இர்ரிவர்ஸிபிள்(2002)பிரெஞ்சு (18+)ஒவர்டோஸ் ஏடாகூடம்


2002 ஆம் ஆண்டு காஸ்பர் நோ இயக்கத்தில் வெளியாகி மிகவும் சர்ச்சைக்குள்ளான ஃப்ரெஞ்சு மொழி கிரைம் ட்ராமா த்ரில்லர் வகைப் படம். பாரீஸ் நகரத்தின் கொடூரமான ஒரு ராத்திரியில் துவங்கும் படம் அப்படியே படிப்படியாக ரிவர்ஸ் க்ரோனாலாஜிக்கல் ஆர்டரில் பின்னோக்கி நகர்கிறது.

ரொமான்ஸுக்கும் ஒயினுக்கும் பெயர் போன பாரீஸ் நகரில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? என நம்மை கேள்வி கேட்க வைக்கிறது. படம் பார்க்கும் பார்வையாளருக்கு, காமிராவை தோளில் வைத்து லைவ் டெலிகாஸ்ட் போல்  சுற்றி சுற்றி எடுக்கப்பட்ட காட்சிகளும், யாரோ செவிட்டில் அறைந்தால் கொய்ங்க் என்னும் சத்தம் வருமே அது போல ஒரு 28 ஹெர்ட்ஸ் டெசிபலில் எழும்பும் தொந்தரவு செய்யும் இசையும் . நம்மை அந்த சூழ்நிலையிலே நிப்பாட்டி வேடிக்கை பார்க்க வைக்கிறது.(வேண்டுமென்றே பார்வையாளரை குழப்பவும் எரிச்சலடையச்செய்யவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாம்) இதனால் இசையமைப்பாளர் தாமஸ் பங்கால்டர் யார் யாரிடம் எத்தனை வசவு வாங்கினாரோ?

கொலை அல்லது விபத்தை வேடிக்கைப்பார்க்கும் அனைவருக்கும் ஒரு அனுதாபமான முகபாவத்துடன் கூடிய கேள்வியிருக்கும்.சம்பவம் எப்படி நடந்திருக்கும்? என்று .அந்த ஒரு திரியை இவ்வளவு அழகாய் நான் க்ரோனாலாஜிக்கல் மற்றும் நான் லீனியர் தனமாய் எடுக்கப்பட்ட இப்படத்தில் திணித்து முயன்று பார்த்திருக்கிறார் இயக்குனர் காஸ்பர் நோ. இவரே இயக்கம்,எடிட்டிங்,ஒளிப்பதிவாம்.

ரிசல்ட்:- படம் ஓவர்டோஸ் வன்முறை.ஓவர்டோஸ் காமம்,ஓவர்டோஸ் காதல்.என எல்லாமே ஓவர்டோஸ் தான்.படம் கேன்ஸ் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டபோது அமர்ந்திருந்த 2000 பார்வையாளர்களில் 200க்கும் மேற்பட்டோர் முதல் முப்பது நிமிடங்களில் சே என்று எரிச்சலுடன் எழுந்து போனார்களாம்.

படத்தின் க்ரோனோலாஜிக்கல் மற்றும் லீனியரான கதை வடிவம்:-
---------------------------------
டைம் ருய்ன்ஸ் எவ்ரித்திங்:- இது தான் படத்தின் டாக் லைன். இப்படித்தான் படம் ஆரம்பிக்கிறது (சாரி முடிகிறது) பீத்தோவனின் 7ஆம் சிம்பொனி பிரம்மாண்டமாய் பிண்ணனியில் ஒலிக்கிறது. 
முன்னாள் காதலன் பியர்ரி-யிடமிருந்து பிரிந்த பேரழகி அலெக்ஸ் (மோனிக்கா பெலுச்சி) இரவு நடக்கப்போவதறியாமல் பூங்காவில் படுத்துக் கொண்டே ”An Experiment with Time” என்னும் புத்தகம் படிக்கிறாள்.அன்று காலை முதலே காதலனுடன் நடந்த அழகான கூடலை மனதினுள் எண்ணி மகிழ்கிறாள். எல்லாவற்றிற்கும் மேலாக தான் கருத்தரித்திருப்போமோ?  என்னும் குறுகுறுப்பு தோன்றி அதை புதிய காதலன் மார்க்கஸுக்கும் பகிர,  அவனும் அதை கொண்டாட ,இவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி  உண்டாகிறது.

