நெஞ்சுக்கு நீதி!!!சபாஷ் சரியான தீர்ப்பு!!!

தர்மபுரி பஸ் எரிப்பில் 3 பேருக்கு  தூக்கு : கொடூரக் கொலை என்று கூறி மரண தண்டனை
ன்னும்  தினமலர் செய்தி படித்து ஆனந்தக் கூத்தாடினேன், எவ்வளவு தாமதமான தீர்ப்பு?!!! ஆனாலும் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பு. நம்பினார் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு!!! என்று உடனே புரிந்தது, அரசு நின்று கொன்றாலும்: கொல்லும் என்றும் புரிந்தது, விரைவில் அவர்களை தூக்கிலும் போட ஆவண செய்யவேண்டும், இல்லையென்றால் ஜனாதிபதிக்கு கடிதம், தந்தி, தொலைபேசி, கருணைமனு, என்று ஒரு வருடத்தை ஓட்டிவிடுவார்கள். நான் முதலில் மரண தண்டனை தவறு! என்று மூடத்தனமாக நினைத்து வந்திருந்தேன், ஆனால் என் எண்ணத்தை எச்சில் தொட்டு என்றோ அழித்துவிட்டேன். மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது. அடடா!!! ,மரண தண்டனை என ஒன்று மட்டும் இல்லையெனில், நம்மால் நிம்மதியாக வீட்டுக்குள் தூங்க முடியாது, ஊரெங்கும் மர்டரர்கள். பெடோபைகள், இன்செஸ்டுகள், டகாய்டிஸ்டுகள். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் தான்.  யாரும் நிம்மதியாக வெளியே நடமாடமுடியாது.

ல்லாவற்றிற்கும் மேலாக வஞ்சிக்கப்பட்ட மக்களின் ஆழ்மனதுக்குள் பழிவாங்கும் குணம் கணன்று கொண்டே இருக்குமாம், ஆனால் நாட்டில் நிலவும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளிலிருந்து நயவஞ்சகர்கள் மிக எளிதாக தப்பிவிடுவதால் ,அந்த பழிவாங்கும் குணம் மக்கி மண்ணாகி நாம் கையாலாகாதவர்களாகிவிட்டோமே!!!,

ன் மகளை,மகனை வன்புணர்ந்து கொன்று தின்ற பாந்தர் சிங் கோலி நன்றாக நடமாடுகிறானே?!!என் அம்மாவை கொன்றவன் நன்றாக நடமாடுகிறானே!! என் வீட்டை கொள்ளையடித்தவன் நன்றாக நடமாடுகிறானே!!என் நிலத்தை அபகரித்து அப்பா அம்மாவையும் கொன்ற @@@@#######மகன் அமைச்சன் நன்றாக நடமாடுகிறானே!! போபாலில் நாற்பதாயிரம் பேர் நச்சுவாயுவால்  சாகக் காரணமான வாரன் ஆண்டர்சன் சொகுசாக வாழ்கிறானே?!!!,அவன் கைக்கூலிகள் விஐபி சிறையில் விருந்தோம்புகிறார்களே?!!!என்று கேவி கேவி, அழும்.

றந்த மாணவியாவது ஒரு முறை தான் இறந்திருப்பார், ஆனால் அவரை நினைத்து 10வருடம் திவசம் கொடுத்த குடும்பத்தார் , எத்தனை முறை மனதால் இறந்திருப்பார்கள்?

ப்படி கேவி அழும் நெஞ்சுக்கு, எப்படி மனசாந்தி கிடைக்கும்?!!!இதோ மேலே வந்துள்ளதே?!!! அப்படி தீர்ப்பு வந்தால் மட்டுமே சாத்தியம்!!!, 2006 டிசெம்பர் மாதமே மேற்கண்ட பஸ் எரிப்பு கொலைகாரர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது, அப்போதே இவர்களை தூக்கில் போட்டிருந்தால் இறந்த மாணவியரின் ஆத்மா என ஒன்றிருக்குமேயானால்,அது விரைவாக சாந்தியடைந்து சொர்க்கத்துப் போயிருக்கும், அந்த பழிவாங்கும் வெறி கணன்ற பெற்றோருக்கு, சகோதரருக்கு, உடன் பிறவா சகோதரனான் என் போன்றவருக்கு மனசாந்தியும் என்றோ கிடைத்திருக்கும்என்பதை.நண்பர்கள் கண்மூடி நினைத்துப்பார்க்க வேண்டும்.

னிமேலும் தாமதிக்காமல் இவர்களை கண்ணாடி அறையில்,மாணவிகளின் பெற்றோர் குழுமியிருக்க , தூக்கில் போட வேண்டும், அதை எல்லா அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பவும் வேண்டும். அது தான் நெஞ்சுக்கு நீதி. அப்போது தான் சட்டம் ஒரு இருட்டறை அல்ல என நம்புவோம். மக்கள் மானாட மயிலாட மட்டுமல்ல, இதையும் பார்ப்பார்கள். சன் டிவியின்  டிஆர்பி யும் எகிரும்.

ப்போது ஒரு குற்றவாளி பெற்ற தண்டனைக்கு மேல்முறையீடு செய்கிறானோ!!!அவன் அப்போதே தவறுக்கு வருந்தவில்லை , என்று தான் என் அகராதியில் பொருள். மேலும் இணைய தயிர்வடையான என்னைக் கேட்டால் தூக்கு தண்டனை மிக சுலபமானது, ஆங்கிலேயன் கண்டுபிடிப்பு. சீக்கிரம் வலியில்லாம சாகமுடிவது, அது கூடவே கூடாது. எனவே நான் தீர்க்கமாக பரிந்துரைப்பது லீதல் இஞ்சக்‌ஷனையும், ஓல்ட் ஸ்பார்கி எனும் மின்சார நாற்காலியையும் தான்.

டுத்தவருக்கு நடந்தால்   செய்தி , நமக்கு நடந்தால் அது கொடூர சம்பவம், என்னும் மனநிலை அறுப்போம். நல்ல அண்டை மனிதர்கள் எல்லோரையும் சமமாக பாவிப்போம்.தீயில் வெந்து மடிந்த எந்த சுகத்தையும் அனுபவித்திராத இன்னுயிர்களுக்கு இத்தருணத்தில் அஞ்சலி செய்வோம். ஏழை உயிர் கிள்ளுக்கீரை இல்லை,என உரைப்போம்.
=====0000=====
கொடூர கொலையாளிகள் விபரம்:-
ர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு விதிக்கப் பட்ட கைதிகள் நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. எனவே, 'அக்டோபர் 8-ம் தேதி காலை 6 மணிக்குள் மூவரையும் சாகும் வரை தூக்கிலிட்டுத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுகிறேன்.' என்ற ஒரு கடிதத்தை சேலம் முதலாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி ராகவன், வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பிவிட்டார். சிறைக் கொட்டடியில் மூவரும் கண்ணீரில் இருக்கிறார்கள்!

இந்தக் கைதிகள் மூவரின் வீடுகளுமே தர்மபுரியில்தான். மூன்று குடும்பங்களில் இருப்பவர் களுமே, கதறலையும் கண்ணீரையும் மட்டுமே தங்களது பதிலாக நமக்குத் தந்தனர். இந்தக் குடும்பங்களின் இன்றைய நிலைமை என்ன?

நெடுஞ்செழியனின் மனைவி கஸ்தூரி. சொந்த அத்தை மகள். இவர்களுக்கு நான்கு வாரிசுகள். மூத்த மகன் மதி, பள்ளிப் படிப்போடு நின்று விட்டார். இரண்டாவது மகன் அருண்குமார், பி.இ. மாணவர். மகள்கள் பாரதி ப்ளஸ்-டூ-வும், நந்தினி ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். ''அப்பாவ தூக்கில் போட்ருவாங்களா அம்மா? அப்பா இனிமே வீட்டுக்கு வரவேமாட்டாங்களா?'' என்று பாரதியும் நந்தினியும் திரும்பத் திரும்பக் கேட்கி றார்கள். பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து, அழுகிறார் கஸ்தூரி.

