,லிலா ஆறாத மனத்துயருடன் விட்டுக் கொடுக்கிறாள்.அதற்கு சம்மதிக்கிறாள்.

பழங்குடித் தலைவர் லிலாவை நோக்கி இந்த முறை நீ போலிசில் மாட்டினால் உன் மாமியாரிடமிருந்து  குழந்தை உன் கைக்கு இந்த ஜென்மத்தில் வராது, மேலும் நீ நம் பழங்குடியினர் பிரிவிலிருந்தும் தள்ளிவைக்கப்படுவாய் !என கடுமையாக அறிவுறுத்திவிட்டு.மேலும் அவரே.

இந்த பெண்மணி போலிசிடம் சரணடைந்தால் வெறும் ஆறே மாதம் சிறை தண்டனை,இவரது பிள்ளைகளை நீ பார்த்துக் கொள்ளலாம் ,என ஆலோசனை சொல்ல.இருவரும் இந்த யோசனையை ஏற்றுக்கொள்கின்றனர்.


இப்பொது ரே போலிசாரது காரில் இருந்து மகன்களுக்கு அழுது கொண்டே போன் செய்து ,அங்கே இன்னொரு அம்மா வருவாள்,அவளை மரியாதையாக நடத்தி அன்புடன் பழகவேண்டும் என சொல்லி வைக்கிறாள்.

லிலா மாமியாரிடமிருந்து தன் குழந்தையை மிகுந்த தைரியத்துடன் பிடுங்கிக் கொண்டு ரேவின் வீடு வருகிறாள்.அங்கு அவளும் ஒரு அங்கமாகிவிடுகிறாள்.
லிலாவின் பெண்ணை ரேவின் இளைய மகன் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறான்.

மறு நாள் ரேவின் மூத்த மகன்  அம்மாவின் ராட்டினத்தை பழுது பார்த்து இயக்கிப் பார்க்கிறான்.அதை கொண்டு போய் உழைத்து காசு சம்பாதிக்க எண்ணுகிறான்.அதில் இரு குழந்தைகளையும் ஏற்றி சுற்றவிட ,அப்போது போலீசு வாகனத்தில் ரேவின் மூத்தமகனால் ஏமாற்றப்பட்ட மூதாட்டி வந்து இவன் குரலை கேட்டு போலிசாருக்கு அடையாளம் காட்ட ,இவனை  நோக்கி போலிசார் அன்புடன் ,மகனே நீ குற்றம் செய்தாயா? எனக் கேட்க?

இவன் ஆம் என சொல்லி தலை குனிய.இந்த மூதாட்டியிடம் மன்னிப்பு கேட்பாய் தானே? என சொல்ல, இவன் சாரி என்று சொல்லி தலை குனிய.

போலீசார் அந்த அம்மாவை நோக்கி அம்மா நீங்கள் இந்த சிறுவனை மன்னிக்கிறீர்களா? என கேட்க,அந்த மூதாட்டி ஆம் ! என சொல்லி தலையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள ,போலீசார் இவன் முதுகில் தட்டி இனி இது போல செய்யாதே! மகனே! என அன்புடன் சொல்லிவிட்டுச் செல்ல படம் இனிதே முடிகிறது.எவ்வளவு கேள்விகள்? சொல்லாமல் சொன்ன பதிலகள் என மனம் கனக்கிறது.


இது போல மென்மையான சட்டங்கள் ( Restorative Justice, ) கொண்ட மாகாணங்களும் கனடா மற்றும் அமெரிக்காவில் இருப்பதை பார்க்கையில் ஆச்சர்யம் மிஞ்சுகிறது. நான் படத்திலிருந்து  இங்கு சொன்ன விஷயங்கள் பாதி கூட இருக்காது.


படத்தின் ஒவ்வோரு விஷயத்திற்கும் யதார்த்தம் கொண்டு வர இயக்குனர் மெனக்கெட்டிருப்பது நன்கு புலப்படுகிறது.பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

========================

படத்தில் மெலிசா லியோவுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் கிடைக்க இருந்து கை நழுவியதாம்.

ரேவின் கணவனைக் கடைசி வரை காட்டவே இல்லை,மகன்கள் இருவரின் நடிப்பும் மிக அருமை.

