பிக் ஃபிஷ் [Big Fish ] [ 2003] [ அமெரிக்கா]

பிக் ஃபிஷ் என்னும் இத் திரைப்படம் ஃபாண்டசி-அட்வென்சர் வகையை சேர்ந்ததாகும். இயக்குநர் டிம் பர்டன்[Tim Burton] ஹாலிவுட்டின் முக்கியமான சமகால இயக்குனராவார். இவருடைய முந்தைய படைப்புகளான எட் வுட், ஸ்வீனி டாட் த டெமான் பார்பர் ஆஃப் ஃப்ளீட் ஸ்ட்ரீட், அலைஸ் அண்ட் ஒண்டர்லாண்ட், ஸ்லீப்பி ஹாலோ போன்றன மிகச்சிறந்த வரவேறப்பை பெற்றவையாகும். இவரின் படைப்புகள் பெரும்பாலும் ஃபேண்டஸி மற்றும் மாயாஜாலம், மந்திரஜாலம், பாடல்களுடனான கதைசொல்லல்கள் நிறைந்த, பரவசங்கள் அளிக்கும்   படைப்புக்களாவே   இருக்கின்றன.  இப்படம் அமெரிக்க எழுத்தாளர் டேனியல் வால்லேஸ் எழுதி 1998 ஆம் வருடம் வெளியான பிக்ஃபிஷ் என்னும் நாவலைத் தழுவி ஜான் ஆகஸ்டின் திரைக்கதையில் ,டிம் பர்ட்டன் இயக்கி  2003 ஆம் வருடம் வெளிவந்தது. உலகெங்கும் சினிமா ரசிகநெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தது.


திரைக்கதையில் ஒரு யுத்தி இருக்கிறது, படத்தில் காட்டப்படும் நம்பமுடியாத விஷயங்களைக்கூட   எதிரே அமர்ந்துள்ள பார்வையாளனின் மூளை முழுமையாக நம்புகின்ற  வகையில் , திரைக்கதையை  புத்திசாலித்தனமாக அமைப்பதன் மூலம்  அவனை மெல்ல உள்ளே இழுத்து கட்டிப் போட்டுவிடமுடியும் என்பதே அது!!!.

இயக்குனர் டிம் பர்ட்டன்
நாம் எத்தனையோ தந்தைகளைப் பற்றிய கதைகளைக் கேட்டிருப்போம், சிலவற்றை திரைப்படமாகவும் பார்த்திருப்போம். அவற்றிலிருந்து விலகி இப்படி ஓர் வித்தியாசமான தந்தை மகன் கதையை பார்ப்பது இதுவே முதல் முறையாய் இருக்கும். எட்வர்ட் ப்ளூம்  தன் மகன் வில் ப்ளூமுக்கு   சிறுவயது முதலே  வீரபிரதாபக் கதைகளாக சொல்லி  வருகிறார். எதைப்பற்றி மகன் பேச வாய் எடுத்தாலும் அதைப்பற்றி ஒரு கதையை தன்னை மையப்படுத்தி சொல்ல ஆரம்பிக்கிறார். எல்லா கதையிலுமே இவருக்கு கதாநாயகன் வேடம் தான். இவரால் உலகில் முடியாத தீரச்செயலே இல்லை என்கிறார். முன்னொரு காலத்தில்....!!!. என்று  கதை சொல்ல வாயெடுக்கும் அவரை முதல்முறையாக சந்திக்கும் நபருக்கு வேண்டுமானால் அக்கதைகள் பிடிக்கக்கூடும் , ஆனால் பலநூறு முறை அதே கதைகளை  கேட்ட வில் ப்ளூமால் ஒருகட்டத்தில் அக்கதைகளை  நம்பவோ சகித்துக் கொள்ளவோ முடியவில்லை.ஏனென்றால் அவன் வளர்கிறானாம்.!!!!

