நண்பர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நண்பர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்,இந்த தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த தினமாக அமையட்டும்

மைக்கேல் மதன காமராஜன் [1990] வெள்ளி விழா கொண்டாட்டம்



பெருமைமிகு தமிழ் சினிமா வரலாற்றில் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்துக்கு மிக முக்கியமான பங்குண்டு.இப்படம் கொண்டிருக்கும் சிறப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல,அவற்றை பட்டியல் இட்டு முடிப்பது எளிதும் அல்ல.நான் எத்தனையோ முறை இப்படத்தை 25 வருடங்களில் பல வயதுகளில் அதன் கண்ணோட்டத்தில் பார்த்திருந்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கையிலும் எனக்கு அது ஃப்ரெஷ்ஷாக இருக்கும், ஏதாவது புதிதாக புலப்படும்,அவ்வப்போது அவற்றை இங்கே அப்டேட் செய்ய முயற்சிக்கிறேன்.

இந்திய சினிமாவில் மைக்கேல் மதனகாமராஜன்[1990] படத்தில் தான் முதன் முதலாக ஆப்பிள் லேப்டாப் காட்டப்பட்டது என்னும் பெருமையையும் கமல்ஹாசன் தான் தக்க வைத்திருக்கிறார் இம்மாடல் 1989 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரிலீசாகியுள்ளது,

பென்ஸ் காரில் நாகேஷுடன் தன் மதன் மெஹல் [அப்படித்தான் ஸ்டைலாக சொல்லுவார்]செல்லும் போது அவினாஷி தன் அப்பாவிடம் கையாடிய 25 லட்சத்தை இதில் தான் கணக்குப் பார்த்து அவருக்கு கிடுக்கிப் பிடி போடுவார்.

கஜினி படத்தில் சூர்யா செய்த பிஸ்னஸ் மேன் வேடம் எல்லாம் மதனகோபால் கதாபாத்திரத்துக்கு முன் ஜுஜூபி என்றால் மிகையில்லை,சிறு குறிப்பு:- ஜுஜூபி என்பது ஒரு பழமாம்,அது இலந்தைப் பழம் போல இருக்கிறது, http://en.wikipedia.org/wiki/Jujube

இன்று வரை காமெடி ஜானரில் தமிழில் இப்படி ஒரு தரமான படம் வரவில்லை என்று அடித்துச் சொல்லலாம்,செம படம் இது, எத்தனை வெரைட்டியான  கதாபாத்திரங்கள் செய்திருப்பார் கமல்ஹாசன், ஒவ்வொருவருக்கும் டூயட் உண்டு [மைக்கேல் தவிர்த்து],குறிப்பாக ஊர்வசியுடன் கமல் பாடும் சுந்தரி நீயும் சுந்தரி ஞானும் பாடல் இந்திய சினிமாவில் முதன் முதலாக படமாக்கப்பட்ட முழுநீள ஸ்லோமோஷன்  பாடலாகும், இதற்கு நேர்மாறாக மிக வேகமான பாணியில் கதைகேளு,கதைகேளு என்னும் ஐந்தே நிமிட ஆரம்பப் பாடலில் நால்வர் பிறப்பும் சகோதரர்களின் பிரிவும் விவரிக்கப் பட்டிருக்கும்,

அப்பாடலில் ஃப்ளாஷ்பேக் காட்சியை கதைகேளு பாடலுக்குள் நறுக்கென்ற பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளுக்குள் அடக்க வேண்டி,ஃபாஸ்ட் ஃபார்வர்ட் யுத்தியிலும் [16 frame per second] ,கருப்பு வெள்ளையிலும் படம் பிடித்திருப்பார்கள்.

இளையராஜாவின் அளவில்லா எக்ஸ்பெரிமென்ட்களில் முக்கியமான படம் இது,அவரே பாடிய கதைகேளு கதைகேளு ,மலேசியா வாசுதேவன் பாடிய பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம், மனோ பாடிய சிவராத்திரி தூக்கமேது போன்ற சிச்சுவேஷன் பாடல்களையும் எஸ்பிபி பாடிய ரம்பம் ஆரம்பம் , போன்ற டான்ஸ் நம்பரையும், கமல்ஹாசனை பாலக்காட்டு தமிழில் திறம்பட பாடவைத்த  சுந்தரி நீயும் பாடல்களையும் மிகுந்த லாவகமாக   உருவாக்கியதைக் கவனியுங்கள்,எந்த பாடலும் வீணில்லை,கதையுடன் பயணிப்பவை.

இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் [இப்பொது 82 வயது], பல திறமைகளை தன்னுள் கொண்ட அஷ்டாவதானி,தேர்ந்த ஒளிப்பதிவாளரும் கூட,அவர் தெலுங்கில் இயக்காத ஜானர் படங்களே இல்லை,அவர் இயக்கிய புஷ்பக் [பேசும் படம்] இன்றளவில் இந்திய சினிமாவின் முக்கிய சாதனை,அதன் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு அளிக்கப்பட்ட இயக்குனர் வாய்ப்பு இப்படம்,இதிலும் கமல்ஹாசனின் தலையீடு இல்லாமல் இருக்குமா என்ன?படம் டைட்டில் போட்டு முடித்தவுடன்,மதன் கமலின் போட்டோ சுவற்றில் மாட்டப்படும்,அங்கே இயக்கம் என்று சிங்கீதம் சீனிவாசராவின் பெயர் போடுவார்கள்,அது கமல்ஹாசன் இயக்கத்தில் அளித்த பங்கை சூசகமாக நமக்கு விளக்கிவிடும்.

படத்தில் சிங்கீதம் சீனிவாசராவ் ஃப்லிம் சுருளுக்குள் இருந்து முதலில் தோன்றி கதைகேளு பாடலில் கதை சொல்வார்,அவர் அங்கே கொண்டுவரும் கருவியின் பெயர் கைனடாஸ்கோப் http://en.wikipedia.org/wiki/Kinetoscope ,அதில் நாம் சிறுவயதில் நிச்சயம் நம் பள்ளிவாசலிலோ,வீட்டின் தெருக்களிலோ 25 காசு கொடுத்து படம் பார்த்திருப்போம்,நான் அதில் சார்லி சாப்ளின் படம் ஏதோ ஒன்று ஐந்து நிமிடம் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது,

படத்தில் ஒவ்வொரு கமல்ஹாசனுக்கும் தனித்தன்மையுடன் கூடிய தீம் இசை உண்டு, பாடல்கள் எதுவுமே இடைச்செருகல் போலத் தோன்றாது,என பல சிறப்புகள் உண்டு. படத்தின் அதிரடிப் பட்டாசு போன்ற காமெடி வசனங்களை திரைக்கதையை கிரகித்து உள்வாங்கி எழுதியது கிரேசி மோகன் , இவர் மளிகைக் கடைக்காரராக கேமியோ ரோலும் செய்திருப்பார்.இவர்  பாலக்காட்டு காமேஸ்வரனுக்கு எழுதிய வசனங்கள் தத்ரூபமாக இருக்கும்,எல்லா க்ளாஸ் ஆடியன்ஸுக்கும்  புரிய வேண்டும் என்னும் சமரசம் எதுவும் செய்யப்பட்டிருக்காது,உதாரணமாக இறுதிக்காட்சியில் குஷ்பு சுடும் இரட்டைக்குழல் துப்பாக்கியை காமேஸ்வரன் தோக்கு[மலையாளத்தில் துப்பாக்கி] என்றே சொல்வார்.அதே போன்றே ஷமிக்கனும்,[மன்னிக்கனும்] பெகளம்[சண்டை] என நிறைய சொல்லலாம்.



படத்தில் வரும் நடிகர் நாகேஷின் அவினாசி என்னும் ஃப்ராடு மேனேஜர் கதாபாத்திரம் மிகவும் தத்ரூபமானது,படம் முழுக்கவே வரும் கதாபாத்திரம்.  எட்டு பெண்களின் தந்தை, எட்டு பேர்களுக்கும் எட்டு லட்சுமிகளின் பெயர் இட்டிருப்பார், அதில் இருவருக்கு மட்டுமே மணம் முடித்திருப்பார்,

மீதம் ஆறு பேருக்கு மணமுடிக்க வேண்டிய பொருப்பு, இளம் முதலாளி மதன் இவரது 25 லட்ச ரூபாய் மோசடியைக் கண்டறிந்த குற்ற உணர்வு, தேவைப்படுகையில் சுய எள்ளல் , பச்சாதாபம்,தன் மூன்றாம் பெண்ணின் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிடக்கூடாதே என்கிற பயம், ஒரு மோசடியை மறைக்க அவர் மேலும் மேலும் செய்து கொண்டே போகும் மோசடிகள் என அறபுதமாய் செதுக்கப்பட்ட ஸீன் ஸ்டீலிங் கதாபாத்திரம், ஆனாலும் வழக்கம் போலவே  எந்த விருதுகளும் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டார் நாகேஷ்.

அன்றைய திருமணங்களில் புழங்கிய வரதட்சனை மாப்பிள்ளை முறுக்கு இத்யாதிகள் சிறிது நேரமே வந்தாலும் டீடெய்லாக வரும், மதன் அவரைப் பார்க்க சகியாமல் பீமை விட்டு  வெளியே தூக்கி எறிந்தால் கூட திரும்பத் திரும்ப வந்து இழையும் குழையும் ஓவர் கானஃபிடனஸ் , மேனேஜர் கதாபாத்திரத்தை அவரைத் தவிர இத்தனை இலகுவாய் யாராலும் செய்திருக்க முடியாது

நடிகை மனோரமா இப்படத்தில் ஜமுனாபாய் என்னும் ஆணால் வஞ்சிக்கப்பட்டு மகளுடன் தனித்து வாழும் ஒரு நாடக நடிகையாக வாழ்ந்திருப்பார்,அவரின் மகள் ஜக்குபாயாக ரூபினி, வயிற்றுப்பிழைப்புக்காக அவர்கள் நிஜ வாழ்வில் மதனிடம் நடிக்கப் போக அவரால் பாதுகாப்பு வேண்டி தன் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கப்படுவர்.அங்கே மனோரமா தான் பட்ட வாழ்க்கை அனுபவங்களால் பாடம் கற்றவர்,தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரப் போராடும் ஒரு சந்தர்ப்பவாதியாக உருவெடுப்பார்.


ஒரு கட்டத்தில் பெற்ற மகளையே பக்குவமாகத் தயார்படுத்தி மதனுக்கு கூட்டித்தருவார்,எத்தனை வக்கிரமான விஷயம் அது ,அதை அழகாக  டைல்யூட் செய்து சிவராத்திரி தூக்கமேது என்னும் பாடலாக வைத்து வெற்றி பெற்றிருப்பார் கமல் ஹாசன்,இப்பாடலால் படத்துக்கு அட்டகாசமான ரொமான்ஸ் நம்பரும் கிடைத்தது,பாடலில் மனோரமாவின் வித்தியாசமான அவல நகைச்சுவை நடிப்பும் டான்ஸ் மூவ்மென்டும் மிகவும் சிலாகிக்கப்பட்டது, பாடலின் இறுதியில் ரூபினியை துகிலுரிந்தே விடுவார் கமல்ஹாசன், அதைப் படமாக்கி முடித்தவுடன் முழுதாகப் பார்த்து அதிர்ந்த மனோரமா,மிகவும் நெக்குருகி நல்லா இல்லையேப்பா,என் பெயரை டேமேஜ் செய்துவிடுமே என மிகவும் கவலைப்பட, கமல் புரிந்து கொண்டவர் மெனக்கெட்டு மீண்டும் எடுத்த பாடல் தான் இப்போது இருக்கும் பாடலாம். அப்படியென்றால் ஒரிஜினல் எப்படி இருந்திருக்கும்?

 படத்தில் நாசர் கதாபாத்திரம் காமெடியானது என்றாலும் ஆபத்தான வில்லன் கதாபாத்திரம் அது,பங்காளிச் சண்டையில் அப்பாவை கொலை செய்து விட்டு சகோதரனையும் போட்டுத்தள்ள தகிடு தத்தங்களை சத்தமின்றி பின் நின்று செய்யும் கதாபாத்திரம்.நாகேஷ் வந்து துப்பு தருகையில் அதில் சுவாரஸ்யம் காட்டாமல் திருப்ப அனுப்பும் காட்சி ஒன்றே அதற்குச் சான்று.

இதில் சாம்பாரில் மீன் விழும் [கருவாடு] காமெடி எத்தனை பிரசித்தி பெற்றதோ?,அதே போன்றே பின்னாளில் சிங்காரவேலன் படத்தின் கருவாடு காமெடியும் மிகவும் பேசப்பட்டது.

