அமீரகம் திரும்பினேன்

ருமை நண்பர்களே ,சான்றோர்களே,

ன்றுடன் 23 நாட்கள் விடுமுறை முடிந்து அரைமனதுடன் அமீரகம் திரும்பியேவிட்டேன்,ஊருக்கு போகும் போது இருந்த வேகமும் ஆர்வமும் திரும்ப வருகையில் சுத்தமாக வடிந்தேதான் போனது, இந்த முறையும் நிறைய நண்பர்களை சந்திக்க முடியவில்லை, எவ்வளவு தான் விடுப்பு எடுத்தாலும் போதவில்லை,என் பழைய அலுவலக நண்பர்கள்,உடன் படித்த நண்பர்கள்,பதிவுலக நண்பர்கள்,உறவினர்கள்,என நான் விஜயம் செய்ததும் அவர்கள் என்னை பார்க்க விஜயம் செய்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள்.

ரில் இறங்கிய மறு நாளே என் சென்னை வருகிறேன் பதிவை பார்த்து டோண்டு ஐயா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார், நான் அவரை தெரியும் என்றும் நேரம் கிடைக்கும் போது படிப்பேன் என்றும் சொன்னேன்.அவர் குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடுமாறு உரிமையுடன் அறிவுரை வழங்கினார்.

1
ரண்டு பதிவுலக சந்திப்பை கலந்துகொள்ள முடியாமல் இழந்துவிட்டேன், ஒன்று உலக சினிமா திரையீட்டு நிகழ்ச்சி எல்டாம்ஸ் சாலையில் கிழக்கு பதிப்பகத்தில் நடந்தது,மற்றொன்று கே.கே நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழா.ஊருக்கு வந்ததும் முன்னமே சொல்லியிருந்தபடி ஷண்முகப்ப்ரியன் ஐயாவை அவரது இல்லத்தில் சந்தித்தேன்,மிக அருமையான சந்திப்பாக அமைந்தது அது, ஐயா அவர்கள் மிகுந்த பணிச்சுமைக்கு இடையிலும் என்னை சந்தித்தது அவர் மீது மிகுந்த மதிப்பைத் தந்தது. நானும் என் மனைவியும் சென்றிருந்தோம், ஐயாவின் துணைவியார் அவர்கள் எங்களை உபசரித்த விதம் மிக அருமை, நல்ல சுவையான உணவுகளும் அருமையான தேனீரும் தயாரித்து தந்தார்,அன்று சாய்பாபாவின் பிறந்த நாள் என்பது கூடுதல் விஷேஷம்.மீண்டும் அடுத்தவாரத்தில் சந்திப்பதாக முடிவு செய்து பின்னர் இருவருமே பிற வேலைகளில் மூழ்கிவிட்டதால் சந்திக்க முடியவில்லை, பின்னொரு சமயம் அவசியம் சந்தித்து அளவளாவ வேண்டும். நன்றி ஐயா.
3டுத்ததாக ரோமியோபாய் என்னும் ராஜராஜனை என் வீட்டில் அழைத்து சந்தித்தேன்.அருமையான மனிதர்,ஆள் ப்ளாக்கில் உள்ள போட்டோவிற்கும் நேரில் பார்ப்பதற்கும் படு வித்தியாசம், நேரில் செம ஸ்மார்டாக இருந்தார்.என் நண்பரின் சாண்ட்விச் ஷாப்பான புத்தா ஹட்டிற்கு அழைத்துப் போனது தான் தாமதம் இருவரும் நன்கு நண்பர்களாகிவிட்டனர்.பின்னர் என் வீட்டுக்கு அவரை அழைத்து போய் நிறைய பேசினோம். அவர் அதைப்பற்றி இங்கு பதிவாக போட்டிருக்கிறார். தடாலென்று வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் எடுத்து எனக்கு கையொப்பமிட்டு பரிசளித்து வியப்பில் ஆழ்த்திவிட்டார்.அவர் கொட்டும் மழையிலும் எண்ணூரில் இருந்து என்னை பார்க்க வந்துவிட்டு சந்திப்பை முடித்து கிண்டிக்கு அவர் அலுவலகத்திற்கு இரவுப்பணிக்கு சென்றது மறக்க முடியாது,இந்த பதிவுலகம் நட்புக்கு ஒரு பாலம் என்பது இதன் மூலம் விளங்கியிருக்குமே? நன்றி ராஜராஜன்.