வில் ப்ளூமின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எட்வர்ட் ப்ளூம் தன் விருந்தினர்களுக்கும்  என் மகன் பிறந்த தினத்தில், நான் என் திருமண மோதிரத்தை தூண்டிலில் இணைத்து யாராலும் பிடிக்க முடியாத பெரிய கொழுத்த மீன் ஒன்றைப் பிடித்தேன் !!!!  என மீண்டும் அக்கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.....!!!!. எல்லோருமே அதை ஆர்வமாகக் கேட்டாலும் மகன் வில் ப்ளூம் மிகவும் எரிச்சலடைகிறான்.  அம்மாவும் உறவினர்களும் எவ்வளவோ தடுத்தும்  கேளாமல் காதல் மனைவி ஜோசப்பின்னை கூட்டிக்கொண்டு , வீட்டை விட்டே கிளம்பிவிடுகிறான்.

எட்வர்டாக இவான் மெக் க்ரகொர்
மூன்று வருடங்களுக்கு பின்னர் , தந்தை எட்வர்ட் ப்ளூம் மரணப் படுக்கையாகிவிட்டார். அவரைப்பார்த்து இறுதி மரியாதை செலுத்திவிட்டுச் செல், என்று அவன் அம்மா உருகி கடிதம் எழுதுகிறாள், வேறுவழியின்றி தன் சொந்த ஊரான அலபாமாவுக்கு மனைவி ஜோசப்பின்னுடன் வருகிறான் வில் ப்ளூம்.  மனைவி நிறைமாத கர்ப்பிணி வேறு!. வரும் வழியில் விமானப் பயணத்தில் தன் தந்தையின் நினைவுகளை அசைப்போட்டுப் பார்க்கிறான். வீட்டுக்கு வந்தவுடன் இவன் மனைவி ஜோசப்பின் தந்தை எட்வர்ட் ப்ளூமிடம் நன்கு பாசத்துடன் பழகிவிடுகிறாள்.  ஆகா!!! கதை கேட்க புதிய ஆள் சிக்கிற்று,  என்னும் ஆவலில் தொடர்ந்து தன் வீரபிரதாப கதைகளை சொல்கிறார். இன்னமும் தன் அப்பா கதைசொல்வதை நிறுத்தாத வில் ப்ளூம் பொறுமை இழக்கிறான்.  தன் தந்தைக்கு வேறு எங்கோ இன்னொரு குடும்பம் இருப்பதாக சந்தேகிக்கிறான். தன் தந்தை யார்? என்பதைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் எடுக்கிறான். அவர் சொன்ன கதைகள் ஒவ்வொன்றையும் நினைவடுக்குகளிலிருந்து அசைபோட்டுப் பார்க்கிறான்.

ப்போது ஆஷ்டன் என்னும் சிற்றூரில், சிறுவனாக இருக்கும் எட்வர்ட் ப்ளூமை நாம் பார்க்கிறோம் , ஒரே நாளில் மிக வேகமாக வளர ஆரம்பிக்கிறான் எட்வர்ட் ப்ளூம். அசுர வளர்ச்சி அது, அதனால் பயந்த எட்வர்ட் தன்னை ஒரு கட்டிலில் மூன்று வருடம் சிறை வைத்துக்கொண்டு, தன் வளர்ச்சியைத் தடுக்கிறான். விரைவில் விளையாட்டு வீரனாகவும் புகழ்பெறுகிறான். ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ஒரு சூனியக்காரியை துணிந்து சந்திக்கிறான். அவளது கண்ணாடிக் கண்ணில் தன் இறப்பை துல்லியமாக தெரிந்து கொண்டவன், அவன் வசிக்கும் ஊர் மக்களால்  தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விரட்டப்பட்ட ஊரையே பயமுறுத்திக் கொண்டிருந்த பதினோரு அடி ராட்சத மனிதனான ஜயண்ட் கார்லை  எங்கேயானும் கண்காணாத இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறேன்!!!!....என்று ஊராரிடம் பெருமையாக சொல்லிவிட்டுப் புறப்படுகிறான் எட்வர்ட். இங்கு தான் துவங்குகிறது எட்வர்டின் வீரபிரதாபங்கள்.

