நெஞ்சுக்கு நீதி!!!சபாஷ் சரியான தீர்ப்பு!!!

தர்மபுரி பஸ் எரிப்பில் 3 பேருக்கு  தூக்கு : கொடூரக் கொலை என்று கூறி மரண தண்டனை
ன்னும்  தினமலர் செய்தி படித்து ஆனந்தக் கூத்தாடினேன், எவ்வளவு தாமதமான தீர்ப்பு?!!! ஆனாலும் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பு. நம்பினார் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு!!! என்று உடனே புரிந்தது, அரசு நின்று கொன்றாலும்: கொல்லும் என்றும் புரிந்தது, விரைவில் அவர்களை தூக்கிலும் போட ஆவண செய்யவேண்டும், இல்லையென்றால் ஜனாதிபதிக்கு கடிதம், தந்தி, தொலைபேசி, கருணைமனு, என்று ஒரு வருடத்தை ஓட்டிவிடுவார்கள். நான் முதலில் மரண தண்டனை தவறு! என்று மூடத்தனமாக நினைத்து வந்திருந்தேன், ஆனால் என் எண்ணத்தை எச்சில் தொட்டு என்றோ அழித்துவிட்டேன். மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது. அடடா!!! ,மரண தண்டனை என ஒன்று மட்டும் இல்லையெனில், நம்மால் நிம்மதியாக வீட்டுக்குள் தூங்க முடியாது, ஊரெங்கும் மர்டரர்கள். பெடோபைகள், இன்செஸ்டுகள், டகாய்டிஸ்டுகள். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் தான்.  யாரும் நிம்மதியாக வெளியே நடமாடமுடியாது.

ல்லாவற்றிற்கும் மேலாக வஞ்சிக்கப்பட்ட மக்களின் ஆழ்மனதுக்குள் பழிவாங்கும் குணம் கணன்று கொண்டே இருக்குமாம், ஆனால் நாட்டில் நிலவும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளிலிருந்து நயவஞ்சகர்கள் மிக எளிதாக தப்பிவிடுவதால் ,அந்த பழிவாங்கும் குணம் மக்கி மண்ணாகி நாம் கையாலாகாதவர்களாகிவிட்டோமே!!!,

ன் மகளை,மகனை வன்புணர்ந்து கொன்று தின்ற பாந்தர் சிங் கோலி நன்றாக நடமாடுகிறானே?!!என் அம்மாவை கொன்றவன் நன்றாக நடமாடுகிறானே!! என் வீட்டை கொள்ளையடித்தவன் நன்றாக நடமாடுகிறானே!!என் நிலத்தை அபகரித்து அப்பா அம்மாவையும் கொன்ற @@@@#######மகன் அமைச்சன் நன்றாக நடமாடுகிறானே!! போபாலில் நாற்பதாயிரம் பேர் நச்சுவாயுவால்  சாகக் காரணமான வாரன் ஆண்டர்சன் சொகுசாக வாழ்கிறானே?!!!,அவன் கைக்கூலிகள் விஐபி சிறையில் விருந்தோம்புகிறார்களே?!!!என்று கேவி கேவி, அழும்.

றந்த மாணவியாவது ஒரு முறை தான் இறந்திருப்பார், ஆனால் அவரை நினைத்து 10வருடம் திவசம் கொடுத்த குடும்பத்தார் , எத்தனை முறை மனதால் இறந்திருப்பார்கள்?

ப்படி கேவி அழும் நெஞ்சுக்கு, எப்படி மனசாந்தி கிடைக்கும்?!!!இதோ மேலே வந்துள்ளதே?!!! அப்படி தீர்ப்பு வந்தால் மட்டுமே சாத்தியம்!!!, 2006 டிசெம்பர் மாதமே மேற்கண்ட பஸ் எரிப்பு கொலைகாரர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது, அப்போதே இவர்களை தூக்கில் போட்டிருந்தால் இறந்த மாணவியரின் ஆத்மா என ஒன்றிருக்குமேயானால்,அது விரைவாக சாந்தியடைந்து சொர்க்கத்துப் போயிருக்கும், அந்த பழிவாங்கும் வெறி கணன்ற பெற்றோருக்கு, சகோதரருக்கு, உடன் பிறவா சகோதரனான் என் போன்றவருக்கு மனசாந்தியும் என்றோ கிடைத்திருக்கும்என்பதை.நண்பர்கள் கண்மூடி நினைத்துப்பார்க்க வேண்டும்.

னிமேலும் தாமதிக்காமல் இவர்களை கண்ணாடி அறையில்,மாணவிகளின் பெற்றோர் குழுமியிருக்க , தூக்கில் போட வேண்டும், அதை எல்லா அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பவும் வேண்டும். அது தான் நெஞ்சுக்கு நீதி. அப்போது தான் சட்டம் ஒரு இருட்டறை அல்ல என நம்புவோம். மக்கள் மானாட மயிலாட மட்டுமல்ல, இதையும் பார்ப்பார்கள். சன் டிவியின்  டிஆர்பி யும் எகிரும்.

ப்போது ஒரு குற்றவாளி பெற்ற தண்டனைக்கு மேல்முறையீடு செய்கிறானோ!!!அவன் அப்போதே தவறுக்கு வருந்தவில்லை , என்று தான் என் அகராதியில் பொருள். மேலும் இணைய தயிர்வடையான என்னைக் கேட்டால் தூக்கு தண்டனை மிக சுலபமானது, ஆங்கிலேயன் கண்டுபிடிப்பு. சீக்கிரம் வலியில்லாம சாகமுடிவது, அது கூடவே கூடாது. எனவே நான் தீர்க்கமாக பரிந்துரைப்பது லீதல் இஞ்சக்‌ஷனையும், ஓல்ட் ஸ்பார்கி எனும் மின்சார நாற்காலியையும் தான்.

