ஓ ப்ரதர் வேர் ஆர்ட் தோ? (2000) உலக சினிமாபார்வை,


அங்கீகரித்தமைக்கு நன்றி:-

O Brother, Where Art Thou? (2000)

ஹாலிவூடின் பெர்ஃபெக்ட்ஷனிஸ்ட் இயக்குனர் ப்ரம்மாக்களான கோயன் ப்ரதர்ஸின் இன்னுமொறு அற்புதமான படைப்பு.கலைத்தன்மை ஒவ்வொரு ஃப்ரேமிலும் மிளிர்கிறது.

பார்க்கும் நமக்கு பரவசமும் ஆச்சர்யமும் மட்டுமே மிஞ்சுகிற்து.உலகில் 1930 களில் ஏற்பட்ட க்ரேட் டிப்ரெஷன் பற்றி அறிந்திருப்போம்,அந்த கால கடத்தில் மிஸ்ஸீசிப்பியில் நடந்த பல சுவையான சம்பவங்களை கோர்த்த அழகிய ப்ளாக் ஹ்யூமர் கதம்பம் இது என்றால் மிகைஇல்லை.ஒடிசி என்னும்  க்ரேக்க காப்பிய இலக்கியத்தின் தாக்கமும் இந்த படத்தில் இருக்கும்.

மூன்று பேர் உடல்கள் ஒன்றாய் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சிறைகைதிகளான எவெரெட்(George Clooney), பீட் (John Turturro), மற்றும் டெல்மர்(Tim Blake Nelson) சிறையிலிருந்து தப்பிக்கின்றனர்.

எதற்காக? எவரெட் தாம் சிறைக்கு வருவதற்கு முன் ஒரு வங்கி வாகனத்தில் இருந்து கொள்ளை அடித்த 12 லட்சம் டாலர்களை தம் வீட்டருகே பதுக்கி வைத்திருப்பதாகவும்,அந்த வீடு இன்னும் நான்கே நாளில் பவர் ப்ளாண்ட் திட்டத்திற்காக ஏரி ஆக்கப்படும்,அதற்கு முன் அந்த பணத்தை மீட்டு மில்லியனர் ஆக வேண்டும் என ஆசைகாட்டி மற்ற இருவரையும் உடன் கூட்டிக்கொண்டு தப்பிக்கிறான்.

ஆனால் உண்மை நிலவரம் இவ்வாறாக இருக்கிறது.
எவரெட்டின் மனைவி பென்னி (Holly Hunter), தன் ஆறு பெண் குழந்தைகளுடன் வாழ வேறு வழி தெரியாமல் தேர்தல் பிரசார அதிகாரியை மணம் முடிக்க இருப்பதாக சிறைக்கு தமக்கு வந்த கடிதத்தை அடுத்தே எவெரட் நாடகம் ஆடி இந்த வீரசாகச பயணத்தை தொடர்கிறான்.

வழியில் மூவரும் ரயிலில் ஏற எத்தனித்து,முடியாமல்,ஒரு பார்வையற்றவர் ஓட்டிவந்த ரயில்வே ட்ரெய்லரில் பயணிக்கின்றனர்.அவர் அருள்வாக்கு போல உங்களுக்கு நல்லகாலம் பொறக்குது, அதற்கு முன்ன கொஞ்சம் சோதனை இருக்குது என்று  சொல்கிறார்.

இப்போது மூவரும் பீட்டின் அண்ணன் வீட்டுக்கு சங்கிலியை அகற்றவும் ,இரவு தங்கவும் செல்கின்றனர்.ஆனால் அவனோ போலீசிடம் இவர்களை பற்றி போட்டுக்கொடுக்க ,உடனே வந்த போலிஸ் படை இவர்களை பிடிக்க வந்து விட்டு தாங்களே தானியங்கி துப்பாக்கி ரவைகளுக்கு இரையாவது ப்ளாக் ஹ்யூமரின் உச்சம்,அதற்காகத்தானே நாம் கோயென் ப்ரதர்ஸை சிலாகிப்பது?,இதிலும் ஏமாற்றவில்லை.

இப்போது மூவரும் காரை திருடிக்கொண்டு பயணிக்க, எவரெட்டின் குத்திட்டு கொண்டு நிற்கும் தலை முடிக்கு ஹேர் நெட்டும்,ஹேர் க்ரீமும் ஒரு கடையில் வாங்குகின்றனர்.ஒரு ஊர் கோழியை அடித்து விருந்து சமைக்கின்றனர்.அப்போது அருகே இருக்கும் ஆற்றில் பாப்டிசம் நடக்க
பீட்டும், டெல்மரும் சென்று வாங்கிக்கொள்கின்றனர்.எவரெட் அவர்களிருவரையும் கிண்டல் செய்கிறான்.

கார் ஒரு நாற்சந்தி சாலையில் நின்ற கருப்பினத்தை சேர்ந்த டாமி யை எற்றிகொண்டு பயணிக்க,டாமி பக்கத்து ஊரில் உள்ள ரேடியோ ஸ்டேஷனில் சென்று கிடார் வாசித்து பணம் சம்பாதிக்க போகிறேன் என சொல்ல , இவர்களும் சென்று சோக கீதமான "Man of Constant Sorrow" என்னும் பாடலை உச்ச கலக்கல் ஸ்தாயி இல் பாடி குருட்டு ரேடியோ ஸ்டேஷன் அதிகாரியிடம் பணம் அதிகமாக கறக்கின்றனர்.தங்கள் குழுவை the Soggy Bottom Boys என அறிமுகம் செய்து கொண்டு வெளியேருகின்றனர்.


அவர் அந்த பாடலை பின்னொரு சந்தர்ப்பத்தில் ரேடியோவில் ஒலிபரப்ப,செம ஹிட்டாகிவிடுகிறது.ஆனால் இது இவர்கள் அறிந்திருக்கவில்லை.

இப்போது கைதிகள் மூவரும் சாலையில் நடக்க,அவ்வழியாய் போலீசிடம்     இருந்து தப்பி வந்த வங்கி கொள்ளையன் பேபி ஃபேஸ் ஜார்க் நெல்சன் என்பவனது கார் வர,இவர்கள் காரை நிறுத்தி அவனுக்கு வழி காட்டுவதாக சொல்லி காரில் ஏறிக் கொள்ள,மூட்டை நிறைய பணம் இருக்கிறது.இருந்தும் அவன் திருப்தி அடைய வில்லை.எதிர்ப்பட்ட போலீசாரையும்,பசுக்களையும் சுட்டுக் கொல்கிறான்.அவன் இன்னுமோர் வங்கிக்கு சென்று கொள்ளை அடிக்கிறான்,


இப்போது  நால்வரும்  ஒரு காட்டில் தீ வளர்த்து குளிர்காய,கொள்ளை அடித்த எல்லா பணத்தையும் இவர்களுக்கே தந்து விட்டு பேபி ஃபேஸ் போய் விடுகிறான்.மறு தினம் இவர்கள் காரில் பயணிக்கையில் காட்டாற்றருகே இனிய பாடல் ஓசை கேட்க,இவர்கள் அங்கு மூன்று அழகிகள் குளிப்பதை கண்டு,(இது கோயன் படம் மேட்டர் ஒன்றும் இராது)அறிமுகம் செய்து கொண்டு பேச,அவர்கள் மூவரும் இவர்களை மயக்கி மது புகட்டி மயக்கமேற்படுத்தி,பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு பீட்டை மட்டும் கூட்டிச் செல்கின்றனர்.


மயக்கம் தெளிந்த இவர்கள் பீட்டின் உடைகள் தரையில் கிடக்க,அதனுள்ளே குதித்த தவளையை பீட் என எண்ணிக் கொள்கின்றனர்.பீட்டை அந்த அழகிகள் இப்படி மாற்றிவிட்டனர் என சந்தேகித்து தவளையை பிடித்து பெட்டியில் போட்டுக்கொண்டு ஒரு உணவகம் செல்ல,அங்கு வந்த பைபிள் சேல்ஸ்மேன் ஒருவன் இவர்களை வியாபார விஷயம் பேசலாம் என கூறி கூட்டி செல்கின்றான்.ஒரு மரத்தடியில் வைத்து இவர்களை அடித்து பணத்தை பிடுங்கிக்கொண்டு அந்த தவளையையும் பிடித்து நசுக்கி கொன்றுவிடுகிறான்.மீண்டும் ஒரு விவசாயியின் வைக்கோல் வண்டியில் எவெரெட்டின் ஊருக்கு பயணம் செய்கின்றனர்.

இவர்கள் பீட் இறந்துவிட்டதாகவே நினைக்க,பீட் போலீசாரிடம் மீண்டும் மாட்டி எல்லா ரகசியங்களையும் சொல்ல,போலீஸ் எவரெட்டின் வீட்டுக்கு விரைகிறது.அங்கேயே இவர்களுக்கு சவக்குழியும் மரத்தில் தூக்கு கயிறும் கட்டி தயாராக வைக்கிறார்கள்.

இப்போது எவரெட்டும்,டெல்மரும் ஊருக்கு வர,அங்கே தேர்தல் ப்ரசாரம் விருவிருப்பாக நடக்கின்றது,எவரெட்டின் இரண்டு பெண்களும் பிரசார மேடையில் பாட்டு பாட,எவரெட் கூட்டத்தை விலக்கி அவர்களை அடைந்து
கட்டிக்கொள்ள,அவர்கள் நீங்கள் ரயிலில் அடிபட்டு இறந்ததாக அம்மா சொன்னார்கள்,என சொல்ல இவன் அதிர்கிறான்.

அவர்களிடம் அம்மா எங்கே என கேட்க,அம்மாவின் புதிய திருமணம் பற்றியும்,இன் நாள் அன்கிள், நாளைய அப்பாவான தேர்தல் பிரசார அதிகாரி
பற்றியும் சொல்ல,அவன் அவர்கள் ஷாப்பிங் செய்யும் வுல்ஸ்வொர்த் கடை சென்று அவளை சமாதானம் செய்து,திருமணத்தை நிறுத்த கேட்கிறான்,அவள் ஏழாவதாக ஒரு குழந்தை அந்த அதிகாரிக்கு பெற்றதையும் சொல்லி விலகிவிடு எங்கிறாள்.இவன் கேட்காமல் அந்த அதிகாரியை அடிக்கப்போக அவர் இவனை நன்கு அடித்து,கடையின் வெளியே தூக்கி போட்டு விடுகிறார்.

இப்போது நொந்து போன எவரெட்டும்,டெல்மரும் சினிமா பார்க்க செல்ல,அங்கே படம் நிறுத்தப்பட்டு சிறைக்கைதிகள் படம் பார்க்க அழைத்து வரப்படுகின்றனர்.அந்த கும்பலில் பீட் இருப்பதை பார்த்து இவர்கள் ஆனந்தப்படுகின்றனர்.பீட் இவர்களை மெதுவாக அழைத்து பணம் இருக்குமிடம் செல்லாதே,அதை நான் போலிசிடம் சொல்லி,அவர்கள் அங்கே வெயிட்டிங்,என சொல்ல,இவர்களுக்கு விளங்கவில்லை.

அவர்கள் முன்பு சந்தித்த பேபி ஃபேஸ் கொள்ளையனை போலீஸ் விலங்கு போட்டு ஜில்லெட்டினுக்கு அழைத்துபோவதை பார்க்கின்றனர்,பின்னாலேயே மக்களும் ஒரு பசுவும் செல்கிறது(செம காமெடி)

இவர்கள் பீட் சொன்னது  புரியாமல் அன்று இரவே,பீட் இப்போது இருக்கும் சிறைக்கு சென்று,அவன் கை விலங்குகளை உடைத்து வெளியே கூட்டி வருகின்றனர்.

