அயல் சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அயல் சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கார்கோ 200 [Cargo 200 ][Груз 200] [2007][ரஷ்யா][கண்டிப்பாக18+]

ண்பர்களே!!!
இந்த படத்தைப்பற்றி எப்படி எழுத ஆரம்பிப்பது எனத்தெரியாமலே நாட்களைக் கடத்திவிட்டேன். சமகாலத்தில் நான் பார்த்த சைக்காலாஜிக்கல் த்ரில்லர் வகையரா படங்களில் இப்படத்துக்கே முதலிடம் தருவேன்.  ய ஹாண்டிங் மூவி என்பார்களே அதற்கு முழுத் தகுதியான படம்,உங்களுக்கு சைக்கோபாத் பற்றி தெரிந்திருக்கும், சோசியாபாத் பற்றி தெரியுமா?!!! படம் பார்த்து முடித்தவுடன் இயக்குனர் அலெக்ஸெய் பாலபொனோவின் அத்தனை படங்களையும் ஒரே மூச்சில் பார்க்கச் செய்யும் படைப்பு.ஒரு சாதாரண சினிமாவுக்கும் ஆட்டியர் படைக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?  என்று இந்தப்படம் பார்த்த பின்னர் புரிந்து கொள்வீர்கள். இது ஒவ்வொரு குடிமகனும் , அரசியல்வாதியும், தத்துவவாதியும்,சமூக ஆர்வலரும்,  மனோதத்துவ நிபுனரும் பார்க்க வேண்டிய படம் என்பேன்.

ன் தேசம் தவறிழைக்கும் போது அபார நெஞ்சுரம் கொண்ட படைப்பாளியால் தான் அதைத் தட்டிக் கேட்கமுடியும். அவனுக்கு வரும் அறக்கோபத்தின் வெளிப்பாடு ஒரு எரிமலையின் சீற்றத்தை விடவும் பயங்கரமாயிருக்கும், அப்படி  27டிசம்பர் 1979முதல் 15 பிப்ரவரி 1989ஆம் ஆண்டு வரையான கொடிய ரஷ்ய-ஆஃப்கன் போரின் போது ரஷ்ய மக்கள் அனுபவித்த சொல்லொனாத் துயரத்தின் ஒருசோற்றுப்பதமாக  1984 ஆம் ஆண்டின் பூலோக நரகம்- ரஷ்யா எப்படி இருந்ததுஎப்படி  இருந்தது ?!!!  என  வெடித்த ஓர் படைப்பாளியின் அறக்கோபம்  தான் இப்படம். மேலும்  இது நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் ஃபால்க்னர் 1931ஆம் ஆண்டில் எழுதிய சான்க்சுவரி[Sanctuary] என்னும் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ஒப்பில்லா படைப்பும் ஆகும்.


ரு சொறி சிரங்கை குறுக்கு வெட்டு தோற்றம் செய்து பார்த்தால் நாம் சீழ், ரத்தம், அழுகிய சதைக் கோளத்தையே பார்ப்போம், அப்படிப்பட்ட மூர்க்கமான படைப்பு தான் கார்கோ200.  ஆனால் படத்தில் காட்டப்படும்  சம்பவங்கள் அத்தனையும்  கம்யூனிச ரஷ்யாவில் நடந்தவையே ஏன்?!!! இதை விட மோசமாகவே நடந்தது என்கிறார் இயக்குனர். இந்தப்படம் கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல்லெரிவதைப்போன்ற முயற்சி. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படம் ரஷ்ய சினிமாவின் மைல்கல் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள் பலர்.

கார்கோ 200:- பெயர்க்காரணம்- போரினால் நாயகர்கள் உருவாவதில்லை, பிணங்களே உருவாகின்றன: என்பதே இப்படம் சொல்லும் பாடம்.ஆஃப்கன் போரில் செத்து மடிந்த ரஷ்ய போர் வீரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது, சவப்பெட்டி தயாரிக்கவோ இறக்குமதி செய்யவோ நேரமோ பொருளாதாரமில்லாத கம்யூனிச அரசு , தாமதமாக துருபிடிக்கும் என்பதால் ஏசி ஷாஃப்டு  தயாரிக்கும் ஸின்க் தகடு [துத்தநாகம்]கொண்டு சவப்பெட்டி செய்தது, மேலே மூடுவதற்கு ஒரு பைன் மரப்பெட்டி. இதில் தான் செத்து மடிந்த வீரர்கள் ரஷ்யாவுக்கு பலநாட்கள்  விமானக் காத்திருத்தலுக்கு பின்னர் அனுப்பப்பட்டனர். அதைத்தான் ரஷ்யமொழியில் Gruz 200[கார்கோ 200] என்றிருக்கின்றனர் .
=====0000=====
படத்தின் கதை:-
1984ஆம் ஆண்டு, ஆஃப்கன் போரின் உச்சத்தில் கம்யூனிச ரஷ்யாவில் லெனின்க்ராட் என்னும் ஊருக்கு அருகே துவங்குகிறது படம். மிஷா [Iurii Stepanov] ஒரு தேசபக்திகொண்ட ராணுவ கர்னல், தன் கல்லூரி படிக்கும் மகள் லிசா,தன்அழகிய மனைவியுடனும் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். சமூகத்தில் பார்க்கும் அனைத்துமே அவருக்கு நல்லதாகவே தெரிகிறது, ஆஃப்கன் போரே ஆஃப்கானிஸ்தானை மேம்படுத்த தான் என நம்புகிறார்.இப்போது ஏற்பட்டிருக்கும் உணவுப்பஞ்சம் கூட விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறார்.


வரது அண்ணன் ஆர்டெம் (Gromov)பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான நாத்திகம் பயிற்றுவிக்கும் பேராசிரியர். அவர் தன் தம்பியை நீண்ட நாட்கள் கழித்து வீட்டில் வந்து சந்திக்கிறார். தன் ஊரிலிருந்து உணவுப்பொருட்களை தம்பிக்கு நிறைய கொண்டு தருகிறார். மிஷாவின் பேச்சு தன் டிஸ்கோத்தே பித்து பிடித்த  மகள் லிசாவைப் பற்றியும் அவளின் காதலன் வலேர்ரி பற்றியும் திரும்புகிறது. அவன் ஆஃப்கன் போரில் பணிபுரிந்துவிட்டு இங்கே வந்து சொந்த தொழில் செய்வதாகவும், அண்ணன் ஆர்டெம் வைத்திருப்பதை விட நல்ல வேகமாய் செல்லும்  சலூன் ரக கார் வைத்திருப்பதாகவும் சொல்கிறார். 
லேர்ரி  இந்த இளவயதில் சம்பாதித்ததும் தான் இதுவரை சம்பாதித்ததும் சமம் தான் என வியக்கிறார். வலேர்ரியும் இவரின் மகள் லிசாவும் இப்போது வீட்டுக்குள் வர பரஸ்பரம் அறிமுகம் ஆகிறார்கள். பின்னர் மிஷாவின் மகளிடம் புகைப்படத்தில் இருக்கும் தன் டிஸ்கோத்தே பித்து பிடித்த கல்லூரிமகனின் போட்டோவை காட்டுகிறார் ஆர்டெம். பின்னர் பக்கத்து நகரில் இருக்கும் அம்மாவைப் பார்த்துவிட்டு தான் தன் ஊருக்கு போகிறேன் என்று அம்மா இருக்கும் லெனின்க்ராட் என்னும் ஊர் நோக்கி கிளம்புகிறார்


ழியில் ஆர்டெம்மின் , அரசு தயாரித்து விற்கும் ரியர் எஞ்சின்  ஸபரோசெட்ஸ்[Zaporozhets]  ரக கார் பழுதாகி நின்றுவிடுகிறது, மற்ற கார்களை போலல்லாமல் டிக்கி இருக்கும் இடத்தில் எஞ்சினும் எஞ்சின் இருக்குமிடத்தில் டிக்கியும் இருக்கிறது, ஆகச்சிரிப்பு தான், என்னென்னவோ கைவைத்தியம் செய்தும் சரியாகாமல் வெகு தொலைவில் தெரியும் பண்ணை வீட்டை நோக்கி நடக்கிறார். அங்கே இருளடைந்த வழியில் ஒரு விரைப்பானஆள் மோட்டார் சைக்கிளுடன் நிற்பதைப் பார்த்தவர், எனக்கு கார் பழுதுநீக்க உதவி வேண்டும் எனக் கேட்க அவன் முறைத்துவிட்டு அந்த வீடு நோக்கி கைகாட்டுகிறான். 


குறித்துக்கொள்ளுங்கள் அந்த முரட்டு ஆள் ஸுரோவ்வை [Aleksei Poluian] நாம் வாழ்வில் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்  . அவன் ஒரு சோசியாபாத், போலீஸ் அதிகாரி , ஆண்மையற்றவன், பண்ணைவீட்டுக்குள் அவனின் முன்னாள் மனைவி அண்டோனீனா ஓர் முன்னாள் சிறைக்கைதி அலெக்ஸியுடன் ஓடிவந்து குடும்பம் நடத்துகிறாள், இப்போது பிழைப்புக்கு கள்ளச்சாராயமும் விற்கிறாள்.அவளை வசமாக பழிவாங்க தருணம் பார்த்தே அனுதினமும் அங்கே வந்து காத்து நிற்கின்றான் ஸுரோவ்.


ப்போது  ஆர்டெம் பண்ணை வீட்டுக்குள் நுழைய அங்கே அங்கே முன்னாள் சிறைக்கைதியும் இந்நாள் கள்ளச்சாராய[ஓட்கா]வியாபாரியுமான அலெக்ஸி தன் இரட்டைக்குழல் துப்பாக்கியை துணிகொண்டும் ஊதியும் துடைக்கிறான். அவன் வீட்டுக்கு எந்நேரமும் வாடிக்கை குடிகாரர்கள் வந்து ஓட்கா அருந்திவிட்டும், வாங்கிக்கொண்டும் செல்வதைப் பார்க்கிறோம். ஆர்டெம் அப்படி ஒரு இடத்துக்குள் வந்து விட்டு மிகவும் மருண்டவர், அலெக்ஸியிடம் தன் காரை பழுது நீக்க உதவி கேட்கிறார். அலெக்ஸி மௌனமாக இருந்தவன், தன் வியட்நாமிய வேலைக்காரன் வரட்டும் என்கிறான், 


தற்குள் வேலைக்காரன் மது பாட்டில்களை கொண்டுவந்து வைக்க, மூவருக்கு ஊற்றுகிறான் அலெக்ஸி. மது குடித்தால் தான் காரை பழுது நீக்க உதவுவேன் என்று மிரட்டுகிறான். குடிக்கும் போதே அவர் அறிவியல் நாத்திக பேராசிரியர் என தெரிந்து கொண்டவன் அவரிடம் தனக்கு ஒவ்வாத கம்யூனிச சித்தாந்தங்கள், நாத்திகம், ஆப்கான் போர் பொது உடமை போன்றவற்றை எள்ளி நகையாடுகிறான். அங்கலாய்க்கிறான். அவருக்கோ போதை எல்லை மீறுகிறது, அவனின் பல கேள்விகளுக்கு மௌனத்தையே பதிலாக அளிக்கிறார். அலெக்ஸியின் மனைவி இடைமறித்தவள், உனக்கு முற்றிவிட்டது, ஒழுங்காக படு என்கிறாள். அவன் கேட்கவில்லை, அலெக்ஸியின் மனைவி அண்டோனீனாவோ வியட்நாமியனை கண்டவாறு வேலைவாங்குகிறாள், அவனும் சளைக்காமல் செய்தவன், ஒருவழியாக இவரது காருக்கு வருகிறான். காரின் எஞ்சினை தேடியவன், கார்பரேட்டர் ஸ்பார்க் ப்ளக்கை கழற்றி தற்காலிகமாக ஊதித் தேய்த்து மாட்டி காரை கிளப்பித்தருகிறான். காரில் பெல்ட் வேறு மாற்றவேண்டும். வழிக்கு நிச்சயம் தாங்காது. 

நீங்கள் போகும் ஊர் மிகத்தொலைவு ஆதலால், அதிக தூரம் செல்லாதீர்கள்  கடை கிடையாது என்கிறார். போதையில் காரை அதிகதூரம் ஓட்டிச்செல்ல மனமில்லாத ஆர்டெம் தன் சகோதரன் மிஷா வீட்டுக்கே திரும்புகிறார். தன் மகள் லிசா காதலன் வலேர்ரி திரும்பி வராத மன உளைச்சலில் இருக்கிறாள் என்கிறார். நல்லவேளை மனைவி இரவு பணிக்கு போயிருக்கிறாள், என்று அண்ணனை சோஃபாவில் படுக்கவைக்கிறார். அண்ணன் வயிறுமுட்ட குடித்திருப்பதைக்கண்டு வியக்கிறார்.

ப்போது மிஷாவின் மகளின் காதலன் வலேர்ரி தான் எப்போதும் செல்லும் டிச்கொத்தேவுக்கு தனியாக செல்கிறான்.அரசால் தடைசெய்யப்பட்ட ஓர் இடத்தில் அப்படி ஒரு இளைஞர், இளைஞிகளின் ராண்டவு அது. அங்கே  உள்ளூர் கம்யூனிச பார்ட்டி தலைவரின் மகள் ஏஞ்ச்லிக்காவும் வருகிறாள் அவளுக்கு 18 வயது இருந்தாலே அதிகம், இன்னும் அவள் கன்னி தான், தன் காதலன் ராணுவத்தில் பாராட்ரூப்பர். ஆஃப்கானில் போரிட்டுக் கொண்டிருக்கிறான்,  விடுமுறையில் திருமணம். இப்போது தனிமை வாட்ட. வலேர்ரியை கண்டவள் என்னுடன் டிஸ்கோ ஆடுகிறாயா? என்கிறாள்.

வன் இதோ வருகிறேன் என ஒரு அழுக்கு கழிப்பறைக்குள் போனவன் கோக்னாக் [பிராந்தி] ஹாஃப் பாட்டில் அது, அதை அப்படியே குடிக்கிறான், அவளுடன் டிஸ்கோ ஆடுகிறான்,அவளை நான் உனக்கு ஒன்று காட்டுகிறேன் என தன் காரை காட்டி இது தீயாக பறக்கும் என்கிறான். அவளுக்கும் கோக்னாக் புகட்டுகிறான். உதட்டில் முத்தமிட்டவன், அவளை மார்பகங்களில் கைவைத்து  அழுத்தி முயங்க எத்தனிக்க,அவள் மறுக்கிறாள், திமிருகிறாள். கோக்னாக் வேறு தீர்ந்துவிட்டது, அவளை குடிக்கவைத்து பின்னர் முயங்கலாம் என திட்டமிட்டவன். ஒரு இருளடைந்த சாலையில் பயணித்து அலெக்ஸி இருக்கும் அதே பண்ணை வீட்டுக்கு வருகிறான். அங்கேயே காரில் அவளை விட்டுவிட்டு வீட்டுக்குள் போனவன் குடிகாரன் அலெக்ஸியிடம் ஓட்கா கேட்கிறான்,  நிறைய ரூபிள் தருகிறான்.  இப்போது அலெக்ஸிகும் வலேர்ரிக்கும்  நன்றாக போதை ஏறிவிட, வெளியே இருட்டில் காருக்குள் இருக்கும்  ஏஞ்ச்லிக்காவுக்கு பயமாக இருக்கிறது,இப்போது சோசியாபாத் ஸுரோவ் வேறு அவளை கார் கண்ணாடி வழியே ஆவலுடன் எட்டிப்பார்க்கிறான், இவள் பயத்தில் அலறியே விட்டாள்.