---------------------------------
படத்தின் காணொளியை அவசியம் பாருங்கள் படமும் பார்ப்பீர்கள்


--------------------------


Directed by
Courtney Hunt
Produced by
Heather Rae
Chip Hourihan
Written by
Courtney Hunt
Starring
Melissa Leo
Misty Upham
Charlie McDermott
Michael O'Keefe
Mark Boone Junior
Zack Rees
Music by
Peter Golub
Shahzad Ali Ismaily
Cinematography
Reed Dawson Morano
Editing by
Kate Willams
Distributed by
Sony Pictures Classics
Release date(s)
August 1, 2008
Running time
93 minutes
Country
United States
Language
English
Gross revenue
$4.7 million (Worldwide)[




இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.

ஃபைவ் மினிட்ஸ் ஆஃப் ஹெவன் -2009 (சொர்கத்தின் ஐந்து நிமிடங்கள்)



அங்கீகரித்தமைக்கு நன்றி:-



மீபத்தில் பார்த்த படத்தில் எனக்கு மிகவும் தாக்கத்தை உண்டு பண்ணிய படம் இது என்றால் மிகை இல்லை, டவ்ன்ஃபால் பட இயக்குனர்  ஆலிவர் ஹிர்ச்பீகல் என்றதுமே நம்பிக்கை இருந்தது, இயக்குனர்  இதிலும் ஏமாற்றவில்லை. கை ஹிப்பர்டின் அருமையான கதையில் உருவான இந்த படம் ப்ரிடிஷ் / ஐரிஷ் டெலிவிஷனின் கூட்டுதயாரிப்பாகும்,இந்த படத்திற்கு 2009ஆம் ஆண்டுக்கான் சன் டான்ஸ் ஃபெஸ்டிவலின் 2 விருதுகள் கிடைத்தது. பிபிசி 2 இல் வெளியிடப்பட்டு பின்னர் பெரிய திரையிலும் வெளியாகி நடிப்புக்காகவும் கதைக்காகவும் மிகவும் பேசப்பட்ட படம்.



படத்தின் ஒன்லைன் இது தான்:-
இருவர்.
ஒருவன் வெறுப்பின் உச்சத்தில் மற்றவனை மன்னிக்க மறுக்கிறான்.
மற்றொருவன் குற்ற உணர்வின் உச்சத்தில் தன்னையே மன்னிக்க மறுக்கிறான்.இந்த உணர்ச்சி போராட்டம் தான் ஃபைவ் மினிட்ஸ் ஆஃப் ஹெவன்


ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் புகழ் லியம் நீஸன் அவரது உன்னதமான நடிபபால் மனதை மீண்டும் உருக்கியிருக்கிறார்.ப்ளடி சண்டே படப் புகழ் ஜேம்ஸ் நெஸ்பிட் ஆக்ரோஷத்திலும் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் செம திறமை காட்டியிருக்கிறார்.இது இவர்கள் இருவரை மட்டும் முன் நிறுத்தி நகரும் கதைக்களம்.

ஒருவரின் குற்றத்தை இன்னொருவர் மன்னிப்பதும் , மறப்பதும் எவ்வளவு கடினம்? என மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள்.மனிதனின் மிகக் கடினமான செயல் என்பது மன்னிப்பாகத் தான் இருக்கும் என இந்த படம் 2 மணி நேரத்தில்  நமக்கு  நன்கு விளக்கிவிடுகிறது.

படத்தை 2 பகுதியாக பிரிக்கலாம்.
முதல் பகுதி 1975 ஆம் ஆண்டு மேற்கு அயர்லாந்தில் கத்தோலிக்கர்களுக்கும் , ப்ராடஸ்டண்டுகளுக்கும் நடந்த இனக்கலவரத்துடன் துவங்குகிறது.ஊரடங்கு உத்தரவு சமயத்தின் போது , முன் விரோதம் காரணமாக 17 வயது அலிஸ்டர் லிட்டில் , 19 வயது ஜிம் க்ரிஃபினை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அகல்கிறான்,சம்பவ இடத்தில் இருந்த ஜிம் மின் தம்பியை கொல்லாமல் விட்டு விடுகிறான். பின்னர் வழக்குக்கு அவனே சாட்சியாகிறான்.

பின்னர் அலிஸ்டர் போலீஸிடம் பிடிபட்டு 12 வருடங்கள் சிறை வாசம் அனுபவிக்கிறான்.