பீட் இவர்களிடம் போலீசிடம் உண்மையை சொன்னதற்கு மன்னிப்பு கேட்கிறான்.இப்போது தான் பணம் பற்றிய உண்மையை எவரெட் மற்ற இருவரிடமும் சொல்ல அவர்கள் கொலைவெறி கொண்டு இவனை தாக்க,பக்கத்து காட்டில் நிறவெறி கும்பலான Ku Klux Klan மற்றும் lynch mob, ஆகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்போது அமெரிக்காவில் வழமையிலிருந்த சந்தேகத்துக்கிடமான கருப்பினத்தவரை ,யூதர்களை பிடித்து வந்து தூக்கில் ஏற்றிக் கொல்லும் செயலை செய்ய ,இவர்களின் நண்பன் டாமியை பிடித்து வைத்துள்ளதை கண்டு அதிர்கின்றனர்.


அவனை காக்க எண்ணுகின்றனர்.அங்கே எரிந்துகொண்டிருக்கும் பெரிய சிலுவையை தள்ளி விட்டு,அந்த காட்டுமிராண்டி கும்பலிடமிருந்து அவனை காக்கின்றனர்.(இந்த கும்பலை பற்றி அவசியம் சுட்டி அழுத்தி படிக்கவும்)

இப்போது நால்வரும் அங்கே தன் மனைவி பங்கேற்க்கும் தேர்தல் பிரசார விருந்துக்கு வயதான வேடம் பூண்டு சென்று அவளிடம் கெஞ்சுகிறார்கள்.
அவள் மறுக்கிறாள்.இவர்கள் வேறு வழி தெரியாமல் சோக கீதமான "Man of Constant Sorrow" என்னும் பாடலை உச்ச கலக்கல் ஸ்தாயிஇல் பாடி கலக்க,
வந்திருந்த கூட்டம் இவர்கள் தான்  the Soggy Bottom Boys என அடையாளம் கண்டுகொள்கின்றனர்.

இவன் மனைவியும் கூட்டமும் மிகவும் ஆனந்தமடைந்து,ஆரவாரம் செய்ய,தேர்தலில் நிற்கும் கவர்னரும் மேடை ஏறி மக்கள் முன்னால் நின்று தாம் எப்பொதும் நிறவெறி கொண்டதில்லை என்றும்,இவர்கள் மேலே உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்வதாக கூறி உறுதி தருகிறார்,இவர்களை அரசவை பாடகர்களாகவும் அறிவிக்கிறார்,இவர்கள் அளவில்லா உற்சாகமடைகின்றனர்.

மனைவி புதிய கணவனின் மோதிரத்தை திருப்பி கொடுத்து விட்டு,இவன் கையை பிடிக்க,இவன் நம் மோதிரம் எங்கே என கேட்க,அவள் வீட்டில் உள்ளது அது மூழகுவதற்குள் சென்று எடுத்துவா,அப்போது தான் ரொமான்ஸ் என்கிறாள்.இவர்கள் அங்கு விரைய ,ரேடியோ இல்லாத ,ரேடியோ கேட்கும் பழக்கம் இல்லாத சிறை அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்ள,இவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல்  நால்வரையும்  தூக்கில் போட போக .எவரெட் கடவுளிடம் தன் குழந்தைகளை மீண்டும் காண அருள் செய்யுமாறு கடைசி நிமிடத்தில் இரைஞ்ச, நடக்கிறது அதிசயம்.

அரசால் திருப்பி விடப்பட்ட மடை திறந்த வெள்ளம் இவர்கள் வீட்டையும்,அந்த மலை பள்ளத்தாக்கையும் மூழ்கடிக்கிறது.ஒரு வழியாக மண்ணில் இருந்து மேலே கிளம்பிய சவபெட்டியை பிடித்துக் கொண்டு தப்பிக்க,டாமி இவன் வீட்டு மேசையை பிடித்தபடி மிதக்க,இவன் மேசை இழுப்பறையில் இருந்து மோதிரத்தை எடுத்துக் கொண்டுபோய் மனைவியிடம் தர,


அவள் இது என் மோதிரமில்லை,இறந்து போன  என் ஆண்டியின் மோதிரம், நான் மோதிரத்தை மெத்தைக்கு அடியில் அல்லவா?வைத்திருந்தேன் என சொல்லி அந்த மூழ்கிய வீட்டுக்கே மீண்டும் விரட்ட.

காட்சி மாறி:-
அழகிய ரயில்வே லெவல் க்ராஸிங்கில் இவன்,இவனது மனைவி,மற்றும் ஏழு குழந்தைகளும் அழகாய் பாடியபடி கடக்க,அங்கே மீண்டும் அந்த ரயில்வே ட்ரெய்லரை ஓட்டியபடி பார்வையற்ற முதியவர் நல்லகாலம் பொறந்திடுச்சா? என ஆத்மார்த்தமாக உணர்ந்து பாடிய படி கடக்கிறார்.

------------------------------------------------------------------------------
இந்த படத்தில் ஜார்ஜ் க்ளூனி ஒரு லூசுத்தனமான காமடி வேடம் பூண்டிருந்தார்,தன் மனைவியிடம் கெஞ்சுகையில் தான் தன் நண்பனிடம்
போலி பல் டாக்டர் சர்டிபிகேட் தயாரித்து தர சொல்லியிருக்கேன்,அதை வைத்து வேறு ஊருக்கு சென்று பிழைப்பொம் என அப்பாவியாக சொல்லும் காட்சிகள்,மனிதர் சக்கைபோடு போடுகிறார்.இவர் தொடர்ந்து கோயன் ப்ரதர்ஸ் இயக்கத்தில் மூன்று படங்கள் செய்தவர்.இவர் எப்படி காமடி ,சீரியஸ் வகைப்படம் என மாறி மாறி பயணிக்கிறார் ?என ஆச்சர்யம் தோன்றும்.

John Turturro, Tim Blake Nelson, John Goodman, Holly Hunter, Charles Durning என அனைவரும் தேர்ந்த கூத்து பட்டறை நடிகர்கள்.ஆஸ்தான நடிகர்களும் கூட.

ஓவ்வொரு காட்சியும் கவிதைங்க,அந்த காமிராமேன் தான் கோயென்சுக்கு
ஆஸ்தான காமிரா மேனாம்.Roger Deakins இவர் தான் கோயெஸுக்கு வெற்றியின் முதுகெலும்பு என்றும் சொல்லிவிடலாம்.

இசை T-Bone Burnett ,யம கிங்கரர்ங்க இந்த மனிதர்,ஒவ்வொரு ஆங்கில பாடல்களும் அவ்வளவு தெள்ளத்தெளிவு.வார்த்தையை முழுங்காத ,மூழ்கடிக்காத கண்ணிய இசை.அனைவரும் ரசிப்பர்.அலுப்பே தட்டாது.

கதை இயக்கம் தயாரிப்பு Joel Coen+Ethan Coen,இவர்களை பற்றி தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே,மனிதர்கள் பெர்ஃபெக்‌ஷனிச்டுகள்.
மொத்தம் ஆறு ஆஸ்கர் சேர்ந்து வாங்கியுள்ளனர்.
அடுத்த படம் A Serious Man கண்டிப்பாக பார்த்துவிட்டு சொல்கிறேன்.
இவர்களின் மாஸ்டர்பீஸ் என ஃபார்கோ மற்றும், நோ கண்ட்ரி ஃபார் ஓல்டு மென் ஐ சொல்லுவேன்.

உங்களுக்கு இதன்  மூலம் கண்டிப்பாக அட்வென்சர்+ப்ளாக் ஹ்யூமர் + இசை போன்றவற்றை முன் நிறுத்தும் படம் பார்க்கும் பரவசம் கிடைக்கும்.
------------------------------------------------------------------------------
படத்தின் காணொளி இதோ:-
------------------------------------------------------------------------------






------------------------------------------------------------------------------
இயக்குனரின் மொத்த திரைப்பட தொகுப்பான இந்த 
காணொளியை காண்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
------------------------------------------------------------------------------



------------------------------------------------------------------------------
Directed by Joel Coen
Ethan Coen
(uncredited)
Produced by Tim Bevan
Eric Fellner
Ethan Coen
Joel Coen (uncredited)
Written by Joel Coen
Ethan Coen
Starring George Clooney
John Turturro
Tim Blake Nelson
John Goodman
Holly Hunter
Charles Durning
Music by T-Bone Burnett
Cinematography Roger Deakins
Editing by Roderick Jaynes
Tricia Cooke
Studio StudioCanal
Working Title Films
Distributed by Touchstone Pictures (USA)
Universal Studios (International)
Bac Films (France)
Momentum Pictures (UK)
Release date(s) December 22, 2000 (2000-12-22)
Running time 106 mins
Country United States
United Kingdom
France
Language English
Budget US$26,000,000 (approx.)[1]
Gross revenue US$71,868,327 (worldwide)[2]

ஃப்ளீட்டிங் ப்யூட்டி குறும்படம் Fleeting Beauty (2005) +18 வயதுக்கு மேல்

 ண்பர்களே இன்று யூ ட்யூபில் நான் பார்த்த சில குறும்படங்களில் இந்த நியூசிலாந்து நாட்டு குறும்படம் என்னை மிகவும் கவர்ந்தது.அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.


ருப்பு மிளகு தங்கத்திற்கு ஈடான மதிப்பை கொண்டிருந்தது என்றால் நம்ப முடிகிறதா?மசாலாக்கள் மீதான ஐந்து ஷில்லிங் விலை ஏற்றத்தால் நம் நாட்டை ப்ரிட்டிஷார் ஆக்கிரமித்தனர் என்றால் நம்ப முடிகிறதா?
என்னாலும்  நம்ப முடியவில்லை தான்.

ஆனால் சீமா ( நந்திதா தாஸ்) என்னும் இந்திய பெண் தன்  நியூசிலாந்து காதலன் முதுகில் இந்திய மசாலாக்களால் கோலம் போட்டு இந்த நெடுங்கதையை விளக்கும்போது நம்ப முடிகிறது.
இது மசாலாக்களை பற்றிய மசாலா சேர்க்காத அசல் கலைப் படம்.


ண்பர்களே எனக்கு தெரிந்து குறும்படங்கள் நமக்கு நல்ல படிப்பினைகளையும்,அருமையான ரசனையையும்,பொன்னான நேர சேமிப்பையும் அளிக்கிறது.ஆகவே குறும்படங்களை ஆதரியுங்கள்
--------------------------------------------------------------------------------

In the diffused light of an overcast afternoon, an Indian woman traces the spice routes of antiquity on her New Zealand lovers back.
Cast: Nandita Das, William Wallace
Director: Virginia Pitts
Screenplay: Shuchi Kothari.
Category: Film & Animation

==================================================

-----------------------------------------------------------------------------------------------

reservoir dogs(1992)(18+)ரிசர்வாயர் டாக்ஸ்

ரிசர்வாயர் டாக்ஸ் (நீர்த்தேக்க நாய்கள்)
-----------------------------------------------------------

ஏழு அன்னியர்கள்,கொள்ளையடிக்க ஒன்று கூடுகின்றனர்.ஒருவருக்கு மற்றொருவர் பெயரோ ஊரோ, தெரியாது. ஆனால் அவர்களின் வண்ணம் தெரியும்.நாய் நீந்துகையில் முழு உடலை நீருக்குள் வைத்து தலையை மட்டும் தூக்கி  நீந்தும்.அதுபோல தங்கள் பெயரை , ஊரை மறைத்து இவர்கள் கொள்ளைக்கு புறப்பட்டதால் நீர்தேக்க நாய்கள்,என பெயர் வந்ததாம்.