ரவீந்திரனை வீட்டிலும் நண்பர்களும் செல்லமாக மாது என்றுதான் கூப்பிடுவார்கள். இவரது மனைவி உமா. இவர்களுக்கும் நான்கு குழந்தைகள். மாது கைதான சமயம், நால்வருமே பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு இருந்தனர். இப்போது வழக்கு முடிந்து தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், கல்லூரி படிப்புக்கு வந்துவிட்டார்கள்.

மூத்த மகன் தென்னரசு, எம்.பி.ஏ. மாணவர். இரண்டாவது மகன் புவியரசன், எம்.பி.பி.எஸ். படிக்கிறார். மகள் ஆர்த்தி அரசியும் எம்.பி.பி.எஸ். மாணவிதான். கடைசி மகள் சசிலட்சுமி, கடந்த வருடம் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து உள்ளார். கணவர் துணை இல்லாமலேயே, கடந்த 10 வருடங்களாக நான்கு குழந்தைகளையும் நன்றாகப் படிக்கவைத்துக் கரையேற்றிய பெருமை உமாவைச் சேர்ந்தது. இருந்தாலும், கணவனை நினைத்து நினைத்துத் தினமும் அவர் கண்ணீர் சிந்தாத நாளே இல்லை!

முனியப்பனுக்கு மூன்றுமே ஆண் வாரிசுகள். மூத்த மகன் ரஞ்சித்குமார், போலீஸ்காரர். இரண்டாவது மகன் அஸ்வினும் கடைசி மகன் ராமனும் எம்.இ- முடித்து, கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக இருக்கிறார்கள். மூன்று வாரிசுகளும் எவ்வளவோ முயன்றும்கூட, முனியப்பனின் மனைவி கமலாவை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.

இந்த மூன்று குடும்பங்களின் வாரிசுகளுமே நன்றாகப் படித்துக் கௌரவமான நிலையில் இருக்கி றார்கள். பஸ்ஸில் எரிந்து கரிக்கட்டை கள் ஆகிப்போன கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி மூன்று பேரும்கூட இன்று உயிரோடு இருந்தால்... அவர் களும் இவர்களைப்போல நல்ல நிலையில் இருந்திருப்பார்கள். அவர்கள் பெற்றோரும் அதைப் பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.
 =====0000=====
நன்றி ஜூ.விகடன்

எலிமெண்ட்ஸ் ட்ரைலாஜி 3 - வாட்டர் [இந்தியா] Water [2005]

ந்த படம் எடுத்த தீபா மேத்தாவுக்கு முதற்கண் நன்றி கூறுகிறேன்,இது நுனிப்புல் மேயும் அதி மேதாவி இயக்குனர் எடுப்பதைப் போன்ற ஒரு படைப்பல்ல, நூறு புத்தகம் கொடுக்கக்கூடிய ஒரு தாக்கத்தை ஒரு சில திரைப்படம் கொடுக்கக்கூடும், அது போல ஒரு தீர்க்கமான படைப்பு இது.  சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறை காலம் காலமாக கலாச்சாரம், பண்பாடு, நீதி சாஸ்திரம் மண்ணாங்கட்டி இவற்றால் வரையறுக்கப்பட்டு, பெண் குழந்தைகளும், பெண்களும் போவோர் வருவோருக்கெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு சொல்லொணா துயரையும் கொடுமைகளையும் அனுபவித்து வந்துள்ளனர்.

த்தகைய பெண்கள் சந்தித்த பிரச்சனையை புடம் போட்டுக்காட்டும் காலக்கண்ணாடி இது, இப்படம் நிச்சயம் பயாஸாக எடுக்கப்பட்ட படம் அல்ல, வாழ்வில் அனைவரும் குறிப்பாக எல்லா ஆண்களும் காணவேண்டிய படம், இந்த விஞ்ஞான யுகத்திலும் பழமையும்,மூடநம்பிக்கையும் பேசி பெண்களை இழிவு செய்யும் ஒவ்வொரு அயோக்கியர்களையும் , க்ளாக் வொர்க் ஆரஞ்ச் என்னும் க்யூப்ரிக்கின் படத்தில் வருவது போல கைகால்களை கட்டிப்போட்டு, கண் இமைக்கவிடாமல் க்ளிப் போட்டு,சொட்டு மருந்து விட்டு  காட்ட வேண்டிய படம்.

தீபா மேத்தா
ம்பது வருடங்களுக்கு முன்பு வரை நடத்தப்பட்ட வைதீக முறை திருமணத்தில் ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம், உட்பிரிவு பார்க்கப்பட்டு மணமக்களுடைய  யோக்யதாம்சங்கள் புறம்தள்ளப்பட்டன. வைதீக முறை திருமணத்தில் வயதுவித்தியாசங்கள் மற்றும் மணம் செய்ய ஏற்ற பருவங்கள் முக்கியமாய் கவனிப்பட்டதேயில்லை எனலாம். தக்க பருவம் வருவதற்கு முன்பே பெண்களுக்குக் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். உதாரணம் என் பாட்டி, அவர்களின் 14 வயதில் என் 48 வயது விதவை தாத்தாவுக்கு ஏழ்மையின் காரணமாக இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டுள்ளார்.

ம்பது, அறுபது வயது ஆன ஆண் கிழத்துக்கு பத்து முதல் பனிரெண்டு வயது பெண் குழந்தையைப் பிடித்து தாலி கட்டி புகுந்தவீட்டுக்கு மனசாட்சியே இல்லாமல் அனுப்பியுள்ளனர். ஏனென்றால்?!!! திருமண விஷயத்தில் ஆண்களுக்குக் மட்டும் கிழம் என்பதே இல்லையாம்.என்ன கொடுமை சார்?!!!

ன்ன தான் ஆணாதிக்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மட்டுப்பட்டு பெண்களுக்கு சமத்துவம், இடஒதுக்கீடு என கிடைத்து அவர்கள் தலையெடுத்தாலும், இன்னமும் அது சுத்தமாக வழக்கொழியவில்லை,என்றே சொல்ல வேண்டியிருக்கிறது, நம் பரம்பரை மூதாதையர் ஜீன்கள் வழியே சிறிதளவேணும் அவ்வப்பொழுது அது வெளிப்படவே செய்கிறது, இது முற்றிலும் ஒழிய இன்னும் ஐம்பது ஆண்டாவது தேவைப்படும் என நினைக்கிறேன்.
=========0000=========
படத்தின் கதை:-
ந்த படம் 1938ஆம் ஆண்டு,சுதந்திரத்துக்கு முந்தைய ப்ரிட்டிஷ் இந்தியாவில் துவங்குகிறது, அப்போது வழக்கத்திலிருந்த பெண்ணடிமை தனத்தின் உச்சமாக, எட்டு வயது சிறுமி ச்சுய்யா[சரளா]வுக்கு பால்ய திருமணம் நடைபெறுகிறது, திடீரென அவளின் கிழட்டு கணவன் இறந்தும் விடுகிறான், சிறுமிக்கு மரணித்தல் என்றாலே என்ன? என்று தெரியவில்லை,கரும்பு தின்று கொண்டிருக்கிறாள்,அவளிடம் போய் அவள் அப்பன் ,இன்று முதல் நீ விதவை என்கிறான்,அவள் சிரிக்கிறாள்,

வளுக்கு குடும்பத்தாரால் பொட்டழிப்பு, வளையல் உடைப்பு வலுக்கட்டாயமாக செய்விக்கப்பட்டு, மாட்டு வண்டியில் ஏற்றி அவள் காசி மாநகரின் ஒரு எழுபது வயதான, கொடுரமான மனம் கொண்ட மூதாட்டி மதுமதி வசம் உள்ள விதவைகள் மடத்தில் விடப்படுகிறாள். அங்கே ஏற்கனவே நிறைய கைம்பெண்கள், சென்ற ஜென்மத்தில் தாங்கள் செய்த பாவம் தான் தன் கணவனின் உயிரை குடித்தது. என்றும் , அதை போக்க தினமும் கங்கையில் மூழ்கி எழுந்து ,ஒருவேளை மட்டுமே உப்பு,உறைப்பில்லாமல் உண்டு, தலையை சிரைத்தும், முக்காடு இட்டுக் கொண்டும் கூனிக்குறுகி வாழ்ந்து வருகின்றனர்.

