களவாணி-மீண்டும் ஒரு யதார்த்த சினிமா!!!

ண்பர்களே,போன வாரம் தான் களவாணி படம் பார்க்க முடிந்தது, இந்த படத்தின் 20க்கும் மேற்பட்ட விமர்சனங்களை வலையில் படித்திருந்தமையால் இது ஒரு ஓவர்ரேட்டட் படமாக இருக்குமோ?!!! என்னும் தயக்கம் இருந்தமையால் பார்க்கணுமா? என யோசித்து , அட பார்ப்போமே!!!.  என பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது , அற்பணிப்பு, என்ற ஒற்றை சொல்லுக்குள் ஆழ்ந்திருக்கிறார்கள் படத்தின் கலைஞர்கள்.

தை தியேட்டரில் பார்க்கவில்லையே!!!என மிகவும் வருத்தப்பட்டேன், பல பெரிய பட்ஜெட் குப்பைகளை தியேட்டரில் பார்த்து நொந்து போனதால் எது அசல?எது போலி? என்பதில் நிலவும் குழப்பத்துக்குள்ளேயே இதுபோல படங்களும் சிக்கிக்கொள்கின்றன. நான் கடைசியாக   4 முறை பார்த்த படம் என்றால் அஞ்சாதே, மற்றும் பொல்லாதவன், அதன் மேக்கிங்கில் மிரட்டியிருப்பார்கள், இயக்குனர்கள் மிஷ்கினும்,வெற்றிமாறனும். அதற்கு பின்னர், இந்த படம் தான் நான் அலுக்காமல் வெகுவாக  ரசித்து திரும்ப திரும்ப  பார்த்தது என்று சொல்லுவேன்.

ப்படி ஒரு வசீகரம் படத்தில். சற்குணம் இயக்குனராக கிடைத்ததற்கு தயாரிப்பாளர் மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும், இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் தரமான படம் கொடுப்பது எப்படி?!!! என அவர் ஒரு புத்தகமே போடலாம். இதை நண்பர் கருந்தேள் எழுதியிருந்தால் அக்குவேறு ஆணிவேறாய் பிரித்து மேய்ந்திருப்பார். பாராட்டுவதிலும், குறைகண்டால் குட்டி தீர்ப்பதிலும் மனிதர் தாராளம். இப்படம் சாரு எழுதி உயிர்மையில் வருகிறது, படிப்போம் என்றார். அட சூப்பர் மேட்டராச்சே !!! என்றேன். நான்.

ந்த படத்தை பற்றி அண்ணன் ஜாக்கி, நண்பர் செ.சரவணகுமார்,ண்பர் பின்னோக்கி, நண்பர் செந்தில்வேலன் மற்றும் நிறைய பேர் அருமையாக வித்தியாசமாக எழுதியிருந்தனர். ஆகவே நான் எழுதாமல் விடுவதில் எந்த குறுகுறுப்புமில்லை. அவர்களின் விமர்சனங்களை வரிக்கு வரி அப்படியே வழிமொழிகிறேன்.

விமல் போன்ற நடிகனை பசங்க,தூங்காநகரம் போன்ற படங்கள் பார்த்துவிட்டு குறைத்து மதிப்பிட்டு விட்டுவிட்டேனே!!!அடடா?!!! எனத் தோன்றியது.இவர் கூத்துப்பட்டறை நடிகர் என்று இப்போது தான் தெரியும்,18வருடங்கள் ஹீரோவாக தோன்றியும் இன்னும் முகபாவனை உடல்மொழி என்பதே தெரியாத ஒரு ஓவர்ரேட்டட் நடிகன்,அல்லக்கைகளின் எடுப்பார் கைப்பிள்ளை இ.தளபேதி விஜயை ஒப்பிடுகையில் விமல் யதார்த்த நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.  விமலும் அந்த நாயகியும் அமர்க்களமான பெர்ஃபார்மன்ஸ்.  விமல் இனி மிக கவனமாக இருக்க வேண்டும். இதே போல கதையமைப்புடன் கூடிய படங்களாய் நடிக்கசொல்லி வாய்ப்புகள் குவியும், அதிலிருந்து கவனமாக தெரிவு செய்து நடிக்க வேண்டும்,