1992 ஆம் ஆண்டு பல சர்ச்சைகளோடு வெளிவந்த
குவென்டின் டாரன்டினோவின் முதல் படம்,
அவர் எழுதி ,இயக்கி கொள்ளையரில் (mr.பிரவுன்)ஒருவராய் நடித்தும் இருக்கிறார்.
படத்தில் நிறைய மேல்தட்டு ரசனை கொண்டோருக்கான நகைச்சுவையும் ,
ஊசிப்பட்டாசு வெடித்து சிதறுவது போல வசனங்களும் உண்டு.
புரிந்தால் நன்கு ரசித்து சிரிக்கலாம்.
இந்த படத்திலும் எடிட்டிங்கில் nonlinear storyline.வகை யுத்தியை பயன்படுத்தியுள்ளனர்.
இசையில் தான் ஒரு நல்ல ரசிகர் என்பதையும் நிரூபித்துள்ளார்.
படம் முழுவதும் K-Billy's "Super Sounds of the '70s",ஆல்பத்தை பயன்படுத்தி கிரங்கடித்துள்ளார்.
வைர நகை கடை கொள்ளையை மையமாக வைத்து படம் நகர்ந்தாலும்,
ஒரு காட்சியிலும் அந்த கொள்ளையை காட்டாமல் கதையை நகர்த்தி சென்றுள்ளார்.
(வாயாலே
ருசியான வடைசுடுதல் போல)
கொள்ளைக்கு முன்பும் பின்புமான கொள்ளையர்களின் மன நிலையை சாமர்த்தியாமாய் காண்பித்தும், பல நுட்பங்களையும் கையாண்டுள்ளார். இந்த படத்தில் நிறைய செய்திகளை நமக்கு சொல்லாமல் சொல்கிறார். வல்லவன் வாழ்வான். கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான். கண்ணால் பார்ப்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.போன்று. இன்னும் பல.


இந்த படத்திற்கான ஒப்பனை பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இதில் நிஜ ரத்தத்தை குண்டு துளைத்து ரத்தம் வெளியேறும் காட்சிகளுக்கு பயன்படுத்தினாராம். ஒரு காட்சியில் தன்னிடம் மாட்டிக்கொண்ட போலீஸ் காரனை நாற்காலியில் கட்டிபோட்டு ஒரு சைக்கோ கொள்ளையன் (mr.blonde)அவரின் வலது பக்க காதை அறுப்பான். அவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தவும் போவான். இது போன்ற காட்சிகள் எல்லாம் மிக தத்ரூபமாக எடுக்கப்பட்டு நம்மை உண்மையோ? என்று நம்ப வைக்கின்றன.


குருதிப்புனல்,மற்றும் ஹாஸ்டல் போன்ற சித்திரவதை புகழ் படங்களுக்கு முன்னோடி என்றும் சொல்லலாம். படத்தில் நகைச்சுவை உணர்வு கொஞ்சமும் இல்லா mr.orange joe வின் கேங்கில் இணைந்த பின் போலீசின் உதவியுடன் பக்கம் பக்கமாக நகைச்சுவை வசனங்களை பேசி அந்த கேங்கையே விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறான். நடக்கும் காட்சிகளை காட்டாமல் விட்ட இயக்குனர், mr.orange joe விடம் விடும் புருடாவுக்கு காட்சி வைத்து கவிதை படைத்திருக்கிறார்.(வாலி படத்தில் ஜோதிகா வரும் சீன் போல)


அப்புறம் joe கொள்ளைக்கான திட்டத்தை விளக்கி ஒவ்வொருவருக்கும் பெயர் வைக்கையில் mr.பிங்க் எழுந்து தமக்கு இந்த பெயர் பிடிக்கவில்லை, (பிங்க் என்பது ஓரின சேர்க் கையாளரை குறிக்கும் வண்ணம்) ஆகவே எனக்கு மாற்றிக் கொடு என்று வியாக்கியானம் பேச. joe கண்டிப்பான குரலில் நீ ஒரு ஓரினசேர்க்கையாளன் தானே ?அதிலென்ன சந்தேகம்,மூடிக்கிட்டு அமர்வதேன்றால்,இரு ,வந்தால் என்வழி,போனால் தெரு வழி என்று சொல்வார் பாருங்கள். இந்த மாதிரி நகைச்சுவை காட்சிகளை முழு நீள காமடி திரைப்படங்களிலும் நாம் காண்பது துர்லபமே.


படம் முழுவதும் புனை பெயர்களையே கதாபாத்திரங்களை அழைக்க பயன்படுத்தியது "very proffesionalism" இது தான் நுட்பமான படைப்பு என்பது. மிக வேகமான திரைக்கதை. சீட்டுக்கட்டை கலைத்து போட்டது போல கோர்வை இல்லாத காட்சிகள், அவற்றை வேண்டிய இடத்தில் சந்திக்க வைப்பது என்று , இயக்குனர் மனதில் நின்றுவிட்டார்.

படத்தின் கதை

-----------------------------
கோட்டு சூட்டுகள் அணிந்த ஆறு பேர்களான
Mr. Blonde (Michael Madsen),
Mr. Blue (Eddie Bunker),
Mr. Brown (Quentin Tarantino),
Mr. Orange (Tim Roth),
Mr. Pink (Steve Buscemi),
Mr. White (Harvey Keitel).

அவர்களுடன் டி ஷர்ட் அணிந்த லாஸ் ஏஞ்சல்சின் பிரபல கொள்ளையர் தலைவன் Joe Cabot (Lawrence Tierney), ம் அவரது மகன் "Nice Guy"என்ற Eddie (Chris Penn). ம் பர்கர் கிங்கில் காலை சிற்றுண்டி சாப்பிடுவது போல கதை ஆரம்பிக்கிறது. அப்போது joe வின் மகன் Madonna's "Like a Virgin", என்ற ஆல்பத்தை பற்றி சிலாகித்து புகழ்கிறான்.மெய் மறக்கிறான். சிற்றுண்டி முடித்து பில்லை Joe செலுத்துகிறார். டிப்சை மற்ற ஏழு பேரிடமும் தலா ஒரு டாலர் தலைக்கு வீதம் கொடுக்க சொல்லுகிறார். பிங்க் என்பவன் தாம் எப்போதும் டிப்ஸ் கொடுப்பதில்லை என்று வியாக்கியானம் பேச,அவர் அவனை கண்டிப்பான தொனியில்
கஞ்சத் தேவடியாப்பயலே... . ஊரோடு ஒத்துவாழ்.


நீ தரும் டிப்சை வைத்து தான் இந்த பணிப்பெண்கள் வாழ்க்கையை ஓட்டுகின்றனர் .நான் உன் சிற்றுண்டிக்கு பணம் தந்திருக்கிறேன். நீ ஒரு டாலர் தர அழுகிறாயே? என்று செல்லமாக திட்ட,அவன் பணம் தருகிறான். பின்னர் எல்லோரும் வெளியேறுகின்றனர்.


காட்சி மாறி

 
இப்போது Mr. White ஒரு வெள்ளைய பெண்ணிடம் திருடிய காரில், காரை திருடுகையில் வெள்ளையப் பெண்ணால் வயிற்றில் சுடப்பட்ட, Mr. Orange ஐ பின்சீட்டில் கிடத்தி, ஒற்றைக்
கையால் அவனை சமாதான படுத்திக்கொண்டே, ஒற்றைக் கையால் வண்டியை வேகமாக ஓட்டிச்சென்று, அவர்களின் ரகசிய சந்திப்பு இடமான, ஒரு பழைய கிடங்கு கட்டிடத்திற்கு சென்று, அவனை கை தாங்கலாக அழைத்துபோய் தரையில் கிடத்துகிறார்.

Joe வந்ததும் வயிற்றில் உள்ள குண்டை எடுக்க மருத்துவரை அழைத்து வரலாம் என்கிறார்.
அவன் வலியில் கதறுகிறான். இவர் அவனுக்கு சமாதானம் சொல்கிறார்.நீ வயிற்றில் தான் சுடப்பட்டாய், நீ இன்னும் இரண்டு நாள் கூட மன உறுதியால் தாக்கு பிடிக்கலாம், இருப்பதிலேயே கொடுமையான வலி எது தெரியுமா? (kneecap)கால் மூட்டு எலும்பில் குண்டு துளைத்து படும் வேதனை தான். என்று தன் அனுபவத்தை சொல்ல. பின்னர் அவனுக்கு தன் அசல் பெயரையும் ஊரையும் சொல்கிறார். பின்னர் அவனுக்கு தலை வாரி விடுகிறார். 


இவன் தன்னை ஏதேனும் ஒரு ஆஸ்பத்திரி வாசலில் தூக்கி போட்டு விட்டு செல். நான் யாரிடமும் உண்மையை சொல்லமாட்டேன் என்று கதற. அப்போது கதவு திறந்து Mr. பிங்க் கொள்ளையடித்த வைரங்கள் அடங்கிய பையுடன் உள்ளே வந்து, கோபமாக கத்துகிறான்,
தான் தப்பி வரும்போது உயிரை காத்துக் கொள்ள மூன்று போலீஸ் காரர்களை சுடவேண்டியதாகிவிட்டது.என்கிறான். இவரும் கொள்ளையடித்து விட்டு தப்பி வருகையில் போலீஸ் சுட்டதில், Mr. பிரவுன் இறந்து விட்டான்,என்றும். காரை பிடுங்குகையில் ஒரு வெள்ளைய பெண்மணி சுட்டதில் Mr. Orange உயிருக்கு போராடுகிறான் என்கிறார்.


இவன் மற்ற அனைவரும் எங்கே?தலைவன் joe எங்கே? என கோபமாக கேட்கிறான். joe வை சந்தேகிக்கிறான். அவன் தான் போலீசில் இருந்து தன்னையும் தன் மகனையும் காத்துக் கொள்ள பழைய கூட்டாளிகளை திட்டமிட்டு மாட்டி விட்டிருப்பான். என்றும் கருவுகிறான்.
Mr. White அவனை சமாதானப்படுத்துகிறார். பின்னர் Mr. Blonde உள்ளே வருகிறான். (இவன் joe வுக்கு மிகவும் விசுவாசி) கொள்ளையடித்து விட்டு வரும் வழியில் mr.ப்ளூ போலீஸ் சுட்டதில் இறந்து விட்டான், என்றும்.தான் மூன்று போலீசை சுட்டு விட்டதாகவும்.