போலீஸ்காரன் ஸுரோவ்  இப்போது விலகி விட,மருண்ட ஏஞ்ச்லிக்கா தன் குதிகால் செருப்புக்களை அள்ளியவள் வீட்டுக்குள் ஓட்டமெடுக்கிறாள். அங்கே இவளை கூட்டிவந்த வெலெர்ரி மட்டையாகியிருக்க, அலெக்ஸியோ இவளை அருகே கண்டவன் மிகவும் காமுறுகிறான். அவளை விடாமல் துரத்த, அவன் மனைவி எதிர்ப்பட்டவள். ஏஞ்ச்லிக்காவை நோக்கி நீ என்ன விதைத்தாயோ அதைத்தான் அறுக்கிறாய் எனக்கூறி மிரட்டுகிறாள். உனக்கு என்ன  தைரியம் இருந்தால் இந்நாட்களில் முன் பின் தெரியாதவனுடன் புதிய இடத்துக்கு வருவாய்? !!! என்றவள் அடுப்பின் புகைப்போக்கி அருகே குளிருக்கு வாகாக மறைத்துவைக்கிறாள். கணவன் தள்ளாடியபடியே அவளை தேடிவர,அவள் பின்புறமாக ஓடிவிட்டாள் என்கிறாள். ஏமாந்தவன் போதைமிகுதியால் நாற்காலியிலேயே சரிகிறான். அவனை அவன் மனைவியும்,வியட்நாமியனும் தூக்கி கட்டிலில் தூங்கச்செய்கின்றனர்.


லெக்ஸியின் மனைவி அண்டோனீனா ஏஞ்லிக்காவை உலுக்கியவள். அவள் என் அப்பா ஒரு பெரிய கட்சித்தலைவர். அவர் தெரிந்தால் உங்களை சும்மா விடமாட்டார். என்னை எப்படியாவது வீட்டில் விட்டுவிடுங்கள். என்கிறாள். அவளோ? இப்போது நள்ளிரவு, இந்த கும்மிருட்டில் எங்கே போனாலுமே ஆபத்துதான். பின்புறம் தெரியும் மாட்டுத் தொழுவத்தை காட்டியவள்,அங்கே கன்றுபோட்ட மாடு இருக்கிறது, அதை தொந்தரவு செய்யாமல் அதன் பின்னே வைக்கோல் போர் இருக்கிறது, அங்கே சென்று ஒளிந்துகொள், நான் பின்னர் வந்து வெளியே பூட்டுகிறேன். காலையில் இந்த குடிகாரன் வெலேர்ரி எழுந்ததும் அவனுடன் அனுப்புகிறேன். என மிரட்டுகிறாள். இப்போது அவள் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலைக்கு ஏஞ்ச்லிக்கா வந்துவிட்டிருக்கிறாள். அதேபோலவே ஓடிப்போய் மாட்டின் மீது விழுந்தவள் வைக்கோல் போருக்குள் பதுங்குகிறாள்.
லெக்ஸியின் மனைவி அண்டோனீனாவுக்கு எதோ பொறிதட்ட மாட்டுக்கொட்டகையில் அவளை ஒளித்து வைக்க வேண்டாம் என நினைக்கிறாள். தன் கணவனின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டவள், தொழுவத்துக்குள் சென்று ஏஞ்ச்லிக்காவை எழுப்புகிறாள். அவளை கூட்டிக்கொண்டு அருகே இருக்கும் ஒரு மதுக்கிடங்கு அறைக்குள் நுழைந்து அவளுக்கு இரட்டைக்குழல் துப்பாக்கியை கொடுத்து வெளியே பூட்டுகிறாள். இப்போது நிம்மதியாக வீட்டுக்குள் போய் தூங்கச்செல்கிறாள், இப்போது போலீஸ்காரன் ஸுரோவ் வியட்னாமிய வேலைக்காரனை கோபமாக அழைக்கிறான். அந்த அறையை திற சோதனை போடவேண்டும் என்கிறான், உள்ளே இருந்த ஏஞ்ச்லிக்கா துப்பாக்கியை காட்டி மிரட்டி,என் அப்பா ஒரு பெரிய கட்சித்தலைவர். என் காதலன் ஒரு பாராட்ரூப்பர். நெருங்காதே சுட்டுவிடுவேன் என்கிறாள்,


ஸுரோவ்வோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவளிடமிருந்து துப்பாக்கியை லாவகமாய் பறிக்கிறான். ஏஞ்ச்லிக்காவை ஒருவித ஆவலோடு நெருங்குகிறான். அவள் தலையை அவிழ்த்தவன், மார்பை தடவுகிறான். அவள் பயந்து கண்மை கலைய அழுது மருண்டவள், வியட்நாமிய வேலைக்காரன் வேண்டாம், எஜமான் பாவம் என்று தடுக்கத் தடுக்க கேளாமல்,துப்பாக்கிக்கு குண்டுகள் போட்டு பின்னர் சாவகாசமாக அவனை சுட்டும் கொல்கிறான். ஏஞ்லிக்காவை நெருங்குகிறான். அவள் தான் இதுவரை கன்னி கழியவில்லை, என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்ச,துப்பாக்கியால் மிரட்டி,அவளின் பேண்டியை கழற்றச்செய்கிறான். நான்கு கால்களில் நில் என்று கட்டளையிட்டவன். ஒரு சிறிய வோட்கா பாட்டிலை எடுக்கிறான், அதைக்கொண்டு அவளை புணருகிறான். வெரோனிக்கா அலறுகிறாள். பண்ணைவீட்டுக்குள் இந்த சத்தம் கேட்டு அண்டோனீனா நெஞ்சுவெடித்து அழுகிறாள். எல்லாம் கைமீறிவிட்டது என்பது புரிகிறது.

பொழுது நன்றாய் விடிகிறது,கொடிய சோசியாபாத்உரல் [ural] ரக சைட் கார் பொருத்திய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டவன், அவளின் கையோடு விலங்கிட்டு சைட் காரில் பூட்டுகிறான். அவளுக்கு மிகுந்த உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.  குளிர் எலும்பையே துளைத்து வாட்டுகிறது என் காலணிகளை கொடு என்னை விட்டு விடு என கெஞ்ச, அவன் போய் காலணிகளை தேடி எடுத்துவந்து அணிவிக்கிறான். ஸுரோவ் வெரோனிக்காவை இப்போது தன் வண்டியை கிளப்பி ஓட்டிச் செல்கிறான். வெரோனிக்காவை கடத்திச் செல்வதை குடிபோதை தெளிந்து கண்விழித்த வெலெர்ரி ஜன்னல் வழியாக பார்க்கிறான். பின்னர் தன் புதர் மறைவில் நிறுத்தியிருந்த தன் காரை எடுத்துக்கொண்டு பேய் வேகத்தில் பறக்கிறான்.அவன் என்ன ஏஞ்ச்லிக்காவை காப்பாற்றவா போவான்?அவன் கவலை அவனுக்கு.


ஸுரோவ் போகும் வழியில் ஒரு பொது தொலைபேசியில் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எண் சுழற்றி, அருகே ஓர் பண்ணை வீட்டில் வியட்நாமிய வேலைக்காரன் ஒருவன் சம்பளத் தகராரால் அலெக்ஸி என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டான். என்று அனானியாக போட்டுகொடுத்து விட்டு வெரோனிக்காவுடன் அகல்கிறான். அப்போது ஒரு பாடல் பிண்ணணியில் ஒளித்து நம்மை புரட்டிப்போடுகிறது, நாம் பார்க்கும் புகைப்போக்கிகள், அழுக்கான வானம். பழைய பாழடைந்த கட்டிடங்கள், சுற்றுப்புறச்சூழல் கெட்டு அழியும் புறநகர்ப்பகுதி. பாலத்தின் மேல் செல்லும் ரயில் என மனதைப் புரட்டிப்போடும் காட்சியமைப்பு என்பேன்.


ப்போது லெனின்ஸ்க் என்னும் ஊருக்குள் நுழைகிறான் ஸுரோவ், தன்னுடைய மிகக்கேவலமான அரசு அடுக்குமாடி குடியிருப்புக்குள் ஏஞ்லிக்காவை அழைத்துச் சென்றவன், [இங்கே ஸுரோவ்வைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும், அவன் ஒரு சோசியோபாத் மட்டுமல்ல, தாய்பாசமுள்ள தனயன்.] ஏஞ்லிக்காவை தன் குடிக்கார அம்மாவிடம் அறிமுகம் செய்கிறான்,தன்னை விட்டுவிட்டு ஒரு ராணுவ வீரனுடன் இவள் ஓடிவிட்டாள், மனைவியை மிகவும் நேசிக்கும் நான் விடாமல் இவளை இங்கே தூக்கிவந்துவிட்டேன் பார்த்துக்கோ!!! என்கிறான். நீ எந்நேரமும் தொலைக்காட்சி பார்க்காதே, நீ பார்க்கும் அந்த கம்யூனிஸ்ட் பிரச்சார படங்கள் இவளுக்கு பிடிக்காமல் மீண்டும் ஓடிவிடப்போகிறாள் என்கிறான். ஏஞ்சிலிக்காவை கட்டிலில் பிணைத்து விலங்கிடுகிறான்,


ஞ்ச்லிக்கா தனக்கு மிகவும் உதிரப்போக்கு ஏற்ப்படுகிறது கழிப்பறைக்குப் போகவேண்டும் என்று சொல்ல, அவளுக்கு ஸுரோவ் பெட்பேன் கொண்டு வந்து தருகிறான். குடிக்க ஓட்கா மட்டுமே தருகிறான். சதா அவளை ஓட்கா போதையிலேயே ஆழ்த்துகிறான். தூரத்தில் தெரியும் அழுக்கடைந்த வானமும்,பாலத்தின் மேலே செல்லும் சரக்கு ரயிலும், பாலத்துக்கு கீழே செல்லும் மற்றொரு ரயிலும் ,தொலைவில் புகைபோக்கிகள் கக்கும் புகையும் நம்மை என்னவோ செய்கிறது.சோசியாபாத்தை இதுபோல எங்கும் இவ்வளவு டீட்டெய்லாக பார்த்ததில்லை.

ப்போது ஸுரோவ்வுக்கு அவன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வர கிளம்பிப்போனவன், பண்ணைவீட்டில் நடந்த வியட்நாமியன் கொலைக்காக அலெக்ஸியை கைது செய்கிறான், அப்போது தம்பி மிஷா வீட்டிலிருந்து தன் அம்மாவைப்பார்க்க காரில் செல்லும் ஆர்டெம் அந்த பண்ணைவீட்டை கடக்கிறார். அங்கே போலீசார் அலெக்ஸிக்கு விலங்கிட்டு இழுத்துச்செல்கின்றனர். ஆனால் இவரின் வேலைக்கு ஆபத்து என்று இறங்கி விசாரிக்காமல் போய்விடுகிறார் ஆர்டெம். தொலைக்காட்சி பார்த்து வியட்நாமியன் கொலையையும் அந்த இளம்பெண் ஏஞ்ச்லிக்கா கடத்தப்பட்டதையும் தெரிந்துகொள்கிறார். தன் சகோதரனுக்கு போன் செய்ய  அவரும் அங்கே மிகவும் பதட்டமாக பேசுகிறார், தன் கட்சித்தலைவரின் மகள் கடத்தப்பட்டதை சொல்கிறார். தன் மகளின் காதலன் வெலேர்ரியை காணவில்லை என்கிறார். அதனால் தன் மகள் மனமுடைந்திருக்கிறாள். என்கிறார். கட்சித்தலைவர் மகளை கடத்திய,  அதற்கு ஒத்துழைக்காத வேலைக்காரனை கொன்ற அலெக்ஸியை கைது செய்துவிட்டோம், விரைவில் அவனுக்கு தண்டனை கிடைக்கும் என்கிறார் மிஷா.


ப்போது ஆர்டெம் நினைத்தால் அலெக்ஸியை காப்பாற்ற வழியுண்டு. முதல்நாள் இரவு வெகுநேரம் ஆர்டெம் அவனுடனும் வேலைக்காரன் வெலேர்ரியுடனும் பேசிக்கொண்டிருந்ததால் இவர் சாட்சி சொல்லுவது செல்லும். ஆனால் இவரின் வேலைக்கு அது உளைவைக்கும் என்று மிகவும் அஞ்சுகிறார். அதனாலேயே மிகுந்த தெய்வ நம்பிக்கை உடைய அலெக்ஸிக்காக இவர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவில்லை.


ப்போது இந்த வழக்கு விரைந்து நடைபெறுகிறது, சோசியாபாத் கொலைகாரன் ஸுரோவ் ஏஞ்ச்லிக்காவின் கடத்தல் வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறான். சாதுர்யமாக சாட்சிகளை ஜோடித்து அலெக்ஸிக்கு மரணதண்டனையும் வாங்கித் தந்துவிடுகிறான் அவன். ஏஞ்ச்லிக்காவின் வீடு சென்று ஏஞ்ச்லிக்காவின் காதலன் ராணுவ பாராட்ரூப்பர் அவளுக்கு எழுதிய கடிதங்கள்,பிற நண்பர்கள் எழுதிய கடிதங்களை விசாரணைக்கு என்று சொல்லி அவளின் பெற்றோரிடமிருந்து வாங்கி வருகிறான்.இப்போது அலெக்ஸியின் மனைவி அண்டோனீனா நிர்க்கதியாக நிற்கிறாள், அவளை  சிறைச்சாலை வாசலில் வைத்து சந்திக்கிறார் ஆர்டெம்.மிகவும் மன்னிப்பும் கேட்கிறார். தான் மிகுந்த சுயநலத்துடன் நடந்து கொண்ட குற்ற உணர்வு தனக்கு ஆயுளுக்கும் போகாது என்கிறார். ஒரு நிரபராதி அநியாயமாக தண்டிக்கப்பட்டதால்  சட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கை போய்விட்டது என்கிறார். அண்டோனீனா மிகுந்த கவலையுடன் அங்கிருந்து அகல்கிறாள்.



ப்போது தான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவேண்டும். கார்கோ 200 என்னும் ராணுவ வீரர்களின் பிணங்கள், இறந்தவருக்கு பெற்றோரோ, உறவினரோ இல்லாத பட்சத்தில் அந்தந்த ஊரின் போலீஸார் பொறுப்பில் தரப்பட்டு, சவ அடக்கம் செய்யப்படுகின்றன. எந்த போலீசாரும் அந்த சவ அடக்கம் செய்யும் பொறுப்பை வாங்க தயாரில்லை, என்றும் நாம் அறிகிறோம்.அதை ஏற்காது புறம் தள்ளுகின்றனர். அவர்கள் அந்த பொறுப்பை பெற்றுக் கொள்ள நிறைய பணமும் சலுகைகளும் அரசு உயர் அதிகாரிகளால் தரப்படுகின்றன. காவலர்கள் ஒவ்வொருவரும் அதீத அலட்சியமும், மெத்தனமும்  கொண்டிருக்கின்றனர்.

ப்படி சோசியோபாத் ஸுரோவ்வுக்கும் இன்று விமானத்தில் கார்கோ 200  வருகிறது. உயரதிகாரிகளின் கெடுபிடிகள் கெஞ்சல்களுக்கு பின்னர் வேண்டா வெறுப்புடன் ஸுரோவ் விமானநிலையத்தின் சரக்ககம் செல்கிறான். அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஆஃப்கானிஸ்தானுக்கு போர் செய்யச் செல்ல விமானம் ஏற குழுமியிருக்கின்றனர். அங்கே அப்போது விமானம் வந்துவிடுகிறது. அதிலிருந்து மொத்தம் ஆறு கார்கோ200 சவப்பெட்டிகள் இறக்கப்படுகின்றன, அதே விமானத்தில் காத்திருந்த ராணுவ வீரர்கள் மந்தை ஆடுகள் போல ஏற்றப்படும்  ஹைக்கூ கவிதை போன்றதோர் காட்சியை நாம் பார்க்கிறோம். யாரும் தவறவிடக்கூடாத காட்சியது.

