எந்திரன் த ரோபோட் [ EndhiranThe Robot]


ண்பர்களே!!!
டித்து பிடித்து பார்க்க வேண்டாம் என நினைத்தாலும் விதி விடவில்லை.  வாழ்வில் முதல் முறையாக ஒரு படத்தை 4-30 மணி அதிகாலை காட்சி அதுவும் ஷார்ஜாவிலிருந்து துபாய்க்கு பயணித்து பார்த்தேன் என்றால் அது எந்திரன் தான், இங்கே ஹயாத் கலேரியாவில் 2 திரைகளிலும் 8 காட்சிகள் தொடர்ச்சியாக எந்திரன் காட்டப்படுகிறது, இங்கே நடிகர்களை ரசிக்கமட்டும் செய்கிறார்கள், யாரும் மொட்டைபோடுதல் , அலகு, சூலம், வேல், பச்சை குத்திக்கொண்டு  தொழுவதில்லை, ஆகையால் எந்த அசௌகரியமும் இன்றி படம் பார்க்கலாம், தவிர யாருக்குமே இங்கு கட்அவுட்  கிடையாது, ஆகையால் அட்டைக்கு பால் ,கழநீர், இளநீர், பீர், சோடா, என எந்த அபிஷேகமும் இல்லை, ரஜினி தன் அறுபதாம் கல்யாணத்துக்கு அழைக்காவிட்டாலும் கவலைப்படப்போவதில்லை, அழைத்தால் தான் எங்களுக்கு தர்ம சங்கடம்.

லையாளிகள் கூட மிகுந்த ஆர்வத்துடன் வந்து பார்த்து ஒவ்வொரு காட்சியிலும் அண்ணா!அண்ணா! என்று கைதட்டி மகிழ்கிறார்கள்.  ஒரு குடு குடு பாட்டி கூட ரஜினி மீதான வசீகரத்தால் ஆவலாய் வந்திருந்தார். அதிகாலை என்பதால் குழந்தைகள் கூட்டம் இல்லை. நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறப்போவதை அனைவரின் கண்களிலும் கண்டேன், எல்லா நடிகர்களுக்கும் , இயக்குனர்களுக்கும் இந்த மரியாதை கிடைத்துவிடாது.
======0000======
ன்ன விசித்திரம் என்றால்?,மெனோபாஸ் நாயகி ,அறுபது வயது கிழ நாயகன் என்று ஏளனம் செய்த என் நண்பர்களே, டிக்கட்டை முந்தி எடுத்து என்னை கூட்டிப்போனது தான். ஒன்றே ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்,நம் நாட்டில் தான் வயதை காரணம் காட்டி இப்படி கீழ்தரமான தாக்குதல் நடைபெறுகிறது, இளமை வயதில் இல்லை, மனதில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் என்றும் ஒருவர் மார்கண்டேயன் தான்.  எல்லொருக்குமே அறுபது வயது காத்திருக்கிறது.

ங்கு நான் படத்தின் கதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை. மனித ரஜினியே நாயகனாய், எந்திர ரஜினியே வில்லனாய் முழு படத்திலும் வியாபித்துள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு ஆசைதீர கைதட்டி விசிலடித்து மகிழும்படியான ஸ்டைல், மாச்சோஸ்,+ அதகளம் நிச்சயம் உண்டு. அதில் என்ன வினோதம்? என்றால் நிறைய ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்கள் தான் முதல் வாரத்திற்குள்ளேயே படத்தை பார்த்து தள்ளுகின்றனர் என்பது என் எண்ணம்.

ஸ்வர்யா ராயுடன் ஜோடிபோட்டு நடிக்கும் கனவு, ரஜினிக்கு ஒருவழியாக நிறைவேறியேவிட்டது, மணியின் ராவணா  மட்டும் இல்லாமல் இருந்தால் ஐஸின் கால்ஷிட்டுக்கு இப்படி தேவுடு காத்திருக்க வேண்டியிருந்திருக்காது. நேரமும் வீணாயிருக்காது,  நமக்கும் இப்படையல் என்றோ போடப்பட்டிருக்கும்.