இதில் மதனகோபால் கதாபாத்திரம் வளர்ப்பால் ஹைலி எஜுக்கேட்டட், சோஃபிஸ்டிக் என்பதால் அவர் லாஜிக்காக அடியாட்களுடன் சண்டை போட மாட்டார், அந்த சர்ச் காட்சிக்கு பின்னர் வரும் டாய்லெட் சண்டைக்காட்சியை கவனித்தால் புரியும்.அதிலும் ஒரு டாய்லெட் காட்சியில் மதன் தன் கால்களை சுவற்றில் அழுத்தி, மனோரமாவையும்,ரூபினியையும் தன் கால்களின் மீது அமர்த்தியபடி தாங்குவார்.அது மட்டும் சிறு விதிவிலக்கு.

மதன் சிறுவயது முதலே மூளையால் பலசாலி,அதனால் தான் அவரின் சிறு வயது முதலே அவருக்கு உற்ற துணையாக உடல்ரீதியான பலசாலியாகிய பீம் [Praveen kumar Sobti] http://en.wikipedia.org/wiki/Praveen_Kumar_%28actor%29

உடன் இருப்பார்,

இதை கடைசிக் காட்சியில் மதனின் அப்பா [ ஆர்.என்.கிருஷ்ணபிரசாத்] பீமைப் பார்த்து என்னடா பீம்கண்ணா இப்படி இளைச்சுப் போயிட்டே? என்று சொல்லுகையில் உணரலாம்.[அப்போது தூர்தர்ஷனில் 1988ல் வெளியான மஹாபாரதம் பீமன் கதாபாத்திரத்தில் இவரைப் பார்த்துவிட்டு மிகவும் பிடித்ததால் கமல் இதில் அவரை நடிக்க வைத்தார்.]இதில் தூர்தர்ஷனையும் கமல் சந்தடிசாக்கில் கலாய்திருப்பார்.பீம் தூர்தர்ஷன் பார்க்கிறேன் என மதனிடம் சொல்கையில் முகத்தை கோணுவாரே பார்க்க வேண்டும்.

படத்தில் அப்பாவாக வந்த ஆர்.என்.கிருஷ்ணபிரசாத் கன்னட சினிமாவின் முக்கியமான கேமராமேன்,அவரின் பேராசைக்கார தம்பியாக நடித்த ஆர்.என்.ஜெயகோபால் அவரின் தம்பியும் ஆவார்.

அதே போன்றே படத்தில் மைக்கேலின் வளர்ப்பு அப்பாவான சந்தான பாரதியும்  படத்தில்  கூலிப்படை புரோக்கராக வரும் ஆர்.எஸ்.சிவாஜியும் அண்ணன் தம்பி கூட்டணி,என்பதும் மற்றொரு ஒற்றுமை.

மேலும் கமலுடன் ஐந்து  வருடங்களுக்கு  முன்னர் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் கிளுகிளுப்பாக நெருங்கி நடித்த ஜெயபாரதி,பின்னாளில் 4 கமல்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டிவரும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இதிலும் எத்தனை டல் மேக்கப் போட்டாலும்,அவரின் சொச்ச இளமையை மறைக்க முயன்று தோற்றது தெரியும்.

படத்தில்  ஆபத்தான சாகசங்களை செய்யவே ராஜு கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும், அத்தனை ரியாலிட்டியாக அமைந்திருக்கும் அந்த 7 நிமிட டாய்லெட் சண்டைக் காட்சி.அதில் நெத்தியடி,மூக்கில் வெத்திலை பாக்கு போடுதல்,கிடுக்கிப்பிடி சண்டை,என தூள் செய்திருப்பார்,கத்தி சண்டையும் இருக்கும்,சீரியஸாக துவங்கும் சண்டை மதன் ராஜுவுக்கு சண்டை போட வாளை எறிகையில் காமெடி சண்டையாக உருமாருவதைப் பார்ப்போம். அதே போன்றே ஶ்ரீலேகா ஹோட்டல் தீயணைப்புக் காட்சி, பெங்களூர் ஹைவேயில் காண்டெஸாவின் ப்ரேக் லைனிங்கை ராஜு கமல் கார் ஓடுகையிலேயே எக்கி சரி செய்யும் காட்சியையும் குறிப்பிட வேண்டும்.

படத்தில் வரும் பட்டாணி ஃபைனான்ஸியர் போன்ற ஆட்கள் 90 வரை அதே போன்றே உடை அணிந்து கையில் கோலுடன் திரிந்தனர்.இப்போது அவர்களை சென்னையில் காண்பது மிக அரிது,கமலின் வாட்சைப் பார்த்து ஐ ரோலக்ஸ் வாட்சு என்பார், மதன் அவரிடம் its may Dad Gift என்பார், [ரோலக்ஸ் போன்ற உட்ச விலை வாட்ச்களை பரம்பரை பரம்பரையாக சீதனமாக வழங்குவதைக்கூட மிக அழகாக கமல் உள்வாங்கி சின்ன வசனத்தில் சேர்த்திருப்பார்] படத்தில் கமலின் மானசீக சினிமா குருவான அனந்துவும் ஒரு கதாபாத்திரம் செய்திருக்கிறார் ,நாகேஷ் தன் மூன்றாம் மகளுக்குப் பார்த்த வரனின் அப்பா ,ஹார்ட் பேஷன்டாக வருபவர் தான் அனந்து,அவருக்குத் தர இருந்த 6லட்சம் தான் ராஜுவினால் கைப்பற்றப்படும்.

அதே போல படத்தில் கமல்ஹாசனின் frequent colabarator  ஆன எஸ்.என்.லட்சுமி பாட்டியை அவசியம் குறிப்பிட வேண்டும்,மனோரமாவைப் போலவே ஆதரவற்ற நிலையால் சந்தர்ப்பவாதியாக மாறி அப்பாவி காமேஸ்வரனை மருமகனாக வரிக்கும் கதாபாத்திரம்,  ஊர்வசியின் திருட்டுப்பாட்டியாக அதகளம் செய்திருப்பார்,அருமையாக பாலக்காடு பிராமண பொல்லாத்தனம் கொண்ட அத்தைப் பாட்டியாகவே அவர் உருமாறியிருப்பார்.குஷ்பூவைப் பார்த்து அவர் சொல்லும் கருநாக்குத் துக்கிரி என்னும் வசவு மிகவும் புகழ்பெற்றது , http://en.wikipedia.org/wiki/S._N._Lakshmi என்ன அற்புதமான காலம் சென்ற மூத்த நடிகை அவர்? அவர் கமலின் அடுத்தடுத்த படைப்புகளான தேவர் மகன் [பாட்டி] ,  மகாநதி [மாமியார்], விருமாண்டி[பாட்டி] என மிகச் சிறப்பாக பங்காற்றியதை ஒருவர் மறக்க முடியுமா?!!!

காமேஸ்வரனின் வளர்ப்பு அப்பா பாலக்காடு மணிஐயராகவே வாழ்ந்த டெல்லி கணேஷின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, கமல்ஹாசனை விட 10 வயது மூத்தவர்,அவரின் அநேகமான எல்லா படங்களிலுமே இவர்  frequent colabarator என்றே சொல்லலாம்,புன்னகை மன்னன் படத்திலும் கமல்ஹாசனின் குடிகார தந்தையாக நடித்திருப்பார்.இதில் தன் வளர்ப்பு மகன் காமேஸ்வரனுக்காக திருமணமே செய்து கொள்ளாமல்,கண்ணியமாக சமையல் தொழில் செய்யும் ஒரு ஆச்சாரமான பிராமண சமையல்காரர்.

இவரின் கையப் பிடுச்சு இழுத்தியா? டயலாக் நாம் இன்றும் வாழ்வில் ஏதாவது தருணத்தில் கிண்டலாக பயன்படுத்துவோம்,அத்தனை அருமையான கதாபாத்திரம் அவருடையது. இவர் ஹேராம் படத்தில் பைரவ் என்னும் ஒரு தீவிர இந்துத்வா கதாபாத்திரம் ஏற்றிருப்பார்,ஷாரூக்கானை பெரிய சம்மட்டி கொண்டு அடித்து மண்டையை உடைக்கும் பாத்திரம்,அதுவும் நன்கு பேசப்பட்ட கதாபாத்திரம்.

ஃப்ரேமுக்குள் முதலில் ராஜுவும் மதனும் சந்திப்பர்,பின்னர் காமேஸ்வரன் ,அதன் பின்னர் மைக்கேல் என படிப்படியாக ஒரே ஃப்ரேமுக்குள் நான்கு கமலை ப்ரில்லியண்ட்டாக எந்த சந்தேகமும் வராத படிக்கு திரையில் தோன்ற வைத்து எங்கும் ஒட்டுப் போட்டது தெரியாமல் அசத்தியிருப்பார்கள். ஒளிப்பதிவாளர் பி.சி.கெளரிஷங்கரும் எடிட்டர் வாசுவும்.

கடைசி மலை உச்சி வீட்டையும் மினியேச்சர் என சொல்ல முடியாதபடி படமாக்கியிருப்பார் கபீர்லால் என்னும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கேமராமேன், அங்கே டீமின் ஒட்டுமொத்த ப்ரில்லியன்ஸும் வெளிப்பட்டிருக்கும்.

படத்தில் மிகவும் கண்ணியமாக போர்த்தி நடித்த ஊர்வசியின் உடை கூட அங்கே அந்த மரவீட்டில் இருந்து கயிற்றில் இறங்குகையில் வார்ட்ரோப் மால்ஃபங்ஷன் ஆகியிருக்கும்,அதே போலவே ரூபினிக்கும் மிக அதிகமாக வார்ட்ரோப் மால்ஃபங்ஷன் ஆகியிருக்கும்.ஆனால் குஷ்பூ ஜீன்ஸில் இருந்ததால் ரசிகர் ஆர்வக் கண்களில் இருந்து தப்பியிருப்பார்.அவரை பெங்களூர் ஹைவேயில் கார் ப்ரேக் ஃபெயிலியரானதும் ஏரியில் விழச்செய்து நனைத்து விட்டிருப்பார் கமல், அவரின் அழகை மதன் மெஹல் போனதும் நாகேஷிடம் வர்ணிக்கும் இடம் எல்லாம் தூள் பறக்கும்.

இதில் அசைவப் பிரியரான கமல்ஹாசன் சைவ சாப்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தை காமேஸ்வரன் கமல் கடைசியில் சொல்வதாக வைத்திருப்பார்.அந்த மரவீட்டில் இருந்து காமேஸ்வரன் பள்ளத்தாக்கை நோக்கி தொங்கும் வேளையில்,மைக்கேல்,மற்றும் மதன் கமலைப் பார்த்து நான் வெஜிட்டேரியன்,எனக்கு ஏறிவரத் தெம்பில்லை,பாடி வீக்காக்கும், என் மனைவி திரிபு,பாட்டி,வளர்ப்பு அப்பா மணிஐயர் எல்லோரையும் பார்த்துக்கோங்கோ,என சொல்லிவிட்டு விழப்போவார்.ஆனால் கமல் தன்னையும் அறியாமல் பீம் கதாபாத்திரத்தின் மூலம் அவன் சைவம் சாப்பிட்டாலும் பலசாலி என்றிருப்பார். [படத்தில் பீமை ஒரு சைவப் பிரியனாகத் தான் சித்தரிப்பார்]

ஒவ்வொரு கமலுக்கும் அவர் துறை சார்ந்த ஸ்பெஷாலிட்டி வசனங்கள்,சிறு குறிப்புகள் subtle ஆன காமெடி இழையோடக் கொடுத்திருப்பார்,அதில் ராஜு தன்னை ஆள்மாறாட்டத்தின் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தான் ஒரு ஃபைர் என்பதும்,நாகேஷ் திரும்ப கொண்டு வந்து ஒப்படைக்கும் 6 லட்சத்தை வாங்கி பூட்டச் சொல்லுகையில் ஃபைர் ட்ரில்லின் போது பயன்படுத்தும் லெவலா ஃபார்மேஷனா நிக்கனும் என சொல்லி  மிரட்டுவார்,நாகேஷ் ஃபார்மேஷனாவா?என முழிக்கும் இடம் ,ராஜு பீமிடம் வாய்யா பீமு,பாருய்யா தலபாஸ்த்ரி பண்ணிட்டான், என நாகேஷைக் காட்டி சொல்லும் இடம் எல்லாம் பட்டாசாக இருக்கும்.

மேலும் அன்பேவா படத்தில் நாகேஷ் எம்ஜியாரின் வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பார்,அதை இப்படத்தில் நாகேஷிடமே ராஜு கமல் குத்திகாட்டும் இடமெல்லாம் மிக அருமையாக இருக்கும்,அப்போது நாகேஷின் முக பாவனையைக் கவனியுங்கள்.எப்பேற்பட்ட நடிகர் என புரியும்.

