கார்கோ 200 [Cargo 200 ][Груз 200] [2007][ரஷ்யா][கண்டிப்பாக18+]

ண்பர்களே!!!
இந்த படத்தைப்பற்றி எப்படி எழுத ஆரம்பிப்பது எனத்தெரியாமலே நாட்களைக் கடத்திவிட்டேன். சமகாலத்தில் நான் பார்த்த சைக்காலாஜிக்கல் த்ரில்லர் வகையரா படங்களில் இப்படத்துக்கே முதலிடம் தருவேன்.  ய ஹாண்டிங் மூவி என்பார்களே அதற்கு முழுத் தகுதியான படம்,உங்களுக்கு சைக்கோபாத் பற்றி தெரிந்திருக்கும், சோசியாபாத் பற்றி தெரியுமா?!!! படம் பார்த்து முடித்தவுடன் இயக்குனர் அலெக்ஸெய் பாலபொனோவின் அத்தனை படங்களையும் ஒரே மூச்சில் பார்க்கச் செய்யும் படைப்பு.ஒரு சாதாரண சினிமாவுக்கும் ஆட்டியர் படைக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?  என்று இந்தப்படம் பார்த்த பின்னர் புரிந்து கொள்வீர்கள். இது ஒவ்வொரு குடிமகனும் , அரசியல்வாதியும், தத்துவவாதியும்,சமூக ஆர்வலரும்,  மனோதத்துவ நிபுனரும் பார்க்க வேண்டிய படம் என்பேன்.

ன் தேசம் தவறிழைக்கும் போது அபார நெஞ்சுரம் கொண்ட படைப்பாளியால் தான் அதைத் தட்டிக் கேட்கமுடியும். அவனுக்கு வரும் அறக்கோபத்தின் வெளிப்பாடு ஒரு எரிமலையின் சீற்றத்தை விடவும் பயங்கரமாயிருக்கும், அப்படி  27டிசம்பர் 1979முதல் 15 பிப்ரவரி 1989ஆம் ஆண்டு வரையான கொடிய ரஷ்ய-ஆஃப்கன் போரின் போது ரஷ்ய மக்கள் அனுபவித்த சொல்லொனாத் துயரத்தின் ஒருசோற்றுப்பதமாக  1984 ஆம் ஆண்டின் பூலோக நரகம்- ரஷ்யா எப்படி இருந்ததுஎப்படி  இருந்தது ?!!!  என  வெடித்த ஓர் படைப்பாளியின் அறக்கோபம்  தான் இப்படம். மேலும்  இது நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் ஃபால்க்னர் 1931ஆம் ஆண்டில் எழுதிய சான்க்சுவரி[Sanctuary] என்னும் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ஒப்பில்லா படைப்பும் ஆகும்.


ரு சொறி சிரங்கை குறுக்கு வெட்டு தோற்றம் செய்து பார்த்தால் நாம் சீழ், ரத்தம், அழுகிய சதைக் கோளத்தையே பார்ப்போம், அப்படிப்பட்ட மூர்க்கமான படைப்பு தான் கார்கோ200.  ஆனால் படத்தில் காட்டப்படும்  சம்பவங்கள் அத்தனையும்  கம்யூனிச ரஷ்யாவில் நடந்தவையே ஏன்?!!! இதை விட மோசமாகவே நடந்தது என்கிறார் இயக்குனர். இந்தப்படம் கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல்லெரிவதைப்போன்ற முயற்சி. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படம் ரஷ்ய சினிமாவின் மைல்கல் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள் பலர்.

கார்கோ 200:- பெயர்க்காரணம்- போரினால் நாயகர்கள் உருவாவதில்லை, பிணங்களே உருவாகின்றன: என்பதே இப்படம் சொல்லும் பாடம்.ஆஃப்கன் போரில் செத்து மடிந்த ரஷ்ய போர் வீரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது, சவப்பெட்டி தயாரிக்கவோ இறக்குமதி செய்யவோ நேரமோ பொருளாதாரமில்லாத கம்யூனிச அரசு , தாமதமாக துருபிடிக்கும் என்பதால் ஏசி ஷாஃப்டு  தயாரிக்கும் ஸின்க் தகடு [துத்தநாகம்]கொண்டு சவப்பெட்டி செய்தது, மேலே மூடுவதற்கு ஒரு பைன் மரப்பெட்டி. இதில் தான் செத்து மடிந்த வீரர்கள் ரஷ்யாவுக்கு பலநாட்கள்  விமானக் காத்திருத்தலுக்கு பின்னர் அனுப்பப்பட்டனர். அதைத்தான் ரஷ்யமொழியில் Gruz 200[கார்கோ 200] என்றிருக்கின்றனர் .
=====0000=====
படத்தின் கதை:-
1984ஆம் ஆண்டு, ஆஃப்கன் போரின் உச்சத்தில் கம்யூனிச ரஷ்யாவில் லெனின்க்ராட் என்னும் ஊருக்கு அருகே துவங்குகிறது படம். மிஷா [Iurii Stepanov] ஒரு தேசபக்திகொண்ட ராணுவ கர்னல், தன் கல்லூரி படிக்கும் மகள் லிசா,தன்அழகிய மனைவியுடனும் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். சமூகத்தில் பார்க்கும் அனைத்துமே அவருக்கு நல்லதாகவே தெரிகிறது, ஆஃப்கன் போரே ஆஃப்கானிஸ்தானை மேம்படுத்த தான் என நம்புகிறார்.இப்போது ஏற்பட்டிருக்கும் உணவுப்பஞ்சம் கூட விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறார்.


வரது அண்ணன் ஆர்டெம் (Gromov)பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான நாத்திகம் பயிற்றுவிக்கும் பேராசிரியர். அவர் தன் தம்பியை நீண்ட நாட்கள் கழித்து வீட்டில் வந்து சந்திக்கிறார். தன் ஊரிலிருந்து உணவுப்பொருட்களை தம்பிக்கு நிறைய கொண்டு தருகிறார். மிஷாவின் பேச்சு தன் டிஸ்கோத்தே பித்து பிடித்த  மகள் லிசாவைப் பற்றியும் அவளின் காதலன் வலேர்ரி பற்றியும் திரும்புகிறது. அவன் ஆஃப்கன் போரில் பணிபுரிந்துவிட்டு இங்கே வந்து சொந்த தொழில் செய்வதாகவும், அண்ணன் ஆர்டெம் வைத்திருப்பதை விட நல்ல வேகமாய் செல்லும்  சலூன் ரக கார் வைத்திருப்பதாகவும் சொல்கிறார். 
லேர்ரி  இந்த இளவயதில் சம்பாதித்ததும் தான் இதுவரை சம்பாதித்ததும் சமம் தான் என வியக்கிறார். வலேர்ரியும் இவரின் மகள் லிசாவும் இப்போது வீட்டுக்குள் வர பரஸ்பரம் அறிமுகம் ஆகிறார்கள். பின்னர் மிஷாவின் மகளிடம் புகைப்படத்தில் இருக்கும் தன் டிஸ்கோத்தே பித்து பிடித்த கல்லூரிமகனின் போட்டோவை காட்டுகிறார் ஆர்டெம். பின்னர் பக்கத்து நகரில் இருக்கும் அம்மாவைப் பார்த்துவிட்டு தான் தன் ஊருக்கு போகிறேன் என்று அம்மா இருக்கும் லெனின்க்ராட் என்னும் ஊர் நோக்கி கிளம்புகிறார்


ழியில் ஆர்டெம்மின் , அரசு தயாரித்து விற்கும் ரியர் எஞ்சின்  ஸபரோசெட்ஸ்[Zaporozhets]  ரக கார் பழுதாகி நின்றுவிடுகிறது, மற்ற கார்களை போலல்லாமல் டிக்கி இருக்கும் இடத்தில் எஞ்சினும் எஞ்சின் இருக்குமிடத்தில் டிக்கியும் இருக்கிறது, ஆகச்சிரிப்பு தான், என்னென்னவோ கைவைத்தியம் செய்தும் சரியாகாமல் வெகு தொலைவில் தெரியும் பண்ணை வீட்டை நோக்கி நடக்கிறார். அங்கே இருளடைந்த வழியில் ஒரு விரைப்பானஆள் மோட்டார் சைக்கிளுடன் நிற்பதைப் பார்த்தவர், எனக்கு கார் பழுதுநீக்க உதவி வேண்டும் எனக் கேட்க அவன் முறைத்துவிட்டு அந்த வீடு நோக்கி கைகாட்டுகிறான். 


