ஹாலோகாஸ்ட் என்னும் ஆறாண்டுகால திட்ட இனப்படுகொலை


ஹாலோகாஸ்ட் என்பது மகாக்கொடியவன் ஹிட்லரின் நாஜிப்படையால் போலந்து  நாட்டில் தன்னிச்சையாக 1933 ஆம் வருடம் தொடங்கி 1939 ஆம் வருடம் வரை நடந்த மனிதத்தன்மையற்ற இனப்படுகொலை ஆகும். வரலாற்றில் ரத்தத்தால் எழுதப்பட்ட கறுப்பு காவியம்.கடவுள் என ஒருவர் உண்மையிலேயே உண்டா? என கேட்க வைக்கும் அருவருக்கத்தக்க மிருகத்தனமான பெருங்குற்றங்கள் , அரசியலின் பெயரால் அரங்கேறிய கருப்பு நாட்கள் அவை . மொத்தத்தில் காலமும் காலனும் கைகோர்த்து  போட்ட மகா கேவலமான மேடை நாடகம்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 3000 பேர் என தோராயமாக கணக்கிட்டு  6வருடங்கள் தொடர்ந்து மொத்தம் 60 லட்சம் பேர் கொல்லப்பட்டு ,இந்த பஞ்சமகா பாதகத்தை  நாஜிப்படையினர் வெற்றிகரமாக வெட்கமின்றி நடத்தியுள்ளனர்.

மிகக் கொடூரமான இனவெறி கொண்ட ஜெர்மானிய நாஜிப்படை ,யூதர்களையும் இன்னபிற இனத்தவரையும் கொன்றழிக்க சதித்திட்டம் தீட்டி மூன்று நிலை கட்டமைப்பு திட்டங்களை , தாங்கள் கைப்பற்றிய ஐரோப்பாவில் தோற்றுவித்தது. இனப்படுகொலையை கட்டவிழ்க்க உருவாக்கப்பட்ட அடிப்படை மூன்று அடுக்கு  நிலை திட்டவியூகம் பின் வருமாறு:-


நிலை-1
மெய்ன் சிட்டி வித் கெட்டோ:- (லோக்கலாக சொன்னால் அகதி குடியிருப்புக்கள்)


இந்த அகதிகள் முகாம்கள் போலந்து நாட்டில் கானாஸ் (kaunas),  வில்னியஸ் (vilnius), பியலிஸ்டொக் (bialystok) வார்ஸா (warsaw), லொட்ஸ்( lodz) க்ரகொவ் (krakow) ல்வொவ் (lwow) என மொத்தம் 7 இடங்களில் மின்னல் வேகத்தில் நிறுவப்பட்டன.

யூத மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த முகாம்களில் வரவழைக்கப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பெற்றனர். யூத இன ஆண்களும் பெண்களும் இந்த முகாம்களில் வழங்கப்படும் 20செ,மீ X 20செ,மீ  நட்சத்திர குறியீட்டு லேபில் போன்ற பட்டையை தங்கள் ஆடைகளில் வலது தோள்பட்டையில் தைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக  அமல் படுத்தப்பட்டனர்.
ஹோமோ செக்சுவல்களுக்கு பிங்க் வண்ண லேபில்கள் தைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர்.பாரம்பர்ய போலீஷ் இன ஆண்களும் பெண்களும் இந்த முகாம்களில் வழங்கப்படும் 20செ,மீ X 20செ,மீ  "P" என்னும்  குறியிட்ட துணிப்பட்டையை தங்கள் ஆடைகளில் வலது தோள்பட்டையில் தைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக  அமல் படுத்தப்பட்டனர்.அவர்களிடம் இருந்த வீடுகள், நிலங்கள்,கால் நடைகள், தொழிற்சாலைகள் , வங்கிகள், யூத பொது நிறுவனம் என மொத்தமாக கபளீகரம் செய்யப்பட்டன.