மற்ற பங்காளிகளில் யார் இறந்தது ?யார் உயிருடன் உள்ளார்? என்ற விபரங்களை கேட்கிறான். தங்கள் கும்பலுக்குள்ளே இருக்கும் கறுப்பாடு யார் என்று விவாதிக்கிறனர். அப்போது Mr. பிங்க் மற்றும் Mr. Blonde இருவரும் நீதான் கறுப்பாடு என்று அடித்துக் கொள்ள. இவன் பிரித்து விடுகிறான். அப்போது என்னை சந்தேகப்படாதே. நான் கொள்ளையடிக்கப்போன இடத்தில் தப்பிக்கும் போது ஒரு போலீஸ் காரனையே பிடித்து காரின் டிக்கியில் போட்டு கடத்திக் கொண்டு வந்திருக்கிறேன். அவனை விசாரிப்போம்.உண்மை தெரியும் என்கிறான். mr.blonde முதலில் அவனது சுண்டு விரலை அறுப்போம்,


அவன் எதையும் சொல்லும்.மனநிலைக்கு வருவான்,பின்னர் அவனின் ஆட்காட்டி விரலையும் அறுப்போம். அவன் தான் போட்டிருப்பது பெண்கள் அணியும் உள்ளாடை என்பதையும் சேர்த்தே விளம்புவான் . என்று சொல்லி சிரிக்க. இப்போது அந்த போலீஸ் காரனை கட்டிப் போட்டு மூவரும் அடிக்க, joe வின் மகன் "Nice Guy" உள்ளே வருகிறான். இப்படியா திருட்டு கார்களை வெளியில் நிப்பாட்டுவீர்கள்,?பார்க்க பழைய கார் ஷோரூம் போலிருக்கு. அறிவு இல்லையா என்கிறான். போலீஸ் எப்படி? விபரம் சேகரித்து சுற்றி வளைத்தது என்பதை joe சிறிது நேரத்தில் கண்டு பிடிப்பார், இப்போது என்னுடன் வந்து திருட்டு கார்களை கொண்டு போய் அப்புறப்படுத்த உதவுங்கள் என்று அழைத்துபோகிறான்.



போலீஸ் காரனை ஏன்? பிடித்துக் கொண்டு வந்தாய் என கோபிக்கிறான். Mr. Blonde ஐ மட்டும் காவலுக்கு விட்டு கிளம்ப, அவன் வெறியுடன் போலீஸ் காரனை நெருங்கி விசாரிக்க , அவன் தாம் வேலைக்கு சேர்ந்தே 8 மாதம் தான் ஆகிறது என்றும், தாம் சாதாரண கடைநிலை போலீஸ் என்றும் கதற. தன்னிடம் மேலதிகாரிகள் துப்புகளை பற்றி சொல்ல மாட்டார்கள் என்கிறான். அவன் பரவாயில்லை எனக்கு உண்மை வேண்டாம் , உன் உயிர் தான் வேண்டும் என்று துப்பாக்கியை கொண்டு சுடப் போக. அவன் மிரள.


ரேடியோவில் K-Billy's "Super Sounds of the '70s", which is playing "Stuck in the Middle With You" என்னும் பாடலை அலற விடுகிறான். அதற்கு ஏற்ப நடனமும் ஆடிக்கொண்டே இவன் அவனின் வாயை டேப்பால் ஒட்டி, அவனின் சவரக் கத்தியால் வலது காதை அறுக்கிறான். பின்னர் அதை தரையில் வீசி எறிகிறான். அவன் துடி துடிக்க,எங்கேயும் போகாதே என்று சொல்லிவிட்டு இவன் வெளியே செல்கிறான். காரின் டிக்கியை திறந்து பெட்ரோல் கேனை கொண்டு வந்து போலீஸ் மேல் ஊற்றி லைட்டரைக்கொண்டு கொளுத்த எத்தனிக்க. Mr. Orange ரத்த வெள்ளத்தில் இருந்து எழுந்து அவனை 10 ரவுண்டுகள் சுட்டு மீண்டும் சரிகிறான்.
போலீஸ் காரனிடம் தானும் ஒரு போலீஸ் தான் என்கிறான். இவன் தெரியும் என்கிறான். 2 தெருக்கள் தள்ளி ஒரு பெரும் போலீஸ் படையே joe வின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அது வரை நீயும் பொறு நானும் பொறுக்கிறேன் என்று சொல்ல. 

போலீஸ் காரன் அழுது கொண்டே என்ன மயிரை பிடுங்குகின்றனர்.?

அவன் என்னை அடித்து துவைத்து என் காதையும் அறுத்திருக்கிறான். என்ன மயிறு போலீசு என்கிறான். அவன் அவனை டேய் ,நானும் இங்கே செத்துக் கொண்டிருக்கிறேன். சும்மா இல்லை. வயிற்றில் குண்டு வாங்கி ஒரு லிட்டர் ரத்தத்திற்கும் மேலாக வெளியேறிவிட்டது.
மூடிக்கொண்டிரு என அதட்டுகிறான். இது ஒரு வருட திட்டம். என்று தான் எப்படி போய்? joe வின் கேங்கில் இணைந்தேன் என்பதை அவனுக்கு விளக்குகிறான். (குருதிப்புனலில் தனுஷ் என்பவன் பத்ரி கேங்கில் இணைவது போல) பின்னர் அவன் அமைதியாக. கதவை திறந்து மூவரும் உள்ளே வர ,


"Nice Guy" என்ன கொடுமைடா இது? என்று இறந்து போன Mr. Blonde ஐ காட்டி கேட்க, இவன் போலீஸ் காரனின் காதை அறுத்து, பின்னர் அவனை கொளுத்தி கொல்லப் பார்த்தான் என்றும் பின்னர் நீங்கள் மூவரும் வந்ததும் உங்களை கொன்று வைரங்களை தானே அபகரிக்க திட்டம் போட்டதால், தாம் அவனை கொன்றேன் என்று சொல்ல. பூ ...இந்த போலீசுக்குபோயா?என்று கோபத்தில் போலீஸ்காரனை சுட்டு கொல்கிறான். பின்னர் உண்மையை சொல் Mr. Blonde ஐ போல ஒரு விசுவாசியை பார்க்க முடியாது என்றும்,அவன் கொடுத்ததை வாங்கிக்கொள்பவன். எமக்காக அவன் நான்கு வருடம் சிறை சென்று திரும்பினான் என்றும் சொல்லி மிரட்ட. joe உள்ளே வருகிறார்.


வந்தவர் Mr. Orange தான் கருப்பு ஆடு என்று போலீஸ் துறையிலிருந்தே தகவல் வாங்கி விட்டதாக சொல்லி அவனை சுட எத்தனிக்க. Mr. White அவனை சுடக் கூடாது , எக்காரணம் கொண்டும் ஒரு அப்பாவியை தண்டிக்காதீர்கள், என்று இவரை குறி வைக்க. "Nice Guy" என் அப்பாவையே எதிர்க்கிறாயா? என்று அவனை குறி வைக்க, Mr. பிங்க் எவ்வளவோ தடுத்தும் பலனில்லாமல் விலகி ஒளிந்து கொள்ள. கண்ணிமைக்கும் நேரத்தில் மூவரும் ஒருவரை ஒருவர் சுட்டு கொள்கின்றனர்.


(joe வை Mr. White ம்
Mr. White ஐ "Nice Guy" ம்
"Nice Guy" ஐ Mr. Orange ம்)

 
அதில் joe வும் அவரின் மகனும் அதே இடத்தில் உயிர் விட, Mr. பிங்க் வைரங்கள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு அகல்கிறான். Mr. White தன் மடியில் Mr. Orange ஐ கிடத்தி தன்னால் மருத்துவ உதவி செய்ய முடிய வில்லை என மன்னிப்பு கேட்க, இவன் தன்னிடம் இவ்வளவு இறக்கம் காட்டும் அவனுக்காவது உண்மை சொல்லுவோம் என்று நான் ஒரு போலீஸ் ... என்னை மன்னித்துவிடு என்கிறான். இவன் மிரண்டு போய். அய்யோ joe வை போய் சுட்டோமே .. என்று இவன் Mr. Orange ஐ கன்னத்தில் துப்பாக்கியை வைத்து சுட, கதவை திறந்து வழக்கம் போல் லேட்டாய் வந்த போலீசு Mr. White ஐ சுட்டுத் தள்ள. அங்கே கிடங்கே ரத்த ஆறாக காட்சி தருகிறது.


K-Billy's "Super Sounds of the '70s", which is playing "Stuck in the Middle With You" by Stealers Wheel. என்னும் பாடல் பின்னணியில் அலற பெயர் போடப்படுகிறது. நமக்கு ஒரு நல்ல கேங்ஸ்டேர் படம் பார்த்த திருப்தியுடன் பலவித பரவசங்கள் கிடைக்கின்றன. இதில் மருந்துக்கு கூட கதாநாயகியோ , படுக்கை அறை காட்சிகளோ கிடையாது.ஆனால் நிலமெல்லாம் ரத்தம். படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைக்கிறீர்களா? அவர்கள் எங்கே ஐயா நடித்தார்கள்? ஒவ்வொருவரும் அந்த வண்ணங்களாகவே மாறி விட்டனர். நாம் என்னவோ ஒளிந்திருந்து நடப்பதை பார்கிறோமோ ? என்ற பதட்டமும் வராமல் இல்லை. இதையெல்லாம் பார்த்து விட்டு நம்மூர் படங்களை பார்ப்பதால் தானோ என்னவோ? எல்லோருக்கும் பிடிப்பது நமக்கு பிடிக்க மாட்டேன் என்கிறது. மீண்டும் ஒரு நல்ல படத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

Directed by
Quentin Tarantino
Produced by
Lawrence Bender
Written by
Quentin Tarantino
Starring
Harvey Keitel
Tim Roth
Steve Buscemi
Chris Penn
Michael Madsen
Lawrence Tierney
Eddie Bunker
Quentin Tarantino
Cinematography
Andrzej Sekula
Editing by
Sally Menke
Distributed by
United States:
Miramax Films/Lionsgate
United Kingdom:
Rank Film Distributors
Canada:
Maple Pictures
Release date(s)
October 23, 1992
Running time
98 minutes
Country
United States
Language
English

----------------------------------------------------------------------------------------------------------------------------------------




நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகிள்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.


காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.


இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி

த ஸ்பானிஷ் ப்ரிசனர்.(1997) பசுவும் பசும்தோல் போர்த்திய புலிகளும்.

ஸ்பானிஷ் ப்ரிசனர் என்பது நல்லவர்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் (confidence trick )ஒருவித யுத்தியாகும்.கானல் நீர் (mirage)பார்த்திருப்பீர்கள், காரில் செல்லும் போது சாலையில் தூரத்தில் நீர் தேங்கியுள்ளது போல காட்டும்,நெருங்கினால் ஒன்றுமிராது.அப்படி கானல் நீர் போன்ற குணமுள்ள மனிதர்கள் தெளிந்த நீரோடை போல தோற்றமளித்து,நீர் பருக வரும் மான்களை வலையில் விழ வைப்பது போன்ற ஒரு நயவஞ்சகம் இது.

ன்றைய வலைஉலகில் நைஜீரியாவில் இருந்து இது போன்ற எண்ணிலடங்காத மோசடிகள் அரங்கேறுகின்றன.advance fee பிராட் என்னும் மோசடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இந்த வகை மோசடி மின்னஞ்சல்கள் பெறாத மனிதரே இருக்க முடியாது.எப்போதும் நமக்கு வரும் ஸ்பாம் மெயில்களிநூடே இப்படி அப்பாவியாக ஆரம்பிப்பார்கள்.

