எலிமெண்ட்ஸ் ட்ரைலாஜி 3 - வாட்டர் [இந்தியா] Water [2005]

ந்த படம் எடுத்த தீபா மேத்தாவுக்கு முதற்கண் நன்றி கூறுகிறேன்,இது நுனிப்புல் மேயும் அதி மேதாவி இயக்குனர் எடுப்பதைப் போன்ற ஒரு படைப்பல்ல, நூறு புத்தகம் கொடுக்கக்கூடிய ஒரு தாக்கத்தை ஒரு சில திரைப்படம் கொடுக்கக்கூடும், அது போல ஒரு தீர்க்கமான படைப்பு இது.  சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறை காலம் காலமாக கலாச்சாரம், பண்பாடு, நீதி சாஸ்திரம் மண்ணாங்கட்டி இவற்றால் வரையறுக்கப்பட்டு, பெண் குழந்தைகளும், பெண்களும் போவோர் வருவோருக்கெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு சொல்லொணா துயரையும் கொடுமைகளையும் அனுபவித்து வந்துள்ளனர்.

த்தகைய பெண்கள் சந்தித்த பிரச்சனையை புடம் போட்டுக்காட்டும் காலக்கண்ணாடி இது, இப்படம் நிச்சயம் பயாஸாக எடுக்கப்பட்ட படம் அல்ல, வாழ்வில் அனைவரும் குறிப்பாக எல்லா ஆண்களும் காணவேண்டிய படம், இந்த விஞ்ஞான யுகத்திலும் பழமையும்,மூடநம்பிக்கையும் பேசி பெண்களை இழிவு செய்யும் ஒவ்வொரு அயோக்கியர்களையும் , க்ளாக் வொர்க் ஆரஞ்ச் என்னும் க்யூப்ரிக்கின் படத்தில் வருவது போல கைகால்களை கட்டிப்போட்டு, கண் இமைக்கவிடாமல் க்ளிப் போட்டு,சொட்டு மருந்து விட்டு  காட்ட வேண்டிய படம்.

தீபா மேத்தா
ம்பது வருடங்களுக்கு முன்பு வரை நடத்தப்பட்ட வைதீக முறை திருமணத்தில் ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம், உட்பிரிவு பார்க்கப்பட்டு மணமக்களுடைய  யோக்யதாம்சங்கள் புறம்தள்ளப்பட்டன. வைதீக முறை திருமணத்தில் வயதுவித்தியாசங்கள் மற்றும் மணம் செய்ய ஏற்ற பருவங்கள் முக்கியமாய் கவனிப்பட்டதேயில்லை எனலாம். தக்க பருவம் வருவதற்கு முன்பே பெண்களுக்குக் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். உதாரணம் என் பாட்டி, அவர்களின் 14 வயதில் என் 48 வயது விதவை தாத்தாவுக்கு ஏழ்மையின் காரணமாக இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டுள்ளார்.

ம்பது, அறுபது வயது ஆன ஆண் கிழத்துக்கு பத்து முதல் பனிரெண்டு வயது பெண் குழந்தையைப் பிடித்து தாலி கட்டி புகுந்தவீட்டுக்கு மனசாட்சியே இல்லாமல் அனுப்பியுள்ளனர். ஏனென்றால்?!!! திருமண விஷயத்தில் ஆண்களுக்குக் மட்டும் கிழம் என்பதே இல்லையாம்.என்ன கொடுமை சார்?!!!

ன்ன தான் ஆணாதிக்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மட்டுப்பட்டு பெண்களுக்கு சமத்துவம், இடஒதுக்கீடு என கிடைத்து அவர்கள் தலையெடுத்தாலும், இன்னமும் அது சுத்தமாக வழக்கொழியவில்லை,என்றே சொல்ல வேண்டியிருக்கிறது, நம் பரம்பரை மூதாதையர் ஜீன்கள் வழியே சிறிதளவேணும் அவ்வப்பொழுது அது வெளிப்படவே செய்கிறது, இது முற்றிலும் ஒழிய இன்னும் ஐம்பது ஆண்டாவது தேவைப்படும் என நினைக்கிறேன்.
=========0000=========
படத்தின் கதை:-
ந்த படம் 1938ஆம் ஆண்டு,சுதந்திரத்துக்கு முந்தைய ப்ரிட்டிஷ் இந்தியாவில் துவங்குகிறது, அப்போது வழக்கத்திலிருந்த பெண்ணடிமை தனத்தின் உச்சமாக, எட்டு வயது சிறுமி ச்சுய்யா[சரளா]வுக்கு பால்ய திருமணம் நடைபெறுகிறது, திடீரென அவளின் கிழட்டு கணவன் இறந்தும் விடுகிறான், சிறுமிக்கு மரணித்தல் என்றாலே என்ன? என்று தெரியவில்லை,கரும்பு தின்று கொண்டிருக்கிறாள்,அவளிடம் போய் அவள் அப்பன் ,இன்று முதல் நீ விதவை என்கிறான்,அவள் சிரிக்கிறாள்,

வளுக்கு குடும்பத்தாரால் பொட்டழிப்பு, வளையல் உடைப்பு வலுக்கட்டாயமாக செய்விக்கப்பட்டு, மாட்டு வண்டியில் ஏற்றி அவள் காசி மாநகரின் ஒரு எழுபது வயதான, கொடுரமான மனம் கொண்ட மூதாட்டி மதுமதி வசம் உள்ள விதவைகள் மடத்தில் விடப்படுகிறாள். அங்கே ஏற்கனவே நிறைய கைம்பெண்கள், சென்ற ஜென்மத்தில் தாங்கள் செய்த பாவம் தான் தன் கணவனின் உயிரை குடித்தது. என்றும் , அதை போக்க தினமும் கங்கையில் மூழ்கி எழுந்து ,ஒருவேளை மட்டுமே உப்பு,உறைப்பில்லாமல் உண்டு, தலையை சிரைத்தும், முக்காடு இட்டுக் கொண்டும் கூனிக்குறுகி வாழ்ந்து வருகின்றனர்.

