தோபி காட்[Dhobi Ghat][2011][இந்தியா][ஹிந்தி]

தோபிகாட் சமகாலத்தில் வந்த மிக நல்ல உள்ளடக்கம் கொண்ட இந்திய சினிமா!!!. பெண் இயக்குனர் கிரண் ராவுக்கு இது முதல் படம் என்றே என்னால் நம்ப முடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அபாரமான ரசிப்புத் தன்மையும், பார்வையாளனின் ரசனைக்கு மதிப்பளிக்கும் பாங்குமே மிளிர்கிறது, நான்லீனியர் கதையமைப்புக்கள் அற்புதமான காட்சிகளாய் விரிகின்றது. இது போல யதார்த்த சினிமாக்கள் நம் நாட்டில் வரத்துவங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இப்படத்துக்கு ஆரம்பத்தில் கிடைத்த முதிர்ச்சியில்லாத பல திரைவிமர்சனங்களால்  இவ்வளவு நல்ல படத்தை கையில் வைத்திருந்தும் பார்க்காமல் தவறவிட்டிருந்தேன். நேற்று சாருவின் நிகரற்ற விமர்சனத்தை படித்த பின்னர் உடனே பார்க்கத்துவங்கினேன், தோபி காட் இந்திய இயக்குனரின் மிக மிகத்தரமான , நிகரில்லாத, ஒரிஜினலான படைப்பு என்பேன். படத்தில் ஒரு வீடியோவுக்குள் வரும் கடந்தகால பாத்திரமான யாஸ்மினை ஒருவர் ஆயுளுக்கும் மறக்கமுடியாது, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலியின்-துர்கா, சாருலதாவின் - சாருலதா, ஜாப்பனீஸ் வைஃப் படத்தின் ஸ்நேஹமோய் போன்ற ஒப்பற்ற திரைக் கதாபாத்திரங்களைப் போல யாஸ்மினும் காண்போர் நெஞ்சில் கரைந்தேவிடுவார்.

இந்திய சினிமா ரசிகனின் ரசனையை, உள்வாங்கும் திறனை நன்கு மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கிலேயே எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இப்படத்தை ஒருவர் ரசித்து ஒன்றி விட்டாரேயானால் எக்காலத்திலும் அவர்களின் கவனத்தை ரசனையை கமல்ஹாசன் ,மணிரத்னம் போன்ற சிரிப்பு திருடர்களின் படைப்புகள் சிதைக்கவே சிதைக்காது என்பேன்.  உலகநாடுகள் அனைத்திலும் திரைப்பட திருவிழாக்களுக்கென்றும், பேரலல் சினிமா ரசிகர்களுக்குமென்றே தனித்துவம் பொருந்திய படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை படைப்பவர்கள் ஆட்டியர்கள் என்றழைக்கப்படுவார்கள், அந்த கோஷ்டிக்குள் மணிரத்னம் போன்ற போலிகள் ராவணன் போன்ற நச்சுக்குப்பைகளை அங்கே தூக்கிப் போட்டு உட்கார இடம்பெற பார்ப்பர். அதற்கென்றே இயங்கும் சில ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன முதலைகள் இந்த போலிகளுக்கு துணை நிற்கும்.

ந்த அதிமேதாவி போலிகளால் சமகாலத்தின் உண்மையான ஆட்டியர்களான பான் நலின், தேவ் பெனகல், நாகேஷ் குக்குனூர், தீபா மேத்தா, மீரா நாயர், அபர்னா சென், சுதிர் மிஷ்ரா போன்றோர் படங்களுக்கு கிடைக்கவேண்டிய ராஜ மரியாதை கிடைக்காமலேயே போகிறது, ஒரு ஆட்டியர் என்பவர் தன்னை எதன் பொருட்டும் சமாதானம் செய்துகொள்ளாதவர். அவர் முழு ஈடுபாட்டுடன் படைக்கும்   ஒரு திரைப்படம் ஏகபோக வசூலை மட்டும் எதிர்பார்த்து செய்யப்படுவதேயில்லை, நல்ல கலையை, ரசனையை ,சமூக மாற்றத்தை வளர்க்க, நிகழ்த்த வேண்டுமென்ற உயரியநோக்கிலேயே இதுபோல திரைப்படங்களைத் அவர்கள் தயாரிப்பார்கள்,உலக நாடுகளில் இதற்கென்றே  பல மாற்று சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் உண்டு. உலகெங்கிலும் மாற்று சினிமாவுக்கு என்று தேர்ந்த ரசிகர்கூட்டமும் உண்டு.

