எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ மால் இழிபிறவிகளின் மனித உயிரின் மீதான அலட்சியம் !!!

நண்பர்களே!!! சாலை விபத்திலோ அல்லது எந்த ஒரு விபத்திலோ யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில், தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ....முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்!!!கண்முன்னே உயிர் பிரிவதை பார்த்தபடி இருப்பதும் ஒருவிதமான சைக்கோத்தனம் தான்.நீங்கள் தோள் கொடுத்தால் சந்திக்கப்போவது போலீஸ் மற்றும் மருத்துவர்கள், குடும்பத்தாரின் விசாரணைகள் தான், ஆபத்துக்கு தோள் கொடுக்காவிட்டால் ஆயுளுக்கும் குற்ற உணர்வு வாட்டும்.

தர்மம் தலை காக்கும் என்பார்கள்!!!... எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ மால்   இழி பிறவிகளின்   மனித உயிரின் மீதான அலட்சியத்தை கீழே உள்ள இந்த கானொளியில் அவசியம் பாருங்கள்,ஒரு மனிதனின் மரணத்தின் பின்னால் ஒரு நிர்வாக குறைபாடு, மனிதாபிமானமற்ற பணியாளர்களின் அலட்சியம், காவல்துறையின் அதிகார வர்க்கத்திற்கு வளைந்து கொடுத்த அடக்குமுறை அவசியம் பாருங்கள் , மால் நிர்வாகம் என்னும் எமகதகர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். பணத்துக்காக எதுவும் செய்யும் கூட்டம் அது, காணொளியில் நியாயத்துக்கு போராடிய பெண்மணி போல நாமும்   துணிந்து போராடவேண்டும்,நியாயம் கேட்பது அசிங்கம் அல்ல, அநியாயத்துக்கு  எதிராய்  போராடாவிட்டால் தான்  அசிங்கம்!!! என்பதை ஒருவர் உணர வேண்டும் , முதலில்  போலீசாரை மக்கள் சார் என்று அழைப்பதை நிறுத்த வெண்டும், போலீசார் பொதுமக்களை ஏக வசனத்தில் நீ ,வா, போ என அழைப்பதை உடனே  தடை செய்ய வேண்டும் ,எப்படி போலீசார் மக்களிடம் மரியாதையை எதிர்பார்க்கிறாரோ  ?அதே போல மரியாதையை கொடுக்கவும் கடமை பட்டவரே!!! ,கேட்காமல் கிடைக்காது மரியாதை .அனைவரும்  அதை கேட்டாவது பெறுவோம் . !!!

2 comments:

பெயரில்லா சொன்னது…

Rip for the guy,Disgusting attitude of express avenue staff,buggers they will go to hell

பெயரில்லா சொன்னது…

நம் ஊரில் ,உபயோகித்த டயாப்பர்கள்,சானிட்டரி நாப்கின் பேடுகள்,ஆணுறைகள் கழிவு நீர் கால்வாய் மற்றும் செப்டிக் டாக்குகள்,மேன் ஹோல்களுக்கு மிகப்பெரிய சவால் தான் மறுப்பதற்கில்லை,ஆனால் அதை சரி செய்ய இன்னும் மனிதர்களை இறக்கிவிட்டு வேடிக்கைபார்ப்பது கண்டிக்கத்தக்கது.எத்தனை ஊழல்?அடைப்பெடுக்கும் கருவி இருந்தாலும்,அதை இயக்க பயிற்ச்சி இல்லை,அல்லது பழுதாகியிருக்கும்,அல்லது சீன தயாரிப்பை வாங்கி அதிகாரிகள் ஏப்பம் விட்டிருப்பர் அதற்கு வாரண்டி இருக்காது,இந்த ஊழலகள் சேர்ந்து இதுபோல காப்பீடு கூட இல்லாத தினக்கூலிகளை மலக்குழியில் இறக்கிவிடுவதில் முடிகிறது

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)