ஹேராம் | இறுதி சவ மரியாதை காட்சி

ஹேராம் படத்தில் கடைசிக் காட்சி, இறந்து போன சாகேத்ராமிற்கு மரியாதை செலுத்த வரும் ராக்கி கட்டிய தங்கை , காலஞ்சென்ற  நண்பன் அம்ஜத்தின் மனைவி நபீஸாவைப் பாருங்கள் , உடன் அவரது இரு மகள்கள்,இரு மருமகன்கள்,  பேத்தி ,பேரன், அண்ணன் மகன் ,பேரன் பேத்தி என திரண்டு வந்து மரியாதை செய்வர்,

அவர்கள் அனைவரும் பெரியவர்  சாகேத்ராம் மீது வைத்துள்ள மரியாதையை ,  அன்னியோன்யத்தை உன்னிப்பாக கவனியுங்கள், நபீஸா சாகேத்ராமின் தலையை அண்ணே என்று தடவியவர், மைதிலிக்கு அருகே அமர்ந்து அவரைத் தொட்டுத் தேற்றுவார்.

PS: ஹேராமில் நஃபீஸாவாக நடித்தவர் ஐராவதி ஹர்ஷே, இவரின் பெயர் படம் துவங்கி முதலிலேயே வரும் , படத்தில் நால்வருக்கு prosthetic மேக்கப் உண்டு , நஸ்ருதீன்ஷா முழுக்க prosthetic , கமல்ஹாசன், வசுந்தரா தாஸ், ஐராவதி ஹர்ஷே, ஐராவதி ஹர்ஷே அப்போது 90 களில் ஒளிபரப்பான சாந்தி டெலிசீரியலில் நிதி மகாதேவன் என்ற கதாபாத்திரத்தில் பேசப்பட்டார்.

இந்த காட்சியில் எதிரே தெரியும் Globus, Lifestyle வணிக வளாகம் இன்று காவேரி மருத்துவமனையாகிவிட்டது , சமீபத்தில் அந்தப் பக்கம் செல்கையில் சாம்கோ ஓட்டல் பக்கத்தில் இந்த சவமரியாதை காட்சி படப்பிடிப்பு நடந்த காலியிடத்தை ஊன்றிக் கவனித்தேன் ,

இந்த ttk சாலையில் இன்று மேம்பாலம் உள்ளது, 1999 ஆம் ஆண்டு  மேம்பாலப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அதை மறைக்க  diagonal jally  அமைத்துள்ளனர், dummy compound wall அமைத்துள்ளனர், இந்த முழுக்கூடமும் செட் என்றால் நம்பவே முடியாது.

#சாகேத்ராம், #நஃபீஸா,#மைதிலி,#கமல்ஹாசன், #ஹேராம்,#heyram,#kamalhaasan,#ஐராவதி_ஹர்ஷே

ஹேராம் | ஆசாத் சோடா ஃபேக்டரி

தில்லி சாந்தினி சௌக்கில் இருக்கும்  ஆசாத் சோடா ஃபேக்டரியை கலிங்கம் போலவும் அங்கே சாகேத்ராமை நாம் பேரரசர் அசோகரைப் போல உருவகப் படுத்திக் கொள்ளலாம் , 

அகிம்சை என்றால் என்ன? என்று  பல உயிர்பலி கொண்ட பின் உயிருக்குயிரான நண்பன் அம்ஜத்தின் கடைசி பயணத்திற்குப் பின் அங்கே தான் கண்டறிகிறார், 

அங்கே தான் சாகேத்ராமிற்கு காலம் கடந்த ஞானோதயம் பிறக்கிறது, அதன் பின்னர் அவர் குற்ற உணர்வால் தன் 89 வயது வரை இயல்பு நிலைக்கே  திரும்புவதில்லை, மைதிலியுடன் மீண்டும் திரும்ப வந்து வாழ்ந்தாலும்,அப்யங்கருக்கு செய்து தந்த சத்தியத்தினாலோ என்னவோ? இவர்களுக்கு ஒரே மகன் தான் , அவரிடமும் இவர்  தந்தைப் பாசம் காட்டி வளர்த்ததில்லை, பேரனுக்கு மட்டும் சில அனுபவ கதைகளைச் சொல்லியிருக்கிறார்.