ந்தியாவில் அது போல நிறுவனங்கள் அதிகம் இல்லாத நிலையில். தன் சொந்த பணத்தில் ஆமிர்கானின் திரைப்பட நிறுவனம் இது போல மாற்று சினிமா முயற்சிகள் செய்வது மிகவும் பாராட்டத்தக்கது. படத்தில் கிரண் ராவின் இயக்கம் , உலகப்புகழ் பெற்ற இயக்குனர் அலஜென்ரோ கொன்சலேசின் ஆகச்சிறந்த படைப்புகளுக்கு நிகரான தரத்தை கொண்டிருக்கிறது. நடிப்பு என்றால் நடித்துக்கொட்டுவது என்றிருப்பவர்கள் இதைப் பார்த்து நடிப்பு பழகவேண்டும். மொத்தத்தில் இது இந்திய சினிமா சூழலில் முதலில் வெளிவந்த முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் என்பேன்.

லகப்புகழ் பெற்ற இயக்குனர் அலஜென்ரோ கொன்சலேசின் ஆஸ்தான இசையமைப்பாளரான குஸ்டவோ  சண்டவோலல்லா இருமுறை ஒரிஜினல் ஸ்கோருக்காக ஆஸ்கர் விருது வாங்கியவர், அமெர்ரோஸ் பெர்ரோஸ், பாபெல், 21 க்ராம்ஸுக்கு இசையமைத்து உலகப்புகழ் பெற்றவர் அவர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.  நம் இந்திய திரைவல்லுனர்கள்  உலகப்புகழ்பெற்ற பன்னாட்டு கலைவல்லுனர்களை, இந்தியப் படைபுகளில் பணியாற்ற அழைப்பது மிகவும் பெருமை என்பேன். இந்த 59வயது தென் அமெரிக்க இசையமைப்பாளர் இப்படத்தில் ஓர் இந்தியராக மும்பைவாசியாகவே சிந்தித்து இருக்கிறார், ஒரு இந்திய சூழலுக்கான இசையை உலகத்தரத்தில் வழங்கியிருக்கிறார். படத்தில் பாடல்கள் அறவே இல்லை. அவர் அமைத்த இசையை அது தரும் சுகானுபவத்தை ஒருவர் ஆயுளுக்கும் மறக்க முடியாது.  இசையமைப்பாளரைத் தேர்வு செய்ததிலேயே இயக்குனர் கிரண் ராவ் ஜெயித்திருக்கிறார்.ஒவ்வொரு துறையிலும் புதுமையை புகுத்தியிருக்கிறார்,இருந்தும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவில்லை என நினைக்கையில் இனி இப்படிப்பட்ட முயற்சிகள் பொய்த்துவிடுமோ?என்று கலக்கம் ஏற்படுகிறது. இனி ஐந்து கோடி கொடுத்தால் தான் உலகத்தரமான இசை கிடைக்கும் என்று யாரும் காத்திருக்கவேண்டியதில்லை .இந்திய படைப்புகளுக்கு வேலை செய்ய பன்னாட்டு கலைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தை சாருவின் விமர்சனத்தை படித்துவிட்டு ஒருவர் பார்க்கத் துவங்கவேண்டும். படத்தின் சுவாரஸ்யம் கூடுமே தவிர குறையாது. உங்களுக்காக அந்த வரிகள்அப்படியே:-