குறித்துக்கொள்ளுங்கள் அந்த முரட்டு ஆள் ஸுரோவ்வை [Aleksei Poluian] நாம் வாழ்வில் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்  . அவன் ஒரு சோசியாபாத், போலீஸ் அதிகாரி , ஆண்மையற்றவன், பண்ணைவீட்டுக்குள் அவனின் முன்னாள் மனைவி அண்டோனீனா ஓர் முன்னாள் சிறைக்கைதி அலெக்ஸியுடன் ஓடிவந்து குடும்பம் நடத்துகிறாள், இப்போது பிழைப்புக்கு கள்ளச்சாராயமும் விற்கிறாள்.அவளை வசமாக பழிவாங்க தருணம் பார்த்தே அனுதினமும் அங்கே வந்து காத்து நிற்கின்றான் ஸுரோவ்.


ப்போது  ஆர்டெம் பண்ணை வீட்டுக்குள் நுழைய அங்கே அங்கே முன்னாள் சிறைக்கைதியும் இந்நாள் கள்ளச்சாராய[ஓட்கா]வியாபாரியுமான அலெக்ஸி தன் இரட்டைக்குழல் துப்பாக்கியை துணிகொண்டும் ஊதியும் துடைக்கிறான். அவன் வீட்டுக்கு எந்நேரமும் வாடிக்கை குடிகாரர்கள் வந்து ஓட்கா அருந்திவிட்டும், வாங்கிக்கொண்டும் செல்வதைப் பார்க்கிறோம். ஆர்டெம் அப்படி ஒரு இடத்துக்குள் வந்து விட்டு மிகவும் மருண்டவர், அலெக்ஸியிடம் தன் காரை பழுது நீக்க உதவி கேட்கிறார். அலெக்ஸி மௌனமாக இருந்தவன், தன் வியட்நாமிய வேலைக்காரன் வரட்டும் என்கிறான், 


தற்குள் வேலைக்காரன் மது பாட்டில்களை கொண்டுவந்து வைக்க, மூவருக்கு ஊற்றுகிறான் அலெக்ஸி. மது குடித்தால் தான் காரை பழுது நீக்க உதவுவேன் என்று மிரட்டுகிறான். குடிக்கும் போதே அவர் அறிவியல் நாத்திக பேராசிரியர் என தெரிந்து கொண்டவன் அவரிடம் தனக்கு ஒவ்வாத கம்யூனிச சித்தாந்தங்கள், நாத்திகம், ஆப்கான் போர் பொது உடமை போன்றவற்றை எள்ளி நகையாடுகிறான். அங்கலாய்க்கிறான். அவருக்கோ போதை எல்லை மீறுகிறது, அவனின் பல கேள்விகளுக்கு மௌனத்தையே பதிலாக அளிக்கிறார். அலெக்ஸியின் மனைவி இடைமறித்தவள், உனக்கு முற்றிவிட்டது, ஒழுங்காக படு என்கிறாள். அவன் கேட்கவில்லை, அலெக்ஸியின் மனைவி அண்டோனீனாவோ வியட்நாமியனை கண்டவாறு வேலைவாங்குகிறாள், அவனும் சளைக்காமல் செய்தவன், ஒருவழியாக இவரது காருக்கு வருகிறான். காரின் எஞ்சினை தேடியவன், கார்பரேட்டர் ஸ்பார்க் ப்ளக்கை கழற்றி தற்காலிகமாக ஊதித் தேய்த்து மாட்டி காரை கிளப்பித்தருகிறான். காரில் பெல்ட் வேறு மாற்றவேண்டும். வழிக்கு நிச்சயம் தாங்காது. 

நீங்கள் போகும் ஊர் மிகத்தொலைவு ஆதலால், அதிக தூரம் செல்லாதீர்கள்  கடை கிடையாது என்கிறார். போதையில் காரை அதிகதூரம் ஓட்டிச்செல்ல மனமில்லாத ஆர்டெம் தன் சகோதரன் மிஷா வீட்டுக்கே திரும்புகிறார். தன் மகள் லிசா காதலன் வலேர்ரி திரும்பி வராத மன உளைச்சலில் இருக்கிறாள் என்கிறார். நல்லவேளை மனைவி இரவு பணிக்கு போயிருக்கிறாள், என்று அண்ணனை சோஃபாவில் படுக்கவைக்கிறார். அண்ணன் வயிறுமுட்ட குடித்திருப்பதைக்கண்டு வியக்கிறார்.

ப்போது மிஷாவின் மகளின் காதலன் வலேர்ரி தான் எப்போதும் செல்லும் டிச்கொத்தேவுக்கு தனியாக செல்கிறான்.அரசால் தடைசெய்யப்பட்ட ஓர் இடத்தில் அப்படி ஒரு இளைஞர், இளைஞிகளின் ராண்டவு அது. அங்கே  உள்ளூர் கம்யூனிச பார்ட்டி தலைவரின் மகள் ஏஞ்ச்லிக்காவும் வருகிறாள் அவளுக்கு 18 வயது இருந்தாலே அதிகம், இன்னும் அவள் கன்னி தான், தன் காதலன் ராணுவத்தில் பாராட்ரூப்பர். ஆஃப்கானில் போரிட்டுக் கொண்டிருக்கிறான்,  விடுமுறையில் திருமணம். இப்போது தனிமை வாட்ட. வலேர்ரியை கண்டவள் என்னுடன் டிஸ்கோ ஆடுகிறாயா? என்கிறாள்.

வன் இதோ வருகிறேன் என ஒரு அழுக்கு கழிப்பறைக்குள் போனவன் கோக்னாக் [பிராந்தி] ஹாஃப் பாட்டில் அது, அதை அப்படியே குடிக்கிறான், அவளுடன் டிஸ்கோ ஆடுகிறான்,அவளை நான் உனக்கு ஒன்று காட்டுகிறேன் என தன் காரை காட்டி இது தீயாக பறக்கும் என்கிறான். அவளுக்கும் கோக்னாக் புகட்டுகிறான். உதட்டில் முத்தமிட்டவன், அவளை மார்பகங்களில் கைவைத்து  அழுத்தி முயங்க எத்தனிக்க,அவள் மறுக்கிறாள், திமிருகிறாள். கோக்னாக் வேறு தீர்ந்துவிட்டது, அவளை குடிக்கவைத்து பின்னர் முயங்கலாம் என திட்டமிட்டவன். ஒரு இருளடைந்த சாலையில் பயணித்து அலெக்ஸி இருக்கும் அதே பண்ணை வீட்டுக்கு வருகிறான். அங்கேயே காரில் அவளை விட்டுவிட்டு வீட்டுக்குள் போனவன் குடிகாரன் அலெக்ஸியிடம் ஓட்கா கேட்கிறான்,  நிறைய ரூபிள் தருகிறான்.  இப்போது அலெக்ஸிகும் வலேர்ரிக்கும்  நன்றாக போதை ஏறிவிட, வெளியே இருட்டில் காருக்குள் இருக்கும்  ஏஞ்ச்லிக்காவுக்கு பயமாக இருக்கிறது,இப்போது சோசியாபாத் ஸுரோவ் வேறு அவளை கார் கண்ணாடி வழியே ஆவலுடன் எட்டிப்பார்க்கிறான், இவள் பயத்தில் அலறியே விட்டாள்.


