கே.பாலசந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே.பாலசந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிழல் நிஜமாகிறது | ஆடவல்லு மீகு ஜோஹர்லு | கே.பாலசந்தர் | B.S.லோகநாத்்












நிழல் நிஜமாகிறது (1978) படத்தில் பணிப்பெண் ஷோபா தன்னை மகாராணியாக நினைத்துக் கொண்டு நகர்வலம் வரும் காட்சிகள் வரும் , ஆடவல்லு மீக்கு ஜோஹர்லு (1981) தெலுங்குப் படத்தில் ஏழைப்பெண் சரிதாவும் தன்னை மகாராணியாக நினைத்துக் கொண்டு நகர்வலம் வரும் காட்சிகள் வருகிறது,இதில் நாயகன் பானுசந்தர் ஓட்டி வரும் ஜாவா மோட்டார் சைக்கிள் நம்பர் ப்ளேட்டை குதிரைக்கு கட்டி விட்டிருப்பார், அருமையான காட்சி அது.

முன்னது கருப்பு வெள்ளை, திருவிடந்தை கிராமம் , பின்னது வண்ணம் , விசாகப்பட்டினத்தில் ஒரு கிராமம், இரண்டின்  ஒளிப்பதிவும் B.S.லோகநாத் அவர்கள் தான்.இரண்டும் வெவ்வேறான கதைகள்.
#கே_பாலசந்தர்,#நிழல்_நிஜமாகிறது,#ஆடவல்லு_மீக்கு_ஜோஹார்லு

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

தப்புத்தாளங்கள் | தப்பிடதாளா |1978 | திரைப்படம் | கே.பாலசந்தர்


































http://geethappriyan.blogspot.com/2015/01/1978-1.html?m=1

http://geethappriyan.blogspot.com/2015/01/1978-2.html?m=1

http://geethappriyan.blogspot.com/2015/01/1978-3.html?m=1

#தப்பிட_தாளா,#தப்புத்தாளங்கள்,#கழுகன்,#கே_பாலசந்தர்,#BS_லோகநாத்,#சரிதா,#ரஜினிகாந்த்,#தப்பிடதாளா,#விஜயபாஸ்கர்,#கவிஞர்_கண்ணதாசன்,
#சுந்தர்ராஜ்,#தேவு,#சரசு,#சோமா,#மேரி,#அனந்து,#கமல்ஹாசன்,#ஹுன்சூர்_கிருஷ்ணமூர்த்தி


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

அபூர்வ ராகங்கள் |ஏக் நயி பெஹலி |பலப்பரிட்சை காட்சி | 1975 | sharkoferral | Glycodyn










அபூர்வ ராகங்கள் ( 1975 )படத்தில் ஸ்ரீவித்யா மற்றும் கமல்ஹாசன் இடையே வரும் பலப்பரீட்சை காட்சி அழகாக இந்த Sharkoferral என்ற சத்து மருந்து விளம்பரத்தில் இருந்து pan செய்து துவங்கியிருப்பார் இயக்குனர் கே.பாலசந்தர் .
கமல்ஹாசன் கையில் சுளுக்கு ப்ளாஸ்டர் (belladonna plaster) போட்டிருப்பார் பாருங்கள்,

1976 ஆம் ஆண்டு தாசரி நாராயணராவ் இயக்கத்தில் வந்த ரீமேக்கான Thoorpu Padamara படத்தில்  பைரவி இடது பக்கம் அமர, நடிகர் நரசிம்ம ராஜு இந்த பிரசன்னா கதாபாத்திரம் செய்தார், இவரை ஆந்திர கமல்ஹாசன் என்றே சொல்கின்றனர், 

கமல்ஹாசன் புதுமையாக செய்த கதாபாத்திரங்களை இவர் தெலுங்கு சினிமாவில் முயன்று பார்த்திருக்கிறார், இந்த பிரசன்னா  கதாபாத்திரத்தை உள்வாங்கிச் செய்ய முயன்றிருந்தார்.

அடுத்து இயக்குனர் கே.பாலசந்தர் இந்தியில் ரீமேக் செய்கையில் பைரவியாக ஹேமமாலினி, பிரசன்னாவாக கமல்ஹாசன், இதிலும் கமல்ஹாசன் கையில் சுளுக்கு ப்ளாஸ்டர் போட்டிருப்பார் , இதில் இந்த சத்து மருந்து விளம்பரம் எல்லாம் கிடையாது , நேராக பலப்பரீட்சை தான்.

