எந்த ஒரு தொழிலையும் திறம்பட நடத்த நல்ல தொழில் நேர்த்தி மட்டும் போதாது ,செய்த பணிக்கு நியாயமான கட்டணத்தை கேட்டுப் பெறுவதில் தான் வெற்றியும் முன்னேற்றமும் அடங்கியுள்ளது.
சிறிய தொழில் முனைவோரான போட்டோக்ராஃபர்,வீடியோக்ராஃபர், கார்பென்டர், ப்ளம்பர் , எலக்ட்ரீஷியன் ,
ஏசி மெக்கானிக் , call driver , பெயிண்டர், Civil பொறியாளர்கள்,civil consulting, estimator, valuer, surveyor, பாடலாசிரியர், கதாசிரியர், துணை இயக்குனர், நடிகர்கள், இலக்கியம் , கட்டுரையாளர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர், வாஸ்து நிபுணர், ஆர்கிடெக்ட்,இன்டீரியர் டிசைனர், visiting பிஸியோதெரபிஸ்ட், வீட்டு ப்ரோக்கர்கள் என அனைவரும் தங்கள் மொபைலில் notes என்ற word application நிறுவி, அதில் தங்கள் அலுவலக பெயர் , விலாசம் ,தொலைபேசி எண், வங்கி கணக்கு , upi விபரங்கள் தட்டச்சு செய்து sample file ஆக new client என்று பிரத்யேகமாக சேமித்து வைக்கவும்.
நீங்கள் பணி முடிந்த உடனே செய்த அந்த வேலை குறித்து சுருக்கமாக எழுதி அதன் அளவு , பரப்பளவு x நம் கட்டணம் எழுதி invoice ஐ PDF ஆக மாற்றி அனுப்பி follow up செய்து பணம் உங்கள் Gpay அல்லது வங்கி கணக்குக்கு வாங்கப் பாருங்கள்.
நான் கடந்த மூன்று வருடங்களாக இந்த invoice எழுப்பி பணம் வாங்குவதை வெற்றிகரமாகச் செய்கிறேன், ஒரு கோடு வரைந்தாலும் fees வாங்கியிருக்கிறேன், எந்த site visit செய்தாலும் இப்படி invoice எழுப்பி fees வாங்கியிருக்கிறேன் , என் மொபைலில் எழுதுபவை இலவசம் அது leisure hours , என் PC ல் வடிவமைப்பவை வரைபவை billng hours என்பதை நன்றாக வரையறுத்துள்ளேன்,செய்த வேலைக்கு fees வாங்குகையில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.
செய்த வேலைக்கு invoice எழுப்பினால் மட்டுமே அந்த பணத்தை follow up செய்து கேட்டு வசூல் செய்ய முடியும், ஒரு பணியை அல்லது பொருளை ரொக்கத்திற்கு விற்பதற்கும் கடனுக்கு விற்பதற்கும் வித்தியாசம் உள்ளது, இந்த சுவர் படம் அதை நன்கு விளக்கும்,
எத்தனையோ வருடங்கள் அனுபவமிக்க தொழில் முனைவோர் தாங்கள் செய்த பணிக்கு கட்டணம் வசூலிக்க வாய் வராமல் கூச்ச சுபாவத்தால் தயங்கி விட்டு விடுவர்,இந்த நல்ல குணத்தை cunning வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி ஏமாற்றுவது கண்கூடு.
செய்யும் வேலைக்கு 50% முன்பணம்,வேலை முடிந்த பின் முழுப்பணம் என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ளேன், என் panel ல் உள்ள நம்பிக்கை மிகுந்த visualiser , structural consultant இவர்களுக்கு வேலைக்கான விபரங்களை files மின்னஞ்சல் அனுப்புகையில் 100% தொகையை அனுப்பி விடுகிறேன், காரணம் இங்கு மெத்தனம் அல்லது காலதாமதம் ரத்தத்தில் உள்ளது, நாம் client இடம் சொன்ன காலக்கெடுவில் அவர்கள் அனுப்ப இரு தினங்கள் தாமதித்தாலும் நம் பெயர் கெடும், நமக்கு மன உளைச்சல், எனவே 100% fees அவர்களுக்கு தந்து சொன்ன காலக்கெடுவில் வேலையை தொடர்ந்து priority ஆக coordination செய்து follow up செய்தும் வாங்கிவிடுவேன், sentiment ஆக முழுப்பணம் பெற்றதால் அவர்கள் வாயால் சொன்ன காலக்கெடுவில் deliverables மிச்சமின்றி வாங்கி qc செய்து clients ற்கு தந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளேன், பணம் தர செவ்வாய் வெள்ளி பார்த்ததில்லை, professional , non professional இடம் இதுவரை பேரம் பேசியதில்லை , நல்ல மரியாதை தந்து வேலை வாங்கினால் தான் எத்தனை முறை revision ஆனாலும் அலுப்பு தட்டாது, ஆரோக்கியமான புரிதலுடன் வேலை நடக்கும், கருமித்தனம் காட்டினால் rebate எதிர்பார்த்தால் இணக்கம் போய் விடும் என்பதை கண்டறிந்துள்ளேன்.
எனவே எந்த தொழில் முனைவோரும் செய்யும் வேலைக்கு invoice எழுதி நிரப்பி client ன் மொபைல் எண்ணுக்கு வாட்ஸப் அனுப்பி அதை தொடர்ந்து follow up செய்து வசூல் செய்யுங்கள், இன்றைய கடும் பொருளாதார நெருக்கடி சூழலில் உங்கள் அறிவை ,உழைப்பை probono (ஓஸி) செய்யாதீர்கள்.
ஒரு professional இடம் ஓஸி எதிர்பார்ப்பவர்கள் நீங்கள் உங்கள் அறிவை உழைப்பை (probono) ஓஸி தருவீர்களா ? என ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்,
உழைத்தவன் வியர்வை காயும் முன் அவன் கட்டணத்தை தரச் சொன்ன நபிகளார் சொல்படி என் அரபு தேச பணிஅனுபவத்தில் ஒவ்வொரு மாதமும் 26 ஆம் தேதியே சம்பளம் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும், அங்கே அன்று ஒரு சேர குறுஞ்செய்தி ஒலி வருகையில் அத்தனை முகத்திலும் 1000 வாட்ஸ் வெளிச்சம் பிறக்கும், இந்த நல்ல வழக்கத்தை அனைவரும் பேணுங்கள், பழகுங்கள்.
உங்கள் பணியை சிறப்பாக முடித்தவர்களுக்கு tips எதுவும் தரவேண்டாம் ,ஆனால் பணிக்கான நியாயமான கட்டணத்தை உடனே கொடுத்து விடுங்கள், அவர்களை அலைக்கழிக்காதீர்கள், அவர்களுக்கு மட்டுமே மகாலட்சுமி மற்றும் குபேரனின் ஒருங்கிணைந்த ஆசி கிட்டும் ,வற்றாத செல்வம் உண்டாகும்.
#invoice,#probono,#charity,#professional,#ஓஸி,#கொசுறு,#நரித்தனம்,#தயக்கம்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339