கோவா டையு டாமன் இந்தியாவுடன் இணைப்பு வரலாற்று நிகழ்வு

1961 ஆம் ஆண்டு டிசம்பர் 18 -19 நடந்த கோவா, டையு, டாமன் பிரதேசங்கள்  இணைப்பு சுதந்திர இந்தியாவின்  வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு Annexation of Goa என தேடிப் படித்துப் பாருங்கள், பல சுவையான தகவல்கள் கிடைக்கும்.

மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்னும் கதையாக 1947ல்இந்தியாவின் பிற பகுதிகளுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகும் கோவா போர்சுகீசிய காலனி ஆதிக்கத்தில் 1961 வரை இருந்து வந்தது,

 அங்கும் ஸ்பானிய வந்தேறிகளை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் பல ஆண்டுகளாக நடந்து வந்தது, இந்தியா போர்ச்சுகல் அரசை இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேறுமாறு பல முறை 14 வருடங்களில் கடிதங்கள் வாயிலாகவும் , ஐக்கிய நாடுகள் சபை மூலமாகவும்  வேண்டுகோள் விடுத்தது,

 1950ல் சர்தார் பட்டேல் அவர்கள் மறைந்ததால் எப்போதோ நடந்திருக்க வேண்டிய இந்த கோவா இணைப்பு நீண்ட கால தாமதமாகியது.

ராஜேந்திர பிரசாத், நேரு தலைமை தந்த கடைசி எச்சரிக்கையையும் கோவா அலட்சியம் செய்ததால் , ஒரே நாள் போரில் கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்டது, 

இதில் 4600 போர்ச்சுகீசிய ராணுவ வீரர்கள் பங்கு பெற்றனர், இந்திய ராணுவம் 45000 பேர், நம் ஆயுத பலமோ ஒப்பிட முடியாத படிக்கு இருந்தது, கொசு அடிப்பது போல ஒரே இரவில் போர்த்துகீசியர்களை சுருட்டி விட்டோம், 4600 போர் கைதிகளை சிறை பிடித்து மன்னிப்பும் தந்து போர்ச்சுகலுக்கு திருப்பி அனுப்பினோம், நம் ராணுவ வீரர்கள் 22 பேரும், போர்த்துகீசிய விரர்கள் 30 பேரும் பலியாயினர்.

"ஆபரேசன் விஜய்" என்று அழைக்கப்பட்ட, ஒரே ஒரு நாள் மட்டுமே நடந்த, அந்த போரின் காரணமாகவே போர்த்துகீய காலனிகளாய் இருந்த கோவா, டாமன், டையூரே ஆகியவை இந்தியாவுடன் இணைந்து இந்திய மண்ணில் இருந்து காலனியாதிக்கம் அன்று ஒழிந்தது!!

இந்த போர் மட்டும் செய்து கோவாவை இணைக்காமல் விட்டிருந்தால் நமக்கு சீனா, பாகிஸ்தான், வங்க தேசம், நேபாளம், மியான்மார், இலங்கை போன்ற அண்டை நாடுகள் தரும் அச்சுருத்தல் போதாதென்று இவர்களும் தொல்லை தந்து கொண்டிருப்பார்கள், கோவா எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் கேரள , கர்நாடக, மஹாராஷ்டிர மீனவர்களை இவர்கள் சுட்டுக் கொன்றும் இருந்திருப்பார்கள், நம்மை ஆளும் மத்திய அரசு அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கும், நம் பாட்டன்கள் தேசத்துக்கு சேர்த்த சொத்து கோவா இணைப்பு.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட காதல் நிஜ சம்பவம்

இந்த காதல் திரைப்பட பாணி சம்பவம் 2002 ஆம் ஆண்டு நடந்தது,தன் வீட்டில் டிரைவராக இருந்த இந்தியர் காதர் பாஷா மீது காதல் வயப்பட்ட குவைத்திப் பெண் தலால் ஃபலாக் அல் அஸ்மி அவரை எப்படி பட்டாவது மணக்க நினைக்கிறார், ஆனால் கடுமையான சமுதாய ஏற்றத் தாழ்வுகளும், 
ஒரு குவைத்திப் பெண் தவறிழைத்தால்  அங்கே சமூகத்தாரால் தரப்படும் கொடிய கல்லெறிந்து கொல்லும் தண்டனை முறையும் அச்சுறுத்த , தன் வீட்டில் வேலை செய்த இந்தியப் பணிப் பெண்ணின் பாஸ்போர்ட்டைத் திருடி தன் போட்டோவை ஒட்டி துணிகர  மோசடி செய்து ஏர்இந்தியா விமானத்தில் சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்குகிறார். 