இது போல தன் படைப்புகளில் ஏதாவது consumer brand ஐ இடையில் அழகாக கதையினூடே நுழைத்து காட்சியை அழகூட்டுவார் இயக்குனர்,அபூர்வ ராகங்கள் படத்தில் மெடிமிக்ஸ் சோப்புகள் மற்றும் 555 சிகரட்களை வைத்து காட்சிகள் அழகாக வரும்.

இப்படி தப்புத் தாளங்கள் படத்தில் ஒரு அழகிய காட்சி வரும், 
 பெட்டிகேஸ் ரவுடி ரஜினி தியேட்டரில் இடைவேளையில்  Glycodyn இருமல் விளம்பரத்தைப் பார்க்கையில் விலை மங்கை  சரிதாவின் தொடர் இருமல் நினைவுக்கு வரும், அவருக்கு வேண்டி Glycodyn வாங்கி இடுப்பில் திணித்து கொண்டு போய் தருவார்.

இது போல corporate , consumer brand விளம்பரங்களை படத்தினூடே அழகாக காட்டியவர் வங்காள இயக்குனர் சத்யஜித்ரே.

#அபூர்வ_ராகங்கள்,#கமல்ஹாசன்,#ஸ்ரீவித்யா,#கே_பாலசந்தர்,#Thoorpu_Padamara,#நரசிம்ம_ராஜு,#சத்யஜித்_ரே,#ரஜினிகாந்த்,#sharkoferral,#glycodyn,#தப்புத்தாளங்கள்
எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com


ஏக் தூஜே கேலியே | மரோ சரித்ரா | Ruins | பாழடைந்த கட்டிடம் | க்ளைமேக்ஸ் | பாலசந்ர்






இரண்டு கட்டிடங்களும் ஒரே கட்டிடம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம் நகரில் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கும் சிகிச்சைக்கு முன், சிகிச்சைக்குப் பின் சுவரொட்டி விளம்பரம் போல உள்ளது அல்லவா?இரண்டிற்குமான வித்தியாசம்.

இது விசாகப்பட்டினம் ஹவா மஹால்(காற்று மாளிகை), கடற்கரையைப் பார்த்தபடி வீற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடம்,  மரோசரித்ரா(1977) , ஏக்தூஜே கேலியே(1982)படங்களில் வந்த கட்டிடம் இது தான்.

இதில் தான் கண்ணாமூச்சி விளையாட்டில் கண்ணைக் கட்டிக் கொண்ட கமல்ஹாசன் மாடியில் இருந்து இடிந்து போன தரையின் திறப்பில் விழப்போகையில் ரத்தி வீல் என அலறுவார், 

இதில் தான் ரத்தி வில்லனிடம் தன்னை காத்துக்கொள்ள தரையின் திறப்பிற்குள் இடிபாடுகள் மீது தற்கொலை செய்ய விழுவார், 

இப்படி சிதிலமாக இருந்த கட்டிடத்தை  அது கட்டப்பட்ட 1922 ஆம் ஆண்டில் இருந்தபடியே மாற்றுவதற்குப் பெயர் தான் conservation, 

இதை B.Arch படித்து 2 வருடம் Conservation சிறப்பு முதுகலை படித்தவர்கள் சிறப்புறச் செய்வார்கள், அவர்களை conservation consultant என்பார்கள், 

இதை பழமை மாறாமல் புதுப்பித்தவர்கள் Intach தன்னார்வ நிறுவனத்தார், இந்தியா முழுக்க இவர்கள் 190 கிளைகள் பரப்பி இயங்கி வருகின்றனர் , 

இவர்கள் இந்தியா முழுக்க உள்ள புராதான கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பித்ததில் முன்னோடிகள், இது வரை அதிக கட்டிடங்கள் இவர்களின் வடிவமைப்பு மேற்பார்வையில் தான் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஹவா மஹால் 1910-1920 வரையான காலகட்டத்தில்  ஒரிஸ்ஸாவின் ஜெய்பூர் மன்னர் Ramachandra Deo  அவர்களால் ராஜ குடும்பத்தின் சாலைவழி தங்கும் விடுதியாக கட்டப்பட்டது,

 ஒரிஸ்ஸாவில் இருந்து மன்னர் அடிக்கடி மெட்ராஸுக்கு ஜீப்களில் கடற்கரைச் சாலை மார்க்கமாக வருகையில் மன்னர் மற்றும் குடும்பத்தார் தங்க 19 அறைகள் கட்டப்பட்டன.

