திருவனந்தபுரம் லாட்ஜ் [Trivandrum Lodge] [மலையாளம்][2012] [15+]ன்று மீண்டும் திருவனந்தபுரம் லாட்ஜ் எத்தனையாவது முறையாகவோ பார்த்தேன்!!!,அசல் படைப்பாளி என்று அனூப் மேனனும்,விகே ப்ரகாஷும் காலத்துக்கும் கர்வம் கொள்ளத் தகுதியான  ஒரு படைப்பு,இவர்களின் முந்தைய படமான ப்யூட்டிஃபுல் போன்றே தரமான படைப்பு,அனூப் மேனன் கதையை எழுதினாரா?,அல்லது அவரது கதையேவா?அனூப் மேனன் என்னதான் கதையை எழுதியிருந்தாலும் வி.கே ப்ரகாஷ் எப்படி  அதை உள்வாங்கி அழகாக கோர்த்தார்? என்று இன்னும் வியக்கிறேன்,எத்தனை முறை பார்க்கும் போதும் அப்படி ஒரு புத்துணர்ச்சியை தரும் படம். முதல் முறையாக பார்க்கத் துவங்கும் முன் பல அதிர்ச்சிகளுக்கு பார்வையாளர் தயாராவது நல்லது,அப்படி ஒரு கல்சுரல் ஷாக்கை தரும் படம்,குடும்பத்தோடு பார்க்கலாமா?என்று ஒருவர் மெயில் எழுதி கேட்டார்,நான் இன்னும் பதில் சொல்லவில்லை.பதிவே போட்டுவிட்டேன்.

மனிதரில் எத்தனை நிறங்கள் பாருங்கள் என்று பாசாங்கே இல்லாமல் சொன்ன படம்.படத்தில் அப்துவாக தோன்றிய ஜெயசூர்யாவின் முகத்தில் எத்தனை விதமான ரசபாவனை என்று உண்ணிப்பாய் பாருங்கள்? காமமே கைகூடாத ஒருவன் எப்படி இருப்பான்? என்று பார்த்துப் பார்த்து செய்திருப்பார், அப்துவை தன் வாழ்நாளில் ஒருவர் எளிதில் மறந்து விடமுடியாது,சூது வாது தெரியாத அதே சமயம் எல்லோருக்கு கைகூடுகின்ற காமம் தனக்கு கைகூடவில்லையே?!!! என்னும் வேட்கையை அப்படி வெளிப்படுத்திய கதாபாத்திரம், என்ன கலைஞன் ஜெயசூர்யா?!!!

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சியாக பத்துக்கும் மேலே சொல்லுவேன், தன் சக நண்பனின் அக்காளையோ,தங்கையையோ ஒரு நாளேனும் கூடிப்புணர்வதை வாழ்கையின் லட்சிய ஆசையாய் கொண்ட சினிமா பத்திரிக்கையில் வேலைசெய்யும் சக ரூம் மேட் ஷிபு , அப்துவின் அக்காள் என்று நினைத்து ஒரு விலைமாது கன்யகா மேனோனை ஃபைவ்ஸ்டார் ஹோட்டலுக்கு தள்ளிக்கொண்டு போய் மேற்படி விஷயம் முடித்து திரும்ப வருகையில் அப்து அதைப் பார்த்துவிடுவான்,அதிர்ந்த ஷிபு அவனிடம் நான் சத்தியமாக இவளை கல்யாணம் செய்துகொள்கிறேன்,என்னை தவறாக நினைக்காதே!!! என்று,பொய்யாய் சத்தியம் அடிக்க,அப்து குசும்பு வெளியே தெரியாமல் குனிந்த தலை நிமிராமல் ம் என்று தலையை ஆட்டிவிட்டு ஓடியே விடுவான்,அப்படி ஒரு ப்ரில்லியண்ட்டான காட்சியது.

திருவனந்தபுரம் லாட்ஜின் ஓனர் ரவிசங்கர் [அநூப்மேனன்] மனைவியை இழந்தவர், அவருக்கு மனைவியின் நினைவாக செண்டிமெண்டல் வேல்யுவாக லாட்ஜை கருதுகிறார், தன் காலம் சென்ற அம்மா ஒரு பெண் காசநோவா , நகரின் பல சொத்துக்களை அவள் உடம்பை பெரிய புள்ளிகளுக்கு பகிர்ந்து தான் வாங்கினாள், தானும் அதை நூறாக பெருக்கினோம் என்று முழு தெளிவாக இருப்பவர்,  அறிவு கொண்டவன் அறிவை வைத்து பணம் ஈட்டுவது போல அழகும் அம்சமும் ஒருங்கே கொண்ட பெண் அதை வைத்து பெரும் பணம் ஈட்டுவது தவறல்ல என்பது இவர் வாதம்,

