துபாய் டு சென்னை ஜெட் ஏர்வேஸ் பயணம்!....:(

போ மாதம் 15ஆம் தேதி 15 நாள் விடுப்பில் சென்னை சென்றேன்,என் நண்பரின் பழிவாங்கும் நடவடிக்கை  தெரியாமல் அவர் ஆலோசனையின் பேரில் ஜெட் ஏர்வேஸில் முதல் முறையாக ரிசர்வ் செய்து பயணித்தேன்,டிக்கட் எமிரேட்ஸ் விமான சேவையை விட வெறும் 100 திர்காம்கள்(1250ரூபாய்) குறைவு, ஜெட் ஏர்வேஸின் உள்ளூர் விமான சேவை எப்படி என அறியேன், ஆனால் "துபாய் டு சென்னை" சர்வதேச விமான சேவை மிகவும் மட்டம் என இந்த பதிவு மூலம் எல்லோருக்கும் சொல்ல விழைகிறேன்..

ஏன் இது போன்ற விமான சேவையில் பயணம் செய்யக்கூடாது?
 1.யணம் செய்யும் நாற்காலிக்கடியிலேயே பயணிகள் பெட்டியை,பையை,வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியிருக்கும். ஆம், முதலில் வருபவர்கள் அப்பா!!!! மேலே பெட்டியை வைத்தாகிவிட்டது என பொருளை அடுக்கியிருக்க, பின்னே வருபவர்கள் பை, பெட்டிகள், விமான பணிப்பெண்களால் அசுரத்தனமாக உங்கள் பொருட்கள் மீது திணித்து அமுக்கப்படும்,அதில் உங்கள் லேப்டாப் ஸ்க்ரீன், நண்பர்களுக்கு வாங்கி செல்லும் ஃபாரின் சரக்கு,சாக்லேட்கள்,ஏனைய  உடையும் பொருட்கள் சேதாரமாகக்கூடும், நீங்கள் பணிப்பெண்களை, (அ) பணிஆண்களை ஆட்சேபிக்கும் பட்சத்தில் உங்கள் உடைமை தரைக்கு வந்துவிடும், உங்கள் காலுக்கடியில் வைத்துக்கொண்டு ஹாய்யாக முடிந்தால் பயணிக்கலாம், என்ன? பாத்ரூம் போக வெளியே வர முடியாது, விமானத்துக்கு ஆபத்து என்றால் வெளியேற முடியாது. தலைவேதனை, பார்க்க படம், இது அங்கே நிதர்சனமாம்.

2.ங்கள் மனைவியையோ,அம்மாவையோ,மகளையோ தனியே இதில் அனுப்பினீர்கள் என்றால் அவர்கள் சர்வ அலட்சியமாக சக ஆண் பயணிகளுடன் மிகச்சிறிய கவர்ச்சி சீட்டில் (மிகவும் சிறியது, குறுகியது) அருகருகே அமர வைக்கப்படுவர், ஆண்களில் சிலர் சாதுவாய் இருப்பர், சிலர், 2 கட்டிங் போட்டு விட்டு லேசாய் உராசுவர், அவர்களை உரசிக்கொண்டு தான் யாரும் வெளியேறவே முடியும்.குழந்தை வைத்திருக்கும் பெற்றோருக்கு எமிரேட்ஸில் கிடைக்கும் சிறப்பு சேவை இங்கே எதிர்பார்க்க வேண்டாம்,டிஷ்யூ பேப்பர் கூட கிடைக்காது.