ந்த வீரபிரதாபங்கள் மிக மிக அழகாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. நம்ப முடியாதவற்றை கூட நம்ப வைத்துபடம் பார்க்கும் ஒருவரை திரைப்படத்துக்குள்  இழுத்துவரும் காட்சியாக்கம் கொண்டது. அதில் துவக்கமாக எட்வர்டும் ஜயண்ட் கார்லும் உலகின் மிக அழகிய ஒரு ஒளித்துவைக்கப்பட்ட கிராமமான ஸ்பெக்டரை [Spectre] கண்டு பிடிக்கின்றார்கள், அங்கே கிராமத்து மனிதர்கள் மிகவும் இளமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதைப்பார்த்து அதிசயிக்கிறார்கள்,தங்கள் உடம்புக்கும் நிலத்துக்குமான பாசப்பிணைப்பிற்காக அங்கே யாருமே செருப்பே போட்டுக்கொள்ளாதையும் பார்த்து அதிசயிக்கிறான் எட்வர்ட். அங்கே வைத்து ஜென்னி என்னும் சிறுமியுடன் நட்பும் பெறுகிறான். கிராம மக்கள் அனைவரும் எட்வர்டையும் ஜயண்ட் கார்லையும் அங்கேயே தங்களுடன் தங்கியிருக்க பணிக்கின்றனர். ஜென்னியும் கெஞ்சுகிறாள், ஆனால் எட்வர்டுக்கு உலகையே சுற்றி வர ஆசை, ஜென்னியிடம் தான் மீண்டும் திரும்பி வருவேன்!!! என்று உறுதி கூறுகிறான். அங்கிருந்து அகன்றவன் வழியில் ஒரு சர்க்கஸில் வைத்து, மிக அழகிய தேவதை போலொரு பெண்ணை   சந்திக்கிறான். நொடிப்பொழுதில் அவள் மறைந்தும் விடுகிறாள். அவள் மீண்டும் வருவாள் என பொறுமையாக அங்கேயே காத்திருக்கிறான் ப்ளூம். ஆனால் வரவில்லை, அதே சர்க்கஸில் தங்கிக்கொள்ள வாடகையாக, அதன் உரிமையாளன் ரிங்மாஸ்டர் அமோஸுக்கு சம்பளம் இல்லாமல் வேலைசெய்கிறான். அமோஸ் அவன் காதலி  பற்றிய உண்மையை மாதத்துக்கு ஒன்று என்று சொல்லி வருகிறான்.


ந்நிலையில் மூன்று வருடங்கள் வேகமாய் கழிந்துவிட,  இப்போது தான்  தன் சர்க்கஸ் முதலாளி அமோஸ் ஒரு ஓநாய் மனிதன் என்றும், தன் காதலியின் பெயர் சாண்ட்ரா டெம்பிள்டன் ,அவள் ஆப்பர்ன் கல்லூரியில் படிக்கிறாள்,அவளுக்கு தன் ஊரான ஆஷ்டனைச் சேர்ந்த டான் என்பவனுடன் நிச்சயமாகி யிருப்பதையும் அறிகிறான். மீண்டும் தன் காதலியை சந்தித்து தன் காதலை சொல்கிறான் எட்வர்ட் , தன் வீரத்தை தான் விரும்பிய பெண்ணின் தந்தைக்கு நிரூபிக்க தயாராக இருக்கிறான், தன் ஊருக்கு பயணிக்கிறான், இவன் சாண்ட்ராவை விரும்புவதை கேள்விப்பட்ட டான் ப்ரைஸ் , எட்வர்டை அடித்து துவம்சம் செய்கிறான். அதுவே சாண்ட்ராவுக்கு எட்வர்டின் மேல் காதல் வர போதுமானதாக இருக்கிறது, ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக டான் ப்ரைஸ் கழிவறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போய்விட, எட்வர்டின் காட்டில் மழைதான்!!! காதலி சாண்ட்ராவை கைபிடிக்கிறான். ஆனால் அந்த நிம்மதி நிலைக்காமல் கட்டாய ராணுவ சேவைக்காக கொரியாவுக்கு அமெரிக்க ராணுவத்தினரால் கூட்டிச் செல்லப்படுகிறான். அங்கே  கொரிய இராணுவ வீரர்களின் பொழுது போக்கும் கூடாரத்துக்குள் பாராசூட்டின் துணையுடன் குதித்த எட்வர்ட் முக்கியமான போர் ஆவணங்களை திருடுகிறான்.

