ப்ராஞ்சியெட்டன்&த செயிண்ட்[ Pranchiyettan & the Saint] [ இந்தியா] [ மலையாளம்][2010]

நான் வியந்திருக்கிறேன்,மலையாளத்தில் மட்டும் எப்படி? , உச்ச நடிகர்களான மம்மூட்டியும், மோகன்லாலும், ஏனைய பல நடிகர்களும் ஓய்வே இல்லாமல் வேலை செய்கிறார்கள் என்று !!! உதாரணத்துக்கு 2010ல் மம்மூட்டி நடித்து வெளியான படங்கள்= 6, மோகன் லால் நடித்து வெளியான படங்கள்=3  . நம்மூரில் உச்ச நடிகர்கள், இளம் நடிகர்கள் பேதமில்லாமல் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள்  தான் செய்கின்றனர், இயக்குனர்கள் சொல்லவே வேண்டாம்.  அதுவும் பலசமயம் விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போன்ற படைப்புகளை தந்து விட்டு, என்னவோ கார்கில் போருக்கே சென்று வந்தது போல சினிமா ஷூட்டிங் முடிந்தபின்னர் அடிக்கும் ஓய்வுக்கொட்டம் இருக்கிறதே?!!!  மலையாள நடிகர்களைப் பார்த்து தேனியின் சுறுசுறுப்பு என்றால் என்ன என்பதை இவ்விஷயத்தில் ஒருவர் கற்றுக் கொள்ளலாம்.அதனால் தான் அங்கே வெறும் இரண்டே கோடி ரூபாயில் படைப்புகள் சாத்தியாமாகிறது.

சென்ற வாரம் மம்மூட்டியின் ப்ராஞ்சியெட்டன்&த செயிண்ட் பார்த்தேன்.  இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படி ஒரு தரமான திரைப்படத்தை  ரஞ்சித் எப்படி இயக்க முடிந்தது? என்று மிகவும் ஆச்சர்யமும் பொறாமையும் எழுந்தது.திரைவிழாக்களுக்கு கூட விண்ணப்பிக்க தகுதியுள்ள படம்.  நம்மூரில் எப்போது இதுபோல நல்ல திரைப்படங்கள் குறைந்த பொருட்செலவில் வரும் ?!!! என்று ஏங்க வைக்கிறது. அருமையான, புதுமையான கதை இது,  ஒரு திரைப்படங்களின் கதையை இயக்குனர் யோசிக்க ஹவாய் தீவுக்குப் போய் அறை எடுக்க வேண்டிய அவசியமேயில்லை. நாம் வாழும் சூழலிலேயே ஆயிரமாயிரம் கதைகள் உண்டு என நிரூபித்த படம். அதை நகைச்சுவையாகவும் சமூக சிந்தனையுடனும் சொன்ன ரஞ்சித் மிகவும் பாராட்டுக்குரியவர்.

படத்தின்  கதை:-
அரிப்ராஞ்சி  என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அரிசிக்கடை ஃப்ரான்ஸிஸ் தனக்கு வாழ்வில் பெரிய அளவில் பொருட்செல்வங்கள் கிடைத்தும் ஏனைய முக்கிய செல்வங்களான கல்வி, நல்ல மனைவி, மக்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்றிருக்கும் மனிதர். இவர் வாழ்வில் எடுத்த ஒரு அற்புதமான , இன்றியமையாத முடிவு, இறந்து போன அவரின் சொந்த பந்தங்களை, இயேசுவின் சீடரில் ஒருவரான ஃப்ரான்ஸிஸையே இவர் கண்முன்னே தோன்ற வைக்கிறது. உலகில் யாருக்குமே கிடைக்காத பெரிய செல்வம் இறை  தரிசனம். அது கிடைக்க அவர் அப்படி என்ன தான் சாதித்தார்?!!!