டுத்தவருக்கு நடந்தால்   செய்தி , நமக்கு நடந்தால் அது கொடூர சம்பவம், என்னும் மனநிலை அறுப்போம். நல்ல அண்டை மனிதர்கள் எல்லோரையும் சமமாக பாவிப்போம்.தீயில் வெந்து மடிந்த எந்த சுகத்தையும் அனுபவித்திராத இன்னுயிர்களுக்கு இத்தருணத்தில் அஞ்சலி செய்வோம். ஏழை உயிர் கிள்ளுக்கீரை இல்லை,என உரைப்போம்.
=====0000=====
கொடூர கொலையாளிகள் விபரம்:-
ர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு விதிக்கப் பட்ட கைதிகள் நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. எனவே, 'அக்டோபர் 8-ம் தேதி காலை 6 மணிக்குள் மூவரையும் சாகும் வரை தூக்கிலிட்டுத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுகிறேன்.' என்ற ஒரு கடிதத்தை சேலம் முதலாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி ராகவன், வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பிவிட்டார். சிறைக் கொட்டடியில் மூவரும் கண்ணீரில் இருக்கிறார்கள்!

இந்தக் கைதிகள் மூவரின் வீடுகளுமே தர்மபுரியில்தான். மூன்று குடும்பங்களில் இருப்பவர் களுமே, கதறலையும் கண்ணீரையும் மட்டுமே தங்களது பதிலாக நமக்குத் தந்தனர். இந்தக் குடும்பங்களின் இன்றைய நிலைமை என்ன?

நெடுஞ்செழியனின் மனைவி கஸ்தூரி. சொந்த அத்தை மகள். இவர்களுக்கு நான்கு வாரிசுகள். மூத்த மகன் மதி, பள்ளிப் படிப்போடு நின்று விட்டார். இரண்டாவது மகன் அருண்குமார், பி.இ. மாணவர். மகள்கள் பாரதி ப்ளஸ்-டூ-வும், நந்தினி ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். ''அப்பாவ தூக்கில் போட்ருவாங்களா அம்மா? அப்பா இனிமே வீட்டுக்கு வரவேமாட்டாங்களா?'' என்று பாரதியும் நந்தினியும் திரும்பத் திரும்பக் கேட்கி றார்கள். பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து, அழுகிறார் கஸ்தூரி.

ரவீந்திரனை வீட்டிலும் நண்பர்களும் செல்லமாக மாது என்றுதான் கூப்பிடுவார்கள். இவரது மனைவி உமா. இவர்களுக்கும் நான்கு குழந்தைகள். மாது கைதான சமயம், நால்வருமே பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு இருந்தனர். இப்போது வழக்கு முடிந்து தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், கல்லூரி படிப்புக்கு வந்துவிட்டார்கள்.

மூத்த மகன் தென்னரசு, எம்.பி.ஏ. மாணவர். இரண்டாவது மகன் புவியரசன், எம்.பி.பி.எஸ். படிக்கிறார். மகள் ஆர்த்தி அரசியும் எம்.பி.பி.எஸ். மாணவிதான். கடைசி மகள் சசிலட்சுமி, கடந்த வருடம் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து உள்ளார். கணவர் துணை இல்லாமலேயே, கடந்த 10 வருடங்களாக நான்கு குழந்தைகளையும் நன்றாகப் படிக்கவைத்துக் கரையேற்றிய பெருமை உமாவைச் சேர்ந்தது. இருந்தாலும், கணவனை நினைத்து நினைத்துத் தினமும் அவர் கண்ணீர் சிந்தாத நாளே இல்லை!

முனியப்பனுக்கு மூன்றுமே ஆண் வாரிசுகள். மூத்த மகன் ரஞ்சித்குமார், போலீஸ்காரர். இரண்டாவது மகன் அஸ்வினும் கடைசி மகன் ராமனும் எம்.இ- முடித்து, கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக இருக்கிறார்கள். மூன்று வாரிசுகளும் எவ்வளவோ முயன்றும்கூட, முனியப்பனின் மனைவி கமலாவை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.

இந்த மூன்று குடும்பங்களின் வாரிசுகளுமே நன்றாகப் படித்துக் கௌரவமான நிலையில் இருக்கி றார்கள். பஸ்ஸில் எரிந்து கரிக்கட்டை கள் ஆகிப்போன கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி மூன்று பேரும்கூட இன்று உயிரோடு இருந்தால்... அவர் களும் இவர்களைப்போல நல்ல நிலையில் இருந்திருப்பார்கள். அவர்கள் பெற்றோரும் அதைப் பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.
 =====0000=====
நன்றி ஜூ.விகடன்

82 comments:

ஹாலிவுட் பாலா சொன்னது…

நேத்து... உ.த அண்ணனை நான் கும்மிகிட்டு இருந்தப்ப எங்க போனீங்க??

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுவும் 25 வருடம் நீடிக்கும் எதிர்பர்த்தேன்...பராவல்ல...


//மேலும் இணைய தயிர்வடையான என்னைக் கேட்டால்//

விடு தல....ஒருததன் சொன்னாற்துக்காக அதையே சொல்லிட்டுருக்கனுமா....

இப்படிக்கு
மற்றொரு இணைய தயிர்வடை:)

ஹாலிவுட் பாலா சொன்னது…

நான் இன்னும் அண்ணனை விடுறதா இல்லை. அவரும் விடாம வேற எதையாவது சொல்லி கடுப்பேத்திகிட்டே இருக்காரு.

பெயரில்லா சொன்னது…

சார்,சரியான தீர்ப்பு தான்,ஆனா எப்போ போடுவாங்க தூக்குல?எப்போ போடுவாங்கன்னு நாம தான் விவாதம் பண்ணனும்,சுப்ரீம் கோர்டுலயாவது நல்ல நீதிபதிகள் இருக்காங்களே,அடேங்கப்பா,நெஞ்சு நிறைஞ்சுடுச்சு,கண்கள் பணித்தது,இதயம் இனித்தது சார்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிபாலி
தல,சாரி கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்,தல ஏதேது,தாமதமா வந்த நீதியையும் செயல்படுத்தவிடமாட்டாங்கபோலவே!!!,இல்லாட்டி பெத்த மக்களே இவனுங்கள அடிச்சு கொல்லனும் போல,அதை தான் அரசு விரும்பும் போல.ஒண்ணு அவனுங்களை குளிரவை,ரெண்டு அவனுங்களை குளிரவை.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