3.சியால் குளிரெடுத்து நீங்கள் போர்வை கேட்டால் அது கொடுத்து தீர்ந்து போயிருக்கும் (மொத்தமே 20 தான் இருக்கக்கூடும்), அவர்கள் அசடு வழிந்தபடி டோண்ட் ஒர்ரி ஸ்ஸார், “ஐ ராக் டவ்ன் ஏஸி” என்பார்கள், இரண்டாம் முறை தண்ணீர் கேட்டால் ஊருக்கு போய் குடித்துக்கொள்ளலாம், அவ்வளவு லேட்டாய் வரும். சரக்கு முதலில் கேட்கும் கனவானுக்கு  மிகவும்  அளந்து  கொடுக்கப்படும் (தீர்ந்துடுமாம்), இரண்டாம் முறை கேட்டால் தட் இஸ் யெ எம்ப்டி பாட்டில் ஸ்ஸார், என அறிவுறுத்தப்படும்,விடாக்கண்டர்கள் எனக்கு பீராவது கொடு என குடிக்கலாம், இவர்கள் அதிலேயே 2 ப்ராண்ட்களை தருகிறார்கள்.

4.வெஜிடேரியன் உணவோ, நான் வெஜிட்டேரியன் உணவோ அகால வேளை அதாவது 1 மணிக்கு மேல் தான் கிடைக்கும், நீங்கள் முன்பே சாப்பிட்டிருக்க வில்லை என்றால் உங்கள் பாடு திண்டாட்டம் தான். கவலையில்லை நீங்கள் சீட்டுக்கடியிலிருந்து எடுத்து சாப்பிடலாம், வாங்கிப்போன சரக்கையும் குடிக்கலாம்.யாரும் அலட்டிக்கொள்ளமாட்டர்கள்.

5.ரவு11-10 க்கு புறப்பட் வேண்டிய விமானம் 12-30க்கு தான் புறப்படும், அதுவரை பெட்டி வைக்க விமானத்துக்குள்ளேயே அடிபிடி தள்ளு முள்ளு நடக்கும், உங்களை டெர்மினல்-1 விமான நிலையத்திலிருந்து பேருந்தில் ஏற்றி கிளப்பிக் கொண்டு போய் டெர்மினல் -3 ல் இருக்கும் பென்சில் போன்ற இந்த விமானத்தில் ஏற்றும் போதே உங்களுக்கும் உங்கள் குடுமபத்தாருக்கும் தாவு தீர்ந்துவிடும். நீங்கள் முதல் பேருந்தில் போய்விட்டால் தப்பித்தீர்கள், 2ஆம் அல்லது 3ஆம் பேருந்தில் போனீர்கள் என்றால், உங்கள் உடமைகளுக்கு இடமில்லை,அதற்கு தரைடிக்கெட் தான்..

6.டல் பருமனானவர்கள், உயரமானவர்கள் பயணம் செய்ய லாயக்கிலாத நட்டு போல்டுகள் கூட வெளியே தெரியும் சீட்டுகள்(cheap interiors), 2அடி விட்டம் மட்டுமே கொண்ட குறுகிய நடைபாதை. இதே போல சீட்டுகளை நான் திருவள்ளுவரிலும் நேசமணியிலும் பார்த்திருக்கிறேன்.

7.ரமான தரைகொண்ட , கைகழுவ சோப் திரவமில்லாத ,துடைக்க காகிதம் இல்லாத, கழிப்பறைகள். பிஸினஸ் கிளாஸ் இருக்கிறதா என அறியேன்.எனக்கு நினைவில்லை.


என்னடா இவன் குறைகளையே அடுக்குகிறானே,நிறையே இல்லையா?என்றால் இருக்கிறது.

1.யாருக்கெனும் அலுவலகம் 7-00 மணிக்கு முடிந்து வீடு சென்று குளித்து சாவகாசமாய் கிளம்பி, வார இறுதி போக்குவரத்தில் சிக்கி, 15 கிலோக்கணக்காக  ஹாண்ட் பேக்கேஜ்கள் கொண்டு வந்தாலும் வாங்கிக்கொண்டு இவர்கள் விமானத்திற்கு அனுப்பிவைப்பர்.11-10க்கு புறப்படும் விமானத்துக்கு முன் கூட்டியே செக்-இன் செய்ய முடியாது,8-30க்கு தான் செக்கின் கவுண்டரே திறக்கும், அதுவும் தனி கவுண்டர் கிடையாது, ஹைதராபாத்துக்கும் சென்னைக்கும் ஒரே கவுண்டர். 32 கிலோ மட்டுமே ஒரு பெட்டியில் இருக்குமாறு இந்த ரூல்ஸ் ராமானுஜர்கள் சொல்கிறார்கள். ஏர்போர்ட் ஆர்டராம். ஒருவரால் எளிதாய் தூக்கி போட வசதியாக இருக்குமாம்.

