ஃபைவ் மினிட்ஸ் ஆஃப் ஹெவன் -2009 (சொர்கத்தின் ஐந்து நிமிடங்கள்)



அங்கீகரித்தமைக்கு நன்றி:-



மீபத்தில் பார்த்த படத்தில் எனக்கு மிகவும் தாக்கத்தை உண்டு பண்ணிய படம் இது என்றால் மிகை இல்லை, டவ்ன்ஃபால் பட இயக்குனர்  ஆலிவர் ஹிர்ச்பீகல் என்றதுமே நம்பிக்கை இருந்தது, இயக்குனர்  இதிலும் ஏமாற்றவில்லை. கை ஹிப்பர்டின் அருமையான கதையில் உருவான இந்த படம் ப்ரிடிஷ் / ஐரிஷ் டெலிவிஷனின் கூட்டுதயாரிப்பாகும்,இந்த படத்திற்கு 2009ஆம் ஆண்டுக்கான் சன் டான்ஸ் ஃபெஸ்டிவலின் 2 விருதுகள் கிடைத்தது. பிபிசி 2 இல் வெளியிடப்பட்டு பின்னர் பெரிய திரையிலும் வெளியாகி நடிப்புக்காகவும் கதைக்காகவும் மிகவும் பேசப்பட்ட படம்.



படத்தின் ஒன்லைன் இது தான்:-
இருவர்.
ஒருவன் வெறுப்பின் உச்சத்தில் மற்றவனை மன்னிக்க மறுக்கிறான்.
மற்றொருவன் குற்ற உணர்வின் உச்சத்தில் தன்னையே மன்னிக்க மறுக்கிறான்.இந்த உணர்ச்சி போராட்டம் தான் ஃபைவ் மினிட்ஸ் ஆஃப் ஹெவன்


ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் புகழ் லியம் நீஸன் அவரது உன்னதமான நடிபபால் மனதை மீண்டும் உருக்கியிருக்கிறார்.ப்ளடி சண்டே படப் புகழ் ஜேம்ஸ் நெஸ்பிட் ஆக்ரோஷத்திலும் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் செம திறமை காட்டியிருக்கிறார்.இது இவர்கள் இருவரை மட்டும் முன் நிறுத்தி நகரும் கதைக்களம்.

ஒருவரின் குற்றத்தை இன்னொருவர் மன்னிப்பதும் , மறப்பதும் எவ்வளவு கடினம்? என மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள்.மனிதனின் மிகக் கடினமான செயல் என்பது மன்னிப்பாகத் தான் இருக்கும் என இந்த படம் 2 மணி நேரத்தில்  நமக்கு  நன்கு விளக்கிவிடுகிறது.

படத்தை 2 பகுதியாக பிரிக்கலாம்.
முதல் பகுதி 1975 ஆம் ஆண்டு மேற்கு அயர்லாந்தில் கத்தோலிக்கர்களுக்கும் , ப்ராடஸ்டண்டுகளுக்கும் நடந்த இனக்கலவரத்துடன் துவங்குகிறது.ஊரடங்கு உத்தரவு சமயத்தின் போது , முன் விரோதம் காரணமாக 17 வயது அலிஸ்டர் லிட்டில் , 19 வயது ஜிம் க்ரிஃபினை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அகல்கிறான்,சம்பவ இடத்தில் இருந்த ஜிம் மின் தம்பியை கொல்லாமல் விட்டு விடுகிறான். பின்னர் வழக்குக்கு அவனே சாட்சியாகிறான்.

பின்னர் அலிஸ்டர் போலீஸிடம் பிடிபட்டு 12 வருடங்கள் சிறை வாசம் அனுபவிக்கிறான்.

