இன்று விசாரணை படம் பார்த்தேன், மிகுந்த நேர்த்தியான உலக சினிமா, இது எனக்கு இதே போன்ற இதன் முன்னோடி socio-political drama வான 4 month 3 weeks 2 days படத்தின் நேர்த்தியையும் கட்டுக்கோப்பான ஆக்கத்தையும் நினைவு படுத்தியது,
ருமானிய இயக்குனர் Christian Mungiu
வெற்றி மாறன் போன்றே நிறைகுடம், படங்களின் எண்ணிக்கையில் கவனம் வைக்காமல் அவற்றின் தரத்தில் கவனம் கொள்பவர்,
விசாரணை போன்ற ஒரு ஒரு Socio Political Thriller படத்தில் சாதிக் பாட்சா போன்ற ஒரு அரசியல் இடைத்தரகரின் கதை மற்றும் வேளச்சேரி வண்டிக்காரன் தெரு அவசர என்கவுன்டர்களைச் சேர்த்தது மிகுந்த துணிச்சலான செயல், அதற்கே சிறப்பு நன்றி, தவறு யார் செய்திருந்தாலும் ஒரு படைப்பாளி தன் படைப்பின் மூலம் அதை விமர்சிக்க வேண்டும்
இப்படம் சரியாக தேர்தல் நேரத்தில் வந்திருப்பது மிகவும் சிறப்பு, சாதிக் பாட்சா பற்றி நம் அநேகம் பேர் மறந்துவிட்டிருந்த நிலையில் முந்தைய ஆட்சியின் பராக்கிரமத்தையும் நினைவூட்டியது, https://en.m.wikipedia.org/wiki/Sadiq_Batcha
சாதிக் பாட்சா தற்கொலைக்கான காரணத்தை சிபிஐயால் இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை, இதே போன்றே தன் மனைவி குழந்தைகளுடன் கூட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்த அண்ணா நகர் ரமேஷ் என்னும் பினாமி அரசியல் இடைத் தரகர் கதையும் இப்படத்தின் மூலம் நினைவுக்கு வந்தது
http://stopbribe.blogspot.ae/2011/03/blog-post_2145.html?m=1
இந்த ஆட்சியின் துவக்கத்தில் நடந்த 5 வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களின் படுகொலையையும் ஒருங்கே நினைவு படுத்துகிறது,
http://m.thehindu.com/news/cities/chennai/hcs-clean-chit-to-cops-in-velachery-encounter/article4885822.ece
ஒரு கலைஞனின் சமூக அக்கறை, கோபம் , எள்ளல் இப்படித்தான் தன் படைப்பில் வெளியாக வேண்டும், அதை திறம்பட செய்து புதிதாய் வாக்களிக்கப்போகும் இளைய தலைமுறையை யோசிக்க வைத்திருக்கிறார்,இது போன்ற படைப்பை சாத்தியமாக்கிய சென்சாருக்கும் நன்றி, அவரின் அடுத்த படைப்பில் அவரது சமூக அக்கறை இதைவிட இன்னும் வீர்யமாக வெளிப்படும் என நம்புவோம்
எனக்கு வாழ்வில் மிகுந்த பீதியூட்டும் இடங்கள் என்றால் அரசு மருத்துவமனை மார்ச்சுவரியின் ரோலிங் ஷட்டர், உள்ளே அதற்கு அப்பாலிருக்கும் அந்த சிமெண்ட் மேடை, அங்கேயுள்ள சாக்கடை , மார்ச்சுவரி அதை ஒட்டிய காம்பவுண்ட் சுவர் ,
அதன் பின்னர் போலீஸ் ஸ்டேஷனின் முற்றம் , மார்ச்சுவரியில் இறந்த பின்னர் கூறு போடுவார்கள், ஆனால் போலீஸ் ஸ்டேஷனின் பின்னே இருக்கும். முற்றத்தில் உயிருடன் இருக்கையிலேயே கூறு போடுவர்,பல அபலைகள் உருவாகும் இடம் அது,பல நல்ல மனிதர்களையும் குற்றவாளியாக மாற்றும் இடம் சித்ரவதைக் கூடம்,
குற்றவாளி அல்லது விசாரனைக் கைதி உண்மையை ஒப்புக் கொள்ளும் வரை இந்த முற்றத்தில் வைத்துத் தான் உயிர் போவது போல அடிப்பார்கள், அடியால் சாதிக்க முடியாததை பல சமயம் போலீசார் பாலியல் ரீதியான மன உளைச்சல் என உளவியல் ரீதியாக அணுகிக் கூட சாதிப்பர், அதில் இரு விசாரணைக் கைதிகளுக்கிடையே கட்டாய வாய் புணர்ச்சி மற்றும் கட்டாய குதப் புணர்ச்சி சித்ரவதைகள் கூட அரங்கேறும் இடம் காவல் நிலையத்தின் முற்றம்,
இப்படிப் பட்ட முற்றத்தில் தான் அஞ்சாதே படத்தில் அஜ்மல் ஜட்டியுடன் அடி வாங்குவதை நம்பும் படி காட்டியிருப்பார மி்ஷ்கின், விசாரணை படத்தின் காவல் நிலையக் காட்சிகள் நிஜத்துக்கு அருகே பயணிக்கிறது, அதிலும் குறிப்பாக அந்த நடித்துக் காட்டும் படலம் , எத்தனை டார்க் ஹ்யூமர் அதில் பொதிந்திருக்கும்?மற்றும் நிஜமானவர்களோ என நம்பும் படியான போலீஸார் இப்படத்தின் பலம்,
இப்படத்தை 4 Months, 3 Weeks and 2 Days படம் போன்றே பின்னணி இசை இன்றி வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்,படத்தில் நீண்ட ஷாட்கள், எளிமையான கோணங்கள்,நடிகர்களின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு , எளிமையான வசனங்கள், என அபாரமான மினிமலிச முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் வெற்றி மாறன்,
பெரும்பணம் சம்பளமாகப் பெறும் நடிகர்கள் தங்கள் முதலீடுகளை இது போல நேர்த்தியான படைப்புகளின் உருவாக்கத்துக்கு செலவிட்டால் அவர்கள் நல்ல சினிமாவை வளர்த்தது போலவும் ஆயிற்று, தங்கள் வழமையான அசகாய சூர கதாபாத்திரம் ஏற்றுச் செய்யும் குற்ற உணர்விலிருந்து விடுபட்டது போலவும் ஆயிற்று
விசாரணை A gripping and satisfying Film