காமேஸ்வரன் தான் ஒரு வெஜிட்டேரியன் குக் என்பதை ஆள்மாறாட்டத்தின் போது மதன் மெஹல் சமையல்காரனிடம் வெகுளியாக வெளிப்படுத்துவதும்,என மிக அற்புதமாக சிருஷ்டிக்கப்பட்ட படம்.

படத்தின் திரைக்கதை மட்டுமே கமல்ஹாசன்,படத்தின் மூலக்கதை பாலிவுட்டின் பிரபல கதாசிரியரான காதர் கஷ்மீரி ,இவருக்கு 24 வருடங்கள் கழிந்தும் சம்பள பாக்கியான 11 லட்சத்தை கமல்ஹாசன் தரவில்லை என்னும் வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்து ,நீதிமன்றத்துக்கு வெளியே பேசி முடித்துக் கொள்ளும் படி தீர்ப்பானதாம்,ஆனால் பணம் தந்தாரா எனத் தெரியாது.கஷ்மீரி என்னும் குடும்பப் பெயரை தன் விஸ்வரூபம் படத்திலும் உபயோகித்திருப்பார் கமல்.

http://freepressjournal.in/kader-kashmiris-case-against-kamal-haasan/

மேக் போர்டபிள் லேப்டாப் பற்றி படிக்க

http://en.wikipedia.org/wiki/Macintosh_Portable

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே எனக்கு மிகவும் பிடித்த பாடல் , எக்காலத்துக்கும் பொருந்தும் அற்புதமான பாடல் வரிகள், கே.வி மகாதேவன்  இசையில் மருதகாசி அவர்களின் பாடல் வரிகளை டி எம் எஸ் அவர்கள் பாடியிருப்பார். எம்ஜியார் எத்தனையோ படங்களில் மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் ஓட்டிக்கொண்டு அறிமுகப் பாடல் பாடி வந்தாலும் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தாய்க்குப் பின் தாரம் 1956 ஆம் வருடம் திரைக்கு வந்தது, படத்தை தேவர் தயாரிக்க,அவரது இளைய சகோதரம் எம்.ஏ.திருமுகம் இயக்கினார்,படத்தின் எடிட்டரில் அவரும் ஒருவர். இப்படத்தின் ஒளிப்பதிவு. ஆர்.ஆர்.சந்திரன். எம்ஜியாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். எம்ஜியாருக்கு மிகவும் பிடித்தமானவரும் கூட எனப் படித்தேன்.

1956 ஆம் ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் கிடைத்த உபகரணங்கள் மட்டும் வைத்துக்கொண்டு இப்படி ஒரு அழகான பாடலுக்கு ஒளிப்பதிவு செய்ததைப் பாருங்கள்.இது ஒரே ஷாட்டில் படம் பிடித்த பாடல் இல்லாவிட்டாலும்,அப்படி ஒரு தோற்றத்தை உண்டு செய்திருப்பர் ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.சந்திரனும் படத்தின் எடித்தர் எம்.ஏ.திருமுகமும் , எம்ஜியாரின் துவக்க காலப் படம்,

இப்பாடலைப் படமாக்க கவனமாக தேர்ந்தெடுத்த கிராமப்புற  மண் சாலையைப் பாருங்கள்.வேகமாக ஓடும் மாட்டு வண்டி, நடிகருக்கு மாட்டை கையாளத் தெரிந்தால் தான் இத்தனை நேர்த்தியாக பாடல் வந்திருக்க முடியும்,

எம்ஜியார் வண்டி ஓட்டிக்கொண்டே அட்சர சுத்தமாக பாடலுக்கு வாயும் அசைக்க வேண்டும். அவருக்கு கேமராவில் எத்தனை டைட் க்ளோஸப்   பாருங்கள், அதில் எம்ஜியாரின் எத்தனை ஈடுபாடு எத்தனை சுத்தமான வரிகள் உச்சரிப்பு , முக மலர்ச்சியைப் பாருங்கள்.இந்த எண்ட்ரி காட்சியில் எப்படி விசில் பறந்திருக்க வேண்டும்.

இப்படம் வந்த காலகட்டத்தில் கேமராவில் மைக்ரோ ஸூம்களும், ட்ராலி ஷாட்டுகளும் இந்திய சினிமாவில் அறிமுகமாகவில்லை எனப் படித்தேன்.

பத்லாபூர் திரைப்படத்தில் மிகவும் பிடித்த காட்சி



பத்லாபூர் திரைப்படத்தில் எத்தனையோ காட்சிகள் பிடித்திருந்தாலும்,இந்த கடைசி காட்சி என்னை மிகவும் பாதித்த ஒன்று.

வாழ்வில் திருந்தி வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைக்கப்பெறாத லயாக் [நவாஸுதீன் சித்திக்]தன் அம்மாவிடம் சென்று காலஞ்சென்ற அப்பாவைப் பற்றி ஏதேனும் நல்லது இருந்தால் சொல்லு என்கிறான்,அவளால் எத்தனை முயன்றும் சொல்ல முடியவில்லை.

விடியலில் தீர்க்கமான முடிவுடன் கிளம்பும் லயாக், தான் செய்யாத இரட்டைக்கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டு,அன்று ஓய்வு பெறும் போலீஸ் அதிகாரியிடம் தன் லாவகமான நடிப்பால் அதை நிரூபித்து சரணடைகிறான்.அவருக்கு 15 வருட வழக்கை தன் இறுதிநாளன்று முடித்த பெருமை கிடைக்கிறது,இரட்டைக் கொலைகளை கருணையின்றி செய்தவனுக்கு திருந்தி வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைக்கிறது.

டாக்டர்கள் கணிப்பின் படி அவன் வயிற்றில் இருக்கும் புற்றுநோய் அவனை ஒருவருடத்துக்கு மேல் வாழ விடாது. அதற்கென்று தன் நகைச்சுவையான இயல்பை அவன் விட்டுவிடவில்லை,தன் பேங்காக் கனவு தகர்ந்ததை சிறையில் தன் எதிராளிகள் கிண்டல் செய்வர் என்று அவர்கள் அருகே சென்று பேங்காக் மஜாவாக இருந்தது என்று கூலிங் க்ளாஸை போட்டுக்கொண்டு ஸ்டைலாக போஸ் தருகிறான். அவர்களை எப்போதும் போல கோட்டி செய்து கொண்டே இருக்கிறான்.

சிறையில் 7 மாதங்கள் கழிந்த நிலையில், விடுமுறை நாட்களிலும் கூட தீவிரமாக உழைக்கிறான்,தன் கீமோ தெரபி சிகிச்சையைக் கூட விட்டு விடுகிறான்,4நாட்களில் ஒரு மர நாற்காலி என்று தீவிரமாகவும் நேர்த்தியாகவும் செய்யத் துவங்கி விடுகிறான்.அது சந்தையில் 3000 ரூபாய்க்கு விலை போவதில் மகிழ்ச்சி அடைகிறான்.

தனக்கு வலி இல்லை ,ஆனால் நான்  வலியால் புரண்டு துடித்தால் தான்  சிறை அதிகாரிகள் இரக்கப்பட்டு கஞ்சா தருவதால் அப்படி நடிக்கிறேன் என  தன்னைக் காண வந்து கீமோ சிகிச்சை எடுக்கச் சொல்லும் சமூக சேவகியிடம் [திவ்யா தத்தா] சொல்கிறான்,

அவர் இவனிடம் பேசி பலனில்லை என்றவர் , அவன் செய்யும் அழகான நாற்காலியில் தனக்கும் ஒன்று வேண்டும் அதற்கு தள்ளுபடி தருவாய் தானே என்கிறார்.அவன் தலையசைத்துவிட்டு நாற்காலியை தேய்த்து மெருகேற்றுவது போல காட்சி முடியும்,இந்திய சினிமாவில் மிகவும் ஆக்கபூர்வமான காட்சி இது.

பத்லாபூர் திரைப்படத்தின் சிறைக்காட்சிகள் நாஸிக் சிறை வளாகத்தினுள் சிறப்பு அனுமதி பெற்று படமாக்கப்பட்டன,ஒவ்வொரு ஃப்ரேமிலும் தத்ரூபம் கொண்டுவர மெனக்கெட்டிருப்பார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

பத்லாபூர் படம் பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள்.

பரவை முனியம்மாவுக்கு பரோபகாரிகளின் உதவி


பரவை முனியம்மாவுக்கு சுக்கிர தசை தொடங்கி விட்டது , மக்கள் முதல்வர் இப்போது 6லட்சம் எழுதியிருக்கிறார், மாதம் ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவாராம்.

சினிமாத்துறையில் இப்படி ஒருவரைக் கண்டு கண்டு கொண்டால் போட்டி போட்டுக் கொண்டு கண்டு கொள்வதும் ஒருவரை ஒதுக்கி வைத்தால் போட்டி போட்டுக் கொண்டு ஒதுக்கி வைப்பதும் என்ன மாதிரியான டிசைன்?

சரி கொடுக்கும் உதவியை விளம்பரமின்றி கொடுத்தால் என்ன?

கம்பீரமாக நடந்தவர்களை தாழ்வுணர்ச்சிக்கு தள்ளும் குரூரமான உலகம் என்பது சரியாகத்தான் உள்ளது

அடுத்து ஏழு லட்சம் கொடுக்கப் போகும் பரோபகாரி யார் என ஆவலாக இருக்கிறது!!!

இயக்குனர் ரோமன் பொலஸ்கியின் சோகம்

pedophilia குற்றத்துக்காக அமெரிக்காவால் வன்புணர்வு குற்றவாளியாக நீண்ட காலமாகத் தேடப்பட்டு வரும் இயக்குனர் ரோமன் பொலன்ஸ்கி இப்போது இருப்பது ஃப்ரான்ஸில், 

ரோமன் பொலன்ஸ்கியின் வாழ்க்கை மிகவும் துயரம் மிகுந்ததாகவே இருந்துள்ளது, பால்யத்தில் தன் அன்னையை நாஜிகளின் யூத இனப்படுகொலை முகாமில் பலி கொடுத்தவர், 

தன் காதல் மனைவியும் , எட்டரை மாத கர்ப்பிணியுமான நடிகை sharon tate ஐ mansons family என்ற அமெரிக்க ஸோஸியோபாத் குழுவின் கொலை வெறிக்கு பலி கொடுத்திருக்கிறார், 
the fearless vampire killers (1967)திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர், பொலன்ஸ்கி இப்படத்தின் இயக்குனருமாவார். அங்கே காதல் அரும்பி எளிமையாக மணம் முடித்தனர்,

1969ஆம் வருடம் இந்த கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது , இவர்களுக்கு மணமாகி ஒரு வருடமே முடிந்திருந்தது, பொலன்ஸ்கியின் மனைவிக்கு அப்போது 26 வயது, கோட்டை அரண் போன்ற பெரிய எஸ்டேட் வீடு ஒன்றில் ,பொலன்ஸ்கி லண்டனில் படப்பிடிப்புக்குச் சென்றிருக்கையில் இவரின் மனைவி, அவரின் நண்பர்கள் பணியாளர்கள் என  ஐந்து படுகொலைகள் அங்கே அரங்கேறியுள்ளன, 
அங்கே அந்த எட்டரை மாத கர்ப்பிணி மனைவி இவர்களிடம் எனக்கு மகன் பிறக்க இன்னும் இரு வாரங்களே உள்ளன , அது வரை நான் உங்களுடன் வந்து பிணைக்கைதியாகக் கூடஇருக்கிறேன் , அதன் பின் என்னைக் கொல்லுங்கள் எனக்  கெஞ்சியிருக்கிறார், 

இருந்தும் மனம் இறங்காத அந்த ஸோஸியோபாத் குழு அவரை 16 முறை கத்தியால் குத்திக் கிழித்துள்ளது, அங்கே கொலையுண்டோரின் கழுத்துக்கு சுருக்குப் போட்டு ஒன்றாக இணைத்தும் வெறி அடங்காமல் வெளியேறுகையில் வாசற்கதவில் அவரின் குருதியைக் கொண்டு நனைத்த டர்கி துண்டால் PIG என்றும் எழுதிச் சென்றுள்ளனர்.
நடிகை sharon tate 1960களின்  மிகத் துணிச்சலான நடிகை, ஒரு பத்திரிக்கை பேட்டி ஒன்றில் இவர் திரைப்படம் ஒன்றில் முழு நிர்வாணமாக தோன்றியதைப் பற்றி கேட்கையில் , அதே சினிமாவில் ஒருவனை ஒருவன் கொலை செய்வதை காண்பிக்கையில் வருத்தம் அடையாத , அதைக் கண்டிக்காத நீங்கள் இயற்கையின் உந்துதலால் உடல் உறவு கொள்ளும் ஒரு ஏகாந்த நிலையைக் காண்பிப்பதை வெறுத்து, குற்றம் சொல்வது என்ன முரண் ? என சாடியிருந்தார்.
https://en.m.wikipedia.org/wiki/Sharon_Tate

mansons family என்னும் அக்கொலைகாரர்களின் குழுவில் மூன்று பெண்களும் அடக்கம், https://en.m.wikipedia.org/wiki/Susan_Atkins