போலீஸ்காரன் ஸுரோவ்  இப்போது விலகி விட,மருண்ட ஏஞ்ச்லிக்கா தன் குதிகால் செருப்புக்களை அள்ளியவள் வீட்டுக்குள் ஓட்டமெடுக்கிறாள். அங்கே இவளை கூட்டிவந்த வெலெர்ரி மட்டையாகியிருக்க, அலெக்ஸியோ இவளை அருகே கண்டவன் மிகவும் காமுறுகிறான். அவளை விடாமல் துரத்த, அவன் மனைவி எதிர்ப்பட்டவள். ஏஞ்ச்லிக்காவை நோக்கி நீ என்ன விதைத்தாயோ அதைத்தான் அறுக்கிறாய் எனக்கூறி மிரட்டுகிறாள். உனக்கு என்ன  தைரியம் இருந்தால் இந்நாட்களில் முன் பின் தெரியாதவனுடன் புதிய இடத்துக்கு வருவாய்? !!! என்றவள் அடுப்பின் புகைப்போக்கி அருகே குளிருக்கு வாகாக மறைத்துவைக்கிறாள். கணவன் தள்ளாடியபடியே அவளை தேடிவர,அவள் பின்புறமாக ஓடிவிட்டாள் என்கிறாள். ஏமாந்தவன் போதைமிகுதியால் நாற்காலியிலேயே சரிகிறான். அவனை அவன் மனைவியும்,வியட்நாமியனும் தூக்கி கட்டிலில் தூங்கச்செய்கின்றனர்.


லெக்ஸியின் மனைவி அண்டோனீனா ஏஞ்லிக்காவை உலுக்கியவள். அவள் என் அப்பா ஒரு பெரிய கட்சித்தலைவர். அவர் தெரிந்தால் உங்களை சும்மா விடமாட்டார். என்னை எப்படியாவது வீட்டில் விட்டுவிடுங்கள். என்கிறாள். அவளோ? இப்போது நள்ளிரவு, இந்த கும்மிருட்டில் எங்கே போனாலுமே ஆபத்துதான். பின்புறம் தெரியும் மாட்டுத் தொழுவத்தை காட்டியவள்,அங்கே கன்றுபோட்ட மாடு இருக்கிறது, அதை தொந்தரவு செய்யாமல் அதன் பின்னே வைக்கோல் போர் இருக்கிறது, அங்கே சென்று ஒளிந்துகொள், நான் பின்னர் வந்து வெளியே பூட்டுகிறேன். காலையில் இந்த குடிகாரன் வெலேர்ரி எழுந்ததும் அவனுடன் அனுப்புகிறேன். என மிரட்டுகிறாள். இப்போது அவள் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலைக்கு ஏஞ்ச்லிக்கா வந்துவிட்டிருக்கிறாள். அதேபோலவே ஓடிப்போய் மாட்டின் மீது விழுந்தவள் வைக்கோல் போருக்குள் பதுங்குகிறாள்.
லெக்ஸியின் மனைவி அண்டோனீனாவுக்கு எதோ பொறிதட்ட மாட்டுக்கொட்டகையில் அவளை ஒளித்து வைக்க வேண்டாம் என நினைக்கிறாள். தன் கணவனின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டவள், தொழுவத்துக்குள் சென்று ஏஞ்ச்லிக்காவை எழுப்புகிறாள். அவளை கூட்டிக்கொண்டு அருகே இருக்கும் ஒரு மதுக்கிடங்கு அறைக்குள் நுழைந்து அவளுக்கு இரட்டைக்குழல் துப்பாக்கியை கொடுத்து வெளியே பூட்டுகிறாள். இப்போது நிம்மதியாக வீட்டுக்குள் போய் தூங்கச்செல்கிறாள், இப்போது போலீஸ்காரன் ஸுரோவ் வியட்னாமிய வேலைக்காரனை கோபமாக அழைக்கிறான். அந்த அறையை திற சோதனை போடவேண்டும் என்கிறான், உள்ளே இருந்த ஏஞ்ச்லிக்கா துப்பாக்கியை காட்டி மிரட்டி,என் அப்பா ஒரு பெரிய கட்சித்தலைவர். என் காதலன் ஒரு பாராட்ரூப்பர். நெருங்காதே சுட்டுவிடுவேன் என்கிறாள்,


ஸுரோவ்வோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவளிடமிருந்து துப்பாக்கியை லாவகமாய் பறிக்கிறான். ஏஞ்ச்லிக்காவை ஒருவித ஆவலோடு நெருங்குகிறான். அவள் தலையை அவிழ்த்தவன், மார்பை தடவுகிறான். அவள் பயந்து கண்மை கலைய அழுது மருண்டவள், வியட்நாமிய வேலைக்காரன் வேண்டாம், எஜமான் பாவம் என்று தடுக்கத் தடுக்க கேளாமல்,துப்பாக்கிக்கு குண்டுகள் போட்டு பின்னர் சாவகாசமாக அவனை சுட்டும் கொல்கிறான். ஏஞ்லிக்காவை நெருங்குகிறான். அவள் தான் இதுவரை கன்னி கழியவில்லை, என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்ச,துப்பாக்கியால் மிரட்டி,அவளின் பேண்டியை கழற்றச்செய்கிறான். நான்கு கால்களில் நில் என்று கட்டளையிட்டவன். ஒரு சிறிய வோட்கா பாட்டிலை எடுக்கிறான், அதைக்கொண்டு அவளை புணருகிறான். வெரோனிக்கா அலறுகிறாள். பண்ணைவீட்டுக்குள் இந்த சத்தம் கேட்டு அண்டோனீனா நெஞ்சுவெடித்து அழுகிறாள். எல்லாம் கைமீறிவிட்டது என்பது புரிகிறது.

பொழுது நன்றாய் விடிகிறது,கொடிய சோசியாபாத்உரல் [ural] ரக சைட் கார் பொருத்திய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டவன், அவளின் கையோடு விலங்கிட்டு சைட் காரில் பூட்டுகிறான். அவளுக்கு மிகுந்த உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.  குளிர் எலும்பையே துளைத்து வாட்டுகிறது என் காலணிகளை கொடு என்னை விட்டு விடு என கெஞ்ச, அவன் போய் காலணிகளை தேடி எடுத்துவந்து அணிவிக்கிறான். ஸுரோவ் வெரோனிக்காவை இப்போது தன் வண்டியை கிளப்பி ஓட்டிச் செல்கிறான். வெரோனிக்காவை கடத்திச் செல்வதை குடிபோதை தெளிந்து கண்விழித்த வெலெர்ரி ஜன்னல் வழியாக பார்க்கிறான். பின்னர் தன் புதர் மறைவில் நிறுத்தியிருந்த தன் காரை எடுத்துக்கொண்டு பேய் வேகத்தில் பறக்கிறான்.அவன் என்ன ஏஞ்ச்லிக்காவை காப்பாற்றவா போவான்?அவன் கவலை அவனுக்கு.