குடியுரிமை சோதனை அதிகாரிகள், அவரிடம் சுய விபரங்கள் கேட்க, அவருக்கு அரபி மட்டுமே தெரியுமாதலால் சந்தேகம் உறுதியாக அவரையும் காதர் பாஷாவையும் கைது செய்து சிறையில் அடைத்து வழக்கும் பதிந்தது குடியுரிமைத்துறை அமைச்சகம்.

அதில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு அந்தப் பெண்ணுக்கு பெயில் வழங்கவேண்டி, அரசு வழக்கறிஞரையும் போலீஸ் அதிகாரிகளையும் அடக்கி வாசிக்கச் சொன்னார், பின்னர் அப்பெண்ணையும் அந்த டிரைவரையும் பெயிலில் விடுவித்தனர்.

 அப்போது விகடன் அந்தப் குவைத்திப் பெண்ணை ஆந்திர மாநில , கடப்பா மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் சென்று காதர் பாஷாவின்  வீட்டைக் கண்டு பிடித்து பேட்டி கண்டு வெளியிட்டது,அப்போது இருவருக்கும் மணமாகியிருந்தது, அவர் கருத்தரித்தும் இருந்தார், இன்று  16 வருடங்கள் கழிந்த நிலையில் அந்த ஜோடிகள் நிலை என்ன? என்று தேடுகையில் விபரம் எதுவும் கிடைக்கவில்லை, மீடியாக்கள் அன்றைக்கு சர்ச்சையான செய்தி எதுவோ அது  எல்லாவற்றையும் ஹைலைட் மட்டும் செய்யும், ஆனால் ஃபாலோ அப் மட்டும் செய்யவே செய்யாது.

PS: இந்த பதிவில் குவைத் குடில் என்ற ப்ளாக் நடத்தும்  நண்பர் திரு .Sheik Gama Aman இட்ட பின்னூட்டத்தில் இந்த காதல் ஜோடிகள்  இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான தகவலைச் சொன்னார், கீழே அவரின் பதிவு

// காதலை வாழவைத்த ஜெயலலிதா!

காதல் என்பது மொழி,இனம்,தேசம்,தகுதி இவைகளை கடந்தது என்பதற்கு கடந்த 2002 ம் வருடம் இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய காதல் ஜோடி ஒரு சான்று என கொள்ளலாம் .

தலால் ஆஸ்மி என்ற பெண் குவைத் நாட்டை சேர்ந்தவர். தாயை இழந்தவர். வாழ்கை வசதிகளுக்கு எந்த குறையுமில்லை.

அவரது அப்பாவின் மூன்றாவது மனைவியுடன் அவரும் அரண்மனை போன்ற வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இவரது அப்பா மகிழுந்து ஓட்டுனராக ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து காத(ல்)ர் பாஷா என்பவரை அழைத்து வருகிறார்.

காரில் பயணம். அந்தஸ்துகளையும் மீறி இருவருக்கும் காதல் அரும்பியது. ஆனால் குவைத் நாட்டின் சட்டத்திட்டங்கள், தங்களை வாழ்வில் இணைத்து வைக்காது என்பதை உணர்ந்த இருவரும், போலி கடவுசீட்டு மூலம் இந்தியாவுக்கு தப்பிவிட திட்டம் போட்டனர்.

இதில் பாதி கிணறை தாண்டிவிட்ட இவர்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டனர்.

தலால் ஆஸ்மியிடம் இருப்பது போலி கடவுசீட்டு என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அவரை மட்டும் வேலூர் பெண்கள் சிறையில் அடைத்து வைத்தனர்.

அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆஸ்மிக்கு சிகிச்சை அளிக்கப்பட, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. அவரை குவைத்துக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இந்திய அரசை குவைத் அரசு கேட்கிறது.

தன்னை தன் நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவார்களோ, தன் வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தையை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் ஆஸ்மியை தொற்றிக் கொண்டது.

"என்னை என் நாட்டிற்கு அனுப்பிவீடாதீர்கள், என்னை கொன்று விடுவார்கள்" என்கிறார்.

இந்த செய்தி நாளிதழ்களில் வெளியானது மட்டுமில்லாமல் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலகினரில் இருந்து அரசியல்வாதிகள் வரை குரல் கொடுக்கவே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலையிட்டு கருணை அடிப்படையில் பிணையில் விடுதலை பெற செய்தார்.

