த இன்ஃபார்மர்ஸ்(18+)2009 காயமே இது பொய்யடா!


ந்த படம் முன்பு ஒருமுறை அவசரகதியில் பார்த்தபோது மிகவும் நளினமாக எடுக்கப்பட்ட நான்-லீனியர் கரைம்-ட்ராமா-த்ரில்லர்  எனக் கண்டேன்,இரண்டாம் முறை பார்க்க வேண்டிய பட்டியலில் சேர்த்த இதை போன வாரம் தான்  பார்த்தேன்.,பிரமித்தேன்,அடடா!!,வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை, திரைக்கதை, வித்தியாசமான, பரீட்சார்த்தமான திரைப்படங்களின் ரசிகர்களுக்கு நிச்சயமாய் ஒரு விஷுவல் ட்ரீட்டே.  படத்தின் கதாசிரியர் அமெரிக்கன் சைக்கோ,லெஸ் தன் ஸீரோ நாவல்கள் புகழ் ப்ரெட் ஈஸ்டெர்ன் எல்லீஸ் .அவர் எழுதிய எட்டு சிறுகதைகளின் தொகுப்பான த இன்ஃபார்மர்ஸ் என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தபடம் நிச்சயம்  பாராட்டப்படவேண்டிய முயற்சியே.
ஸ்திரேலிய இயக்குனர் க்ரிகோர் ஜோர்டன் 1983ஆம் ஆண்டு சில வார கால கட்டத்தில் ஏழு வெவ்வேறு கதைகளின் ஊடே 13 வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை ஒவ்வொரு கிளைக் கதைக்குள்ளும் வரும் இன்னொரு கதாபாத்திரத்துடன் தொடர்பு கொடுத்து  (இண்டர் கனக்டட் )காட்சிகளை நகர்த்திச் செல்கிறார். கதையின் ஒரு சம்பவத்தில் முடித்த காட்சியில் அடுத்த கதையில் முடிக்கப்பட்ட காட்சியின் தொடர்போடு   ஆரம்பிக்கிறார்.  கவனித்து பார்க்கவும்.  ( உதாரணம் ஒரு காட்சி மாறுகையில் ஒருவர் காரில் புறப்பட்டால் அடுத்தகாட்சியில் வேறொருவர் காரில் வந்து இறங்குவார்.)

1.எண்பதுகளில்  லாஸ்ஏஞ்ஜலஸில் ஹெராயின்,கோக்கெய்ன்,மற்றும் மதுவின் போதைக்கும் வரைமுறையில்லா பாதுகாப்பற்ற க்ரூப் செக்ஸிற்கும் அடிமையாகி சீரழிந்து  வரும் பணம்படைத்த சமூக அந்தஸ்த்து உள்ள   பைசெக்ஸுவல் இளைஞர்கள் க்ரஹாம் (ஜான் ஃபாஸ்டர்), மார்டின், டிம் (லூ டெய்லர் ), ரேமாண்ட், அவர்களுக்கு பொதுவான செக்ஸ் பார்ட்னர் க்ரிஸ்டி (ஆம்பர் ஹியர்ட்) . சமீபத்தில் இவர்களுக்கு பொதுவான நண்பன் ப்ரூஸ்  கார் மோதி இறந்து விட.நினைவுஅஞ்சலி கூட்டம் நடக்கிறது. பின்னர் அவரவர் மேலே சொன்ன இயல்பு வாழ்கைக்கு திரும்புகின்றனர்.வாழும் வரை பார்ட்டி அனிமல்களாய் உல்லாசமாய் அனுபவித்து வாழ எண்ணுகின்றனர்.