காமெடியையும் ரஜினியே செய்திருக்கிறார். வசனங்கள் செம ஷார்ப், சரரரவென வசனம் பாஸாகிக்கொண்டே இருக்கிறது. அமரர் சுஜாதாவின்  கதையும்,இதற்கு அவர் செய்த அவரின் கடைசிகால அசுர உழைப்பின் மகத்துவமும் தெரிகிறது. கருணாஸ் மற்றும் சந்தானம் இவ்வளவு சைலண்டாய் அடக்கி வாசித்ததை நான் பார்த்ததேயில்லை,,செருப்படியே வாங்குகின்றனர். இருந்தாலும் அருமை. படத்தில் அஜ்னபி சீரியல் புகழ் டேனி டான்சாங்கப்பா சிவாஜியின் சுமனை நினைவூட்டிச் செல்கிறார்., செம அழுத்தமான நடிப்பு. இவருக்கு அவசியமே இல்லாமல் எந்திரன் ரஜினியே வில்லன் வேடத்தை முழுதும் அடித்து ஆடிவிட்டார்.பைசெண்ட்டேனியல் மேன் என்னும் ராபின் வில்லியம்ஸ் நடித்த படத்தின் நிறைய பாதிப்பும்,பிற்பாதியில் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் பாதிப்பும் நிறைய தெரிகிறது.

து ரஜினி படமா? ஷங்கர் படமா?என்றால் மிகவும் கடினமான கேள்வியாகும். ஆனால் இது ரஜினி ரசிகர்களுக்கான படம். படத்தின் செலவு 150 கோடி என்கிறார்கள், அது 3000 ப்ரிண்ட்கள் போட்டார்களே? !!! அதையும் சேர்த்தா? சேர்க்காமலா? படத்தில் எந்திரன் ரஜினி, தன் பார்வையிலேயே புத்தகத்தை ஸ்கேன் செய்து கரைத்து குடிக்கும் காட்சி அருமை, படத்தில் 3இடியட்ஸில் வருவது போலவே சிக்கலான நார்மல் டெலிவரியை எந்திரன் ரஜினி அசத்தலாக பண்டைய கால முறைப்படி எலும்பை விலக்கி செய்கிறார். அந்த தொப்புள் கொடியில்  தலை சுற்றிய குழந்தை அனிமேஷன் மட்டும் தத்ரூபமாக இருந்திருந்தால் அக்காட்சி இன்னும் பேசப்பட்டிருக்கும்.

ர்கிடெக்சரில்,கட்டிடங்களில் சிக்கனம் செய்கிறேன் பேர்வழி என்று , முன்பக்கம் + ரோட் ஃபேஸிங் பக்கம் மட்டும் ஸ்ட்ரக்சுரல் க்ளேசிங் செய்துவிட்டு பின் பக்கம் சுவர் கட்டிவிடுவர். ஒரு மேட்சிங்+ கண்டிநியூட்டி இருக்காது, அது போல இரண்டாம் பாதியில் நிறையவும் எதிர்பார்த்துப்போன நமக்கு ஹைடெக் ராமநாராயன் க்ராபிக்ஸ் போலவே தோன்றுகிறது. 

டத்தின் இசை, அடடா!!!  வைரமுத்து+பா.விஜய் ன் பாடல்வரிகளை வித் பிக்சரைசேஷனில் பார்க்கையில் பிரமிக்க வைக்கிறது, எல்லா பாடல்களுமே இப்போது எனக்கு மனனம் ஆகிவிட்டது. டைட்டில் சாங்கான  எஸ்பிபி பாடும்  புதிய மனிதா !!! பாடலிலேயே எந்திரன் உருவாவதை அருமையான  வரிகளில்  பாடி உணர்த்தி விடுகின்றனர், பாடல் வரிகள் மெய்மறக்க, சிந்திக்க  வைக்கின்றன. இசைப்புயல்+ரசுல் பூக்குட்டியின் இசையும், பிண்ணணி இசைக்கோர்வையும் நிச்சயம் இதிலும் பேசப்படும்.  குறிப்பாக அந்த கிளிமாஞ்சாரோ பாடலும் காதல் அணுக்களில், அதிரும் இசையும், ஒளிப்பதிவும், படமாக்கிய விதமும் அந்த பெரு நாட்டின் மச்சுபிச்சு லொக்கேஷனும் மிகவும் அருமை.

