துபாய் டு சென்னை ஜெட் ஏர்வேஸ் பயணம்!....:(

போ மாதம் 15ஆம் தேதி 15 நாள் விடுப்பில் சென்னை சென்றேன்,என் நண்பரின் பழிவாங்கும் நடவடிக்கை  தெரியாமல் அவர் ஆலோசனையின் பேரில் ஜெட் ஏர்வேஸில் முதல் முறையாக ரிசர்வ் செய்து பயணித்தேன்,டிக்கட் எமிரேட்ஸ் விமான சேவையை விட வெறும் 100 திர்காம்கள்(1250ரூபாய்) குறைவு, ஜெட் ஏர்வேஸின் உள்ளூர் விமான சேவை எப்படி என அறியேன், ஆனால் "துபாய் டு சென்னை" சர்வதேச விமான சேவை மிகவும் மட்டம் என இந்த பதிவு மூலம் எல்லோருக்கும் சொல்ல விழைகிறேன்..

ஏன் இது போன்ற விமான சேவையில் பயணம் செய்யக்கூடாது?
 1.யணம் செய்யும் நாற்காலிக்கடியிலேயே பயணிகள் பெட்டியை,பையை,வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியிருக்கும். ஆம், முதலில் வருபவர்கள் அப்பா!!!! மேலே பெட்டியை வைத்தாகிவிட்டது என பொருளை அடுக்கியிருக்க, பின்னே வருபவர்கள் பை, பெட்டிகள், விமான பணிப்பெண்களால் அசுரத்தனமாக உங்கள் பொருட்கள் மீது திணித்து அமுக்கப்படும்,அதில் உங்கள் லேப்டாப் ஸ்க்ரீன், நண்பர்களுக்கு வாங்கி செல்லும் ஃபாரின் சரக்கு,சாக்லேட்கள்,ஏனைய  உடையும் பொருட்கள் சேதாரமாகக்கூடும், நீங்கள் பணிப்பெண்களை, (அ) பணிஆண்களை ஆட்சேபிக்கும் பட்சத்தில் உங்கள் உடைமை தரைக்கு வந்துவிடும், உங்கள் காலுக்கடியில் வைத்துக்கொண்டு ஹாய்யாக முடிந்தால் பயணிக்கலாம், என்ன? பாத்ரூம் போக வெளியே வர முடியாது, விமானத்துக்கு ஆபத்து என்றால் வெளியேற முடியாது. தலைவேதனை, பார்க்க படம், இது அங்கே நிதர்சனமாம்.

2.ங்கள் மனைவியையோ,அம்மாவையோ,மகளையோ தனியே இதில் அனுப்பினீர்கள் என்றால் அவர்கள் சர்வ அலட்சியமாக சக ஆண் பயணிகளுடன் மிகச்சிறிய கவர்ச்சி சீட்டில் (மிகவும் சிறியது, குறுகியது) அருகருகே அமர வைக்கப்படுவர், ஆண்களில் சிலர் சாதுவாய் இருப்பர், சிலர், 2 கட்டிங் போட்டு விட்டு லேசாய் உராசுவர், அவர்களை உரசிக்கொண்டு தான் யாரும் வெளியேறவே முடியும்.குழந்தை வைத்திருக்கும் பெற்றோருக்கு எமிரேட்ஸில் கிடைக்கும் சிறப்பு சேவை இங்கே எதிர்பார்க்க வேண்டாம்,டிஷ்யூ பேப்பர் கூட கிடைக்காது.

3.சியால் குளிரெடுத்து நீங்கள் போர்வை கேட்டால் அது கொடுத்து தீர்ந்து போயிருக்கும் (மொத்தமே 20 தான் இருக்கக்கூடும்), அவர்கள் அசடு வழிந்தபடி டோண்ட் ஒர்ரி ஸ்ஸார், “ஐ ராக் டவ்ன் ஏஸி” என்பார்கள், இரண்டாம் முறை தண்ணீர் கேட்டால் ஊருக்கு போய் குடித்துக்கொள்ளலாம், அவ்வளவு லேட்டாய் வரும். சரக்கு முதலில் கேட்கும் கனவானுக்கு  மிகவும்  அளந்து  கொடுக்கப்படும் (தீர்ந்துடுமாம்), இரண்டாம் முறை கேட்டால் தட் இஸ் யெ எம்ப்டி பாட்டில் ஸ்ஸார், என அறிவுறுத்தப்படும்,விடாக்கண்டர்கள் எனக்கு பீராவது கொடு என குடிக்கலாம், இவர்கள் அதிலேயே 2 ப்ராண்ட்களை தருகிறார்கள்.