கொலை செய்வது அவர்களுக்கு உச்ச கட்ட ஆர்கஸத்துக்கு நிகரான இன்பத்தை அளித்ததால் இப்படி கொலை செய்தனராம்.

mansons family இப்படுகொலைக்கு எந்த காரணத்தையும் கொண்டிருக்கவில்லை, அது ஜஸ்ட் லைக் தட் கொலையாக ஆரம்பித்தது , அடுத்தடுத்து இரு தினங்களில் 7 பேரைக் குத்திக் கொன்றுள்ளது அக்குழு, அக்குழுவின் தலைமை உறுப்பினன் சார்லஸ் டென்டன் வாட்ஸனுக்கு இப்போது 70 வயது கலிபோர்னிய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி, இவன் மற்றும் இவனது தலைவன், சகாக்களின் மரண தண்டனையும் கலிபோர்னியா மாகாணத்தில் மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப் பட்டதால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இன்று கல்ட் ஸ்டேட்டஸ் அந்தஸ்தும் இரவாப்புகழும் பெற்று வாழ்கின்றனர்.
https://en.m.wikipedia.org/wiki/Charles_%22Tex%22_Watson
அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயமாக இவன் ஆயுள் தண்டனைச் சிறையில் இருக்கையில் இவனது தன்வரலாற்றுப் புத்தகமும் வெளியாகி சக்கை போடு போட ,  அதைப்படித்து உருவான ரசிகர்களில் ஒரு பெண் இவனை சிறைக்குத் தேடிவந்து திருமணமும் செய்து நான்கு குழந்தைகளும் பெற்றிருக்கிறாள், பின்னர் சிறை நிர்வாகம் conjugal visits ஐ அடியோடு ரத்து செய்யவும் அவள் இவனை 24 ஆண்டு காலம் புணர முடியாமல் போக , வெறுத்துப் போனவள் அவனை விவாகரத்து செய்துவிட்டு வேறொருவனை மணம் முடித்திருக்கிறாள், என்ன விந்தை பாருங்கள். https://en.m.wikipedia.org/wiki/Conjugal_visit

இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கின் A Clockwork Orange (1961) என்னும் திரைப்படத்தில் வரும் ஸோஸியோபாத் குழு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பெரிய மனிதர் வீடொன்றில் புகுந்து இப்படித்தான் துவம்சம் செய்யும் , அப்படம் பார்க்கையில் எனக்கு பணக்காரர்களுக்கு எல்லாம் இப்படியும் கூட நடக்குமா? எனத் தோன்றியது, ஆனால் இவை ரோமன் பொலன்ஸ்கியின் வாழ்வில் நேரடியாக நடந்துள்ளது என அறிகையில் முதுகுத்தண்டு சில்லிடுகிறது, ரோமன் பொலன்ஸகியின் படைப்புகள் உக்கிரமாகவும் , தத்ரூபமாகவும், குரூரம் தொனிக்கவும், அழகியல் மிகுந்தும் , சோகம் நிரம்பியதாகவும் இருப்பதன் பின்னணி இதுவே

https://en.m.wikipedia.org/wiki/Roman_Polanski

ரோமன் பொலன்ஸ்கி பற்றி இயக்குனர்  Antony Charles எழுதிய தொடர்களைப் படிக்க இங்கே சுட்டி https://vaarthaikal.wordpress.com/tag/roman-polanski/

சினிமாவில் ஸ்நோ க்ளோப்கள் | Depiction of Snow Globe in Films

ஸ்நோ க்ளோப் எனப்படும் கண்ணாடி அலங்கார உருண்டையை நாம் முக்கிய திரைப்படங்களில் பார்த்திருப்போம், பளிங்கு போன்ற நீரால் நிரப்பப்பட்டு,உள்ளே இயற்கைக் காட்சிகள் ,பறவைகள், விலங்குகள் அல்லது மணமக்களின்  வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

பழைய திரைப்படங்கள் துவங்கி இன்றைய திரைப்படங்கள் வரை ஸ்நோ க்ளோப்களுக்கு நீங்காத இடம் உண்டு,ஆனால் அவை பெரும்பாலும் சோகத்தையே பறைசாற்றுகின்றன.

எப்படி ஹிட்ச்காக்கின் சித்தாந்தப்படி ஒரு துப்பாக்கிக்கு க்ளோஸப் வைத்தால் அது வெடித்தே தீருகிறதோ, இந்த அழகிய ஸ்நோ க்ளோப்களும்  சினிமாவில்  அழிவின் சின்னமாகவே இருக்கின்றன.

Unfaithful [2002] படத்தில் ஆதர்சமான கணவன் [Richard Gere] மனைவியின்[Diane Lane]  12 வருட  இல்வாழ்க்கை  ஒரு அழகிய புத்திசாலி இளைஞனின் [Olivier Martinez] குறுக்கீட்டால் தடுமாறுகிறது, மனைவி தன்னைக் கட்டுப்படுத்த முயன்று தோற்று வழி தவறி விடுகிறாள்,ஒரு கட்டத்தில் தன் கணவன் தனக்கு திருமணநாளுக்குப் பரிசளித்த இந்த ஸ்நோ க்ளோபை, தன்  காதலனுக்கு பரிசளித்து விடும் அளவுக்கு பித்து முற்றுகிறது,

உளவறிந்த கணவன் காதலனைத் தேடிப்போய் பேசுகிறான்,ஆனால் அங்கே இந்த ஸ்நோ க்ளோப் இருப்பதைக் கண்டவன்,அவள் தன் பிறந்தநாளுக்கு பரிசளித்தது என காதலன் கூசியபடி சொல்ல, அந்த ஸ்நோக்ளோபை கையில் ஏந்தி கண்ணீர் விடுகிறான் கணவன்,இது நான் அவளுக்கு எங்கள் மணநாளுக்கு பரிசளித்தது என்று கூறி சுயபச்சாதாபத்தின் உச்சத்தில் கேவியவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த ஸ்நோ க்ளோபை எடுத்து அந்த இளைஞனின் மண்டையை உடைத்து விடுவான். அந்த இளைஞன்  அங்கே துடிதுடித்து குருதி வழிய மரணிப்பான், பின்னர் இந்த ஸ்நோ க்ளோப்பை சுத்தம் செய்து வீட்டுக்கு கொண்டுவந்து பழைய இடத்திலேயே வைத்து விடுவான் கணவன்.

பின்னொரு சந்தர்ப்பத்தில் மனைவி கணவன் செய்த கொலைக்காக அருவருக்க,கணவன் அவளின் முறை தவறிய உறவுக்கு அருவருப்பான்,உன்னைக் கொல்ல முடியவில்லை,அதனால் அவனைக் கொன்றேன் என்பான், மனைவியை அந்த ஸ்நோ க்ளோபை திறந்து பார்க்கச் சொல்வான்,அவள் திறந்தால் அதில் இவர்கள் மற்றும் குட்டி மகனின் புகைப்படம் இருக்க ,அதன் பின்னே Do not open until our 25 the anniversary. To my beautiful wife, the best part of everyday என்று எழுதியிருக்கும்.மிக அருமையான காட்சி அது.


ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில்   சினிமா டூப்பான ஷாரூக் கான பிரபல நடிகை தீபிகாவையை ஒருதலைக் காதல் செய்வார்,அவளை ஒரு தீவிபத்தில் காப்பாற்றவும் அவளின் உன்னதமான  நட்பு கிடைக்க,அதைக் காதல் என எண்ணுவார்,அவளுக்குப் பரிசளிக்க இந்த ஸ்நோ க்ளோபை வாங்குவார், ஆனால் நிஜத்தில் அந்த நடிகைக்கும் பிரபல தயாரிப்பாளர்  அர்ஜுன் ராம்பாலுக்கும் ரகசிய உறவு இருக்கும்.இந்த உறவால் நடிகை கருத்தரித்தும் விடுவாள்,ஊரறிய திருமணம் செய்து கொள்ள கேட்பாள்,இந்த விஷயத்தை கேட்ட தயாரிப்பாளர் தன் மண வாழ்க்கையும் சினிமா எதிர்காலமும் பாழாகிவிடும் என்று எண்ணி தன் புதிய படத்தின் செட்டுக்குள் நடிகையைப் பூட்டி வைத்து தீவைத்துக் கொல்வார்.



பத்லாபூர் திரைப்படத்தில் ஆதர்ச இளம் தம்பதிகளான வருண் தாவனும் ,யாமி கௌதமும் இன்பச் சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் ,இந்த ஸ்நோ க்ளோப்களை வாங்கி சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.அவளும் குட்டி மகனும் ஒரு வங்கிக் கொள்ளையில் கொல்லப்பட,ஒரே நாளில் வாழ்க்கை தடம் புரண்டுவிடும்.வருண்  15 வருடம் கழித்தும் பழிவாங்கும் வெறி அடங்காமல் இருப்பார்.அப்படி ஒரு நாள் தன் எதிரியின் வாழ்க்கைக்குள் தேடி நுழைந்தவர்,அங்கே மிக அந்த வசதியான வீட்டுக்குள் இந்த ஸ்நோ க்ளோப்கள் இருப்பதைக் கண்டவர் மிஷாவுக்கும் இதிலெல்லாம் மிகுந்த ஆர்வமிருந்தது என்பார். அதன் பின்னர் பழிவாங்கும் வெறி உச்சம் பெறும்,கணவன் மனைவி ஜோடியான விநய் பதக்கும்,ராதிகா ஆப்தேவும் அங்கே ஸ்தம்பித்துப் போவர்.



சிட்டிஸன் கேன் படத்தின் துவக்கத்தில் ஃபாஸ்டர் கேன் தன் மரணப்படுக்கையில் இந்த ஸ்னோ க்ளோபைப் பார்த்து ரோஸ் பட் என்று கடைசியாக உச்சரித்து உயிர் துறப்பார்,இந்த கண்ணாடி உருளை அவர் கைகளில் இருந்து உருண்டு விழுந்து சிதறும்.அப்புள்ளியில் இருந்து படம் துவங்கும்.

கோயன் சகோதரர்களின் ஃபார்கோ க்ரைம் நுவார் திரைப்படத்தின் ஒரிஜினல் ஸ்பெஷல் எடிஷன் VHS வாங்கியவர்களுக்கு  இந்த ஸ்நோ க்ளோபை இலவசமாகத் தந்தனர். அதனுள் ஃபார்கோ திரைப்படத்தின் முக்கியமான குற்றச்செயல்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன, ரசிகர்கள் அதை பெருமையான சேமிப்பாக இன்றும் வைத்திருப்பதைப் படித்தேன்,

ஃபார்கோ படத்தில் பனிச்சூழலில் கார் ஒன்று கவிழ்ந்திருக்கும்,அருகே பெண் போலீஸ் அதிகாரி ஃப்ரான்கஸ் மெக்டார்மெண்ட் துப்பாக்கியுடன் நின்றிருப்பார்,அதைக் குலுக்க, கிளம்பும் வெந்நிற பனித்துகள்கள் ,ரத்த நிறத்தில் மாறும். மற்றொரு பயங்கர காட்சியான wood cutter காட்சியும் இந்த ஸ்நோ க்ளோப்களாக இடம் பெற்றிருந்தன.என்ன ஒரு விளம்பர யுக்தி பாருங்கள்?
Add caption

ஸ்நோ க்ளோப்களை வேறு எங்காவது திரைப்படத்தில் பார்த்திருந்தால் குறிப்பிடுங்கள் நண்பர்களே

யாகூப் மேமனுக்கு தூக்கு



யாகுப் மேமனின் வழக்கு மிகவும் சிக்கலானது,எப்படி குடும்பத்தில் ஒருவர் செய்யும் தேச துரோக குற்றம்  அக்கொடிய குற்றவாளி சட்டத்தின் பிடியில் அகப்படாத நிலையில் வலியச் சென்று சரணடைந்த குடும்ப உறுப்பினரை  காவு வாங்கும் என்பதன் சிறந்த எடுத்துக்காட்டு.

யாகுப் மேமன் மிகச் சிறந்த கல்வி மானாக இருந்திருக்கிறார், அவரின் அதீத முன் எச்சரிக்கையும் சிறந்த இந்தியக் குடிமகன் கனவுமே  அவருக்கு எமனாக வாய்த்து விட்டது.