தைக் கொண்டாடி குடிக்கத் தான் வீட்டில் ஒயின் இல்லை,எனவே மார்க்கஸ் ஒயின் வாங்க கிளம்பிப்போக, இவள் கருத்தரிப்பு சோதனை கிட்டை உபயோகித்து கருத்தரித்தது உண்மை என உறுதிப்படுத்திக்கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறாள்.படுக்கைக்கு மேலே இருக்கும் போஸ்டரில் 2001 : ய ஸ்பேஸ் ஒடிஸி என்னும் கூப்ரிக்கின் பட போஸ்டர் இருக்க அதில் ”த அல்டிமேட் ட்ரிப்” என இருக்கிறது.அன்று காலை கூடலின் போது அவள் காதலன் உன்னை குதப்புணர்ச்சி செய்ய வேண்டும் என சொன்னது வேறு இவளுக்கு சிரிப்பை வரவழைக்கிறது. (காலையில் நடந்த அந்த 10 நிமிடத்துக்கும் மேலாய் வரும் ரம்மியமான காதல் காட்சியை கண்டிப்பாக காணத்தவறாதீர்கள் நண்பர்களே.)அன்று அதிகாலையில் இவள் ஒரு சுரங்கப்பாதையில் நடந்து வருவதாயும் அது இடிந்து போவது போலும் கனவு கண்டு வேறு திடுக்குற்றிருந்தாள்.

மாலையில் இந்நாள் காதலன் மார்கஸுடன் டிஸ்கோ பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு, மார்கஸின் குடி, ஹெராயின் போதை உட்கொள்ளல், மற்றும் பிற பெண்களிடம் கடலை போடுதல் போன்றவற்றால் எரிச்சலுற்றவள், கோபமாய் முன்னரே வீட்டுக்கு கிளம்புகிறாள், அலெக்ஸ் மெட்ரோ ரயில் பிடிக்க சாலையை கடக்க முயன்று தோற்று,ஒரு விலை மாதுவிடம் வழி விசாரிக்க அவள்,நடை பாதையை காட்டுகிறாள். இவள் ஆள் அரவமற்ற சுரங்க நடை பாதையில் இறங்கி நடக்கிறாள்.
ங்கே ஒரு திருநங்கையை ஒரு கொடிய காமுகன் பலாத்காரம் செய்ய எத்தனைப்பதை கண்டு இவள் பயந்து கத்திவிட்டு விலக ,அவன் அவளை விட்டு விட்டு இவளை கத்திமுனையில் சிறைபிடித்து தரையில் கிடத்தி குதப்புணர்ச்சி செய்துவிட்டு,உன் கணவன் உன்னை இங்கே திணித்து புணர்ந்துள்ளானா?இது என்ன ரத்தமா?என கேட்டவன்,களைப்பில் கண்ணயற்,இவள் மெல்ல நகர்கிறாள். விழித்தவன் உன்னை நான் இன்னும் முடிக்கவில்லை,என்று இவளின் அழகிய முகம் பார்த்து வெறி கிளம்ப பூட்ஸ் காலால் மிதித்தும்  முகத்தை  தரையில் மோதி சிதைத்து விட்டும் அகல்கிறான்.

ழகிய அலெக்ஸ் இப்போது கோமா நிலையில் போலீசாரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறாள். (இந்த 9 நிமிடம் வரும் கற்பழிப்பு காட்சி எடுக்க 2 நாள் பிடித்ததாம்,முடிவில்  கிராபிக்ஸ் செய்யப்பட்டு, ஒரே காட்சியில் எடுக்கப்பட்டது போல பஃப் செய்யப்பட்டதாம்.அலெக்ஸின் முகத்தில் வழியும் குருதிக்கோடுகள் , அந்த சைக்கோவின் பிறப்புறுப்பு கூட கிராபிக்ஸாம், அந்த சுரங்க நடைபாதை தரை முழுக்க  வலிக்காமல் நடிக்க  ஏதுவாய் ஃபோம் ரப்பர் ப்ளாக்ஸ் கொண்டு அமைத்தனாராம்)

