ஆப்பிள் ஐபேடின் விரல் ஓவியங்கள்-இனி கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

ண்பர்களே!!!ஆப்பிள் ஐபேட் 3Gஐ முதலில் அமீரகத்தின் கடைகளில் பார்த்தபோது,என்னடா இது? பெரிய சைஸ் ஐபோன் போலவே இருக்கு?!!!,இதை எப்படி சுலபமாக தூக்கிக்கொண்டு போவது?,லேப்டாப்புக்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?!!!,எல்லாம் ஒன்று தான், எதற்கு இதைபோய் இவ்வளவு விலைகொடுத்து வாங்குகிறார்கள்?!!! என வியந்தேன்,

ன் பக்கத்து சீட் ஆர்கிடெக்ட் நண்பர் தன் ஐபோனில் அடிக்கடி ஒற்றை விரலில் கோலம் போட்டு கருப்பு வெள்ளை சார்கோல் ஓவியங்கள் வரைவார், அவ்வளவு அழகான ஓவியங்கள், மிகச்சுலபமாக வரைவார், மிகத்துல்லியமான டெக்‌ஷர்களுடன் கூடிய பலன்கள் கிடைக்கும்.அதை ப்ரிண்டும் எடுப்பார்,ஸ்க்ரீன் சேவரும் போட்டுக்கொள்வார். பார்க்க பென் அண்ட் இங்க் ரெண்டரிங் போலவும் இருக்கும். அவ்வளவு சிறிய சிங்கிள் டச் கொண்ட ஐபோனிலேயே ஒருவர் வீடுகட்டி விளையாடினால்?!!!

தைவிட 8மடங்கு பெரிய A4 சைஸ் கொண்ட,மல்டி டச் கொண்ட  ஐபேடில்?!!! சொல்லவே வேண்டாம்,  இயற்கையான ஓவியத்திறமை கலைரசனை, நிறைய கற்பனைவளம், வண்ணத்தெரிவுத்திறன் மட்டும் உங்களுக்கு இருந்தால் இதுவே உங்கள் களம், பத்து விரல்கள் கொண்டு வண்ணங்களை தொட்டு, ச்சும்மா அதிரவைக்கலாம். பாருங்கள் ஒரு கேன்வாஸில், குழைக்கப்பட்ட வண்ணங்கள் கொண்டு செய்யும் வேலையை,!!!அதே ஓவியர் இதில் சரளமாக செய்வதை.பழகிவிட்டால் சொன்ன சொல் கேட்கும் இதை கேன்வாஸை மாட்டுவது போலவே மாட்டிக்கொள்கின்றனர்.

இங்கே கீழே கொடுக்கப்பட்ட ஓவியங்களே அதற்கு சாட்சி!!!, இப்போது ஒன்று புரிகிறது எப்படி மலிவான வின்டோஸ் வகை கோலோச்சும் சந்தையில் மாக் தாக்குபிடிக்கிறது என்று?!!!.இந்த ஐபேடில் ப்ரஷஸ்2.1 என்னும் மென்பொருளை நிறுவிவிட்டால் மாயாஜாலம் செய்யலாமாம்,ஐபேடை கொண்டே நியூயார்க்கர் பத்திரிக்கைக்கு முன் அட்டையும் வடிமமைத்துள்ளனர்.

ப்போதுமே விண்டோஸ் என்பது மெயின்ஸ்ட்ரீம் சினிமா போலவும்[பெரும்பானோர் தேர்வு],  மாசிண்டோஷ் என்பது பேரலல் சினிமா போலவும் [கலை ரசிகர்களின் தேர்வு] இருந்து வந்திருக்கிறது, நிறைய படைப்பாளி நண்பர்கள் மாசிண்டோஷ் என்னும் மாக் பிஸியில் தான் படைப்பு வேலைகளை செய்கின்றனர். நம் அமீரக பதிவர் கோபிநாத்தும் மாக் பிஸி உபயோகிக்கும் படைப்பாளியே , அவர் வடிவமைப்பது வங்கிகளுக்கான க்ரெடிட்கார்டு டிசைன்கள்,போட்டோஷாப்பில் செய்யமுடியாத பல வித வித்தைகளை இதில் சுலபமாக செய்யமுடிவதும் ஒரு காரணம்,உங்களுக்கு தெரிந்த ப்ரொஃபெஷனல் போட்டோகிராபர்களை கேட்டுபாருங்கள், கதைகதையாக சொல்லுவார்கள். பழகிவிட்டால் மாக் ஒரு குழந்தை விளையாட்டு.இதில் திரையில் காணும் நிறமும் ப்ரிண்ட் எடுக்கும் போது வரும் நிறமும் ஒன்றாய் இருக்கும்.இதில் கதை கவிதை,கட்டுரை,பதிவுகள் எழுதலாம், படங்கள் பார்க்கலாம்,இசைகேட்கலாம்,கார் ஓட்டுகையில் வழிகாட்டி மேப் பார்க்கலாம்,இதில் ஓவியங்கள் தவிர ப்ரெசெண்டேஷன்கள், ப்ராஜக்ட் சார்டுகள்,தயாரிக்க முடியும்.
=========0000==========
இது ப்ரூக்ளின் ஓவியர் டேவிட் ஜோன் கசன்னின் டெமோ காணொளி:-

=========0000==========
னக்கும் இந்த உலகின் ஐபேட் ஓவியர்களின் படைப்பை பார்த்தவுடன் விரைவில் ஒரு ஐபேட் வாங்க ஆசைவந்துவிட்டது. இதில் ஆயில் பெயிண்ட்டிங். வாட்டர்கலர், எல்லாவிதமான டெக்‌ஷர் பெயிண்டிங், என எளிதாய் வரையமுடியும், இதிலேயே நாமிருக்கும் துறைக்கு ப்ரெசெண்டேஷனும் செய்யமுடிகிறது ஓவியர்கள், டிஜிட்டல் பேனர் துறையினர்.விளம்பர வடிவமைப்பாளர்கள், ப்ராடக்ட் டிசைனர்கள்.  கட்டிடக்கலை வல்லுனர்கள், நகைவடிவமைப்பாளர்கள் , ஆடை வடிவமைப்பாளர்கள், ஸ்டோரிபோர்டு வரைவாளர்கள்,  திரைப்பட இயக்குனர்கள், என அனைவரிடமும் இருக்கவேண்டிய ஒரு வஸ்து,


தயவுசெய்து இதையும் சாதாரண நோட்புக், நெட்புக்கையும் ஒப்பிடாதீர்கள், இதில் உள்ள துல்லியமும், நகாசுவேலையும் அதில் அவ்வளவு எளிதில் கிடைக்காது.இதைப்பற்றி மேலும் படிக்க ஆப்பிள் தளத்தின் சுட்டி. தல ஹாலிவுட் பாலா இதைப்பற்றி ஒரு ஆய்வு செய்து தொழில்நுட்ப பதிவு ஒன்று எழுதினால் கோடிபுண்ணியம் உண்டாகும்.இது சத்தியமாக ஆப்பிள் ஐபேட் விளம்பரமல்ல!!!இங்கே கொடுத்துள்ள ஓவியங்களின் புகழும் பெருமையும் வரைந்த ஓவியர்களையே சேரும்.
=========0000==========

115 comments:

வினோத்கெளதம் சொன்னது…

குரு அதக்களம் பண்ணியிருக்காங்க..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வினோத்
ஆமாம் குரு மெய்யாலுமே

ஹாலிவுட் பாலா சொன்னது…

//எனக்கும் இந்த உலகின் ஐபேட் ஓவியர்களின் படைப்பை பார்த்தவுடன் விரைவில் ஒரு ஐபேட் வாங்க ஆசைவந்துவிட்டது.//

குட் லக் தல!!! :)

=====

எனக்கு பிக்ஸார் பிடிக்கும். ஆனா ஆப்பிள் பிடிக்காது. நிறைய காரணங்கள் இருக்கு. இப்ப இன்னொரு மேட்டரில் ரொம்ப ‘பிஸியா’ இருக்கறனால அப்பாலிக்கா கும்மியில் ஜாய்ன் பண்ணிக்கிறேன்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஆனா நீங்க சொன்ன மேட்டரெல்லாம் லினக்ஸிலும், விண்டோஸிலும் செய்ய முடியும்.