ந்த நாயகி ஓவியா, மிக அழகு, அருமையான நடிப்பு, முதல படமா?!!! சான்சே இல்லை, த கேர்ள் நெக்ஸ்ட் டோர்!!! என்ற சொல் சிறப்பாயிருக்கும் , சற்குணம் படத்தின் கலைஞர்களிடம் வேலை வாங்கியதிலேயே மிளிர்கின்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, படம் பார்த்த அனுபவம். எல்லா படத்துக்கும் இது கிடைத்து விடாது. படம் முடிந்த  உடனே நான் செய்த முதல் வேலை என் ப்ளாக்கரின் ப்ரொஃபைலில் பிடித்த படங்கள் பகுதியில் இந்த படத்தையும் கையோடு இணைத்தது தான்.

பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட, பாத்திரங்கள் ரெண்டு பென்சிலாவது வாங்கி குடுண்ணே!!! என்று சொல்லும் தங்கச்சி, சரியான பொருத்தமான பாத்திர தேர்வு, பூரா பணத்தையும் கேக்காம மூணு பங்கோட விட்டானே!!! என்னும் அம்மா, 2500 திர்காம்ஸ் குடுத்து லாப்டாப் வாங்குனேன்,கட்டிட வேலை முடிக்காம கெடக்கு பாத்து போட்டுகுடுங்க பாய், என்னும் இளவரசு என வாழ்ந்திருக்கின்றனர்.

ஞ்சா கருப்பு, பாலைவனத்து மழையை போல என்பேன், ஸ்டீரியோ டைப் காமெடியைப் பார்த்து பார்த்து நொந்த நமக்கு ஆகச்சிறந்த மாற்றாக விளங்குகிறார், இவரை இன்னும் நாம் நன்கு பயன்படுத்தலாம்!!!, செம ரிசல்ட் தருவார். என்பது என் எண்ணம். வில்லனாக வந்தவர் , என் பள்ளியில் கூடப் படித்த எதிரி மாணவன் போலவே இருக்கிறார். பார்க்கும் போதே எரிச்சல் வரும் ஒரு  விரோதக்கார முகம். மனிதர் என்னமா பெர்ஃபார்ம் செய்திருக்கிறார் ?!!! .  எங்க பல்லாவரம்,  பம்மல் ஏரியாவில் சபரிமலை சீசனில் மாலை போட்டுக்கொண்டு தவ்ளத்தனம் செய்யும் பயபுள்ளைகளை நினைவு படுத்துகிறார்.

ற்றபடி குறை என்று சொல்லவே முடியவில்லை, இருந்தால் தானே? சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு குறை கண்டுபிடிக்க முயன்று தோற்ற இன்னொரு படம். வெல்டன் டீம். இயக்குனர் சற்குணத்தின்  படங்களை இனி தேடிப்பார்க்கும் ஆவலை உண்டு பண்ணிவிட்டார்.!!! இப்படம் , இவ்வளவு தாமதமாக எழுதுவதற்கு காரணமே, இவ்வளவு நல்ல படத்தை ஊடகத்தில் சிலாகிக்காமல் இருப்பது குற்றம் என்பதால் தான்.

விர, படம் பற்றி எழுதிய நண்பர்களின் பதிவுகளில், படம் பார்த்திராததால் முன்பே பின்னூட்டியிருந்தாலும், ரசித்தவற்றை பகிர முடியவில்லை. இது போல நல்ல படங்களையும் அவ்வபொழுது தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும் ,  இயக்கும் இயக்குனருக்கும், வெற்றிபெறச்செய்யும் ரசிகர்களுக்கும்  மிக்க நன்றி.