படத்தின் ஒரு காட்சிக்கான காணொளி யூட்யூபிலிருந்து:-
  
                                                                                                                                 
ந்து இறங்கிய சவப்பெட்டிகளில்  திசைக்கு ஒன்றாக ஏற்றப்படுகிறது, ஸுரோவ்வின் வேனில் ஒரு சடலம் ஏற்றப்பட அது ஏஞ்ச்லிக்காவின் காதலன் சுக்கீனாவின் சடலம் என்று, ஆவணங்கள் மூலம் ஸுரோவ் அறிகிறான். மிகவும் கொண்டாடுகிறான்,அந்த சவப்பெட்டியை கொண்டு சென்று தன் வீட்டில் வைத்தவன். அந்த பைன் மரப்பெட்டியை தன் உதவிகாவலர்களை கொண்டு திறக்கச்செய்கிறான், பின்னர் அந்த துத்தநாக தகரப்பெட்டியை உளி வைத்து பிளக்கிறான்.அங்கே அந்த ராணுவவீரனின் பிணத்தின் சட்டையில் குத்தியிருக்கும் தங்கப்பதக்கத்தை பிய்த்து எடுக்கிறான். பின்னர் அந்த பிணத்தை தூக்கிச் சென்று ஏஞ்ச்லிக்காவின் கட்டிலில் போடுகிறான், வெடித்து அலறுகிறாள் ஏஞ்ச்லிக்கா. இனிமேல் அவன் உனக்கு திருப்தி தரமுடியாது,அதற்கு நான் வழி செய்கிறேன் என்றுவிட்டு வெளியேறுகிறான். தன் தொலைக்காட்சி பைத்தியமான அம்மாவிடம் அவளின் புதிய காதலன் சுக்கீனோ இறந்துவிட்டான், ஆகவே இனி ஏஞ்ச்லிக்கா எனக்குத்தான் என்று கொக்கரிக்கிறான்.




ப்போது ஸுரோவ்வின் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருத்தி தன் கணவன் குடித்து விட்டு தன் மண்டையை உடைத்துவிட்டான் ,கதவை உள்ளே தன் நண்பர்களுடன் பூட்டிக் கொண்டிருக்கிறான் என போனில் புகார் தர, அங்கே வருகிறான் ஸுரோவ்.கதவை உடைத்து ஸுரோவும் அவன் உதவியாளர்களும் உள்ளே நுழைந்தது தான் தாமதம்.அங்கிருந்த குடிகாரக்கணவன் ஏண்டா பன்றிகளா!!!, நான் நேற்று வேலைக்குப்போய் சம்பாதித்த பணத்தைக்கொண்டு இன்று என் நண்பர்களிடம் குடிக்கிறேன்.சூதாடுகிறேன்,அத்ற்கு எனக்கு உரிமையிருக்கிறது. என்று பாய்கிறான், ஸுரோவ் அவனை வலது புஜத்தில் சுடுகிறான். இப்போது மனைவி பாய்ந்து வந்து ஸுரோவை ஏசியவள் கணவனை தேற்ற, உன் கணவனை அடித்தே  கொன்று விடுவென் என்று சொல்லி கூட்டிச்செல்கிறான்.





வனைத் தன் வீட்டுக்கு கூட்டிவந்த ஸுரோவ் அந்த குடிகாரக்கணவனைக் கொண்டு கட்டிலில் விலங்கிடப்பட்டிருக்கும் ஏஞ்ச்லிக்காவை பின்புறமிருந்து புணரவிடுகிறான்.அருகே நாற்காலியில் அமர்ந்து அதை வெறியுடன் பார்க்கிறான்.இதைக்கூட ஏஞ்ச்லிக்காவுக்கு உதவவே தான் செய்வதாக நம்புகிறான்.அவளை திருப்திப்படுத்த தன்னால் முடிந்த குரூரமான வழிமுறைகளை பிரயோக்கிக்கிறான்.அதுதான் அங்கே விந்தையே.ஆனால் ஏன்ச்லிக்காவுக்கு தான் செய்யும் எந்த உதவியும் மகிழ்ச்சியளிக்கவில்லை எனத் தெரிகையில் அவன் சொல்லமுடியாத வேதனை அடைகிறான். உள்ளே இதெல்லாம் நிகழ்கையில் வெளியே அவன்  அம்மா எந்த கதறல் சத்தமும் தனக்கு கேட்காதது போல எதையோ கொரித்துக்கொண்டே சோவியத்தின் எஸ்ட்ரடா என்னும் வெரைட்டி ஷோக்களையும் அரசியல் சார் பிரச்சாரபாடல்களைய்ம் மிக ஆவலாய் தொலைக்காட்சியில் பார்க்கிறாள். இப்போது அந்த குடிகாரக்கணவனை சுட்டுக்கொல்கிறான் ஸுரோவ். வெளியே வந்தவன் அம்மாவிடம், ஏஞ்ச்லிக்கா இப்போது வந்தவனை விரும்பவேயில்லை, இன்னும் அந்த பாராட்ரூப்பரைத்தான் விரும்பிகிறாள் என்கிறான்,விசும்புகிறான்.



ன் ஊருக்கு வந்த ஆர்டெம் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்.மனைவி லேனா இவரை சந்தேகப்படுகிறார், அவருக்கு பிற பெண் தொடர்பு  ஏதும் இருக்கிறதா?   என்று இவரையே கேட்கிறார். தன் மகன் ஸ்லேவா, இன்று இரவு வரமாட்டேன், விருந்துக்குப் போகிறேன் என்று சொல்ல, உனக்கு நாளை கல்லூரி இருக்கிறது,போகாதே என்கிறாள். அவன் பெற்றோர் பேச்சைக் கேட்டால் தானே?!!!


ப்போது ஆண்டனீனா தன் பண்ணைவீட்டுக்கு வந்தவள் மண்ணில் தான் புதைத்து வைத்திருக்கும் மக்கிய கோணிபோட்டு சுற்றிய குழல் துப்பாக்கியையும், ரவைகளையும் எடுத்து ஒரு கைப்பெட்டியில் போடுகிறாள் ,தன் முன்னாள் கண்வன் ஸுரோவ்வின் வீடு இருக்கும் இடம் செல்ல பேருந்து ஏறுகிறாள்.இப்போதும் நாம் தூரத்தில் அழுக்கேறிய எண்ணெய் டாங்குகள் இணைக்கப்பட்ட சரக்கு ரயிலைப்பார்க்கிறோம்.பிண்ணணியில் மீண்டும் அந்த பாடல் ஒலிக்கிறது.


ப்போது அலெக்ஸியை பார்க்க யாரோ சிறைக்குள் வந்திருப்பதாக சொல்லி ஸுரோவ்வின் உதவியாளர்கள் அவனை தனியாக கூட்டிச் வருகின்றனர் , காரிடாரில் நடந்து வருகையில் அலெக்ஸி எதிர்பாரா வண்ணம் அவனை பின்னந்தலையில் சுட்டு சாகடித்துவிட்டும் அகல்கின்றனர். அவர்கள் அகன்றதும் அங்கே மருத்துவன் ஒருவனுடன் வந்த ஏஞ்ச்லிக்காவின் தந்தை அலெக்ஸி இறந்ததை அந்த மருத்துவன் உறுதிப்படுத்த  சினம் ஆறுகிறார்.அவரால் நீதிபதி சொன்ன மரணதண்டனை  தேதி வரை பொறுக்கமுடியாத கோபம் அவர் கண்ணில் நாம் பார்க்கிறோம்.

ப்போது ஏஞ்ச்லிக்காவுக்கு அருகே அவளின் காதலன் சீருடையுடன் படுத்திருக்க,அவளின் அருகே அந்த குடிகாரனின் அழுகிய பிணம், முதுகில் துப்பாக்கி குண்டு துளைகளுடன் படுத்திருக்க, கதறிக்கொண்டிருக்கும் ஏஞ்ச்லிக்காவுக்கு அவளின் காதலன் ஆஃப்கானிஸ்தானின் போர்க்களத்திலிருந்து  எழுதிய கடிதங்களை அருகே நாற்காலி போட்டு அமர்ந்து  மூக்குக்கண்ணாடி அணிந்து குரூரமாக வாசிக்கிறான். வெறுப்பேற்றுகிறான். அருகே அந்த குடிகாரன் பிணம் புறமுதுகு காட்டி முதுகு முழுக்க தோட்டா துளைகளுடன் இருக்கிறது. ஏஞ்ச்லிக்கா அருகே படுத்திருக்கும் அவள் ராணுவ வீரனான காதலனின் பிணம். அந்த கடிதம் வாசிக்கும் நீண்ட காட்சி மிக முக்கியமானது என்பேன்.  அந்த கடிதங்கள் வாசிக்கப் படுகையிலேயே நமக்கு அந்த ஆஃப்கானிஸ்தான் போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் மனக்கண்ணில் ஓடுகின்றன. வீடு முழுக்க பிண அழுகல் நாற்றம். கொழுத்த ஈக்கள் பிணத்தை மொய்த்து சுற்றுகின்றன,


வெளியே அம்மா தொலைக்காட்சி பார்க்கிறாள். அந்த பின்புறம் திறந்து கிடக்கும் தொலைக்காட்சிப்பெட்டியின் திரையில் கூட ஈ மொய்க்கிறது. இப்போது வெளியே அழைப்பு மணியடிக்க ஸுரோவ்வின் அம்மா திறக்கிறாள்,வெளியே ஆண்டனீனா நிற்கிறாள். உன் மகன் எங்கே எனக்கேட்டவளுக்கு அதோ அறையில் அவன் மனைவியுடன் நிற்கிறான் என்கிறாள்,உள்ளே வந்தவள் துப்பாக்கிக்கு ரவையை போட,அவன் அம்மா கோப்பையில் மதுவை ஊற்றிக்கொண்டு மீண்டும் தொலைக்காட்சி முன் உட்காருகிறாள்.


ப்போது சட்டென கதவைத்தள்ளி உள்ளே சென்றவள் ஸுரோவ்வை சுட, அவன் பறந்து போய் தரையில் விழுகிறான்.ஏஞ்ச்லிக்கா இவளைப்பார்த்து என்னை காப்பாற்றுங்கள், எனக்கதற, அவள் மௌனமாக வெளியேறுகிறாள். விலங்கிட்ட கையுடன் ஏஞ்ச்லிக்கா கட்டிலிலிருந்து கீழே குதித்து அழுகிறாள், அங்கே அறைக்குள் இவள் காதலித்த ஒருவன் ,இவளை காதலித்த  இருவரின் பிணங்கள்.எதோ ஒரு விதத்தில் மூவருமே காதலர் தாம்.  இப்போது ஜன்னலின் வெளியே மீண்டும் அந்த அழுக்கு சரக்கு ரயில் போய்க்கொண்டே இருக்கிறது. ஸுரோவ்வின் அம்மா அசராமல் தொலைக்காட்சியில் சட்டசபைப் பிரசங்கம் பார்க்கிறாள்,அங்கே பிரதம மந்திரி Vitaly Vorotnikov சட்ட சபையில் பேசி முடிக்கிறார்.


ப்போது ஆர்டெம் ஒரு தேவாலயத்துக்குள் செல்வதைப் பார்க்கிறோம், அங்கிருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியிடம் நான் கிருஸ்துவனாக மாற என்ன விதிமுறைகள்  செய்யவேண்டும் என அப்பாவியாக கேட்கிறார், அவள் விதிமுறைகள் அல்ல விழாக்கள்  செய்ய வேண்டியிருக்கும்.அங்கே மதபோதகர் வரும் வரை காத்திருக்கப் பணிக்க,ஆர்டெம் அங்கே சென்று அமர்கிறார்.இப்போது லெனின்கிராடின் ஒரு உள்ளூர் டிஸ்கோத்தே கிளப்பில் ஆர்டெம்மின் மகன் ஸ்லேவா உற்சாகமாக குழுவினருடன் பாப் இசைப்பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கிறான். அருகே அதே வெலேர்ரா தென்பட்டு, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். டிஸ்கோ முடிந்தவுடன் அவனுக்கு தான் மது வாங்கித் தருகிறேன் என்றவன். வெளியே அழைத்துப் போகையில் இந்நாட்களில் ஒரு கேஸ் பீருக்காக இளம் பெண்கள் வலிய வந்து விருந்தாகிறார்கள், அப்படிப்பட்ட இளம்பெண்களை சுகிப்பதற்க்கு ஆயிரம் ஆயிரமாக பணம் தர தன்னிடம்  வாடிக்கையாளர்கள் உள்ளனர், உள்ளூர் வாசியான நீ மட்டும் என்னுடன் ஒத்துழைத்தால் சமூகத்தில் நாம் மிகநன்றாக வரலாம் ,  ஈசி மனி செய்யலாம் என்கிறான்.


பிண்ணணியில் இன்னும் அந்தப்பாடல் ஒலிக்க, இவையெல்லாம் நிகழ்ந்தது 1984ஆம் ஆண்டின் பிற்ப்பாதியில் எனப்போடப்பட்டு படம் முடிகிறது. இவ்வளவு தத்ரூபமாக சமூக அவல நிகழ்வுகளை எந்தப்படமும் சொன்னதில்லை. நிச்சயம் ஒவ்வொரு உலகசினிமா ரசிகனும் வாழ்வில் காணவேண்டிய திரைப்படம். இந்தப்படத்தை ஒருவர் மிஸ் செய்யவே கூடாது என்பேன்.
=====0000=====
படத்தை தரவிறக்க சுட்டி:-



படத்தில் கலைஞர்கள் விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-
Directed by Aleksei Balabanov
Produced by Sergei Selyanov
Written by Aleksei Balabanov
Starring Agniya Kuznetsova, Leonid Bichevin, Aleksei Poluyan, Leonid Gromov, Aleksei Serebryakov
Distributed by Soyuz-Video
Release date(s) 2007
Running time 89 minutes
Language Russian
English

மார்பின் Morphine (Морфий) (2008)[ரஷ்யா][கண்டிப்பாக18+]


லக இலக்கியங்கள் திரைவடிவம் பெறும் போது தான் உலக இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தும் அக்கலைச்சொற்களில்,கடினமான எழுத்துநடையில்  வாசிப்பனுபவமில்லாத வெகுஜன ரசிகனும் அந்த இலக்கியத்தினுள் இழுக்கப்படுகிறான், அது நல்லார்வத்திற்கு தூண்டுதலாய் இருந்துவிட்டால் அவன் மேலும் தேடுகிறான். 

ந்த தேடும் படலம் அவனுக்கு எல்லையில்லா கிளர்ச்சியை கற்றலின் மீது உண்டாக்குகிறது என்பது என் எண்ணம். அத்தேடுதல் உள்ள உலகசினிமா ரசிகர்களுக்கு நான் பலமாய் சிபாரிசு செய்வது தான் இந்த மார்ஃபின் என்னும் ரஷ்யமொழித் திரைப்படம், இப்படம் போதை எவ்வளவு கொடியது?!!!சமூகத்தில் எவ்வளவு பெரிய திறமை பொருந்தியவனையும் போதை எப்படி பைத்தியக்காரனாக மாற்றியிருக்கிறது, மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை மிக அருமையாக விளக்குகிறது.