4.வெஜிடேரியன் உணவோ, நான் வெஜிட்டேரியன் உணவோ அகால வேளை அதாவது 1 மணிக்கு மேல் தான் கிடைக்கும், நீங்கள் முன்பே சாப்பிட்டிருக்க வில்லை என்றால் உங்கள் பாடு திண்டாட்டம் தான். கவலையில்லை நீங்கள் சீட்டுக்கடியிலிருந்து எடுத்து சாப்பிடலாம், வாங்கிப்போன சரக்கையும் குடிக்கலாம்.யாரும் அலட்டிக்கொள்ளமாட்டர்கள்.

5.ரவு11-10 க்கு புறப்பட் வேண்டிய விமானம் 12-30க்கு தான் புறப்படும், அதுவரை பெட்டி வைக்க விமானத்துக்குள்ளேயே அடிபிடி தள்ளு முள்ளு நடக்கும், உங்களை டெர்மினல்-1 விமான நிலையத்திலிருந்து பேருந்தில் ஏற்றி கிளப்பிக் கொண்டு போய் டெர்மினல் -3 ல் இருக்கும் பென்சில் போன்ற இந்த விமானத்தில் ஏற்றும் போதே உங்களுக்கும் உங்கள் குடுமபத்தாருக்கும் தாவு தீர்ந்துவிடும். நீங்கள் முதல் பேருந்தில் போய்விட்டால் தப்பித்தீர்கள், 2ஆம் அல்லது 3ஆம் பேருந்தில் போனீர்கள் என்றால், உங்கள் உடமைகளுக்கு இடமில்லை,அதற்கு தரைடிக்கெட் தான்..

6.டல் பருமனானவர்கள், உயரமானவர்கள் பயணம் செய்ய லாயக்கிலாத நட்டு போல்டுகள் கூட வெளியே தெரியும் சீட்டுகள்(cheap interiors), 2அடி விட்டம் மட்டுமே கொண்ட குறுகிய நடைபாதை. இதே போல சீட்டுகளை நான் திருவள்ளுவரிலும் நேசமணியிலும் பார்த்திருக்கிறேன்.

7.ரமான தரைகொண்ட , கைகழுவ சோப் திரவமில்லாத ,துடைக்க காகிதம் இல்லாத, கழிப்பறைகள். பிஸினஸ் கிளாஸ் இருக்கிறதா என அறியேன்.எனக்கு நினைவில்லை.


என்னடா இவன் குறைகளையே அடுக்குகிறானே,நிறையே இல்லையா?என்றால் இருக்கிறது.

1.யாருக்கெனும் அலுவலகம் 7-00 மணிக்கு முடிந்து வீடு சென்று குளித்து சாவகாசமாய் கிளம்பி, வார இறுதி போக்குவரத்தில் சிக்கி, 15 கிலோக்கணக்காக  ஹாண்ட் பேக்கேஜ்கள் கொண்டு வந்தாலும் வாங்கிக்கொண்டு இவர்கள் விமானத்திற்கு அனுப்பிவைப்பர்.11-10க்கு புறப்படும் விமானத்துக்கு முன் கூட்டியே செக்-இன் செய்ய முடியாது,8-30க்கு தான் செக்கின் கவுண்டரே திறக்கும், அதுவும் தனி கவுண்டர் கிடையாது, ஹைதராபாத்துக்கும் சென்னைக்கும் ஒரே கவுண்டர். 32 கிலோ மட்டுமே ஒரு பெட்டியில் இருக்குமாறு இந்த ரூல்ஸ் ராமானுஜர்கள் சொல்கிறார்கள். ஏர்போர்ட் ஆர்டராம். ஒருவரால் எளிதாய் தூக்கி போட வசதியாக இருக்குமாம்.