ங்கே அதற்கு துணையாக இருந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர் சகோதரிகளான பிங் & ஜிங்கை தன்னுடன் கூட்டிக்கொண்டு அமெரிக்கா செல்கிறான், அவர்களுக்கு இரு தலைகள், இரு உடல்களும் , இரண்டே கால்கள் மட்டும் உள்ளன. அங்கே அந்த அதிசயப்பிறவிகளை  திரை நட்சத்திரங்களாக மாற்றுகிறான் எட்வர்ட். அதே வேலையில் பல மாதங்களாகியும் எட்வர்ட் ஊருக்கு திரும்பாததால் அவன் இறந்து விட்டான் என்ற முடிவுக்கு ஊராரும் ராணுவத்தினரும் வருகின்றனர். எட்வர்ட் தன் ராணுவ வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு திரும்புகிறான். போகும் வழியில் தற்காலிகமாக நாடோடி விற்பனைப் பிரதிநிதியாகவும் வேலைகள் பார்க்கிறான். அங்கே ஒரு நகரத்தில் வைத்து முன்பு தான் கண்டுபிடித்த ஸ்பெக்டர் கிராமத்தின் கவிஞன் நார்தர் வின்ஸ்லோவைப் மீண்டும் பார்க்கிறான் எட்வர்ட். அவர் குறுக்கு வழியில் பணக்காரனாக நினைக்கிறார். ஏற்கனவே நிதிநிலைமை மோசமாகி மூழ்கிப்போன ஒரு வங்கியை இவர்கள் இருவரும் சேர்ந்து கொள்ளை அடிக்கின்றனர். பின்னர் ஊருக்கு கிளம்புகையில் கொள்ளையடித்த பணத்தை வைத்து வால் ஸ்ட்ரீட் என்னும் பங்குச்சந்தையில் வேலை தேடிக்கொண்டு பணத்தை பெருக்கு என்று ஆலோசனை வழங்குகிறான் எட்வர்ட், கவிஞன் மனம் குளிர்ந்தவன் எட்வர்டுக்கு 10,000 டாலர்கள் பரிசளிக்கிறான்.

ந்த பணத்தைக்கொண்டு தன் காதல் மனைவிக்கு ஒரு அழகிய கனவு இல்லத்தைக் கட்டிக் கொடுக்கிறான் ப்ளூம், பின்னொரு நாளில் தான் முதன் முதலில் கண்டுபிடித்த உலகின் மிகஅழகிய கிராமம், பொலிவிழந்து , அழுக்காகி, பாழடைந்ததைக் கண்டவன் அதை புதுப்பொலிவுடன் புதுபித்துக் கொடுக்கிறான் ப்ளூம். அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீடுமே கடனில் மூழ்கியிருக்க, எட்வர்ட் தன் பணத்தைக்கொண்டு ஒவ்வொருவர் கடனையும் அடைத்து, அந்த பத்திரங்களை அவரவரிடமே ஒப்படைக்கிறான். தன் மகன் வில் ப்ளூம் பிறந்த அதே தினத்தில் ஒரு பெரிய கொழுத்த மீனைப் பிடிக்கிறான்!!!! இப்படியாக வில் ப்ளூம் முன்பு  அப்பா எட்வர்ட் ப்ளூம் தன்னிடம் பலமுறை பகிர்ந்த வீர  பிரதாபங்களை நினைத்துப் பார்க்கிறான்.