பிரதாப்,
இந்த இணைய தயிர்வடை என்னும் பட்டத்தை நான் மிகவும் நேசிக்கிறேன்,சுவாசிக்கிறேன்,பூசிக்கிறேன்,எனக்கு தளபேதி பட்டம் வாணாம்.இணைய தயிர்வடை போதும்.:))
மக்கா சார்பு நிலைக்கு மிக்க நன்றிலா.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிபாலி,
தல,இதுல என்ன கொடுமைன்னா,இந்த தண்டனை வந்தபிறகு ஒருத்தர் கல்யாணம் கட்டி,கொழந்தபெத்துருக்கான்,அவனுக்கு ஒரு மானம் கெட்டவன் பொண்ணு குடுத்துருக்கான்,

இன்னொரு கிழட்டுப்பயல் பையன் பொண்ணு எல்லோருக்கும் ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணிருக்கான்,இவனுக்கும் ஒருத்தன் பொண்ணை வெக்கமில்லாம மருமவளா அனுப்பிருக்கான்,இவனுங்க எல்லாம் விஷசாராயம் குடிச்சி மாண்டு போனா என்ன?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

இந்த தண்டனை மட்டும் பொய்த்துப்போனால் அன்றே சட்டம் செத்துவிட்டதாக அர்த்தம்,ஒவ்வொருவனும் பழிவாங்க பெட்ரோல்கேனோடு விரோதக்காரன் வீட்டுக்கு போகமுடியாது,சட்டம் தான்னு நம்பியிருக்காங்க,நீதியரசர்கள் நீதியை இப்படி நிலைநாட்டி அவர்களை குளிர்விக்கனும்.கொன்றவன் மெண்டலா இருந்தாலும் அவனுக்கும் தண்டனை குடுக்கனும்,இல்லாட்டி அவனை வச்சி யாராவது பிஎஹ்டி ,ஆர்&டி பண்ணுவாங்க.

இராமசாமி கண்ணண் சொன்னது…

என்னை கடிக்க வந்த
எறும்பை நசுக்கி கொன்று விட்டு
எழுத ஆரம்பித்தேன்
மரண தண்டைனை
தவறென...
---
இப்படித்தான் இருக்கு இங்க இருக்குற நியாமெல்லாம்.. அவன் அவனுக்கு வலி வரப்பத்தான் தெரியும் வலின்னா என்னன்னு.. அது வரைக்கும் சொல்லிட்டுத்தான் இருப்போம் இந்த மாதிரி மரண தண்டனை தப்புன்னு.. என்னய்ய பொருத்த மட்டில் மரணம் மட்டும் அதாவது உடனடியாக ஏற்படும் மரணம் மட்டும் இவனுங்களுக்கு தண்டனையா இருக்க கூடாது.. சாகரதுக்கு முன்னாடி நம்ம செஞ்ச தப்பு எவ்வளவ்வு மோசமானது .. அப்பேர்பட்ட தப்ப செஞ்ச நான் திரும்பியும் மனுசனா ஜென்மம் எடுத்ததே தப்புன்னு அவனுங்களுக்கு தோனுகிற மாதிரி இருக்குனும் தண்டணை.. இது பத்தாதுன்றது என்னோட உணர்வு ....

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@இராமசாமி
நண்பரே மிகவும் சரி,
எனக்கு ஆனந்த கண்ணீர் வந்ததென்றால் பெண்களின் பெற்றோருக்கு எப்படி இருக்கும்?
விக்கித்த்து போய் நீதிபதிகளை கையெடுத்து கும்பிட்டிருப்பார்கள்.

=====
மேலும் வெளிநாட்டில் டெத் ரோ என்னும் காத்திருப்பு காலத்துக்கு காரணமே லீத்தல் இஞ்சக்‌ஷன் கிடைக்க ஆகும் தாமதத்தால் தான்.
ஆனால் இங்கே காரணம்
மேல் முறையீடு,சிபாரிசு

கொழந்த சொன்னது…

தல..இவுங்களுக்கு சரியான பின்புலம் இல்லாததால தூக்கு. இதைவிட கர்ப்பிணிப்பெண்கள கருவறுத்து, பல பேர கொன்னு உயிரோட கொளுத்திய ஆட்களேயே முதலமைச்சராகவும் மந்திரிகளாகவும் உக்காரவெச்ச நாடு நம்ம பாரதத் திருநாடு. தமிழ்நாட்டுல என் வயசு பசங்க..பத்திரிக்கை ஆபிஸ்ல உயிரோட எரிஞ்சு செத்தாங்களே..எரிச்சவங்ககிட்டயே காச வாங்கியிட்டு ஓட்டு போடுறது நம்ம ஆட்கள் தான..வாழ்க ஜனநாயகம். நீங்கள்ளாம் அந்த ஊருலயே இருந்திருங்க. தயவுசெய்து இங்கிட்டு வந்து மாட்டிக்காதிங்க. நியூக்ளியர் பில் வேற பாஸ் பண்ணிட்டாங்க. அதன்படி இந்தியால எங்கவேனாலும் அணுஉலை தொடங்கலாம். விளைவ நினைச்சுப் பாருங்க?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கொழந்த,
பத்திரிக்கை ஆபீஸ் எரிப்பு சம்பவத்துல,தூக்கு தண்டனை கொடுக்கக்கூடாதுன்றதால தான் பக்கத்து இலைக்கு பாயாசமா, இந்த மரணதண்டனை மறுப்பு நாடகம்.

===
எரிந்து போன பத்திரிக்கை ஆபீஸ் விசுவாச இளைஞர்கள் ஆவியாய் வந்து அந்த மகாபாவிகளை கொன்றால் தான் உண்டு,அது நடக்குமா?
===
அதான் கண்கள் பனித்து இதயம் இனிச்சாச்சே.கோடிகள் இருந்தாலே கேடிகளுக்கு கொண்டாட்டமே.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நம் கழகப்போர்வாள்களுக்கு என்னுயிர் தோழன் போல புதுப்பேட்டை போல எத்தனை படம் வந்தாலும் அறிவிருக்காது.தொண்டன் தீக்குளித்து சாகும் முன்பே ப்ரீபெய்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாராயிருக்கும்.