அப்போது குவைத் தூதரக அதிகாரி தலால் ஆஸ்மியின் வழக்கறிஞரைக் கூடபார்க்க தமிழக காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

பின்னர் காதல் ஜோடிகளை அழைத்து, முதல்வர் ஜெயலலிதா பரிசு பொருட்களை வழங்கி உபசரித்தார்.

பிறகு தலால் ஆஸ்மி காதலனுடன் வாழ ஆந்திராவில் உள்ள கடப்பா சென்றுவிட்டார். இவர்களை அப்போது ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவும் அழைத்து சில உதவிகளை செய்தார்.

இந்தியரை நம்பிவந்த குவைத் பெண்ணுக்கு சிறப்பாக வாழ இந்தியாவில் பெருமளவு உதவி கிடைத்தது.

ஆந்திர அரசு காதருக்கு அரசு வேலை கொடுத்தது. தலால் ஆஸ்மிக்கு ஒரு தனியார் பள்ளிக்கு வேலை வழங்க சொல்லி சிபாரிசு செய்தது.

தற்போது அவர்களுக்கு காதலின் சின்னமாக இப்றாஹிம் என்கிற மகன் உள்ளான்.♥

https://kuwaitkuyil.blogspot.com/2014/02/blog-post.html?m=1

 //

https://m.rediff.com/news/2002/apr/06jafri.htm

ஹேராம் | மகாத்மா

Gandhi: See mister Uppili, your son in law is also a mahatma!
திரு.உப்பிலி கவனித்தீர்களா?!,உங்கள் மருமகனும் ஒரு மகாத்மா தான்

Saketh Ram: No, I am not!
ஐயோ,நானா,?,இதெல்லாம் பெரிய வார்த்தை

Gandhi: Most mahatmas don't admit they are one. Do you think I am a mahatma?

எப்போதும் மகாத்மாக்கள் தம்மை மகாத்மா என சொல்லிக் கொள்வதில்லை,நீங்கள் என்னை மகாத்மாவாக நினைக்கிறீர்களா?

Saketh Ram: You will deny it if I say you are, So I shall deny you another denial sir
நான் உங்களை மகாத்மா என்றால் நிச்சயம் நீங்கள் மறுதலிப்பீர்கள், அதனால் உங்கள் மறுதலிப்பை நான் மறுதலிக்க வேண்டிவரும் ஐயா

Gandhi: I am willing to take all this communal hatred in the form a bullet, If I am promised that along with that they will also bury this communal hatred and live together as one community

மக்கள் இந்த மதமாச்சார்ய வெறுப்புகளை குழிதோண்டிப் புதைத்து ஒரே சமூகமாக வாழ்வார்கள்  என்றால் அவர்களின் வெறுப்பை  துப்பாக்கி குண்டாய் ஏற்று செத்து மடியக் காத்திருக்கிறேன் நான்

#heyram,#kamalhaasan,#nasruddinshah,#girishkarnad,#மகாத்மா,#mahatma

Chennai High court | 2nd Light house |

Chennai High court | 2nd Light house | exquisite example of Indo-Saracenic | 175 feet | dioptic light dome |  work begin Oct 1888 completed in 1892 | Architects | J. W. Brassington | Henry Irwin|J. H. Stephens.

Gove building | Cuddon building | 1916 |

Gove building | Cuddon building | 1916 |  heritage building | Chennai, India | Indo-Saracenic style.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் | எமனின் சிரிப்பு| சனிபகவான்| நீதிமான்

உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (1992) படத்தின் ரோலிங் டைட்டிலில் இசைஞானிக்கு வந்த நன்றி நவிழ்தல்

உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (1992) படத்தின் ரோலிங் டைட்டிலில் இசைஞானிக்கு வந்த நன்றி நவிழ்தல் இது.

கடல் அலையை காட்டி அது freeze ஆக 2000 நாட்களுக்கு பிறகு  என்று காட்டி,  அடுத்து இசைச் சக்கரவர்த்தி இசைஞானியுடன் இணைந்து என இசைஞானிக்கு பெரிய ரோஜா மாலை இடுவதை  காட்டி அதன் பின் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடல் துவங்க ரோலிங் க்ரெடிட் துவங்க காலை குயில்களே பின்னணி இசை  ஓடுகிறது.

2000 நாட்கள் பிரிவுக்கு காரணம் சுவாரஸ்யமானது இங்கே.

https://m.facebook.com/story.php?story_fbid=10158700486491340&id=750161339&mibextid=Nif5oz

https://m.facebook.com/photo.php?fbid=10153215467641340&id=750161339&set=a.10150246709671340&mibextid=Nif5oz
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)