ஆனால் அது சுதந்திரத்திற்குப் பின்னர் மன்னரிடமிருந்து கைப்பற்றப்பட்டு அரசு விருந்தினர் விடுதியாக செயல்பட்டது, இதில் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் , சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள், கவிஞர் ரபீந்த்ரநாத்  தாகூர், சிறுமியாக நடிகை வஹீதா ரெஹ்மான் அவரின்  தந்தை  சுதந்திரத்திற்கு முன் நீதிபதியாக இருக்கையில் இங்கு  வந்து தங்கியுள்ளனர், 

அதன் பின்னர் நீண்ட காலம் அரசு செவிலியர் மருத்துவமனையாகவும்  அரசு மகளிர் கல்லூரியாகவும் இக்கட்டிடம் மாற்றப்பட்டு மேலே படத்தில் நாம் காணும் பேய்வீடு போல மாறிவிட்டது, 

இதன் விலையுயர்ந்த பர்மா தேக்கு கிராதிகள் , வார்ப்பிரும்பு அலங்கார கம்பி தடுப்புகள்,சலவைக்கல் cladding என எல்லாமே சமூக விரோதிகளால் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டன, தரமான மெட்ராஸ் டெரஸ் பர்மா தேக்கு கிராதிகள் உருவப்பட்டு திருடப்பட பல இடங்களில் கூரை விழுந்து விட்டது.

தங்கள் குடும்ப சொத்து இப்படி சிதிலமாவதைப் பொறுக்க முடியாத மன்னர் குடும்பத்தார் அதை மீட்க பல வருடங்கள் வழக்காடி போராடி 1992 ஆம் ஆண்டு இதை மீட்டனர் .

பத்து வருடங்கள் கழிந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு மன்னரின் பேத்தியும் Intach  
விசாகப்பட்டின கிளையின்  ஒருங்கிணைப்பாளருமான 
Mayank Kumari Deo இக்கட்டிடத்தை கோடிக்கணக்கில் பணம் செலவழித்து 1920 களில் இருந்தது போலவே தோற்றப் பொலிவுடன் மாற்றினார்,

இக்கட்டிடத்தை தற்போது பண்பாட்டு மையமாக அவர் உயரிய நோக்கில் அற்பணித்துள்ளார்,
இந்த பெருமைக்குரிய கட்டிடத்தில் கலாச்சார விழாக்கள், கருத்தரங்குகள், ஓவியக் கண்காட்சி, நடன நிகழ்ச்சிகள்  நடக்கின்றன.

Intach மையம் விசாகப்பட்டினத்தில் பாதுகாத்து வரும் நினைவுச் சின்னங்கள் பற்றி இங்கே பாருங்கள்.

http://intachvizag.org/heritage_sites.php#

மேலும்
https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/hawa-mahal-where-the-movie-ek-duje-ke-liye-was-filmed/articleshow/58331575.cms

https://www.yovizag.com/hawa-mahal-visakhapatnam-heritage-building/

https://m.facebook.com/story.php?story_fbid=10158644157041340&id=750161339

https://m.facebook.com/story.php?story_fbid=10158644224431340&id=750161339
#ஹவா_மஹால்,#விசாகப்பட்டினம், #கே_பாலசந்தர்,#விசாகப்பட்டினம்,#ஏக்_தூஜே_கேலியே,#மரோசரித்ரா


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

அடியொழுக்குகள் | ஆழ் நீரோட்டம் |1984 |M.T. வாசுதேவநாயர்

 அடியொழுக்குகள் ( ஆழ் நீரோட்டம்) 1984 எம்.டி. வாசுதேவநாயரின்





கதை திரைக்கதையில் ஐ.வி.சசி இயக்கத்தில் காஸினோ சினிமாஸ் பேனரில் வெளியான பெருமைமிகு படைப்பு.


மிக அருமையான திரைக்கதைக்கு இலக்கணம் இப்படம், இப்படத்தை மிகவும் சிலாகித்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள் தன் பிரதான சீடர் இயக்குனர் அமீர்ஜானை வைத்து கதை திரைக்கதையில் எந்த ஒரு சிறிய மாற்றமும் செய்யாமல் முறையாக உரிமை வாங்கி வண்ணக்கனவுகள் (1987 )என்ற பெயரில் தமிழிலும் தெலுங்கிலும் எடுத்தார், தமிழில் இது  100 நாட்கள் ஓடியது.