அலெக்ஸெய் பாலபனொவ்
தன் இயக்குனர் அலெக்ஸெய் பாலபனொவ் [Aleksei Balabanov]ஒரு தேர்ந்த ஆட்டியர் [Auteur ]ஆவார். இவரின் 11 திரைப்படங்களுமே, இவருக்கு ரஷ்ய இலக்கியங்களின் மீதுள்ள காதலை அபாரமான பரீட்சயத்தை பறைசாற்றும் . அவர் ரஷ்ய இலக்கிய எழுத்தாளர் மைக்கேல் புல்காகோவ் [Mikhail Bulgakov.] 1975 ஆம் ஆண்டு எழுதிய கிராம மருத்துவனின் நாட்குறிப்பு [A Country Doctor's Notebook] என்னும் ஒப்பற்ற சிறுகதை தொகுப்பை மிக அருமையாக மார்பின் என்னும் இப்பெயரில் படமாக்கியிருக்கிறார். துவக்க 1900 களின் எத்தனையோ கதைகளை திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் இது போல படைப்பை பார்த்ததுமில்லை, என்னை பாதித்ததுமில்லை என்பேன்,

ந்த அளவுக்கு பார்வையாளரை திரைப்படம் நடக்கும் காலகட்டத்துக்கே கூட்டிச்சென்று உலவவிட்டதில்லை. இது தான் ஹாலிவுட்டிற்கே சவால்!!!, நம் ஊரில் இது போல கலைப்பட விரும்பிகள் என்னும் ஒரு சாரார் மட்டும் பார்க்கும்  படங்களுக்கு  இந்த மாதிரி எல்லாம் பணம் செலவழிக்கவே மாட்டார்கள் என்பது துயரமே!!!,   வணிகரீதி என்னும் பேச்சுகே இடமில்லா ஒப்பற்ற படைப்பு . உலகசினிமா விரும்பிகள் வாழ்வில் தவறாமல் காண வேண்டிய  திரைப்படம் இது .

படத்தின் கதை:-
1917ஆம் ஆண்டு அது, மருத்துவக்கல்லூரியில் படிப்பை முடித்த இளம் ரஷ்ய மருத்துவன் போல்யகோவ் [Mikhail Polyakov (Leonid Bichevin)] ரஷ்யாவின் கடைக்கோடியில் உள்ள பனிபொழியும் கிராமத்துக்குள் வருகிறான், பனிப்பொழியும் கடும் குளிர் பிரதேசம், தோல்தடித்த கொழுகொழு குதிரைகளால் இழுக்கப்படும் அவன் வரும் வண்டிக்கு சக்கரங்களே இல்லை, பனியை சீவிச்செல்லும் ஸ்கேட்டர் கட்டைகளே உண்டு. சிறிய மருத்துவமனையில் இரண்டு பெண் மருத்துவதாதிகளும், ஒரு ஆண் மருத்துவ உதவியாளனும் உண்டு. அடுத்து வரும் நாட்களில் மிகுந்த சவால்களை எதிர்நோக்கி எல்லோரின் நன்மதிப்பையும் பெறுகிறான் மருத்துவன் போல்யகோவ்.

FIRST INJECTION [முதல் ஊசி]
ஒரு நாள் நடுநிசியில்,தாதிகள் போல்யகோவை சத்தமிட்டு எழுப்ப, பதறியபடி அவன் கீழே வந்தால் ,கிராம நோயாளி ஒருவன் கடுமையான டிப்தீரியா நோய் தாக்கி ,மூச்சு விடமுடியாமல்,தரையில் புரண்டு கொண்டிருக்கிறான், வாந்தி வேறு எடுத்திருக்கிறான். அவனுக்கு எத்தனையோ முதலுதவிகள் செய்தும் பலனின்றி போக போல்யகோ அவன் வாய் மீது வாய்வைத்து ,சிறிதும் அருவருப்பிலாமல் ஊத, அவன் உதவியாளன் இடைவெளி விட்டு அவன் நெஞ்சு மீது குத்துகிறான் , ஐந்து முறை இதே போல செய்தும் சிகிச்சை பலனின்றி அந்த நோயாளி இறந்தும் விடுகிறான். மறுநாள் போல்யகோவுக்கும் டிப்தீரியா நோய் வரும் அறிகுறிகள் தென்படுகிறது, மருத்துவ தாதி அன்னா அவனுக்கு பென்சிலின் தடுப்பூசியை போடுகிறாள், அதன் விளைவாக அவனுக்கு தோல் தடித்து கருத்து, வலித்து, நமைத்தலெடுத்து சொறியவேண்டும் போலவும் இருக்கிறது, அவள் வலியைக் குறைக்க மார்பின் என்னும் எமனை ஒரு டோஸ் போடுகிறாள் , போல்யகோவுக்கு மிகவும்  இதமாய் இருக்கிறது, நல்ல தூக்கம் வருகிறது,அன்றைய தினம் நன்கு தூங்குகிறான் போல்யகோவ்.

WINTER [கடும் குளிர்காலம்]
இப்போது மிகக்கடும் பனிப்பொழிவும், கொடிய குளிரும் வாட்டுகிறது, பகல் பொழுதே தோன்றுவதில்லை, எப்போதும் நீண்ட இரவுகள் தான். கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு இரண்டுநாளுக்கு முன்னர் பிரசவ வலி எடுத்திருக்க, உள்ளூர் மருத்துவக்கிழவிகள், அந்த தாயின் யோனியில் குழந்தை சீக்கிரம் வெளியே வர சர்க்கரையை கொட்டியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் தாய் சேய் இருவருமே இறந்துவிடுவரோ?!!! என்று பயந்த கிராமத்தார் அவளை கடைசியாக மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கின்றனர், முன் பின் சிக்கலான பிரசவம் பார்த்து பழக்கமில்லாத மருத்துவன்   போல்யகோவ் இதோ புகைப்பிடித்துவிட்டு வருகிறேன் என்று போனவன், எதிர்க்கட்டிடம் சென்று மாடியேறி, தன் நூலகத்தில் போய் ஆயுதகேஸ் எனப்படும் ஃபோர்செப்ஸ் கொண்டு செய்யப்படும் சிகிச்சையை சித்தரிக்கும் வரைபடத்தை கூர்ந்து பார்க்கிறான்.  பின்னர் ஆழ்ந்த நம்பிக்கையுடன்  கீழே வந்தவன் கால்கள் அகட்டி படுக்கவைத்திருக்கும் பெண்மணியின் , அவளின் முன்னமே உடைந்துவிட்ட பனிக்குட நீரை , கைகளை கர்ப்பப்பையின் மேல் வைத்து இன்னமும் அழுத்தி வெளியேற்றுகிறான் .ஐஸ்கிரிம் அள்ளும் குழிக்கரண்டி போலுள்ள ஓர் ஆயுதத்தை யோனிக்குள் நுழைத்தவன் குழந்தையின் தலையை தேடி அமுக்கி வெளியேவும் எடுக்கிறான். முதல் பிரசவம் வெற்றிகரமாக முடிக்கிறான் போல்யகோவ் . கிராமவாசிகள் போல்யகொவை மிகவும் பாராட்டுகின்றனர்.

SECOND INJECTION [இரண்டாம் ஊசி]
நாளடைவில் தூக்கமின்றி ,கடும்குளிரின் அவஸ்தையாளும்,தனிமையாலும் மிகவும் சோர்ந்துபோன போல்யகோவ், தன் மருத்துவ தாதியிடம் தனக்கு மிகவும் வலியாயுள்ளது, ஆகவே இரண்டாம் முறை மார்ஃபின் ஊசி போடுமாறு கேட்டுப்பெறுகிறான். இந்த முறை புட்டத்தில் ஊசியை வாங்கிக்கொண்டவன் அப்படியே நெக்குறுகி சாய்கிறான்.

FIRST AMPUTATION [முதல் அறுவை சிகிச்சை]
இப்போது சாலைவிபத்தில் சிக்கி சதைகள் கிழிபட்டும், கால் பாதி துண்டிக்கப்பட்டும், குற்றுயிரும் குலையுயிருமான நிலையில் தன் மகளை ஒர் தகப்பன் வண்டியில் போட்டு இழுத்துக் கொண்டுவருகிறான், போல்யகோவ்விடம் தன் மகளை காப்பாற்றும் படி இறைஞ்சுகிறான். போல்யகோவிற்கு எல்லாம் முற்றிவிட்டது  என்று தோன்றுகிறது,    கடைசி முயற்சியாக இருக்கட்டும் என்று,  அவளுக்கு மார்பின் கொடுக்கச் செய்தவன்,  தனிமையில் சென்று தானும் ரகசியமாக மார்பின் எடுத்துக் கொள்கிறான், பின்னர் அறுவை சிகிச்சை மேசைக்கு வந்தவன், அவளின் உடைந்து நொறுங்கி தொங்கிக்கொண்டிருக்கும் வலது காலின்  எலும்புகளை, சதைகளை கவனமாக அறுக்கிறான், தையலிடுகிறான். இப்போது அவளுக்கு ஒற்றைக் காலில்லை. மருந்திடுகிறான், தாதிகளிடம் சொல்லி பேண்டேஜ் இடுகிறான், மறுகாலை அவர்கள் வசம் ஒப்படைத்து அதுபோலவே அறுவை சிகிச்சை செய்ய சொல்கிறான்.

மிகவும் கொடூரமான சதைப்பிண்டங்களை அவன் இப்போதுதான் தொட்டு அறுத்துள்ளது நம்க்கு புரிகிறது. ஆயினும் அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறாள். மருத்துவ தாதிகள் இவன் முன்பிருந்த மருத்துவனை விட நன்றாக அறுவை சிகிச்சை செய்ததாக பாராட்டுகின்றனர். அந்த மகளின் மரணம் இவனை மிகவும் பாதிக்கிறது, அடுத்து வரும் நாளில் போல்யகோவ் மருத்துவமனை மருந்தகத்திலேயே மார்பின் திருட ஆரம்பிக்கிறான். எப்போதும் தன்னிடம் மார்பின் திரவ புட்டியும், ஊசி சிரிஞ்சியும் வைத்திருக்கிறான்.

ப்போது நகரின் பிரபல விலைமாது ஒருத்தியை போல்யகோவ் மருத்துவமனை ஆய்வு நாற்காலியில் அமர வைத்து யோனியில் கையை விட்டு அவளுக்கு பால்வினை நோய்தாக்குதல் இருக்கிறதா? என சோதிக்கிறான். அவள் ஒயிலாக பைப் கொண்டு புகைபிடித்து ஊதுகிறாள்.  அவள் கணவன் இறந்தபிறகு அவள் விலைமாதுவாக மாறி தன் வயிற்றை கழுவுகிறாள் என அறிகிறான். அரசே விபச்சாரத்தை அங்கீகரித்திருப்பதை நாம் அறிகிறோம். பின்னர் அவளுடன் தன் அறைக்குச் சென்று உடலுறவு கொள்கிறான் போல்யகோவ்.அடிக்கடி தன் மாடி அறையில் குளியல் தொட்டியில் வெந்நீர் நிரப்பி தாதிகள் இருவர் தேய்த்துவிட சுகபோகமாக குளிக்கிறான் போல்யகோவ்.

WOLVES[ஓநாய்கள்]
இப்போது பக்கத்து ஊரில், அரசுத்துறையில் நல்ல அந்தஸ்துடன் இருக்கும் செல்வந்தர் ஒருவரின் விட்டில் கடும் தீப்பிடித்துவிடுகிறது, அவரின் மகள் தீயில் கருகியும்  விடுகிறாள், அவள் கணவன் அவளைக்காப்பாற்ற எத்தனித்து அவளை தூக்கி வெளியே வீசியதில், அவளின் மண்டை உடைந்து கபால மோட்சம் அடைந்துவிட்டிருக்கிறாள். அவர்களுடன் சேந்து ஏனைய வேலைக்காரர்களும் தீயில் கருகிய நிலையில், போல்யகோவ்வின் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். போலயகோவ் மருத்துவமனை தாதிகளிடம் சொல்லி அவசர மருத்துவ உதவி செய்கையிலேயே மேலிடத்து உத்தரவின் பேரில் தலைமை தீயணைப்பாளன் நேரில் வருகிறான்.  போல்யகோவை உடனே தன்னுடன் வந்து அந்த செல்வந்தரின் மருமகன் உயிரை காக்குமாறு இறைஞ்சுகிறான்,

வரது உயிரே இப்போது மிகமுக்கியம், இந்த வேலைக்காரர்கள் உயிர்கள் மதிப்பற்றவை, உடனே வரவேண்டும் என்று அச்சுறுத்தும் தொனியில் கெஞ்சுகிறான். அவனுக்கு அவன் உயிர் மீது உள்ள பயம் நமக்கு புலப்படுகிறது. மிகுந்த பனிப்பொழிவில் அங்கே செல்லும் போல்யகோவ், மருமகனுக்கு சிகிச்சை அளித்து மார்ஃபின் ஊசி போட்டு சிகிச்சை அளித்துவிட்டு, மருத்துவமனைக்கு செல்ல விழைகிறான். ஆனால் குதிரை வண்டி ஓட்டுனன், இப்போது திரும்பிச்செல்வது மிகவும் ஆபத்து என்று சொல்லியும் போல்யகோவ் அதை கேட்கும் நிலையில் இல்லை அவனுக்கு உடனே மார்பின் போட்டுக்கொண்டாக வேண்டும். இதில் என்ன ஒரு கொடுமை? என்றால் பக்கத்து ஊர் மருத்துவனும் அங்கே வந்திருக்கிறான். அவனது மருத்துவமனையில் கைவசம் மார்ஃபின் இல்லாததால் போல்யகோவின் மருத்துவமனை யிலிருந்து 10கிராம் மார்ஃபின் கடனாகக் கேட்கிறான்.  நகரின் தலைமை மருத்துவமனைக்கு தான் செல்கையில் பெற்றுவந்து திரும்ப கொடுப்பதாகச் சொன்னவன்,  தானும் குதிரை வண்டியில் ஏறிக்கொள்கிறான்.போலயகோவுக்கு அந்த மருத்துவனை பிடிக்கவேயில்லை.

ழியில் பனிக்காற்றுடன் பழிப்பொழிவும் ஏற்பட, ஊசி ஊசியாக பனிக்கற்றைகள் மழைபோல எதிர்க்காற்றுடன் குதிரையின் கண்களை பதம்பார்க்க குதிரைகள், நிலை தடுமாறுகின்றன, நாம் பாதை மாறிவிட்டோம் என்று ஓட்டுனன் புலம்புகிறான். ஒருகட்டத்தில், மனிதர்களுக்கு தான் இரக்கம் காட்டமாட்டீர்கள், இந்த விலங்குகளுக்குமா இரங்கமாட்டீர்கள்? என்று சொல்லி, வண்டியை நிறுத்தியும் விடுகிறான், போல்யகோவ் அவனுக்கு ஓட்கா புட்டியைக் கொடுத்து இளைப்பாற்றியபடியெ மெல்ல ஒட்டிச்செல்கிறான். வழியில் மனிதவாசனை கண்ட ஓநாய்கள், வெறியுடன் பின்னே ஓடி வருகின்றன்,

நாயின் பளப்பளப்பான கண்களையும், கூரிய ஒளியில் மினுங்கும் பற்களையுமே நாம் அங்கே பார்க்கிறோம், மாட்டினால் கொலைப்பசியில் இருக்கும் அவ்ற்றிற்கு ஒரு வாரத்திற்கு சாப்பாடு ஆயிற்று என்னும் நிலை. போல்யகோவ் குறிபார்த்து சுட்டுத்தள்ளுகிறான், இப்போது வேகமெடுத்த வண்டி பாதை மாறி பக்கத்து கிராம அதிகாரி வீட்டிற்கு அருகே சென்றுவிட, இவர்கள் பாதைமாறிவந்ததை சொல்லி அங்கேயே இரவைக் கழிக்கின்றனர். அங்கே நிலபிரபுத்துவம், கம்யூனிச சித்தாந்தங்கள், நாத்திகம், அவற்றின் முரண்பாடுகள், மிகுந்த சர்ச்சையுடனும் நையாண்டியுடனும் விவாதிக்கப்பெறுகின்றன,

ங்கே இருக்கும் தேவதாசி பாடகியுடன் போல்யகோவ்வுக்கு பார்வையாலேயே நட்பு ஏற்ப்படுகிறது. அங்கேயெ கழிவறையில் போல்யகோவ் மார்பின் ஊசியை போட்டுக்கொள்ள, அவளும் கழிவறைக்கு வருகிறாள், இவன் கதவறுகே ஒளிந்துகொள்கிறான். அங்கே அவள் சிறுநீர் கழித்துவிட்டு தன் அழகிய புட்டங்களை கண்ணாடியில் பார்த்து அதீத பெருமை கொள்வதை போல்யகோவ் பார்க்கிறான். பின்னர் அவளிடம் எதிர்ப்பட்டவன் போதையின் உச்சத்தில் அவளின் விருப்பத்தின் பேரில் கழிவறைத் தரையில் வைத்து அவளைப் புணறுகிறான்.