ஆசாத் சோடா ஃபேக்டரி, ஆசாத் என்பது சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும், பஷ்தூன் வம்சாவளியினரை பத்தான் என்பர், அம்ஜத்தின் தந்தை கராச்சி தேசிய காங்கிரஸில் உறுப்பினர்,அவர் முன்பு சென்னையில் ரத்ன கம்பளம் வியாபாரம் செய்தவர், சுதந்திரப் போராட்ட வீரர்,
காந்தியவாதியும் கூட, தொழிலதிபர், காஸ்ம்பாலிட்டன் க்ளப் உறுப்பினர்,  தேசப் பிரிவினையில் நடந்த கலவரத்தில் அவரை இந்து மதவெறி கும்பல் கொன்று விடுகிறது, 

இவர்கள் குடும்பம் ஒருங்கிணைந்த சுதந்திர இந்தியா வேண்டிய குடும்பம், அதன் காரணமாக தம் வீடு , நிலம், வியாபாரம் அனைத்தையும் துறந்து எல்லைக்கோட்டிற்கு எதிர்புறம் பயணித்து தில்லி வந்தவர்கள், தில்லியில் பிரிவினையின் போது  ஒரு முஸ்லீம் குடும்பம் தன் சோடா ஃபேக்டரியை விற்று விட்டு பாகிஸ்தான் விரைய,  இவர்கள் அதை விலைக்கு வாங்கி தொடர்ந்து நடத்துகின்றனர், 

காந்தி சொன்ன அகிம்சை வழி நின்று வாழ்பவர் அம்ஜத் அலிகான்.
அம்ஜத்தின் மனைவி நஃபீஸா பேகம் தமிழ் பேசத் தெரிந்த உருது முஸ்லிம், ஆற்காடு நவாப்பின் அரசாங்கத்தில் ஆம்பூரில் வழி வழியாக வாழ்ந்த குடும்பம், தொப்புள் கொடி உறவான தம் கராச்சி வாழ் பஷ்தூன் வம்சாவளியான அம்ஜத்திற்கு நஃபீஸாவை திருமணம் செய்து தந்துள்ளனர் அவர் பெற்றோர்,

தில்லியில் கடந்த ஒரு வருடமாக வெடிக்கும் இந்து முஸ்லிம் கலவரங்கள் இவர்களை கலங்கடித்திருக்கிறது, அதன் காரணமாகத் தான் ஆசாத் சோடா ஃபேக்டரியை ஒரு maze போன்ற அமைப்பில் மறு வடிவமைத்துள்ளனர்,
பிரதான கதவை யாரும் தட்டினால்  திறப்பதில்லை,ரகசிய சமிஜ்ஞை செய்தால் தான் வேறு கதவு வழியே உள்ளே செல்ல முடியும், உள்ளே வெளியாள் ஒருவர் வந்தால் அவர் திரும்ப வெளியே போக குழம்பும்படியான அமைப்பு கொண்டது, 

அதற்கு பாதுகாப்பாக அம்ஜத்தின் மாமனார், மற்றும் மைத்துனர்,சோடா ஃபேக்டரி ஊழியர்கள்,அவர்கள் குடும்பப் பெண்கள்,  தற்காப்புக்கு சில துப்பாக்கிகளுடன்  இங்கேயே உடன் வசிக்கின்றனர்,மாலை 6-00 மணிக்கு வெளியே ஊரடங்கு உத்தரவு தொடங்க, சாகேத்ராமையும் , கோவர்த்தனையும் உள்ளே அழைத்துப் போய் அடைக்கலம் தருகிறார் அம்ஜத்.

மாமனாருக்கும் மைத்துனருக்கும்  அம்ஜத்தின்  அகிம்சாவாதத்தின் மீது எரிச்சல் நிரம்ப உண்டு, அஹிம்சை  காரணமாகத் தான் கராச்சியில் தன் சம்பந்தியை இழந்திருக்கிறார் மாமாஜான்,

சாகேத்ராம் தன் பர்ஸ் சோடா crate ல் விழுந்து விட்டது என்று பொய் சொல்ல,  மைத்துனனோ அம்ஜத்தை முன்கோபத்திலும்  உரிமையிலும்  அடிக்கவும் செய்வார், சாகேத்ராம் சோடா crate ற்குள் ஒளித்து வைத்த துப்பாக்கி மாமாஜானிடம் தான் கிடைத்து, அதை தன் குர்தா சட்டை பையில் வைத்துள்ளார் அவர், உன் நண்பனின் பர்ஸ் எப்படி துப்பாக்கியாக மாறியுள்ளது பார்? என குதர்க்கமாக பேசி கொதிக்கிறார் மாமாஜான்.