வளையும் அவ்வாறு மாற கட்டாயப்படுத்தியவர்கள், இவள் கேட்ட கேள்விகளால் திக்குமுக்காடி தோற்றும் போகின்றனர்.என்ன கேட்டாளா? !!! கணவணிழந்த பெண்கள் விதவைகள், என்றால் மனைவியை இழந்த கணவர்களுக்கு என்ன பெயர்?!!! அவர்களின் மடம் எந்த தெருவில் இருக்கிறது,?  என்று..:)) தவிர சிறுமி ச்சுய்யாவுக்கு குறும்புத்தனமும், ஈகைக்குணமும் நிரம்பவே உண்டு.

ங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க ஆச்சாரமான விதவை சகுந்தலா [சீமா பிஸ்வாஸ்] , தலைமைப் பெண் மதுமதிக்கு , அடுத்த ஸ்தானத்தில் இருக்கிறாள், ஆனால் நல்லவள், இவளும் பெண்ணடிமை தளையிலிருந்து வெளியே வருவதும், கைம்பெண்ணின் மறுமணமும்  பாவம் என்றிருக்கிறாள். ச்சுய்யாவின் களங்கமற்ற பேச்சும் செய்கையும் இவளுக்குள் இருக்கும் கண்டிப்பான குணத்தையும் மெல்ல கரைக்கிறது.கங்கைக்கரை படித்துறையில் தினமும் நடக்கும் பிரசங்கங்களில் கலந்து கொண்டும் உபன்யாசிக்கு சேவை செய்துகொண்டும் தன் நாட்களை கழிக்கிறாள்.

ச்சுய்யா அடுத்ததாக மிகவும் பாசத்துடன் இருப்பது,அழகிய இளம் கைம்பெண் கல்யாணியிடம் [லிசா ரே] தான், கல்யாணி  ஒளித்து வளர்க்கும் நாய்குட்டியான காலாவும் இவளுக்கு பிடிக்கும். விளையாட்டு சாமான்கள் பிடுங்கப்பட்ட அவளுக்கு காலாவே விளையாட்டு தோழன்.

துமதி, கல்யாணியின் சிறு வயதிலேயே கங்கையின் எதிர் க்கரையிலிருக்கும், அலகாபாத்தின் பணக்கார பிராமணர்கள் வசமும், ஜமீந்தார்கள் வசமும்  உடலுறவுக்கு கூட்டி கொடுத்து காசு பார்க்கிறாள். கேட்டால் மடத்தின் செலவுக்கும் வாடகைக்கும் என்கிறாள். கல்யாணிக்கோ , உறவினர் இருந்தும் திரும்பிப்போகமுடியாத சூழ்நிலை. அக்காலத்தில் பெண்கள் விதவையானாலே, வீட்டுக்கு தரித்திரம், பெண் குழந்தைகளே சுமை, என்றே ஏனைய பெற்றோர்கள் இருந்தமையால், கல்யாணிக்கு மடமே சாஸ்வதம் என்றாகிப்போனது.

கிழவி மதுமதி பொன்முட்டையிடும் வாத்தான கல்யாணியை மடத்தின் மேல்தளத்தில் தனி அறை கொடுத்து தங்கவைத்துள்ளாள். மதுமதிக்கு குலாபி[ரகுவீர் யாதவ்] என்னும் திருநங்கையிடம் தீரா நட்பும் உண்டு, கல்யாணியை வாடிக்கையாளர்களிடம் கூட்டிக்கொடுத்து, பின்னர் படகில் கூட்டி வரவும் , கஞ்சா வாங்கி பற்ற வைத்துத் தரவும், பொறித்த, தாளித்த பண்டங்களை விதவைகளுக்கு கடைக்காரர்கள் விற்கமாட்டார்கள்,ஆகவே அதை வாங்கி வந்து தரவும்  இந்த குலாபி பேருதவியாக இருக்கிறாள்.

கூட வசிக்கும் ஏனைய விதவைக்கிழவிகள் கல்யாணியை மிகவும் வெறுக்கின்றனர், அவளின் மொட்டையடிக்கப்படாத தலையும், வசீகரிக்கும் மேனி எழிலையும் கண்டு வயிறெரிந்தவர்கள், அவளுடன் அமர்ந்து சாப்பிடுவதையும், பேசுவதையும், முற்றாக தவிர்க்கின்றனர், இருந்தும் நாய் விற்ற காசு குரைக்காது என்னும் கூற்றுக்கேற்ப, அந்த காசில் வாங்கி வந்த மளிகையில் அனுதினம் தளிகை பொங்கி தின்கின்றனர்.

ங்கே இருக்கும் விதவைகள் விஷேஷகாலங்களில் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்து, அதில் வரும் காசுகளை,தங்கள் இறுதிச்சடங்கிற்கு சேர்த்தும் வைக்கின்றனர். சிறுமி சுய்யாவுக்கு  பிச்சை எடுக்க பிடிக்கவில்லை, ஆனால் மிகவும் பசி எடுக்கிறது, ஆனால் சிறுமி என்றும் தாட்சன்ய்ம் காட்ட மடத்தில் யாருக்குமே  மனமில்லை. அவ்வப்பொழுது ச்சுய்யா தன்னை அம்மாவிடம் கொண்டு விடுங்கள், என்று அடம் பிடிக்கும் போதெல்லாம், அங்கிருந்த மூத்த விதவைகளால் போலி வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு ஏமாந்தும் போகிறாள்.

வளை சொன்னபடி கேட்க வைக்கும் தந்திரமாக உன்னை அம்மாவிடம் கொண்டு விடுகிறேன் என்பதை எல்லோரும் பயன்படுத்துகின்றனர். ச்சுய்யாவும் அதற்கு பெட்டிப்பாம்பாய் அடங்குகிறாள். மடத்தில் உள்ள 80வயது விதவை மூதாட்டி , சிறுவயதிலேயே தனக்கு நடந்த திருமணத்தில் நெய்யில் செய்த லட்டு, ஜாங்கிரி தின்றவர்,அதன் பின்னர் கணவன் இறந்த பின்னர் 70 வருடமாக இனிப்பே சாப்பிடவில்லை, வருவோர் போவோரிடமெல்லாம் லட்டைப்பற்றியும், ஜாங்கிரியைப் பற்றியும், அதன் மணம் சுவையை கண்கள் விரிய சிலாகித்து பேசுகிறார், எல்லோரும் அவளுக்கு இனிப்பு கிறுக்கு என்கின்றனர். ச்சுய்யாவிடமும் பாட்டி கேட்கிறாள்.

னால் மடத்தில் ஒருவரும் பாட்டிக்கு  எந்த இனிப்பும், இதுவரை வாங்கித்  தரவில்லை. ஒரு நாள் கோவிலில், ச்சுய்யாவுக்கு  ஒரு பெண்மணி ஒரு அணா  பிச்சையிட, உடனே இனிப்பு கடைக்காரனிடம் ஓடியவள், அவன் முதலில் விரட்ட, என்னிடம் காசு உள்ளது என்று எடுத்து நீட்ட, அவன் தந்த லட்டை கொண்டு போனவள். அந்த கூன்போட்ட விதவை மூதாட்டியிடம் தூங்கும் போது வாசம் காட்டி, பின்னர் உள்ளங்கையில் அழுத்துகிறாள். பாட்டி தான் கனவு காண்கிறோம்! என்றே நினைத்தவள். நா தழுதழுக்க லட்டை  மெல்ல அனுபவித்து தின்கிறாள், ஆனால் அதுவே அவளுக்கு கடைசி உணவாகிவிட ஆனந்தகூத்தாடியவள் புறைக்கேறி இருமியே போய் சேர்ந்தும் விடுகிறாள். படத்தில் பார்த்துப்பார்த்து எடுக்கப்பட்ட காட்சியில் இதுவும் ஒன்று.

றுநாள் பாட்டியின் ஈமைகிரியைக்கு பணம் தேவைப்பட, யாரிடமும் பணமில்லை, ஒருவரும் பாட்டிக்கு பணம் தர முன் வராதபோது, மதுமதி பாட்டியின் உடமைகளை சோதனையிட, ஒரு கிழிந்தபுடவையும், திருவோடும் கோப்பையும் மட்டுமே எஞ்சியுள்ளது. இறந்துபோன பாட்டியை மதுமதி கண்டபடி திட்டத்துவங்க, கல்யாணி தன் இறுதிச்சடங்கிற்கு வைத்திருந்த பணமுடிப்பை மதுமதியிடம் விரைந்து தருகிறாள், இவளை பார்த்து மதுமதி மகாலட்சுமி என்கிறாள்.