விமல்பற்றிய ஒரு செய்தி:- சமீபத்தில் மீண்டும் காஞ்சிவரம் படம் பார்தேன் அதில் நடிகர் விமல் மினி ரமேஷ் என்னும் பெயரில் பிரகாஷ்ராஜின் மருமகன் ரங்கனாக அவர் வருவதை உறுதி செய்துகொண்டேன்,விமலின் ஃபில்மோக்ராஃபியில் இந்த மிக முக்கியமான படம் இல்லாதது கண்டு ஆச்சர்யமடைந்தேன். நண்பர்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்,குரலும் விமலது குரல் தான் அவர் ஏன் மினிரமேஷ் என அறிமுகமானார் என குழப்பமாக இருக்கிறது.
களவாணி=நியாயமான கூலி
=========0000==========
சாதித்த களவாணி குழுவினரின் பேட்டி:-

41 comments:

ஜெய் சொன்னது…

மீ த ஃபர்ஸ்டு... படிச்சுட்டு வர்றேன்... :)

பின்னோக்கி சொன்னது…

குட்.. பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் பார்க்கத் தூண்டிய படம். இளவரசு.. சான்ஸே இல்லை. ரொம்ப பிடித்திருந்தது. நீங்களும் ரசித்ததற்கு மகிழ்ச்சி.

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

கலக்கல் படம் தல இது... அஞ்சாதே படத்துக்குப்பிறகு ஒரு அருமையான மேக்கிங்கா களவாணி தெரிஞ்சுது.
எனக்கு ரொம்ப பிடிச்சது கதாயாகியோட அண்ணன் ரோல்தான்... ரொம்ப சாதாரணமான நடிப்பு... ராக்கிங்...

பேரரசும், தளபேதிகளும் இதைப்பார்த்தாவது திருந்துனா சரிதான்... எனிவே இனனொரு வாட்டியும் படத்தையும் பார்ககலாம்ன இருக்கேன்...simply I loved this movie

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நல்ல படம் சார்.நேர்மையான விமர்சனம்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

அருமையான படம் கார்த்திக்.. இந்த மாதிரியான படங்கள் வெற்றியடைவதே தமிழ் சினிமாவிற்கு நல்லது.

இது வரை இந்தப் படத்தை 'குடும்பத்துடன்' ஐந்து முறை பார்த்துவிட்டேன். இன்னும் அழுக்கவில்லை.

பெயரில்லா சொன்னது…

இதுல சரவணகுமார் விமர்சனம் பார்த்து தான் சவுதிலேர்ந்து பெகரைன் போய் படம் பார்த்து வந்தேன்,செம படம்,போய்வந்த களைப்பே தெரியலை.லேட்டானாலும் லேட்டஸ்டு விமர்சனம்,மற்ற விமர்சங்களுக்கும் சுட்டி கொடுத்தமைக்கு நன்றி

ILLUMINATI சொன்னது…

களவாணி படம் பார்த்தது குறித்து மகிழ்ச்சி.களவாணி என்னையும் கவர்ந்தான். :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

சமீப காலங்களில் , சுப்பிரமணிய புரம்; நாடோடிகள்; பசங்க; அங்காடித் தெரு இந்தக் களவாணி ;இவைதான் தமிழ்ப் படங்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
உங்கள் ரசனையும்; விமர்சனமுமே என் பார்வையிலும்... மிகரசித்துச் சிரித்துப் பார்த்த படம்.
இப்படத்தில் குறைகளைத் தேடாதீர்கள். மிக நிறைவாக உள்ளது. பங்கேற்ற எல்லோருமே பாராட்டுக்குரியோர்.
இப்படியான படங்கள் தொடர்ந்து வரட்டும்.

