மல்ஹால்லண்ட் ட்ரைவ்-2001(18+) கனவுகளுக்கில்லை கட்டுப்பாடு


அங்கீகரித்தமைக்கு நன்றி:-
mulholland-driveம் அன்றாட வாழ்வில் தூக்கம் எவ்வளவு தவிர்க்க முடியாததோ ?அதே போல கனவுகளும் தவிர்க்க முடியாததுதான். நீங்கள் கனவு காண்பீர்களா? சரி உங்களைப் பற்றி எனக்கு தெரியாது, எனக்கு கண்ட கனவுகள் முழுதும் நினைவிருக்காது , நான் லீனியராக வரும் , ஆனால் புரிந்து கொள்ள முடியும், காணும் கனவின் கதையோட்டத்தில் உலவும் கதாபாத்திரமாக இப்போது நனவுலகத்தில் இருக்கும் நண்பர்களையும், நெடு நாட்கள்  முன்பு  பழகிய  நண்பர்களையும்  நான் பார்ப்பதுண்டு.
அதில் ஒரு சில கனவுகள் என் உள் மன ஆசைகள் , பயங்கள்  , முன்னர் நடந்த நிகழ்வுகளின் வெளிப்பாடுகளாகவே  இருந்துள்ளன. இதுவரை நான் கண்ட கனவுகள் பலித்ததில்லை. ஆனால் என் இறந்து போன நண்பர்கள் உயிருடன் இருப்பதாகவும் பள்ளியில் முதல் ராங்க் எடுப்பதாகவும் விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பது போலும் மிக்ஸட் அப்பாக கனவுகள் வந்து தொலைக்கிறது.சிறு வயதில் இனிப்புகளையும் பொம்மைகளையும் இப்போது வேண்டாம் விடுங்க. கண்டு வருகிறேன். என்ன பிரயோசனம்?கனவு தானெ?
=====================
ரி இந்த படத்துக்கு வருவோம். முதலில் இயக்குனர் டேவிட் லின்ச்சை பாராட்டிவிடத் தோன்றுகிறது,மேலே நான் எனக்குள் உணர்ந்த விடயத்தை மனிதர் அவருக்குள்ளும் உணர்ந்திருப்பார் போல , கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு என்பார் போல மனிதர் புகுந்து விளையாடியுள்ளார்.இவரை கவுரவிக்க வேண்டும் என்றால் இவர் இயக்கிய அத்தனை படங்களையும் தேடிப்பார்ப்பது தான் சிறந்த வழி.
.===================
ரி படத்தின் கதைச்சுருக்கம்:-
இடம் :-மல்ஹால்லண்ட் ட்ரைவ்

பார்டீவேர் உடை அணிந்த உதவி நடிகை ((Laura Elena Harring) லிமோசினில் பயணிக்க கார் திடீரென நிறுத்தப்படுகிறது, இவள் சுதாரிப்பதற்குள் ட்ரைவரால் துப்பாக்கி முனையில் வெளியேற்றப்படுகிறாள்,அவள் பயத்துடன் இறஙக எத்தனிக்கையில் எதிரே மரணவேகத்தில் வந்த இளம் குடிகார கார் இவர்களின் லிமோசினில் நேருக்கு நேர் மோதி சுழற்றப்பட்டு நொறுங்க, இவள் பேரதிர்ச்சியுடன் வெளிப்படுகிறாள், தோளில் DKNY கைப்பை. பயத்துடன் சரிவில் இறங்கி இன்னொரு சாலை கடந்து உதவிக்காக ஒரு வீடு கண்டு , மனிதர்கள் எதிர்ப்பட செய்வதறியாமல் ஒரு புதருக்குள் ஒளிந்துகொள்ள தலையில் அடிபட்டதால் மயக்கம் வர ,அவளுக்கு கண் இருள்கிறது

காட்சி மாறி:-

ரு போலீஸ் டிடெக்டிவ்கள் கார் விபத்து நடந்த இடத்தை சல்லடை போடுகின்றனர்.அனைவரும் மரணமடைந்திருக்க அங்கு கிடைத்த முத்து தோடுகளை கண்டு விபத்தில் ஒரு பெண் இருந்திருக்கிறாள். ஆனால் தப்பியிருக்கிறாள் என முடிவுக்கு வந்து தேட ஆரம்பிக்கின்றனர்.

காட்சி மாறி:-

வின்கி என்னும் உணவகத்தில் சந்திக்கும்  டேன் என்பவன் ஹெர்ப் என்பவனிடம்  தனக்கு  இந்த உணவகத்தின் பின்னே இருக்கும் கட்டிடத்தின் அருகே அகோர பிசாசு போன்ற உருவம் கண்முன் தோன்றி மறைவதாக  கூறுகிறான்,ஹெர்ப் அது வெறும் மனப்பிராந்தி என தேற்றி வெளியே கூட்டிவர மீண்டும் அந்த அகோர பிசாசு அவன் முன் தோன்ற,இவன் சுருண்டு மயங்கி விழுந்து மூர்ச்சையாகிறான்.
காட்சி மாறி:-
ஒரு அறையில் தனிமையில் இருக்கும் ஒரு சூட் அணிந்த செல்வந்தர் கிழம் இன்னொரு கிழத்துக்கு  போன் செய்து “த கேர்ள் இஸ் ஸ்டில் மிஸ்ஸிங்” என சொல்லி துண்டிக்க, இப்போது அந்த கிழம் இன்னொருவனின் காதுகளுக்கு போன் செய்து “சேம்” என்று சொல்லி துண்டிக்க,அந்த அனானி இன்னொருவனுக்கு போன் செய்ய, எங்கோ ஒரு போன் மணி அடிக்கிறது, அருகே பெரிய ஆஷ் ட்ரே நிறைய சிகரெட் துண்டுகளும் நிரம்பியுள்ளது.
காட்சி மாறி:-
டிபட்டவளுக்கு காலையில் விழிப்பு வர , கனடாவுக்கு அவசரமாக ஷூட்டிங்கிற்கு கிளம்பும் வயதான நடிகை ரூத்’ன் (Maya Bond) திறந்த வீட்டுக்குள் நுழைந்து பதுங்குகிறாள். கதவு மூடப்பட, 
 காட்சி மாறி:-

 பெட்டி எல்ம் என்னும் அழகிய இளம் பெண்ணை அவளின் தாத்தாவும் பாட்டியும் மிகுந்த பாசத்துடனும் வாஞ்சையுடன் தழுவி பெரிய நடிகையாக வாழ்த்தி வழியனுப்பிவிட்டு காரில் அவர்களின் வீட்டுக்கு திரும்புகின்றனர். 
 காட்சி மாறி:-
ததும்பும் அழகுடனும்,ஹாலிவுட் கனவுடனும் பெட்டி எல்ம்ஸ்(Naomi Watts) ஏர்போர்டிலிருந்து டாக்ஸி பிடிக்கிறாள், வீடு வந்ததும் இறங்கியவள் வியப்புடன் தன் சித்தி ரூத்தின் விட்டு வாசலில் நின்று  மேனேஜரின் அறை பொத்தானை அழுத்துகிறாள், அவளை சர்வீஸ் அபார்ட்மெண்டின் மேனேஜர் கொக்கோ(Ann Miller), வரவேற்று அவளின் சித்தி ரூத் எல்லா விஷயமும் சொன்னாள் என்றும் மறு நாள் அவளின் ஒத்திகை இருப்பதாகவும் சொல்லி உற்சாகமூட்டுகிறாள்,கதவை திறந்து விடுகிறாள்.