ஆப்பிள் ‘பிரபல’ பதிவர் மாதிரி. அவ்ளோதான்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல,
வாங்க தல,
டச் ஸ்க்ரீன்ல இதை அடிக்க இனி மற்ற நிறுவனம் இனி மாஞ்சு மாஞ்சு உருவாக்கினாக்கூட இதற்கு ஈடு வருமா?எனக்கு லினக்ஸ் பற்றி ஐடியா இல்ல தல,எனக்கு அந்த ஆப்பிளின் தரம் மீது ஒரு ஆசை,அவ்வளவுதான்,எனக்கு அதில் வேலை செய்யனும்னும் ஆசை,இனி ஒரு மேக் பிஸு,அல்லது நோட்புக் ஃப்யூச்சரில் வாங்கிதான் பண்ணோணும்.
போட்டோஷாபில் எல்லா உத்திகளையும் உபயோகிக்கிறோம் தல ஆனால் மவுஸ் கொண்டு.வெறும் விரல் கொண்டு உபயோகிக்க வழியிருக்கா?ஆர்டிஸ்டிக் எஃப்ஃபெக்ட் கிடைக்குமா?
நான் விண்டோஸ்ல தான் வேலைசெய்யுறேன்,பதிவெழுதறேன்,பிரவுஸ் பண்ணறேன் தல,நான் விண்டோசுக்கு எதிரி இல்லை.

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

தல பொதுவா DTP வேலைகளுக்கு MAC PC தான் பெஸ்ட். பெரிய பெரிய பத்திரிக்கைகளில் (TIMES OF INDIA) மேக் தான் பயன்படுத்துகிறார்கள். எனக்கும் அதில்கொஞ்சுண்டு அனுபவம் உண்டு.
வின்டோஸ் அதுக்கு முன்னாடியே நிக்கமுடியாது.

ஆனா என்ன கொஞ்சம் விலைஅதிகம், அப்புறம் ரொம்ப ஹைடெக் தேவைக்கு மட்டும் பயன்படுத்தலாம். மற்றபடி வின்டோஸ் ஜீந்தாபாத்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

தல சொல்ல மறந்துட்டனே...,

ஆஃபீஸில் ஒரு போன் வாங்கிக் கொடுத்தாங்கன்னு சொன்னனே. அதுலயும் இந்த மாதிரி வரைய முடியும்.

என்ன....... நமக்கு வரையத் தெரியனும்!!

==

நான் பண்ணின தப்பை நீங்க பண்ணாதீங்க!! ஆஃபீஸில் வாங்கி கொடுத்தா... அல்லது ஆஃபீஸில் மேக் இருந்தா அதில் வொர்க் பண்ணுங்க.

ஆனா.. அந்த சொந்த காசில் வாங்குறது சூன்யம் வைக்கற மாதிரி. இது அனுபவம்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிபாலி,
தல ஓக்கே,
எனக்கு எல்லாம் நானே வாங்குனா தான் உண்டு தல.
மேக் பிஸி டிசைனே ஒரே சிங்கிள் மோல்டு,வெரி தின்.அப்புறம் க்ளீன்,பேட்டரி லாங்க்ஸ்டாண்டிங்.சூடாகாதது.தல ஹெச்பியின் டேப்ளட் பிஸி பார்த்திருக்கேன்,பேனா வச்சி வரைவேன் அதில்,ஆனா க்‌ஷ்டமாருக்கும்,இது போல க்ளைடிங் எஃப்ஃபெக்ட் இல்லவே இல்ல,வெண்ணை நறுக்கறாப்போல.அதுதான் தல,சும்மா வச்சி அழகு பாக்கவாது வாங்க ஆசை.:))ஏன் தல உங்களுக்கு கோவம் மாக் மேல?

ஹாலிவுட் பாலா சொன்னது…

//வெறும் விரல் கொண்டு உபயோகிக்க வழியிருக்கா?ஆர்டிஸ்டிக் எஃப்ஃபெக்ட் கிடைக்குமா?//

தாராளமா பண்ணலாம். அதுக்கு மேக் வேணும்னு அவசியம் இல்லை. நாஞ்சில் சொன்ன மாதிரி, டிசைன், டிடிபி மாதிரி வேலைகளுக்கு வேணும்னா மேக் ஓகே.

அதுவும் உங்களுக்கு அந்த மாதிரி வேலையிருந்து, அல்லது நீங்க ஒரு ஆர்டிஸ்ட் அப்படின்னா சரி.

நாமல்லாம்.. ஒரு வட்டம் போட்டு அதுல 3 குச்சி வரைஞ்சி மனுசன் படம் போடுறவங்க. அதுக்கு விண்டோஸே அதிகம் தல.

அப்புறம்... நீங்க கேட்ட அந்த டச் டைப்!! என்கிட்ட ஒரு ட்ரா பேட் இருக்கு. அது கூட ஒரு டிவிடி வந்துச்சி.

அதுல ஒரு ஆள்.. இதே மாதிரி ஒரு லைவ் படங்களா வரைஞ்சு காட்டுவாரு. நானும் முயற்சி பண்ணிப் பார்த்தேன். அப்புறம் நமக்கு ஒரு முட்டை, மூணு குச்சிதான் சரின்னு விட்டுட்டேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பிரதாப்,
நண்பா,மிகவும் சரி.என் ப்ரிடிஷ் போட்டொக்ராப்பர் நண்பன் வெறும் ஆர்கிடெக்சர் ப்ராஜக்ட் படங்கள் மட்டும் ப்ரொஃபஷனலாக எடுப்பவன்,அவன் விண்டோஸில் வேலையே செய்யமாட்டான்.வேணாம்னுவான்.மாக்கில் தான் வேலை செய்வான்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

//மேக் பிஸி டிசைனே ஒரே சிங்கிள் மோல்டு,வெரி தின்.அப்புறம் க்ளீன்,பேட்டரி லாங்க்ஸ்டாண்டிங்.சூடாகாதது//

எல்லாம் சரி!!!! IBM based PC-ன்னா... ஒரு ஹார்ட் ட்ரைவ் கெட்டுப் போனா... நாமளே கழட்டி வேற மாட்ட முடியும்.