அண்ணனின் கொலையை கண்ணால் கண்ட 11 வயது ஜோ அண்ணனை கொன்றவனை பழிவாங்கவும் முடியாமல் , அண்ணனையும் காப்பாற்ற முடியாமல் தன் அம்மாவின் ஏச்சு பேச்சுக்கு ஆளாகி பின்னர் அம்மா தற்கொலை செய்து கொண்டு இறக்க, 33 வருடங்கள் கழிந்த நிலையில் .தற்போது திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் ஆன பின்னரும் ஜோ வன்மத்துடன் அலைகிறான்.அண்ணனை கொன்றவனை எப்படியாவது பழி தீர்க்க தருணம் பார்க்கிறான்.

இரண்டாம் பகுதியாக :-

1975 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரங்கள் , பலியான உயிர்கள் குறித்த டாகுமெண்டரி தயாரிக்க எண்ணிய ஐரிஷ் தொலைக்காட்சியினர் , அலிஸ்டரையும்   ஜோவையும் ஒருவரை ஒருவர்  மனம் விட்டு பேச செய்து வித்தியாசமான டாகுமெண்டரி எடுக்க கேட்டு அணுகுகின்றனர்.


இருவரும் இதற்கு சம்மதித்து தொலைக்காட்சி நேர்காணலுக்கு ஆவலுடன் தயாராகின்றனர்.அலிஸ்டாருக்கு ஜோ தன்னை கொன்று  தன்  அண்ணன் சாவுக்கு பழி தீர்க்க எண்ணியிருப்பது தெரியாது,

அந்த நாளும் வந்தே விடுகிறது.அலிஸ்டர் (லியம் நீஸன்) நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்க ஒரு அறையில் அமைதியாக காத்திருக்க ,

தாமதமாக உள்ளே நுழைந்த ஜோ (ஜேம்ஸ் நெஸ்பிட் ) அலிஸ்டரை கண்களால் தேடுகின்றான். அலிஸ்டருக்கு ஒப்பனை போடப்படுகின்றது. மிகவும் பரபரப்பான மன நிலையில் நிறைய புகை பிடிக்கிறான்,தொலைகாட்சி டெக்னீஷியன் பெண்ணிடம் அலிஸ்டரை பற்றி விசாரிக்க,அவன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை,ஆனால் ஒரு ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் சொந்தமாக உண்டு எனவும் ,தன் போல் இல்லாமல் வருமானத்திற்கு குறைவில்லை எனவும் அறிந்து இன்னும் கடுப்பாகிறான்,பழம் நறுக்கும் கத்தியை எடுத்து சட்டைக்குள் ஒளித்துக் வைத்துக் கொள்கிறான்.இவனுக்கு முகம் வியர்த்து இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.

தொலைக்காட்சி டெக்னீஷியன்களோ ? இவன் நல்ல மன நிலைக்கு வந்த பின்னரே இருவரையும் சந்திக்க வைக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.
இவனிடம் சம்மதம் வாங்கி ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் சொல்லி ,படிகளில் இருந்து இறங்கி வர சொல்ல,இவன் வேகமாக இறங்க.

அவர்கள் , மன்னிப்பு கேட்டு மீண்டும் இறங்கி வர சொல்ல, அவன் தன் கத்தி வெளியே விழுந்துவிடுமோ என பயந்து மீண்டும் பதட்டத்துடன் இறங்க,அவர்கள் இவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒருமுறை இறங்கி வர சொல்ல,இவன் ஏக கடுப்பாகி சட்டையில் குத்திக்கொண்ட மைக்கை உருவிக் கடாசிவிட்டு தன்னை கூட்டிவந்த காரில் சென்று அமர்ந்து கொண்டு மிரட்டி காரை கிளப்பிக்கொண்டு விமான நிலையம் செல்கிறான்.