1.உங்களுக்கு லாட்டரியில் 20 மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது,அதை பெற நீங்கள் 1500 டாலர்கள் பீஸ் கட்ட வேண்டும்.
2.உங்களுக்கு 23000 பவுண்டு சம்பளத்தில் ஜாம்பியாவில் மானேஜர் வேலை கிடைத்துள்ளது,அதற்கு முன்பணமாக 1200 டாலர் பீஸ் கட்டவேண்டும்.
3.நீங்கள் எங்களுடன் பிஸ்னஸ் பார்ட்னர் ஆவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்,எங்கள் பணத்தை நாங்கள் உங்கள் கணக்கிற்கு மாற்றப் போகிறோம்,அதற்கு முன் தொகையாக நீங்கள் 1500 டாலர்கள் பீஸ் கட்ட வேண்டும். என தேன் தடவிய வார்த்தைகள் கொண்டு மெயில் இன்னும் நீளும்.
என்னதான் ஒரு சாரார்  இது போன்ற ஸ்பாம் மெயில்களை புறம்தள்ளி எச்சரிக்கையாய் இருந்தாலும் , இன்னொரு சாரார் இன்று வரை ஏமாந்துகொண்டு தான் இருக்கின்றனர்.


இப்போது ஸ்பானிஷ் ப்ரிசனர் என்ற அருமையான,விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் படத்தைபற்றி பார்ப்போம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஜோ ராஸ் என்ற கார்பொரேட் எஞ்ஜினியர் ஒரு நவீன தொழில்நுட்ப ஃபார்முலாவை கண்டுபிடிக்கிறார்,அதை இன்னும் பேடெண்ட் செய்ய கூட இல்லை,அவரின் கஞ்சத்தனமான முதலாளியான கசாரா மிக ரகசிய கார்பொரேட் சம்மேளனத்துக்கு ஒரு உல்லாச தீவில் ஏற்பாடு செய்கிறார்.

ஜோவிற்கு வேண்டிய அனைத்து போனஸ்,மற்றும் ப்ரீமியம்,டிவிடெண்டுகளை ப்ராடக்ட் லான்ச் செய்தவுடன் செய்து தருவதாக வாய் மொழி உறுதி கொடுக்கிறார். மிக ஏழ்மையான சூழலில் இருந்து வந்த ஜோவால் அதற்கு எதிர்ப்போ , மாற்று கருத்தோ சொல்ல முடியவில்லை,புதிய விலை உயர்ந்த ஆடைகளை முதலாளியின் அறிவுறைப்படி வாங்குகிறார்.

உல்லாச தீவில் வைத்து ஜோவுக்கு ஜிம்மி டெல் என்ற மில்லியனர்
நண்பனாகிறான்.அவர்கள் அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்த
பெண் காரியதரிசி சூசனும் வலிய வந்து பழகுகிறாள்.அவள் இவரின் வெகுளித்தனமான தோற்றமும் பண்பும் எதிராளிக்கு சாதமாகிவிடும் என எச்சரிக்கிறாள்.இவர் நான் பார்க்க அப்படியா தெரிகிறேன் ? என குழம்புகிறார்.இவர் காஸினோவில் சூதாடி கிடைத்த பணத்தில் அவளுக்கு  முதல் வகுப்பு விமான டிக்கட் எடுக்கிறார்.அவள் இவர் மீது ஒருதலைக் காதல் கொள்கிறாள்.

விமானத்தில் வைத்து புதிய நண்பன் நியூயார்க்கில் உள்ள தன்  தங்கைக்கு தந்த பார்சலை திடீர் சந்தேகத்துடன் பிரிக்கிறார்.அதில் நான் ஒரு நல்ல மனிதரிடம் இந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன். நீ அவரிடம் பழகி பிடித்திருந்தால் வாழ்கை துணையாக ஏற்றுக்கொள் என்று இருக்கிறது., நல்லவரைப்போய்  சந்தேகப்பட்டோமே என வெட்கி.தலை குனிகிறார்.மனதுக்குள் இப்போது பட்டாம்பூச்சிகள் வேறு பறக்கின்றன.பணக்காரப் பெண் மனைவியாக வாய்த்தால் கசக்குமா?

 நியூயார்க் திரும்பிய ஜோ புதிய பணக்கார நண்பன் தன் தங்கைக்கு தந்த பார்சலை வாட்ச்மேனிடம் டெலிவரி செய்துவிட்டு,வேலைக்கு வர,முதலாளி நவீன தொழில்நுட்ப ஃபார்முலாவை பற்றிய பாதுகாப்பை பற்றி விசாரிக்கிறார். நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்களை அழைத்து புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க எத்தனிக்க, ஜோவுக்கு முதலாளி தன்னை ஏமாற்றப் போவதாக பொறி தட்டி அந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்,அவர்களை கோர்டில் சந்திப்பதாக கூறி வெளியேறுகிறார்.

இப்போது ஜோவுக்கு ஒரே ஆறுதல் பணக்கார நண்பன் ஜிம்மி டேல்.அவனை சந்திக்கையில் நடந்தவற்றை விளக்க,அவன் அவரை தேற்றி அவருக்கு பெரிய கிளப்பில் உறுப்பினர் சந்தா வாங்குகிறான். அவருக்கு ஐந்தே நிமிடத்தில் சுவிஸ் பேங்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்கிறான்.இனி நீயும் மில்லியனர் தான் ,பாரு வரப்போகும் அதிர்ஷ்டத்தை என்று.நாளையே நவீன தொழில்நுட்ப ஃபார்முலாவை வெளியே கொண்டுவா,என் வக்கீலிடம் காட்டு,உனக்கு நான் நீதி வாங்கித் தருகிறேன்.என நம்பிக்கை அளிக்கிறான்.

அலுவலகத்துக்கு வந்த ஜோ தன் காரியதரிசி காட்டிய வலுவான ஆதாரத்தால் ஜிம்மி டெல்  ஒரு போலியான நபர் என உறுதியாக நம்ப வைக்கப்படுகிறார்.சற்றும் தாமதியாமல போலீசை நாடுகிறார்.
போலீசாரும் இவரை சென்ட்ரல் பார்க் என்னும் பூங்காவுக்கு வரவழைத்து இவருக்கு மைக் போன்ற சாதனங்கள் மாட்டி விட்டு.ஜிம்மி டெல் வந்தவுடன் இந்த நோட்டு புத்தகத்தை சிறிது நேரம் பிகு செய்து பின்னர் கொடுங்கள் என அறிவுருத்த இவரும் காத்திருக்கிறார்.ஒருவரும் வரவில்லை. நவீன தொழில்நுட்ப ஃபார்முலா கொண்ட நோட்டை பிரிக்க அது காலியாக இருக்கிறது.  இவருக்கு தூக்கி வாரிப் போடுகிறது.போலி போலீசாரும் அங்கிருந்து எஸ்கேப்.

இப்போது இவர் வெலவெலத்து உண்மையான போலீசை நாட,அவர்கள் இவர் மேலே கேசு போட்டு,விசாரிக்கின்றனர்.இவருக்கு எதிரான வலுவான ஆதாரங்களை காட்ட,இவரால் மறுத்து பேச எந்த ஆதாரமும் கைவசம் இல்லை.

ஒன்று மட்டும் உண்மையான போலீஸ் மூலம் நன்கு விளங்குகிறது.
இவர் அணுகிய நண்பன் ஒரு ஃப்ராடு,அவனுக்கு தங்கையே இல்லை.
இவரை அவன் அழைத்துப்போன கிளப் ஒரு செட்டப்பு.
இவருக்கு அவன் வாங்கியது கிளப் சந்தா அல்ல,அகதியாக வேறு  நாட்டுக்கு தப்பிப்போக இவரே அடைக்கலம் கேட்கும் ஒரு விண்ணப்பம்.இவரை  நாடகமாடி , நம்ப வைத்து கழுத்தறுத்துள்ளனர்.

ஜிம்மி டெல் ஆரம்பித்த ஒரு சுவிஸ் பேங்க் கணக்கால் இவர் வாழ்வே இருண்டது.இவரின் வெகுளித்தனத்தை வைத்து கண்கட்டி வித்தை ஆடி இருக்கிறார்கள்.போலீசார் இவரிடம் ஜிம்மி டெல்லின் போட்டோவோ அல்லது கைரேகை பதிந்த பொருட்களோ கேட்கின்றனர்,பிறகு ஜிம்மி டெல் இருப்பதாக நம்புகிறோம் என்கின்றனர்.இவரும் சம்மதிக்கின்றனர்.
இவரை போலீசார் பின் தொடர்வதை இவரும் அறிந்திருக்கவில்லை.

இவரின் கஞ்ச முதலாளி வேறு இவரிடம் வந்து உன் மேல் இரக்கப்பட்டு
பெயில் எடுத்திருக்கிறேன், நீ எனக்கு இரக்கம் காட்டு.
நான் இது வரை ஒன்றும் சம்பாதிக்கவில்லை,இதைத்தான் மலை போல நம்பி இருந்தேன். நீ விற்ற அந்த ஜப்பானிய நிறுவனம் அதை மார்கெடிங்
லான்ச் செய்வதற்குள் அதை திருப்பி வாங்கிக் கொடு என கெஞ்சுகிறார்.
இவர் என்ன சொல்லி யார் அதை நம்ப?

இவரின் நெருங்கிய நண்பரான தன் கம்பேனியின் சட்ட ஆலோசகர் வீட்டுக்கு விரைய,அங்கே அவர் ஜோவின் ஸ்கவுட் கத்தியால் குத்தப்பட்டு
இறந்திருக்க,ஓடுகிறார்,ஓடுகிறார்.வாழ்வின் எல்லை வரை ஓடுகிறார்.
தன்னை யாரோ வசமாக மாட்டிவிட்டது புரிகிறது.

இப்போது ஒரே நம்பிக்கை ஒளி,அவரது புதிய காரியதரிசி,தன்னிடம் ஒருதலைக் காதல் கொண்டவள்,தன்னை நம்புபவள்,அவள் வீட்டுக்கு போக,
அவள் இவருக்கு உடைகள் தந்து உபசரித்து இவர்கள் தங்கியிருந்த உல்லாச தீவில் செக்யூரிடி காமிராக்கள் உண்டு.அங்கு சென்றால் நமக்கு ஜிம்மி டெல்லின் புகைப்பட ஆதாரம் கிடைக்கும் என்று சொல்ல,
அவளே டிக்கட்டுக்கு ஏற்பாடு செய்கிறாள்.
ஏர்போர்டு வரை கொண்டு விடுகிராள்,பணம் கொண்ட பர்சு என ஒன்றை
இவரிடம் கொடுக்கிறாள்.

உள்ளே ஏர்போர்டு ஸ்கேனிங்கில் வைத்து அந்த பர்சை பிரிக்க
அதில் துப்பாக்கி உள்ளதை பார்க்கிறார்.இப்போது டிக்கட்டை பார்க்க அது வேறு ஏதொ விமானத்துக்கு எடுக்கப்பட்ட காலாவதியான டிக்கட்.
அப்படியே எஸ்ஸாகிறார்.மனதில் ஒரே எரிச்சல் பற்றிக்கொள்ள,

வெளியே வருகிறார்.அவர் வெளியே இருந்த காரியதரிசியிடம் விமான நிலையத்தில் தம்மை போலீசார் அடையாளம் கண்டுவிட்டனர் ஆகவே தாம் தப்பி வந்து விட்டதாக சொல்ல,மேலும் ஜிம்மி டெல்லின் கைரேகை தம்மிடம் ஒரு புத்தகத்தில் உள்ளது எனவும் சொல்ல,அவள் முகம் கருக்கிறது,அவள் இவரிடம் கவலை வேண்டாம், நான் அந்த புத்தகத்தை எடுத்து வருகிறேன்.
அந்த தீவிற்கு கப்பல் போக்குவரத்து உள்ளது அதில் நீங்கள் சென்று அந்த வீடியோ ஆதாரங்களை கொண்டு வாருங்கள் என்கிறாள்.இவர் புறப்பட தயாராயிருந்த கப்பலில் அவளையும் தர தர வென இழுத்து ஏற்றிக்கொண்டு அவரும் ஏற ,அந்த ஜிம்மி டெல் மற்றும் கொள்ளை கும்பலும் அங்கு கப்பலில் ஏறுகிறது.கப்பலே காலியாக இருக்க,ஓரமாக ஜப்பானிய சுற்றுலா பயணிகள் மட்டும் இருக்க,துணிவு கொண்ட அந்த கும்பல் இவரை கொல்ல எத்தனிக்கிறது.