வளையும் அவ்வாறு மாற கட்டாயப்படுத்தியவர்கள், இவள் கேட்ட கேள்விகளால் திக்குமுக்காடி தோற்றும் போகின்றனர்.என்ன கேட்டாளா? !!! கணவணிழந்த பெண்கள் விதவைகள், என்றால் மனைவியை இழந்த கணவர்களுக்கு என்ன பெயர்?!!! அவர்களின் மடம் எந்த தெருவில் இருக்கிறது,?  என்று..:)) தவிர சிறுமி ச்சுய்யாவுக்கு குறும்புத்தனமும், ஈகைக்குணமும் நிரம்பவே உண்டு.

ங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க ஆச்சாரமான விதவை சகுந்தலா [சீமா பிஸ்வாஸ்] , தலைமைப் பெண் மதுமதிக்கு , அடுத்த ஸ்தானத்தில் இருக்கிறாள், ஆனால் நல்லவள், இவளும் பெண்ணடிமை தளையிலிருந்து வெளியே வருவதும், கைம்பெண்ணின் மறுமணமும்  பாவம் என்றிருக்கிறாள். ச்சுய்யாவின் களங்கமற்ற பேச்சும் செய்கையும் இவளுக்குள் இருக்கும் கண்டிப்பான குணத்தையும் மெல்ல கரைக்கிறது.கங்கைக்கரை படித்துறையில் தினமும் நடக்கும் பிரசங்கங்களில் கலந்து கொண்டும் உபன்யாசிக்கு சேவை செய்துகொண்டும் தன் நாட்களை கழிக்கிறாள்.

ச்சுய்யா அடுத்ததாக மிகவும் பாசத்துடன் இருப்பது,அழகிய இளம் கைம்பெண் கல்யாணியிடம் [லிசா ரே] தான், கல்யாணி  ஒளித்து வளர்க்கும் நாய்குட்டியான காலாவும் இவளுக்கு பிடிக்கும். விளையாட்டு சாமான்கள் பிடுங்கப்பட்ட அவளுக்கு காலாவே விளையாட்டு தோழன்.

துமதி, கல்யாணியின் சிறு வயதிலேயே கங்கையின் எதிர் க்கரையிலிருக்கும், அலகாபாத்தின் பணக்கார பிராமணர்கள் வசமும், ஜமீந்தார்கள் வசமும்  உடலுறவுக்கு கூட்டி கொடுத்து காசு பார்க்கிறாள். கேட்டால் மடத்தின் செலவுக்கும் வாடகைக்கும் என்கிறாள். கல்யாணிக்கோ , உறவினர் இருந்தும் திரும்பிப்போகமுடியாத சூழ்நிலை. அக்காலத்தில் பெண்கள் விதவையானாலே, வீட்டுக்கு தரித்திரம், பெண் குழந்தைகளே சுமை, என்றே ஏனைய பெற்றோர்கள் இருந்தமையால், கல்யாணிக்கு மடமே சாஸ்வதம் என்றாகிப்போனது.

கிழவி மதுமதி பொன்முட்டையிடும் வாத்தான கல்யாணியை மடத்தின் மேல்தளத்தில் தனி அறை கொடுத்து தங்கவைத்துள்ளாள். மதுமதிக்கு குலாபி[ரகுவீர் யாதவ்] என்னும் திருநங்கையிடம் தீரா நட்பும் உண்டு, கல்யாணியை வாடிக்கையாளர்களிடம் கூட்டிக்கொடுத்து, பின்னர் படகில் கூட்டி வரவும் , கஞ்சா வாங்கி பற்ற வைத்துத் தரவும், பொறித்த, தாளித்த பண்டங்களை விதவைகளுக்கு கடைக்காரர்கள் விற்கமாட்டார்கள்,ஆகவே அதை வாங்கி வந்து தரவும்  இந்த குலாபி பேருதவியாக இருக்கிறாள்.

கூட வசிக்கும் ஏனைய விதவைக்கிழவிகள் கல்யாணியை மிகவும் வெறுக்கின்றனர், அவளின் மொட்டையடிக்கப்படாத தலையும், வசீகரிக்கும் மேனி எழிலையும் கண்டு வயிறெரிந்தவர்கள், அவளுடன் அமர்ந்து சாப்பிடுவதையும், பேசுவதையும், முற்றாக தவிர்க்கின்றனர், இருந்தும் நாய் விற்ற காசு குரைக்காது என்னும் கூற்றுக்கேற்ப, அந்த காசில் வாங்கி வந்த மளிகையில் அனுதினம் தளிகை பொங்கி தின்கின்றனர்.

ங்கே இருக்கும் விதவைகள் விஷேஷகாலங்களில் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்து, அதில் வரும் காசுகளை,தங்கள் இறுதிச்சடங்கிற்கு சேர்த்தும் வைக்கின்றனர். சிறுமி சுய்யாவுக்கு  பிச்சை எடுக்க பிடிக்கவில்லை, ஆனால் மிகவும் பசி எடுக்கிறது, ஆனால் சிறுமி என்றும் தாட்சன்ய்ம் காட்ட மடத்தில் யாருக்குமே  மனமில்லை. அவ்வப்பொழுது ச்சுய்யா தன்னை அம்மாவிடம் கொண்டு விடுங்கள், என்று அடம் பிடிக்கும் போதெல்லாம், அங்கிருந்த மூத்த விதவைகளால் போலி வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு ஏமாந்தும் போகிறாள்.

வளை சொன்னபடி கேட்க வைக்கும் தந்திரமாக உன்னை அம்மாவிடம் கொண்டு விடுகிறேன் என்பதை எல்லோரும் பயன்படுத்துகின்றனர். ச்சுய்யாவும் அதற்கு பெட்டிப்பாம்பாய் அடங்குகிறாள். மடத்தில் உள்ள 80வயது விதவை மூதாட்டி , சிறுவயதிலேயே தனக்கு நடந்த திருமணத்தில் நெய்யில் செய்த லட்டு, ஜாங்கிரி தின்றவர்,அதன் பின்னர் கணவன் இறந்த பின்னர் 70 வருடமாக இனிப்பே சாப்பிடவில்லை, வருவோர் போவோரிடமெல்லாம் லட்டைப்பற்றியும், ஜாங்கிரியைப் பற்றியும், அதன் மணம் சுவையை கண்கள் விரிய சிலாகித்து பேசுகிறார், எல்லோரும் அவளுக்கு இனிப்பு கிறுக்கு என்கின்றனர். ச்சுய்யாவிடமும் பாட்டி கேட்கிறாள்.