ங்கரின் அபார கற்பனை, காட்சிக்கு காட்சி விஸ்வரூபமெடுத்துள்ளது, இவர் தேர்வு செய்த கட்டிடங்கள் ஒவ்வொன்றும் அருமை, ரஜினியின் ஆர்&டி ஆஃபிஸ், வில்லன் டேனியின் ஆர்&டி ஆஃபிஸ்களே அதற்கு சாட்சி. [இது சென்னை மெட்ரோ சோனின் சைட் ஆஃபிஸா?] குறிப்பாக என்னை கவர்ந்த விஷயம். நாயகன் விஞ்ஞானி ரஜினிக்கு சண்டைக்காட்சி வைக்காமல் போனது. மிக நல்ல முடிவு,  தவிர சிவாஜியில் சுவிங்கம் தூக்கிப்போட்டு பிடிப்பதைப்பொல , இதில் அசத்தலாய் டாட் என்கிறார், அதாவது ஃபுல்ஸ்டாப் வைக்கிறாராம்.ரிசல்ட்  அட்டகாசமாய் வந்துள்ளது.

டத்தின் நல்ல சிஜி வேலைகளுக்கு எடுத்துக்காட்டாய் அந்த முற்பாதியில் வரும் எலக்ட்ரிக் ரயில் காட்சியை சொல்லலாம், என்ன ஒரு க்ராபிக்ஸ்,?!!! சுத்தமாக கண்டுபிடிக்கவே முடியவில்லை,ரயில் சண்டைக்காட்சி தூள்,அடடா ஜெட்லியெல்லாம் தோற்றார்.அதிலும் குறிப்பாய் ஷங்கர் பஞ்ச்சாக, ஜன்னல் வழியே பான்பராக் எச்சில் துப்ப எத்தனிக்கும் ஒருவரின் வாயில்,  ரயிலின் பக்கவாட்டில்  சுவர்மேல் ஓடும் ரஜினி பூட்சுகாலால்  ஃபுட்பால் ஆடுவதை குறிப்பிட்டுச்  சொல்ல வேண்டும்.


ங்கரின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமே இவரின் அபார டேஸ்ட் தான்,  இவருக்கு ரசிகர்களின் நாடி பிடித்து பார்க்கத் தெரிகிறது, அதனால் தான் நீண்டகால தயாரிப்பான இந்த படத்தில் கூட எதுவுமே அவுட்டேட்டடாக தோன்றவில்லை, ரஜினி அணிந்து வந்த அத்தனை உடைகளுமே ஆர்மனி, வெர்சாஸ், ப்ரடோ வகை டிசைனர் ஆடைகளே,  ஐ கியர்கள் மட்டும் 10க்கும் மேற்பட்ட வகை,  இவர் அணியும் ஒரு பெவல்காரி கண்ணாடியே 1லட்சம் ரூபாய் இருக்கும்.

ன்னும் ஒரு 100 கோடி ரூபாய் கூட ரஜினியை நம்பி செலவு செய்யலாம். தயாரிப்பாளர்களிடம் இல்லாத பணமா?!!, அவர் பெயரையே கல்லா நிதிமாறன் என்றே வைக்கலாமே!! தவிர என்னதான்? சமையல் அறை நிறைய மளிகை சாமான்கள் காய்கறிகள் வாங்கிப்போட்டு நிறைத்தாலும் ,சமைப்பவன் சரியில்லை, ரசனையில்லாதவனென்றால் அத்தனையும் பாழ்!!!, மணிரத்னம் போல கலைத்துறை பூச்சாண்டிகளுடன் ஒப்பிடுகையில் ஷங்கர் மினிமம் எக்ஸ்பெக்டேஷனையாவது  நிச்சயம் ஈடுசெய்வார். இவரின் காலத்தை வென்ற ரசனை வியப்பூட்டுகிறது.

ருந்தும் ஒரு மெர்சிடெஸ் பென்ஸ் கூப் ரக காரைக்கூட சிதைக்க இவருக்கு மனம் வரவில்லையே?!!!ஏன்?இந்த பிக்காலித்தனம்,சிவாஜியிலும் இதேபோல  ப்ரடோ வகைக்கார் மோதி சிதறுவதற்கு பதில் ஸ்கார்பியோவை சிதறவிடுவார்.இப்படத்தில் அக்காருக்கு ஒரு க்ளோஸ் அப் வேறு வைப்பார் பாருங்கள். காரில் குண்டு துளைத்த அசல் ஓட்டைக்கு பதிலாக அற்பமாக ஸ்டிக்கரிங் செய்திருப்பார்.நன்கு தெரியும்.