போலந்து,ஜெர்மனி,ஆஸ்ட்ரியா, ஹங்கேரி இன்னபிற நாடுகளிலிருந்து வீடுவாசல்களை பிடுங்கிக்கொண்டு சுத்தமாக காலிசெய்து விரட்டப்பட்ட  யூதர்கள் மற்றும் இன்ன பிற இனத்தவரான ரோமாக்கள், யெகோவா விட்னெஸ்ஸுகள், ஹோமோ செக்சுவலிஸ்டுகள்,கும்பல் கும்பலாக நடத்தியோ ரயிலிலோ,அல்லது வாகனங்களிலோ புளிமூட்டைகள் போல அடைத்து அழைத்துவரப்பட்டு  இந்த கெட்டோ மையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.


இதில் மின்வசதி, குளிர்பிரதேசத்தில் குளிர்காய மேண்டல் வசதி எதுவுமே இராது, ஒரே அறையில் நான்கு முதல் ஐந்து யூத குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டனர். இங்கே தான் அடையாள அட்டை வழங்கப்பட்டு அருகில் உள்ள மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்ஸ்களில் சாகும் வரை வேலை வாங்கப்பட்டு வதைக்கப்பட்டனர்.

இந்த மையங்களில் வைத்து தான் யூத இனத்தவரின் அன்றாடஉபயோக,அறிய பொருட்களை பிடுங்கிக்கொண்டு கிடங்கு போல குவித்து வைத்து அதை கருவூலத்துக்கு எடுத்து சென்றனர்.யாரும் தப்பிப்போகமுடியாத வண்ணம் 20 அடிக்கு சுவர் எழுப்பி அதன் மேல் மின் கம்பிகளும் அமைக்கப்பட்டு வெளியுலக தொடர்பே இல்லாமல் ஈழதமிழர் முகாம் போல அடைத்து வைக்கப்பட்டனர்.

நிலை-2
மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்ஸ்:- (லோக்கலாக சொன்னால்  தொழிற்பேட்டைகள்)

ப்லாஸ்ஸொவ்(plaszow) ஸாஸ்லாவ்(zaslaw) க்ராஸ் ரொஸென் (gross-rosen) பொட்டுலைஸ்(potulice) ஸ்டட்தாஃப்(stutthof) சொல்டாவ் (soldau)  என மொத்தம் 6 இடங்களில் மின்னல் வேகத்தில் நிறுவப்பட்டன.ஏற்கனவே இருந்த போலந்துக்காரர்களின் தொழிற்சாலைகளும் சிறை பிடிக்கப்பட்டு  நாஜி அரசுக்கு வேண்டியவர்களுக்கு வசதியாக கைமாற்றப்பட்டன.

"Arbeit Macht Frei" ழைப்பே சுதந்திரம் பெற்றுத்தரும்.
இது தான் ஒவ்வொரு கான்செண்ட்ரேஷன் கேம்ப்பின் வாசல் வளைவில் எழுதப்பட்ட வாசகம்,ஒவ்வொரு நாளும் கெட்டோவிலிருந்து வரும்
மக்கள் இதைத்தாண்டிதான் உள்ளே அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலை,
பீங்கான் தொழிற்சாலைகள், சமையல் பாத்திர தொழிற்சாலைகள்.மற்றும் சாய தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்றனர்.பெரும்பாலான நேரங்களில்  சாலையில் மலைப்போல் குவிந்த ஐஸ்கட்டிகளை வாரிக்கொட்டுவது , சாலைகள் போடுவது, கட்டிடம் கட்டுவது, பிணங்களை அப்புறப்படுத்துவது, பிணங்களை எரியூட்டுவது போன்ற வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டனர்.இதில் நிறைய பேர் தப்பிக்க முயன்று மின்வேலியில் மாட்டியும், சிலர் நாஜிப்படைக்கு எதிராக குழு அமைத்து துப்பாக்கி எடுத்து போராடி பின்னர் பிடிபட்டு திறந்த வெளிகளில் தூக்கு போடப்பட்டும், மண்டியிடப்பட்டு முன்னந்தலையிலோ, பின்னந்தலையிலோ சுடப்பட்டும் கொல்லப்பட்டனர்.