ANNA NIKOLAJEWNA [அன்னா நிகோலஜெவ்னா]
இவள் சிறப்பான மருத்துவமனை தாதி, போல்யகோவின் நலம் விரும்பியும் ஆவாள், போல்யகோவ் எந்நேரமும் மார்பின் போதையில் இருப்பதைப் பார்த்தவள், ரஷ்ய அரசாங்க மருத்துவ ஆணையம், எங்கே இங்கு.மருந்து கையிருப்பு சோதனைக்கு வருமோ என்றஞ்சுகிறாள். மிக விலை உயர்ந்த அரிய மருந்தான மார்பினை இவர்களின் மருத்துவமனை ஒருவருடகாலம் வைத்துக்கொள்ளவேண்டியதை வெறும் மூன்றே மாதத்தில் தீர்த்தும் விட்டனர்.  போல்யகோவுக்கு இனிமேல் மார்பினே தயாரித்துத் தருவதில்லை என்று அன்னா கோபமாக சொல்லியும் விடுகிறாள். அவன் அவளை தேற்றியவன். தான் முன்னர்  நாள் ஒன்றுக்கு நான்கு ஊசி போட்டுக் கொண்டதாகவும் இப்போது நாள் ஒன்றுக்கு இரண்டு தான் போட்டுக் கொள்கிறேன் என்கிறான். ஆனால் உண்மையில் அவள் மருந்து தயாரிக்கும் போது, பின்னே மறைந்திருந்தவன் அவள் போன பின்  அவள் தயாரித்து வைத்த மார்பின் திரவம் அடங்கிய புட்டியில் வேறொரு மருந்தை நிரப்பி வைத்து  ஏமாற்றி சூழ்ச்சி செய்கிறான்.ஊழல் ஆரம்பமாகி வெகுநாளானதால் அவனால் சட்டென நிறுத்தமுடியவில்லை.

PHARMACY [மருந்தகம்]
இப்போது மார்பினே கைவசமில்லை, போல்யகோவ் நகர மருந்தகத்திற்கு சென்றவன், அங்கே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மார்பின் கேட்க, அங்கே ஏற்கனவே ஆஜராகியிருந்த பக்கத்து கிராம மருத்துவனும் த்ன் மருத்துவமனைக்கும் மார்பின் கேட்கிறான்,போல்யகோவோ அவனிடம் , அவன் தனக்கு ஏற்கனவே 10 கிராம் மார்ஃபின் தரவேண்டும் என்று  தர்க்கம் செய்து போராடியும் வாதாடியும் அங்கேயிருந்து 23 கிராம் மார்பின் புட்டியை வாங்கிக் கொண்டு மருந்தகம் விரைந்து வருகிறான்.  தாதி அன்னாவிடம் தந்து மார்பின்  திரவம்  விரைந்து தயாரிக்கச் சொல்கிறான்.பறித்து போட்டுக்கொள்கிறான்.

விரைவில் இப்பழக்கத்தை விட்டுவிடுவேன் என்கிறான், அவள் அப்படி என்ன ? தான் அந்த மார்பின் திரவத்தில் இருக்கிறது என்று ஆவலும் வெறுப்பும் மேலிடக்கேட்க, இவன் அவளுக்கும் மார்பின் ஊசியைப் போடுகிறான். அடுத்து வரும் நாட்களில் இருவரும் சதா மார்பின் போதையில் மூழ்கித் திளைக்கின்றனர். நோயாளிகள் வந்தாலே போல்யகோவிற்கு அலுப்பாயுள்ளது.  நிராகரிக்கிறான். கடிசியாக வாங்கிவந்த மார்பின் கையிருப்பும் கரைகிறது.

TRACHEOTOMY [கழுத்தறுத்து வைத்தியம்]
இப்போது ஒரு சிறுமி டிப்தீரியா நோய் முற்றி, மரணத்தின் தருவாயில் போல்யகோவ்வின் பார்வைக்கு வருகிறாள், அவன் அச்சிறுமியின் பெற்றோரிடம் கழுத்தறுத்து செய்யும் TRACHEOTOMY  என்னும் சிகிச்சையை செய்ய அனுமதி கேட்கிறான்,  அவர்களோ ?!!! நாட்டு மருத்துவர்கள் செய்வது போலவே, பச்சிலைச்சாறு கொடுக்கச் சொல்கின்றனர். அவர்களிடம் எரிந்து விழுந்த போல்யகோவ் , சிறுமிக்கு மார்பினை தந்து அரைமயக்கத்தில் ஆழ்த்தியவன், பெற்றோரை வெளியே கதவைத்தள்ளி சாத்திவிட்டு தாதிகளிடம் சொல்லி அவர்களைத் தேற்றி கையொப்பம் வாங்கச் சொல்கிறான், அறுவை சிகிச்சை மேசையில் சிறுமியை கிடத்தியவன், கழுத்தை கோடிட்டு அறுத்து, வீக்கத்தை அகற்றி, கெட்ட ரத்தம் வெளியேற்றி, மூச்சுக்குழாயில் இருந்த அடைப்பை சரிசெய்கிறான், குழந்தை கடும் சிரமப்பட்டு திணறி மூச்சுவிட, இப்போது தையலிடுகிறான். இது எல்லாமே தான் மார்ஃபின் உட்கொண்டிருப்பதாலேயே சாத்தியாமாகிறது என உறுதியாக நம்புகிறான். போல்யகோவ் மார்ஃபினுக்கு மிகுந்த அடிமையாகிவிட்டிருக்கிறான்.
FIRE[தீ விபத்து]

இப்போது பக்கத்து ஊரில் கடும் தீவிபத்து நேரிட, ஒரே குடும்பத்தில் தாய் தந்தை மகன் மகள் கருகியநிலையில் ஊரால் தூக்கிவரப்பட்டு அனுமதிக்கப்பட, அங்கே அவர்கள் வலியில், எரிச்சலில் முனக, அவர்களுக்கு மார்ஃபின் இல்லாததால் அது தரப்படாமலே சிகிச்சை அளிக்கப்படுகிறது, அதைத்தாங்க முடியாமல் அவர்கள் யாருமே உயிர் பிழைக்காமல் போகின்றனர், போல்யகோவுக்கு குற்ற உணர்ச்சி மிகுகிறது, அன்னாவிடம் புலம்புகிறான். தன்னை கொலைகாரன் என்று குற்றம் சாட்டி காவலர்கள் கொன்றுவிடுவார்கள் என அஞ்சுகிறான். அவளோ இப்போது நிலப்பிரபுக்களே ஆள்கிறார்கள், அவர்கள் இதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள், மன்னித்தும் விடுவார்கள்  என அவனைத் தேற்றுகிறாள் . ஆயினும் அவளும் குற்ற உணர்ச்சி மிகுந்து காணப்படுகிறாள். கீழே அந்த பக்கத்து கிராம மருத்துவன் வந்து மீண்டும் தன் பங்குக்கு மார்ஃபின் கேட்டு மிரட்டுகிறான், இல்லை என்றதும் தான் தலைமை மருத்துவ ஆணையத்திடம் இது பற்றி புகாரளிக்கப்போவதாக முழங்குகிறான்.

UGLICZ[உக்லிக்ஸ்ச்]
ப்போது உக்லிக்ஸ்ச் என்னும் நகருக்கு போல்யகோவ் ரயிலில் வருகிறான். அங்கே நகர மருத்துவமனையில் தான் போதை மருந்தின் பிடியிலிருந்து மறுவாழ்வு கோரும் விண்ணப்பத்தை அளித்தவன், நோயாளிகள் அணியும் சீருடையை மாற்றிக்கொண்டு சிகிச்சையும் பெறுகிறான், போதையின் கோரப்பிடியில் வாடும் பல நோயாளிகளை அங்கே அவன் பார்க்கிறான். அங்கே தரப்படும் போதை முறிவு மருந்தினால் இவனுக்கு ஒவ்வாமை ஏற்ப்பட்டு கழிவறையின் அசுத்தமான மலக்கறைபடிந்த கோப்பையிலேயே வாந்தி எடுக்கிறான். மிகவும் அசுத்தமான மருத்துவமனை அது.

ங்கே பக்கத்து படுக்கைக்காரனோ ஒரு மது வியாபாரி, ஒரு கோப்பை வோட்கா அரை ரூபிள் மேனிக்கு சகலருக்கும் நிர்வாகம் அறியா வண்ணம் விற்கிறான், போல்யகோவ் இப்போது வோட்காவுக்கும் அடிமையாகிறான். மார்ஃபினை மருத்துவமனையில் எங்கே சேமித்து வைக்கின்றனர் ? என்று ஆர்வமாய் தெரிந்து வைத்துக்கொள்கிறான். நிறைய செல்வந்தர்களும் தாங்களும் மது அடிமைகள் என்று சொல்லி மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அவர்கள் புரட்சி வெடித்துள்ள நிலையில் மருத்துவமனையே சிறந்த புகலிடம் என்று குசுகுசுவென தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.

ப்போது நகரில் புரட்சி உக்கிரமாக வெடிக்கிறது, வேலைக்குப் போகாமல் சும்மா இருப்பவர்கள், வரி கட்டாதவர்கள், முன்னாள் நிலப்பிரபுக்கள் தீராத நோயாளிகள் காவலர்களால் தேடிப்பிடித்து தண்டிக்கவும் கொலை செய்யவும் படுகின்றனர். அதன் விளைவாக ஒரு போலீஸ் படையே போல்யகோவ் இருக்கும் மருத்துவமனைக்கும் வந்து கொலைகளைத் துவங்க, போல்யகோவ் லாவகமாய் மருந்தகத்தின் மார்ஃபினை திருடிக்கொண்டு, தன்னுடைய கைப்பையையும், உடைகளையும், காலணிகளையும் அணிந்தவன், வேகமாக வெளியேறுகிறான். அவனிடமுள்ள இரண்டு குப்பி மார்ஃபின் திரவம் இன்னும் இருவாரங்களுக்கு போதுமானதாயிருக்கும்.

ங்கே வெளியே திடீரென காவலர்களால் நிறுத்தப்பட்டு சோதனையிடப்படுகிறான், தான் மருத்துவன் என்னும் சான்றை காட்டி பெரிய பாடுபட்டு வெளியேறுகிறான், ஊசி போட்டுக்கொள்ள ஒதுக்குப்புறமாக இடம் தேடி வந்தவன் ஒரு சந்தை கட்டிடத்துகுள்ளே நுழைய, அங்கே பக்கத்து கிராம மருத்துவனால் கூவி அழைக்கப்படுகிறான்,அவன் கையில் துப்பாக்கி வேறு வைத்திருக்கிறான்.

ப்போது உள்ள புரட்சியாளர்களிடம் அவன் இணைந்து கொண்டவன், போல்யகோவின் மார்ஃபின் அடிமைத்தனத்தால் விளைந்த உயிரிழப்புக்கு தண்டனை கொடுக்க போல்யகோவை துரத்துகிறான். அங்கே  தப்பிக்கையில் தாதி அன்னாவை பார்க்கிறான் போல்யகோவ் அவள் போதையில் பிரமை பிடித்தது போல நிலைக்குத்தி நிற்பதைப்பார்த்து ,குற்ற உணர்வுடன் இரக்கமும் படுகிறான்,அவசரத்திலும் கூட அவளுக்கும் ஒரு புட்டி மார்ஃபினை அவளது கையில் திணித்து விட்டு அகல்கிறான்.  அதற்குள் அந்த மருத்துவன் போல்யகோவை நிற்கும் படி கத்திக்கொண்டே வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே வந்தேவிட்டான், வேறுவழியில்லாத போல்யகோவ் பையிலிருந்து தன் கைத்துப்பாக்கியை எடுத்து அவனை சுட்டுவிட்டு அகல்கிறான்,  இப்போது அன்னா தெளிவாக அந்த மருத்துவனின் பையிலிருக்கும் மார்ஃபின் புட்டிகளை விரைந்து களவாடுகிறாள்.

ப்போது போல்யகோவ் காவலருக்கு பயந்தவன், ஒரு இரும்பு பட்டறையில் சென்று குளிருக்கு இதமாக தஞ்சம் புகுகிறான். அங்கிருக்கும் பணியாளனால் தொடர்ந்து விரட்டவும் படுகிறான், அங்கே நடுங்கியபடியே புகைபிடித்தவன் , அங்கேயிருந்து அகன்று ஓர் தேவாலயம் வருகிறான், அங்கே மார்ஃபின் ஊசியைப்போட்டுக்கொண்டு புகைப்பிடித்தபடி அமர்ந்திருந்தவனுக்கு தேவாலயத்தின் மதகுரு போல்யகோவின் தலையில் தன் மேல் துண்டைப்போட்டு ஜெபிக்கிறார்.  

CINEMATOGRAPH[திரையரங்கம்]

ப்போது நன்கு விடிகிறது, போதை தெளிந்தவன், வேறு ஊருக்கு போக விழைகிறான், அவனுக்கு ஊசி போட்டுக்கொள்ள இடம் தேவைப்படுகிறது, அருகே ஓர் திரையரங்கத்தை பார்க்கிறான்  போல்யகோவ், உள்ளே சென்றவன் நுழைவுச்சீட்டுக்கு தன்னிடம் காசில்லை என்கிறான். தன் விலையுயர்ந்த கைக்கடிக்காரத்தையும் கழற்றிக் கொடுக்கிறான், நுழைவுச்சீட்டு தரும் பெண்மணியோ , கைக்கடிகாரமெல்லாம் வேண்டாம் என வாங்க மறுத்து இலவசமாகவே போல்யகோவை அனுமதிக்கிறாள். உள்ளே 16mm திரையில் பியானோ இசை ஒளிக்க ஒரு நீச்சலுடையணிந்த பெண் சிரிப்பு வருமாறு ஆடுகிறாள். அங்கே காவலர்கள், முதலாளிகள், தொழிலாளிகள் என எல்லோருமே கூடியிருக்கின்றனர். உட்காரவே இடமில்லாமல் அரங்கே நிரைந்திருக்கிறது.எங்கும் புகைமூட்டம். கேளிக்கைக்கு ஏங்கும் கூட்டத்தை  எங்கிலும் பார்க்கிறான் போல்யகோவ்.

சொல்லி வைத்தது போல அனைவரும் அற்பகாட்சிக்கெல்லாம் கைதட்டி சிரிக்கின்றனர். சிரிப்பாமா,!!!கடுப்பான போல்யகோவ் மார்ஃபின் திரவத்தை முழுக்க சிரிஞ்சியில் ஏற்றியவன் தன் தொடையில் குத்திக் கொள்கிறான். இப்போது இவனுக்கும் அவர்களைப் போலவே சிரிப்பு தொற்றிக்கொள்கிறது, நன்றாக சிரிக்கிறான். சட்டென கைத்துப்பாக்கியை எடுத்தவன் வலது கன்னத்துக்கு கீழே வைத்து சுட்டுக் கொண்டு சரிகிறான், போல்யகோவின் மூளை வெளியே சிதறி அடுத்து அமர்ந்திருந்தவன் மேலே தெரிக்கிறது ,அவனோ இவன் சுட்டுக்கொண்டு  கீழே விழுந்ததைப் பார்த்து முகம் சுளிக்கிறான். படம் போகிறதே!!! என்று ரத்தத்தை துடைத்தபடியே விட்ட படத்தைப்பார்க்கிறான்.  இப்போது திரையில் முற்றும் என்று போடப்படுகிறது.
=====00000=====
ப்படம் முழுக்க யதார்த்தம், வன்முறை, குரூரநகைச்சுவை நிரம்பி வழிகிறது, நீங்கள் புல்ககோவ், தஸ்தாவெஸ்கியை விரும்புபவரென்றாலும் விரும்பாதவரென்றாலும்  அவசியம் பார்க்கவேண்டிய படைப்பு. படத்தின் திரைக்கதையை எழுதியவர் அகால மரணமடைந்த எழுத்தாளர் & நடிகர் செர்ஜி போட்ரோவ் ஜூனியர்.[Sergei Bodrov, Jr.], இவர் இயக்குனர் அலெக்ஸெய் பாலபனொவின் 2002 ஆம் ஆண்டு வரையிலான படைப்புகளில் பெரும் பங்காற்றியுள்ளார். படத்தின் பாத்திரங்களின் நடிப்பும் , ஒளிப்பதிவும், இசையமைப்பும்,  ஆடை அரங்க வடிவமைப்புகளும் ஆகச்சிறந்த உலகத்தரத்தின் உச்சம். இது திரைப்படக்கல்லூரிகளின் ரெஃபெரென்ஸ் மெட்டீரியலாக வைக்கப்படவேண்டிய படம் , எல்லாவற்றுக்கும் மேல் இது உலகசினிமாத்தேடலை துவக்க சரியான படம் .