ஸுரோவ் போகும் வழியில் ஒரு பொது தொலைபேசியில் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எண் சுழற்றி, அருகே ஓர் பண்ணை வீட்டில் வியட்நாமிய வேலைக்காரன் ஒருவன் சம்பளத் தகராரால் அலெக்ஸி என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டான். என்று அனானியாக போட்டுகொடுத்து விட்டு வெரோனிக்காவுடன் அகல்கிறான். அப்போது ஒரு பாடல் பிண்ணணியில் ஒளித்து நம்மை புரட்டிப்போடுகிறது, நாம் பார்க்கும் புகைப்போக்கிகள், அழுக்கான வானம். பழைய பாழடைந்த கட்டிடங்கள், சுற்றுப்புறச்சூழல் கெட்டு அழியும் புறநகர்ப்பகுதி. பாலத்தின் மேல் செல்லும் ரயில் என மனதைப் புரட்டிப்போடும் காட்சியமைப்பு என்பேன்.


ப்போது லெனின்ஸ்க் என்னும் ஊருக்குள் நுழைகிறான் ஸுரோவ், தன்னுடைய மிகக்கேவலமான அரசு அடுக்குமாடி குடியிருப்புக்குள் ஏஞ்லிக்காவை அழைத்துச் சென்றவன், [இங்கே ஸுரோவ்வைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும், அவன் ஒரு சோசியோபாத் மட்டுமல்ல, தாய்பாசமுள்ள தனயன்.] ஏஞ்லிக்காவை தன் குடிக்கார அம்மாவிடம் அறிமுகம் செய்கிறான்,தன்னை விட்டுவிட்டு ஒரு ராணுவ வீரனுடன் இவள் ஓடிவிட்டாள், மனைவியை மிகவும் நேசிக்கும் நான் விடாமல் இவளை இங்கே தூக்கிவந்துவிட்டேன் பார்த்துக்கோ!!! என்கிறான். நீ எந்நேரமும் தொலைக்காட்சி பார்க்காதே, நீ பார்க்கும் அந்த கம்யூனிஸ்ட் பிரச்சார படங்கள் இவளுக்கு பிடிக்காமல் மீண்டும் ஓடிவிடப்போகிறாள் என்கிறான். ஏஞ்சிலிக்காவை கட்டிலில் பிணைத்து விலங்கிடுகிறான்,


ஞ்ச்லிக்கா தனக்கு மிகவும் உதிரப்போக்கு ஏற்ப்படுகிறது கழிப்பறைக்குப் போகவேண்டும் என்று சொல்ல, அவளுக்கு ஸுரோவ் பெட்பேன் கொண்டு வந்து தருகிறான். குடிக்க ஓட்கா மட்டுமே தருகிறான். சதா அவளை ஓட்கா போதையிலேயே ஆழ்த்துகிறான். தூரத்தில் தெரியும் அழுக்கடைந்த வானமும்,பாலத்தின் மேலே செல்லும் சரக்கு ரயிலும், பாலத்துக்கு கீழே செல்லும் மற்றொரு ரயிலும் ,தொலைவில் புகைபோக்கிகள் கக்கும் புகையும் நம்மை என்னவோ செய்கிறது.சோசியாபாத்தை இதுபோல எங்கும் இவ்வளவு டீட்டெய்லாக பார்த்ததில்லை.

ப்போது ஸுரோவ்வுக்கு அவன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வர கிளம்பிப்போனவன், பண்ணைவீட்டில் நடந்த வியட்நாமியன் கொலைக்காக அலெக்ஸியை கைது செய்கிறான், அப்போது தம்பி மிஷா வீட்டிலிருந்து தன் அம்மாவைப்பார்க்க காரில் செல்லும் ஆர்டெம் அந்த பண்ணைவீட்டை கடக்கிறார். அங்கே போலீசார் அலெக்ஸிக்கு விலங்கிட்டு இழுத்துச்செல்கின்றனர். ஆனால் இவரின் வேலைக்கு ஆபத்து என்று இறங்கி விசாரிக்காமல் போய்விடுகிறார் ஆர்டெம். தொலைக்காட்சி பார்த்து வியட்நாமியன் கொலையையும் அந்த இளம்பெண் ஏஞ்ச்லிக்கா கடத்தப்பட்டதையும் தெரிந்துகொள்கிறார். தன் சகோதரனுக்கு போன் செய்ய  அவரும் அங்கே மிகவும் பதட்டமாக பேசுகிறார், தன் கட்சித்தலைவரின் மகள் கடத்தப்பட்டதை சொல்கிறார். தன் மகளின் காதலன் வெலேர்ரியை காணவில்லை என்கிறார். அதனால் தன் மகள் மனமுடைந்திருக்கிறாள். என்கிறார். கட்சித்தலைவர் மகளை கடத்திய,  அதற்கு ஒத்துழைக்காத வேலைக்காரனை கொன்ற அலெக்ஸியை கைது செய்துவிட்டோம், விரைவில் அவனுக்கு தண்டனை கிடைக்கும் என்கிறார் மிஷா.


ப்போது ஆர்டெம் நினைத்தால் அலெக்ஸியை காப்பாற்ற வழியுண்டு. முதல்நாள் இரவு வெகுநேரம் ஆர்டெம் அவனுடனும் வேலைக்காரன் வெலேர்ரியுடனும் பேசிக்கொண்டிருந்ததால் இவர் சாட்சி சொல்லுவது செல்லும். ஆனால் இவரின் வேலைக்கு அது உளைவைக்கும் என்று மிகவும் அஞ்சுகிறார். அதனாலேயே மிகுந்த தெய்வ நம்பிக்கை உடைய அலெக்ஸிக்காக இவர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவில்லை.


ப்போது இந்த வழக்கு விரைந்து நடைபெறுகிறது, சோசியாபாத் கொலைகாரன் ஸுரோவ் ஏஞ்ச்லிக்காவின் கடத்தல் வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறான். சாதுர்யமாக சாட்சிகளை ஜோடித்து அலெக்ஸிக்கு மரணதண்டனையும் வாங்கித் தந்துவிடுகிறான் அவன். ஏஞ்ச்லிக்காவின் வீடு சென்று ஏஞ்ச்லிக்காவின் காதலன் ராணுவ பாராட்ரூப்பர் அவளுக்கு எழுதிய கடிதங்கள்,பிற நண்பர்கள் எழுதிய கடிதங்களை விசாரணைக்கு என்று சொல்லி அவளின் பெற்றோரிடமிருந்து வாங்கி வருகிறான்.இப்போது அலெக்ஸியின் மனைவி அண்டோனீனா நிர்க்கதியாக நிற்கிறாள், அவளை  சிறைச்சாலை வாசலில் வைத்து சந்திக்கிறார் ஆர்டெம்.மிகவும் மன்னிப்பும் கேட்கிறார். தான் மிகுந்த சுயநலத்துடன் நடந்து கொண்ட குற்ற உணர்வு தனக்கு ஆயுளுக்கும் போகாது என்கிறார். ஒரு நிரபராதி அநியாயமாக தண்டிக்கப்பட்டதால்  சட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கை போய்விட்டது என்கிறார். அண்டோனீனா மிகுந்த கவலையுடன் அங்கிருந்து அகல்கிறாள்.ப்போது தான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவேண்டும். கார்கோ 200 என்னும் ராணுவ வீரர்களின் பிணங்கள், இறந்தவருக்கு பெற்றோரோ, உறவினரோ இல்லாத பட்சத்தில் அந்தந்த ஊரின் போலீஸார் பொறுப்பில் தரப்பட்டு, சவ அடக்கம் செய்யப்படுகின்றன. எந்த போலீசாரும் அந்த சவ அடக்கம் செய்யும் பொறுப்பை வாங்க தயாரில்லை, என்றும் நாம் அறிகிறோம்.அதை ஏற்காது புறம் தள்ளுகின்றனர். அவர்கள் அந்த பொறுப்பை பெற்றுக் கொள்ள நிறைய பணமும் சலுகைகளும் அரசு உயர் அதிகாரிகளால் தரப்படுகின்றன. காவலர்கள் ஒவ்வொருவரும் அதீத அலட்சியமும், மெத்தனமும்  கொண்டிருக்கின்றனர்.