னால் மடத்தில் ஒருவரும் பாட்டிக்கு  எந்த இனிப்பும், இதுவரை வாங்கித்  தரவில்லை. ஒரு நாள் கோவிலில், ச்சுய்யாவுக்கு  ஒரு பெண்மணி ஒரு அணா  பிச்சையிட, உடனே இனிப்பு கடைக்காரனிடம் ஓடியவள், அவன் முதலில் விரட்ட, என்னிடம் காசு உள்ளது என்று எடுத்து நீட்ட, அவன் தந்த லட்டை கொண்டு போனவள். அந்த கூன்போட்ட விதவை மூதாட்டியிடம் தூங்கும் போது வாசம் காட்டி, பின்னர் உள்ளங்கையில் அழுத்துகிறாள். பாட்டி தான் கனவு காண்கிறோம்! என்றே நினைத்தவள். நா தழுதழுக்க லட்டை  மெல்ல அனுபவித்து தின்கிறாள், ஆனால் அதுவே அவளுக்கு கடைசி உணவாகிவிட ஆனந்தகூத்தாடியவள் புறைக்கேறி இருமியே போய் சேர்ந்தும் விடுகிறாள். படத்தில் பார்த்துப்பார்த்து எடுக்கப்பட்ட காட்சியில் இதுவும் ஒன்று.

றுநாள் பாட்டியின் ஈமைகிரியைக்கு பணம் தேவைப்பட, யாரிடமும் பணமில்லை, ஒருவரும் பாட்டிக்கு பணம் தர முன் வராதபோது, மதுமதி பாட்டியின் உடமைகளை சோதனையிட, ஒரு கிழிந்தபுடவையும், திருவோடும் கோப்பையும் மட்டுமே எஞ்சியுள்ளது. இறந்துபோன பாட்டியை மதுமதி கண்டபடி திட்டத்துவங்க, கல்யாணி தன் இறுதிச்சடங்கிற்கு வைத்திருந்த பணமுடிப்பை மதுமதியிடம் விரைந்து தருகிறாள், இவளை பார்த்து மதுமதி மகாலட்சுமி என்கிறாள்.

ழகிய கல்யாணி கங்கையில் ச்சுய்யாவுடன் நீராடி வரும்பொழுது செல்வந்தரும், இளம் காந்தியவாதியுமான நாராயணின் [ஜான் ஆப்ரஹம்] கண்களில் பட, அவருக்கு கல்யாணி மேல் அன்பும் , இரக்கமும், ஒருங்கே தோன்றுகிறது, அது விரைவில் காதலாகவும் கனிகிறது, குப்பையிலிருக்கும் கோமேதகத்தை திருமணம் செய்து உயர்ந்த வாழ்க்கை அளித்து, துயர் துடைக்க நினைக்கிறார், இவர்களுக்கு பார்வையிலேயே காதல் பூக்கும் காட்சி இசைப்புயலின் இசையுடன் அமர்க்களமாக வெளிப்பட்டிருக்கும்.


கல்யாணி மதுமதியிடம் இனி வாடிக்கையாளர்களின் உடல்பசி தீர்க்க தன்னால் போக முடியாது, தனக்கு உடம்பு சரியில்லை, என்கிறாள், மதுமதி தந்த புதிய புடவையையும் வாங்க மறுக்கிறாள். தேசமெங்கும் ,மகாத்மா காந்தி பெண்ணுரிமை குறித்தும் விதவைகள் மறுமணம் குறித்தும் சுதந்திர தாகத்துடன் சேர்த்து ஒவ்வொரு கிராமமாக சென்று , தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். கல்யாணிக்கு விதவைகளை சமமாக நடத்தும் சமதர்ம சமுதாயம் ஏற்படப்போகிறது, தங்களுக்கும் புணர்வாழ்வு கிடைக்கப்போகிறது என்னும் எண்ணமே மிகுந்த பூரிப்பைத் தர. இன்னும் அழகாகிறாள்.

ல்யாணி சகுந்தலாவிடம் சென்றவள்.  நாராயன் ச்சுய்யாவிடம் தந்த கடிதத்தை தந்து படித்து காட்டச்சொல்லி கேட்கிறாள் , நாராயண் தனிமையில் சந்திக்க சொல்லி கேட்பதாக சொல்கிறாள்,நான் அவரை சென்று சந்திக்கவா? என்று கல்யாணி பயந்தபடி அனுமதி கேட்க, அவள் உன் உள்மனதுக்கு என்ன தோன்றுகிறதோ?!!! அதை செய் என்கிறாள்.அருமையான மற்றொரு காட்சி இது.

முதலில் நாராயணை சந்திக்கவும் பேசவும், பயந்து மறுத்த கல்யாணி, சிறு வயதிலிருந்தே தான்  அனுபவித்து வரும் விருப்பமில்லா,வன்புணர்ச்சியினால் அவளின் மனமும் கல்லாயிருக்க,  கண்ணியமான நாரயணின் கருணையினால் அது கரைகிறது,குதிரை வண்டி சந்திப்பின் போது.  நாராயண் கல்யாணிக்கு முதலில் எழுத்தறிவிக்க விரும்புவதாக சொல்கிறார் . செல்வந்தரான அப்பா,அம்மாவின் எதிர்ப்பையும் மீறி இவளை திருமணம் செய்து, கல்கத்தா அழைத்துப்போக எண்ணுகிறார். தன் அம்மாவையும் சம்மதிக்க வைத்து விடுகிறார். கல்யாணி மகிழ்ச்சி பொங்கிட ச்சுய்யாவுக்கு மட்டும் இதை ரகசியமாய் சொல்கிறாள், ச்சுய்யா மிகவும் ஆனந்தமடைகிறாள்.