விற படத்தின் மோசமான சிஜி வேலைகளுக்கு எடுத்துக்காட்டாய் , பிற்பாதியில்  வரும் ஹெலிகாப்டர்களும், ஏசிபி க்ளாடிங் கட்டிடங்களும் அனிமேஷன் என்பதை நம்மால் எளிதாய் யூகிக்க முடிகிறது,  அந்த பெர்ஃபெக்‌ஷன் எங்கே போனது? !!! ஏன் இப்படி ஒரு காம்ப்ரமைஸ்,முழுக்க நனைந்த பின் எதற்கு முக்காடு? இவர்களுடன் போயா சிக்கன சமரசம்  செய்ய வேண்டும்?!!ஷங்கரிடம் உள்ள வெற்றிக்கான ஃபார்முலாவே படம் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் பிரமிப்பு,வீட்டுக்கு போனதும் தான் அதில் உள்ள கூதல்கள் புலப்படும்.நிறைய க்ளிஷேக்கள் உள்ள இயக்குனர் இவர்.இதிலும் ட்ராஃபிக் போலீஸ் அமரர் கொச்சின் ஹனிஃபா நோபார்க்கிங் அஃபன்சுக்கு கையூட்டு கேட்டு எந்திரன் ரஜினியிடம் கையறு படுகிறார்.ஆயினும் பிடிக்கிறது.ஆனால் ஏன் எல்லா படத்திலும் தூக்கு தண்டனை?குப்பைதொட்டி, சாக்கடை, ஹீரோயின் ஈவ் டீசிங்? காதல் தோல்வி?அடுத்த படமாவது இந்த மொக்கையான் க்ளிஷேக்களை தவிர்க்கவேண்டும்,இல்லையென்றால் மக்கள் தவிர்த்துவிடுவார்கள்.

விற வார்ட்ரோப், ஆக்சஸரீஸ் என்று மனிதர் கலக்கியேவிட்டார். மற்ற இயக்குனரைப் போல படத்தில் ஒரு காட்சியில் எட்டிப்பார்த்து வசனம் பேசவோ, டான்ஸ் ஆடவோ செய்யாத நேர்மையும் பிடித்திருக்கிறது. பிரம்மாண்டம் என்று பிதற்றும் ஆட்கள் இவரிடம் படிக்க வேண்டிய பாடம் அதிகமுள்ளது.

ரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் நிரந்தர எதிரி கிடையாது!!!என்பது நிருபனமாயிருக்கிறது,முதல்வனில் ஷங்கர் இதே கழக மக்களால் எத்தனை ? ஓடி ஒளிந்திருப்பார்? ஆனால் இன்று நிலைமையே தலைகீழ். ல்லாவற்றிற்கும் மேலாக அடுத்த படம் 500 கோடியில் இயக்க வேண்டும் என்றாலும் அதற்கு ப்ரீக்வாலிஃபிகேஷனும்  இவருக்கு வந்துவிட்டது, இதனால் எத்தனை பேர் பயனடைவார்கள்?!!!  எத்தனை பேர் களிப்படைவார்கள்?,  அதனால் தான் பேரலல் சினிமா விரும்பியான எனக்கும் இந்த மெயின் ஸ்ட்ரீம் சினிமாவை பிடித்து விட்டது.

முதல் பாதி ஜெட் வேகம், அந்த கொசு பிடிக்கும் காட்சி குழந்தைகளுக்காக வைத்தார்கள் போல, கலாபவன் மணி எதற்கு திடீரென்று? வழக்கமாக ரஜினி படங்களில் வரும் பெரிய பட்டாளம் இதில் மிஸ்ஸிங். லாஜிக் மீறல்கள் ஏகமாய் இருந்தாலும் , டீம் ஒர்க்கின் முன் பெரிதாய் தோன்றவில்லை, தவிர ஷங்கர் வேண்டுமேன்றே இதுபோல காட்சிகள் வைப்பவர்தானே?[முதல்வன் மீசை+மச்சம்] ரஜினி + ஐஸ்வர்யா ஜோடி மிகவும் அழகு, கெமிஸ்ட்ரி கூடிவரவில்லை என்றாலும் ஓவராக ,  திணிப்பாக இல்லை.