ப்போது பார்ட்டி முடிந்து வெளியேறிய அலெக்ஸின் முன்நாள் காதலன் பியர்ரியும்,  இந்நாள் காதலன்  மார்க்கஸும் போலீசாரின் வாகனத்தையும் ஒரு பெண் மருத்துவ உதவிக்கு கொண்டு செல்லப்படுவதையும் பார்த்து நெருங்கி வர,அது இவர்களின் காதலி அலெக்ஸ் என அறிகின்றனர்.வாய்விட்டு அலறுகின்றன்ர்.

ந்த இருவர்,கொதிக்க,இவர்களை வேடிக்கை பார்க்கும் ஒரு ஆள் இவர்களிடம் நெருங்கி அவனை பழி வாங்க வேண்டுமா? ஒரு பர்ஸை காட்டி இது உள்ளே சுரங்க நடை பாதையில் கிடந்தது என்கிறான்.அதில் அடையாள அட்டையில் இருப்பவன் படத்தில் லா டெனியா என்றும் பணத்துக்காக தானும் இவர்களுடன் இணைகிறேன் என்கிறான். இப்போது மூவரும் இணைந்து அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை போலிஸாருக்கு தெரியாமல் பழிவாங்க புறப்படுகின்றனர். துணைக்கு வழியில் ஒரு பெண் தரகனையும்  அழைத்துக்கொண்டு அந்த நாதாரியை தேடி செல்கின்றனர்,

தில் (முன்னாள் காதலன்) பியர்ரி, மார்க்கஸை விட நிதானமாயும் அமைதியாகவும் இருக்கிறான்.அவன் மார்க்கஸை விடவும் 2 வயது பெரியவன். இவனால் அலெக்ஸை திருப்தி படுத்தமுடியவில்லை என்ற ஒரே காரணத்தினாலே அலெக்ஸ் மார்கஸை புதிய காதலனாய் வரித்துக்கொள்ள ,பியர் எந்த கோபமும் கொள்ளவில்லை, மாறாக அவள் மேல் அதிக மையலுறுகிறான். ஆரம்பத்திலிருந்தே மார்க்கஸை ஒருத்திக்கு ஒழுக்கமாய் உண்மையாயிரு என அறிவுறை சொன்னவன். இப்போது மார்க்கஸுக்காக விருப்பமே இல்லாவிட்டாலும் இந்த பழிவாங்கும் படலத்தில் ஒட்டிக்கொண்டுள்ளான்.

காட்சி மாறி:-
(இவர்கள் மூவர் தோன்றும் மிக நீண்ட மெட்ரோ ரயில் காட்சி நான் லீனியராக படத்தின் ஊடே 20 நிமிடங்கள் வருகிறது)

மெட்ரோ ரயிலில் வீட்டுக்குச் செல்ல ஏறும் அலெக்ஸ்,அவளின் இந்நாள் காதலன் மார்க்கஸ்,முந்நாள் காதலன் பியர்ரி பேசிக்கொள்ளும் பாலியல் சார்பு வசங்கள் அனைத்துமே கவிதை என்பேன்.ஒவ்வொரு வசனமும் நிறுத்தி நிதானமாக பார்க்க வேண்டிய ஒன்று.அதில் பியர்ரி லேசான இதய நோயால் பாதிக்கப்பட்டதால் அவனால் அலெக்ஸுக்கு முழுமையான் சுகத்தையும் நீண்ட நேர புணர்ச்சியையும் தர இயலவில்லை, அவன் இதுகுறித்த குற்ற உணர்வினால் அலெக்ஸிடம் உனக்கு இன்று திருப்தியாயிருந்ததா? உனக்கு உச்சநிலை அடைந்துவிட்டாயா? என  தியோரிட்டிகலாய் கேட்டு நச்சரித்து முக்கியமான பிராக்டிகலில் கோட்டை விடுகிறான்.

