ஃப்ராக்சர் (2007) முறிவு - ஐ ஷாட் மை வைஃப் . ப்ரூவ் இட்!

ஃப்ராக்சர் (2007) முறிவு

தீர விசாரிப்பதே மெய்!, குற்றவாளி தப்பமுடியாது! போன்றவை படம் சொல்லும் பாடங்கள்.

து 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகச் சிறந்த நடிப்புக்காகவும் வித்தியாசமான கதைக்காகவும்  பேசப்பட்ட  சட்டம்  மற்றும் சஸ்பென்ஸ் வகையை சார்ந்த  அருமையான படம். ஹானிபல் லெக்டர் புகழ்  சர்.அண்டோனி ஹாப்கின்ஸ் யதார்த்தமான குரூரத்தை மீண்டும் தன்   நடிப்பால் வெளிக்காட்டிய படம்.

மனிதர் 71 வயதிலும் என்னமாய் இருக்கிறார்? இன்றைய இளம் ஹிரோக்களுக்கு சவால் விடும் ஆக்ருதி,பார்வையிலும் குரலிலுமே சித்திரவதை மற்றும்  பழிவாங்குதல் போன்ற உணர்ச்சிகளை வெகு அருமையாக செய்திருப்பார், மனிதர் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய ஹோம் ஒர்க் செய்வார் என படித்தேன்,குறிப்பாக ஒவ்வொரு வசனத்தையும் கண்ணாடி முன் நின்று மணிக்கணக்காக விதவிதமான போஸ்களில் பேசிக்கொண்டே இருப்பாராம்.அது இயற்கயான டயலாக் டெலிவரியாக இவர் உணரும் வரை ஓய மாட்டாராம்.இவர் நடித்ததில் எதை மாஸ்டர் பீஸ் என குறிப்பிட்டு சொல்லுவது? அல்லது விடுப்பது? எனக்கு இவரின் ஹானிபல் சீரீஸும் , மாஸ்க் ஆஃப் ஸொர்ரோவும் மிகப் பிடிக்கும்.நடிகர் திலகம் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் இவரை தான் நிரம்பப் பிடித்திருக்கும் போல.

ந்தோனி ஹாப்கின்சுக்கு ஈடாக இருக்க வேண்டுமென்றால் ஒருவர் எப்படிப் பட்ட நடிகராக இருக்க வேண்டும்? ரயான் கோஸ்லிங் (29 வயது ) ஹாலிவூடில் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை உணர்த்துவது போல இவர் தேர்ந்தெடுத்து செய்யும் வித்தியாசமான கதாபாத்திரங்கள்,இவர் லார்ஸ் அண்ட் ரியல் கேர்ள் என்னும் ட்ராமடி வகை படத்தில் ஏற்று நடித்த லார்ஸ் என்னும் பாத்திரம் ஒன்றே போதும், சமயம் கிடைக்கும் போது பாருங்கள்.இவர் என்னமாதிரி கதா பாத்திரங்களையும் செய்வார் என்பது விளங்கும்.


படத்தின் கதை இதுதான்:-

பெவெர்லி ஹில்சில் உல்லாச ஃபார்ம்ஹவுஸ் வகை வீட்டில் வசிக்கும் பகாட்டி வெய்ரான் ஓட்டும், ஸ்ட்ரக்ச்சுரல் எஞ்சினியரான டெட் (அண்டோனி ஹாப்கின்ஸ் ) தன் மனைவியின் கள்ளக்காதலை உளவு பார்ப்பதிலிருந்து படம் துவங்குகிறது.

 
தன் மனைவியின் கள்ளக்காதலன் ராப் நன்னலி ( பில்லி பர்க் ) ஒரு உயர் போலிஸ் அதிகாரி ! அவனை எப்படி பழி வாங்குவது?

மனைவி ஜெனிஃபர் ( எம்பெத் டேவிட்ஸ் ) ஒரு  ஹோம் மேக்கர், சமுதாயத்தில் நல்ல பெயருடன் இருப்பவள் அழகுடன் அறிவும் நிறைந்தவள்!அவளை எப்படி பழி வாங்குவது?


பகலில் இவர் வேலைக்கு சென்றதும் ஆரம்பமாகிறது அவளது லீலைகள்.
அவற்றை அழகாக படம் பிடித்து இவருக்கு தனியார் டிடெக்டிவ் கொடுக்க,இவரே திட்டமிட்டு களத்தில் இறங்குகிறார்.