கொழந்த சொன்னது…

நீங்க 2000 நடந்ததுக்கு இப்ப தீர்ருப்புன்னு சொல்லறீங்களே..1984ல் நடந்த Anti-Sikh Riot..ஏன் போபால் வரை இதுவரைக்கும் ஒண்ணாவது தீர்ப்பு வந்துருக்கா? இருவது வருசத்திற்கு முன்னாடி இப்படி ஞாயத்த கேட்கிறவர்களை கம்யூனிஸ்ட்ன்னு ஓரம் கட்டுனாங்க. இப்ப இப்படி பேசுனா மாவோயிஸ்ட் நக்ஸலைட்ன்னு சொல்லி
ஒரேடியா களி தின்னுற மாதிரி செஞ்சுருவாங்க.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஆமாம் கொழந்த நான் திருவாதிரைக்கே களி திங்க மாட்டேன்,நெதமும் திங்க முடியாது,நான் இங்கனயே கெடக்கேன்.
===
எனக்கு கலர்டிவி இன்னும் கிடைக்கல,அதை வாங்கி பார்சல் போட்டுவிடுங்க,யாரானும்:)))

ஜோதிஜி சொன்னது…

கார்த்திக் அவசரப்படாதீங்க.

ஆலடி அருணா கொலை போல இவங்களும் வெளியே வரும் போது பத்திரிக்கையில் வருவது வெளியே வராதுஜீ

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

என்னை பொறுத்தவரை மேல்முறையீடு விசாரித்த நீதிபதிகள்,தண்டனைய குறைக்காம மெயிண்டைன் பண்ணாங்களே,அதுவே பெரிசுன்னு நினைக்கிறேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஆமாம் தலைவரே,
இந்த தண்டனை நிறைவேறினால் நாகவல்லி அம்மனுக்கு ஒரு பாக்கெட் கற்பூரம் வாங்கி ஏற்றுவேன்.:)தெய்வம் விட்ட வழி

எஸ்.கே சொன்னது…

சூழ்நிலையால் திடீரென உணர்ச்சி வசப்பட்டு குற்றம் செய்பவன் தன் தண்டனை காலத்தில் தன் தவறை உணர்ந்தாலே திருந்துவான். ஆனால் இப்படிப்பட்ட குற்றவாளிகள் தான் செய்ததை தவறென்றே நினைக்காத போது? தூக்குதண்டனை மிக எளிமையானதுதான். ஏனெனில் மரணம் ஏற்பட குறைவான நேரம் ஆகிறது. குற்றவாளியே மனதளவில் இப்படி இருக்கும் நிலைக்கு செத்துவிடலாம் என நினைக்கும் வகையில் ஒரு தண்டனை வர வேண்டும். அதை யார் நினைத்துப் பார்த்தாலும் கிலி ஏற்பட வேண்டும். அப்படி ஒரு தண்டனை வந்தால் மட்டுமே மனிதன் தவறு செய்ய யோசிப்பான்....

இன்னும் கொஞ்சம் எழுதினால், எதாவது கொடூரமா எழுதினாலும் எழுதிடுவேன். சாரி!

ஜோதிஜி சொன்னது…

பார்க்கலாம். நாகவல்லியா இல்ல இந்த நாதாரிகளா ன்னு?

டீலா நோ டீலா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@எஸ்கே,
நீங்க சொல்லும் கருத்தில் பொதிந்துள்ள உண்மையை அப்படியே வழிமொழிகிறேன்,சரியாக எடுத்து வைத்துள்ளீர்கள் உங்க நியாயத்தை.

கொழந்த சொன்னது…

//எனக்கு கலர்டிவி இன்னும் கிடைக்கல// தல உங்ககிட்ட செல் எத்தன இருக்கு? அடுத்த எலெக்சனுக்கு வீட்டுக்கு கட்டாயம் ஒரு கலர் செல் உண்டுன்னு பேசிக்கிறாங்க. முடிஞ்சா அதயும் அனுப்ப சொல்லுங்க
(என்ட கேட்டுறாதீங்க எனக்கு வேணும்)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தலைவரே,
அன்று மீண்டும் ஒரு பதிவு உண்டு,
ஆலடி அருணாவை எதோ காத்து கருப்பு அல்லவா கொன்றுவிட்டது?அது உங்களுக்கு தெரியாதா?நீதி மன்றத்தில் பில்லி சூனியம் எல்லாம் நம்ப ஆரம்பித்துவிட்டனரே.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

//எனக்கு கலர்டிவி இன்னும் கிடைக்கல// தல உங்ககிட்ட செல் எத்தன இருக்கு? அடுத்த எலெக்சனுக்கு வீட்டுக்கு கட்டாயம் ஒரு கலர் செல் உண்டுன்னு பேசிக்கிறாங்க. முடிஞ்சா அதயும் அனுப்ப சொல்லுங்க
(என்ட கேட்டுறாதீங்க எனக்கு வேணும்)//

சிரிச்சி வயிறு வலி வந்துட்டு கொழந்த.
செம டைமிங்,அது செல்லில் சரி மெமரி கார்டு போட்டு குடுப்பாங்களா?அப்போதான் தேவநாதன் போல நாதாரிப்பயல்களுக்கு தோதாய் இருக்கும்

கொழந்த சொன்னது…

/இந்த தண்டனை வந்தபிறகு ஒருத்தர் கல்யாணம் கட்டி கொழந்தபெதுருக்கான்/

அந்த கொழந்த நாளைக்கு வளர்ந்து, யாராவது உங்கப்பன் இப்படி செஞ்சான்-அதுனால தூக்குல தொங்குனான்ன்னு சொன்னா அது எவ்வளவு பாதிக்கும். இவுங்க பண்ணது இப்படி எத்தன பேர பாதிக்குது பாருங்க

கொழந்த சொன்னது…

தேவநாதன்லாம் சப்ப மேட்டரு (உனக்கு எப்படி தெரியும்னு கேட்காதீங்க). கலைஞர் விரும்பி பார்க்கும் மானாட மயிலாட அத விட சூப்பர். அப்பப்ப பாராட்டு விழாவில் ரஜினி கமல் புடை சூழ பிரம்மாண்ட நடிகைகளை ஆட விட்டு பார்க்குறாங்கலே அத விடவா. (அது என்னமோ தெரியல இந்த ஆட்சில எல்லாருக்கும் ஃபுல் ஸ்க்ரீனயும் அடைக்கிற நடிகைகளத்தான் பிடிக்கிறது)

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

//இனிமேலும் தாமதிக்காமல் இவர்களை கண்ணாடி அறையில்,மாணவிகளின் பெற்றோர் குழுமியிருக்க , தூக்கில் போட வேண்டும், அதை எல்லா அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பவும் வேண்டும்//

ஏனுங்க தல இவ்வளவு ஆத்திரம் நிச்சயம் அவங்க செஞ்ச கொடுஞ்செயலுக்கு ஏத்த தீர்ப்பு தான் அத உடனடியா நிறைவேத்துனா தான் நீங்க சொலேற மாதிரி அடுத்த முறை தப்பு செய்றவன் யோசிப்பான்........