படத்தை தரவிறக்க சுட்டி:- 

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

படத்தின் கலைஞர்கள் விபரம் யூட்யூபிலிருந்து:-
Directed by Aleksei Balabanov
Written by Mikhail Bulgakov, Sergei Bodrov, Jr.
Starring Leonid Bichevin, Ingeborga Dapkūnaitė, Andrei Panin
Cinematography Alexandr Simonov
Release date(s) November 27, 2008
Country Russia
Language Russian
 =====00000======

ஹார்ட் கேண்டி[18+] [அமெரிக்கா][Hard Candy][2005]

பெடோபைல் ஆசாமிகள் ஏன் ஒடுக்கப்பட வேண்டியவர்கள்?பெடோபைல் அசாமிகள் ஏன் சமூகத்தில் மிகவும் அருவருக்கத்தக்கவர்கள்? இதோ விடை


காணொளிக்கு நன்றி:-TED
==========0000==========


லாஸ் ஏஞ்சல்ஸ்  புகழ், 37 வயது, இந்திய ஃபேஷன் டிசைனர் ஆனந்த் ஜான், கற்பழிப்பு வழக்கில், 59 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஃபேஷன் உலகையே தன் பக்கம் திரும்பச் செய்தவன். பெடோபைல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு என்னைக் கைகாட்டு, என உலகப்புகழை இந்தியாவுக்கு பெற்று தந்தவன்.

இவன் மீது, வளரும் மாடல் அழகிகளுக்குப் பயிற்சி அளிப்பதாக கூறி அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கற்பழித்ததாகவும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் . இவன் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007 வரை 14 முதல் 21 வயது வரையிலான இளம் பெண்கள், மாடல் அழகிகளை கற்பழித்ததாகவும், பாலியல் தொந்தரவுகள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு,  டி என் ஏ,  வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

தொடர்ச்சியான புகார்களை தொடர்ந்து பயங்கர கெடுபிடிக்கிடையில் அமெரிக்க போலீஸார் ஆனந்த் ஜானைக் கைது செய்தனர். அவன் மீது மைனர் பெண்களை கட்டாயப்படுத்தி கற்பழித்தது உள்ளிட்ட 14 வழக்கு பதிவுசெய்தனர், இந்த வழக்கில் ஜானுக்கு எதிராக 9 பெண்கள் அளித்த வாக்குமூலம் அண்ணாத்தைக்கு  எதிராய் அமைந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி,  ஆனந்த் ஜான்  மேல் முறையீடு&பெயில் அற்ற சிறைக் காவலில் 14 ஆண்டுகளைக் கழிக்க வேண்டும். அதன் பின்னர் 45 ஆண்டு கால ஆயுள் தண்டனையை அவன் தொடர்ச்சியாய் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இவனது 101 வயதில் தான் இவனால் வெளியே வர முடியும்!!! என்னா தீர்ப்பு?!!! அண்ணாத்த இப்போ சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசன் போல கம்பிக்குப்பின்னே. யார் கண்டா? கம்பிக்குப்பின்னே இவன் தனது லீலைகளை சுயசரிதையாக எழுதினாலும் ஆச்சர்யமில்லை!.
நம்மூரில் இவனை காப்பாற்றவும் ஒரு கூட்டம் தட்டி தூக்கி பிடித்து கோஷம் போட்டது , ஆனா அவுங்க குரல் அமெரிக்காவுக்கு எட்டலை. நல்ல வேளை!.

வன் போல எத்தனை ஆனந்த் ஜான்கள் நம்மூரில் இருப்பாங்க? என்ன ஒரே வித்தியாசம்? சாமியார் போர்வையில் இருப்பாங்க. இங்கே  மாடல்களுக்கு பதிலாய் சாமியாரிணிகள். 


தினத்தந்தியின் இன்றைய பேப்பரை எடுத்து மேலோட்டமாக பாருங்கள்,அதில் 2 முதல் மூன்று பெடோபைல் ஆசாமிகள் லீலை புரிந்த சம்பவங்களாவது இருக்கும்,மகளை கர்ப்பமாக்கி கொன்ற தகப்பன்!!!,மூன்று வயது குழந்தையை கற்பழித்து கொன்ற தாத்தா!!! என்று. இந்தியாவில் மாஸ் கில்லிங்கே பெரிய குற்றமில்லை,எனும் போது பெடோபைல்-கற்பழிப்பு எல்லாம் துச்சம். 
==========000==========
ஹார்ட் கேண்டி  என்பது பதின்ம வயது பெண்கள் பெடோஃபைல் ஆசாமிகளுக்கு ஆன்லைன் சேட் ரூமில்  வைத்துள்ள கோட் வேர்டாம்!.

ப்படி மேலே சொன்ன ஆனந்த் ஜான் போல் ஒரு ஆசாமியிடம்  மாட்டிய 
14வயது பெண், சமயோஜிதமாய் செயல்பட்டு அந்த பெடோஃபைல் 
குற்றவாளியை தப்ப விடாமல் சுளுக்கெடுப்பது தான் ஹார்ட் கேண்டியின் கதை, இது அநேகம் ஆண்களுக்கு பிடிக்காது,
[எனக்கும் படத்தை பார்ப்பதற்குள்  போதும், போதுமென்றாகிவிட்டது]. இது பெண்கள் முக்கியமாய் டீன் ஏஜ் பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.   இன்றைய நவ நாகரீக உலகில் பலகுடும்பப் பெண்கள் குறுகிய காலத்தில் புகழேணியில் ஏறநினைத்து விபரீதமாய் ஓநாய்கள் விரித்த வலையில் வலியப் போய் விழுகின்றனர். அதுபோல பெண்கள் தம்மை தற்காத்துக் கொள்ள  இப்படம் உதவும்.

படத்தின் கதை:-
14 வயது மாணவி ஹேய்லி[ஜூனோ புகழ்-எல்லன் பேஜ்] 32 வயது ஃபேஷன் போட்டோகிராப்பர்-ஜெஃப்ஃபுடன்[பேட்ரிக் வில்சன்] 2 வாரங்களாய் ஆன்லைனில் மிக ரொமாண்டிக்காக சேட்டிங் செய்கிறாள். இறுதியாய் இருவரும் காபி ஷாப்பில் சந்திக்கின்றனர். அங்கும் வைத்து பல விதமான கடலைகளை ஜெஃப் ,ஹேய்லியிடம் வறுக்கிறான். அவள் 18 வயது முடிக்கும் வரை திருமணத்துக்கு காத்திருப்பேன், என ஆசை வார்த்தை பேசுகிறான். அவள் வயதுக்கு அதிகமான செக்ஸ் பேச்சுகள் பேசி அவளை பிராக்கெட் போடுகிறான். அவளுக்கு அவள் விரும்பிய  பச்சை வண்ண டிஷர்டும் வாங்கி பரிசளிக்கிறான், ஹேய்லி அதை அங்கேயே கழிவறையில் மாற்றிக்கொள்ள அதை கதவோரம் நின்று சைட்டும் அடிக்கிறான்.ஜொள்ளும் வடிக்கிறான்.

ஹேய்லி என்ன டாபிக் எடுத்து பேசினாலும் ,தனக்கும் அது பரிட்சயம் போல பிஸ்து காட்டுகிறான். இறுதியாய் தன் வீட்டுக்கும்  ஒரு நடை அழைக்கிறான், இவள் யோசித்து சரி என சொல்ல, தன் சொகுசு காரில் அவளை கூட்டிப்போய் கடல் போன்ற அபார்ட்மெண்டையும் காண்பிக்கிறான்.

ங்கே இவளுக்கு குடிக்க வோட்கா+ஆரஞ்சு ஜூஸுடன், ஸ்க்ரூ ட்ரைவர் கலந்து தருகின்றான், ஹேய்லியோ நான் முன் பின் அறிமுகமில்லாதவர் தரும் பானங்களை குடிக்க மாட்டேன் என்றவள்,தனக்கு தானே ஸ்க்ரூட்ரைவர் கலக்கிறாள். இருவரும் மது அருந்திக்கொண்டே உரையாட,ஹேய்லி அவனிடம் முன்னாள் காதலி ஜெனில் பற்றி கேட்கிறாள்.

ப்போது ஜெஃப்ஃபுக்கு தலை வலிக்க ஆரம்பிக்க,இவள் அவனை விடாமல் என்னையும் உன் சுவற்றில் உள்ள இளம் மாடல்கள் போல் போட்டொ எடு, என கேட்கிறாள், அவனுக்கு நடனமாடியும், ஒயிலாய் போஸ்கள் கொடுத்தும் காட்டுகிறாள்.ஆனால் கேமராவை கையில் எடுத்த ஜெஃப்ஃபுக்குள் எதோ மிருகம் விழிக்கிறது, ஆனால் அவனால் எதுவும் செய்யமுடியவில்லை, வியர்த்தவன் மயங்கி விழுகிறான்.

அசுர வைத்தியம்-1
இப்போது ஜெஃப்,வீல் வைத்த சேரில் உட்கார்ந்த படி கண் விழிக்கிறான். ஹேய்லி அவன் ஒரு பெடோபைல் ,என்றும் ரேபிஸ்ட்,கொலையாளி என்று தனக்கு தெரியும் என்கிறாள், இருவாரமாகவே இவனை போட்டு வாங்கி பொறி வைத்து பிடித்ததாயும் சொல்கிறாள்.இவன் கிளாஸில் மயக்க மருந்து  கலந்ததையும் சொல்ல, இவன் பதறி எழ எத்தனிக்க,இவன் கால்களும் கைகளும் கட்டப்பட்டிருக்கிறது.ஹெய்லி அவன் கண் முன்பே வீட்டை கலைத்து போட்டு ரெய்டு செய்கிறாள், 

வன் மேசையில், வார்ட்ரோபில், பெர்சனல் கம்ப்யூட்டரின் எல்லா ட்ரைவ்களிலும் தேடியும் எங்கும் எந்த போர்னோக்ராபிக் போட்டோ, வீடியோ ஆதாரமும் தென்படவில்லை,ஆச்சரியம் பிடிபடவில்லை, ஒரு  எலிஜிபிள் பேச்சுலரின் கம்ப்யூட்டர் இவ்வளவு சுத்தமா?நோ சான்ஸ்!!!! சம்திங் ராங்!!! என இவள் அவனை உண்மையை ஒத்துக்கொள்ள சொல்கிறாள், ஆனால் ஜெஃப் அவள் மேலேயே பழியை போட்டு ,உனக்கு வளர்ப்பு சரியில்லை, மனநிலை பிசகியிருக்கிறாய் ,அதனால் தான்  இப்படி இருக்கிறாய், உனக்கு நான் வைத்திய செலவை ஏற்றுக்கொண்டு கவுன்சிலிங் செய்கிறேன், உன்னைப்பற்றி நான் யாருக்கும் சொல்லமாட்டேன்,என்னை விட்டுவிடு என்கிறான்.

ஹேய்லிக்கு ஜெஃப்ஃபின் கப்போர்டில் துப்பாக்கியும், முன்னாள் காதலி ஜெனில்லின் போட்டோக்களும், அவர்கள் டேட் செய்த நாளும் கிடைக்கிறது, சற்றும் தளராமல் மேற்கொண்டு தேடியவள், இவனது டீடேபிளின் மீதுள்ள கூழாங்கற்களை கீழே தள்ள, அங்கே ஒரு சேஃப்டி லாக்கரை பார்க்கிறாள், அதை திறக்க இவனிடம் கோட் கேட்க, இவன் ஆத்திரமாகி , தர மறுத்து நீயே முயன்று பார் என்கிறான். அவள் நீண்ட முயற்சிக்கு பின் அவர்கள் முதலில் டேட் செய்து பின் உடல் உறவு கொண்ட  நாளை,எதேச்சயாய் எண்டர் செய்ய லாக்கர் திறக்கிறது. 

தில் டோன்னா மேயர் என்னும் காணாமல் போன பள்ளி மாணவியின் போட்டோ இருக்கிறது, இவள் அதை வைத்து ஜெஃப்ஃபை மிரட்டுகிறாள், இவன் திமிரி அவள் வயிற்றில் உதைத்துவிட்டு சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ஓட, அவள் வலியை உதறி எழுந்தவள் , இவன் தலையில் பாலீத்தின் பையை வைத்து இறுக்க சுற்றுகிறாள், இவனுக்கு மூச்சு திணர வைத்து மீண்டும் மயங்க செய்கிறாள்.
அசுர வைத்தியம்-2
இப்போது ஜெஃப் டைனிங் டேபிளில் படுக்கவைக்கப்பட்டு, கால்களும், கைகளும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் கண்விழிக்கிறான். இவள் ஐஸ்கட்டிகள் கொண்ட பாக்கெட்டை ஜெஃப்ஃபின் ஆண்குறிமீது வைக்க, இவன் அலறுகிறான். இவள் ரொம்ப நேரம் வலிக்காது, கேஸ்ட்ரேஷன் ஆபரேஷன் இப்போ முடிஞ்சிடும், என்ன ?!!!எனக்கு இது முதல் தடவை, எனவே கை நடுக்கம் இருக்கும், இவன் உடம்பை அசைத்தால், ஆண்குறி தவறுதலாக துண்டாகக்கூடும் என எச்சரித்தவள், இவன் பெடோபைல் என்பதையும் டோன்னா மேயரை வன்புணர்ச்சிசெய்து கொன்றதையும் ஒத்துகொள்ளுமாறு சொல்கிறாள், ஜெஃப் மறுக்கிறான், ஹெய்லி அவன் முன்னாள் காதலி ஜெனிலுக்கு ஜெஃப் தன் பாலியல் குற்றத்தை ஒப்புக்கொண்டது போலவும், தற்கொலை செய்து இறக்கப்போவது போலும் மின் அஞ்சல் டைப் செய்கிறாள், அதை அனுப்பவா?அனுப்பவா? என மிரட்டுகிறாள்,இவன் கெஞ்ச அதை பாதியில் விட்டவள்.

வள் கிளவுஸ் அணிந்துகொண்டு,ஜெஃப்ஃபின்  உள்ளாடையை கழற்றுகிறாள், அறுக்கையில் வலிக்காமலிருக்க மயக்க மருந்து  ஊசியை இவன் தொடையில் போடுகிறாள் .  அவனின் விதைப்பையை கிருமி நாசனி கொண்டு சுத்தம் செய்கிறாள், ரோமத்தை ஷேவிங் ஃபோம் இட்டு குழைத்தவள், பின்னர் ஆபரேஷன் கத்தி கொண்டு ரோமத்தை அருவருப்பே இல்லாமல் சவரம் செய்கிறாள். பின்னர் மீண்டும் கிருமி நாசனி தடவுகிறாள், தன் டாக்டர் அப்பாவின்  சர்ஜரி புத்தகத்தை திறந்து குறிப்பு எடுத்தவள், இவனுக்கும் செயல்முறை விளக்க குறுக்கு வெட்டு தோற்றத்தை காட்ட, அவன் அலற, இவள் அவன் கெஞ்ச கெஞ்ச, கேளாமல், விதை நீக்க ஆபரேஷனை துவங்குகிறாள்.