2டுத்ததாக ஜாக்கிசேகர் அண்ணனை என் வீட்டில் வைத்து சந்தித்தேன். நிறைய பேசினோம்,ஜாக்கி அண்ணன் ஹைதராபாத் படப்பிடிப்புக்கு போயிருந்தபோது நானும் ஹைதராபாதில் இருந்தேன்,ஆனால் சந்திக்க முடியவில்லை,அவர் வீட்டில் இல்லாததால் நான் அவர் வீட்டுக்கு செல்ல முடியவில்லை, மிகச்சிறந்த பண்பாளர் சொன்னதுமே , நீ அலைய வேண்டாம், வீட்டோட நேரம் செலவிடு, நான் இன்று அந்த பக்கம் தான்  வருகிறேன் உன்னை நானே வந்து பார்க்கிறேன் என்று சொல்லி சரியாக என் வீட்டை கண்டுபிடித்து, போன் செய்தார், செம ஆச்சரியம் அது, ஒரு முறை தான் விலாசம் கொடுத்தேன்.அண்ணனுடன் பல விஷயங்கள் பேசினோம், என் மகள் வர்ஷினி நன்றாக பழகிவிட்டாள், ஜாக்கி அண்ணன் பழக மிக இனியவர்,அடுத்த முறை நிச்சயம் உங்கள் வீட்டுக்கு குடும்பத்தோடு வருவோம் அண்ணே.

4டுத்ததாக தண்டோரா அவர்களை எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நல்லதம்பி சாலையில் உள்ள விக்னேஷ் மஹால் திருமண மண்டபம் அருகே வைத்து சந்தித்தேன், அப்போதே நேரம் ஆகிவிட்டமையால் வீட்டுக்கு அவரால் வர முடியவில்லை,தல கேபிள் ஷங்கருக்கு போன் போட்டுத்தர பேசினேன்,மிக அன்போடு பேசினார், நேரில் தான் சந்திக்க முடியவில்லை, அடுத்த முறை கண்டிப்பாக நேரில் வந்து சந்திக்கிறேன் தல, தண்டோரா அவர்கள் எனக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் சூப் வாங்கித்தந்தார். அவர் அலுவலகம் தான் பல சென்னை பதிவர்கள் கூடும் இடம் என அறிந்தேன். அடுத்த முறை அவரின் அலுவலம் போகணும்,அங்கு வைத்து நிறைய பதிவர்களை சந்திக்க முடியும்.

டுத்ததாக அமீரக பதிவர் கோபிநாத்தை என் வீட்டில் வைத்து சந்தித்தேன்.அவசர பணிகளுக்கிடையிலும் வீட்டுக்கு வந்து சென்றது மனதில் நீங்கா இடம் பிடித்த ஒன்று. அவர் அப்போது சன் டீவியில் வந்த வேட்டைக்காரன் விளம்பரத்தை பார்த்துவிட்டு, தயவுசெய்து எலோரும் இந்த படம் பார்த்தவுடன் மாறனுக்கு ”படம் பாத்தாச்சு” என்று கடிதம் எழுதிப்போடுங்கள்,அப்போது தான் அந்த விளம்பரம் போடுவதை நிறுத்துவார்கள் என்றாரே பார்க்கணும்?