அலிஸ்டர் தனக்கு மன்னிப்பு கிடைக்காத ஏமாற்றத்தில் உழல்கிறான். ஜோவின்  ஊருக்கு செல்கிறான்.ஜோ வழக்கமாக சூதாடும் கிளப்பிற்கு சென்று உருக்கமான கடிதம் ஒன்றை கொடுக்கிறான். அதில் நடந்ததை மறந்துவிட்டு நீ உன் மனைவியுடனும் மகள்களுடனும் இனிய வாழ்க்கையை துவக்க வேண்டும், நான் அதன் பின்னர் உன் முகத்திலேயே விழிக்கமாட்டேன்.எனக்கு தேவை ஒரே ஒரு மன்னிப்பு மட்டுமே என்கிறது.மேலும். நான்
உன் அண்ணன் இறந்த வீட்டில் தான் காத்திருக்கிறேன் என முடிக்க,

ஜோ வெறியுடன் கிளம்புகிறான்,அந்த பாழடைந்த வீட்டின் மாடிக்கு சென்ற ஜோ அலிஸ்டரை கண்டவுடன் கண்ட மேனிக்கு தாக்க தொடங்க, தற்காப்புக்காக அலிஸ்டரும் திருப்பி தாக்க,ஒருகட்டத்தில் கண்ணாடி சன்னலை உடைத்துக் கொண்டு கூரையில் சறுக்கி தரைத்தள நடைபாதையில் வந்து விழுந்து இருவரும் மூர்ச்சை ஆகின்றனர்.

சிறிது நேரத்தில் முதலில் கண்விழித்த அலிஸ்டர்  ஜோவின் நாடி பிடித்து பார்க்கிறான்.பின்னர் கண்விழித்த ஜோவை எழுப்பி உட்கார வைக்கிறான்.தான் பெல்ஃபாஸ்ட் என்னும் ஊருக்கு போவதாகவும்.திரும்பவே வரப்போவதில்லை என்றும் கூறுகிறான்.

இனியாவது வன்மத்தை கைவிட்டு மனைவி மகள்களோடு மகிழ்ச்சியாக வாழ்வதற்கே தான் அவனை உயிருடன் விடுவதாக சொல்லுகிறான். ஜோ இப்போது தெளிந்த உள்ளத்துடன் உடைந்த கால்களால் தள்ளாடி எழுந்து நின்று ஒரு சிகரெட்டை பற்ற வைக்கிறான்.

இப்போது அலிஸ்டர்  சாலையில் பாதசாரி சிக்னலுக்கு காத்திருக்க ஜோவிடமிருந்து கைபேசியில் அழைப்பு வருகிறது,  நீண்ட தயக்கத்துடன் பேசிய ஜோ , அவனை மன்னித்து விட்டதாகவும் இனி தன் முகத்தில் விழிக்க வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்கிறான்.அலிஸ்டர் நெடு நாள் பாரத்தை  நொடியில் இறக்கி வைத்த மகிழ்ச்சியில் ஆனந்த மழையில் நனைகிறான்.
-------------------------------------

ன்றைய காலகட்டத்தில் வெளிவரும் அனேகமான திரைப்படங்கள் வன்முறை, கண்ணுக்கு கண்,கைக்கு கை , பழிக்கு பழி தீர்த்தல்,ரத்தம்,வஞ்சம் ஆகியவற்றையே பிரதானமாக கொண்டு எடுக்கப்படுகின்றன, ஆனால் இந்த படம் வன்முறையால் வன்முறையை வேண்டாம் என்று சொன்ன படம்.இரண்டு மணி நேரம் உபயோகமாக செலவு செய்ய எண்ணுபவர்கள் , உலக சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்,மற்றபடி எனக்கு பேசினால் பிடிக்காது.கொட்டாவி வரும் என்பவர்கள் தயவு செய்து வேறு படம் பாருங்கள்.என்னை திட்டாதீர்கள்.
----------------------------------------------------------

படத்தின் கானொளியை அவசியம் பாருங்கள் படமும் பிடிக்கும்.

----------------------------------------------------------
Directed by
Oliver Hirschbiegel
Produced by
Eoin O'Callaghan
Stephen Wright
Written by
Guy Hibbert
Starring
Liam Neeson
James Nesbitt
Anamaria Marinca
Music by
David Holmes
Cinematography
Ruairi O'Brien
Editing by
Hans Funck
Studio
Big Fish Films
Element Pictures
Ruby Films
Distributed by
BBC Television (United Kingdom)
IFC Films (United States)
Pathé (worldwide)
Release date(s)
5 April 2009 (TV)
21 August 2009 (U.S., limited)
Original channel
BBC Two
Running time
90 minutes
Country
United Kingdom/Ireland


-------------------------------------

அம்மா திரும்ப வந்தாள்-சிறுகதை






















ம்மா  தவசத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு,நிமிஷமா மூணு வருஷம் ஓடியே போச்சு,யார் தான் நினைத்திருக்கக் கூடும்?அவ்வளவு நல்ல‌ஆத்மா!நல்ல என்னும் சொல்லுக்குள் அவளை அடைத்துவிடுவது ஒரு பேதமை,”சூரியன் சுடும் என்பது போல.”