லெக்ஸ் அழகிய இளம் பெண், நிறைய கனவுகளுடன் இருப்பவள், கலவியில் வெவேறு கோணங்களை விரும்புபவள். தன் கருவையும் சுமக்க ஆவலுடன் இருக்கிறாள்.ஆனால் பியர்ரியின் தொண தொண பேச்சினாலும் அவனின் செக்ஸில்  ஈடுபாடட்ட தன்மையினாலும் ,அவனை பிரிகிறாள்,அவனை விட 2 வயது இளைய, மார்க்கஸை தேர்ந்தெடுக்கிறாள், இவன் மூலம் தன் காம இச்சைகளை பூர்த்தி செய்து கொள்கிறாள். சற்றே அயற்சியைத் தரக்கூடிய  நெடிய நீண்ட காட்சியென்றாலும் பேசும் வசனங்களை உற்று நோக்க வேண்டுகிறேன்.அந்தரங்கம் புனிதமானது என்னும் கூற்றை மீறி நாம் கேட்கும் வசனங்கள் நம்க்கு மிகவும் விசித்திரமாயும் புதிராயும் உள்ளது.மேலே சொன்ன விஷயங்களையும்  மூவரின் குணாதிசயத்தையும் இயக்குனர் இந்த 20 நிமிட காட்சியிலேயே சொல்லிவிடுகிறார்.

காட்சி மாறி:-
ப்போது டாக்ஸியில் பயணிக்கும் மூவரும் அந்த லா டெனியா என்பவனுக்கும் அதேபோல குத வன்புணர்ச்சி செய்து முகத்தை சிதைக்க திட்டமிடுகின்றனர்.வழியில் ஒரு திரு நங்கை பாலியல் தொழிலாளியை பிடித்து அடித்து மிரட்டி விசாரிக்கையில் அவன் பெயர் லா டெனியா என்கிற டேப் வார்ம்  அவன் ஒரு ஹோமோ என்றும் எப்போதும் ”ரெக்டம்” என்னும் ஒரு ஒரின சேர்க்கையாளர் (gay club) கிளப்பில் தான் இருப்பான் என சொல்கிறாள்(ன்).
வர்கள்  ”ரெக்டம்” சென்று விசாரிக்க,அங்கே கிளப் உறுப்பினர்களால் நிராகரிக்கப்படுகின்றனர்.அவர்களில் ஒருவன்  எனக்கு கை வேலை பார் உனக்கு நான் டேப்வார்மை காட்டுகிறேன் என்கிறான். அவனை மார்க்கஸ் அடிக்க, அவன் பயந்து அலறி டேப்வார்ம் பயங்கரமானவன் என்று கூறி அங்கே அருகே நின்ற இருவரின் மேல் போய் விழ, இவன்  ஒரு முரட்டு ஆளை டேப்வார்ம்  என நினைத்து சண்டை வளர்க்கப் போக ,முரட்டு ஆள் வெறியுடன் இவர்களை நெருங்கி மார்க்கஸை தரையில் கிடத்தி கையை முறித்து ஒடிக்கிறான்.

மார்க்கஸை வன்புணர்ச்சி செய்யவும் எத்தனிக்கிறான்,மார்க்கஸ் அவனை தடுக்க முயன்று தோற்க, பியர் அந்த முரட்டு ஆளை இரும்பு தீயணைப்பான் சிலிண்டர் கொண்டு அடித்து நசுக்கி முகத்தை சிதைக்கிறான்.முக எலும்பு தேங்காய் ஓடு போல சில்லு சில்லாகிறது,மூளை கண்,மூக்கு என அனைத்தும் கூழாகிறது, அந்த முரட்டு ஆள் சம்பவ இடத்திலெயே கடைசியாக முகத்தில் தாடை மட்டும் எஞ்சி இருக்க அதை மட்டும்  அசைத்து இறந்தும் விடுகிறான்.

ந்த களேபரத்தில் அங்கே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உண்மையான லா டெனியா தப்பி மறைகிறான்.(படம் ஆரம்பித்து 23 நிமிடங்களில் இந்த காட்சி வருகிறது, அதுவரை காமிரா ட்ரைபாடில் அமரவேயில்லை,ஒரே சுற்றல் தான். அந்த சப்தமும் அடங்கவில்லை,இது வரை வந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் பெரியஆள் தான்.உலக சினிமா பார்க்க ஏற்றவர்தான்.இந்த முகம் சிதைக்கும் காட்சி கூட கிராபிக்ஸ் தானாம்.சாப்பாடு இறங்காது (ஆமாம் சொன்னால் மட்டும் பார்க்காமல் விடவா போறீங்க?)