டுத்ததாக தேவியர் இல்லம்.ஜோதிஜி அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார்.அதுவும் மிகுந்த மகிழ்ச்சியளித்தது.இன்னும் நிறைய பதிவர்களின் தொலைபேசி எண்கள் தெரியாததால் பேச முடியவில்லை.சென்னை பதிவர்கள் ,தமிழக பதிவர்கள் மற்றும் உலக பதிவர்கள் அமீரகம் வரும் போது அவசியம் பின்னூட்டவும்,இங்கு சுமார் 30 பதிவர்கள் இருப்போம்,சந்தித்து விடலாம்.
 
ந்த முறை சென்னைக்குள் சைதாப்பேட்டை, ஆற்காடு சாலை, தி. நகர் போன்ற ஒரு சில இடங்களில் பைக் ஓட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. என்னமாய் பதட்டம் ஏற்படுகிறது. எல்லோரும் அவசரத்துடன் வண்டி ஓட்டுகின்றனர். புதிதாய் திறந்த எல்லா மேம்பாலங்களிலும் பைக்கை ஓட்டி வலம் வந்தேன், மிக அருமையான அனுபவமாக இருந்தது அது. மேம்பாலத்தில் அதுவும் நம் ஊரில் வண்டி ஓட்டும் மகிழ்ச்சி இருக்கிறதே? உன்னதம்,

நான் மூன்று வருடங்களுக்கு முன்னர் தினமும் 40கி,மீ வண்டி ஓட்டியதற்கும் இப்போது உள்ள வாகன நெரிசலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன, சென்னையில் ஒரு சில சாலைகள் நன்கு அகலப்படுத்தப்பட்டும், வாகனங்கள் வழிப்பாதை மாற்றம் செய்யப்பட்டும் உள்ளன. இந்த முறை சென்னையில் சீதோஷ்னமும் இதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊருக்கு கிளம்பும் முதல் நாள் கலைஞர் காப்பீடு திட்டத்திற்கு குடும்பத்துடன் போய் க்ரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டது மறக்க முடியாதது.ஒரே போட்டோ ஐடியாக கொடுபார்களாம்,இ எஸ் ஐ கார்டு போல,  என் வீட்டாரின்  முழு குடும்ப ஐடெண்டிக்கு  மிகவும் முக்கியம் அது, அது என்னவோ கழக தொண்டர்கள் அனைவரிடமும் அப்படி மரியாதையுடன் பேசினார்கள், பெரிய ஷாமியானாவும் ,தண்ணீர் பாட்டில்களும் , 100 பேர் அமர பிளாஸ்டிக் சேர்கள் என ஒரு காலி மனையையே வளைத்திருந்தனர்.

ரேஷன் கார்டு மட்டும் குடுங்க சார், மீதி நாங்க பாத்துக்கறோம் என அவர்களே விண்ணப்பம் பூர்த்தி செய்தார்கள், அழகாக புகைப்படம் எடுத்தார்கள். இதை எல்லோர் வீட்டிலும் வந்து வெத்தல பாக்கு வைக்காத குறையாக அழைத்தது தான்  விளங்காத ஒண்ணு, [எங்கள் ஐந்தாம் வார்டில் அனைவரையும் கவர் செய்து விட்டனர் ] இதில் தனியாக ஊழியர்களையும், புகைப்படம் எடுக்க பெரிய வீட்டையும் வாடகைக்கு எடுத்திருந்தனர். எங்க ஏரியா கவுன்சிலர் ஓட்டு கேட்பது போல கூழைகும்பிடு போட்டு ,ரொம்ப நன்றிங்கம்மா , இது முக்கியமான டார்கெட் அம்மா என்றார்,வேலைக்கு சென்று வந்தவர்களுக்காக இரவு 9-00 மணி வரை கழக கண்மணிகள் இயங்கியது இன்னமும் புரியாத ஒன்று.  ஒண்ணுமே புரியலை உலகத்தில!!.இதை எடுக்காதவர்கள் உடனே எடுத்து விடுங்கள்.