பெயரில்லா சொன்னது…

நண்பரே.
இந்த படம் பார்த்து அழுதுவிட்டேன்.
ஏன் தெரியுமா?என் அப்பாவும் ஒரு சிறிய ப்ரொட்யூசர் தான்,அவரை திறமையில்லாத புதுமுக இயக்குனர் ,வாயிலேயே பந்தலிட்டு ஒரு ஓடாத மொக்கை படம் கொடுத்து ஏமாற்றிவிட்டார்,இப்போது 80லட்சத்துக்கு மேல் கடன்,இதுபோல இயக்குனரிடம் கொடுத்திருந்தால் படமும் பணமும் தப்பியிருக்குமே,அது தான் அழுதேன்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஸாரி.. நோ உலகப் படம்!!!!

-------

யதார்த்த சினிமாவில் வில்லன் எங்கிருந்துங்க வந்தாரு?

ஹாலிவுட் பாலா சொன்னது…

அப்பப்ப நீங்களே அனானியா கமெண்ட் போட்டுக்குவீங்கன்னு சொன்னீங்களே??? மேலயிருக்கற ரெண்டு அனானி கமெண்ட்டும் உங்களுதா?

ஹாலிவுட் பாலா சொன்னது…

தல.. போன்ல சைட் பார்க்கும்போது, ஃப்ளாஷ் விட்ஜட்னால(ன்னு நினைக்கிறேன்) ப்ரவுஸர் க்ராஷ் ஆகிடுது. அதனால தற்போதைக்கு உங்க உலக சினிமா விட்ஜட்டை எடுத்துவிட்டிருக்கேன்.

அப்டேட் கிடைச்சவுடன் மீண்டும்.

இராமசாமி கண்ணண் சொன்னது…

ஆண்பாவம் படத்துக்கு அப்புறம் முதல் ஸீன்லேந்து கடைசி சீன் வரைக்கும் சிரிச்சு ரசிச்சு பார்த்த படங்க இது..

செ.சரவணக்குமார் சொன்னது…

மிக அருமையான படம். சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

//இவ்வளவு தாமதமாக எழுதுவதற்கு காரணமே, இவ்வளவு நல்ல படத்தை ஊடகத்தில் சிலாகிக்காமல் இருப்பது குற்றம் என்பதால் தான்.//

தாமதமானாலும் இதுபோன்ற படங்களைப் பற்றி எழுதுவது நல்ல விஷயம் நண்பரே.

கொழந்த சொன்னது…

//மற்றபடி குறை என்று சொல்லவே முடியவில்லை, இருந்தால் தானே? சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு குறை கண்டுபிடிக்க முயன்று தோற்ற இன்னொரு படம்//
ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா..முடியல
பெரிய மேதை டைரக்டர்ன்னு சொல்லிகிரவங்க படத்தை விட பல மடங்கு சிறப்பாகவே இருந்தது. ஆனா எப்ப பார்த்தாலும் கிராமத்துக் கதைன்னு சொல்லி 8,9 படிக்கிற ஸ்கூல் பிள்ளைகள இப்படி காமிக்கறது எனக்கு பிடிக்கல. பொம்பளப் பிள்ளைகளே ஒரு 10-15 வருசமாதான் படிக்கணும்னு வெளிய பெருமளவு வர ஆரம்பிச்சிருக்காங்க. அத இந்த மாதிரி படங்கள் வந்து கெடுக்காம இருந்தா சரி.

இராமசாமி கண்ணண் சொன்னது…

நானும் பம்மல் தாங்க.. ரெட்டை பிள்ளயார் பக்கம் வீடு :)

ஹாலிவுட் பாலா சொன்னது…

நீங்க ஏங்க பம்மறீங்க. தைரியமா வெளிய வாங்க.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜெய் படிச்சிட்டு வரேன்னு,வரலை:))

@பின்னொக்கி நண்பரே,
நல்ல படம்,அறிமுகத்துக்கு நன்றி

@நாஞ்சில் பிரதாப்
மக்கா,செம படம்,டென்ஷன் எல்லாம் பறந்துடுச்சு.
குறிப்பா,விமல் அந்த ஏர் உழும் கருப்பையாவிடம்,டேய் பயப்டறடா,
அண்ணன் கிட்ட சொல்லுடா காட்சி,அதகளம்.