டந்த சம்பவத்தில் மார்க்கஸ் ஸ்ட்ரெட்சரில் வைத்து மருத்துவ உதவிக்கும்,பியர் கைவிலங்கிட்டும் ”ரெக்டம்” கிளப்புக்கு வெளியே கொண்டு வரப்பட அங்கே குழுமி இருந்த ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு காரி துப்பப்படுகின்றனர்.போலிஸார் பியர் ஒரு தத்துவ ஆசிரியர் என தெரிந்து கொண்டு , இந்த தத்துவம் பேசும் ஆட்களே ஓரினச்சேர்க்கையாளர்கள் தான். சிறையில் உனக்கு ஆப்பு அடிப்பார்கள். உனக்கு ஆணுறை கிடைக்காது.நேராக எய்ட்ஸ் தான் என்று காறி உமிழ்ந்து, போலீஸ் வண்டியில் ஏற்றி அழைத்துப்போக. மார்க்கஸ் ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்படுகிறான்.

ப்படியே காட்சி மாறி காமிரா சுழன்று ”ரெக்டம் ”ஓரினச்செர்க்கையாளர் கிளப்பின் மொட்டை மாடிக்கு போக.  ஒரு கால் காசு பெறாத கிழவர் குடி போதையில் நிர்வானமாக படுக்கையில் அமர்ந்து.யோசிக்கிறார்.பக்கத்தில் இருக்கும் ஒரு ஆளிடம் “டைம் ருய்ன்ஸ் எவ்ரிதிங்” என்கிறார். மேலும் தான் தன் மகளுடன் வன்புணர்ச்சி செய்ததற்காக சிறையில் சில காலம் இருந்ததாக சொல்ல,அருகே இருந்தவர் ஓ வெஸ்டன் சிண்ட்ரோமா?என்கிறார்.அப்போது ஆம்புலன்ஸு சைரன்  சத்தம் கேட்க,இவர் நிதானமாக கீழே இருக்கும் பாடாவதிகள் அடிக்கும் கொட்டம் தான் அது.எல்லாம் மாயை என  ஏனோ அவர்களுக்கு புரியவில்லை என சாதாரணமாய் சொல்கிறார்.

சிறு A4 பேப்பரில் எழுத முடிகிற இவ்வளவு எளிய கதை . சொன்னவிதம் தான் பயங்கரம். அழகிய அலெக்ஸ் ஏன் அந்த சுரங்க நடைபாதையை சாலையைக் கடக்க தேர்ந்தெடுக்கவேண்டும்.வம்பை விலைக்கு வாங்கவேண்டும்? அழகிய அலெக்ஸ் கோமாவிலிருந்து உயிர்பிழைத்தாளா?எதற்கும் விடையில்லை ஓரினச்சேர்க்கையாளர் கிளப் எப்படி இருக்கும்? பார்க்கையிலேயெ முகம் சுளிக்க வைக்கிறது(இயக்குனரை jஜெர்மனியின் ஓரினச்சேர்க்கையாளர் கும்பல் ஒன்று அவர் ஒரு ஹோமோபோபியா ஆகவே தான் இவ்வளவு கீழ்த்தரமாக ஹோமோக்களை சித்தரித்து காட்சிகளை எடுத்துள்ளார் என குற்றம் சாட்ட,இயக்குனர் மறுத்து  ஒரு டம்மி படத்தை அதே ”ரெக்டம்” கிளப்பில் போய் எடுத்தாராம். கஷ்டகாலம். ஒரு படத்தில் பார்வையாளரை இதைவிட கிறங்கடிக்கவும் முடியாது எரிச்சல் பட வைக்கவும் முடியாது.