2. சாப்பாட்டில் கேரட் தூவிய தயிர் சாதம்,எலுமிச்சை ஊறுகாயும்,சக்கரை பொங்கலும் தருகின்றனர்.

3.இரவு 12-30 க்கு விமானம் புறப்பட்டாலும், தனியார் டவுன் பஸ் போல அடி அடியென அடித்து கொண்டு போய் 5-15க்கு சரியாக போய் விடுகின்றனர்.

4.சிறிய விமானமாதலால் 100 பேரின் லக்கேஜ் மட்டும் தான் கன்வேயரில் சுற்றும்,ஆகவே உங்கள் லக்கேஜ் சீக்கிரம் வந்திருக்கும்,எடுத்துக்கொண்டு கிளம்பலாம்.

டிஸ்கி:-
நான் விமானத்தில் இமிக்ரேஷன் விண்ணப்பம் பூர்த்தி செய்த பொழுது எந்த உள்குத்தும் இல்லாமல் பச்சை மையில் பூர்த்தி செய்து கையொப்பமும் இட்டுள்ளேன்,சரியாக கவுண்டரில் இருந்த கலர் பிளைண்ட்னெஸ் இல்லாத ஆஃபிஸர்,”ஏன் சார் நீங்க என்ன கெஸட்டட் ஆபிசரா?பச்சை மையில் கையெழுத்து போட்டிருக்கீங்க!!! என்று சொல்லி அதை அடித்து நீல மை பேனாவை தள்ளினார்.அதில் கையெழுத்து போட்டபின் முகத்தை திருப்பிக்கொண்டார்.அதுவும் மாறாது,நாமும் மாறமாட்டோம், என்று சிரித்தபடியே தாய்மண்ணில் கால் வைத்தேன். இனி ஆபீஸர் முன்னாடி யாரும் பச்ச மை யூஸ் பண்ணாதீங்கப்பா!!!!

ரும் போதும் ஜெட் ஏர்வேஸ் தான்,அதே விமானம்,ஸ்வாகத் என ஹிந்தியில் எழுதிய போர்டுகள்,என்ன தயிர் சாதத்துக்கு பதில் வெஜிட்டபிள் பிரியாணி.மாலை 6-30 மணிக்கு சரியாக புறப்பட்ட விமானம் 10-30 மணி உள்ளூர் நேரத்துக்கு துபாயில் சென்று சேர்ந்தது.இது முழுக்க முழுக்க என் அனுபவமே,விதிவிலக்குகள் இருக்கலாம்.
===============00000================ 
மிக முக்கிய அறிவிப்பு:-
காசு 100 திர்காம் கூட போனாலும்,எமிரேட்ஸ் போன்ற விமான சேவையில் செல்லுங்கள், அது ஸ்டார் ட்ரக்ஸில் தரக்கட்டுப்பாடு சான்றிதழில்  5க்கு 4 ஸ்டார் வாங்கி இருக்கிறது, அங்கே குழந்தையுடன் செல்லும் பெற்றோருக்கு ராஜமரியாதை தான்.நிறைய பலன்கள் உண்டு. 

மேலும் போகிப் பண்டிகை/அதற்கு முன்நாள் இரவு அன்று விமான பயணம் செய்வதை தவிருங்கள், மூளை கெட்ட கயவர்களால் எல்லாவிதமான குப்பைகளும் கொளுத்தப்பட்டு, வான் மண்டலமே கரு மேக மூட்டமாய் இருப்பதால் ,விமானம் குறைந்தது 6 மணிநேரமாவது தாமதமாகும்,பொங்கல் பண்டிகைக்கு தன் சென்னை வீட்டிற்கு செல்பவர்கள்,கடுப்பாகி பெங்களூரில் உறவினர் வீட்டில் இறங்கிய சம்பவங்கள் நிறைய உண்டு.அது கொடுமையான அனுபவம்,பசிக்கும் வயிறுக்கு காலையில் சாப்பிட எதுவும் கிடைக்காமல் என் நண்பர்களும் அவர் குடும்பத்தாரும் பட்ட அவஸ்தைகளை ஒரு படமாகவே எடுக்கலாம். :)
===============00000================ 

20 comments:

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

நண்பா . . ஜெட் பத்தி நம்ம நண்பர்கள் பல பேரு எச்சரிச்சிருக்காங்க . .ஆனா அது இவ்வலவு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை . . கருமம் !!