இது ப்ரொப்ரைட்டரி. எங்க போவீங்க?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல,
டூமச் தல:)))
ட்ரா பேட் எங்க ஆபீஸ்லயும் இருக்கு,உபயோகமேயில்லாம.அதை எதாவது யூஸ் பண்ணேணு என் டேபிள்ள வச்சாங்க,இடம் அடைக்குதுன்னு நைசா தூக்கி ஓரமா வச்சிட்டேன்.ஹிஹி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல இதுதான் தல வேணும்,தகவலுக்கு நன்றி.
ஆனா மாக்கை பற்றி புகழ்பவர்கள் எல்லாம் அதன் உழைப்பையும் சேர்த்தே புகழ்கிறார்கள்
,ஒருத்தன் 6 வருஷமா மாக் புக் வச்சிருக்கேன்னு மார்தட்டறான்,ஒரு கோளாறுமில்லைன்னுறான்.செகண்ட் ஹாண்ல வித்தாலும் நல்ல ரேட் போகும்னு சொன்னான்.உண்மையா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல உங்க புது போனை பற்றியும் எழுதுங்க தல,தவிர மாக் ப்ராடக்ட் அமெரிக்கால தான் ரொம்ப விலைகுறைவாமே?அதை ரெண்டு வாங்கிட்டு வர்ரது?என்னது இந்தியாக்கே வரலையா,அப்போ ரைட்டு,ஒண்ணுமில்ல மயில் கேட்க சொன்னாரு,ஹஹஹ

ஹாலிவுட் பாலா சொன்னது…

//இடம் அடைக்குதுன்னு நைசா தூக்கி ஓரமா வச்சிட்டேன்.ஹி//

பாருங்க... நீங்களும் நம்மாளுதான். அப்ப நாம மேக் வாங்கி என்னத் தல பண்ணப் போறோம்?? :)

நானும் IPad, ITouch -ன்னு அநியாய காசு போட்டு வாங்கியிருக்கேன். 120gb MP3 player எல்லாம் 60-70 டாலருக்கு விக்கும் போது...

IPad Nano 8 GB ஐ 200 டாலர் கொடுத்து வாங்கினேன். அப்புறம் அதை கார் ஸ்டீரியோவில் கனெக்ட் பண்ண ஆக்ஸுலரி கேபிள் இன்னொரு 30 டாலர்.

---

ஆனா.. என்னோட HTC EVO 4G போனை கனெக்ட் பண்ண.. ஒரு 3.5 கேபிள் மட்டும்தான்.. அதுவும் ஆஃபீஸில் குப்பையில் கடந்தததை எடுத்து கனெக்ட் பண்ணினேன்.

எழவு அது ஒன்னே... அத்தனையும் பண்ணிடுது.

இதை... IPhone-ஆல் பண்ண முடியுமா?? ஆப்பிளை பொருத்த வரைக்கும்.. அத்தனையும் காசு தல.

IPhone 4 ஆண்டனாவை தப்பா டிஸைன் பண்ணிட்டு, அதுக்கு இன்னொரு பம்பர் செஞ்சி அதை தனியா 30 டால்ருக்கு வித்தவங்க தல இவங்க.

அப்புறம் எல்லாரும் கம்ப்ளெய்ண்ட் பண்ணும் போது... பிரச்சனையை சரி பண்ணாம... ஸ்டீவ் ஜாப்.... தோ பாரு, நோக்கியால பிரச்சனை, தோ பாரு மோட்டரோலா-ல பிரச்சனைன்னு வீடியோ எடுத்து போட்டுகிட்டு இருக்காரு.

இப்பதான் பம்பரை ஃப்ரியா கொடுக்கறதா ஒத்துகிட்டாங்க.

ஆப்பிள் = சோனி!!!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல இந்த மேல் விபரமெல்லாம் எனக்கு தெரியாது தல,அப்போ ஹெச்டிசி தூள்னு சொல்றீங்க தல,மகிழ்ச்சி.
ஆனால் அதில் டிஸ்ப்ளே போனால் மாற்றமுடியல தல.போனையே அப்சலூட் பண்ண்வேண்டியதுதான்.
இப்புடிதான் என் நண்பர்கள் இருவரின் போன்,மற்றும் கலையரசனைன் போனும் டிஸ்ப்ளே போச்சு.

ஆனால் பாருங்க புகழ்ச்சியில்ல தல்,என இன்னொரு நண்பனின் ஐபோன் கீழே விழுந்து டிஸ்ப்ளே கார் கண்ணாடி போல வீறல்கள் விட்டும் அருமையாக வேலைசெய்தது,அந்த கவாலிட்டிக்கு தான் அடிமை.

நீங்கள் சொல்வது போல இவர்கள் சோனியைப்போலவே எந்த ஆக்சசரீசும் தரமாட்டேங்கிறாங்க,ஐபாட் ரேடியோவுக்கு ஆண்டனா தனியா காசுகுடுத்து வாங்கி இணைக்கனும்,ஒரு கவர் கூட தரமாட்டாங்க.அதே போல ஏர்போன் போனுக்கு இப்போ எல்லாம் பஞ்சுகூட இங்கு தரமாட்டேங்கிறாங்க தல.

ஹாலிவுட் பாலா சொன்னது…

//தவிர மாக் ப்ராடக்ட் அமெரிக்கால தான் ரொம்ப விலைகுறைவாமே?//


யார் கனவில்-ன்னு சொல்லாம விட்டுட்டீங்களே?? :)

======

//,ஒருத்தன் 6 வருஷமா மாக் புக் வச்சிருக்கேன்னு மார்தட்டறான்,ஒரு கோளாறுமில்லைன்னுறான்.செகண்ட் ஹாண்ல வித்தாலும் நல்ல ரேட் போகும்னு சொன்னான்.உண்மையா?//

Mac Fanboy -ன்னா அப்படித்தான் சொல்லுவாங்க. என்னைக்காவது அவர் டிஸ்ப்ளே காணாம போனா அப்பத் தெரியும் !! :)

வினோத்கெளதம் சொன்னது…

நான் இது வாங்கினேன் அது வச்சிருக்கேன் என்று சொல்லி தன்னுடுய பணக்கார திமிரை வெளிப்படையாக காட்டும் அமெரிக்க விசுவாசி ஹாலி பாலா ஒழிக..

ஹாலிவுட் பாலா சொன்னது…

//அதில் டிஸ்ப்ளே போனால் மாற்றமுடியல தல.போனையே அப்சலூட் பண்ண்வேண்டியதுதான்.
இப்புடிதான் என் நண்பர்கள் இருவரின் போன்,மற்றும் கலையரசனைன் போனும் டிஸ்ப்ளே போச்சு.//

இந்த மேட்டரில் இன்னும் அனுபவம் இல்லைங்க கார்த்திக்கேயன். அப்படியே விழுந்தாலும் இன்ஸூரன்ஸ் இருக்கு. அதையும் கம்பெனி கட்டுது. போனமா போனை மாத்தினோமான்னு வந்துடலாம்.

கீழே விழுந்து வேலை செய்யுறது, செய்யததுக்கு எல்லாம்... ப்ராண்ட் நேம் எங்கிங்க வந்துச்சி????

ஆப்பிளோட மொத்த பார்ட்ஸும் சீனாவில்தான் உற்பத்தியும்/அஸம்பிளும் ஆகுது. HTC- கொரியான்னு நினைக்கிறேன்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

//நான் இது வாங்கினேன் அது வச்சிருக்கேன் என்று சொல்லி தன்னுடுய பணக்கார திமிரை வெளிப்படையாக காட்டும் அமெரிக்க விசுவாசி ஹாலி பாலா ஒழிக.//

யாருப்பா இந்த கொசு நடுவுல?? :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

//,ஒருத்தன் 6 வருஷமா மாக் புக் வச்சிருக்கேன்னு மார்தட்டறான்,ஒரு கோளாறுமில்லைன்னுறான்.செகண்ட் ஹாண்ல வித்தாலும் நல்ல ரேட் போகும்னு சொன்னான்.உண்மையா?//

தல,நெட்ல தேடிப்பாத்து உறுதியும் செஞ்சேன்.

iphone 4 16GB Black = 5500 AED (1506 US$)
iphone 4 32GB Black = 6500 AED (1780 US$)
இது இங்கத்திய ரேட்டு
======

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அய்யிய்ய சே என்னய்யா வினோத்து நீயும் கருத்து சொல்ல மாட்றே,சொல்ற ஆளையும் குலைச்சி,சார் கலைச்சி விடுற!!!!!!!அய்யிய்ய

ஹாலிவுட் பாலா சொன்னது…

//அப்போ ஹெச்டிசி தூள்னு சொல்றீங்க தல,மகிழ்ச்சி.//

அப்படியில்லைங்க. நான் எதிர்பார்க்கறது.. வெண்டார் ஓரியண்டட் இல்லாத இன்புட்/அவுட்புட் விசயங்கள்.