ஒரு வருடமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தற்காலிக அமைதி திரும்பியுள்ளது, காந்தியின் உண்ணாவிரதத்திற்கும் அமைதி திரும்பியதற்கு முக்கிய பங்கு உண்டு,

இந்நிலையில் தான் தன் கொலை ஆயுதத்தைத் தேடி சாகேத்ராம் உள்ளே pimp கோவர்த்தனுடன் வந்தவர் , அங்கே துப்பாக்கி திரும்ப வாங்க நடந்த கைகலப்பில்  அம்ஜத்தின் மாமாஜானைக் (மாமனார்) கொன்று விடுகிறார்,உடன் இருந்த உறவுக்காரப் பெரியவரும் பலியாகிறார்.

அவரின் மகன் , அம்ஜத்தின் மைத்துனர் சாரி கும்பல் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் சுடப்படுகிறார், அவர் உயிர் பிரிந்த அதே தருணம் அவருக்கு மகன் பிறக்கிறான், துப்பாக்கிகள் வெடித்து முழங்கி பல உயிர்பலிகளை வாங்கிய பின் தான்  ஓய்கிறது, 

கடைசியில் போலீசார் காப்பாற்ற வருகின்றனர், போலீசார் குற்றுயிரான அம்ஜத்தை ஸ்ட்ரெட்சரில் கொண்டு போகின்றனர், இவரின் ராக்கி கட்டும் தங்கை  நஃபீசாவின் அப்பா, தம்பி, கணவன் சாக காரணமாகிறார் சாகேத், இவர் உயிரை ஆசாத் சோடா ஃபேக்டரிக்குள் மூன்று முறை காக்கிறார் அம்ஜத்,

ஆனால் அம்ஜத் உயிரை மற்ற ஆண்கள் உயிரை சாரி கும்பலின் துப்பாக்கி சூட்டிலிருந்து எத்தனைப் போராடியும் சாகேத் ராமால் காப்பாற்றவே முடிவதில்லை, அம்ஜத்தை சாரி கும்பலின் சம்மட்டிக்கு பலி கொடுத்து விட்டார், கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லி சமாதானம் பேச வெளியே வந்த அம்ஜத்தை தொடையில் சாரி கும்பலில் ஒருவன் சுட்டு விட அதீத ரத்தவெள்ளப் போக்கில் சரிகிறார் அம்ஜத்,

மருத்துவமனையில் pimp கோவர்த்தன் பைரவ் என்பவனால் தான் இந்த துப்பாக்கிச் சூடு முதலில் தொடங்கியது நிறைய உயிர்களை பலி வாங்கியது என போலீசாரிடம் வாக்குமூலம் தந்து விட்டு சாகிறான்,

அதை உறுதிப் படுத்த அம்ஜத்திடம் மரண வாக்குமூலம் பெற வந்த போலீஸ் அதிகாரியிடம் அம்ஜத் , நான் அந்த பைரவ்வை பார்த்ததேயில்லை,அந்த மிருகத்தை இதற்குப் முன் பார்த்ததேயில்லை, என் உயிரை, என் வீட்டுப் பெண்கள் உயிரை மானத்தைக் காத்தவன் என் ராம் என்று சாகேத்ராம் கையைப் பற்றிய நிலையில் உணர்ச்சிவசப்பட்டு சொல்லி மூர்ச்சையாகிறார்,

உடன் நஃபீசாவும் அவர் மாமியார் ஹஜ்ராவும் இரு மகள்களும் உள்ளனர், அவர்கள் திருப்திக்கு வேண்டி அம்ஜத்திற்கு cpr முதலுதவி செய்வார் மற்றொரு டாக்டர்,அதைப் பார்க்கும்  அத்தனை விழிகளிலும் நீர் திரண்டிருக்கும், அம்ஜத்தின் அந்த மினுங்கும் கண்கள் வழியே உயிர்  விடை பெற்றிருக்கும் ,