மிக வைராக்கியமான பெண்மணி,தன் சுக துக்கங்களுக்கு  சிறிதும் முக்கியத்துவம் அளிக்காமல் ,குழந்தைகளுக்காகவும்,பிற‌த்தியாருக்காகவும் வாழ்ந்த மிக நல்ல ஆத்மா.


என்னதான் இருந்தாலும் நான் ஒரு கோழை போல‌
அவளிடம் என் புதிய வெளி நாட்டு கம்பெனி என்னை நடத்தும் விதம் குறித்து
கூகிள் சாட்டில் சொல்லியிருக்கக்கூடாது தான்,அதுவும் இரண்டாயிரம் மைல்கள் தள்ளி வந்துவிட்டு அம்மாவிடம் புலம்பியது தவறே!

வெகுளி,உடனே கிளம்பிவிட்டாள்,அவள் அம்மாவிடம் முறையிட.
மருவத்தூருக்கு,முட்டி போட்டு மூன்றுக்கும் மேல் பிரதஷனம் செய்த்ததாக‌
போன வருடம் கோவிலுக்கு போன போது  தெரிந்த‌செக்யூரிடி சொன்ன போது
அவள் சாவுக்கு வராத கண்ணீர் கண்களில் முட்டியது.அவரிடம் அம்மா போன விஷயம் சொல்ல அவரும்  கைகூப்பி கருவறையை பார்த்தார்.

வினுவை டெல்லியில் கல்யாணம் செய்து கொடுக்க முதலில் ஜாதகம் பார்த்து ஓகே சொன்னது,அவள் அலுவலகத்தில் லோன் போட்டது, எல் ஐ சி யில் 1லட்சம் ரூபாய் பாலிசி முதிர்வடைய ,அதை வாங்க என் ஸ்கூட்டரில் என்னிடம் திட்டு  வாங்கிக்கொண்டே அமைதியாக வந்தது,என்ன மகன் நான் ஒரு இளநீர் கூட அந்த  வெயிலில் வாங்கிக் கொடுக்கலையே?அம்மா மீது ஏன் எனக்கு அவ்வளவு கோபம்? இவ்வளவு கோபத்தை மூணு வயசில் விட்டுப்போன அப்பாமீது கூட காட்டலையே?

வினுவை பிரிந்தது தான் அம்மா போக காரணமோ? இருக்காது,பானுவும் ,குழந்தை சம்யுக்தாவும் தான் வாரா வாரம் வந்து பேசிவிட்டு போகிறார்களே?
அப்புறம் ஏன்? நல்ல குடும்பத்தில் கொடுத்திருக்கேன் என திருப்திபட்டாளே?
திவ்யாவுக்கும் அம்மாவுக்கும் சிறிது மாமியார் மருமகள் பூசல் இருந்தது உண்மைதான். அந்த மாதம் நான் அம்மாவுக்கு கொடுத்த பணத்தை திவ்யா கையில் தராமல் கிழே வைத்து எடுத்துக்கோங்க‌, என்றதனால் இருக்குமோ?

திவ்யாவை நான் பானு என திட்டி தீர்த்தாகிவிட்டது,அமிர்தா குட்டிக்கு பாட்டி ஐஸ் பெட்டிக்குள் தூங்குகிறாள். என வந்த  ஜனங்களுக்கு சொல்லுவதே பெரிய வேலையாயிருந்தது.அம்மா கடைசியாக அவளை பற்றி தான் பேசினாளாம்.மீண்டும் கண்ணீர் முட்டியது.பெரியம்மா சொன்னார்கள்,யாரோ மாத்திரை ஓவெர்டோஸ்,அது தான் நெஞ்சு வலி வந்து போய்டா என்றனர்.