ப்படி சோசியோபாத் ஸுரோவ்வுக்கும் இன்று விமானத்தில் கார்கோ 200  வருகிறது. உயரதிகாரிகளின் கெடுபிடிகள் கெஞ்சல்களுக்கு பின்னர் வேண்டா வெறுப்புடன் ஸுரோவ் விமானநிலையத்தின் சரக்ககம் செல்கிறான். அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஆஃப்கானிஸ்தானுக்கு போர் செய்யச் செல்ல விமானம் ஏற குழுமியிருக்கின்றனர். அங்கே அப்போது விமானம் வந்துவிடுகிறது. அதிலிருந்து மொத்தம் ஆறு கார்கோ200 சவப்பெட்டிகள் இறக்கப்படுகின்றன, அதே விமானத்தில் காத்திருந்த ராணுவ வீரர்கள் மந்தை ஆடுகள் போல ஏற்றப்படும்  ஹைக்கூ கவிதை போன்றதோர் காட்சியை நாம் பார்க்கிறோம். யாரும் தவறவிடக்கூடாத காட்சியது.

படத்தின் ஒரு காட்சிக்கான காணொளி யூட்யூபிலிருந்து:-
  
                                                                                                                                 
ந்து இறங்கிய சவப்பெட்டிகளில்  திசைக்கு ஒன்றாக ஏற்றப்படுகிறது, ஸுரோவ்வின் வேனில் ஒரு சடலம் ஏற்றப்பட அது ஏஞ்ச்லிக்காவின் காதலன் சுக்கீனாவின் சடலம் என்று, ஆவணங்கள் மூலம் ஸுரோவ் அறிகிறான். மிகவும் கொண்டாடுகிறான்,அந்த சவப்பெட்டியை கொண்டு சென்று தன் வீட்டில் வைத்தவன். அந்த பைன் மரப்பெட்டியை தன் உதவிகாவலர்களை கொண்டு திறக்கச்செய்கிறான், பின்னர் அந்த துத்தநாக தகரப்பெட்டியை உளி வைத்து பிளக்கிறான்.அங்கே அந்த ராணுவவீரனின் பிணத்தின் சட்டையில் குத்தியிருக்கும் தங்கப்பதக்கத்தை பிய்த்து எடுக்கிறான். பின்னர் அந்த பிணத்தை தூக்கிச் சென்று ஏஞ்ச்லிக்காவின் கட்டிலில் போடுகிறான், வெடித்து அலறுகிறாள் ஏஞ்ச்லிக்கா. இனிமேல் அவன் உனக்கு திருப்தி தரமுடியாது,அதற்கு நான் வழி செய்கிறேன் என்றுவிட்டு வெளியேறுகிறான். தன் தொலைக்காட்சி பைத்தியமான அம்மாவிடம் அவளின் புதிய காதலன் சுக்கீனோ இறந்துவிட்டான், ஆகவே இனி ஏஞ்ச்லிக்கா எனக்குத்தான் என்று கொக்கரிக்கிறான்.
ப்போது ஸுரோவ்வின் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருத்தி தன் கணவன் குடித்து விட்டு தன் மண்டையை உடைத்துவிட்டான் ,கதவை உள்ளே தன் நண்பர்களுடன் பூட்டிக் கொண்டிருக்கிறான் என போனில் புகார் தர, அங்கே வருகிறான் ஸுரோவ்.கதவை உடைத்து ஸுரோவும் அவன் உதவியாளர்களும் உள்ளே நுழைந்தது தான் தாமதம்.அங்கிருந்த குடிகாரக்கணவன் ஏண்டா பன்றிகளா!!!, நான் நேற்று வேலைக்குப்போய் சம்பாதித்த பணத்தைக்கொண்டு இன்று என் நண்பர்களிடம் குடிக்கிறேன்.சூதாடுகிறேன்,அத்ற்கு எனக்கு உரிமையிருக்கிறது. என்று பாய்கிறான், ஸுரோவ் அவனை வலது புஜத்தில் சுடுகிறான். இப்போது மனைவி பாய்ந்து வந்து ஸுரோவை ஏசியவள் கணவனை தேற்ற, உன் கணவனை அடித்தே  கொன்று விடுவென் என்று சொல்லி கூட்டிச்செல்கிறான்.

வனைத் தன் வீட்டுக்கு கூட்டிவந்த ஸுரோவ் அந்த குடிகாரக்கணவனைக் கொண்டு கட்டிலில் விலங்கிடப்பட்டிருக்கும் ஏஞ்ச்லிக்காவை பின்புறமிருந்து புணரவிடுகிறான்.அருகே நாற்காலியில் அமர்ந்து அதை வெறியுடன் பார்க்கிறான்.இதைக்கூட ஏஞ்ச்லிக்காவுக்கு உதவவே தான் செய்வதாக நம்புகிறான்.அவளை திருப்திப்படுத்த தன்னால் முடிந்த குரூரமான வழிமுறைகளை பிரயோக்கிக்கிறான்.அதுதான் அங்கே விந்தையே.ஆனால் ஏன்ச்லிக்காவுக்கு தான் செய்யும் எந்த உதவியும் மகிழ்ச்சியளிக்கவில்லை எனத் தெரிகையில் அவன் சொல்லமுடியாத வேதனை அடைகிறான். உள்ளே இதெல்லாம் நிகழ்கையில் வெளியே அவன்  அம்மா எந்த கதறல் சத்தமும் தனக்கு கேட்காதது போல எதையோ கொரித்துக்கொண்டே சோவியத்தின் எஸ்ட்ரடா என்னும் வெரைட்டி ஷோக்களையும் அரசியல் சார் பிரச்சாரபாடல்களைய்ம் மிக ஆவலாய் தொலைக்காட்சியில் பார்க்கிறாள். இப்போது அந்த குடிகாரக்கணவனை சுட்டுக்கொல்கிறான் ஸுரோவ். வெளியே வந்தவன் அம்மாவிடம், ஏஞ்ச்லிக்கா இப்போது வந்தவனை விரும்பவேயில்லை, இன்னும் அந்த பாராட்ரூப்பரைத்தான் விரும்பிகிறாள் என்கிறான்,விசும்புகிறான்.ன் ஊருக்கு வந்த ஆர்டெம் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்.மனைவி லேனா இவரை சந்தேகப்படுகிறார், அவருக்கு பிற பெண் தொடர்பு  ஏதும் இருக்கிறதா?   என்று இவரையே கேட்கிறார். தன் மகன் ஸ்லேவா, இன்று இரவு வரமாட்டேன், விருந்துக்குப் போகிறேன் என்று சொல்ல, உனக்கு நாளை கல்லூரி இருக்கிறது,போகாதே என்கிறாள். அவன் பெற்றோர் பேச்சைக் கேட்டால் தானே?!!!