 சாகேத்ராமை டாக்டர் நெருங்கி, அம்ஜத்தின் மனைவி, அம்மாவை, குழந்தைகளை வெளியே கூட்டிப் போகப் பணிப்பார், இதே அறையில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளனர், இவர்கள் கத்தி கூப்பாடு போட்டால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து , புரிந்து கொள்ளுங்கள் ராம் என்பார்,

இவர் நெக்குருகியவர் ஆனால் டாக்டர்கள் எதோ  செய்கின்றனரே ? என சுட்டிக்காட்டி கேட்க ,அது ஒரு முயற்சி தான்,ஆனால் பயனில்லை என்பார், சாகேத்ராம் அமைதியாக நால்வரையும் வெளியே அழைத்துப் போவார், இப்போது மிகப்பெரிய பாரத்தை  அவர் தோள்களில் ஏற்றிவிட்டு விடைபெற்றிருப்பார் அம்ஜத்,

#ஹேராம், #கமல்ஹாசன், #சாகேத்ராம்,#அம்ஜத்,#ஆசாத்,#சோடா_ஃபேக்டரி

1947 Earth | 1998 | பிரிவினையின் வலி

1947 earth ( 1998 )படத்தில் வரும் பல பிரிவினைத் துயர் காட்சிகளில் இதுவும் ஒன்று, தேசப்பிரிவினையின் போது லட்சக்கணக்கானோரின்  துயரத்தை இயல்பாக இந்த தலைமுறைக்குச் சொன்ன திரைப்படம் இது,இயக்குனர் தீபாமேத்தா சிறந்த பகுத்தறிவாதி, காணும் அனைத்தையும் கேள்வி கேட்பவர்,

பிரிவினை அறிவிக்கப்பட்டவுடன் அது வரை ஒண்ணும் மண்ணுமாய் பழகிய ஒரு தாய் மக்களிடம் மதம் ஏற்படுத்திய பிளவை பொட்டில் அடித்தாற்போல  கேள்வி கேட்டவர், 

தம் படைப்புகளில் மதம், கலாச்சாரம்  மீதான தொடர் விமர்சனங்களால் இந்தியாவிற்குள்  வாழ அச்சுருத்தப்பட்டவர், தொடர்ந்து பெண்ணுரிமை ,  சமத்துவம் ,நடுநிலை போன்ற உன்னதமான தளங்களில் இயங்குபவர், இன்று நம் நாடு சகிப்புத்தன்மை குறைந்து  மததுவேஷ கலவரங்களில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கையில் கடந்தங்கால தவறுகளிலிருந்து பாடம் படிப்பதும் அவற்றை அசைபோடுவதும்  அவசியமாகிறது.

காட்சி 1

பணக்கார பார்சி வீட்டுச் சிறுமி லென்னி , தன் வீட்டுக்குப் பின்னால் காலி இடத்தில்  கோலி விளையாடும்  முஸ்லிம் சிறுவனை அருகே கூப்பிட்டவள்,கேட்கிறாள்

உன் அம்மாவை? Rape செய்தனரா?

இந்துக்கள் எங்கள் கிராமத்தை சுற்றி வளைக்கையில் எல்லோரையும் கொன்று விட்டனர்.

நான் பிரேதங்களுக்கு அடியில் ஒளிந்து கொண்டதால் தப்பினேன்.

உன் அம்மாவையும் கொன்றனரா?

ஆமாம்.

நீங்கள் இந்துக்களா?

இல்லை, பார்ஸிக்கள்.

நாம் கோலி விளையாடலாமா?

இந்துக்கள் கலைந்து போன பின் என் அம்மாவைத் தேடிப் போனேன்.

என் அம்மா மசூதியில் இருந்தாள்.

அவள். தலை முடியை மின்விசிறியில் கட்டி தொங்கவிட்டிருந்தனர்.

அவள் உடம்பில் ஒட்டுத்துணியில்லை.

சிறுமி லென்னிக்கு மேலும் கேட்க முடியவில்லை

இன்று என் பிறந்தநாள்.

உனக்கு கேக் வேண்டுமா?

கேக்கா? அப்படி என்றால் என்ன?!!!

காட்சி இருண்டு முடிகிறது

காட்சி 2 இங்கே

https://m.facebook.com/story.php?story_fbid=10158261835186340&id=750161339

#1947earth,#deepamehta,#சகிப்புத்தன்மை,#தேசப்பிரிவினை,#லென்னி,#பார்ஸி
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)