இதைப் பற்றி சிந்தித்ததில் ஹஸாரான் க்வாய்ஷெய்ன் அய்ஸி  [Hazaaron Khwaishein Aisi ] படத்தில் வரும் விக்ரம் [ஷைனி அகுஜா] கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறது,விக்ரம் வேகமாய் வளர்ந்து வரும் கார்பொரேட் மற்றும் அரசியல் தரகன். இந்திய எமர்ஜென்ஸியின் உச்சத்தில்  விக்ரமின்  ஒருதலைக் காதலி கீதாவின் கணவன் நக்ஸலைட் சித்தார்த்தை [கேகே மேனோன்] போலீசார் காலில் சுட்டுப் பிடித்து விடுகின்றனர், அவனை பீகாரின் ஒரு குக்கிராமத்தின் சுகாதார மையத்தில் அனுமதித்து சிகிச்சை தருகின்றனர்.

அன்றைய ஆட்சியாளர்களின் முக்கிய கருவருப்பு பட்டியலில் இருக்கும் சித்தார்த்தை என்கவுண்டர் செய்ய மேலிடத்திலிருந்து ஒப்புதலும் வந்து விடுகிறது, அந்த சுகாதார மையத்திலிருக்கும் மார்க்ஸிய அனுதாபி மருத்துவர் மூலம் சித்தார்த்தின் மனைவி கீதாவின் வீட்டிற்கு இச்செய்தி தொலைபேசி வழியே செல்கிறது,

 ஆனால் அங்கே கீதா இல்லாத நிலையில் தொலைபேசி செய்தியைக் கேட்ட விக்ரம் வேண்டா வெறுப்புடன் சித்தார்த்தை மீட்கப் பொருப்பேற்றவன் அக்கிராமத்திற்கு தானே வலியச் செல்கிறான்,வழியில் கார் இடக்கு செய்ய,ஒரு கோழி வண்டியில் ஏறிச் செல்கிறான்,அதன் ஓட்டுனர் இரவு பிரயாணத்தில் தூங்கிவிட,வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது, விக்ரம்   அதே கிராம சுகாதார மையத்தில் சித்தார்த்துக்கு பக்கத்திலேயே பலத்த காயங்களுடன் சேர்க்கப்படுகிறான்.

அங்கே வைத்து சித்தார்த்தை ஏசுகிறான், உன்னால் எனக்கு என்ன ஆனது பார் என்கிறான்,வலிக்கு ஊசி போட வரும் நர்ஸிடம் விளையப்போகும் விபரீதம் புரியாமல் இஞ்செக்‌ஷனில் bubble check செய்திருக்கிறதா?இது சுகாதாரமானதா? என்கிறான்.

அன்றிரவே நக்ஸலைட் குழுவினர் தங்கள் சகா சித்தார்த்தை அந்த சுகாதார மையத்துக்குள் நுழைந்து கட்டிலுடன் மீட்டு தூக்கிக் கொண்டு செல்கின்றனர். சித்தார்த் விக்ரமையும் நம்முடன் மீட்போம் என்றதற்கு அவன் பெரிய அரசியல்வாதியின் மகனாயிற்றே,அவனுக்கு ஒன்றும் நேராது என்கின்றனர்.

காலையில் விபரீதம் துவங்குகிறது,நன்கு குடித்து விட்டு போதையில் தூங்கிய கான்ஸ்டபிளுக்கு பயத்தில் பேதியாகிறது, சித்தார்த் எங்கே? என்று மயக்கம் தெளியாத விக்ரமை வந்து உலுக்குகிறான்.புது டில்லியில் இருந்து 5000 வருடங்கள் பின் தங்கியிருக்கும் கிராமத்தில் தான் இருக்கிறோம்,என்ன நேருமோ? என்ற நினைப்பிலேயே விக்ரமிற்கு கடும் வலியுடன் பயமும் சேர்ந்து கொள்கிறது,தன் கார்பொரேட் ,டிப்ளோமஸி அதிகாரம் எதுவும் செல்லுபடியாகாத காட்டுமிராண்டிகளின் சூழல் ,காவல் துறை அதிகாரிகளிடம் என்ன சொல்லியும் பயனில்லை,எல்லாமே விபரீதமாகத் தான் முடிகிறது,

கான்ஸ்டபிள் அவசர அழைப்பின் பேரில் அங்கே வந்த இன்ஸ்பெக்டருக்கு சித்தார்த்தை அவசரகதியில் என்கவுண்டர் செய்தாக வேண்டிய கட்டாயம். ஆனால் சித்தார்த் அங்கில்லை, இப்போது இரு காவல்துறை கோமாளிகளும் விக்ரமை இழுத்துச் செல்கின்றனர். நான் அவன் இல்லை, எனக்கு உங்கள் எம்.பி யை தெரியும் என சொல்லச் சொல்ல வயலுக்குள்  கொண்டு தள்ளுகின்றனர்.

அங்கே விக்ரமை சுடப்போனால் துப்பாக்கியில் தோட்டா இல்லை,அதை முதல் நாள் இரவே நக்ஸலைட்கள் துடைத்திருக்கின்றனர். ஒரே வழி இரும்புக்கழியால் மண்டையை உடைத்து ஆஸிட் கொண்டு இவன் முகத்தை சிதைத்து இவன் தான் சித்தார்த் என்று சொல்லி வழக்கை முடித்து விடலாம என்கிறார் இன்ஸ்பெக்டர் [ஷவ்ரப் ஷுக்லா].

அது தான் தன் வேலையைக் காத்துக்கொள்ள ஒரே வழி என்று நம்பிய கான்ஸ்டபிள் இரும்புக் கழியால் விக்ரமின் மண்டையை உடைக்கத் துவங்குகிறான், தொலைவில் அந்த தொகுதி எம்.பி கேட்டதற்கிணங்க ஆட்சித்துறை அதிகாரிகள் விக்ரமை காப்பாற்ற வந்தும், அங்கே விக்ரமின் மண்டை சிதைந்து விட்டிருக்கிறது. அதன் பின்னர் மிகச்சிறந்த கல்விமான் விக்ரம் தன் எஞ்சிய வாழ்நாளை மனநோயாளியாகக் கழிப்பதாகப் படம் முடியும்.

இப்படித்தான் டைகர் மேமன் என்னும் மகாக் கொடியவனுக்கும் எனக்கும் எந்தத தொடர்புமில்லை, என்று தன் வீட்டாருடன் 22 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்து சரணடைந்த யாகுப் மேமன், அகப்பட்டவனை தூக்கிலிடுவோம் என்னும் பழைய கொள்கைகளின் படி தூக்கிலிடப்படுகிறார்.

இந்த கொலை ஈரானிலோ, சவுதிஅரேபியாவிலோ அமெரிக்காவிலோ பாகிஸ்தானிலோ நடந்தால் அது ஆச்சர்யமல்ல, இந்தியா போன்ற நாட்டில் நடப்பது தான் அதிசயம்.ஆச்சர்யம்.உலகின் புருவத்தை உயர்ந்த வைக்கும். எத்தனையோ பார்த்து விட்டோம் , இதையும் பார்ப்போம், இங்கே யார் யாகுப் மேனன் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தாலும் வெகுஜனத்தின் முன்னே குற்றவாளி தான், உலகம் என்றும் அப்படித்தான்.

மக்களுக்கு யாராவது தூக்கில் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும், 1800களில் சதி என்னும் உடன்கட்டையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே?!!!  ,அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது ஜில்லெட்டினில் வீழ்த்தப்பட்ட அறிஞர்கள் , எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அவர்கள் மனைவி குழந்தைகள்  தலைகளை சதுக்கத்தில் கூடி குரூரமாக வேடிக்கை பார்த்தார்களே பெர்வெர்ட்டுகள், அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?!!! நாட்டில் எது எப்படி நடந்தாலும் அகப்பட்ட யாரையேனும்   தூக்கில் போட்டு விட வேண்டும்.

யாகுப் மேமனுக்கு சல்மான் கான் போன்ற குற்றப் பின்னணி உள்ள நடிகர்கள் வக்காலத்து வாங்கும் போது யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை என்னும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.எனவே அவர்கள் வக்காலத்து வாங்காமல் இருப்பதே உத்தமம்.

யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டால் அவர் தான் இந்திய அரசால் தூக்கிலிடப்பட்ட முதல் சார்டட் அக்கவுண்டண்ட் ப்ரொஃபெஷனலாக இருப்பார். ஜூலை 30 அவருக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டால் பிறந்தநாளன்றே தூக்கிலிடப்ப்பட்டவர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெறுகிறார்.

http://geethappriyan.blogspot.ae/2013/07/black-friday-2004.html
https://en.wikipedia.org/wiki/Yakub_Memon
http://timesofindia.indiatimes.com/india/Yakub-Memon-does-not-deserve-to-be-hanged-top-intelligence-office-wrote/articleshow/48202387.cms
http://thewire.in/2015/07/17/why-yakub-memon-should-not-be-hanged-6662/

தெரு நாய்கள் படுகொலை தீர்வு என்ன?



https://www.youtube.com/watch?v=CPfaKXVnp30

தெரு நாய்களைப் பிடித்து கழுத்தில் சுருக்கிட்டுக் கொல்வதில் எனக்கும் உடன் பாடில்லை தான்,

 ஆனால் எத்தனையோ நாள் வேலை முடித்து இரவில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு  என் தெருவில் என் சொந்த வீட்டுக்குள் வண்டி ஓட்டிக்கொண்டு நுழைவதற்கு நான் பட்ட பாடுகள் அதிகம்.

தெரு என்பது மனிதர்கள் மட்டுமே வாழ வேண்டிய பகுதி அல்ல தான்.ஆனால் 1000 பேர் வசிக்கக்கூடிய தெருவில் 50 முதல் 100 தெரு நாய்கள் இருந்தால் என்ன ஆகும்?

நாம் தெருநாய்களின் மறு வாழ்விற்கு எல்லாவற்றுக்கும் ப்ளூக்ராஸையே நம்பியிருந்தால் வேலைக்காகாது.முனிசிபாலிட்டி காரர்களையும் நாம் குறை சொல்ல முடியாது,முனிசிபாலிட்டியில் நிலவும் ஊழல் மற்றும் ஆள் பற்றாக்குறையால் அவர்களால் தெருவில் வீசப்படும் குப்பைகளையே சரிவர அள்ள முடிவதில்லை.அவர்கள் அள்ளினாலும் குப்பை மீண்டும் மீண்டும் தெருக்களில் வீசப்படுகின்றன,இந்த குப்பை கூளங்கள் தான் தெரு நாய்கள் புகலிடமாக விளங்குகின்றன.

இதற்கு  தீர்வுகள் உண்டு,

எல்லோரும் தம் வீட்டுக் குப்பையை குப்பை வண்டிக்காரர்கள் வருகையில் அவர்களிடம் மட்டும் கொட்டுவது,

அப்படி கொட்டத் தவறி விட்டுவிட்டால் அதை குப்பைத் தொட்டி எங்கே இருக்கிறதோ அங்கே தேடிப் போய் அதன் உள்ளே மட்டும் கொட்டுவது.இதன் மூலம் குப்பையைக் கிளறி தின்று கொழுக்கும் நாய்கள் வேறு இடம் தேடிச் செல்லும்,குப்பையே கிடைக்காத பட்சத்தில் அருகிவிடும்.

 நாம் அனைவரும் வீட்டுக்கு ஒரு தெரு நாய் குட்டியை தத்தெடுப்பது, அதற்கு தடுப்பு ஊசிகள் போட்டு,தினமும் அன்புடன் பேணி வளர்ப்பது, இதன் மூலம் குழந்தைகளிடமும் பாதுகாப்பாக நாய் வளர்க்கும் ஆர்வத்தை வளர்க்க முடியும்.இதன் மூலம் உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல் வளரும்.முதியவர்களின் தனிமை தவிர்க்கப்படும், ஏக்கம்,தற்கொலைகள் கூட தவிர்க்கப்படும்.