XBOX 360 வாங்காததுக்கு இது ஒரு காரணம். ஆப்பிள் பர்ச்சேஸ் என் கண்ணை திறந்துடுச்சி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

Apple iPhone 4 - 32GB - black
$299.00

தல இது அங்கத்திய ரேட்டு,தப்பிக்க முடியாது,வினோத் மேரேஜுக்கு போவீங்கல்ல?:)))

ஹாலிவுட் பாலா சொன்னது…

//iphone 4 16GB Black = 5500 AED (1506 US$)
iphone 4 32GB Black = 6500 AED (1780 US$)//

ஹோலி மோலி..

ஒருவேளை ஷேக்குங்க மட்டும்தான் உங்க ஊர்ல இருக்காங்கன்னு ஜாப்ஸ் நெனச்சிகிட்டாரோ?

ஹாலிவுட் பாலா சொன்னது…

//வினோத் மேரேஜுக்கு போவீங்கல்ல?:))//

இது என்ன புதுக்கதை??

நெசமா வினோத்?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

http://reviews.cnet.com/smartphones/apple-iphone-4-32gb/4014-6452_7-34117595.html?tag=contentBody;similarProds

இது தான் தல மேலே உள்ள அமெரிக்கன் ரேட்டு விளம்பரம்.இது உண்மையா?இத்தனை சீப்பாகவா கிடைக்கும்?
1780 US$டாலர் எங்கே? 290US$டாலர் எங்கே?

வினோத்கெளதம் சொன்னது…

யோவ் என் கல்யாணம் என்ன Jacksonvilleலையா நடக்கபோகுது.. !!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

http://www.dubai-mobiles.net/iphone.htm

தல ஆமாம் ஐபோன் வாங்கறவங்க எல்லாம் ஷேக்குன்னு நினைச்சிட்டானுங்க போல,இந்த லின்கை பாருங்க!!

ஹாலிவுட் பாலா சொன்னது…

//Apple iPhone 4 - 32GB - black
$299.00//

நீங்க சொல்லுற காசு, AT&T கூட 2 வருச அக்ரிமெட் போட்டா கிடைக்கற டீல்.

EBay-யில் பாருங்க. கிட்டத்தட்ட உங்க ஊர் காசுதான்.

http://catalog.ebay.com/Apple-iphone-4-Black-32GB-Unlocked-/84307963?_fifpts=1&_pcatid=11&_trksid=p3286.c0.m271

வினோத்கெளதம் சொன்னது…

ஆமாம் தல கூடிய விரைவில்..Oct11க்கு இன்னும் எத்தனை நாள்.. !!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

யோவ் வினோத்,
என்னையா நீயி,அவரை இதை சாக்கா வச்சி வெகேஷன் அனுப்ப்லாம்னு பார்த்தா,இப்புடி சொல்லி வ்ரவேணாம்னுபூட்ட,தல நீங்க வரவேணாமாம்.
வினோத் ஒழிக,ஒழிக

வினோத்கெளதம் சொன்னது…

அப்புறம் FB Profile Pic(Holly Baaly) அருமை..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல அப்புடியா?
புஸ்ஸா.
சரி தல,எத்தனை ரேட்டு?வித்தியாசம்,30 டாலராவது இருக்குமா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வினோத்து,
அப்புடிதான்,
கண்டிப்பா அக்டோபர் 11 கடலூர்ல இருப்பார்,கிஷோர்கிட்டயும் சொல்லிடு

வினோத்கெளதம் சொன்னது…

அவரு வந்த நல்லா தான் இருக்கும்..இருந்தாலும் நான் அங்க போன அதை விட நல்ல இருக்கும்..
தல வரிங்கள ஊருக்கு எதாச்சும் திட்டம்..

ஹாலிவுட் பாலா சொன்னது…

இதை Engagenet வெப்சைட்டில் பார்ட் பார்ட்டா பிரிச்சிப் பார்த்தா மொத்தமா $160 சொச்சம் ரூபாதான் மேனுஃபேக்சரிங்கு செலவாகியிருக்காம்.

ஐபோன் அஸம்பிள் பண்ணும் சீன தொழிற்சாலையில், அந்த தொழிலாளிகளின் நிலையை எல்லாரும் படம் பிடிச்சிக் காட்டினா...

உடனே நம்மாளு.. “அந்த தொழிற்சாலையில் ஸ்விமிங் பூல் இருக்கு..., சைக்கில் ஸ்டேண்ட் இருக்கு”-ன்னு அறிக்கை விடுறாரு.

வினோத்கெளதம் சொன்னது…

Small correction..Not in cuddalore..சிதம்பரத்துல இருந்தாலும் எல்லாம் பக்கம் தான்..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

Apple Iphone 4 16GB "BLACK"...
tuan9876(500)99.1%
New

$839.99
Free shipping
Save 15%*
Apple iphone 4 Black (32GB)...
chips_n_cats(3,460)100%
New

$920.00
+$6.95
Save 7%*
Brand New Apple iphone 4 4G...
candfstore(2,361)99.3%
New

$949.00
Free shipping

தல அப்போ கூட யுஎஸ் ரேட்டு தான் க்ரேட்டு

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

சிதம்பரமா?
யோவ் கல்யாணம் சிதம்பரத்துல கட்டுணா பத்தாது,சிதம்பர ஆட்சி தான் இருக்கொணும்,கவனம் இருக்கட்டும்.சரியா!!!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல நம்மாளுன்னா?யாரு தல,
ஒபாமாவா?இல்ல கே.பாக்யராஜா?ஹஹஹ்ஹஹஹ

வினோத்கெளதம் சொன்னது…

கடவுளே எங்கிருந்துப்பா யோசிக்கிறிங்க இபடியெல்லாம் பேச..
சிதம்பர ஆட்சி கொஞ்சம் சந்தேகம் தான்..

ஹாலிவுட் பாலா சொன்னது…

//ஆமாம் தல கூடிய விரைவில்..Oct11க்கு இன்னும் எத்தனை நாள்.. !!//

அடப்பாவி சொல்லவே இல்ல??

வாழ்த்துகள் வினோத்!!!!!!! :) அதான் ப்ளாக் அப்பப்ப காணாம போகுதா?? ;) :)

ஊருக்கு வந்தா, கம்பெனி மாத்தியிருக்கறனால எம்பஸி போகனும். அங்கயிருந்து பாஸ்போர்ட் எத்தனை நாள்ல திரும்பி வரும்னு தெரியாதனால சரியா எவ்ளோ நாள் லீவ் எடுக்கணும்னு தெரியலை.

அதான் தள்ளி போட்டுகிட்டு இருக்கேன். அக்டோபரில் வாய்ப்பில்லை வினோத்!

அதனால என்ன... உங்க ஊர்ல வந்து தொல்லை பண்ணுறேன்.