ன் தந்தையிடம் போய்  அப்பா!!! , நீங்கள் இதுவரை உங்களுக்கு நடந்ததாக சொன்ன கதைகள் எல்லாம்  பொய்கள், புரட்டுக் கதைகள்  என்று எனக்குத் நன்றாய் தெரியும். உங்களைப் பற்றிய உண்மை எனக்குத் முழுமையாகத் தெரிய வேண்டும். இன்னும் சில நாளில் எனக்கு ஒரு மகன் பிறப்பான் . என் அப்பாவைப் பற்றி முழுமையாகத் தெரியாத நான் எப்படி என்னைப் பற்றி அவனுக்குச் சொல்ல முடியும் ?!!! என கேட்கிறான். அதற்கு எட்வர்ட் ப்ளூம் நிதானமாக,  நான் பிறந்த தினத்திலிருந்து நான் நானாகவே தான் இருந்திருக்கிறேன், யாரோடும் எதற்காகவும் பொய் சொன்னதில்லை. அதை இவ்வளவு பெரியவனாக வளர்ந்து நிற்கும் நீ தெரிந்து கொள்ள வில்லையென்றால் அது உன் தவறேயன்றி வேறில்லை என்கிறார். மிகவும் எரிச்சலடைகிறான் வில்ப்ளூம்.

பின் வரும் நாட்களில் தன் தந்தை சொன்ன வீரபிரதாபக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை கண்டுபிடிக்க முயல்கிறான் வில் ப்ளூம். முதல் கட்டமாக தன் தந்தை கண்டுபிடித்த ஊரான ஸ்பெக்டருக்கு செல்கிறான் வில். அங்கே வைத்து தன் தந்தை சொன்ன ஜென்னி என்னும் பெண்ணை சந்திக்கிறான். அவள், எட்வர்ட் அவர் வாக்களித்த படியே  கிராமத்துக்கு திரும்பி வந்ததாகவும், சிதிலமடைந்திருந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டையும் புணரமைத்துத் தந்ததாகவும் அதிசயத்துடன் சொல்கிறாள். வில் ப்ளூமாக இவற்றை நம்பவே முடியவில்லை,தன் தந்தைக்கும் அப்பெண்மணிக்கும் ஏதோ உடற்தொடர்பு இருக்க வேண்டும்,அதனால் தான் அப்பெண்மணி தந்தையாரின் பொய்களை நியாயப்படுத்துகிறாள்.என்று நம்புகிறான்.

ந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.   அன்று இரவு எட்வர்ட் ப்ளூமுடன் தங்குகிறான், மகன் வில் ப்ளூம். அங்கு வரும் மருத்துவர்   வில்ப்ளூமை நோக்கி  உனக்கு நீ பிறந்த கதை தெரியுமா?  என்கிறார். வியப்பு மேலிட தெரியும் என்கிறான் வில். அக்கதையை ரீல் அறுந்து தொங்கும் வரை  பலநூறு தடவை ஓட்டியிருக்கிறார்  என் தந்தை என்கிறான். அன்று ஓர் மிகப்பெரிய கொழுத்த மீனைப் பிடித்தேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவை அத்தனையும் பொய்  என்கிறான் வில். அப்படியா?!!! உனக்கு அன்று நடந்த உண்மையான கதை தெரியுமா?!!!! என்று கேட்கிறார் மருத்துவர். தெரியாது என்கிறான் வில் ப்ளூம்.

ன்றைய நாள் மதிய வேளை மூன்று மணிக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் சாதாரணமாகத் தான் நீ பிறந்தாய்!!!. மருத்துவரால் தேதி  கணிக்கப்பட்டு, எதிர்பார்க்கப்பட்ட ஒரு வாரத்திற்கு முன்பே நீ பிறந்து விட்டமையால்,  வெளியூருக்கு சென்றிருந்த உன் தந்தையால் நீ பிறக்கையில் அருகே இருக்க இயலவில்லை. அந்த குறையை ஈடு செய்யவே தன் திருமண மோதிரத்தை தூண்டிலில் இணைத்து   பெரிய அரியவகை மீனான உன்னைப் பிடித்ததாக பெருமையுடன் அனைவரிடமும் கூறிவந்திருக்கிறார் எட்வர்ட். நடந்த உண்மையை விட உன் தந்தையின் புனையப்பட்ட  கதை தான் எனக்குப் பிடிக்கிறது , அது ஏன் உனக்குப்பிடிக்கவில்லை?!!!  என்று வியக்கிறார். 