ரண்டாம் பாதியில் குழந்தைகளுக்காகவோ என்னவோ? ஒரே ரோபோ க்ளோனிங் மயம். ரத்னவேலுவின் கேமரா வியப்பை, பிரமிப்பை தருகிறது. நல்ல வேளையாக இந்த படத்தில் காரக்குழம்பு தலையுடன் கனல்கண்ணன் வந்து சண்டை போடவில்லை, அதற்கே சிறப்பு நன்றி. ரஜினியின் அந்த கிடார் வைத்திருக்கும் கெட்டப்பில் என்ன ஒரு வசீகரம்?!!!

டம் வெற்றியோ ? தோல்வியோ ? அது தெரியாது, அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்னும் ஒரு மாதத்துக்காகவாவது ஓடும். செலவு செய்ததை விடவும் 5 மடங்காவது எடுத்துவிடுவர். அதிலும், இங்கே காம்போ ஆஃபராக 37 திர்காம் டிக்கெட்டில் அரைலிட்டர் பெப்சியும், ஸ்மால் பாப்கானும் தருகின்றனர். அட்டு படமான கோவாவின் டிக்கெட் விலையே 30 திர்காம், இங்கே  மறக்க முடியாத அனுபவமாக இருந்தது இப்படம்.படம் பார்க்க செல்லும் முன் பாடல்களை திரும்ப திரும்ப கேட்டுவிட்டுச்செல்லுங்கள். பாட்டு புக்குக்கு இங்கே  க்ளிக்கவும், திரையில் பார்க்கையில் ஆனந்தமாக இருக்கும்!!!

இந்த படம் யாருக்காவது பிடிக்காமல் போகுமானால் அது கல்லாநிதி மாறனின்  பேனரான சன் பிக்சர்ஸ், இயக்குனருக்கு கேட்ட பணத்தை கொடுக்காமல், தன் தொலைக்காட்சிகளில் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை போடப்பட்ட  விளம்பர அலைகள்  செய்த, மக்கள் விரோத சதிலீலைகளாலுமே  தான் இருக்க வேண்டும்.
======0000======
படத்தின் முன்னோட்ட காணொளி:-


இது உலகபுகழ் அலெக்ஸ் மார்டின் என்னும் சண்டைக்கலைஞர் ரஜினிக்கு செய்த ரயில் சண்டை டூப் காட்சி:-

======0000======

இது  எந்திரன் படத்திற்கான ஆனந்தவிகடன் அக்டோபர் 7ஆம்தேதி  வெளியான சினிமா விமர்சனம்:-  படத்தில் நிறைகளும் உள்ளன என சொல்லுவதற்காக இங்கே வெளியிட்டுள்ளேன்.
       
விகடன் விமர்சனக் குழு     

இரும்புக்குள் ஒரு இதயம் முளைத்து, 'எந்திரன்'... தந்திரன் ஆனால், என்ன நடக்கும்? 
அனைத்துக்கும் முன்... தொழில்நுட்ப நேர்த்தியில் ஒரு தமிழ்த் திரைப்படத்தை சர்வதேசத் தளத்துக்குள் அழைத்துச் சென்று இருக்கும் இயக்குநர் ஷங்கர் குழுவினரின் அசுர உழைப்புக்கு ஒரு 'ரோபோ ஹேண்ட் ஷேக்'!

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் பிரமாண்டமான முதல் தயாரிப்பு. அச்சுப்பிச்சுப் பாடல்கள், பில்ட்-அப் பிஸ்கோத்து, டூமாங்கோலி டபுள் ஆக்ட்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த கிராஃபிக்ஸ் கலையை, கச்சிதமாக ஒரு திரைக்கதைக்குள் பூட்டி, ரஜினி எனும் மாஸ்க் மாட்டி மாஸ் மார்க்கெட்டுக்கு விருந்துவைத்து இருக்கிறார் ஷங்கர்!

ஒரே ஒரு எஸ்.எம்.எஸ். வரிக் கதை! விஞ்ஞானி ரஜினி உருவாக்கும் 'சிட்டி' ரோபோவுக்கு, ரஜினியின் காதலி ஐஸ்வர்யா ராய் மீது காதல் அரும்புகிறது. இயந்திர-மனித வித்தியாசங்களைக் கடந்து ஐஸ்வர்யாவை அடைய, எந்த எல்லை வரை அந்த ரோபோ செல்கிறது என்பதே எந்திரன் படத்துக்கான புரொகிராம்!