அம்மா ஒரு காலையில் வேலைக்கு போக என்னிடம் பத்து ரூபாய் பணம் கேட்டாள்.நான் அம்மா ஐம்பது வயதில் இன்னும் வேலைக்கு போகுதே இந்த சனியன்,என்று அசிங்கமாக திட்டி விட்டு,வேலைக்கு வந்து விட்டேன். எப்படியோ பக்கத்து வீட்டில் காசு வாங்கி வேலைக்கு போய் திரும்பிய அம்மா,ராஜப்பா என கதவை சத்தம் செய்ய‌,அலுவலக கடுப்பில் இருந்த நான் என்ன?என கத்த.இந்தாப்பா என ஐநூறை நீட்டி,உனக்கு சம்பளம் போட நாளாகுமோல்யோ?எனக்கு சம்பளம் போட்டுட்டா,இந்தா வச்சிக்கோப்பா! கண்ணா என்றாள்.உடனே வாங்கிக்கொண்டேன்.வினு கல்யாணம் ஆனதும் வேலையை விட்டுடறேன்,இல்லாட்டி நீ சிரமப்படுவியோல்யோ! என்றாள்,
இதைவிட எனக்கு ஒரு வெட்கி தலைகுனிய தருணம் வரவும் வாய்புள்ளதா?

அன்று நைஃப் ரோடு அருகே கோல்டு சவுக்கில் அவ்வளவு கூட்டத்தில் அம்மாவுக்கு நகை வாங்க போக வேண்டிய அவசியம் தான் என்ன?மனசுக்குள் அம்மா சாகப்போகிறாள் என பட்சி சொன்னதாலோ?அப்போதே புதிதாய் போட்ட போனஸை ஏடிஎம்இல் எடுத்துக் கொண்டு அம்மாவுக்கு மூணு பவுனிலாவது சங்கிலி வாங்க  ,ஜனசந்தடியில் விரைவாய் கலக்க, ஜீன்ஸ் பின் பாக்கெட்டிலிருந்து லாவகமாக உருவப்பட்ட பர்ஸ்.வாழ்வில் முதல் முறையாக அவ்வளவு பணம் (இந்திய மதிப்பு 24000 ரூபாய்)போனசாக பெற்றது அதை நொடியில் யாரோ அடித்தது,ரூம்மேட் என்னடா நகை குடுக்கறென்னு சொன்னியே?குடுடா,என்று சொல்ல, நான் எதுவும் பேசமுடியாமல் தொண்டை அடைத்தது.

இந்த கொடுமையையுமா?அம்மா காதில் மடத்தனமாக போடுவது?
சரியான கோழைத்தனம்,இந்தமுறையும் என் அம்மா அவள் அம்மாவை பார்க்க மேல்மருவத்தூர்  சென்றாள்.கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நேர்கிறது?என வேண்ட,மறு நாள் நான்கு முறை மனைவி அழைத்ததும்,அவசர வேலையில் இருந்த நான் ,என்ன இழவுக்கு ஆபீஸ் நேரத்தில் போன்?சொல்லித்தொலை!என சீற.

நீங்க கூகிள் சாட்ல வாங்க,யாஹூல வெப்கேமில உங்கம்மாவை பாருங்க.
எனக்கு அம்மாவை பார்த்ததும் வயிறு பற்றி எரிந்தது.மொட்டை தலையுடன் அம்மா.வழக்கம் போல திட்ட வாங்கிகொண்டாள்.திரும்ப பதில் பேசு என திட்ட. சைகை காட்டினாள்,எச்சில் கூட விழுங்காத விரதமாம்.

இப்போது நன்கு புரிந்தது,தன் காலில் நின்று சம்பாதித்த அம்மாவை வேலையில் இருந்து கட்டாய ஓய்வு பெறசொன்னது  எவ்வளவு பெரிய பிழை என்று?என்னை மதித்து வேலையை விட்டு விட்டாலும் அவள் தன்மானம்  வீட்டில் இருக்க இடம் கொடுக்கவில்லை

இப்போது தலைக்கு மேலே வெள்ளம்.

ஓஹ் கிம்மி ஒன் டைப் ஸ்டயில் என போன் விடியகாலையில் அலற,
திவ்யா விசும்புகிறாள்,அம்மா பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கா என்றாள்,வலிக்கோசரம் பல்லை கடிச்சிண்டாபோல  இருக்கு, திவ்யா காலையில் தான் ஊரிலிருந்து குழந்தைக்கு முடி இறக்கி விட்டு வந்தாளாம்.எனக்கு பயந்து பெரியம்மாவிடம் போனை கொடுத்தாள்.
ராஜப்பா,அம்மா பேச்சு மூச்சில்லாம இருக்கா கோந்தே!