இல்லைன்னா ஹனிமூனுக்கு டிஸ்னி வாங்க. நம்ம வீட்டுல இருந்து ரொம்ப பக்கம். :)

வினோத்கெளதம் சொன்னது…

குரு என்ன வோட்டு ரொம்ப கம்மியா இருக்கே..எப்போதும்போல ஒரு நாலஞ்சு கள்ள வோட்டு குத்தவா..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

யோவ் வினோத்து கேட்டியா?!!!
டிஸ்னி போவியாம்யா!!!
கப்புனு புடிச்சிகினு போய்டு வந்துடு.

ஹாலிவுட் பாலா சொன்னது…

//சிதம்பர ஆட்சி தான் இருக்கொணும்,//

ஆணிய பார்ப்பனீய பாஸிஸ கார்த்திக்கேயன். வாழ்க வாழ்க.

ஹாலிவுட் பாலா சொன்னது…

///சிதம்பர ஆட்சி கொஞ்சம் சந்தேகம் தான்.///

சந்தேகமே வேணாம்!!!!!!!!!!!!!!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

யோவ் வினோத்து,
என்னவோ நான் கேக்காமலே ஓட்டு போடுறாமாதிரி,இதுல கள்ளவோட்டு வேறயா? பாருய்யா இத்தனைக்கும் தமிழிஷ்ல நான் 55 பேரை ஃபாலோ பண்ணி,ஆபீஸ் வேலை நடுவிலும் அத்துனை பேருக்கும் ஓட்டு போடுறேன்.இதுவரை நான் 1000க்கும் மேலே ஓட்டு போட்டேன்னு பேசிக்கறாங்க,:))நல்ல ஓட்டுதான்

ஹாலிவுட் பாலா சொன்னது…

நௌ எச்சூச்ச்மி..!! நான் திரும்ப அந்த முக்கியமான மேட்டருக்கு போகனும். சாரி ஃபார் த டிஸ்டபிங் கும்மி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல போய்ட்டுவாங்க

வினோத்கெளதம் சொன்னது…

//அடப்பாவி சொல்லவே இல்ல?//

கொஞ்ச நாள் போனதுக்கு பிறகு சொல்லலாம் என்றிருந்தேன்..

//அதான் ப்ளாக் அப்பப்ப காணாம போகுதா//

Exactly Rite..

தல வர முயற்சி பண்ணுங்க..இல்லை கண்டிப்பா சந்திப்போம் பிரிதொரு நாளில்..

King Viswa சொன்னது…

முதல்ல ஏதோ டெக்னிகல் பதிவு போல ஆரம்பித்து பின்னர் கமெண்ட்டுகளில் ஷேர் மார்கெட் போல இருக்கு. ஒன்னும் புரியல.

இருந்தாலும் ஒரு கமெண்ட்டு போட்டு வைப்போம் - நான் ஹாலிபாலாவை வழி மொழிகிறேன்.

கோபிநாத் சொன்னது…

தல படிச்சிட்டேன்....ஒரு நன்னி ;))

கொழந்த சொன்னது…

ஆப்பிள் நுண்ணிய வேலைப்படுகளுக்காக சின்னப் பசங்களை வெச்சு வேலை வாங்குனதா படிச்சேன். உங்களுக்கு அது பற்றி தெரிஞ்சா சொல்லுங்களேன்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கிங் விஸ்வா
வாங்க நண்பா,ஹாலிபாலி பக்கமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்
என்னது டெக்னிகல் பதிவாஆஆஆஆஆஆஆஆ?
என்னது ஷேர் மார்க்கெட்டாஆஆஆஆஆஅ?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கோபிநாத்,
அன்புத்தம்பி உன் திறமை ஒருநாள் ஊர் அறியும்,உன் கூச்சம் ஒழி:)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கொழந்த,
நண்பா,
யோசிக்க வேண்டிய விஷயம்,
ஆனால்,இப்படியும் சொல்லலாம்,வளர்ச்சி பிடிக்காட்டி மனிசனுக்கு மனிஷனே பில்லி சூனியம் வைக்குறான்[சன் டிவில அதுதானே அதிகம் காட்டுறாங்க]ஏன் ஆப்பிளின் வளர்ச்சி பிடிக்காத போட்டியாளர்கள் இதை கொளுத்திபோடகூடாது,இது என் கருத்து தான்,இது பொய்யாகவும் இருக்கலாம்,எல்லோருக்கும் சாட்சி மனசாட்சிதான்.அது ஒருநாள் தவறுசெய்பவனை செருப்பால் அடிக்கும்.குழந்தை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காகவே விற்பனை வரியுடன் சேர்த்து 2% எஜுகேஷனல் செஸ் என்று ஒரு வரியும் போடுவார்கள்,இது கேவலம் திரைப்பட டிக்கெட்டுடன் , எந்த ஒரு ப்ரொவிஷன் பில்லுடன் கூட சேர்த்து போடப்படும்,
இந்த கொழுத்த அரசியல்வாதிகள் மக்கள் ஏழைகளின் கல்விக்கு தரப்படும் அந்த தொகையையும் கூட தின்று ஏப்பம் விடுவது எந்த விதத்தில் நியாயம்?வயிறு எரிகிறது
http://timesofindia.indiatimes.com/india/Education-cess-Are-govt-schools-any-better-now/articleshow/1070939.cms
அவசியம் படிங்க இதை

பெயரில்லா சொன்னது…

* இன்பா
* நதியானவள்
* சகோதரி
* ஃபஹீமா ஜஹான்
* பாடினியார்
* கையளவு மொழி
* மங்கயர்கேசரி
* வி.வி.கணேசநாதன்
* மணிதர்ஷா
* நம்தோழி
* சாந்தி ரமேஷ்
* இதழ்கள்
* எம்.ஏ.சுசீலா
* எதிர் வன்முறை
* குட்டி ரேவதி
* பெண்நிலை
* கவின் மலர்
* புதிய பெண்ணியம்
* மீனா கந்தசாமி
* கறுப்பி
* மு.வி.நந்தினி
* பெட்டை
* பெரியார்
* சினேகிதி
* சந்திரவதனா
* முல்லை மண்
* பெண்கள்
* ஊடறு
* லீனா மணிமேகலை
* நளாயினி
* தூமை
* பெண் வெளி
* பெருந்தேவி
* சங்கமித்ரா
* தமிழச்சி
* புதியமாதவி
* சக்தி
* திலகபாமா
* கருத்து
* நிரா
* மாதுமை
* நிவேதா
* ஆழியாள்
* கொற்றவை
இவர்களையும் படிங்க சார்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அனானி,
நீங்க ஆணா இல்ல பெண்ணா?
அதுவும் தவிர இவங்கல்லாம் யார்?என்னை ஏன் படிக்க சொல்றீங்க்ன்னு தெரிஞ்சிக்கலாமா?இதில் லின்கே இல்லையே?எல்லார் பதிவையும் தேடிப்படிக்க ஒரு வருஷம் எடுக்கும்போலவே?

ஹாலிவுட் பாலா சொன்னது…

//அனானி,
நீங்க ஆணா இல்ல பெண்ணா?//

உங்க அறிவுத்தேடலுக்கு ஒரு அளவேயில்லையா??

ஹாலிவுட் பாலா சொன்னது…

//* பெரியார்//

இவுரு ரொம்ப வருசம் முன்னாடியே செத்துப் போய்ட்டாருங்க. இன்னுமா பதிவெழுதிகிட்டு இருக்காரு?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல ,
இது ஒங்க வேலையா?
அப்போவே நினைச்சேன்.பெண்னியம் ஒழிகன்னு கோஷம் போடும்போதே,படிக்கிரேன் தல,ஆனா எப்போ தெரியாது,

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல,வெரி சாரி நீங்க இல்லியா?அயகோ ஏன் எனக்கு இதை யாரோ போடனும்?வொய் ஆங்ரி?கொலவெறி?

