விசாரணை தமிழில் ஒரு உலக சினிமா


இன்று விசாரணை படம் பார்த்தேன், மிகுந்த நேர்த்தியான உலக சினிமா, இது எனக்கு இதே போன்ற  இதன்  முன்னோடி  socio-political drama வான 4 month 3 weeks 2 days படத்தின் நேர்த்தியையும் கட்டுக்கோப்பான ஆக்கத்தையும் நினைவு படுத்தியது, 

ருமானிய இயக்குனர் Christian Mungiu 
வெற்றி மாறன்  போன்றே நிறைகுடம்,  படங்களின் எண்ணிக்கையில் கவனம் வைக்காமல் அவற்றின் தரத்தில் கவனம் கொள்பவர், 

விசாரணை போன்ற ஒரு ஒரு Socio Political Thriller படத்தில் சாதிக் பாட்சா போன்ற ஒரு அரசியல் இடைத்தரகரின் கதை மற்றும் வேளச்சேரி வண்டிக்காரன் தெரு அவசர என்கவுன்டர்களைச் சேர்த்தது மிகுந்த துணிச்சலான செயல், அதற்கே சிறப்பு நன்றி, தவறு யார் செய்திருந்தாலும் ஒரு படைப்பாளி தன் படைப்பின் மூலம் அதை விமர்சிக்க வேண்டும்

இப்படம் சரியாக தேர்தல் நேரத்தில் வந்திருப்பது மிகவும் சிறப்பு,  சாதிக் பாட்சா பற்றி நம் அநேகம் பேர் மறந்துவிட்டிருந்த நிலையில் முந்தைய ஆட்சியின் பராக்கிரமத்தையும் நினைவூட்டியது,  https://en.m.wikipedia.org/wiki/Sadiq_Batcha 

சாதிக் பாட்சா தற்கொலைக்கான காரணத்தை சிபிஐயால் இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை, இதே போன்றே தன் மனைவி குழந்தைகளுடன் கூட்டுத் தற்கொலை செய்து  கொண்டு இறந்த அண்ணா நகர் ரமேஷ் என்னும் பினாமி அரசியல் இடைத் தரகர் கதையும் இப்படத்தின் மூலம் நினைவுக்கு வந்தது 
http://stopbribe.blogspot.ae/2011/03/blog-post_2145.html?m=1
இந்த ஆட்சியின் துவக்கத்தில் நடந்த 5 வட மாநிலத்தைச்  சேர்ந்த இளைஞர்களின் படுகொலையையும் ஒருங்கே நினைவு படுத்துகிறது,  

http://m.thehindu.com/news/cities/chennai/hcs-clean-chit-to-cops-in-velachery-encounter/article4885822.ece

ஒரு கலைஞனின் சமூக அக்கறை, கோபம் , எள்ளல் இப்படித்தான் தன் படைப்பில் வெளியாக வேண்டும், அதை திறம்பட செய்து புதிதாய் வாக்களிக்கப்போகும் இளைய தலைமுறையை யோசிக்க வைத்திருக்கிறார்,இது போன்ற படைப்பை சாத்தியமாக்கிய சென்சாருக்கும் நன்றி, அவரின் அடுத்த படைப்பில் அவரது சமூக அக்கறை இதைவிட  இன்னும் வீர்யமாக வெளிப்படும் என நம்புவோம்

எனக்கு  வாழ்வில் மிகுந்த பீதியூட்டும் இடங்கள் என்றால் அரசு மருத்துவமனை மார்ச்சுவரியின் ரோலிங் ஷட்டர், உள்ளே அதற்கு அப்பாலிருக்கும் அந்த சிமெண்ட் மேடை, அங்கேயுள்ள சாக்கடை , மார்ச்சுவரி அதை ஒட்டிய காம்பவுண்ட் சுவர் , 

அதன் பின்னர் போலீஸ் ஸ்டேஷனின் முற்றம் , மார்ச்சுவரியில் இறந்த பின்னர் கூறு போடுவார்கள், ஆனால் போலீஸ் ஸ்டேஷனின் பின்னே இருக்கும். முற்றத்தில் உயிருடன் இருக்கையிலேயே கூறு போடுவர்,பல அபலைகள் உருவாகும் இடம் அது,பல நல்ல மனிதர்களையும்  குற்றவாளியாக மாற்றும் இடம் சித்ரவதைக் கூடம், 

