செம்மரம் வெட்டுகையில் பிடிபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் அநியாயமாக பாய்ண்ட் ப்ளாங்கில் வைத்து கொலை செய்யப்பட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கதே,அதே சமயத்தில் இங்கே தமிழன் என்றாலே எல்லா மாநிலத்தவனுக்கும் தொக்கு தான்,தெலுங்கர்களை அடிக்க வேண்டும்,தெலுங்கர்களை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்,திருப்பதிக்கு தமிழன் சாமி கும்பிடப் போகக்கூடாது என கோஷம் கேட்கத்துவங்கிவிட்டது.
An eye for an eye only ends up making the whole world blind.
கண்ணுக்கு கண் எடுப்பேன் என்று பழிவாங்கக் கிளம்பினால் உலகே குருடாகிவிடும் என்பது அண்ணல் காந்தியின் முக்கியமான சித்தாந்தம்.இதை இன்றைய எல்லா முக்கிய பிரச்சனைகளுடனும் பொருத்திப் பார்த்து தீர்வு காணலாம்.
முகலிவாக்கம் கட்டிட விபத்து நிகழ்ந்து வரும் ஜூன் 28 வந்தால் ஒரு வருடமாகிறது, அந்த இடிபாடுகளில் சிக்கி 61 பேர் [அரசு தரும் புள்ளி விபரம்] இறந்தனர்.
பலியானோரில் சுமார் 35 பேர் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த நேர்மையான கடும் உழைப்பாளிகள். யாருமே திருடர்களல்ல, ஆனால் அவர்களின் அகால மரணத்துக்குப் பின்னான,இறுதி மரியாதையும் அதற்கு கிடைத்த நீதியும் கண்ணியமாக இருந்ததா? அவர்களுக்கு கிடைத்த நிவாரணம் தான் என்ன? அது முழுதாக அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா?அதை யாரேனும் கேள்வி கேட்டோமா?
அன்று சம்பவ இடத்துக்கு மாநிலம் விட்டு மாநிலம் வந்து பார்வையிட்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.தன் ஸ்ரீகாகுள மாவட்ட கட்டிடத் தொழிலாளர்களுக்கு 5 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.நியாயமான விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசைக் கேட்டுவிட்டுச் சென்றார்.
தமிழக அரசு அந்த இறந்த அப்பாவி கடும் உழைப்பாளிகளுக்கு என்ன தந்தது? அந்த தனி மனிதனின் பேராசையினால் நிகழ்ந்த பேரிடர் சம்பவத்துக்கு காரணமான ஊழல்அதிகாரிகள் ,கவுன்சிலர்,அமைச்சர் , கட்டிடம் கட்டிய நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதன் பொறியாளர்கள் தண்டிக்கப்பட்டனரா?!!!
அன்று ஒப்புக்கு கைது செய்யப்பட்ட ப்ரைம் ஸ்ருஷ்டி நிறுவனர் மற்றும் பொறியாளர்கள் 6 பேரும் இன்று வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்கள் பெயில் வாங்க நீதிபதிகள் இறந்தவர்களின் தலைக்கு நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா?தலைக்கு ஒரு லட்சம். இடிந்து விழுந்த ட்ரஸ்ட் ஹய்ட்ஸின் ஒரு டபுள் பெட்ரூம் ஃப்ளாட்டின் விலை அது. அந்த 61 லட்சத்தை கட்டிய அக்கயவர்கள் எளிதாக பெயில் வாங்கி விட்டனர். எத்தனை அராஜகம் பாருங்கள்.

Add caption |
இந்த சம்பவத்துக்கு கண் துடைப்புக்கு மட்டுமே அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தனி நீதிபதி என்ன கண்டுபிடித்து கிழித்தார்?!!! யாருக்கேனும் தெரியுமா?!!!
ஆந்திர போலீஸிலும் அயோக்கியர்கள் உண்டு,தமிழக போலீஸிலும் அயோக்கியர்கள் உண்டு,அதற்கு முக்கிய உதாரணமாக வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் நடந்த 5 பீகார் மாநிலத்தவரின் என்கவுண்டர்களைச் சொல்லலாம்.வங்க தேச எல்லையில் நம் எல்லைக் காவல் படையினர் ஆண்டாண்டு காலமாய்ச் செய்யும் படுகொலைகள் பற்றி தேடிப் படியுங்கள்.