2.மனைவி மக்களைப்பற்றி நினைக்காமல் ஸ்டுடியோவிலேயே வாழும் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வில்லியமும் (பில்லி பாப் தார்ண்டன்), செய்திவாசிக்கும் பெண் செரிலுடனான (வினோனா ரைடர் ) அவரது கள்ளக்காதலும்,விரைவில் பிரியப்போகும் மனைவிக்கு  ஜீவனாம்சமாக தன் பாதி சொத்தை கொடுக்க மனமின்றி அவளுடனே ரீகவுன்சிலிங் செய்து கொண்டு மீண்டும் சேரவருவதும். சேர்ந்த பின்னும் தொடரும்  அவரின் கள்ளக் காதலும், அவரின் போதைமாத்திரைக்கு அடிமையான மனைவி லாரா (கிம் பாசிங்கர்) அவள் மகனின் நண்பன் மார்டினுடன் (ஆஸ்டின் நிக்கோல்ஸ்) வைத்திருக்கும் உடல் தொடர்பும்.குடும்பத்தினரிடம் நிலவும் வெறுமையும் எப்படி ஒரு குடும்பம் இருக்க கூடாது என்பதற்கு உதாரணம். அதில் ஒரு விந்தையாக ,வில்லியம்  தனக்கு இருக்கும் ED குறைபாட்டுக்கு மனைவி லாராவின் கையாலேயே விதைபகுதியில் ஊசி போட்டுக்கொண்டு விரைவில்  பிரிய இருக்கும் மனைவியையே கூடுவது மிருகத்தனத்துக்கும் கீழான செயல்.அதை நேர்த்தியாய் சொல்லும் இந்த இழை.

3.ஹெராயின் போதைக்கு அடிமையான பெடோபைல் தன்மை கொண்ட புகழ்படைத்த ராக் பாடகன் பரையன் மெட்ரோ (மெல் ரெய்டோ) பதினம வயதுள்ள ஆண் பெண்ணுடன் த்ரீசம் ஆர்கி தினமும் வைத்துக்கொள்பவன். இவனுக்கு நினைவிருப்பது இவன் பெயரும், போதையும்,பின்னே செக்ஸும் மட்டுமே.இவனுக்கு புகழ் கிடைத்த அளவுக்கு அன்பு கிடைக்கவில்லை,இவன் மனதில் குடிகொண்ட வெறுமை அதை சொல்லும் மற்றொரு இழை.அவன் இரவெல்லாம் கூடிவிட்டு காலையில் கண் விழித்து அருகே நிர்வாணமாய் தூங்கும் 15வயதுக்கும் குறைந்த ஆணையும் பெண்ணையும் பார்த்து கடுப்பாகி தன் முரட்டு உதவியாளனை அழைத்து அவர்களை முரட்டுத்தனமாய் வெளியே தூக்கி போட செய்யும் வினோத கிராக்கு.இவனைப்பற்றி இந்த இழை.
4.வாழ்வில் முன்னேற சினிமாவில் சேர  கடத்தல் மற்றும் கொலைபாதகம் செய்யும்  குடும்பத்தை விட்டு ஓடிவந்து வாட்ச்மேன் வேலைபார்க்கும் சிற்றூர் இளைஞன் ஜாக் (ப்ராட் ரென்ஃப்ரோ),அவனை தேடி வந்து அடைக்கலம் கேட்ட்டு தொல்லை தரும்  பிள்ளை பிடிக்கும் சித்தப்பன் பீட்டர் (மிக்கி ரூர்கி) ,அவனுடன்  போதைக்கு மயங்கிய இளம் பெண் கூட்டாளியும். பீட்டர்  6000 டாலருக்கு டர்க் என்னும் மாஃபியா ஆளுக்கு விற்க பிடித்து வரும் தெருவில் விளையாடிய அப்பாவி சிறுவன் என இன்னொரு விந்தையான இழை .