மனைவி காதலுடனான கொஞ்சலுக்கு பிறகு வீடு திரும்பியதும், அவள் இவரை வீட்டில் கண்டதும் அதிர்ந்து போலியாய் நடிக்க, அவர் அவளை கையும் களவுமாய் பிடித்து மிஸஸ் நன்னலி என கூப்பிட ,

அவள் விவாகரத்து பேச்சுக்கு வாய் திறப்பதற்கு முன் இவர் ஜெனிஃபர் என அழைக்க, அவள் திரும்பியதும் இவரின் .45 புல்லெட் அவளின் மண்டை ஓட்டுக்குள் நுழைந்து குடி கொள்கிறது., அவள் சாகாமல் கோமாவில் போகும் அளவுக்கு இவரின் திட்டமிடுதல் துல்லியம்.அபாரம்!


இப்பொது போலிஸை பக்கத்து வீட்டுக்காரர்கள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அழைக்க, வெளியே போலீஸ் சூழ்ந்து விட , இவர் துப்பாக்கி அப்படியே மேசை மேலே வைக்கிறார், மீதமுள்ள துப்பாக்கி குண்டுகளை சன்னலில் சுடுகிறார், தன் ஆடைகளை களைந்து மேண்டல் பீஸில் போட்டு எரிக்கிறார்,
தன் உடம்பை கிட்சன் சின்கில் கழுவுகிறார். மனைவியை தர தரவென இழுத்து போய் ஹாலில் போடுகிறார்.

போலீஸ் கதவை தட்ட , இவர் ஒருவரை மட்டுமே உள்ளே வர அனுமதிப்பேன் என்கிறார். கண்டிப்பாக நெகோஷியேட்டராக ராப் நன்னலி தான் வருவார் என் எதிர்பார்த்தாற் போலவே அவர் வர,


நான் என் மனைவி எனக்கு  துரோகம் செய்ததால் சுட்டுவிட்டேன் ,அதோ இருக்கிறாள் என காட்ட,

இவர் ராப் ஐ ஆயுதத்தை கீழே போட்டு விட்டு வர சொல்ல அவரும் கீழே போட்டு விட்டு பேரம் பேச வர ,அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் நடக்கிறது ஒரு அற்புதம். அங்கு தான் டெட்டின் மாஸ்டர் மைண்ட் வேலை செய்கிறது.

ஆயுதத்தை டெட்டும் அந்த துப்பாக்கிக்கு அருகே கீழே போட , உள்ளே வந்த ராப் தன் காதலியை ரத்த் வெள்ளத்தில் கண்டு துடிக்கிறார், முதலுதவி செய்கிறார். இந்த வெட்கம் கெட்ட உறவை வெளியேவும் சொல்ல முடியாது!
சொன்னாலும் தன் கௌரவம் போய் வேலைக்கும் ஆபத்து.
டெட் குடுத்தார் பாருங்கள் ஒரு பீமபுஷ்டி அல்வா, மனிதர் முடியாமல் மென்று விழுங்க,வேறு வழியில்லாமல் ஆத்திரத்தில் இவரை அடித்து நொறுக்க,



இங்கு தான் அரசு தரப்பு துடிப்பான தன்மானமுள்ள இளம் வக்கில் வில்லி பீச்சம்(ரயான் கோஸ்லிங்) ஆஜர்!

டெட் வாக்குமூலம் அளித்ததாகவும், சாட்சி ராப் எனவும் வழக்கு பின்னப்படுகிறது.அதில் கூத்து என்னவென்றால் டெட் தனக்கு வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் தாமே வாதாடி எல்லோரையும் பந்தாக பாவித்து அடித்து ஆடுகிறார்.மனிதர்.

சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட குண்டு வெளியேறவில்லை, துப்பாக்கி கன்னித்தன்மையுடன் இருக்கிறது, குண்டும் ஆறு மட்டும் குறைந்து இருக்கிறது.

அப்போ எப்படி ஜெனிஃபர் கோமாவுக்கு போனாள்?

டெட் சுட்டது உண்மையா?

யார் சாட்சி? போலிஸா? அய்யே..... வேறு சாட்சி இல்லையா?

சரி எங்கே துப்பாக்கி?இதுவா? இது புதுசாக அல்லவா இருக்கு?
குண்டுகள் கைபற்றினீர்கள்,துப்பாக்கியை காட்டுங்கள் இவருக்கு ஆயுள் கொடுக்கலாம் என  நீதிபதி சொல்ல!

ஜெனிஃபராவது கண்விழித்து சாட்சி சொல்லுவாள் என பார்த்தால் எங்கே?
இவன் போய் தலை மாட்டில் அமர்ந்து கொண்டு தனக்குத்தானே பேசியது தான் மிச்சம், அதற்கும் டெட் ஆப்பு வைத்து விட்டார், சாட்சியை கலைக்க பார்க்கிறார் என நாடகமாடி ரெஸ்ட்ரெய்ண்ட் ஆர்டர் வாங்கி விட்டார், இனி ஜெனிஃபரையும் பார்க்க முடியாது.