ழகிய கல்யாணி கங்கையில் ச்சுய்யாவுடன் நீராடி வரும்பொழுது செல்வந்தரும், இளம் காந்தியவாதியுமான நாராயணின் [ஜான் ஆப்ரஹம்] கண்களில் பட, அவருக்கு கல்யாணி மேல் அன்பும் , இரக்கமும், ஒருங்கே தோன்றுகிறது, அது விரைவில் காதலாகவும் கனிகிறது, குப்பையிலிருக்கும் கோமேதகத்தை திருமணம் செய்து உயர்ந்த வாழ்க்கை அளித்து, துயர் துடைக்க நினைக்கிறார், இவர்களுக்கு பார்வையிலேயே காதல் பூக்கும் காட்சி இசைப்புயலின் இசையுடன் அமர்க்களமாக வெளிப்பட்டிருக்கும்.


கல்யாணி மதுமதியிடம் இனி வாடிக்கையாளர்களின் உடல்பசி தீர்க்க தன்னால் போக முடியாது, தனக்கு உடம்பு சரியில்லை, என்கிறாள், மதுமதி தந்த புதிய புடவையையும் வாங்க மறுக்கிறாள். தேசமெங்கும் ,மகாத்மா காந்தி பெண்ணுரிமை குறித்தும் விதவைகள் மறுமணம் குறித்தும் சுதந்திர தாகத்துடன் சேர்த்து ஒவ்வொரு கிராமமாக சென்று , தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். கல்யாணிக்கு விதவைகளை சமமாக நடத்தும் சமதர்ம சமுதாயம் ஏற்படப்போகிறது, தங்களுக்கும் புணர்வாழ்வு கிடைக்கப்போகிறது என்னும் எண்ணமே மிகுந்த பூரிப்பைத் தர. இன்னும் அழகாகிறாள்.

ல்யாணி சகுந்தலாவிடம் சென்றவள்.  நாராயன் ச்சுய்யாவிடம் தந்த கடிதத்தை தந்து படித்து காட்டச்சொல்லி கேட்கிறாள் , நாராயண் தனிமையில் சந்திக்க சொல்லி கேட்பதாக சொல்கிறாள்,நான் அவரை சென்று சந்திக்கவா? என்று கல்யாணி பயந்தபடி அனுமதி கேட்க, அவள் உன் உள்மனதுக்கு என்ன தோன்றுகிறதோ?!!! அதை செய் என்கிறாள்.அருமையான மற்றொரு காட்சி இது.

முதலில் நாராயணை சந்திக்கவும் பேசவும், பயந்து மறுத்த கல்யாணி, சிறு வயதிலிருந்தே தான்  அனுபவித்து வரும் விருப்பமில்லா,வன்புணர்ச்சியினால் அவளின் மனமும் கல்லாயிருக்க,  கண்ணியமான நாரயணின் கருணையினால் அது கரைகிறது,குதிரை வண்டி சந்திப்பின் போது.  நாராயண் கல்யாணிக்கு முதலில் எழுத்தறிவிக்க விரும்புவதாக சொல்கிறார் . செல்வந்தரான அப்பா,அம்மாவின் எதிர்ப்பையும் மீறி இவளை திருமணம் செய்து, கல்கத்தா அழைத்துப்போக எண்ணுகிறார். தன் அம்மாவையும் சம்மதிக்க வைத்து விடுகிறார். கல்யாணி மகிழ்ச்சி பொங்கிட ச்சுய்யாவுக்கு மட்டும் இதை ரகசியமாய் சொல்கிறாள், ச்சுய்யா மிகவும் ஆனந்தமடைகிறாள்.

ன்று, வழக்கம் போல குண்டுக்கிழவி மதுமதிக்கு, ச்சுய்யா கால் வலிக்கு மிதிக்கையில், ஜன்னல் வழியே குலாபி தந்த பூரி பொட்டலத்தை மறுத்த  மதுமதி, தான் காலையிலிருந்து கெட்டவாயுவாக வெளியேற்றுவதாகவும், நேற்று தின்ற எண்ணைய்ப் பண்டம் ஒத்துக்கொள்ளவில்லை, எனக்கு இன்று பூரி வேண்டாம் என்கிறாள்,

ச்சுய்யா அதை சாப்பிட ஆவலாய் கேட்க, குலாபி மறுத்து விதவைகள் எண்ணெய் பண்டம் தின்றால் பாவம், கணவன் ஆத்மா சாந்தியடையாது, இன்னும் ஏழு ஜென்மம் விதவையாகவே எடுத்து கழிப்பாய் என சொல்ல!!!! மதுமதியும் கரித்துக் கொட்ட, ச்சுய்யா நீ என்ன தருவது?.கிழவி, நடக்கப்போகும் கல்யாணியின் திருமணத்தில் நான் நெய்யில் செய்த லட்டுக்களும் ஜிலேபிகளும் வகை வகையாக தின்னப்போகிறேன், ஆனதைப்பார். என்கிறாள்.

துமதி கிழவி நிலம் அதிர எழுந்தவள், தின்னமுடியாமல் தின்று வளர்த்த தன் உடம்பை,தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு கல்யாணியின் அறைக்கு சென்று, ச்சுய்யா சொல்வது,உண்மையா? எனக்கேட்டவள், அவள் ஆம் என்றதை தாங்கமுடியாமல், அவளின் அழகிய கூந்தலை அரைகுறையாக ,அவசரமாக, அசிங்கமாக கத்தரிக்கிறாள், அவளை அறைக்குள்ளேயே வைத்து பூட்டுகிறாள். இதைக்கண்ட சகுந்தலாவுக்கு மனதை பிசைகிறது, ஆனால் மதுமதி அங்கேயிருந்த மூடப்பழக்கங்களில் ஊறிய விதவைகளிடம், விதவையின் மறுமணத்துக்கு உதவினால் நீங்களும் நானும் ஏழு ஜென்மத்துக்கு நரியாக பிறப்பெடுத்து ஊளையிட வேண்டியிருக்கும், என்று பூச்சாண்டி காட்டுகிறாள்.

துமதியின் கயவாளித்தனத்துக்கு ஒருபோதும் சகுந்தலா துணைபோனதில்லை, அதனால் தான் , சிறுமியாருந்த கல்யாணியை, யாருக்கும் தெரியாமல் குலாபியின் துணையோடு கூட்டிக் கொடுத்தாள் மதுமதி,  இதுவரை, மதுமதியை எதிர்த்து பேசியதுமில்லை, ஆதரித்ததுமில்லை.  நாராயண் நல்லவர் என்பது மட்டும் தெரியும். அழகிய கல்யாணிக்கு இந்த மடம் ஒரு கொடிய நரகம் என்றும் தெரியும். இனி சகுந்தலா என்ன முடிவெடுப்பாள்?!!!


1.சகுந்தலா கல்யாணியை விடுதலை செய்தாளா?
2.கல்யாணியும் நாராயணும் இணைந்தார்களா?அதற்கு அவர்களின் செல்வந்தர் குடும்பம் சம்மதித்ததா?
3.சிறுமி ச்சுய்யா என்ன ஆனாள்?பெற்றோரிடம் இணைந்தாளா?
4.விதவைகள் மடம் பூரணமாக கலைக்கப்பட்டதா? சகுந்தலா என்ன ஆனாள்? போன்றவற்றை படத்தின் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் டிவிடியில் பாருங்கள்.
=====0000=====

 படத்தின் கதாபாத்திரங்களின் அற்பணிப்பை பற்றி பேச ஒரு பதிவு போதாது, அழகிய கைம்பெண் கல்யாணியாய் வந்த லிசா ரே [ஆம்! ஐ லவ் இந்தியா ] தன் கலைவாழ்வில் செய்த மாபெரும் பங்களிப்பு, இதில் நடிக்கும் போதே இவருக்கு புற்று நோயும்  இருந்திருக்கிறது, அந்த வேதனையும் பாத்திரத்துக்கு  மேலும் பலமூட்டியிருக்கும்  போலும்.