2. சாப்பாட்டில் கேரட் தூவிய தயிர் சாதம்,எலுமிச்சை ஊறுகாயும்,சக்கரை பொங்கலும் தருகின்றனர்.

3.இரவு 12-30 க்கு விமானம் புறப்பட்டாலும், தனியார் டவுன் பஸ் போல அடி அடியென அடித்து கொண்டு போய் 5-15க்கு சரியாக போய் விடுகின்றனர்.

4.சிறிய விமானமாதலால் 100 பேரின் லக்கேஜ் மட்டும் தான் கன்வேயரில் சுற்றும்,ஆகவே உங்கள் லக்கேஜ் சீக்கிரம் வந்திருக்கும்,எடுத்துக்கொண்டு கிளம்பலாம்.

டிஸ்கி:-
நான் விமானத்தில் இமிக்ரேஷன் விண்ணப்பம் பூர்த்தி செய்த பொழுது எந்த உள்குத்தும் இல்லாமல் பச்சை மையில் பூர்த்தி செய்து கையொப்பமும் இட்டுள்ளேன்,சரியாக கவுண்டரில் இருந்த கலர் பிளைண்ட்னெஸ் இல்லாத ஆஃபிஸர்,”ஏன் சார் நீங்க என்ன கெஸட்டட் ஆபிசரா?பச்சை மையில் கையெழுத்து போட்டிருக்கீங்க!!! என்று சொல்லி அதை அடித்து நீல மை பேனாவை தள்ளினார்.அதில் கையெழுத்து போட்டபின் முகத்தை திருப்பிக்கொண்டார்.அதுவும் மாறாது,நாமும் மாறமாட்டோம், என்று சிரித்தபடியே தாய்மண்ணில் கால் வைத்தேன். இனி ஆபீஸர் முன்னாடி யாரும் பச்ச மை யூஸ் பண்ணாதீங்கப்பா!!!!

ரும் போதும் ஜெட் ஏர்வேஸ் தான்,அதே விமானம்,ஸ்வாகத் என ஹிந்தியில் எழுதிய போர்டுகள்,என்ன தயிர் சாதத்துக்கு பதில் வெஜிட்டபிள் பிரியாணி.மாலை 6-30 மணிக்கு சரியாக புறப்பட்ட விமானம் 10-30 மணி உள்ளூர் நேரத்துக்கு துபாயில் சென்று சேர்ந்தது.இது முழுக்க முழுக்க என் அனுபவமே,விதிவிலக்குகள் இருக்கலாம்.
===============00000================ 
மிக முக்கிய அறிவிப்பு:-
காசு 100 திர்காம் கூட போனாலும்,எமிரேட்ஸ் போன்ற விமான சேவையில் செல்லுங்கள், அது ஸ்டார் ட்ரக்ஸில் தரக்கட்டுப்பாடு சான்றிதழில்  5க்கு 4 ஸ்டார் வாங்கி இருக்கிறது, அங்கே குழந்தையுடன் செல்லும் பெற்றோருக்கு ராஜமரியாதை தான்.நிறைய பலன்கள் உண்டு. 

மேலும் போகிப் பண்டிகை/அதற்கு முன்நாள் இரவு அன்று விமான பயணம் செய்வதை தவிருங்கள், மூளை கெட்ட கயவர்களால் எல்லாவிதமான குப்பைகளும் கொளுத்தப்பட்டு, வான் மண்டலமே கரு மேக மூட்டமாய் இருப்பதால் ,விமானம் குறைந்தது 6 மணிநேரமாவது தாமதமாகும்,பொங்கல் பண்டிகைக்கு தன் சென்னை வீட்டிற்கு செல்பவர்கள்,கடுப்பாகி பெங்களூரில் உறவினர் வீட்டில் இறங்கிய சம்பவங்கள் நிறைய உண்டு.அது கொடுமையான அனுபவம்,பசிக்கும் வயிறுக்கு காலையில் சாப்பிட எதுவும் கிடைக்காமல் என் நண்பர்களும் அவர் குடும்பத்தாரும் பட்ட அவஸ்தைகளை ஒரு படமாகவே எடுக்கலாம். :)
===============00000================ 

செல்போன் எமனை அணையுங்கள்!...

