படிக்காத மேதையும் பார்போற்றும் அதிசயமும்!!!

“Nature has created the form, not me.
Unlike the ‘trained’ fine artist who is fussy
about anatomical and technical details,
I make a quick job of the thing…”
—Nek Chand
ருமை நண்பர்களே!!!
பிறவி மேதைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்,அவர்களுக்கு உலகமே பள்ளிக்கூடம்,இயற்கையே அவர்கள் கற்கும் பாடம்,இயற்கையே அவர்களின் ஆசான். அவர்களுக்கு சம்பிரதாயமான ஏட்டுக் கல்வியில் அறவே ஈடுபாடு இருக்காது, அப்படிப்பட்ட பிறவி மேதை பத்மஸ்ரீ. நேக் சந்த் ஸெய்ணி  என்பவரை நீங்கள் அறிவீர்களா?!!!இவரே சண்டிகரின் ராக்-கார்டனை நிர்மானித்தவர் ஆவார். இவருக்கு சம்பிரதாயமான கட்டிடக்கலையில்,சிற்பக்கலையில்,ஊரக நிர்மாணிப்பியலில் தேர்ச்சியோ, பட்டயமோ கிடையாது,ஆனால் இவரது படைப்புகள் உலகமே போற்றும் இத்துறை மேதைகள் வியக்கும் வண்ணம் விஞ்சி நிற்கின்றது. நீண்ட நாளாய் இவரைப்பற்றி எழுதவேண்டும் என நினைத்தும் எழுத முடியவில்லை,எல்லாவற்றுக்கும் நேரம் வரவேண்டுமே?!!!

நேக் சந்த்  குர்தஸ்பூரில் [இன்றைய பாகிஸ்தான்] பிறந்தவர். இவரின் 23 வயதில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை   நிகழ்ந்தது, இவரின் குடும்பம் சண்டிகருக்கு மிகுந்த துயருக்கு பின்னர் குடியேறியது, அதே சமயம் சண்டிகரின் ஊரக வளர்ச்சிப்பணிகள் லெ-கார்ப்யூஷர் என்னும் புகழ்பெற்ற ஃப்ரெஞ்சு கட்டிடக்கலை வல்லுனரால்   வடிவம் பெறத் துவங்கியது, அந்த ஊரக வளர்ச்சிப்பணிகளில் ஒரு சாதாரண சாலை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார் நேக் சந்த். அவர் தன் பணிக்குப் பின்னான ஓய்வு நேரத்தை எப்படி கழித்தார் தெரியுமா?!!! ஒரு வருடமில்லை, இரு வருடமில்லை, 18 வருடங்கள், இவர் 18 வருடமாக ஊருறங்கும் நேரத்தில், ஊரார் யாருமறியா வண்ணம் தன் மனதில் உதித்த கனவுபுரியான சுக்ராணி என்னும் ராஜ்ஜியத்தின் ராக் கார்டனை தனி ஆளாக வடிவமைத்து நிர்மாணித்தார். அது 18 ஆண்டுகளுக்கு பின்னர் தான் ஊராரின் கண்ணில் பட்டு அம்பலமானது.

 இவருக்கு கிடைத்த மூலப்பொருட்கள் என்ன தெரியுமா?!!! பழைய பீங்கான் சுவர் மற்றும் தரை ஓடுகள். மின் விளக்கு பொருத்தும் பீங்கான் ஹோல்டர்கள், உடைந்து போன வாஷ் பேசின்கள்,கழிவறை கோப்பைகள்.பாட்டில்கள்,அந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு குப்பைகள் மலைபோல குவிக்கப்பட்டிருக்க இவர் இடிபாடுகளுக்கிடையில் துழாவி, குடைந்து தேவையானவற்றை பொறுக்கி எடுத்து சேமித்தும் வந்தார், அவற்றை மெல்ல இவரின் கனவு புரிக்கு கடத்தினார்.  அப்போது சண்டிகர் ஒரு சிற்றூர்.  மூலைக்கொன்றாக சில வீடுகள், பொது கட்டிடங்கள், திட்ட அலுவலகங்கள்  மட்டுமே அங்கே  உண்டு. 