அண்ணனின் கொலையை கண்ணால் கண்ட 11 வயது ஜோ அண்ணனை கொன்றவனை பழிவாங்கவும் முடியாமல் , அண்ணனையும் காப்பாற்ற முடியாமல் தன் அம்மாவின் ஏச்சு பேச்சுக்கு ஆளாகி பின்னர் அம்மா தற்கொலை செய்து கொண்டு இறக்க, 33 வருடங்கள் கழிந்த நிலையில் .தற்போது திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் ஆன பின்னரும் ஜோ வன்மத்துடன் அலைகிறான்.அண்ணனை கொன்றவனை எப்படியாவது பழி தீர்க்க தருணம் பார்க்கிறான்.

இரண்டாம் பகுதியாக :-

1975 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரங்கள் , பலியான உயிர்கள் குறித்த டாகுமெண்டரி தயாரிக்க எண்ணிய ஐரிஷ் தொலைக்காட்சியினர் , அலிஸ்டரையும்   ஜோவையும் ஒருவரை ஒருவர்  மனம் விட்டு பேச செய்து வித்தியாசமான டாகுமெண்டரி எடுக்க கேட்டு அணுகுகின்றனர்.


இருவரும் இதற்கு சம்மதித்து தொலைக்காட்சி நேர்காணலுக்கு ஆவலுடன் தயாராகின்றனர்.அலிஸ்டாருக்கு ஜோ தன்னை கொன்று  தன்  அண்ணன் சாவுக்கு பழி தீர்க்க எண்ணியிருப்பது தெரியாது,

அந்த நாளும் வந்தே விடுகிறது.அலிஸ்டர் (லியம் நீஸன்) நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்க ஒரு அறையில் அமைதியாக காத்திருக்க ,

தாமதமாக உள்ளே நுழைந்த ஜோ (ஜேம்ஸ் நெஸ்பிட் ) அலிஸ்டரை கண்களால் தேடுகின்றான். அலிஸ்டருக்கு ஒப்பனை போடப்படுகின்றது. மிகவும் பரபரப்பான மன நிலையில் நிறைய புகை பிடிக்கிறான்,தொலைகாட்சி டெக்னீஷியன் பெண்ணிடம் அலிஸ்டரை பற்றி விசாரிக்க,அவன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை,ஆனால் ஒரு ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் சொந்தமாக உண்டு எனவும் ,தன் போல் இல்லாமல் வருமானத்திற்கு குறைவில்லை எனவும் அறிந்து இன்னும் கடுப்பாகிறான்,பழம் நறுக்கும் கத்தியை எடுத்து சட்டைக்குள் ஒளித்துக் வைத்துக் கொள்கிறான்.இவனுக்கு முகம் வியர்த்து இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.

தொலைக்காட்சி டெக்னீஷியன்களோ ? இவன் நல்ல மன நிலைக்கு வந்த பின்னரே இருவரையும் சந்திக்க வைக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.
இவனிடம் சம்மதம் வாங்கி ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் சொல்லி ,படிகளில் இருந்து இறங்கி வர சொல்ல,இவன் வேகமாக இறங்க.

அவர்கள் , மன்னிப்பு கேட்டு மீண்டும் இறங்கி வர சொல்ல, அவன் தன் கத்தி வெளியே விழுந்துவிடுமோ என பயந்து மீண்டும் பதட்டத்துடன் இறங்க,அவர்கள் இவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒருமுறை இறங்கி வர சொல்ல,இவன் ஏக கடுப்பாகி சட்டையில் குத்திக்கொண்ட மைக்கை உருவிக் கடாசிவிட்டு தன்னை கூட்டிவந்த காரில் சென்று அமர்ந்து கொண்டு மிரட்டி காரை கிளப்பிக்கொண்டு விமான நிலையம் செல்கிறான்.