5.நான்கு நண்பர்களில் ஒருவனான டிம்(லூ டெய்லர்) ன் விவாகரத்தான பெற்றோரில் அப்பா லெஸ் ப்ரைஸ் (க்ரிஸ் ஐசக்) மகனுடன் திடீர் பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள கோர்ட் ஆர்டருடன் டிம்மை ஹவாய் தீவுக்கு அழைத்துச் செல்வதும். மகனுடன் மது குடிப்பதும்,பாரில் சந்தித்த இரண்டு இளம் பெண்களை தனக்கும் மகனுக்கும் சேர்த்தே பிக்கப் செய்யப்பார்ப்பதும்.தனக்கு பிடித்தவற்றை மகன் மீது திணிப்பதும் ,ஏவுவதும் வேடிக்கை.மகன் ஹவாய் தீவில் ஒரு அழகிய பெண்ணை டேட்டிங் செய்வதைப்பார்த்து அவனுக்கு உதவ நினைத்தும்,மகன் போதை மற்றும் பைசெக்சுவல் தன்மை உள்ளதால் தடுமாறுவதைப் பார்த்து திகைக்கும் இன்னொரு இழை.

6.மேலே சொன்ன ஹாலிவுட் தயாரிப்பாளர் வில்லியம் & லாரா தம்பதியரின்   பைசெக்ஸுவல் தன்மையுள்ள மகன் க்ரஹாம் (ஜான் ஃபாஸ்டர்) பணத்துக்காக செய்து வரும் போதைமருந்து பரிமாற்றமும்,அவனின் அழகிய காதலி க்ரிஸ்டி (ஆம்பர் ஹியர்ட்) ஹெராயின் போதையுடன்  தன் ஹோமோ செக்ஸுவல் பார்ட்னர்களுடன் வைத்துக்கொள்ளும் செக்ஸும்,  அந்த  ஓப்பன் செக்ஸ் நடவடிக்கையினால் திடுக்குற்ற இவனுக்கு ஃப்ரீசெக்ஸ் கலாச்சாரத்தின் மீது ஏற்படும் வெறுப்பையும், அப்பாவுக்கும் அம்மாவுக்கும், சீரழிந்த அண்ணனுடன் இடையே சிக்கித்தவிக்கும் ஒழுக்கமான பதின்ம வயது மகள் சூசன் (கேமரான் குட்மேன்) கொள்ளும் துயரங்கள் என  வினோதமான இழையும் உண்டு.

7.தாய் தந்தையர் பாசம் அறவே அற்ற க்ரிஸ்டி (ஆம்பர் ஹியர்ட்) ஓப்பன் செக்ஸில் நம்பிக்கை வைக்கிறாள்,தன் உயர்தர அடுக்குமாடி வீட்டில் எந்நேரமும் ஹெராயின் உட்கொண்டும் க்ரூப் செக்ஸில் ஈடுபட்டும் வருகிறாள்.இல்லறம் என்பதை வெற்றிடமாக கருதி இருக்கும் வரை உல்லாசமாய்,பலருடன் கூடி குலவுவதிலேயே லயிக்கிறாள்,இதை வருத்தத்துடன் தட்டிக்கேட்ட காதலன் க்ரஹாமுக்கு பதிலடியாக அவன் ஒரு பைசெக்சுவலாக அவன் நண்பன் மார்டீனுடன் உடல்தொடர்பு வைத்துக்கொள்வதை தான் கண்டுகொள்ளாதது போல, அவனும் இவளின் உடல் தொடர்புகளை கண்டும் காணாமல் இரு என உரைப்பது. விஷவிதை போன்ற ஒப்பன் செக்ஸ் கலாச்சாரத்தைப் பற்றிய பயத்தை நம்முள் கிளறாமல் இல்லை.

க்ரிஸ்டியுடைய அப்பாவின் புதிய இளம் காதலி இவள் அப்பாவின் கடற்கரை வீட்டுக்கு தன் மூன்று வயது மகனுடன் குடிபெயர்கிறாள். அவளின் முன்னாள் கணவன் அந்த வீட்டின் தொலைபேசி எண்ணில் போன் செய்து மகனுடன் பேசவேண்டும் என மிரட்ட, அந்த பெண் அவனை போலீசில் பிடித்து கொடுப்பேன் என பதில் சொல்கிறாள்.கண் முன்னே இருக்கும் உறவை விட்டு புதிய உறவை தேடிப்போய் அதிலும் ஏமாந்து தோற்றுப்போகும் பிகமிஸ்டுகளைப்பற்றிய வித்தியாசமான இழையை இதில் காணலாம்.