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

வழக்கப்படி, ஆடிமுடிச்சி, எல்லாரும் அமைதியானப்புறம் நான் வந்திருக்கேன். இந்த வேலை தான் காரணம்.. :-(

இதுனால, நம்ம விஸ்வா பதிவுக்குக் கூட போக முடியல. . எனிவே, இப்ப அங்க போக பாக்குறேன்..

நம்ம அனானி அடிச்ச காப்பி, இந்த சைட்லருந்து - http://www.penniyam.com/

இதுல தான் அந்த பெரிய லிஸ்ட்டு இருக்கு. அப்புடியே. வரிசை மாறாமல்.

அனேகமா அனானி ஒரு பெண்? நண்பா.. முதல்முறையா உங்க சைட்ல (18 ப்ளஸ்ஸையும் மீறி) ஒரு பெண், அனானியா வந்து பின்னூட்டம் போட்டுருக்காங்க ;-)

இதுக்கே நீங்க ட்ரீட் வெக்கணும் ;-)

மத்தபடி, பெண்ணியவாதிகளுக்கு எதிரா ஒரு வார்த்தை கூட எழுதிராதீங்க.. அப்புறம், உங்க வீட்டுக்கு, குரியர்ல பார்சல் வரும்.. என்னது? எதுவா? நம்பர் 2 !!

King Viswa சொன்னது…

//* பெரியார்//

இவுரு ரொம்ப வருசம் முன்னாடியே செத்துப் போய்ட்டாருங்க.


என்னாது? பெரியார் செத்துட்டாரா?

King Viswa சொன்னது…

//இதுக்கே நீங்க ட்ரீட் வெக்கணும்//

கொடுமைஸ் ஆப் இந்தியா. எனக்கும் டிரீட் வேணும். ஹும்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@என்னாது பெரியார் டைடா?
ஓ மை காட்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ட்ரீட் தான, வைக்கிறேன்,நண்பா,
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்,எல்லா ட்ரீட்டும் வைக்கிறேன்,இது மயிலின் வேலையோ?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அந்த ஆளுக்கு தான் எலக்கியவாதி சகவாசமதிகம்,இத்தனை பேரையும் நான் ப்ளாக்ரோல்ல சேர்க்கணும்னு மிரட்டாம போனாங்களே,பயந்து வருது.அதுல பேரு எல்லாம் கொஞ்சம் டெரரா வேற இருக்கு,யாம் அப்பாவி

King Viswa சொன்னது…

//இது மயிலின் வேலையோ?//

ஏங்க, மயிலு எவ்வளோவு நல்லவரு, அவரப் போயி தப்பா பேசுறீங்களே? அவரு ரொம்ப அப்பாவீங்க.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அய்யிய்ய நம்பர் 2 பார்சல் வருமா?மெய்யாலுமா?நான் அமீரகத்துல இக்கேன்,இங்கே பார்சல் போட காஸ்ட்லியாவுமே நண்பா,

King Viswa சொன்னது…

//* பெரியார்//

இவுரு ரொம்ப வருசம் முன்னாடியே செத்துப் போய்ட்டாருங்க.


என்னாது? பெரியார் செத்துட்டாரா?//

இந்த கருத்தை நான் எந்த அர்த்தத்தில் கூறினேன் என்றால் அவரின் கருத்துக்களால் அவர் இன்னமும் நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக்கும்போது அவரை எப்படி இறந்துவிட்டார் என்று கூறலாம்? (எப்பா, தேவை இல்லாத அரசியலில் இருந்து மீ தி எஸ்கேப்பு)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அடடா,நண்பர் விஸ்வா,எப்போதிருந்து மயில் நல்லவரானாரு?அவர் நாலனாவுக்கு நல்லவர் என்றல்லவா நானும் கருந்தேளும் நினைத்தோம்?நண்பா சரியா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@விஸ்வா,
ஆரோக்கியமான கருத்துக்கும் பூடகமான பதிலுக்கும் நன்றிகள் உரித்தாகுக

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@அனானி,
நீங்க எதுக்கு என்னை படிக்க சொன்னீங்களோ?தெரியாது,என்னால படிக்க எல்லாம் முடியாது ஆனால் தமிலிஷில் ஃபாலோவராகி ஓட்டு போடுகிறேன்,எதோ என்னால் பெண்ணியத்துக்கு ஆன உதவி.ஜோக்ஸ் அபார்ட் நான் பெண்களை மதிப்பவன்

King Viswa சொன்னது…

//விஸ்வா,எப்போதிருந்து மயில் நல்லவரானாரு//

நல்லவர் = மயில் ராவணன்.

மயில் ராவணன் = நல்லவர்

நன்றி - ஏழாம் வகுப்பு துணைப்பாடநூல், தமிழக அரசு. பக்கம் 69.

King Viswa சொன்னது…

ரொம்ப நாள் கழித்து இன்று நிரம்பவும் டையர்டாக இருப்பதால், கும்மிக்கு ஒரு குட் பை.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

//நன்றி - ஏழாம் வகுப்பு துணைப்பாடநூல், தமிழக அரசு. பக்கம் 69.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் அழுவேன்,எனக்கு இடமில்லையா?நான் டீடெய்லில்?ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

K.MURALI சொன்னது…

Just go and check the following link for iPhone.

http://www.aido.com/mobile-phones?StartRow=11&dKey=Section&focus=Article&PG=2&dFilter=all&dFilterCode=0&ccs=309

iPhone 4 32GB - AED 4810 ($1,299.95)

Murali.K

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

என்னங்க கார்த்திகேயன்.. ஒரு பெரிய கும்மியே நடக்குது இங்க :)

நல்ல பகிர்வுங்க. நன்றி.

யாசவி சொன்னது…

கீதப்பிரியன்,

நான் பல நாட்களாக ஆப்பிள் போன் தான் வைத்துள்ளேன். அதில் உள்ள ஒரே பிரச்சினை Compatibility மட்டுமே. மற்றபடி அதனுடைய தரம் அருமையாக உள்ளது.

ஐபோன் 4 பற்றி தெரியாது. நான் 3ஜிஎஸ் நன்றாக இருக்கிறது.

ஆனால் மேக் பீசி வாங்குவது என்பது ஹாலி பாலா சொன்னது போல சொ.செ.சூ.

சிங்கையில் 1100$.

யாசவி சொன்னது…

அந்த வரையும் அப்ளிகேஷனைப்பற்றிய விவரம் கொடுத்து இருக்கலாம்.

R.Kamal சொன்னது…

you can try using wacom tablet karthi, intuos 4 is the recent arrival. if you prefer drawing directly on screen try cintiq...but very costly i believe.

about ipad check out this article by Tom Richmond.
http://www.tomrichmond.com/blog/category/its-all-geek-to-me/

ILLUMINATI சொன்னது…

அங்க ஒருத்தர் கவிதை எழுதுறேன்னு அட்டகாசம் பண்றாரு.இங்கன இது..
என்னையா நடக்குது இங்க? :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கே.முரளி,
வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி நண்பரே.

@செந்தில்வேலன்
வாங்க நண்பரே,நீங்களும் கும்மியில் கலந்து தகவல்களை கொட்டுங்க

@யாசவி,
ஆமாம் நண்பரே,கம்பேடிபிலிட்ய் ப்லூடூத் இருந்தால் அருமையாக இருக்கும்,பாட்கேஸ்டில் கிடைக்கும் 1000க்கும் மேற்பட்ட இலவச அப்ளிகேஷன்கள் அபாரம்,உதாரணம் காம்பஸ்,டார்ச் லைட், போன்றவை

நீங்கள் கேட்ட அந்த அப்ளிகேஷன் பற்றிய விபரமும் சேர்த்துவிட்டேன்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஆர்.கமல்
நண்பரே,வாங்க,வருகைக்கும் அருமையான தகவலுக்கும் நன்றி,தளம் பார்த்தேன்,அருமை.கலக்குறாங்க.