யூதர்கள் மற்றும் இன்ன பிற இனத்தவரை இங்கு வைத்து தான் சாகும் வரை வேலை வாங்கியது, திறந்த வெளி மருத்துவ சோதனையில் குழந்தைகள்,சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர் இன்னபிற நோய்வாய்பட்டோரை உடனடியாக சுட்டுக் கொன்றோ அல்லது மந்தை போல லாரிகளில் ஏற்றி ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ரயிலில் மந்தை மந்தையாக எற்றி  இறுதியாக எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்களில் இறுதி தண்டனைக்கு கொண்டு வந்து விடுவர்.

யாரும் தப்பிப்போகமுடியாத வண்ணம் மின் வேலி அமைக்கப்பட்டு வெளியுலக தொடர்பே இல்லாமல் ஈழதமிழர் முகாம் போல அடைத்து வைக்கப்பட்டனர்.என்ன கொடுமை என்றால்? முகாமில் தண்ணீர்,மற்றும் உணவு சப்ளையே சரிவர கிடையாது,சேறும் சகதியுமாக இருக்கும்.

குப்பையில் போடப்படும் ரொட்டிகளும், அழுகிய முட்டைகளும், ஒன்றுக்கும் உதவாத அழுகிய காய்கறிகளும், குப்பை கீரைகளும்,புழத்துப்போன தானியங்களுமே என்றாவது தரப்படும்,அதீத பட்டினி,சுகாதாரமின்மையால் உண்டான தொற்று நோய்கள். மிருகத்தனமான மருத்துவ பரிசோதனைகள் ,தூக்கிலிட்டு கொல்லுதல்,துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல் மற்றும் ஓய்வில்லாத வேலையின் காரணமாகவே எண்ணிலடங்கா மனித உயிர்கள் பலியாயின.

குளிக்க வழியில்லாததால் எல்லோரும் அழுக்காகவும்,
சிரங்கு சொறியுடனும், தலையில் பேணும் பொடுகுடனுமே வாழ்ந்தனர்.
ஒரு பங்கருக்கு 4 பேர்கள் என ஆண் பெண்,பெரியவர்கள் என பேதம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டு எந்நேரமும் மரண பயம் காட்டியே
முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர்.பெரும்பான்மையான மக்கள் மன அழுத்தத்தால்  பீடிக்கப்பட்டே உலவினர்.


நிலை-3
எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்ஸ்:-(லோக்கலாக சொன்னால் கசாப்பு கடைகள்)
இந்த வகை கொலை கள மையங்கள்  ஆஷ்விட்ஸ் 1, 2 மற்றும் 3 ( auschwitz 1,2 & 3), பெல்ஸெக் (belzec), மஜ்டனெக் (majdanek) சொபிபொர் (sobibor) செல்ம்னோ (chelmno) ட்ரிப்லின்கா (trblinka) என மொத்தம் 6 இடங்களில் நிறுவப்பட்டன, இருப்பதிலேயே பெரியதாக ஆஷ்விட்ஸ் என்னும் கொலை கள மையமே கருதப்படுகிறது.இந்த இடத்தில் மட்டும் மூன்று எக்ஸ்டெர்மினேஷன்  கேம்ப்கள் அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் துவங்கப்பட்டு இரவு பகலாக இயங்கி வந்ததாம் .

 மேலே சொன்ன ஒவ்வொரு மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்களில் இருந்தும் இந்த எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்ஸ் எனப்படும் கேஸ் சாம்பர் அல்லது கொலை செய்யும் கூடம் வருவதற்கு 24 மணி நேரமும்  நீராவி ரயில் விட்டிருந்தனர், அவசர அவசரமாக இருப்புபாதைகளும் , ரயில் நிலையங்களும்  அமைக்கப்பட்டன.இடைவிடாமல் யூதர்களும் இன்னபிற இனத்தவரும் ஆட்டு மந்தைகள் போல அழைத்துவரப்பட்டு இறக்கி, ஆடைகளை களைய வைக்கப்பட்டு, தலை முடியை வெட்டவைக்கப்பட்டு , மிகக் குளிர்ந்த நீரில் ஷவரில் ஒரு பெரிய குளியல் அறைபோன்ற கூடத்தில் குளிக்க வைக்கப்பட்டு, பின்னர் கூடத்தின் கூரையின் வழியே கொடிய சயனைடு வாயுவை (Zyklon B) செலுத்தி மணிக்கு 125 பேர் என கணக்கிட்டு கொல்லப்பட்டு , உடனடியாக சூளையில் எரியூட்டப்பட்டு பரலோகம் சென்ற ஒன்வே ட்ராஃபிக் இது என்றால் மிகை ஆகாது.