இந்தத் தள்ளுமுள்ளு பத்தி நிறையப் படிச்சிருக்கேன் . . அதுல நம்மாட்கள் கெட்டின்னு நினைக்கிறேன் . .

இதைப் படித்தபின், ஒரு வதைமுகாமுக்குள் போய்வந்த உணர்வு மேலிட்டது. இந்தப் பதிவை, நீங்கள் தாராளமாக ஜெட் ஏர்வேஸின் சைட்டுக்கு அனுப்பலாம் . .

இதைப் போன்ற விமானங்களில் பயணம் செய்யும் மக்களை, அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் !

ச.செந்தில்வேலன் சொன்னது…

அனுபவங்களை நன்றாகத் தொகுத்துள்ளீர்கள் கார்த்தி.

இது வரை நான் இந்தியன் ஏர்லைன்ஸில் பயணம் செய்ததில்லை.

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

ஆகா.... இதுவரை எமிரேட்சை தவிர வேறஎதுலயும் போகலை தல... போறநிலைமை வரக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன்....

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கருந்தேள்-ராஜேஷ்
சரியாக சொன்னீர்கள்,இதை அப்படியே அனுப்பலாம்.
வரும்ப்போது விமானத்தில் குறைகேட்பு படிவம் கொடுத்தார்கள்,அதில் எல்லாவற்றையும் கொட்டிவிட்டேன்.என்ன மாற்றம் வருமா?:(
இதில் குழந்தைகள்,வயதானோர்,ஊனமுற்றோர் பயணிக்கவே சாத்தியமில்லை,கடினம்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@செந்தில்வேலன்,
வாங்க நண்பரே,ஜெட் போன்ற தனியார் போக்குவரத்தே இப்படி என்றால்,இந்தியன் ஏர்லைன்ஸ் கேட்கவே வேண்டாம்.நான் முதல் முறை துபாய்க்கு அதில் தான் பயணித்தேன்.மறுமுறை என் அம்மாவின் மறைவுக்கு அதில் தான் அவசர டிக்கட் கிடைத்து பயணித்தேன்.அதுவும் இதுபோல தான்,கால தாமதம் மிக நிதர்சனம்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@நாஞ்சில் பிரதாப்,
ஆமா நண்பா,நண்பர்கள் இந்த அவஸ்தையை படக்கூடாதுன்னு தான் இதை ஒரு மாசம் கழிச்சு பதிவா போடுறேன்.நான் போனா போகுது ரிசெஷன்ல எதுக்கு போட்டு குடுக்கனும்னு பார்த்தேன்.பாதுகாப்புக்கு உலை வைக்கும் இது போல நிறுவனங்களை மக்களுக்கு சொல்லனும்.

ஜெய் சொன்னது…

என்ன கொடும சார் இது.. ஃப்ளைட் ஏதோ 47D பஸ் மாதிரி இருக்கு போல..

Prasanna Rajan சொன்னது…

@ கார்த்திகேயன்

நான் முதல் முறை அமெரிக்கா வந்த போதும், சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சைக்காக இந்தியா போன போதும் ஜெட்டில் தான் பயணித்தேன். என்னை பொறுத்த மட்டில் அத்தனை மோசமில்லை.

சென்னையிலிருந்து இணைப்பு விமானத்திற்காக மும்பை வரை பயணம் செய்த உள்நாட்டு விமானம் கூட நன்றாகத் தான் இருந்தது. நடுவில் ஒரு முறை பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணித்த படு மொக்கையான சர்விஸுக்கு ஜெட் பரவாயில்லை என்று தான் சொல்வேன்.