குற்றவாளி அல்லது விசாரனைக் கைதி உண்மையை ஒப்புக் கொள்ளும் வரை இந்த முற்றத்தில் வைத்துத் தான் உயிர் போவது போல அடிப்பார்கள், அடியால் சாதிக்க முடியாததை பல சமயம் போலீசார் பாலியல் ரீதியான மன உளைச்சல் என உளவியல் ரீதியாக அணுகிக் கூட சாதிப்பர், அதில் இரு விசாரணைக் கைதிகளுக்கிடையே கட்டாய வாய் புணர்ச்சி மற்றும் கட்டாய குதப் புணர்ச்சி சித்ரவதைகள் கூட அரங்கேறும் இடம் காவல் நிலையத்தின் முற்றம், 

 இப்படிப் பட்ட முற்றத்தில் தான் அஞ்சாதே படத்தில் அஜ்மல் ஜட்டியுடன் அடி வாங்குவதை நம்பும் படி காட்டியிருப்பார மி்ஷ்கின், விசாரணை படத்தின் காவல் நிலையக் காட்சிகள் நிஜத்துக்கு அருகே பயணிக்கிறது, அதிலும் குறிப்பாக அந்த நடித்துக் காட்டும் படலம் , எத்தனை டார்க் ஹ்யூமர் அதில் பொதிந்திருக்கும்?மற்றும் நிஜமானவர்களோ என நம்பும் படியான போலீஸார் இப்படத்தின் பலம், 

இப்படத்தை   4 Months, 3 Weeks and 2 Days படம் போன்றே பின்னணி இசை இன்றி வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்,படத்தில் நீண்ட  ஷாட்கள்,  எளிமையான கோணங்கள்,நடிகர்களின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு ,  எளிமையான வசனங்கள், என அபாரமான மினிமலிச முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் வெற்றி மாறன், 

பெரும்பணம் சம்பளமாகப் பெறும் நடிகர்கள் தங்கள் முதலீடுகளை இது போல நேர்த்தியான படைப்புகளின்  உருவாக்கத்துக்கு செலவிட்டால் அவர்கள் நல்ல சினிமாவை வளர்த்தது போலவும் ஆயிற்று, தங்கள் வழமையான அசகாய சூர கதாபாத்திரம் ஏற்றுச் செய்யும் குற்ற உணர்விலிருந்து விடுபட்டது போலவும் ஆயிற்று

விசாரணை A gripping and  satisfying Film

 

என்ன இயக்குனர் பத்மராஜனுக்கு ஆங்கிலம் தெரியாதா?!!!எழுத்தாளர் ஜெயமோகன் நேற்று காலஞ்சென்ற மலையாள எழுத்தாளர் மற்றும் இயக்குனர் பத்மராஜன் என்கிற பாப்பேட்டா பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார்.

அவரின் Ardent Fan ஒருவர் அவருடன் நளினமான ஆங்கிலத்தில் மானசீகமாக உரையாடி, ஒரு Tribute செய்திருந்தார்,அந்த வீடியோவின் லிங்கை பகிர்ந்தவர் பாப்பேட்டனுக்கு இப்பேற்பட்ட நளினமான ஆங்கில Tribute ஐ புரிந்து கொண்டிருக்கக்கூட முடியாது,திகைத்திருப்பார், என ஏளன தொனியில் எழுதியிருந்தார் , 

அந்த மடமையான கட்டுரையின் சாரத்தை மலையாள சினிமா பற்றிய கலாரசனையுள்ள யாராலுமே ஏற்றுக் கொள்ள முடியாது, இவரிடம் பாப்பேட்டா சந்திக்கையில் வட்டார மலையாளத்தில் பேசினாராம், அதனால் அவரை இவர் நன்கறிவாராம், 

பாபேட்டாவின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் நன்கு படித்தவர்கள், படத்தில் நல்ல English பேசுபவர்கள், Manglish பேசுபவர்கள் அல்ல எனபதை அவர் உணர்ந்திருந்தாலே இப்படி எழுதியிருக்க மாட்டார்,

அவரின் Family Drama வான திங்காழ்சே நல்ல திவசம் படத்தில் வரும் வீட்டோட வேலைக்காரி கதாபாத்திரம் கூட ஆங்கிலம் பேசும்,

அவளை எள்ளி நகையாடி நாங்கள் இருவர் (காதலர்கள் )பேசுவது உனக்கு புரிகிறதா? 