கடைசியில் செம்படையினர் கைப்பற்றியவை :- லட்சக்கணக்கான மூக்கு கண்ணாடிகள், லட்சக்கணக்கான லெதெர் சூட்கேசுகள், லட்சக்கணக்கான வரி வரியான பைஜாமாக்கள் (சீருடைகள்) லட்சக்கணக்கான தலை வாரும் ஹேர் ப்ரஷுகள். லட்சக்கணக்கான ஜோடி காலணிகள், பதினாயிரம் மூட்டை தலைமுடிகள்(பெயிண்ட் ப்ரஷ் செய்ய) யூதர்களை எரியூட்டிய பதினாயிரம் சாம்பல் அடங்கிய பீங்கான் ஜாடிகள்(ஹிட்லர் பின்னொரு சமயம் அந்த சாம்பலை விளை நிலங்களில் எருவாக இட எண்ணி இருந்தானாம்)

இதில் மிக வேதனையான விஷயம் என்னவென்றால் செம்படையினர் நாஜிப்படையை தோற்கடித்து நெருங்கும் முன்னரே இந்த கொலை கலன் அறைகளை அழித்தும் , இடித்தும் சேதப்படுத்தியும் விட்டனர்.

பதிவேடுகளை கொளுத்தியும் விட்டனர்.கொன்றவர் விபரம் 15 லட்சம் வரை இதனால் கணக்கிலேயே வரவில்லை என பெரும் சர்ச்சையும் இன்று வரை உண்டு. இன்றைய நவ நாகரீக இஸ்ரேலிய யூதர்கள் ஜெர்மனியிடம் கற்ற கொடிய பாடத்தை எளியார் மீது பிரயோகிக்கும் பொருட்டு பாலஸ்தீனிய அப்பாவி குடிமக்கள் மீது பாஸ்பரஸ் குண்டுமழை பொழிந்தும் எந்திர துப்பாக்கியால் சுட்டும் பீரங்கி தாக்குதல் நடத்தியும் தீர்த்துக் கொள்கின்றனர்.

தான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என நினைக்கும் ஒரே ஜீவன் இவர்களாகத்தான் இருக்கும்.
-----------------------------------------------------------------


-----------------------------------------------------------------
டிஸ்கி:-

இன்றைய தேதியிலும் இனப்படுகொலை ஓய்ந்த பாடில்லை.
ஈழத்தில் இதை எழுதும் ,படிக்கும் கன நேரத்தில் எத்தனை அப்பாவி சகோதர,சகோதரிகள்  கொல்லப்பட்டனரோ?

கடவுளே? ஏஸி அறையில் இருந்து சுகமாய் எழுதவும் படிக்கவும் செய்து விடுகிறோம், அந்த கேம்பில் ஒருவனாக இருந்தால் தெரியும் நமக்கு சங்கதி!

கடவுளிடம் தினமும் கதறி மன்றாடுவோம். நல்ல காலம் உண்மையிலேயே பிறக்க, அவர்களுக்கு விடுதலை உண்மையிலேயே கிடைக்க.

செய்திகள், படங்கள், சுட்டிகள் தந்து உதவிய விக்கிபீடியா, கூகுளுக்கு நன்றி
21 comments:

கோபிநாத் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தல!