சாகும் நீ உண்மையை தெரிந்து கொண்டு சாகு.என உரைத்து உண்மையை இவரிடம் சொல்ல.
இவர் அதிர்கிறார்.கஞ்சமகாப்பிரபுவான இவர் முதலாளியே இதற்க்கெல்லாம் காரணம்.
இவருக்கு ராயல்டி மற்றும் போனசு,இன்செண்டிவ் போன்றவை தராமல் ஏய்க்கவும், அரசாங்கத்தின் வருமானவரி துறையை சுத்தமாக ஏய்க்கவும் மாபாதக முதலாளியே ஜிம்மி டெல்லுடன்  சேர்ந்து இப்படி நாடகம் ஆடியிருக்கின்றார்.ஜோவின் நவீன தொழில்நுட்ப ஃபார்முலாவையும் ஜப்பானிய நிறுவனத்துக்கு விற்றிருக்கிறார்.
ஜோ மீது கொலைப்பழியும் சுமர்த்தினார்.இப்போது கொல்லவும் துணிந்துவிட்டார்.

எல்லாவற்றையும் கேட்டு நொந்த ஜோ,தப்பி விலகி கப்பலின் மேல் தளத்துக்கு சென்று அங்கே இருந்த ஜப்பானியர்களிடம் உதவி செய்யுமாறு மன்றாடுகிறார்.யாரும் எதிர் பாரா நொடியில் ஜப்பானிய பெண் பயணி ஒருத்தி எய்த மயக்க அம்பு ஒன்று ஜிம்மி டெல்லின் கையை பதம் பார்த்து துப்பாக்கியை பறிக்கிறது.இன்னொரு ஆண் பயணியும் பிற போலிஸ்காரர்களும் எல்லா குற்றவாளிகளையும் மடக்கி பிடிக்கின்றனர். நாமும் நம்மை அறியாமலே அப்பாடா...என்கிறாம்.
அப்பொதும் திருந்தாத இவரின் காரியதரிசி நான் உத்தமி,என்னை நம்பு,என்னை பெயிலில் எடுப்பாய் தானே?என்கிறாள்,இவர் காட்டமாக அதற்கு வேறு ஆளை பார்,அந்த அப்பாவி ஜோ செத்துட்டான் என்கிறார்.

இந்த படம் சொல்லும் பாடம் என்னவென்றால்?.
நம்,மற்றும்  நம் கம்பனி ரகசியங்களை யாரையும் நம்பி சொல்லவோ,வெளியிடவோ கூடாது.அது ஏடாகூடத்துக்கு வித்திடும் என்பது தான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஜோவாக வந்த Campbell Scott மிக நன்றாக நடித்திருந்தார்,இவரின்
longtime companion,big night,dying young  போன்றவை இவரின் நடிப்பை பறைசாற்றும் படங்கள்,இந்த படம் முழுதும் இவரை முன்னிறுத்தியே பயணிக்கிறது.சவாலான் பாத்திரம்.
 காரியதரிசி சூசன் ,Rebecca Pidgeon சரியான நயவஞ்சகி , சரியான வில்லி பாத்திரம்.பூனையாய் இருந்தவள் குள்ள நரி வேலை பார்க்கிறாள்.

கதை,திரைகதை,இயக்கம் David Mamet  புலிட்சர் விருதை வென்ற பழுத்த பழமான இயக்குனர் சஸ்பென்சு திரில்லர் திரைக்காவியங்களை வடிப்பதில் கை தேர்ந்தவராம்.இவர் எழுத்தாளர்,திரைக்கதை ஆசிரியர்,என நிறைய அவதாரங்கள் எடுப்பவர்.

இது அமெரிக்காவில் வெளியாகி பரபரப்பாக ஒடிய படம் ,திரைக்கதையின் நேர்த்தியினை ஹிட்ச்காக்கின் படங்களுடன் ஒப்பிட்டு பேசினார்களாம்.நீங்களும் பாருங்கள்,படத்தில் படுக்கை அறை காட்சிகளே இல்லை.என்ன? ஒரே ஒரு கத்தியால் குத்தப்பட்ட காட்சி மட்டும் உண்டு.அதில் மட்டும் தான் ரத்தம்.மற்றபடி அனைவரும் பார்க்க வேண்டியபடமே.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
படத்தின் முன்னோட்ட காணொளி



-------------------------------------------------------------------------------------------------------------
Directed by
David Mamet
Produced by
Jean Doumanian
Written by
David Mamet
Starring
Campbell Scott
Steve Martin
Rebecca Pidgeon
Ricky Jay
Ben Gazzara
Distributed by
Sony Pictures
Release date(s)
Flag of Canada September 8, 1997 (Toronto Film Festival)
Flag of the United States April 3, 1998
Flag of the United Kingdom August, 1998 (Edinburgh Film Festival
Running time
110 minutes
Language
English



ஒருவயது கொண்டாடிய சண்டாள ரிசெஷன்


ந்த செப்டம்பர் 15 ஆம் தேதியோடு சண்டாள ரிசெஷன் துவங்கி ஒரு வருடம் முடிந்தது.போன வருடம் இதே செப்டம்பர் 15 அன்று தான் லெஹ்மன் பிரதர்ஸ் வங்கி திவாலாகி ரிசெஷனுக்கு பிள்ளையார் சுழி போட்டது,அது ஹனுமார் வாலாக நீண்டு சென்றவாரம் கூட அமெரிக்காவில் மூன்று வங்கிகள் திவாலானதாக செய்திகளில் படித்திருப்போம்.

பெரும்பாலான அலுவலகங்கள் நீங்கள் வேலையில் இருப்பதே நாங்கள் காட்டிய பெரிய சலுகைதான் என மார் தட்டிக்கொள்கிறது.எதெற்கெடுத்தாலும் ஒரு மெமோ.எதெற்கெடுத்தாலும் ஒரு மீட்டிங் என கடுப்பை கிளப்புகிறது .
எனக்கு தெரிந்து என் நண்பர்கள் சிலர் ஒன்றுக்கு கூட போகாமல் வேலை பார்க்கிறார்கள்,நிறைய நண்பர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்துவிட்டு கடும் துயருடன் தொடருகின்றனர்.நாலு பேர் செய்யும் வேலையை இருவருக்கு கொடுத்து முடித்துவிடு என்கின்றனர்.

ஒரு சில நண்பர்கள் தினமும் இரண்டு ஷிப்டுகள் பார்த்தால் தான் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கின்றனர்.இப்போதும் classified இல் வேலைக்கு ஆள் தேவை என்று வருகிறது.அப்ளை செய்தால் அழைப்பு வந்தாலே அதிசயம் என்றாகிவிட்டது.இரண்டு மாதம் முன்பு கேட்ட விளம்பரத்திற்கு அப்ளை செய்த என் நண்பன் , ஊருக்கு போனதால் ,என் எண்ணுக்கு அவன் கால் டைவர்ட் செய்ய , என்னை இரண்டு மாதம் கழித்து அழைத்த அந்த நிறுவனம் 2500 திர்காம் சம்பளம் ஒகேவா?என்று மேட்ச் பிக்சிங் செய்தனர். என் நண்பன் கடைசியாக வாங்கிய சம்பளம் 10000 திர்காம்கள் என்றேன் .அவர்களே "no more fancy salary on planet my friend" என்று எகத்தாளம் பேசினர்.

சென்னையில் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கிய என் ஆர்கிடெக்ட் நண்பர்கள் அதே ஆபீஸில் இருபத்தைந்தாயிரம் வாங்கிக்கொண்டு வேலை செய்கின்றனர்.இதில் pg (போஸ்ட் க்ராஜுவேட்டுகள் ) பாடு ரொம்ப திண்டாட்டமே.நிறைய கம்பெனிகள் pg no need to apply என்றே விளம்பரம் தருகின்றனர்.எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் m.arch படித்திருந்தும் அதை மறைத்து b.arch என்று காண்பித்து குறைந்த சம்பள வேலையில் சேர்ந்த துயரமும் உண்டு.

பூம் பீரியடில் porche கார் வைத்திருந்த நண்பர்கள் ஒரேநாளில் வேலை போய் அந்த ஆடம்பர யானையை பாதி விலைக்கு விற்று மேற்கொண்டு பணம் போட்டு வங்கிக்கு கடன் அடைத்து சென்ற சம்பவங்களையும் பார்த்தேன்.
35000 திர்காம் ரோலெக்ஸ் வாட்ச் கட்டியிருந்த சிங்கப்பூர் பெண் அசோசியேட் டைரக்டர் ,என்னிடம் உன் ஆபீஸில் ஆர்கிடெக்ட் வேலைக்கு cv மூவ் பண்ண முடியுமா?என்றார்.

அப்பப்பா.... பாத்தாச்சு பாத்தாச்சு.
பூமையும் , ரிசெஷனையும் போதுமான மட்டும் பாத்தாச்சு.

பறிபோன வேலைகள் ,சலுகைகள்,குறைக்கப்பட்ட சம்பளம் ,அலுவலக விஷயமாக வெளிநாட்டு பயிற்சி,என எதுவுமே திரும்ப கிடைக்கும் தடயமே இல்லை .எங்கு நோக்கிலும் ஒரே வெறிச்.

சில அலுவலகங்களில் பிளாஸ்டிக் போர்க்,டிஸ்போசபிள் டம்பளர்கள் கூட வாங்குவதை தவிர்த்துவிட்டனர்.வீக்கெண்டு பார்ட்டி வைத்த அலுவலகங்கள் தேங்க்ஸ் கிவிங் கூட வைக்காமல் நல்ல சம்பளம் வாங்கும் ஊழியரை நீக்கி விட்டு குறைந்த சம்பளத்தில் ஆள் பிடிக்கும் அக்கிரமமும் நடக்கின்றது.
ஒரு சில அலுவலகங்கள் தம்பதி ஊழியர்களில் மனைவியரை வீட்டுக்கு அனுப்பும் செயலும் தொடர்கிறது.சில நிறுவனங்களில் எதிர் மார் .

எங்கள் அலுவலகத்தில் விதிவிலக்காக இப்தார் பார்ட்டி வைத்தனர்.நல்ல செலவு செய்தே நடத்தினர் . நியூ இயர் பார்ட்டியும் உள்ளது என்று சொல்லி எங்கள் எல்லோருக்கும் தெம்பூட்டினர்.இருந்தும் கலக்கமாகத் தான் உள்ளது.
போன வருடம் எனக்கும் துபாயில் வேலை போய் இங்கு ஷார்ஜாவில் கடவுள் ஆசியால் கிடைத்தது.இதை பெரிய அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்.