வன் எவ்வளவு பணம்வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறான்,அவள் செவி சாய்க்காமல் விதைக்கொட்டைகளை கண்ணாடி டம்ளர் நீரில் போடுகிறாள், இவன் அலற,அலற, அதை வெளியே எடுத்து பந்து போல தட்டி தட்டி விளையாடுகிறாள். பின்னர் இவன் கண் முன்னே அதை காட்டியவள், கிட்சன் சின்கை நோக்கி சென்று மாமிச எலும்பு நொறுக்கும் கிரஷரை ஆன் செய்கிறாள்.

விதை கொட்டையை அதில் போட நினைத்தவள், இதை காக்கைக்காவது போட்டால் புண்ணியம் உண்டு என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறாள். வீட்டின் ஓட்டுக் கூரை மீது  ஏறுகிறாள், இவன் விதைக்கொட்டை போன பயத்தில் அலறுகிறான். மீண்டும் உள்ளே வந்தவள் நான் குளித்துவிட்டு வரேன் ,என ஆபரேஷன் உடையை அவிழ்த்துவிட்டு போகிறாள், ஜெஃப் பகீரத பிரயத்தனப்பட்டு, கை கட்டுகளை அவிழ்த்தவன் , கால் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டு, தன் பறிபோகாத விதைகொட்டையை பார்த்து ஆனந்தக்கூத்தாடுகிறான். 

விதை அதே இடத்தில் சர்வ பத்திரமாயிருக்க,பரீட்சை அட்டைக்கு போடும் தகர கிளிப் ஒன்று வழுவழு விதை பையை இறுக்கிப் பிடித்திருக்கிறது, கொலை வெறியுடன் குளியலறைக்குள் அவளை தாக்க ஓடுகிறான்,அவள் இவனுக்காகவே காத்திருந்தவள். இவனை டேசர் என்னும் ஸ்டன் கன்னால் மின்சாரம் பாய்ச்சி நிலைகுத்தி மயங்க வைக்கிறாள்.அய்யோ வட போச்சே!!!

அசுர வைத்தியம்-3

ப்போது சக்கர நாற்காலியில் நின்ற நிலையில் கண்விழித்த ஜெஃப், வாயில் பிளாஸ்திரியுடன்,  ஒரு நைலான் கயிறில் தன் கழுத்து தூக்கு மாட்டப்பட்டிருப்பதையும், கைகள் பின்புறமாய் கட்டப்பட்டிருப்பதையும் பார்க்கிறான். ஹெய்லி, ஜெஃப்ஃபின் முன்னாள் காதலி ஜெனிலுக்கு மின்னஞ்சல் தட்டிக்கொண்டிக்க, இவனை நோக்கி இரண்டு சாய்ஸ் தருகிறாள்,

1.சேரை உதைத்து அவனே தூக்கு கயிறு இறுக்கி சாவது.
2.இவன் செய்த குற்றங்களை வாக்குமூலமாய் தந்து,சரணடைந்து தண்டனை பெறுவது.

ப்போது வீட்டின் கதவு தட்டப்பட, ஹேய்லி மருண்டு போய் திறக்கிறாள், இவனது அண்டை வீட்டு ஜப்பானிய பெண்,அங்கே நிற்க, அவளிடம் தன்னை ஜெஃப்ஃபின் அக்கா மகள் வார இறுதிக்கு வந்துள்ளேன் என்கிறாள்.ஜெஃப் உள்ளே பெரிதாய் வாந்தியெடுப்பது போல அலறி சத்தம் போட,ஜப்பானிய பெண்ணிடம்  ஜெஃப்ஃபுக்கு, ஃபுட் பாய்சன் என்கிறாள், 

ப்பானிய பெண் தன் மகள்களிடம் ஜெஃப் மிகவும்பிரியமாய்[!] இருப்பான் என்றும், வீட்டில் குக்கீஸ் செய்தேன், என்றும், சொல்கிறாள். அவள் கொண்டு வந்து தந்த இனிப்பை வாங்கிகொண்டவள், வாசக்கதவை மூடப்போக, ஜப்பானியப் பெண் காசு? என கேட்கிறாள், அசடு வழிந்தபடி ஜெஃப்ஃபின் பர்ஸில் இருந்தே பணம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வருவதற்குள், ஜெஃப் தன் கழுத்துக் கயிறை அறுத்துக்கொண்டு சேரிலிருந்து கீழே குதித்து கத்தியை எடுத்துக்கொண்டு தன் பின்னங்கை கட்டையும் விடுவிக்கிறான். கத்தியை எடுத்துகொண்டு இவளுக்கு காத்திருக்கிறான் , இவன் தப்பியதை பார்த்த ஹெய்லி தன்னை தற்காத்துக்கொள்ள  துப்பாக்கியுடன் மொட்டை மாடிக்கு ஓடுகிறாள்.

இப்போது ஆரம்பித்தது பூனை சுண்டெலி ஆட்டம்.
1.இறுதிக்கட்ட போராட்டத்தில் ஜெஃப் கெலித்தானா?தன்னை இவ்வளவு சித்திரவதை செய்த பொடிப்பெண்ணை கொன்றானா?
2.ஹெய்லி உண்மையிலேயே அந்த மரணவாக்குமூலத்தின் மின் அஞ்சலை ஜெனிலுக்கு அனுப்பினாளா?
3.ஹெய்லிக்கு உண்மையிலேயே 14 வயது தானா?
4.ஹெய்லி எதற்காக இந்த பெடோஃபைல்-ஜெஃப்ஃபை  பழிதீர்க்க வந்தாள்?
5.பக்கத்து வீட்டு .ஜப்பானியப்பெண்  ஜெஃப்ஃபுக்கு உதவினாளா?


போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!

படத்தின் சிறப்புகள்:-
படத்தின் பட்ஜெட் ஒன்பதரை லட்சம் டாலர்களாம்,படத்தில் இரண்டே பிரதான பாத்திரங்களே, பதினெட்டரை நாளில் மொத்த காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதாம், படத்தின் செலவை குறைக்க ஒன்பது நிமிட இசை மட்டுமே பயன்படுத்தப்பட்டது, மீதம் எல்லாம்  சாதாரண சப்தங்களே, படம் முழுக்க நீண்ட  க்ளோஸ் அப் ஷாட்டுகள் கொண்டுள்ளது, படத்தின் வசனங்கள் லைவாய் படம் பிடிக்கப்பட்டு, மிக சொற்ப வசனங்களே டப்பிங்கில் சரிசெய்து திருத்தப்பட்டன.படத்திற்காக பிரத்யேக செட் எதுவும் போடவில்லையாம். ஒவ்வொரு நிமிடமும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச்செய்யும். வேகம்,வேகம்,வேகம் தான்.ஆக மொத்தத்தில் ஒரு ப்ரில்லியண்டான த்ரில்லர் படம் இது. இயக்குனர் டேவிட் ஸ்லேடுக்கு இது முதல் படமாம்,நம்பவே முடியவில்லை,எல்லென் பேஜின் நடிப்பை நாம் ஜுனோ மூலம் அறிவோம்,பேட்ரிக் வில்சன் கலக்கியிருக்கிறார்.இது போல வேடத்தில் நடிக்க தனித்திறமை வேண்டும்.வெல்டன் டீம்.!!!

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:- 
 ========================




 ========================
கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by David Slade
Produced by Rosanne Korenberg
Written by Brian Nelson
Starring Ellen Page
Patrick Wilson
Odessa Rae
Sandra Oh
Music by Molly Nyman
Harry Escott
Release date(s) 2005 (Canada)
April 14, 2006 (United States)
Language English
Budget $950,000[1]
Gross revenue $7,022,209[2]

 ========================

டிஸ்க்ரேஸ் -அவப்பெயர் [2008] [ஆஸ்திரேலியா] [கண்டிப்பாய் 18+]

டிஸ்க்ரேஸ் - இது  முழுக்க தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட, ஆங்கிலம், ஆஃப்ரிக்கானா, சுலு, ஸ்ஹோசா ஆகிய மொழிகளில் வெளியான ஆஸ்திரேலிய  நாட்டு திரைப்படம்,

ஜான் மால்கோவிச் ஒரு தலைசிறந்த அமெரிக்க - நடிகர், இயக்குனர், & தயாரிப்பாளருமாவார். இவரின் டேஞ்சரஸ் லியேசன்ஸ் படம் பார்த்துவிட்டு இவரின் படங்கள் ஒவ்வொன்றாய் தேடிப் பார்த்தேன், தலைவர் கவுரவம், கருமம், கன்னராவி, பாவ புண்ணியம், எதுவும் பாக்காதவர். கலைப்படங்களில் , நகைச்சுவை வேடங்களில், தன்னை டேமேஜ் செய்துகொள்ளும் வேடங்களில் பங்களிப்பு என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல, ஒரு சல்லிப்பயல் வேஷம் கட்டினாலும் சல்லிப்பயலாவே மாறியிருப்பார். இவர் இருமுறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டும்,இன்னும் வாங்கவில்லை. இவரின் பீயிங் ஜான் மால்கோவிச் “பற்றி நண்பர் கருந்தேள் அருமையாய் எழுதியிருப்பார்.

வர் வாழ்ந்து கெட்ட பேராசியராய் நடித்த, அதிகம் பேர் பாராமல் போன டிஸ்க்ரேஸ் (அவப்பெயர்) பற்றி பார்ப்போம், 1999ஆம் ஆண்டு புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் J. M. Coetzee ன் டிஸ்க்ரேஸ் என்னும் புதினம் வெளியாகி, மிகச்சிறந்த புதினத்துக்கான புக்கர் பரிசையும் வென்றது. இது வெளியான 4 ஆண்டுகளில் அவருக்கு நோபல் பரிசும் கிடத்தது ,இது கடைசி கால்-நூற்றாண்டுகளில் வெளியான சிறப்பான புதினம் என்னும் பெயரும் பெற்றுள்ளது, இதை தழுவி அதே பெயரில் அன்னா மரியா மாண்ட்செல்லி திரைக்கதையில் ஸ்டீவ் ஜேக்கப் இயக்கி 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ட்ராமா வகை திரைப்படம் இது. ஒரு கதாநாயகன் எப்போதும் ஜெயிக்க வேண்டும்,அவனுக்கு தாழ்வுகளே வரக்கூடாது என்போருக்கான படம் அல்ல இது .
========== 

படத்தின் கதை:-
ருமுறை விவாகரத்து பெற்ற தென்னாப்பிரிக்க வெள்ளை இன ஆங்கில இலக்கிய பேராசிரியர்-டேவிட் லூரி [ஜான் மால்கோவிச்],கேப் டவுனில் தனிமையில் இருக்கிறார். எப்போதும் வரும் மலேசிய விலைமாதுவும் கூட இவரை கவர்ச்சியின்மையால் ஒதுக்குகிறாள், 52 வயதான இவர், தன் கல்லூரி வகுப்பிலேயே காதல் -இலக்கியம் படிக்கும் கலப்பு-கருப்பிண பெண்ணான மெலனி ஐசக்கை, துரத்தி துரத்தி வலைவீசுகிறார், கவிதையால் அர்சிக்கிறார். இவரின் கட்டாயத்தாலும் , இண்டெர்னல் மதிப்பெண்ணுக்கு  பயந்தும் அப்பெண், இவருக்கு விரும்பாமலே இரையாகிறாள்.
வர் அவளின் உறவை தொடர்ந்து எதிர்பார்க்க, அவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொள்ள,அவள் காதலனும் அப்பாவும் குறுக்கிட்டு, பிரச்சனை பெரிதாக, பல்கலைக்கழக நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டு, இவர் கட்டம் கட்டப்படுகிறார், இவர் அவர்கள் தண்டிக்கும் முன்னர், சுதாரித்துக் கொண்டு, என்ன? முடிஞ்சது முடிஞ்சு போச்சு, நான் குற்றம் செய்தேன், ஆனால் வருத்தமெல்லாமில்லை,  ஆனதை பார்த்துக்கொள்! 

ன தன் லெஸ்பியன் மகள் லூசி [ஜெசிக்கா ஹெய்ன்ஸ்] வசிக்கும் கிழக்கு கேப்பிற்கு நீண்டகார் பயணம் செய்து போகிறார். அங்கே மகளின் காதலி பிரிந்து போயிருக்க மகள், குழல் துப்பாக்கியின் துணையுடனும் தேவையில்லாத  தத்துவ குப்பைகொண்ட சித்தாந்தத்துடனும் வாழ்கிறாள். 
[லூஸி ஆள் நல்ல அழகாயிருந்தாலும் லூசி பேசும் பேச்சால் நமக்கு அறையலாம் போலிருக்கிறது, அப்படி ஒரு பாத்திரப்படைப்பு]
லூசி முன்பு வெள்ளையர்  பூர்வகுடி-தென்னாப்பிரிக்கருக்கு செய்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தமாக, தன் நிலத்திலேயே பெட்ரஸ் என்னும் கருப்பினத்தவனை தங்க வைத்திருக்கிறாள், அவனுக்கு தன் நாய் பண்ணையிலும்,  நர்சரிசெடிகள் பண்ணையிலும் வேலை தந்து, அவன் பக்கத்து நிலம் வாங்க வழிவகை செய்கிறாள். பெட்ரஸ் நினைத்த நேரத்தில் வீட்டுக்குள் வந்து நினைத்ததை செய்ய உரிமை தந்திருக்கிறாள். இது டேவிட்டிற்க்கு கடுப்பை கிளப்பினாலும் மகளின் அகம்பாவத்தால் பொறுத்துப்போகிறார். வாராவாரம் நடக்கும் உழவர் சந்தைக்கு இவர், மகள், பெட்ரஸ் போய் பூச்செடிகள்,காய்கற்கள் விற்று வருகின்றனர். இந்நிலையில் பெட்ரஸ் மாயமாகிறான்.