ஷண்முகப்ரியன் சொன்னது…

இந்தக் கொடூர மனிதர்களின் மன நிலையும்,அதனை எதிர்த்துப் போராடும் வலிவற்ற ஜீவன்களின் மன நிலையும் வெறுமனே உணர்ச்சி பூர்வமான அணுகு முறைகளால் புரிந்து கொள்ளக் கூடியதல்ல,கார்த்தி.

நமது யோகிகளையும்,இன்றைய உளவியல் மேதைகளையும் வைத்தே இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்.

சாவைக் கூடச் சலனமின்றி வரிசையில் நின்று ஏற்றுக் கொண்ட அந்த யூத மக்களின் ம்ன நிலைமையை நிறையப் பேர் ஆய்ந்திருக்கின்றனர்.

அடக்கி வைத்தவர்களின் எண்ணிக்கை, அடங்கிப் போனோர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விந்தையாக இருக்கும்.

estabilishmentக்கு எதிராகப் புரட்சி பண்ணாத மனிதனின் இயல்பான அடிமைத்தனம்,
பெற்றவர்களினால் குழந்தையிலிருந்து ஊட்டப் படும் உலக நோய் என்பது எனது எண்ணம்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை தம்பி கோபி,
வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

இந்தக் கொடூர மனிதர்களின் மன நிலையும்,அதனை எதிர்த்துப் போராடும் வலிவற்ற ஜீவன்களின் மன நிலையும் வெறுமனே உணர்ச்சி பூர்வமான அணுகு முறைகளால் புரிந்து கொள்ளக் கூடியதல்ல,கார்த்தி.

நமது யோகிகளையும்,இன்றைய உளவியல் மேதைகளையும் வைத்தே இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்.

சாவைக் கூடச் சலனமின்றி வரிசையில் நின்று ஏற்றுக் கொண்ட அந்த யூத மக்களின் ம்ன நிலைமையை நிறையப் பேர் ஆய்ந்திருக்கின்றனர்.

அடக்கி வைத்தவர்களின் எண்ணிக்கை, அடங்கிப் போனோர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விந்தையாக இருக்கும்.

estabilishmentக்கு எதிராகப் புரட்சி பண்ணாத மனிதனின் இயல்பான அடிமைத்தனம்,
பெற்றவர்களினால் குழந்தையிலிருந்து ஊட்டப் படும் உலக நோய் என்பது எனது எண்ணம்.,,

ஐயா,

மிகச்சரியான முதிர்ச்சியான கருத்துக்கள்,

estabilishmentக்கு எதிராகப் புரட்சி பண்ணாத மனிதனின் இயல்பான அடிமைத்தனம்,//

மிக மிக உண்மை

பெற்றவர்களினால் குழந்தையிலிருந்து ஊட்டப் படும் உலக நோய் என்பது எனது எண்ணம்.,,

சான்சே இல்லை அற்புதம்

ஒவ்வொரு வரிகளும் மணிமனியாக இருந்தன.
உங்கள் பின்னூட்டங்களே எனக்கு பொக்கிஷமாகும்
வருகைக்கு மிக்க நன்றி

சென்ஷி சொன்னது…

உண்மையில் வலி ஏற்படுத்தும் உணர்ச்சிகள் கார்த்திக்.. இறைவனிடம் வேண்டுதல் நமக்கான மனத்துயரத்திலிருந்து விடுபட்டுக் கொள்வது மாத்திரமானதாக மட்டுமே உள்ளது. ப்ச்!

சென்ஷி சொன்னது…

ரெண்டுலயும் ஓட்டு போட்டாச்சு மாப்ள

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

கார்த்திகேயன், மிக நேர்த்தியான இடுகை.

நானும் சில நாட்களுக்கு முன் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் திரைப்படம் பார்த்து வந்தேன். என்ன கொடூரம். நம் சகோதரர்களும் இதே போல கொடுமைகளைப் படுகிறார்கள் என்று நினைக்கும் பொழுது :(

செ.சரவணக்குமார் சொன்னது…

மிக அருமையாக எழுதப்பட்ட இடுகை கார்த்திக். ஹிட்லரின் நாஜிப்படை அட்டூழியங்களை முன்பே முழுவதும் படித்திருக்கிறேன். வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரம் நிறைந்தது எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்களில் இருந்த யூதர்களின் நிலை. இலங்கையில் இன்று நம் மக்கள் படும் துயரும் இதற்கு ஈடானதே.