என்னையும் அறியாமல் லஞ்ச் டயத்தில் மானிடரை அணைக்கிறேன்.
அனாவசிய லைட்டுகளை அணைக்கிறேன்.
சக ஊழியர் அணைக்காமல் சென்ற கம்ப்யூடரை அணைக்கிறேன்.
இந்த பக்குவம் தந்தது இந்த ரிசெஷன் தான்.எல்லாவற்றிற்கும் மேலாக பொறுமையும் நாவடக்கமும் வந்தே விட்டது.கடவுள் மேலும் பக்தி அதிகமாகி விட்டது. இருந்த தீய பழக்கங்களும் போயே விட்டது.
இதைத் தான் கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்கள் போல.

என்ன ஒன்று?என்னுடன் வேலை செய்த சுமார் முப்பது நண்பர்கள் வேலை தேடி கிடைக்காமல் இந்தியா சென்றுவிட்டனர்.அவர்களுக்கு உதவ நினைத்தும் ஒன்றும் நடக்கவில்லை.இத் தருணத்தில் கடவுளிடம் அந்த நண்பர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்.

ஆனாலும் ரிசெஷனை வைத்து அனுதினமும் நகைச்சுவை மெயில்கள் வந்த வண்ணம் தான் உள்ளன. அப்படி வந்த சில மெயில்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.இதில நீங்கள் சிலவற்றை முன்னமே பார்த்திருக்கக்கூடும்.ஆகவே மீண்டும் சிரியுங்கள்.

-------------------------------------------------------------------------------------------------














--------------------------------------------------------------------------------------------------------------------------------------

Never Mess with Employees!

This is what happened when a certain company put up the following memo:

OFFICE MEMO:
May all members of staff please note that there will only be one drink per person at this year's Christmas Party.
And please bring your own cup !

Regards,

Management

---------------------------------------------------------------------------------------------------------------------------------




Never mess with employees!



இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகளின் அடக்குமுறை

காசாவில் இஸ்ரேலிய யூத பயங்கரவாத அமைப்பினரின் கொடுமைகளுக்கு ஒரு அளவேயில்லை.மக்கள் அத்தியாவசிய பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய பெரும் கெடுபிடிகளை விதித்துள்ளனராம்.அங்கு 2007முதல் ஆட்சி பொறுப்பில் இருக்கும்
ஹமாஸ் போராளிகளை அழிக்கிறேன் என்று கிளம்பி இளம் பிஞ்சுகளை, அப்பாவி பொது மக்களை பாஸ்பரஸ் குண்டு போட்டு
ம், ஏவுகனை தாக்குதல் நடத்தியும் படுகொலை செய்கின்றனர்.

இந்த பிரச்சனை 50 வருடங்களுக்கு மேலாக நிலவி வந்தாலும் 2007ஆம் ஆண்டு முதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் துணிமணிகள், மருந்துகள், பால், அரிசி ,முட்டை கோதுமை,இறைச்சிக்கான கால்நடை, எண்ணெய்,உப்பு ,சர்க்கரை போன்ற தானியங்கள் கூட கடத்தப்பட்டு தான் விற்கப் படுகின்றதாம்.

எகிப்து மற்றும் அண்டை நாடுகளில் இருந்து தருவிக்கப்படும் பொருட்கள் ராஸா என்னும் இடத்தில் பூமிக்கு அடியில் 1 கிலோ மீட்டர் ஆழத்திற்கு படத்தில் உள்ளது போல எந்திர ராட்டின உதவியுடன் சப்ளை செய்யப்படுகிறது .வியாபாரிகள் லிப்ட் ஷாப்ட் போல அவர்கள் கடைகளில் வைத்திருப்பார்ககள்.பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையில் சப்ளை ஆகும் பொருட்கள் கூலியாட்கள் மூலம் மேலே ஏற்றப்படுகிறது. இந்த வருடம் மட்டும் மண் சரிந்து விபத்துக்குள்ளாகி சுரங்கத்துக்குள்ளேயே 45 பேர் சமாதியாகினராம்.

நேரிடையாக வணிகம் செய்யும் போதே அநியாய விலைவாசி உள்ள காலகட்டத்தில் உணவுப்பொருட்களை இப்படி கடத்தப்படுவது மூலம் நான்கு மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டியது உள்ளதாம்.ஒவ்வொரு வருடமும் ஈகைத் திருநாளை இப்படித்தான் இறைச்சிக்கான கால்நடை இன்றி பெரும்பாடுபட்டு கொண்டாடுகின்றார்களாம்.

இறைவன் கருணையுள்ளவன் அவன் இனியாவது பாலஸ்தீனியர்களை கொடிய இஸ்ரேலிய யூத இனத்தவரிடமிருந்து காக்கட்டும்.போர் முடிந்து அமைதி பிறக்கட்டும்.யார் மேல் தவறு என்று விவாதிப்பதை விட அவர்களின் அமைதிக்கும் ,இயல்பு நிலை வாழ்க்கைக்கும் நம்மால் துரும்பை கிள்ளி போடுவோம்

படுகொலை செய்யப்பட்ட ஐயாயிரம் இளம் பிஞ்சுகளின் மரணத்திற்கு என்றாவது ஒருநாள் இந்த மாபாதகர்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்.2007 ஆம் ஆண்டு தீவிரமாக காஸாவை பிடித்த யூத சைத்தான்கள் இந்த வருடமாவது விலகுவார்களா?பொறுத்திருந்து பார்ப்போம்.
___________________________________________
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 54[இது இஸ்ரேல் பாலஸ்தீன  பிரச்சனை குறித்த முக்கியமான கட்டுரை]