ப்ராஞ்சியெட்டனை சுற்றி அவர் தரும் காசுக்காகவும், அவர் தரும் உணவு, குடிக்காக எப்போதும் ஒரு காக்காய் பிடிக்கும் கூட்டத்தை நாம் பார்க்கிறோம். சமூக அந்தஸ்து வேண்டி அவர் தன் நண்பன் ஜோசுக்கு எதிராக கிளப் ப்ரெசிடெண்ட் பதவிக்கு போட்டியிட்டு மண்ணைக் கவ்வுகிறார். இளம் வயதில் தன் சக மாணவி ஓமனாவை அவன் இவரைப்பற்றி நிறைய போட்டுக்கொடுத்து  வெறுப்பை உண்டு பண்ணி தட்டிச் சென்ற அவமானமே இன்னும் இவரால் தாங்க முடியவில்லை. இனி எந்த பதவியும் வேண்டாமென்றாலும் அல்லக்கைகள் விடுவார்களா?

ப்ராஞ்சியெட்டன் இதுவரை நான்கு இதய அறுவை சிகிச்சைக்கு பண உதவியளித்திருக்கிறார்.அதை இவரே வாய்விட்டு வெளியே சொன்னாலும் கூட அது வெளியே யாருக்கும் தெரியாமல் போகிறது,அது தான் நேரம்.ஆனால் அது இறைவன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இது புரியாமல் ப்ராஞ்சியேட்டன் சமூகத்தில் விரைந்து புகழ்பெற, கலை நிகழ்ச்சிகளுக்கு, அரசியல் கூட்டங்களுக்கு நிறைய பணம் நன்கொடையாக தந்தால் விழா தலைமை கிட்டும் என்று அல்லக்கைகள் சொல்ல , அதே போல பணம் தருகிறார் ப்ராஞ்சி. இருந்தும் விழா மேடையில் இவர் அமர்ந்திருந்த நாற்காலி படிப்படியாக பறிக்கப்பட்டு இவர் கடைசியாய் சென்று அமர , அதுவும்  ஒரு பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய எழுத்தாளருக்கு பறித்து தரப்படுகிறது, மிகவும் நொந்து போனவர் இவரின் அல்லக்கைகளால் மீண்டும் உசுப்பேற்றப்பட்டு இப்போது பத்மஸ்ரீ பட்டத்துக்கு ஆசை காட்டப்படுகிறார். அவர் கலைமாமணி விருது வாங்க ஆசைப்படிருந்தாலும் தமிழ் நாட்டின்  நகைப்புக்குரிய அவ்விருதை பத்தோடு பதினொன்றாக  கருணாநிதியின் கையாலேயே வாங்கியிருக்க முடியும்.ஆனால் பத்மஸ்ரீ என்றால் சும்மாவா?!!!

த்மஸ்ரீ பட்டத்துக்கு,முதல் கட்டமாக ஒரு கதாசிரியனிடம்  சென்று ஒருலட்சம் ரூபாய் தந்து இவரைப்பற்றிய போலி ப்ரொஃபைல் ஒன்றை தயாரிக்கின்றனர், டெல்லியில் நல்ல அந்தஸ்துள்ள ஒரு அரசியல் தரகனைப் பிடித்து, ஒன்றரை கோடிரூபாய் கொடுத்து அவன் பத்மஸ்ரீ வாங்கித்தருவான் என்று நம்பியவர் கடைசியில் எமாந்தும் போகிறார். பதமஸ்ரீ பட்டம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் இவர் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம். பார்வையாளருக்கு நிச்சயம் சந்தனம் மிஞ்சினால் ***யில் என்னும் பழமொழி நினைவுக்கு வருமளவுக்கு அட்டகாசம் செய்கிறார். அவ்விருது கிடைக்காமல் போக மிகவும் நொந்து போகிறார் ப்ராஞ்சியேட்டன்.அவரின் அல்லக்கை மேனன் மனம் தளாறாமல் இவரை செவாலியே விருதுக்கு விண்ணப்பிக்க ஆலோசனை சொல்லி உசுப்பேத்தி அடிவாங்கும் இடமெல்லாம், மிகவும் கலக்கல்.