இவரது அப்பா [பாடகர் P.ஜெயச்சந்திரன்]மனைவியின் நடத்தை பிடிக்காமல் பிரிந்து போய் நகரில் ஒரு எளிய காபி டிபன் ஹோட்டல் நடத்துபவர், அம்மாவை வேசி என்பவர், இவர் அப்பாவிடம் வாதம் செய்பவர். அப்பாவுக்கு ஹோட்டலில் பெரிய லாபம் எதுவும் இல்லாமல் இருப்பதால் இவரே பல சமயம் பண உதவி செய்கிறார். ரவிசங்கர் தன் அம்மாவைப் போன்ற பலதார சம்போக குணம் இல்லாத ஏகதார சம்போகி, தன் மனைவி மாலவிகா[பாவனா] மரித்திருக்க, இவர் பணத்தின் மூலம் பெண் துணையை நாட எத்தனையோ வழிகள் இருந்தும் இறந்த மனைவியின் நினைவாகவே அந்த இச்சையை கொல்கிறார், அந்த சகிப்புத்தன்மையை வரமாக எண்ணி அனுபவித்து வாழும் ஒரு பிறவி. தன் மகன் மீது அப்படி ஒரு நட்பும்,பாசமும் வைத்துள்ளார்.

ரவிஷங்கரின் மகன் அர்ஜுனுக்கு கூடப் படிக்கும் ஏழைப் பெண் அமலா மீது விடலைபருவத்து காதல், தங்கள் சொத்தான திருவனந்தபுரம் லாட்ஜில் வசிக்கும் ரெல்சன் மாஸ்டரிடம் அவள் பியானோ பயின்று வருவதை அறிந்து அவனும் பியானோ வகுப்பில் சேர்கிறான்,தன் அப்பாவை போன்றே எல்லாவற்றிலும் உண்மையை எதிர்பார்ப்பவன்,தன் தோழி அமலாவுக்கு தன்னை விட மிருதுள் என்னும் சக மாணவன் தான் பெஸ்ட் ஃப்ரெண்ட் என்று தெரிந்தும் ,அவள் மீது அதிக மையலில் இருக்கிறான்,அமலாவாக இவன் நட்பை புரிந்து இவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறான்.அப்பாவைப் போன்றே ரசனையானவன்,படத்தில் சதீஷன் என்பவனின் ஷூ ஒன்றை மட்டும் அப்து தூக்கி விட்டெரிந்து விடுவான்,ஷூவை காணவில்லை என்று சதீஷன் புகாருக்கு நாய் தூக்கி போயிருக்கும் என பெக்கி ஆண்டி கூற,நாய் படி ஏறி வருமோ?என்று அவன் கேட்க,அர்ஜுன் ஸ்பாண்டேனியஸாக நாய் சந்திரமண்டலத்திலேயே ஏறிவிட்டது என்பன்,அத்தனை அழகான காட்சி.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சியாக,அந்த குட்டிப் பெண் அமலா அர்ஜுனிடம் என்ன பெர்ஃப்யூம் இட்டிருக்கிறாய்,நல்ல மணம், என்கிறாள், அவன் லாப்யூடா என்கிறான்,நீ என்ன பெர்ஃப்யூம் போடுகிறாய்? அதுவும் மணமாக இருக்கிறது,என்று கேட்க,அவள் நாங்கள் ப்ர்ஃப்யூம் இடுவதில்லை பாண்ட்ஸ் ட்ரீம் ஃப்ளவர் பவ்டர்தான் என்கிறாள்,கார் ஓட்டிக்கொண்டிருக்கும் அப்துவைப்பார்த்து நீ என்ன பவ்டர் இடுவாய் என்று கேட்க,அவன் குட்டிக்கூரா,ஆனால் தீர்ந்து விட்டது!!! வாங்கனும்!!! என்று அப்பாவியாகச் சொல்வான், இப்போது அமலாவை வீட்டில் இறக்கி விட்டபின் ஏதாவது கடையில் நிறுத்து என்றவனிடம், நீ என்ன வாங்கப்போகிறாய் என்று தெரியும் என்று சொல்லுவான் அப்து, ஓ அத்தனை புத்திசாலியா நீ?!!!எங்கே சொல் என்பான் அர்ஜுன், உடனே அப்து பாண்ட்ஸ் ட்ரீம் ஃப்ளவர் டால்க் என்று கண்ணடித்து சிரிப்பான்,அர்ஜுன் பின்சீட்டிலிருந்து எழுந்து வந்து அப்துவுக்கு ஒரு முத்தம் வைப்பான்,அப்படி ஒரு அழகான காட்சியது.