பகிர்வுக்கு நன்றி நண்பா..

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

Hi

very moving post, I have been to the Imperial War Museum in London, oh god, you can't watch, you will be just watching but your heart will be crying, ......

lots of nice post and photos from you, keep going sir

ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…

அற்புதமான உங்கள் உழைப்புக்கு கருத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வேறு வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை. பின் ஊட்டம் என்றால் திரு சண்முகப்ரியன் குறித்து எழுதியுள்ளதை அளிக்கும் விமர்சனமும் அது நமக்கு பாடம் என்பது இப்போது புரிந்து இருக்கும். முத்தங்கள்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை சென்ஷி மாப்பி,
உன் துவாவின் போது மன்மாற வேண்டிக்கொள்.
அது போதும். உன் அருமையான ஊக்கத்துக்கு நன்றிகள்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் செந்தில்வேலன்,
ஆமாம்ங்க, ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் மிக அற்புதமான படம். நான் பலமுறை பார்த்ததுண்டு.
இந்த கண்ணீர் வரலாற்றை நம் பாட புத்தகங்களில் மறைத்து வைத்துவிட்டனர்,இந்த கொடுமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் அடுத்த ஐரோப்பா டூரில் ஆஷ்விட்ஸ் சென்று வரமுடியுமா? என பாருங்கள்.

இதை பற்றி ஒருவன் தெரிந்து கொண்டாலே போதும் அவனுக்கு நல்ல மனிதம் வளர்ப்பது என்றால் என்ன என விளங்கிவிடும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் சரவணகுமார்,
நலம் தானே? என்ன எதுவும் எழுதக்கானோம் நண்பரே?

கண்டிப்பாக நம் எல்லோரின் கூட்டுப் பிரார்த்தனை மூலம் இதற்கு தீர்வு காண முடியும். நாமும் இறைவனிடம் நம் சகோதரர்களுக்காக வேண்டிக்கொள்வோம்.
உங்கள் வருகைக்கும் நல்ல கருத்துக்கும் நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க , வணக்கம் சுந்தர் சார்,
நலம் தானே?
உங்கள் வருகைக்கும் அற்புதமான ஊக்கத்துக்கும் மனமார்ந்த நன்றி சார்.அடுத்த பதிவர் மீட்டிங்கில் கண்டிப்பாக நிறைய பேச வேண்டும் சார்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க , வணக்கம் ஜோதிஜி அவர்களே,
உங்கள் வருகைக்கும் , மனம் திறந்த பாராட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், அதை நான் மிகவும் பெரிய பொக்கிஷமாக நினைக்கிறேன்.

மகாத்மா காந்திஜி அவர்கள் ஹிட்லருடன் கூட்டு வைக்காததற்கு காரணம் இது தான். நம் நாட்டுக்கு
சுதந்திரம் வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும்
சுபாஷ் அவர்கள் போல ஹிட்லரிடம் கூட்டு வைக்க
பாபுஜி வெறுத்தார். அதனை போற்றும் வண்ணமே சார்லீ சாப்லின் அவர்கள் பாபுஜியை மிகவும் சிலாகித்தார், நேரில் வந்தும் சந்தித்தார்.இன்றைய தேதியில் தேவை அஹிம்சை என உலக நாடுகள் உணர வேண்டும்.ப்ரார்திப்போம் சார்.
மீண்டும் நன்றி.