ப்போது ஆண்டனீனா தன் பண்ணைவீட்டுக்கு வந்தவள் மண்ணில் தான் புதைத்து வைத்திருக்கும் மக்கிய கோணிபோட்டு சுற்றிய குழல் துப்பாக்கியையும், ரவைகளையும் எடுத்து ஒரு கைப்பெட்டியில் போடுகிறாள் ,தன் முன்னாள் கண்வன் ஸுரோவ்வின் வீடு இருக்கும் இடம் செல்ல பேருந்து ஏறுகிறாள்.இப்போதும் நாம் தூரத்தில் அழுக்கேறிய எண்ணெய் டாங்குகள் இணைக்கப்பட்ட சரக்கு ரயிலைப்பார்க்கிறோம்.பிண்ணணியில் மீண்டும் அந்த பாடல் ஒலிக்கிறது.


ப்போது அலெக்ஸியை பார்க்க யாரோ சிறைக்குள் வந்திருப்பதாக சொல்லி ஸுரோவ்வின் உதவியாளர்கள் அவனை தனியாக கூட்டிச் வருகின்றனர் , காரிடாரில் நடந்து வருகையில் அலெக்ஸி எதிர்பாரா வண்ணம் அவனை பின்னந்தலையில் சுட்டு சாகடித்துவிட்டும் அகல்கின்றனர். அவர்கள் அகன்றதும் அங்கே மருத்துவன் ஒருவனுடன் வந்த ஏஞ்ச்லிக்காவின் தந்தை அலெக்ஸி இறந்ததை அந்த மருத்துவன் உறுதிப்படுத்த  சினம் ஆறுகிறார்.அவரால் நீதிபதி சொன்ன மரணதண்டனை  தேதி வரை பொறுக்கமுடியாத கோபம் அவர் கண்ணில் நாம் பார்க்கிறோம்.

ப்போது ஏஞ்ச்லிக்காவுக்கு அருகே அவளின் காதலன் சீருடையுடன் படுத்திருக்க,அவளின் அருகே அந்த குடிகாரனின் அழுகிய பிணம், முதுகில் துப்பாக்கி குண்டு துளைகளுடன் படுத்திருக்க, கதறிக்கொண்டிருக்கும் ஏஞ்ச்லிக்காவுக்கு அவளின் காதலன் ஆஃப்கானிஸ்தானின் போர்க்களத்திலிருந்து  எழுதிய கடிதங்களை அருகே நாற்காலி போட்டு அமர்ந்து  மூக்குக்கண்ணாடி அணிந்து குரூரமாக வாசிக்கிறான். வெறுப்பேற்றுகிறான். அருகே அந்த குடிகாரன் பிணம் புறமுதுகு காட்டி முதுகு முழுக்க தோட்டா துளைகளுடன் இருக்கிறது. ஏஞ்ச்லிக்கா அருகே படுத்திருக்கும் அவள் ராணுவ வீரனான காதலனின் பிணம். அந்த கடிதம் வாசிக்கும் நீண்ட காட்சி மிக முக்கியமானது என்பேன்.  அந்த கடிதங்கள் வாசிக்கப் படுகையிலேயே நமக்கு அந்த ஆஃப்கானிஸ்தான் போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் மனக்கண்ணில் ஓடுகின்றன. வீடு முழுக்க பிண அழுகல் நாற்றம். கொழுத்த ஈக்கள் பிணத்தை மொய்த்து சுற்றுகின்றன,


வெளியே அம்மா தொலைக்காட்சி பார்க்கிறாள். அந்த பின்புறம் திறந்து கிடக்கும் தொலைக்காட்சிப்பெட்டியின் திரையில் கூட ஈ மொய்க்கிறது. இப்போது வெளியே அழைப்பு மணியடிக்க ஸுரோவ்வின் அம்மா திறக்கிறாள்,வெளியே ஆண்டனீனா நிற்கிறாள். உன் மகன் எங்கே எனக்கேட்டவளுக்கு அதோ அறையில் அவன் மனைவியுடன் நிற்கிறான் என்கிறாள்,உள்ளே வந்தவள் துப்பாக்கிக்கு ரவையை போட,அவன் அம்மா கோப்பையில் மதுவை ஊற்றிக்கொண்டு மீண்டும் தொலைக்காட்சி முன் உட்காருகிறாள்.


ப்போது சட்டென கதவைத்தள்ளி உள்ளே சென்றவள் ஸுரோவ்வை சுட, அவன் பறந்து போய் தரையில் விழுகிறான்.ஏஞ்ச்லிக்கா இவளைப்பார்த்து என்னை காப்பாற்றுங்கள், எனக்கதற, அவள் மௌனமாக வெளியேறுகிறாள். விலங்கிட்ட கையுடன் ஏஞ்ச்லிக்கா கட்டிலிலிருந்து கீழே குதித்து அழுகிறாள், அங்கே அறைக்குள் இவள் காதலித்த ஒருவன் ,இவளை காதலித்த  இருவரின் பிணங்கள்.எதோ ஒரு விதத்தில் மூவருமே காதலர் தாம்.  இப்போது ஜன்னலின் வெளியே மீண்டும் அந்த அழுக்கு சரக்கு ரயில் போய்க்கொண்டே இருக்கிறது. ஸுரோவ்வின் அம்மா அசராமல் தொலைக்காட்சியில் சட்டசபைப் பிரசங்கம் பார்க்கிறாள்,அங்கே பிரதம மந்திரி Vitaly Vorotnikov சட்ட சபையில் பேசி முடிக்கிறார்.


ப்போது ஆர்டெம் ஒரு தேவாலயத்துக்குள் செல்வதைப் பார்க்கிறோம், அங்கிருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியிடம் நான் கிருஸ்துவனாக மாற என்ன விதிமுறைகள்  செய்யவேண்டும் என அப்பாவியாக கேட்கிறார், அவள் விதிமுறைகள் அல்ல விழாக்கள்  செய்ய வேண்டியிருக்கும்.அங்கே மதபோதகர் வரும் வரை காத்திருக்கப் பணிக்க,ஆர்டெம் அங்கே சென்று அமர்கிறார்.இப்போது லெனின்கிராடின் ஒரு உள்ளூர் டிஸ்கோத்தே கிளப்பில் ஆர்டெம்மின் மகன் ஸ்லேவா உற்சாகமாக குழுவினருடன் பாப் இசைப்பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கிறான். அருகே அதே வெலேர்ரா தென்பட்டு, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். டிஸ்கோ முடிந்தவுடன் அவனுக்கு தான் மது வாங்கித் தருகிறேன் என்றவன். வெளியே அழைத்துப் போகையில் இந்நாட்களில் ஒரு கேஸ் பீருக்காக இளம் பெண்கள் வலிய வந்து விருந்தாகிறார்கள், அப்படிப்பட்ட இளம்பெண்களை சுகிப்பதற்க்கு ஆயிரம் ஆயிரமாக பணம் தர தன்னிடம்  வாடிக்கையாளர்கள் உள்ளனர், உள்ளூர் வாசியான நீ மட்டும் என்னுடன் ஒத்துழைத்தால் சமூகத்தில் நாம் மிகநன்றாக வரலாம் ,  ஈசி மனி செய்யலாம் என்கிறான்.