இது போன்ற துயரமான அனுபவங்கள் எதுவும் இந்தி சினிமாவில் பொதுவாக நேர்வதில்லை.  அதனால் தைரியமாக டோபி காட் என்ற படத்துக்குச் சென்றேன்.  கிரண் ராவ் என்பவரின் முதல் படம்; ஆமிர் கான் நடித்தது என்ற இரண்டு காரணங்களைத் தவிர இந்தப் படத்தின் பெயரும் என்னைக் கவர்ந்தது.  மும்பை தாராவியில் இந்த டோபி காட்டை நேரில் பார்த்திருக்கிறேன். மறக்கவே முடியாத ஒரு அனுபவம் அது.  நம் கூவத்தை ஒத்த ஒரு தண்ணீர்த் துறையில் நூற்றுக் கணக்கான துணி வெளுக்கும் தொழிலாளர்கள் கல்லில் துணிகளை அடித்துக் கொண்டிருந்தார்கள்.  பயந்து போய் ஓடி வந்தேன்.
டோபி காட்டின் ஒருசில நிமிடங்களிலேயே ஒரு சர்வதேசத் தரம் வாய்ந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது.  படத்தைப் பார்த்த பின்னர் அது பற்றிய விமர்சனங்களைப் படித்த போதுதான் கிரண் ராவ் ஆமிர் கானின் மனைவி என்ற விபரமும், டோபி காட் கிரணின் முதல் படம் என்பதும் தெரிந்தது.  படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது அதன் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி என்னை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.  காரணம்,  இப்படி ஒரு பின்னணி இசையை இந்திய சினிமாவில் வெகு அரிதாகவே கேட்டிருக்கிறேன்.  ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வந்த ஸ்லம்டாக் மில்லியனர், 127 hours ஆகிய படங்களில் கூட பாடல்கள் உண்டு.  ஆனால் டோபி காட்டில் பாடல்கள் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்பு இருந்தும் சேர்க்கப்படவில்லை என்பதோடு பின்னணி இசை ஒரு தேர்ந்த ஐரோப்பியப் படத்தைப் பார்ப்பது போல் இருந்ததால் அதன் இசையமைப்பாளர் யார் என்று ஆர்வம் கொண்டேன்.  கடைசியில் என் யூகம் சரிதான்.  அமோரெஸ் பெர்ரோஸ், பாபெல் போன்ற அற்புதமான படங்களுக்கு இசையமைத்த – இரண்டு முறை ஆஸ்கர் பரிசு பெற்ற, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த Gustavo Santaolallaதான் டோபி காட்டின் இசையமைப்பாளர்.  ஒரு படத்தின் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு டோபி காட் ஒரு உதாரணம்.

இப்படி ஒரு படம் தமிழில் இன்னும் கால் நூற்றாண்டு ஆனாலும் சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது.  ஏனென்றால், ஒரு சூப்பர் ஸ்டார் அளவில் உள்ள ஆமிர் கான் தன் ஹீரோ அந்தஸ்தை விட்டு விட்டு படத்தில் வரும் நான்கே பாத்திரங்களில் ஒருவராக வருகிறார்.  அதிலும் அந்த நான்கு பாத்திரங்களிலேயே ஆமிரின் ரோல்தான் ஆகக் கடைசியான – சாதாரண பாத்திரமாக அமைக்கப்பட்டிருக்கிறது.  இங்கே சினிமாதான் என் உயிர் மூச்சு என்று சொல்லிக் கொள்ளும் ஹீரோ நடிகர்கள் தங்கள் ஈகோவை விட்டு விட்டு ஒரு நல்ல சினிமாவில் இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க சம்மதிப்பார்களா?  ஆனால் அப்படி அவர்கள் சம்மதித்தால் அந்தக் கணத்திலேயே உலகப் புகழ் பெற்று விடலாம் என்பது மட்டும் நிச்சயம்.  ஏனென்றால், ஆமிர் நடித்த படங்களிலேயே டோபி காட்தான் அவருக்கு சர்வதேசப் புகழை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