படத்தில் வரும் ஒரு விலைமாதுவின் கதாபாத்திரம் கன்யகா மேனோன்[தெஸ்னி கான்] அத்தனை துயரத்தை தன்னுள் வைத்திருந்தும், அதை வெளிக்காட்டாமல் அன்றாட பிழைப்புக்கு பொருளீட்ட எப்படிப்பட்ட அவமானத்தையும் தாங்கிக்கொள்ளும் சுபாவம் கொண்ட, சுய எள்ளலும் தன்னம்பிக்கையும் ஒருங்கே கொண்ட ஒரு பாத்திரம்.அக்காட்சி ஜி.நாகராஜனின் ஆண்மை என்னும் சிறுகதையை மையமாக வைத்து புனைந்ததோ என்னும் படியான வீர்யமான காட்சி.அதை எஸ்ரா இந்த சுட்டியில் விளக்குவதை பாருங்கள்

 அப்துவின் காம வேட்கையை தணிவிக்க, அப்து எப்போதும் செக்ஸ் புத்தகம் வாங்கிப்படிக்கும் புத்தக கடைக்காரரே,பணம் கடனாகக் கொடுத்து கன்யகா மேனோன் என்னும் விலைமாதுவை அப்துவுக்கு ஏற்பாடு செய்து விடுகிறார்,கூடவே அப்துவை உசுப்பு ஏற்றும் இளைஞன் மிருதுள் நாயர் , ஏற்கனவே அவன் கன்யகாவிடம் சென்ற அனுபவம் இருப்பதால் இவன் அவளின் ஃபேஸ்புக் ப்ரொஃபைலை அப்துவிடம் காட்டி எத்தனை அழகு பார் என்று உசுப்பேற்றி உதவுகிறான், அப்துவுடன் உறவு கொள்ள ஏற்ற இடம்,  சூழல் கிடைக்காததால்  தன் ஒண்டுக்குடித்தன வீட்டுக்கே கூட்டிப்போகிறாள் கன்யகா, அங்கே அவள் இவனிடம் துர்நாற்றம் வீசுகிறது என்று குறை சொன்னவள்,அவனை குளித்துவிட்டுவரச்சொல்லி சோப்பும், துண்டும் கொடுத்துவிடுகிறாள்,

அவன் குளித்துவிட்டு வந்தவன் ,கன்யகாவின் கணவன் பக்கவாதம் வந்து ஒரு அறையில் நார் போல சுருண்டிருப்பதையும்,அவனின் மலமும் மூத்திரமும் ஒரு ட்யூப் வழியாக வெளியேறுவதை பார்த்து அதிர்கிறான்,யார் இது? என்று கேட்கிறான் ,கன்யகா,கோபத்தில் ரொம்ப முக்கியமா உனக்கு?என்னை கட்டியவன், என்கிறாள், மிகவும் வருத்தமும் வெறுப்பும் அடைந்த அப்து அங்கேயிருந்து வேகமாய் அகல்கிறான்,இது போன்ற ஒரு மிக சீரியஸான காட்சியை எத்தனை லாவகமாக கையாண்டு அருமையாக இழைத்துள்ளார் இயக்குனர் என்று வியந்தேன், அந்த விலைமாது தன் நிலைக்கு சிறிதும் வருந்தவில்லை, தன் உடம்பை விற்காமல் தனக்கும் கணவனுக்கும் உணவும்,மருந்தும் வந்து விடப்போவதில்லை என்ற தெளிவு கொண்டிருக்கிறாள். துலாபாரம் போல ஆகியிருக்கவேண்டிய காட்சியது, ஆனால் அதை என்னமாய் கையாண்டிருக்கிறார்,ப்ரில்லியண்டான ஒரு இயக்கம் அது.

திருவனந்தபுரம் லாட்ஜின் கதாபாத்திரங்கள் ஆச்சர்யமூட்டுபவர்கள், 20 வருடத்துக்கு மேலாக அங்கேயே வசிக்கும் பெக்கி ஆண்டியும்[சுகுமாரி] ரெல்டன் மாஸ்டரும் மிகவும் புதிரான நாம் கேள்வியுற்றிராத ஒரு ஜோடி, ஒரே லாட்ஜில் வசித்தாலும் இருவரும் முன்னாள் தம்பதிகளாயிருந்தாலும் மணமுறிவு ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், இந்நாளில் பேசிக்கொள்வதேயில்லை, ஆனால் கண்காணாமல் ஒருவரை ஒருவர் பிரிந்தும் போய்விடவில்லை, யாருக்கும் தம்பதிகள் என காட்டிக்கொள்ளாத ஒரு ஜோடிகள்,