ன்று, வழக்கம் போல குண்டுக்கிழவி மதுமதிக்கு, ச்சுய்யா கால் வலிக்கு மிதிக்கையில், ஜன்னல் வழியே குலாபி தந்த பூரி பொட்டலத்தை மறுத்த  மதுமதி, தான் காலையிலிருந்து கெட்டவாயுவாக வெளியேற்றுவதாகவும், நேற்று தின்ற எண்ணைய்ப் பண்டம் ஒத்துக்கொள்ளவில்லை, எனக்கு இன்று பூரி வேண்டாம் என்கிறாள்,

ச்சுய்யா அதை சாப்பிட ஆவலாய் கேட்க, குலாபி மறுத்து விதவைகள் எண்ணெய் பண்டம் தின்றால் பாவம், கணவன் ஆத்மா சாந்தியடையாது, இன்னும் ஏழு ஜென்மம் விதவையாகவே எடுத்து கழிப்பாய் என சொல்ல!!!! மதுமதியும் கரித்துக் கொட்ட, ச்சுய்யா நீ என்ன தருவது?.கிழவி, நடக்கப்போகும் கல்யாணியின் திருமணத்தில் நான் நெய்யில் செய்த லட்டுக்களும் ஜிலேபிகளும் வகை வகையாக தின்னப்போகிறேன், ஆனதைப்பார். என்கிறாள்.

துமதி கிழவி நிலம் அதிர எழுந்தவள், தின்னமுடியாமல் தின்று வளர்த்த தன் உடம்பை,தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு கல்யாணியின் அறைக்கு சென்று, ச்சுய்யா சொல்வது,உண்மையா? எனக்கேட்டவள், அவள் ஆம் என்றதை தாங்கமுடியாமல், அவளின் அழகிய கூந்தலை அரைகுறையாக ,அவசரமாக, அசிங்கமாக கத்தரிக்கிறாள், அவளை அறைக்குள்ளேயே வைத்து பூட்டுகிறாள். இதைக்கண்ட சகுந்தலாவுக்கு மனதை பிசைகிறது, ஆனால் மதுமதி அங்கேயிருந்த மூடப்பழக்கங்களில் ஊறிய விதவைகளிடம், விதவையின் மறுமணத்துக்கு உதவினால் நீங்களும் நானும் ஏழு ஜென்மத்துக்கு நரியாக பிறப்பெடுத்து ஊளையிட வேண்டியிருக்கும், என்று பூச்சாண்டி காட்டுகிறாள்.

துமதியின் கயவாளித்தனத்துக்கு ஒருபோதும் சகுந்தலா துணைபோனதில்லை, அதனால் தான் , சிறுமியாருந்த கல்யாணியை, யாருக்கும் தெரியாமல் குலாபியின் துணையோடு கூட்டிக் கொடுத்தாள் மதுமதி,  இதுவரை, மதுமதியை எதிர்த்து பேசியதுமில்லை, ஆதரித்ததுமில்லை.  நாராயண் நல்லவர் என்பது மட்டும் தெரியும். அழகிய கல்யாணிக்கு இந்த மடம் ஒரு கொடிய நரகம் என்றும் தெரியும். இனி சகுந்தலா என்ன முடிவெடுப்பாள்?!!!


1.சகுந்தலா கல்யாணியை விடுதலை செய்தாளா?
2.கல்யாணியும் நாராயணும் இணைந்தார்களா?அதற்கு அவர்களின் செல்வந்தர் குடும்பம் சம்மதித்ததா?
3.சிறுமி ச்சுய்யா என்ன ஆனாள்?பெற்றோரிடம் இணைந்தாளா?
4.விதவைகள் மடம் பூரணமாக கலைக்கப்பட்டதா? சகுந்தலா என்ன ஆனாள்? போன்றவற்றை படத்தின் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் டிவிடியில் பாருங்கள்.
=====0000=====

 படத்தின் கதாபாத்திரங்களின் அற்பணிப்பை பற்றி பேச ஒரு பதிவு போதாது, அழகிய கைம்பெண் கல்யாணியாய் வந்த லிசா ரே [ஆம்! ஐ லவ் இந்தியா ] தன் கலைவாழ்வில் செய்த மாபெரும் பங்களிப்பு, இதில் நடிக்கும் போதே இவருக்கு புற்று நோயும்  இருந்திருக்கிறது, அந்த வேதனையும் பாத்திரத்துக்கு  மேலும் பலமூட்டியிருக்கும்  போலும்.

டத்தில் இசைப்புயலின்  இசை மனதை உருக்கிவிடும்., இதில் பிண்ணணி இசைக்கோர்வைக்காக மைக்கேல் டன்னா[மான்சூன் வெட்டிங்]வும் இசைப்புயலுடன் இணைந்திருப்பார். இருவரும் இணைந்தே உலகத்தரம் வழங்கியிருப்பார்கள். படத்தின் ஆர்ப்பரிக்கும் ஒளிப்பதிவு கைல்ஸ் நட்ஜென்ஸ், இவர் தீபா மேத்தாவின் ஆஸ்தான கேமராமேனாவார்.அழகிய காசி மாநகரை கங்கை நீரை அள்ளி வந்திருப்பார் தன் கேமராவில்!!!. உலக சினிமா காதலர்கள் தவறவிடக்கூடாத படைப்பு இந்த எலிமண்ட்ஸ் ட்ரைலாஜி.
=====0000=====
படத்தின் முன்னோட்ட சலனப்படம்:-


=====0000=====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Deepa Mehta
Produced by David Hamilton
Written by Deepa Mehta (writer)
Anurag Kashyap (Hindi translation of dialog)
Starring Seema Biswas
Lisa Ray
John Abraham
Sarala Kariyawasam
Manorama
Music by A. R. Rahman
Mychael Danna(background score)
Cinematography Giles Nuttgens
Editing by Colin Monie
Distributed by Fox Searchlight Pictures (U.S.)
Mongrel Media (Canada)
B.R. Films (India)
Release date(s)
8 September 2005 (Toronto)
See release dates section
Running time 114 minutes
Language Hindi or English[1]
Gross revenue $10,422,387 [2]
Preceded by Fire (1996)
Earth (1998)

=====0000=====

61 comments:

இராமசாமி கண்ணண் சொன்னது…

இதுவரை இந்த படத்த பார்க்க சான்ஸ் கிடைக்கல.. இன்னிக்கு பார்த்துடறேன்.. நன்றி நண்பா...

ஹாலிவுட் பாலா சொன்னது…

ராமசாமி கமெண்ட் போட்டிருந்தா இப்படிதான் போட்டிருப்பார்ன்னு நினைச்சிட்டே வந்தேன்.