யக்குனர் தன் நுட்பமான படைப்பால் மேலே சொன்ன அத்தனை கதாபாத்திரங்களுக்கும்  உயிரூட்டி அவர்களையும் படம் பார்க்கும் நம்மையும்  ஒரே நேர்க்கோட்டில்   சந்திக்கவைக்கிறார். துள்ளலான திரைக்கதை,எண்ணில்லா கதாபாத்திரங்களை வைத்து பின்னபட்ட கிளைக்கதை மற்றும் ஏகப்பட்ட ட்விஸ்டுகளாலும் சற்றே குழம்ப வைத்தாலும் ,  பிரபல நடிகர்கள் பில்லிபார்ப் தார்ண்டன் (த மேன் ஹூ வாஸ் நாட் தேர் ), மிக்கி ரூர்க்கி (த ரெஸ்லர்) நடிகைகள்  கிம் பேசிங்கர் (எல் ஏ கான்ஃபிடென்ஷியல்) வினோனா ரைடர் (லிட்டில் வுமேன் )போன்றோரின்  மிகப்  ப்ரொஃபெஷனலான நடிப்பாலும்,மிக நேர்த்தியான இசை,ஒளிப்பதிவினாலும் .

பைனாப்பிள் எக்ஸ்ப்ரெஸ் புகழ் இளம் நடிகை  ஆம்பர் ஹியர்ட்  இதில் துணிந்து இரண்டு டாப்லெஸ் கலவி காட்சிகளில் லயித்து நடித்துள்ளதாலும் இப்படம் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது. படத்தில் வரும் 50% காட்சிகளில் இவர் பிறந்த மேனியாகவே வருகிறார்.

டம் அந்த இரண்டு காட்சிகளுக்கே  பார்க்கலாம். இனியாவது இந்த பெண்ணுக்கு பெரிய படங்களில் வாய்ப்பு கிடைக்கட்டும். படத்தை லிமிட் ரிலீசில் வெளியிட்டதால் 300,000 அமெரிக்க டாலர்கள் தான் கல்லா கட்டியதாம். வைட் ரிலீஸ் விடுவார்களா? தல ஹாலிவுட் பாலாவுக்கே வெளிச்சம்.

டத்துக்கு இன்னொரு சிறப்பு  இது அமெரிக்கர்களாலேயே கன்னறாவி படம் என காறி துப்பப்பட்ட படமாம். இது ஒன்று போதாதா? படத்தில் காண்ட்ராவர்ஸிக்கு பஞ்சமே இல்லை என்பதற்கு? நாவலில் இன்னொரு சிறுகதையாக ஒரு வாம்பையர் (ரத்தக்காட்டேரி) கதாபாத்திரமும் வருமாம், அதை இதில் எங்கே சேர்ப்பது? சேர்த்தால் லாஜிக்கான இந்த படத்தில் இடைச்செருகலாய் தெரியும் என இயக்குனர் அதை தூக்கி விட்டாராம், நல்ல வேளை.
=============
சரி படத்தில் மேலே சொன்ன ஏடாகூடமான கதாபாத்திரங்களுக்கு என்ன ஆனது? இயக்குனர் யதார்த்தமான முடிவைத்தான் வைத்துள்ளார்.  அது என்ன?
சன்டிவி தொலைக்காட்சி சீரியல்களில் வரும் கள்ளத்தொடர்பை விட இடியாப்ப சிக்கலாய் உள்ள  1-30 மணி நேர படத்தை 
டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
அப்புறம் வாருங்கள் பேசுவோம்.
===============================
படத்தின் முன்னோட்டக் காணொளி:-