ஹாலிவுட் பாலா சொன்னது…

//அது என்னமோ தெரியல இந்த ஆட்சில எல்லாருக்கும் ஃபுல் ஸ்க்ரீனயும் அடைக்கிற நடிகைகளத்தான் பிடிக்கிறது//

நீங்க சொல்றதை பார்த்தா, ஜெயலலிதாவை.. கருணாநிதிக்கு ‘ரொம்பப்’ பிடிக்கும் போலத் தெரியுதே?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

கொழந்த
:))))))))))))))))))))))

செம காமெடி

@டுபாக்கூர் கந்தசாமி
ஆத்திரமில்லை நண்பரே,எவ்வளவு நாள் தான் பொறுப்பது?

@ஹாலிபாலி’
தல இது பாய்ண்டு
ஆனா கொழந்த சொன்னது
குஷ்பூ
பெப்சி உமா
சொர்னமால்யா
ரம்பா
நமீதா
போன்ற நடிகைகளை,ஹஹஹ்ஹஹ

RVS சொன்னது…

உணர்ச்சி கொப்பளிக்க ஒரு பதிவு. நல்லா இருந்தது.
இந்த கோபம் குறைய கீழே இருக்கும் பதிவை படிக்கவும்.
http://mannairvs.blogspot.com/2010/06/blog-post_02.html

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Sabarinathan Arthanari சொன்னது…

பதிவின் கருத்துடன் உடன்படுகிறேன். நன்றி

☀நான் ஆதவன்☀ சொன்னது…

கொஞ்சம் தாமதமாக் கிடைச்சாலும் நச்’ன்னு கிடைச்ச நீதி தேவுடு

☀நான் ஆதவன்☀ சொன்னது…

கொஞ்சம் தாமதமாக் கிடைச்சாலும் நச்’ன்னு கிடைச்ச நீதி தேவுடு

ஜாக்கி சேகர் சொன்னது…

அந்த பொண்ணுங்களோட, அப்பா அம்மாவுக்கு இப்பதான் நிம்மதியா இருக்கும்...

ஹாலிவுட் பாலா சொன்னது…

தல...

இந்த அதிர்ஷ்டக்கார ப்லாகரோட ப்லாக்ல.. முதல் பதிவுக்கு...

//இங்க கெட்டவார்த்தை அலவ்டா// -ன்னும்...

ரெண்டாவது பதிவில்

//காற்றுள்ள போதே தூற்றிக்கொள்// -ன்னு கமெண்ட் போட்டேன்.

பப்ளிஷ் ஆகுமா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல,
நிச்சய்ம் போடுவார்,ஏன்னா சுமார் ஒரு வருஷமாவே கமெண்ட் கல்லா கட்டலை,அதுதான் முற்போக்கா டரை பண்ணிருக்கார்,இவ்வளவு டீசெண்டா போட்டுருக்கீங்க,அதை வெளியிடுவார்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நீங்க எல்லாம் கமெண்ட் போட்டதுக்கு ரொம்ப பெருமை படுவார் பாருங்க.

ஹாலிவுட் பாலா சொன்னது…

//நீங்க எல்லாம் கமெண்ட் போட்டதுக்கு ரொம்ப பெருமை படுவார் பாருங்க//

ஹா.. ஹா.. ஹா... ரொம்ப நேரம் யோசிச்சிதான் போட்டேன்.

முற்போக்கு எதனாலன்னு புரிஞ்சனாலதான் அந்த தயக்கம். இல்லின்னா எப்பவும் போல, வடையோட வடையா இருந்திருப்பேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நானும் கருந்தேளும்
ரொம்ப யோசிச்சு தான் கமெண்ட் போட்டோம்.:))

ஹாலிவுட் பாலா சொன்னது…

எனக்கும் அந்த டவுட் இருந்துச்சி. என்னடா.. ரெண்டு பேரும் அங்க சொல்லி வச்ச மாறி இருக்கீங்களேன்னு. :) :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல
நாளை கருந்தேளுக்கு பிறந்தநாள்
நாளை மறுநாள் எனக்கு 6ஆம் ஆண்டு திருமணநாள்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நாளு சல்லுசல்லு பறக்குதே தல

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

இந்த பதிவை நீங்க போட்டிருந்தால்1000 கமெண்ட் போட்டிருக்கலாம்ல:)

ஹாலிவுட் பாலா சொன்னது…

//தல
நாளை கருந்தேளுக்கு பிறந்தநாள்
நாளை மறுநாள் எனக்கு 6ஆம் ஆண்டு திருமணநாள்//

கமெண்ட் அடிச்சி தூள் கிளப்பிடுவோம். இந்த பதிவுலகமே நம்மள பார்த்து பயப்படனும்.!! :) :)

ஹாலிவுட் பாலா சொன்னது…

//இந்த பதிவை நீங்க போட்டிருந்தால்1000 கமெண்ட் போட்டிருக்கலாம்ல:)//

அட போங்க. இப்பல்லாம் கொசுவை பார்த்தாலே அலர்ஜி ஆய்டுது.