பால... யு த க்ரேட்-டா!!! சொட்டு.. சொட்டு.. சொட்டு.

ஹாலிவுட் பாலா சொன்னது…

மேலயே ஒரு நாவலை எழுதி முடிச்சிட்டு... எப்படித்தான் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம....
.
.

இனி என்ன ஆகும்?
1.சகுந்தலா கல்யாணியை விடுதலை செய்தாளா?

.
.
-ன்னு எழுதறீங்களோ?!! இதுக்கு நாஜிக்களும், ஜப்பானியர்களுமே தேவலாம். :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ராமசாமி ,கண்டிப்பா பாருங்க நண்பா,
இந்த ஹாலிபாலிக்கு இதே வேலை :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல உண்மையிலேயே இன்னும் 45நிமிஷத்துக்கு மேல் படமிருக்கு,முக்கிய சுவாரஸ்யமான காட்சியை நான் சொல்லவேயில்ல,இதுக்கே இப்புடி பெரிசாவந்திடுச்சு.
===
பெண்ணுரிமை காவலன் கீதப்ப்ரியன் வாழ்க,ஆணாதிக்க கைகூலி ஹாலிபாலா ஒழிக:)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஹலோ தல,
எதாவது கருத்து சொல்லுவீங்கன்னு பார்த்தா,அப்புடியே போய்டீங்க கொழந்த பிளாக்ல.?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல வேல செய்யுறாமாதிரி நடிக்கறீங்களா?
நான் 2-30ஆகுது,ஆஃபீஸ்ல உக்காந்துருக்கேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

பகல்லயே உங்களால் கும்மியடிக்க வரமுடியவில்லை,பொறுபே இல்லை

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல,
எங்க போயிட்டீங்க?ஆஃபீஸ் விட்டுடுச்சா?

எஸ்.கே சொன்னது…

அந்த மூன்று படத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை புத்தகங்கள் எல்லாம்(வார இதழ்கள்) அதை ஏதோ erotic படங்கள் போலவே எழுதியிருந்தன. தங்கள் விமர்சனம் மூலம் அதன் தரத்தை புரிந்து கொண்டேன். மீதி படங்களை பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.
நன்றி!

யாசவி சொன்னது…

நன்றி கீதப்ரியன்,

இவ்வளவு நாள் இந்த படத்திற்கு வந்த எதிர்ப்பை வைத்து இது ஒரு மாதிரியான படம் போல என நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு உங்கள் பதிவு தெளிவுபடுத்தி இருக்கிறது.

நன்றி

ஜாக்கி சேகர் சொன்னது…

இந்த படத்தை பார்த்துட்டேன்.. ஆனால் ஸ்லோவா போகும் இருந்தாலும் அந்த காதல் காட்சிகள்.. மிக அருமை.. லோகேஷன் உட்பட..

கொழந்த சொன்னது…

ணா..இந்த படத்துக்குக்காக ஷபான ஆஸ்மி மொட்டை போட்டு தயாராயிருந்தும் RSS VHP மாதிரி கழிசடைகள் எல்லாம் பண்ணியும் திரும்பவும் துணிச்சலா இங்க கொஞ்சம் இலங்கைல கொஞ்சம்ன்னு ஷூட்டிங் நடத்தியதா கேள்விப்பட்டேன். அதையும் கொஞ்சம் எடுத்து விடுங்க. ரொம்ப நீளமான பதிவா தெரிஞ்சாலும் grippingகாவே இருக்கு

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

நண்பா... இந்தப் படத்தைப் பார்க்கப் பலமுறை வாய்ப்புகள் வந்தபோதும், பார்க்கவில்லை. ஏனென்று எனக்கே தெரியவில்லை. ஒவ்வொரு முறை இந்த டிவிடியைப் பார்க்கும்போதும், அப்புறம் பார்க்கலாம் என்று எடுத்து வைத்து விடுவேன்... எர்த் பார்த்திருக்கிறேன்.. அமீர் டக்கென்று திசைதிரும்பும் வில்லத்தனம், அதிர வைத்தது.. ஃபையரும் பார்த்திருக்கிறேன்..

சொல்லிட்டீங்கல்ல... இனி இது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்த்துருவேன்..

ILLUMINATI சொன்னது…

நண்பர் எஸ்.கே சொன்ன மாதிரி தான் நானும்!வாரப்பத்திரிகைகள் எழுதி இருந்தத வச்சு இதுவரை பார்க்காம இருந்தேன்.சீக்கிரம் பார்க்கிறேன்.

☀நான் ஆதவன்☀ சொன்னது…

இந்த படத்தை பார்க்கனும் தல. வந்து வாங்கிக்கிறேன்.

வினோத் கெளதம் சொன்னது…

நானும் பார்க்கிறேன்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

விமர்சனத்திற்கு நன்றிங்க கார்த்தி.

ஹாலிவுட் பாலா சொன்னது…

FX -க்கு படிச்சிகிட்டு இருக்கேங்க. வீட்டுலயே மொத்தம் 10-12 புக் வந்துடுச்சி. இன்னும் க்யூவில் 10 புக் இருக்கு.

அது இல்லாம E-Book, DVD -ன்னு ஏகப்பட்ட இடத்தில் மேட்டர் தேடிகிட்டு இருக்கேன். யப்பா... தொடர் எழுத யாராவது காசு தர்றேன்னு சொல்லியிருந்தா கூட இவ்ளோ கஷ்டப்பட மாட்டேன்னு நினைக்கிறேன்.

அதான்.. கும்மியெல்லாம் நிறுத்திட்டேன். அது இல்லாம.. இப்ப புதுசா ஆஃபீஸ்ல வேலையெல்லாம் பார்க்கிறேனில்ல?!!

ஹாலிவுட் பாலா சொன்னது…

இந்தப் படம் யூட்யூபில் நேரடியா வெளியான படம்னு நினைக்கிறேன். யாருக்காவது நினைப்பிருக்கா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@எஸ்கே
அந்த மூன்று படமும் பாருங்க நண்பா,நான் ஊருக்கு வரும்போது காபி செய்து தரேன்,நீங்க சொன்னது போல மீடியாக்கள் விற்பனைக்காக இது போல சமூக விழிப்புணர்வு தூண்டும் பேரலல் படங்களை எரோடிக் வகையில் சேர்ப்பார்கள்.