நடிகை த்ரிஷா ,விஷால் மற்றும் பெரிய சிறிய எழுத்தாளர்கள் , ப்ளாக்கர்கள் ,கவிஞர்கள் என்று மிருக ஆர்வம் கொண்ட பிரபலங்கள்  வெளிநாட்டு ரக நாய்களை அதிக விலை கொடுத்து வாங்கி வளர்ப்பதை விட்டு  நம் இந்திய பரையா நாய்களை [pariah dog]   வளர்க்க வேண்டும்,இவை மிகுந்த புத்திசாலித்தனம் கொண்ட நாய் வகைகள், சீற்றத்திலும் எந்த வெளிநாட்டு நாய் வகைகளுக்கும் இளைத்ததல்ல, மேலும் இது வெளிநாட்டு நாய்களைப் போல வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்து குட்டிகள் ஈனுவதில்லை அதற்கென்றே September-October மாதத்தை தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்வது என்பதும் அதிசயம் .https://en.wikipedia.org/wiki/Indian_pariah_dog

பெரிய நடிகர்களின்  பரந்து விரிந்த பண்ணை வீடுகளில் ஆதரவற்ற வயதான நாய்களை நூற்றுக்கணக்கில் பண்ணை அமைத்தும் வளர்க்கலாம். அங்கே நாய்களின் திறமைகளை ஊக்கப் படுத்த பயிற்சி மையமும் அமைக்கலாம். நாய்களுக்கான சுகாதார மையமும் அமைக்கலாம்.இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

இயக்குனர் பாலு மகேந்திரா இது போன்ற எளிமையான நாயைத் தான் வளர்த்து நேசம் காட்டினார்.இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இதை ஆக்க பூர்வமாக செய்து வருகிறார்,தன் வீட்டில் சுமார் 20 தெரு நாய்களை வளர்த்து வருகிறார்.

இதன் மூலம் நம் வீட்டுக்கும் காவலாயிற்று,நம் தெருவில் நாய்கள் பெருகுவதும் கட்டுக்குள் வரும்.நாய்கள் உண்மையிலேயே மனிதர்களின் தோழன்.ஆனால் அளவுக்கு மிஞ்சுகையில் போராட்டம் தான்.

வியாபம் = வியாபாரம்



வியாபம்=வியாபாரம்

ஆஷிஷ் சதுர்வேதி என்னும் இளைஞரைப் பற்றி படிக்க படிக்க ஆச்சரியம் தொற்றிக்கொள்கிறது, வியாபம் ஊழலின் ஊற்றுக்கண்ணை வெளிக்கொணர்ந்த ஒரு ஏழை இளைஞன்.

வியாபம் ஊழலை எளிமையாக விளக்க வேண்டும் என்றால் வசூல்ராஜா MBBS படத்தை எடுத்துக்கொள்ளலாம். அதில் வரும் ப்ரொஃபஸர் க்ரேஸி மோகன் பக்கிரி கமல் ஹாசனின் மிரட்டலுக்கு பயந்து தலையில் விக் வைத்துக்கொண்டு வசூல்ராஜாவுக்கு பதிலாகச் சென்று மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிவிட்டு வருவார் அல்லவா?

சதுர்வேதியும் அவரின் ஆயுள்-பாது காவலரும்

அது போன்றுத் தான் இந்த வியாபம் ஊழலில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு  நன்றாகப் படிக்கும்  மாணவர்களும், லெக்சரர்களும், தகுதியற்றவர்களுக்கு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தும்,  பேப்பர் சேஸிங் செய்தும் வெற்று தேர்வுத் தாள்களை சரியான விடைகள் கொண்டு நிரப்பி தற்குறிகளே அங்கு தேர்வான அவலம் கடந்த 10 ஆண்டுகளில் அரங்கேறியுள்ளது.

இப்படி தேர்வாகி வந்தவர்கள் தான் அநேகம் பேர் மத்தியப் பிரதேச மாநிலத்தில்  மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், காவல்துறை ,வனத்துறை , பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்,  இது எப்படி இருக்கு?!!!

இந்தியனாக இருப்பதில் மிகவும் அருவருப்படையும் தருணம் இந்த வியாபம் ஊழலைப் பற்றி படிக்கும் தருணம் என்றால் மிகையில்லை. நம்மூரிலும் தான் ஊழல் நடக்கிறது,ஆனாலும் பொதுப்பணி நுழைவுத் தேர்வுகளில் இது போல BROTHEL செய்யவில்லை.இத்தனைக்கும் இங்கே கல்வித்தந்தைகள் அந்நாளைய சாராய வியாபாரிகள் தான்.
அவலட்சணம் பொருந்திய வியாபம் லோகோ

நம் இந்திய கல்வி நிறுவனங்கள் அகில உலக அளவில் நூறாம் இடம் கூட பிடிக்க முடியாமல் போனது இது போன்ற துடைக்க முடியாத களங்கங்களால் தான்.

வியாபம் ஊழலை வெளிக்கொணர்ந்த ஆஷிஷ்  சதுர்வேதியின் ஃபேஸ்புக் பக்கம்
https://www.facebook.com/pages/Ashish-Chaturvedi-The-youngest-whistle-blower-of-Vyapam-Scam/708858335908572

வியாபம் ஊழலைப் பற்றி படிக்க
https://en.wikipedia.org/wiki/Vyapam_scam

வியாபம்[வியாபாரம்] இணையத்தளம்
http://www.vyapam.nic.in/

பெனடிக்ட் ஜெபகுமார் மற்றும் பெங்களூரு டயர் மாஃபியா



நீங்கள் பெங்களூருவில் 2 வீலர் அல்லது கார் ஓட்டுகிறீர்கள் என்றால் இவருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறீர்கள்.

பஞ்சர் கடைக்காரர்களே சாலையிலும், தெருவிலும் ஆணிகளைப் போட்டு,  நம் வாகனங்களை பஞ்சர் செய்து விட்டு , மிகுந்த பிகு செய்த பின் பஞ்சரும் ஒட்டி , கூடவே மட்டமான டயர் ட்யூபையும்  நம் தலையில் அநியாய விலைக்கு கட்டி ஏமாற்றுவார்கள் என நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்போது பார்த்தும் விட்டேன்.

பெங்களூருவைச் சேர்ந்த இந்த நல்ல மனிதர் பெனடிக்ட் ஜெபகுமார் அந்த டயர் மாஃபியாவை கையும் களவுமாக காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்ததுடன் நில்லாமல் தினமும் தான் அலுவலகம் போகும் பாதையில் இருக்கும் ஆணிகளை பொறுக்கி சேகரித்து படம் எடுத்து தன் தளத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார், காவல் துறையினரையும் , மேயரையும் tag செய்கிறார், அவரை வாழ்த்துவோம். அவரின் தளம் https://www.facebook.com/MyRoadMyResponsibility?fref=ts

பேராசை கொண்ட பஞ்சர் கடை ஆசாமிகளே,இந்த பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம் தானே?!!!

http://www.thenewsminute.com/article/five-kilos-nails-three-years-mans-hobby-has-saved-bengaluru-many-tyre-punctures

Pu-239 [2006] [ஹாலிவுட்]


Pu-239 படத்தின் துவக்கத்தில் வரும் 80களின் சோவியத் ரஷ்யாவின் புகழ்பெற்ற அரசியல் நையாண்டி இது .

quotation that was popular in Russia under Boris Yeltsin: "Two dogs meet on the street in Moscow. The first dog says, 'How are things different for you with Perestroika?' And the second dog says, 'Well, the chain is still too short, and the food dish is still too far away ... But now we are allowed to bark as much as we want.

போரிஸ் எல்ட்ஸின் ஆட்சியில் இரு நாய்கள் தெருவில் சந்தித்துக் கொள்கின்றன, வெளிப்படை சீர்திருத்தம் அமல் படுத்தப் பட்ட பின் வாழ்க்கை எப்படிப் போகிறது? !!!

அலுத்துக்கொண்ட மற்ற நாய் , ஒரு பெரிய மாற்றமுமில்லை, முன்பைப் போன்றே கழுத்துச் சங்கிலியின் நீளம் குட்டை, உணவுத்தட்டின் தூரமும் மிக அதிகம், ஆனால் எத்தனை வேண்டுமானாலும் குரைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்கிறது.

இது எந்நாட்டுக்கும் எம்மக்களுக்கும் பொருந்தக்கூடிய சிலேடை, எந்நாட்டிலும் தலைவர்கள் கோமாளிகளாகத் தான் பார்க்கப்படுகின்றனர்,
தலைவர்கள் மக்களை முட்டாள்களாகத் தான் பார்க்கின்றனர்.

மிக அருமையான உலக சினிமா இது, ரஷ்யாவில் அணு ஆயுதங்களுக்கு மூலப் பொருட்கள் செய்யும் செரிவூட்டு ஆலைகளின் ஆபத்தான பாதுகாப்பற்ற நிலை பற்றி ஒரு வசனம் வரும், ரஷ்யாவில் உருளைக்கிழங்கு மூட்டை கிடங்கில் இருக்கும் காவல் கூட 100 வருடப் பழமையான ரேடியம், பளூட்டோனியம் செரிவூட்டல் ஆலைகளில் இராது.

கள்ளச் சந்தையில் சர்வ சாதாரணமாக தீவிரவாத இயக்கங்களுக்கு எப்படி பளூட்டோனியம் கிடைக்கிறது? என்பன பற்றி விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் பேசுகிற படம்,

அமெரிக்காவின் முதலாளித்துவத்தால் விளைந்த பேரிடரான ரேடியம் பெண்கள் பற்றிய ஆவணப்படமும் படத்தின் ஊடே வருகிறது,

கல்பாக்கம் , கய்க்கா, கூடன்குளம் போன்ற பெரிய அணுக்கூடங்களில் நடக்கும் விபத்துக்கள் , அனுதினம் அத்தொழிலாளிகள் சந்திக்கும் ரேடியேஷன் பாய்ஸனிங் பிரச்சனைகள் போன்றவற்றை மக்களாகிய நாம் எளிதில் விளங்கிக் கொள்ள வைக்கும் படைப்பு இது. அவசியம் பாருங்கள்.

Directed by Scott Z. Burns
Produced by Charlie Lyons
Miranda de Pencier
Guy J. Louthan
Written by Scott Z. Burns
Based on PU-239 and Other Russian Fantasies
by Ken Kalfus
Starring Paddy Considine
Radha Mitchell
Oscar Isaac
Music by Abel Korzeniowski
Cinematography Eigil Bryld
Edited by Tatiana S. Riegel
Leo Trombetta
Distributed by Beacon Pictures
HBO Films
Release dates
  • September 12, 2006 (Toronto International Film Festival)
Running time
97 mins
Country United Kingdom
Language English

பாகுபலி இந்தியாவின் பெருமைமிகு சினிமா


பாகுபலி பிரம்மாண்டம் என்னும் சொல்லுக்கே காப்புரிமை பெற்றிருக்கும் படம் என்றால் மிகையில்லை, படம் பார்ப்பவரை கண் இமைக்க மறக்க வைக்கும் படம் சமீபத்தில் இதுவாகத் தான் இருக்கும்.

இயக்குனர் ராஜ்மவ்லி இந்திய சினிமா ரசிகர் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டார், திரும்பத் திரும்ப படம் பார்க்கச் செல்லும் ரிப்பீட்டட் ஆடியன்ஸே இதற்கு சாட்சி, 

ஒருவரை விமர்சகர் முகமூடியை கிழித்தெறிந்து விட்டு பார்க்க வைக்கும் படம்,250 கோடி பணம் செலவிடத் தயாரிப்பாளர் தயாராக இருந்தால் மட்டும் யாராலும் இப்படி படம் எடுத்து விட முடியாது, மிகப் பெரிய பொருப்பு இது, இயக்குனருக்கு அபாரமான கற்பனை, அழகுணர்ச்சி, ஆளுமைத்திறன் அமைந்திருக்க வேண்டும், இயக்குனரின் கற்பனைத் திறனை செல்லுலாய்டுக்கு மாற்ற அபாரமான பயிற்சி வேண்டும், 

அப்பயிற்சியை இயக்குனர் ராஜ் மவ்லி தன் முந்தைய மகதீரா, நான் ஈ படங்கள் மூலமே படிப்படியாக பெற்றிருக்கிறார்,

பாகுபலியில் திரிசூல வியூகம் என்னும் போர் யுத்தியை மினியேச்சர் சிப்பாய்கள் தளவாடங்கள் கொண்டு விளக்கியும் அதை நேர்த்தியுடன் செயல்படுத்தியும் இருந்தனர்.

காலகேயர்களின் ஆஜானுபாகுவும் பயங்கரமும் பிரமிக்கும் படி இருந்தது,காலகேயர்களின் அரசனும் ,வீரர்களும்,விற்போரும் 300 படத்தில் வந்த கரிய உயரமான பெர்ஷிய நாட்டு அரசன் Xerxes,யும் அவன் போர் வீரர்களையும் நினைவூட்டினர்,ஆனால் பாகுபலியின் போர்காட்சிகள் தனித்துவமாக அமைந்திருந்தது எங்கும் அனிமேஷன் துருத்திக் கொண்டு தெரியாததும் அதன் சிறப்பு.