@அனானி
நன்றிங்க,பேரைப்போடுங்க,ஹாலிபாலி டவுட் படறார்.

@செ.செந்தில்வேலன்
நண்பரே,அழைத்தீர்கள்,கொஞ்சம் வேலை பளு,எடுக்கமுடியலை சாரி.
கருத்துக்கும் மிக்க நன்றி

@அனானி
மிக்க ம்கிழ்ச்சி,சரவணகுமார் ரொம்ப சிலாகித்திருந்தார்.

@இலுமி
நண்பா
மிக்க மகிழ்ச்சி

@யோகன் பாரீஸ்
தலைவரே,குறையெல்லாம் சொல்லலை.நன்றி

@அனானி3
நண்பரே,இது எதோ விளையாட்டுக்கு என்றே எண்ணிவிட்டேன்.
நீங்க மந்தாகினியா?கட்டதுரையா?இல்ல கட்டதுரயா?
நிஜம்னா விட்டுடுவோம்.

@ஹாலி பாலி
தல
என்ன இதுக்கு போயி,அனானி நல்லதா போடுறவரைக்கும்
என்ன தல பிரச்சனை?திட்டி போட்டாதான்,பிரச்சனை.
தல ஒய் கொலவெறி?.

@இராமசாமி கண்ணன்
நண்பரே,நானும் பம்மல்தானுங்கோ.
அண்ணாநகர் ஐந்தாம் தெரு.
விக்னேஷ் மகால் அருகே,வேறெங்கும் கிளைகள் இல்லை:))
நன்றி,சட்டிங்கில் அன்று பேச முடியலை சாரிங்க.

@செ.சரவணகுமார்.
நண்பரே,வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி

@இராமசாமி நண்பரே பம்மல்னா ஹாலிபாலிக்கு என்னன்னு வெயிட்ட காமிங்க.
ரொம்ப பேசுறாரு தல.:))

@தல இராமசாமி பம்மலுங்கோவ்,ஜாக்கிரத:))

கொழந்த சொன்னது…

boss..இந்தப்படம் உங்களுக்கு அவ்வளோ பிடிக்குமா?
(பிடிக்கலைன்னு சொன்னதுக்கு இப்படி டீல்ல விட்டுட்டீங்களே!!!)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

கொழந்த,
மன்னிக்கனும்,
உங்க கமெண்டுக்கு பின்னூட்டம் போட கைய்டுக்கறத்துக்குள்ள,பாஸ்வேலை கொடுத்துட்டார்,சாரிங்க.

====
நீங்க சொன்ன கருத்து வாஸ்தவமான ஒன்று தான்.
ஆனா இத்தோட ,நிறுத்திக்கிட்டா குற்றமில்ல,தொடர்ந்து வந்தால் பிரச்சனைதான்.
தவிர,பசங்களை கெடுக்க இருக்கவே இருக்கு சண்டிவி,விஜய்,ராஜ்டிவி சீரியல்.அதைவிடாவா ஒரு சினிமா கெடுக்கமுடியும்?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

கொழந்த,
வரிசையா நோட் பேடில் அடிக்கும்போது,விட்டுடிச்சி,இப்போதான் வேலையை முடிச்சுட்டு போடுறேன்.சொன்னதில தப்பே இல்லைங்க.ஆனா ப்டிச்ச படம் தான்,இந்த வீடியோவுல மாடர்னா இருக்குற ஓவியாவ பாருங்க.

