சுவையாகப் பேசுவது ஒரு கலை,
நினைத்தாலே இனிக்கும் படத்தின் மறு வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் , தன் அவர்கள்[1977] திரைப்படத்தில் இருந்து ஒரு சுவையான மலரும் நினைவுகளைப் பகிர்ந்தார்.
அவர்கள் படத்தில் அவர் பாலக்காடு ஜனார்தனன் என்னும் விதவை வேடம் ஏற்றிருந்தார்,அலுவலகத்தில் உடன் பணிபுரியும் விவாகரத்து ஆன அனுபமா [சுஜாதா] எளியவனான தன் காதலைப் புரிந்துகொண்டு, அக்காதல் கைகூடுவது போல ஒரு கற்பனைக் காட்சி படத்தில் உண்டு.அந்த ஒருதலைக்காதலுக்கு ஒரு பின்னணிப் பாடலும் உண்டு.ஆனால் அது படத்தில் இல்லை.
அந்த கட்டாகிப் போன பின்னணிப் பாடலுக்காக கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ்,வி . இயக்குனர் கே. பாலச்சந்தர் இணைந்து இப்பாடல் வரிகளை உருவாக்கிய போது கமல்ஹாசன் தனக்கு நடனமும் , சாஸ்திரிய இசையும் தெரியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த ,இது இப்படி வராதுங்க ஐயா என அதிகப்பிரசங்கித்தனமாக தலையிட்டு ஆலோசனை சொன்னதையும், அதை அங்கே கவிஞரோ, எம் எஸ்வி அவர்களோ கொஞ்சமும் பெரிது படுத்தாமல் இதோ இப்போ சரியாக வரும் பாருங்க , என்று கையமர்த்தி விட்டு அது இசைக்கோர்ப்பில் தாளக்கட்டுடன் சரியாக வந்த உடன் தான் முகம் சிவந்து மூக்குடைபட்ட சம்பவத்தையும் இதை விட யாராலும் பொதுவெளியில் சுவையாக பகிர முடியாது.
படத்தில் அந்த காட்சி மட்டும் இருந்தது ஆனால் இந்த அருமையான பின்னணிப் பாடல் இல்லை, அக்காட்சியில் கமல்ஹாசனும் சுஜாதாவும் பேசும் வசனம் வந்துவிட்டது. கமல்ஹாசன் மேடையில் பாடிக்காட்டிய அந்த அழகான பாடல் வரிகள் இங்கே, இதை மிக அழகாக கட்டாகிப் போன காட்சி என குறிப்பிட்டு அவர் மேடையில் விஸ்தரித்த அழகை காணத் தவறாதீர்கள்
கமல்ஹாசன் குரலில் படிக்கவும்
”நாதிர்ந்தின்னா,நாதிர்ந்தின்னா,நாதிர்ந்தின்னா
நல்ல மழை பெய்து காடு இன்று கனிந்தது
நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக மலர்ந்தது
கொம்புத்தேனைப் பார்த்து நின்றேன் கையில் வந்து விழுந்தது
கூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது
நாதிர்ந்தின்னா,நாதிர்ந்தின்னா,நாதிர்ந்தின்னா ”
கமல்ஹாசன் பேசிய மேடைப்பேச்சு சரியாக 9ஆம் நிமிடத்தில் துவங்குகிறது.
https://www.youtube.com/watch?v=CP0v_-TZ-MA