பெட்டி எல்ம் ஒவ்வொறு அறையாய் நோட்டமிட்டு வியந்து குளியலறை வர ,ஷவர் கர்டனுக்கு உள்ளே நிர்வாணமாய் குளிக்கும் பெண்ணை கண்டு கூச்சம் கொண்டு இவள் மன்னிப்பு கோருகிறாள், தன் சித்தி ரூத் அவளுக்கு ஒரு அறைத்தோழி இருக்கிறாள் என சொல்லவேயில்லை என்கிறாள், அவளின் பெயர் என்ன? என கேட்க அந்த பெண் மருண்டு யோசித்து எதுவும் நினைவுக்கு வராமற்போக அருகே புகைப்படத்திலிருக்கும் பழம்பெரும் நடிகை ரீட்டா ஹேய்வொர்த்தின் படத்தில் ரீட்டா என்னும் பெயரைப்  பார்த்து ரீட்டா என்கிறாள்.  பின்னர் அழுதபடி தனக்கு எல்லாம் மறந்துவிட்டது என உண்மையை ஒத்துக்கொள்கிறாள். தூங்க வேண்டும் போல இருக்கிறது என படுத்துக்கொள்கிறாள்.

ப்போது இருவரும் அந்த DKNYகைப்பையை திறக்க,அதில் 50,000டாலருக்கு பணக்கட்டுகள் மற்றும் நீல வண்ண வினோதமான பிளாஸ்டிக் சாவியும் இருக்கிறது, அதை தொப்பி வைக்கும் பெட்டியில் வைத்து ஒளித்து வைத்து விட்டு புதிரை விடுவிக்க முடிவெடுக்கின்றனர்.
காட்சி மாறி:-
mulholland_drive_0
பிடிவாதமான இளம் திரைப்பட இயக்குனர் ஆடம் கெஷர் (Justin Theroux) தன் ஸ்டுடியோ ஏஜெண்டுடன் தான் எடுக்கும் திரைப்படத்தின் விவாதத்தில் இருக்கும் போது கூடவே அமர்ந்திருந்த இரு தயாரிப்பாளர்களும் அவர்களுடன் இருந்த இரு புதிய முரட்டு ஆசாமிகளில் ஒருவர் குறுக்கிட்டு இந்த படத்தில் இவள் தான் லீட் ரோல் என ஒரு ப்ளாண்டு பெண்ணின் புகைப்படத்தை தூக்கிப்போட. கடுப்பான ஆடம் முறைத்து வெளியேறி, அந்த முரட்டு ஆசாமிகளின் கார் எது? என செக்யூரிடியிடம் கேட்டு அந்த லிமோசினை  தன் கோல்ஃப் மட்டையால் உடைத்து நொறுக்குகிறார்.
பின்னர் தொடைகள் நடுங்க தன் போர்ஷேயில் விரைந்து வீடு செல்ல ,அங்கு தன் படுக்கையில் மனைவி லாரெய்னும்  தன் நீச்சல் குளம் துப்புறவாளன் ஜீனும்  சல்லாபிப்பதை பார்த்து கடுப்பாக , மனைவி இவனை காறி துப்புகிறாள்,குற்ற உணர்வு சிறிதும் கொள்ளாமல் இவனை வெளியேபோ என்கிறாள். 

வன் மனைவியின் பிரியமான நகைப்பெட்டியை கிச்சனுக்குள் கொண்டு போய் அதில் பின்க் வண்ண பெயிண்டை ஊற்ற,பதறி ஓடிவந்து அடிக்கும் மனைவியை கழுத்தை நெரிக்கிறான் ,அப்போது வந்த நீச்சல் குள துப்புரவாளன் இவனை அடித்து துவைத்து வெளியே தள்ளுகிறான். இவன் வெளியேற மீண்டும் அவர்கள் சல்லாபிக்கின்றனர், இப்போது சில அடியாட்களுடன் ஒரு தடியாள் வீட்டுக்கு வந்து ஆடமை கேட்க,இவள் எறிந்து விழ , அவன் மிரட்ட அவள் அவன் மேல் ஏறி பிராண்ட,அவன் அவளை ஒரு குத்து, அவள் கள்ளக்காதலனை ஒரு குத்து குத்தி மூர்ச்சையாக்குகிறான்.