Romeoboy சொன்னது…

இரண்டாம் உலக போர் என்கிற புத்தகத்தில் இந்த கொலை முகம் பற்றி விரிவாக இருக்கு. படிக்கும் போதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா பாருங்க அடிவாங்கினவன் இப்ப FBIக்கு இணையா தன்னோட புலனாய்வு துறையை விரிவு படுத்தி எல்லா நாடுகளிலும் ஆளுங்கள வச்சி இருக்காங்க. MOSSAD ஆளுங்க கண்கொத்தி பாம்பா இனி எங்களை எதிர்த்தல் இது தான் கதி என்று பாவம் பலஸ்தீன நாட்டை பாடா படுத்தி எடுக்குது.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

இரண்டாம் உலக போர் என்கிற புத்தகத்தில் இந்த கொலை முகம் பற்றி விரிவாக இருக்கு. படிக்கும் போதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா பாருங்க அடிவாங்கினவன் இப்ப FBIக்கு இணையா தன்னோட புலனாய்வு துறையை விரிவு படுத்தி எல்லா நாடுகளிலும் ஆளுங்கள வச்சி இருக்காங்க. MOSSAD ஆளுங்க கண்கொத்தி பாம்பா இனி எங்களை எதிர்த்தல் இது தான் கதி என்று பாவம் பலஸ்தீன நாட்டை பாடா படுத்தி எடுக்குது.//

வாங்க அருமை நண்பர் ராஜராஜன்.

என் மனதிலும் தைத்துக் கொண்டிருக்கும் முள்ளும் அந்த காஸா படுகொலை சம்பவமும், கருகிய பிஞ்சு முகங்களும் தான்.ஈழ தமிழருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நல்ல காலம் விரைவில் பிறக்க ஆண்டவனை ப்ரார்திப்போம்.
வாழ்க உங்கள் தேடிப்படிக்கும் பாங்கு.
உங்கள் எழுத்துக்களின் மெருகு கூடிவருவதை உணர்கிறேன்.வருகைக்கும் முக்கிய கருத்துக்கும் நன்றி

பின்னோக்கி சொன்னது…

படிக்கவே படு பயங்கரமா இருக்கு. மனிதர்கள் செய்யக்கூடிய காரியமே இல்லை. அந்த இடங்களை இப்பொழுது பார்ப்பவர்கள் கூட அழுவார்கள்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க , அருமை நண்பர் பின்னோக்கி,
நலம் தானே?
உங்கள் வருகைக்கும் அற்புதமான ஊக்கத்துக்கும் மனமார்ந்த நன்றி .

அந்த இடங்களை இப்பொழுது பார்ப்பவர்கள் கூட அழுவார்கள்.//

கண்டிப்பாக அழுவார்கள், அது கல்லையும் கரைக்கும்

வினோத்கெளதம் சொன்னது…

குரு உன் உழைப்புக்கு வந்தனம்..நிறையா விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன்..
நம் சகோதரர்களும் இதேப்போல் ஒரு நிலையில்..கொடுரம் தான்..
சொல்வதுப்போல் நம்மிடம் எதையும் தீவிரமாக எதிர்த்து அதை சாதிக்கும் மனநிலை குறைந்துவிட்டது..நிறையா விஷயங்களில் Compromise பண்ணிக்கிட்டு போயிடுறோம்..அதான் பிரச்சினையே..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

குரு உன் உழைப்புக்கு வந்தனம்..நிறையா விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன்..
நம் சகோதரர்களும் இதேப்போல் ஒரு நிலையில்..கொடுரம் தான்..
சொல்வதுப்போல் நம்மிடம் எதையும் தீவிரமாக எதிர்த்து அதை சாதிக்கும் மனநிலை குறைந்துவிட்டது..நிறையா விஷயங்களில் Compromise பண்ணிக்கிட்டு போயிடுறோம்..அதான் பிரச்சினையே..//

ஆகா அருமையாக சொன்னீர்கள் வினோத்,

நம்மிடம் எதையும் தீவிரமாக எதிர்த்து அதை சாதிக்கும் மனநிலை குறைந்துவிட்டது..நிறையா விஷயங்களில் Compromise பண்ணிக்கிட்டு போயிடுறோம்..அதான் பிரச்சினையே..//
மிகவும் பவர்ஃபுல்லான கருத்துக்கள் குரு.
வருகைக்கு மிக்க நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)