ரேஷன் கடைக்கு போனால் எலக்ட்ரானிக் ஸ்கேல் இருந்தது.கம்ப்யூட்டர் பில் போடுகின்றனர், இது எல்லாமே புதிதாய் இருந்தது.விலைவாசி மிக மிக உயர்ந்துள்ளது கண்கூடாக காணமுடிகிறது.ஆனாலும் எல்லா இடங்களிலும் வியாபாரம் அமர்க்களமாக நடக்கிறது, மக்கள் எல்லா உணவகங்களிலும்,தள்ளு வண்டி கடைகளிலும்,பிரியாணி கடையிலும் அலை மோதுகின்றனர்.   எது போட்டாலும் வியாபாரமாகிறது வியப்பைத் தருகிறது, என்ன தான் வாங்கும் திறன் இருந்தாலும் சேமிக்காமல் இப்படி செலவு செய்தால் என்ன ஆவது?இந்த நிலை மட்டுமே என்னை கவலை கொள்ளச் செய்தது.இளநீர் 25 ரூபாய் தந்து குடித்தால் உப்பு கரிக்கிறது,அல்லது 50மில்லி மட்டுமே தண்ணீர் இருக்கிறது,வழுக்கை கூட இல்லை . தண்ணீர் கேன் வியாபாரம் கனஜோராக நடக்கிறது, பெயர் தெரியாத தண்ணீர் கேன்கள் பல்கிப்பெருகிவிட்டன. அரசே அதை முறைப்படுத்தி ரேஷன் கடையில் வழங்கினால் கூட தேவலை. மக்களுக்கு நல்ல பலனிருக்கும்.

கொசுக்கள் முன்பை விட பெரியதாகவும் திடகாத்திரமாகவும் பெருகிவிட்டன. கொசு மருந்தும் தினமும் அடிக்கின்றனர்.ஆனால் அதெற்கெல்லாம் பெப்பே காட்டுகின்றன கொசுக்கள். தண்ணீர் பாலில் போடப்பட்ட தேனீர் சிங்கிள் =6-00 ரூபாயாம்,எல்லோரும் வரிசையில் நின்று ரீசார்ஜ் செய்கிறார்கள், இப்போதைக்கு  ஒரு ரீசார்ஜ் கடை போட்டால் செம பிக்கப் ஆகும் போல.


ங்கள் ஏரியா பிரியாணி கடையில் ஒரு கோம்போ ஆஃபரை பார்த்தேன்.1/2 பிளேட் சிக்கன் / மட்டன் பிரியாணி, + 1/4 பிளேட் சிக்கன் 65, + 200 மில்லி கோக் = 99 ரூபாய் என்று, சக்கை போடு போடுகிறது பாஸ். நான் என் நண்பர்களுக்கு கூட்டிப்போய் வாங்கித்தந்தேன்.செம டீல்,செம வியாபாரம். இருப்பவர்கள் செலவு செய்வர் இல்லாதவருக்கு ஒரு ரூபாய் ரேஷன் அரிசி சோறு தான் நிதர்சனமா?

-உள்ளக்குமுறல்கள் தொடரும்-

40 comments:

pappu சொன்னது…

எல்டாம்ஸ் சாலையில்///
இதுக்கு பேர் மாறிடுச்சாமே!

///எங்கள் ஏரியா பிரியாணி கடையில் ஒரு கோம்போ ஆஃபரை பார்த்தேன்.1/2 பிளேட் சிக்கன் / மட்டன் பிரியாணி, + 1/2 பிளேட் சிக்கன்65, + 200 மில்லி கோக் = 99 ரூபாய் என்று, சக்கை போடு போடுகிறது பாஸ்///
பட் இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு!