கொழந்த சொன்னது…

boss..
எங்க வீட்டு பக்கத்தில முத்துக்கு முத்தாகன்னு ஒரு படம் ஷூட்டிங்.. கதாநாயகி யார்ன்னு நினைக்கிறீங்க? நல்ல நம்ம ஓவியா அக்காதான்

ஜாக்கி சேகர் சொன்னது…

நல்லா எழுதி இருக்க.. எத்தனை பேர் எழுதினாலும் நீ எழுது...அது நல்லா இருக்கு..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அப்புடியா,கொழந்த மிக்க மகிழ்ச்சி,ப்ராக்கெட் போடுங்க,நான் இன்னும் வளரலைன்னு விட்டுடாதீங்க:))

R.Kamal சொன்னது…

நல்ல படம்னு தான் கேள்விப்பட்டேன். இப்ப நீங்களே சொல்லிட்டீங்கள்ல, பார்த்துடுவோம் :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜாக்கிசேகர்
அண்ணே அப்புடியே ஆகட்டும்,பதிவுக்கு ஓட்டு போட்டேன்,பின்னூட்டம் வந்து போடுறேண்ணே,

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஆர்,கமல்.
நண்பரே,அவசியம் பாருங்க,பிடிக்கும்

கொழந்த சொன்னது…

//கொழந்த,
மன்னிக்கனும்// sorry... முதல்ல நா இத பார்க்கவேயில்ல..
அட சும்மா கலாய்க்கிறதுக்கு சொன்னேன் பாஸ்.. இதெல்லா கணக்குல எடுத்திட்டு பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி கொழந்த,மன்னிக்கனும் லாம் சொல்லறீங்க.
(எந்த குழந்தைக்காவது கல்மிஷம் உண்டா..)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஹாஹஹ்ஹாஹ,ஏனுங்க கொழ்ந்த மேஜர் சுந்தர்ராஜனை விட்டுட்டீங்களே?:))

கொழந்த சொன்னது…

//சண்டிவி,விஜய்,ராஜ்டிவி சீரியல்//
விஜய் டிவி ல பாய்ஸ்-கேர்ள்ஸ் ஜூனியர்ன்னு ஒரு நிகழ்ச்சி நடக்குது. பாருங்க. ஜென்ம சாபல்யம் அடஞ்சிருவீங்க

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கொழந்த
மிக்க மகிழ்ச்சி,நீங்க பாருங்க,நான் டிவி வ்ச்சிக்கலை,மானாட மயிலாட்டவ விட சூப்பரா?:)

கொழந்த சொன்னது…

//மானாட மயிலாட்ட//
இதுல ஏதோ ட்ரிபிள்-மீனிங் தெரியுதே!!!
This cat drink milk!!!!
(நீங்க வேலையா இருக்கீங்கன்னு தெரியுது. இத்தோட முடிச்சுக்கிறேன்)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

கொழந்த வீட்டில் குடுமபத்தினருடன் வாய்ஸ் சேட் செய்து கொண்டிருந்தேன்.உங்க பதிவில் வந்து சந்திக்கிறேன்.

கண்ணா.. சொன்னது…

எனக்கும் படம் ரொம்ப புடிச்சிருந்தது... கதாநாயகியின் அண்ணந்தான் என்னையும் மிக கவர்ந்தார்.. என்னா கேஷிவலான நடிப்பு.... அவரு அஸிஸ்டெண்ட் டைரக்டர்னு கேள்வி பட்டேன்...

அப்புறம் இளவரசும் பின்னியிருப்பார்....துபாய்ல பர்ஸேஸ் போகும் போது ரெண்டு பயலுவ இதாண்டா களவாணி அப்பான்னு சொன்னாங்கன்னு சொல்லுவாரு பாருங்க... அருமையா இருக்கும்

நல்ல பகிர்வு....

Thirumalai Kandasami சொன்னது…

I liked this film very much,,Thank god,I watched this movie in theatre.