டத்தில் இசைப்புயலின்  இசை மனதை உருக்கிவிடும்., இதில் பிண்ணணி இசைக்கோர்வைக்காக மைக்கேல் டன்னா[மான்சூன் வெட்டிங்]வும் இசைப்புயலுடன் இணைந்திருப்பார். இருவரும் இணைந்தே உலகத்தரம் வழங்கியிருப்பார்கள். படத்தின் ஆர்ப்பரிக்கும் ஒளிப்பதிவு கைல்ஸ் நட்ஜென்ஸ், இவர் தீபா மேத்தாவின் ஆஸ்தான கேமராமேனாவார்.அழகிய காசி மாநகரை கங்கை நீரை அள்ளி வந்திருப்பார் தன் கேமராவில்!!!. உலக சினிமா காதலர்கள் தவறவிடக்கூடாத படைப்பு இந்த எலிமண்ட்ஸ் ட்ரைலாஜி.
=====0000=====
படத்தின் முன்னோட்ட சலனப்படம்:-


=====0000=====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Deepa Mehta
Produced by David Hamilton
Written by Deepa Mehta (writer)
Anurag Kashyap (Hindi translation of dialog)
Starring Seema Biswas
Lisa Ray
John Abraham
Sarala Kariyawasam
Manorama
Music by A. R. Rahman
Mychael Danna(background score)
Cinematography Giles Nuttgens
Editing by Colin Monie
Distributed by Fox Searchlight Pictures (U.S.)
Mongrel Media (Canada)
B.R. Films (India)
Release date(s)
8 September 2005 (Toronto)
See release dates section
Running time 114 minutes
Language Hindi or English[1]
Gross revenue $10,422,387 [2]
Preceded by Fire (1996)
Earth (1998)

=====0000=====

களவாணி-மீண்டும் ஒரு யதார்த்த சினிமா!!!

ண்பர்களே,போன வாரம் தான் களவாணி படம் பார்க்க முடிந்தது, இந்த படத்தின் 20க்கும் மேற்பட்ட விமர்சனங்களை வலையில் படித்திருந்தமையால் இது ஒரு ஓவர்ரேட்டட் படமாக இருக்குமோ?!!! என்னும் தயக்கம் இருந்தமையால் பார்க்கணுமா? என யோசித்து , அட பார்ப்போமே!!!.  என பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது , அற்பணிப்பு, என்ற ஒற்றை சொல்லுக்குள் ஆழ்ந்திருக்கிறார்கள் படத்தின் கலைஞர்கள்.

தை தியேட்டரில் பார்க்கவில்லையே!!!என மிகவும் வருத்தப்பட்டேன், பல பெரிய பட்ஜெட் குப்பைகளை தியேட்டரில் பார்த்து நொந்து போனதால் எது அசல?எது போலி? என்பதில் நிலவும் குழப்பத்துக்குள்ளேயே இதுபோல படங்களும் சிக்கிக்கொள்கின்றன. நான் கடைசியாக   4 முறை பார்த்த படம் என்றால் அஞ்சாதே, மற்றும் பொல்லாதவன், அதன் மேக்கிங்கில் மிரட்டியிருப்பார்கள், இயக்குனர்கள் மிஷ்கினும்,வெற்றிமாறனும். அதற்கு பின்னர், இந்த படம் தான் நான் அலுக்காமல் வெகுவாக  ரசித்து திரும்ப திரும்ப  பார்த்தது என்று சொல்லுவேன்.

ப்படி ஒரு வசீகரம் படத்தில். சற்குணம் இயக்குனராக கிடைத்ததற்கு தயாரிப்பாளர் மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும், இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் தரமான படம் கொடுப்பது எப்படி?!!! என அவர் ஒரு புத்தகமே போடலாம். இதை நண்பர் கருந்தேள் எழுதியிருந்தால் அக்குவேறு ஆணிவேறாய் பிரித்து மேய்ந்திருப்பார். பாராட்டுவதிலும், குறைகண்டால் குட்டி தீர்ப்பதிலும் மனிதர் தாராளம். இப்படம் சாரு எழுதி உயிர்மையில் வருகிறது, படிப்போம் என்றார். அட சூப்பர் மேட்டராச்சே !!! என்றேன். நான்.

ந்த படத்தை பற்றி அண்ணன் ஜாக்கி, நண்பர் செ.சரவணகுமார்,ண்பர் பின்னோக்கி, நண்பர் செந்தில்வேலன் மற்றும் நிறைய பேர் அருமையாக வித்தியாசமாக எழுதியிருந்தனர். ஆகவே நான் எழுதாமல் விடுவதில் எந்த குறுகுறுப்புமில்லை. அவர்களின் விமர்சனங்களை வரிக்கு வரி அப்படியே வழிமொழிகிறேன்.

விமல் போன்ற நடிகனை பசங்க,தூங்காநகரம் போன்ற படங்கள் பார்த்துவிட்டு குறைத்து மதிப்பிட்டு விட்டுவிட்டேனே!!!அடடா?!!! எனத் தோன்றியது.இவர் கூத்துப்பட்டறை நடிகர் என்று இப்போது தான் தெரியும்,18வருடங்கள் ஹீரோவாக தோன்றியும் இன்னும் முகபாவனை உடல்மொழி என்பதே தெரியாத ஒரு ஓவர்ரேட்டட் நடிகன்,அல்லக்கைகளின் எடுப்பார் கைப்பிள்ளை இ.தளபேதி விஜயை ஒப்பிடுகையில் விமல் யதார்த்த நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.  விமலும் அந்த நாயகியும் அமர்க்களமான பெர்ஃபார்மன்ஸ்.  விமல் இனி மிக கவனமாக இருக்க வேண்டும். இதே போல கதையமைப்புடன் கூடிய படங்களாய் நடிக்கசொல்லி வாய்ப்புகள் குவியும், அதிலிருந்து கவனமாக தெரிவு செய்து நடிக்க வேண்டும்,

ந்த நாயகி ஓவியா, மிக அழகு, அருமையான நடிப்பு, முதல படமா?!!! சான்சே இல்லை, த கேர்ள் நெக்ஸ்ட் டோர்!!! என்ற சொல் சிறப்பாயிருக்கும் , சற்குணம் படத்தின் கலைஞர்களிடம் வேலை வாங்கியதிலேயே மிளிர்கின்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, படம் பார்த்த அனுபவம். எல்லா படத்துக்கும் இது கிடைத்து விடாது. படம் முடிந்த  உடனே நான் செய்த முதல் வேலை என் ப்ளாக்கரின் ப்ரொஃபைலில் பிடித்த படங்கள் பகுதியில் இந்த படத்தையும் கையோடு இணைத்தது தான்.

பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட, பாத்திரங்கள் ரெண்டு பென்சிலாவது வாங்கி குடுண்ணே!!! என்று சொல்லும் தங்கச்சி, சரியான பொருத்தமான பாத்திர தேர்வு, பூரா பணத்தையும் கேக்காம மூணு பங்கோட விட்டானே!!! என்னும் அம்மா, 2500 திர்காம்ஸ் குடுத்து லாப்டாப் வாங்குனேன்,கட்டிட வேலை முடிக்காம கெடக்கு பாத்து போட்டுகுடுங்க பாய், என்னும் இளவரசு என வாழ்ந்திருக்கின்றனர்.

ஞ்சா கருப்பு, பாலைவனத்து மழையை போல என்பேன், ஸ்டீரியோ டைப் காமெடியைப் பார்த்து பார்த்து நொந்த நமக்கு ஆகச்சிறந்த மாற்றாக விளங்குகிறார், இவரை இன்னும் நாம் நன்கு பயன்படுத்தலாம்!!!, செம ரிசல்ட் தருவார். என்பது என் எண்ணம். வில்லனாக வந்தவர் , என் பள்ளியில் கூடப் படித்த எதிரி மாணவன் போலவே இருக்கிறார். பார்க்கும் போதே எரிச்சல் வரும் ஒரு  விரோதக்கார முகம். மனிதர் என்னமா பெர்ஃபார்ம் செய்திருக்கிறார் ?!!! .  எங்க பல்லாவரம்,  பம்மல் ஏரியாவில் சபரிமலை சீசனில் மாலை போட்டுக்கொண்டு தவ்ளத்தனம் செய்யும் பயபுள்ளைகளை நினைவு படுத்துகிறார்.

