அழகிய கைப்பிள்ளைக்காரி வடிவெடுத்து பழையனூருக்குள் புகார் கொண்டு வருகிறாள் நீலி, வகையாக மாட்டிக் கொண்டான் அவ்வூருக்குள் துணிந்து வந்த வழிப்போக்க வணிகன்,
தன் தம்பி ஆவியை பந்தனம் செய்து கைக்குழந்தையாக்கிய நீலி பஞ்சாயத்தார் முன்பு இறக்கி விட அது ஓடிப்போய் வழிப்போக்கனிடம் தாவி கழுத்தைக் கட்டிக் கொண்டு அப்பா என்கிறது.
நீலிக் கண்ணீருக்குப் பரிந்து தன் ஊருக்குள் வந்த வழிப்போக்கனை நீலியின் கணவன் என பஞ்சாயத்து தீர்ப்பு செய்கின்றனர் பழையனூரின் 70வேளாளர்கள்,
இவர்கள் நீலியையும் அவள் கைக்குழந்தையையும் அவனையும் ஒரு வீடு பிடித்து உறங்க அனுப்பி அவன் தப்பிச் செல்லாமல் இருக்க வெளியே பூட்டுகின்றனர், அவன் உடன் வைத்திருந்த மந்திர வாளையும் நீலியின் பயம் போக்க பறிக்கின்றனர்.
விடியலில் பூட்டிய வீட்டிற்குள் அந்த வழிப்போக்கன் நீலியால் கொள்ளிக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்க,அருகே குழந்தையை காலால் மிதித்துக் கொன்ற கால் தடம்,
வேளாளர்களுக்கு தங்கள் தீர்ப்பு அசரீரியாக ஒலிக்கிறது,
" இவளால் உனக்கு ஆபத்து நேர்ந்தால் தீயைத் தழுவி இறப்போம்"
என சொன்ன வண்ணம் செய்தனர் வேளாளர்கள்,தங்கள் குல தெய்வமான பூதேசுவரர் கோயில் முன்பு தீமூட்டி 69 பேரும் தீயைத் தழுவினர், அந்த 70 ஆம் நபர் உழுது கொண்டிருந்தவர் மகள் வடிவில் வந்த நீலி சொன்ன செய்தி கேட்டு ஏர் கலப்பையை தன் நெஞ்சில் பாய்ச்சி இறந்தாராம்.
முன் ஜென்மத்தில் காசிபிராமணப் பெண்ணான தன்னையும் தன் தம்பியையும் இவ்வூருக்குள் கூட்டி வந்து தம்பியை குளத்தில் மூழ்கடித்து,தன்னை தலையில் கல்லைப் போட்டு கொன்றுவிட்டு காஞ்சிக்கு தப்பிச் சென்ற
வணிகனை இப்பிறவியில் பழிதீர்த்துக் கொன்றாளாம் நீலி, தன் தம்பி பேயாக குடியிருந்த வேல மரத்தை 70 வேளாளர்கள் வெட்டி வீழ்த்த அவர்கள் கதையையும் முடித்தாளாம் நீலி.
PS:இதை முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் எதிர்கால சந்ததிக்கு வேண்டி 1966 ஆம் ஆண்டு documentation செய்து சிதறிக்கிடந்தவற்றை ஒன்று திரட்டி மண்டபம் ,சுற்றுச்சுவர் என அமைத்தாராம்,நீலிக் கதைகளுக்கு பல வடிவங்கள் உள்ளன, நீலியை இசக்கி அம்மன் என்றும் அழைக்கின்றனர்.
#நீலிக்கண்ணீர்,#பழையனூர் #நீலி,#இசக்கி,#திருவாலங்காடு,