வன் பயந்து நடுங்கி ஊருக்கு வெளியே ஒரு மலிவான லாட்ஜில் சென்று தங்குகிறான்.லாட்ஜ் மேனேஜர் இவனைத்தேடி பேங்க் ஆசாமிகள் இருவர் வந்து இவன் கடன் அட்டை ஓவர்லிமிட்டாகி விட்டதென்றும்,அவன் போண்டி ஆகி விட்டான் என்று சொல்லி மிரட்டி சென்றனர் என சொல்ல,இவனுக்கு போன் செய்த பெண் உதவியாளரும் படம் கைவிடப்பட்டதாய்,ஏஜெண்ட் அறிவித்ததாகவும்,ஷூட்டிங் கேன்ஸல் ஆகிவிட்டதாகவும் எல்லொரும் வெளியேற்றப்பட்டதாகவும்,இவன் போண்டி ஆகி விட்டதாகவும் சொல்ல , மேலும் தாதா கவ்பாய் என்பவன் அவனது தொலைதூர கோட்டைக்கு அவனை தனியே வரவேண்டும் என மிரட்டியதாக சொல்ல, இவனுக்கு வயிற்றை கலக்க நீண்ட ட்ரைவ் செய்து அங்கே செல்கிறான், கவ்பாய் என்பவன்  இவனுக்கு பேசியே பீதியை கிளப்பி விடுகிறான் , சரியான வில்லத்தனம், நமக்கு ஹார்ட் பீட் எகிறுகின்றது. இவனிடம் கவ்பாய் நான் உன்னை மீண்டும் பார்ப்பதும் பார்க்காததும் உன் நடத்தையில் தான் உண்டு, கமிலா ரோட்ஸ் தான் உன் படத்தின் லீட் ரோல் என மந்திரித்து அனுப்ப.இவன் அங்கேயே ஒன்றுக்கு போகாத குறையாக எஸ்கேப் ஆகிறான்.
காட்சி மாறி:- 
ஜோ என்னும் வாடகைக் கொலைகாரன் தனக்கு தெரிந்தவனை ஒரு அட்ரெஸ் புக்குக்காக தலையில் சுட்டுக்கொள்கிறான். அதை தற்கொலையாக ஜோடிக்க நினைத்து ட்ரிக்கரில் கைரேகையை துடைக்க அது இயங்கி தோட்டா வெளிப்பட்டு,ஜிப்சம் சுவரை துளைத்து அடுத்த அறையில் வசிக்கும் சத்துணவு விற்கும் ஒரு தடித்த பெண்ணின் வயிற்றை துளைக்க,அவள் பூச்சி தான் கடித்து விட்டதென அலறி துடிக்க, இவன் அவளின் வாயைப்பொத்த ,அவள் இவனை அடிக்க அவன் மீண்டும் அவளை சுட்டு இழுத்து வந்து இவன் அறையில் போடுகிறான்.அப்போது எதிர்ப்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட துப்புறவுத்தொழிலாளியை இவளுக்கு காயம் பட்டுவிட்டது மருத்துவமனைக்கு கூட்டிபோக உதவுமாறு உள்ளே அழைக்க,அவன் அப்பாவியாய் நுழைய அவனுக்கும் இரண்டு குண்டு.இப்போது சத்தம் போடும் வாக்குவம் க்ளீனரை சுட , பொரி கிளம்பி அபாய மணி ஒலிக்க ,இப்போது அவன் அந்த கருப்பு நிற அட்ரெஸ் புக்கை எடுத்துக்கொண்டு கைரேகையை அழித்துவிட்டு , துப்பாக்கியை அவன் இறந்த நண்பனின்  கையில் திணித்துவிட்டு எஸ்கேப்.வெளியேறியவன் ஒரு லோகல் விலைமாதுவிடம் புதிதாக யாராவது அழகிய இளம்பெண்ணை விபத்து காயங்களுடன் பார்த்தாயா?அப்படி பார்த்தால் எனக்கு தகவல் கொடு என சொல்லி அகல்கிறான்.

காட்சி மாறி:-

ப்போது ரீட்டாவும் பெட்டி எல்மும் திக் ஃப்ரெண்ட்ஸாகிவிட, கதவு தட்டப்பட, வெளியே ஒரு நட்டு கழண்ட கிழவி,கதவை திறந்த ரீட்டாவிடம் உங்களுக்கு ஆபத்து வரப்போகிறது என எச்சரிக்க,இவள் குழம்புவதற்குள் கொக்கோ அங்கு வந்து அவளை கூட்டிச்செல்கிறாள்.கொக்கோவிடம் உள்ளே வேறு யாரோ இருப்பதாகச் சொல்கிறாள்.இப்போது ரூத் அறைக்கு போன் செய்து நீ உடனே ரீட்டாவை வெளியேற்று என எச்சரிக்கிறாள்,இவள் இன்னும் இரு தினங்களில் அவளே போய்விடுவாள் என உறுதியளிக்கிறாள்.வெளியே இருந்த கொக்கோவும் அவளை எச்சரித்து விட்டு மறு நாள் இவள் நடிப்பு ஒத்திகையின் போது பேச வேண்டிய வசனங்கள் கொண்ட பேப்பர்கள் ஃபாக்ஸ் வந்ததாகச் சொல்லி கொடுத்துவிட்டு அகல்கிறாள். இவர்கள் இருவரும் அந்த வசனங்களை பேசிக்கொண்டு சிரித்து மகிழ்கின்றனர்,

று நாள் ஸ்டுடியோவில் இவள்  நடிப்பு ஒத்திகையில் பிரமாதமாக  உணர்ச்சிபிழம்பாய்  நடித்துக்காட்ட, இவளை ஏஜெண்ட் மற்றும் தயாரிப்பாளர், மூத்த நடிகர் எல்லோருக்கும் பிடித்துப்போய் பாராட்டுகின்றனர்,அப்போது வெளியே செட்டில் லீட் ரோலுக்கு தேர்வு செய்து கொண்டிருக்கும் ஆடம் கெஷர் (Justin Theroux) முன்  கமில்லா ரோட்ஸ் என்னும்  புதிய முக நடிகை   பாடிக் காட்ட  கவ்பாய்க்கு பயந்து இவன் ,இவள் தான் என் படத்தின் லீட் ரோல் என்கிறான்.

ப்போது மிகவும் ஆனந்தத்துடன் பெட்டி எல்ம் யாருக்கும் தெரிவிக்காமல் அங்கிருந்து வீட்டுக்கு விரைகிறாள்.   பெட்டி எல்ம் ரீட்டாவை விபத்து நடந்த பகுதிக்கு அருகே இருக்கும் ஒரு ரெஸ்டாரண்டிற்கு கூட்டிச் செல்ல,அங்கே அவள் ஒரு பணிப்பெண் டயான் செல்வின் என்னும் பேட்ஜ் அணிந்திருப்பதை கண்டு இவளுக்கு அந்த பெயர் பரிச்சயமாய் உள்ளது என வீட்டுக்கு வந்து டெலிபோன் டைரக்டரியில் தேட எண் கிடைக்கிறது,அங்கே செல்ல டைரக்டரியில் இருந்த வீட்டு எண்ணில் வின்னி என்னும் வேறு ஒரு பெண் இருக்க, இவர்களிடம் அவள் டயான் செல்வின் பற்றி குறை கூறுகிறாள். அவள் இப்போது 17 ஆம் எண் கொண்ட அபார்ட்மெண்டில் வசிக்கிறாள் என சொல்கிறாள்.

தன் பொருட்கள் அவளிடம் இருப்பதாகவும்,அவளை சிறிது நாட்களாக காணவில்லை எனவும் சொல்ல, இவர்கள் அந்த அபார்ட்மெண்ட்டுக்கு விரைகின்றனர். ஜன்னலேறி குதித்து உள்ளே நுழைந்த அவர்கள் அழுகிய இளம்பெண்ணின் பிரேதத்தையும் கொடிய நாற்றத்தையும் ஒரு சேர அனுபவித்துவிட்டு வீட்டுக்கு ஓடுகின்றனர்.