தமிழில் கதை இல்லை என்று சொல்லி நூற்றுக் கணக்கான ஹாலிவுட், ஜப்பான், கொரியப் படங்களிலிருந்து இங்கே கள்ளக் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் டோபி காட்டின் கதை நாலே வாக்கியங்களில் அடங்கி விடக் கூடியது.  முன்னா என்ற இளைஞன் சினிமாவில் சேருவதற்காக கிராமத்திலிருந்து மும்பை வந்து டோபியாக வேலை செய்கிறான்.  தற்செயலாக அவன் ஷாய் என்ற பெண்ணை சந்திக்கிறான்.  ஷாய் அமெரிக்காவிலிருந்து மும்பை வந்து அந்த நகரத்தைப் புகைப்படங்களாக எடுக்கும் ஒரு அமெச்சூர் புகைப்படக்காரி.  அருண் (ஆமிர்) ஒரு ஓவியன்.  விவாகரத்து ஆகித் தனியாக வாழும் அவன் ஒரு புதிய வீட்டுக்குக் குடி போகும் போது அங்கே ஒரு விடியோ கேஸட்டைப் பார்க்கிறான்.  அது அந்த வீட்டில் முன்பு குடியிருந்த யாஸ்மின் என்ற பெண் தன் குடும்ப வாழ்க்கையைப் பற்றித் தன் சகோதரனுக்குச் சொல்லும் விடியோ டேப்.  யாஸ்மினாக நடிக்கும் க்ரித்தி மல்ஹோத்ரா கடைசி வரை படத்தில் நேரடியாக வருவதே இல்லை.  அவளே தன்னுடைய கைக்கேமராவில், பிம்பம் நகராமல் ஒரே கோணத்தில் எடுக்கப்பட்ட விடியோ டேப்பின் மூலம் அருணின் தொலைக்காட்சிப் பெட்டியில் மட்டுமே வருகிறாள்.  (நினைவு கூரவும்: LSD என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட லவ், செக்ஸ் அவ்ர் தோக்கா: அந்தப் படம் முழுவதுமே Static shots மூலம் எடுக்கப்பட்டது).  ஷாய், முன்னா, அருண், படத்தில் நேரடியாக வராத யாஸ்மின் இந்த நால்வரின் வாழ்வில் நடக்கும் சுவாரசியமற்ற சம்பவங்களே டோபி காட்.

சுவாரசியமற்ற சம்பவங்கள் என்று கூறியதன் காரணம், நம்முடைய அன்றாட வாழ்வு ஒன்றும் சினிமாவில் வருவதைப் போன்ற திடீர் திருப்பங்களைக் கொண்டிருக்கவில்லை.  ஒரு டோபியின் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?  ஆனாலும் டோபி காட் எப்படி ஒரு அற்புதமான கலாசிருஷ்டியாக உருவாகியிருக்கிறது என்பதுதான் கலையின் மேஜிக்.  அது சினிமாவில் பல்வேறு காரணிகளால் சாத்தியமாகிறது. முதலில், தேர்ந்த நடிப்பு. நடிகர்கள் பாத்திரமாக மாறாமல் தங்களுடைய சொந்த அடையாளத்தை முன்னிறுத்துவது தேர்ந்த நடிப்பு அல்ல.  கமல் ஒரு நாஸ்திகர்.  அதனால் கமல் நடிக்கும் படத்தின் ஹீரோ கமல் நாஸ்திகராக இருப்பார்.  கமல் நல்ல டான்ஸர்.  அதனால் அவருடைய படத்தில் சம்பந்தமே இல்லாமல் சில காட்சிகளில் டான்ஸ் ஆடுவார்.  (மன்மதன் அம்புவில் ஒரு ஐரோப்பிய நகரின் தெரு ஒன்றில் டான்ஸ் ஆடிக் கொண்டே போவார்.  நாம் இப்படிச் செய்தால் அதைக் காண்பவர்கள் நம்மை என்னவென்று சொல்வார்கள்?  டோபி காட்டில் இந்த அசட்டுத்தனம் எதுவும் கிடையாது. அருணாக வரும் ஆமிர் அமெரிக்காவிலிருந்து வந்த ஷாய் என்ற அழகான பெண்ணைக் காதலிப்பதில்லை.  ஏன்?  நம்முடைய நேர் வாழ்வில் நாம் காணும் அழகான பெண்களையெல்லாம் காதலிக்கிறோமா?