I like that interesting climax dialogue,,
"500 thalaikattu irukkara ooran,5000 thalaikattu irukkura orukilla vanthu..."..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கண்ணா
நன்றி நண்பா

@திருமலை கந்தசாமி
மிக்க மகிழ்ச்சி நண்பரே,வருகைக்கு நன்றி

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

மீ த பேக் !! ஆஃப்டர் டென் டேஸ்.. ;-) பதிவு அட்டகாசம் நண்பா !! பல நாட்கள் கழிச்சி, நானு படம் பூராவும் சிரிச்சிக்கினே இருந்தது இந்தப் படத்துக்குத்தான் !! aahaa... type pannumbodhe nhm writerla edho problem.. potti pottiya varudhu.. irunga sari pannittu varen..

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

இப்ப சரி ஆயிருச்சி ;-) .. கஞ்சா கருப்பு, பின்னியெடுத்துட்டாருல்ல... அதுவும் க்ளைமேக்ஸ்ல.. ;-) சிரிச்சி முடியல ;-)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

செம படம் நண்பா
கஞ்சா கருப்புவி பேரில் ஆட்டகாரிக்கு 200 குடுத்து அடிவாங்க விடு காட்சியெல்லாம் அதகளம்,ஹாஹஹ்ஹா

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

வெல்கம் பேக்
நல்ல படம் பற்றி எழுதி தொடருங்கள்,மதராஸபட்டினம் பார்த்தேன்,உங்கள் கருத்தே தான் என் கருத்தும் நண்பா,டைட்டானிக்,லகான்,போன்றவற்றிலிருந்து பிஜிஎம்,காட்சியாக்கம் போனறவற்றை அப்படட்டமாய் தழுவுயுள்ளனர்.அயறிச்யாய் இருந்தது 2 நாள் பார்த்தேன்,ஒரே ஷாட்டில் பார்க்க முடியலை படம்,;(

பெயரில்லா சொன்னது…

''பேர்தான் 'களவாணி’. ஆனா, அந்தப் படம் கொடுத்தது எனக்குப் பெரிய மரியாதை. எப்பவும் இரண்டாவது படம்தான் 'ஆசிட் டெஸ்ட்’னு சொல்வாங்க. அந்தத் தகிப்பை இப்போ உணர்றேன். கிடைச்ச அங்கீகாரத்தைத் தக்கவெச்சுக்கணும்னு ஆசை. பேராசைதான். சளைக்காம, மலைக்காம உழைச்சுக்கிட்டு இருக்கோம்!''- நிதானமாகப் பேசத் துவங்குகிறார் சற்குணம். ஆரவாரமே இல்லாமல் மனதைக் கொள்ளைகொண்ட 'களவாணி’ இயக்குநர்.
''முதல் படத்தின் எந்தச் சாயலும் இல்லாம சினிமா பண்ண ஆசை. பலவிதமா யோசிச்ச துல பீரியட் ஃபிலிம்தான் சரின்னு தோணுச்சு. 1966-ல் நடக்கிற மாதிரி ஒரு கதை பிடிச்சோம். அப்போதைய சாதாரண வாழ்க்கையை இப்போ கேள்விப்படுறப்போ, எவ்வளவு இழந்திருக்கோம்னு சுரீர்னு உறைக்குது. எவ்வளவு திருவிழாக்கள், சடங்குகள், உறவுகள்... எல்லாத்தையும் உதறிட்டு வந்திருக்கோம். எல்லாத்தையும் ஒரு கதையில் மீள் உருவம் கொடுத்தா, நல்லா இருக்கும்ணு தோணுச்சு. 'வாகை சூட வா’ன்னு பேர்வெச்சு வாழத் துவங்கிட்டோம்!''''இரண்டாவது படமே பீரியட் ஃபிலிம்... சிரமம்ஆச்சே?''