 இந்த சுட்டியில் படத்தை தரவிறக்கிப்பார்த்து விடுங்கள்.(மனைவியோடு பார்க்க முன்பாகம் ஏற்றதல்ல,குடும்பத்தாரோடு பார்க்க மொத்த படமும் ஏற்றதல்ல) இந்த படத்தின் ஆங்கில சப் டைட்டிலுக்கான சுட்டி.
=========================
படத்தின் முன்னோட்ட காணொளி:-


25 comments:

அண்ணாமலையான் சொன்னது…

thnk u

☀நான் ஆதவன்☀ சொன்னது…

ஏற்கனவே இந்த படம் பார்த்துட்டேன் தல. முத தடவை அரை மணி நேரம் ஒன்னும் புரியாம தலைய பிச்சுகிட்டேன். அப்புறம் தொடர்ந்து பார்த்தப்ப தான் புரிய ஆரம்பிச்சுது

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

இத படிக்க மாட்டேன் படிக்க மாட்டேன் படிக்க மாட்டேன் . . பாத்தே ஆகணும்னு எடுத்து வைக்கும்போது தான் நீங்க எழுதுவீங்க . . இந்தப் பதிவை, படம் பார்த்துவிட்டுத்தான் படிப்பேன் . . :-) ஓட்டு குத்தியாச்சு பாஸு . . .:-)

பி.கு - மோனிகா பெலூச்சி என்னோட கனவு ஃபிகரு . . :-)

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

தல இந்தப்படத்தை பார்ததிருக்கேன்...நம்ம தோஸ்த் புண்ணியத்துல பார்த்தது,... அந்த ரேப் சீன் கொடுமைதல...அவ்ளோ நேச்சர்...
ஒண்ணுமே புரியாம பார்த்தேன்,(நமக்கு தேவையானது தேவையானளவு இருக்கு அதுபோதாதா? :)

வினோத்கெளதம் சொன்னது…

குரு, இந்தப்படம் அன்னிக்கு உங்க ரூம்ல 'சில' கிளிப்பிங்க்ஸ் பார்த்ததோடு சரி..உங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வந்து தான் பார்க்கணும்..

ஹாலிவுட் பாலா சொன்னது…

நீங்களும் ரிட்டர்னா??! :) :)

வெல்கம் பேக்!! :)

நான் இந்த ஒரு வாரம் தாக்குப் பிடிப்பேன்னு நினைக்கிறேன்! :( :(

கோபிநாத் சொன்னது…

அண்ணே ஓட்டு போட்டாச்சி...

\\வினோத்கெளதம் சொன்னது…
குரு, இந்தப்படம் அன்னிக்கு உங்க ரூம்ல 'சில' கிளிப்பிங்க்ஸ் பார்த்ததோடு சரி..உங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வந்து தான் பார்க்கணும்..\\\

டேய் மச்சி எந்த கிளிப்பிங்க்ஸ் பார்த்தா!!???? ;)))

கோபிநாத் சொன்னது…

அண்ணே ஓட்டு போட்டாச்சி...(முன்னாடியே ஒரு பின்னூட்டம் போட்டேன் காக்கா சாப்பிடுச்சி போல;))

ROMEO சொன்னது…

\\(மனைவியோடு பார்க்க முன்பாகம் ஏற்றதல்ல,குடும்பத்தாரோடு பார்க்க மொத்த படமும் ஏற்றதல்ல) //

நல்லவேளை முதலே எச்சரிக்கை பண்ணிடிங்க பாஸ். விமர்சனம் அருமை.

கண்ணா.. சொன்னது…

வழக்கம் போல் அருமையான விமர்சனம் தல.

ஆனால் நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் நான் லீனியர் திரைக்கதைன்னா என்னன்னு எனக்கு புரியல.. கொஞ்சம் விளக்கு தல

******** டன்

கண்ணா.. சொன்னது…

பாஸ் தமிழ்மணம் ஓட்டு பட்டையை எங்கே காணோம்.??

Karthik சொன்னது…

Where did you get these DVD's? Is it available in Chennai bazaars?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@அண்ணாமலையான்
தல வருகைக்கு நன்றி
உங்க பதிவு படித்தேன்,அதற்கு பின்னூட்டம் போடுவதைவிட
ஆக்கபூர்வமாய் அதன் படி நடப்போம்னு விட்டுட்டேன்.சரியா?
=============

@ஆதவன்
தேவுடு , என்ன படமில்லை?
நாம கூட இது பற்றி பேசிருக்கோம்ல?