அலிஸ்டர் தனக்கு மன்னிப்பு கிடைக்காத ஏமாற்றத்தில் உழல்கிறான். ஜோவின்  ஊருக்கு செல்கிறான்.ஜோ வழக்கமாக சூதாடும் கிளப்பிற்கு சென்று உருக்கமான கடிதம் ஒன்றை கொடுக்கிறான். அதில் நடந்ததை மறந்துவிட்டு நீ உன் மனைவியுடனும் மகள்களுடனும் இனிய வாழ்க்கையை துவக்க வேண்டும், நான் அதன் பின்னர் உன் முகத்திலேயே விழிக்கமாட்டேன்.எனக்கு தேவை ஒரே ஒரு மன்னிப்பு மட்டுமே என்கிறது.மேலும். நான்
உன் அண்ணன் இறந்த வீட்டில் தான் காத்திருக்கிறேன் என முடிக்க,

ஜோ வெறியுடன் கிளம்புகிறான்,அந்த பாழடைந்த வீட்டின் மாடிக்கு சென்ற ஜோ அலிஸ்டரை கண்டவுடன் கண்ட மேனிக்கு தாக்க தொடங்க, தற்காப்புக்காக அலிஸ்டரும் திருப்பி தாக்க,ஒருகட்டத்தில் கண்ணாடி சன்னலை உடைத்துக் கொண்டு கூரையில் சறுக்கி தரைத்தள நடைபாதையில் வந்து விழுந்து இருவரும் மூர்ச்சை ஆகின்றனர்.

சிறிது நேரத்தில் முதலில் கண்விழித்த அலிஸ்டர்  ஜோவின் நாடி பிடித்து பார்க்கிறான்.பின்னர் கண்விழித்த ஜோவை எழுப்பி உட்கார வைக்கிறான்.தான் பெல்ஃபாஸ்ட் என்னும் ஊருக்கு போவதாகவும்.திரும்பவே வரப்போவதில்லை என்றும் கூறுகிறான்.

இனியாவது வன்மத்தை கைவிட்டு மனைவி மகள்களோடு மகிழ்ச்சியாக வாழ்வதற்கே தான் அவனை உயிருடன் விடுவதாக சொல்லுகிறான். ஜோ இப்போது தெளிந்த உள்ளத்துடன் உடைந்த கால்களால் தள்ளாடி எழுந்து நின்று ஒரு சிகரெட்டை பற்ற வைக்கிறான்.

இப்போது அலிஸ்டர்  சாலையில் பாதசாரி சிக்னலுக்கு காத்திருக்க ஜோவிடமிருந்து கைபேசியில் அழைப்பு வருகிறது,  நீண்ட தயக்கத்துடன் பேசிய ஜோ , அவனை மன்னித்து விட்டதாகவும் இனி தன் முகத்தில் விழிக்க வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்கிறான்.அலிஸ்டர் நெடு நாள் பாரத்தை  நொடியில் இறக்கி வைத்த மகிழ்ச்சியில் ஆனந்த மழையில் நனைகிறான்.
-------------------------------------

ன்றைய காலகட்டத்தில் வெளிவரும் அனேகமான திரைப்படங்கள் வன்முறை, கண்ணுக்கு கண்,கைக்கு கை , பழிக்கு பழி தீர்த்தல்,ரத்தம்,வஞ்சம் ஆகியவற்றையே பிரதானமாக கொண்டு எடுக்கப்படுகின்றன, ஆனால் இந்த படம் வன்முறையால் வன்முறையை வேண்டாம் என்று சொன்ன படம்.இரண்டு மணி நேரம் உபயோகமாக செலவு செய்ய எண்ணுபவர்கள் , உலக சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்,மற்றபடி எனக்கு பேசினால் பிடிக்காது.கொட்டாவி வரும் என்பவர்கள் தயவு செய்து வேறு படம் பாருங்கள்.என்னை திட்டாதீர்கள்.
----------------------------------------------------------

படத்தின் கானொளியை அவசியம் பாருங்கள் படமும் பிடிக்கும்.