ஒரு சினிமா கலாசிருஷ்டியாக மாறுவதற்கான இன்னொரு காரணம், அந்தப் படைப்பின் எந்த அம்சத்திலும் மிகைத்தன்மை இல்லாதிருப்பது.  டோபி காட்டின் நான்கு கதாபாத்திரங்களும் அவரவர் போக்கில் ஒருவரை ஒருவர் வெவ்வேறு தளங்களில் சந்திக்கிறார்கள்.  அதிலும் யாஸ்மின் என்ற பாத்திரம் வெறும் ஒளிப்பதிவு நாடாவில் தெரியும் ஒரு பிம்பம் மட்டுமே.  அவள் கதையை அருண் கேட்பதும் பார்ப்பதும் கூட அவளுக்குத் தெரியாது.  டோபி காட் சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு படைப்பாக மாறியதற்கு மற்றொரு காரணம், இதில் வரும் இன்னொரு பாத்திரம்.  அது, மும்பை என்ற நகரம்.  இதுவரை இந்திய சினிமாவில் ஒரு ஊர் இவ்வளவு உயிர்ப்புடன் காண்பிக்கப்பட்டதில்லை.  மீரா நாயரின் மான்சூன் வெட்டிங்கையும் மனதில் வைத்துக் கொண்டே இதை எழுதுகிறேன்.  தில்லியை வெகு கவித்துவமாகக் காண்பித்த படம் அது.  டோபி காட்டில் வரும் நான்கு பாத்திரங்களை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து மும்பை நகரை அதன் அத்தனை அழகோடும் அசிங்கத்தோடும் காண்பித்திருக்கிறார் கிரண் ராவ்.  அவர் இந்தப் படத்திற்கு இரண்டு தலைப்புகளைக் கொடுத்திருக்கிறார்.  ஒன்று, டோபி காட்; இன்னொன்று, Mumbai Diaries.  இந்தப் படத்தைப் பார்த்த போது என்றாவது ஒருநாள் சென்னை நகரமும் இவ்வளவு உயிரோட்டத்துடன் தமிழ் சினிமாவில் இடம் பிடிக்குமா என்ற ஏக்கம் ஏற்பட்டது.

டோபி காட்டின் மற்றொரு சிறப்பு, இது மிகக் குறைந்த செலவில், கெரில்லா படப்பிடிப்பு என்ற உத்தியின் மூலம் எடுக்கப்பட்டது.  அதாவது, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், ஒரு குட்டி ராணுவ அணிவகுப்பு அளவுக்கு ஆள் படை அம்புகளும் விளக்குகளும் ஜெனரேட்டர்களும் இல்லாமல், இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே, நிஜமான சூழலில், படம் எடுக்கப்படுகிறது என்ற விஷயமே யாருக்கும் தெரியாமல் எடுப்பதுதான் கெரில்லா ஷூட்டிங்.  ஸ்டார்ட், ரோலிங், கட், இடையில் இயக்குனர் போடும் சுத்தத் தமிழ் வார்த்தைகள் என்ற எந்த சத்தமும் இருக்காது.  ட்ராலிகள் இயங்காது.  பூதாகாரமான விளக்குகள் இல்லை.  சினிமா படப்பிடிப்பு என்று நாம் அறிந்திருக்கும் எந்த அடையாளமும், paraphernaliaவும் இல்லாமல் ரகசியமாக எடுக்கப்படுவதே கெரில்லா ஷூட்டிங்.  இப்படி எடுப்பதால் மட்டுமே ஒரு நகரத்தை அதன் உயிர்த்தன்மை கெடாமல் காண்பிக்க முடியும்.   அந்த வகையில் டோபி காட்டை எல்.எஸ்.டி.க்கு அடுத்தபடியாக இந்திய சினிமாவில் நடந்திருக்கும் புரட்சி என்று சொல்லலாம்.  உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளரான குஸ்தாவோ சந்த்தாவோலால்யாவை வைத்து எடுக்கப்பட்டும் டோபி காட்டின் பட்ஜெட் 11 கோடிதான்.  வசூல், படம் வெளிவந்த இரண்டே தினங்களில் 11 கோடியைத் தாண்டி விட்டது. ஆனால் இங்கே 150 கோடியில் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக குப்பைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இடைவேளை இல்லாமல் 95 நிமிடம் ஓடும் டோபி காட் நல்ல சினிமாவை நேசிப்பவர்களுக்கு ஒரு அற்புத அனுபவம்.
மிக்க நன்றி :- உயிர்மை
மிக்க நன்றி :- சாரு ஆன்லைன்
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Kiran Rao
Produced by Aamir Khan
Kiran Rao
Story by Kiran Rao
Starring Aamir Khan
Prateik Babbar
Monica Dogra
Kriti Malhotra
Music by Gustavo Santaolalla
Cinematography Tushar Kanti Ray
Editing by Nishant Radhakrishnan
Distributed by Aamir Khan Productions
Release date(s) September 2010 (2010-09) (TIFF)
21 January 2011 (2011-01-21) (India)[1]
Running time 95 minutes[2]
Country India
Language Hindi
English
Budget Indian Rupee ₹ 11 crore[3]
Gross revenue Indian Rupee ₹ 14 crore[4]