=============
@கருந்தேள்
நண்பா,இதை விவரிச்சு எழுத சொல்லி ஒரு நண்பர்
மெயிலில் கேட்டிருந்தார். சரின்னு விளக்கமா எழுதிட்டேன்.
அவர் நன்றியும் போட்டார்.படம் கண்டிப்பா பாருங்க
நானும் பெலுச்சிக்கு விசிறியாவே ஆயிட்டேன்.

=============
@நாஞ்சில் பிரதாப்

அது தான் இந்த வித்தியாசபட இயக்குனர்களின் யுத்தி.
பிடிக்கும் ஆனால் புரியாது.ரிபீடெட் ஆடியன்ஸ் வரவழைக்கவும்
படம் ரீச் ஆகி நிறைய டிஸ்கஷன் நடக்கவுமே இப்படி நான் லீனியர்.னான்
க்ரோனாலாஜிக்கல் நேர்ரேடிவை தேர்ந்தெடுக்கிறார்கள்

=============
@ வினோத் கௌதம்
வா குரு தாராளமா வாங்கிக்கோ
=============
@ஷார்ஜா கோபி
தம்பி தங்க கம்பி
வேற என்ன க்ளிப் பார்திருப்பான்?
உன் கமெண்ட் பத்திரமா இருக்குப்பா
=============
@ரோமியோ கான்
நண்பா,இப்போ இது தான் ஃபேஷன்
உஷாரா பாருங்க
=============

Goretti Valeso சொன்னது…

மனைவியோட முன்பாகம் பார்க்க ஏற்றதல்ல

என்று போடாமல் இருந்தீங்களே!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கண்ணா
நல்ல கேள்வி தான் கேட்டீங்க.
நான் லீனியர் என்பது ஒரு கதாசிரியர் தன் நாவலிலோ,ஒரு இயக்குனர் தன் படத்திலோ வைத்து தொகுக்கும் காட்சியமைப்போ அல்லது விவரிப்ப்போ ஆகும்.

லீனியர் என்பது கட்டுக்கோப்பாக , கோர்வையாக செல்லும் கதையை குறிக்கும். ஒரு குழந்தை பிறந்து அது படிப்படியாக வளர்ந்து பின்னர் முதியவனாகிறான்,இது லீனியர்

அதே கதாபாத்திரம் தன் 60 வயதில் தன் 10 வயதை நினைத்துப்பார்க்கிறான்,பின்னர் தன் 20 வயதை நினைத்துப்பார்க்கிறான். பின்னர் அவனை யாரோ கூப்பிட டிஸ்டர்ப் ஆகி அவரிடம் நடப்புகாலத்தில் பேசிவிட்டு எங்கே விட்டேன்? என்று மீண்டும் தன் 20க்க்கோ அல்லது 40க்கோ போனால் அது நான் லீனியர்
=======
ஜெயமோகனின் காடு நாவல் ஒரு நல்ல நான் லீனியர் என்பேன்
=======
ஆங்கில படங்களில்
பல்ப் ஃபிக்‌ஷன்
த ப்ரெஸ்டீஜ்
அட்டோன்மெண்ட்
ப்ளட் சிம்பிள்
நோ கண்ட்ரி ஃபார் ஓல்டு மென்
கில் பில் சீரீஸ்
21க்ராம்ஸ்
அமெர்ரோஸ் பெர்ரோஸ்
ரிசர்வாயர் டாக்ஸ்
பாபெல்
போன்றவை ஆகச்சிறந்த நான் லீனியர் வகை திரைப்படங்கள் ஆகும்
===========
தமிழில்
குருதிப்புனல்
ஹேராம்
மகாநதி
விருமாண்டி
அலைபாயுதே
என சொல்லலாம்
உதிரிப்பூக்கள்
என நிறைய பட்டியலிடலாம்
===========
எனக்கும் இதைப்பற்றி நிறைய படிக்க ஆவலாய் உள்ளது.வருகைக்கு நன்றி,தமிழ்மணத்தில் என் பதிவில் ஆங்கிலச்சொல் இருக்கிறது என்று தூக்கி விட்டனர்.அது தான் பட்டையையே எடுத்துவிட்டேன்:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கார்த்திக்
சென்னை பர்மா பஜாரில்,டிநகர் சத்யா பஜாரில்,மாயா ப்ளாசாவில் கிடைக்காத படமே இல்லைங்க,ஆனால் அதில் சப்டைட்டில் இருக்காது பல சமயம், காமரா ப்ரிண்ட் ஆக இருக்கும்,செக் பண்னி வாங்க முடியாது,மாற்ற மறுபடியும் அவ்ளோ தூரம் போணும்,இன்றைய தேதிக்கு ப்ராட் பேண்ட் கனக்‌ஷன் வாங்கி பிஸில டவுன்லோட் செய்து பார்க்கறது தான் ஐடியல்.
ப்ரவுஸிங்கு பரவுசிங்,சேட்டிங்+ டவுன்லோடிங் ஆச்சு.
நான் சராசரியாக மாதம் 30 படங்கள் டவுன்லோடு செய்கிறேன். ஒரு ஹார்ட் டிஸ்க் வாங்கி வையுங்க ஏப்ரலில் சென்னை வரும்போது சுமார் 600 படங்கள் வரை தருகிறேன்.அழிக்கவும் மனமில்லை