----------------------------------------------------------
Directed by
Oliver Hirschbiegel
Produced by
Eoin O'Callaghan
Stephen Wright
Written by
Guy Hibbert
Starring
Liam Neeson
James Nesbitt
Anamaria Marinca
Music by
David Holmes
Cinematography
Ruairi O'Brien
Editing by
Hans Funck
Studio
Big Fish Films
Element Pictures
Ruby Films
Distributed by
BBC Television (United Kingdom)
IFC Films (United States)
Pathé (worldwide)
Release date(s)
5 April 2009 (TV)
21 August 2009 (U.S., limited)
Original channel
BBC Two
Running time
90 minutes
Country
United Kingdom/Ireland


-------------------------------------

16 comments:

சென்ஷி சொன்னது…

கலக்கல் படத்துக்கு அசத்தல் விமர்சனம் மச்சான்! லியம் நீசனுக்காக நிச்சயம் பார்க்கலாம். நல்ல நடிப்பு!!

சின்ன அம்மிணி சொன்னது…

//அலிஸ்டர் (லியாம் நீல்சன்) //

லியம் நீசன் என்ற உச்சரிப்பு வரவேண்டும். நல்ல படத்திற்கு அறிமுகம்.

jackiesekar சொன்னது…

பார்த்தடுவோம்.. நல்லா அழகாக ரசிச்சி எழுதி இருக்கடா...

கலையரசன் சொன்னது…

gud post:-)

பின்னோக்கி சொன்னது…

//ஒருவரின் குற்றத்தை இன்னொருவர் மன்னிப்பதும் , மறப்பதும் எவ்வளவு கடினம்?

நீங்க சொன்னது ரொம்ப சரி.. மன்னிக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம். அதுக்குன்னு ஒரு பக்குவன் வேணும்.

ரொம்ப நல்ல படம் போல தெரிகிறது. அறிமுகத்திற்கு நன்றி கார்த்திக்.

வினோத்கெளதம் சொன்னது…

நல்ல விமர்சனம் உங்கள் கலைச்சேவை தொடரட்டும்..
கொஞ்சம் தமிழ் படங்களும் எழுதுங்க அடிக்கடி..

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

கார்த்திகேயன். இன்னொரு நேர்த்தியான விமர்சனம். உங்கள் உலக படங்கள் விமர்சனத்திற்கு என்றே ஒரு வட்டம் உருவாகிவருகிறது :)

தொடருங்கள்.

ஷண்முகப்ரியன் சொன்னது…

//ஒருவன் வெறுப்பின் உச்சத்தில் மற்றவனை மன்னிக்க மறுக்கிறான்.

மற்றொருவன் குற்ற உணர்வின் உச்சத்தில் தன்னையே மன்னிக்க மறுக்கிறான்.இந்த உணர்ச்சி போராட்டம் தான் ஃபைவ் மினிட்ஸ் ஆஃப் ஹெவன்//

பல வருடங்களுக்கு முன் எனது அபிமான இயக்குநர் கே எஸ்.கோபாலகிருஷ்ணன் சார்’என்னதான் முடிவு’ என்று ஒரு அற்புதமான படம் எடுத்திருந்தார்.கிட்டத் தட்ட இதே தீம்தான்.நீங்கள் பார்த்திருக்க முடியாது எனக் கருதுகிறேன்.அந்த வருட சிறந்த தமிழ்ப் படத்துக்கான ஜனாதிபதி அவார்ட் வாங்கிய படம்.வழக்கம் போல நமது தமிழ் ஜனங்கள் அப்போது அதனை ஓட்டவில்லை.

தனது வாழ்க்கையையே நாசமாக்கிய ஒருவனைப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஹீரோ, பல வருடங்கள் கழித்து அவனைப் பார்க்கும் போது தனது குடும்பத்தையே ஆளாக்கி வைத்திருப்பவனும் அவனே என்று தெரிய வரும்போது அவன் காலில் விழுந்து கதறுவான்.

பழிக்குப் பழி என்பது எவ்வளவு அபத்தம் என்று கூறிய அந்தச் செய்தி அன்று மக்களுக்குப் புரியவில்லை.

இந்த ஆங்கிலப் படத்தில் அருமையான கதைக் களம் இந்த டாக்யுமெண்டரி விஷயம்தான்.

காணொளியையும்,கதையினையும் நன்கு அறிமுகப் படுத்திய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்,கார்த்தி.