எனக்கு தெரிந்தே விட்டது,அம்மா போயாச்சு.இருந்தாலும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக சொல்லிவிட்டு  ஜெபமாலையை எடுத்து சாண்டிங் பண்ண ஆரம்பித்தேன். 20 ரவுண்டு முடிந்திருக்கும்,மீண்டும் ஓஹ் கிம்மி ஒன் டைப் ஸ்டயில்-விஷயம் கேட்டதும் உடம்பு சில்லிட்டது, நிதானமாக ரிங் டோனை மாற்றினேன்.

விட்டுக்கு வந்த டாக்டர் உதட்டை பிதுக்க,ஆஸ்பத்திரிக்கு கொண்டுப்போய் அவசர சிகிச்சையை செய்திருக்கிறார்கள்.போகும் போது வந்த கால் டாக்ஸி அம்மா செத்து விட்டதை அறிந்து மீட்டர் கட் பண்ணீ எஸ்கேப் ஆகி விட. ஆம்புலன்சிலேயே ஏற்றி வீடு திரும்ப வந்திருக்கிறார்கள்.கூடவே ஐஸ் பெட்டியும் வந்துவிட்டது.என் உறவுகள் நான் வருவேனோ மாட்டேனோ என பயந்திருந்தது அங்கு இறங்குகையில் புரிந்தது.

நான் போன் சார்ஜர் மட்டும் கொண்டுபோயிருந்தேன். ஆபீஸில் வெள்ளிகிழமையாதலால் பாஸ்போர்ட் லாக்கரை கட்டிக்காக்கும் அரபி அதிகாரிக்கு வார விடுமுறை.என் லைன் மேனேஜருக்கு போன் செய்தால் இவன் அழாமல் பேசுறானே? என அவருக்கு சந்தேகமோ என்னவோ?

அப்படித்தான் போன வாரம் ஒரு சக நண்பன் திருமணம் என்று பொய் சொல்லிவிட்டு வேலை பிடிக்காமல் ஓடிப்போனான்,இவனும் ஓடிவிடுவான் என நினைத்திருக்கலாம்.அப்போது தான்  எகனாமிக் பூம் உச்சத்தை தொட்டிருந்தது,ஆளை விட்டு விட்டால் பிடிக்க முடியாது,எங்கு போனாலும்  நல்ல வேலைக்காரனுக்கு டபுள் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

அந்த ஆள் என் வீட்டு நம்பர் வாங்கி அழைத்து ,ஒப்பாரி சத்தம் கேட்டு,சீரியசாகி களத்தில் இறங்கி பாஸ்போர்ட் ஆஃபிசரை உருவி வரவைக்க அந்த ஆபீசர் தொழுகை முடித்து வந்தார்.என் இந்திய லைன் மேனேஜர் அப்போதும் என்னை நம்பாமல் என் சர்டிஃபிகேட்டை பிணையாக‌ வாங்கிக் கொண்டார்.யாகூப் சேட்டனா? கொக்கா?

1-00 மணிக்கு எனக்கு பாஸ்போர்ட் கிடைக்க உயிர் நண்பர்கள் மூலம் நேராக டனாட்டாவில் 1800திர்காம் டிக்கெட் , க்ரெடிட் கார்டில் தேய்த்து வாங்கி,முதல் முறையாக பிசினெஸ் க்ளாஸில் தண்ணீர் கூட அருந்தாமல், ஒண்ணுக்கு கூட போகாமல் வந்தேன்,

நல்ல வேளை ஃப்ளைட் லேட் இல்லை,1-45 க்கு எடுத்தது 6 -45 க்கு சென்னை இறங்க. நண்பன் பைக்கில் ஏறி வீட்டுக்குள் நுழைய,உயிரோடிருந்த என் அனைத்து நண்பர்களும் வந்திருக்க, அவர்களை பார்த்து பேச நாவெழ அவர்கள் என்னை உள்ளே அழைத்து சென்றனர்.,அம்மாவை 7 மணிக்கு பார்த்தேன். அழுகையே வரவில்லை, விமானத்திலேயே அழுதாகிவிட்டது.இனி யாரை உரிமையோடு  திட்டமுடியும்?தாயிழந்த துன்பம் எனக்கும் வந்தே விட்டதே?.