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

13 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

?>>>
இந்திய சினிமா ரசிகனின் ரசனையை,உள்வாங்கும் திறனை நன்கு மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கிலேயே எடுக்கப்பட்டிருக்கும் படம்.இந்த படத்தை ஒருவர் ரசித்து ஒன்றி விட்டால் அவர்களை கமல்ஹாசன் ,மணிரத்னம் போன்ற சிரிப்பு திருடர்களின் படைப்புகள் கவனத்தை சிதைக்கவே சிதைக்காது.

அடேங்கப்பா.. அண்ணன் அவங்க 2 பேர் மேலயும் செம காண்ட்டா இருப்பார் போல...

பெயரில்லா சொன்னது…

Hey,

Thanks for sharing this link - but unfortunately it seems to be down? Does anybody here at geethappriyan.blogspot.com have a mirror or another source?


Cheers,
Jules

செ.சரவணக்குமார் சொன்னது…

படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது நண்பா. இந்த மாதிரி ஒரு கதையில் ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் சூப்பர் ஹீரோ ஒருவர் அண்டர்ப்ளே செய்திருந்தது அருமையாக இருந்தது. எந்தவிதமான மசாலாப் பூச்சுக்களும், திரை ஜாலங்களும் இல்லாமல் அசலான சினிமா உணர்வைக் கொடுத்தது. கொஞ்சம் மெதுவாக நகர்வதைக் குறையென்று சொல்ல முடியாது. இந்தப் படத்தின் குணாதிசியமே அப்படித்தான்.

சாருவின் விமர்சனம் மிக நேர்த்தியாக இருந்தது.

உங்கள் திரைப் பார்வை வரிசையில் மற்றுமொரு சிறந்த படம் நண்பா.

பெயரில்லா சொன்னது…

சாரு நிவேதிதாவின் ஜால்ரா கோஷ்டியில் கீதா ப்ரியனும் இனைந்துவிட்டார்

உலக சினிமா ரசிகன் சொன்னது…

நண்பரே..உலகசினிமா எடுப்பவர்களோடு கமர்சியல் வித்தகர்களை ஒப்பிடுவது தவறு.
உங்கள் பதிவும் சாருவின் விமர்சனமும் வழக்கம் போல சூப்பர்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார்
நண்பரே நன்றி

@சிபிசெந்தில்குமார்
நண்பரே நன்றி

@செ.சரவணகுமார்
நண்பரே,படம் உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
நீங்களும் முடிந்தால் ஒரு பதிவிடுங்களேன்

@பெயரில்லா
நண்பரே அப்படியா தோன்றவைக்கிறது.
ஆனால் அது உண்மையில்லை.