ப்படி தன் தந்தை சொன்னது அனைத்தும் சற்றே மிகைப் படுத்தி சொல்லப் பட்ட உண்மைகளே என்பதை   அறிகிறான் வில் ப்ளூம்.  தன் தந்தை ஒரு சிறந்த கதை சொல்லி, இது அநேகருக்கு கிடைக்காத பாக்கியம், ஆனால் அவரை நிறைய முறை தன் ஆர்வமின்மையால் நோகடித்திருக்கிறோம் என்று எண்ணி வருந்துகிறான் . கடைசியில் தன் தந்தைக்கு அருகே சென்று அமர்ந்தவன் அவரால் பேசமுடியாததால் கதை சொல்லமுடியாமல் போக, அவர் இறப்பைப் பற்றிய கதையை அவரின் படுக்கையில் அமர்ந்து அவருக்கே திரும்ப சொல்கிறான். அங்கே கதை தீவிரமடைந்து எட்வர்ட் &  வில் கண்களில் பரவசம் தரும் காட்சியாக விரிகிறது. வில்ப்ளூமும் எட்வர்டும் ஊருக்கு அருகே ஓடும் ஒரு ஆற்றை நோக்கி காரில் வேகமாக பயணிக்கின்றனர், அங்கே ஆற்றை நெருங்கியதுமே எட்வர்ட்டை மகன் வில் கைகளில் தூக்கிக்கொள்கிறான், தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஆற்றுக்குள் போகும் வழியில் எட்வர்டின் நண்பர்கள் அனைவரும் குறுக்கிட்டு,மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒருவர் பின் ஒருவராக எட்வர்டுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்புகின்றனர்.இப்படி ஒரு மரணம் தழுவுதலை நாம் வாழ்நாளில் பார்த்திருக்கமாட்டோம்.

ற்றுக்குள் முழ்ங்கால் தண்ணீரில் இறங்குகிறான் வில். அங்கே தன் அம்மா சாண்ட்ரா எட்வர்டை நோக்கி இதழ்மலர்ந்து சிரித்தபடி இருக்க, எட்வர்ட் தன் திருமண மோதிரத்தை எச்சில் கொண்டு ஈரப்படுத்தி பின்னர் கழற்றி அவளிடம் தந்துவிடுகிறார். வில் அங்கே நட்டாற்றுக்குள் சென்றதும் அவரை அப்படியே நீரில் ஒரு மீனை விடுவது போல் விடுகிறான், நீரில் மெல்ல மூழ்குகிறார் எட்வர்ட். வில் இப்போது அப்பாவை மூழ்கடித்த இடத்தில் ஒரு பெரிய கொழுத்த மீன் சுற்றிக்கொண்டு வேகமெடுத்துப் போவதை பார்க்கிறான். இப்போது நாம்  மருத்துவமனையைப் பார்க்கிறோம். எட்வர்டும் நெடுநாட்கள் கழித்தேனும் மகன் வில் தன்னை , அவன் மேல் வைத்துள்ள தன் பாசத்தை புரிந்து கொண்ட மகிழ்ச்சியிலும் திருப்தியிலும் மெல்ல அனுபவித்து கண்கள் மூடி இறக்கிறார் .

மறுநாள், எட்வர்டின் இறுதி ஊர்வலம் நடக்கிறது, அன்று நடந்ததைப்போன்ற   ஒரு நிகழ்வை வில் ப்ளூம் தன் வாழ்நாளில் சந்தித்ததேயில்லை. அன்று அவனுக்கு அடுக்கடுக்கான இன்ப அதிர்ச்சிகள் காணக்கிடைத்தன. தந்தை எட்வர்ட் ப்ளூமுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு யாருக்கும் சொல்லி அனுப்பாமலே , தந்தை சொன்ன வீரபிரதாபக் கதைகளில் வந்த மாந்தர்களை ஒன்றன் பின் ஒன்றாக   சந்திக்கிறான் வில் ப்ளூம். முதலில் அந்த ஏழு அடி ராட்சத மனிதன்.