குழந்தை பயத்துடன் என்னிடம் தாவிக் கொண்டு என் முகத்தையே பார்த்தது.என் மேல்  எனக்கே கோபம் வந்தது,ஒரு வயசு குழந்தையை போய் விட்டுப் போனேனே? என்று. பாட்டி,பாட்டி என்று கண்ணாடி பெட்டியை காட்டியது. நான் அணைத்துக் கொண்டேன்.

ஒரு வழியாக நன்றாக அம்மாவின் காரியங்கள் செய்து ஃப்ளைட் ஏறியாகிவிட்டது. யாகூப் சேட்டனிடம் நேரே பார்க்கையில் நீயே அனுப்பினாலும் இப்போ நான் போவது போலில்லை.மீன் வரும் வரை இந்த கொக்கு காத்திருக்கும் என பார்வையாலேயே சொன்னேன்.

ட்ரிங் ட்ரிங்
ஹலோ எனக்கு மூணு மடங்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைச்சாச்சு

ஒருவழியாக எமிரெட்ஸில் டிக்கெட் போட்டாச்சு, 18 ஆம் தேதி வீடு ரெஜிஸ்ட்ரேஷன்  ஒருவழியாக முடிச்சாச்சு, முதல் வெகேஷனும் முடிஞ்சாச்சு.எமிரெட்ஸில் துபாய்க்கு டிக்கெட் போட்டாச்சு,20 ஆம் தேதி வேலையில் இருக்கனும்.

ட்ரிங்,ட்ரிங்.ஹலோ.
2மாசமா சம்பளம் வரலை,பாத்து செலவு பண்ணுங்க‌

ட்ரிங்,ட்ரிங்.ஹலோ.
எனக்கு வேலை போய்டுச்சு.

ட்ரிங்,ட்ரிங்.ஹலோ.
எனக்கு வேலை கிடைச்சிடுச்சு.

வலையபட்டி தவிலே,தவிலே,ஜுகல்பந்தி வைக்கும் ...
ஹலோ நம்ம வினுவுக்கு அம்மாவே வந்து வெள்ளிகிழமை பிறந்திருக்கா.
சுகபிரசவம்,நாங்க புண்ணியாஜலத்துக்கு டெல்லி போறோம்.

அறியாத வயசு,புரியாத மனசு ...
ஹலோ நம்ம பானு அக்காவுக்கு  ,பையன் பிறந்திருக்கு,சுகபிரசவம், புண்ணியாஜலத்துக்கு  வருவீங்களா?

பறவையே எங்கு இருக்கிறாய்?,பறக்கவே என்னை அழைக்கிறாய்.
என்னங்க 20 ஆம் தேதி அம்மா  தவசம் வர்றது, பொண்ணு நீச்சல் கத்துகிட்டா,கம்ப்யூடர்ல டைப் பண்றா..

ட்ரிங் ட்ரிங்

எனக்கு இங்க விசா போட இழுத்தடிக்கறாங்க,தவசத்துக்கு வர முடியுமான்னு தெரியலை,ஒரே கவலையா இருக்கு,
இருங்க பாட்டி பேசனுமாம்.
ராஜா,கண்ணப்பா,
தவசம் நீ போடலைடா,அவளே போட்டுக்கறாடா கோந்தே,அவளுக்கு நன்னா தெரியும் உன் கஷ்டம்,அவ தான ஒன்னோன்னா பாத்து நடத்திண்டு வரா!!
அம்பதுபேர்ல உனக்கு மட்டும் வேலை கிடைச்சதோன்னோ?

டிரிங்,ட்ரிங்
ஹலோ,எனக்கு விசா போட்டாச்சு. நான் 18 ஆம் தேதி வரேன்.ஊருக்கு வர‌ பர்சேஸ் பண்ண ஆரம்பிக்கணும்.அம்மா  தவசத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு,

டிஸ்கி:‍‍‍-
ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே,என் மகள் அதற்கடுத்தபடியாய்
எந்த உறவினர் வீட்டு துக்கத்திற்கு செல்லும் போதும் கண்ணாடி ஐஸ் பாக்சை
கண்ட உடனே சாமியாடி உள்ளேயே வரமாட்டேன் என்கிறாளாம்.
கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டவர்கள் திரும்ப வருவதில்லை என நன்கு உணர்ந்திருக்கிறாள் போல‌.


Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)