அப்புறம் ஷிபு ,இவன் ஒரு வண்ணத்திரை போன்ற ஒரு சினிமா பத்திரிக்கை நிருபன்,மோலிவுட்டின் அழகிய எக்ஸ்ட்ரா நடிகைகளை சினிமாவில் பெரிய ரோலில் நடிக்க வைக்கிறேன் என்று ஆசை காட்டி லாட்ஜுக்கே கூட்டி வந்து ராவோடு ராவாக புணர்ந்து விட்டு, விடியலில் வீட்டுக்கு போட் ஏற்றி விடுகிறான்,அவர்களும் நம்பி வருகின்றனர்,விழுகின்றனர்.அவன் புணர்ந்த கதைகளை கேட்கவும், தான் இதுவரை புணர்ந்த 999 பெண்களின் கதைகளை சுவையாக அத்தினி,பத்தினி சித்தினி வாரியாக சொல்லத்தெரிந்த கோரா என்னும் வயதான கிளார்க் பாத்திரம், இவர் 999 பெண்களை புணர்ந்த பின்னர் 1000க்கு பொறுமையாக காத்திருக்கிறார்,1000மாவதாக இவர் புணர நினைப்பது  சீருடையில் இருக்கும் ஒரு பெண் போலீசை,எப்படி இருக்கிறது பாருங்கள்?!!!.
கூடவே மோலிவுட்டில் மோகன்லாலுக்கு,மற்றையோருக்கு  டூப் போடும் ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் பாத்திரங்களும் உண்டு,

படத்தில் முக்கியமாக த்வனி நம்பியார் [ஹனி ரோஸ்]என ஒரு எழுத்தாளர் பாத்திரம் உண்டு, அவள் தன் சுதந்திரமான இச்சைக்கும் , தறிகெட்டத்தனமான வாழ்வை வாழ வேண்டியும் தன் கணவனை விரும்பியே பிரிந்திருக்கிறாள், அவளுக்கு உதவும் நன்கு படித்த முஸ்லிம் தோழி ஸரீனாவும் அவளின் கணவன் அல்தாஸ் கதா பாத்திரமும் நமக்கு மிகுந்த ஆச்சர்யங்களை ஊட்டும்.அத்தோழி த்வனியிடம் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ளும் இடம் அருமை, 

தன் பணக்காரக் கணவன் 9ஆம் வகுப்பு ட்ராப் அவுட் என்று தெரிந்தே தான் திருமணம் செய்தேன்,வெளிநாட்டில் படித்து வந்த நானும் அவனும் இரவில் அப்படி கூடிக்கலக்கிறோம், என் படித்த ஈகோவை,அவன் படிக்காத காட்டுமிராண்டித்தனத்தாலும் வெள்ளந்தித்தனத்தாலும் தாக்கி உடைக்கிறான், படுக்கையில் திருப்தி செய்ய தேவையான காட்டுமிராண்டித்தனம், சொசைட்டியில் திருப்திப்படுத்த தேவையான பணம் எல்லாவற்றுக்கும் மேலாக அடுப்படியிலும் நளபாகம் செய்யும் பன்முகம் கொண்டவனை நான் தேர்ந்தெடுத்தது தன் அதிர்ஷ்டம் என்கிறாள்.

ஒரு மதயானை கரும்புக்காட்டில் பாய்ந்தது போல இருக்கும் எங்கள் ஆலிங்கனம் என்று த்வனியை சீண்டி வேறு விடுகிறாள் ,த்வனி தன் அடுத்த படைப்பை எழுத தன் கணவனின் நண்பரின் லாட்ஜான திருவனந்தபுரம் லாட்ஜுக்குள் அவளை அனுப்பி விடுகிறாள் அத்தோழி ஸரினா,அங்கே வரும் தவனி அங்குள்ள லாட்ஜ் வாசிகளுடன் நெருங்கிப்பழகி கதையும் எழுதுகிறாள்,அப்பாவி அப்துவிடம் மட்டும் மிகவும் ரசனையான ஒரு நட்பினை பகிர்ந்து கொள்கிறாள் தவனி,