பிண்ணணியில் இன்னும் அந்தப்பாடல் ஒலிக்க, இவையெல்லாம் நிகழ்ந்தது 1984ஆம் ஆண்டின் பிற்ப்பாதியில் எனப்போடப்பட்டு படம் முடிகிறது. இவ்வளவு தத்ரூபமாக சமூக அவல நிகழ்வுகளை எந்தப்படமும் சொன்னதில்லை. நிச்சயம் ஒவ்வொரு உலகசினிமா ரசிகனும் வாழ்வில் காணவேண்டிய திரைப்படம். இந்தப்படத்தை ஒருவர் மிஸ் செய்யவே கூடாது என்பேன்.
=====0000=====
படத்தை தரவிறக்க சுட்டி:-படத்தில் கலைஞர்கள் விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-
Directed by Aleksei Balabanov
Produced by Sergei Selyanov
Written by Aleksei Balabanov
Starring Agniya Kuznetsova, Leonid Bichevin, Aleksei Poluyan, Leonid Gromov, Aleksei Serebryakov
Distributed by Soyuz-Video
Release date(s) 2007
Running time 89 minutes
Language Russian
English

16 comments:

King Viswa சொன்னது…

வெல், மீ த பர்ஸ்ட்.

தொடருங்கள் உங்கள் அதிரடி பதிவுகளை.

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

King Viswa சொன்னது…

நண்பரே,
இந்த படத்தின் டிவிடியும் பார்க்காமல் அப்படியே இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல சமீப நாட்களில் இது போன்ற ஹார்ட் ஹிட்டிங் படங்களை பார்க்க முடிவதில்லை (நான் ரொம்ப சாப்ட் ஆக மாறி வருகிறேனா என்ன?) .

//நிச்சயம் ஒவ்வொரு உலகசினிமா ரசிகனும் வாழ்வில் காணவேண்டிய திரைப்படம்.இந்தப்படத்தை ஒருவர் மிஸ் செய்யவே கூடாது என்பேன்// இந்த ஒரு காரணத்திற்க்காக இன்றிரவு பார்க்க முயல்கிறேன்.

நேற்றுதான் பழைய மெக்கானிக் பார்த்தேன், ஆகையால் இன்று புதிய மெக்கானிக் பார்க்கப்போகிறேன். வழக்கம்போல ரீமேக் படங்களின் மொக்கைத்தனம் இதிலும் இருக்கும் போலிருக்கிறது (கிளைமேக்சை மாற்றிவிட்டார்களாம்).

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

King Viswa சொன்னது…

நண்பரே,
நீங்கள் வழங்கியிருக்கும் காணொளியை பார்த்தேன். ஒரு இனம் புரியாத சோகம் அந்த பாடலில் இழையோடிக்கொண்டே வருகிறது. படத்தின் யூ டியூப் டிரைலரை தேடி வருகிறேன்.

விரிவான, காணத்தூண்டும் பதிவிற்கு நன்றி தோழர்.

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

வெளங்காத தமிழ் அனானி சொன்னது…

//நேற்றுதான் பழைய மெக்கானிக் பார்த்தேன், ஆகையால் இன்று புதிய மெக்கானிக் பார்க்கப்போகிறேன். வழக்கம்போல ரீமேக் படங்களின் மொக்கைத்தனம் இதிலும் இருக்கும் போலிருக்கிறது (கிளைமேக்சை மாற்றிவிட்டார்களாம்). //

விஸ்வா... அப்ப நீங்க இன்னும் True Grit பார்க்கலைன்னு அர்த்தம்.

போன முறை A Serious Man-ல் விட்ட மேட்டரை, கோன் ப்ரதர்ஸ் இதில் பிடிச்சிருக்காங்க.

உங்களுக்குத்தான்.. கௌபாய் படம் பிடிக்குமே... இதை பார்த்துட்டு ஒரிஜினல் பெட்டரா, ரீமேக் பெட்டரான்னு சொல்லுங்க.

வெளங்காத தமிழ் அனானி சொன்னது…

// போரினால் நாயகர்கள் உருவாவதில்லை, //

இதை ‘Flags of our Fathers'-ல வேற மாறி சொல்லுவாங்க.

”போர் நாயகர்கள் உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்” -ன்னு.

நானெல்லாம் எங்க தல ரஷ்யாவை பார்க்கறது. அமெரிக்கா படத்தை பார்க்கவே இப்பல்லாம் அல்லாடுது.

நீங்க வழக்கப்படி ‘விக்கி’ மேட்டரை பண்ணிட்டே இருங்க. இன்னும் 5 மாசம், 2 வாரம், 6 நாள்ல நல்லகாலம் பிறந்து, ஊருக்கு போய் செட்டில் ஆனதும்... இந்த ‘விக்கி’ என்ன ஆகுதுன்னு பார்க்கறேன். :)

King Viswa சொன்னது…

//விஸ்வா... அப்ப நீங்க இன்னும் True Grit பார்க்கலைன்னு அர்த்தம்.

போன முறை A Serious Man-ல் விட்ட மேட்டரை, கோன் ப்ரதர்ஸ் இதில் பிடிச்சிருக்காங்க.

உங்களுக்குத்தான்.. கௌபாய் படம் பிடிக்குமே... இதை பார்த்துட்டு ஒரிஜினல் பெட்டரா, ரீமேக் பெட்டரான்னு சொல்லுங்க//


தல, அங்கதான் நீங்க தப்பு பண்றீங்க (என்னது அங்கயுமா?).

ட்ரூ கிரிட் படம் பார்த்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பழைய (எங்க வாத்தியார் ஜான் வைன்) நடிச்ச ட்ரூ கிரிட் படம் பார்த்தேன். அந்த படத்திற்கு தான் நம்ம வாத்தியாருக்கு ஆஸ்கார் அவார்ட் எல்லாம் கொடுத்தாங்க (வாத்தியார் அப்பவே கிண்டல் அடிச்சு இருப்பார் - இந்த கெரகம் தெரிஞ்சு இருந்தா முப்பது வருஷம் முன்னாடியே ஒரு கண்ண மூடி வச்சு நடிச்சு இருப்பேனே? என்று. அந்த படத்தை பார்த்ததற்கு அப்புறம் ரொம்பவும் இம்ப்ரெஸ் ஆகி அந்த நாவலை தேடிப்பிடித்து (பெருசு ஒருவரிடம் இரவல் வாங்கி) படித்தும் விட்டேன். ஒரிஜினல் நாவலுக்கும், பழைய ட்ரூ கிரிட் படத்திற்கும் நிறைய மாற்றங்கள் (ஹீரோயிசம்?). இருந்தாலும் ரொம்பவும் புடிச்ச படம்.

ஆகையால் இந்த புதிய கோயன் பிரதர்ஸ் ட்ரூ கிரிட் படம் வரும்போது ஆவலோடு காத்து இருந்தேன். டிவிடி வந்தவுடன் பார்த்தும் விட்டேன். படம் கலக்கல். எனக்கு தெரிந்த வரையில் கோயன் பிரதர்ஸ் பேக் டு பார்ம் இந்த படத்தின் மூலம். செமையான ஹோம் வாரக் தெரிகிறது ஒவ்வொரு சீனிலும். அதுவும் ஒரிஜினல் நாவலின் போக்கிலேயே கதை செல்வது ஒரு நல்ல மாற்றம்.

எது பெட்டர் என்று கேட்டால் (நம்ம வாத்தியார் விசிறி என்பதால்) பழைய ட்ரூ கிரிட் படம் தான் என்று சொல்வேன். ஆனாலும் கோயன் பிரதர்ஸ் படம் எந்த வகையிலும் குறையாது.