ப்போது மிகவும் பயந்துபோன ரீட்டா தான் டயான் செல்வின் போல இருப்பதாகவும் , தன்னையும் கொலைகாரர்கள் துரத்தி வரக்கூடும் என்றும் பயந்து போய் தன் அழகிய முடியை வெட்டிக்கொள்ள எத்தனிக்க,இளம்  நடிகையான பெட்டி எல்ம் இவளை தடுத்து ப்ளாண்ட் விக்கை அணிவிக்கிறாள், அன்று இரவே இருவரும் எதிர்பாராத விதமாக தீண்டப்பட்டு உணர்ச்சி கொந்தளிக்க லெஸ்பியன் உறவு கொள்கின்றனர்.அப்போது உணர்ச்சி மேலிட இவள் ரீட்டாவிடம் ஐ லவ் யூ என சொல்கிறாள். ரீட்டாவும் மறுதலிக்கவில்லை.

டு நிசியில் திடுக்கிட்டு விழித்த ரீட்டா ஸ்பானிஷில் பிதற்றுகிறாள், அப்போது சிலன்ஸியோ என்பது மட்டும் பெட்டிக்கு விளங்க அவள் ஸ்பானிஷ் நைட் பார் ஆன சிலன்ஸியோவுக்கு கூட்டிச்செல்ல,இப்போது  ரீட்டா பெட்டியின் விக்கை அணிந்து பெட்டி எல்ம் போலவே தோற்றமளிக்க  , உச்சஸ்தாயியில் கச்சேரி நடக்க,கண்ணீருடன் எல்லோரும் கரகோஷம் எழுப்ப,இவள் அப்போது ரீட்டாவின் DKNYகைப்பையை மீண்டும் திறந்து பார்க்க உள்ளே ஒரு நீல நிற நகைப்பெட்டி போல ஒன்று இவளை பார்த்து சிரிக்க,அவர்கள் ஆவலை அடக்க முடியாமல் வீட்டுக்கு சென்று படுக்கை அறைக்குள் நுழைய,பெட்டி எல்மை  காணவில்லை, 

ரீட்டா தொப்பி வைக்கும் பெட்டியில் இருந்து நீல சாவியை எடுத்து அந்த சிறிய பெட்டியை திறக்க , அது திறந்து கொள்ள காலியாக இருக்கிறது, அந்த அதிர்ச்சியில் ரீட்டா உறைகிறாள், தொப்பென்று பெட்டியை கீழே போட்டுவிட்டு இவள் அருகே விழுகிறாள், இப்போது பெட்டி எல்மின்  சித்தி ரூத் சத்தம் கேட்டு வந்து எட்டிப்பார்க்கிறாள்.  இப்போது அந்த மேப்படியான் கவ்பாய்  இவளை சத்தம் போட்டு எழுப்பி தூங்கியது போதும் எழுந்திரு என்கிறான்.
  • இதை பொறுமையாக படித்திருந்தால் உங்களுக்கு மனதில் பல கேள்விகள் இழையோடும்

  • என்ன நடக்குது இங்கே?

  • இதில் யார் ரீட்டா? யார் பெட்டி எல்ம்?

  • யார் அந்த ஜோ?யார் அந்த கொக்கோ?யார் அந்த ரூத்?யார் அந்த முரட்டு ஆசாமிகள்?எதற்கு தொடர்ச்சியான கொலைகள்?

  • இன்ன பிற கேள்விகளுக்கு பதில் வேண்டுவோர் மேலே நான் சொன்ன கனவுகள் பற்றிய கோட்பாடுகளை ஒரு முறை சிந்திக்க வேண்டுகிறேன், நான் லீனியர் என்றாலே சிக்கல் இதில் இடியாப்ப சிக்கலாக பல குழப்பமான கதாபாத்திரங்களும் சம்பவங்களும் நம்மை பலவாறு சிந்திக்க வைக்கின்றன,இதில் எந்த இடத்திலும் தொய்வில்லாத காட்சியமைப்புகளும் திரைக்கதையும் நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கின்றன.

  • நான் பெற்ற பரவசங்கள் நீங்களும் பெற உடனே டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!

==================================
==================================
காட்சி மாறி:-
யான் செல்வின் (Naomi Watts)  இப்போது படுக்கையில் இருந்து களைப்புடன் எழுந்திருக்கிறாள், அவள் கண்ட கனவில் அவளுக்கு பெட்டி எல்ம் என பெயர் இருந்தது குறித்து வினோதமான உணர்வு கொள்கிறாள், இப்போது கமில்லா ரோட்ஸ் டயானுடன் கிச்சனில்  அருகே நிற்க ,இவள் அவளைப்பார்த்து வந்து விட்டாயா? எனக்கேட்க, அவள் காபி மேக்கரில் டிகாஷனுக்கு தயார் செய்கிறாள்.  எல்லாம் சிறிது நேரத்திற்கு தான்,அந்த மனப்பிராந்தியும் தெளிந்து அவள் உருவமும் மறைகிறது.தன்னை தேற்றிக்கொள்கிறாள்,காதல் தோல்வியால் பீடிக்கப்பட்டவள் போல சோகம் கொள்கிறாள்.சுயபச்சாதாபத்தில் திளைக்கிறாள். பின்னர் அழுது கொண்டே சுயமைதுனம் செய்கிறாள்.
காட்சி மாறி:- 
யான் செல்வினும் கமீல்லா ரோட்ஸும் புதுமுக நடிப்புத்தேர்வில் ஸ்டுடியோ செட்டுக்கு  வந்து பின்னர் தோழமை கொண்டு பின்னர் காதலராகியுள்ளனர். ஒரு முக்கிய படத்தின் லீட் ரோல் டயானுக்கு கிடைக்க வேண்டியது பெரியமனிதரின் சிபாரிசினால் அது கை நழுவிப்போய் கமீல்லா ரோட்ஸுக்கு கிடைத்துவிட, இவளுக்கு நடிப்பை விட காதலே பெரிதாய் இருந்தமையால் அவளை இன்னும் அதிகம் காதலிக்கத் துவங்குகிறாள்,கமீல்லா ரோட்ஸ் டயானுக்கு சிறிய சிரிய ரோல்களை சிபாரிசு செய்து வாங்கித்தருகிறாள்.

ப்படி ஒரு நாள் இவர்கள் அபார்ட்மெண்டில் லெஸ்பியன் உறவு கொள்கையில், gay ரிலேஷன்ஷிப்பில் அலுப்படைந்த கமீல்லா ரோட்ஸ் இவளிடம்,இனி இது போன்ற உறவு வேண்டாம் என சொல்லி துண்டிக்கப்பார்க்கிறாள்,டயான் மிக ஆவேசமாக இன்னொரு முறை அது போல சொல்லாதே என்கிறாள். டயானுக்கு இன்னுமொரு தலைவலியாக கமீல்லா ரோட்ஸ் இயக்குனர் ஆடம் கெஷர் (Justin Theroux) உடனான காதலை தீவிரமாக வளர்த்துக்கொள்ள, இவளுக்கு காதல் வயிறு பற்றி எரிகிறது.