இருந்தாலும் எமிரேட்ஸிலும், கத்தார், எடிஹாட் உட்பட வளைகுடா விமானங்களில் பயணித்ததில்லை. அதனால் ஒரு வேளை எனக்கு நன்றாக இருந்திருக்கலாம்...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஜெய்
வாங்க ஜெய் ஆமாம் இது ஏசி போட்ட 47D பஸ் தான்:))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@பிரசன்னா,
வாங்க நண்பா,
இது இது முழுக்க முழுக்க என் துபாய் டு சென்னை ஜெட் ஏர்வேஸ் பயண அனுபவமே,விதிவிலக்குகள் இருக்கலாம்.நல்ல வேளையாக மற்ற வழித்தடம் பற்றி அறிய வைத்தீர்கள்,நான் போன விமானம் பென்சில் போல இருந்தது,அதில் எண்டர்டெயின்மெண்ட் இல்லை ,கண்டிப்பாக அமெரிக்காவுக்கு மேலான சேவையை தந்திருப்பதில் ஆச்சரியமே இல்லை,நீண்ட பயணம்,அமெரிக்கா பயணக்கட்டணம் துபாய் கட்டணத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என்பதே காரணிகள் நண்பா,நான் உள்ளூரில் ஏர் சஹாராவில் பயணித்துள்ளேன்,அது நன்றாக இருந்தது.

கனவுகளின் காதலன் சொன்னது…

நண்பரே,

தங்கள் அனுபவங்களை நகைச்சுவை கலந்து நீங்கள் பதிவாயிருக்கும் பாணி அருமையாகவிருக்கிறது. இங்கு ஜெட் ஏர்[ மற்றும் அதைப் போன்ற பிற] சேவைகளில் குடிநீர்கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்:)).

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கனவுகளின் காதலன் ,
வாங்க நண்பரே,உங்கள் கருத்துக்கும் நன்றி,இங்கே ஏர் அரேபியா என ஒரு சேவையில் குடிநீர்,பிஸ்கட்,மது,உணவு எல்லாமே பணம் தந்து வாங்க வேண்டும்,நான் அதில் பயணித்ததில்லை,செவிவழி செய்திதான்.கட்டணமும் அப்படி ஒன்றும் குறைவில்லை,சராசரியை விட 250 திர்காம்கள் குறைவு.என்ன பிரயோசனம்,கூட்டிகழித்து பார்த்தால் அதிகமாக கொடுக்கிறோம்,வேறு வகையில்

ஹாய் அரும்பாவூர் சொன்னது…

அப்போ எந்த விமான சர்வீஸ் நல்லது அதை பற்றி ஒரு பதிவு போடுங்கோ ?
உங்கள் மனக்குமுறல் உண்மையானதே

Joe சொன்னது…

ஆஹா, Jet airways இவ்வளவு கேவலமா இருக்குமா? இந்தியா-ல அவுங்க சர்வீஸ் நல்லாருக்குமே?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

ஹாய் அரும்பாவூர்,
இப்போ அதையும் சொல்லியிருக்கேன் நண்பரே.:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஜோ
ஆமாம் நண்பரே,
அதுதான் அமீரக நண்பர்களை உஷார் செய்யலாம்னு இந்த பதிவு.

ஜோதிஜி சொன்னது…

பத்து வருசமா இன்னும் மாறாமல் இருப்பது ஒரு வேளை பழைமையான பாரத நாட்டு பண்பாடுகளை போற்ற வேண்டும் என்பதற்காக இருக்கலாம் கார்த்திகேயன்????

~~Romeo~~ சொன்னது…

சாரி பாஸ் .. கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் .. நான் இன்னும் பக்கத்துல இருந்து கூட பார்க்கல பாஸ் :(

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

ஆமாம் ஜோதிஜி,
அதேதான்,ஆனால் ஓரவஞ்சனையாக அமெரிக்காவுக்கு நல்ல சேவையை வழங்கிவிட்டு,அரேபியாவுக்கு இப்படி வழங்கினால் சரியா?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க ரோமியோ
அதற்கென்ன பரவாயில்லை,
நலம்தானே?

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)