''ஈஸியான காதல் கதைதான். அதன் பின்னணி மட்டும் வித்தியாசமா இருக்கும். நம்மோட நிறைய பழக்கவழக்கங்கள் இன்னிக்கு மறந்துபோயிருச்சு. தொப்புள் கொடி மாலை போட்டுப் பிறந்த குழந்தையின் முகத்தை எண்ணெயில்தான் பார்க்கணும் மாமன். கூண்டுக்குள் கோழி வைத்து நரி பிடிக்கிற வைத்தியர். மழை நேரத்தில் குளத்தில் உள்ள பனை மரத்தில் ஏறும் சன்னை மீனை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீங்க. நான் காட்டுறேன்.

அநியாயத்துக்கு வெட்கப்பட்டு சாப்பிட்டுக் கிட்டு இருக்கும் மாப்பிள்ளையின் இலையை நூல் கட்டி இழுத்து விளையாடும் அழகான மச்சினிச்சிகள், கழுதையில் உப்பு விற்கிற வியாபாரிகள், எப்போதாவது சுடப்படும் மண்பானை இட்லி, பின் கொசுவம் வைத்துக் கட்டிய கேப்பைக் களி பெண்கள், எருமை மாடுகள் வெச்சுக் கட்டிய கமலை... ஒரு டைம் மெஷின் பயணமாக இருக்கும் படம். இழந்து போன தமிழ் அடையாளங்களைப் பாடம் மாதிரி சொல்லாமல், நகைச்சுவையா சொல்லப் போறோம்!''

''ஆக, பீரியட் ஃபிலிம் பின்னணியில் 'களவாணி’ காதல் செய்யப்போறாரா?''

'களவாணி’யில் தஞ்சாவூர் இளைஞனா வந்த விமலை, 66-களில் உலவிய அச்சு அசல் இளை ஞனா இதில் மாத்திட்டேன். அரிசியை மையாக்கி கலர் கலந்து பொட்டு தயாரித்து விற்பது, டீக் கடை வெச்சு கருப்பட்டிப் பாலில் டீ போட்டு, 'ரெண்டு காசு டீ... மூணு காசு டீ...’னு சொல்லி விக்கும் கதாநாயகிக்கும், பி.யூ.சி. முடிச்சுட்டு, பெரிசாப் படிச்சு முடிச்ச மாதிரி வாத்தியார் வேலைக்குத்தான் போவேன்னு சொல்லித் திரியும் கதாநாயகனுக்கும் இருக்கிற காதல்தான் கதையே. யதார்த்தம் மீறாம கதை சொல்லணும்னு மட்டும் மனசுல வெச்சிருக்கேன். இப்ப இருக்கிற நாகரிகங்களின் எந்த சாயலும் வந்துவிடக் கூடாதுன்னு எங்கேயாவது ஒரு கிராமத்தைப் பிடிச்சு படப்பிடிப்பை ஆரம்பிக்கப் பார்த்தோம்... முடியலை. அதனால், அருப்புக்கோட்டைக்குப் பக்கத்துல ரெண்டு கோடிக்கு மேல செலவழிச்சு 'கண்டெடுத்தான் காடு’ன்னு ஒரு கிராமத்தையே உருவாக்கிட்டோம்.

ஹீரோயினாக ஸ்ருதின்னு ஒரு மலையாளப் பொண்ணு. முதல் வருஷக் கல்லூரி மாணவி. ஓங்குதாங்கான உடல்வாகு, அழுத்தமான முகம்... பார்த்ததுமே மனசுக்குள்ள பட்சி சொல்லிடுச்சு அவங்கதான்னு! அதுவும் போக அழகா, ஸ்பஷ்டமா தமிழ் பேசுறாங்க. கூட்டிட்டு வந்துட்டோம். என் நண்பன் ஜிப்ரான், இதில் இசையமைப்பாளராக அறிமுகமாகுறார். பாடல்களின் ஆன்மாவிலும் வார்த்தைகளிலும் அந்தக் காலகட்டம் தொனிக்கணும்னு புரிந்து, பாட்டு கொடுத்திருக்கிறார் வைர முத்து. கவிதையான தமிழ் அடையாளங்கள் சுமக்கும் ரசனையான சினிமாவாக இருக்கும்!''

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)