ற்றபடி குறை என்று சொல்லவே முடியவில்லை, இருந்தால் தானே? சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு குறை கண்டுபிடிக்க முயன்று தோற்ற இன்னொரு படம். வெல்டன் டீம். இயக்குனர் சற்குணத்தின்  படங்களை இனி தேடிப்பார்க்கும் ஆவலை உண்டு பண்ணிவிட்டார்.!!! இப்படம் , இவ்வளவு தாமதமாக எழுதுவதற்கு காரணமே, இவ்வளவு நல்ல படத்தை ஊடகத்தில் சிலாகிக்காமல் இருப்பது குற்றம் என்பதால் தான்.

விர, படம் பற்றி எழுதிய நண்பர்களின் பதிவுகளில், படம் பார்த்திராததால் முன்பே பின்னூட்டியிருந்தாலும், ரசித்தவற்றை பகிர முடியவில்லை. இது போல நல்ல படங்களையும் அவ்வபொழுது தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும் ,  இயக்கும் இயக்குனருக்கும், வெற்றிபெறச்செய்யும் ரசிகர்களுக்கும்  மிக்க நன்றி.

விமல்பற்றிய ஒரு செய்தி:- சமீபத்தில் மீண்டும் காஞ்சிவரம் படம் பார்தேன் அதில் நடிகர் விமல் மினி ரமேஷ் என்னும் பெயரில் பிரகாஷ்ராஜின் மருமகன் ரங்கனாக அவர் வருவதை உறுதி செய்துகொண்டேன்,விமலின் ஃபில்மோக்ராஃபியில் இந்த மிக முக்கியமான படம் இல்லாதது கண்டு ஆச்சர்யமடைந்தேன். நண்பர்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்,குரலும் விமலது குரல் தான் அவர் ஏன் மினிரமேஷ் என அறிமுகமானார் என குழப்பமாக இருக்கிறது.
களவாணி=நியாயமான கூலி
=========0000==========
சாதித்த களவாணி குழுவினரின் பேட்டி:-

த செலிப்ரேஷன்[ஃபெஸ்டன்][டென்மார்க்][1998][18+]


நாம் வாழும் சமுதாயம் தான் எத்தகைய கீழ்தரமான மனிதர்களை கொண்டுள்ளது? என்று தினமும் வியந்தும் அருவருத்தும் கோபப்பட்டும் வந்திருக்கிறேன், மனித மனத்தின் குரூர வெளிப்பாடான பெடோஃபைல்கள் பற்றி முன்பே என் சிலபதிவுகளில்  எழுதியுமிருக்கிறேன்,இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது இன்செஸ்டுகள் [incest] பற்றி, அதாவது பெற்ற மகள், மகனையே புணரும் தந்தை, பெற்ற மகள், அல்லது மகனையே புணரும் தாய் இன்செஸ்டுகள் என அழைக்கப்படுவர். இது மனித குலத்தின் மிகமோசமான அருவருக்கத்தக்க செய்கைகளுக்கு மோசமான ஓர் உதாரணமாக காட்டப்படுகிறது, 

னாலும் அதீத குடிப்பழக்கம், நாள்பட்ட மனநோய், ஆழ்மன வக்கிரம் இவற்றின் உச்சக்கட்ட வெளிப்பாடாக இந்நோய் சமூகத்தில் அனுதினமும் குரூரமாக வெளிப்படுகிறது.!!! அதெல்லாம் இல்லை, இந்தியாவில் எங்கே இதுபோல் நடக்கிறது?!!! என்று மறுப்பவர்கள் இன்றைய தினத்தந்தி செய்தியை எடுத்து பாருங்கள், அதில் நிச்சயம் பெற்றமகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய குடிகார தந்தை என்னும் வழமையான செய்தி வந்திருக்கும்.
=====0000=====
ந்த டச்சு மொழிப் படம் ஃபெஸ்டென் என்னும் பெயரில்1998ஆம் ஆண்டு டென்மார்கில் வெளியாகி,பின்னர் த செலிப்ரேஷன் என்னும் பெயர் மாற்றத்துடன்  உலகெங்கும் வெளியானது, பரீட்சார்த்தமான முயற்சிகளுடன் குறைந்த செலவில் தரமான சினிமா செய்ய விழைவோர் சிலர்,இயக்குனர் லார்ஸ் வோன் ட்ரையர் [
Lars von Trier ] தலைமையில் ஒன்றுகூடி ஏற்படுத்திய டாக்மி-95 கோட்பாடுகளை பின்பற்றி எடுக்கப்பட்ட முதல்படம் என்னும் பெருமையையும் இது பெற்றுள்ளது.

டத்தின் சிறப்பம்சங்கள், ட்ரைப்பாடில் கடைசி வரை அமராத டிஜிட்டல் கேமரா, அனாவசியமான ஒளியமைப்பே இல்லாத உள்புற, வெளிப்புற காட்சிகள், காட்சிக்கு காட்சி நடிகர்களின் வசன உச்சரிப்பு முகம் மற்றும் உடற்பாவனைகளுக்கே முக்கியத்துவம் தந்து இயக்கியவிதம், படத்துக்கு சம்பந்தமில்லாமல் பிற படங்களில் நாம் காணக்கூடியது போன்ற  பிண்ணனி இசையோ, கொசுவர்த்தி சுற்றும், நினைத்து பார்க்கும் காட்சிகளோ, நினைத்து பார்க்கும் காட்சியில் வரும் குத்து, டூயட்,சோகப் பாடல்களோ, சென்னையில் நடக்கும் படத்துக்கு நியூசிலாந்து சென்று ஆடிவரும் பாடல் காட்சியோ!!!, 

சென்னையில் கைது செய்யப்படும் கதாநாயகன் போலீஸ் வண்டியில் இருந்து தப்பி, திடீரென காட்டுக்குள் ஓடி குற்றால அருவியில் இருந்து குதிக்கும் காட்சியோ இல்லாத, டாக்மி-95 கோட்பாடுகளின் படி எடுத்த படம். இது பற்றி மேலும் படிக்க இங்கே செல்லவும், இதை தமிழில் மொழிபெயர்த்து இங்கே எழுதினால் ஜெயமோகன் போன்ற அசிடிட்டி பிடித்த ஆட்கள் விக்கியில் இருந்து உருவி உலகசினிமா எழுதுகிறோம் என்பார்கள். கேட்டால் அங்கதம் என்று மழுப்புவார்கள். தமிழில் எழுதுவதை பெருமையாக கருதி எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பூ எழுத்தாளர்களை பாராட்டாவிட்டாலும் குத்திக்குதறாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது ஜெயமோகன். ஹாலிவுட் பாலாவும் ஏற்கனவே இரண்டு டாக்மி-95 படங்கள் பற்றி எழுதியுள்ளார்,அவரின் இந்த இரண்டு பதிவுகள் உங்களுக்கு உபயோகமாயிருக்கும்.
ஆண்ட்டி க்ரைஸ்ட்
ஆல் அபவ்ட் அன்னா
=====0000=====
படத்தின் கதை:-
பாரம்பரியமாக வீட்டுடன் கூடிய சிறிய நட்சத்திர ஹோட்டல் நடத்திவரும்  60வயது ஹெல்ஜ், ஒரு பசும்தோல் போர்த்திய புலி, இவரின் 60 ஆம் பிறந்த நாள் விழாவை  மனைவி எல்ஸ் விமரிசையாக எடுத்து  நடத்த திட்டமிடுகிறாள், செல்ல மகள் ஹெலன் தன் கறுப்பிண காதலனுடன் வருகிறாள்.

பிழைப்புக்காக பிரிந்து பாரீஸ் போய் உணவகம் வைத்திருக்கும் மூத்த மகன் க்ரிஸ்டியன், இளைய மகன் மைக்கேல்,மைக்கேலின் மனைவி மக்கள், சுற்றம், உற்றார் உறவினர் எல்லோரும் ஹோட்டலில் குழுமுகின்றனர்,அந்த ஹோட்டலின் எல்லா அறைகளுமே வந்த விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டு நிரம்பி வழிகின்றன.

பிறந்த நாள் விழா அன்று உணவு மேசையில் இவரது மூத்த மகன் க்ரிஸ்டியன் டோஸ்ட் என்னும் உணவு நேர முன்னுரை வழங்க, |Here's to the man who killed my sister... to a murderer.| என தொடங்கி அவன் பேசியது கேட்டு எல்லோரும் திடுக்குறுகின்றனர். அவன் அப்பா மட்டும் அங்கே கூசிக்குறுகிப்போகிறார். அது ஏன்?