ப்போது டேவிட் , லூஸின் குடும்ப தோழியான விலங்குகள் மருத்துவ  க்ளீனிக் நடத்தும் பெவ் என்னும் பெண்மணியிடம்  குறைந்த கூலிக்கு வேலை பார்க்கிறார்,  ஊரில் பிடித்து வந்த தெருநாய்களை குளிப்பாட்டி, தடுப்பூசி ,தீனி போட்டு, யாரும் வாங்கிச் செல்லாத பட்சத்தில் அவற்றை விஷஊசி போட்டு கொன்று  எரியூட்டுவதே இவரின் பிரதான வேலை. மிகுந்த மனவருத்தத்துடன் அதைசெய்கிறார். [இது தென் ஆப்பிரிக்காவில் நிதர்சனம்,அங்கே தீனியும்,புல்லும்,நீரும்  அதிகம் செலவாகிறது என காட்டு யானைகள் கூட கும்பலாக அரசினால் சுட்டுக் கொல்லபடுகின்றன]

ருநாள் மகளும் இவரும் நடை போய் விட்டு வருகையில் ஆப்பிரிக்க கருப்பின இளைஞர்கள் மூவர், இவர்கள் தோட்டத்துக்குள் வந்து, இவர் வீட்டு கூண்டு நாய்களை சீண்ட,  லூசி என்னவென்று விசாரிக்க, அவர்கள் ஒருவனின் சகோதரிக்கு பிரசவ வேதனை-மிகவும் சிக்கல்,போன் செய்ய வேண்டும் என கெஞ்ச,லூசி ஒருவனை மட்டும் வீட்டுக்குள் கூட்டிப்போகிறாள், டேவிட் சற்றும் எதிர்பாராத வேளையில் மற்ற ஒருவன் டேவிட்டை தள்ளிவிட்டு, வீட்டுக்குள் சென்று உள்ளே சென்ற மற்றொருவனுடன் சேர்ந்து லூஸியை வெறியுடன் புணர்கின்றனர். 
வர் ஒருவன் மீது வளர்ப்பு நாயை ஏவி விடுகிறார்,வீட்டின் கதவை உடைத்து திறந்து உள்ளே போனவரை மண்டையில் கட்டையைக் கொண்டு அடித்து, கழிவறையில் இவரை தள்ளி,வெளியே கதவை தாழிட்டும் விடுகின்றனர், லூஸியை மாறிமாறி வெறியுடன் புணர்ந்த  மூவரும்,பின்னரும் நிறவெறி அடங்காமல் வீட்டில் இருந்த டீவி முதல் கக்கூஸ் ப்ரஷ் வரை எடுத்துக்கொண்டு, டேவிட்டின் கார் டிக்கியில் அடைத்தவர்கள், வெறி அடங்காமல் கூண்டில் குலைத்துக் கொண்டிருந்த வளர்ப்பு நாய்கள் அத்தனையையும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றுவிடுகின்றனர்.
ழிவறையில் மயக்கத்திலிருந்து விழித்த டேவிட் , வெண்டிலேட்டர் வழியே அதைப்பார்த்துவிட்டு கத்துகிறார், கதவை திறந்து உள்ளே வந்த கயவர்கள்  இவர் மீது எத்தில் ஆல்கஹாலை ஊற்றி, கொளுத்தியும் விட்டு, கதவையும் தாழிட்ட பின்னர்  இவரின் காரையும் திருடிக்கொண்டு போகின்றனர். இவர் கொஞ்சமும் தாமதிக்காமல் கழிவறை கோப்பையின் நீரில் தலையை விட்டும், அதிலிருந்து தண்ணீர் எடுத்தும் தீயை அணைக்கிறார். [இந்த ஒரு காட்சி ஒன்றே போதும்-மால்கோவிச்சின் அபார திறமைக்கு]

மிகுந்த வலியிலும் லூஸி குளித்துவிட்டு பாத்ரோபுடன் வந்து கதவை திறக்கிறாள், இருவருக்குமே அவமானத்தால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியவில்லை. அகம்பாவம் பிடித்த லூஸி வலியை வெளியே காட்டிக்கொள்ளவில்லை, போலிசிடமும்  போய் புகார் கொடுக்கவில்லை, இவர் மட்டும் காரும் ஏனைய பொருளும் கொள்ளையடிக்கப்பட்டன என புகார் அளிக்கிறார். இவர் லூசியிடம் ஹெஐவி தாக்குதல், விடி நோய் தொற்று ,கர்ப்பம் நேரக்கூடும், மருத்துவரிடம் போவோம் என்றதற்கும், பிடிவாதமாய் மறுக்கிறாள், அவளுக்கு ஒரே கவலை, தான் பிடிவாதமாய் விலகியிருந்த அப்பா முன்னர் இப்படி அவமானம் நேர்ந்துவிட்டதே என்பது தான். இப்போது காயத்துக்கு சிகிச்சைபெற்று வந்த டேவிட்  பிணமான நாய்களை மண் தோண்டி புதைக்கிறார். ஒரு நாய் மட்டும் அதிர்ஷ்டவசமாக கழுத்தில் கத்தி வெட்டுடன் உயிர்பிழைத்தது தான் ஒரே ஆறுதல்.

லூஸி இவரை ஒரு தொண்டு நிறுவன ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போகிறாள், அங்கு அமர்ந்திருந்த ஊர்ப்பட்ட கூட்டம்,இவரின் எரிந்துபோன,காயம்பட்ட நிலையிலும் இவரை சிகிச்சைக்கு உள்ளே அனுப்ப மறுக்கிறது, இவர் வலியுடன்  நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுகிறார்.

லூஸிக்கு அப்பாவின் மேல் இனம் தெரியாத கோபம் இருக்கிறது, அப்பா ஒரு ஸ்த்ரி லோலன், இவர் மெலனி ஐசக்குக்கு உடலால் செய்த செயலால் தான் வேறுவழியில் தானும் உடலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என ஆழமாய்  நம்புகிறாள், இனி அப்பாவின் எந்தவித அறிவுறையையும் கேட்பதில்லை என பிடிவாதமாய் இருக்கிறாள்.

ப்போது பக்கத்து வீட்டுக்கார ஆளான பெட்ரஸுக்கு நிலம் அரசு மூலம் கிடைத்தும் விடுகிறது, அவனுக்கு இவளின் நீர்தேக்க தொட்டியிலிருந்தே நீரை பாசனத்துக்கு வழங்குகிறாள், அவன் புதிதாய் வீடு கட்டிக்கொள்ள ஆரம்பிக்கிறான்,  ஊரில் இருந்து தன் புதிய  மனைவியையும் கூட்டி வந்தவன், நிலம் கிடைத்ததை கொண்டாட பெரிய விருந்தை கிடா வெட்டி, உறவை கூட்டி கொண்டாடுகிறான்.
ந்த விருந்தில் அப்பாவும் பெண்ணும் கலந்துகொள்ள, அங்கே லூஸியை வன்புணர்ச்சி செய்த நாரப்பயலும் இருக்கிறான், அவன் மனநலம் பிழறியவன், பெட்ரசின் மனைவியின் அக்கா மகன் என்றும் தெரிகிறது,டேவிட் கொதித்து அவனை போலீஸில் பிடித்துக்கொடுப்பேன் என மிரட்டி,போன் செய்யப்போக லூஸி அரைக்கிறுக்கு போல வந்து தடுக்கிறாள்.
பெட்ரஸ் வீட்டில் விருந்து நடக்கிறது, போலீஸ் வந்தால் பெட்ரஸ் மானம் போய்விடும் என பிதற்றுகிறாள். பின் எதற்கும் இவரை மதிக்கவில்லை,பின் வந்த நாட்களில் பெட்ரஸின் விட்டிலேயே அந்த மனநலம் பிழறிய இளைஞன் தங்கிக்கொள்கிறான். இவர்களுக்கு பெட்ரஸின் சுயரூபம்,நிலத்தை அபகரிக்க அவன் ஆட்களை விட்டே அராஜகம் செய்யசொல்லி போட்ட  இரட்டை வேடம் புரிகிறது.

ருநாள் லூஸி உள்ளே குளித்துக்கொண்டிருக்க, வெளியே வெண்டிலேட்டர் வழியாக அந்த மனநிலை பிழறிய இளைஞன் எட்டிப்பார்ப்பதை பார்த்தவர், விரைந்து போய் அவனை கீழே தள்ளி அடிக்கிறார், உதைக்கிறார். சத்தம் கேட்டு பாத்ரோபை சுற்றிக்கொண்டு வந்த லூஸி, டேவிட்டிடமிருந்து அந்த இளைஞனை விடுவிக்கிறாள், அவனை வலிக்கிறதா? என கொஞ்சலாய் கேட்கிறாள், அப்போது லூஸியின் திரண்ட மார்புகளை பார்த்து அழுகையை அடக்கிய இளைஞன், கறுவிக்கொண்டே, வீ வில் கில் யூ என சொல்லிய படி நட்டு வைத்த செடிகளை சிதைத்துவிட்டு ஓடுகிறான்.

ருந்தும் மகளால் எதுவும் செய்யவிடாமல் தடுக்கப்பட்டவர், ஒரு கட்டத்தில் பெட்ரஸிடன் போய் நீ அந்த குற்றவாளியை வீட்டிலேயே தங்க வைத்துள்ளாயே? உனக்கு நன்றியே இல்லையா? எனறு கேட்க, அந்த பன்னாடை, அவன் சிறு குழந்தை, அவனுக்கு ஒன்றும் தெரியாது, லூஸியை நான் திருமணம் செய்துகொள்கிறேன், அவளுக்கு அது தான் பாதுகாப்பு என்கிறார். கொதித்துப்போன இவர் லூஸியிடம் போய் இதை சொல்ல, அவளும் அதை முட்டாள் தனமாக ஏற்றுக்கொள்கிறாள்.
கேனைத்தனமாய் சப்பை நிபந்தனைகள் இடுகிறாள், பெயருக்கு தான் அவனுக்கு நான் மனைவி, கட்டிலில் அல்ல, இந்த நிலம் அவனுக்கு சொந்தம் ஆகட்டும், ஆனால் வீட்டை தரமாட்டேன், என் அனுமதியில்லாமல் என் வீட்டுக்குள்ளே அவன் வரக்கூடாது என்கிறாள், இவருக்கு கண்கள் இருள்கிறது, இதைப் போய் அவனிடம் சொல்ல சொல்கிறாள், இவர் அவனால் உனக்கு பாதுகாப்பு அல்ல, ஆபத்து தான்,உன் அம்மாவுடன் ஹாலந்துக்கு போய்விடு என்கிறார். 
லூசி மறுக்கிறாள், நான் என் கொள்கையில் தோற்றுவிடுவேன், மேலும் நான் கருத்தரித்துள்ளேன், நான் ஒரு பெண், அந்த ஒரு பாவமறியா சிசுவை அழிக்க மாட்டேன் என குப்பை தத்துவம் பேசுகிறாள். இனி இவர்கள் என் மக்கள், இவர்கள் தான் என் உறவுகள் என்கிறாள், இவர் செய்வதறியாமல் கண்ணீருடன் ஊரைவிட்டே வெளியேறுகிறார்.

கேப்டவுனுக்கு இவரால் பாதிக்கப்பட்ட மெலனி ஐசக்கின் வீட்டுக்கு சென்றவர், அவள் அப்பாவிடமும், அவள் அம்மா, இளைய சகோதரியிடமும் மண்டியிட்டு, வணங்கி மன்னிக்க சொல்லி விட்டு, தான் வேலை செய்த பல்கலைக்கழகம் செல்கிறார், அங்கே மெலனி இயல்பு வாழக்கைக்கு திரும்பிவிட்டிருக்கிறாள், மேடை நாடகத்தில் சிரிப்பு வேடமும் பூண்டு நடிக்கிறாள், இவர் ஆனந்தப்படுகிறார். 
1.டேவிட் லூரிச் மெலனியிடமும் மன்னிப்பு கேட்டாரா?
2.கயவன் பெட்ரஸ் தண்டிக்கப்பட்டானா?
3.டேவிட் மீண்டும் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தாரா?
4.மகள் லூஸி என்ன ஆனாள்?

போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
=================
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-
=================
முழுக்கதையும் படிக்க:-
ங்கே இருந்த மெலனியின் காதலன் இவரை அடிக்காத குறையாக சிகரெட்டை மேலே எரிந்து எச்சரித்து அனுப்புகிறான், மிகவும் குற்ற உணர்வும், சுயபச்சாதாபமாய் உணர்ந்தவர், காரில் பயணிக்கையில் சிக்னலில் கிராக்கி பிடிக்கும் ஒரு விலை மாதுவை , தன் காரில் கூட்டிக்கொண்டு போய் வாய்ப்புணர்ச்சி பெறுகிறார்.  தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் இவர் வாழ்ந்த வீடு சென்றவர், வீட்டை  மாணவர்கள் அடித்து நொறுக்கியிருக்க, எஞ்சியிருந்த ஒரு புல்புல் தாராவை மட்டும் தன்னுடன் எடுத்துக்கொண்டு மீண்டும் கிழக்கு கேப்பிற்கே திரும்புகிறார்,

ப்போதும் விலங்குகள் க்ளினிக் நடத்தும் பெவ்விடமே போய் தங்கிக் கொண்டு வேலை செய்கிறார்,மதிக்காத மகளை புரிந்து கொண்டு அன்பு செலுத்த ஆரம்பிக்கிறார்.  இப்போது இவரின் திமிர் சுத்தமாய் வடிந்து விட்ட நிலையிலும் இவருக்கு பெண்ணின் அரவணைப்பும், உடல்சுகமும் தேவைப்பட கவர்ச்சியில்லாத, பருமனான,வயதான பெவ்வை இச்சைக்கு நெருங்குகிறார், முதலில் மறுத்த பெவ், பின்னர் யோசித்த பின்னர் இசைகிறாள், இருவரும் முழு  ஈடுபாட்டுடன், பாதுகாப்புடன், க்ளீனிக் நேரம் முடிந்தவுடன் தரையிலேயே படுக்கை விரித்து புணருகிறார்கள். இப்போது இவருக்கு திமிர் நீங்கி  குற்ற உணர்வு தலை தூக்குகிறது,

ய்வு நேரங்களில் புல் புல் தாராவை வாசிக்கிறார், கர்ப்பிணி மகளை அவளுக்கே தெரியாமல் சந்தை சென்று ஒளிந்திருந்து பார்க்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் பிரிவை தாங்க முடியாதவர்  காரை தொலைவில் நிறுத்திவிட்டு, நிறைமாத கர்ப்பிணியாய் , புதிய பூச்செடிகள் ஊன்றிக்கொண்டிருக்கும்  மகளை எட்ட நின்று பார்க்கிறார்,  இந்த முறை லூஸி என்று குரல் கொடுக்கிறார்,  தொண்டை அடைக்க குரல் எழும்பவில்லை, செல்ல நாய் ஓடிவந்துவிட,  மகள் அயற்சியாய் திரும்பி அப்பாவை பார்த்து புன்னகைக்கிறாள், உள்ளே வருகிறீர்களா? தேநீர் தயாரிக்கிறேன், என்றவளுக்கு ,யோசிக்காமல் சரி என்கிறார்.
=========000=========
படத்தின் ஒளிப்பதிவு அபாரம்-ஸ்டீவ் அர்னால்ட்,பளிங்கு போல்  சுத்தமான தென் ஆப்பிரிக்காவின் அழகை நவீன கேமரா யுத்திகளுடன் அள்ளி வந்துள்ளார். படத்தின் திரைக்கதையை மனைவி எழுத இயக்கத்தை கணவர் செய்திருக்கிறார். அழகான திட்டமிடலுடன் எடுத்த படம். படத்தின் சில விடயங்களில் எனக்கும் ஏனையோருக்கும் ஒவ்வாமை இருந்தாலும் புக்கர் பரிசு பெற்ற புதினத்தை சிதைக்காமல் அப்படியே படமாக்கியிருக்கின்றனர். இசையும் பிரமாதம்-ஆண்டனி பார்டோஸ். படத்தில்  அப்படி ஒன்றும் கலவிக்காட்சிகள் டீட்டெய்ல்டாக இல்லாவிட்டாலும் டிஸ்டர்ப்டு கண்டண்டுக்காக குடும்பத்தோடு பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.புதினம் கிடைத்தால் அவசியம் வாங்கிப்படிக்கவும்.
 கலைஞர்கள் விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-

Directed by Steve Jacobs
Produced by Steve Jacobs
Anna Maria Monticelli
Emile Sherman
Written by J. M. Coetzee (novel)
Anna Maria Monticelli (screenplay)
Starring Eriq Ebouaney
Jessica Haines
John Malkovich
Music by Antony Partos
Cinematography Steve Arnold
Editing by Alexandre de Franceschi
Release date(s) 2008
Running time 120 min.
Language English
Xhosa
Afrikaans
Zulu
===============
சிறு குறிப்பு:-
இந்த படத்தை பற்றி எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தன் தளத்தில் கசக்கும் காமம் என்னும் பெயரில் எழுதிய விமர்சனம் இன்று   படித்தேன், சுட்டிக்கு நன்றி செ.சரவணகுமார். இதை மிகவும் அருமை என ஒற்றை சம்பிரதாயமான சொல்லுக்குள்  அடக்க முடியவில்லை, தன்னை டேவிட் லூரியாகவே உணர்ந்திருக்கிறார். பைரனின் கவிதை வரிகளை ,பல இடங்களில் அழகாய் உள்வாங்கி மேற்கோள் காட்டியிருக்கிறார்.அவரின் பதிவின் சுட்டி
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (135) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)