ஷண்முகப்ரியன் சொன்னது…

மனைவியையும்.குழந்தையையும் பிரிந்து செல்லும் கொடுமையை நானும் உங்களைப் போல ஈரோடு காகித ஆலையில் பணி புரியும் போது அனுபவித்திருக்கிறேன்,கார்த்தி.
சில சோகங்களைக் கடந்தே தீரவேண்டும் போலிருக்கிறது.
மீண்டும் நாம் சந்திக்க முடியாத குறையைக் காலம் ஈடுகட்டும் என நினைக்கிறேன்.
உங்களுக்கும்,உங்கள் துணைவியாருக்கும்,வர்ஷிணிக்கும் எங்களது வாழ்த்துகள்.

கோபிநாத் சொன்னது…

உங்கள் அனுபவங்களை படிக்கும்போது எனக்கும் ஊருக்கு சென்று வந்த அனுபவம் இருந்தது. தொடருங்கள்.

☀நான் ஆதவன்☀ சொன்னது…

வெல்கம் பேக் தேவுடு :)

சண்முகப் ப்ரியன் ஐயாவோட போட்டோல என்னா பணிவு... என்னா அடக்கம்! :)

கலையரசன் சொன்னது…

ஷண்முகப்ப்ரியன் ஐயா, ஜாக்கிசேகர், தண்டோரா எல்லோரையும் விசாரிச்சதா சொன்னியா மாப்பி? நல்லா எழுதியிருக்க இடுகையை!! நேருலையே சந்தித்ததுபோல அழகாக விவரித்துவிட்டாய்... அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்!

ஓட்டுகள் போட்டாச்சு...

jackiesekar சொன்னது…

நல்லா அழகா தொகுத்து எழுதி இருக்கே.. கார்த்தி.. நேரலி பழகிய அந்த இருண்டுமணிநேரங்களில் நான் உணர்ந்தது.. என்னவென்றால் நீ என்மேல் வைத்து இருந்த மரியாதையும் பாசமும்....

ஆமிரக நண்பர் எல்லோரும் என்னை விசாரித்தது குறித்தும் என் பட பதிவுகள் பற்றி நீங்கள் பேசுவதை எல்லாம் கார்த்தி என்னிடம் பகிர்ந்து கொண்டு விட்டுதான் சென்றார்...

நன்றி கலை மற்றும் அமீரக நண்பர்கள்...

நல்ல பதிவு.... ஓட்டுக்கள் போட்டாச்சு..

தண்டோரா ...... சொன்னது…

நலம்..நலமே நாடும் நண்பன்...

வடுவூர் குமார் சொன்னது…

உங்க‌ உய‌ர‌த்துக்கு பேஸ் பௌலிங் போட்டா பாதி விக்கெட் கேட்காம‌லே விழுந்துவிடும்.:-)

பின்னோக்கி சொன்னது…

கார்த்தி விடுமுறை நன்கு கழிந்ததில் மகிழ்ச்சி. சந்திக்க இயலவில்லை. உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்திருப்பீர்கள். அந்த நினைவுகள் உங்களுக்கு சக்தியளிக்கும் என நம்புகிறேன்

சென்ஷி சொன்னது…

வெல்கம் பேக் மாம்ஸ்... :)

இந்த வார ஜமா வழக்கம்போல கூடிடலாம்

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமை நண்பர் கார்த்திகேயன்..

பதிவர்களுடனான சந்திப்பையும் விடுமுறை நினைவுகளையும் மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

ஜோதிஜி சொன்னது…

சண்முகப் ப்ரியன் ஐயாவோட போட்டோல என்னா பணிவு... என்னா அடக்கம்! :)

நான் நினைத்ததை வார்த்தையாக வடித்துள்ளார்

உங்க‌ உய‌ர‌த்துக்கு பேஸ் பௌலிங் போட்டா பாதி விக்கெட் கேட்காம‌லே விழுந்துவிடும்.:-)

கூடவே தனுஷ் போன்றவர்கள் வாழும் கோடம்பாக்கம் நீங்கள் அந்தப் பக்கம் போகாத காரணத்தால் அமீரகம் வந்து விட்டீர்கள்?