வருடனே தங்கியிருக்கும் ஒரு சமையல்காரர்[என்னபெயர்] செம வேடம். சதா ப்ராஞ்சியேட்டனைச் சுற்றி ஆட்கள் ஈமொய்பது போல இருக்க.அங்கே எதிர்ப்பட்டு, யாரெல்லாம் சாப்பிடப்போறா?இன்று யாருக்கெல்லாம் இங்க சாப்பாடு? இன்று யாருக்கெல்லாம் அரிசி உலையில் போடனும் என்று மாற்றி மாற்றிக் கேட்டு சிரிக்க வைக்கிறார். என்கடன் வடித்துக்கொட்டுவதே என்றிருக்கும் நிறைய உஸ்தாத்களை நான் பார்த்திருக்கிறேன், எனக்கு குபுக்கென்று சிரிப்பு வந்து விட்டது. இயக்குனர் ஓமனா [குஷ்பு] & ஜோஸ் [சித்திக்] கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெரிய மனிதர்கள் போர்வையில் ஆதர்ச தம்பதிகளாக தோற்றமளிக்கும் பொய்யான மனிதர்களின்,அவர்களின் கள்ளக் காதல்களையும் நன்றாகக் கிழித்திருக்கிறார்.

ந்தேகச்சாவுகள் எப்படி சமூகத்தில் நிகழ்கின்றன?!!! நல்ல மனைவியர் கூட   சந்தேக புத்தி கொண்ட குடிகாரக் கணவனால்    கொலையுறுகின்றனரே?அது ஏன்?. ஆத்திரப்பட்டு கொலைகாரனான கணவன் அதன் பின்னர் படும் பாடு, அதன் பின்னர் அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகள் படும் பாடு. அதை மிகத் தெளிவாக அலசியிருக்கிறார் இயக்குனர் .படத்தில் பாலி [paulie] என்னும் 15 வயது சிறுவன் பாத்திரம், அவனது பெற்றோர் பாத்திரம் யாராலும் மறக்கவே முடியாது. பாலிக்கு ட்யூஷன் வாத்தியாராக வரும் ஜெகதி ஸ்ரீகுமார் செம ரகளை. அதே போல இண்டீரியர் டிசைனராக வந்த பிரியாமணியின் வேடம் மிகவும் அழகு.யதார்த்தம். ஒன்று ஒருவனுக்கு மறுக்கப்படுகின்றதென்றால் அவனுக்கு அதைவிட உயர்ந்த மற்றொன்று கிடைக்கப்போகிறது என்னும் விதி உண்டு, அதை உணர்த்தும் கதாபாத்திரம். சினிமாவிலேயே முதல் முறையாக ஒரு நடிகை முதுகில் எத்தப்பட்டு விழுந்திருப்பார் என்றால் அது ப்ரியாமணியாக தான் இருக்கும். செம காமெடி அந்த இடம்.

பெற்றால் தான் பிள்ளையா?!!! என்னும் சமூக சீர்திருத்தம் கூட நன்கு அலசப்பட்டிருக்கின்றது, 118கோடி பேர் வசிக்கும் நம் சமூகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் எத்தனையோ பேர் அடிப்படை வசதியற்று வாழ்கின்றனர், அவர்களின் நல்ல படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் வசதி செய்து தர சமூகத்தில் உள்ள பணக்காரர்கள் மனது வைத்தால் நிச்சயம் முடியும் என்பதை  போகிற போக்கில் பதிந்திருக்கிறார். சினிமா என்பது மிகவும் சக்தி வாய்ந்த மீடியம். இதை வைத்து ஒருவனை முட்டாள் ஆக்கவும் முடியும். அதே முட்டாளை குணப்படுத்தவும் முடியும் என்பதை சொன்ன படம். வெகு நாட்களுக்கு பின்னர் நகைச்சுவையுடன் கூடிய சமூக சிந்தனைப்படம் பார்த்த திருப்தி கிட்டியது .