ரஜினியே ஒரு சூப்பர் ஹீரோ. அதிலும், 'ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்' சக்திகொண்ட ரோபோவாக ரஜினி நடிக்கும்போது, திரையில் எப்படி எல்லாம் பட்டாசு வெடிக்கும்? படபடா தடதடா!

கோயில் திருவிழாவில் ரவுடிகளை மிரட்ட 'மேக்னடிக் மோட்' ஆக்டிவேட் செய்து 'ஆயுத அய்யனார்' அவதாரம் எடுப்பது, டிரெயின் தகராறில் வூடு கட்டி அடிப்பது, ஒரே பாடலில் விதவிதமான நடனங்கள் ஆடி அசத்துவது, 'பின்னாடி பார்த்து ஓட்டு' என்றதும், சடாரெனக் கழுத்துக்கு மேல் தலையைப் பின்புறம் திருப்பி கார் ஓட்டுவது, ஐஸ்வர்யா பிறந்த நாளுக்கு ஸ்டைல் ஹேர்ஸ்டைல்ஸ் பொருத்தி அழகு பார்ப்பது, 'அவள் இடுப்பு... குழந்தைகள் உட்காரும் குட்டி நாற்காலி' என்று மிலிட்டரி அதிகாரிகள் முன்னிலையில் கையெறி குண்டுக்குள் ரோஜா காம்பு சொருகிக் காதலில் உருகுவது... என ரோபோ ரஜினியின் கையே படம் முழுக்க ஓங்கி இருக்கிறது.

ஓப்பனிங் பாடல், இன்ட்ரோ பில்ட் - அப்ஸ், பஞ்ச் டயலாக், பறந்து பறந்து அடிப்பது, காலைச் சுற்றும் காதலி என எதுவும் இல்லாமல் ரஜினியின் இமேஜையே புரட்டிப் போட்டு இருக்கும் படம். சொல்லப்போனால், விஞ்ஞானி ரஜினி, உதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார். ஐஸ்வர்யா ராயிடம் வம்பு பண்ணும் காட்டானை பெண்டு நிமிர்த்துவதற்குப் பதிலாக, பதறிப்போய் போலீஸைக் கூப்பிட போனை எடுக்கிறார். 
ரஜினி, தன் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்துகிற வழக்கமான ஃபார்முலாக்களைத் தாண்டி, இறங்கி வந்து உழைத்து இருக்கிறார். 'என்னை அழிச்சுராதீங்க டாக்டர்... நான் வாழணும்' என்று கை, கால்கள் பிய்ந்து தொங்கிய நிலையில், தரையில் பின்னோக்கித் தவழ்ந்தபடி ரோபோ ரஜினி கெஞ்சுவதுபோன்ற காட்சிகள் இயக்குநருக்கு முழுசாக அவர் கொடுத்து இருக்கும் ஸ்பெஷல் ஸ்பேஸ்!

'கொச கொச' தாடி விஞ்ஞானி, 'பளபளா' நிக்கல் சிட்டி, 'மின்னல்' கிருதா வில்லன் என மூன்று கெட்-அப்களையும் வித்தியாசப்படுத்தி வெளுத்துக் கட்டுகிறார் ரஜினி. அதிலும் சிட்டி... செம ஸ்வீட்டி. ஆனாலும், அதகளம் பண்ணி, அடித்து நொறுக்குவது நிக்கல் மீது தோல் போர்த்திய இயந்திரம் என்பதும், அதை அடக்குவதற்குப் படாத பாடுபடுவதுதான் ஒரிஜினல் ரஜினி என்பதும் விசில் பார்ட்டி ரசிகர்களின் உற்சாகத்துக்குக் கொஞ்சம் மைனஸ் போடுகிறது!

எந்திரன் கும்பலுக்குள் ஊடுருவிவிட்ட விஞ்ஞானி ரஜினியை 'ஹூ இஸ் த ப்ளாக் ஷீப்?' என்று கண்டுபிடிக்கத் தேடும்போது, 'ரோபோவ்வ்வ்' என்று பழிப்புக் காட்டுவதும், 'ம்ம்ம்ம்மே' என்று ஆடு கணக்காக ராகம் போடுவதுமாக... அபூர்வமாக வெளிப்படும் ரஜினி ஸ்டைல்கள்!