பேசும் போது அநியாயத்துக்கு "பச்சப்புள்ளய" இருக்ற கார்த்திய ஆண்டவா எப்போதும் இப்படியே வச்சுருப்பா?

வேட்டு இல்ல ஓட்டு தான் சகோதரா

நாகாவின் பணிச்சுமையை உணர்ந்துள்ள காரணத்தால் காத்துக்கொண்டுருக்கின்றேன்.
காரணம் இப்போது தான் மலை பயணம் இனிதே முடிந்தது.

ஜோதிஜி சொன்னது…

இதன் தொடர்ச்சியாக சென்னையில் "வண்டி ஓட்டியதும் நாக்கு தள்ளியதும்" எதிர்பார்க்கின்றேன். காரணம் சென்னைக்குள் நுழைந்து நாளாகி விட்டது. உங்கள் அற்புத பார்வையால் படம் பிடித்துக் காட்டுங்கள்.

குசும்பன் சொன்னது…

வெல்கம் வெல்கம்!

அன்புடன்-மணிகண்டன் சொன்னது…

ரோமியோபாய் மற்றும் ஜாக்கி அண்ணன் பதிவுகளில் உங்களுடனான சந்திப்பு பற்றி அறிந்தேன்.. நீங்கள் நர்சிம்மின் புத்தக விழாவுக்கு வருவீர்கள் அங்கு சந்திக்கலாம் என்றிருந்தேன்.. உங்கள் பயணம் இனிதாக இருந்திருக்குமென்று நம்புகிறேன்..

வினோத்கெளதம் சொன்னது…

குரு வா வா வா..நீ இல்லாத அமீரகம் ஒரு மாதம் "கலை" இழந்து இருந்தது..
அழகா தொகுத்து இருக்க குரு..எல்லாரையும் சந்தித்த உணர்வு..
இந்த வாரம் சந்திப்போம்..Passport இருக்குல..:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் பப்பு,
உங்க நம்பர் தெரியாத்தால் போன் செய்ய முடியவில்லை, நீங்களாவது பேசியிருக்கலாமில்லை?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க ஐயா,
நலம் தானே?மிக்க மகிழ்ச்சி தங்களை சந்தித்தது,அடுத்த முறை கண்டிப்பாக நீண்ட நேரம் பேசவேண்டும்,இங்கு அமீரகம் வரும் போது அவசியம் எல்லோரும் சந்திப்போம்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் கோபிநாத்
வருகைக்கு நன்றி,

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வா தேவுடு,
ஐயாவை சந்தித்த மகிழ்ச்சியில் பணிவு தானாக வந்தே விட்டது.இந்த வாரம் பார்ப்போம்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாடா கலை மாப்பி,
நீ சொன்னது போல எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டேன்,ஜாக்கி அண்ணன் கூட கீழ சொல்லியிருக்கார் பார்டா.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க ஜாக்கி அண்ணே,
உங்க அன்புக்கு மிக்க நன்றி, நீங்க சீக்கிரமே துபாய்க்கு ஷூட்டிங்குக்கு வரனும்.அப்போ இங்க ஒரு மீட் வைக்கலாம்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க தண்டோரா அண்ணே,
உலகத்திரைப்படத்திற்கும் புத்தக வெளியீட்டுக்கும் வரமுடியலை,வருகைக்கு மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் பின்னோக்கி
உங்க பெங்களூர் நம்பர் தெரியாத்தால் போன் செய்ய முடியவில்லை, நீங்களாவது பேசியிருக்கலாமில்லை?
என் விடுமுறை நன்கு கழிந்தது.வருகைக்கு நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாடா சென்ஷி மாப்பி,
இந்த வாரம் அவசியம் குழுமனும்,

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் வடுவூர் குமார்.
உங்க நம்பர் தெரியாத்தால் போன் செய்ய முடியவில்லை, நீங்களாவது பேசியிருக்கலாமில்லை?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் சரவணகுமார்.
உங்கள் தொலைபேசி அழைப்புக்கும் , எனக்கு நீங்கள் கொடுத்த விருதுக்கும் , தொடர் வருகைக்கும் மிக்க நன்றி,