@உலகசினிமா ரசிகன்
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.
கமலின் அனுபவத்துக்கு அவரல்லவா இதுபோல முயற்சிகளை முந்தி தந்திருக்கவேண்டும்?ஆனால் அவர் தொடர்ந்து தருவது என்ன என்று உற்றுநோக்குங்கள்.
தலைவரே, கமல் ஹாசன் என்னும் நடிப்பு ஆளுமை
வணிக ரீதியாக செய்துகொள்ளும் சமாதானங்களும்,படைப்பு திருட்டும் நாமறிவோம். சரி இன்ஸ்பிரேஷன் ஆகி படத்தை மறு ஆக்கம் செய்யட்டும். ஆனால் அதிலும் உலகநாயகர், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் போன்ற பில்டப்புகளை தன் படங்களில் வலியதிணிப்பதையுமே நான் வெறுக்கிறேன்.கமல்ஹாசன் குணா,மஹாநதி போல மேதாவித்தனமில்லாமல் ஒரு படம் செய்து எவ்வளவு நாளாகிறது?

மணிரத்னம் அடடா,இவர் அலைபாயுதே போல நிறைய எடுக்கட்டுமே?யார் குறைசொன்னார்கள்,இவருக்கு ஏன் இந்த கலை+கமர்ஷியல் கலந்த இரட்டை சவாரி?இவர் எடுப்பது தான் உலக சினிமா என்று ஒரு நண்பர் என்னிடம் வாதம் செய்தார்.அது உண்மையா?நீங்களே சொல்லுங்கள்.இவரை ப்ரொமோட் செய்வதே இந்த கார்பொரேட்டு மக்களும்,ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களும்,அம்பானிகளும் தான்.நீங்கள் பாருங்கள்
பொன்னியில் செல்வனை இவர் பன்னியின் செல்வனாக ஆக்குகிறாரா?இல்லையா என்று.இது முழுக்க என் கருத்துக்களே.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@jules,
howdy,geethappriyan.blogspot.com dont have mirror sites,even thou i maintaining 5 blogs totally, 1 never copy paste the contents one from other, please let me know you found any mirror articles somewhere. thank you for stopping by.

கலையரசன் சொன்னது…

படத்தை இன்னும் பார்க்கவில்லை மச்சி...

நீயே நல்லபடம்முன்னு எழுதிட்ட.. பார்க்காம இருப்பேனா??

விமர்சனம் நன்று

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

நண்பா... இந்தப் படத்தை சாரு பாக்க சொன்னாரு.. இன்னும் பார்க்கல. இதோ கொஞ்ச நாள்ல ஒரிஜினல் டிவிடி வந்திரும். அதுல புடிக்கிறேன் படத்தை. அப்புறம், மேலே யாரோ ஒரு அனானிப்பயல், ஜால்ரா அது இதுன்னு ஏதோ ஒளறிக் கொட்டியிருக்கான். அதைப் பாக்கசொல்லோ , சிப்பு வந்திச்சி சிப்பு . .:-) இவனுங்க திருந்தவே மாட்டானுங்க :-)

ஜீவன்பென்னி சொன்னது…

நண்பா இந்தப்படத்தினை பார்த்துவிட்டு இந்த படத்தின் இசையை மட்டும் தனியாக கேட்கவேண்டும் என்று தோன்றியது. படத்தின் முடிவில் வரும் இசையை பதிவு செய்து கேட்டுக்கொண்டிருக்கின்றேன். மொத்தத்தில் இனிமையான அனுபவம் இந்த படம்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கலையரசன்
@கருந்தேள்
@ஜீவன் பென்னி
நண்பர்களே மிக அருமையான கருத்துக்களை பகிர்ந்து ஊக்கம் கொடுத்தமைக்கு
மிக்க நன்றி.மீண்டும் வருக.

Vidhoosh சொன்னது…

அருமையான விமர்சனம், கமெர்ஷியல் ஹிட் படங்களைஎல்லாம் மாங்கு மாங்கென்று திசைக்கொன்றாக பதிவுகள் வரும், இது பற்றியேதும் பேசப் படவில்லையே என்று பேசிக் கொண்டிருந்த போது ஆர்.கோபி நீங்களும் எழுதி இருப்பதாகச் சொன்னார். செம ! :-)

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)