அரைவேக்காட்டு மெயின் ஸ்ட்ரீம் படங்களை உலகசினிமா வகையில் சேர்த்து விளம்பரம் தேடிக்கொடுப்பார்கள்.நம்மூரில் பேரல் சினிமா வளராமல் போனதற்கு மீடியாவும் ஒரு காரணம்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@யாசவி
வாங்க நண்பா நலமா?நம்ம ஊரில் அடிப்படை உரிமையைகூட ஒரு குடிமகனுக்கு வழங்கிவிட மாட்டார்கள் அந்த கலாசார தாலிபான்கள்,
ஆனால் அதுவே இப்படத்துக்கு விளம்பரமாகவும் ஆகிவிட்டது,ஆனாலும் பேரலல் சினிமா வளர்ச்சி மீடியாக்களால் வளர்க்கவே பட்டதில்லை.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜாக்கிசேகர்
அண்ணே நலமா?
படம் பார்த்துட்டீங்களா?மகிழ்ச்சி அண்ணே,
படம் ஸ்லோவா போய் கிளைமாக்ஸில் சத்துன்னு அறையும் ரகம்.செம படைப்பு

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள்,
நண்பா,நீங்க சலாம் பாம்பேக்கு எழுதவும் தான் இந்த ட்ரைலாஜியை தேடினேன்,அப்போது பார்த்தது தான் இது,சீக்கிரம் பாருங்க,

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கொழந்த
வாங்க,இந்த கலாச்சார தாலிபான்களை எல்லோரும் மறக்கனும்,மறக்கடிக்கப்படனும் என்னும் காரணத்தால் தான் நான் அவர்களைப்பற்றை எழுதவில்லை.

இவனுங்களுக்கு வேலை வெட்டி இல்லை,தெருக்கல் என்ற உவமை சரியாக இருக்கும்,அரசியல் அடிவருடிகள்,தின்னு கொழுத்துவிட்டு,கலாசாரம் தெருபுழுதி என்பார்கள் தடியர்கள்.இந்த மதவாதிகள் ஜாதிவெறியர்கள் ஒடுக்கப்படனும்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@இலுமி
நண்பா நிச்சயம் பாருங்க,ஆஃபீஸ்ல செம வேலை,இது நீண்ட நாள் முன்பு ட்ராஃப்ல வத்திருந்தது,வெளியிட்டேன்.இன்று வரேன் உங்க போஸ்டுக்கு

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஆதவன்
எலே தேவுடு,
என்னலே எப்புடி இருக்க,உனக்கில்லாத படமா,அள்ளிட்டுபோலே

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வினோத் கௌதம்
எலே குரு
பாருலேபாருலே,மனைவிய நல்லா நடத்துவ

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@செந்தில்வேலன்
நண்பரே அவசியம் பாருங்கள்,ஆபாசமான காட்சிகள் எதுவும் வராது வசனம் மட்டும் இருக்கும்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல,
ஏதேது அப்புறம் கமெண்டே போடமாட்டிங்க போல,ஜாக்கிரதை ,கும்மி வேண்டி fxஐ வெளியிடவிடாமல் போராட்டம் செய்வோம். :))

மரா சொன்னது…

அட கீதப்ப்ரியா! கலக்குறே மக்கா.. இது தீபாமேத்தாவோட அருமையான முயற்சி. (எனக்கு என்னமோ நான் ‘Fire' படம் பாத்துட்டு ஹாஸ்டல்ல மட்டிக்கிட்டதுதான் ஞாபகம் வருது :(

மரா சொன்னது…

பட அறிமுகத்துக்கு நன்றி.

மரா சொன்னது…

உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது :)

மரா சொன்னது…

நெட்ஃபிளிக்ஸ்ல போட்டாச்சி.நன்றி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@மரா
மக்கா உனக்கும் பிடிக்குமா?
மகிழ்ச்சி டாப்பா

மரா சொன்னது…

சரி.இன்னைக்கு பாத்துட வேண்டியதுதான் :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

பட அறிமுகத்துக்கு நன்றி,
சரி ஏத்துகிடேன்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

இதை ஏன் உன் ஃபேஸ்புக்கில் லின்க் கொடுக்கலை,நீ என் நண்பனா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நாளைக்கு கூட பார்,தோஷமில்லை,ஆனா பார்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

//நெட்ஃபிளிக்ஸ்ல போட்டாச்சி.நன்றி//

எங்க ரசீது இருந்தா லின்க் அனுப்பு,அப்போதான் நம்புவேன்,நமக்கெல்லாம் நெட்ஃப்லிக்ஸ்னா என்னன்னு தெரியுமா?டா மக்கா,லின்க் வேணும்னு சொன்னா அனுப்பபோறேன் நண்பன்,
டேய் மக்கா ரேஞ்ச் ஆயிட்டடா நீ

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அந்த பைக் போட்டோவை,மாத்துடா மாப்பி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஒம்மொக எழிலை கெடுக்குது அந்த போட்டொ

மரா சொன்னது…

@ கீதப்பிரியன்

//நெட்ஃபிளிக்ஸ்ல போட்டாச்சி.நன்றி//

எங்க ரசீது இருந்தா லின்க் அனுப்பு,அப்போதான் நம்புவேன்,நமக்கெல்லாம் நெட்ஃப்லிக்ஸ்னா என்னன்னு தெரியுமா?டா மக்கா,லின்க் வேணும்னு சொன்னா அனுப்பபோறேன் நண்பன்,
//
பப்ளிக்ல வெச்சு டேமேஜ் பண்ரே!!! நானெல்லாம் ஜாக்கி அண்ணன் மாதிரி... டிவிடி ல மட்டும் தான் பார்ப்பேன். தெரிஞ்சிக்கோ, புரிஞ்சிக்கோ... :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

மிக்க மகிழ்ச்சி டா நண்பா
அப்போ இனி நம்ம ஹாலிவுட் பாஸ்கரன்கிட்ட டிவிடி வாங்கு என்ன?சரியா

மரா சொன்னது…

ஓட்டு போட்டாச்சி :) ஃபார்மாலிட்டி டன் :)