FX வேற மண்டையை குடையுது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஹஹஹஹ்ஹ
தல
தூள் கிளப்பிடுவோம்,சரவணகுமார் ஊருக்கு போய்ட்டார் தல,இப்போ சாத்தூர் போயிருப்பார்.அவர் பதிவு படிச்சீங்களா?கடைசி ஒன்று

எஸ்.கே சொன்னது…

//நாளை மறுநாள் எனக்கு 6ஆம் ஆண்டு திருமணநாள்//
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

ஹாலிவுட் பாலா சொன்னது…

//நாளை மறுநாள் எனக்கு 6ஆம் ஆண்டு திருமணநாள்//

வாழ்த்துகள் :)

--

நவம்பரில் எங்களுது ஏழாவது.

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஏங்க நாம பாட்டுக்கு இத்தனை பர்சனல் மேட்டரை இங்க பேசறோமே??

இதெல்லாம்.. பைத்தியக்காரன் நோட் பண்ணிட்டுத்தானே இருப்பாரு??

என்னிக்காவது... இப்படி கும்மப் போறாங்க பாருங்க..

“இந்த கார்த்திக்கேயனுக்கு கல்யாணமாகி ஆறு ஆண்டுகள் ஆனதாக தகவல்கள் சொல்கின்றன. அதற்கு ஒருதினம் முன்தான் இவரின் இத்துப்போன நண்பன் கருந்தேளின் பிறந்தநாளாம்.

இவர்கள் பரவாயில்லை. பாஸிஸ வெறியன் பண்ணாடை பாலாவிற்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளாம்.”

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஹஹஹஹ்ஹ
தல
7வருஷமா/க்ரேட் தல
பருவத்தே பயிர் செஞ்சிருக்கோம்.:)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@எஸ்கே
மிக்க நன்றி நண்பா,தூக்கம் வரலையா?2-30 இருக்குமே?:))

எஸ்.கே சொன்னது…

இல்லை இன்று 4 மணிக்கு தான் தூங்குவேன்

ஹாலிவுட் பாலா சொன்னது…

//இப்போ சாத்தூர் போயிருப்பார்.அவர் பதிவு படிச்சீங்களா?கடைசி ஒன்று//

என் ரீடர்தான் அப்டேட் ஆக மாட்டேங்குதே. இப்பப் போய் பார்க்கிறேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல எஃபெக்ஸ் கலக்குங்க.
ஜார்ஜ் லூக்காஸ் பேட்டி இயக்குனர் சார்லஸ் 3பாகமா எழுதிருக்கார்.அதை பாருங்க,உதவியா இருக்கும்,தல அப்புறம் The Cutting Edge-The Magic of Movie Editing நிச்சயம் பாருங்க
நீங்களும் எஸ்கே,செம டாகுமெண்டரி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

சரி எஸ்கே,தல மணி 1-00 நான் போய் தூங்குறேன்,நாளை எங்க கும்மி வச்சாலும் சொல்லிவுடுங்க

எஸ்.கே சொன்னது…

பார்க்க ஆரம்பித்து விட்டேன்!

ஹாலிவுட் பாலா சொன்னது…

//The Cutting Edge-The Magic of Movie Editing நிச்சயம் பாருங்க //

அது ஸ்டார் சேனலில் ஒளிபரப்பானப்பவே பார்த்தாச்சிங்க. தெரிஞ்ச மேட்டரா இருந்தா பரவாயில்லையேன்னுதான் விட்டு வச்சிருந்தேன்.

FX-க்கு பயன்படலாம்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

அட இங்கயும் மணி 5.09.

9 நிமிஷம் ஓவர் டைம் ஆய்டுச்சி. உடம்புக்கு ஒத்துக்காது. நானும் வீட்டுக்குப் போறேன்.

குட் நைட்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
தல அதுல உங்க தலைவன் டாரண்டினோ தலைய சிலுப்பிக்கிட்டு என்னமா?பேசுறாரு,செம படம்.மறுக்கா பாருங்க தல,நீங்க எழுதுனா ரீச் நல்லா இருக்க்கும்,

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல ஃப்ரான்ஸுல வாரம் 35 மணிநேரம் தான் வேலையாம்,கொடுத்து வச்சவங்கல்ல,இங்க 45 மணிநேரம்

ஹாலிவுட் பாலா சொன்னது…

//நீங்க எழுதுனா ரீச் நல்லா இருக்க்கும்//

இப்படி சொல்லி சொல்லியே.. அடிக்கறீங்களே? :)

--

சரவணக்குமார் ப்லாக்ல அட்டண்டன்ஸ் போட்டாச்சி. எதுக்குப் பார்க்கச் சொன்னீங்கன்னு சரியா கண்டுபிடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

///

சினிமா வலைப்பூ நண்பர்கள்

R.Kamal Art
On Her Majesty’s Secret Service
KONANGAL
5th Sept 2010 ; The Ascent
கருந்தேள் கண்ணாயிரம்
Assassin’s Creed – மூன்றாம் புனிதப் போர் !
வார்த்தைகள்
நட்சத்திரப் போர்கள் – 3
worldcinema
The children are watching us-உலகின் முதல் ரியலிச சினிமா
/////உலக வலைப்பூ நண்பர்கள்

மனம்+
மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (4) - Photoshop, Illustrator, InDesign/Adobe CS
சாத்தூர் மாக்கான்
அஹிம்சாவாதி
Tamil MP3 Songs Download
Ennai Vittu Pogathe (1988)
அழியாச் சுடர்கள்
பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்
கும்மாச்சி
ஜெஸ்ஸி என்னை முத்தமிட்டாள்

//////////

நீங்க தூங்கும்போது குட்டையை குழப்புனாதான் ஆச்சி!!!!!!

உலகத்துலயும் காணாம், சினிமாவுலயும் காணாம். நான் உங்களுக்கு என்னப் பாவம் செஞ்சேன்?

உங்க ஃப்ளாஷை கூட, போன் க்ராஷ் ஆகுதுன்னுதானே எடுத்தேன். அதுக்குப் பழிக்குப்பழி வாங்க எனக்கு லிங்க் கொடுக்கலை அப்படித்தானே?

லிங்கே இதுவரைக்கும் கொடுக்கலைன்னாலும் மாட்டுனீங்க.