ஹெல்ஜுக்கு அழகிய மனைவி எல்ஸ் வாழ்க்கை துணையாக அமைந்தும், அழகிய நான்கு பிள்ளைகள் பிறந்தும், இன்செஸ்ட் என்னும் மிருக குணம் தலைதூக்க, இவர் மூத்த மகனையும், அவனின் இரட்டைபிறவியான தங்கையையும் அவர்களின் சிறு பிராயத்திலிருந்தே தன் காம இச்சை தீர்க்க பயன்படுத்தி வந்திருக்கிறார்.

பிள்ளைகள் முன் நிர்வாணமாக தோன்ற ஆரம்பித்தவர், ஒரு கட்டத்தில் மகள் குளிக்கையில் , உடைமாற்றுகையில் அவளை அடித்து துன்புறுத்தி வன்புணர்ச்சி செய்தும் வந்திருக்கிறார். மூத்த மகனையும் வாய்புணர்ச்சியும், குதப்புணர்ச்சியும் செய்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த கொடிய நரகத்திலிருந்து தப்பிய மூத்த மகன் க்ரிஸ்டியன் வெளியூருக்கு தப்பி ஓடி, அப்பாவின் முகத்திலேயே விழிக்கப்பிடிக்காமல் இருந்தவன், சமீபத்தில்  ஹோட்டல் அறையிலேயே தூக்கு மாட்டி இறந்து போன சகோதரி லிண்டாவின்  இறுதி ஊர்வலத்துக்கும் வந்திருக்கிறான் . 

ப்பாவின் மேல் தீராத வன்மத்துடன் இருக்கிறான். அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவன் சகோதரி லிண்டாவின் அறையை சோதிக்க, அவளின் தற்கொலை குறிப்பு கடிதம் கிடைக்கிறது,அதில்  சிறுவயதில் தான் அனுபவித்த அப்பாவின் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் இப்போது தாம் காணும் கனவுகளிலும் தொடர்வதால் தாம் இந்த முடிவுக்கு வந்ததாக சொல்லியிருக்க, இன்னோரு சகோதரி ஹெலனையும் அழைத்து கடிதத்தை காட்டி அப்பாவின் சுயரூபத்தை புரியவைக்கிறான்.

ப்போது உணவு மேசையில் அப்பாவின் மீது குற்றங்களை அடுக்கியவன், செய்த தவறுக்கு உறவினர் நண்பர்கள் முன் மன்னிப்பு கேட்குமாறு சொல்ல,உறவினர்கள் இதை கேட்டு முனுமுனுக்கின்றனர். இதை ஒரு மனம் பிழறியவனின் ஹாஸ்யமோ?!!, இவனுக்கு  கலாச்சார சீர்கேடு ஏதும் நிகழ்ந்திருக்குமோ ? என்றும் குழம்புகின்றனர். க்ரிஸ்டியனின் அம்மா எல்ஸ்  , அதை வன்மையாக மறுக்கிறாள், கண்டிக்கிறாள். அப்பாவுக்கு சார்பு நிலையாய் இருக்கிறாள், ஆனால் க்ரிஸ்டியன் விடுவதாயில்லை, அம்மாவையும் அப்பாவின் கைப்பாவை என்கிறான். அப்பாவின் தவறுகளை கண்டும் காணாமல்  இருந்த ஒரு ஜென்மம் என்று சபையினர்  முன் அவளை சாடுகிறான். 

ணவுமேசையில் இதையெல்லாம் கேட்டு கொதித்த மைக்கேல்,அண்ணனை ஹோட்டல் பணியாளர்களுடன் சேர்ந்து குண்டுகட்டாக தூக்கி சென்று,ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருக்கும் தோப்பில்,ஒரு மரத்துடன் கட்டிவைத்து விட்டு வருகிறான்.ஆனால் சிறிது நேரத்தில் க்ரிஸ்டியன் உள்ளே வந்தும் விடுகிறான், மீண்டும் விட்ட இடத்திலிருந்து அப்பாவை நோண்டி நுங்கெடுத்து மன்னிப்பு கேட்டே தீரவேண்டும் என்கிறான்.

னால் அப்பாவோ கல்லுளிமங்கன் கணக்காய் இடித்தபுளி போல அமர்ந்திருக்கிறார், அவருக்கு இன்று நாளே சரியில்லை என புரிகிறது, விருந்தும் டோஸ்ட் இல்லாமலே ஆரம்பிக்க சொல்கிறார். நடப்பவற்றை எல்லாம் ஆரவமாக ஒலிபெருக்கியில் ஹோட்டல் சமையலறை பணியாளர்களும் மேலேயிருந்து கேட்கின்றனர். 

முதலாளியின் சுயரூபம் எல்லோரும் அறிந்தமையால் முதலாளி மன்னிப்பு கேட்கப்போவதை கேட்டுவிட்டு வேலையைப்பார்க்கலாம் என காதை தீட்டுகின்றனர். க்ரிஸ்டியனின் மேல் தீராக்காதல் கொண்ட சமையல் காரப்பெண் பியாவும் அவனுக்கு துணை நிற்கிறாள்.

டக்கும் சச்சரவால் உறவினர்கள் இரவு உணவு முடிந்து வீடுகளுக்கு திரும்பி விடக்கூடாது, ஹெல்ஜ் மன்னிப்பு கேட்பதை, கூனிக்குறுகுவதை பார்த்துவிட்டே போக வேண்டும் என்று எண்ணிய பணியாளர்கள், எல்லோரின் அறைக்குள்ளும் க்ரிஸ்டியன் தலைமையில் சென்று கார் சாவிகளை கைப்பற்றி அதை குளிர்சாதன பெட்டிக்குள்ளும் ஒளித்தும் வைக்கின்றனர். 

வ்வளவு நடந்தும் மைக்கேல் மட்டும் அப்பாவின் மீது மிகவும் மரியாதையுடன் இருக்கிறான். அண்ணன் க்ரிஸ்டியனின் பிரச்சனையை திசை திருப்பி நீர்த்துப்போகச்செய்யும் விதமாக சகோதரி ஹெலனின் கறுப்பின காதலன் க்பாடகாயை மைக்கேல் கேலி செய்கிறான், அங்கே குழுமியிருந்த உறவினர்கள் அனைவருடனும் சேர்ந்து i saw a real  black sambo என்னும் நிறவெறிப் பாடலை அதீத நிறவெறி தெரிக்க பீங்கான் தட்டுகள்,கண்ணாடி கோப்பைகளில் தாளம் எழுப்பி பாடவும், ஆரம்பிக்கிறான்.சகோதரி ஹெலன் கொதித்து தன் காதலனுடன் வெளியேறுகிறாள்.

இனி என்ன ஆகும்?
1.அப்பா ஹெல்ஜ் சபையினரிடமும் பிள்ளைகளிடமும் மன்னிப்பு கேட்டாரா?
2.மகன் மைக்கேல் அப்பாவை குற்றவாளி என உணரந்தானா?
3,மகன் மைக்கேல் நிறவெறி விட்டானா?சகோதரியின் காதலனிடம் மன்னிப்பு கேட்டானா?
4.க்ரிஸ்டியன் அப்பாவை மன்னித்தானா?காதலி பியாவை கைபிடித்தானா? 

போன்றவற்றை பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் டிவிடி வாங்கி பாருங்கள், உலகசினிமா காதலர்கள் வாழ்வில் நிச்சயம் காணவேண்டிய படம். முழுநிர்வாணமான உடலுறவு காட்சிகள், மற்றும் பாலியல் வார்த்தை பிரயோகங்கள்  உள்ளதால் நிச்சயம் சிறுவருக்கான படம் அல்ல.படத்தில் குறைகளும் உண்டு இருந்தாலும்,மிகக்குறைந்த செலவில் பரீட்சார்த்தமான முயற்சிக்கு பிள்ளையார் சுழியிட்டிருப்பதால் பெரிதாகத்தோன்றவில்லை. 