தற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல டயான் செல்வின் கண்ட அவமானம் அவளை பழிவாங்கும்,அரக்கத்தனத்திற்கு தள்ளியது. இவள் படத்தின் ஷூட்டிங் முடிந்து வீடு திரும்ப  இவளுக்கு கமீல்லா ரோட்ஸ் போன் செய்கிறாள், அவளை  6980,மல்ஹால்லண்ட் ட்ரைவ் உடனே வர சொல்கிறாள், வெளியே கார் நிற்கிறது என்கிறாள். வழியில் இவளின் லிமோசின் நிறுத்தப்பட்டு, அங்கு கமீல்லா ரோட்ஸ் எதிர்ப்படுகிறாள்.

குறுக்கு வழியில் உனக்கு ஒரு ஆச்சரியம் இருக்கு , வா என்னுடன்  என புதர் வழியாக கைப்பிடித்து கூட்டிப்போய்  மல்ஹால்லண்ட் ட்ரைவில் உள்ள இயக்குனர் ஆடம் கெஷர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே ஒரு பெரிய இரவு உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, எல்லா திரைபிரபலங்களும் அங்கு ஆஜர், 

வள் கனவில் கண்ட சித்தியின் அபார்ட்மெண்ட் மேனேஜர் கொகோ  இயக்குனருக்கு அம்மாவாக அங்கு இருக்க, இவளை அவள் இன்முகத்துடன் வரவேற்கிறாள். இவள் இன்னமும் ஆச்சரியம் விலகாமல் விழிக்கிறாள்,  

ரவு உணவு மேசையில் எல்லோரும் அமர்ந்திருக்க இவள் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறாள், தன் சித்தி இறந்தபின்னர் அவர் விட்டுச்சென்ற பணமும்,அவளின் அபார்ட்மெண்டும்,கிடைக்கும் சிறிய ரோல்களும் தனக்கு வாழ்வை நடத்த போதுமானதாய் இருப்பதாக சொல்கிறாள்.


ப்போது இயக்குனர் ஆடம் சிரித்துக்கொண்டே எனக்கு நீச்சல் குளம் திரும்ப கிடைத்தது,என் முன்னாள் மனைவிக்கு நீச்சல் குள க்ளீனர் கிடைத்தான் ,கடைசியில் என் விவாகரத்துக்கு ஜட்ஜுக்கு ரோல்ஸ் ராய்ஸ் வாங்கி தர வேண்டி இருக்குமோ என பயந்தேன் என்கிறான். அப்போது கமீல்லா ரோட்ஸின் காதில் இன்னொரு அழகிய இளம்பெண் கிசுகிசுக்கிறாள், பின்னர் உதட்டிலும் முத்தம் கொடுத்து விட்டு அகல்கிறாள்.இவளுக்கு வயிறு எரியத் தொடங்குகிறது.கமீல்லாவை கண்களால் எரிக்கத் துவங்குகிறாள்.

ப்போது அங்கு கமீல்லா ரோட்ஸும் இயக்குனர் ஆடம் கெஷரும் நீ சொல்லு , நீ சொல்லு  என  புதிர் போட ,ஒருவழியாக ஆடம் நானும் கமீல்லாவும் என ஆரம்பித்து  வாக்கியத்தை முடிக்காமல் அணைத்துக்கொள்ள உதட்டு முத்த கச்சேரி நடக்கிறது, இவள் அவமானம் தாங்காமல் கூனிக்குறுகி வீட்டுக்கு விருட்டென ஓடி வருகிறாள்.

மேலே சொன்ன வாடகைக் கொலைகாரன் ஜோவை கமீல்லாவை கொலை செய்ய ஆயிர்க்கணக்கான டாலர்கள் கொடுத்து கொலை செய்ய அமர்த்துகிறாள், போட்டோவை தருகிறாள், அப்போது வந்த பெட்டி என்னும் வின்கி உணவக பணிப்பெண் இவளைப்பார்த்து புன் முறுவலிக்கிறாள், மிகவும் ப்ரொஃபெஷனலான அந்த ஜோ , டிடெக்டிவ்களின் சந்தேகப் பார்வையிலிருந்து இருவரும் தப்ப தொலைபேசியிலோ? நேரிலோ பேசாமல்  நீல பெட்டி மற்றும் நீல சாவியை கொலை முடிந்ததும் டயானின் வீட்டில் படுக்கையறை டீப்பாயில் வைக்கும்  ஐடியாவை கொடுக்கிறான்.

தே போலவே கமீல்லா ரோட்ஸை கொன்றுவிட்டு சாவியை மேசை மீது வைத்துவிட்டு போயிருக்க, கதவு பலமாக தட்டப்படுகிறது, இவள் நீண்ட தட்டலுக்கு பிறகு எழுந்து போய் கதவை திறக்க அங்கே வாசலில் இவளின் பழைய அறைத்தோழியும் மேலே இவளைப்பற்றி ரீட்டாவிடம் கனவில் குறை சொன்ன வின்னி என்பவள் எதிர்ப்பட்டு அவளின் ஆஷ் ட்ரே,மற்றும் பாத்திரங்கள், மேசை விளக்கு போன்ற பொருட்களை எடுத்துச்செல்ல வந்தேன் என மிரட்டல் தொனியில் சொல்லிவிட்டு தனது பொருட்களை எடுத்துக்கொள்ள, இவள் அப்போது தான் டீப்பாயில் வைக்கப்பட்ட நீல நிற சாவியைப்பார்க்க இவளுக்கு குமட்டுகிறது, வின்னி மேலும் இவள் வீட்டில் இல்லாத போது இரண்டு டிடெக்டிவ்கள் இவளைத்தேடி வந்தனர் என்றும் சொல்லிவிட்டு வெறுப்புடன் அகல,