மிகப்பெரிய சுக்னா ஏரிக்கு அருகில் வானமே தெரியாத வண்ணம் பசுமையான புதர்கள் மண்டி இருந்த குன்றுப்பகுதியில் தான் தன் சேகரித்த கட்டிடக் குப்பைகளை நேக்சந்த் கொட்டி வைத்தார். எத்தனை பெரிய உழைப்பு தேவைப்பட்டிருக்கும்?!!! மாஸ்டர் ப்ளான்கள், விஷன் ப்ளான், மிஷன் ப்ளான், ஸ்கெட்சுகள் அறவே கிடையாது, நாளுக்கு நாள் இவருக்கு உள்மனதில் கற்பனைகள் ,யோசனைகள் உதிக்க உதிக்க அதைக் கொண்டே சிற்பங்களும்  , வால் ம்யூரல்கள் என்னும் சுவர் சுதைகளும்  ,கோட்டை அரண்களும், நீர்வீழ்ச்சிகளும் மெல்ல உருவாக்கியபடியே இருந்தார். நாளாக ஆக இவர் ஏற்கனவே படைத்து வைத்த சிற்பங்களையும், கலைப்பொக்கிஷங்களையும் பார்க்க பார்க்க கற்பனை வளம் கூடுக்கோண்டே போயிற்று.அழகிய  மிருகங்கள், மனிதர்களின் பலவிதமான பாவனைகள், என சிருஷ்டித்துவிட்டார். இந்த இடம் ஏரிக்கு தண்ணீர் வரும் தடமாக இருப்பதால்  அரசு இதை  பாதுகாக்கப்பட்ட இடமாகவே கருதி வந்தது. ஊருக்கு மிகவும் ஒதுக்குப்புறமாக இருந்த இப்பகுதி  யார் கவனமும் பெறாமலே போனது.

1975ஆம் ஆண்டின் ஒருநாள் யாரோ சில பொதுப்பணித்துறையின் நில சர்வேயர்கள் இந்த ராக் கார்டனை  கண்டுபிடித்து அரசுக்கும் அறிவித்துவிட.    நேக் சந்த் 1957ஆம் வருடத்தில் துவங்கி படைத்த சிற்பங்களின் பெருக்கம்   பதினெட்டு வருடத்துக்குள்ளே 12 ஏக்கர் இடப்பரப்பை ஆக்கிரமித்திருந்தது.அது ராட்சத வேகம், உதவ யாருமே கிடையாது, அபார,அசராத கலைத்திறனும் இவரது குருதியில் இரண்டரக் கலந்து இதை சாதிக்கவைத்திருக்கிறது என்றால் மிகையில்லை. இவர் மீது வழக்கும் பதியப்பட்டது, வேலைக்கும் ஆபத்து வந்தது,  அரசாங்க இடத்தையும் , கட்டிட மூலப்பொருட்களை தன் சொந்த கனவு புரிக்கு பயன்படுத்தியது சட்ட  விரோதம் ,என்று அந்த ராக் கார்டனையே  இடித்து, நொறுக்கி அப்புறப்படுத்த வேண்டுமென்று உத்தரவாயிற்று.

நேக் சந்த் யாருடைய பாராட்டையும் எதிர்பார்த்தவரில்லை, படிக்காத மேதையான அவர் தன்னுள் உள்ளக்கிடக்கையாக பீரிட்டுக்கிளம்பிய கலைத் திறனை,வீணாய் கிடக்கும் ஓரிடத்தை தெரிவு செய்து சிற்பமாக வடித்ததை தவிர என்ன தவறு செய்தார்?!!! அரசின் உத்தரவால் அவர் மிகவும் மனம் நொறுங்கினார். அச்சமயம் இந்த ராக் கார்டனுக்கு சண்டிகர் பொதுமக்கள் தந்த ஆதரவு அபாரமானது, அத்தனை அற்புதமான எளிமையான் சிற்பங்களைக் காணும் ஒருவர் தன் வாழ்வில் தாஜ்மஹாலுக்கு அடுத்தபடியாக இன்னோர் செயற்கை பிரம்மாண்டத்தை கண்டதாகவே பெருமூச்சு விட்டனர்.