டத்தில் ப்ராஞ்சியேட்டன் மேடையேறுகையில், அவரின் மன உறுதியை குலைக்க அவரின் டாக்டர்-விரோதக்கார நண்பன் ஜோஸ், ஆமாம் நீ அந்த மாட்டுக்கொட்டகையில் வேலை செய்தவளின்  மார்பை  பிடித்து அழுத்தினாய் தானே?!!! அது இடதா அல்லது வலதா? என்கிறார். ப்ராஞ்சியேட்டன் திருதிருவென விழிக்க, அட இருப்பதே இரண்டு தானே? அதிலென்ன குழப்பம் என்று கேலிசெய்து விட்டு இறங்கிச்செல்கிறார். இது தான் சேட்டன்  குசும்பு போலும். இலை மறைவு காய்மறைவாக இருக்கவேண்டியவற்றை இப்படி சமூக சிந்தனையுடன் கூடிய நகைச்சுவைப்படத்தில் ஒரு ஆபாச வசனமாக வைக்கும் சின்ன புத்தி தேவையா ?!! எனப்பட்டது. என்ன தான் கேரளம் , இலக்கியங்களை வாசித்து தேர்ந்த ஒரு சமூகம்  என்றாலும் இப்படியா?!!!

டத்தின் இசையும் பாடலும்,ஒளிப்பதிவும் சராசரிதான் என்றாலும்.நடிப்பும் நகைச்சுவையும் சரிகட்டுகிறது.  படம் சொன்ன செய்திக்காகவே பார்க்கலாம். தாராளமாக இதை முறையாக உரிமை வாங்கி தமிழில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கலாம். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். அப்படிப்பட்ட கதை.  ஆனால் தமிழில் எடுக்கையில் இக்கதையை உயிரோட்டத்தை குலைத்து ஹீரோவுக்காக மாற்றி அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்துவிடும். அதையும் யோசிக்கவேண்டும். சரிதானே நண்பர்களே!!!?
 ====0000====
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
====0000====
திரைப்படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-
Directed by Ranjith
Produced by Ranjith
Written by Ranjith
Starring Mammootty
Priyamani
Jesse Fox Allen
Innocent
Master Ganapathy
Siddique
Khushboo
Jagathy Sreekumar
Sasi Kalinga
Music by Ouseppachan
Cinematography Venu
Editing by Vijay Shankar
Studio Play House
Distributed by Play House Release
Release date(s) September 10, 2010 (2010-09-10)[1]
Country India
Language Malayalam
Budget Indian Rupee ₹1.9 crore (US$421,800)[2]
Gross revenue Indian Rupee ₹5.5 crore (US$1.22 million) in 80 days [3]

18 comments:

மைந்தன் சொன்னது…

வழக்கம் போலவே நல்ல படம் பற்றிய அறிமுகம் நண்பரே.நன்றி

சிவபாலன் சொன்னது…

very good review,thanks for sharing it.i love to watch
mamootty films

பெயரில்லா சொன்னது…

அருமையான விமர்சனம்.முழுக்கதையையும் எழுதியிருந்தால் எங்களைப்போல பிறமொழிப்படங்கள் பார்க்க முடியாதவர்களுக்கு புரியும் அல்லவா?

வினோத் கெளதம் சொன்னது…

நான் வியந்திருக்கிறேன், ஒரே நாள்ல எப்படி ரெண்டு பெருசு பெருசா..பதிவ சொன்னேன்.

மைதீன் சொன்னது…

ஒரே நாளில் இரண்டு பதிவு, அதுவும் மிக நீளமாக.. வாழ்த்துக்கள்.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இயக்குனர் ஓமனா [குஷ்பு] & ஜோஸ்[சித்திக்] கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெரிய மனிதர்கள் போர்வையில் ஆதர்ச தம்பதிகளாக தோற்றமளிக்கும் பொய்யான மனிதர்களின்,அவர்களின் கள்ளக் காதல்களையும் நன்றாகக் கிழித்திருக்கிறார்.//
அட..நல்லாருக்கும் போலிருக்கே

உலக சினிமா ரசிகன் சொன்னது…

நண்பரே நீங்கள் குற்றம் சுமத்திய அந்த ஆபாச காமெடி எனக்கு புரியவில்லை தியேட்டரில்.உங்கள் எழுத்தில் ரசித்தேன்.நன்றி.
ஆமாம்...ஒரே நேரத்தில் நாஞ்சிலாரும்...நீங்களும் ஒரே படத்திற்க்கு விமர்சனம்!!!!!!!!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@மைந்தன்
நண்பா,
வருகைக்கும் கருத்துக்கும்நன்றி