வளுக்கு கால்கள் தடதடக்கின்றன, இவளின் கதவு பலமாக தட்டப்பட, சிரிப்பொலி கேட்க, கதவிடுக்கு வழியே மேலே முதல் பகுதியில் கனவில் வந்துபோன இவளை ஏர்போர்டில் ட்ராப் செய்த வயதான ஆதர்ச கணவன் மனைவியான தாத்தாவும் பாட்டியும்  நேரில் வந்து சிரித்துக்கொண்டே இவளை படுக்கைக்கு துரத்திப் போகின்றனர். யாரும் செய்யத்துணியாத கொலைபாதகத்தை தான் செய்ததை எண்ணி வெட்கி தலைகுனிந்து மேசை அறையிலிருந்து துப்பாக்கியை எடுத்து வாயில் திணித்து சுட்டுக்கொண்டு தோட்டாவை மூளைக்குள் வாங்கி உயிர்விடுகிறாள், எங்கும் புகைப்படலம்.இப்பொது முன்பு ஸ்பானிஷ் பாரில் வந்து பாடிய பாடகி  சைலன்சியோ என சொல்கிறாள். பட்ம் முடிகிறது, இது சத்தியமாக கனவு இல்லை.
 =================================
டிஸ்கி:-
ஹாலிவுட் பாலா 18+எழுதியதில் அனேக படங்கள் டவுன்லோடு செய்தேன்,அதில சில எனக்கு பிடித்தன , சில எனக்கு பிடிக்கவில்லை , பிடித்ததில் இது ஒரு முத்து.படம் பார்தவுடன் எதோ பஸ்ஸீள் ஆடுவதைபோல உணர்ந்தேன். ஆங்கிலப்படத்தில் நான் லீனியர் காதலர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ரொமான்ஸ் த்ரில்லர். ஒர்த்தி வாட்ச்,இந்த படத்தின் சுவாரஸ்யத்தில் ஒன்று இயக்குனர் ஒவ்வொரு காட்சியிலும் மறைமுகமாக கீழே கேட்டிருக்கும் பத்து கேள்விகளுக்கான பதிலை வைத்தது தான். இது கண்டிப்பாக திரைப்படக்கல்லூரியில் பாடமாக வைக்க வேண்டிய படமே.

இந்த படத்தின் நடிகர்கள், டெக்னீஷியன்களை அறிய சொடுக்கவும்
 =================================
யக்குனர் லின்ச்சின் தினாவெட்டான 10 கேள்விகள் (நேரம் ஆகி விட்டமையால் ஆங்கிலத்திலேயே) நாளை இதற்கு முடிந்தவரை மொழி பெயர்ப்பும், தெரிந்த வரை பதில்களும்:-

1. Pay particular attention in the beginning of the film: At least two clues are revealed before the credits.
2. Notice appearances of the red lampshade.
3. Can you hear the title of the film that Adam Kesher is auditioning actresses for? Is it mentioned again?
4. An accident is a terrible event — notice the location of the accident.
5. Who gives a key, and why?
6. Notice the robe, the ashtray, the coffee cup.
7. What is felt, realized, and gathered at the Club Silencio?
8. Did talent alone help Camilla?
9. Note the occurrences surrounding the man behind Winkie's.
10. Where is Aunt Ruth?

34 comments:

கோபிநாத் சொன்னது…

அண்ணே ஓட்டு போட்டாச்சி ;))

கோபிநாத் சொன்னது…

தல, படத்தை பிரிச்சு மேய்ஞ்சிரிக்கிங்க. டைரக்டர் கூட இவ்வளவு எளிமையா ஸ்க்ரிப்ட் வச்சிருக்கமாட்டாரு போல.. சூப்பர் விமர்சனம்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஹோலி மோலி!!!!!!!!!

தல... ஒரு வாரம் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்... இதை டைப் பண்ணி முடிக்க!! :) kudos!!! :) :) :)

இதை விட தெளிவா.. இந்தப் படத்தை இன்னும் விளக்கி எழுத முடியாதுன்னு நினைக்கிறேன்.

ஆனாலும்... படத்தில் நிறைய விஷயங்கள்.. நாமே யூகிக்கிற மாதிரி இருக்கறனால... நீங்க நினைச்ச மாதிரியே.. (ஒரு சில காட்சிகளை) நான் நினைக்கலை. இது சாம்பிள்.

////////////அங்கு கமீல்லா ரோட்ஸும் இயக்குனர் ஆடம் கெஷரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டு நிச்சயம் நடக்கிறது, /////////

அந்த பார்ட்டியில்... அவங்க ரெண்டு பேரும்... அதை வெளிப்படையா சொல்ல மாட்டாங்க. ஆடம் 1-2 தடவை அதை சொல்ல ஆரம்பித்து.. அப்புறம் முத்தம் கொடுத்துக்க ஆரம்பிச்சிடுவாங்க.

நிச்சயதார்த்தம் நடந்த மாதிரி காட்ட மாட்டாங்க.

---

ஆனாலும்.. இவ்வளவு காம்ப்ளக்ஸான கதையை முழுசா.. சொல்லத் துணிந்ததுக்கே.... ஒரு சல்யூட்!!!!

--

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஒரேயொரு குறை... நீங்க ‘கனவு’-ன்னே ஆரம்பிச்சி... இதெல்லாம் ‘கனவு’-ன்னு சொல்லி படத்தின் சஸ்பென்ஸை சொல்லிட்டீங்களோன்னு நினைக்கிறேன். அதை தவிர்த்திருந்தா... புதுசா படம் பார்க்கறவங்களுக்கு..... கொஞ்ச நேரம் மூளைக்கு வேலை கொடுத்திருக்கும்!! :)

ஹாலிவுட் பாலா சொன்னது…

என்ன.. எல்லோரும் திடீர்ன்னு இந்தப் படத்துக்கு எழுத ஆரம்பிச்சிட்டீங்க? 2 நாள் முன்னாடிதான் மச்சான்ஸ் சிவன் இதே படத்துக்கு எழுதியிருந்தார்.
----

யப்பா.. எனக்கு ரெண்டு பதிவு மிச்சம்! :) :)

ஜோதிஜி சொன்னது…

ராஜா ஏன் எழுத்து அளவை சுருக்கி விட்டீர்கள்?

உங்களுடைய எழுத்துக்களை புத்தகமாக கொண்டு வர மறக்காதீர்கள். ஆவணம் போல் ஒவ்வொரு பதிவும் இருக்கிறது.

தமிழ் திரைப்பட உலகில் ஆனந்தன் என்பவர் இல்லாவிட்டால் பல புள்ளி விபரங்கள், படங்கள் நமக்கு இன்று கிடைத்து இருக்காது.

அதுபோல் ஹாலிவுட் பாலா போல உங்கள் இந்த பங்களிப்பும் எதிர்காலத்தில் பலருக்கும் உதவியாய் இருக்கும். இன்று காலையில் இந்த வரியைப் பார்த்ததும் பல நடந்து கொண்டுருக்கும் நிகழ்வுகள் மனதில் ஓடியது.

ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

ஹாலிவுட் பாலா சொன்னது…

தல, இதுவரை.. எந்த ஜிடாக் ரெக்வஸ்ட்டும் வரலைங்களே???