வில்லியும் ராப் நன்னலியும் இப்படி எண்ண..
ஒரு கை ரேகையாவது டெட் தான் குற்றவாளி என பொருந்துகிறதா?
சரி துப்பாக்கியை சல்லைடை போட்டு தேடியாகிவிட்டது.
எங்கும் இல்லை, ஒரு வேளை இந்த ஆள் அதை ஆசிட்டில் போட்டு கரைத்திருப்பானோ? இருந்தாலும் இருக்கும் என அதையும் முயன்று பார்த்தாகிவிட்டது.

இதற்கிடையில் ராப் தனிமையில் வில்லியை சந்திக்கிறார்,
தன்னால் அதே போன்ற ஒரு துப்பாக்கியை சாட்சியமாக கொடுக்க முடியும் என சொல்ல, இளம் கன்று அட்டார்னியோ மறுத்து நீதி, நேர்மை தான் முக்கியம்.
டெட் குற்றவாளியாயிருந்தாலும் அதை நேர்மையாகத்தான் நிரூபிப்பேன் என சொல்லி திருப்பி அனுப்புகிறான்.மீண்டும் தேடுதல் வேட்டை,அந்த வீட்டை தான் புது பொண்டாட்டி போல எத்தனை முறை கலைத்து போடுவது?

இத்தோடு மூன்று முறை வாய்தா வாங்கி, வாங்கி, நீதிபதி கொடுத்து கொடுத்து அலுத்து போக, இந்த முறை துப்பாக்கியை கண்டு பிடிக்காவிட்டால் டெட்டை யூ ஃப்ரீ டு கோ என அனுப்பி விடுவார்களே! கொடுமையே! என இளம் டெபுடி அட்டார்னி வில்லி தவிக்க அவரின் எண்ணத்தில் சரியாக மண் விழுந்து ஒரு தடயமுமோ துப்பாக்கியோ இந்த தேடுதல் வேட்டையிலும் கிடைக்காமல் போக, டெட் சந்தர்ப்ப சாட்சியங்கள் இல்லாத பயனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக கருதி  விடுதலை செய்யப்படுகிறார்.

கள்ளக்காதலன் ராப் கோர்டு வளாக படிக்கட்டிலேயே தன் துப்பாக்கியால் மண்டையில் சுட்டுக்கொண்டு இறக்க, டெட் கையோடு மனைவி இருக்கும் அரசு மருத்துவமனை போகிறார். இப்போ நீ சாகலாம் என தீர்மானித்து ஆஸ்பத்திரியில் கருணைக்கொலைக்கு முன்னமே விண்ணப்பித்திருக்க இவர் வந்ததும் துரிதமாக ட்யூபில் காற்று பிடுங்கி விட்டு, சுவாசத்தை,மூளையை,இதயத்தை, உடலை கண்காணிக்கும் மானிட்டர் கருவிகள் தயவு தாட்சன்யமின்றி நிறுத்தப்படுகின்றன. நம்ம மிஸ்டர் நேர்மை அதாங்க வில்லி ஜெனிஃபரின் லைஃப் சப்போர்டை நிறுத்தக்கூடாது என போட்ட கோர்டு ஆர்டருடன் ஓடி வருவதற்கும் இவர் ஜெனிஃபரின் பூத உடலை மார்சுவரிக்கு அனுப்புவதற்கும் வினாடி வித்தியாசம் கூட இருக்க வில்லை.

நம் டெட்டுக்கு ஒரே இறுமாப்பு, கம்பீரம், பார்வையினாலேயே சாதித்தேன் பார்டா ஜுஜுப்பி.. என ஒழுங்கு காட்ட,

வில்லி பீச்சம் அமைதியாக சவால் விடுகிறான்.முன்பு நீ மாட்டியது கொலை வழக்கு இப்போது
அது இரட்டைக்கொலை முயற்சி + கொலை வழக்கு நீ தப்பவே முடியாது.
நீ உப்பை தின்றாய் ! தண்ணியும் குடிப்பாய் என் கறுவிவிட்டு அகல்கிறான்.

இப்போது வில்லிக்கு ஒரு அழைப்பு வர மார்சுவரிக்கு போனால்,டாக்டர் ஒரு அதிசய செய்தியை சொல்கிறார்.
ஜெனிஃபர் இறந்ததும் அவள் மூளையில் இருந்து அகற்றப்பட்ட குண்டும் ராப் நன்னலியின் மூளையிலிருந்து அகற்றப்பட்ட குண்டும்  ஒரே வகை, ஒரே துப்பாக்கியால் உமிழப்பட்டது என சொன்னவுடன்.