===============================
டிஸ்கி:-
படத்தை இவ்வளவு கலைத்தன்மையுடன் எடுத்த இயக்குனர் படத்தின் போஸ்டரை ஏன் உயிரற்ற முகமாய் வைத்தார். என யோசித்தேன்.  படத்தின் போஸ்டரில் இருப்பது ஒரு மானிக்குய்ன். (நகைக்கடை & ஜவுளிக்கடை பொம்மை) மேலே சொன்ன மனிதர்களை குறிக்கிறது,அவர்கள் வெளித்தோற்றத்தில் அழகாய் இருந்தாலும் உள் மனதில்  எதிலும் பிடிப்புமற்ற வெறுமையே இருக்கிறது. அதைத் தான் அந்த குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.
===========

25 comments:

||| Romeo ||| சொன்னது…

கதாபாத்திரங்கள் அதிகமா இருக்கிறது தலைவரே. பார்த்தால் தான் புரியும்,

பேநா மூடி சொன்னது…

ஹ்ம்ம்..., தல ரொம்ப டெர்ரான படம் போல ... ஃபார்மாலிட்டியாச்சு

பின்னோக்கி சொன்னது…

பார்க்கவேண்டிய பட லிஸ்டில் இதை சேர்த்தாச்சு. நன்றி.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

பாஸு . . வோட்டு போட்டாச்சு. . பதிவ நைட்டு படிசசி பின்னூட்டம் போடுறேன் . . வர்ட்டா . . .

☀நான் ஆதவன்☀ சொன்னது…

ஃபார்மாலிட்டியாச்சு :)) அப்பாலிக்கா படிக்கிறேன்

கண்ணா.. சொன்னது…

// 1-30 மணி நேர படத்தை இந்த சுட்டியில் படம் தரவிறக்கி பார்த்துக் தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் வாருங்கள் பேசுவோம்//

என்னா பாஸ் இது இப்பிடி டெஸ்ட் வைக்குறீங்க...:(

ஓக்கே..நான் இந்த தடவை இதை பாத்துட்டு வந்து பேசுறேன்...

அதே மாதிரி இந்த படிக்காம கமெண்ட் போடுற குருப்பூக்கும் டெஸ்ட் வையி தல....

பார்மாலிட்டியாச்சு..:)

ஜாக்கி சேகர் சொன்னது…

இந்த படத்தை நாளைக்கு எழுதலாம்னு இருந்தேன் செம கள்ளதொடர்பு கதை...சில சீன்சை சான்சே இல்லை...பார்மாலிட்டி பண்ணியாச்சி கார்த்தி..

வினோத்கெளதம் சொன்னது…

அடடா அற்புதமான கதைகளம்..

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

ஆகா... கதைன்னா இது கதை.... படிக்கும்போதே என்னவோ பண்ணுதே... தல டவுன்லோடு போட்டாச்சு... வாக்குகள் சேர்க்கப்பட்டன

கோபிநாத் சொன்னது…

இந்த தடவை த்ரில்லர் படத்தை எடுத்துள்ளீர்கள்.காயமே இது பொய்யடா என்பது நீங்கள் வைத்த தலைப்பா? இல்லை நம்மூரில் ஆங்கில டப்பிங் படங்களுக்கு வைத்தத் தலைப்பா? எதுவாக இருந்தாலும் விமர்சனம் வழக்கம் போல அருமை.

நீங்கள் என்னுடைய பதிவை(தளத்தை) ஹாலிவுட் பாலா மற்றும் பலருக்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி கார்த்திக்கேயன். அவர்கள் தளங்களில் இருந்து வந்து பார்ப்பவர்கள் இப்பொழுது அதிகம். User Hits Count அதிகமாகியிருக்கிறது.

ஓட்டுக்கள் போட்டாச்சு.