ருவரை குறைசொல்வது, அவர் உயிருடன் இருந்தாலோ இல்லையென்றாலோ  நம்மில் மிகவும் சகஜமே. இதோ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX-812)  மங்களூர் விமான விபத்து நிகழ்ந்து உறவினரும் ஏகப்பட்ட கண்ணீருக்கிடையில் கிடைத்த உறவுகளின் எரிந்த மிச்சங்களை வாங்கிச்சென்று மரியாதையும் செய்தாகிவிட்டது, ஒரே உடலின் மிச்சத்தை மூன்று குடும்பங்கள் சொந்தம் கொண்டாடிய சோகமும் நடந்தது, என் அலுவலகத்தின் அருகே உள்ள க்ராசரி கடையின் கல்லாவில் அமர்ந்திருந்த முகம்மது என்பவரும் அதில் பயணித்து இறந்து போனதால் அவரின் சிரித்த முகத்தை காணமுடியவில்லை, மலையாள பண்பலை வானொலி வேறு அதில் பயணித்த 8 பேர் கள்ள பாஸ்போர்ட் வைத்திருந்தனர் என்று இறந்தவர்களுக்கு கறைபூசும் செயலையும் செய்தது, ஏர் இந்தியா கல்ஃப் ந்யூசில் முழுப்பக்க விளம்பரம் தந்து இறந்துபோனவர்களின் குடும்பத்தார் தகுந்தஆவணங்களை கொடுத்து உடனடியாக நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.,என்றாலும் விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரபூர்வமான செய்தி வரவில்லை.10,000 மணிநேரத்திற்கும் அதிகம் பறந்த, 19 முறை இதே மங்களூரில் தரை இறங்கிய அனுபவமும் வாய்ந்த பைலட் தவறு செய்திருக்க எத்தனை சதம் வாய்ப்பிருக்க முடியும்?சரி விபத்தை தடுக்க நம்மால் எதாவது செய்யமுடியுமா?நிச்சயம் முடியும்.

ம்மில் எத்தனை பேர் விமான பயணம் செய்கிறோம்,எத்தனை பேர் விமானம் புறப்படும் முன்னர் செல்போன் எமனை அணைக்கிறோம், விமானம் விமான நிலைய ஓடுதளத்தை தேடி அலைகையிலேயே நம்மில் நிறைய பேர் சிம்மை அமைதியாக மாற்றி உயிர்பித்தும் விடுகிறோம். அது விமானம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெறும் தொலைதொடர்பு சிக்னல்களை தடுத்தாட்கொண்டு விமானத்தை கடைசிகட்ட சோதனைகளுக்கு ஆளாக்குவது என்பது திண்ணம். ஆகவே உங்கள் முன் யாரேனும் இந்த செயலை செய்தால் அவரை தடுங்கள், அவர் மீறி அதை முயன்றால் விமான பணியாளர்களிடம் சொல்லுங்கள், அவர்கள் உண்டு இல்லை என்று செய்து விடுவர். உங்கள் உயிருக்கு முன் இது *****க்கு சமம். இது விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. விமானம் தரையிறங்கிய பின்னர் செல்போன்களை உயிர்பிப்போம், இனி போக வேண்டாம் இன்னுயிர்கள், மனிதத்தை இப்படியாவது காப்போம். அறிவியல் சான்றுகளுடன் இதெல்லாம் ஒன்றும் விபத்துக்கு காரணமில்லை என ஆயிரம் விவாதம் செய்யட்டும்,இது உயிர் விஷயம்.இந்த சுட்டியையும் படியுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)