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க கொரெட்டி வெலெஸ்ஸொ
நல்ல காமெடியாயிருக்கே?
யாராவது அப்படிகூட போடுவாங்களா?என்ன.
சிரிப்பு?வருகைக்கு நன்றி

கோபிநாத் சொன்னது…

கலக்கிட்டீங்க கார்த்திக்கேயன். வித்தியாசமான படம் தான். இருக்கவே இருக்கு டாரண்ட் சைட்ஸ். டவுன்லோடு பண்ணி பார்த்திட வேண்டியது தான். நன்றி. எனக்கு தெரிந்து 2000 மற்றும் 2001 ல் மிக சிறப்பான படங்கள் வந்திருக்கு. நாம மிஸ் பண்ணிவிட்டோம்.இனி விடறதா இல்ல..

வினோத்கெளதம் சொன்னது…

கண்ணாவுக்கு Non linear பற்றி இவ்வளோ விளக்கம் கொடுத்தியே குரு, நான் எழுதிய எதாவது ஒரு கதையை படிக்க சொன்னியா..:))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@வினோத்
வா குரு
அடடே சொல்ல மறந்துவிட்டேன் அதை
தோ பாருங்கப்பா வினோத்தும் ரவுடிதான் ரவுடிதான்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கோபிநாத் அட்லாண்டா
வாங்க நண்பரே சரியாய் சொன்னீர்கள்
தொடர்ந்து பார்த்து அறிமுகம் செய்வோம்.
வருகைக்கு நன்றி

பின்னோக்கி சொன்னது…

சில வருடங்களுக்கு முன் இந்த படத்தை பார்க்க ஆரம்பித்து, சில நிமிடங்களில், சிலிண்டர் போன்ற ஒன்றால் முகத்தில் அடிக்கும் காட்சியில் கலங்கிப் போய் பார்க்காமல் விட்ட படம் இது.

மைதீன் சொன்னது…

விமர்சனம் நல்லாருக்கு நண்பரே. தவமாய் தவமிருந்து பார்த்துட்டே feel பண்ணியவன் இந்த படம் படிக்கும் போதே....
பார்த்துட்டு சொல்றேன்.அப்புறம் நெட்ல டௌன்லோடு பன்றதுதான் சிறந்தது.நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@பின்னோக்கி
வாங்க நண்பரே
படத்தை அதுவரை பார்ட்த்துவிட்டீர்கள்.பின்னே ஏன் நல்ல காட்சிகளை விட்டு விட்டீர்கள்?
கண்டிப்பாக பாருங்கள்.:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@மைதீன்
வாங்க நண்பரே.
படம் தரவிறக்கி பார்ப்பது தான் சிறந்த வழி.வேலையில் இருந்து ரிடையர் ஆனவுடன் சேர்த்து வைத்த நல்ல படங்களை ஒவ்வொன்றாக எல்சிடி டிவியில் ஓடவிட்டு ஈஸி சேரில் சாய்ந்து அமர்ந்து பார்க்க எவ்வளவு நன்றாயிருக்கும்?

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)