RVS சொன்னது…

அட்டகாசமான விவரிப்பு. அப்படியே ஒரு ட்ரைலர் பார்த்தது போன்ற உணர்வு. கீப் இட் அப்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

எலேய் மக்கா
என்னலே,புதுசா கதவிடுற?
ஓட்டு பட்டை இருக்கும்போதே போடமாட்டே,
இல்லாத பட்டைக்கு எப்புடிலே ஓட்டு போடுவே?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@rvs
மிக்க நன்றி நண்பரே

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஆனா,
உனக்கு ஓட்டு போட்டுடுவேண்டா
ஏன்னா நீ என் நண்பன்,பதிவை படிக்காட்டியும்,அதை மறக்கமாட்டேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

எலேய் மரா,
எங்கலே போனே?உன்கிட்ட தான் பேசுறேன்,ஹாலிவுட்பாலா பிஸி ஷெட்யூலாம்

மரா சொன்னது…

@ கீதப்பிரியன்
நான் இங்கனதான் இருக்கேன்...ஹாலிவுட் பாலா பிஸி- Fx ல... சரி விடு. நானும் தூங்க போறேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@மரா,சரிடா மக்கா ,ப்பொய்வா,நாளை சரவண்குமாரை சென்றுபார்,

ராஜரத்தினம் சொன்னது…

ப்ரியன் வாட்டர் என்னை கவர்ந்த படங்களில் ஒன்றும் கூட.. கூரிய சமூக விமர்சனத்தை முன் வைக்கும் படம். காந்திய கொள்கைகள் எவ்வாறு காந்தியவாதிகளளின் முரணியக்கத்தை கோடிட்டு காட்டும். ஆனாலும் படம் கொஞ்சம் நாடகத்தன்மை கொண்டு அமைந்ததாகவே உணர்ந்தேன். நீள் கதையும் சம்பவத் தோரணமும் கூட காரணமாக இருக்கலாம்

தமிழினியன் சொன்னது…

//படம் ஸ்லோவா போய் கிளைமாக்ஸில் சத்துன்னு அறையும் ரகம்.செம படைப்பு//
சரியா சொன்னீங்க. சொ

சரவணக்குமார் சொன்னது…

மக்கள் இந்த மாதிரி படங்களுக்கு வரவேறப்பு கொடுக்க வேண்டும்

அப்பொலுதுதான் பல இயக்குனர்கள் முன்வருவார்கள்

சமூகம் சீரடையும்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

கீதப்பிரியன்.. மிக அழகான நேரேஷன்.. ஃபயர் பார்த்து இருக்கேன்.. டைம்கிடைச்சால் பார்க்கிறேன் மத்த இரண்டையும்.. நன்றீ பகிர்வுக்கு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

your views and reviews r very neet and good better than the film,the film is dead slow.ordinary rasikan cant c

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ராஜரத்தினம்
நீங்கள் சொன்னது உண்மை
மிக்க நன்றி நண்பரே

@தமிழினியன்
நன்றி நண்பா

@சரவணகுமார்
மிக்க நன்றி நண்பா

@தேனம்மை லட்சுமனன்
நன்றிங்க,மற்ற இரண்டு படமும் அவசியம் பாருங்கள்.

@சிபி.செந்தில்குமார்
நண்பரே,நீங்ககூடவா ஆங்கிலத்தில் அடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள்?
தமிழ் வேலை செய்யாவிட்டால் தவறில்லை.

===
நீங்கள் பண்பட்ட ரசிகரே,நல்லபடத்தை இப்படியெல்லாம் காரணம் காட்டி ஒதுக்ககூடாது,ஸ்லோவா போகிறது என்னும் காரணத்துக்காக,ஈர்ர்பு நிறைந்த படத்தை ஒதுக்குதல் நியாயமா?:))

பெயரில்லா சொன்னது…

super vimarsanam thalaivarey
nan padam pathutten.ini parellel cinema thodarndhu parpen.

பெயரில்லா சொன்னது…

உலக மெகா பெண் இயக்குநர்கள்!
சினிமா
ஆர்.சரண்

உலக சினிமாவில் பெண்களின் பங்களிப்பு தனித்துவமானது. இந்த வகையில் மனதை வசீகரிக்கும், சிந்தனையைக் கீறிப்பார்க்கும் உன்னத சினிமாக்களை இயக்கிய பெண் இயக்குநர்கள் சிலரைப் பற்றிய சினி மினி அறிமுகம் இங்கே!

சமீரா மக்மல்பஃப்

'உலக சினிமா’ என்று கொண்டாடப்படும் ஈரானிய சினிமாவின் மிகமுக்கிய இயக்குநரான மோஹ்சென் மக்மல்பஃப்பின் மகள், சமீரா. 8 வயதில் அப்பாவின் புகழ்பெற்ற படமான 'தி சைக்ளிஸ்ட்’ல் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த இவர், 17-வது வயதில் 'தி ஆப்பிள்’ என்ற படத்தை இயக்கினார். ஈரானில் தன் பெற்றோர்களால் 11 வருடங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, பின்பு பக்கத்து வீட்டினர் உதவியால் மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளைப் பற்றிய கதை இது. 'கேன்ஸ்’ திரைப்பட விழாவில் உலகின் இளம் இயக்குநர் இயக்கிய படம் என்கிற பிரிவில் 98-ம் ஆண்டில் இந்தப் படம் தேர்வானது.

இரண்டே ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான உலகத்திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அருமையான துவக்கத்தை சமீராவுக்கு 'ஆப்பிள்’ தர, 'பிளாக் போர்ட்ஸ்’, 'செப்டம்பர் 11’, 'அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்நூன்’, 'டூ லெக்டு ஹார்ஸஸ்’ என பெண் கல்வியையும், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் களமாகக்கொண்ட படங்களாகத் தொடர்ந்து இயக்கினார். இப்போது 34 வயதாகும் சமீரா, 2007-ல் ஆப்கானிஸ்தானுக்கே போய் தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கும் குண்டுவீச்சுக்கும் இடையே 'டூ லெக்டு ஹார்ஸஸ்’ படத்தை இயக்கினார். இப்போது, அடுத்த படத்துக்காக நீண்ட இடைவெளிவிட்டுக் காத்திருக்கிறார் சமீரா.