படத்தில் மிகச்சிறிய குறைகள் இருந்தாலும் அவை படத்தின் பிரம்மாண்டத்தின் முன் தவிடு பொடியாகிறது, படம் ஐமேக்ஸில் பார்த்து படத்துடன் ஒன்றுங்கள். படத்தைக் கழுவி ஊற்றிக் காயப்போடுபவர்கள் பாகுபலி இரண்டாம் பாகத்துக்கும் கொஞ்சம் மீதம் வைத்துக் கொள்ளுங்கள்.

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

 
இதை வாட்ஸப்பில் அனுப்பியது யாராக இருந்தாலும் அவருக்கு நன்றி!!!


கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….! (நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில் பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின் ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும். இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ” முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். “நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில் அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும் உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

————-

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களுக்கு

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க முன்வர வேண்டுமென்று, வேலை மெனக்கெட்டு, என் போனிலேயே,என் செலவிலேயே – வேண்டி, விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!

மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள் நடைபெற்றால் தேவலை….!!!

நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும், அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில் போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை அறிவித்திருக்கிறீர்கள். அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் தங்களுக்கு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில் கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

சட்டமன்ற, பாராளுமன்ற கூட்டங்களில் அநேக பிரச்சினைகளில் எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும் ஒருமித்த குரலில் ஒன்றுபட்டு உடனடியாக விவாதமே இன்றி நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை- எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?

வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி ஏஞ்சலா மெர்கெல் தன் அலுவலகத்திற்கு பணிக்குச் செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது

கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான, அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும் ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும் வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள் நினைவிற்கு வருவதே இல்லையா …?

நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் தொலைபேசிகளுக்காக உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும் பயணப்படுவதற்காக உருப்படியான வேலை எதுவும் இல்லாமல், சும்மாவே ஊர்சுற்றிப் பார்க்க நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்காக எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்  பார்த்திருக்கிறீர்களா

உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும் சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள் எதிர்பார்க்கலாமா …?

மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட, நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில் தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில் செய்துக் கொள்ளும் நாள் என்றாவது வருமா…. ?

அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும் Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ? திரிகிறார்கள் ? தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும் பூனைப்படை, யானைப்படை எல்லாவற்றிற்கும் கொடுக்கும் சம்பளப்பணம்  எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல் எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின் நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது

உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …? ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும் எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே…. கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே என்றா இந்த மலிவு விலை ….?

உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான் காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை என்றுமே உருத்தவில்லையா ?

நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax


சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும் இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும் விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …? உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல் செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம் கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள் எல்லாம் மாறும் நாள் வருமா …?

இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும் நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் – என்றைக்கு, உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ – அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை – நீங்கள் கோராமலேயே அவசியம் விட்டுக் கொடுப்போம்…!!

ஹெல்மெட் அணிந்து பயணிப்பதால் வரும் நன்மைகள்


ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வதில் சில அசௌகரியங்கள்  இருந்தாலும் பல நன்மைகள்  இருக்கின்றன அதைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.நம் எல்லோருக்கும் விபத்தில் மண்டை ஓட்டைக் காக்க ஹெல்மெட் அணிவது அவசியம் என தெரியும்,அதற்கும் மேலான பயன்கள் ஹெல்மெட் அணிவதால் கிடைக்கும்.

1.காதுகள் பாதுகாப்பு: இன்றைய சூழலில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தொடர்ந்து ஹாரன் உபயோகிக்காமல் யாரும் வண்டி ஓட்டுவதில்லை, ஒருகட்டத்தில் அதை நம் காதுகள் பழகிக்கொண்டாலும், அவை சீக்கிரமே பழுதாக வாய்ப்புகள் அதிகம். நல்ல ஹெல்மெட் வாங்கி அணிகிற பட்சத்தில் அது அதிக ஹாரன் மற்றும் வாகன இரைச்சல் சப்தத்தை வடிகட்டி நம் காதுகளுக்கு அனுப்புகிறது.இதனால் காதுகளின் ஆரோக்கியம் மேம்படும்.

2.கண்கள் பாதுகாப்பு: இன்றைய மாசு நிறைந்த சூழலில்  கண் பாதுகாப்பு இன்றி அமையாதது,வெளியே ஹெல்மெட் அணியாமல் சென்று வரும் யாரும் தங்கள் கண்களில் வந்து தேங்கும் களிம்பு போன்ற அழுக்கை கவனித்திருப்போம்,அது எத்தனை தீங்கானது?,எத்தனை விதமான தூசுகள் மற்றும் அவற்றை எதிர்க்க சுரக்கும் கண்ணீரின் வடிவம் தான் அந்த களிம்பு,அது போல எத்தனை நாளுக்கு தாக்கு பிடிக்கும் நம் கண்கள்.ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது,அதன் வைஸரையும் இறக்கி விட்டு உபயோகிக்க வேண்டும்,அதை வாரத்துக்கு ஒரு முறை நன்கு சோப் நீரால் இரு புறமும் துடைத்து உபயோகிக்க வேண்டும். இதனால் நம் கண்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும், இரவில் பயணிக்கையில் எத்தனை ஹைபீம் வாகன ஒளி வீச்சிலும் நம் பார்வை மங்கலாக தெரியாது.

3.முகம் பாதுகாப்பு: மேலே கண்களுக்கு சொன்ன அதே தான்,நம் ஊர் எப்போதுமே கடும் வெயிலுக்கு  பெயர் போனது, இன்னும் அக்னி நட்சத்திரம் காலகட்டங்களில் கேட்கவே வேண்டாம். அத்தகைய காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது மடமையாகும். காலுக்கு கூட நாம் சாக்ஸ் அணிந்து ஷூ அணிந்தால் தான் அந்த வெயிலின் சூட்டில் இருந்து ஒருவர் தப்ப முடிகிறது என்கையில் ஒருவர்  தலையை அந்த முழு வெயிலில் பலிகடா ஆக்குவது என்ன நியாயம்? அப்படி தொடர்ந்து பயணிக்கையில்  முகம் தார் போன்ற நிறத்தில்ஆவது நிச்சயம். உதடுகள் கருத்தும் வெடித்தும் போகும்.முகத்தில் படியும் பிசுக்கு புழுதியினால் கட்டிகள்,வெடிப்பு போல பல சரும நோய்கள் வரும் அது கழுத்துக்கும் இறங்கி உடல் முழுக்க பரவ வாய்ப்பு உண்டு.ஹெல்மெட் அணிவதால் அவை தடுக்கப்படும்,ஹெல்மெட் போட்டு பயணித்து, பயணித்து ஒரு கட்டத்தில் அது நமக்குப் பழகிவிட்டால் போதும்.அதை தவிர்க்கவே மாட்டோம்.

4.தலை உஷ்ணமாதலை தடுத்தல்: இன்றைய சூழலில் நாம் உடல் உஷ்ணகுறைபாட்டால் அனுதினம் அவதிப்படுகிறோம்,யாருக்கும் வாரத்துக்கு ஒரு முறையேனும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமே இல்லை, ஹெல்மெட் தொடர்ந்து அணிவதால் அதில் இருக்கும் தெர்மல் இன்ஸுலேஷன் மூலம் தலை உஷ்ணமாவது குறையும்,

5.நம்மில் பலருக்கு இரு சக்கர வாகனத்திலும் காரிலும் பயணிக்கையில் ரியர் வியூ மிரர்கள் பார்த்து ஓட்டும் பழக்கம் என்பதே இல்லை  ,ஆனால் துபாய் போன்ற நாடுகளில் வாகனம் ஓட்டுபவர் தன்னிச்சையாக எல்லா கண்ணாடிகளையும் பார்த்து ஓட்டாத வரை அவரை ஃபெயில் செய்து கொண்டே இருப்பார்கள். லைசென்ஸும் எடுக்கவே முடியாது, இந்த பழக்கம் வாகனம் ஓட்டுபவர் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டியின் பாதுகாப்புக்கு  அவசியமாகிறது.ஹெல்மெட் அணிந்து ஓட்டுகையில் இரண்டு ரியர் வியூ மிரர்களையும் பார்க்காமல் ஒருவர் வண்டி ஓட்டவே முடியாது, ஆகையால் ஹெல்மெட் அணிவது விபத்து நேராமல் தடுக்கவும் வழி செய்கிறது.

6.ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுதலைத் தவிர்க்க ஹெல்மெட் அணியும் முன்னர் கர்சீப் கட்டிக்கொள்ளலாம், ஹெல்மெட்டுக்குள் அணியும் ஸ்கால்ப் கேப் வாங்கி அணியலாம், நல்ல நிறுவனத்தின் உறுதியான,ஆனால் எடை குறைவான ஹெல்மெட் வாங்கி அணிகிற பட்சத்தில் தலைமுடி உதிர்தலை தடுக்கலாம்.தலை வலி, கழுத்து வலியில் இருந்தும் தப்பலாம்.

7.ஹெல்மெட் வாங்குகையில் நல்ல தரமான ஹெல்மெட்டை வாங்கவும்,இன்றைய சூழலில் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்தால் தான் தலையை  நிஜமாகவே விபத்தில் காக்கும் ஹெல்மெட் கிடைக்கும்.அது செலவல்ல ஆயுள் சேமிப்பு என்பதை உணர்ந்து வாங்கி அதை பராமரித்து அணியுங்கள். 300 ரூபாய்க்கு கிடைக்கும் சீனத் தயாரிப்பு ஹெல்மெட்டை 200 ரூபாய்க்கு கொள்முதல் செய்திருப்பார்கள்,அதில் என்ன தரம் இருந்து விடப்போகிறது? எனவே தரமான ஹெல்மெட்டையே வாங்கவும்.

8.இருசக்கர வாகனத்தில் எங்கே சென்றாலும் ஹெல்மெட்டை கொண்டு செல்வதை  வழக்கமாக்கிக்கொள்ளுங்கள், ஸ்கூட்டர்களாக இருந்தால் வண்டியினுள் பூட்டிச்செல்லுங்கள், பைக் எனில் வண்டியின் வெளியே இருக்கும் லாக்கில் பூட்டிச்செல்லுங்கள்,

9.வண்டியின் நிறத்திலேயே ஹெல்மெட் வாங்குவது அதை வண்டியின் அங்கமாகவே நினைக்க வைக்கும், காருக்கு சீட்பெல்ட் எத்தனை அத்தியாவசியமானதோ, இரு சக்கர வாகனத்துக்கு ஹெல்மெட் அத்தியாவசியமானது என உணருங்கள். பின்னர் ஹெல்மெட் உபயோகம் மெல்லப் பழகிவிடும்.

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!




யார் இந்த மாமனிதர் ?!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
திரு.ஜாதவ் பயேங்

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம்:

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல:

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மலேசியா வாசுதேவன் பாடிய இதயமே நாளும் நாளும் காதல் பேசவா பாடல் அடுத்தாத்து ஆல்பர்ட் படத்தில் இருந்து



இளையராஜாவின் இசையில் பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் முக்கியமான ரேர்ஜெம் இதயமே நாளும் நாளும் காதல் பேசவா என்னும் பாடல் அடுத்தாத்து ஆல்பட் [1985] படத்தில் இருந்து.

இது வேகமான கடினமான உச்சஸ்தாயி மெட்டுக்களால் கட்டமைக்கப்பட்ட பாடல் மிக அருமையாக ஜானகி அம்மா மலேசியா வாசுதேவனுடன் இணைந்து போட்டி போட்டுப் பாடியிருப்பார்,இப்பாடல் இன்றும் திரும்ப திரும்ப கேட்க பிடிக்க முக்கிய காரணம் மலேசியா வாசுதேவன் அவர்களின் மணிக்குரல் என்றால் அது மிகையில்லை

ஊட்டி தேயிலைத்தோட்டத்தின் பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கும்,அதில் காதலை எதிர்க்கும் பெற்றோரை மிரட்ட பூமிக்குள் காதலர்கள் தங்களை பூமிக்குள் புதைத்துக்கொள்வது போலபும்,தங்களைச் சுற்றி அக்னி வளையம் போட்டுக்கொள்வது போலவும் வித்தியாசமான சிந்தனையில் கேமரா ட்ரிக் ஷாட்கள் நிறைய கொண்டிருக்கும் வண்ணம் இயக்கியிருந்தார் ஜி.என்.ரங்கராஜன் .நடிகர்கள் மேஜர் சுந்தர்ராஜன்,செந்தாமரை,சுகுமாரி என காதலுக்கு எதிரி பெற்றோராக தோன்றியிருப்பார்கள்.

