நேற்று வீட்டின் அருகில் நடந்து வரும் கட்டுமானத்தில் காய்ந்த செங்கல்லை வைத்து கட்டுவேலை செய்வதைப் பார்த்தேன், அதை அங்கே மேற்பார்வை செய்த பொறியாளர்களும் அது தவறு என தடுக்கவில்லை, எத்தனை முறை இது பற்றி எழுதினாலும் இங்கு எதுவும் மாறாது, காரணம் இதற்கு பின் உள்ள அறிவியல் உண்மையை கட்டுவேலை செய்பவர்கள் உணராததால் தான் இது தொடர்ந்து நிகழ்கிறது.
இந்த எளிமையான சோதனையின் இணைப்பு படங்களைப் பாருங்கள், ஒன்று நீரில் நனைத்த செங்கல், மற்றொன்று காய்ந்த செங்கல், இதன் மேல் நிரவியுள்ளது 1:6 விகித சிமெண்ட் மற்றும் மணல் கலவை,
இங்கே கலவை நிரவிய சோதனையில் நீரில் நனைத்த செங்கல் கலவையின் நீரை உறிஞ்சாததையும், காய்ந்த செங்கல் கலவையின் நீரை உடனே உறிஞ்சியதையும் பாருங்கள்,
இப்படி காய்ந்த செங்கல் கொண்டு கட்டுவேலை செய்ய எப்படி அடி வரி செங்கல்களுக்கும் மேல் வரி செங்கல்களுக்கும் நல்ல உறுதியான பிணைப்பு உருவாகும்?
வீட்டு உரிமையாளர்கள் இவ்வாறு காய்ந்த செங்கற்கள் கொண்டு உங்கள் வீட்டு கட்டுவேலை செய்வதைப் பார்க்கையில் கேளுங்கள்,தடுங்கள்,தாய்சுவர், கைப்பிடி சுவர், மேன்ஹோல் சேம்பர் என எந்த வேலை என்றாலும் அந்த கட்டுமானம் உறுதியாக பிணைத்திருக்க வேண்டும் என்றால் செங்கற்கள் நீரில் நன்கு முழுக்க நனைத்திருக்க வேண்டியது அவசியம்.
இந்த எளிய சோதனையை அவர்களுக்கு விளக்கி புரிய வையுங்கள், கட்டுமான தளத்தில் நிகழும் மெத்தனம் என்பது கட்டுமானத்தின் ஆயுளைக் குறைக்கும் என்பது கண்கூடு.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design | 9940255873