@சிவபாலன்
மகிழ்ச்சி நண்பா,
வருகைக்கும் கருத்துக்கும்நன்றி

@பெயரில்லா
நண்பா,
வருகைக்கும் கருத்துக்கும்நன்றி
இதுபுதிய படம் அல்லவா?
தவிர இதற்கு மொழி தேவையில்லை.
புரிவதற்கு,அதனால் தான் முழுக்கதையை சொல்லவில்லை
வருகைக்கும் கருத்துக்கும்நன்றி

@வினோத் கவுதம்
நீ வியந்திருக்கிறாயா?விய விய
இது ஒரே நாள்ல போடலைய்யா.நேற்று சம்சாரா எழுதினேன்.
இன்று ஆஃபீஸ் வந்தவுடன் இது.
வருகைக்கும் கருத்துக்கும்நன்றி

@மைதீன்
நண்பா,நேற்று சம்சாரா எழுதினேன்.
இன்று ஆஃபீஸ் வந்தவுடன் இது எழுதினேன்.
வருகைக்கும் கருத்துக்கும்நன்றி

@உலகசினிமா ரசிகன்
தலைவரே,
மிக்க மகிழ்ச்சி,
அதை என் மலையாளி நண்பர்களிடம் கேட்டேன்.
அது அப்படி ஒன்றும் பழுதில்லை என்கின்றனர்.
அப்போ அங்கே அது பெரிய விஷயமில்லையா?
கேட்டு சொல்லுங்கள்.
இன்று நாஞ்சில் பிரதாப்பின் பதிவு பார்த்து விட்டு தான் இதை ஆஃபீஸிலேயே எழுதினேன்,ஆஃபீஸில் அநியாயத்து வேலை இல்லை.என்ன செய்ய.அது தான் தினம் ஒரு பதிவு.
வருகைக்கும் கருத்துக்கும்நன்றி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

படம் செமயா இருக்கும் போல.. உங்க விமர்சனம் செம டீட்டியெலா இருக்கு.. கத்துக்கறேன்

யுவா சொன்னது…

தமிழில் எடுத்தா இன்னொரு "கேவலன்" தான்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@சிபி செந்தில்குமார்
அப்புடியா?நன்றி நண்பரே

@யுவா
சரியா தான் சொன்னீங்க நண்பரே
நன்றி

செ.சரவணக்குமார் சொன்னது…

ரஞ்சித் கேரளத்தின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். படைப்பு நேர்த்தியும் கலையார்வமும்கொண்ட படைப்பாளி. அவரது சமீபத்திய நல்ல படைப்பு இது. ரொம்பவே ரசித்துப்பார்த்தேன். சிறுவன் பாலி கதைக்குள் வந்தவுடன் படமே வேறு ஒரு தளத்திற்குச் சென்றுவிடுகிறது. மம்முட்டியும் மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

வழக்கம்போலவே சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். எனினும் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது நண்பரே.

தமிழில் இந்தப்படம் சாத்தியமில்லை நண்பா.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@செ.சரவணகுமார்.
நண்பரே
ரஞ்சித்தின் திரக்கதா, கையொப்பு, பாலேரி மாணிக்யம்,எல்லாமே எனக்கு பிடித்தவை. இன்னும் விளக்கமாக சொல்லலாம் தான். ஆனால் எனக்கு கிடைத்த அந்த பாலியின்
பாத்திரத்தின் மீதான் தாக்கம் எல்லோருக்கும் கிடைக்கட்டும், எதிர்பாராத பரவசமாக இருக்கட்டும் என்று தான் மிகவும் விரிவாக செல்லவில்லை.தவிர புதிய படம் வேறு ஆகையால், எல்லோரும் தேடிப்பார்க்கட்டும்
என்று நிறுத்திவிட்டேன். இந்தப்படத்தை உச்ச நடிகர்களுக்காக எடுக்காவிட்டாலும் நாசரையோ, பிரகாஷ்ராஜையோ வைத்துக்கூட தமிழில் பிரமாதமாக செய்யமுடியும். நன்கு வெற்றி பெறும் என்பது என் எண்ணம், கத பரயும் போலை குசேலன் என்று மாற்றிய அல்பகோரத்தை நான் இன்னும் மறக்கவில்லை.