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

King Viswa சொன்னது…

// இதை பார்த்துட்டு ஒரிஜினல் பெட்டரா, ரீமேக் பெட்டரான்னு சொல்லுங்க.//

தல பதிவுக்கு சம்பந்தமே இல்லாம வேற விஷயங்கள பேசுறோம் (மன்னிச்சு).

இந்த பழைய ட்ரூ கிரிட் படம் எனக்கு பிடிக்க பெரிய காரணம் என்ன என்றால் சின்ன வயசுல எம்ஜியார், ஜெயஷங்கர் என்று சண்டை படங்களாக பார்த்து வளர்ந்த என்னுடைய தந்தையின் impact என்னிடமும் அப்படியே இருக்கிறது. எம்ஜியாரின் திரை இமேஜிற்கு மூல காரணம் நம்ம வாத்தியார் ஜான் வைன் தான் (அது உங்களுக்கே தெரிஞ்சு இருக்கும் - அவர் லீட் ரோலில் நடித்த 150+ படங்களில் Reap the Wild Wind ஒரு படத்தில் தான் he plays a Character with Questionable moral values).

இந்த பழைய ட்ரூ கிரிட் படம்தான் நம்ம ஜக்கம்மா படத்தின் மூலம் என்பது உங்களுக்கு தெரிந்தே இருக்கும் (தெரியலன்னா தெரிஞ்சுகோங்க). இப்படி பல காரங்களால் எனக்கு பழைய ட்ரூ கிரிட் படம் ரொம்ப பிடிக்கும்.


கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

King Viswa சொன்னது…

தல,

சண்டை படங்கள் ஒக்கே என்றால் சமீபத்தில் நான் பார்த்த சண்டை படங்களாகிய இகாரஸ் (டல்ப் லன்கரன் நடித்து, இயக்கிய படம்), ஹன்ட் டு கில் (ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் அடிக்கும் படம், கவனிக்கவும் நடிக்கும் அல்ல, அடிக்கும் படம்தான்) போன்றவற்றை பார்க்கவும். ஜாலியாக பொழுது போகும்.

தெலுங்கில் வந்த எல்லா படங்களையும் பார்த்து விட்டேன்.

வாண்டட் (தெலுகு கோபிசந்த் வான்டட், இங்கிலீஷ் ஏஞ்சலீனா ஜோலி வாண்டட் மற்றும் ஹிந்தி சல்மான்கான் வாண்டட் என்று எல்லா மொழிகளிலும் வாண்டட் படங்களை பார்த்து விட்டேன்) நல்ல பிளாட், மொக்கை டைரெக்ஷன்.

மிரபகாய் - ரவி தேஜா பின்னி பெடலெடுப்பார் என்று பார்த்தால் ஒக்கே தான். டைரெக்டர் கோட்டை விட்டு விட்டார். பிரகாஷ் ராஜ் ஒரே ஒரு நாள் கால்ஷீட் கொடுத்த படம் இது.

ரகடா - செம படம். நம்ம நாகார்ஜுனா மாஸ் ரோலில் பின்னி இருப்பார். செம ஜாலி படம்.

பரம் வீர் சக்ரா - போன படம் தெலுகு இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த பாலைய்யாவின் அடுத்த படம் என்பதால் ஆர்வத்துடன் பார்த்தேன். மூணு ஹீரோயின்களும் வெஸ்ட். படம் பரம மொக்கை.

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

சுண்டெலி சொன்னது…

ஆஹா... தல.. மன்னிச்சிக்கங்க!! யாராண்ட பேசறேன்னு தெரியாம வாயை கொடுத்துட்டேன். :) :) :)

ஸாரி.. ஸாரி.. ஸாரி...!!! :)

இப்படி நாம ரெண்டு பேரும்.. பதிவுக்கு சம்பந்தமில்லாம பேசிகிட்டு இருந்தா... தல காண்டாய்டுவாரு.

அப்பாலிக்கா.. தனியா பேசிக்கலாம். :)

King Viswa சொன்னது…

தல,

இப்பவே கூட பேசலாம். நான் ப்ரீதான். ஓக்கேவா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@நண்பர் கிங்விஸ்வா
தல ஹாலிபாலி @
சுண்டெலிம்

மன்னிக்கவேண்டும்,சரியான நேரத்தில் என்னால் கும்மியில் ஆஜர் ஆக முடியவில்லை,நீங்கள் கும்மியில் இருந்த போது நான் நன்றாக தூங்கியபடியிருந்தேன்.நேரம் கிடைத்தால் இந்த படத்தை அவசியம் பார்த்து விடுங்கள்.

நான் பழைய ட்ரூக்ரிட் பார்த்தேன்.அந்த 1959ஆம் ஆண்டுக்கு அது படு நேர்த்தி,நிச்சயம் கோயன் அதை மிஞ்சியே இருப்பார்கள், அவர்களின் ஒப்பற்ற தொழில்நுட்பம் சொல்லவே வேண்டாம். நிச்சய்ம் படம் பார்த்துவிட்டு சீரியஸ் மேனுக்கு எழுதியதைப் போல 2 பக்கம் விரைவில் எழுதுவேன்.

======
எனக்காக த போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ் பார்க்கவும்,1948ஐ விட 1981ல் வந்த தவணை,ஜாக் நிக்கல்சன் கலக்கியிருக்கிறார்,ஜெசிக்கா லாஞ்ச் தீயாக இருக்கிறார்.அவசியம் பார்த்திருந்தால் ஒரிரு வார்த்தையாவது அதுபற்றி சொல்லவும்.நண்பர் விஸ்வா
நான் தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
======

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கிங் விஸ்வா
நீங்கள் உங்கள் ஹாலிவுட் திரைப்படம் பார்த்ததை சிறந்த படங்களை உங்கள் பதிவில் காமிக்ஸுடன் சேர்த்து பகிர்ந்தால் இன்னும் சிறப்பு.அது திரை ரசிகர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கிங் விஸ்வா
ஆமாம் சென்னை தொலைக்காட்சியில் போட்ட அந்த ஜக்கம்மா படம் மட்டுமல்ல ஏனைய கவ்பாய் ட்ரூ க்ரிட்டிலிருந்து உருவியவைதான்.அது நினைவுக்கு வந்தது.ஜான் வைன் செம நடிகர்ங்க.

எஸ்.கே சொன்னது…

சோசியோபாத் பற்றி படித்துள்ளேன். கொடூரம்தான். படம் பார்க்க முயற்சிக்கிறேன்.
கொஞ்ச வெரோனிக்கா-ஏஞ்சலிக்கா பெயர் குழப்பம் அங்கங்கே உள்ளது.கவனிக்கவும்.

@ஹாலிவுட்பாலா
எப்படி இருக்கீங்க? நீங்கதான் கமெண்ட் போடுறீங்கன்னு தெரியவே இல்லை!

மரா சொன்னது…

@ வெளங்காத தமிழ் அனானி
போன்ல கூட ஒழுங்கா பேச மாட்டேங்குறீர் :(

@ கீதப்ரியன்
எங்கேந்து மக்கா இவ்ளோ வித்தியாசமான படங்களா பிடிக்கிற :)

சுண்டெலி சொன்னது…

HR ஆஃபீஸில் இருக்கறப்ப, வேற வேலை தேடுற மேட்டரை பேசும்போது, எந்த அளவுக்கண்ணே பேசுவாங்க? :) :)

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)