தாமஸ் விண்டர் பர்கின் இயக்கம் மிகவும் நேர்த்தி, டாக்மி95 கோட்பாடுகள் நம்மை பெரிதும் கவருகின்றன, இது வரை இக்கோட்பாடுகளை பின்பற்றி சுமார் 38 படங்கள் வந்திருக்கின்றனவாம், இயக்குனர் பெயர் படத்தின் துவக்கத்திலோ அல்லது முடிவிலோ போடக்கூடாது என்பது முக்கியவிதியாகும். என்ன? a film by :-போடாமல் தமிழ் படமா? நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்னால்.:))
 =====0000=====
படத்தின் முன்னோட்ட சலனப்படம் யூட்யூபிலிருந்து:-


படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Thomas Vinterberg
Produced by Birgitte Hald
Morten Kaufmann
Written by Thomas Vinterberg
Mogens Rukov
Starring Ulrich Thomsen
Henning Moritzen
Thomas Bo Larsen
Paprika Steen
Birthe Neumann
Trine Dyrholm
Music by Lars Bo Jensen
Editing by Valdís Óskarsdóttir


Release date(s) May 1998
Running time 105 minutes
Country Denmark =====0000=====

ஆப்பிள் ஐபேடின் விரல் ஓவியங்கள்-இனி கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

ண்பர்களே!!!ஆப்பிள் ஐபேட் 3Gஐ முதலில் அமீரகத்தின் கடைகளில் பார்த்தபோது,என்னடா இது? பெரிய சைஸ் ஐபோன் போலவே இருக்கு?!!!,இதை எப்படி சுலபமாக தூக்கிக்கொண்டு போவது?,லேப்டாப்புக்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?!!!,எல்லாம் ஒன்று தான், எதற்கு இதைபோய் இவ்வளவு விலைகொடுத்து வாங்குகிறார்கள்?!!! என வியந்தேன்,

ன் பக்கத்து சீட் ஆர்கிடெக்ட் நண்பர் தன் ஐபோனில் அடிக்கடி ஒற்றை விரலில் கோலம் போட்டு கருப்பு வெள்ளை சார்கோல் ஓவியங்கள் வரைவார், அவ்வளவு அழகான ஓவியங்கள், மிகச்சுலபமாக வரைவார், மிகத்துல்லியமான டெக்‌ஷர்களுடன் கூடிய பலன்கள் கிடைக்கும்.அதை ப்ரிண்டும் எடுப்பார்,ஸ்க்ரீன் சேவரும் போட்டுக்கொள்வார். பார்க்க பென் அண்ட் இங்க் ரெண்டரிங் போலவும் இருக்கும். அவ்வளவு சிறிய சிங்கிள் டச் கொண்ட ஐபோனிலேயே ஒருவர் வீடுகட்டி விளையாடினால்?!!!

தைவிட 8மடங்கு பெரிய A4 சைஸ் கொண்ட,மல்டி டச் கொண்ட  ஐபேடில்?!!! சொல்லவே வேண்டாம்,  இயற்கையான ஓவியத்திறமை கலைரசனை, நிறைய கற்பனைவளம், வண்ணத்தெரிவுத்திறன் மட்டும் உங்களுக்கு இருந்தால் இதுவே உங்கள் களம், பத்து விரல்கள் கொண்டு வண்ணங்களை தொட்டு, ச்சும்மா அதிரவைக்கலாம். பாருங்கள் ஒரு கேன்வாஸில், குழைக்கப்பட்ட வண்ணங்கள் கொண்டு செய்யும் வேலையை,!!!அதே ஓவியர் இதில் சரளமாக செய்வதை.பழகிவிட்டால் சொன்ன சொல் கேட்கும் இதை கேன்வாஸை மாட்டுவது போலவே மாட்டிக்கொள்கின்றனர்.

இங்கே கீழே கொடுக்கப்பட்ட ஓவியங்களே அதற்கு சாட்சி!!!, இப்போது ஒன்று புரிகிறது எப்படி மலிவான வின்டோஸ் வகை கோலோச்சும் சந்தையில் மாக் தாக்குபிடிக்கிறது என்று?!!!.இந்த ஐபேடில் ப்ரஷஸ்2.1 என்னும் மென்பொருளை நிறுவிவிட்டால் மாயாஜாலம் செய்யலாமாம்,ஐபேடை கொண்டே நியூயார்க்கர் பத்திரிக்கைக்கு முன் அட்டையும் வடிமமைத்துள்ளனர்.

ப்போதுமே விண்டோஸ் என்பது மெயின்ஸ்ட்ரீம் சினிமா போலவும்[பெரும்பானோர் தேர்வு],  மாசிண்டோஷ் என்பது பேரலல் சினிமா போலவும் [கலை ரசிகர்களின் தேர்வு] இருந்து வந்திருக்கிறது, நிறைய படைப்பாளி நண்பர்கள் மாசிண்டோஷ் என்னும் மாக் பிஸியில் தான் படைப்பு வேலைகளை செய்கின்றனர். நம் அமீரக பதிவர் கோபிநாத்தும் மாக் பிஸி உபயோகிக்கும் படைப்பாளியே , அவர் வடிவமைப்பது வங்கிகளுக்கான க்ரெடிட்கார்டு டிசைன்கள்,போட்டோஷாப்பில் செய்யமுடியாத பல வித வித்தைகளை இதில் சுலபமாக செய்யமுடிவதும் ஒரு காரணம்,உங்களுக்கு தெரிந்த ப்ரொஃபெஷனல் போட்டோகிராபர்களை கேட்டுபாருங்கள், கதைகதையாக சொல்லுவார்கள். பழகிவிட்டால் மாக் ஒரு குழந்தை விளையாட்டு.இதில் திரையில் காணும் நிறமும் ப்ரிண்ட் எடுக்கும் போது வரும் நிறமும் ஒன்றாய் இருக்கும்.இதில் கதை கவிதை,கட்டுரை,பதிவுகள் எழுதலாம், படங்கள் பார்க்கலாம்,இசைகேட்கலாம்,கார் ஓட்டுகையில் வழிகாட்டி மேப் பார்க்கலாம்,இதில் ஓவியங்கள் தவிர ப்ரெசெண்டேஷன்கள், ப்ராஜக்ட் சார்டுகள்,தயாரிக்க முடியும்.
=========0000==========
இது ப்ரூக்ளின் ஓவியர் டேவிட் ஜோன் கசன்னின் டெமோ காணொளி:-

=========0000==========
னக்கும் இந்த உலகின் ஐபேட் ஓவியர்களின் படைப்பை பார்த்தவுடன் விரைவில் ஒரு ஐபேட் வாங்க ஆசைவந்துவிட்டது. இதில் ஆயில் பெயிண்ட்டிங். வாட்டர்கலர், எல்லாவிதமான டெக்‌ஷர் பெயிண்டிங், என எளிதாய் வரையமுடியும், இதிலேயே நாமிருக்கும் துறைக்கு ப்ரெசெண்டேஷனும் செய்யமுடிகிறது ஓவியர்கள், டிஜிட்டல் பேனர் துறையினர்.விளம்பர வடிவமைப்பாளர்கள், ப்ராடக்ட் டிசைனர்கள்.  கட்டிடக்கலை வல்லுனர்கள், நகைவடிவமைப்பாளர்கள் , ஆடை வடிவமைப்பாளர்கள், ஸ்டோரிபோர்டு வரைவாளர்கள்,  திரைப்பட இயக்குனர்கள், என அனைவரிடமும் இருக்கவேண்டிய ஒரு வஸ்து,


தயவுசெய்து இதையும் சாதாரண நோட்புக், நெட்புக்கையும் ஒப்பிடாதீர்கள், இதில் உள்ள துல்லியமும், நகாசுவேலையும் அதில் அவ்வளவு எளிதில் கிடைக்காது.இதைப்பற்றி மேலும் படிக்க ஆப்பிள் தளத்தின் சுட்டி. தல ஹாலிவுட் பாலா இதைப்பற்றி ஒரு ஆய்வு செய்து தொழில்நுட்ப பதிவு ஒன்று எழுதினால் கோடிபுண்ணியம் உண்டாகும்.இது சத்தியமாக ஆப்பிள் ஐபேட் விளம்பரமல்ல!!!இங்கே கொடுத்துள்ள ஓவியங்களின் புகழும் பெருமையும் வரைந்த ஓவியர்களையே சேரும்.
=========0000==========
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)