என தரவாட்டு வீட்டுக்கு வந்த மும்பை பேத்தி திமிருடன் ஏய் அம்மணி Could you follow us? What did were talking !!! என வினவ , 
yes i could என பட்டென உரைத்து நகர்வார் அந்த ப்ரீ டிகிரி படிக்கும் வேலைக்காரப் பெண் அம்மணி, 

பாப்பேட்டாவின் தூவானத்தும்பிகள் படத்தின் நாயகனான ஜெயக்ருஷ்ணன் பாப்பேட்டாவே தான், தன்னை ஒரு இலக்கியவாதி பிரதி எடுத்தால் தான் ஜெயக்ருஷ்ணன் போன்ற கதாபாத்திரங்கள் உயிர் பெறும், 

ஜெயக்ருஷ்ணன் இரண்டு முகம் கொண்டவன், கிராமத்தில் அவன் அசல் பட்டிக்காட்டான்,நகரத்தில் அவன் ஒரு மிடுக்கன் , ரசனாகரன்,

சமூகத்தில் பெண் தரகர்,கறி வியாபாரி, பார் டெண்டர்,முதல் பெரும் தொழிலதிபர் வரை மனதார சிலாகிக்கப்படுபவன், அவர்களுடன் அவரகட்கேற்ப உரையாடும் கலை கைவரப்பட்டவன்,எங்கே தேவையோ அங்கே நல்ல ஆங்கிலம் பேசுபவன்,

அப்படியே அவரின் நமக்குப் பாக்கான் முந்திரித்தோப்புகள் சோலமனை எடுத்துக் கொண்டாலும் ஆச்சர்யங்கள் கிட்டும், படித்த பட்டதாரி, paulo Coelho உள்ளிட்ட மேலை இலக்கியங்கள் படிப்பவன், ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவன்,பைபிளில் தனக்குப் பிடித்தமான மன்னர் சோலமன் அத்தியாயங்களை அனாயசமாக ஆங்கில அர்த்தம் புரிந்து அசைபோடுபவன், நாயகியும் அவனும் அந்த வாக்கிய அத்தியாய எண்களைக் கொண்டே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்வார்கள்

சோலமன் தன் மைசூர் திராட்சைப் பண்ணையில் ட்ராக்டர் ஒடிப்பான், அம்மாவைக் காண திடீரென கிளம்பி வருகையில் பழுது பார்க்க வேண்டியிருக்கும் டாங்கர் லாரியையும் லாவகமாய் ஒடித்து வரும் சூரன்

அப்படியான வெளிப்பூச்சில்லாத மாந்தர்களின் படைப்புகள் ஏராளம் தந்தவரை எதற்காக மட்டம் தட்டுவது போல ஒரு கட்டுரையை ஜெயமோகன் எழுதினார் எனப் புரியவில்லை, 

ஜெயமோகனுக்குள் இருக்கும் குமாஸ்தா ஆங்கிலம் பேசும் தாழ்வு மனப்பான்மை தான் அவருக்கு பாப்பேட்டா மீதான இந்த மதிப்பீட்டைத் தந்ததா என ஒரு சம்ஷயமுண்டு

பாப்பேட்டாவின் படைப்பில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இங்கே அவருக்கு மேற்கோள் காட்டினால் விடிந்துவிடும்