ஒருக்கட்டத்தில் குற்றங்கள் அதிகரித்து தீர்க்கமுடியாமல் போகையில் தங்கள் பாதுகாப்பு எல்லையை நிர்ணயம் செய்ய மனிதத் தன்மையின்றி இது போல படுகொலைகளை நிகழ்த்துகின்றனர். மாநில எல்லை,நாடுகளின் நில எல்லை என எல்லாவற்றுக்கும் இதுபொருந்தும்.இந்திய வங்கதேச 4000 கிமீ நீள எல்லைக்குள் அத்துமீறி நுழையும் வங்கதேசத்தவரை இப்படித்தான் நம் எல்லைக்காவல் படைகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்று வருகின்றனர். இலங்கை சிங்கள கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்களை இப்படித்தான் மனிதாபிமானமின்றி சுட்டுக்கொன்று வருகின்றனர். யார் இங்கே ஒழுங்கு?!!!
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு எழுதப்படாத விதி ஒன்று உண்டு. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல,அப்பாவி ஏழைகள் தான் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறேன் என திடீர் திடீரெனக் கிளம்புபவர்களின் மிக எளிதான இலக்கு. இதற்கு தார்மீகப் பொருப்பேற்கவேண்டிய ஊழல் அரசியல்வாதிகள் இத்தனை ஆண்டுகாலமாகியும் இதற்கு தீர்வு காணாதது தான் தண்டிக்கப்பட வேண்டிய பெருங்குற்றம்.
தமிழக அரசு இனியேனும் மரம் வெட்டச் சென்று பலிகடாக்கள் ஆகும் திருவண்ணாமலை,விழுப்புரம்,வேலூர் மாவட்ட மக்களுக்கு சிறப்பு பொருளாதார மணடலங்கள் அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும். என்ன தான் மாற்றுத்தொழிலுக்கு அரசு ஏற்பாடு செய்தாலும் , இந்த ஈஸி மனி ஆசைக்கு மக்களை பலிகடா ஆகாமல் தடுக்க பல ஆண்டு காலம் அரசு திட்டங்கள் தீட்டி உழைக்க வேண்டும்,தன்னார்வமுள்ள தொண்டு நிறுவனங்களும் அரசுடன் கூட்டு சேர்ந்து உழைக்கலாம்.இது நீண்ட காலம் கழித்தே பலன் தரும், 80களில் சாராய சாம்ராஜ்ஜியமாக இருந்த திருநீர்மலை போன்ற ஊர்கள் இப்போது சிப்காட்கள் ,பெரிய சாலைகள், அமைந்து நல்ல குடியேற்றப் பகுதியாக வருவாயுள்ள ஊராட்சியாக திகழ்வது ஒரு நல்ல உதாரணம்.
செம்மரம் கடத்தல் பின்னணியும், தடுக்க வழிமுறைகளும் பற்றிய் இந்த ஆந்திர மனித உரிமை ஆர்வலர்களின் முக்கியம் வாய்ந்த ஆராய்ச்சி கட்டுரை, ஏற்கனவே சென்ற ஆண்டு ஷேஷாச்சலம் வனசரகத்தில் நடந்த 8 என்கவுண்டர்களைப் பற்றி விரிவாக பேசுகிறது.
நம்மை விட ஆந்திர மனித உரிமை ஆர்வலர்கள் நடுநிலையுடன் இந்த அநியாய என்கவுண்டர்களில் கொல்லப்பட்டோருக்காக நியாயம் கேட்டு போராடி வருகின்றனர், அதை தயவு செய்து படியுங்கள் , அதன் பின்னர் இங்கே இருக்கும் தெலுங்கர்களை ஏசுங்கள். இங்கே இருக்கும் தெலுங்கர்களை அடித்தால் ஹைதராபாதில் இருக்கும் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியுமா?!!!
http://www.academia.edu/7…/who_are_the_Red_Sander_Smugglers_
செம்மரம் : குருதியில் கரைந்த பேராசை.
https://www.facebook.com/photo.php?fbid=785756078174487&set=a.139788059437962.35655.100002203075390&type=1&fref=nf
செம்மரக் கடத்தல் மாஃபியா பற்றி தினமலரில் சென்ற ஆண்டு வெளியான முக்கிய கட்டுரை
http://www.dinamalar.com/news_detail.asp?id=993420