போலீஸ் மேலதிகாரிகளை சந்திக்கிறார்,இந்த முறை கண்டிப்பாக டெட் ஐ பிடிப்போம் என உறுதி எடுக்கின்றனர்.

இங்கு நம் டெட்டுக்கோ மூளையில் மணி அடிக்கிறது. தன்னை பிடித்து விடுவார்களோ? என்ற உள்ளுணர்வில் வெளி நாட்டுக்கு தப்பி யோட நினைக்க,
வீட்டுக்குள் நுழைய அங்கு தன் அலமாரியில் குடைந்து கொண்டிருக்கும் வில்லியைப் பார்த்து ஏக கடுப்பாகிறார்,

அவரிடம் மிக ஆணித்தரமாக வில்லி ஆதாரங்களை அடுக்குகிரான்.

  • டெட் கள்ளக் காதலன் உபயோகித்த அதே வகை துப்பாக்கியை வாங்கியது
  • இவர்கள் நீச்சல் குளத்தில் குளிக்கையில்   அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்து துப்பாக்கியை மாற்றியது.
  • அதில் ஒரு குண்டை மட்டும் ஜெனிஃபரை சுட பயன்படுத்தியது.
  • சன்னலை சுட புதிய குண்டுகளை பயன்படுத்தியது
  • பின்னர் லாவகமாக துப்பாக்கியை ராப் வீட்டுக்குள் வந்ததும் மாற்றியது
  • எல்லாவற்றிற்கும் மேலாக ஹோட்டல் வீடியோ காமிராவில் டெட்டின் உருவம் பதிந்தது என அடுக்க.

டெட் முகம் கருக்கிறது,கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அப்படியா நன்றாக மேல் முறையீடு செய்து கொள், நீ சொன்னது எல்லாம் உண்மைதான் என திமிருடன் பதில் சொல்லிவிட்டு சூட்கேசுடன் வெளியேற

வெளியே நின்ற போலீசு இவருக்கு காப்பு மாட்டுகிறது. தன்னுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த வில்லி மைக்ரோபோன் அணிந்திருந்ததை இவர் கவனித்திருக்கவில்லை பாவம்.

மறு நாளே வழக்கு ஆரம்பம்ங்க...
இப்போது பந்து அட்டார்னிகளின் கோர்டில் , ச்சும்மா அடித்து ஆடப்பட,
இந்த முறை.இறுகிய முகத்துடன்  கூண்டுக்குள் சிங்கம் கர்ஜிக்க முடியாமல் முனகுகிறது .

கையும் களவுமாக பிடித்த வில்லிக்கோ பல சட்ட நிறுவங்களிலிருந்தும் வேலை வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்க,தன் பழைய முதலாளியுடன் போட்ட ஒப்பந்தப்படி அதே நிறுவனத்திலேயே அட்டார்னியாக தொடர்கிறான்.

ஆமாம்ங்க குற்றவாளி தப்பிக்க முடியாது தான்!

___________________________________________

என்ன படம் ? என்ன விறுவிறுப்பு? காட்சிக்கு காட்சி வேகம்,ஸ்டைல் தான்.
மிகத் துள்ளலான ஒளிப்பதிவு- க்ராமர் மார்கந்தா
சஸ்பென்ஸ் த்ரில்லிங்கை கடைசி வரை தக்க வைத்த இசை-ஜெஃப் டன்னா&மைக்கேல் டன்னா
எங்குமே தொய்வில்லாத இயக்கமும் கோர்ப்பும்-க்ரிகோரி ஹொப்லிட் ஹிட்ச்காக்கின் படங்களுக்கு ஈடான நேர்த்தி.

இந்த கதையில் வந்த டெட் இன் கதாபாத்திரத்தை நம்ம சர்.அண்டோனி ஹாப்கின்ஸ் ஐ தவிர யார் செய்திருந்தாலும் விழலுக்கு இறைக்கப்பட்ட நீரே!

இங்கே ஒரு ஆங்கில விமர்சனம்

_________________________________________



படத்தின் காணொளியை பாருங்கள் படமும் பிடிக்கும்:-





படக்குழு விபரம்:-
-------------------------------------------
Directed by
Gregory Hoblit
Produced by
Charles Weinstock
Written by
Glenn Gers
Daniel Pyne
Starring
Ryan Gosling
Anthony Hopkins
David Strathairn
Rosamund Pike
Embeth Davidtz
Music by
Jeff Danna
Mychael Danna
Cinematography
Kramer Morgenthau
Editing by
David Rosenbloom
Studio
Castle Rock Entertainment
Distributed by
New Line Cinema
Release date(s)
April 20, 2007
Running time
113 min.
Country
United States
Language
English

-------------------
இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.
-------------------
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)