அண்ணாமலையான் சொன்னது…

சொல்லிட்டிங்கள்ல பாத்துருவோம்

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

நண்பா . .அந்த ஆம்பர் ஹேர்ட் சீன்கள் அத்தனையும் பார்த்தேன் . . பிரமாதம் !! :-) செம நடிப்பு !!! :-) ஒரிஜினல் டி வி டி வாங்கி மறுபடியும் பார்த்துரலாம் . . :-)

ரகுநாதன் சொன்னது…

கதை சூபரா இருக்கே...தனியாதான் பாக்கணும் போல இருக்கு

ச.செந்தில்வேலன் சொன்னது…

பார்மாலிட்டி பண்ணியாச்சி கார்த்தி..

Comments later..

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமை நண்பர் கார்த்திக்கேயன்..
எனக்கும் இந்தப் படம் பிடித்திருந்தது. நேர்மையான உங்கள் விமர்சனம் வெகு அழகு.

kailash,hyderabad சொன்னது…

Excellent review.
I missed this movie because of doubt, whether it is watchable.

now the download started.

Thank you for introduction.

(votes are done.)

பிரசன்னா இராசன் சொன்னது…

மொக்கைப் படத்துக்கு எல்லாம் எதுக்கு உக்காந்து இப்பிடி மெனக்கெட்டு பதிவு எழுதுறீங்க? பை தி வே வேலை எல்லாம் முடிஞ்சது கார்த்திகேயன். இன்னும் நான் இன்னும் என்னோட மாஸ்டர்ஸ் டிகிரி முடிக்கல. ஆராய்ச்சின்ற பேர்ல என் மண்டை காஞ்சு போய் கிடக்கு. இந்த லட்சணத்துல எங்கிட்டு எழுதுறது.இருந்தும் ரெண்டு பதிவு இது வரை போட்டு இருக்கேன். வந்து முடிஞ்ச படிச்சிட்டு கமென்ட் போடுங்க. ப்ளாக் எழுதுற இண்டரெஸ்ட் எல்லாம் போயிடுச்சு. யாரும் இல்லாத கடைக்கு டீ ஆத்துற கதையை தான் இருக்குது. இனிமே கட்டுரைகள் எழுதுன எதுனாச்சும் ஒரு பெரிய பத்திரிக்கைக்கு தான் எழுதனும்னு இருக்கேன்...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ரோமியோ
நண்பா வருகைக்கு நன்றி,படம் அவசியம் பாருங்க
===============
@பேநா மூடி
வாங்க நண்பா டெரர் தான் தனியா பாருங்க
===============
@பின்னோக்கி
வாங்க நண்பரே பாருங்க பாருங்க
வருகைக்கு நன்றி
===============
@கருந்தேள்
நண்பா வருகைக்கு நன்றி
அவசியம் பாருங்க
===============
@நான் ஆதவன்
தேவுடு வருகைக்கு நன்றி
அவசியம் பாருங்க
===============
@கண்ணா
வாங்க கண்ணா
நல்ல சுவாரஸ்யமான படம்
யாருக்கும் யாருக்கும் தொடர்புன்னு குழம்ப வைக்கும்
அது தான் பார்க்க சொன்னேன்
வருகைக்கு நன்றி
அவசியம் பாருங்க
===============
@ஜாக்கி சேகர்
வாங்க அண்ணே
நீங்களும் எழுதுங்க அண்ணே
நிறைய பேருக்கு ரீச் ஆகும்
===============
@வினோத் கௌதம்
வா குரு நல்ல கள்ளத்தொடர்பு கதைக்களம்
===============
@நாஞ்சில் பிரதாப்
வா மச்சி அப்போ பாத்துடு