கொழந்த சொன்னது…

//குஷ்பூ
பெப்சி உமா
சொர்னமால்யா
ரம்பா
நமீதா//
என்னாது தமிழ்நாட்டுல இத்தனை நடிகைகளா? தல நா குஷ்பு பத்தி மட்டும் தான் அப்பப்ப லேசுபாசா கேள்விபட்டிருக்கேன். மத்தபடி வேற எந்த நடிகையையும் எனக்கு தெரியாது சாமி. தமிழ்நாட்டுக்கு வந்தே 6 வருஷமாச்சுன்னு சொல்லறீங்க சொர்னமால்யா அளவிற்கு டீப்பா போயிருக்கீங்க..என்னமோ போங்க

கொழந்த சொன்னது…

//நாளை மறுநாள் எனக்கு 6ஆம் ஆண்டு திருமணநாள்// என்னாது நீங்களும் இளைஞன் இல்லையா.............
அப்ப எல்லோருமே அங்கிள்ஸ்சா? பாலவாவது குழந்தயோட இருக்குற படத்த போட்டு முதலல்யே வெளியேரிட்டார். நீங்க கமுக்கமா ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்திட்டீங்களே சார். போங்க சார். நா ஏதோ சின்ன வயசுன்னு நெனச்சு எக்குதப்பா கமென்ட் போட்டிருந்தா என்ன ஆவது..

கொழந்த சொன்னது…

@ஹாலிவுட் பாலா
தல "எல்லாம் காண்பி" ஒண்ணு இருந்துச்சே பார்க்கல (ஒருவேள கூச்சப்பட்டு விட்டிட்டீங்களோ)

R.Kamal Art
On Her Majesty’s Secret Service

KONANGAL
5th Sept 2010 ; The Ascent

கருந்தேள் கண்ணாயிரம்
Assassin’s Creed – மூன்றாம் புனிதப் போர் !

வார்த்தைகள்
நட்சத்திரப் போர்கள் – 3

worldcinema
The children are watching us-உலகின் முதல் ரியலிச சினிமா

மயில்ராவணன்
கோமு ட்விட்ஸ்

கொழந்த's blog
மால்கம் X

அக்கரைச்சீமை
FX - 00

பாரதிக்குமார்
Looking for Comedy in Muslim World

ஹாலிவுட் பாலா சொன்னது…

'எல்லாம் காண்பி’....!! இது ஏதோ டபுள் மீனிங்கா தெரியுது.

வேணும்னே.. நம்ம ரெண்டு பேர் ப்லாகையும் அதுல ஒளிச்சி வைக்கற மாறி எதோ ஜாவா கோட் எழுதிட்டு,

‘எல்லாம் காண்பி’-ன்னு ஒரு லிங்க் போட்டு, கார்த்திக்கேயன்... லிங்கை க்ளிக் பண்ணுறவங்களை பார்த்து கேட்கற மாறி ஒரு பேர் வச்சிருக்கார் பார்த்தீங்களா?

நாம பழி வாங்கியே தீரணும். சீக்கிரமா ஒரு லிங்க்க்கு பேர் ரெடி பண்ணுறேன்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

கார்த்திக்கேயன்... நீங்க என்ன கேட்டாலும் சரி... எதையும் காட்டும் ஐடியா இல்லை-

-ன்னு கொழந்த சொல்லிட்டார். அவருக்கும் கூச்ச சுபாவமாம்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஏங்க ‘எல்லாம் காண்பி’-ன்னு லிங்க் பேரை கொடுத்துட்டு... ஏரியாவுக்கு ஒரு பொண்ணுங்களும் வர மாட்டேங்கறாங்களேன்னு புலம்பினா என்ன பண்ணுறது???

---

‘எல்லாம் காண்பி’

இது ஆணாதிக்க பார்ப்பனீய பிற்போக்கு கார்த்திக்கேயனுக்கு ஒரு சேம்பிள்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

மேல சொன்ன பட்டப்பெயரில் ‘பாஸிஸ’ வார்த்தை விட்டுடுச்சி. ஆட் பண்ணிக்கங்க.

வினோத் கெளதம் சொன்னது…

குரு சரியான தீர்ப்பு தான்..ஆனால் அம்பு விடுத்துவர்களையும் சேர்ந்தே தண்டித்தால் தான் மனம் முழுமையாக ஆறும்.. நாளையும் எதாவது ஒரு தலைவரை கைது செய்யும் பொழுது இதேப்போல் ஆகாது என்பது என்ன நிச்சயம்..இதைவிட கொடூரமான சம்பவங்கள் நடந்தால் கூட தலைவர்கள் மனம் திருந்த போவதில்லை.

பின்னோக்கி சொன்னது…

இன்னும் கருணை மனு எல்லாம் இருக்கு. கசாப்பையே கசாப்பாக்கலை...

ஆனா ஆட்டோ சங்கர் எவ்வளவு சீக்கிரம் தூக்குல போட்டாங்கன்னு நியாபகம் இருக்கா ?. அதுக்கு காரணம் என்னன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.

பார்ப்போம்.. இது எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றப்படுகிறது என்று.
முன்னாள் அமைச்சர்கள் 2 பேர், சிறையில் அவர்களை நேற்று சந்தித்து, உதவி செய்வதாக வாக்குக்கொடுத்திருக்கிறார்கள்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிபாலி&கொழந்த
தூங்கும் போது எதாவது பெரிச கண்டுபிடிக்கலாம்னு துப்பறிய ஆரம்பிச்சுட்டீங்களா?ஹஹஹ்ஹஹா
ஆனா ஒண்னும் கிடைக்கலையே,எல்லாம் காண்பி,அதை ஏன் டபிள் மீனிங்கா எடுத்துக்கனும்,தமிழ்ல அது தான் ஆப்ஷன் தருது.:)

===

தல,

யாரு லேட்டஸ்டா போஸ்டு போட்டாலும் லேட்டஸ்டா போட்ட ஐந்து போஸ்ட் மேலே காட்டும்,எல்லாம் காண்பியை அமுக்க வேண்டாம்.ஹிஹிஹி.

===

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கொழந்த
நான் என்னிக்காவது
இளைஞன்னு சொல்லிருக்கேனா?
31வயசு பையங்க.ஆமாம்.
தலதல2004செப்டம்பர்னா 6 வருஷம் முடிஞ்சிடுச்சில்ல ,நீங்க 2004 நவம்பரா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வினோத் கௌதம்
குரு,நல்லா சொன்ன,ஆனா தலைவன தண்டிக்கிறதா?அதெல்லாம் முதல்வன் போல சினிமால தான் சாத்தியம்.