பெயரில்லா சொன்னது…

'நான் ஏன் பிறந்தேன்’... எம்.ஜி.ஆரால் விகடன் இதழில் எழுதப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர். அந்தத் தொடரில் இருந்து சில பகுதிகள் இங்கே...

மக்கள் புரிந்துகொள்கின்றனர்!அந்தக் காலத்தில் தி.மு. கழகத்தின் பிரசாரப் பொதுக் கூட்டங்கள், நாடகங்கள், பாட்டுக் கச்சேரிகள் போன்றவை, அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் நண்பர்களால் பெரிய அளவுக்குத் தடை செய்யப்பட்டன.

சட்டம் போட்டுத் தடை செய்யவில்லை. பேசுவதற்கு நல்ல இடங்களைத் தருவது இல்லை. இத்தனை மணிக்குள் கூட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று திடீர்க் கட்டளைகள் வரும் அதிகாரிகளிடம் இருந்து!

கூட்டத்தில் பேசுகிற பேச்சாளர்கள் பேசி விட்டுத் திரும்பிப் போகும்போது வெட்டப்பட்டுக் கொலை செய்யப்படுவார்கள், அல்லது கை கால்கள் முடமாக்கப்படும்.இப்படி ஏதாவது ஒரு வகையில் பிரசாரகர்களின் உயிருக்கோ அல்லது மக்களைச் சந்திப்பதற்கோ தடை ஏற்படுத்தும் வன்முறைச் செயல்கள், தாராளமாக நடைபெற்றன. எப்படியோ நாங்கள் மக்களைச் சந்திக்க முடியாமல் செய்துவிட முடிவு.

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இன்று தமிழகத்தில் மீண்டும் காணுகிறோம். அன்று எந்த தி.மு.க-வினர் அடிபட்டார்களோ, அவர்களே இப்போது பிறரை அடிக்கிறார்கள், வெட்டுகிறார் கள். யாரை? தங்களோடு இருந்து அன்று அடி வாங்கித் தி.மு.கழகத்தைக் காப்பாற்றி யார் வளர்த்தார்களோ... அதே உடன்பிறப்புக்களைத்தான் தாக்குகிறார்கள்.

இன்று ஆட்சியில் இருக்கும் தி.மு. கழகத்தை அமரர் அண்ணாவின் கழகமாகக்கொண்டு, தங்களது உயிரையும் உடைமைகளையும் தியாகம் செய்து, தமது கண்ணீரையும் செந்நீரையும் எருவாக்கி, தங்களே அழித்துத் தி.மு.கழகத்தை வளர்த்து, இன்றைய ஆட்சியாளர்கள் அங்கு இருப்பதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யாரோ, அந்தத் தியாகிகளையே இன்று அரசோச்சும் தி.மு.க-வினரும் (மீதம் இருக்கும் ஒரு சிலரும்) தங்களது அரசின், அதிகாரிகளின் உதவி பெற்றுத் தாக்குகிறார்கள்.

இப்படி நடப்பதுதான் 'அரசியல்’ என்று சொல்லுவார்களேயானால், வருத்தத்தோடு எழுதுகிறேன்... அரசியல் என்ற பெயரையே அகராதியில் இருந்து மாற்றுவதற்கு நல்லறிவாளர்கள் முயன்றாக வேண்டும்!

இன்றைய ஆளும் கட்சியினர் சமூக இயலையும், பொருளாதார இயலையும், அரசு இயலையும், இயல் - இசை - நாடகம் என்ற முத்தமிழில் உள்ள அந்த இயலுக்குத் தரப்படும் கருத்தில் உரை நடை என்று கருதி, அதில் தங்கள் திறமையைக் காட்டுவதில்தான் முக்கியக் கவனத்தை வைத்திருக்கிறார்கள்.