@இல்யுமினாட்டி.
வாங்க நண்பா
கலக்குறார் தல,அழைக்கிறார் தல,
தோழர்களே அரிமாவாய் திரண்டு வாருங்கள்,வாழ்க ஹாலிபாலா,வளர்க அவர் புகழ்

கண்ணா.. சொன்னது…

தல .. கும்மி அட்டகாசம்

சாரு எழுதின இன்செப்ஷன் விமர்சனமும் எதிர்வினையும் படிச்சீங்களா.....???

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கண்ணா,
இணையத்தில் படித்த விமர்சனத்திலேயே மிக அழகான தேர்ந்த முதிர்ச்சியான விமர்சனம்.படம் பார்த்தால் இதை வைத்தே ஒவ்வொரு அணுவாக ரசித்து பார்க்க வேண்டும் என தோன்றுகிறது,சாரு இதுபோல நல்ல ஆக்கங்களை வழங்கலாம்.இதைதான் நிறையபேர் எதிர்பார்க்கின்றனர்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கண்ணா,
நண்பா ,
எதிர்வினையென்று எதை சொல்கிறீர்கள் ? நான் கனவுகளின் நடனம் என்னும் உயிர்மையில் வெளிவந்த கட்டுரையைதான் படித்தேன்.அக்கட்டுரைக்கு எதிர்வினையா?ஏன்?

கண்ணா.. சொன்னது…

இல்ல தல... இப்போ லேட்டஸ்டா

http://charuonline.com/blog/?p=868

ஜோதிஜி சொன்னது…

மன அழுக்குகளை இங்கே கக்குகிறார்கள்,அத்தகைய பின்னூட்டங்களுக்கு அதே ரீதியாக பதில் சொல்லப்படும்.

இந்த பதிவும் பின்னோட்டங்களும் ரொம்ப அற்புதம்.

மேலே உள்ளவர்களுக்கு பதில் அளிப்பது தேவையா

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கண்ணா
படிச்சேன்,நல்லா குளிரகுளிர பாராட்டியிருக்கார்,இதுபோயா எதிர்வினை?

பின்னோக்கி சொன்னது…

கொஞ்சம் லேட்டா வந்த, கமெண்ட் போடுறத்துக்குள்ள, எவ்வளவு பக்கம் கீழே போக வேண்டி இருக்கு :)

ஐபேட்ல இந்த பெயிண்டிங் ரொம்ப நல்லாயிருக்கு. என்ன விலை தான் ரொம்ப அதிகமா இருக்குங்க. 25000 குடுத்து எங்க வாங்குறது

ஹாலிவுட் பாலா சொன்னது…

//மன அழுக்குகளை இங்கே கக்குகிறார்கள்,அத்தகைய பின்னூட்டங்களுக்கு அதே ரீதியாக பதில் சொல்லப்படும்.

இந்த பதிவும் பின்னோட்டங்களும் ரொம்ப அற்புதம்.

மேலே உள்ளவர்களுக்கு பதில் அளிப்பது தேவையா///

தல... வாட் ஹேப்பண்ட் தல??? நான் இல்லாதப்ப எதுனா நடந்துடுச்சா??

ஹாலிவுட் பாலா சொன்னது…

//工作,是愛的具體化~~~~努力吧!............................................................//

கூடிய சீக்கிரம்.. இதுக்கு ஒரு கவித எழுதனும்.

தல.. இந்த சைனீஸ் கமெண்ட்டை எங்கயும் வச்சிக்காதீங்க. உடனே அழிச்சிடுங்க.

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஸ்வேதா வந்து கமெண்ட் போடுற வரைக்கும்.. ஸ்லீப் மோடுல இருக்கலாம்னு டிஸைட் பண்ணியிருக்கேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜோதிஜி தலைவரே,
வருகைக்கும் பாராட்டியமைக்கும் நன்றிகள் பல,ஹாலிபாலிக்கு தான் எல்லா புகழும்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பின்னோக்கி,
வாங்க நண்பரே நலமா?
என்னங்கபண்ணறது,இனி பதிவு போட்டவுடனே உங்களுக்கு மெயில் அனுப்பறேன்,இருங்க,ஹிஹி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல,
ஜோதிஜி எதுக்கு அப்படி போட்டார்னு எனக்கும் தெரியலை?எனக்கென்னவோ அனானி கமெண்ட் போடுறது நமக்கு தெரிஞ்சவங்களோன்னு டவுட்டாருக்கு,அதுதான் இப்போ தமிலிஷ்ல ஃபாலோவராகி ஓட்டு போடும் வேலையை செய்யிறேன்,யாரும் காண்டுல பின்னூட்டமிடமாட்டாங்கல்ல?:)))

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிபாலி
தல,என்னங்க தல,நல்லா எழுதியிருந்தாரே தல?!!
சத்தியமா எனக்கு மிகவும் பிடிச்சது,போனவாரம் அதே சாரு யாரோ ஒரு வாசகரை அசிங்கமாய் திட்டி பதிவிட்டு தூக்கினார் என படித்து ,இனி இவர் இப்படிதான் எழுதுவார் என இருந்தேன்,ஆனால் சப்ஸ்க்ரிப்ஷனில் இதை படித்தேன்,பிரமித்தேன்.இதுபோல வித்தியாசமாக எழுதலாம் அவர்,

ஜெய் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலி பாலி
தல உங்க சூட்சுமமான கவிதய என்னால புரிஞ்சிக்க முடியலங்க,ரொம்ப டஃப் மெட்டீரியல்,இதை பூக்கோவின் கரும் இலக்கியத்துடன் ஒப்பிட சொல்லி ந்யூபோர்ட் யுனிவர்சிடிக்கு அனுப்பிருக்கேன்:)))

ஜெய் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜெய் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல எனக்கு செம பசி,நான் போய் சாப்பிட்டு வந்து கும்மியை கண்டிநியூ பண்ணறேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஹலோ,நண்பா,கமெண்ட் திறந்துதானே இருக்கு.
நான் போய்ட்டு 4 இட்லிய பிச்சி போட்டுட்டு வரேன்னு சொல்றேன்.:)))

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

இந்த பிரச்சனக்காக தான் நாங்க இன்செப்ஷனுக்கு உங்களை எழுத சொல்லிக்கேட்டோம்,இப்போ மட்டும் நீங்க அதை எழுதுனா எவ்வளோ நல்லா இருக்கும்,எங்களுக்கு ஒரு பதிவு கிடைக்குமல?

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

கார்த்தி,

நீங்கள் ஐய்பேட்டில் பார்த்த ஓவியங்கள் "Brushes" எனும் மென்பொருள் பயன்படுத்தி வரைந்தது. தொன்நூருகளிலேயே "Painter" எனும் மென்பொருள் விண்டோஸ் மற்றும் மாக்கில் வந்துவிட்டது. இதை தான் ஓவியர்கள் பெரும்பாலும் உபயோகிப்பார்கள். கிராபிக்ஸ் டாப்லெட் வைத்து அசலான நீர்வண்ணம், எண்ணெய் வண்ண ஓவியங்கள் போலவே வரையலாம். இந்த "Brushes" "Painter" செய்வதில் 5% கூட செய்யாது (உபயோகப்படுத்தி பார்த்து தான் சொல்கிறேன்). ஐய்பேட் வருங்காலத்தில் முக்கிய பொழுது போக்கு சாதனமாக விளங்கும் ஆனால் அதில் முழுமையான தரமான படைப்பை தர இயலாது என்பது என கருத்து.