 அங்கே வைத்து த்வனியை அப்து சந்தர்ப்பம் கிடைக்கையில் பயந்து பயந்து மார்பகங்களை உரச வருகையில் வாகாக இடமும் கொடுக்கிறாள், கோரா இவளை மாடிப் படியேறுகையில் முழங்கையால் வேண்டுமென்றே மார்பகத்தை தட்ட அப்போது சிரித்து நகர்ந்தவள்,999 கதையை கேட்டேன்,1000 ஆவது ஆளாக நான் இருக்க நினைக்கிறேன், இப்போதே எனக்கும் முயங்க வேண்டும் வருகிறாயா?என்று ஒரு பகலில் அவரை கையை பிடித்து இழுக்காத குறையாக இழுக்க, அவர் மனிதர் சிதறி ஓடுகிறாரே பார்க்கணும்!!!, 

அவளை ஒளிந்து ஒளிந்து பார்த்து மனசாந்தி கொள்ளும் அப்துவிடம் அவள் கேட்பாள். என்னிடம் உனக்கு பிடித்தது என்ன?சிறிதும் யோசிக்காத அப்து உன் பிருஷ்டங்கள், என்கிறான், இவள் என் கணவன் இப்படி சொல்லியிருந்தால்,நான் அவனை பிரிந்தே இருக்கமாட்டேனே என்கிறாள், அது போல சில்லிட, சிந்திக்க வைக்கும் வசனங்கள் ஆங்காங்கே உண்டு, மற்றொரு காட்சியில் ஸரீனாவிடம் த்வனி கேட்கிறாள்,மாலவிகா நினைவாகவே வாடும் ரவிசங்கரின் காரெக்டர் ஸ்கெட்ச் எனக்கு மிகவும் பிடித்துள்ளது,அவனை எப்படியாவது எனக்கு புணரவேண்டும் எனக்கு அவனை அறிமுகம் செய் என்கிறாள், 

அவளின் கணவனிடம் த்வனி அவனுக்கு வேறு பெண்களுடனான தொடர்பே இல்லையா?என்று ஆச்சர்யம் விலகாமல் கேட்டவளுக்கு,அல்தாஸ் பதில் சொல்கிறான்,ஒருவனைப்பற்றி அவன் நண்பர்கள் அறியாத ரகசியம் என்று ஒன்று உண்டா?என்று, அது போல பல வீர்யமான வசனங்களும் உண்டு.ஒரே படத்தில் நமக்கு டார்க் ஹ்யூமர்,ரொமான்ஸ்,ட்ராமா,த்ரில்லர்,ஆஃப் கலர் ஹ்யூமர் என்று கலந்து கட்டி படையல் இடுகிறார் இயக்குனர்.அதுதான் இதன் சிறப்பே, படத்தில் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு அத்தனை அழகும் சிறப்பும் ஒருங்கே கொண்டது,இருட்டிலே,டல் லைட்டிலே,நிலவொளியிலே,அருகே உள்ள ஏரியின் எழிலில்,பழைய லாட்ஜின் புராதானம் சொல்வதில் என்று மிகசிறப்பான பணி.

படத்தின் வெற்றிக்கு இசைக்கும் முக்கிய பங்குண்டு,m.ஜெயச்சந்திரன் [பாடகர் p.ஜெயசந்திரன் அல்ல] இசையில் கிளிகள் பறந்தனோ!!!என்னும் பாடல் விடாமல் மனதைத் துரத்தும். பிஜ்ஜிபாலின் பிண்ணனி இசையும் படத்தின் மாபெரும் பலம். படம் இதுவரை பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள், ஏற்கனவே பார்த்தவர்கள் மீண்டும் பாருங்கள், ஒன்றும் குறைந்துவிடாது. வாழ்வில் ஒருவருக்கு எப்படி ரசித்து வாழவேண்டும் என்ற உத்வேகம் கூட்டும் படம்.

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

3 comments:

பெயரில்லா சொன்னது…

WHAT A FILM GP!!!WONDERFUL,BRAVO,WHEN TAMIL CINEMA BECOME THIS,ENVY.KEEP SHARING GP-RAMESH

Riyas சொன்னது…

VERY GOOD MOVIE..THANKS FOR SHARING

Karthikeyan Vasudevan சொன்னது…

திருவனந்தபுரம் லாட்ஜ் படத்தில் த்வனி நம்பியார் என்னும் எழுத்தாளர் கதா பாத்திரம் மறக்கமுடியாதது, அதில் நடித்த ஹனிரோஸ் அஞ்சு சுந்தரிகள் படத்தில் அமி என்னும் ஃபஹாத் ஃபாஸில் தோன்றும் அத்தியாயத்தில் கலக்கியுள்ளார்.இவர் 2011ல் வந்த சிங்கம் புலி என்னும் சூர மொக்கையில் நடித்துள்ளார் என்று எனக்கு இன்று தான் தெரியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)