மலையாளத்தில் இக்கதை நிகழும் கதைக்களமான கொச்சியை மாற்றாமல் தமிழிலும் அதே லொக்கேஷன்களை உபயோகித்திருந்தார், வசனங்களை தமிழில் வைரமுத்து எழுதினார், 


மலையாளத்தில் இப்படத்தின் ஒளிப்பதிவு வின்சென்ட் மாஸ்டரின் மகனான ஜெயனன் வின்சென்ட்,மிகவும் புதுமையானதும் இன்றும் பேசப்படும் ஒளிப்பதிவும் கூட. தமிழில் சி.எஸ். ரவிபாபு,


 மலையாளத்தில் பின்னணி இசை ஷ்யாம் அவர்கள், தமிழில் வி.எஸ். நரசிம்மன் .தமிழ் மலையாளம் இரு வடிவங்களிலும் பாடல்களே கிடையாது.


படத்தின் கதை ,கொச்சி துறைமுகத்தில்  படகோட்டி வரும் மம்முட்டி ஒரு அனாதை, துறைமுகக் கொச்சியில் ஒரு சொல்லாடல் உண்டு, கப்பல்காரன்ட மகன், கொச்சையாகச் சொன்னால் விருந்தாளிக்குப் பிறந்தவன், மம்முட்டியின் பிறப்பு அப்படிப் பட்டது, அவரது வளர்ப்புத்தம்பி ரகுமான்.


இவரிடம் தஞ்சம் புகும் சீமா, தன் அக்கா கணவன் தன் அக்காவை பிராத்தலில் தள்ளியிருக்க தானும் அப்படி சீரழிந்து விடுவோமோ என அஞ்சி காயலில் விழுந்து தற்கொலைக்கு முயன்று மம்முட்டியால் காப்பாற்றப் பட்டு அவர் வீட்டில்  அடைக்கலம் தரப்பட்டிருக்கிறார்.


தன் வீட்டை அடமானம் வைத்து மஸ்கட் செல்ல விசா வேண்டி 15000 ரூபாய் தந்து ஏமாந்து போன மோகன்லாலும் இப்போது மம்முட்டியிடம் தஞ்சம் அடைகிறார்.


இனி இவர்களுக்குள் நிகழும் தூய நட்பு, பாசப்போராட்டம் , தியாகம் தான் மீதிக் கதை,படம் பார்க்கையில் இந்த பாவங்களின் ( எளியார்) ஒன்று கூடல் பிதாமகன் படத்தின் பாவங்களை நினைவூட்டி என்னை கலங்கடித்தது. ஷயாம் அவர்களின் பின்னணி இசை இப்படத்தில் மற்றொரு கதாபாத்திரம்.


 மம்முட்டியின் நடிப்பில் இப்படம் மணிமகுடம் . கார்த்திக்கும் தமிழில் மிக நன்றாக நடித்திருந்தார், 


மோகன்லால் கதாபாத்திரத்தில் இங்கே முரளி, வின்சென்ட் செய்த பிம்ப் அக்கா கணவன் வேடத்தில் இங்கே நாசர் , சீமா கதாபாத்திரத்தில் இங்கே ஜெயஸ்ரீ என அங்கும் இங்கும் அட்டகாசமான காஸ்டிங் கொண்ட படம்.


அடியொழுக்குகள் படம் திரைப்படக் காதலர்கள் அனைவரும் காணவேண்டிய படைப்பு. போர்ட் கொச்சியை மையமாக்கி நகரும் கதைகளில் இப்படம் மிகவும் முக்கியமானது, அதன் இருண்மையை உள்ளது உள்ளபடி காட்டியதில் ஜெயனன் வின்சென்டின் பணி மகத்தானது


எம்.டி.வாசுதேவ நாயர் மற்றும் இயக்குனர்   ஐ.வி சசி இணைந்து நிகழ்த்திய மேஜிக் இப்படம், இப்படத்தின் பாதிப்பில் இருந்து  ஒருவர் மீண்டு வர நாள் பிடிக்கும்.


https://youtu.be/2AXGOrwvprQ

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (248) ஆஸ்கர் (201) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)