பாலஸ்தீன் யாருடையது? யூதர்களுக்கும் அரேபிய முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமி அது. நல்லது. பாலஸ்தீனில் யார் பெரும்பான்மையானோர்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் பெரும்பான்மையானோராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரு தரப்பினரும் சம அளவினராகவும், நவீன காலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோராகவும் அங்கே இருந்திருக்கிறார்கள்.
இதனை இந்தத் தொடரின் பல்வேறு அத்தியாயங்களில் இடையிடையே பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. காரணம், இந்தக் குழப்பத்தால்தான் பாலஸ்தீனை எப்படிப் பிரிப்பது என்று பிரிட்டன் யோசித்துக்கொண்டிருந்தது.
இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பாலஸ்தீனில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சம். இவர்கள் அத்தனைபேரும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து பாலஸ்தீன் வந்து சேர்ந்தவர்கள். அவர்களது மூதாதையர்களுக்கு பாலஸ்தீன் சொந்த ஊராக இருக்கலாம். அவர்களுக்குக் கண்டிப்பாக அது புதிய தேசம். அதாவது சொந்த தேசமே என்றாலும் வந்தேறிகள். அவர்களைத் தவிர உள்ளூர் யூதர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படியாக சுமார் இருபதாயிரம் பேர் இருந்தால் அதிகம்.
ஆனால் அங்கே இருந்த அரேபியர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பம். குறைந்தது நாலரை மடங்கு அதிகமான எண்ணிக்கையில் அரேபியர்கள் அப்போது அங்கே இருந்தார்கள்.
ஆகவே, அநியாயமாகவே நிலப்பரப்பைப் பிரிப்பதென்றாலும் அரேபியர்களுக்குச் சற்றுக் கூடுதலான நிலம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். அப்படிச் செய்வதென்றால் இஸ்ரேல் என்கிற தேசத்தை உருவாக்க நினைப்பதன் அடிப்படைக் காரணமே தவிடுபொடியாகிவிடும்.
இது முதல் பிரச்னை. இரண்டாவது பிரச்னை ஜெருசலேம் தொடர்பானது. பாலஸ்தீனின் மிக முக்கியமான நகரம். முஸ்லிம்கள், யூதர்கள் என்று இருதரப்பினருக்குமே அது ஒரு புனித நகரம். இந்த இரு தரப்பினர் மட்டுமல்லாமல் பாலஸ்தீனின் அப்போதைய மிகச் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்களுக்கும் அது புனிதத்தலம். ஒட்டுமொத்த பாலஸ்தீனில் யார் எத்தனைபேர் வாழ்கிறார்கள் என்று கணக்கெடுக்கும்போதே ஜெருசலேத்தில் எத்தனைபேர் என்று உடன் சேர்த்துப் பார்ப்பதுதான் வழக்கம்.
பாலஸ்தீனின் மற்ற பகுதிகளைப் பிரிப்பதில் ஏதாவது குளறுபடி நேர்ந்தால்கூடப் பின்னால் சரிசெய்துகொண்டுவிட முடியும். ஆனால், ஜெருசலேத்தைப் பிரிப்பதில் ஒரு சிறு பிரச்னை வந்தாலும் மூன்று மிகப்பெரிய சமயத்தவரும் பிரிட்டனை துவம்சம் செய்துவிடும் அபாயம் இருப்பதை பிரிட்டிஷ் பிரதமர் உணர்ந்தார். ஆகவே ஒரு சிறு சிக்கல் கூட வராமல் விஷயத்தை முடிக்கவேண்டும் என்பதால்தான் இஸ்ரேல் விஷயத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிக்காமல் முதலில் இந்தியப் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லிவிட்டு, அடுத்தபடியாக இஸ்ரேலுக்கு வரலாம் என்று நினைத்தது பிரிட்டன்.
இவற்றையெல்லாம் தாண்டி பிரிட்டனுக்கு இன்னொரு hidden agenda இருக்கவே செய்தது. இரண்டு தரப்பினருக்கும் அதிருப்தி ஏற்படாமல் தேசத்தை இரண்டாகப் பிரித்து ஒரு தேசத்துக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டு பிரச்னையைத் தீர்ப்பது என்பது மேல்பார்வைக்குத் தெரிந்த செயல்திட்டம். பிரிட்டனின் உண்மையான திட்டம், ஓரளவுக்காவது பாலஸ்தீனை முழுமையாக யூதர்களின் தேசமாக்கிவிடுவதுதான். அதாவது பெரும்பான்மை நிலப்பரப்பு யூதர்களுடையதாக இருக்க வேண்டும். அப்படியென்றால் யூதர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். யூதர்களின் வசிப்பிடம் இன்னும் பரவலாக, எல்லா சந்துபொந்துகளிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு எல்லைக்கோடு என்று கிழிக்கும்போது அதிக இடத்தை யூதர்கள் பெறும்படி செய்யலாம்.
ஆனால் யதார்த்தம் வேறு விதமாகத்தான் இருந்தது. பாலஸ்தீன் முழுவதும் அரேபியர்களே நிறைந்திருந்தார்கள். நிலங்களை இழந்த அரேபியர்கள் கூட, வேறிடம் தேடிச்செல்லாமல் பாலைவனங்களில் கூடாரம் அடித்தே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். பாறைகள் மிக்க மலைப்பகுதிகளிலும் அவர்கள் வசித்துக்கொண்டிருந்தார்கள். ஜோர்டன் நதியின் மேற்குக் கரையில் ஏராளமாக வசித்தார்கள். கிழக்கு கடற்கரைப் பகுதியான காஸா உள்ளிட்ட எல்லையோர நகரங்களிலும் அவர்கள் ஏராளமாக இருந்தார்கள். ஒரு வரியில் சொல்லுவதென்றால், எல்லைப்புறங்கள் முழுவதிலும் அரேபியர்கள் நாலா திசைகளிலும் இருந்தார்கள். நாட்டின் நடுப்பகுதிகளிலும் அவர்கள் பரவலாக வசித்துவந்தார்கள். மிகச் சில இடங்களில் மட்டுமே யூதக்குடியிருப்புகள் இருந்தன.
ஒரு தேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு இது மிகவும் சிக்கல்தரக்கூடிய விஷயம். எங்கே போடுவது எல்லைக் கோட்டை? பாலஸ்தீனுக்கு நடுவே ஒரு வட்டம் போட்டா இஸ்ரேல் என்று சொல்லமுடியும்? அப்படியென்றால் இஸ்ரேலின் நான்குபுறமும் பாலஸ்தீன் இருக்கும். பாலஸ்தீனின் கிழக்கு எல்லையில் வசிப்பவர்கள், மேற்குப் பகுதி நகர் ஒன்றுக்குப் போவதென்றால் விசா எடுத்துக்கொண்டு போகவேண்டி வரும். இதெல்லாம் மிகப்பெரிய சிக்கல்கள்.
நமக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைப் பிரித்து பாகிஸ்தான் என்ற தேசத்தை உருவாக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அதன்படி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்தார்கள். ராட்க்ளிஃப் என்கிற பிரிட்டிஷ் சர்வேயர் ஒருவர் வரைபடத்தை வைத்துக்கொண்டு அதில் கோடு கிழித்தார். மேற்கே ஒரு பரந்த நிலப்பரப்பு. கிழக்கே இந்தியாவின் ஜாடையில் பிறந்த இன்னொரு குழந்தை மாதிரி இன்னொரு சிறு நிலப்பரப்பு. மேற்குப் பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று அடையாளம் கூறப்பட்டது.
எத்தனை சிக்கல்கள் வந்துவிட்டன! ஆட்சி நிர்வாகம் முழுவதும் மேற்கு பாகிஸ்தானில் இருந்து நடைபெறும். எதற்குமே சம்பந்தமில்லாமல் இடையில் இந்தியாவின் இருபெரும் எல்லைகள் தாண்டி கிழக்கு பாகிஸ்தான் அம்போவென்று தனியே கிடக்கும்.
இதனால்தான் அம்மக்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டது போல உணர்ந்தார்கள். அரசுக்கு எதிராகக் கலவரங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். முக்திபாஹினி என்கிற தனியார் ராணுவம் ஒன்றையே அமைத்து சொந்த தேச ராணுவத்துக்கு எதிராகப் போரிட்டார்கள்.
அதன்பிறகு 1971-ல் யுத்தம், பங்களாதேஷ் பிறப்பு என்று ஒருவாறு பிரச்னை தீரும்வரை அங்கே சிக்கல், சிக்கல் மட்டும்தான்.
இந்த பாகிஸ்தான் பிரிவினை விவகாரம், அங்குள்ள முஸ்லிம்களுக்கு எத்தனை சிக்கல் தரக்கூடியது என்பதை அவர்கள் உணர்வதற்குச் சில காலம் ஆனது உண்மை. ஆனால் பிரித்துக்கொடுத்த பிரிட்டனுக்கு அன்றே புரிந்துவிட்டது. இஸ்ரேல் – பாலஸ்தீன் அளவுக்கெல்லாம் மிகப்பெரிய பிரச்னைகள் இல்லாத தேசத்திலேயே இத்தனை சிக்கல் என்றால், பாலஸ்தீனைப் பிரிக்கிற விஷயத்தில் எப்படியிருக்கும் என்பதை விவரிக்கவே வேண்டாம்.
பிரிட்டனின் மிகப்பெரிய சிறப்பு அதுதான். அவர்களால் நிறைய பிரச்னைகளை உருவாக்க முடியும். பிரச்னை வரும் என்று தெரிந்தே செய்வார்கள். சிறு தேசங்களில் பிரச்னை இருந்தால்தான் வளர்ந்த நாடுகளின் பிழைப்பு நடக்கும் என்பது ஓர் அரசியல் சித்தாந்தம்.
ஆனால் பாலஸ்தீன் விஷயத்தில் பிரிட்டனின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. இஸ்ரேலை உருவாக்கவேண்டும். அவ்வளவுதான். பாலஸ்தீன் என்கிற நிலப்பரப்பின் பெரும்பகுதியை அந்தப் புதிய தேசத்துடன் இணைக்கவேண்டும். கடமைக்காக, முஸ்லிம்களுக்கென்றும் கொஞ்சம் நிலம் ஒதுக்கியாக வேண்டும். அப்படி ஒதுக்கும் நிலம் அதிகமாக இருந்துவிடக்கூடாது!
இந்தப் பாசம் யூதர்களுக்குப் புரிந்ததைக் காட்டிலும் முஸ்லிம்களுக்கு மிக நன்றாகப் புரிந்தது. எப்படியிருந்தாலும் இனி தாங்கள் கஷ்டப்பட்டுத்தான் தீரவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். பயமும் பதற்றமும் கவலையும் அவர்களைப் பீடித்தன. யார் தங்களுக்கு உதவுவார்கள் என்று உலகெங்கும் தேட ஆரம்பித்தார்கள்.
துரதிருஷ்டவசமாக அன்றைய தேதியில் பாலஸ்தீன் அரேபியர்களுக்கு உதவி செய்ய யாருமே தயாராக இல்லை. அவர்கள் சார்பில் வெறுமனே குரல் கொடுக்கக்கூட யாரும் முன்வரவில்லை. காரணம், உலகப்போரில் அவர்கள் ஹிட்லரை ஆதரித்தவர்கள் என்பதுதான். ஓர் அழிவு சக்திக்குத் துணைபோனவர்கள் என்கிற அழிக்கமுடியாத கறை அன்று முஸ்லிம்களின் மீது படிந்திருந்தது.
உண்மையில் அழிவுக்குத் துணைபோவதா அவர்களின் எண்ணமாக இருந்தது?
மிகவும் கவனமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டிய விஷயம். உயிர்போகிற கடைசி வினாடியில் தப்பிக்க ஒரு சிறு சந்து கிடைக்கும் என்று தோன்றினால் நம்மில் எத்தனைபேர் அதைப் பயன்படுத்த விரும்பாமல் இருப்போம்?
அன்றைய நிலைமையில் பாலஸ்தீனில் யூதர்களின் ஊடுருவலைத் தடுக்கவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. அனைத்து மேற்கத்திய நாடுகளும் எப்படியாவது யூதர்களைக் கொண்டுபோய் பாலஸ்தீனில் திணித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது ஹிட்லர் ஒருவர்தான் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தவர். அந்த ஒரு காரணத்தால்தான் முஸ்லிம்கள் அவரை ஆதரித்தார்கள்.
இதை நியாயப்படுத்த முடியாது; நியாயப்படுத்தவும் கூடாது. அதே சமயம், அத்தனை அர்த்தம், அனர்த்தங்களுடனும் இதனைப் புரிந்துகொள்ளவும் வேண்டும். கண்ணெதிரே சொந்த தேசம் களவாடப்படுகிறது என்பது தெரியும்போது ஏதாவது செய்து காப்பாற்றவேண்டும் என்று விரும்பினார்கள். விரும்பியதில் தவறில்லை. ஆனால் தேர்ந்தெடுத்த வழிதான் தவறாகப்போய்விட்டது.
மிகவும் யோசித்து, திட்டமிட்டுத்தான் பிரிட்டன் பாலஸ்தீனைப் பிரிக்க திட்டம் தீட்டியது. திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னால் தேசத்தின் நடுப்பகுதிகளில் வசித்துக்கொண்டிருந்த முஸ்லிம்களை, குறிப்பாக கிராமப்பகுதி முஸ்லிம்களை மேற்கு எல்லைக்கு விரட்டுவதற்கான ஏற்பாடுகள் மறுபுறம் மிகத்தீவிரமாக நடக்க ஆரம்பித்தன.
யூத நிலவங்கிகளுக்காக மிரட்டல் மூலம் நிலங்களை அபகரித்துக்கொடுத்த முன்னாள் குண்டர்படைகளின் வம்சாவழிகள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்தார்கள். அவர்கள், ஆயுதங்களுடன் முஸ்லிம் கிராமங்களுக்குள் நுழைந்து, இரவு வேளைகளில் வீடுகளுக்குத் தீவைத்து மக்களை வெளியேற்ற ஆரம்பித்தார்கள். அப்படி அலறி வெளியே ஓடிவரும் முஸ்லிம்களைக் கொல்லாமல், வெறுமனே துரத்திக்கொண்டே போய் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை வரை சென்று விட்டுவிட்டு வந்தார்கள்.
நல்லவேளை, இந்தச் செயல்கள் அதிகமாக நடைபெறவில்லை. சில ஆயிரம் பேரை மட்டும்தான் அவர்களால் இப்படித் துரத்த முடிந்தது. அதற்குள் முஸ்லிம்கள் தரப்பிலும் சில தாற்காலிக ஆயுதப்படை வீரர்கள் முளைத்து தத்தம் கிராமங்களைப் பாதுகாக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஆனால் இதெல்லாமே கொஞ்சநாள்தான். சட்டப்படி என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்துமுடித்துவிட்டு, அமைதியாக பிரிட்டன் தன் தீர்மானத்தை அறிவித்தபோது, முஸ்லிம்கள் இறுதியாக நொறுங்கித் தூள்தூளாகிப் போனார்கள்.
Worlds Most Strangest Underground Smugglers Tunnel

Worlds Most Strangest Underground Smugglers TunnelWorlds Most Strangest Underground Smugglers Tunnel

Gaza's markets are seriously lacking in merchandise due to strict Israeli restrictions on what the country may and may not import. Goods are dropped into and received from the underground network via elaborate pulley systems.
They are then carried down the length of the 1,000 metre tunnels. The network operators have the ability to handle all sorts of products including fuel,
computers and clothes.
Hundreds of Gaza merchants throng around the border area of Rafah every day to pick up merchandise coming to Gaza from Egypt via subterranean passages.



Worlds Most Strangest Underground Smugglers Tunnel

Underground livestock smuggling has increased dramatically ahead of Eid Al-Adha, a day when Muslims the world over slaughter animals and feed the poor to seek God's forgiveness. The tunnels also ferry people who cannot leave or enter Gaza, but no one may smuggle arms or drugs through the tunnels.

Worlds Most Strangest Underground Smugglers Tunnel


After travelling through the underground tunnel, the frightened cattle is sold, making a heavy profit for those who risk their lives in the dangerous tunnels. Palestinian officials say at least 45 workers have died this year because of cave-ins.

Worlds Most Strangest Underground Smugglers Tunnel

Hamas, which seized control of Gaza in 2007, see the tunnels as an act of defiance against Israel. They, therefore, endorse them and it is even claimed that taxes are imposed upon the underground routes.

_______________________________________________________
இந்த கொடுமையை தெளிவாய் உரைக்கும் காணொளி.
_______________________________________________________

டிஸ்கி:-

நான் இக் கட்டுரையில் ஹமாஸை இஸ்ரேலிய யூத படை என்று நினைத்து பயங்கரவாதிகள் என குறிப்பிட்டிருந்தேன் .பிழை திருத்திய நண்பர்களிடம் நன்றியையும் ,வருத்தத்தையும் பகிர்கிறேன்.
கண்டிப்பாக ஹமாஸின் போருக்கு வெற்றி கிடைக்கட்டும்.


நன்றி யூடியூப்.
நன்றி கூகுள்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)