அவரின் கட்டுரை இங்கே

http://www.jeyamohan.in/84345

//ஒரு நண்பர் அனுப்பிய சுட்டி இது. பத்மராஜனுடன் ஓர் அந்தரங்கமான உரையாடல் என இந்த சிறியபடத்தைச் சொல்லலாம்.
நான் கவனித்த சில விஷயங்கள். ஒன்று, இந்தப்பையனுக்கு எந்தவகையிலும் மலையாளத்தன்மை இல்லை. அவன்பேசுவதே கேரளத்துக்கு அப்பால் எங்கோ இருந்துகொண்டு எனத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பத்மராஜனிடம் பேசுவதை நினைத்தாலே வேடிக்கையாக இருக்கிறது. அவரை எனக்குத்தெரியும்- ஒரு முறை சந்தித்திருக்கிறேன். லோஹியுடன். இந்த ஆங்கிலப்பேச்சைக்கேட்டால் திகைத்திருப்பார்
பத்மராஜன் முழுக்கமுழுக்க கேரளத்தின் வட்டாரப் பண்பாட்டுக்குள் இருந்தவர். ஒற்றப்பாலத்தைச் சுற்றியிருக்கும் வள்ளுவநாடு அவரது களம். அவரது கதாபாத்திரங்கள் அறிவுஜீவிகள் அல்ல. அவர்கள் பேசுவதும் இயல்பான உணர்ச்சிவெளிப்பாடுதானே ஒழிய கருத்துக்கள் அல்ல. அவ்வகையில் செவ்வியல்தன்மை மேலோங்கிய எம்.டி.வாசுதேவன்நாயரின் உலகுக்கு வலுவான மாற்றாக எழுந்தவை பத்மராஜனின் படங்கள்.
ஒற்றப்பாலத்தின் கதைசொல்லியாகவே இலக்கியத்திற்குள் வந்தார். நட்சத்திரங்களேகாவல், ரதிநிர்வேதம், கள்ளன்பவித்ரன், இதா இவிடவரே ஆகியவை அவரது புனைவுலகின் நுணுக்கமான அழகுடன் இன்றும் உள்ளன. நடையையும் கதாபாத்திர உருவாக்கத்தையும் வைத்து அவரை வன்முறை கலந்த கேரள ஜானகிராமன் என்று சொல்லலாம்.
அவர் திரைக்கதை எழுதிய ஆரம்பகாலப் படங்கள் அந்த மண்ணின் காமத்தையும் வன்முறையையும் நேரடியாகச் சித்தரிப்பவை. உதாரணம், இதா இவிட வரே, சத்ரத்தில் ஒரு ராத்ரி, வாடகைக்கு ஒரு ஹ்ருதயம், ரதிநிர்வேதம், தகரா, கரும்பின் பூவினக்கரே. வன்முறையையும் காமத்தையும் நம்பகமாக கலையழகுடன் சொன்னவர் என்பதே பத்மராஜனின் அடையாளமாக இருந்தது. பரதன் – பத்மராஜன் கூட்டு மலையாளத்தில் திரைக்காலகட்டம் ஒன்றைத் தொடங்கிவைத்தது.
பின்னர் அவரே இயக்கிய பெருவழியம்பலம், கள்ளன் பவித்ரன், ஒரிடத்தொரு பயில்வான் முதலிய படங்கள் கூட அந்த மண்ணின் கதைகள்தான். மிகமிக வட்டாரத்தன்மைகொண்டவை. அங்கு மட்டுமே உருவாகும் கதைமாந்தர்கள் அவர்கள் என்று நமக்குத்தோன்றும். பிற்காலத்தில் காமத்தின் உள்ளறைகளுக்குள் சென்று நோக்கும் சில படங்களை எடுத்தார். தூவானத்தும்பிகள், தேசாடனக்கிளி கரையாறில்ல, நமுக்குபார்க்கான் முந்திரித்தோப்புகள். அவற்றிலும் கதைமாந்தரின் ஊர் வள்ளுவநாடுதான்.
நிலமே அற்றவன் போலத்தெரியும் இந்தப்பையனைக் கவர்ந்தது எது? அந்த நிலத்தில் வேரூன்றி எழுந்த புனைவுலகின் மலர்ந்த மலர்களை மட்டுமே இவன் பார்க்கிறான். கலை அப்படியும் சென்றடையக்கூடும் போலும்//

பாப்பேட்டாவின் Ardent Fan ன் Tribute இங்கே
https://www.youtube.com/watch?v=Kl96WTpNoh4
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)