@பின்னோக்கி
நண்பரே
எனக்கு மேல்முறையீட்டை நினைத்தாலும் பயமா இருக்கு..நாம எல்லாம் ,ஒரு சின்ன விஷயம் லேட்டாயிடுச்சுன்னாலே இப்புடி பதறி டென்ஷன் ஆயிடுவோம். பண்ண பாவத்துக்கு தண்டனை கொடுக்கறதை பாக்கற்த்துக்குள்ள,பாதிக்கப்பட்டவர்களுக்கு வயசாயிடுச்சின்னா?இப்போவே நிச்சயம் 60 வயசாயிருக்கும் அந்த பெண்களின் அப்பாம்மாவுக்கு.சதா கோர்டுக்கு கேசுக்கும் அலைய முடியுமா?

கண்ணா.. சொன்னது…

சரியான தீர்ப்பு.. ஆனால் மூலக்காரணத்தையும் சேத்து போடணும்க... அப்பத்தான் திருந்துவாங்க.... இல்லேன்னா... பஸ் எரிப்பு பத்திரிக்கை ஆபிஸ் எரிப்புன்னு போய்கிட்டே இருப்பாங்க....

கொழந்த சொன்னது…

//நான் என்னிக்காவது
இளைஞன்னு சொல்லிருக்கேனா?
31வயசு பையங்க.ஆமாம்//
இதத்தான் கேக்குறவன் கேனப்பையன்னா- அடுத்த கலைஞர் படத்துக்கு அவர் வசனமில்ல;ஜெயலலிதா கோர்டுக்கு கரெக்ட்டா போயிட்டாங்க;ஹா.பாலாவுக்கு கவிதை எழுதத் தெரியாது-இந்த மாதிரி ஏதாவது சொல்லுவாங்க.

கொழந்த சொன்னது…

@ஹா.பாலா
//கார்த்திக்கேயன்... நீங்க என்ன கேட்டாலும் சரி... எதையும் காட்டும் ஐடியா இல்லை-ன்னு கொழந்த சொல்லிட்டார். அவருக்கும் கூச்ச சுபாவமாம்//
கரெக்ட்டா சொல்லிட்டீங்க. சட்டைல எப்பவும் காலர் பட்டன கூட போட்டிருப்பேன்னா பார்த்துக்கோங்க..

@கார்த்திக்கேயன்
எல்லாம் காண்பி-பதிலா அனைத்தையும் பார்க்க-ன்னு மாத்திரலாமே

ஹாலிவுட் பாலா சொன்னது…

//ஹா.பாலாவுக்கு கவிதை எழுதத் தெரியாது-இந்த மாதிரி ஏதாவது சொல்லுவாங்க//

விடுங்க. இதெல்லாம் இலக்கியவாதிகளுக்கு சகஜம்.

மரா சொன்னது…

உம் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

வழக்கப்படி படு தாமதமா பார்த்து, அதைவிட தாமதமா பின்னூட்டுறேன்..

தூக்குத்தண்டனை வேண்டவே வேண்டாம்ன்றது தான் என் கருத்து. யெஸ் ! தூக்குத்தண்டனை அறவே ஒழிக்கப்படவேண்டும்...

ஆமா..

பிளான் பண்ணி தாக்கும் குற்றவாளிகளை, பொதுவிடத்தில் அம்மணமாக நிற்க வைத்து, மக்கள் கையிலேயே கற்களைக் கொடுத்து, அடித்தே கொல்ல வேண்டும் என்பதே எனது Stance.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

மத்தபடி, 6 வருடங்கள் கண்டு ஆனந்தமாகப் போய்க்கொண்டிருக்கும் கார்த்தியையும், அவருக்கு முன்னே தொலைவிலே நடந்துபோய்க்கொண்டிருக்கும் அண்ணன் ஆலிவுட்டு பாலாவையும் வாழ்த்த வயதில்லையென்பதால், வணங்கவும் வயது ஜாஸ்தியென்பதால், அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்துவிட்டு, அவர்களுக்குப் பின்னே, வெகு தூரத்தில் எனது பிஞ்சுக் கால் பாதங்களை எடுத்து வைக்கிறேன் ;-)

(அட்ரா அட்ரா அட்ரா)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கண்ணா
நன்றி நண்பா

@கொழன்ந்த
விட மாட்டீங்களா?நான் சின்ன பையன்க.பால்யவிவாகம் பண்ணிட்டாங்க,ஆமா எல்லாம் பார்க்க அப்படின்னும் எப்படி மாத்துரது,சொல்லுங்க,அதில் ஆப்ஷனில்லை.

@ஹாலி பாலி
தல,உங்களுக்கு 6 முடிஞ்சி 7ஆ?அல்லது 7 முடிஞ்சி 8ஆ?பதிலே இல்லியே?

@மரா
ஏன் இவ்வளவு லேட்டாக ஒத்துப்போகிறாய் மக்கா?:))

@கருன்ந்தேள்
நண்பா,உச்சதண்டனை மட்டும் இல்லேன்னா அவ்வளவு தான்,எல்லாரும் வாடகை தரவேணாம்,விலைவாசி பிரச்சனை,டவர் ப்ராப்ளம்,மின்வெட்டு,குடிநீர் பிரச்சனை,ட்ராஃபிக் ஜாம் இல்லை,வரி இல்லை,வாட் இல்லை,குண்டும் குழியுமான ரோடு இல்லைன்னு,ஜெயிலுக்குள்ள தான் இருப்பான்.இது ஒண்ணுக்கு தான் நடுங்கறானுங்க கிடன்ந்து,சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் வக்கீலுக்கு செலவழிக்கணும்னா எவ்வளவு காசுபடைச்சவனா இருக்கனும் மூணு பேரும்?கல்லாலயே அடிச்சி கொல்லனும்.நீக்க சொன்னாமாதிரி.இவனுங்க ரேஷன் கார்டையும்,நிலம் நீச்சு எல்லாத்தையும் புடிங்கிட்டு சோமாலியாக்கு அனுப்பனும்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)