பின்னோக்கி சொன்னது…

//விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பது போலும்

என்ன தெகிரியம் உங்களுக்கு. பாராட்டுக்கள். ஆனா உங்க நேர்மை புடிச்சுருக்கு

இந்த படம் பல தடவை பார்க்கலாம வேண்டாமா ? பார்த்தாலும் புரியாது என்று பலர் சொல்லியதால் இதுவரை பார்க்காத படம். உங்கள் விமர்சனத்தை படித்துவிட்டு, பார்க்கலாம் என நினைக்கிறேன். புரிந்தால் மறுபடியும் வந்து பின்னூட்டமிடுகிறேன்.

கலையரசன் சொன்னது…

கார்த்தி.. ஏன் எழுத்து அளவை சுருக்கி விட்டீர்கள்? விரியுங்கள்...

ஓட்டு, அனவுன்ஸ்மன்ட், கேன்வர்சிங் எல்லாம் பண்ணியாச்சு பாஸூ..

கண்ணா.. சொன்னது…

தல பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்க...

வழக்கமா எனக்கு இது போன்ற படங்களை பார்க்க அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால் உங்கள் விமர்சனத்தை படித்த உடன் பார்க்க தோன்றுகிறது. பார்த்து விட்டு வருகிறேன்.

பேசிக்கலி நான் ரொம்ப சோம்பேறி...ஸோ இதை பார்த்துட்டு வர்றதுக்கு ஓரு வருசம் கூட ஆகலாம்.
ஆனா கண்டிப்பா பாத்துருவேன்..

:)

எழுத்து அளவு...முடியல...:))

சிவன். சொன்னது…

கீதப்ப்ரியன்.....இவ்வளவு நீள விமர்சனம் வாய்ப்பே இல்லீங்க...கம்ப்ளீட் திரைக்கதையையே எழுதீட்டீங்களே...நல்லா இருக்கு...

//ஹாலிவுட் பாலா சொன்னது…
ஒரேயொரு குறை... நீங்க ‘கனவு’-ன்னே ஆரம்பிச்சி... இதெல்லாம் ‘கனவு’-ன்னு சொல்லி படத்தின் சஸ்பென்ஸை சொல்லிட்டீங்களோன்னு நினைக்கிறேன். அதை தவிர்த்திருந்தா.//

எனக்கும் அதே வருத்தம்தான்...சொல்லாமல் இருந்திருக்கலாம்...

Romeoboy சொன்னது…

தல படிச்சி மண்டை காஞ்சிடுச்சு. படத்த பார்த்தான் புரியும் போல

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமை நண்பர் கார்த்திக்கேயன்..
நீங்கள் கொடுக்கும் துல்லியமான தகவல்கள் மிக அருமை. தொடர்ந்து உங்கள் கலெகஷனில் உள்ள படங்களைப் பற்றி எழுதுங்கள் நண்பா.
ஓட்டுப் போட்டாச்சு.

வினோத்கெளதம் சொன்னது…

வழக்கம்போல் Title card-End card பாணி
விமர்சனம் அருமை..குரு Font size ரொம்ப சின்னதா தெரியுது..

//ஹோலி மோலி!!//

இது எதோ Hollywood பக்கம் சொல்லுற
கெட்ட வார்த்தை மாதிரி தெரியுது..!! :)

henry J சொன்னது…

தினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமைத்தம்பி கோபிநாத்
வெல்கம் பேக்,பாஸ்போர்ட் ரெடி தானே?
இல்லாட்டி திரும்பி போய்டு அப்புடியே.
மிஸ்ஸாச்சுன்னா கொலைவெறி ஆயிடுவோம்
=========================================
அருமை நண்பர் அட்லாண்டா கோபிநாத்
வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி
=========================================
அருமை தல ஹாலி பாலி
வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி தல
இதுக்கு ஒரே நாள் தான் எடுத்தது,
குடோஸ்ற்கு நன்றிகள் பல.
தல ஒரு ஃப்லோல எழுதிட்டேன் தல.
ஒன்னும் மிஸ் பண்ணக்கூடாதுன்னு பதட்டம் வேற.
---------------------------------------------------------------------------------
தல அந்த கனவு மேட்டர் தவிர்க்கமுடியவில்லை
ஆர்வக்கோளாறு தான் காரணம் தல.
---------------------------------------------------------------------------------
ஹோலீ கவ் மெடீரியல் இது தல,மிகவும் ஆசைப்பட்டு எழுதியது
மச்சான்ஸ் எழுதிய பதிவும் இன்று தான் பார்த்தேன்.
நீங்களும் லின்ச்சை பற்றி நிறைய எழுதுங்க தல,
=========================================

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹாலிவுட் பாலா
தல மீண்டும் ரிக்வஸ்ட் அனுப்பறேன்.
==================================
அருமை ஜோதிஜி,
பதிவு மிகவும் பெரியதாக ஆகும் அபாயம்
இருந்தமையால் எழுத்தை சுருக்கிவிட்டேன்.
உங்கள் அன்புக்கும் நல்வார்த்தைகளுக்கும்
மிக்க நன்றிகள். இதை பின்னொரு சமயம்
கண்டிப்பாக புத்தகமாக வெளியிடுகிறேன்.
ஆனால் இங்கு எடுத்து எழுதும் விடயங்கள்
சினிமாவும் இன்னொருவரின் கதையும் ஆகும்.
ஆகவே யோசிக்க வேண்டும்.

ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
உண்மை தான்;-
வேதம் ஓதுவதைவிட ஒழுக்கமே சிறந்ததாகும்.

==================================
அருமை நண்பர் பின்னோக்கி
முழுதாய் படித்து கையும் களவுமாய்
பிடித்ததற்கு மிக்க நன்றி. நாங்க எப்போதும்
இப்புடித்தான் நண்பரே.படம் கண்டிப்பாக
பாருங்க.
==================================
அருமை கலை மாப்பி,
உன் அட்வைஸ் கேட்க வேண்டி வரும்
அபாயம் இருந்தமையால் நானே எழுத்தை
சுருக்கிவிட்டேன். ஓட்டுக்கும் இதர சர்வீஸுகளுக்கும்
நன்றிடாப்பா.
==================================
அருமை நண்பர் கண்ணா,
படம் கண்டிபாக பார்த்துவிட்டு சொல்லுங்க,
எழுத்தளவை பெரிதாக்கிவிட்டேன், பாருங்க
பாஸ், உங்க மொபைல் எண் அனுப்பவும்.
==================================

