இரும்புத்திரை (1960)திரைப்படத்தில் வரும் வண்டலூர் ரயில்வே ஸ்டேஷன் பாருங்கள்,
இக்காட்சி சிவாஜி தன் காதலி வைஜயந்தி மாலா மற்றும் அவரது தாயாரை ஊரெங்கும் தேடுகையில் வருகிறது.
நடிகை வைஜயந்தி மாலாவின் நிஜத்தாய் வசுந்தராதேவியே இதில் தாயாக நடித்துள்ளார்,
முதலாளி மகள் சரோஜாதேவியின் சிவாஜி மீதான ஒருதலைக்காதலால் டைப்பிஸ்ட் வைஜயந்தி மாலாவை கல்லூரி தோழி என்றும் பாராமல் சடுதியில் பணிநீக்கம் செய்துவிடுகிறார்,
இதனால் அவர்கள் ஊரைவிட்டே போகின்றனர், அப்போது சிவாஜி அவர்களை சைக்கிளில் அலைந்து அப்படி தேடுகிறார்.
சிவாஜி இதில் சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் படித்து கோல்ட் மெடல் வாங்கிய மெக்கானிக், ரங்கநாதன் காட்டன் மில்லில் பழுதான ஒருலட்ச ரூபாய் liverpool ல் தயாரான voltas விசைத்தறி நெசவு எந்திரத்தின் பல்சக்கரத்தை இரு தினங்களில் ஜி.டி.நாயுடு போல ஆராய்ந்து தீர்வு கண்டுபிடித்தவர் புதிதாக மாற்று செய்து முதலாளி ரங்காராவ் மனதில் இடம் பிடிக்கிறார்,
அங்கே சிவாஜிக்கு 150 ரூபாய் சம்பளத்தில் தலைமை மெக்கானிக் வேலை கிடைக்கிறது, ஆலையில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு மூன்று மாத போனஸ் தந்ததாக பேரேட்டில் கையோப்பம் வாங்கிக் கொண்டு ஒரு மாத போனஸ் தரப்படுகிறது, அதற்கு மனம் கொதிக்கிறார், தான் அந்த போனஸை வாங்குவதில்லை, ஒரு மில் தொழிலாளி அந்தரத்தில் நெசவு எந்திரத்தில் பராமரிப்பு செய்கையில் கீழே விழுந்து இறந்து விடுகிறார்,அதை தற்கொலை என FIRல் நிர்வாகம் எழுதுகின்றனர், தொழிலாளியின் மரண தருவாயில் வெறும் 200 ரூபாய் தந்துவிட்டு 10000 தந்ததாக எழுதி வாங்குகிறார் முதலாளி s.v. ரங்காராவ்.
ரங்கநாதன் காட்டன் மில் செட்டை ரங்கபுரம் என்று ஜெமினி ஸ்டுடியோவில் அமைத்திருத்தனர், இப்படம் இந்தியில் Paigham என்ற பெயரில் நடிகர் திலிப்குமார் நடித்து வெளியானது, ,அதிலும் வைஜயந்தி மாலா தான் காதலி, வசுந்தரா தேவி தான் அவர் அம்மா,இந்தி ராமாயணம் தொடர் தயாரித்த ராமானந்த் சாகர் வசனங்கள் எழுதினார்,
இரண்டு திரைப்படங்களின் இயக்கமும் S.S.வாசன் தான்.,படத்தில் அண்ணன் s.v . சுப்பையா, தம்பி சிவாஜி முதலாளி s.v.ரங்காராவ் , தம்பி சிவாஜியின் முக்கோண காதல், அவர் வேலை செய்யும் பஞ்சாலையில் வெடித்தெழும் தொழிலாளர் பிரச்சனைகள், முதலாளி ரங்காராவின் அடுக்கடுக்கான சூழ்ச்சிகள், முடிவில் அதன் தீர்வு என நகரும் கதை, தொழிலாளர் போராட்டம் அதனைத் தொடர்ந்த சைக்கிள் பயணம் எல்லாம் விரிவாக படமாக்கியுள்ளனர் கடைசி காட்சியில் தொழிலாளர்களுக்கு அதுவரை இழைத்த அநீதிகளுக்காக வருந்திய முதலாளி s.v.ரங்காராவ் கொளவாய் ஏரி அருகே ரயில் தண்டவாளத்தில் நின்றவர் ரயில் மோதும் கடைசி நொடியில் சிவாஜியால் காப்பாற்றப்படுகிறார் ,
படம் சுமார் 3-00 மணி நேரம் நீள்கிறது.அதில் ஒரு மணி நேரம் k.a.தங்கவேலு நகைசுவையே நேரத்தை விழுங்குகிறது.
இப்படத்தின் வசனங்கள் இசை ஔ பாடல்கள் ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு என மிகவும் நன்றாக உள்ளது.
"நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்" என்ற பாடல் அற்புதமான ஹிட் பாடல்.
"கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல" பாடல் இன்றும் அன்றாடம்காட்சியின் வயிற்றுப்பாட்டை நிதர்சனமாக பேசுகிறது.