தீபா மேத்தா

பிறப்பால் இந்தியரான தீபா, இப்போது கனடாவில் குடியுரிமை பெற்று டொராண்டோ நகரில் வசிக்கிறார். பஞ்சபூதங்களில் முக்கியமான நீர், நிலம், நெருப்பு போன்றவற்றை மையமாக வைத்து 'ட்ரையாலஜி’ எனப்படும் மூன்று வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சினிமாக்களை இயக்கியதால் உலகின் கவனத்தை ஈர்த்தவர். சமூகம் பேசத் தயங்கும் விஷயங்களைக் கதைக்களமாக அமைத்து சினிமாக்களை உருவாக்குவது தீபா மேத்தாவின் பிரத்யேக ஸ்டைல். 'ஃபயர்’ படம் சர்சைக்குரிய விஷயமாகக் கருதப்படும் பெண் ஓரினச்சேர்க்கை விஷயத்தை தைரியமாகப் பேசியது. 'வாட்டர்’ திரைப்படம் பாப்ஸி சித்வா என்பவர் எழுதிய 'வாட்டர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இளம்வயதில் விதவையான ஒரு பெண்ணை, முதிய விதவைகள் வாழும் இல்லத்தில் வாழ்நாள் முழுக்க வசிக்கவைக்க முனையும் சமூகத்தைப் பற்றி காட்டமாகப் பேசியது. கலாசார காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு மிரட்டல்கள்கூட விடப்பட்டன. ஆனாலும், படம் உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்தது. 1998-ல் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பட்டது, இவரின் 'எர்த்’ படம். 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் இந்த எர்த்!

பெயரில்லா சொன்னது…

மீரா நாயர்

பத்மபூஷண் விருதுபெற்ற நம் இந்திய பெண் இயக்குநர், மீரா. மும்பை மாநகரின் அழுக்குப் பக்கங்களை படையல் வைத்தது இவர் இயக்கிய முதல் படம் 'சலாம் பாம்பே’. மும்பையில் வாழும் சாலையோர சிறுவர்களைப் பற்றிய இப்படம் உலகத்திரைப்பட விழாக்களில் இந்தியாவின் மீது கவனம் விழ காரணமாக அமைந்தது. 'காமசூத்ரா: ஏ டேல் ஆஃப் லவ்’, 'மான்சூன் வெட்டிங்’, 'அமீலியா’, 'நேம்சேக்’, 'வானிட்டி ஃபேர்’ போன்ற முக்கியப் படங்களை இயக்கிய இவர், தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

கேத்ரின் பிகலோ

2008-ல் வெளியான, காத்ரின் இயக்கிய 'தி ஹர்ட் லாக்கர்’ படம், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதோடு சேர்த்து உலகம் முழுவதும் 42 உயரிய விருதுகளைக் குவித்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், 2008-ல் இந்தப் படத்துக்கு போட்டியாக இறுதிச் சுற்றுவரை நாமினேட் செய்யப்பட்டது, 'அவதார்’. இதில் விசேஷம்... 'அவதார்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், இவருடைய முன்னாள் கணவர். அகில உலக ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிரட்டிய 'அவதார்’ படத்துக்கே ஆஸ்கர் என ஆரூடங்கள் சொன்னபோது, அமெரிக்க பாம்ப் ஸ்குவாடு, ஈராக்கில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அழித்தொழிக்கும் சம்பவங்களின் கோவையான 'தி ஹர்ட் லாக்கர்’ படம், வித்தியாசமான திரைக்கதை உத்தியால், பணியில் இருக்கும் வீரர்களின் நுண்ணுணர்வை எடுத்துச் சொல்லி, ஆஸ்கரை வென்றது.

2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவம் தொடங்கி, பாகிஸ்தானின் அபோடாபாத்தில் மே 2, 2011-ல் ஒசாமா பின்லேடனை சுற்றிவளைத்து சுடப்பட்டது வரை அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறையின் பணிகளை கேண்டிட் கேமரா பாணியில் விவரித்திருந்தது இவருடைய இன்னொரு படமான 'ஜீரோ டார்க் தர்ட்டி’. கற்பனைக்கு எட்டாத உழைப்போடு இவர் உருவாக்கியது இப்படம். ஆனால், நாட்டின் மிகமுக்கியமான ரகசிய தகவல்களைப் படத்துக்காக எப்படியோ திருடிவிட்டனர் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் சில மாதங்கள் முன்புவரை இவரை விசாரணை வளையத்தில் வைத்திருந்து, அண்மையில்தான் விடுவித்தது. அந்த அளவுக்கு தத்ரூபமாக பின்லேடன் வேட்டையை படமாக்கி இருந்தார் கேத்ரின்.

சோஃபியா கப்போலா

'தி காட் ஃபாதர்’ படத்தை இயக்கிய, பிரபல அமெரிக்க சினிமா இயக்குநர் ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலாவின் செல்ல மகள். 43 வயதாகும் சோஃபியாவின் இரண்டாவது படமான 'லாஸ்ட் இன் டிரான்ஸ்லேஷன்’, 2003-ல் ரிலீஸ் ஆகி பலத்த வரவேற்பைப் பெற்றது. டோக்கியோ நகரில் எதேச்சையாக சந்தித்துக்கொள்ளும் வயதான நடிகருக்கும், இளம் கல்லூரி மாணவிக்கும் இடையே நிகழும் ரொமான்ஸ்தான் படத்தின் கதை. வசூலை வாரிக்குவித்த இப்படம், ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை பிரிவில் நாமினேட் செய்யப்பட்டது. முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ஒரு பெண் இயக்குநர் பெயர் நாமினேட் செய்யப்பட்டது இந்தப் படத்துக்காகத்தான். இயக்கத்துக்கான விருது கிடைக்காவிட்டாலும், 'சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரீன்ப்ளே’ பிரிவில் விருதை வாங்கி, தலைமுறை பெருமையைக் காப்பாற்றினார் சோஃபியா. ஆம்... தாத்தா கார்மைன் கப்போலா, அப்பா ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலா என குடும்பமாய் வாங்கிய ஆஸ் கர் பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக்கொண்டார்.

பெண்களின் பார்வையில் இன்னும் அழகாகவும், ஆழமாகவும் விரிகிறது திரை!

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)