தை இடிக்கவே கூடாது, முறையாக பாதுகாக்கப் படவேண்டும் என வாதிட்டனர். இவருக்கு ஏகோபித்த மக்கள் ஆதரவு திரண்டவண்ணமிருந்தது. இவ்வளவு மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களை கணக்கில் எடுத்துக்கொண்ட  சண்டிகர் அரசு இதை பொதுமக்கள் பார்வைக்கு முறைப்படி திறந்து வைக்கலாம் என்று  1976 ம் ஆண்டு  புதுப்பொலிவுடன் திறந்து வைத்தது. நேக் சந்துதிற்கு 'ராக் கார்டன் சப் டிவிஷனல் பொறியாளர் என்ற சிறப்பான அரசுப் பதவியையும் வழங்கி  மாத சம்பளமும் , படிகளும்  50 உதவியாளரும் அவருக்கு  வழங்கியது குறிப்பிடட்தக்கது. இப்போதும் தன் 86 வயதில் மிகவும் சுறுசுறுப்பாக முழுநேரமும் சிற்பங்கள் வடிப்பதும் நிர்மாணிப்பதும்  பயிற்சியளிப்பதுமே இவருக்கு தொழில்,இவர் பல உலகநாடுகளுக்கும் சென்று இதுபோல மறுசுழற்சி கட்டிட கழிவுப்பொருட்கள் கொண்டு சிற்ப பூங்காக்களை ஸ்தாபிதம் செய்திருக்கிறார். 1983ஆம் வருடம் இந்த ராக் கார்டனை மிகவும் பாராட்டிய மத்திய அரசு ஒரு சிறப்பு தபால்தலையைக் கூட வெளியிட்டு நேக் சந்தை கௌரவித்தது.1984ஆம் வருடம் இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்து அழகுபார்த்தது மத்திய அரசு.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உடைந்த பீங்கான் , கண்ணாடித்துண்டு , மறு சுழற்சிக்கான கட்டிட பொருட்கள் ,சிப்பி,தேங்காய் ஓடுகள் எல்லாவற்றுக்கும் இவர் சேகரிப்பு நிலையங்களைத் துவங்கினார். இந்தத் தோட்டம் முழுக்க முழுக்க மண்ணில் மக்கக்கூடிய மறுசுழற்சி -கட்டிட மூலப்பொருட்கள் கொண்டே வடிவமைக்கப்பட்டது. 1996 ஆம் வருடம் இவர் ஃப்ரான்சு  நாட்டுக்கு கருத்தரங்கங்களுக்கு  சொற்பொழிவு ஆற்ற பாடங்கள் சொல்லித்தரவும்  அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் சென்றார். அச்சமயம் தேசவிரோத-விஷமிகள் இவரின் ராக்-கார்டனுக்குள்   புகுந்து நாசம் விளைவித்தனர். 

னால் பொதுமக்களின் பலத்த ஆதரவாலும் ராக் கார்டன் பாதுகாப்பு ஆணையம்   மூலமாகவும்  சிதைக்கப்பட்ட எல்லா சிற்பங்களையும் நேர்ப்படுத்தி, பழுது நீக்கி  காட்சிக்கு மீண்டும் வைத்தனர்.  அப்போது 12 ஏக்கராக துவங்கிய ராக் கார்டன் இப்போது 40 ஏக்கராக வளர்ந்து கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே எழில் கொஞ்சும் இயற்கையுடன் ஒத்த நீர்வீழ்ச்சிகள், அழகிய குளங்கள், விதவிதமான சிற்பங்கள்,சுவர் சுதைகள், சுட்ட களிமண் பொம்மைகளுக்கு பீங்கானால் பல வண்ண ஆடைகள்ன்னு ஒரே அட்டகாசம். ப்ரோக்கன் டைல்கள் என்று நம்மிடத்தில் கேவலமாக பார்க்கப்படும் மூலப் பொருட்களைக் கொண்டு இவர் மொசைக் ஓவியங்கள் அசாதாரணமான பின்நவீனத்துவ பாணியிலும் அசகாய மேதமையுடன் வடிவமைத்ததை கொண்டாடாத, எண்ணி போற்றாத படித்த மேதைகளே இவ்வுலகில் இல்லை. 