ஓர் இயந்திரத்துக்கே காதல் பூக்கவைக்கும் அழகி கேரக்டரில் ஐஸ்வர்யா... அழகு. பாடல் காட்சிகளில் பல ஃப்ரேம்களில் ரஜினி பக்கம் பார்வையே செல்லவிடாதபடி அதிர்ந்து இழுக்கின்றன ஐஸ்வர்யாவின் அசைவுகள்!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பாடல்களுக்கு எலெக்ட்ரானிக் துடிப்பையும் பின்னணிக்குப் பதற்றப் பரபரப்பையும் நிரப்புகிறது. 'புதிய மனிதா பூமிக்கு வா', 'அரிமா அரிமா ஆயிரம் அரிமா' என வைரமுத்துவின் கம்பீரத் தமிழ், 'பூம்... பூம் ரோபோடா' எனும் கார்க்கியின் தொழில்நுட்பத் தமிழ், 'கிளிமாஞ்சாரோ' எனும் பா.விஜய்யின் கன்னித் தமிழ் என அத்தனையும் அபார சொல் விளையாட்டுகள். ரோபோவின் பார்வையில் பயணிக்கும் ரத்னவேலுவின் கேமரா கோணங்களும், அதோடு பின்னிப் பிணையும் கிராஃபிக்ஸ் மிரட்டல்களும் தமிழுக்குப் புதுசு. 
ரோபோவின் நட்டு, போல்ட் துவங்கி அதிநவீன ஆராய்ச்சிக் கூடங்கள் வரை படத்துக்கு பிரமாண்டம் சேர்த்ததில் சாபு சிரிலின் கலை இயக்கத்துக்கு அபார பங்கு உண்டு. 'மனுஷன் படைச்சதுலேயே உருப்படியான ரெண்டே விஷயம், ஒண்ணு... நான். இன்னொண்ணு... நீ!', 'இது இயற்கைக்கு எதிரானது இல்லை; இது இயற்கைக்குப் புதுசு', 'எல்லா மனுஷங்களுக்கு உள்ளேயும் ஒரு ரெட் சிப் இருக்கு. அதை எடுத்துட்டா எந்தப் பிரச்னையும் இல்லை' என்று ஓரிரு வரிகளில் கடக்கும் வசனங்கள் 'வாரே வாவ்' ரகம். 'சுஜாதா, ஷங்கர், மதன் கார்க்கி'க்குச் சேர்கிறது பெருமை.

முதல் பாதி முழுக்க பரபரவெனக் கதை நகரும் விறுவிறுப்புக்கு, நேர் எதிர் பின் பாதி! அதிலும் பல நூறு வில்லன் ரோபோக்கள் விதவிதமாக உருவம் மாற்றி 'அசுரன்' வடிவில் ஓடி வரும் காட்சிகள் ஒட்டுமொத்த எந்திரமயமாக இருப்பதால்... ஆவ்வ்வ்வ்வ் அயர்ச்சி! கொசுவோடு ரஜினி பேசுவது காமெடியா? ஸாரி! சந்தானம், கருணாஸுக்கும் காமெடியில் தோல்வியே! கோடரியால் வெட்டினாலே கை பிளந்துகொள்கிற ரோபோவுக்கு, லாரிகளை இழுத்து வளைப்பதற்கும், காரைத் தூக்குவதற்கும் எங்கே இருந்து அந்தப் பலம் வந்தது என்பதற்கு சுஜாதா இருந்தால், லைட்டாக விஞ்ஞான விளக்கம் தொட்டுக் கொடுத்திருப்பாரோ?!

தனது கை, கால்களைக் கழற்றிக்கொண்டே சிட்டி 'பை பை உரை' நிகழ்த்தும் அந்த இறுதிக் காட்சிதான் சென்ட்டிமென்ட்டுக்கும் டெக்னாலஜிக்குமான பக்கா பார்ட்னர்ஷிப். ஒவ்வொரு வசனமும் மனதை நெகிழ்த்த, துளியும் அசங்காத அனிமேட்ரானிக்ஸ் கிராஃபிக்ஸ் புருவத்தை உயர்த்துகிறது.

படம் முழுக்கத் தெரியும் பிரமாண்டத்தில், நம்மையும் பாத்திரங்களோடு ஒருவராக்கி, மனசைத் தொட்டுப் பார்க்கிற சென்டிமென்ட் கதை இல்லை எந்திரன். இது எட்ட நின்று வியக்கவைக்கிற ஹாலிவுட் பாணி மந்திரன்!     
 =======0000=======

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)