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை ஜோதிஜி,
மலைக்கு போய்விட்டு வந்துவிட்டீர்களா?வீட்டில் தேவியர்கள் நலம்தானே? நாகாவுடன் ஆன சந்திப்பை விட்டு விடாதீர்கள், தொடர் வருகைக்கும் நல்ல நகைச்சுவை பின்னூட்டதிற்கும் மிக்க நன்றி.உங்கள் சில பதிவுகளை படிக்க முடியவில்லை.வருகிறேன் விரைவில்.

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

welcome back

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க குசும்பு அண்ணே,
வரவேற்பெல்லாம் பலமாத்தான் இருக்கு, இந்தவாரம் பார்ப்போம் அண்ணே.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அன்புடன் மணிகண்டன்,
அடடே சந்திக்காமல் விட்டுவிட்டோமே.
உங்க நம்பர் தெரியாத்தால் போன் செய்ய முடியவில்லை, நீங்களாவது பேசியிருக்கலாமில்லை?
அடுத்தமுறை சந்திப்போம்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வா குரு,
நலம் தானே, ரெண்டு பாஸ்போர்ட் இருக்குய்யா.
கவலைய விடு.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

நல்லா தொகுத்து இருக்கீங்க கார்த்திகேயன். அந்தப் பணிவு யாருக்கும் வராது :))

நீங்கள் பார்த்த சென்னை பற்றிய உங்கள் உள்ளக்குமுறலை எதிர்பார்க்கிறேன்.

கோபிநாத் சொன்னது…

ஆரம்பிச்சிட்டிங்களா அண்ணாச்சி ;)))

Romeoboy சொன்னது…

நண்பரே அருமையான சென்னை பதிவு ..

\\இந்த பதிவுலகம் நட்புக்கு ஒரு பாலம் என்பது இதன் மூலம் விளங்கியிருக்குமே? //

கண்டிப்பா தலைவரே ..

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஏங்க.. அமீரகம் திரும்பினேன் -ன்னு சொல்லிட்டு.. ஊரு கதை சொல்லுறீங்க.

தயாக அனுபவங்கள்-ன்னு சொல்லிட்டு... பஞ்சர் ஒட்டுறீங்க!! :) :)
=

சும்மா.. கலாய்க்கலாமேன்னுதான்! :) :)

சண்முகப்ரியன் சாரின் போட்டோவை முதன்முதலாய் பார்க்கிறேன். அதுக்காகவே உங்களுக்கு என் நன்றிகள்.

===

உங்க ‘ஃபார்மாலிடி பண்ணியாச்சி’ இவ்வளவு சீக்கிரம் இப்படி ஃபேமஸ் ஆகும்னு நினைக்கலை! :)

பிரபல படுத்திய பெருமை என்னுது!! ராயல்டி வேணும் சொல்லிட்டேன்! :) :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் செந்தில்வேலன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வா அருமைத்தம்பி கோபி
சொன்ன மாதிரியே உன்னைப்பற்றி எழுதிவிட்டேன் போதுமா?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க அருமை நண்பர் ராஜராஜன்,உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி உங்களை சந்தித்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தல ,
வாங்க தல, நீங்க ஓட்ட ஆரம்பிச்சது தான் தாமதம், எல்லாம் ஓட்ட துடிக்கிறாங்க, நல்லா கலாய்ங்க ஜி.
ஐயாவின் புகைப்படம் உங்களுக்கு பிடிக்கும் என அறிந்திருந்தேன்,
ஃபார்மாலிட்டி இந்த வார்த்தை ஒரு போலீஸ்காரரிடம் இருந்து செவிமடுத்தது, சரியான வார்த்தை அது தல.
என்ன வேணுமோ கேளுங்க ராயல்டியா.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)