வாழ்க உங்கள் ரசனை.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பன் சென்ஷி உன் வருகைக்கும் ஒட்டுக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை சின்ன அம்மணி மேடம் உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல,பெயரில் குளறுபடி செய்துவிட்டேன்,சுட்டிக்காட்டியமைக்கு நன்றி,மாற்றியும் விட்டேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை அண்ணன் ஜாக்கி சேகர் , வருகைக்கும் ஒட்டுக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பன் கலை மாப்பி உன் வருகைக்கும் ஒட்டுக்கும் குட் போஸ்டுக்கும் நன்றிகள் பல

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் பின்னோக்கி தொடர் வருகைக்கும் ஒட்டுக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.
நீங்க இது போல படங்களுக்கு எழுதலாமே பாஸ்?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் செந்தில்வேலன் வருகைக்கும் ஒட்டுக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல, நீங்க சொன்னதே எனக்கு பெரிசு!
மிகப்பெரிய பாராட்டு.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//ஒருவன் வெறுப்பின் உச்சத்தில் மற்றவனை மன்னிக்க மறுக்கிறான்.

மற்றொருவன் குற்ற உணர்வின் உச்சத்தில் தன்னையே மன்னிக்க மறுக்கிறான்.இந்த உணர்ச்சி போராட்டம் தான் ஃபைவ் மினிட்ஸ் ஆஃப் ஹெவன்//

பல வருடங்களுக்கு முன் எனது அபிமான இயக்குநர் கே எஸ்.கோபாலகிருஷ்ணன் சார்’என்னதான் முடிவு’ என்று ஒரு அற்புதமான படம் எடுத்திருந்தார்.கிட்டத் தட்ட இதே தீம்தான்.நீங்கள் பார்த்திருக்க முடியாது எனக் கருதுகிறேன்.அந்த வருட சிறந்த தமிழ்ப் படத்துக்கான ஜனாதிபதி அவார்ட் வாங்கிய படம்.வழக்கம் போல நமது தமிழ் ஜனங்கள் அப்போது அதனை ஓட்டவில்லை.

தனது வாழ்க்கையையே நாசமாக்கிய ஒருவனைப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஹீரோ, பல வருடங்கள் கழித்து அவனைப் பார்க்கும் போது தனது குடும்பத்தையே ஆளாக்கி வைத்திருப்பவனும் அவனே என்று தெரிய வரும்போது அவன் காலில் விழுந்து கதறுவான்.

பழிக்குப் பழி என்பது எவ்வளவு அபத்தம் என்று கூறிய அந்தச் செய்தி அன்று மக்களுக்குப் புரியவில்லை.

இந்த ஆங்கிலப் படத்தில் அருமையான கதைக் களம் இந்த டாக்யுமெண்டரி விஷயம்தான்.

காணொளியையும்,கதையினையும் நன்கு அறிமுகப் படுத்திய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்,கார்த்தி.

வாழ்க உங்கள் ரசனை.//

ஐயா,
நான் தன்யன் ஆனேன்.மாபெரும் மனிதர் வாயால் வாங்கும் இந்த ஊக்கங்களும் பாராட்டும் எனக்கு கோடி பெறும்.

நானும் கே எச் ஜி அவர்களின் படங்களின் விசிறியே!
என்ன தான் முடிவு என்னும் படம் நானும் டிடியில் பார்த்திருக்கிறேன்.அவரின் மெலோ ட்ராமாக்கள் பிரசித்தி பெற்றவை, கடைசியாக விஜயகாந்தை வைத்து காவியத்தலைவன் என ஒரு படம் செய்த்ததாக நினைவு! நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டும் கூட!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் வினோத் கவ்தம்,
உடன் பிறப்பே.
கண்டிப்பாக தமிழ் படத்துக்கும் எழுதுவோம்.ஆனால் படம் பாத்துட்டு தான் எழுதனும்.
இங்க அதுக்கு தான் வசதி இல்லையே.
உடனே டவுன்லோடு செய்வது கடினம்.
யு நேம் இட்.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)