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கோபிநாத் அட்லாண்டா
நண்பா காயமே இத் பொய்யடா,வெறும் காற்றடைத்த
பையடா ந்னு சொல்லுவாங்க அதை தான் தலைப்பா வச்சேன்.
------------------------------
நல்ல எழுத்துக்கள் கண்டிப்பாய் ஒரு நாள் எல்லோருக்கும்
ரீச் ஆகத்தான் செய்யும்,இதுக்குப் போய் நன்றி எல்லாம்?
தல ஹாலிவுட் பால லின்கும் தமிலிஷும் தான் பார்வையாளர்களை
கூட்டி வரும்.
நண்பா வருகைக்கு நன்றி,படம் அவசியம் பாருங்க
===============
@அண்ணாமலையான்
வாங்க வருகைக்கு நன்றி பாஸ்,படம் கண்டிபாய் பாருங்க
===============
@கருந்தேள்
நண்பா,படம் பார்த்துட்டிங்களா?
ஆம்பர் ஹேர்ட் அந்த ஹெராயின் அடித்துவிட்டு கண்களில் கண்ணீர் மல்க
வைத்துக்கொள்ளும் கூடல் காட்சி கவிதை.
யாரும் மிஸ் பண்ணக்கூடாது.
ஒரிஜினல் டிவிடி யில் இன்னும் கட்டான காட்சிகள் இருக்கலாம்
ட்ரை பண்ணுங்க

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ரகுநாதன்
வாங்க நண்பா
பாருங்க அவசியம்
===============
@செந்தில்வேலன்
வாங்க நண்பரே வருகைக்கு நன்றி
===============
@சரவணக்குமார்
வாங்க நண்பரே,படம் பாத்துட்டீங்களா?பிடித்திருக்கும். வருகைக்கு நன்றி
===============
@கைலாஷ் ஹைதராபாத்
வாங்க நண்பரே , அவசியம் பாருங்க.வருகைக்கு நன்றி
===============
@பிரசன்னா இராசன்
வாங்க நண்பரே,எக்ஸாம்ஸ் முடிந்ததா?
வாங்க மீண்டும் ஒரு ரவுண்டு,எல்லோரும் படிப்பார்கள்,என்ன கூடி வாழனும், அதுதான் கீ, என்ன படம் பிடிக்கும்?உங்களுக்கு?
எனக்கு எல்லா வித்தியாசமான படங்களும் பிடிக்கும் தான்.
நல்லா பெரிய பத்திரிக்கைக்கு எழுதுங்க நண்பா .வாழ்த்துக்கள். வருகைக்கு நன்றி

பிரசன்னா இராசன் சொன்னது…

பல்ப் ஃபிக்‌ஷன் ரேஞ்சுக்கு எடுக்கிறேன் பேர்வழி, என்று சத்தியமாக இந்த படத்தில் பொறுமையை சோதித்து விட்டனர். இது மாதிரி எழுதுனீங்கன்னு வைச்சுக்கோங்க, அப்புறம் படம் பார்த்துட்டு வந்து உங்களைத் தான் பின்னூட்டத்தில் மொத்துவாங்க...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@பிரசன்னா
உங்க நல்ல படம் என்பதற்கான அளவு கோல் என்ன?
இது மொக்கை படமா?உங்களுக்கு மொக்கைன்னு பட்டா ஆச்சா? நான் ஒரு நல்ல படம் எழுத எத்தனை மொக்கை படம் பாக்கறேன்னு தெரியுமா?
படத்தில் வரும் நிறைய கதாபாத்திரங்கள் தான் அந்த குழப்பத்துக்கு காரணம்.
பல்ப் ஃபிக்‌ஷன் ஸ்டைல் இருக்கு அதற்காக இவ்வளவு நளினமாய் எடுக்கப்பட்ட படத்தை ஒதுக்கி விட முடியாது.பல்ஃப் ஃபிஷன் தாக்கம் இல்லாமல் ஒரு பரிட்சார்த்தமான படம் கொடுப்பது கடினமே.
படம் எனக்கு மிகவும் பிடித்தது.

பெயரில்லா சொன்னது…

நல்ல விமரசனம் தொடருங்கள் மேலும்

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

பெயரில்லா சொன்னது…

i really didn't get the movie

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)