ந்த ராக் கார்டன் முதலில்  சுட்ட களிமண், சிறு கற்பாறைகளால், சிமெண்ட் மற்றும் சுண்ணாம்பு காங்க்ரீட் பொம்மைகள் என வடிவம் பெற்றது, பின்னாளில் அரசின் உதவியுடன் நீர்நிலைகள், வண்ண பீங்கான் மிருகங்கள்,விதவிதமான கலாச்சார மனிதர்கள் என நீண்டு  தற்போது பொழுது போக்கு, விளையாட்டுப்பகுதிகள் என ஓங்குதாங்காக வளர்ந்திருக்கிறது .உடைந்த பலவண்ண கண்ணாடி வளையல்களை அபாரமாக தொகுத்து  இவரின் ஆண் பெண் சிற்பங்களுக்கு புடவைகள் ,மேலாடைகளை இவர் போர்த்தியிருக்கிறார். 

ழகிய அலங்கார வளைவுகளுடனான   வாசல்களுடன் வண்ண மீன் காட்சியகமும் , குழந்தைகளுக்கான ஒட்டகச்சவாரியும், கோட்டை அரண்கள். வரிசை வரிசையான ஊஞ்சல்கள், அன்றாட நிகழ்வுகளுக்கு ,கலாச்சார, கலை நிகழ்ச்சிகள் நடக்கையில் அமர்ந்து பார்க்கும் திறந்தவெளி அரங்குகள், என கண்களுக்கு விருந்தாக உள்ளது. முதல்வன் திரைப்பட - ஷங்கரின் ரண்டக்கா, ரண்டக்கா பாடலுக்கு தோட்டா தரணி நாட்டுப்புற அமைப்பில் பிரம்மாண்டமாக மலைக்கு பெயிண்ட் அடித்து மிரட்டியிருப்பார், அதற்கெல்லாம் முன்னோடி ராக் கார்டன், தன்னலமில்லாத கலைத்தொண்டர். தான் சாதித்திருக்கிறோம் என்ற கர்வம்,தன்னிறைவு, திருப்தி கூட இன்னும் அடையாத ஒப்பற்ற,உன்னத பிறவிமேதை தான் இந்த  நேக் சந்த் ஸெய்ணி,இவரின் வாழ்க்கையை ஒரு ஆவணப்படமாகவோ, வணிகரீதியான படமாகவோ எடுத்துத்தொலைந்தால் கூட தேவலை, அமீர்கான் போன்றோர் தான் மனதுவைக்கவேண்டும்.வாய்ப்பு கிடைக்கையில் அனைவரும் ஒருமுறை சென்று பார்க்கவேண்டிய இடம்,இதைப்பார்த்தாவது இனியேனும் ஒருவர் பாதுகாக்கப்பட்ட புராதான நினைவுச் சின்னங்களை,புராதான கோயில்களை கரி,மசி,மை,உளி கொண்டு பாழாக்காமல் இருக்கட்டும். நிறைய கருங்கல் சிற்பங்களில்  ஆன்மிக பழங்களும் காதலர்களும் கரியில் தம் ஜோடிகளின் பெயர்களையும், தேர்வு எண்ணையும்,எழுதியும் விளக்கேற்றுகின்றேன் பேர்வழி என்று எண்ணையை பீடத்தில் ஊற்றி ஊற வைத்தும் விடுகின்றனர்,நாளடைவில் பாறைக்குள் இறங்கிவிடும் எண்ணையை எதைக்கொண்டும் நீக்க முடியாமலே போகிறது, நேக் சந்த் போல ஒருவருக்கு படைக்க துப்பில்லாவிட்டாலும் படைத்தவற்றை பாழடிக்காமலிருந்தாலே புண்ணியம் கிட்டும்.

4 comments:

பாலசுந்தரம் சொன்னது…

நல்ல கலைஞர் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி கீதப்பிரியன்

இராமசாமி சொன்னது…

பகிர்விற்கு நன்றி நண்பா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

மறக்கமுடியாத மாமனிதர்கள்

மாதவ் சொன்னது…

சார் குழந்தைகள் கற்பனை வளத்தை வளர்த்துக்கொள்ள இங்கே கூட்டிப்போக வேண்டும்,மிக ஒர்த்தான இடம்,இவர் மிக எளிமையானவர்,அங்கே வைத்து படம் எடுத்திருக்கிறோம்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)