மாக் vs விண்டோஸ்
போடோஷாப் முதலில் மாக்கில் தான் எழுதப்பட்டது அன்றிலிருந்து ஓவியர்கள், வரைகலை நிபுணர்கள், இசை அமைப்பாளர்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. மாக்கை ரகுமான் எப்படி பயன் படுத்துகிறார் என்று விளக்கமாக இங்கே சொல்லியுள்ளார்:
http://www.apple.com/logicstudio/in-action/arrahman/

ஆப்பிளில் செய்வதை முழுவதுமாக விண்டோஸ் மற்றும் லினக்ஸிலும் செய்யலாம். ஆப்பிளின் "Minimalist" வடிவமைப்பு தத்துவம் மக்களை எளிதாக கவர்கிறது கூகிள் மாதிரி. சமிபத்தில் மாக்புக்ஸ் பிரபலமடைவதற்கு காரணம் இன்டெல் பிராசசர் ஆப்பிள் உபயோகப்படுத்த அரம்பித்ததுதான்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, அடிப்படை ஓவியப் பயிற்சி மிக முக்கியம். வரையத் தெரிந்தால் பென்சில் போதும் ஊடுகட்ட, தொழில்நுட்பப் புரட்சியில் அடிப்படை பயிற்சி காலாவதி ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

ஆப்பிளில் நிறைய குறைகளும் உண்டு, உதாரணத்திற்கு ஐப்பாடில் "Equalizer" கிடையாது அதனால் ஒலிவிரும்பிகள் (Audiophiles#!) அதிகம் உபயோகிக்கமாட்டர்கள். அதிக விலை, ஸ்டீவ் ஜாப்சின் பிடிவாதமான போக்கு இதையெல்லாம் மீறி ஆப்பிள் நிறுவனம் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@மீனாட்சி சுந்தரம்.
நண்பரே நலம்தானே?
வழக்கம்போல தகவல் செரிந்த பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
மினிமலைஸ்ட் டிசைன்,கலக்கலான விஷயம் சொன்னீங்க அது உண்மை,எல்ல்லொரையும் கவர்வதற்கு.

தவிர தல நான் வியப்பது இந்த டச் சமாசாரத்துக்கு மட்டுமே,நான் டேப்ளட் பிஸ்யில் பேனா கொண்டும் விரல் கொண்டும் வரைந்திருக்கிறேன் ஆனால் இந்த அளவுக்கு க்ளைட் ஆகாது,இப்போது உள்ள சேம்சங்,எல்ஜி,எஹ்டிசி,ப்ளாக்பெர்ரி டச் எதுவும் ஐபோனுக்கு அருகே கூட வரமுடியாது இந்த டச் விஷயத்தில்.
நானும் போட்டோஷாப் மாக்கிற்கென்று உருவாக்கப்பட்டிருந்தது என படித்தேன்,நான் முன்பு படித்த வெர்ஷன் அடோப் போட்டோஷாப் 5.5.அப்போது அனிமேட்டர் ப்ரோ என்னும் மென்பொருளும் வைத்து வரைவோம் கலர் அடிப்போம்,

ஆப்பிள் பொருட்கள் விலையை குறைக்கவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.ஏனென்றால் அது மாசரெட்டி,லாம்போகினி,ரேஞ்ரோவர்.போர்ஷே,கார்கள் போல அந்தஸ்து சமாசாரம் போல,நீங்கள் சொன்ன ஈக்வலைசர் இல்லாத ஐபாட் முக்கிய குறையே,நானும் சில பாடல்களுக்கு அதிக இசையை தேர்ந்தெடுப்பேன்,உதாரணம் :-ஓம் சிவோஹம்,அதிரடிக்கார மச்சான் மச்சான்,அப்போதெல்லாம் ஐபோட் ஈடுசெய்யாது.

===
எனக்கும் நீங்கள் சொன்ன கவலை இருக்கு,என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேகமாக ப்ரெசெண்டேஷன்கள் செய்யலாம்.இனி மூளையை தீட்டிக்கொண்டு இருக்கவேண்டும்.இல்லை என்றால் டெக்நாலஜி நம்மை விழுங்கிவிடும்.
===
கூகிள் செக்ட்ச் அப்,பிரநேசி போன்ற மென்பொருட்கள் சிறந்த உதாரணம்.பேசிக் க்வாலிஃபிகேஷன் போதும்,ஒருவர் தமக்கு தாமே கற்றுக்கொள்ள முடியும்
===
நிச்சயம் விண்டோஸுக்கு நான் எதிரியே இல்லை,ஆஃபிஸில் என் லாப்டாபில் விண்டோஸ் தான்.மாக் ஒருவேளை வாங்கினாலும் ட்யூவல் பளாட்ஃபார்ம் போட்டுதான் வேலைசெய்யவேண்டும்.
===
இசைபுயல் லின்கிற்கும் மிக்க நன்றி,வேலையிடையிலும் இதை பின்னூடியமைக்கு ஸ்பெஷல் நன்றி.ராஜாசார் புகைப்பட விட்ஜெட் பார்த்தீர்களா?

ஹாலிவுட் பாலா சொன்னது…

//,இப்போது உள்ள சேம்சங்,எல்ஜி,எஹ்டிசி,ப்ளாக்பெர்ரி டச் எதுவும் ஐபோனுக்கு அருகே கூட வரமுடியாது //

இதுவும் சாருவோட பதிவு மாதிரிதானா???

எங்கிருந்து இப்படியெல்லாம் உங்களுக்கு ஐடியா வருது? இதுக்குப் பின்னாடி எதோ பெரிய வெளிநாட்டு சதி இருக்கற மாதிரி இருக்கு!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல உங்க கமெண்டுக்கு தான் கேபிள் பதிவுல பதில் போட்டேன்
தல நான் சொன்னது டச்ஸ்க்ரீன் மட்டும் தான்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

உங்க புதிய ஹெச்டிசி பற்றி எதாச்சும் சொன்னா என் சட்டைய புடிங்க,ஆனா அதுவும் அவுட் டேட் ஆவும்,ஒருநாளு மைண்ட் இட்:)

ஹாலிவுட் பாலா சொன்னது…

அப்ப ஐபோன் மட்டும்???

===

//சேம்சங்,எல்ஜி,எஹ்டிசி,ப்ளாக்பெர்ரி//

இதுல எஹ்டிசி -ங்கறது என்ன? ஸ்பெல்லிங் தப்பா இருந்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சீங்களா??

நாங்கள்ளாம்.. பதி”வுலகத்துலயே” ஸ்வேதாவை கண்டுபிடிச்சவங்க.

ஹாலிவுட் பாலா சொன்னது…

நான் இன்னும் தூங்கலை...

ஒரு மணிநேரமா எல்லாருக்கும் குட் நைட் மட்டும் சொல்லிகிட்டு இருக்கேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல,
உங்க 21க்ராம்ஸ் பதிவை காணலையே?எங்க போச்சி?
நான் இன்னிக்கு இயக்குனர் சார்லஸுக்கு சிலபல பதிவுகள் லின்க் பின்னூட்டமிட தேடினேன்,காணவில்லை,தல் ப்ளீஸ் மீண்டும் எழுத ஆரம்பிங்க அதுபோல.சீரியசான வேண்டுகோள்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)