தன்மை, தகுதி, ஒழுக்கம் என்ற பொருள்கள் போய், 'பேச்சு’ என்ற பொருளுக்கு இலக்காக, அந்த 'இயல்’ தனது 'இயல்’ மாறிவிட்ட அவல நிலைமை!

மக்களாட்சித் தத்துவத்தில், மக்கள் தமது கண்டனத்தை வெளியிட எத்தனையோ வழிமுறைகள் வரையறுத்துக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்று... கறுப்புக் கொடி காட்டுவது!

அமரர் நேரு அவர்கள் சென்னைக்கு வந்தபோது, தமிழக மக்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட, அமரர் அண்ணா அவர்கள் அந்த முறையைத் தமது தம்பிகளுக்கு நினைவுபடுத்தி அற வழியில் செயல்பட உத்தரவிட்டார். அன்றைய அண்ணாவின் தி.மு. கழகம் நடந்திற்று அறவழியில் அமைதியாக!

ஆனால், காங்கிரஸ் கட்சியினரும் அன்றைய அதிகாரிகளும் சேர்ந்து தி.மு.கவினரைத் தாக்கினார்கள். வீட்டுக்குள் இருந்த திரு.கே.ஆர்.இராமசாமி, திரு.எஸ்.எஸ்.இராஜேந்திரன், திரு. டி.வி. நாராயணசாமி அவர்களையும், என்னையும் எச்சரிக்கையாகக் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். ஆயிரம் ஆயிரம் பேர்களாகக் கைது செய்தனர்.

அன்று ஆட்சியில் இருந்தவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குக் கறுப்புக் கொடி காட்ட அனுமதிக்கப்பட்டனர். அண்மையில் ஓரிரண்டு இடங்களில் எனக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவெடுத்தனர். இன்றைய ஆளும் கட்சியினரான மாண்புமிகு கருணாநிதிக் கட்சியினர். அவர்கள் அந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு, போலீஸாரே சிறந்த பாதுகாப்புக் கொடுத்திருந்தனர்.

கறுப்புக் கொடி காட்டுகின்ற திரு.கருணாநிதியின் கட்சியினருக்கென நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களைச் சுற்றிப் பலத்த போலீஸ் படையினரைத் தக்க ஆயுதங்களோடு நிறுத்தியிருந்தனர். அந்த போலீஸார் கறுப்புக் கொடி காட்டும் நண்பர்களைக் காத்து நின்றார்கள்.

ஆனால், அண்ணா தி.மு.க-வினர் தமிழகத்தின் இன்றைய அமைச்சர்களுக்குக் கறுப்புக் கொடி காட்ட முயலும்போது, குறிப்பிட்டவர்களை முன்னதாகவே கைது செய்கின்றனர். தொண்டர்களை அடிக்கின்றனர். அண்ணா தி.மு. கழகத் தினர் மீது பயங்கரமான தாக்குதலை நடத்துகின்றனர்.

இதுவும் ஜனநாயகம்தான் என்று இவர்கள் பேசுகின்றனர். அமரர் அண்ணா அவர்கள் கட்டிக் காத்த ஜனநாயகப் பண்புக்கும், திரு.கருணாநிதியின் கட்சியினர் நடத்தும் ஜனநாயகத்துக்கும் எத்தனை வேறுபாடு, மாறுபாடு என்பதை மக்களும் நேரிடையாகப் புரிந்துகொள்ளுகின்றனர்!

எஸ்.கே சொன்னது…

நண்பரே!

வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_18.html

மைதீன் சொன்னது…

படம் பார்த்துவிட்டேன் நண்பா! உண்மையிலே பிரமாதமான படம். பெயரை மாற்றுவதற்காக மம்மூட்டி படும் பாடு சிரிக்கவும் ,சிந்திக்கவும் வைத்தது.பகிர்வுக்கு நன்றி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அன்புள்ள நண்பா எஸ்கே
வலைச்சரம் ஆசிரியர் வாரத்துக்கு வாழ்த்துக்கள்.மிகச்சிறப்பான பகிர்வு.

சினிமா விமர்சமபதிவர்களை ஒருங்கே அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.சீனா ஐயாவுக்கும் நன்றி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@மைதீன்
நண்பரே மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)