ஒளிப்பதிவாளர் டி.டி.பிரஷாந்த் நடிகை ஊர்வசியை மிக அழகாக காட்டியிருப்பார்.
இப்பாடலை இயற்றியவர் கவிஞர் பொன்னருவி
https://www.youtube.com/watch?v=gi63VBk345s




இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா
காதல் மனமே வாழ்க தினமே
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
வானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்
ஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்
மனதிலே உறுதியாய் உறுதியே கொள்கையாய்
வாழ்ந்து காட்டுவோம்..
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
வானில் தாவி நீந்துவோம் தீயை கையில் ஏந்துவோம்
காற்று வீசும் நாள் வரை ஜோடியாக வாழுவோம்
நீரும் கூட பாடியே மாலை போடுதே
பூமி தீயை வாழ்த்தியே கீதம் பாடுதே
தடுக்கவே முடியுமா பிரிக்கவே முடியுமா
சேர்ந்து வாழுவோம்….
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா
காதல் மனமே வாழ்க தினமே
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவாஆஆ

இயக்குனர் பாலு மகேந்திராவின் வீடு திரைப்படம் மற்றும் இளையராஜாவின் ஹவ் டு நேம் இட் இசை கோர்ப்பு




வீடு படத்தில் சொக்கலிங்க பாகவதர்  பல்லவன் பஸ் பிடித்து , வளசரவாக்கத்துக்கு தானும் தன் பேத்தியும் கஷ்டப்பட்டு கட்டி வரும் வீட்டைப் பார்க்கப் போகும் அருமையான காட்சி இது.

கூட்டமில்லா பேருந்தில் கண்டக்டர் இவரை பெருசு என கூப்பிடாமல் தாத்தா கம்பிய பிடிச்சுக்குங்க!!!  எனச் சொன்னதும் மகிழ்ச்சியில் துவங்குகிறது இக்காட்சி.

மகளிர் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி இவருக்கு அமர இருக்கையை விட்டுத் தந்தவுடன் இவருக்கு பரம ஆனந்தமாக இருக்கிறது.சற்றே இளைபாறுகிறார்.

வளசரவாக்கம் வந்தவுடன் நடத்துனர் இவருக்கு அவசரமாக நினைவூட்டி முன்வழியில் சென்று இறங்குங்க எனச் சொல்ல,இவர் அவசரமாக இறங்குகிறார், குடை பேருந்திலேயே போய்விடுகிறது.கத்திரி வெயில்,தேய்ந்த செருப்பு, இனி புதுக்குடை வாங்க வேறு தண்டச் செலவு , மயக்கமாக வருகிறதே விழுந்துவிடுவோமோ என்ற பயம் என சொக்கலிங்கம் பாகவதர் அவர்கள்  கலக்கியிருப்பார்.

அங்கே இயக்குனர் பாலுமகேந்திரா தன் பிரியத்துக்குரிய இளையராஜாவின் ஹவ்டு நேமிட் இசை தொகுப்பில் இருந்து ஹவ்டு நேமிட் இசைக்கோர்ப்பை பின்னணி இசையாக பயன் படுத்தி சொக்கலிங்க பாகவதரின் அந்த தற்காலிக சோகத்துக்கு வலுவூட்டியிருப்பார்.நீண்ட காட்சி அது, அங்கே காலியாக இருக்கும் 90களின் வளரும் வளசரவாக்கத்தை நாம் பார்ப்போம், லாங்ஷாட், க்ளோஸ் அப், டைட் க்ளோஸப். என மிக அருமையான ஷாட் கம்போசிஷன்களைக் கொண்டிருக்கும்.

இப்போது அலைந்து திரிந்து தங்கள் கட்டப்பட்டு வரும்  வீட்டுக்குள் அதன் குளுமையை அனுபவிக்க, செருப்பை கழற்றி விட்டு மெல்ல நுழைகிறார் தாத்தா.  மாடிக்கு போக படியேறுகிறார்.இப்போது சோகம் மறைந்து மகிழ்ச்சி மீண்டும் குடி கொள்ளும் மிக அருமையான காட்சி. அங்கே மீண்டும் தன் பிரியத்துக்குரிய இளையராஜாவின் ஹவ்டு நேமிட் இசை தொகுப்பில் இருந்து Do Nothing இசைக்கோர்ப்பை பின்னணி இசையாக பயன் படுத்தி அந்த மகிழ்ச்சிக்கே  மகிழ்ச்சியை கூட்டியிருப்பார் இயக்குனர் பாலு மகேந்திரா.

இந்த இசைக்கோர்வைக்கு அவர் படத்தின் துவக்கத்தில் டைட்டில் கார்டில் இளையராஜாவுக்கு முறையாக க்ரெடிட் தந்திருந்தாலும்,அதற்கு பணம் தர அவரிடம் பட்ஜெட் இல்லாததால் இளையராஜாவிடம் அனுமதி பெறாமலேயே அந்த இசைக்கோர்வையை உரிமையுடன் பயன்படுத்திவிட்டார்,அதனால் இளையராஜா செல்லமாக கோபித்துக்கொண்டதையும் பின்னர் சமாதானமானதையும்  அவரே பொதுவெளியில் பகிர்ந்தும் இருக்கிறார்.இது போல இளையராஜா தன் நண்பர்களுக்கு பணம் வாங்காமல் செய்தவை எண்ணிலடங்காதவை.

https://www.youtube.com/watch?v=lOCk1P52PLc

காலம் சென்ற இயக்குனர் ஏ.பி.நாகராஜன் பற்றிய நினைவுகூறல்



காலம் சென்ற ஏ.பி.நாகராஜன் அவர்கள் என் மனம் கவர்ந்த இயக்குனர்,இவர் முன்னே இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டம் அழகியல் எல்லாம் தூசு தான். இதில் கொஞ்சம் கூட மிகையில்லை, இவரின் புராண படங்களில் நாம் பார்ப்பது நேர்த்தி, பிரம்மாண்டம் அழகியல் , அருமையான வசனம், நடிப்பு. இசை.இவை அனைத்தும் நம்மை அப்படியே ஆட்கொண்டுவிடும் , ஏபிஎன் தன் 49ஆம்  வயதிலேயே மரணமடைந்துவிட்டார்[1928–1977]. கடுமையான உழைப்பாளி. ஏ. பி. நாகராஜன் மன்னார்குடியில் ஓர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.இவரின் முழுப்பெயர்  அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராஜன்

தனது ஏழாவது வயதிலேயே டிகேஎஸ் சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றார். அக்குழுவில் பல சிறப்பான வேடங்களிலும் நடித்து வந்தார். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தார். இவர் மட்டும் நேர்த்தியாக புராணப் படங்களை இயக்கா விட்டால் நமக்கு இந்தி சினிமா, தெலுங்கு சினிமா புராணப் படங்கள் தான் சாஸ்வதமாக இருந்திருக்கும்.

அவரின் ஒப்பற்ற சில திரைப்படைப்புகள் இங்கே


  1.     ஸ்ரீ கிருஷ்ண லீலா (1977)
  2.     ஜெய் பாலாஜி (1976)
  3.     காரைக்கால் அம்மையார் (1973)
  4.     ராஜராஜ சோழன் (1973)
  5.     திருமலை தெய்வம் (1973)
  6.     அகத்தியர் (1972)
  7.     திருப்பதி கன்னியாகுமாரி யாத்ரா (1972)
  8.     பாலராஜு கதா (1970)
  9.     திருமலை தென்குமரி (1970)
  10.     விளையாட்டுப் பிள்ளை (1970)
  11.     குருதட்சணை (1969)
  12.     தில்லானா மோகனாம்பாள் (1968)
  13.     திருமால் பெருமை (1968)
  14.     கந்தன் கருணை (1967)
  15.     சீதா (1967)
  16.     திருவருட்செல்வர் (1967)
  17.     சரஸ்வதி சபதம் (1966)
  18.     திருவிளையாடல் (திரைப்படம்) (1965)
  19.     நவராத்திரி (1964)
  20.     குலமகள் ராதை (1963)
லூயி மாலி இயக்கிய பேந்தம் இந்தியா வண்ண ஆவணப்படத்தில் சென்னையைப் பற்றி காட்டுகையில் அன்றைய ஜெமினி ஸ்டுடியோவும் இடம்பெறும், அங்கே தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் படப்பிடிப்பும் வரும்,1960களுக்கு போனது போல் இருக்கும்,அந்த காணொளியை இங்கே பாருங்கள்.  சரியாக 1நிமிடம் கழித்து துவங்கும். ஆனால் லூயி மாலி தமிழ் சினிமாவை,கண்ட உடன் காதல் வருவதை, அதன் நாடகத் தன்மையான உருவாக்கத்தை,கற்பனையான பாடல்களை,கற்பனை வறட்சியான காட்சிகளை அங்கே கிண்டல் அடித்திருப்பார்.ஆனாலும் இந்த ஃபுட்டேஜ் மிகவும் முக்கியமானது. அங்கே வேஷ்டியும் சட்டையும் மேல்துண்டும் அணிந்திருக்கும் மிக எளிமையான மனிதரான  இயக்குனர் ஏ.பி.நாகராஜனின் உழைப்பைப் பாருங்கள், அவர் செட்டில் கைதேர்ந்த நடிகர்களான  சிவாஜி, ஏவிஎம் ராஜன், பாலையா ,பத்மினி, டி.ஆர்.ராமசந்திரன் போன்றோரை லாவகமாக இயக்கும் அழகைப் பாருங்கள். 
ஏ.பி.நாகராஜன் தயாரித்த மகத்தான படமான "தில்லானா மோகனாம்பாள்" திரைப்படமாகியதில் ஒரு சுவையான கதையே இருக்கிறது. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "தில்லானா மோகனாம்பாள்" ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்து கொண்டிருந்தபோதே அதை ஆவலுடன் ஏ.பி.நாகராஜன் படித்து வந்தார். அதை படமாக்க விரும்பினார்.
கதை உரிமை, ஆனந்த விகடன் ஆசிரியரும், ஜெமினி அதிபருமான எஸ்.எஸ்.வாசனிடம் இருந்தது. அவரை ஏ.பி.நாகராஜன் சந்தித்தார். தில்லானா மோகனாம்பாளை படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தார். "இக்கதையை நாம் கூட்டாக சேர்ந்து எடுப்போம். உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. படம் எடுக்கும்போது நான் தலையிடமாட்டேன்" என்றார், வாசன். ஆனால் ஏ.பி.நாகராஜன் இதற்கு சம்மதிக்கவில்லை.
"லாபமோ, நஷ்டமோ எதுவானாலும் அது என்னையே சேரட்டும். இதுதான் நான் கடைப்பிடித்து வரும் கொள்கை" என்றார், நாகராஜன். வாசன் சிரித்துக்கொண்டே, "நாகராஜன்! தில்லானாவை நீங்களே படமாக எடுங்கள். ஆனந்த விகடனில் வந்த இந்தக் கதையை நீங்கள் அதன் தரம் குறையாமல் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களுடைய திருவிளையாடல் படத்தைப் பார்த்த பிறகு எனக்கு ஏற்பட்டிருக்கிறது" என்றார்.
கதைக்கு கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்று கேட்டார், நாகராஜன். "ரூ.25 ஆயிரம் கொடுங்கள் போதும்" என்றார், வாசன். உடனே "செக்" எழுதி கொடுத்துவிட்டார், ஏ.பி.என்.   கதை உரிமைக்காக வாசன் ரூ.50 ஆயிரமாவது கேட்பார் என்று நாகராஜன் நினைத்துக்கொண்டிருந்தார். வெறும் 25 ஆயிரத்தை சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். கதைக்கு ரூ.50 ஆயிரமாவது தரவேண்டும் என்பது அவர் விருப்பம். எனவே, மீதி ரூ.25 ஆயிரத்தை கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்புவிடம் கொடுத்து விட தீர்மானித்தார்.
இந்த சம்பவம் நடந்தபோது, கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு, கண் சிகிச்சைக்காக எழும்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏ.பி.நாகராஜன் ஆஸ்பத்திரிக்குச் சென்று, அவரை சந்தித்தார். வாசனிடம் கதை உரிமையைப் பெற்ற செய்தியை சொல்லிவிட்டு, "கதை எழுதிய உங்களுக்கு என் சொந்த முறையில் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன்" என்றார்.
"சற்று நேரத்துக்கு முன் வாசன் இங்கு வந்திருந்தார். நீங்கள் அவரிடம் கொடுத்த ரூ.25 ஆயிரத்தை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்" என்றார், கொத்தமங்கலம் சுப்பு! இதைக்கேட்டு திகைத்துப்போன நாகராஜன், தான் கொண்டு போயிருந்த ரூ.25 ஆயிரத்தையும் சுப்புவிடம் கொடுத்தார்.
இந்த மாலைமலரின் முக்கியமான இயக்குனர் ஏ.பி.என் பற்றிய கட்டுரையை மேலும் படிக்க இங்கே செல்லவும்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)