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க சிவன் மச்சான்ஸ்.
உங்க முதல் வருகைக்கு மிக்க நன்றி பாஸ்,உங்க
பதிவும் பார்த்தேன்,ஷார்ட் அண்ட் ஸ்வீட்.
அடிக்கடி பதிவுகளில் சந்திப்போம்.
நீங்களும் அந்த பத்து கேள்விகளுக்கு விடை
எழுதுங்க மச்சான்ஸ்.
===============================
வாங்க அருமை நண்பர் ராஜராஜன்
அமைதியான ஒரு இரவில் இதை
கண்டிப்பாக பார்க்கவும், இது கலை என உணர்வீர்கள்.
===============================
வாங்க அருமை நண்பர் சரவணகுமார்,
உங்க அன்புக்கு மிக்க நன்றிகள், உங்க ஊக்கமும்
எனக்கு இன்ரியமையாதது. கண்டிப்பாக எழுதுகிறன்.
===============================

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@வினோத் கௌதம்.
வா குரு ஹோலி மோலி என்பது
ஒரு செலிப்ரிடிக்களின் கிசுகிசு வலைத்தளமாம்,
http://www.holymoly.com
http://en.wikipedia.org/wiki/Holy_Moly
உன் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
ரூம் மாறிய பிறகு ஷார்ஜா வர வேண்டும்.
வருகைக்கு நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹென்றி
வருகைக்கும் இலவச சம்பாத்திய ஆலோசனைக்கும் மிக்க நன்றி, நேரம் கிடைக்கையில் சோதிக்கிறேன்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

அடப்பாவிகள... ஹோலி மோலியை கூடவா ஆராய்ச்சிப் பண்ணுவீங்க?! :) :) :)

---

ச.செந்தில்வேலன் சொன்னது…

கார்த்திகேயன். திரைவிமர்சனம் செய்வதை ரசித்து அனுபவித்து செய்கிறீர்கள். உங்கள் எழுத்து படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.

தொடருங்கள் உங்கள் சேவையை :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹாலி பாலி
வாங்க தல, கூகில்ல அம்மாவையே தேடுறோம் இதை ஹோலி மோலியை தேட மாட்டோமா?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் செந்தில்வேலன்,
நீங்க வந்து ஏதாவது சொன்னால் தான் பதிவே தன்னிறைவு பெறுகிறது, வருகைக்கு நன்றி

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

//ஹோலி மோலி//
ஹோலி மோலின்னா என்னாத்தல வித்தியாசமா என்னவோ மாதிரி இருக்கு...

கார்த்தி ரொம்ப சின்ன பதிவா இருக்கே தல...? சினிமாவுக்கு நல்ல ஸ்கிரிப்ட் எழுதுவீங்க போல...

ஆமீரக நண்பர்கள் வலைப்பூல என்னோடத காணலை...ஏன்...? இதுக்கு இப்ப சிவியரா ஆக்ஷன் எடுக்க வேண்டிவரும்? இப்பவே ஆட் பண்ணுங்க...நற...நற...நற...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க நாஞ்சில் பிரதாப்,
ஆளை அனுப்பி பதிவுக்கு கூபிட வேண்டியிருக்கே?
இது சரியில்லை, இங்க பேர் போடனும்னா , வீக்லி
குழுவுல ஆஜர் ஆகனும், போன் செய்யனும், சர்க்கு வாங்கி தரணும், அது எல்லாம் இல்லாதவங்க ஒரு 100 திர்ஹாமாவது கொடுக்கனும்,எப்படி வசதி?உமக்கு கண் ரொம்ப நல்லா தெரியிது தலைவா.:)) இந்த வாரம் பார்ப்போமா கலை கிட்ட அப்ளிகேஷன் ஃபில் அப் பண்ணிகுடுங்க.என்ன?

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

//சர்க்கு வாங்கி தரணும்//

யாரு நம்ம கார்த்தியா இப்படில்லாம் பேசுறது... நல்லபுள்ளைன்னுல்லாம் நிசை்சேன்...
நீங்க கேட்டா இல்லன்னு சொல்லுவமா தல???

//இந்த வாரம் பார்ப்போமா கலை கிட்ட அப்ளிகேஷன் ஃபில் அப் பண்ணிகுடுங்க.என்ன?//

ஏன்வேற ஆளே கிடைக்கலியா??? என் கண்ணாடி பிரேமை அடகு கடைல வெச்சா காசுகிடைக்கமான்னு கேட்ட மனுசன்... அதை அடகு வச்சாவது ஒரு புல் வாங்கித்தாடான்னு கேட்பாரு...
நீங்களா ஏதாச்சும் பாத்து பண்ணுங்க தல... எவ்வளவோ பண்ணிட்டீங்க...? :-)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

நாஞ்சில் ரொம்ப மகிழ்ச்சி, தவறாமல் வரனும்,ஓட்டும் போடனும், அப்புறம் சர்க்கு எனக்கில்லைங்க கலைக்கு,கொலைவெறி படைக்கு, சும்மா லூலூலாயிக்கு...இப்போவே உங்க பேரையும் ஆட் பண்ணிடுரேன், காசா பணமா? நான் உங்களை ரீடர்ல படிக்கிரேன்,ஃபாலோவராகி டேஷ்போர்டில படிக்கிறேன்,அது தான் சேர்காமல் இருந்தேன்.:) நம்ம அமீரகத்தின் அத்தனை பேரையும் சுட்டி கொடுத்து ஒரு பதிவு ஆரம்பிக்கனும்.30க்கு மேல் வரும்

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

நன்றி தல... இதுக்கு நான் என்ன கைம்மாறு பண்ணப்போறேன்.. அழுவாச்சி வர்து தல...
இனிமே பாருங்க ஒரு நான் என்னல்லாம் பண்றேன்னு...:-)

henry J சொன்னது…

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

King Viswa சொன்னது…

முதல் முறையாக இங்கு வருகிறேன். நல்ல அருமையான நடை. தொடருங்கள்.

படிக்கும் போதே ஆயாசமாக (கவனிக்கவும், போரடிக்கவில்லை ) இருக்கிறதே, நீங்கள் எப்படி டைப் செய்தீர்கள்? ஹாலிவுட் பாலா சொன்னது போல ஒரு வாரமா என்ன?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க நண்பர் விஸ்வா,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, இது ஒரே நாளில் தட்டியது தான்,
படத்தில் லயித்தால் , மட்டுமே இதுபோல தட்டுவேன்.

RADAAN சொன்னது…

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

ஜீவன்பென்னி சொன்னது…

என்னடா லேட்ட கமெண்ட் கொடுக்குறேன்னு நினைக்காதீங்க. படிச்சுட்டு மண்டை காஞ்சி போச்சு. டோரண்ட்ல போட்டாச்சு.

ஓட்டு போடல.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)