ரண்டாவதாக ஒரே மாதிரி இருக்கும் உடலுக்கு மேலே ஒட்டிப்பிறந்த கொரிய இரட்டைச் சகோதரிகள், தங்களின் இரண்டே கால்களின் நடந்து வந்து மரியாதை செலுத்துவதைப் பார்த்து அக மகிழ்கிறான். நெக்குறுகியவன்,வெட்கித்  தலைகுனிகிறான்.  தந்தைமீது சொல்லொனா பக்தி பிறக்கிறது, இதோ இப்போது மூன்றாவதாக தந்தை எட்வர்டுடன் ராணுவத்தின் ஒன்றாக பணியாற்றிய ராணுவ வீரர்களும் அங்கே வருகின்றனர்.  இதுவரை தன் பெருமையை தானே கூறக்கேட்டிருந்த வில் ப்ளூம் முதல்முறையாக தந்தையின் பெருமைகளை பிறத்தியார் கூறக் கேட்கிறான். அவர்கள் நிறுத்தாமல் எட்வர்ட் ப்ளூமின்  பெருமைகளைப் பேசுகின்றனர். புளங்காகிதம் அடைகிறான் ப்ளூம். 

னைவரும் ஒருமனதாக "Edward was a Social Person" என்று போற்றுகின்றனர். சிறுவயது முதலே வீரபிரதாபங்கள் பொருந்தியக் கதைகளை சொல்லும் தன் தந்தை போல இவ்வுலகில் எத்தனை பேருக்கு கதைசொல்லி தந்தை கிடைப்பார்கள் என்று வியக்கிறான் வில் ப்ளூம். தன் தந்தையை தனக்கு கிடைத்த பொக்கிஷமாக கருத ஆரம்பித்துவிட்டான் . தன் தந்தையின் வீரபிரதாபக் கதைகள் அழிந்துவிடக்கூடாது என்று அவன் தன் மகன்களுக்கும் அவற்றை சொல்கிறான். வில் ப்ளூமின் மனமாற்றம் மனைவிக்கும் அவன் அம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. தந்தையைப்போல ஒரு சாகச வீரனாக இல்லாவிட்டாலும் கைதேர்ந்த ஒரு கதைசொல்லியாக ஆகிக்கொண்டிருக்கிறான் வில்ப்ளூம்.

ன்ன ஒரு பரவசமளிக்கும் படம் இது?!!!இவ்வளவு நேரம்,எப்படி இப்படி ஒரு நம்ப முடியாத மாயாஜாலம் போன்ற திரைப்படத்தை,அனுபவித்து ஊன்றி பார்த்தோம் என்று ஆச்சர்யப்படவைக்கும். படம் முடிந்தவுடனும் காதுகளில் ரீங்காரமிடும் டான்னி எல்ஃப்மேனின் அற்புத இசையைப் பற்றி சொல்லிகொண்டே போகலாம். பிலிப் ரூஸ்லாட்டின் அபாரமான ஒளிப்பதிவு வாழ்நாளில் ஒருவரால் மறக்கமுடியாது. இயக்குனர் டிம் பர்ட்டனின் வாழ்நாள் சாதனையாக இப்படத்தின் இயக்கத்தை சொல்லிக்கொள்ளலாம்.நடிகர் ஜேம்ஸ் மெக் க்ரகொர் மிகச்சிறந்த நடிகர்.தந்தை பாத்திரத்துக்கு மிகவும் நன்றாக பொருந்தினார்.வாழ்நாளில்  படம் பார்த்த யாரும் மறக்க முடியாத படம் இது.

 படத்தின் இறுதிக்காட்சியின் காணொளி யூட்யூபிலிருந்து அவசியம் பாருங்கள்;-

படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-

Directed by Tim Burton
Produced by Dan Jinks
Bruce Cohen
Richard D. Zanuck
Screenplay by John August
Based on Novel:
Daniel Wallace
Starring Ewan McGregor
Albert Finney
Billy Crudup
Jessica Lange
Alison Lohman
Steve Buscemi
Danny DeVito
Helena Bonham Carter
Hailey Anne Nelson
Music by Danny Elfman
Cinematography Philippe Rousselot
Editing by Chris Lebenzon
Studio Jinks/Cohen Company
The Zanuck Company
Tim Burton Productions
Distributed by Columbia Pictures
Release date(s) December 10, 2003 (2003-12-10)
Running time 126 minutes
Country United States
Language English
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)